சனி, 28 மே, 2016

டாஸ்மாக். படையெடுக்கும் மக்கள்:....மூடுமாறு கோரிக்கை.. Pandora Box opened


'மூட போகும், 500 'டாஸ்மாக்' கடை பட்டியலில், எங்கள் பகுதியில் உள்ள கடையையும் சேர்க்க வேண்டும்' எனக் கோரி, தினமும் ஏராளமான மக்கள், டாஸ்மாக் அதிகாரிகளிடம் மனு அளித்து வருகின்றனர். இதனால், அதிகாரிகள் செய்வதறியாது திணறி வருகின்றனர். முதல்வர் ஜெயலலிதா, முதற்கட்டமாக, 500
டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட்டு உள்ளார். இதையடுத்து, சென்னை, தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் தனிப்பிரிவு, எழும்பூரில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகம், மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகங்களில், மதுக்கடையை மூடுமாறு பலரும், கோரிக்கை மனுவை அளித்து வருகின்றனர்.

ஓசூர்: நிலஅளவையாளர் வெட்டி கொலை.. 50 லட்சம் கப்பம் கேட்டு கொலை !

ஓசூர்: ரூ.50 லட்சம் பணம் கேட்டு ஓசூரில் கடத்தப்பட்ட நிலஅளவையாளர் (சர்வேயர்) சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். சேலம் அருகே காருடன் அவரது உடலை எரித்து விட்டனர். இதுதொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் திரிவேணி கார்டன் பகுதியை சேர்ந்தவர் குவளைசெழியன் (42). ஓசூரில் நில அளவையாளராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி ரேவதி. குவளை செழியன் நேற்று காலை 11 மணியளவில் தனது காரில் அலுவலகத்துக்கு புறப்பட்டார்.

வைகோ விஜயகாந்த் மீது விடுதலை சிறுத்தைகள் கடும் அதிருப்தி...

மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று உண்மையில் இருந்ததா?' என்று சொல்லும் அளவுக்கு அதன் தலைவர்கள் திசைக்கொருவராய் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். ' வைகோவின் உணர்ச்சிவசப்பட்ட நாடகங்களும் விஜயகாந்தின் மேடை நாகரீகமில்லாத மேனரிசமும்தான் தோல்விக்குப் பிரதான காரணம்' எனக் கொந்தளிக்கின்றனர் வி.சி.க.வினர். சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியில் போட்டியிட்ட கட்சிகளிலேயே நல்ல வாக்குகளை வாங்கியது விடுதலைச் சிறுத்தைகள்தான். அவர்கள் போட்டியிட்ட பல தொகுதிகளில் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் என கணிசமான அளவுக்கு வாக்குகளைப் பெற்றுள்ளனர். காட்டுமன்னார் கோவில் தொகுதியில் வெறும் 87 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை நழுவவிட்டார் திருமாவளவன். தேர்தல் தோல்விக்குப் பிறகு, வி.சி.க.வின் 25 வேட்பாளர்களையும் அழைத்துப் பேசினார் திருமா. நேற்று முன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில், அடுத்த அரசியல் நகர்வை நோக்கி நீண்ட நேரம் விவாதம் நடத்தியுள்ளார்.

சாரு நிவேதிதா : சீமானுக்கு ஒரு கடிதம்... வெறுப்பு அரசியல் வீணாக போய்விடும்

அன்புள்ள சகோதரர் சீமான் அவர்களுக்கு, வணக்கம். இந்தக் கடிதத்தை உங்களுக்கு நான் எழுதும் காணம், நீங்கள் மற்ற அரசியல்வாதிகளிலிருந்து தனித்து இருக்கிறீர்கள் என்பதுதான். முக்கியமாக எந்தப் பெரிய கட்சியுடனும் நீங்கள் சேரவில்லை. சேர்ந்திருந்தால் நாலைந்து சட்டசபை உறுப்பினர்களோடு கணக்கைத் துவக்கியிருக்கலாம். மேலும், உங்கள் தேர்தல் அறிக்கை தமிழ்நாட்டு நலனில் உண்மையிலேயே அக்கறை கொண்ட செயல்திட்டத்தைக் கொண்டிருந்தது.
ஆனால், உங்கள் கட்சியின் அடிப்படையான கொள்கையில் சில ஆபத்தான அம்சங்கள் உள்ளன. தமிழ்நாட்டைத் தமிழர்தான் ஆள வேண்டும் என்பது அதில் ஒன்று. உங்களுடைய பிரசாரங்களிலும் தெலுங்கு பேசுபவர்களை வந்தேறிகள் என்று உணர்ச்சிகரமாகச் சாடுகிறீர்கள். இளைஞர்கள் கை தட்டுகிறார்கள்.மேலும், பொதுவாகவே, உங்கள் பேச்சு வெறுப்பு என்ற எளிதில் பற்றக் கூடிய உணர்வை விசிறி விடுவதுபோல் இருக்கிறது. ஹிட்லருடைய பாணியும் இதே போலவே இருந்தது என்பதை நீங்கள் கவனித்திருக்கிறீர்களா?

தேர்தல் ஆணையத்தின் அஜெண்டா ... ஆளுநர் ஆட்சேபம்...

தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலில் ஆளுநர் தலையீட்டுக்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு தஞ்சை, அரவக்குறிச்சி தேர்தலை ஜூன் 1ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்று தமிழக ஆளுநர் ரோசய்யா, தலைமைத் தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. மேலும், தேர்தல் தொடர்பாக ஆளுநர் கடிதம் எழுதியிருக்கக் கூடாது. இரு தொகுதிகளிலும் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முன் தன்னுடன் ஆலோசனை நடத்தியிருக்க வேண்டும் என்று ஆளுநர் கூறியதை ஏற்க முடியாது. தேர்தல் அட்டவணையில் மாற்றம் செய்வது தொடர்பாக ஆளுநருடன் ஆலோசிக்கப்பட வேண்டும் என எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. ஆளுநரின் செயல் தேர்தல் நடைமுறையை மீறுவதாக உள்ளது. தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் மாநிலங்களவை தேர்தல் தொடர்பான ஆளுநரின் கருத்தும் ஏற்புடையதல்ல என்று தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.  நக்கீரன்,இன்

திமுக மன்னிக்காது? அதிமுக + தேர்தல் கமிசன் கூட்டணி தோற்கடிக்கப்படும்.....?

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழக அரசியல் களம் சற்று ஆரோகியமான பாதையில் பயணிப்பது போல் இருந்தது. தமிழக மக்களும் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலையை பார்த்து மகிழ்ச்சியடைந்தார்கள்.ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவுக்கு மு.க.ஸ்டாலின் சென்றது, அவரின் வருகைக்கு ஜெயலலிதாவின் நன்றியும், அவருக்கு முன் வரிசையில் இடம் ஒதுக்காதது குறித்து எழுந்த சர்ச்சைக்கு ஜெயலலிதா விளக்கம் அளித்தது, சட்டசபை வளாகத்தில் ஜெயலலிதாவும், ஸ்டாலினும் பரஸ்பரம் வணக்கம் தெரிவித்தது, ஜெயலலிதா திமுகவுக்கும், ஸ்டாலினுக்கும் வாழ்த்து கூறியது,
திமுக உடன் சேர்ந்து தமிழக மக்களின் மேம்பாட்டுக்கு உழைக்க இந்த அரசு எதிர்நோக்கி உள்ளது என ஜெயலலிதா கூறியது இவை எல்லாம் சட்டசபை தேர்தலுக்கு பின் தமிழகத்தில் நிகழ்ந்த அரிய நிகழ்வு.<">இதன் மூலம் தமிழகத்தில் ஆரோக்கியமான அரசியல் நடைபெறும் என பரவலாக பொதுமக்கள் பேசி வந்தனர். ஆனால் திமுக தலைவர் கருணாநிதி பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டி இந்த ஆரோக்கிய அரசியலுக்கு வழிவகுக்காது போல் உள்ளது

கலைஞர்: திமுக தோல்விக்கு தேர்தல் கமிஷனே காரணம்

சென்னை : ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு திமுக தலைவர் கருணாநிதி அளித்துள்ள பேட்டியில், தேர்தல் பணிகள் தொடங்கியதில் இருந்தே தேர்தல் கமிஷன் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டது. அவர்கள் ஆளும் கட்சியுடன் கூட்டணி சேர்ந்து செயல்பட்டார்கள். ஆளும் கட்சியின் பண பலமும், தேர்தல் கமிஷனின் ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைகளும் தி.மு.க.வை தோல்வி அடைய செய்துவிட்டன.
தி.மு.க.வை பொறுத்த வரை எந்த சவால்களையும் சந்திக்கும் நிலையிலேயே உள்ளது. தற்போது ஆளும் கட்சி, தி.மு.க.வை விட பல சவால்களை சந்தித்தாக வேண்டும். இப்போது முதல்வர் மாநில நன்மைக்காக தி.மு.க.வுடன் இணைந்து செயல்பட விரும்புவதாக கூறி இருக்கிறார். தமிழகத்திற்கு நல்லது கிடைக்கும் என்றால் தி.மு.க. சேர்ந்து பணியாற்ற ஒருபோதும் மறுத்ததில்லை. அதை வரலாறு சொல்லும்.
தஞ்சை, அரவக்குறிச்சியில் ஏற்கனவே திட்டமிட்ட படி தேர்தல் நடத்தி இருந்தால் 2 இடங்களிலும் தி.மு.க. வெற்றி பெற்றிருக்கும். தேர்தல் தள்ளி வைக்கப்பட்டாலும் எங்கள் வெற்றி பாதிக்காது என தெரிவித்துள்ளார் தினமலர்.com

ப.சிதம்பரம் ராஜ்யசபா எம்பி ...மகாராஷ்டிராவில் போட்டி!

