சனி, 8 அக்டோபர், 2011

யாழ்ப்பாண பெண்ணின் பிரித்தானிய குதிரை பரீட்சை எழுத 500 ஸ்டேலிங்

பிரித்தானியாவில் குடியேற்றம் தொடர்பான பரீட்சையினை எழுதுவதற்கு சட்டவிரோதமாக வேறொரு ஆண்   நபரை  அனுப்பி  வைத்த இலங்கைப் பெண் ஒருவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.    குறித்த மோசடிக்கு துணை  போன ஆணுக்கும் சிறைத் தண்டனைவிதிக்கப்பட்டுள்ளது.
ரெஜினோல்ட் அந்தனி என்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த ஆண் இவ்வாறு பரீட்சைகளுக்கு தோன்ற போலி சாரதி அனுமதிப் பத்திரத்தையும் அதிகாரிகளிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை, இவ்வாறு குறித்த நபரை சட்டவிரோதமாக பரீட்சை எழுத  அனுப்பி வைத்த பெண் கிருஷ்ணதேவி தம்பிராஜா என இனங்காணப்பட்டுள்ளார். 

81 பேரைக் கொலை செய்த 12 வயது சிறார் போராளி புனர்வாழ்வு

தீவிரவாத அச்சம் நிலவிய 10,986 நாட்களில் என்ன நடந்தது என்று பாராமல், போரின் கடைசி 14 நாட்களில் என்ன நடந்து என்று கேள்வி எழுப்புவது வேடிக்கையாக இருப்பதாக சிறிலங்கா அரசின் அமைச்சரவைப் பேச்சாளரும், ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், 30 ஆண்டு காலமாக தீவிரவாதத்தின் பிடியில் இருந்த மக்களை மீட்ட சிறிலங்கா அதிபரின் பெயரைக் கெடுக்க சில ஊடகங்கள் முனைவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
தீவிரவாத அச்சம் நிலவிய 10,986 நாட்களைப் பற்றி – ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டது பற்றி எவரும் வாய் திறப்பதில்லை என்றும் அவர் விசனம் வெளியிட்டுள்ளார்.

காணி விபரங்களை வழங்காது பகிஷ்கரிக்கும் பிரச்சாரத்தை ஆனந்தசங்கரி

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சித்து விளையாட்டுக்ளை போட்டுடைகின்றார் வீ. ஆனந்தசங்கரி

திரு. இரா. சம்பந்தன் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கட்கு காணிகள் பதிவு சம்பந்தமாக அன்புடையீர் காணி பதிவு சம்பந்தமாக அதி மேதகு ஐனாதிபதி அவர்களுக்கு அனுப்பிய கடிதத்தின் பிரதியை இத்துடன் இணைத்துள்ளேன். இந்தக் காணி பிரச்சனை இன்று மிகப்பெரிய பிரச்சனையாக வளர்ந்துள்ளது. வடபகுதி மக்கள் இது பற்றி மிகவும் கவலையுற்றுள்ளனர். இடம்பெறர்ந்த வடபகுதி மக்களிடமிருந்து தொலைபேசி அழைப்புக்கள் தொடர்ந்து வந்து கொண்டேயிருக்கின்றன. என்னால் ஐனாதிபதிக்கு அனுப்பப்பட்ட கடிதம் பெரிதாக எதையும் சாதிக்கப்போவதில்லை. ஒரு உறுதியான நடவடிக்கையே இன்றைய தேவையாகும். காணி சம்பந்தமான விபரங்களை வழங்காது பகிஷ்கரிக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை ஆரம்பிப்பதாக பரிசீலித்துக் கொண்டிருந்த வேளையில், ஒரு சமயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இதற்கு எதாவது மாற்றுத்திட்டம் இருக்கக் கூடும் என அஞ்சி எனது ஆலோசனையை நிறுத்தி வைத்துள்ளேன்.

திமுகவிலிருந்து வெளியேறும் பரிதி?பதவியை ராஜினாமா செய்தார்!


Parithi Ilamvazhuthi
சென்னை: இதுவரை நிலமோசடி வழக்கு, ஆள் கடத்தல்- மிரட்டல் வழக்குகளால் ஆடிப்போயிருந்த திமுக வட்டாரம், அடுத்த அதிர்ச்சியை சந்திக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

திமுகவின் நீண்ட நாள் விசுவாசிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களை இழுக்கும் அல்லது கலைக்கும் வேலையை ஆளும்கட்சியினர் செய்ய ஆரம்பித்திருப்பதே அது என அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசத் தொடங்கியுள்ளனர்.
இதன் முதல் நகர்வாக, சென்னை திமுகவின் முக்கிய தூண் என வர்ணிக்கப்பட்ட, திமுக விசுவாசியும் முன்னாள் அமைச்சருமான பரிதி இளம்வழுதி திமுகவிலிருந்து விலகப் போவதாக செய்திகள் கசிந்துள்ளன.

வட்டக்கச்சியில் அதிகாலை வீட்டினில் புகுந்த ஆயுததாரிகளால் குடும்பஸ்தர் வெட்டிக்கொலை!

வட்டக்கச்சியில் வீடு ஒன்றுக்குள் நேற்று அதிகாலை புகுந்த ஆயுததாரிகள் குடும்பஸ்தர் ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். அதேவீட்டில் இருந்த பெண்ணையும் ஆயுததாரிகள் கழுத்தில் குத்திக் காயப்படுத்தி விட்டுத் தப்பிச் சென்றுள்ளனர்.
கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சியின் மாயவனூர் சிவன் கோயிலை அண்மித்துள்ள பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை நடந்த இடத்திலிருந்து சிறிது தூரத்திலேயே இராணுவக் காவலரண் ஒன்று இருக்கின்றது

மருத்துவர் ஒருவர் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக

அரசாங்க மருத்துவர் ஒருவர் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது!

அரசாங்க மருத்துவர் ஒருவர் புலிகளின் பணத்தைப் பயன்படுத்தி இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளதாக லக்பிம பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.போரின் இறுதிக் கட்டத்தின் போது முல்லைத்தீவு உண்மை நிலைமைகளை வெளிப்படுத்திய மருத்துவர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
புலிகளின் சர்வதேச வலையமைப்பினர் குறித்த மருத்துவருக்கு பணம் வழங்கியுள்ளனர்.
புலிகளின் அழுத்தங்களின் காரணமாக போலியான தகவல்களை சர்வதேச ஊடகங்களுக்கு வழங்கியதாக ஒப்புக்கொண்ட ஐந்து மருத்துவர்களில் ஒருவரே இவ்வாறு இந்தியாவிற்கு தப்பிச் சென்றுள்ளார்.
அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்கு வந்ததன் பின்னர் புலிகளின் அழுத்தங்களினால் போலியான தகவல்களை வழங்கியதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது குறித்த மருத்துவர் அறிவித்திருந்தார்.
குறித்த ஐந்து மருத்துவர்களுக்கும் பணம் வழங்கி லண்டனுக்கு அழைத்துக் கொள்ளும் திட்டமொன்றை புலிகள் முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாராதலக்ஷமன் பிரேமச்சந்திர உட்டப மூவர் பலி!


முல்லேரியா பிரதேசத்தில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஜனாதிபதியின் ஆலோசகரும் கொழும்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரன் உட்பட மூவர் உயிரிழந்தனர்.இச்சம்பவத்தில் தலையில் பலத்த காயத்துக்குள்ளான கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகருமான துமிந்த சில்வா தற்போது சிறி ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிக்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

இச்சம்பவத்தில் காயமடைந்த ஐவரில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை, தற்போது அங்கொடை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பதற்றத்தையடுத்த இன்று மாலை 3.30 மணி முதல் மறுநாள் காலை 6.00 மணிவரை பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.துப்பாக்கிப் பிரயோகம் இடம்பெற்ற இடத்தில் வாகனமொன்றுக்குத் தீவைக்கப்பட்டுள்ளது...

