சனி, 5 மார்ச், 2022

“மாணவர்களிடையே இன பாகுபாடு.. கழிவறையை சுத்தம் செய்தால்தான் விமான இருக்கை”: தமிழக மாணவிக்கு நேர்ந்த அவலம்!

 கலைஞர் செய்திகள் - பிரேம்குமார் : அறிவிப்புகள் அனைத்தும் இந்தியில் இருந்ததாக உக்ரைனில் இருந்து கொடைக்கானல் திரும்பிய மருத்துவ மாணவி அனுஷா மோகன் குற்றம்சாட்டியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையேயான போர் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு நாடுகளும் உக்ரைனுக்கு ஆதரவாகவும், ரஷ்யாவிற்கு எதிராகவும் குரல் எழுப்பி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழகம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் உக்ரைன் நாட்டில் சென்று மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு படிப்புகளை படித்து வந்துள்ளனர். அங்கு நடைபெற்று வந்த போரின் காரணமாக அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் மிகவும் பரிதவித்தனர்.

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் கட்சியை விட்டு நீக்கம்?

திமுக எம்.எல்.ஏ. ஐயப்பன் கட்சியை விட்டு நீக்கம்?
minnambalam.com : கடலூரில் கவுன்சிலர்கள் கடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ ஐயப்பனை கட்சியை விட்டு நீக்குவது தொடர்பாக பொதுச்செயலாளர் துரைமுருகனிடம் சீனியர்கள் ஆலோசித்ததாக திமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கடலூர் மாநகராட்சிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த மேயர் வேட்பாளருக்கு எதிராக போட்டி வேட்பாளரை நிறுத்த, கவுன்சிலர்கள் கடத்தப்பட்டது தொடர்பாக நேற்று (மார்ச் 4) மின்னம்பலத்தில், கவுன்சிலர்கள் கடத்தல் போலீஸ் பிடியில் திமுக எம் எல் ஏ. என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

கோகுல்ராஜ் ஆணவ கொலையில் 10 பேர் குற்றவாளிகள்...மதுரை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  தமிழகத்தையே உலுக்கிய சேலம் கோகுல்ராஜ் கொலை வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
சேலம் ஓமலூரைச் சேர்ந்த கோகுல்ராஜும் நாமக்கல்லைச் சேர்ந்த சுவாதியும் காதலித்து வந்த நிலையில் 2015-ஆம் ஆண்டு ஜூன்-23-ஆம் தேதி கல்லூரிக்குச் செல்வதாக கூறிவிட்டுச் சென்ற கோகுல்ராஜ்,
இரவு வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பாததால், அவரின் பெற்றோர் தேட ஆரம்பித்தனர்.
மறுநாள், நாமக்கல் அருகே உள்ள கிழக்கு தொட்டிபாளையம் ரயில் தண்டவாளத்தில் தலை வேறு உடல் வேறாக பிணமாகக் கிடந்த கோகுல்ராஜின் நாக்கும் துண்டிக்கப்பட்டிருந்தது.

உக்ரைனில் 2 நகரங்களில் தற்காலிகமாக போர் நிறுத்தம்- ரஷியா அறிவிப்பு

 மாலைமலர் : ரஷியா - உக்ரைன் இடையே நடந்த 2-ம் கட்ட பேச்சு வார்த்தையின்படி 2 நகரங்களில் போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுவீசி தாக்குதல் நடத்தப்பட்டது.
ராணுவ தளவாடங்கள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் ஆகியவற்றை குறி வைத்து தாக்கினர். பின்னர் தலைநகர் கிவ் உள்பட முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் தொடங்கியது.
உக்ரைன் நகரங்களுக்குள் நுழைய ரஷிய படையினர் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டனர். அவர்களுக்கு உதவியாக தொடர்ந்து ஏவுகணை வீச்சு, குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

ரஷ்ய விமான தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா நேட்டோ? யுக்ரேன் அதிபர் குற்றச்சாட்டு

BBC :  யுக்ரேனில் ரஷ்யப் படைகள் 9ம் நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல் குறித்து ஓர்லா குரின், லீஸ் டூசெட், மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் ஆகியோர் கீயவிலிருந்து, சாரா ரெயின்ஸ்ஃபோர்டு டினிப்ரோவிலிருந்து, ஃபெர்கல் கீன்‌ வீவ் பகுதியிலிருந்து, ஸ்டீவ் ரோசென்பெர்க் மாஸ்கோவிலிருந்து மற்றும் மார்க் லோவென் போலந்து எல்லையிலிருந்து செய்திகளை வழங்குகின்றனர்.
யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்கு நாடுகள் பச்சைக்கொடி காட்டுகின்றன என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ரஷ்யப் படையெடுப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள். இந்நிலையில், யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க மறுப்பதன் மூலம் நகரங்கள், மாநகரங்கள் மீது குண்டு வீச புதினுக்கு அவர்கள் உரிமம் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

சுரேஷ்ராஜன் நீக்கம்: ஸ்டாலின் அதிரடி பின்னணி!

சுரேஷ்ராஜன் நீக்கம்: ஸ்டாலின் அதிரடி பின்னணி!
minnambalam.com : கன்னியாகுமரி கிழக்கு திமுக மாவட்டச் செயலாளரும் ஸ்டாலினுக்கு மிக நெருங்கிய நண்பராக கருதப்பட்டவருமான சுரேஷ் ராஜன் நேற்று மார்ச் 4 இரவு மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரது இடத்தில் நாகர்கோயில் மேயராக நேற்று காலை பதவியேற்ற மகேஷ் கிழக்கு மாவட்ட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.திமுக தலைவர் எடுத்த இந்த அதிரடி நடவடிக்கை குமரி மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் திமுகவினர் மத்தியில் பேசுபொருளாக இருக்கிறது.