புதுடெல்லி: நாடு முழுவதும் காலியாக உள்ள 57 மாநிலங்களவை உறுப்பினர் பதவிகளுக்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இதற்கான வேட்பாளர்களை ஒவ்வொரு கட்சியும் அறிவித்து வருகிறது. அந்த வகையில் காங்கிரஸ் கட்சி இன்று வேட்பாளர்களை அறிவித்துள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் ப.சிதம்பரம், ஆஸ்கர் பெர்னாண்டஸ், ஜெய்ராம் ரமேஷ், அம்பிகா சோனி, விவேக் தன்கா, கபில் சிபல், சயா வர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த மூத்த தலைவரும் முன்னாள் மத்திய மந்திரியுமான ப.சிதம்பரம் மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து போட்டியிடுகிறார். உத்தர பிரதேச மாநிலத்தில் இருந்து கபில் சிபல், கர்நாடகாவில் இருந்து ஜெய்ராம் ரமேஷ் போட்டியிடுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாலைமலர்.com

BBC : புதுச்சேரியின் முதலமைச்சராக நாராயணசாமி தேர்வு.. முன்னாள் மத்திய இணையமைச்சர்

புதுச்சேரியின் புதிய முதலமைச்சராக முன்னாள் மத்திய இணையமைச்சர் நாராயணசாமி தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். தமிழ்நாட்டுடன் சேர்ந்து புதுச்சேரிக்கும் மே 16ஆம் தேதியன்று தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மொத்தமுள்ள 30 இடங்களில் 15 இடங்களைக் கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியான தி.மு.க. இரண்டு இடங்களைக் கைப்பற்றியது. ஆளும் கட்சியான என்.ஆர். காங்கிரஸ், வெறும் 8 இடங்களில் மட்டுமே வென்றது. ஆனால், புதிய முதல்வரைத் தேர்ந்தெடுப்பதில் புதுச்சேரி காங்கிரஸ் கட்சிக்குள் பலத்த போட்டி நிலவியது. முன்னாள் முதல்வர் வைத்திலிங்கம், புதுச்சேரி காங்கிரஸ் கட்சித் தலைவர் நமச்சிவாயம், முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் முதல்வர் நாற்காலியைப் பிடிப்பதில் முனைப்புக் காட்டினார்கள்.

எம்.எஸ்.சுப்புலட்சுமி... ஊடகங்களால் உருவாக்கப்பட்ட எக்ஸ்ட்ரா லார்ஜ் சங்கீத பிம்பம் ...

எம் எஸ் அம்மா பாவம் சதாசிவ அய்யரிடம் அகப்பட்டு தனது வாழ்வை தொலைத்த பெண்மணி . இவர் ஒரு பார்பனர் அல்ல. ரஜினிகாந்த்,தனுஷ்  போல பார்பனர்களால் பயன்படுத்தப்பட்டவர் ஆகும். நல்ல   ஒரு இசைக்கலைஞர் (இசைவேளாளர்) அவர்களின் வியாபரத்துக்கு  கிடைத்த இலவச மூலதனம் அவ்வளவுதான் சதாசிவத்தின் இறுதி கிரிகைகளின்போது அவர் பிராமணர் இல்லை என்பதால் வெளியே நிறுத்தி வைத்து பின்பு சதாசிவ அய்யர்வாளின் உடல் தூக்கி கொண்டு சென்றபின்தான் எம் எஸ் அம்மாவை உள்ளே அனுமதித்தார்கள். சதாசிவத்தின் மனைவி என்ற ஸ்தானம் அவருக்கு கிடைக்கவில்லை  அன்புள்ள சாரு அவர்களுக்கு
மே மாத காலச்சுவடு இதழில் டீ.எம். கிருஷ்ணா  எம்.எஸ். பற்றி ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மொழிபெயர்ப்புதான்.  அது என்னை மிகவும் பாதித்தது.  ஒரு பதில் எழுதிப் போட்டிருக்கிறேன். வருமா என்று தெரியாது.  அதை நீங்கள் படித்தீர்களா என்று எனக்குத் தெரியாது.  படித்து அது சரியென்றால் ஓகே.  இல்லையென்றால் அதற்கு எதிர்வினையாற்றவும் நீங்கள்தான் ஏற்றவர் என்பது என் கருத்து.
அன்புடன்,
வி.என். ராகவன்.
சாரு நிவேதா :Dear Sir,
உங்கள் கடிதத்துக்கு என் மனமார்ந்த நன்றி.  நீங்கள் குறிப்பிட்டுள்ள கிருஷ்ணாவின் கட்டுரையை ஆங்கிலத்தில் வெளிவந்த போதே படித்து விட்டேன்.  பொதுவாக சில விஷயங்கள் குறித்து நான் ஒரு வார்த்தை கூட எழுதக் கூடாது என்று எனக்குள் ஒரு விதி வைத்திருக்கிறேன்.  மதம், ஜாதி, கர்னாடக சங்கீதம் போன்றவை அவற்றில் சில.  மதம், ஜாதி பற்றி எழுதினால் கொன்று விடுவார்கள்.  அல்லது பெருமாள் முருகனுக்கு நேர்ந்த கதி ஏற்படும்.   

சவுதி : மனைவியின் பிரசவ டாக்டரை கோபத்தில் சுட்ட கணவன்...

ரியாத்: சவுதியின் தலைநகர் ரியாத்தில் தனது மனைவி பிரசவத்தின் போது டாக்டர் மீது ஏற்பட்டகோபத்தால் அவரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சவுதியின் தலைநகரான ரியாத்தில் உள்ள கிங் பகத் மருத்துவ சிட்டியில் செயல்பட்டு வரும் மருத்துவமனை ஒன்றின் மகப்பேறு ஆண் மருத்துவரான முகன்னத் அல் ஜப்ன் என்பவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பெண்மணி ஒருவருக்கு பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தின் போது இப்பெண்ணின் ஜோர்டானை சேர்ந்த கணவரும் உடனிருந்துள்ளார். Saudi Arabia man shoots doctor அப்போது அந்த மருத்துவர் தனது மனைவியின் உடலை தொட்டது இவருக்கு பிடிக்கவில்லை, ஆண் மருத்துவராக இருந்தபோதிலும், தனது முன்னால் எப்படி மனைவியின் உடல் பாகங்களை தொடலாம் என்று கோபம் கொண்டுள்ளார். இருப்பினும் குழந்தை பிறந்து 2 வருடங்கள் கழித்துவிட்டது. அந்த சம்பவம் அவனது மனதில் ஆழமாய் பதிந்துள்ளது.

வெள்ளி, 27 மே, 2016

கோர்ட்டில் போராட்டம் நடத்த தடை..சட்ட திருத்தம்! பார் கவுன்சின் அதிகாரத்தை நீதிபதிகள் பறிக்கும் செயல்?

சென்னை: வக்கீல்கள் போராட்டத்தை தடுக்க புதிய சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஐகோர்ட்டின் சட்ட திருத்தம், அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. சாதாரண காரணங்களுக்கு கூட அடிக்கடி கோர்ட் வளாகங்களுக்குள் வக்கீல்கள் போராட்டம் நடத்துகின்றனர். கோர்ட் நடவடிக்கைகள் பாதிக்கப்படுகின்றன. நீதிபதிகள் மிரட்டப்பட்ட சம்பவங்கள் கூட பலமுறை நடந்திருக்கிறது. எனவே, இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை இருந்து வந்தது. இப்போது ஒரு வழியாக பூனைக்கு மணி கட்டியுள்ளது ஐகோர்ட்.சமீபத்தில் ஐகோர்ட் கொண்டு வந்த சட்ட திருத்தம் அரசிதழில் வௌியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

நடிகை சமந்தா நாக சைதன்னியாவை திருமணம் செய்கிறார்

நடிகை சமந்தா நடிகர் நாக சைதந்நியாவை கல்யாணம் செய்கிறார். நாக சைதன்னியா நடிகர் நாக அர்ஜுனாவின் முதல் தாரமான தயாரிப்பாளர் ராம நாயுடுவின் மகளாகும். நாகர்ஜுனா பழம்பெரும் நடிகர் நாகேஸ்வரராவின் மகனாகும். ஆக மொத்தம் இருபெரும் திரை ஜாம்பவன்களின் பேரனை சமந்தா கரம்ப்டிக்கிறார். வாழ்க வளமுடன் .    ஆந்திர நாளிதழ் ஒன்றுக்கு சமந்தா அளித்த பேட்டியில், தற்போது திருமணத்துக்குத் தயாராகிவிட்டேன். ஓர் இளம் கதாநாயகனை நான் காதலிக்கிறேன். அவரை விரைவில் திருமணம் செய்வேன். அவர் யார் என்பதைத் தற்போது சொல்லமாட்டேன். திருமணத் தேதியை அறிவிக்கும்போது சொல்வேன். என் திருமணத்துக்குப் பெற்றோர் சம்மதம் தெரிவித்துவிட்டார்கள் என்று கூறியிருந்ததாகச் செய்திகள் வெளியாகின.

தேர்தல் ஆணையத்தின் மெகா ஊழல்.. அரசியல்வாதிகளையும் மிஞ்சிய கூத்து

முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் சாமி "தமிழ்நாட்டில் யாராலும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது' என்று கூறுகிறார். பிறகு ஏன் உங்களுக்கு தண்டச் சம்பளம்... தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டுப் போவதுதானே என்று ஊடகத்தில் கேள்வி கேட்க ஆள் இல்லாதது அவர்களின் புண்ணிய கணக்கு. தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக தேர்தலை நடத்துகிறார்கள் என்று எண்ணும் மக்களின் பாவக்கணக்கு.;அன்றைய தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமார், அவர் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று தரும் தகவலில் நாம் அறிவது... ஏற்கனவே இரண்டு மனையும், ஒரு வீட்டையும் வைத் திருந்தவருக்கு அ.தி.மு.க. அரசு வீட்டை தந் துள்ளது. Noidaவில் ரூபாய் 35.25 லட்சம் கொடுத்து 28-7-2011ல் வீட்டை வாங்கியவர் 34.90 லட்சம் கட்டிவிட்டார். அது மட்டுமில்லை... இதே நேரத்தில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் bid dated  10-9-2012-ல் 85 லட்சம் மதிப்புள்ள வீட்டை வழங்கியது.

