சனி, 13 மார்ச், 2021

காங்கிரஸ் 21 வேட்பாளர்கள் பட்டியல் . மீதி? இன்னும் அடிதடி முடியவில்லை!

No photo description available.

dailythanthi.com : சென்னை திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. வேட்பாளர்கள் பட்டியல் காங்கிரஸ் தரப்பில் அதிகாரபூர்வமாக இன்னும் வெளியிடப்படவில்லை.
காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு முன்னரே எதிர்ப்பு தெரிவித்து சத்தியமூர்த்தி பவனில் போராட்டம் நடைபெறுகிறது.
கட்சியில் இருந்து வெளியேறி மீண்டும் இணைந்தவர்களுக்கு சீட் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாக கூறி ஒரு தரப்பினர் உண்ணாவிரதம் இருந்தனர்.
வேட்பாளர் பட்டியல் தொடர்பாக சத்தியமூர்த்தி பவனில் மூன்று கோஷ்டிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
விளவங்கோடு தொகுதியில் விஜயதரணியை வேட்பாளராக களமிறக்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்து ஒரு காங்கிரஸ் கோஷ்டி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திமுக கூட்டணி பற்றி புலம் பெயர் தமிழர்களின் பார்வை (ஒரு சமூக வலைத்தள அலசல்)


வி. சபேசன்  : ஈழத் தமிழர்களுக்கு, குறிப்பாக யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் பற்றிய நல்ல அபிப்பிராயம் என்றைக்கும் இருந்தது இல்லை.
தமிழ்நாட்டுத் தமிழர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சினிமா மாயையில் உழல்பவர்கள் என்கின்ற கருத்து ஈழத் தமிழர்கள் மத்தியில் பரவலாக இருக்கிறது.
ஒரு காலத்தில் ஈழத் தமிழர்களின் அரசியல் தலைவர்கள் மெத்தப் படித்தவர்களாக இருந்தார்கள். வக்கீல்களாகவும், பட்டங்கள் பெற்றவர்களாகவும், மகாராணியுடன் கைகுலுக்குபவர்களாக தமது அரசியல் தலைவர்கள் இருப்பது பற்றி ஈழத்தமிழ் உயர்குடியினர் பெரும் இறுமாப்பு அடைந்திருந்தார்கள்.
மறுபுறும் தமிழ்நாட்டில் தந்தை பெரியார், காமராஜர், கலைஞர் கருணாநிதி என்று பெரும்பாலான தலைவர்கள் பள்ளிப் படிப்பை முடிக்காதவர்களாக இருக்கிறார்கள் என்கின்ற இளக்காரமும் அவர்களிடமும் இருந்தது.
80களின் தொடக்கத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த தமிழ்நாட்டு மக்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 30 விழுக்காடுதான். அப்பொழுதே இலங்கையில் 90 விழுக்காடு மக்கள் எழுதப் படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தனர்.
ஈழத் தமிழ் உயர்குடிகள் தம்மை தமிழ்நாட்டுத் தமிழர்களை விட உயர்வாக கருதுவதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. பார்ப்பனர்கள் நடத்தும் ஊடகங்கள் மூலமே அவர்கள் தமிழ்நாட்டை அறிகின்றார்கள். 70, 80 களில் பாலச்சந்தரின் படங்களில் இருந்தும், 90களில் சங்கரின் படங்களில் இருந்தும் அவர்கள் தமிழ்நாடு பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள்.

மியான்மர் நாட்டவர்களுக்கு தற்காலிக அடைக்கலம்: அமெரிக்கா முடிவு

 தினத்தந்தி : வாஷிங்டன்,  தென்கிழக்கு ஆசிய நாடான மியான்மரில் ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்து ஆட்சி அதிகாரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது.
அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட 100-க்கும் மேற்பட்ட அரசியல் தலைவர்களை ராணுவம் கைது செய்து சிறை வைத்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பரில் நடந்த பொதுத்தேர்தலில் மோசடி நடந்திருப்பதாக குற்றம்சாட்டி, ஆட்சிக்கவிழ்ப்பை நியாயப்படுத்தி கொண்டிருக்கிறது மியான்மர் ராணுவம்.
ஆனால் மியான்மர் மக்கள் ராணுவ ஆட்சியை ஏற்றுக்கொள்ளவில்லை.
நாட்டில் ஜனநாயகம் மீட்கப்பட வேண்டும் என்று கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

மம்தாவின் உயிரைப் பறிக்க பாஜக சதி ! திரிணாமுல் புகார்! பழம்பெரும் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா மம்தா கட்சியில் இணைந்தார்

tamil.indianexpress.com :நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் பரப்புரையின் போது மம்தா பானர்ஜியின் மீது நடந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிட்ட பெரும் சதியென்று திரிணாமுல் காங்கிரஸ் குற்றம் சாட்டியது. நேற்று, புது தில்லியில் உள்ள தேர்தல் ஆணையத்த்திடம் கட்சியின் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் புகார் மனுவை சமர்பித்தனர். இது, கடந்த மூன்று நாட்களில் சமர்பித்த இரண்டாவது புகார் மனுவாகும். முதலாவது, புகார் மனு கொல்கத்தா தலைமை தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்கப்பட்டது. நேற்றைய மனுவில், ” சமூக ஊடகங்களில் பாஜக தலைவர்களின் அதிதீவிர கருத்துக்கள், மாநில காவல்துறை இயக்குநர் நீக்கம், பொய் சாட்சியம் ஆகியவற்றின் மூலம் மமதா பேனர்ஜி மீதான தாக்குதல் திட்டமிட்டு அரங்கேறியதாக குறிப்பிட்டது. . இதற்கிடையே, கொல்கத்தா எஸ்எஸ்கேஎம் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று மமதா பேனர்ஜி நேற்று மாலை வீடுதிரும்பினார்.

புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

புதுச்சேரியில் திமுக வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு

 மாலைமலர் : புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டது. 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியலை திமுக வெளியிட்டது.
புதுச்சேரியில் 13 தொகுதிகளில் திமுக போட்டியிடும் நிலையில் 12 வேட்பாளர்கள் கொண்ட பட்டியல் வெளியானது.  திமுக வேட்பாளர்கள் பட்டியல்:
உருளையன்பேட்டை - எஸ்.கோபால்
உப்பளம் - அனிபால்கென்னடி
மங்கலம் - சண்குமரவேல்

தேமுதிக ஒய்வு? தேர்தலில் போட்டியிட்டால் முதலுக்கே ...?

latest tamil news
தினமலர் :சென்னை: அ.தி.மு.க.,வுடன் கூட்டணியை தொடர, தே.மு.தி.க., தலைமை முடிவெடுத்தது. அதே நேரத்தில், 'பா.ம.க., இல்லாத கூட்டணியாக பார்த்து சேரலாம்' என, மாவட்ட செயலர்கள் வலியுறுத்தினர்.
அ.தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., இடம்பெறுவது, ஏற்கனவே முடிவாகி இருந்தது.
எனவே அவர்கள் பெயர் சொல்லாமல் குறிப்பிட்டது, தி.மு.க., கூட்டணியைத்தான்.என்றாலும், அதைப் புறந்தள்ளிவிட்டு, அ.தி.மு.க.,வுடன் கூட்டணி பேச்சை தொடங்கினர் பிரேமலதா,-
அதிமுக 13 'சீட்' தர முன்வந்தது,  கூடுதல் தொகுதிகளும், தேர்தல் நிதியும் வேண்டும் என, தே.மு.தி.க., நிபந்தனை விதித்தது.
அதை, அ.தி.மு.க., தலைமை ஏற்கவில்லை. எனவே, கூட்டணியில் இருந்து, தே.மு.தி.க., விலகியது.
அடுத்து, அ.ம.மு.க., - தி.மு.க., என, மாறி மாறி பேச்சு நடத்தியது.
10 தொகுதிகள் தருவதாக சொன்ன தி.மு.க., நிதி தர மறுத்து விட்டது.
அதை, தே.மு.தி.க., ஏற்காததால், வேட்பாளர் பட்டியலை, தி.மு.க., தலைமை, அறிவித்து விட்டது. இதையடுத்து மீண்டும், அ.ம.மு.க.,வுடன் பேச துவங்கியுள்ளது.

தி.மு.க தேர்தல் அறிக்கை2021 - முக்கிய அம்சங்கள் என்னென்ன? ELECTION - 2021

kalaignarseithigal.com : தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது.
இந்த கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. கூட்டணிக் கட்சிகள் பல உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதால் மொத்தம் 188 தொகுதிகளில் தி.மு.க கூட்டணி உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறது.
இதனிடையே நேற்றைய தினம் 173 தொகுதிகளில் போட்டியிடும் தி.மு.க வேட்பாளர் பட்டியலை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட தி.மு.க தேர்தல் அறிக்கையை தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
கல்வி, பெண்கள் முன்னேற்றம், வேளாண் துறை, மருத்துவப்படிப்பு, வேலை வாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தி.மு.க தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ளனர்இந்நிலையில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையின் 10 முக்கிய அம்சங்கள் பின்வருமாறு :

* திருக்குறளை தேசிய நூலாக ஆக்க மத்திய அரசை வற்புறுத்துவோம்!

* கடும் ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ள அதிமுக அமைச்சர்கள் மீதான புகார்களை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்படும்!

சிபிஐ (எம்) - வேட்பாளர்கள் பட்டியல்!

சிபிஐ (எம்) - வேட்பாளர்கள் பட்டியல்!

 மின்னம்பலம் :சிபிஐ(எம்) கட்சி போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.  
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கூட்டம் இன்று (மார்ச் 13) மத்தியக்குழு உறுப்பினர் பி. சம்பத் தலைமையில் சென்னையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் டி.கே. ரங்கராஜன், அ. சவுந்தரராசன், உ. வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
சிபிஐ (எம்) போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதில்,   1. கீழ்வேளூர் (தனி)-நாகை மாலி Ex. MLA,
2. திருப்பரங்குன்றம்-ஸ்.கே. பொன்னுத்தாய்
3. கோவில்பட்டி-கே. சீனிவாசன்
4. கந்தர்வக்கோட்டை (தனி)-எம். சின்னதுரை
5. அரூர் (தனி-ஏ. குமார்
6. திண்டுக்கல்-என். பாண்டி
ஆகிய வேட்பாளர்கள் பெயர் இடம்பெற்றுள்ளது.

திமுகவின் தொழிற்சங்கம் முதன்மைச் சங்கமாக தேர்வு!.. தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் 7,086 வாக்குகள் பெற்றது

DMK's trade union elected primary union
nakkeeran : தென்னிந்தியாவின் மிகப்பெரிய மின் உற்பத்தி நிறுவனமாக என்.எல்.சி இந்தியா நிறுவனம் உள்ளது. இந்நிறுவனத்தில், 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலர்கள், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிரந்தர ஊழியர்கள், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில், நிரந்தர ஊழிய தொழிலாளர்களின் கோரிக்கைகள் குறித்து என்.எல்.சி. நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவது, பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது போன்றவற்றிற்காக தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் 4 ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் . கடந்த, பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி தொழிற்சங்கங்களுக்கான அங்கீகாரத் தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் 7,086 வாக்குகள் பதிவான நிலையில், வாக்குகள் நேற்றிரவு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில், தி.மு.கவின் தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்றச் சங்கம் 2,352 வாக்குகள் பெற்று முதன்மைச் சங்கமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

என் ரத்தம் கொதிக்கிறது... வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை -ஜோதிமணி எம்பி கடும் அதிருப்தி

என் ரத்தம் கொதிக்கிறது... வேட்பாளர் தேர்வு வெளிப்படையாக இல்லை -ஜோதிமணி எம்பி கடும் அதிருப்தி

maalaimalar :சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில், திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. 

தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டதை அடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. தேர்தலில் போட்டியிட பலர் வாய்ப்பு கேட்டு கடுமையான நெருக்கடி கொடுத்ததால் வேட்பாளர்களை தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.                               எனினும் ஒரு வழியாக வேட்பாளர் பட்டியலை தயார் செய்து டெல்லியில் உள்ள கட்சி தலைமைக்கு அனுப்பி உள்ளனர். டெல்லியில் சோனியா தலைமையில் நடைபெறும் தேர்தல் குழு கூட்டத்தில் வேட்பாளர்களை இறுதி செய்து அறிவிக்க உள்ளார்கள். இந்நிலையில் வேட்பாளர் தேர்வில் காங்கிரஸ் தலைவர்கள் சிலருக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது.                          வேட்பாளர் தேர்வில் ஏராளமான குளறுபடிகள் நடந்து இருப்பதாக கூறி விஷ்ணு பிரசாத் எம்.பி. காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால் சத்தியமூர்த்தி பவனில் பரபரப்பு ஏற்பட்டது.

சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து, 3.6 லட்சம் கோடியாகியுள்ளது.

தினமலர் :புது டில்லி: 2021-ல் உலகளவில் அதிக செல்வம் ஈட்டிய நபர்களில் அமேசானின் ஜெப் பெசோஸ், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் முதல் தலைமுறை தொழிலதிபரான அதானி முதலிடம் பிடித்துள்ளார்.
ப்ளூம்பெர்க் பணக்காரர்கள் பட்டியலின் படி முதல் தலைமுறை தொழிலதிபரான அதானியின் நிகர சொத்து மதிப்பு 2021-ம் ஆண்டில் 1.17 லட்சம் கோடி உயர்ந்து, 3.6 லட்சம் கோடியாகியுள்ளது.
இதன் மூலம் அவர் உலகளவில் இந்தாண்டின் மிகப்பெரிய அளவில் செல்வம் ஈட்டிய நபராகியுள்ளார். அந்த வகையில் உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற இடத்துக்கு போட்டியிட்ட அமேசானின் ஜெப், டெஸ்லாவின் எலான் மஸ்க் ஆகியோரை வீழ்த்தியுள்ளார்.

இனி நர்சிங் படிப்புகளுக்கும் நீட் தேர்வு கட்டாயம்... மத்திய அரசு அறிவிப்பு

 Vigneshkumar - tamil.oneindia.com : டெல்லி: வரும் 2021-22ஆம் ஆண்டு கல்வியாண்டு முதல் பி.எஸ்சி நர்சிங் மற்றும் லைஃப் சயின்ஸ் ஆகிய படிப்புகளுக்கான மாணவ சேர்க்கைக்கும் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கும் பல் மருத்துவக் கல்லூரிகளுக்கும் நீட் தேர்வின் அடிப்படையிலேயே கடந்த ஐந்து ஆண்டுகளாக நீட் தேர்வு நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் 2017ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படுகிறது.
இந்நிலையில் இந்தாண்டிற்கான நீட் நுழைவுத்தேர்வு தமிழ் உள்ளிட்ட 11 மொழிகளில் வரும் ஆகஸ்ட் 1ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்பு மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் ஆகியவற்றுக்கு மட்டும் நீட் தேர்வு நடத்தப்பட்டது.
இந்தச் சூழ்நிலையில், வரும் 2021-22 கல்வியாண்டு முதல் பி.எஸ்சி நர்சிங், பி.எஸ்சி லைஃப் சையின்ஸ் படிப்புகளுக்கும் இனி நீர் தேர்வு முடிவுகள் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

சேலத்தில் 237 கிலோ தங்கம் பறிமுதல்.. உரிய ஆவணமின்றி..எடுத்துச்செல்லப்பட்டது ..பறக்கும் படை..

Vigneshkumar - tamil.oneindia.com : சேலம்: உரிய ஆவணம் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட 37 கோடி மதிப்பிலான 237 கிலோ தங்க நகைகளைப் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.
தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநிலம் முழுவதும் தேர்தல் விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
உரிய ஆவணமின்றி பணம், நகைகளை எடுத்துச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக வந்த வேன் ஒன்றை நிறுத்தி போலீசார் ஆய்வு மேற்கொண்டர்.
அதில் 37 கோடியே 57 லட்ச ரூபாய் மதிப்பிலான 237 கிலோ தங்கம் இருப்பதைப் பறக்கும் படையினர் கண்டுபிடித்தனர்.

மம்தாவைத் தாக்கியதில் பா.ஜ.க. சதி: திரிணமூல் கட்சி புகார் மனு!

மம்தாவைத் தாக்கியதில் பா.ஜ.க. சதி: திரிணமூல் கட்சி தரும் பகீர்!

minnambalam :மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடந்த 10ஆம் தேதியன்று நந்திகிராம் தொகுதியில் பிரச்சாரத்தின்போது நடந்த அசம்பாவிதத்தில் காயமடைந்தார்; அதற்கு பாஜகவினர் செய்த சதியே காரணம் என குற்றம்சாட்டுகிறது, திரிணமூல் காங்கிரஸ் கட்சி. தலைமைத்தேர்தல் ஆணையர் சுனில் அரோராவை அக்கட்சியின் எம்.பி.கள் டெல்லியில் நேற்று சந்தித்து ’தாக்குதல்’ குறித்து எட்டு பக்க புகார் மனு அளித்தனர்.

டம்டம் மக்களவைத் தொகுதி உறுப்பினரும் திரிணமூல் காங்கிரஸ் துணைத்தலைவருமான சுகத்தா ராய், மாநிலங்களவை உறுப்பினர் டெரிக் ஓ பிரைன் ஆகியோர் உள்பட 6 திரிணமூல் எம்.பி.கள் குழுவினர் அரை மணி நேரம் சுனில் அரோராவிடம் பேசினார்கள். மம்தாவின் மீதான ‘தாக்குதலின்’ பின்னணியில் நந்திகிராமின் பாஜக வேட்பாளரும் முன்னாள் திரிணமூல் அமைச்சருமான சுவேந்து அதிகாரி செயல்பட்டுள்ளார் என்பது திரிணமூல் தரப்பு தந்த புகாரின் மையமான குற்றச்சாட்டு.

பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் தமிழ் எழுத்துருக்களை நவீன எழுத்துருவுக்கு உயர்த்த உதவியது

தமிழ் இளந்திரையன் : பெரியாரின் தமிழ் எழுத்துச்சீர்தருத்தம் பற்றி

பேசும்போதெல்லாம் சிலர் அதுபற்றிய அடிப்படைப் புரிதல் கூட இல்லாமல் வசைபாடுவது வருத்தத்திற்குறிய செயல். அவர்களின் கேள்வியிலும் புரிதலிலும் உள்ள அறியாமையை விலக்கிட எண்ணுகிறேன். இப்படிப்பட்டோர் ஏன் பழைய முறையை விட்டுவிட்டு இந்த பெரியார் புதியதை புகுத்திடவில்லை என யார் அழுதார் என்றெல்லாம் எழுதி பதிவிடுகின்றனர். இப்படி எழுதுவோரில் பலர் தகவல் பரவலுக்கும்

அச்சுக்கோர்ப்பிற்குமான தொடர்பை அறிந்திருக்காத 2000 kids என தங்களை அறிமுகப்படுத்துவோரும், தமிழும் தமிழின் வரலாறும் தெரியாத பிற்போக்குவாதிகளே என்பதில் ஐயமில்லை. !
பழைய நடைமுறை -  தமிழ் எழுத்தின் பழைய நடைமுறை என்ன என்பதை எதிலிருந்து தெரிந்துகொண்டனர்?  தமிழி எனப்படும் சங்க இலக்கிய முறையா? பல்லவர்கள் எனப்படும் ஈரானியர்களால் எடுத்து வரப்பட்ட வட்டெழுத்து முறையா? பக்தி இலக்கிய காலத்து வடமொழி கலப்பு முறையா? அல்லது பிராக்ரதம் உள்ளிட்ட மொழிக்கலப்புடன் புழங்கப்பட்ட

எழுத்துசீரமைப்பிற்கு முந்தைய முறையா? இப்படி தமிழ் எழுத்துக்கள் தொடர்ந்து நசுக்கப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வடவந்தேறிகளால் மாற்றப்பட்டும் வந்தபோது பேசாமல் இருந்த நாம் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப சிற்சில மாற்றங்களை ஏற்படுத்திக்கொண்டதில் பிழை என்ன?
சிலர் பெரியாரின் எழுத்துச்சீர்திருத்தம் தட்டச்சு இயந்திரத்தின் தேவைக்காக மட்டும் என்று சிலர் கூறுவதிலும் சிறு பிழையுள்ளது.  அந்தச்சீர்திருத்தம் அச்சுக்கோர்ப்பு எனும் தொழில் மூலம் நிறைய தமிழ் தகவல்கள் பரவலாக மக்களிடம் போய்சேர அச்சுக்கோர்க்கும் வேலை துரிதப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்ட போது தேவையே கண்டுபிடிப்புகளின் அடிப்படை என்ற கோட்பாட்டில் மாற்றம் ஏற்கப்பட்டது.  

உங்களுக்குத் தெரியுமா ணா னா லை ளை என்று எழுதும் போது இப்போது துணைக்கால் என ஒரேயொரு கூடுதல் எழுத்துருவிவைக்கொண்டு ஏற்கெனவே இருக்கும் உயிர்மெய் எழுத்தில் இவற்றை அடுக்கமுடிந்தது.  

குடிசைகளை ஒழித்து வைத்து ஷோ காட்டும் குஜராத் பாஜக அரசின் கேடுகெட்ட செயல்

வறுமையை ஒழிப்போம் எனச் சொல்லிவிட்டு குடிசைகளை ‘ஒளித்துவைக்கும்’ பா.ஜ.க : குஜராத் அரசின் கேடுகெட்ட செயல்!
kalaignarseithigal.com  - Prem Kumar: பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கும் அகமதாபாத்தில், தேசிய நெடுஞ்சாலையின் சாலையோரத்தில் வசித்த பலரும் இடத்தை விட்டு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்... இந்திய நாட்டின் 75வது சுதந்திர தினம் நாடுமுழுவதும் ஆகஸ்ட் மாதம் கொண்டாடப்படவுள்ள வேளையில், அதற்காக பணிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, ‘அம்ரித் மகோத்சவ்’ என்ற பெயரில் 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாட மோடி அரசு முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், தனது சொந்த மாநிலத்திற்கு பிரதமர் மோடி இன்று முதல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒருபகுதியாக மகாத்மா காந்தி வாழ்ந்த சபர்மதி ஆசிரமத்திற்குச் சென்று, அங்கிருந்து தண்டி நோக்கி 21 நாட்கள் நடைபயணம் செல்லும் இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டி

கோவை தெற்கு தொகுதியில் கமல் போட்டி
maalaimalar.com :சென்னை: மக்கள் நீதி மய்யம் தலைமையிலான மக்களின் முதல் கூட்டணியில் ஏற்கனவே சமத்துவ மக்கள் கட்சி, இந்திய ஜனநாயக கட்சிகளுக்கு தலா 40 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளன.
மக்கள் நீதி மய்யத்துக்கு 154 இடங்கள் ஒதுக்கப்பட்டன.
இதில் 70 தொகுதிகளுக்கு முதல்கட்ட வேட்பாளர்களை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் நேற்று முன்தினம் அறிவித்தார்.
இதையடுத்து மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிட உள்ள 2-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
அதில், மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடுகிறார். தி.நகர் தொகுதியில் பழ.கருப்பையாவும், மயிலாப்பூர் தொகுதியில் ஸ்ரீபிரியாவும் போட்டியிடுகின்றனர்.