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான பாரத லக்ஷ்மன் பெரேரா கொல்லப்பட்டுள்ளார்.
மேலும் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், பாதுகாப்பு அமைச்சின் கண்காணிப்பாளருமான துமிந்த சில்வா படுகாயமடைந்துள்ளார்.

துமிந்த சில்வாவின் தலைப் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தத் தாக்குதல் சம்பவத்தில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஷ்மன் பெரேராவின் முன்னாள் மெய்ப்பாதுகாவரும் உயிரிழந்துள்ளார்.

America will collapse' Economic Hitman reveals shocking truths


ராசாவின் பிரஷரை எகிறவைக்கும் Reliance அப்ரூவர்

புதுடில்லி, இந்தியா: திகார் சிறையில் இருக்கும் தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதாட அனுமதிக்க வேண்டும் என்று சி.பி.ஐ. நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு நேற்று (வெள்ளிக்கிழமை) விசாரணைக்கு வந்தது. அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல், சீக்கிரமாகவே ராசாவின் கோரிக்கையை நீதிபதி தள்ளுபடி செய்துவிட்டார். இதனால் குழம்பிப் போயுள்ளது தி.மு.க. தரப்பு.
சமீப நாட்களாக ஸ்பெக்ட்ரம் வழக்கில் எதிர்பாராத திடீர் திருப்பங்கள் இடம்பெற்று வருவதால், ஆ.ராசா உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, சில விஷயங்களைச் சொல்வது அவசியம் என ராசா மற்றும் கனிமொழியின் வக்கீல்கள் திட்டமிட்டு இருந்தனராம். உச்சநீதிமன்றத்தில் ஆஜராகும்போது ராசா, முக்கியமான சில விஷயங்களை இழுத்து விடுவதாக முடிவு செய்திருந்தார் என தி.மு.க. வட்டாரங்களில் கூறப்படுகின்றன.காங்கிரசுக்கு மேலும் நெருக்கடிகளை ராசாவின் வாதம் ஏற்படுத்தக்கூடும் என்பது எல்லோரும் எதிர்பார்த்ததே. இந்நிலையில் அது தடுக்கப்பட்டுள்ளது.

இசுலாமிய “உணர்வு” பத்திரிகைக்கு ஒரு மறுப்பு!

உணர்வு என்ற வாரப்பத்திரிக்கையின் (செப். 2-8, 20011) கட்டுரையாளர் திரு. நிஜாம் அவர்களுக்கு, ஒருநாள் திடிரென்று அல்லா உள்ளுணர்வை ஏற்படுத்தினான். உள்ளுணர்வு என்றால் கடவுள் வானில் தோன்றி அறிவிப்பதை புரிந்துகொள்ளும் உணர்வு. இது எல்லோருக்கும் இருக்காது. சில அதிசக்தி படைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்கும். அப்படி நிஜாம் அவர்களுக்கு வந்த உள்ளுணர்வுதான் என்ன?
“பல பத்திரிக்கைகள் சீண்டுவதற்குக்கூட ஆள் இல்லாமல் கடைகளில் விற்பனையாகாமல் பல நாட்கள்கள் கிடக்கும்”என்ற உள்ளுணர்வுதான் அவருக்கு வந்த அற்புதம். உடல், உள்ளம் நடுங்க, வியர்த்துக்கொட்ட கொஞ்சம் நேரம் துன்ப ப்பட்ட அவர், இயல்பு நிலைக்கு திரும்பியதும் பேனாவை எடுத்தார்; எழுதினார்… ‘புத்தியிழந்த புதிய கலாச்சாரம்’ என்று பறைசாற்றினார்.
கட்டுரை கவி நயமும் இலக்கிய சுவையுடனும் இருக்க வேண்டுமல்லவா! அங்கங்கே மானே,தேனே, பொன்மானே என்று போட்டுக்கொண்டால்தானே சுவையாக இருக்கும். அதனால் ‘பழைய பேப்பர்கடைக்காரன்கூட வாங்க மறுக்கும்பத்திரிக்கை’ என்று இலக்கியச் சுவையையும் சேர்த்துக்கொண்டார். இந்து மதத்தையும், பார்பனீயத்தையும் எதிர்த்து எழுதும்போதெல்லாம் புதிய கலாச்சாரம் பிடித்தமான ஒன்றாக இருந்துவிட்டு இப்பொழுது புத்தியை இழந்துவிட்டதாக பொங்கி எழ என்ன காரணம்?

தெலுங்கானா ராகுல் காந்தியிடம் சிரஞ்சீவி வேண்டுகோள்


Chiranjeevi and Rahul Gandhi
டெல்லி: ஆந்திர மாநிலத்தில் தொடரும் தெலுங்கானா பிரச்சனையில் உடனடி முடிவு எடுக்குமாறு ராகுல்காந்தியிடம், சிரஞ்சீவி பேச்சுவார்த்தை நடத்தினார்.

தெலுங்கானா பிரச்சனை ஆந்திர முழுவதும் பூதகரமாக வெடித்து, இன்று 26 நாளாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில் நடிகரும், சமீபத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தவருமான சிரஞ்சீவி, காங்கிரஸ் பொது செயலர் ராகுல்காந்தியை சந்தித்து பேசினார்.

கிறீஸ் பூதம் பழகிவிட்டதா?அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டில் போர் நிறைவடைந்து அமைதிச் சூழல் திரும்பியிருக்கின்ற நிலையில் சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்தவேண்டியது அனைவரதும் கடமையாகும்-டக்ளஸ் தேவாநந்தா!

நாட்டில் போர் நிறைவடைந்து அமைதிச் சூழல் திரும்பியிருக்கின்ற நிலையில், சிவில் நிர்வாகத்தைப் பலப்படுத்தவேண்டியது அனைவரதும் கடமையாகும் என்று, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.பொதுமக்கள் பாதுகாப்புக் குழுக்களை அமைப்பது தொடர்பாக யாழ் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கூட்டத்தை தலைமையேற்று உரையாற்றும்போதே அவர் இவ்வாறு அங்கு தெரிவித்தார்.

'இது யுத்த காலம் அல்ல. எனவே சிவில் நிர்வாகம் பலப்படுத்தப்படவேண்டும். அதற்கான உத்தரவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வழங்கியுள்ளார். இந்தப் பிரதேசத்தில் அதிகம் இருக்கும் ஒரு அமைச்சர் என்ற வகையில் உரிய முறையில் சிவில் நிர்வாகத்தை இங்கே ஏற்படுத்தவேண்டிய பொறுப்பு எனக்கு உண்டு' என்றார் அவர்.

Anna ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள்! - பால் தாக்கரே


Bal thackerey and Anna Hazare
மும்பை: ஊழலை ஒழிக்கப் புறப்பட்டுள்ளதாகக் கூறிக் கொள்ளும் அன்னா ஹஸாரேவுக்கு தொழிலதிபர்கள் பணத்தைக் கொட்டுகிறார்கள் என்று குற்றம்சாட்டியுள்ளார் சிவசேனா தலைவர் பால் தாக்கரே.
மேலும், 'இந்த நாட்டில் ஊழலை ஒழிக்க முடியாது. காரணம் இங்கே இருப்பவை பெரிய திமிங்கிலங்கள். ஹஸாரேயின் வலை கிழிந்து விடும்," என்றும் அவர் கூறியுள்ளார்.

அநன்யாவின் அஜீத் சூர்யா கனவு!