அதிமுக ‘ரெட்டி’ அமைச்சர்.. மீண்டும் ஜாதிக்கு ஆக்சிஜன் ! அய்யங்கார் ஜெயலலிதா முன்னேற்ற கழகம்

மதிமாறன்: தனிநபர்களுக்கு பின் இருந்த ஜாதி பட்டங்களை ஒழித்த தமிழ்நாட்டில்; திரு. பாலகிருஷ்ண ரெட்டி. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர்.
ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்கு பிறகு ஜாதி பட்டத்துடன் ஒரு அமைச்சரே. பண்பாட்டு அரசியலில் தமிழகம் 50 வருடம் பின்னோக்கி.
ஜாதி ஒழிப்பு பேசுகிறவர்கள் மட்டுமல்ல, இனவாதம் பேசுகிறவர்கள் கூட‘கமுக்கமா’ இருக்காங்களே என்ன காரணம்?

சீனாவின் நிறவெறி விளம்பரம்


bbc.com: சலவை பவுடர் விளம்பரம் ஒன்றிற்காக சீன விளம்பர நிறுவனம் ஒன்று தயாரித்த விளம்பரம் இனவாதத்தை வெளிக்காட்டுவதாக சர்ச்சை வெடித்துள்ளது.அந்த விளம்பரத்தில் ஒரு சீனப் பெண், கறுப்பு இன ஆண் ஒருவரை வாஷிங் மெஷினுக்குள் தள்ளிவிடுகிறார். அதில், ஏற்கனவே விளம்பரத்தில் சொல்லப்படும் சலவை பவுடர் கலக்கப்பட்டுள்ளது. வாஷின் மெஷின் சில சுழற்சிகள் சுழன்ற பிறகு, அந்த பெண் வாஷின் மெஷினின் கதவுகளை திறக்கிறார். அதிலிருந்து, வெள்ளை நிற தோல் உடைய சீன இளைஞர் ஒருவர் வெளி வருகிறார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள ஒரு இணையதள பார்வையாளர், இந்த விளம்பரத்தை தயாரித்தவர்கள் இனவெறி என்பது சிக்கலான விஷயம் என்பதை மறந்துவிட்டனர் என்றுள்ளார்.

திருமாவளவன் :திமுகவும், அதிமுகவும் பெருமைப்பட எதுவுமே இல்லை!

திமுகவும், அதிமுகவும் தங்களது வெற்றியை நினைத்து பெருமைப்பட்டுக் கொள்ள எதுவுமே இல்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி 25 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், அதன் தலைவர் தொல்.திருமாவளவன் உட்பட அனைவரும் தோல்வியை தழுவின.>இந்த தேர்தல் முடிவுகள் குறித்து ஆலோசிப்பதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தேர்தல் பொறுப்பாளர்கள் கூட்டம், சென்னை அசோக் நகரில் நடைபெற்றது.அப்போது செய்தியார்களிடம் பேசிய திருமாவளவன், "சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக,அதிமுக எல்லா தொகுதிகளிலும் 100 சதவீதம் பணம் கொடுத்துள்ளன.

காங்கிரஸ் நிறைவேற்றிய 14 திட்டங்களுக்கு புதிய பெயர்களை மாற்றி வைத்து மோடி அரசு செய்யும் மோசடி

1.நிர்மல் பாரத்-ஸ்வாச் பாரத்
2.டைரெக்ட் பெனிபிட் ட்ரான்ஸ்பர் -ஜன தன் யோஜனா
3.நேசனல் பென்சன் ஸ்கீம் -அடல் பென்சன் ஸ்கீம்
4.நேசனல் ஈ கவேர்ணன்ஸ் ப்ளான் - டிஜிடல் இந்தியா
5.ஆம் ஆத்மி பீமா யோஜனா - பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா
6.இந்திரா ஆவாஜ் யோஜனா -நேசனல் கிராம் ஆவாஸ் மிசன்
7.பிளானிங் கமிஷன் - நிதி அய்யோக் ( ரொம்ப அய்யோகியமோ?)
 8.ராஜீவ் காந்தி கிராமின் வித்தியோதிகரன பரியோஜன -தீன்தயால்    உபத்த்யாய கிரம்ஜோதி யோஜன -
9. Accelerated Irrigation Benefits Programme -பிரதான் மந்திரி கிரிஷி சிஞ்சை யோஜனா

தமிழ்நாட்டின் திரைமறைவு அரசியல் அபாயங்கள்

JJ
பாலில் ஊழல், மூட்டை கொள்முதலில் ஊழல், கோடிகணக்கான  ரூபாய் சாராய கொள்முதலை டெண்டர் இல்லாமல் பெறுவதில் ஊழல், மின்சாரத்தை வாங்குவதிலே ஊழல், மின்சாரத் திட்டத்தை தாமதபடுத்தி ஊழல் என்று தமிழகத்திலே கிழக்கு மேற்கு வடக்கு தெற்கு என்று நான்காண்டு ஆட்சியில் நாலாபுறமும் ஊழல் தான் மிச்சம். எல்லாத் துறைகளிலும் ஊழல் பெருகி விட்ட காரணத்தினால் எந்த ஒரு  தொழில்துறை வளர்ச்சியும் கட்டமைப்பு வசதியும் செய்து தர இயலாத ஜெயலலிதா அரசு, தமிழக அரசின் கஜானாவை படு பாதாளத்தில் தள்ளி விட்ட  ஜெயலலிதா அரசு, இப்போது நம்பி இருப்பது ஜாதி மோதலில் வளரும் வன்மத்தை  மட்டும்தான் 
thetamilpost.in :நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரிப் பேராசிரியரும் பிரபல தமிழ் எழுத்தாளருமான திரு. பெருமாள் முருகன் எழுதிய மாதொரு பாகன் நாவல் தொடர்பாக, மதவெறி மற்றும் சாதிவெறி அமைப்புகள் போராட்டம் நடத்தி, பெருமாள் முருகனை அச்சுறுத்திய போது, இந்து மதம் மற்றும் கவுண்டர் சாதி அமைப்புகளின் நிலைப்பாட்டிற்கு மறைமுக ஆதரவளித்து, மாவட்ட வருவாய் அலுவலர் மூலம் கட்டப் பஞ்சாயத்து செய்து மிரட்டி, எழுத்தாளர் பெருமாள் முருகனை மன்னிப்புக் கேட்க வைத்தனர்.

வியாழன், 26 மே, 2016

சுவிஸ். ஆசிரியர்களுக்கு கைகுலுக்க மறுக்கும் முஸ்லிம் மாணவர்களுக்கு அபராதம்

Religious belief is no excuse for refusing to shake a teacher's hand, authorities in a northern Swiss region ruled Wednesday, reversing .... Chicago immigrant says feds denied her deportation reprieve to punish her activism.
வகுப்பு துவங்கும்போதும் முடிவிலும் கைகுலுக்குவது ஸ்விட்சர்லாந்தில் வழக்கம். ஸ்விட்சர்லாந்தின் வடக்கே இருக்கும் பேசல் உள்ளூராட்சியிலுள்ள பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் மாணவர்கள் தமது ஆசிரியர்களுடன் கட்டாயம் கைகுலுக்க வேண்டும் என்று அந்த ஊரின் உள்ளூராட்சி அதிகார சபை தீர்ப்பளித்திருக்கிறது. சிரியாவிலிருந்து வந்த இரண்டு சிறுவர்கள் மதக்காரணங்களைக் காட்டி பெண் ஆசிரியைகளுடன் கைகுலுக்கத் தேவையில்லை என்று அளிக்கப்பட்டிருந்த விதிவிலக்கை இந்த தீர்ப்பு ரத்து செய்கிறது.
மதம் சார்ந்த பழக்கவழக்கங்களைவிட பொதுநன்மையும் பெண் சமத்துவமும் அதிக முக்கியத்துவம் வாய்ந்தவை என்று உள்ளூராட்சி மன்றம் தெரிவித்துள்ளது.

எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை'.. கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்தனர்! ( Modi's Biggest Scam of $ 350 Millions)

சஹ்ரன்பூர்: 'கடந்த ஆட்சியில் கொள்ளை அடித்தனர். எங்கள் ஆட்சியில் ஊழல் இல்லை'' என பிரதமர் மோடி கூறினார். மத்தியில் பா.ஜ., அரசு பதவியேற்று இரண்டாடுகள் நிறைவடைந்து மூன்றாம் ஆணடில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு உ;பி.,மாநிலம் சஹ்ரன்பூர் நகரில் நடைபெற்ற பொதுககூட்டத்தில் பேசினார். நாட்டில் ஊழலற்ற வெளிப்படையான அரசை மத்திய அரசு வழங்கி வருகிறது. ஏழ்மையை அகற்றவே ஓய்வில்லாமல் உழைத்து வருகிறேன். மாநில அரசுகளுக்கு பா.ஜ., அரசு முககியத்துவம் அளித்து வருகிறது. மாநிலங்களின் நிதித் தேவையில் 65 சதவீதம் வரையில் மத்திய அரசு பூர்த்தி செய்து வருகிறது. நாடு முழுவதும் தண்ணீர் , மின்சாரம் தேவைகளை பூர்தத்தி செய்ய சிறப்பான திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம்.   350 Million டாலர் என்றால் இந்திய ரூபாயில் எவ்வளவு என்று கணக்கு பார்த்துகொள்ளவும்

கலிபோர்னியா பள்ளிகளில் நுழைகிறது பார்ப்பனிய வரலாறு

கலிபோர்னியா அம்பேத்கர் அசோசியேசனை சேர்ந்த தேன்மொழி சவுந்தர்ராஜன் த்திய மாநில பா.ஜ.க அரசுகள் பள்ளி கல்லூரி பாடத்திட்டங்களை காவிமயமாக்கிவருவது நமக்கு தெரிந்த ஒன்று தான் என்றாலும் இது இந்தியாவோடு முடிந்து விடவில்லை. அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண பாடத்திட்டத்தையும் தங்களுக்கு ஏற்றபடி மாற்றுவதில் தற்போது பகுதியளவு வெற்றி பெற்றுள்ளனர் இந்துத்துவ அமைப்புகள்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் ஆறு வருடங்களுக்கு ஒரு முறை பள்ளி பாடத்திட்டங்களை மாற்றுவது வழக்கம். மாற்றப்பட்ட பாடத்திட்டங்கள் பொதுவில் வெளியிடப்பட்டு மக்களின் கருத்து கேட்கப்பட்டு மாறுதலுக்கு உட்படுத்தப்படும்.

