maalaimalar : சென்னை: பாராளுமன்றத் தேர்தலில் பா.ம.க. எந்த கூட்டணியில் சேரப்போகிறது? என்பது மிகப் பெரிய கேள்வியாகவே மாறி இருக்கிறது. கூட்டணி தொடர்பாக பாரதிய ஜனதா, அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் பா.ம.க. ரகசியமாக பேசி வந்தது.
இதில் எந்த அணியில் பா.ம.க. சேரப் போகிறது என்பது அரசியல் வட்டாரத்தில் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி இருந்தது.
இந்த நிலையில் கூட்டணி தொடர்பாக பா.ம.க. இறுதி முடிவை எடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைப்பதற்கு பா.ம.க. மாவட்ட செயலாளர்கள் சிலர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருப்பதாக தகவல் வெளியானது.
சனி, 16 மார்ச், 2024
அ.தி.மு.க.-பா.ம.க. கூட்டணி உடன்பாடு? 7 தொகுதிகளை ஒதுக்க முடிவு:
தூத்துக்குடியில் கனிமொழியை எதிர்த்து ராதிகா போட்டி? திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை
hindu tamil : தமிழ்நாட்டில் போட்டியிட வைக்க திரை நட்சத்திரங்களுக்கு பாஜக வலை வீசுவதாகத் தெரிகிறது.
தூத்துக்குடி திமுக எம்.பி. கனிமொழிக்கு எதிராக நடிகை ராதிகாவை போட்டியிட வைக்க முயற்சிக்கப்படுகிறது.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது.
இந்த தேர்தலில் எப்படியாவது400 தொகுதிகளை பெற பாஜக தீவிரம் காட்டுகிறது.
தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் கணிசமானத் தொகுதிகளை பெற்றால்தான் 400-ஐ எட்ட முடியும் என்ற நிலை உள்ளது.
இதற்காக, தனது வேட்பாளர்களை தேர்வு செய்வதில் பாஜக மிகவும் கவனம் செலுத்துகிறது.
கேணல் கருணாவும் திருமேனி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரனும்! உண்மையில் நடந்தது என்ன?
Col Karuna |
|
Col karuna |
M R Stalin Gnanam : கிழக்குப் பிளவின் இருபதாண்டு நினைவுகள்
அன்றொருகாலம் தமிழீழ விடுதலைப் புலிகள் யாராலும் 'அசைக்க முடியாத' சக்திகளாய் இருந்தனர்.
1976ம் ஆண்டு மே மாதம் 5 ஆம் திகதி உருவாக்கப்பட்ட புலிகள் அமைப்பின் தலைவரான ' திருமேனி திருவேங்கடம் வேலுப்பிள்ளை பிரபாகரன்' எவராலும் வெல்லப்பட முடியாத 'அமானுஷ' சக்தி படைத்தவர் என்கின்ற ஒளிவட்டங்களின் சொந்தக்காரராய் இருந்தார்.
இந்தப் புலிகள் அமைப்பு உருவாகியதிலிருந்து 2004ஆம் ஆண்டு வரையான 27 வருடகால வரலாற்றில் அது கடந்து வந்த சவால்களும், நெருக்கடிகளும் எண்ணற்றவை.
ஆனாலும் அவையனைத்தையும் தமது மூர்க்கத்தனமான இராணுவ பலத்தின் மூலம் வெற்றிகொண்டு நின்றவர்கள்தான் புலிகள்.
ஆனால் 2004ம் ஆண்டில் புலிகள் அமைப்பும் அதன் தலைவர் பிரபாகரனும் எதிர்கொள்ள நேர்ந்த 'கிழக்கு பிளவு' அவர்களுக்கு வரலாறு காணாத சவாலொன்றை விடுத்தது.
அதனை அவர்கள் வெற்றிகொண்டு தாண்டிச் செல்ல முடியவில்லை. காரணம் அது இராணுவ ரீதியாக மட்டுமன்றி அரசியல் கோட்பாட்டு ரீதியான சவாலாகவும் எழுந்து நின்றது.
அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நாகார்ஜுனா-வின் அன்னபூர்ணா ஸ்டூடியோஸை வாங்கியது! ஆந்திர அரசு நிலம் அம்பானியின் வசமாகிறது
tamil.goodreturns.in : தெலுங்கு திரையுலகின் ஜாம்பவான்களில் அக்கினேனி நாகேஸ்வர ராவும் ஒருவர். தெலுங்கு ரசிகர்களின் பல பரம்பரைகளை கவர்ந்தவர். 271 படங்களில் அவர் நடித்துள்ளார். அக்கினேனி நாகேஸ்வர ராவ் வேறு பாருமில்லை, தெலுங்கு நடிகர் நாகார்ஜுனா-வின் சந்தை, நாக சைதன்யா-வின் தாத்தா.