சுப்புலெட்சுமிகளும் ஜோதிமணிகளும் காத்த்திகேய சிவசேனாதிபதிகளும் அதியமான்களும் .. LR Jagadheesan

May be an image of 5 people and text that says 'தேர்தல் BREAKING SUN NEWS ஆ.த.பே-க்கு அவிநாசி தொகுதி! திமுக கூட்டணியில் ஆதி தமிழர் பேரவைக்கு அவிநாசி தொகுதி ஒதுக்கீடு! வேட்பாளராக ஆதி தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் போட்டி SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 10 MAR 2021'

LR Jagadheesan :    இந்த தேர்தலில் திமுக கூட்டணி வெற்றியின் உண்மையான ஆழ அகலத்துக்கான அளவுகோளாகவும் தமிழக அரசியலின் அடிப்படை பண்பு மாற்றத்துக்கான குறியீடாகவும் இந்த இரு தொகுதிகளும் அங்கே நிறுத்தப்பட்டிருக்கும் திமுக கூட்டணி வேட்பாளர்களும் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இருக்கவேண்டும் என்பது கோரிக்கை.
இன்றைக்கு உலக அளவில் பேசப்படும் ஆரம்பப்பள்ளிகளின் இலவச மதிய உணவை இந்தியா சுதந்திரம் அடைவதற்கும் முன்பே தமிழ்நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்தக்காரணமான எல் சி குருசாமிகளின் அரசியல் வாரிசுகள் சுதந்திர இந்தியாவின் தமிழ்நாட்டு அரசியல் அரங்கில் ஏறக்குறைய இல்லாமலே போனார்கள்.
பல பத்தாண்டுகள் எந்த குரலும் அற்றுப்போன சமூகத்தில் இருந்து அவர்களின் வலுவான குரலாக காலம் உருவாக்கியவர் அதியமான்.
உண்மையில் பல்வேறு நெருக்கடிகளுக்கும் புறக்கணிப்புகளுக்கும் முகம் கொடுத்து உருவானவர் என்பதே சரி. தமிழ்நாட்டு சட்டமன்றத்துக்குள் அவரது குரல் தனித்துவக்குரலாக மட்டுமல்ல; குரலற்றவர்களுக்கான குரலாகவும் ஒலிக்கும்.

வெள்ளி, 12 மார்ச், 2021

ஒரிஜினல் பெங்காலி ஓம் ! டுப்ளிகேட் சம்ஸ்கிருத திரிபு ஓம் !

May be an image of text that says 'নিজের বাঙালিয়ানা বাঁচাও বাঙালি 825440031 বাংলার ওম উত্তরতারতায় বিজা্তায়দের ওম জয় বাংলা'
ஒரிஜினல் பெங்காலி ஓம் -- டுப்ப்ளிகேட் சம்ஸ்கிருத ஓம்

 

 

 

கர்கா சாட்டர்ஜி: இடது புறம் பெங்காலி எழுத்தில் ஓம் எழுதப்பட்டுள்ளது -
இது பெங்காலிகளுக்கு உரியது சரியானது
பெங்காலியில் எழுதப்பட்ட ஓம் என்ற எழுத்தை இடது புறத்தில் சம்ஸ்கிருத ஓம் என்று திரித்து எழுதுகிறார்கள்
சமஸ்கிருதத்திற்கு சொந்தமாக எழுத்தே கிடையாது
சமஸ்கிருத மொழியானது வங்காள மண்ணில் வங்காள (பெங்காலி) எழுத்தில் எழுதப்பட்டுள்ளது, சமஸ்கிருதம் உத்தர பிரதேசத்தில் நாகிரி என்ற பழங்குடி மக்களின் எழுத்தில் எழுதப்பட்டுள்ளது.
இன்று இந்தியின் ஆதிக்கம் பெங்காலிகளின் இந்து மதத்தில் கூட காணப்படுகிறது.
இப்போதெல்லாம், சாலைகள், கோயில்கள், வீடுகள் போன்ற எல்லா இடங்களிலும் ஓம் என்ற எழுத்து ஹிந்தி திரிபு எழுத்தில் எழுதப்படுகிறது.
இன்னும் சில இந்து வங்காளிகளின் வீட்டில் தவிர வங்காள மொழியில் எழுதப்பட்ட 'ஓம்' இன்று அழிந்துவிட்டது.
பல வங்காளிகளுக்கு இன்னும்கூட தங்கள் மொழி பற்றிய சுயநினைவு இல்லை,
தங்கள் சொந்த மாநில விடயங்களை விட்டுவிட்டு,
ஹிந்தி மொழியிடம் தங்கள் மதத்தை இழப்பது கூட இவர்களுக்கு தெரிவதில்லை
இந்த ஹிந்தி தரகர்கள் வங்காள தேசத்தின் எதிரிகள்.

"தமிழி" எழுத்தை ஆர்வத்துடன் கற்கும் கரூர் பள்ளி மாணவ, மாணவிகள்

தமிழி
BBC :தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவமான தமிழியை கல்வெட்டு ஆராய்ச்சியாளர்களும், தமிழ் ஆர்வலர்களும் கற்று வந்த நிலையில், கரூரில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவ, மாணவர்கள் தமிழியை எழுதப் படிக்க கற்றுள்ளனர். தொடர்ந்து தமிழியை கற்றுக் கொடுப்பதை ஓர் இயக்கமாக தொடங்கி இதுவரை சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களுக்கு தமிழியை எழுதப் படிக்க கற்றுக் கொடுத்து வருகிறார் பள்ளி முதல்வர் ஒருவர்.

கரூரில் உள்ள தனியார் பள்ளியின் முதன்மை முதல்வர் ராமசுப்பிரமணியன். திருவள்ளுவர் மாணவர் இயக்க தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார். இவர் தொடங்கிய சிறிய முயற்சியின் விளைவாக இன்று தமிழி பள்ளி மாணவர்களிடம் எளிமையாக பரவியுள்ளது.  "தமிழியை ஓர் ஆர்வத்தில் கற்றுக் கொண்டேன். கல்வெட்டுகளில் உள்ள தமிழ் மொழியின் ஆதி எழுத்து வடிவம் தமிழி எனப்படுகிறது. தமிழியை கற்றுக் கொண்டதால், கல்வெட்டுகளையும் படிக்க முடிந்தது. 

ம.ம.க... 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! தனி சின்னத்தில் போட்டியிடும் முடிவை கைவிட்டது

தனி சின்னத்தில் போட்டியிடும் முடிவை கைவிட்ட ம.ம.க... 2 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டி!
kalaignarseithigal.com : தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்கத் தயாராகியுள்ளது தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி. இந்தக் கூட்டணியில் ம.தி.மு.க, வி.சி.க, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், ம.ம.க, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, ஆதித்தமிழர் பேரவை, கொ.ம.தே.க, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

தி.மு.க கூட்டணியில் தொகுதிப் பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தி.மு.க கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. ம.தி.மு.கவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகின்றனர். கொ.ம.தே.க 3 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறது.

அதிமுக VS திமுக! - வி.ஐ.பி.கள் மோதும் தொகுதிகள்!

TN ASSEMBLY ELECTION ADMK AND DMK STAR CANDIDATES
nakkeeran - இரா. இளையசெல்வன் : தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நேருக்கு நேர் மோதும் அ.தி.மு.க., தி.மு.க.வேட்பாளர்கள் விவரம்: போடி தொகுதி:-
அ.தி.மு.க. வேட்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் போட்டியிடுகிறார்.

எடப்பாடி தொகுதி:-   அ.தி.மு.க. வேட்பாளர் பழனிசாமியை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் சம்பத் குமார் போட்டியிடுகிறார்.

காட்பாடி தொகுதி:-   அ.தி.மு.க. வேட்பாளர் ராமுவை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் துரைமுருகன் போட்டியிடுகிறார்.

 விழுப்புரம் தொகுதி:-    அ.தி.மு.க. வேட்பாளர் சி.வி. சண்முகத்தை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் லட்சுமணன் போட்டியிடுகிறார்.

கரூர் தொகுதி:-     அ.தி.மு.க. வேட்பாளர் எம்.ஆர். விஜயபாஸ்கரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் செந்தில்பாலாஜி போட்டியிடுகிறார்.

 விராலிமலை தொகுதி:-     அ.தி.மு.க. வேட்பாளர் சி.விஜயபாஸ்கரை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் பழனியப்பன் போட்டியிடுகிறார்

 கோபிசெட்டிபாளையம் தொகுதி:-  
அ.தி.மு.க. வேட்பாளர் செங்கோட்டையனை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் மணிமாறன் போட்டியிடுகிறார்.

அமமுக மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

dailythanthi.com/ :பல்லாவரம் - ஜி. நாராயணன்
அமமுக மூன்றாம் கட்ட  வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
எழும்பூர்(தனி) - வழக்கறிஞர் டி.பிரபாகர்
ஆவடி - திருவேற்காடு பா.சீனிவாசன்
திருவொற்றியூர் - எம்.செளந்தரபாண்டியன்
கொளத்தூர் - கொளத்தூர் ஜெ.ஆறுமுகம்
வில்லிவாக்கம் - பி.ஆனந்தன்
திரு.வி.க.நகர்(தனி) - எஸ்.மணிமாறன்
ராயபுரம் - சி.பி.ராமஜெயம்
துறைமுகம் - பி.சந்தானகிருஷ்ணன்
ஆயிரம் விளக்கம் - என்.வைத்தியநாதன்
அண்ணா நகர் - கே.என்.குணசேகரன்
விருகம்பாக்கம் - கே. விதுபாலம்
மயிலாப்பூர் - டி.கார்த்திக்
வேளச்சேரி - எம்.சந்திரபோஸ்   
சோழிங்கநல்லூர் - நீலாங்கரை எம்.சி. முனிசாமி. 
 :சென்னை தமிழக சட்டமன்ற தேர்தலில், டி.டி.வி.தினகரன் தலைமையிலான அ.ம.மு.க. போட்டியிட இருக்கிறது.
தற்போது வரை அ.ம.மு.க. தலைமையிலான கூட்டணியில் ஓவைசி கட்சிக்கு 3 தொகுதிகளும், கோகுல மக்கள் கட்சி மற்றும் மருதுசேனை சங்கம் ஆகியவற்றுக்கு தலா 1 தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கிடையில், அ.தி.மு.க கூட்டணியில் இருந்து விலகிய தேமுதிக உடன் அமமுக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

எழுத்தாளர் இமையத்திற்கு சாகித்ய விருது! ‘செல்லாத பணம்’ புதினத்திற்காக

dddd

நக்கீரன் : ”எனது விருதை திராவிட இயக்கத் தலைவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன்” என்கிறார், இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது அறிவிக்கப்பட்டிருக்கும் எழுத்தாளர் இமையம்.