100 மேற்பட்ட பெண்களுக்கு குழந்தை வரம் கொடுத்த பாபா பரமானந்த சுவாமிஜி... பாலியல் வன்முறை அல்ல ... ஜஸ்ட் குழந்தை கொடுத்தாரு!

The 'godman', whose real name is Ram Shankar Tiwari, set up the Barabanki ashram 30 years ago, where his followers turned up in huge numbers every day. A big chunk of his followers included women who were unable to conceive or had given birth only to girls. These women were desperate for a baby boy and Parmanand used to 'guarantee' the birth of male children.
லக்னோ  - உத்திரபிரதேச மாநிலம் பாரபங்கியில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பாபா பரமானந்த சாமியார், 30 ஆண்டுகளுக்கு முன்பு இவர் இங்கு வந்து ஆசிரமம் தொடங்கினார். இவர் பல்வேறு நோய்களை குணமாக்குவதாகவும், இவரிடம் ஆசி பெற்றால் பல்வேறு பிரச்சினைகள் தீருவதாகவும் பல்வேறு தகவல் பரவியது. இதனால், ஏராளமான பக்தர்கள் இவரது ஆசிரமத்துக்கு படை எடுத்தனர். மேலும் குழந்தை இல்லாத பெண்கள் இவரிடம் ஆசி பெற்றால் குழந்தை கிடைப்பதாகவும், பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கும் பெண்ணுக்கு இவருடைய ஆசியால் ஆண் குழந்தை பிறப்பதாகவும் கூறப்பட்டது.

BBC :மோடியின் இரண்டாண்டுகள் விழா விளம்பரங்கள்...ஒரே நாளில் 1000 கோடி ரூபாய்க்கு மேல்.. அரவிந்த் கேஜ்ரிவால்

நரேந்திர மோதி தலைமையிலான பாரதீய ஜனதாக் கட்சி அரசு பதவியேற்று 2 ஆண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், பல துறைகளிலும் இந்த அரசு தோல்வியடைந்திருப்பதாக காங்கிரஸ் குற்றம்சாட்டுகிறது. ஆனால், நாடு முழுவதும் தங்கள் சாதனைகளைப் பட்டியலிடும் கூட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளது பா.ஜ.க.2014ஆம் ஆண்டு மே மாதம் நடந்த தேர்தலில் 282 இடங்களை பாரதீய ஜனதாக் கட்சி கைப்பற்றியதையடுத்து, மே 26ஆம் தேதி பிரம்மாண்டமாக நடந்த பதவியேற்பு விழாவில் பிரதமராகப் பதவியேற்றார் நரேந்திர மோதி.
இரண்டாண்டுகள் கழிந்திருக்கும் நிலையில், பணவீக்கம் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது, பெரிய அளவிலான ஊழல் புகார்கள் ஏதும் இல்லாதது, தொழில் முனைவோருக்கு ஊக்கமளிக்க ஸ்கில் இந்தியா, ஸ்டார்ட் அப் இந்தியா போன்ற திட்டங்கள், வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் உலகில் இந்தியா குறித்த கவனத்தை ஏற்படுத்தியது என பாரதீய ஜனதாக் கட்சி தன் சாதனைகளைப் பட்டியலிடுகிறது.

சு.சுவாமியின் மகள் சுஹாசினி ஹைதர் இஸ்லாமிய பிரசாரம் ! கணவன் குழந்தைகள் எல்லாம் இஸ்லாம்..


இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் என்றும், பயங்கரவாதிகள் என்றும் அவதூறு பரப்பும் சங்பரிவார கும்பலுக்கு மத்தியில் அதே வன்முறை கும்பலை சேர்ந்த சு ‪.சுப்பிரமணிய_சுவாமியின்‬ மகள் ‪#‎சுஹாசினி‬ பாசிச வெறியர்களுக்கு எதிராக நிர்கிறார். பாரம்பரிய பிராமண குடும்பத்தில் பிறந்த நீங்கள் எப்படி இஸ்லாத்தையும் இஸ்லாமியர்களையும் ஆதரிக்கிறீர்கள் என நெறியாளர் கேட்டதற்கு அவர் கொடுத்த பதில்கள் யாரை கலங்கடிக்கிறதோ இல்லையோ சுப்பிரமணிய சுவாமியை உலுக்கி இருக்கும். சுஹாசனி கூறுகிறார்: இஸ்லாத்தின் மீது தவறான கருத்துகள் திணிக்கப்படுகிறது, உலகம் முழுவதும் தவறான நம்பிக்கையை விதைத்து இருக்கிறார்கள், நான் அதை மாற்ற துடிக்கிறேன், உலகம் முழுவதும் மாற்ற முடியாது என்றாலும் என் வீதியில் இருந்து, என் சுற்றுப்புறத்திலிருந்து மாற்ற போராடுகிறேன்.  அடங்கப்பா என்ன ஒரு போராட்ட வெறி? இதே மாதிரிதான் அப்பன் சுப்ரமணியம் சாமியும் ஓவர் சீன் போடுராய்ன். அவரோ  இந்துத்வாவை காக்க வந்த அவதாரம்.. அப்பனுக்கும் மகளுக்கும் நோக்கம் ஒன்றுதான்.. பதவி பணம் புகழ்..  

S.R.பாலசுப்பிரமணியம் ஜெயாவின் ரகசிய ஏஜென்ட் .....தேவகவுடா அமைச்சரவையில் அமைச்சராக இருந்த வேளை... ...

S.R. Balasubramoniyan, Ministry of Personnel, Public Grievances and Pensions and Ministry of Parliamentary Affairs.
Date formed 1 June 1996 Date dissolved 21 April 1997 எஸ் ஆர் பி மாநிலங்களவைக்கு அதிமுக சார்பில் போட்டி இதன் மூலம் ஜெயலலிதா சொல்ல விரும்புவது என்ன .. 1996 இல் ஜெயலலிதா அவரே பர்கூரில் படுதோல்வி அடைந்து நான்கே தொகுதியை பெற்று நான்காம் இடத்தை அடைந்த போது திமுக காங்கிரஸ் கூட்டணி வெற்றி காரணமாக தேவ கௌடா தலைமையில் மத்தியில் மந்திரி பதவி பெற்ற நேரத்தில் அன்றைய நிதி அமைச்சர் P.chidambaram மற்றும் மூப்பனாருக்கு தெரியாமல் உள்ளடி வேளைகளில் like a sleeeper cell for ADMK - SRB ஈடுபட்டு அதன் மூலம் ஜெயலலிதா மீதுள்ள நிதி மோசடி வழக்குககளை நீர்த்து போகும் வேலைகளை செய்தார் என்று ஊர்ஜிதபடுத்த படுத்தப்படாத புகார்கள் அப்போதே தெரிவித்தன .

இஸ்லாமிய தலாக்கிற்கு தடை கோரி வழக்கறிஞர் பதர் சையத் ..முன்னாள் அதிமுக எம் எல் ஏ..

புதுடில்லி:முஸ்லிம்கள், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து வழங்கும் நடைமுறையை எதிர்த்து, தமிழக முன்னாள் எம்.எல்.ஏ., பதர் சயீத், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.முஸ்லிம்கள், மூன்று முறை, 'தலாக்' கூறி, விவாகரத்து செய்யும் ஷரியத் சட்டத்தை எதிர்த்து, ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன. விரைவு தபாலில், 'தலாக்' சொல்லி விவாகரத்து வழங்கியதை எதிர்த்தும், ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரைச் சேர்ந்த முஸ்லிம் பெண் ஒருவர், கடந்த வாரம், சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில், அ.தி.மு.க., சார்பில், தமிழக எம்.எல்.ஏ.,வாக இருந்த, பதர் சயீத், 'தலாக்' முறையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார்; அந்த மனுவில் கூறியுள்ளதாவது:நீதிமன்ற தலையீடு இல்லாமல், முஸ்லிம் ஆண்கள், தன்னிச்சையாக, 'தலாக்' கூறி, விவாகரத்து வழங்குகின்றனர். இதனால், புகுந்த வீட்டில் இருந்து, பெண்கள் வெளியே வீசப்படுகின்றனர்; குழந்தைகளும் பாதிக்கப்படுகின்றனர். இவர் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பள்ளி தோழி என்பது குறிப்பிடத்தக்கது

கலக்கும் கார்ப்பரேஷன் பள்ளி! சீட்டுக்காக சிபாரிசு... பல மணி நேர காத்திருப்பு...