உக்ரைன் கையில் அமெரிக்க ஆயுதம்... 300 ஏவுகணைகள் செலுத்தியதில் 280 ரஷிய பீரங்கிகள் காலி

 மாலைமலர் : சாதாரண ராக்கெட் லாஞ்சர் போன்று எளிதில் எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள ஜாவ்லின் மூலம் ஏவுகணைகளை மிகவும் துல்லியமாக செலுத்தி எதிரிகளின் பீரங்கிகளை தகர்த்து அழிக்க முடியும்.
உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் 9வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ் மற்றும் கார்கிவ் ஆகிய நகரங்களில் உக்கிரமான வான் தாக்குதல்களை நடத்திய ரஷிய படைகள், பிரங்கிகளால் தொடர்ந்து தாக்கத் தொடங்கி உள்ளனர்.
ஆனால் உக்ரைன் படைகளின் ஆக்ரோஷமான பதில் தாக்குதல் மற்றும் பீரங்கி எதிர்ப்பு தாக்குதலால் ரஷிய படைகள் முன்னேற முடியாத நிலை உள்ளது.

ஷேன் வார்னேவின் கடைசி ட்வீட் - ஒரே நாளில் உலகை விட்டுப் பிரிந்த கிரிக்கெட் ஜாம்பவான்கள்!

 கலைஞர் செய்திகள்  : ஷேன் வார்னே தனது கடைசி ட்வீட்டில் கிரிக்கெட் ஜாம்பவான் ராட் மார்ஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னே தனது கடைசி ட்வீட்டில் கிரிக்கெட் ஜாம்பவான் ராட் மார்ஷ் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்தார்.
ஆஸ்திரேலியாவின் மிகச்சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஷேன் வார்னே மாரடைப்பு காரணமாக இன்று காலமானார். தாய்லாந்தில் உள்ள ஒரு தீவில் உள்ள தனது பங்களாவில் தங்கியிருந்தபோது, மாரடைப்பு காரணமாக ஷேன் வார்னே இன்று உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளி, 4 மார்ச், 2022

பன்னீர்செல்வத்தின் தம்பி சசிகலா சந்திப்பு

 தினமலர் :திருச்செந்தூர்: சசிகலாவை, ஓ.பி.எஸ்., சகோதரர் ஓ.ராஜா இன்று சந்தித்து பேசினார்.
அ.தி.மு.க.,வில் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி இடையே, பகிரங்க மோதல் வெடித்துள்ளது.
சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க வலியுறுத்தி, ஓ.பி.எஸ்., ஆதரவாளர்கள் கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ள நிலையில், இன்று திருசெந்தூர் வந்திருந்த சசிகலாவை ஓ. பன்னீர்செல்வம் சகோதரர் ஓ.ராஜா சந்தித்து பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக போட்டி வேட்பாளர்கள் வெற்றி!

திமுக போட்டி வேட்பாளர்கள் வெற்றி!

மின்னம்பலம் : தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற வார்டு உறுப்பினர்கள் நேற்று முன்தினம் மாமன்ற உறுப்பினர்களாக பதவியேற்றனர். இதையடுத்து மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், நகராட்சி தலைவருக்கான மறைமுக தேர்தல் இன்று நடைபெற்றது.
இந்த நிலையில், கன்னியாகுமரியில் குளச்சல், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நகராட்சிகளில் போட்டி திமுக வேட்பாளர்களே வெற்றி பெற்றுள்ளனர்.

குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன்"- தி.மு.க.வினரால் வருத்தப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 நக்கீரன் : தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வெற்றி பெற்ற தி.மு.க.வினர் பொறுப்பைவிட்டு விலக தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றி மிகப் பெரிய மகிழ்ச்சியை அளித்தது.
இதைத் தொடர்ந்து, கூட்டணிக் கட்சிகளுக்குள் நடத்திய பேச்சுவார்த்தை தோழமை உணர்வுடன் அமைந்து அனைவரும் மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளும் பங்கீடாக அமைந்ததும் அதிகளவு மகிழ்ச்சியை அளித்தது.
அந்த மகிழ்ச்சியைக் சீர்குலைக்கும் வகையில், மறைமுகத் தேர்தலில்  சில இடங்களில் நடந்த நிகழ்வுகள் என்னை மிகவும் வருத்தமடைய வைத்துள்ளது. வெற்றியை நினைத்தே கவலை அடைய வைக்கிறது.

பாகிஸ்தான் பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல் 57 பேர் உயிரிழப்பு! 200 பேர் படுகாயம் பெஷாவர் நகரில்..

 மாலைமலர் : பெஷாவர் குண்டுவெடிப்புக்கு பிரதமர் இம்ரான் கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பள்ளிவாசலில் தற்கொலை தாக்குதல்: பலி எண்ணிக்கை 57-ஆக உயர்வு
பாகிஸ்தான் குண்டுவெடிப்பு
பாகிஸ்தானின் பெஷாவர் நகரம், கிஸ்ஸா குவானி பஜார் பகுதியில் உள்ள ஜாமியா மசூதியில் இன்று சக்திவாய்ந்த குண்டு வெடித்தது. மசூதியில் ஏராளமான மக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவத்தில் முதற்கட்டமாக 30 பேர் உயிரிழந்ததாக கூறிய நிலையில், தற்போது 57 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் 200 பேர் படுகாயமடைந்துள்ளனர். மேலும், இது ஒரு தற்கொலை தாக்குதல் என  பெஷாவர் காவல்துறை அதிகாரி ஹரூன் ரஷீத் கான் தெரிவித்துள்ளார்.