எழுத்தாளர் இமையம் எழுதிய ‘செல்லாத பணம்’ புதினத்திற்காக, அவருக்கு இந்த ஆண்டுக்கான சாகித்ய அகடமி விருது, 12-ந் தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.  இமையம், கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.  அண்ணாமலை என்ற இயற்பெயரைக் கொண்ட இவர், 1964-ல் பிறந்தவர். ஆசிரியராக விருத்தாசலத்தில் பணிபுரிந்துவரும் இமயம், தீவிர திராவிட இயக்க உணர்வாளர் ஆவார்.        தான் பார்த்த, பழகிய, வாழ்ந்த கிராமத்தையும், கிராமத்து ஒடுக்கப்பட்ட மக்களையும் தனது கதைகளில் உயிர்ப்பாகச் சித்தரித்து வருகிறவர் இமையம். சாதி ஒடுக்கு முறைகளையும், கிராமத்துப் பெண்களுக்கு நேரும் பால் பேதத்தின் அடிப்படையிலான துயரங்களையும், ஆணாதிக்க அவலங்களையும், சமூக ரீதியிலான வக்கிரங்களையும், தொடர்ந்து தனது படைப்புகளில் தோலுரித்துக் காட்டிவருகிறவர் இவர்.

திமுக வேட்பாளர் பட்டியல்: முழு விவரம்!

minnnambalam : வரும் 2021 சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கான திமுகவின்

வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 12) வெளியிடப்பட்டது. திமுக கூட்டணியில் காங்கிரஸ்-25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா 6 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3, மனிதநேய மக்கள் கட்சி-2 ஆகிய எண்ணிக்கையில் போட்டியிடுகின்றன. மேலும், அகில இந்திய பார்வர்டுபிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை தலா ஒரு இடத்தில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்கள். மீதியிருக்கும் 173 இடங்களில் திமுக போட்டியிடுகிறது. இவர்களோடு மதிமுக 6, கொமதேக 3, மமக1 என உதயசூரியன் சின்னம் மொத்தம் 187 தொகுதிகளில் களம் காண்கிறது.

வேட்பாளர் பட்டியலை வெளியிடும் முன் இன்று காலை கோபாலபுரத்தில் இருக்கும் கலைஞர் இல்லத்துக்கு சென்று பட்டியலை வைத்து வணங்கினார் ஸ்டாலின். பின் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின் அறிவாலயம் வந்தார். ஏராளமான திமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் அறிவாலய வாசலில் கூடியிருக்கிறார்கள்.

இன்று மார்ச் 12, மாசி மாதம் 28 ஆம் தேதி வெள்ளிக்கிழமை போதாயண அமாவாசை நாளில் ராகு காலம் காலை 10.30 முதல் 12 ராகு காலம் என்பதால் ராகு காலம் முடிந்து திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டதாக திமுகவில் இருக்கும் ஆன்மீக மாசெக்களே சொல்கிறார்கள்.

இதோ.... திமுக வேட்பாளர் பட்டியல்

1. கும்மிடிப்பூண்டி. டிஜே கோவிந்தராஜன்-

2. திருத்தணி. - சந்திரன்

திமுக வேட்பாளர்கள் பட்டியல் ..173 தொகுதிகள்.. சற்று நேரத்தில் வெளியாகிறது .. .. கலைஞர் டிவி

சென்னை: திமுக வேட்பாளர் பட்டியல் இன்று காலை 10.30 மணிக்கு வெளியாகிறது. தமிழகத்தில் வேட்பு மனு இன்று தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் திமுக வேட்பாளர் பட்டியலை வெளியிடுகிறது. இதுவரை கூட்டணி கட்சிகளுக்கு 61 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம், கொங்கு மக்கள் தேசிய கட்சி உள்ளிட்ட சில கட்சிகள் உதயசூரியன் சின்னத்தில் போட்யிடுகின்றனர். DMK candidate list will be out today 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளதாக தெரிகிறது. நாளை திமுக தேர்தல் அறிக்கை வெளியாக உள்ளது. இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகிறது. tamil.oneindia.com

தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடு

dailythanthi.com தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வெளியீடப்பட்டுள்ளது. சென்னை,சட்டசபை தேர்தலில், தி.மு.க. 173-, காங்கிரஸ்-25, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் தலா 6 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-3, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி-3, மனிதநேய மக்கள் கட்சி-2, அகில இந்திய பார்வர்டுபிளாக், தமிழக வாழ்வுரிமை கட்சி, மக்கள் விடுதலை கட்சி, ஆதி தமிழர் பேரவை தலா ஒரு இடத்தில் களம் காண்கிறது.

இதில் தி.மு.க. போட்டியிடும் 173 தொகுதிகள் விவரம் வருமாறு:-

1. கும்மிடிப்பூண்டி.

2. திருத்தணி.

3. திருவள்ளூர்.

4. பூந்தமல்லி (தனி).

5. ஆவடி.

6. மதுரவாயல்.

7. அம்பத்தூர்.

8. மாதவரம்.

டிடிவிக்காக எடுத்த முடிவா? கோவில்பட்டியை விட்டுக்கொடுத்த திமுக.. .. இங்கு திமுகவை விட இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் பலம் வாய்ந்த

டார்கெட்

Shyamsundar -/tamil.oneindia.com :  சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் தற்போது கோவில்பட்டி தொகுதி மிக முக்கியமான தொகுதியாக மாறியுள்ளது..
அதிலும் இந்த தொகுதியில் கடுமையான மும்முனை போட்டி நிலவ போகிறது!
தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரம் அடைந்து வருகிறது..
இந்ந சட்டசபை தேர்தலில் தமிழகம் முழுக்க நிறைய ஸ்டார் தொகுதிகள் உள்ளன. பெரிய வேட்பாளர்கள் போட்டியிடும் ஸ்டார் தொகுதிகள் எப்போதும் தேர்தலில் கவனத்தை ஈர்க்கும்.
அப்படி ஒரு ஸ்டார் தொகுதியாகத்தான் கோவில்பட்டி தொகுதி உருவெடுத்து உள்ளது.
இங்கு திமுக - அதிமுக - அமமுக இடையே மிக கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த தொகுதிக்காக நேற்று திமுக எடுத்த முடிவு ஒன்றும் கவனத்தை ஈர்த்துள்ளது
கோவில்பட்டி தொகுதியில் கடந்த இரண்டு சட்டசபை தேர்தலிலும் அதிமுகவே வென்றது.
கடம்பூர் சி ராஜு இங்கிருந்து வெற்றிபெற்றுதான் அமைச்சர் ஆனார்.
அதிமுகவின் வலுவான இடங்களில் கடம்பூர் சி ராஜுவின் கோவில்பட்டி தொகுதியும் உள்ளது. இங்குதான் கடம்பூர் சி ராஜு மீண்டும் போட்டியிட்டு ஹாட்டிரிக் போட திட்டமிட்டுள்ளார்

என்ன விளையாடுறீங்களா?.. நேரடியாக "அவருக்கே" போனை போட்ட ஸ்டாலின்.. ப்பா எவ்வளவு கோபம்.. பரபர சம்பவம்

Stalin defends Rahul for PM pitch: Need strong leadership - India News

Shyamsundar - tamil.oneindia.com  :சென்னை: கிட்டத்தட்ட விரக்தியின் உச்சத்திற்குக்கே சென்று.. என்ன செய்வது என்றே தெரியாமல் கடைசியில்தான் அந்த போன் உரையாடல் நடந்துள்ளது.
திமுக - காங்கிரஸ் இடையே நேற்று தொகுதிகளை ஒதுக்குவதில் குழப்பம் ஏற்பட்ட நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் முக்கியமான போன் கால் ஒன்றை செய்துள்ளார்!
தமிழக சட்டசபை தேர்தலில் திமுக 173 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. மீதமுள்ள தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடுகிறது.
மொத்தம் 187 தொகுதிகளில் திமுகவின் உதய சூரியன் சின்னம்தான் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு அதிகபட்சமாக 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற கூட்டணி கட்சிகள் அனைத்திற்கும் 6 அல்லது 6க்கும் குறைவாகவே இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நேற்று திமுக தனது கூட்டணி கட்சிகளுக்கான தொகுதிகளை தேர்வு செய்வதற்காக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.
இதில் மதிமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை போட்டியிடும் தொகுதிகள் எளிதாக தேர்வு செய்யப்பட்டது. ஆனால் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகளை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்தது
அதிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிட வேண்டிய 25 தொகுதிகளை ஒதுக்குவதில் கடும் குழப்பம் ஏற்பட்டது. திமுகவின் முக்கிய உறுப்பினர்கள் போட்டியிட விரும்பும் தொகுதிகளை காங்கிரஸ் கேட்டது. திமுக ஏற்கனவே உறுதியாக போட்டியிட போகிறோம் என்று டிக் அடித்து வைத்து இருந்த இடங்களை காங்கிரஸ் கேட்டது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்தது.

திமுக கூட்டணி எப்படி அமைந்தது? இந்து பத்திரிகையின் பார்வையில்

hindutamil. : தேர்தல் செலவை கவனித்து கொள்கிறோம்' என வாக்குறுதி: விசிகவை வைத்து மற்ற கட்சிகளை வழிக்கு கொண்டுவந்த திமுக

dmk-alliance hindutamil.in :திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் கூடுதல் தொகுதிகளைக் கேட்டு உறுதியாக இருந்த ‌நிலையில், திருமாவளவனை வைத்து கூட்டணி கட்சிகளை வழிக்கு கொண்டு வந்த திமுக தலைவர் ஸ்டாலினை அக்கட்சி நிர்வாகிகள் ரகசியமாக பாராட்டியுள்ளனர்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையிலான பேச்சுவார்த்தை குழு கடந்த பிப்ரவரி 25-ம் தேதியில் இருந்து காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகளுடன் அதிகாரப்பூர்வமாக தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை தொடங்கியது. முதல்கட்டமாக காங்கிரஸ் தரப்பில் 54 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக தரப்பில் தலா 12 தொகுதிகளும் கேட்கப்பட்டன.
இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் 45 தொகுதிகள் வரை இறங்கி வந்த நிலையில் 2016 தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக ஆகிய 4 கட்சிகளும் பேசி வைத்தாற்போல் 12 தொகுதிகளுக்கும் கீழே இறங்கி வரவில்லை.

பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்

பாஜக சிறு கட்சிகள்

madrasreview.com :   March 11, 2021  வருகின்ற 2021 தமிழக சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான கூட்டணிகள் இறுதி ஆகிக் கொண்டிருக்கின்றன.
2001 சட்டமன்றத் தேர்தல் நடைபெற்று இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பாரதிய ஜனதா கட்சி சட்டமன்றத் தேர்தலில் பிரதான  கூட்டணியில் 20 இடங்களில் போட்டியிடுகிறது.
இந்த இருபது ஆண்டுகளில் பல்வேறு சிறு கட்சிகள் மற்றும் சாதி சங்கங்களின் மேல் சவாரி செய்திருக்கிறது பாரதிய ஜனதா கட்சி.
கடந்த காலங்களில் தங்கள் வாக்கு வங்கியைக் காட்டுவதற்காக அவர்களை தங்கள் சின்னங்களில் போட்டியிட வைத்து பலன் அடைந்துவந்த பாஜக, தற்போது தங்கள் கூட்டணியில் அவர்களுக்கு எந்த இடமும் இல்லாமல் செய்துவிட்டு தன்னை மட்டும் வளர்த்துக் கொண்டுள்ளது.
அப்படி பாஜக-வை நம்பி அவர்களுக்காக வேலை செய்து, தற்போது எந்த சீட்டும் கிடைக்காமல் புலம்பிக் கொண்டிருக்கும் சில கட்சிகளைப் பார்ப்போம்.
பாஜகவினால் பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்பட்ட கட்சிகள்

தமிமுன் அன்சாரி : ஐம்பெரும் கோரிக்கைகளோடு திமுக கூட்டணிக்கு மஜக ஆதரவு!