அக்கினேனி நாகேஸ்வர ராவ் தெலுங்கு சினிமாவில் ஒரு முக்கிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான அன்னபூர்ணா ஸ்டுடியோவையும் கட்டியிருந்தார். அக்கினேனி நாகேஸ்வர ராவ் ஸ்டுடியோ கட்ட விரும்பிய 22 ஏக்கர் நிலத்தை 1976-ல் அப்போதைய ஆந்திர அரசு அவருக்கு ஒதுக்கியது.
ஹைதராபாத்தில் தெலுங்கு திரைப்படத் துறையை மேம்படுத்துவதற்காக, பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் அமைந்துள்ள - நிலத்தை அரசு ஒதுக்கியது.
வெள்ளி, 15 மார்ச், 2024
திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் list.. நாளை கூட்டணியில் ஒப்பந்தம் கையெழுத்து
tamil.oneindia.com - Nantha Kumar R : சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் 9 லோக்சபா தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பான தொகுதி பங்கீடு ஒப்பந்தம் நாளை திமுக-காங்கிரஸ் இடையே கையெழுத்தாக உள்ளது. இந்நிலையில் தான் தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட உள்ள தொகுதிகளின் பட்டியல் குறித்த முக்கிய விபரம் வெளியாகி உள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட உள்ளது. நாளை மதியம் 3 மணிக்கு டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்தின் அலுவலகத்தில் லோக்சபா தேர்தல் தேதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் வெளியிட உள்ளார்.
இந்நிலையில் தான் தேர்தல் தேதிக்கு முன்பாக லோக்சபா தேர்தல் களம் என்பது சூடுபிடித்துள்ளது. பாஜக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர் பட்டியலையே வெளியிட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை வரும் லோக்சபா தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவ உள்ளது.
நாடாளுமன்ற தேர்தல்: ஏப்.16 முதல் மே 26 வரை 7 கட்டங்களாக நடத்த திட்டம்
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
எடியூரப்பா மீது போக்ஸோ - தனி அறையில் வைத்து பாலியல் தொல்லை கொடுத்தார்.. சிறுமி புகார்
17-வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் கர்நாடக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது பெங்களூர் சதாசிவம் நகர் காவல் நிலையத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெங்களூரை சேர்ந்த 17 – வயது சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
எடியூரப்பா மீது பாலியல் புகார்: அதாவது, கடந்த பிப்ரவரி 2 ஆம் தேதி கல்வி தொடர்பாக உதவி கேட்டு தாயாருடன் எடியூரப்பா வீட்டிற்கு சென்றதாகவும் அப்போது தனக்கு எடியூரப்பா பாலியல் தொல்லை கொடுத்ததாக சிறுமி புகார் அளித்துள்ளார்.
தேர்தல் கிடையாது' என்பதே மத்திய அரசின் நோக்கம் - காங்கிரஸ் விமர்சனம்
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கருத்தை பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதன்மூலம், வளர்ச்சி திட்டங்களை இடையூறு இன்றி அமல்படுத்த முடியும், தேர்தல் செலவுகளை குறைக்க முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
எனவே, 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற இந்த திட்டத்தை அமல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்வதற்காக, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை கடந்த செப்டம்பர் மாதம் மத்திய அரசு அமைத்தது.
டெல்லியில் பாஜக எம்.பி.க்களுக்கு வாய்ப்பு மறுப்பு! தோல்வி பயத்தில் பாஜக !
Kalaignar Seithigal -Praveen : நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடியவில்ல நிலையில், மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
அந்த வகையில் பாஜக தனது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை கடந்த மார்ச் 2-ம் தேதி வெளியிட்டது. இதில், உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், கேரளா, தெலங்கானா என பல மாநிலங்களிலிருந்து மொத்தமாக 195 பேரை வேட்பாளர்களை பாஜக தலைமை அறிவித்துள்ளது.
இந்த பட்டியலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளுக்குமான வேட்பாளர்களை பாஜக அறிவித்தது. ஆனால், இதில் பாஜக சார்பில் தற்போது எம்.பி.களாக இருக்கும் 6 எம்.பி.களை மீண்டும் வேட்பாளராக நியமிக்காமல் பாஜக தலைமை புறக்கணித்துள்ளது.