உக்கிரேன் அணுமின் நிலையத்தில் தீ விபத்து.. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை

 BBC -Tamil :உக்கிரேன் அணுமின் நிலையத்தில் தீ விபத்து.. ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலை
யுக்ரேனில் ரஷ்யப் படைகள் 9ம் நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்தத் தாக்குதல் குறித்து ஓர்லா குரின், லீஸ் டூசெட், மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் ஆகியோர் கீயவிலிருந்து, சாரா ரெயின்ஸ்ஃபோர்டு டினிப்ரோவிலிருந்து, ஃபெர்கல் கீன்‌ வீவ் பகுதியிலிருந்து, ஸ்டீவ் ரோசென்பெர்க் மாஸ்கோவிலிருந்து மற்றும் மார்க் லோவென் போலந்து எல்லையிலிருந்து செய்திகளை வழங்குகின்றனர்.

3000 இந்தியர்களை சிறைபிடித்த உக்ரைன்? பணயக்கைதிகளாகத் தவிப்பு - ரஷ்ய அதிபர் புடின் தகவல்

 Shyamsundar  -   Oneindia Tamil :   மாஸ்கோ: உக்ரைனில் 3000 இந்திய மாணவர்களை உக்ரைன் ராணுவம் சிறை பிடித்து வைத்து இருப்பதாக ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யா போர் நடத்தி வரும் நிலையில் உக்ரைனில் இருக்கும் இந்திய மாணவர்கள், பொதுமக்களை மத்திய அரசு வெளியேற்றி வருகிறது.
உக்ரைன் மற்றும் ரஷ்ய ராணுவ உதவியுடன் எல்லைக்கு வரும் மக்களை ரோமானியா, போலந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து விமானம் மூலம் இந்தியா மீட்டு வருகிறது.
இந்த ஆபரேஷனுக்கு கங்கா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 15 விமானங்கள் இயக்கப்பட்டு 3000 பேர் வரை மீட்கப்பட்டு உள்ளனர். ஆனால் அதே சமயம் இந்திய அரசு விமானம் மட்டுமே அனுப்பியது,

வியாழன், 3 மார்ச், 2022

அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு நிபந்தனை ஜாமின்..

தினத்தந்தி : சென்னை மாநகராட்சி 49-வது வார்டுக்குட்பட்ட வாக்குச்சாவடி ஒன்றில் கள்ள ஓட்டுப்போட முயன்றதாக தி.மு.க. பிரமுகர் நரேஷ் என்பவரை தாக்கி அவரது சட்டையை கழட்டி கைகளை கட்டி இழுத்து வந்ததாக பதிவான வழக்கில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டார்.
அதன்பிறகு சாலை மறியலில் ஈடுபட்டதாக அவர் மீது 2-வது வழக்கும், ரூ.5 கோடி மதிப்புள்ள மீன் வலை தொழிற்சாலை அபகரிப்பு தொடர்பாக 3-வது வழக்கும் பதிவு செய்யப்பட்டன. இந்த சூழலில் தி.மு.க., பிரமுகரை தாக்கிய வழக்கில் அவருக்கு ஜாமீ்ன் வழங்க கீழ் கோர்ட்டு மறுத்து விட்டதால், அவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

திமுக கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த பதவிகள், இடங்கள்? வெளியான பட்டியல்

கூட்டணிக் கட்சிகளுக்கு எந்தெந்த பதவிகள், இடங்கள்?: திமுக!

மின்னம்பலம்: தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் திமுக 21 மாநகராட்சிகளையும் கைபற்றியது. உள்ளாட்சித் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற நிலையில் இன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் மேயர், துணை மேயர் பதவிகள் மற்றும் இடங்கள் குறித்து திமுக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

மார்ச் 4ஆம் தேதி மறைமுகத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் கூட்டணிக் கட்சிகளுக்குப் பதவிகளை ஒதுக்குவது தொடர்பாக அமைச்சர்கள் கே. என். நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோர் அடங்கிய குழு சில நாட்களாக ஆலோசனை நடத்தியது.    இந்த ஆலோசனையின் முடிவில், காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மாநகராட்சி மேயர் பதவியையும் சேலம் மாநகராட்சி துணை மேயர் பதவியையும் திமுக ஒதுக்கி இருப்பதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன. இதுகுறித்து மின்னம்பலத்தில் கும்பகோணம் மேயர், சேலம் துணை மேயர்: காங்கிரஸ் நம்பிக்கை! என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

உக்கிரேன் மாணவர்களை மீட்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” - மாணவரின் உருக்கமான வீடியோ!

நக்கீரன்:  திருச்சி, திருவெறும்பூர் அருகே உள்ள காட்டூர் வேணுகோபால் நகரைச் சேர்ந்தவர் கிப்சன் ஜோசப் செல்வராஜ். இவர் உக்ரைனில் உள்ள கீவ் நகரில் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் படித்து வருகிறார். போர் நடந்து வரும் சூழலில், உக்ரைன் எல்லைக்கு வருவதற்கு சுமார் ஆறு கிலோமீட்டர் தூரம் தண்டவாளத்தில் நடந்து சென்றதாகவும், தற்போது மெட்ரோ ஸ்டேஷனில் பதுங்கி உள்ளதாகவும், இங்கு உணவு தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறோம் என்றும், அடுத்த கட்ட நடவடிக்கை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வருவதாகவும் அவர் தன்னுடைய வீடியோ பதிவில் வெளியிட்டுள்ளார்.     மேலும் ரயிலில் வருவதற்கு முயன்றால் உக்ரைனை சேர்ந்தவர்கள் இந்தியர்களை ரயிலில் ஏற விடாமல் தடுப்பதாகவும் கவலை தெரிவிக்கிறார்.