May be an image of 1 person and beard
அன்சாரி அவர்களின் அறிக்கை! மனிதநேய ஜனநாயக கட்சியின் அவசர தலைமை செயற்குழு கூட்டம் நேற்று (10.03.2021) சென்னையில் நடைபெற்றது.
இதில் நடப்பு தமிழக சட்டமன்ற தேர்தல் நிலைபாடு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு, இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் தலைமை நிர்வாகக் குழுவுக்கு வழங்கப்பட்டது.
தற்போதைய தேர்தல் என்பது சமூக நீதி(க்கெதிரான) சக்திகளுக்கு எதிரான ஜனநாயக யுத்தமாக இருப்பதால் இதை கவனமாக அணுகுவது என்று விவாதிக்கப்பட்டது.
தொகுதி பங்கீடு தொடர்பான கோரிக்கைகள் நமக்கு இருப்பினும், அதை முன்னிலைப்படுத்தி சர்ச்சைகள் உருவாகி , அது மதச்சார்பற்ற வாக்குகள் பிரிவதற்கு காரணமாகி விடக் கூடாது என்பதில் அக்கறை எடுத்துக் கொள்ளப்பட்டது.
அந்த வகையில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற கூட்டணிக்கு அளித்த ஆதரவை தொடர்வது என்றும், கீழ் கண்ட ஐந்து பொது கோரிக்கைகளை முன் வைப்பது என்றும் முடிவானது.
1.10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை சாதி, மத, வழக்கு பாராபட்சமின்றி விடுதலை செய்ய வேண்டும்.

சீட்டுக்கு குடும்பத்தினரின் சிபாரிசு... ஒட்டுமொத்தமாக நிராகரித்த ஸ்டாலின்?

vikatan : வேட்பாளர் தேர்வில் குடும்ப உறுப்பினர்களின் ஆதிக்கத்தை முற்றிலுமாக ஒழித்துக்கட்டி, `தனி ஒருவனாக’ இறுதிப் பட்டியலைத் தயார் செய்துவருகிறாராம் ஸ்டாலின். வாரிசு அரசியல் என்ற குற்றச்சாட்டு தி.மு.க-வுக்கு என்றைக்குமே சிக்கலாக இருந்திருக்கிறது. உதயநிதி ஸ்டாலின் திடீரென இளைஞரணி மாநிலச் செயலாளராக அறிவிக்கப்பட்டபோது ஏகப்பட்ட விமர்சனங்கள் எழுந்தன. இந்தநிலையில் கட்சிக்குள் குடும்பத்தின் தலையீட்டை தலைவலியாகப் பார்க்கத் தொடங்கியிருக்கிறாராம் கனிமொழி, செல்வி, முரசொலி செல்வம், உதயநிதி, மு.க.தமிழரசு என கருணாநிதி குடும்பத்தின் அங்கத்தினர் ஒவ்வொருவரும் தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்கு இந்தமுறை சீட் வழங்க வேண்டும் எனப் பட்டியலை ஸ்டாலினிடம் வழங்கியிருக்கிறார்கள் என்கிறார் தி.மு.க சீனியர் ஒருவர். நம்மிடம் பேசிய அவர், ``குடும்ப உறுப்பினர்கள் சிபாரிசு பட்டியல் கொடுத்து, சுமார் ஒரு மாதம் முடியப்போகிறது. இறுதிப்பட்டியல் இன்னும் வெளியாகவில்லை என்பதால், கண்டிப்பாக நம் பட்டியலை ஸ்டாலின் பரிசீலித்திருப்பார் என்றே இதுவரை எண்ணிக்கொண்டிருந்தனர்.

வியாழன், 11 மார்ச், 2021

ஆளூர் ஷா நவாஸ் : தமிழ்நாட்டின் அடையாளங்கள் அத்தனை மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

ஆளூர் ஷா நவாஸ் : எதெல்லாம் தமிழ்நாட்டின் அடையாளம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறோமோ அதன் மீதெல்லாம் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஆனால் முன்னேப்பதையும் விட வெகுண்டெழுந்து எதிர்வினை ஆற்றவேண்டிய தமிழ்நாடு
தமிழ்நாட்டு அரசு அமைதியாக இருக்கிறது.
தமிழ்நாட்டு மக்களுக்கு உண்மையாக இருப்பது
பெரியாருக்கு உண்மையாக இருப்பது
திராவிட இயக்கத்திற்கு உண்மையாக இருப்பது எல்லாம் நாங்கள் உங்களடம் எதிர்பார்க்கவில்லை
அதெல்லாம் உங்களால முடியாது  அது எங்களுக்கு தெரியும்
குறைந்த பட்சம் உங்கள் தலைவி என்று அம்மா என்று சொல்கிறீர்களே அந்த அம்மையாருக்காவது உண்மையாக இருந்தீர்களா?
அந்த அம்மையார் இருந்தவரைக்கும் ஜி எஸ் டில கையெழுத்து போடவில்லை
தமிழ்நாட்டுக்கு ஒரு வரலாறு உண்டு .
பிரதமர் வேட்பாளர்களை தமிழ்நாடு அறிவிக்கும்
கலைஞர் பல பிரதமர்களை அறிவித்தவர்.
அதற்கு ஒரு படி மேலே போயி வி வி கிரி உள்ளிட்ட  பிரதிபா பாட்டீல் என்று குடியரசு தலைவர்களையே  அறிவித்தவர் அவர்     

ம.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு

nakkeeran :தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நாளை (12/03/2021) தொடங்க உள்ள நிலையில், தங்களது கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றனர் . அந்த வகையில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் முழு வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதேபோல், மக்கள் நீதி மய்யம் கட்சி முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், அ.ம.மு.க. இரண்டு கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும், நாம் தமிழர் கட்சி அனைத்துத் தொகுதிகளுக்குமான வேட்பாளர்களையும் அறிவித்துள்ளது. 

 அதன் தொடர்ச்சியாக, தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, தங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து, ம.தி.மு.க. சார்பில் போட்டியிடும் 6 வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதியில் மல்லை சத்யா, சாத்தூர் சட்டமன்றத் தொகுதியில் ரகுராமன், அரியலூர் சட்டமன்றத் தொகுதியில் சின்னப்பா, பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் முத்துரத்தினம், வாசுதேவநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் சதன் திருமலைக்குமார், மதுரை (தெற்கு) சட்டமன்றத் தொகுதியில் பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள் அறிவிப்பு - முழு விவரம்

tamil.news18.com : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அடையாளம் காணும் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றது. இதுதொடர்பாக நடைபெற்ற மூன்றாவது கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதிகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு குறுகிய நாட்களே உள்ளதால் கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு மற்றும் எந்த தொகுதிகள் என்பது அடையாளம் காணும் பணிகள் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்து தொகுதியை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் எந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி உடன் 3 கட்ட பேச்சுவார்த்தை நடத்திய திமுக தற்போது இறுதி பட்டியலை அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள தொகுதிகள்.
1. காரைக்குடி
2.கோவை தெற்கு
3.ஈரோடு கிழக்கு
4.பொன்னேரி

மம்தா பானர்ஜி மீதான தாக்குதல் வெட்கக்கேடானது” - திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம்

dailythanthi.com : கொல்கத்தா, மேற்கு வங்காள சட்டசபைக்கு வருகிற 27 ஆம் தேதி முதல் ஏப்ரல் 29 ஆம் தேதி வரை 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பா.ஜ.க. இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் உள்ளது. அதேவேளையில் இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன மேற்கு வங்காள முதல் மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நந்திகிராம் தொகுதியில் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து பா.ஜ.க. சார்பில் திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகி கடந்த ஆண்டு பா.ஜ.க.வில் இணைந்த சுவேந்து அதிகாரி போட்டியிடுகிறார்.

வேல்முருகன் பண்ருட்டியில் போட்டி! உதயசூரியன் சின்னத்தில் களம் காண்கிறார்

hindutamil.in : திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் பண்ருட்டியில் போட்டிடுகிறார். உதயசூரியன் சின்னத்தில் களம் காண உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக ஆகிய கட்சிகள் ஓரணியிலும், திமுக, விசிக, மதிமுக, இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, கொமதேக ஆகிய கட்சிகள் இன்னொரு அணியிலும் தேர்தலை எதிர்கொள்கின்றன. இதில் திமுக கூட்டணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியும் இணைந்த நிலையில், அக்கட்சி 6 தொகுதிகளைக் கேட்டது. எனினும் ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கப்படும் என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில், 2 தொகுதிகளாவது வேண்டும் என்று வேல்முருகன் கோரிக்கை விடுத்தார். நெய்வேலி மற்றும் பண்ருட்டி ஆகிய தொகுதிகளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டிருப்பதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில் அக்கட்சிக்குத் தற்போது ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் பவானிசாகர் (தனி) திருப்பூர் வடக்கு சிவகங்கை திருத்துறைப்பூண்டி வால்பாறை (தனி) தளி தொகுதிகள் அறிவிப்பு

திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு
dailythanthi.com :சென்னை, தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ந் தேதி நடைபெறுகிறது. வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது. சட்டமன்றத்தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், ம.தி.மு.க., விடுதலைச்சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு மற்றும் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. நீண்ட இழுபறிக்கு பின்னர் தொகுதிகள் உடன்பாடு நிறைவுபெற்றது. இந்த கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு 6 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் 6 தொகுதிகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி போட்டியிடும் தொகுதிகள் விவரம் வருமாறு:- 1.பவானிசாகர் (தனி). 2.திருப்பூர் வடக்கு. 3.சிவகங்கை. 4.திருத்துறைப்பூண்டி. 5.வால்பாறை (தனி). 6.தளி.

எடப்பாடிபழனிசாமி வெற்றிபெற நினைக்கவில்லை... அவரது திட்டமே வேறு... கே.சி.பழனிசாமி அதிரடி..!

KCP-OPS

nakkeeran - வே.ராஜவேல் : அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியானதில் சிட்டிங் எம்எல்ஏக்கள் 41 பேருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அக்கட்சி தலைமை மீது எதிர்ப்பு அதிகரித்துள்ளது. மீண்டும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால், சிட்டிங் எம்எல்ஏ ராஜவர்மன், அமமுகவில் இணைந்துள்ளார்.
மேலும், பலர் இதுபோன்ற முடிவுகளை எடுப்பார்கள் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், அதிமுகவில் நடக்கும் இந்த விவகாரம் குறித்து நக்கீரனிடம் கருத்துகளை பகிர்ந்து கொண்டார்
அதிமுகவின் முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி. கூறுகையில், ''ஒன்றுப்பட்ட அதிமுகவை உருவாக்கியிருக்க வேண்டும். அது ஏற்படுத்தப்படவில்லை என்பது தவறு.
தேமுதிகவை அதிமுக கூட்டணியில் சேர்த்திருக்க வேண்டும். கூட்டணியில் இந்தக் கட்சி இருக்கிறது என்று பலம் காட்டிவிட்டு, பின்னர் இல்லை என்பது அதிமுகவுக்கு பலகீனம்.

மம்தா பானர்ஜி : சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன்

சக்கர நாற்காலியில் வந்தாவது பிரசாரம் செய்வேன்- மம்தா பானர்ஜி

malaimalar :நந்திகிராமில் மம்தா மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறி, திரிணாமுல் காங்கிரசார் போராட்டம் நடத்திவருகின்றனர்.
மம்தா பானர்ஜி
கொல்கத்தா:மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி நேற்று நந்திகிராமில் பிரசாரம் செய்தபோது, அவரது கார் அருகே ஏராளமானோர் கூடியிருந்தனர். அப்போது சிலர் மம்தா பானர்ஜியை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதில் காலில் காயமடைந்த மம்தா பானர்ஜி, கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திட்டமிட்டு தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக மம்தா பானர்ஜி குற்றம்சாட்டி உள்ளார்.