மம்தா பானர்ஜி உடல்நிலை குறித்து மருத்துவர் விளக்கம்!
மருத்துவர் மணிமோய் பந்தோபாத்யாய் |
nakkheeran.in : நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்து வருகின்றன.
வியாழன், 14 மார்ச், 2024
தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு கொடுத்த கம்பனிகளின் பெயர்கள் மற்றும் தொகை விபரங்கள் லிஸ்ட்
Click to see big |
Click to see big |
tamil.oneindia.com - Mani Singh S : டெல்லி: அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளித்த நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது பியூச்சர் கேம்மிங் அண்ட் ஹோட்டல் சர்வீஸ் நிறுவனமாகும். இந்த நிறுவனம் லாட்டரி அதிபர் மார்ட்டினுக்கு சொந்தமானது என்று சொல்லப்படுகிறது.
அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை அளிப்பதற்காக, 2017ஆம் ஆண்டு தேர்தல் பத்திரங்கள் திட்டத்தை,
மத்திய பாஜக அரசு அறிவித்தது. அதன்படி, நம் நாட்டை சேர்ந்த தனிநபர் அல்லது நிறுவனங்கள், பணம் செலுத்தி தேர்தல் பத்திரங்களை வாங்கி, தாங்கள் விரும்பும் அரசியல் கட்சிகளுக்கு வழங்கலாம். இப்படி நன்கொடை அளிப்பவர்களின் விபரம் ரகசியம் காக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த திட்டத்தின்படி தேர்தல் பத்திரங்கள் எஸ்.பி.ஐ வங்கியின் குறிப்பிட்ட கிளைகளில் விற்கப்பட்டன. இத்திட்டத்தை எதிர்த்து பல்வேறு அமைப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைகள் அளிப்பதற்காக அறிமுகம் செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் முறை செல்லாது என கடந்த மாதம் 15ம் தேதி தீர்ப்பளித்தது.
ஜாஃபர் சாதிக் விவகாரம்; என்.சி.பி.யிடம் சிக்கிய ஆவணங்கள்! 7–9 minutes
nakkheeran.in : டெல்லியில் போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும் இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது. தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளரும் தி.மு.க.வின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்த ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. மேலும் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது.
தமிழ்நாட்டு பார்ப்பனீயமும் .. யாழ்ப்பாணத்து ஜாதீயமும் !
Dhinakaran Chelliah : சாதி வாங்கலையோ சாதி!
தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் ஆதிக்கம் எப்படியோ,அப்படித்தான் யாழ்ப்பாணத்தில்.
வெள்ளாளர்களின் ஆதிக்கமும்.
தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான இடைநிலைச் சாதிகள் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் “யழ்ப்பாணக் குடியேற்றம்” எனும் ஆய்வு நூல்.
கேரளம், ஆந்திரம், கன்னடம், துளுவம், கலிங்கம்,
ஒரியா, என பல பிரதேசங்களிலிருந்து மக்கள் குடியேறிய பகுதியே யாழ்ப்பாணம் என்பதை மிகத் தெளிவாக “யாழ்ப்பாணக் குடியேற்றம்”ஆய்வு நூல் ஆசிரியர் திரு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்
(முதற் பதிப்பு 1982).கேரளத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு பற்றி இந்நூல் தரவுகளுடன் குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வு நூலை எழுதுவதற்கு 36 தமிழ் நூல்களையும்,5 வடமொழி நூல்களையும்,36 ஆங்கில நூல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர் சென்னை லொயாலாக் கல்லூரி தலைமைத் தமிழ் விரிவுரையாளர் மற்றும் இளைப்பாரிய அராவி இந்துக் கல்லூரி அதிபருமாவார்.
குடியுரிமை விவகாரம்; மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் : இலங்கை தமிழர் விபரங்கள் ஏன்தாக்கல் செய்யப்படவில்லை?
nakkheeran.in : சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் ரவிக்குமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை வழங்க உத்தரவிட வேண்டும்.
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு அகதிகளாக வந்த சுமார் 94 ஆயிரத்து பேரில் 59 ஆயிரத்து 500 பேர் இலங்கை தமிழர்கள் அகதிகள் முகாமில் உள்ளனர்.
இந்த முகாமில் பிறந்த குழந்தைகளுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை பெற இயலாத சூழல் நிலவி வருகிறது.