மேயர் பதவிக்கு 11 பெண்கள்.. போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு!

 கலைஞர் செய்திகள் : மேயர் பதவிக்கு 11 பெண்கள்..  போட்டியிடும் தி.மு.க வேட்பாளர்கள் அறிவிப்பு!
சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு தி.மு.க வேட்பாளராக பிரியா அறிவிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க சார்பில் மேயர், துணை மேயர் பதவிகளுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தி.மு.க தலைமைக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:
4.3.2022 அன்று நடைபெற உள்ள மாநகராட்சி மன்ற மேயர், துணை மேயர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் பின்வரும் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள்:
சென்னை மாநகராட்சி
மேயர் : ஆர்.பிரியா
துணை மேயர் : மு.மகேஷ் குமார்
மதுரை மாநகராட்சி
மேயர் : இந்திராணி

ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல்; மனமுடைந்த மாணவி மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி

பரக

 நக்கீரன்  -சுந்தர பாண்டியன்  :  கடலூர் மாவட்டம் விருத்தாசலம் எருமனூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு உயிரியல் கற்பிக்கும் ஆசிரியராக சாமிநாதன் என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

வண்ணாத்தூர் கிராமத்தைச் சேர்ந்த இவருக்கு 33 வயது ஆகும் நிலையில், தற்போது வரை திருமணம் நடைபெறவில்லை.  
இந்நிலையில் தான் பணிபுரியும் பள்ளியில் பயிலும் மாணவிகளுக்கு, இரட்டை அர்த்தங்கள் கூடிய குறுஞ்செய்திகளை தொலைபேசி வாயிலாக அனுப்புவதுடன், பள்ளியில் பயிலும் மாணவிகள் மீது பாலியல் சீண்டலும் செய்து வந்ததாகக் கூறப்படுகிறது.

தமிழிசையை நோக்கி பாசிச பாஜக ஒழிக என்று கோஷம் போட்ட சோபியாவுக்கு 2 லட்சம் நஷ்டஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

 கலைஞர் செய்திகள் : அ.தி.மு.க ஆட்சியில் பாஜக அரசை விமர்சித்த சோபியாவுக்கு நேர்ந்த கொடுமை: ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு!
பா.ஜ.க ஆட்சியை விமர்சித்ததாக சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதால் ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்க மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
அ.தி.மு.க ஆட்சியின்போது தூத்துக்குடி விமானத்தில் பா.ஜ.க ஆட்சியை விமர்சித்ததாக ஆராய்ச்சி மாணவி சோபியா கைது செய்யப்பட்ட விவகாரத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளதாகவும், சோபியாவுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு வழங்கவும் மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவில் சசிகலா - தினகரன்: தேனியில் தொடங்கிய பன்னீரின் பகிரங்க முயற்சி!

அதிமுகவில் சசிகலா - தினகரன்: தேனியில் தொடங்கிய பன்னீரின் பகிரங்க முயற்சி!
minnambalam.com : நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக அடைந்த படுதோல்விக்குப் பிறகு பிளவுபட்டுக் கிடக்கும் அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்றும் சசிகலா மீண்டும் அதிமுகவில் தலைமை ஏற்க வேண்டும் என்றும் அதிகாரபூர்வமற்ற பல்வேறு கோரிக்கைகளும் போஸ்டர்களும் தமிழகம் முழுவதும் உலவி கொண்டுள்ளன. இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனி மாவட்ட அதிமுக, “சசிகலா, தினகரன் உள்ளிட்ட அனைவரும் ஒருங்கிணைந்த அதிமுகவை உருவாக்க வேண்டும்" என்று மாவட்டச் செயலாளர் சையது கான் தலைமையில் தீர்மானம் நிறைவேற்றி அதை ஓ.பன்னீர்செல்வத்திடமே நேரடியாகக் கொடுத்துள்ளனர். இது அதிமுகவில் அடுத்த கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன், 2 மார்ச், 2022

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன் - விண்ணப்பத்தை ஏற்றது ஐரோப்பிய பாராளுமன்றம்

 மாலைமலர் : ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய ஜெலன்ஸ்சி, உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள் என்று தெரிவித்தார்.
27 நாடுகள் அடங்கிய ஐரோப்பிய யூனியனில் இணையும் முயற்சிகளில் உக்ரைன் ஈடுபட்டு வந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது போர் தொடுத்துள்ளது.
இதையடுத்து உக்ரைன் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐரோப்பியயூனியன்
நாடுகள் ஆயுதங்கள் வழங்க சம்மதம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில்,  ஐரோப்பிய யூனியனில் இணைவதற்கான விண்ணப்பத்தில் திங்கள் கிழமையன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்சி கையெழுத்திட்டார். தொடர்ந்து  ஐரோப்பிய பாராளுமன்றத்தில் காணொலி மூலம் அவர் பேசியதாவது:
உக்ரைன் மக்கள் வலிமையானவர்கள். நாங்கள் தனித்து விடப்பட்டுள்ளோம். நீங்கள் எங்களோடு இருப்பதை நிரூபியுங்கள்.

ஆறுமுக சாமி ஆணையம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இறப்பு குறுக்கு விசாரணையைத் தொடங்குகிறது

 நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழகத்தின் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா, கடந்த 2016ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி காலமானார்.
அவரது மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஆறுமுகசாமி ஆணையம் அமைக்கப்பட்டது.
அந்த ஆணையத்திற்கான கால அவகாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டுவரும் நிலையில், வரும் 7ஆம் தேதி முதல் குறுக்கு விசாரணையை ஆறுமுகசாமி ஆணையம் தொடங்குகிறது.
ஜெயலலிதாவிற்குச் சிகிச்சை அளித்த அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு இந்த விசாரணையில் பங்கேற்கச் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அவர்கள் வரும் 7 மற்றும் 8ஆம் தேதி இந்த விசாரணையில் கலந்துகொள்ள உள்ளனர்.   