    பொதுவாக நாயகிகள் ஒரு படம் நடித்து ஹிட்டாகிவிட்டால் அடுத்து அஜீத், சூர்யா, விக்ரம் என பெரிய ஹீரோக்கள் தான் கனவில் வருவார்கள். அதே போல் அநன்யாவுக்கும் அந்த ஆசை வந்துள்ளது.
நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அநன்யா. சீடன் படத்தில் தனுசுடன் நடித்தார். சீடன் மலையாலத்தில் ஹிட் படம். ஆனால் தமிழில் தோல்வியடைந்தது.
சமீபத்தில் வெளியான எங்கேயும் எப்போதும் படத்தில் இரண்டு நாயகிகளில் ஒருவராக நடித்துள்ளார் அநன்யா. இப்படம் ஹிட்டானதால் அனன்யாவுக்கு மேலும் தமிழ் பட வாய்ப்புகள் குவிகிறது. அவரும் சந்தோஷத்தில் இருக்கிறார்.
இதுபற்றி அனன்யா கூறும்போது மலையாளத்தில் நான்கு படங்கள் கைவசம் உள்ளன. ஒரு தமிழ் படத்திலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடிக்கிறேன். எங்கேயும் எப்போதும் படம் ஹிட்டானது மகிழ்ச்சி அளிக்கிறது. இப்படத்துக்கு பின் எனக்கு நிறைய தமிழ் பட வாய்ப்புகள் வருகின்றன. அஜித், சூர்யா போன்றோருடன் நடிக்க ஆர்வம் உள்ளது என்றார்.

தொடர் போராட்டத்தால் ஆந்திராவில் அமலாகிறது ஜனாதிபதி ஆட்சி?

ஆந்திராவில் தனி தெலுங்கானா கோரி, 25வது நாளாக போராட்டம் தொடர்வதால், அங்கு சகஜ வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமையை சமாளிக்க, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவது குறித்து ஜனாதிபதி, பிரதமருடன் விவாதிக்க மாநில கவர்னர் நரசிம்மன், டில்லி விரைந்துள்ளார்.
ஆந்திராவில் ஐதராபாத் உள்ளிட்ட 10 மாவட்டங்களைப் பிரித்து தனி தெலுங்கானாவை உருவாக்கக் கோரி, தெலுங்கானா அரசியல் கூட்டு நடவடிக்கை குழுவினர் கடந்த 25 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜெயலலிதா முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார் நடிகர் தியாகு!


அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் தி.மு.க.வில் இருந்து விலகிய திரைப்பட நடிகர் தியாகுவும், ம.தி.மு.க.வைச் சேர்ந்த தலைமைக் கழகப் பேச்சாளர் காஞ்சி பாஸ்கரும், தனித்தனியே ஜெயலலிதாவை நேரில் சந்தித்து தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். இந்நிகழ்வுகளின் போது, கழக மகளிர் அணி துணைச் செயலாளரும், சமூக நல வாரியத்தின் தலைவருமான சி.ஆர்.சரஸ்வதி உடன் இருந்தார். ஆக மொத்தம் 61 பேர் தங்களை கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர்.

சித்திரவதைகளை எல்லாம் தாங்கேலாது. ஆனபடியாலை உங்களுக்குத் தெரிஞ்ச எல்லாத்ததையும் சொல்லுங்கோ”

புலிகளின் வதை முகாம்களில் ஒன்றரை ஆண்டுகள் துன்புற்ற தோழர் மணியம் எழுதும் அனுபவத்தொடர் (17)
17. பி.எல்.எப்.ரி அன்ரன் சந்திக்க வைக்கப்பட்டார்!
எங்களை ஏற்றிச்சென்ற அந்த வாகனம் சுமார் ஒரு மணி நேரம் ஓடிய பின்னர் ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது. எல்லோரும் இறக்கப்பட்டோம். நான் உட்பட அதில் கூட்டிவரப்பட்ட அனைவரையும் புதிய இடம் ஒன்றில் சிறை வைக்கப் போகிறார்கள் என நான் எண்ணினேன்.
எனது கண்களை மறைத்துக் கட்டியிருந்த கறுப்புத் துணியை ஒருவன் அகற்றினான். எங்கும் கும்மிருட்டாக இருந்தது. வானின் பின்பக்கத்தில் ஏற்றப்பட்டிருந்த அனைவரும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயே அதிலிருந்து இறக்கப்பட்டனர். அவர்கள் மீது ஒரு புலி உறுப்பினன் ரோச் லைற் ஒன்றின் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி நின்றான்.

பின்னர் அவர்கள் எல்லோரும் ஒருவர் தோளை ஒருவர் பிடித்தபடி நடக்க, முன்னாலும் பின்னாலுமாக சில புலிகள் அவர்களை வழி நடாத்திச் சென்றனர். ரோச் லைற் வெளிச்சத்தில் அவர்கள் எல்லோரும் நீளமாகக் கட்டப்பட்டிருந்த ஒரு கட்டிடத்துக்குள் அழைத்துச் செல்லப்பட்டனர். அந்தக் கட்டிடத்தில் அடுக்கடுக்காக ஏராளமான இரும்புச் சட்டங்களிலானான கதவுகள் இருப்பது தெரிந்தது. எனவே அது ஒரு சிறைச்சாலை எனப் புரிந்து கொண்டேன். ஆனால் என்னை அவர்களுடன் அழைத்துச் செல்லாது தனியாக வைத்திருந்தனர்.

மாகாண சபைகளுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பொலிஸ் அதிகாரம்: அரசு கவனம் செலுத்தி வருகிறது

மாகாண சபைகளுக்கு முழுமை யாக பொலிஸ் அதிகாரம் வழங்கு வது தொடர்பில் பிரச்சினை உள்ள போதும் அவற்றுக்கு ஓரளவுக்கு அதி காரம் வழங்குவது குறித்து அரசாங் கம் கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெ ல்ல தெரிவித்தார். ஏனைய மாகாண சபைகள் பொலிஸ் அதிகாரம் தேவையில்லை என்று கூறுகிற போதும், வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரம் தேவை என தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறியிருப்பது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். பொலிஸ் அதிகாரம் வழங்குவது தொடர்பில் பிரச்சினைகள் உள்ள போதும் அது தொடர்பில் கவனம் செலுத்தி யிருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பொலிஸாரின் தடுப்புக் காவலில் இருக்கையில் சந்தேக நபர்கள் கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் அமைச்சர் கருத்துத் தெரிவித்தார். இந்த விடயத்தில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதனுடன் தொடர்புடையவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்கள் சட்டத்தை கையிலெடுப்பதை அனுமதிக்க முடியாது. பொலிஸ் தடுப்புக் காவலில் சந்தேக நபர்கள் இறந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்படுகிறது. இவ்வாறான நிலைமைகள் ஏற்படுவது குறித்து கவனம் செலுத்தி எங்கு தவறு உள்ளது என்பதை அறிந்து அதனை தீர்க்க வேண்டும். பொலிஸ் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்துள்ளதா என்பது குறித்தும் ஆராய வேண்டியுள்ளது. புதிய பொலிஸ் மாஅதிபர் தனது பணியை சிறப்பாக செய்கிறார். சட்டம் சமமாகவே அமுல்படுத்தப்படுகிறது. சில தரப்பினரிடமுள்ள குழப்பும் மனப்பாங்கினாலும் பொலிஸாருக்கு எதிரான மோதல்கள் வெடிக்கிறது என்றார்.

வெள்ளி, 7 அக்டோபர், 2011

போண்டா, வடை, டீ, காபி ஓடும் ரயிலில் இனி விற்க முடியாது !சென்னை: தமிழ்நாட்டில் ரயில், ரயில் நிலையங்கள் என ரயில்வே இடங்களில் அனுமதியின்றி வியாபாரம் செய்வதை முழுமையாக தடுக்க தெற்கு  ரயில்வே முடிவு செய்துள்ளது
சென்ட்ரல் உட்பட ரயில் நிலைய வளாகங்களின் நுழைவு வாயில்களில் பழம், பூக்கடைகள் ஏராளமாக உள்ளன. பயணிகள்தான் இவர்களது வாடிக்கையாளர்கள். இந்த கடைகளில் காலை, மாலை நேரங்களில் கூட்டம் இருக்கும். இதனால் அவசரத்திற்கு ரயிலை பிடிக்க ஓடுபவர்கள், நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர்.   பெருநகர ரயில் நிலையங்களில் மட்டுமின்றி கிண்டி போன்ற புறநகர் ரயில் நிலையங்களிலும் இதுதான் நிலைமை.
இதில் மின்சார ரயில்களில் கிடைக்காத பொருட்களும் இல்லை. விற்காத வியாபாரிகளும் இல்லை.