அதே சமயம் அகதிகள் முகாமில் உள்ள குழந்தைகளுக்கு இந்திய குடியுரிமை கோரி வழங்கப்பட்ட மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தமிழ்நாட்டில் அடுத்து ஆட்சிக்கு வருபவருக்கு 3 வருடம்தான் பதவி! ஒரே நாடு ஒரே தேர்தல்.. ஷாக் பரிந்துரை
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்மட்டக் குழு இன்று டெல்லியில் உள்ள ராஷ்டிரபதி பவனில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பான முழுமையான அறிக்கையை சமர்ப்பித்தது.
One Nation One Election Tamil Nadu to lose 2 years of Term with the new rule if it is implemented
கடந்த சில மாதங்களுக்கு முன் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசு குழு ஒன்றை அமைத்தது. இந்தக் குழுவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமை தாங்குவார். இந்த குழு கடந்த சில மாதங்களாக பின் வரும் ஆய்வுகளை மேற்கொண்டது.
இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.. ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. காரணம் என்ன?
குறிப்பாக ஸ்மால் கேப் நிறுவன பங்குகள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஒரே நாளில் ஸ்மால் கேப் இண்டெக்ஸ் 5% சரிந்துள்ளது. கடந்த டிசம்பர் 2022ஆம் ஆண்டுக்கு பின் முதன்முறையாக சிறு நிறுவன பங்குகள் மோசமான வீழ்ச்சியை கண்டுள்ளன, மிட் கேப் நிறுவன பங்குகள் 3% மைக்ரோ கேப் மற்றும் எஸ்எம்ஈ பங்குகள் 5% சரிந்துள்ளன.
இந்திய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி.. ரூ.13 லட்சம் கோடியை இழந்த முதலீட்டாளர்கள்.. காரணம் என்ன?
குஷ்புவுக்கு நடிகை அம்பிகா : 5 ரூபாய் கொடுத்தாலும் அது உதவிதான்
மாலை மலர் : சென்னை செங்குன்றத்தில் மேற்கு மாவட்ட பா.ஜ.க. சார்பில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து கடந்த 11 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்நிகழ்ச்சியில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு கலந்து கொண்டார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய குஷ்பு, "தமிழகத்தில் எவ்வளவு போதைப் பொருள்கள் வந்துள்ளது. இந்த போதைப் பொருள்கள் ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல உள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் டெல்லியில் உள்ள அதிகாரிகள் சொல்லியுள்ளனர்.
இதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்ல போகிறார்.
இன்று தாய்மார்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால், பிச்சைப் போட்டால் தி.மு.க.வுக்கு வாக்களிப்பார்களா?" என காட்டமாக பேசினார்.
இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச சரக்கு கப்பல் கடத்தல்
கடற்கொள்ளையர்களின் அட்டூழியங்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்திலும் சோமாலிய கடற்கொள்ளையர் கடத்திய கப்பலை இந்திய கடற்படை மீட்டது.
இந்நிலையில் இந்திய பெருங்கடல் அருகே வங்காளதேச நாட்டின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர்.
அந்த கப்பலை மறித்து ஆயுதங்களுடன் 22 பேர் ஏறியுள்ளனர். கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதன், 13 மார்ச், 2024
திராவிடர்களும் ஆளுநரும் - முரசொலி !
நா பெ கணேசன்: திராவிடர்களும் ஆளுநரும் - முரசொலி !
அசல் மனு தரும சாஸ்திரத்தின் பத்தாவது அத்தியாயத்தின் 33 வது சூத்திரத்தில் "பௌண்ட்ரகாஷ் சௌட்ர த்ரவிடா காம்போஜாயவநா ஷகா பாரதா பஹ்ளவாஷ் சீநா கிராதா தரதாகஷா" என்கிறது.
மகாபாரதத்தில் "திராவிடம்" வருகிறது.
காஞ்சிபுராணத்தில் "திராவிடம்" இருக்கிறது.
தாயுமானவர் "திராவிடம்" சொல்கிறார்.
தஸ்யூக்கள், அடிமைகள், திராவிடர்கள், சூத்திரர்கள் ஆக்கப்பட்டார்கள் என்கிறார் அம்பேத்கர்.
"தமிழ் - தமிழன் - தமிழம்" என்று சொல்லத் தெரியாத வட இந்தியர்களால் - அதாவது "ழ" என்ற எழுத்தை உச்சரிக்க முடியாதவர்களால் திராவிடம் என்று உச்சரிக்கப்பட்டது என்பதே பாவாணர் போன்ற மொழியியல் ஆய்வாளர்கள் முடிவு.
"மொழி வரலாறு" எழுதிய மு. வரதராசனார் அவர்கள், வால்மீகி இராமாயணத்திலும், மனு நூலிலும், பாரதத்திலும், பாகவதத்திலும் திராவிடர் என்ற சொல் வழக்கு உள்ளது என்கிறார்.