விகடன்.com கல்வியாளர்கள், சமூக நல ஆர்வலர்கள் என பல்வேறு மட்டங்களிலிருந்தும் அரசு பள்ளிகளுக்கு ஆதரவாக எழுந்த குரல்கள், தரம் உயர்த்த வேண்டும் என்ற அக்கறையான பேச்சுகள் போன்றவை சமீப ஆண்டுகளாக தமிழக அரசுப் பள்ளிகளின் ஆசிரியர்களையும் கல்வித் துறை அதிகாரிகளையும் உசுப்பிவிட்டு, அரசுப்பள்ளி மாணவர்களையும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு இணையாக 10ம் வகுப்பு மற்றும் 12 ம் வகுப்பு தேர்வுகளில் ஸ்கோர் செய்ய வைக்கிறது.

முல்லா அக்தர் மன்சூர் கொலை...தலீபான் புதிய தலைவர் அகுந்த் ஜாதா முல்லா உமர் மகனுக்கும் பதவி

காபூல், முல்லா அக்தர் மன்சூர் கொல்லப்பட்டதை அடுத்து தலீபான் தீவிரவாத இயக்கத்தின் புதிய தலைவராக மவுலவி ஹைபதுல்லா அகுந்த் ஜாதா நியமிக்கப்பட்டார். முல்லா உமர் மகனுக்கும் பதவி வழங்கப்பட்டுள்ளது. முல்லா அக்தர் மன்சூர் பலி; ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவராக திகழ்ந்து வந்தவர் முல்லா உமர். அவர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அந்த இயக்கத்தின் புதிய தலைவராக கடந்த ஆண்டு ஜூலை மாதம் 29-ந் தேதி முல்லா அக்தர் மன்சூர் தேர்வு செய்யப்பட்டார். அவர் ஆப்கானிஸ்தானில் தலீபான் தீவிரவாதிகள் தொடர்ந்து தீவிரவாத தாக்குதல்கள் நடத்த வழிநடத்தி வந்தார். இந்த தாக்குதல்களில் அப்பாவி மக்களுடன், ஆப்கானிஸ்தான் படை வீரர்களும், அமெரிக்க கூட்டுப்படை வீரர்களும் ஏராளமாக பலியாகினர். மேலும் ஆப்கானிஸ்தான் அரசு, தலீபான்களுடன் சமாதான பேச்சு நடத்துவதற்கும் அவர் தடையாக இருந்து வந்தார்.

10-ம் வகுப்பில் 1,038 அரசுப் பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி


கோப்புப் படம்: எம்.வேதன்
கோப்புப் படம்: எம்.வேதன்

10-ம் வகுப்பு தேர்வில் 1,038 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளதாக பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக அரசின் பல்வேறு சிறப்புத் திட்டங்களின் மூலம் அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஊக்குவித்து கல்வி அளித்ததன் விளைவாகவும், ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்புப் பயிற்சிகளாலும், இந்த ஆண்டு 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசுப்பள்ளிகள் 90.2 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளன.

ஆந்திரா கோயில்களின் வருவாய் 27% அதிகரித்துள்ளது... சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் உள்ள கோயில்களின் வருவாய் 27% அதிகரித்துள்ளது. இதற்கு ‘பாவம் செய்பவர்கள் அதிரித்துள்ளதே காரணம்’ என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நகைச்சுவை தொனியுடன் விளக்கம் அளித்துள்ளார். இன்று விஜய்வாடாவில் தொடங்கிய 2 நாள் மாவட்ட ஆட்சியர்கள் மாநாட்டில் துவக்க உரையாற்றிய ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு நகைச்சுவை உணர்வுடன் கூறும்போது, “மக்களில் பலர் நிறைய பாவங்கள் செய்கின்றனர், பாவத்திலிருந்து விடுபட கோயில்களுக்குச் சென்று காணிக்கை செலுத்துகின்றனர். இதனால் கோயில்களின் வருமானம் அதிகரித்துள்ளது. ஆனால் அதே வேளையில் பலர் சபரிமலைக்கு மாலையிட்டுக் கொண்டு மது அருந்துவதை நிறுத்தி விடுகின்றனர், அதாவது 40 நாட்களுக்கு மதுவை ஒழித்து விடுகின்றனர். இதனால் நம் மதுவிற்பனை குறைந்துள்ளது” என்றார்.

எஸ் ஆர் பிக்கு ராஜ்யசபா எம்பி... வாசன் கோஷ்டிக்கும் ஏனைய கட்சிகளுக்கு சிக்னல்! வந்தால் எலும்பு கிடைக்கும் .

எஸ்.ஆர்.பி.,க்கு எம்.பி., பதவி தந்து வாசனுக்கு புத்தி புகட்டிய ஜெ., சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க.,வில் இணைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியத்திற்கு, ராஜ்யசபா எம்.பி., பதவியை, முதல்வர் ஜெயலலிதா வழங்கி உள்ளார். இதன்மூலம், 'அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற விரும்பாமல், கடைசி நேரத்தில் மக்கள் நலக் கூட்டணிக்கு ஓட்டம் பிடித்த, த.மா.கா., தலைவர் வாசனுக்கு, பாடம் புகட்டப்பட்டுள்ளது' என, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சட்டசபை தேர்தலுக்கு முன், அ.தி.மு.க., கூட்டணியில், த.மா.கா., இடம் பெற விரும்பிய து. கூட்டணி தொடர்பாக, நடத்தப்பட்ட பேச்சில், வாசனுக்கு ராஜ்யசபா எம்.பி., பதவியும், கட்சி பலத்தின் அடிப்படையில், தொகுதிகளையும் வழங்க, அ.தி.மு.க., முன்வந்தது. ஆனால், அ.தி.மு.க., தரப்பில், இரட்டை இலை சின்னத்தில், த.மா.கா., போட்டியிட வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டது.     வாசன் போன்ற பண்ணையார்கள் அரசியலில் இருப்பது பொழுது போக்கே தவிர பொது நமை கருதி அல்ல.இதையும் கூட அறிந்து கொள்ளாத சில மக்கள் இன்னும் இவர் பின்னே.மூப்பனாரலையே ஒன்றும் செய்யமுடியாதபோது வாசன் என்ன செய்ய முடியும்.இவர் தனது கட்சியை கல்லிப்பது நாளது.தொண்டர்கலேனும் வெற்றிகட்சியில் சேரலாம்.

புதன், 25 மே, 2016

ராகவா லாரன்ஸ் இலவச பள்ளி கட்டும் பணி நேற்று தொடங்கியது.

ராகவா லாரன்ஸ் ஏழை மாணவர்களின் படிப்புக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.  அவரது டிரஸ்ட் மூலம் 60 வது குழந்தைகளை அரசு பள்ளிகளிலும் 200 குழந்தைகளை தனியார் பள்ளிகளிலும் படிக்க வைத்துக் கொண்டிருக்கிறார்.தனது டிரஸ்டுக்காக பூந்தமல்லி அருகே ஒரு ஏக்கர் நிலத்தை வாங்கி இருந்தார். அந்த இடத்தில் பள்ளிக்கூடம் கட்டுகிறார். இங்கு பிரி கேஜி முதல் 5 ஆம் வகுப்பு வரை எல்லோருக்கும் இலவசக் கல்வி வழங்க முடிவு செய்து இருக்கிறார். இன்னும் வசதி வரும்போது பள்ளியை பிளஸ்– 2 வரை விரிவுபடுத்தி இலவச கல்வி வழங்க ராகவா லாரன்ஸ் முடிவு செய்துள்ளார். இந்த பள்ளியை கட்டும் பணி நேற்று தொடங்கியது.

ஒவ்வொரு வருடமும் என் டிரஸ்ட் மூலம் படிக்கிற மாணவர்களுக்கு பீஸ் கட்டுவது கஷ்டமாக இருக்கிறது.. பீஸ் கட்டுகிற காசில் பள்ளியில் ஆசிரியர்களுக்கு சம்பளம் கொடுக்கலாமே என்று தோன்றியது.

பங்களாதேஷ் இந்து தொழிலதிபர் வெட்டி கொலை

வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் படுகொலை: பணம் கொடுக்க மறுத்ததால் போதை அடிமைகள் வெறிச்செயல்வங்காளதேசத்தில் இந்து தொழிலதிபர் ஒருவர் போதை அடிமைகளால் கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. டாக்கா: வங்காளதேசத்தில் வலைதள பதிவர்கள், கட்டுரையாளர்கள், மதச்சார்பற்றவர்கள் என அடுத்தடுத்து அண்மைக்காலங்களில் கொலை செய்யப்பட்டு வருகின்றனர். இந்த கொலைகளுக்கு ஐ.எஸ் தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ள நிலையில், இன்று இந்து மதத்தை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
வங்காளதேசத்தின் வடமேற்கில் உள்ள கைபாந்தா என்ற இடத்தில் ஷூ விற்பனை செய்யும் கடை வைத்திருப்பவர் திபேஷ் சந்திரா பிரமானிக். 68 வயதான இவர் இன்று கடையில் இருந்தபோது, போதைக்கு அடிமையான நபர்கள் வந்து பணம் கேட்டு மிரட்டியுள்ளானர்.

இரண்டு பேருடன் உறவு பூண்டுவிட்டாள் ...யதார்த்த இயற்கை.. அவள் அப்படித்தான்


ருத்ரய்யா என் நண்பர். ”அவள் அப்படித்தான்” படம் எடுக்க நினைத்தபோது நாங்கள் பல முறை அது குறித்துப் பேசி விவாதித்தோம். அதில் உள்ள முக்கியப் பெண்பாத்திரம் குறித்த அவர் கருத்துகள் எனக்கு உடன்பாடாக இருக்கவில்லை. படம் வெளிவந்த பின்னும் இது குறித்துப் பல முறை பேசினோம். ஆனால் சினிமா குறித்தும், பெண்கள் குறித்தும் எங்களுக்குள் பல கருத்து மோதல்கள் இருந்தன. அவர் பெண்களைப் பெரிதும் மதித்தவர். அதனாலேயே அவர்களைக் குறித்த அவர் எண்ணங்கள் சாதகமானவைதான் என்பது அவர் எண்ணம். ஆனால் ஆதரவு என்று நினைத்துக்கொண்டு அமுக்குவதும் ஆதரிப்பவர் புரிந்துகொள்ளாத/புரிந்துகொள்ள விரும்பாத ஒடுக்குமுறைதான் என்பது என் வாதம்.