ராசா மனு தள்ளுபடி!!உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி வாதிடக் கோரிய

டெல்லி: 2 ஜி முறைகோடு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி வாதிட அனுமதிக்கக் கோரி, சிபிஐ நீதிமன்றத்தில் ஆ ராசா தாக்கல் செய்திருந்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.
2 ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு குறித்த விசாரணையின்போது, உச்சநீதிமன்றத்தில் தானே நேரில் ஆஜராக அனுமதி அளிக்குமாறும், வழக்கறிஞர்களால் விளக்க முடியாத சில விஷயங்களை, நானே கோர்ட்டில் ஆஜராகி விளக்க விரும்புகிறேன் என்றும் தொலைத் தொடர்புத் துறை முன்னாள் அமைச்சர் ஆ ராசா மனு தாக்கல் செய்திருந்தார்.

தனித் தொகுதிகள் தேவையில்லை-விஜயகாந்த்.கொடும்பாவி எரிப்பு

மதுரை : தலித்களுக்குத் தனித் தொகுதி, பொதுத் தொகுதி என தனித் தனியாக தொகுதிகள் இருக்கக் கூடாது. அனைத்துத் தொகுதிகளையும் பொதுத் தொகுதிகளாக மாற்ற வேண்டும் என்று பேசிய தேமுதிக தலைவர் விஜயகாந்த்தைக் கண்டித்து தலித் மக்கள் விஜயகாந்த்தின் கொடும்பாவியை எரித்துள்ளனர்.தனித் தொகுதி, பொதுத் தொகுதி என்று தேவையில்லை.

ஒரே தொகுதியாக அனைத்தையும் மாற்ற வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் பேசியது பிரச்சினையாகியுள்ளது. ஏற்கனவே அக்கட்சியின் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன் பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்துப் பேசியதால் கொதிப்படைந்துள்ள தலித் மக்கள் தற்போது விஜயகாந்த்தின் பேச்சால் மேலும் கோபமடைந்துள்ளனர்.

ஸ்டீவ் ஜாப்ஸின் இறுதி நிமிடங்கள்!

பாலோ ஆல்டோ: புற்றுநோய் தன்னைத் தாக்கியது கடந்த 2004-ம் ஆண்டே ஸ்டீவ் ஜாப்ஸுக்குத் தெரிந்துவிட்டது. அதைத் தொடர்ந்து சில முறை சிகிச்சை மேற்கொண்டார். கல்லீரல் மாற்று அறுவையும் செய்து கொண்டார்.
ஆனாலும் கடந்த பிப்ரவரியிலேயே அவருக்குத் தனது இறுதி நாட்கள் தெரிந்துவிட்டன. தனது நாட்கள் எண்ணப்படுவது தெரிந்ததும், மிக நெருங்கிய நண்பர்களுக்கு மட்டும் விஷயத்தைச் சொல்லிவிட்டார்.

அந்த நண்பர்கள் மூலம் இன்னும் பலருக்கும் தகவல் பரவ, அடுத்து வந்த நாட்களில் தினசரி நண்பர்கள் அவரது பாலோ ஆல்டோ இல்லத்துக்கு வருகை தர ஆரம்பித்துவிட்டார்கள்.

சிவகாசி ஜெயலட்சுமி மீதான வழக்கில் அக். 11ல் தீர்ப்பு

Jayalakshmi
மதுரை: சிவகாசி ஜெயலட்சுமி மீது தொடரப்பட்ட நகை மோசடி வழக்கில் அக்டோபர் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்படும் என மதுரை கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

சிவகாசியைச் சேர்ந்த ஜெயலட்சுமி ஒரு காலத்தில் தென் மாவட்ட காவல்துறையில் பெரும் களேபரத்தை ஏற்படுத்தினார். போலீஸ் வேடத்தில் போய் காவல்துறையினர் பலரையும் மோசடி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
பல்வேறு வழக்குகளில் சிக்கி சிறை சென்று பின்னர் அவர் விடுதலையானார். இந்த நிலையில் அவர் மீதான நகை மோசடி வழக்கு ஒன்று நிலுவையில் இருந்து வந்தது.இந்த வழக்கில் அக்டோபர் 11ம் தேதி தீர்ப்பளிக்கப்படவுள்ளது.

ஜெயலலிதா Ph.D in ஆணவம், செருக்கு, அகம்பாவம், மேட்டிமைத்தனம், பழிவாங்குதல்

அகில இந்திய அளவில் ஓட்டுக்கட்சி அரசியலில் தனி முன்னுதாரணம் படைத்தவர் ஜெயலலிதா மட்டுமே. இதில் மாயாவதி, மம்தா பானர்ஜி போன்றோர் கூட வெகுவாக பின்தங்கித்தான் உள்ளனர். ஆணவம், செருக்கு, அகம்பாவம், மேட்டிமைத்தனம், பழிவாங்குதல் என்று எல்லா டிகிரிகளிலும் கொட்டை போட்டவர் புரட்சித் தலைவி.
அம்மா அரசவையில் அகில இந்திய தலைவர்கள் பலரும் பம்மித்தான் நடந்து கொள்வர். காங்கிரசு, பா.ஜ.க கட்சிகளுக்கு இந்திய அளவில் தனிப்பெரும்பான்மை கிடையாது என்று கூட்டணிக் கட்சிகளின் தயவில் காலந்தள்ளவேண்டிய நிர்ப்பந்தத்தில் ஜெயாவை சகித்துக் கொள்கிறார்கள்.

வாச்சாத்தி –நீ ஒரு பெண். அது போதும் எங்களுக்கு என்றனர் காவலர்கள்


“இச்சம்பவம் நடந்தபோது எனக்கு வயது 13. என்னை ஏரிக்கரைக்கு இழுத்துச் சென்று கற்பழித்தனர். நான் எட்டாம் வகுப்பில் படிக்கும் மாணவி, என்னை விட்டு விடுங்கள் என்று கதறிய போதும் அவர்கள் செவிசாய்க்கவில்லை. நீ ஒரு பெண். அது எங்களுக்குப் போதும் என்றனர் காவலர்கள்
காலையில் அரைத் தூக்கத்தில் இருந்த என்னை, என்னுடன் பணியாற்றி ஓய்வுபெற்ற மூத்த பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பினார். வாச்சாத்தி பழங்குடி மக்களின் கிராமத்தில் வனத்துறையினரும் காவல்துறையினரும் சேர்ந்து நடத்திய தாக்குதலுக்குப் பிறகு, அங்கே முதலில் சென்று செய்தி வெளியிட்ட பத்திரிகையாளர்களில் அவரும் ஒருவர். அப்போது அவர் இந்தியன் எக்ஸ்பிரசில் பணியாற்றிக்கொண்டிருந்தார். அந்த நிகழ்வுகளைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு, பத்திரிகைகளில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் தீர்ப்பு குறித்துத் தன்னுடைய கருத்துகளைத் தெரிவித்தார். நாடு முழுவதும் வாச்சாத்தி கிராம மக்களுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாடு இருக்கும் நேரத்தில் அவர் தெரிவித்த கருத்துகள் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

பரீட்சைக்கு வெற்றுத்தாள் தாய்க்கு பாடம் புகட்ட சிறுவன்

புலமை பரிசு பரீட்சையில் விடை அளிக்காது வெற்றுத்தாள்களை மட்டும் கையளித்த சிறுவன்.  தாய்க்கு பாடம் புகட்ட செய்த காரியம்.
தொலைகாட்சி பார்க்க விடாமல் விளையாட விடாமல் எந்த நேரமமுன் படிக்கு மாறு நச்சரித்த தாய்க்கு பாடம் புகட்ட எண்ணிய மகன் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசு பரீட்சைக்கு விடை அளிக்காமல் வெற்று காகிதத்தை மேற்பார்வையாளரிடம் கொடுத்துவிட்டு வந்த சம்பவம் ஒன்று தென்னிலங்கையில் நடந்துள்ளது.