கி.பி. 8 ஆம் நூற்றாண்டில் குமரிலப்பட்டர் என்பவர் ஆந்திர திராவிட பாஷா என்ற தொடரை வழங்கியுள்ளார். அவர் கருத்துப்படி ஆந்திரா என்பது தெலுங்கைக் குறிக்கவும், திராவிடம் என்பது தமிழைக் குறிப்பதாகிறது.
இலங்கை தமிழர்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927
ராதா மனோகர் : இலங்கையில் இடது சாரி அரசியலுக்கு முன்பாகவே திராவிட அரசியல் கருத்துருவாக்கம் பெற்றிருக்கிறது இலங்கை மக்களின் முதல் அரசியல் தளம் திராவிட அரசியலே! - 1927
வெறும் சைவ கிறிஸ்தவ அரசியல் என்றிருந்த காலத்தில் முதல் தடவையாக சமூக நலன் சார்ந்த அரசியல் இயக்கமாக திராவிட இயக்கமே இருந்திருக்கிறது
சைவ வித்தியாபிவிருத்தி சங்கமென்றும் பின்பு இந்து போர்ட் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டும் இயங்கிய அமைப்பு சைவத்தை ஒரு அரசியல் இயக்கமாகவே முன்னெடுத்தது
அதன் தலைவராக இருந்த இந்தப்போர்ட் ராஜரத்தினம் c4 July 1884 – 12 March 1970)
Subramaniam Rajaratnam was elected to the Legislative Council of Ceylon as the member for the Northern Province Central at the 1924 election. As its chairman, Rajaratnam played a key role in the foundation and growth of the Hindu Board which, at one time, managed more than 150 schools .
முழுக்க முழுக்க சைவ வாழ்வியலே ஒரு அரசியல் தத்துவமாக கொண்டிருந்தார் .
அன்றைய ஆங்கில ஆட்சியாளர்களின் உதவியோடு .சுமார் 150 பள்ளிக்கூடங்களை நிறுவினார்
இந்த பள்ளிக்கூடங்களில் வெள்ளாளர்களுக்கு மட்டுமே கல்வி கற்கும் உரிமை இருந்தது .
செவ்வாய், 12 மார்ச், 2024
இந்தத் தொகுதிகளை வச்சிக்கங்க... இந்தத் தொகுதிகளைக் கொடுங்க... திமுக-காங்கிரஸ் கசமுசா!
மின்னம்பலம் Aara : திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு தமிழ்நாட்டில் ஒன்பது, புதுச்சேரி ஒன்று என பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில்… இவற்றில் ஏற்கனவே போட்டியிட்ட தொகுதிகளிலேயே மீண்டும் காங்கிரஸ் போட்டியிடுகிறதா அல்லது தொகுதிகள் மாற்றப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து திமுக காங்கிரஸ் கூட்டணி வட்டாரங்களில் விசாரித்தோம்.
தமிழ்நாட்டில் ஏற்கனவே காங்கிரஸ் போட்டியிட்ட ஒன்பது தொகுதிகளில் சில மாற்றங்கள் இருக்கின்றன என்கிறார்கள்.2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி திருச்சி, கரூர், ஆரணி,
திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விருதுநகர், சிவகங்கை, கன்னியாகுமரி, தேனி ஆகிய 9
தொகுதிகளில் தமிழ்நாட்டில் போட்டியிட்டது.
தமிழ்நாட்டில் CAA கு(டியுரிமை திருத்தச் சட்டம்) அமுல் படுத்த படமாட்டாது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
மாலை மலர் : சென்னை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"ஒன்றிய பா.ஜ.க. அரசு நடைமுறைப்படுத்தியுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் (CITIZENSHIP AMENDMENT ACT (CAA) இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; தமிழ்நாட்டில் இச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படாது"
பாராளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டிய இறுதி நாட்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசு இருந்துவரும் வேளையில், பல்வேறு தரப்பு மக்களாலும் எதிர்க்கப்பட்ட, குடியுரிமை திருத்தச் சட்டத்தினை நடைமுறைப்படுத்திட அவசர கதியில் நேற்று அறிவிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கேரளாவில் குடியுரிமை திருத்தச்சட்டம் அமுல் படுத்த படமாட்டாது . முதல்வர் பினராயி விஜயன் அதிரடி
மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 4 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது குடியுரிமை திருத்தச் சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ரணில் விக்கிரமசிங்க : UNP யைத் தவிர வேறு, எந்தக் கட்சியிடமும் திட்டம் இல்லை, எதிர்கட்சிகளை விளாசிய ஜனாதிபதி
ஜனாதிபதி ஊடகப் பிரிவு : UNP யைத் தவிர வேறு, எந்தக் கட்சியிடமும் திட்டம் இல்லை, எதிர்கட்சிகளை விளாசிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் ஐக்கிய மக்கள் சக்தியில் இல்லையெனவும், சிலரின் கட்டுப்பாட்டில் அந்தக் கட்சி இருப்பதாகவும் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாட்டைக் கடன் சுமையில் இருந்து காப்பாற்றி, எதிர்காலச் சந்ததிக்காக பாதுகாப்பான நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறு அனைத்து ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் அழைப்பு விடுப்பதாகவும் தெரிவித்தார்.