திருப்பரங்குன்ற அமரகாவியம்..... ஐந்து நாட்கள் ஆத்ம சஞ்சாரம்? லைப் சப்போர்ட் சிஸ்டம்

சட்டமன்ற உறுப்பினர் இறந்து போகிறார்.
மாவட்ட செய்தியாளர் தகவலை செய்தியறைக்கு தெரிவிக்கிறார். செய்தி ஒளிபரப்பாகிறது.; கட்சி, குடும்பம் என எல்லா தரப்பினரும் அவசரமாக மறுக்கிறார்கள்.
அவர் சிகிச்சையில் இருப்பதாக சொல்கிறார்கள்.
அவசர அவசரமாக வேறு மருத்துவமனைக்கு மாற்றுகிறார்கள்.
செய்தி நிறுவனத்துக்கும், மாவட்ட செய்தியாளருக்கு தொடர்ந்து கண்டனங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.
.முதலில் மரண செய்தியை உறுதி செய்த மருத்துவர் மொபைல் அணைத்து வைக்கப்பட்டிருக்கிறது.
நான்கு நாட்களாக தவறான செய்தியை வழங்கிவிட்டதாக அவரை வாட்டி எடுக்கிறார்கள்.
.அரசின் பதவியேற்பு வைபவத்திற்கு பிறகு மரணசெய்தி அதிகாரபூர்வமாக வெளியிடப்படுகிறது.
.இம்முறை அந்த செய்தியாளர் அந்த செய்தியைப் பற்றி பேசவே இல்லை. ஒரே செய்தியை அவரும் எத்தனைமுறைதான் சொல்லுவார்."
.தற்போது எழுதிவரும் "பொற்கால ஆட்சியின் தொடக்கத்திலேயே " என்னும் நாவலில் இருந்து ஒரு பகுதி !

அம்மாவின் தவ வாழ்வு....2016 தேர்தலில் அ.தி.மு.க வினரின் பணபட்டுவாடா

முதலமைச்சர் பதவியேற்பு விழாவிலேயே பிறவிக்குணத்தை விடாத ஜெயலலிதாவின் பழி வாங்கும் போக்கு என்ற தலைப்பில் திமுக தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 23-5-2016 அன்று சென்னைப் பல்கலைக் கழக நூற்றாண்டு மண்டபத்தில் நடைபெற்ற முதலமைச்சர், மற்றும் அமைச்சர்கள் பதவியேற்ற அரசு விழாவில், அண்மையில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில், 89 இடங்களைப் பெற்று பிரதான எதிர்க் கட்சி வரிசையிலே அமரும் தகுதியைப் பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு கூட்டத்தோடு கூட்டமாக இடம் போடப்பட்டு – அதே தேர்தலில் தோற்றுப் போன சரத்குமாருக்கு முதல் வரிசையில் இடம் போட்டு – அமர வைத்து வேண்டுமென்றே திராவிட முன்னேற்றக் கழகத்தை திட்டமிட்டு அவமானப்படுத்திய ஜெயலலிதாவைப் பார்க்கும்போது இன்னும் அவர் திருந்தவில்லை, திருந்தப்போவதுமில்லை என்று தான் தெளிவாகப் புரிகிறது! தமிழ் மக்கள் அல்லவா திருந்த வேண்டும்! இவ்வாறு கூறியுள்ளார்

மருத்துவ நுழைவு தேர்வு.. மோசடி? சமசீர்கல்விக்கு எதிராக கல்வி தொழிலதிபர்கள் + மத்திய மாநில உயர்தர வர்க்கம்...

தனியார் பள்ளிகளுக்கு ஈடாக போட்டிப் போட்டு, அவர்களுக்கு 'டஃப்'  கொடுக்கும் அளவிற்கு அரசுப் பள்ளிகள் முன்னேறி வருவதுதான்,  கல்வி தொழிலதிபர்களுக்கு காய்ச்சலை ஏற்படுத்துகிறது. அரசுப் பள்ளி மாணவர்களால் முதல் இடத்தை பிடிக்க முடிந்தாலும்,  அவர்கள் செய்தித்தாளில் ஒரு பக்க அளவில் விளம்பரம் கொடுப்பதுமில்லை, கொடுக்கவும் முடிவதில்லை. அதனால்தான் அரசு பள்ளிக்கு இழப்பு ஏற்படுகிறது.  தமிழகத்தில் மருத்துவம் பயில விரும்பும் மாணவர்கள் இந்த ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம் காரணமாக கட்டாய நுழைவுத் தேர்வு எழுதுவதிலிருந்து தப்பித்து விட்டனர். ஆனால் அடுத்த ஆண்டு நிலைமை எந்த மாதிரி இருக்கும் என்பது தெளிவாக இல்லை. இந்த சூழலில்   சமச்சீர் கல்வி திட்டத்தின் கீழ் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளின் எதிர்காலம் என்னவாகுமோ என பதைபதைத்துக்கொண்டிருக்கின்றனர். 
இது தவிர ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் சேரும் மாணவர்களில் பெரும்பாலானோர் சிபிஎஸ்சி போன்ற மத்திய கல்வி வாரிய திட்டத்தின் கீழ் பயில்பவர்களே என வெளியாகும் தகவல், ' தவறு செய்துவிட்டோமோ... நம் குழந்தையையும் சிபிஎஸ்சி போன்ற மத்திய கல்வி வாரிய திட்டத்திலேயே சேர்த்திருக்ககாலாமோ...' என குழம்பி தவிக்கின்றனர்.

டெல்லியில் கொங்கோ மாணவர் அடித்து கொலை .. கறுப்பின மாணவர்களுக்கு எதிராக நிறவெறி தாக்குதல்கள்


டெல்லியில் காங்கோ மாணவர் படுகொலை: ஆப்பிரிக்க தூதர்கள் போர்க்கொடி - நடவடிக்கை எடுப்பதாக சுஷ்மா உறுதிஆப்பிரிக்கர்களுக்கு எதிராக தொடரும் வன்முறை சம்பவங்களை அடுத்து, இந்தியா ஏற்பாடு செய்திருந்த ஆப்பிரிக்க தினத்தைப் புறக்கணிக்க போவதாக ஆப்பிரிக்கத் தூதர்கள் தெரிவித்துள்ளனர். புதுடெல்லி டெல்லியில் முதுகலைப் பட்டப்படிப்பு படித்து வந்த மசுண்டா கிட்டாடா ஆலிவர் என்ற ஆப்பிரிக்க மாணவர், கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டோவில் ஏற முயன்றபோது ஏற்பட்ட வாக்குவாதத்தை அடுத்து மூன்று நபர்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் குறித்து ஆராய்ந்த இந்தியாவில் உள்ள ஆப்பிரிக்கத் தூதர்கள், இந்தப் படுகொலைக்கு கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும், இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ஆப்பிரிக்கர்களுக்கு எதிராக நடந்த வன்முறை சம்பவங்களைக் குறிப்பிட்டு, இந்த சம்பவங்கள் குறித்து முறையான நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை, இந்த சம்பவங்களுக்குப் பொறுப்பானவர்கள் தண்டிக்கப்படவுமில்லை என்று சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

வீழ்த்தப்பட்ட வி.ஐ.பி-க்கள் - நடந்தது என்ன? திருமாவுக்கு விஜயகாந்த் ஓட்டுக்கள் விழவே இல்லை?

விகடன்.காம் : மாற்று அணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த், ‘மாற்றம்... முன்னேற்றம்’ என்று வசனம் பேசிய அன்புமணி, ‘தமிழன் வாக்கு தமிழனுக்கே’ என்று முழங்கிய சீமான்... என நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மண்ணைக் கவ்விய வி.ஐ.பி-க்களின் பட்டியல் சற்று நீளமானதுதான். விளம்பரம் பலிக்கவில்லை!‘மாற்றம்... முன்னேற்றம்... அன்புமணி’ என்ற போஸ்டர்கள், நாளிதழ்களில் விளம்பரங்கள் என வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர், பா.ம.க-வின் முதல்வர் வேட்பாளர் அன்புமணி.முதல்நாள் முதல் கையெழுத்து.. ஏழாம் நாள் சிப்காட் கையெழுத்து என்று ஹைடெக் மேடையில் பேசிய பேச்சுக்கள் எல்லாம் தம்மை முதல்வர் நாற்காலியில் அமர்த்திவிடும் என்று நம்பிய அன்புமணி, பென்னாகரம் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் இன்பசேகரனிடம் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். 
வெற்றி நமக்குத்தான் என்ற நினைப்பில் பிரசாரத்துக்கு அதிகம் வரவில்லை.

பிரவீன் குமாரின் லஞ்சம் ஊழல் அம்பலம்... இரண்டு தேர்தல்களில் ஜெயலலிதாவுக்கு வெற்றியை களவாடி கொடுத்தது இவன்தான்!