 

ராகுல் காந்தி : என் பேச்சைக்கூட கொண்டு செல்ல முடியாவிட்டால் காங்கிரசை எப்படி ... தமிழக காங்கிரஸ் மீது..

 மின்னம்பலம் : டிஜிட்டல் திண்ணை: தமிழக விசிட்: ராகுல் கோபம்!
வைஃபை ஆன் செய்ததும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தமிழக விசிட் பற்றிய பல்வேறு படங்கள் இன்ஸ்டாகிராமில் பேஸ்புக்கில் வந்து விழுந்தன.
அவற்றை பார்த்து விட்டு தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது வாட்ஸ்அப்.
"காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராகுல்காந்தி சமீப காலமாகவே தென்னிந்தியா மீது குறிப்பாக தமிழ்நாட்டின் மீது அதிக அக்கறை கொண்டவராக தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார்.
நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு பற்றி அண்மையில் பெருமிதமாக பேசிய ராகுல் காந்தி வெளியே வரும்போது செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, 'நான் தமிழன்' என்று பதிலளித்தார்.

தமிழகத்தில் சமுதாய, கலாச்சார மற்றும் அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

 மாலைமலர் : மக்களின் வாழ்வாதாரம் கருதி அரசால் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் பொது இடங்களில் தொடர்ந்து கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என முதலமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை: தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாட்டில் கொரோனா நோய்த்தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஒரு சில கட்டுப்பாடுகள் நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் அறிவிக்கையில் கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்தத் தேவையான கட்டுப்பாடுகள் மற்றும் பொருளாதாரம் தொடர்பான தளர்வுகள் உட்பட இதர தளர்வுகளை அறிவிக்க அபாய மதிப்பீடு அடிப்படையிலான  அணுகுமுறையினை (Risk Assessment Based Approach) கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

புதின் தவறாக நினைத்துவிட்டார்... நாங்கள் தயார் - ஜோ பைடன் அதிரடி பேச்சு

 தினத்தந்தி  : வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 7-வது நாளாக நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.
அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இந்த மோதலில் இரு தரப்பிலும் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் அதிபருக்கு ஆதரவாக எழுந்து நின்று கைதட்டிய ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள்!

 நக்கீரன் செய்திப்பிரிவு :  ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனுக்கு இடமளித்து தங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் உக்ரைனை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பத்தில் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி கையெழுத்திட்டிருந்தார்.
இந்த நிலையில், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டம் நேற்று (01/03/2022) நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பேசிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, ஐரோப்பிய  ஒன்றியத்தில் உக்ரைனுக்கு இடம் கொடுத்து, தங்களுக்கு ஆதரவாக இருப்பதை உறுதிச் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். மேலும், தங்களது மண்ணை தங்களால் காக்க முடியும்; ரஷ்யாவுக்கு எதிரான போரில் வெற்றி பெறுவோம் என்றார்.

மாணவர்கள் மீட்புப் பணியில் களமிறங்கியது விமானப்படை!

 மின்னம்பலம் : உக்ரைனில் இந்திய மாணவர் ஒருவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, கீவ் நகரிலிருந்து அனைத்து இந்தியர்களும் வெளியேறிவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைனில் போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. ரஷ்யாவின் தாக்குதலுக்கு உலக நாடுகள் பலவும் எதிர்ப்புத் தெரிவித்து பொருளாதாரத் தடைகளையும் விதித்து வருகின்றன. ஏழாவது நாளாக இன்றும் தாக்குதலைத் தொடர்ந்துள்ளது ரஷ்யா.
நேற்று, உக்ரைன் நகரமான சைட்டோமைரில் உள்ள வீடுகள், அருகிலுள்ள விமானத்தளத்தைக் குறிவைத்து, ரஷ்யக் கப்பல் ஏவுகணையால் தாக்கப்பட்டதில் நான்கு பேர் கொல்லப்பட்டனர் என்று உக்ரைன் உள்துறை அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ தெரிவித்துள்ளார். தலைநகர் கீவில் உள்ள தொலைக்காட்சி கோபுரத்தையும் ரஷ்யப் படை தாக்கியுள்ளது. கார்கிவ் நகரின் விமானத்தளத்துக்கு அருகே மிகப்பெரிய வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒரு சங்கியின் பார்வையில் சென்னை புத்தக கண்காட்சி 2022

 Gowra Rajasekaran : இந்துவா வெறிபித்த சங்கியின் குமுறல்
சென்னை புத்தககாட்சி  ..  2022பற்றி ..  நல்லா இருக்கு!
தொடரட்டும்
சென்னை புத்தக கண்காட்சி 2022 சென்ற நண்பரின் பதிவு
 இலக்கிய உலகம் - சென்னைப்  புத்தகக்  கண்காட்சி  ....  !!!
அதிர்ச்சியூட்டும் வகையில் மதமாற்ற பிரிவினைவாதிகள் கைகளில் சென்று விட்ட தமிழ்  கலை, இலக்கிய ஊடகத்துறை .....  !!!
சென்னைப்  புத்தகக்  கண்காட்சி -  கிட்டத்தட்ட 800 ஸ்டால்களில் பாதிக்கும் மேல் பிரிவினைப் போராளிகளின் ஸ்டால்கள் .....  !!!
அவற்றில் நிரப்பப்பட்டுள்ள புத்தகங்கள் பெரும்பாலும்  இந்து விரோத, இந்திய விரோத, பார்ப்பன விரோத, இன, மொழி வெறுப்பரசியல் பரப்புரை செய்யும் என்னும் ஆனால் ஒரே வகையைச் சேர்ந்தவை .....   !!!