குஷ்புவுக்கு கல்தா? ஒதுங்கும் எல்.முருகன்? - பா.ஜ.க போட்டியிடும் தொகுதிகள் எவையெவை?

குஷ்பு பா.ஜ.க

  vikatan  : அ.தி.மு.க கூட்டணியில் பா.ஜ.க-வுக்கு 20 சட்டமன்றத் தொகுதிகளும், கன்னியாகுமரி நாடாளுமன்றத் தொகுதியும் ஒதுக்கப்பட்டது. நாடாளுமன்றத் தொகுதியின் வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்ட சூழலில், பா.ஜ.க-வுக்கு ஒதுக்கப்படும் 20 சட்டமன்றத் தொகுதிகள் குறித்து இழுபறிநிலை நிலவிவந்தது. அ.தி.மு.க வலுவாக இருக்கும் தொகுதிகளையே பா.ஜ.க-வும் எதிர்பார்த்ததால், சுமுகமான நிலைப்பாடு எட்டப்படவில்லை. இந்தநிலையில், மார்ச் 9-ம் தேதி இரவு தொகுதிப் பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தை நடத்த, பா.ஜ.க மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, மாநிலத் தலைவர் எல்.முருகன், பா.ஜ.க அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் உள்ளிட்ட நிர்வாகிகள் அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு வந்தனர்.

காங்கிரஸ் - திமுக: கேட்பதும் மறுப்பதும் - இழுபறிக்குக் காரணம் என்ன?

காங்கிரஸ் - திமுக: கேட்பதும் மறுப்பதும் -  இழுபறிக்குக் காரணம் என்ன?

minnambalm : அதிமுகவில் தொகுதிப் பங்கீடுப் பட்டியல் மட்டுமல்ல... வேட்பாளர் பட்டியலும் வெளியிடப்பட்டு வரும் நிலையில் திமுகவில் கூட்டணிக் கட்சிகளுக்குரிய தொகுதிப் பங்கீடே இன்னும் முடியவில்லை.

தொகுதிகளின் எண்ணிக்கையைதான் குறைத்துவிட்டீர்கள், நாங்கள் கேட்கும் தொகுதிகளையாவது கொடுங்கள் என்று காங்கிரஸ் தரப்பில் விடாமல் கேட்கிறார்கள். குறிப்பாக சில தொகுதிகளில் காங்கிரஸுக்கும் திமுகவுக்கும் இடையே இழுபறி நிலவுகிறது.    தற்போதைய காங்கிரஸ் சட்டமன்றத் தலைவர் கே.ஆர்.ராமசாமி தனது காரைக்குடி தொகுதியில் இருந்து மாறி திருவாடானை சட்டமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட விரும்புகிறார். ஆனால், திருவாடானை தொகுதியைத் தர முடியாது என்று திமுக தரப்பில் கடுமையாக இருக்கிறார்கள். சிட்டிங் காரைக்குடியிலேயே நில்லுங்கள் என்று சொல்கிறது திமுக.

நடிகர் மம்முட்டி : யாரையும் ஆதரித்துப் பிரச்சாரம் செய்யப்போவதில்லை (பினராயி பாத்திரத்தில் நடிக்கிறார் - டீசர்)

கேரளா சட்டமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் சார்பாக பிரசாரம் செய்வதில்லை என்று நடிகர் மம்மூட்டி அறிவித்துள்ளார் .
இதில் என்ன பெரிய செய்தி இருக்கிறது என்று யோசிக்கட்டதீங்க மக்களே,
இவர் கேரளா முதல்வர் கடைக்கால் சந்திரன் என்ற பாத்திரத்தில் சென்ற ஆண்டு நடித்திருக்கிறார்               அது முதல்வர் பினாராய் விஜயனின் பாத்திரம் என்று கூறுகிறார்கள்
இந்த டீசரை பார்க்கும் போது அசப்பில் பினராயி விஜயன் போல்தான் இருக்கிறார்
இதில் வரும் ஒரு வசனம் : கள்ள அம்பட்டன்ற மோனு ஒரு ஒக்க முக்கிய மந்திரி ஆனால் என்று வருகிறது .
முதல்வர் பினராயி விஜயன் ஒரு ஒடுக்கப்பட்ட ஜாதி பின்புலத்தில் இருந்து வந்தவராகும்  nakkeeran :தமிழகம், கேரளா உள்ளிட்ட ஐந்து மாநிலத்திற்கு சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி கட்சிகள், கூட்டணிப் பங்கீடு, தொகுதி ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சிகள் நடிகர்களை தேர்தல் பிரச்சாரங்களில் களம் இறக்கத் தயாராகி வருகின்றன. 

1983 இல் எம்ஜியார் ஆட்சியில் கச்சத்தீவை நீக்கிய "உத்தரவு எண் : RCF 23 - 75/83" ..வெளிவந்த வரலாறு!

No photo description available.


1983ல் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போது அப்போதைய ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் இந்திய வரைப்படத்தில் இருந்து கச்சத்தீவை நீக்கி உத்தரவு பிறப்பித்தார்.

"உத்தரவு எண் : RCF 23 - 75/83"
இந்த உத்தரவுக்கு பின்னர் தான் கச்சத்தீவு இந்திய வரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்டது.     அதுவரை இந்திய அரசு வெளியிடும் வரைப்படங்களில் கச்சத்தீவு இருந்துள்ளது.  
இந்த உத்தரவு பிறப்பிக்கும்போது எம்ஜிஆர் தான் முதல்வர். ஜெயலலிதா நாடாளுமன்ற உறுப்பினர். Jerry Sundar

ரூ70 லட்சம் சீட்டு மோசடி-பாஜக தேர்தல் பொறுப்பாளர் 'கந்துவட்டி' சீனிவாசனை தூக்கி உள்ளே வைத்த போலீஸ்

சீட்டு மோசடியில் ஈடுபட்ட பாஜக தேர்தல் பொறுப்பாளர் மனைவியுடன் கைது; சிறையில்  அடைப்பு

Mathivanan Maran - /tamil.oneindia.com :  சென்னை: சென்னையில் நிதி நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் ரூ70 லட்சம் மோசடி செய்ததாக பாஜகவின் வடசென்னை மாவட்ட தேர்தல் பொறுப்பாளர் சீனிவாசன், அவரது மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சென்னை செம்பியம் பகுதியில் சுவர்ணலட்சுமி நிதி நிறுவனம் நடத்தி வந்தார் சீனிவாசன். மேலும் கந்துவட்டி தொழிலும் செய்து வந்தார்.
வட்டி தராதவர்கள், பணத்தை திருப்பி கொடுக்காதவர்களை அடியாட்கள் மூலம் மிரட்டி வந்தாராம் சீனிவாசன். இந்த நிலையில் சீட்டு பிடிப்பதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்திருக்கிறார் சீனிவாசன்.

மம்தா பானர்ஜி மீது தாக்குதல்: வங்காள மக்களின் சக்தியை மே-2ம் தேதி பாஜக உணரும் - அபிஷேக் பானர்ஜி

மம்தா பானர்ஜி மீது தாக்குதல்: வங்காள மக்களின் சக்தியை மே-2ம் தேதி பாஜக உணரும் - அபிஷேக் பானர்ஜி

.dailythanthi.comகொல்கத்தா, 294 தொகுதிகளை கொண்ட மேற்குவங்காள சட்டசபைக்கு 8 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. அதன்படி மார்ச் 27, ஏப்ரல் 1, 6, 10, 17, 22, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் மே 2-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. இத்தேர்தலில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும் பாஜக-வுக்கும் இடையே நேரடி போட்டி ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதேவேளை இடதுசாரிகள், காங்கிரஸ் மற்றும் இந்திய மதசார்பற்ற முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டணியாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன. 

தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு!

எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! #Election2021
kalaignarseithigal.com  : எந்தக் கட்சிக்கு எந்த தொகுதி? - தி.மு.க கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! #Election2021, தி.மு.க கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், ம.தி.மு.க, ஆதித்தமிழர் பேரவை, மக்கள் விடுதலைக் கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.தமிழகத்தில் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலைச் சந்திக்க தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி தயாராகியுள்ளது. தி.மு.க கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்து வேட்பாளர் பட்டியலை தயாரிக்கும் பணியில் கூட்டணிக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க 173 தொகுதிகளில் களமிறங்குகிறது. இதையடுத்து தமிழகம் முழுவதும் தி.மு.கழக நிர்வாகிகள் தேர்தல் களப்பணியைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

மம்தா பானர்ஜி நந்திகிராமில் தாக்கப்பட்டார்! தலையிலும் காலிலும் காயம் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார்

Vishnupriya R -  tamil.oneindia.com : கொல்கத்தா: மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மீது தாக்குதல் நடத்தப்பட்டதால் காலில் காயம் ஏற்பட்டதாக புகார் எழுந்துள்ளதை அடுத்து தேர்தல் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோரியுள்ளது.
மேற்கு வங்கம் மாநிலத்திற்கு மார்ச் இறுதியில் சட்டசபைத் தேர்தல் 8 கட்டங்களாக நடைபெறுகிறது. நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜி போட்டியிடுகிறார்.
கொல்கத்தாவிலிருந்து 130 கிலோமீட்டர் தூரம் உள்ள நந்திகிராமில் வேட்புமனு தாக்கல் செய்ய மம்தா சென்றிருந்தார்.
அப்போது அவர் காரில் ஏற முயன்ற போது 4 அல்லது 5 பேர் அவரை தள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. மாபெரும் பேரணி.. நந்திகிராமில் கெத்தாக வேட்புமனு தாக்கல் செய்த மம்தா.. சமாளிப்பாரா சுவேந்து அதிகாரி?
இதில் கீழே விழுந்த மம்தாவுக்கு காலில் காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அவரது பாதுகாப்பு அதிகாரிகள் தூக்கி காரின் பின்சீட்டில் உட்காரவைத்தனர்.

6 தொகுதிகளிலும் அதிமுகவுடன் மோதும் மதிமுக .. மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம்

6 தொகுதிகளிலும் அதிமுகவுடன் மோதும் மதிமுக
.maalaimalar.com :சென்னை: தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்தவண்ணம் உள்ளன. அதன்படி, திமுக தொகுதியில் மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்ட 6 தொகுதிகள் இன்று இறுதி செய்யப்பட்டன. அதன்படி மதுரை தெற்கு, வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய தொகுதிகளில் மதிமுக போட்டியிடுகிறது. இதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின், மதிமுக பொதுச்செயாளர் வைகோ ஆகியோர் கையெழுத்திட்டனர். மதிமுக போட்டியிடும் 6 தொகுதிகளிலும் அதிமுக போட்டியிடுகிறது. அதிமுக சார்பில் மதுரை தெற்கு தொகுதியில் எஸ்.எஸ்.சரவணன் போட்டியிடுகிறார். வாசுதேவநல்லூரில் ஏ.மனோகரன், சாத்தூரில் ஆர்.கே.ரவிச்சந்திரன், பல்லடத்தில் எம்எஸ்எம் ஆனந்தன், அரியலூரில் தாமரை எஸ்.ராஜேந்திரன், மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் போட்டியிடுகின்றனர்.