இந்த புகை படத்தை பாருங்கள் திரு பிரவீன் குமார் அவர் கையொப்பம் இட்ட ஆவணம் அதில் அவருக்கு ADMK தமிழக அரசு \ வீட்டை தந்து உள்ளது. யாருக்கு ?? ஏற்கனவே இரண்டு மனையும் ., ஒரு வீட்டையும் வைத்து இருந்தவருக்கு .இதுவே குற்றம் ..சரி மேல வருவோம் Noida வில் ருபாய் 35.25 லட்சம் கொடுத்து 28/7/2011 இல் வீட்டை வாங்கியவர் இதற்குள் 34.90 லட்சம் கட்டி விட்டார் அது மட்டும் இல்லை இதே நேரத்தில் சென்னையில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் சுமார் 85 லட்சம் உள்ள விட்டை... bid dated 10/9/2012 தருகிறது .. இதிலும் இவர் ஜன 2014 வரை இங்கயும் 40 லட்சம் கட்டி விட்டார் அடேயப்பா சுமார் 26 மாதத்தில் 74.90 லட்சம் கட்டி விட்டார் ..அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டுகிறார் .. எப்படி சம்பளம் 75,300 ருபாய் மட்டுமே வாங்கி கொண்டு ..கட்டுகிறார் என்று . இதில் ஜெயலலிதாவிற்கு பங்கு இல்லை என்றால் பிரவீன்குமார் மீது வருமானத்திற்கு மீறிய சொத்துக்களை வாங்கிய வழக்கினை இவர் மீது ஜெயலலிதா தொடுப்பாரா..?  முகநூல் உபயம்

திருப்பரங்குன்றம் அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் காலமானார்

மதுரை : திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., சீனிவேல் இன்று காலை மாரடைப்பால் காலமானார். கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், இன்று காலை உயிரிழந்தார். இவர், நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் மணிமாறனை விட 22,992 ஓட்டுக்கள் கூடுதலாக பெற்று வெற்றி பெற்றார்.
65 வயதாகும் எஸ்.எம்.சீனிவேல், கடந்த 25 ஆண்டுகளாக அதிமுக ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார். 2001 ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பில் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற சீனிவேல், 2006ம் ஆண்டு வரை திருப்பரங்குன்றம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்து வந்தார்.

சிவகங்கை மதகுபட்டியில் கலவரம்; 94 பேர் கைது.. முத்தரையர் சதயவிழா...

சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் நேற்றுமுன்தினம் போலீசாருக்கும், கிராமத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் 498 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 94 பேரை கைது செய்தனர்.< முத்தரையர் சதய விழா சிவகங்கையை அடுத்த மதகுபட்டி கீழத்தெருவில் மன்னர் சுவரன் மாறன் பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா நேற்றுமுன்தினம் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை நடத்த போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், விழா நடத்தப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மதகுபட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தூர்பாண்டின், அங்கு சென்று விழாவுக்கு ஏற்பாடு செய்த 5 பேரை மதகுபட்டி போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து வந்தார். இதனைத்தொடர்ந்து அவர்கள் 5 பேரையும் விடுவிக்கக் கோரி அந்த கிராம மக்கள் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அப்போது, கிராமத்தினருக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து கிராம மக்கள் மதகுபட்டி போலீஸ் நிலையம் முன்பு சிவகங்கை-திருப்பத்தூர் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழகத்துக்கு ஒரு ஸ்மார்ட் சிட்டியும் கிடையாது . அதிகாரிகள் அதிமுகவின் பிரசார ஏஜெண்டுகளாக இருந்ததன் விளைவு

2வது பட்டியலில் தேர்வான நகரங்கள்
 1. லக்னோ, உத்தர பிரதேசம்
2. பாகல்பூர், பீஹார்
3. நியூடவுன், கோல்கட்டா, மேற்கு வங்கம்
4. பரிதாபாத், ஹரியானா
5. சண்டிகர்
 6. ராய்ப்பூர், சத்தீஸ்கர்
 7. ராஞ்சி, ஜார்க்கண்ட்
8. தர்மசாலா, இமாச்சல பிரதேசம்
 9. வாரங்கல், தெலுங்கானா
10. பனாஜி, கோவா
 11. அகர்தலா, திரிபுரா
12. இம்ப்பால், மணிப்பூர்
13. போர்ட்பிளேர், அந்தமான் - நிகோபர் தீவுகள்
ஸ்மார்ட் சிட்டி' போட்டியில் தமிழகம் 'அவுட்': அதிகாரிகளின் மெத்தனத்தின் விளைவு< 'ஸ்மார்ட் சிட்டி' திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் போட்டியில், மத்திய அரசு வெளியிட்ட, 13 நகரங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த, ஒரு நகரம் கூட இடம்பெறவில்லை. இதனால், இந்த திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் பின் தங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

மாயாவதிக்கு 150 சிலைகள்.... உபியிலுமா அம்மா வழிபாடு? வெளங்கிடும்?

உ.பி.,யில் மாயாவதிக்கு 150 சிலைகள்: அட்டகாசமான பிரசாரம் ஆரம்பம் லக்னோ: உத்தரபிரதேச மாநில சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், பிரசாரத்திற்காக, மாயாவதியின், 150 உருவச் சிலைகளை வடிவமைக்கும் பணியில், பகுஜன் சமாஜ் கட்சியினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். உத்தரபிரதேசத்தில், முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையில், சமாஜ்வாதி ஆட்சி நடக்கிறது. அங்கு, அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து, அனைத்து கட்சிகளும், தேர்தல் பணிகளை இப்போதே துவங்கிஉள்ளன. பிரசார திட்டம், வேட்பாளர் தேர்வு, ,
ஆலோசனை கூட்டம் என, இப்போதே, அனல் பறக்கிறது. ஆனால், தற்போது மாநிலத்தில் எதிர்க்கட்சியாக இருக்கும் பகுஜன் சமாஜ், பிரசாரத்தை துவங்கும் முன், கட்சித் தலைவர் மாயாவதியின் சிலையைமாநிலம் முழுவதும் முக்கிய பகுதிகளில் நிறுவ நடவடிக்கை எடுத்து வருகிறது.

5 பாக்., ராணுவ அதிகாரிகளுக்கு தூக்கு? அமெரிக்க கப்பலை இஸ்லாமிய பயங்கரவாதிகளுடன் சேர்ந்து தகர்க்க சதி

5 Navy Officers Sentenced to Death in Pakistan for Trying to Attack US Warship The officers were convicted of planning and orchestrating the September 6, 2014, attack on the Karachi Naval Dockyard located at Pakistan’s Arabian Sea coast. The attack was thwarted by Pakistani military personnel with purportedly two attackers killed and four arrested alive (some sources cite 10 killed, including four rogue naval officers). The attackers allegedly attempted to hijack the F-22P Zulfiquar-class frigate Zulfiqar, the lead ship of its class, with the intention of using the ship’s missiles to attack a U.S. Navy refuel vessel in the Arabian Sea (other sources claim that the target was a U.S. aircraft carrier). இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் கடற்படை அதிகாரிகள் 5 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ஐ.எஸ்., பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அந்நாட்டு ராணுவ கோர்ட் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக அந்நாட்டு பிரபல செய்தி நிறுவனமான டான் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது: கடந்த 2014 செப். 6 ல் பாகிஸ்தானில் உள்ள கடற்படை தளத்தில் ஐ.எஸ்., பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் ஐ.எஸ்., சுக்கு உதவியதாக 5 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற மேஜர் சையீதுஅகமது கூறுகையில்: எனது மகன் அகமது மற்றும் 4 அதிகாரிகள் மீதான குற்றம் தொடர்பாக ரகசியமாக விசாரிக்கப்பட்டு ரகசிய தீர்ப்பு அளிக்கப்பட்டடுள்ளது.

பொது நுழைவு தேர்வு இந்த ஆண்டு இல்லை . ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, மஹாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள்

எம்.பி.பி.எஸ்., உள்ளிட்ட இளங்கலை மருத்துவ படிப்புக்கான, தேசிய நுழைவுத் தேர்வில் இருந்து, மாநிலங்களுக்கு ஓராண்டுக்கு விலக்கு அளிக்கும் அவசர சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி நேற்று ஒப்புதல் அளித்தார். இதையடுத்து, இந்த ஆண்டு, தமிழக மாணவர்களுக்கு பொது நுழைவுத் தேர்வு இல்லை
என்பது அவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.'நாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. 'இந்த நுழைவுத் தேர்வை இந்த ஆண்டே நடத்த உத்தரவிட வேண்டும்' என, தொடரப்பட்ட வழக்கில், 'மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதி களில் இரண்டு கட்டங்களாக தேசிய அளவி லான பொது நுழைவுத் தேர்வை நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

ஜெயலலிதா : மாநில மேம்பாட்டுக்கு இணைந்து பணியாற்ற திமுக முன்வரும் என்று எதிர்பார்க்கிறேன்

சென்னை: தமிழகத்தின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்ற தி.மு.க.,வும் பொருளாளர் ஸ்டாலினும் முன் வருவார்கள் என எதிர்பார்க்கிறேன். பதவி ஏற்பு விழாவில், அவரையோ, தி.மு.க.,வையோ அவமதிக்கும் எண்ணமில்லை எனவும் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.முதல்வராக ஜெயலலிதா 6வது முறையாக நேற்று பதவி ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் மற்றும் அக்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர். அங்கு ஸ்டாலினுக்கு பத்தாவது வரிசையில் இடம் அளிக்கப்பட்டிருந்தது. இதற்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்திருந்தார். தி.மு.க.,வை, ஜெ., திட்டமிட்டு அவமானபடுத்தியதாக குற்றம்சாட்டியிருந்தார்.இந்நிலையில் இன்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
பதவியேற்பு விழாவில் ஸ்டாலின் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. விழாவில் பங்கேற்றதற்காக ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்

ஐ.எஸ். பயங்கரவாத வீடியோவில் கடலூரை சேர்ந்த 2 தமிழர்கள், 11 இந்தியர்கள்..