ஜெ.விடம் மாற்றம் ஏற்பட்டிருக்கும் என முதல்வராக்கிய மக்கள் ஏமாற்றம்

;சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி,
பரமக்குடி துப்பாக்கிச்சூட்டில் 7 பேர் கொல்லப்பட்டனர். காவல்துறை அத்துமீறி நடந்துகொண்ட இந்தச் செயலுக்கு தமிழக காவல்துறைக்கு தலைமை தாங்குகிற முதல்வர் ஜெயலலிதா அவர்களிடம் இருந்து கண்டன குரல் வராவிட்டாலும் கூட குறைந்த பட்ச அனுதாபத்தையாவது, தேவேந்திர குல மக்கள் எதிர்பார்த்தார்கள்.

குஷ்பு: பிரசாரத்திற்குப் போகும் இடமெல்லாம் நல்ல ஆதரவு

திருச்சி: நானும் பிரச்சாரம் செய்யும் இடங்களையெல்லாம் பார்க்கிறேன். மக்களின் ஆதரவு அதிகமாக இருக்கிறது. மக்கள் நல்ல முடிவை எடுப்பார்கள் என்று எனக்கு தெரியும் என்று பேசியுள்ளார் சினிமா நடிகை குஷ்பு.

திருச்சி மேற்குத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் நடிகை குஷ்புவை இறக்கி விட்டுள்ளது திமுக தலைமை. அவரும் வேட்பாளர் கே.என்.நேருவை ஆதரித்து நேற்று தீவிரப் பிரசாரம் செய்தார். அவரை வேடிக்கை பார்க்க ஏராளமானோர் கூடி குஷ்புவின் பேச்சை ரசித்தனர்.
குஷ்பு பேசுகையில்,
சிறுபான்மையினத்தைச் சார்ந்த அண்ணன் மரியம் பிச்சை அவர்கள், எதிர்பாராத விதமாக மரணம் அடைந்த போது, அதிமுகவின் தலைமை மீண்டும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் நினைத்துக்கொண்டிருந்தார்.

விஜயகாந்த்:ரமணா படம் பார்த்தீங்கள்ள, அதேபோலத்தான் நானும்


Vijayakanth
தேனி: ரமணா படம் பார்த்தீர்கள் அல்லவா, அதேபோலத்தான் நானும். தேமுதிகவில் யாரேனும் ஊழல் செய்தால் அவர்கள் என்னிடம் இருந்து தப்பிக்க முடியாது. ஊழல்வாதிகளை விரட்டி அடியுங்கள் என்று அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

தேமுதிக தலைவர் விஜயகாந்த் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேனி மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மாணவர் படை பயிற்சி முகாமில் மாணவி உயிரிழப்பு!

ரன்தம்பே மாணவர் படை பயிற்சி முகாமில் பயிற்சியில் கலந்துகொண்ட மாணவியொருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று முன்தினம் பயிற்சிகளில் ஈடுபட்டிருந்தபோது சுகயீனமுற்றுள்ளதாக தெரிவித்து குறித்த மாணவி ஓய்வு பெற்றுக்கொண்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இரவு உணவு உட்கொண்டதன் பின்னர் நித்திரைக்குச் சென்ற மாணவி மறுநாள் விழித்தெழாததன் காரணமாக அம்பகஹபெலஸ்ஸ வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளார்.
வைத்தியசாலைக்கு கொண்டுவரப்படும் முன்னரே மாணவி உயிரிழந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ரூ.2,276 விலையில் மலிவான கம்ப்யூட்டர்: இந்தியாவில் அறிமுகம்!

புதுடெல்லி:இந்தியாவில் மாணவர்களுக்கு பாதி விலையில் கம்ப்யூட்டர்களை வழங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதைத்தொடர்ந்து `டாடா விண்ட்' என்ற கம்ப்யூட்டர் நிறுவனத்துக்கு முதல் கட்டமாக 1 லட்சம் கம்ப்யூட்டர்கள் (லேப்டாப்) உற்பத்தி செய்ய மத்திய அரசு ஆர்டர் வழங்கியது.

இந்த நிறுவனம் தயாரித்துள்ள கம்ப்ïட்டர் நேற்று டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. உலகிலேயே மிகவும் விலை குறைந்த இந்த கம்ப்யூட்டருக்கு, `ஆகாஷ்' என்று பெயரிடப்பட்டு இருக்கிறது.

குரும்பசிட்டியில் 21 வருடங்களின் பின் பொதுமக்கள் நேற்று மீளக்குடியமர்வு

  வலி.வடக்கு குரும்பசிட்டியில் 21 வருடங்களின் பின்னர் மக்கள் மீளக்குடியமர நேற்று அனுமதிக்கப்பட்டனர். bகுரும்பசிட்டி பொன்.பரமானந்தர் வித்தியாலயத்துடன் இணைந்ததாக 200 ஏக்கர் நிலப்பரப்பு மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் எவரும் கலந்துகொள்ளாமல் அரச அதிகாரிகளும், மக்கள், பாடசாலை மாணவர்கள் மட்டுமே கலந்துகொண்டனர்.

53 குழந்தை தொழிலாளர்கள் மீட்பு53 குழந்தை தொழிலாளர்கள் மீட்புடெல்லியில், குழந்தை தொழிலாளர் தடுப்புப் பிரிவு படையினரும், தன்னார்வ அமைப்புகளும் இணைந்து, சுல்தான்பூர், மங்களாபுரி உள்ளிட்ட இடங்களில் உள்ள தோல் தொழிற்சாலைகள் மற்றும் ஆயத்த ஆடை தொழிற்சாலைகளில் அதிரடி சோதனை நடத்தினர்.
அப்போது, அங்கு வேலை பார்த்துக்கொண்டிருந்த, 14 வயதுக்குட்பட்ட 53 சிறுவர், சிறுமியர் மீட்கப்பட்டனர்.

விஷாலும் திரிஷாவும் ஆசை நிறைவேறியது

விஷாலும் திரிஷாவும் மிக நெருங்கிய நண்பர்கள். ஏன்...? இவர்கள் இருவரையும் வைத்து பல கிசுகிசுக்கள் வந்துள்ளது. இவர்கள் இதுவரை சேர்ந்து நடித்ததில்லை. அப்படியிருந்தும் கிசுகிசுக்கள் வந்தது என்றால் இவர்கள் நட்பை நாம் புரிந்துகொள்ள முடியும்.


விஷால் நடித்து ஹரி இயக்கிய படம் தாமிரபரணி. இந்த படத்தில் நாயகியாக நடிக்க வேண்டியவர் திரிஷா தானாம். ஆனால் அது நடக்காமல் போனது. திரிஷாவுடன் இருக்கும் நெருக்கமான நட்பை திரையிலும் காட்ட வேண்டும் என்பது விஷாலின் நீண்ட நாள் ஆசை. அது இப்போது தான் நிறைவேறி இருக்கிறது.

ஞானவேல் ராஜாவுடன் கூட்டணி சேரும் வெங்கட்பிரபு...