செவ்வாய், 1 மார்ச், 2022

திரு. மு.க .அழகிரி முதல்வர் மு க ஸ்டாலினை சந்திக்கிறார்! பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவிக்க வருகிறார்

 மின்னம்பலம் : தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு. க. ஸ்டாலின் இன்று 69ஆவது பிறந்த நாளை கொண்டாடும் நிலையில்... பிரதமர் நரேந்திர மோடி முதல் பல்வேறு தேசிய அளவிலான தலைவர்களும் மாநில அளவிலான தலைவர்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
இந்த வாழ்த்துக்களுக்கு மத்தியில் ஸ்டாலினின் உடன்பிறந்த அண்ணனான முன்னாள் மத்திய அமைச்சர் மு. க. அழகிரி இன்று (மார்ச் 1) பகல் சென்னை சென்று, முதல்வரை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க இருக்கிறார்.
2014ஆம் ஆண்டு அப்போதைய திமுக தலைவர் கலைஞரால் கட்சியிலிருந்து நிரந்தரமாக நீக்கப்பட்ட மு.க.அழகிரி அதன் பிறகு அவ்வப்போது சலசலப்புகளுக்கும் சர்ச்சைகளுக்கும் உரிய கருத்துக்களை தெரிவித்து வந்தார்.

உக்கிரேனில் கர்நாடக மாணவர் உயிரிழப்பு .. ரஷிய படைகள் கடும் தாக்குதல்

 நக்கீரன் செய்திப்பிரிவு : ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையே நடைபெற்று வரும் போர் காரணமாக உக்ரைனில் அசாதாரண சூழல் நிலவுகிறது.
 தொடர்ந்து, ஆறாவது நாளாக தாக்குதல் நடத்திவரும் ரஷ்யா, பல முக்கிய நகரங்களைக் கைப்பற்றி தலைநகர் கீவ்-வை நோக்கி முன்னேறிவருகிறது.
 உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்குமாறு அறிவுறுத்திவரும் இந்திய அரசு, ஆப்ரேஷன் கங்கா மூலம் அவர்களை தாயகம் அழைத்துவருவதற்கான முன்னெடுப்புகளையும் எடுத்துவருகிறது.
இந்த நிலையில், ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான இந்தப் போரில் இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்.

"குயர் படங்கள் அடுத்த 10 ஆண்டுகளில் அதிகம் வரும்" - இயக்குநர் மாலினி ஜீவரத்தினம்

 ஆ. லட்சுமி காந்த் பாரதி  -     பிபிசி தமிழ்  :  குயர் (Queer) சமூக மக்கள் சார்ந்த புரிதலும் அவர்களுக்கான பிரச்னைகளும் இங்கு அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார்,
அந்த சமூக மக்களை மையப்படுத்திய ஆவண படங்களை இயக்கி வரும் மாலினி ஜீவரத்தினம்.
இவருடைய 'ஒய் சோ ஸ்ட்ரெய்ட்' (Why So Straight) என்ற இரண்டாவது ஆவண படம் சமீபத்தில் வெளிவந்துள்ளது.
இந்தப் படம் சம்பந்தமாகவும் அதன் உருவாக்கத்தில் இருந்த அனுபவங்கள் உள்ளிட்டவை தொடர்பாக மாலினி ஜீவரத்தினத்தை நேர்காணல் கண்டது பிபிசி தமிழ்.
அதன் விவரம்:சமீபத்தில் நீங்கள் இயக்கிய 'ஒய் சோ ஸ்ட்ரெய்ட்' (Why So Straight ) ஆவண படத்தின் பின்னணி என்ன?
இந்த படத்தின் பின்னணி, அதன் பெயரிலேயே இருக்கிறது. ஒருவர் தன்பாலின ஈர்ப்பாளர் ஆக (Gay) இருப்பதால், அவரைப் பார்த்து, நீ ஏன் அப்படி இருக்கிறாய் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

திங்கள், 28 பிப்ரவரி, 2022

Ukraine - Russia s : உக்ரைன் பெண்களை படுக்கைக்கு அழைக்கும் ரஷ்ய ராணுவத்தினர்?

Russian soldiers are chasing Ukrainian girls

tamil.asianetnews.com  : உக்ரைன் கணினிகளின் மென்பொருள்களை நிறுவி, ரஷ்யா சைபர் தாக்குதலையும் நடத்தியதை அடுத்து திக்குமுக்காடி போன உக்ரைன், செய்வதறியாமல் திகைத்து வருகிறது. இந்நிலையில், உக்ரைன் இளம்
உக்ரைன் மீதான ரஷ்ய போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் உக்ரைனில் உள்ள அழகான பெண்களுக்கு, Tinder டேட்டிங் செயலி மூலம் ரஷ்ய ராணுவத்தினர் அழைப்பு விடுத்துள்ளது பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அன்று குலக்கல்வியை எதிர்த்தோம், இன்று நீட் தேர்வை எதிர்த்து போராடுகிறேன்!" முதல்வர் ஸ்டாலின் அதிரடி

  Vigneshkumar   -  Oneindia Tamil  :  சென்னை: "உங்களில் ஒருவன்" புத்தகம் வெளியிட்ட விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், அன்று குலக்கல்வியை எதிர்த்து போராடினேன் என்றும் இன்று தேர்வை எதிர்த்துப் போராடுகிறேன் என்றும் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
 முதல்வர் ஸ்டாலின் தனது பிறப்பு, அரசியல் பயணம், திருமணம், மிசா கைது வரை வாழ்க்கை குறிப்புகளை "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் சுயசரியைதாக எழுதியுள்ளார்.
முதல்வர்  மு.க ஸ்டாலின் எழுதியுள்ள இந்த புத்தகத்தை வெளியிடும் விழாவில் ராகுல் காந்தி, பிரனாய் விஜயன், உமர் அப்துல்லா, தேஜஸ்வி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.