கார்த்தியை எச்சரித்த குண்டுராவ்.. சஸ்பெண்ட் செய்து விடுவேன்

சஸ்பெண்ட் செய்து விடுவேன்: கார்த்தியை எச்சரித்த குண்டுராவ்
minnambalam.com : காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை சொல்லி ஊடகங்களில் உலா வருபவர் கார்த்தி சிதம்பரம்.அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 8 பெண்களுக்கும் நான்கு தொகுதிகளை சிறுபான்மையினருக்கும் ஒதுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் போன்றவர்களை டென்ஷன் ஆக்கியது. இந்த சூழலில் கடந்த மார்ச் எட்டாம் தேதி இரவு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸின் பல்வேறு கோஷ்டி தலைவர்களையும் தமிழகத்தின் காங்கிரஸ் எம்பி களையும் தனித்தனியாக சந்திக்க முடிவு செய்தார் குண்டு ராவ். இதற்காக அவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

புதன், 10 மார்ச், 2021

அதிமுக வேட்பாளர் பட்டியல்: 3 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை! 2 எம்பிக்களுக்கு வாய்ப்பு

அதிமுக வேட்பாளர் பட்டியல்:  3 அமைச்சர்களுக்கு வாய்ப்பில்லை! 2 எம்பிக்களுக்கு வாய்ப்பு
minnambalam :அதிமுகவின் 171 பேர் கொண்ட இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் இன்று மார்ச் 10 வெளியிடப்பட்டிருக்கிறது. தமிழக அமைச்சர்களில் கிட்டத்தட்ட பெரும்பான்மையோர் தொகுதிகளில் போட்டியிடும் நிலையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும் தற்போதைய சிவகாசி தொகுதியிலிருந்து ராஜபாளையம் தொகுதிக்கு மாற்றப்பட்டுள்ளார்.

மேலும் 3 அமைச்சர்களுக்கு மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. ஸ்ரீரங்கத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் வளர்மதி, வாணியம்பாடி தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் நிலோபர் கபில், சிவகங்கைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் பாஸ்கரன் ஆகியோருக்கு இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

பாமக போட்டியிடும் தொகுதிகள் வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

செஞ்சி, மைலம், ஜெயங்கொண்டம், திருப்போரூர், வந்தவாசி (தனி), நெய்வேலி, திருப்பத்தூர் (திருப்பத்தூர் மாவட்டம்), ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பென்னாகரம், தருமபுரி, விருத்தாச்சலம், கீழ்பென்னாத்தூர், காஞ்சிபுரம், மேட்டூர், சேலம் (மேற்கு), சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, பூந்தமல்லி (தனி), கீழ்வேலூர் (தனி), ஆத்தூர் (திண்டுக்கல் மாவட்டம்). 

pmk contest the assembly constituency list released

nakkheeran.in - பா. சந்தோஷ்

pmk contest the assembly constituency list released

 


தமிழக சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் உள்ள பா.ம.க.வுக்கு 23 சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிடுவது என்பது குறித்து அ.தி.மு.க. - பா.ம.க. நிர்வாகிகள் பல கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினர்.இந்த நிலையில், இன்று (10/03/2021) அ.தி.மு.க.- பா.ம.க. இடையே தொகுதி ஒதுக்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க.வின் இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் பா.ம.க.வின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ், பா.ம.க.வின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி ஆகியோர் கையெழுத்திட்டனர். 

பாஜகவினர் ரங்கசாமியை மிரட்டி என். ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி!

May be an image of 3 people and outdoors
Sivakumar Shivas : · புதுச்சேரி மக்களுக்கு துரோகமிழைத்த ரங்கசாமி! ஒரு தெருவில் பத்து ஓட்டு கூட வாங்க வக்கில்லாத பாஜகவினர், ரங்கசாமியை மிரட்டியோ அல்லது ஏதோ ஒரு வழியில் பணியவைத்து வலுக்கட்டாயமாக என். ஆர். காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளனர். அடிப்படையில், ரங்கசாமிக்கு அரசியல் கொள்கை என்பதெல்லாம் எதுவும் கிடையாது. முதலமைச்சர் பதவி ஒன்று மட்டுமே அவருக்கு குறிக்கோள். அவரது அந்த பலவீனத்தை பயன்படுத்தியே அவரை கூட்டணியில் சிக்க வைத்துள்ளனர். ஆனால், வெற்றி பெற்றால் முதல்வர் பதவி நிச்சயம் என்ற தீர்மான ஒப்பந்தம் எதுவும் இல்லை. எல்லாமே பேச்சளவில்தான்.
முன்பு காங்கிரசுக்கு எதிராக, ரங்கசாமியை நம்பி புதுச்சேரி மக்கள் அவருக்கு மகத்தான வெற்றியை தேடி தந்தனர்.
ஆனால் முதல்வர் பதவிக்கு வந்ததும், தன்னை சுற்றி தனக்கு ஜால்ரா போடும் ஒரு கும்பலை வைத்துக்கொண்டு அந்த பதவி சுகத்தை மட்டுமே அனுபவித்து வந்தார்.

185 தொகுதிகளில் போட்டி- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் ! live

185 தொகுதிகளில் போட்டி- அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு

maalaimalar : அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு விட்டதால் இன்று 2-வது வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை: சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி பங்கீடுகளை இறுதி செய்து வருகிறது. அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 23 தொகுதிகளும், பா.ஜனதாவுக்கு 20 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் தே.மு.தி.க. நேற்று அ.தி.மு.க. கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் அ.தி.மு.க. தலைமைக் கழகத்தில் பா.ம.க. மற்றும் பாரதிய ஜனதா கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு செய்யும் பணி தீவிரம் அடைந்தது.

காங்கோவில் மலை நிறைய தங்கம் - போட்டி போட்டுக்கொண்டு தோண்டி எடுத்து சென்ற மக்கள்

maalaimalar.com : கின்ஷாசா: மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோவின் தெற்கு கிவு மாகாணத்தில் லுகிகி என்ற கிராமம் உள்ளது. இங்குள்ள ஒரு மலையில் உள்ள மண்ணில் 60 முதல் 90 சதவீதம் வரை தங்கத்தாது இருப்பதை உள்ளூர்வாசிகள் சிலர் கண்டுபிடித்துள்ளனர். இந்த செய்தி காட்டுத் தீ போல கிராமம் முழுவதும் பரவியதையடுத்து மக்கள் அனைவரும் மண்வெட்டி உள்ளிட்ட ஆயுதங்களுடன் மலை பகுதிக்கு விரைந்தனர். அங்கு அவர்கள் போட்டி போட்டுக்கொண்டு மண்ணை தோண்டினர். பின்னர் அதனை பைகளில் போட்டு வீட்டுக்கு எடுத்துச்சென்று தண்ணீரில் அலசி தங்கத் தாதுக்களை எடுத்தனர். இது தொடர்பான வீடியோவை அகமது அல்கோபரி என்ற பத்திரிகையாளர் டுவிட்டரில் பகிர்ந்ததை தொடர்ந்து, அது சமூக வலைதளங்களில் வைரலானது.

தப்பிக்கிறார் ராஜேஷ்தாஸ்? யார் தயவால்? கண்ணன் சஸ்பெண்ட்.. பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை இல்லை

கண்ணன் சஸ்பெண்ட்.. பாலியல் தொல்லை கொடுத்தவர் மீது நடவடிக்கை இல்லை - யார் தயவால் தப்பிக்கிறார் ராஜேஷ்தாஸ்?
kalaignarseithigal.com - Vignesh Selvaraj: சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பியாக இருந்த ராஜேஷ்தாஸ், அண்மையில் முதல்வர் பழனிசாமி தேர்தல் சுற்றுப்பயணம் சென்றபோது உடன் சென்றார். அப்போது மாவட்ட எஸ்.பியான பெண் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. பாதிப்புக்குள்ளான பெண் எஸ்.பி டி.ஜி.பி திரிபாதியிடம் புகார் அளிப்பதற்காக தனது காரில் சென்றபோது, பரனூர் சுங்கச்சாவடியில் செங்கல்பட்டு எஸ்.பி கண்ணன் வழிமறித்து, சிறப்பு டி.ஜி.பி குறித்து புகார் செய்ய வேண்டாம், இதனால் தேவையில்லாத பிரச்னை ஏற்படும் என்று மிரட்டினார்.

பாஜக ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது'- சுப்ரமணியன் சுவாமி கருத்து!

நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக கூட்டணியில், பாரதிய ஜனதாவுக்கு 20 தொகுதிகளை அதிமுக ஒதுக்கியுள்ளது. முன்னதாக அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், பாஜகவுக்கு 20 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் இடைத்தேர்தல் நடைபெறும் கன்னியாகுமரி மக்களவை தொகுதியும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று (09.03.2021) இரவு விடிய விடிய நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பாஜக, பாமக ஆகிய கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் பட்டியல் குறித்த முடிவு எட்டப்பட்டுள்ளது இந்நிலையில், தமிழகத்தில் பாஜக வெற்றிபெறுமா என்ற கேள்விக்கு பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பதிலளித்துள்ளார். திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், 'தேசிய கட்சியான பாஜக, வெற்றியோ தோல்வியோ தனித்துப் போட்டியிட வேண்டும். தமிழகத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் வெல்லும். இல்லாவிடில் ஒரு தொகுதியிலும் ஜெயிக்காது' என்றார்.

எந்தெந்த கட்சிக்கு என்னென்ன தொகுதிகள்? திமுக கூட்டணி நிலவரம்!

எந்தெந்த கட்சிக்கு என்னென்ன தொகுதிகள்? திமுக கூட்டணி நிலவரம்!

minnambalam.com : திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று (மார்ச் 10)அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில் திமுகவின் அனைத்து மாவட்ட செயலாளர்களும், சீட்டுக் கேட்டு விருப்ப மனு கொடுத்தவர்களும் சில நாட்களாகவே சென்னையில் முகாமிட்டுள்ளனர்.

மின்னம்பலத்தில் ஏற்கனவே நாம் வெளியிட்டது போல வேட்பாளர் பட்டியலை பற்றிய ஒரு சிறு க்ளூ கூட கிடைக்காமல் அவர்கள் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் இன்று வெளியிடப்படுவதில் சில சிக்கல்கள் இருக்கின்றன... அதனால் முழுமையான வேட்பாளர் பட்டியல் தள்ளிப் போகலாம் என்று திமுக வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிகின்றன.

என்ன சிக்கல்?    "திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு ஸ்டாலின் மிகவும் கறாராக நடந்து கொண்டார். காங்கிரஸ், கம்யூனிஸ்ட் ஆகிய தேசியக் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக போன்ற தமிழக கட்சிகள் என கூட்டணியில் இருக்கும் எந்த கட்சிக்கும் திமுக முதலில் எடுத்த முடிவின் படியே தொகுதி எண்ணிக்கை வழங்கப்பட்டுள்ளது.

பாஜக ஆட்சியில் மக்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் ₹8ட்ரில்லியன் (8போட்டு 12சைபர்). ஒருவரும் வெளிநாட்டார் இல்லை! ஒருவரும் பாக்கிஸ்தானி அல்ல!