குளியாபிட்டிய மாநகர சபை மைதானத்தில் இன்று (10) பிற்பகல் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முதலாவது பொதுக் கூட்டத்தில் உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.
திங்கள், 11 மார்ச், 2024
உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு குளறு படிகளின் மாநாடு?
Subashini Thf : உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு தொடர்பான அண்மைய கால நடவடிக்கைகள் தமிழார்வலர்கள் வருந்தத்தக்க வகையில் தான் நடந்தேறிக்கொண்டிருக்கின்றன.
தமிழறிஞர் தனிநாயகம் அடிகள், பேரா.வி.ஐ.சுப்பிரமணியன், பேரா. கமில் சுவாலபில் போன்ற உலகத் தமிழறிஞர்களின் பெரும் முயற்சியின் அடிப்படையில் உருவானதுதான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றமும் அதன் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடும்.
1968ஆம் ஆண்டு மாநாட்டின் தொடர்பில் தனிநாயகம் அடிகளாரால் தொகுத்து வெளியிடப்பட்ட Tamil Studies Abroad - A symposium என்ற நூலும் அதில் உள்ள ஒவ்வொரு கட்டுரைகளும் தமிழ் ஆய்வுகள் எவ்வகையில் கொண்டு செல்லப்பட வேண்டும் என்பதற்கு வழிகாட்டுகின்றன. அதில் இடம்பெறுகின்ற Tamil Studies Elsewhere என்ற பேராசிரியர் தனிநாயகம் அடிகளின் கட்டுரை உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு எவ்வகை இலக்கை வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும் என்பதற்கு ஒளிவிளக்காய்த் திகழ்கிறது.
தி.மு.க. போட்டியிடும் 21 தொகுதிகளின் உத்தேச பட்டியல்
மாலைமலர் :சென்னை: பாராளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் தி.மு.க. 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகளை ஒதுக்கி உள்ளது.
கடந்த தேர்தலில் 20 தொகுதிகளில் தி.மு.க. நேரடியாக போட்டியிட்டது. ஆனால் இந்த முறை ஐ.ஜே.கே. கட்சி தி.மு.க. கூட்டணியில் இருந்து வெளியேறி பா.ஜனதா கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அக்கட்சி எம்.பி.யாக உள்ள பாரிவேந்தர் பெரம்பலூரில் உதயசூரியன் சின்னத்தில் கடந்த முறை போட்டியிட்டிருந்தார்.
இதனால் அந்த ஒரு இடத்தை தி.மு.க. எடுத்துக்கொண்டு 21 தொகுதிகளில் இந்த தேர்தலில் களம் காண்கிறது. தி.மு.க. கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ராமநாதபுரம் தொகுதியும், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சிக்கு நாமக்கல் தொகுதியும் ஒதுக்கப்பட்டு விட்டது.
இந்திய கம்யூனிஸ்டு கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்ட நாகை, திருப்பூர் தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிக்கு மதுரை, கோவை தொகுதிகளும் கிடைத்து விடும் என்று அக்கட்சியினர் நம்பிக்கையோடு உள்ளனர்.
பொன்முடி தண்டனை நிறுத்தி வைப்பு- எம் எல் ஏ .. அமைச்சர் பதவிகளை தொடரலாம் - உச்சநீதிமன்றம்
தினமலர் :புதுடில்லி: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டு சிறை தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது.
தற்போதைய திமுக அரசில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. இவர் கடந்த 2006-11 காலகட்டத்தில் அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.72 கோடி சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக 2011ல் அதிமுக ஆட்சியின்போது லஞ்ச ஒழிப்புத் துறை பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி மீது வழக்குப் பதிவு செய்தது. இதனை விசாரித்த விழுப்புரம் சிறப்பு நீதிமன்றம், இருவரையும் விடுதலை செய்தது.