Studio green signs venkat prabhu
மங்காத்தா படத்தை தொடர்ந்து டைரக்டர் வெங்கட்பிரபு அடுத்து, க்ரீன் ஸ்டுடியோ நிறுவனத்துடன் இணைந்து ஒரு புதிய படம் இயக்க இருக்கிறார். க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் சார்பில் பருத்திவீரன், நான் மகான் அல்ல, சிறுத்தை உள்ளிட்ட பல படங்களை தயாரித்தவர் கே.இ.ஞானவேல் ராஜா. இதுதவிர விநியோகஸ்தராகவும் இருந்து வருகிறார். நடிகர் கார்த்தியின் நெருங்கிய உறவினரான இவர்,

பிரதிபா பாட்டீலுக்கு ரூ.6 கோடியில் அதிநவீன கார் தேவையா?


புதுடெல்லி : மக்களிடம் ஏழ்மை தலைவிரித்தாடும் நிலையில், ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு ஸி6 கோடியில் அதிநவீன கார் தேவையா என்று பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து, டுவிட்டர் இணையதளத்தில் வருண் காந்தி கூறியிருப்பதாவது: ஜனாதிபதி பிரதிபா பாட்டீலுக்கு மத்திய அரசின் சார்பில் அதிநவீன வசதிகள் கொண்ட மெர்சிடிஸ் கார் வாங்கப்பட்டுள்ளது. இதில் கூட்டங்கள் நடத்துவதற்கான இட வசதி உள்ளது.

உலகளவில் இந்தியாவும், இந்தியளவில் தமிழ்நாடும் குடிப்பதில் வேகமாக வளர்ந்து

உலகளவில் இந்தியாவும், இந்தியளவில் தமிழ்நாடும் குடிப்பதில் வேகமாக வளர்ந்து வருவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அரசுக்கும், முதலாளிகளுக்கும் பல ஆயிரம் கோடி வருமானம் தரும் டாஸ்மாக் ஒரு அட்சயபாத்திரமாக விளங்குகிறது. எனவே எக்காலத்திலும் இதை ஒழிப்பதற்கு அவர்கள் விரும்பமாட்டார்கள். அரசின் பெரும்பாலான நலத்திட்டங்களுக்கு டாஸ்மாக்கே கருவூலமாகத் திகழ்கிறது. அதை ரத்து செய்தால் அரசு திவாலாகிவிடும். அதாவது மக்களின் சட்டைப்பையில் காசை எடுத்து அதில் சிலவற்றை அவர்களுக்கே வீசுவது என்பதாக அரசு செயல்படுகிறது.
அரசு, முதலாளிகளது நிலை இதுவென்றால் எல்லா அரசியல் கட்சிகளது நிலையும் அதுதானென்று ஆகிவிடுகிறது. விதிவிலக்காக ஓரிரு கட்சிகளைத் தவிர அனைத்து கட்சிகளும் டாஸ்மாக்கை ஒழிக்க விரும்புவதில்லை.

Tataவையும் Nira Radiyaவையும் காப்பாற்றும் CBI திமுகவை வஞ்சம் தீர்க்க முயற்சி


கருணாநிதி குடும்பத்துக்கு சாதகமான ஒரு மூவ் எடுத்தது சி.பி.ஐ.!

புதுடில்லி, இந்தியா: “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழலில் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா மூலமாக டாடா நிறுவனம் எந்தப் பலனையும் அடையவில்லை” இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டில் இன்று (வியாழக்கிழமை) கூறியுள்ளது சி.பி.ஐ.  இந்த ஸ்டேட்மென்டில் இருந்து புரிவது என்ன?
டாடா நிறுவனத்தை ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சி.பி.ஐ. தொடர்பு படுத்தப் போவதில்லை!
இந்த விவகாரத்தில் டாடா நிறுவனத்தின் தொடர்பு பற்றி ஒருபடி மேலே போய் சுப்ரீம் கோர்ட்டில் கருத்து தெரிவித்துள்ள சி.பி.ஐ., “ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் டாடா நிறுவனம் பலன் அடைந்தது என்ற வாதமும் தவறானது. அதற்காக கருணாநிதி குடும்பத்தினருக்கு மதிப்பு மிக்க நிலம் ஒன்றை பரிசாக வழங்கியது என்ற கூற்றும் தவறானது.

டெல்லியில் ஆன்ட்டியிடம் பேசிவிட்டோம்

‘‘கருணாநிதி டெல்லி போவதாக இருந்தாரே... எப்ப போகப்போகிறாராம்...?’’

‘‘கனிமொழியின் ஜாமீன் மனு ஒன்றாம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு அவர் விடுவிக்கப்பட்டால் டெல்லி போக வேண்டியது இருக்கும் என்று நம்பினார். அதனால் தன்னுடைய காரைக்கூட முன்கூட்டியே டெல்லிக்கு அனுப்பி வைத்தார். ஆனால் ஜாமீன் மனு 17-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டதால் டெல்லி போவதை ரத்து செய்துவிட்டார். கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தால் அவர் டெல்லி போகலாம் என்கிறார்கள்.’’
‘‘டெல்லியில் கனிமொழி வெளியே... தயாநிதி உள்ளே என்று பேசிக்கொள்கிறார்களாமே...’’

‘‘கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் மீண்டும் கைதானால் தி.மு.க., காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிடும் என்று சொல்கிறார்கள். ஆனாலும் தயாநிதிக்கு வந்த ஆபத்து இன்னும் நீங்கவில்லை என்றே டெல்லி தகவல்கள் சொல்கிறது. வரும் 10-ம் தேதியை ஒட்டி அடுத்த குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. கோர்ட்டில் தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. குற்றப்பத்திரிகை தாக்கல் ஆவதற்கு முன்பே கூட தயாநிதி மாறன் கைதாகலாம் என்று சொல்கிறார்கள்.’’
‘‘ஆனால் தயாநிதி தரப்பில் வேறு மாதிரி சொல்கிறார்களே...’’

ஸ்பெக்ட்ரம் ஃபைல் கிழித்தது யார்?இருவரை மட்டும் மாட்டிவிட்டு..மற்றவர்களைக்

'ஸ்பெக்ட்ரம் வழக்கு ஸ்வாகா ஆகிறதா?’ என்று டெல்லியில் கிளம்பிய ஒரு பகீர் சந்தேகத்தை, சில இதழ்களுக்கு முன் சொல்லி இருந்தோம். இப்போது இந்த சந்தேகம் சுப்ரீம் கோர்ட்டுக்கே வந்திருப்பதுதான் அதிர்ச்சி க்ளைமாக்ஸ்!

ஆ.ராசா, கனிமொழி, ப.சிதம்பரம், சுப்பிரமணியன் சுவாமி, சி.பி.ஐ., பிரணாப் முகர்ஜி, நீதிபதிகள் ஜி.எஸ்..சிங்வி, ஏ.கே.கங்குலி, பிரசாந்த் பூஷண், சி.ஏ.ஜி., நீதிபதி ஓ.பி.சைனி, சுரேஷ்குமார் பல்சானியா, நாடாளுமன்றம், ஆர்.கே.சந்தோலியா, நீரா ராடியா, ஜெ.பி.சி., சாக்கோ (நாடாளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவர்), ஷாகித் உஸ்மான் பால்வா, மன்மோகன் சிங், அனில் அம்பானி, தயாநிதி மாறன்... என்று குற்றம் சாட்டப்பட்டவர்களும், அதைத் தோண்டித் துருவுபவர்களுமாக, தினம் தினம் இப்படிப்பட்டவர்களின் எண்ணிக்கை 2ஜி வழக்கு வட்டத்தில் கூடிக்கொண்டே போகிறது! இந்த பிரமாண்ட மனித சஞ்சாரத்துக்கு நடுவே சில கறுப்பு சம்பவங்கள் தொடர்ந்துகொண்டே இருப்பதுதான் அதிர்ச்சியிலும் அதிர்ச்சி!