பாலகணேசன் அருணாசலம் : தம்மாதுண்டு குஜராத் மொத்த இந்தியாவையும் முட்டாளாக்கிக் கொண்டுள்ளது!
விஜய்மல்யா
மருள் சோக்ஷி
நீரவ் மோடி
நியான் மோடி
புஷ்பேஸ் பைடியா
ஆஷிஷ் ஹோபனபுத்ரா
சன்னி காய்ரா&கோ
வினெய் மிட்டால்
லலீத்மோடி
ரித்தேஷ் ஜெயின்
ஹித்தேஷ் நாகேந்திர பாய் படேல்
மயூரிபென் படேல்
ஆஷிஸ்‌ சுரேஷ்.
கொள்ளையடிக்கப்பட்ட பணம்₹8ட்ரில்லியன்(8போட்டு 12சைபர்).
ஒருவரும் வெளிநாட்டார் இல்லை!
ஒருவரும் பாக்கிஸ்தானி அல்ல!
ஒருவரும் உள்நாட்டு தீவிரவாதி அமைப்புகளில் இல்லை.
வேறு இந்த கூட்டம்?
மல்யாவைத் தவிர அனைத்து திருடர்களும் குஜராத்தை சேர்ந்தவர்கள்!
இந்த 8ட்ரில்லியன் பணமும் மக்களிடம் நடமாட வேண்டிய பணம்!
நம் குடும்பங்களில் புரள வேண்டிய பணம்!
உன் சந்ததி தொழில் செய்ய/வேலைவாய்ப்பை அதிகரிக்க தமிழ்நாட்டு அரசுக்கு வரி வேண்டிய பணம்!

இந்தி ஆதிக்கத்தை அடித்து நொறுக்க தொடங்கிய மம்தா பானர்ஜி

செல்லபுரம் வள்ளியம்மை :  மம்தா பானர்ஜி களம் குறித்து விட்டார் .
வடஇந்திய தொலைக்காட்சிகளில் இவ்வளவு அதிகமாக ஆங்கில சப் டைட்டிலோடு செய்தியை ஒளிபரப்புவது இப்போதுதான் என்றெண்ணுகிறேன்.
வழக்கமாக மேற்குவங்க அரசியல்வாதிகள் மம்தா உட்பட ஹிந்தி உருது மக்களுக்கும் புரியவேண்டும் என்று ஹிந்தி உருது பாதி வங்கமொழி பாதி என்றுதான் பேசுவார்கள்
எப்படி இந்தி படங்களில் அதிகம் ஆங்கில சொற்களை கலந்து பேசுவார்களோ,
அது போல மேற்குவங்க அரசியல் தலைவர்களும் பேசுவார்கள்
எனவே இந்தி உருது மக்களுக்கு புரிவதில் எந்த சிக்கலும் இருக்காது.
இந்த நடைமுறைக்கு ஒரு முடிவு கட்டிவிட்டார் மம்தா பானர்ஜி.
நூறுவீதம் தனி வங்காள மொழியில் பிச்சு உதறுகிறார்,
விழி பிதிங்கிய டைம்ஸ் நவ் தொலைக்காட்சி ஆங்கில சப் டைட்டில் போடுகிறது
அதுமட்டுமல்ல விவாதமும் கூடுமானவரை இந்தி கலக்காமலேயே ஆங்கிலத்தில் நடக்கிறது.
இவர்களுக்கு தெரியும் ஆங்கில விவாதங்களில் இந்தி ருதுவை கலந்தால் அவர்கள் வங்க மொழியை கலந்து பேசுவார்கள்   
ஆம் வங்க மக்கள் தயாராகி விட்டார்கள்
மீண்டும் ஒரு தடவை மம்தாவின் பேச்சுக்களை நோக்குங்கள்.புரியும்.
இந்தி மேலாதிக்கத்திற்கு மேற்கு அடி கொடுக்க தொடங்கி விட்டது.       

சென்னை மீன்களில் 80 சதவிகித பிளாஸ்டிக் துகள்கள்!

சென்னை மீன்களில் 80 சதவிகித பிளாஸ்டிக் துகள்கள்!

மின்னம்பலம்  :சென்னையில் பிடிபடும் மீன்கள் எப்படி இருக்கின்றன என்பது குறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில் சென்னையில் பிடிபடும் 80 சதவிகித மீன்களில் பிளாஸ்டிக் துகள்கள் உள்ளதாகத் தெரியவந்துள்ளது.

நாம் பயன்படுத்தும் பிளாஸ்டிக் கழிவுகளை கடலிலும், நீர் நிலைகளிலும் வீசிவிடுகிறோம். மழைக்காலத்தில் ஆறுகள், நீரோடைகள் மூலமாக செல்லும் தண்ணீர், பிளாஸ்டிக் கழிவுகளைக் கடலுக்கு இழுத்து செல்கிறது. அவ்வாறு கடலுக்கு வரும் பிளாஸ்டிக் கழிவுகளை, மீன்கள் உணவு என கருதி சாப்பிட்டுவிடுகின்றன. இதனால் இப்போது பெரும்பாலான மீன்களின் உடலில் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பதை காண முடிகிறது.   இதுகுறித்து சென்னையில் உள்ள தேசிய கடற்கரை மையம் சார்பில் ஆய்வு நடத்தப்பட்டது. பட்டினப்பாக்கம் பகுதியில் விற்கப்படும் பல வகை மீன்களை அவர்கள் ஆய்வு செய்தார்கள். அதில் மக்கள் விரும்பி சாப்பிடக்கூடிய பல வகை மீன்களின் உடல்களிலும் பிளாஸ்டிக் கழிவுகள் கலந்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

ஸ்டாலின் : வேட்பாளர் பட்டியல்ல தலையிடாதீங்க. யார் யாரை நிறுத்தணும்னு முழுமையான ஆய்வு பண்ணி....


மின்னம்பலம் : நடக்க இருக்கும் சட்டமன்றத் தேர்தல் திமுகவில் பலருக்கும் புதுவிதமான தேர்தல் களமாக இருக்கிறது. ஜனநாயக ஜாம்பவானான கலைஞர் இருக்கும்போதே வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படுவதற்கு சில நாட்கள் முன்பே, கலைஞரைச் சுற்றியுள்ள முக்கியப் புள்ளிகளுக்கு தெரிந்துவிடும். அவரைப் பிடித்து இவரைப் பிடித்து எப்படியாவது பட்டியலில் இடம்பெற்று விடலாம் என்ற நம்பிக்கை கடைசி நேரம் வரை திமுக பிரமுகர்களிடம் உயிரோடு இருக்கும்.    

ஆனால், இந்தத் தேர்தலில் திமுகவின் வேட்பாளர் பட்டியல் உலகத் தரத்திலான தேர்வின் வினாத்தாளை விடவும் பரம ரகசியமாக வைக்கப்பட்டிருக்கிறது. திமுகவில் பலரும், யாரிடம் பேசினாலும் வேட்பாளர் பட்டியலின் ஓரெழுத்தைக்கூட கண்டுபிடிக்க முடியாத புதிரில் தவித்துக்கொண்டிருக்கிறார்கள்.

கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பங்கீடு விவரம்

dailythanthi.com : கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பங்கீடு விவரம் வருமாறு:-;சென்னை, நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க., மக்கள் நீதி மய்யம் மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் ஆகிய கட்சிகள் தலைமையில் மொத்தம் 4 அணிகள் களத்தில் உள்ளன. நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடுகிறது. அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுவிட்டது. தே.மு.தி.க. தனித்து போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறது.தற்போதைய சூழ்நிலையில், நேற்று வரை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதி பங்கீடு விவரம் வருமாறு:-

அ.தி.மு.க. கூட்டணி
பா.ஜ.க. 20
பா.ம.க. 23
(த.மா.கா. மற்றும் சிறிய கட்சிகளுக்கு இன்னும் தொகுதிகள் ஒதுக்கப்படவில்லை. அதன்பிறகே அ.தி.மு.க. போட்டியிடும் தொகுதிகளின் எண்ணிக்கை தெரியவரும்)

தி.மு.க. கூட்டணி
தி.மு.க. 174
காங்கிரஸ் 25
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி 6
இந்திய கம்யூனிஸ்டு கட்சி 6
ம.தி.மு.க. 6
விடுதலை சிறுத்தைகள் கட்சி 6

கமலஹாசனின் வாய்க்கொழுப்பு! கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் மு.க .ஸ்டாலின் என்று கூட சொல்லலாம்

கமலஹாசன் : நான் கலைஞரை அவமானப்படுத்த வேண்டும் என்றால் சும்மா மு க ஸ்டாலின் என்று சொன்னாலே போதுமானது என்று சொன்னேன் hindutamil.in :கலைஞரை  அவமானப்படுத்த 'மு.க.ஸ்டாலின்' எனக் கூறினாலே போதுமானது என, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விமர்சித்துள்ளார்.. சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியொன்றில் பேசிய மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், சச்கர நாற்காலியில் அமரும் வரை தான் அரசியலில் ஈடுபட விரும்பவில்லை எனத் தெரிவித்திருந்தார். இது, மறைந்த திமுக தலைவர் கலைஞரை  குறிப்பதாக, திமுகவினர் கோபமடைந்தனர். இதையடுத்து, தான் கலைஞரை  குறிப்பிடவில்லை எனவும், அவர் மீது தமக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது எனவும், கமல்ஹாசன் விளக்கம் அளித்தார். இந்நிலையில், நேற்று (மார்ச் 8) சென்னையில் நடைபெற்ற நிகழ்வொன்றில், கலைஞரை  அவமானப்படுத்த 'மு.க.ஸ்டாலின்' என்று கூறினாலே போதுமானது என்று கமல் தெரிவித்தார்.

புதுச்சேரியில் தி.மு.க.-காங்கிரஸ் சரிசமமான தொகுதிகளில் போட்டியா? சென்னை அண்ணா அறிவாலயத்தில், நாராயணசாமி பேட்டி

.dailythanthi.com :சென்னை, தமிழக அரசியலை பொறுத்தவரையில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கிறது. புதுச்சேரி அரசியலை பொறுத்தவரை காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் தி.மு.க. இடம்பெற்று தேர்தலை சந்திப்பது வழக்கம். இந்தநிலையில் தி.மு.க.வில் புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்கள் பெறப்பட்டிருந்தது. அவர்களிடம் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 5-ந்தேதி நேர்காணலை நடத்தினார். அப்போது மு.க.ஸ்டாலினிடம், ‘தமிழ்நாட்டை போன்றே புதுச்சேரியிலும் தி.மு.க.தான் கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும். நாம் 18 தொகுதிகளில் போட்டியிட வேண்டும். முதல்-அமைச்சர் வேட்பாளரும் தி.மு.க. சார்பில் நிறுத்தப்பட வேண்டும்.’ என்று புதுச்சேரி தி.மு.க. நிர்வாகிகள் வேண்டுகோளை முன்வைத்தனர்.

செனகலில் எதிர்க்கட்சித் தலைவர் கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: 5 பேர் பலி

thinathanthi : தக்கார், மேற்கு ஆப்பிரிக்க நாடான செனகலில் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மானே சோன்கோவை கைது செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தலைநகர் தக்கார் உள்பட நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டத்தில் நேற்று முன்தினம் மீண்டும் வன்முறை வெடித்தது. இதில் 5 பேர் பலியாகினர். முன்னதாக தெற்கு செனகலில் 17 வயது சிறுவன் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதன்மூகம் செனகல் போராட்டங்களில் இறந்தவர்களின் எண்ணிக்கையை ஐந்தாக உயர்த்தது. ஒரு கற்பழிப்பு குற்றச்சாட்டின் பேரில் எதிர்க்கட்சித் தலைவர் உஸ்மானே சோன்கோ கடந்த புதன்கிழமை அன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த ஆர்ப்பாட்டங்கள் அங்கு நடைபெற்று வருகின்றன.