அனுப்புநர் அனுப்புனர் ஆளுநர் ஆளு ன ர் இயக்குநர் இயக்கு ன ர் எது சரி?
Thulakol Soma Natarajan : அனுப்புநர், ஆளுநர், இயக்குநர்
ஒட்டுநர், நடத்துநர் போன்ற சொறகள்தான்
பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.
இவற்றையும்
அனுப்பு ன ர்
ஆளு ன ர்
இயக்கு ன ர்
ஓட்டு ன ர்
நடத்து ன ர்
எனத் தவறாக எழுதுகின்றனர்.
இது குறித்து ஓர் கட்டுரையைப்
புலனத்தில் (WhatsApp ) படிக்க நேர்ந்தது.
அதில் எத்துணை எத்துணை "நர்கள்
உள்ளனர் என்பதை அறிய வியப்பு மேலிடுகிறது !
நேரமும் ஆர்வமும் உள்ளவர்கள்,
படித்து, சுவைத்து, உணர்ந்து மகிழுங்கள்.
நண்பர் ஒருவர் ‘ஓட்டுனர்’ என்று எழுதினார். நான் தலையிட்டு, ‘ஓட்டுனர் அல்ல, ஓட்டுநர் என்பதுதான் சரி’ என்று திருத்தினேன்.
‘உண்மைதான், ஆனால் சொல்லுக்கு நடுவே ‘ந’ வருவது தமிழில் அபூர்வம், ஆகவே இதை ஞாபகம் வைத்துக்கொள்வது கடினமாக உள்ளது’ என்றார் நண்பர்.
தேர்தல் ஆணையர் அருண் கோயல் ராஜினாமா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே
bbc.com : நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையர் அருண் கோயல் சனிக்கிழமை (மார்ச் 9) அன்று தனது பதவியயை ராஜினாமா செய்திருக்கிறார். அருண் கோயலின் பதவிக்காலம் முடிய இன்னும் 3 ஆண்டுகள் உள்ளன.அரசியல் மட்டங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அவருடைய ராஜினாமாவை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஏற்றுக்கொண்டார். அருண் கோயல், பஞ்சாப் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார்.
சிறைக்குள் இருந்து வேட்பாளர் செலக்ட் செய்யும் செந்தில்பாலாஜி... அண்ணாமலைக்கு காத்திருக்கும் ஸ்டாலின்
minnambalam.com - Aara : வைஃபை ஆன் செய்ததும் திமுக நேர்காணல் வீடியோக்கள் வந்து விழுந்தன. அவற்றைப் பார்த்துக் கொண்டே வாட்ஸ் அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
“திமுகவில் விருப்ப மனு கொடுத்த வேட்பாளர்களில் யாரை வேட்பாளராக தேர்வு செய்வது என்பது குறித்த நேர்காணல் இன்று (மார்ச் 10) ஒரே நாளில் நடந்து முடிந்திருக்கிறது.
திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், பொதுச் செயலாளர் அமைச்சர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர். பாலு எம்.பி, முதன்மைச் செயலாளர் அமைச்சர் நேரு ஆகியோர் நேர்காணலை நடத்தினார்கள். ஒவ்வொரு தொகுதியாக அழைத்து அமர வைத்து நேர்காணலை ஒருங்கிணைத்தார் துணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை.
ஒவ்வொரு தொகுதிக்கும் விருப்ப மனு கொடுத்தவர்களை மொத்தமாக அமரவைத்து அவர்களோடு அந்தத் தொகுதிக்கு உட்பட்ட மாசெக்களை வைத்துக் கொண்டு ஐந்தாறு நிமிடங்களில் நேர்காணல்களை முடித்தார் ஸ்டாலின்.
ஓ.பன்னீர்செல்வம் சிவகங்கை தொகுதியில்? டெல்லிக்கு ஜாகையை மாற்ற திட்டமா? விருப்ப மனு.. பரபர தகவல்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : சென்னை: சிவகங்கை லோக்சபா தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் போட்டியிட மருது அழகுராஜ் விருப்ப மனு அளித்துள்ளார்.
சிவகங்கை தொகுதியை தினகரனும், ஓபிஸ் தரப்பும் குறி வைக்கும் நிலையில், அங்கு ஓபிஎஸ் களமிறங்குவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
எதிர்வரும் லோக்சபா தேர்தலில் பாஜகவுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முடிவெடுத்துள்ளார்.
அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு என்ற பெயரில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகிறார்.