தேஜஸ்வி யாதவ் : “மற்ற மாநிலங்களுக்கு தமிழகம் எடுத்துக்காட்டு... தேசிய பிரச்னைகளுக்கு தீர்வு தந்துள்ளது

 கலைஞர் செய்திகள் விக்னேஷ் செல்வா : “தமிழ்நாட்டின் சமூக நீதி இயக்கத்தின் மீது மிகவும் ஈர்ப்புகொண்ட எனது தந்தை லாலு பிரசாத், எங்கள் பீகாரிலும் அதனை செயல்படுத்தினார்.” என தேஜஸ்வி பேசியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகத்தை ராகுல் காந்தி எம்.பி வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக்கொண்டார்.

பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர்கள் சென்னை

பள்ளி மாணவியை போதைக்கு அடிமையாக்கி கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவ மாணவர்

மாலைமலர் : போரூர்: போதைப்பொருள் கொடுத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த காதலன் வசந்த்கிரிஷ், சதீஷ்குமார், பிரசன்னா, விஷால் ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
பெண் குழந்தைகள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் குறித்து உடனடியாக பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும் என்றும் போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் விருகம்பாக்கத்தில் பள்ளி மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி மருத்துவ மாணவர் ஒருவர் தனது நண்பர்களுக்கும் விருந்தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஸ்டாலினுக்கு 69 வயது என்றபோது என் தாயார் நம்பவே இல்லை.. கூகுள் செய்து பார்த்தார் - ராகுல் காந்தி

M.K.Stalin 

 மாலைமலர் : தமிழ் நாடு என்பது வெறும் இரண்டு வார்த்தைகள் அல்ல... ‘உங்களின் ஒருவன்’ நூல் வெளியீட்டு விழாவில் ராகுல் பெருமிதம்
பஞ்சாப் மாநிலத்திலிருந்து 100 கிலோமீட்டர் நிலத்தை அவர்கள் ஒருதலைப்பட்சமாக பறித்து எல்லைப் பாதுகாப்பு படைக்கு கொடுத்துள்ளதாக ராகுல் காந்தி பேசினார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி பேசியதாவது:-
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை நீண்ட நெடிய போராட்டம் நிறைந்தது என்பதால் சுயசரிதை நூலை எழுதி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வருவது எனக்கு எப்போது மகிழ்ச்சியான விஷயம் தான். நாடாளுமன்றத்தில் என்னை அறியாமல் பத்திரிகையாளர்களிடம் 'நான் தமிழன்' என்று கூறினேன்.

கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவை தேடுகிறேன்”: 'உங்களில் ஒருவன்’ வெளியீட்டு விழாவில் கனிமொழி MP உருக்கம்!

 கலைஞர் செய்திகள் - ஜனனி : “வாழ்க உன் பணி ஸ்டாலின்” என கரகரத்த குரலில் கொஞ்சும் அப்பாவைத் தேடுகிறேன்!” என கனிமொழி எம்.பி வரவேற்பு உரை ஆற்றியது பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் தன்வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நடைபெற்று வருகிறது.

உக்ரைன் எல்லையில் இந்திய மாணவர்கள் மீது தாக்குதல்! 'டார்ச்சர்' செய்வதாக மாணவிகள் புகார் வீடியோ

 Vigneshkumar  -   Oneindia Tamil :   டெல்லி: உக்ரைன் நாட்டில் இருந்து அண்டை நாடுகள் வழியாகத் தாயகம் திரும்பிய இந்திய மாணவர்கள் சில அதிர்ச்சி கரமான தகவல்களைத் தெரிவித்துள்ளனர்.
உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்க ரஷ்ய அதிபர் புதின் கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டார். கடந்த சில நாட்களாகவே அங்கு மோசமான போர் நடைபெற்று வருகிறது.
ரஷ்யாவின் இந்த நடவடிக்கையால் ஆத்திரமடைந்த உலக நாடுகள் பல்வேறு பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகிறது.
இருப்பினும், இதற்கெல்லாம் புதின் அஞ்சுவதாகத் தெரியவில்லை.
கீவ்வை கைப்பற்ற நினைக்கும் கனவு பலிக்காது.. உக்ரைன் மக்கள் ஆவேசம்

டிஜிட்டல் திண்ணை: ராகுலை அழைத்த ஸ்டாலின்: 2024 தேர்தல் மெசேஜ்!

 மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் இன்ஸ்டாகிராமில் அந்த தேசிய முக்கியத்துவம் வாய்ந்த அழைப்பிதழ் வந்திருந்தது.
தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலினின் சுய வரலாற்று நூலான உங்களில் ஒருவன் நூலின் முதல் பாகம் பிப்ரவரி 28 ஆம் தேதி காங்கிரஸ் தலைவரான ராகுல் காந்தியால் வெளியிடப்படுகிறது.
அந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழ் இன்ஸ்டாகிராமில் பகிரப்பட அதை பார்த்துவிட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்யத் தொடங்கியது.
"2024 மக்களவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்திய அளவில் மாநிலக் கட்சிகளின் ஒருங்கிணைப்பு இந்த தேர்தலில் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. அந்த வகையில் கடந்த பல ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி அமைப்பதில் முக்கியத்துவ இடமும் ஆதிக்கமும் செலுத்திவந்த திமுகவுக்கு... சிறிய இடைவேளைக்கு பிறகு மீண்டும் ஒரு தேசிய ரோல் காத்திருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருதுகிறார்கள்.