புதுடில்லி: இணையதளத்தில், கடந்த வாரம், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பு வெளியிட்ட வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளனர். இதுகுறித்து, மூத்த அரசு அதிகாரி கூறியதாவது: கடந்த வாரம், 'தி லேண்ட் ஆப் ஹிந்த்: பிட்வீன் பெய்ன் அண்ட் ஹோப்' என்ற பெயரில், ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பின் பிரசார வீடியோ, இணையதளத்தில் வெளியானது. 22 நிமிடம் ஓடக்கூடிய இந்த வீடியோவில், தமிழகத்தை சேர்ந்த இருவர் உட்பட, 11 இந்தியர்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தில், கடலுார் மாவட்டத்தை சேர்ந்த, ஹாஜா பக்ருதீன் உஸ்மான் அலி, ஐ.எஸ்., வீடியோவில் இடம்பெற்றுள்ளான். இவனும், குடும்பத்தினரும், ஆறு ஆண்டுக்கு முன், சிங்கப்பூரில் குடியேறினர். 2013, நவம்பரில், மனைவி, மூன்று குழந்தைகளுடன், ஹாஜா பக்ருதீன், சிரியாவுக்கு சென்று, போரில் பங்கேற்க முயன்றுள்ளான். ஆனால், ஐ.எஸ்., இயக்கத்தினருடன், அவனால் தொடர்பு கொள்ள முடியாததால், மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி வந்துள்ளான். பின், 2014, ஜனவரியில், ஹாஜா பக்ருதீன், சென்னையிலிருந்து, சிரியா சென்றுள்ளான். அது முதல், ஐ.எஸ்., இயக்கத்தில், அவன் தீவிரமாக செயல்பட்டு வருகிறான்.

ஜெயலலிதாவின் முதல் 5 நடவடிக்கைகள்: வைகோவின் வரவேற்பும் யோசனைகளும்

கைத்தறி நெசவாளர்களுக்கு 200 யூனிட்டுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் என்றும், விசைத்தறிக்கு 750 யூனிட்டுகள் என்றும் உயர்த்தி இருப்பது, திருமண உதவி திட்டத்தின் கீழ் பெண்களுக்கு வழங்கப்படும் 4 கிராம் தங்கம், 8 கிராம் என்று உயர்த்தி இருப்பதும் வரவேற்புக்கு உரியது." டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், "டாஸ்மாக் மதுக்கடைகள் பகல் 12 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் வகையில் நேரத்தைக் குறைக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியான மதுவிலக்கு என்று முதல்வர் கொடுத்த வாக்குறுதி உண்மையிலேயே நடைமுறைக்கு வரும்.   அண்ணாச்சி மறுபடியும் பச்சை தலைப்பாகை (ஜெயாவுக்காக புதன் கிரக சாந்தி ) கட்டிட்டார்.. ஊடல் முடிந்து மீண்டும் கூடல் கெஞ்சல் ஆரம்பம். 

Breaking News: அதிகாலை டாஸ்மாக் விற்பனை... ரவுடிகளுக்கு பம்பர் பரிசு..

WhatsApp-Image-20160524(2)தவியேற்ற முதல் நாளிலேயே டாஸ்மாக் கடைகளின் நேரத்தை குறைத்து மதியம் 12 மணிக்குத்தான் விற்பனை ஆரம்பம் என்று ஜெயா அறிவித்தார். மொத்த கடைகளில் 500 கடைகளை குறைத்தும் அவர் உத்தரவிட்டதை ஊடகங்கள் மாபெரும் சாதனையாக வெளியிட்டிருந்தன.
மீனை வெறுப்பதாக பூனை என்னதான் சீனைப் போட்டாலும் கவிச்சியின்றி அம்மா கட்சியினர் வாழ முடியுமா என்ன? ஏற்கனவே டாஸ்மாக் கடைகளில் உரிய நேரத்தை தாண்டியும், முன்னரும், விடுமுறைகளின் போதும் திருட்டுத்தனமாக அதாவது பார்களில் பகிரங்கமாக சரக்கு விற்பது வாடிக்கையான ஒன்று.
இன்று 24.05.2015 காலை சென்னையில் நடைப் பயிற்சிக்கு போன தோழர் ஒருவர், நகரின் மையப்பகுதி ஒன்றில் டாஸ்மாக் கடையருகே உள்ள பெட்டிக்கடையில் இன்று முதல் விற்பனை நேரம் குறைக்கப்பட்டிருப்பதால் விற்பனை குறையுமா?” என்று விசாரித்திருக்கிறார். கடைக்காரரோ சிறிது நேரம் சுற்றிப் பார்த்து விட்டு அவரது கடை அருகே உள்ள தேநீர்க்கடையைத் தாண்டி காலியாக நிற்கும் கையேந்தி பவன் வண்டி அருகே சரக்கு விற்பனை நடைபெறுவதாக தெரிவித்தார்.

செவ்வாய், 24 மே, 2016

ராதாபுரம் அப்பாவு கோரிக்கை... அதிமுகவின் இன்பதுரையை பதவி ஏற்க அனுமதிக்க கூடாது

ராதாபுரம் தொகுதியில் பதிவான அஞ்சல் வாக்குககளை மீண்டும் எண்ண வேண்டும். அதுவரை அதிமுகவின் இன்பதுரையை எம்எல்ஏ பதவியேற்க அனுமதிக்க கூடாது என தலைமை தேர்தல் அதிகாரியிடம் திமுக வேட்பாளர் அப்பாவு மனு அளித்துள்ளார்.
ராதாபுரம் திமுக வேட்பாளர் அப்பாவு அளித்துள்ள மனுவில்,‘ ராதாபுரம் தொகுதியில் 49 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுகவின் இன்பதுரை வெற்றி பெற்றார். அந்த தொகுதியில் எனக்கு ஆதரவாக 300 அஞ்சல் வாக்குகள் பதிவாகியிருந்தன. எனவே, அஞ்சல் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும் என தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் கோரினேன்.

வாணியம்பாடி ரவுடிபெண் நிலோபர் தொழிலாளர் நல அமைச்சர்.. ROWDY Nilofer Kafeel Minister of Labour TN

சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டபோது, அதிமுக குண்டர்களுக்கு தலைமையேற்று கடைகளையும் வாகனங்களையும் உடைத்து வன்முறை வெறியாட்டம் நடத்திய அப்போதைய வாணியம்பாடி நகராட்சித் தலைவராக இருந்த
நிலோபர் கபில் என்பவர் தான் தற்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு உள்ள தகுதி அடிப்படையில் குண்டர்கள் நலத்துறை அமைச்சராக்கினால் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்

இந்தியா ஈரான் இடையே 10 ஒப்பந்தங்கள்.... பிரதமர் மோடி அதிபர் ஹசன் ரூஹாணி... .

டெஹ்ரான்,:ஈரான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானியை சந்தித்து பேசினார். அப்போது, வரலாற்று சிறப்புமிக்க, 'சபாஹர்' துறைமுகம் உள்ளிட்ட மிக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
மேற்கு ஆசியாவில் உள்ள எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் ஈரானும் ஒன்று. இந்தியா, பெட்ரோலிய தேவையை பெருமளவில் பூர்த்தி செய்து வந்ததுடன், அந்நாட்டுடன் நீண்ட கால கலாசார உறவையும் கொண்டிருந்தது. அந்நாடு மீது ஐ.நா., விதித்த பொருளாதார தடையால், பல ஆண்டுகளாக வர்த்தகம் செய்ய முடியாத நிலையில் இந்தியா இருந்தது. தற்போது தடை நீக்கியதால், புதிய வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளன.

சீனா பீகார் வரை ரெயில் பாதை அமைக்க திட்டம் A train from Beijing to Bihar

A train from Beijing to Bihar? China wants to extend its Nepal rail link to India. A train from Beijing to Bihar
பீகார் வரை ரெயில் பாதையை அமைக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அந்நாடு அரசின் அதிகாரபூர்வ பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. திபெத் வழியாக நேபாளத்திற்கு சாலைகள் மற்றும் ரயில் பாதையை அமைத்து ஆதிக்கத்தை அதிகரித்து வரும் சீனா தற்போது இந்தியாவின் பீகார் மாநிலம் வரை நீட்டிக்க சீனா விருப்பம் தெரிவித்து உள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. திபெத்திலிருந்து நேபாளத்தின் ரசுவாகதி வரை ரயில் பாதை அமைக்க இரு நாடுகளும் ஆலோசனை நடத்தியுள்ளன. இந்த திட்டம் 2020ல் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ரயில்பாதையை நேபாள எல்லையில் உள்ள பீஹாரின் பிர்குஞ்ச் வரை நீட்டிக்க சீனா திட்டமிட்டுள்ளதாக செய்தி வந்துள்ளன. இந்த ரயில் பாதை அமைக்கப்பட்டால், பீஹார் மாநிலத்திலிருந்து சீனாவுக்கு கோல்கட்டா வழியாக வர்த்தகம் செய்வதை விட எளிதானது என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. dinamani.com

விஜயகாந்த் :தோல்வியால் துவண்டு விடாதீர்!' மா.செ.,க்களுக்கு அறிவுரை

தேர்தல் தோல்வியால், துவண்டுவிட வேண்டாம்' என, மாவட்ட செயலர்களுக்கு, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த் அறிவுரை கூறியுள்ளார். சட்டசபை தேர்தலில், மக்கள் நலக் கூட்டணியுடன் சேர்ந்து, 104 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க., படுதோல்வி அடைந்தது. உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் உட்பட, அனைத்து வேட்பாளர்களும், 'டிபாசிட்' இழந்துள்ளனர். இந்த தேர்தலில் கிடைத்த மிகப்பெரிய தோல்வி,அக்கட்சியினரை சோகத்தில் மூழ்கடித்து உள்ளது. வேட்பாளர்களாக போட்டியிட்ட பலரும், கடன் நெருக்கடியில் சிக்கும் நிலையில்உள்ளனர்.  இப்போது சுப்பிரமணியம் சாமி  பிரேமா அண்ணி கிட்ட என்ன சொல்றாரு ?