கோஷ்டிப் பூசலில் குழம்பிய Delhi ஜன்பத் இல்லம்

பிரதமர் மன்மோகன் சிங், நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் சோனியா காந்தி ஆகிய நால்வருக்கும் மட்டுமே தெரிந்த ரகசியம், இப்போது நாட்டுக்கே தெரிந்துவிட்டது. முதல் மூவருக்குள் யார் நண்பன்... யார் எதிரி என்று தெரியாத அளவுக்கு வெட்டுக்குத்துகள் கமுக்கமாகவே நடந்துவந்தன. அது, இப்போது மீடியாக்களுக்கு முன்பு வெளிப்படையாகவே நடந்தது. 'எங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை!’ என்று பிரணாப், சிதம்பரம் இருவரும் சேர்ந்தே சொன்னாலும் 'நிறையப் பிரச்னைகள் இருக்கின்றன’ என்பதை அவர்கள் முகங்களே காட்டிக் கொடுத்தன.

ஜாதிவெறி!சுண்ணாகம் பிரதேச சபைத் தலைவரிக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம் .

சுரேஸ் பிறேமச்சந்திரனுக்கு ஒன்றும் தெரியாதாம்.
சுண்ணாகம் பிரதேச சபையின் தலைவர் பிரகாஷ், பிரதேச சபையின் சிற்றூழியர் ஒருவர் மீது ஜாதிரீதியான பாரபட்சம் காட்டியமையை அடுத்து பிரதேசத்தில் பெரும் பதட்ட நிலையுடன் கூடிய ஆhப்பாட்டம் ஒன்று அங்கு வெடித்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது: சுண்ணாகம் பிரதேச சபையினால் சாரதி ஒருவருக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. குறிப்பிட்ட பிரதேச சபையில் நீண்ட நாட்கள் சிற்றூழியராகவிருந்த நபர் ஒருவர் மேற்படி சாரதி தொழிலுக்கு விண்ணப்பித்தபோது, அந்நபரின் ஜாதியினை ஞாபகப்படுத்திய பிரதேச தலைவர் நீங்கள் கூட்டுவதற்கும் துறைப்பதற்குமே பிறந்தவர்கள் அதைதவிர்ந்த வேலைகளை செய்யமுடியாது என அவரது விண்ணப்பத்தை நிராகரிக்ததை அடுத்தே அங்கு மேற்படி பதட்ட நிலைமை தோன்றியுள்ளதுடன், ஆர்ப்பாட்டகாரர்கள் நாளையும் தமது போராட்டத்தை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக தெரியவருகின்றது.

இப்படித்தான் பாருங்கோ எல்லாம் பொய்! Tamilwin வின் விண்ணர்களின் வண்டவாளம்!

இந்த படத்தில் இருப்பவர் நாடாளுமன்ற குழுக்களின் பிரதி தலைவரும் ஈழ மக்கள் ஐனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக் சந்திரகுமார் அவர்கள். இந்நிலையில் ரமிழ்வின் கோமாளி விண்ணர்கள்
என்ன செய்தி போட்டிருக்கிறார்கள் என்பதையும் பாருங்கள்.
பாராளுமன்ற நவராத்திரி விழாவில் அரசாங்கத் தமிழ் அமைச்சர்கள் எவரும் கலந்துகொள்ளவில்லை
இலங்கை பாராளுமன்றத்தில் இன்று நவராத்திரி விழா நடைபெற்றது. இவ்விழாவில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயகமூர்த்தியைத் தவிர வேறெந்த தமிழ் அமைச்சர்களோ பாராளுமன்ற உறுப்பினர்களோ கலந்துகொள்ளவில்லை.

தென்னிந்திய தொலைக்காட்சி தயாரிப்பாளர் ரோஸ் இலங்கையில்!

தமிழ் நாட்டின் கலைஞர் தொலைக்காட்சியிலும் விஜய் தொலைக்காட்சியிலும் பலதரப்பட்ட சமூக பிரச்சினைகள் குறித்து விவாத நிகழ்ச்சிகளை நடத்தி புகழ் உச்சியில் வீற்றிருந்த ரோஸ் வெங்கடேசன் தற் போது இலங்கை வந்துள்ளார்.
இவர் தன்னுடைய பொப் இசை அல்பம் ஒன்றை ஆங்கில, தமிழ், இந்தி, மலையாள மொழிகளில் வெளியிடுவதற்கான பூர்வாங்க ஒழுங்குகளை பூர்த்தி செய்வதற்காக இந்த இலங்கை விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.

வெள்ளவத்தை வர்த்தகரிடம் கப்பம் கோரியவர்கள் யாழில் கைது

வெள்ளத்தை வர்த்தகர் ஒருவரிடம் கப்பம் கோரிய இரண்டு பேர் யாழ்ப்பாணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.தமிழ் வர்த்தகர் ஒருவரிடம் 25 லட்ச ரூபா கப்பம் கோரப்பட்டதாகவும், கப்பம் கோரிய இருவரும் தமிழர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொழும்பு குற்ற விசாரணைப் பிரிவினர் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.பிள்ளைகளைக் கடத்திச் சென்று கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்து கப்பம் கோரப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குறித்த இருவரும், வவுனியா, யாழ்ப்பாணம் மற்றும் கொழும்பு போன்ற பிரதேசங்களில் உள்ள தொலைபேசிகளின் ஊடாக மிரட்டல் விடுத்துள்ளனர்.கைது செய்யப்பட்ட இருவரும் முன்னர் ஒரு சந்தர்ப்பத்தில் ஐந்து லட்ச ரூபா கப்பம் பெற்றுக் கொண்டுள்ளனர். தனது மைத்துனர் ஒருவரிடம் சந்தேக நபர்களில் ஒருவர் இவ்வாறு கப்பம் பெற்றுக் கொண்டுள்ளார்.சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டுள்ளதாகவும், விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகிறது.

வட, கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு சமஷ்டித்தீர்வு உரிய பயன்தரப்போவதில்லை ரவூப் ஹக்கீம்


hakkeemவட, கிழக்குக்கு வெளியே வாழும் முஸ்லிம்களுக்கு சமஷ்டித்தீர்வு உரிய பயன்தரப்போவதில்லை நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு
 வடக்கு, கிழக்கு வெளியே தெற்கிலும் மத்தியிலும் மேற்கிலும் வாழும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்களுக்கு சமஷ்டித்தீர்வு உரிய பயனைத் தரப்போவதில்லையென நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
சிங்களம் மட்டும் சட்டத்தால் பிற்காலத்தில் ஏற்படக்கூடிய விளைவுகளை சுட்டிக்காட்டியவர் அறிஞர் அஸீஸ் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அறிஞர் ஏ.எம்.ஏ.அஸீஸ் பிறந்த நூற்றாண்டையொட்டி கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் இடம்பெற்ற வைபவத்தில் நினைவுச் சொற்பொழிவை நிகழ்த்தும் போதே அமைச்சர் ஹக்கீம் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது; 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் அரசகரும மொழிச் சட்டம் கொண்டுவரப்பட்ட வேல்ளியில் அதனால் பிற்காலத்தில் ஏற்படப்போகும் ஆபத்துகளை ஆணித்தரமாகவும் ஆழ்ந்த கவலையோடும் சுட்டிக்காட்டிய அறிஞர் கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ் தமிழ் மொழிக்கு சம அந்தஸ்து வழங்கினால், சிங்கள மொழிக்கு பாதிப்பு ஏற்படும் என்ற பெரும்பான்மை சமூகத்தினரின் அச்சம் அடிப்படையற்றதெனவும் ஆதாரமற்றதெனவும் இரு மொழிகளுக்கும் உரிய அந்தஸ்தை வழங்குவதன் ஊடாகவே பலமொழி, பல்லின, பல்சமய நல்லிணக்கத்தையும் நல்லுறவையும் கட்டியெழுப்ப முடியுமெனவும் கூறினார்.