ஸ்டாலின்-சிதம்பரம் சந்திப்பு: திமுகவில் கொதிப்பு!

ஸ்டாலின்-சிதம்பரம் சந்திப்பு: திமுகவில் கொதிப்பு!

மின்னம்பலம் : நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வார்டுகளில் திமுக 49 இடங்களை கைப்பற்றி விட்டது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் போட்டியிட்ட ஐந்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
திருச்சி மாநகராட்சி இந்த முறை பொது ஒதுக்கீட்டில் வருவதால் அமைச்சரும் திமுக முதன்மைச் செயலாளருமான கே. என். நேருவின் நீண்டகால ஆதரவாளரான முன்னாள் துணை மேயர் அன்பழகன் மேயர் ஆவார் என்பதே திருச்சி அரசியல் வட்டாரத்தில் அனைவரின் எதிர்பார்ப்பும்.
தேர்தலுக்கு முன்பே திருச்சி மாவட்ட செயலாளர்களில் ஒருவரும் அமைச்சருமான அன்பில் மகேஷ் இந்த முறை மேயர் பதவியை தனது ஆதரவாளரான மலைக்கோட்டை பகுதி செயலாளர் மதிவாணனுக்கு பெறுவதற்காக கடுமையாக முயற்சி செய்தார். ஆனால் ஸ்டாலின் அன்பில் மகேஷை அழைத்து, ' நேரு என்ன சொல்கிறாரோ அதன்படி நடந்துகொள்' என்று அட்வைஸ் பண்ணி அனுப்பி விட்டார்.

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ”உங்களில் ஒருவன்” வரலாற்று நூலை வெளியிடுகிறார் ராகுல் காந்தி!

 கலைஞர் செய்திகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதி உள்ள "உங்களில் ஒருவன்" புத்தகத்தின் முதல் பாகத்தை, நாளை சென்னையில் நடைபெறும் விழாவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வெளியிடுகிறார்.
தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது வாழ்க்கைப் பயணத்தின் சுவடுகளை விளக்கும் வகையில், "உங்களில் ஒருவன்" என்ற பெயரில் வரலாற்று நூலை எழுதியுள்ளார்.
1976ஆம் ஆண்டு வரை உள்ள 23 ஆண்டு கால நினைவுகள் இந்தப் புத்தகத்தின் முதல் பாகத்தில் இடம்பெற்றுள்ளன. "உங்களில் ஒருவன்" வரலாற்று நூலின் முதல் பாகம் வெளியீட்டு விழா, சென்னை - நந்தம்பாக்கத்தில் உள்ள ‘சென்னை வர்த்தக மைய கூட்டரங்கில்’ நாளை (பிப்ரவரி 28) மாலை நடைபெற உள்ளது.

   May be an image of 5 people and text that says 'நான் " உங்களில் ஒருவன்' நூல் வெளியீட்டு விழா திங்கட்கிழமை, நேரம் மாலை 3.30 மணியளவில் விழாத் தலைமை மாண்புமிகு திரு. துரைமுருகன் அவர்கள் பொதுச் செயலாளர், தி.மு.க. முன்னிலை பாலு எம்.பி. அவர்கள் பொருளாளர், தி.மு.க. திரு. நூலை வெளியிட்டுச் சிறப்புரை திரு. ராகுல் காந்தி எம்.பி. அவர்கள் அகில இந்திய காங்கிரஸ் வரவேற்புரை திருமதி கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள் மாநில மகளிரணிச் செயலாளர், தி.மு.க. வாழ்த்துரை வழங்குவோர் மாண்புமிகு திரு. பினராயி விஜயன் அவர்கள் கேரள மாநில முதலமைச்சர் திரு. தேஜஸ்வி யாதவ் அவர்கள் பீகார் மாநில எதிர்க்கட்சித் தலைவர் நடிகர் திரு. சத்யராஜ் அவர்கள் ஏற்புரை மாண்புமிகு திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முதலமைச்சர் தி.மு.கழகத் தலைவர் திரு. உமர் அப்துல்லா அவர்கள் ஜம்மு காஷ்பீர் முன்னாள் முதலமைச்சர் "களிப்பேரரசு" திரு. வைரமுத்து அவர்கள்'

பேச்சுவார்த்தை நடத்த உக்ரைன் ஒப்புதல்- பெலாரசில் ..அமைதி திரும்ப வாய்ப்பு

மாலைமலர் : பேச்சுவார்த்தை நடத்துவதற்காக பெலாரஸ் நாட்டில் உள்ள கோமலுக்கு ரஷிய தூதுக்குழு வந்துள்ளதாக ரஷிய அதிபர் மாளிகை தெரிவித்திருந்தது.
உக்ரைன் மீது ரஷிய படைகள் 4வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷிய ராணுவ வீரர்கள் முழுமையாக கைப்பற்றும் நோக்கில் உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் தலை நகர் கீவின் பல இடங்களில் குண்டுகள் வெடித்தன. இதேபோல் மற்றொரு பெரிய நகரமான கார்கிவிலும் ரஷிய படைகள் நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
இந்த சண்டையில் இரு தரப்பிலும் பெருமளவில் உயிரிழப்பு மற்றும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. விரைவில் இரு நாடுகளும் பேச்சுவார்த்தைக்கு வந்தால் மட்டுமே இழப்புகளை தவிர்க்க முடியும்.