ஞாயிறு, 10 மார்ச், 2024
கலைஞர் கட்டிய 36 அணைகள் .. கொள் அளவு விபரம்,, பட்டியல்!
ஸ்பெல்கோ : கலைஞர் ஆட்சி காலத்தில் தேவையும், இருந்த இட வசதிக்கும் ஏற்ப கட்டப்பட்ட அணைகளின் பட்டியல்
மணிமுக்தாநதி = 20.62 மில்லியன் கன மீட்டர்
சின்னார் = 13 மில்லியன் கன மீட்டர்
ராஜதோப்புக்கிணர் = 00.58 மில்லியன் கன மீட்டர்
மோர்தானா = 07.40 மில்லியன் கன மீட்டர்
செண்பகத்தோப்பு = 08.13 மில்லியன் கன மீட்டர்
வரட்டார் = 03.12 மில்லியன் கன மீட்டர்
ஆண்டியப்பனூர்ஓடை = 03.18 மில்லியன் கன மீட்டர்
மஞ்சளார் 13.48 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 1 16.99 = மில்லியன் கன மீட்டர்
சித்தார் 2 11.13 = மில்லியன் கன மீட்டர்
கட்னா 09.97 = மில்லியன் கன மீட்டர்
ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு!
minnambalam.com - christopher : போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாஃபர் சாதிக் மீது அமலாக்கத்துறை இன்று (மார்ச் 10) வழக்குப்பதிவு செய்துள்ளது.
டெல்லியில் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்புள்ள போதைப்பொருள் மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவினரும், டெல்லி போலீசாரும் மேற்கொண்ட சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான விசாரணையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கு மூளையாக செயல்பட்டு வந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த தயாரிப்பாளர் ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்த நிலையில், நேற்று மத்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் டெல்லியில் அவரை கைது செய்தனர்.
தி.மு.க. கூட்டணியில் இணைந்தது ஏன்?’ - கமல்ஹாசன் விளக்கம்
nakkheeran.in : நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது.
விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதிப் பங்கீடுகள் பற்றிய பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.
மணியம்மையார் பிறந்தநாள்! பெரியார் திரைப்படத்தில் மணியம்மையார்...
பெரியார் திரைப்படத்தில் மணியம்மையார் பற்றிய பல செய்திகள் இடம்பெறவில்லை
மேலும் அதில் மணியம்மையாரின் பாத்திரப்படைப்பு கூட சரியாக காட்டப்படவில்லை
யாரவது மணியம்மையார் வரலாற்றை திரைப்படமாக தயாரிக்க வேண்டும்!
நன்றி விகடன் : பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த பெண்மணி மணியம்மை!
வி.எஸ்.சரவணன்
``பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக் காலமும் முழுக் கொள்கைக்காரர்களும் கிடைப்பார்களா என்ற கவலையிலேயே இருக்கிறார்.’’
இந்திய தேர்தல் ஆணையர் திடீர் ராஜினாமா!
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
21 தொகுதியில் நேரடியாக களமிறங்கும் திமுக.. கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் லிஸ்ட் இதுதான்!
tamil.oneindia.com - Vignesh Selvaraj : :சென்னை: திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 சீட் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் திமுக கூட்டணியில் கட்சிகளுக்கு சீட் ஒதுக்கீட்டை நிறைவு செய்துள்ளது திமுக. கூட்டணி கட்சிகளுக்கு 19 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
கூட்டணி கட்சிகளுக்கு 19 இடங்களை திமுக ஒதுக்கியுள்ள நிலையில், மீதமுள்ள 21 இடங்களில் திமுக நேரடியாக களமிறங்க உள்ளது. கடந்த முறை 20 சீட்களில் நேரடியாக போட்டியிட்டது திமுக. இந்த முறை அதைவிட கூடுதலாக 1 இடத்தில் களமிறங்க உள்ளது.
DMK has completed allotment of seats to the parties in the alliance for lok sabha election
திமுக கூட்டணியில் கட்சி வாரியாக தொகுதிகள்:
காங்கிரஸ் - 10 சீட்
விசிக - 2
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - 2
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி - 2
மதிமுக - 1
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி - 1
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் - 1
மக்கள் நீதி மய்யம் - 1 ராஜ்யசபா சீட்
காங்கிரஸையும் தி.மு.க.வையும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது” - கே.சி. வேணுகோபால்
இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காகப் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.
மேலும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் தற்போதே தீவிரப்படுத்தி வருகின்றன.
இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது.
அந்த வகையில், தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், தேமுதிக உள்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடு உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.