வியாழன், 6 அக்டோபர், 2011

சிதம்பரத்தின் தூக்கத்தை கெடுத்த R.ராசாசிதம்பரத்துக்கு, ஆ.ராசா அதிரடியாக கொடுத்துள்ள ‘தூங்காத இரவுகள்’ ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் அடுத்த திருப்பம். நடந்துள்ளது. தற்போது திகார் சிறையில் இருக்கும் முன்னாள் தொலைத்தொடர்புத் துறை அமைச்சர் ஆ.ராசா, உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விருப்பம் தெரிவித்துள்ளார். இதே ஆ.ராசா சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் நேரடியாக வாதம் செய்யத் தொடங்கியபோதுதான், உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை சாதுர்யமாக இந்த வழக்குக்குள் புகுத்தினார்.
அதையடுத்தே அமைச்சர் சிதம்பரத்துக்கு தூக்கம் பறிபோனது!
உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விரும்புவதற்கான மனுவை ஆ.ராசா, நேற்று (புதன்கிழமை) சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.  உச்சநீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விரும்பும் தேதியாக, அக்டோபர் 10ம் தேதியை தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார் ராசா.
மனு, நிராகரிப்பதற்கு கடினமான காரணத்துடன் திறமையாகத் தயாரிக்கப்பட்டுள்ளது. “எனக்காக வாதாடும் வக்கீல்கள் சரியான விவரம் இன்றி தகவல்களை அளிப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

இந்தியாவால் மட்டும் எப்படி அதிக விமானங்களை வாங்க முடிகிறது?

இந்தியர்களிடம் ஏது இவ்வளவு பணம்? இந்தியாவின் குறைந்த கட்டண விமான சேவைகளின் வெற்றி, பாரிஸ் ஏர் ஷோவில் மிக அருமையாகக் காட்சிப்படுத்தப்படவுள்ளது.  காரணம் என்ன? ஐரோப்பிய, வட அமெரிக்க  விமான நிறுவனங்கள் எல்லாம் பாக்கெட்டுக்குள் கையை வைத்தபடி யோசித்துக் கொண்டிருக்க, இந்திய விமான நிறுவனங்கள் பாய்ந்து பாய்ந்து விமானங்களுக்கு ஆர்டர் கொடுக்கின்றன இன்டர்நேஷனல் ஏவியேஷன் நியூஸ் சஞ்சிகை, “இந்திய குறைந்த கட்டண விமான நிறுவனங்களின் வர்த்தகம், ஐரோப்பிய விமான நிறுவனங்களை மலைக்க வைத்திருக்கின்றது” என எழுதியுள்ளது.
உலக விமான வர்த்தகம், இந்த வருடத் தொடக்கத்திலிருந்தே தனது காயங்களுக்கு மருந்து போட்டுக்கொண்டிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லா பெரிய விமான நிறுவனங்களுமே, இந்த வருடத்தின் முதல் காலாண்டில் நஷ்டக் கணக்கே காட்டியுள்ளன.
உலகளவில் வர்த்தகம் அப்படியிருக்க, இந்திய நிறுவனங்களால் எப்படி இவ்வளவு எண்ணிக்கையில் விமானங்களை வாங்க முடிகின்றது என்பதே, பாரிஸ் ஏர் ஷோ புள்ளிவிபரங்களைப் பார்த்த பலரது கேள்வியாக இருந்தது.

இந்துக் கல்லூரி மாணவன் மரணம். அதிபர் விளக்கம்

நல்லைநாதன் தனுசனின் மரணம் தொடர்பில் கல்லூரியின் அதிபர் வி.கணேசராஜா விளக்கமளித்து அறிக்கையொன்றினை விடுத்துள்ளார்.  அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  எமது கல்லூரி வட மாகாணத்தில் உள்ள  மூன்று  பிரசித்திபெற்ற   திருக்கேதீஸ்வரம், நகுலேஸ்வரம், நயினை ஸ்ரீ நாகபூஷணி ஆகிய ஆலயங்களின்  விழாக்களில்  வருடந்தோறும்  பங்கு பற்றி வருகிறது.
அந்த வகையில், நவராத்திவிழா வின் இரண்டாவது நாள் பூசையின் கலந்துகொள்வதற்காக அதிபர் உட்பட 10 ஆசிரியர்களும் 85 மாணவரும் 29.09.2011 அன்று நயினை நாகபூஷணி அம்பாள் ஆலயத்திற் குச் செல்ல இருந்தோம்.
எதிர்பாராத விதமாக எமது வலயக் கல்வி அலுலக மேற்பார்வைக் குழு எமது பாடசாலைக்கு திடீரென மேற்கொண்ட விஜயத்தின் காரணமாக அதிபரும்    ஏனைய   5 ஆசிரியர்களும்    அந்தப் பயணத்தில் கலந்து கொள்ள  முடியாது போனது.    ஆதலால்   இந்து   மாமன்றப்   பொறுப்பாசிரியர் உட்பட 5 ஆசிரியர்களும்   85 மாணவரும்      60 இருக்கைகளைக் கொண்ட பெரிய பேருந்து ஒன்றின் மூலம் நயினை சென்றனர்.

மன்னார் சிறுவனின் மரணத்தின் உண்மைக் காரணத்தை மறைக்க முயற்சி

இந்தியாவில் இருந்து வருகை தந்த சாமியார் ஒருவரைப் பார்ப்பதற்காகச் அவசரமாகச் சென்ற மருத்துவர் ஒருவர் தனது வாகனத்தால் சிறுவனை மோதியதையடுத்து  அந்தச் சிறுவன் பரிதாபமாக உயிரிழந்ததுள்ளான்   எனத் தகவல்கள் வெனிவந்துள்ளனன.
பாடசாலை முடிந்த பின்னர் அப்பா வேலை செய்யும் இடத்திற்குச் சென்ற சிறுவன் அங்கிருந்து மிக்சர் வாங்கிச் சாப்பிட கடைக்கு சென்றவேளை இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மன்னார் மூர்வீதி கிராம சேவகர் பிரிவில் நேற்று முன்தினம் ஏழு வயதான செபஸ்தியான் அபிஷேக் எனும் சிறுவன் ஒருவன் விபத்துக்குள்ளாகி பரிதாபமாக உயிரிழக்க நேரிட்டது. பள்ளிமுனை 50 வீட்டுத் திட்டத்தில் வசிக்கும் இச் சிறுவனின் தகப்பன் மன்னார் சேவா லங்கா மன்றத்தின் காவலாளியாக கடமையாற்றுபவர் என அறியப்படுகிறது.

மனோவுக்கு TNAயின் ஆதரவு! UNPயின் வாக்குகள் பிரிப்பு

கூட்டமைப்பின் ஆதரவு ஜனநாயக மக்கள் முன்னணியின் வெற்றியை மென்மேலும் உறுதிபடுத்துகின்றது-மனோ கணேசன்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பு கொழும்பு மற்றும் தெகிவளை-கல்கிசை தேர்தல்களிலே ஜனநாயக மக்கள் முன்னணிக்கு ஆதரவை தெரிவித்திருக்கின்றது. இது சம்பந்தமான அறிவித்தலை கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா எம்பி வெளியிட்டுள்ளார். கூட்டமைப்பின் ஆதரவு எங்களது வெற்றியை மென்மேலும் உறுதிப்படுத்துகின்றது. நாம் பெறப்போகும் வெற்றி இந்த தமிழர் விரோத சர்வாதிகார அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் முகமாக தென்னிலங்கையிலே பாரிய எதிர்கட்சி கூட்டணியை உருவாக்குவதற்கு வித்திடுகின்றது என ஜனநாயக மக்கள் முன்னணியின் இறுதி பிரசாரக்கூட்டத்தில் கட்சியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தி.நகரில் ஆட்டோ செல்ல தடை!தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து போலீசார்

சென்னை: தீபாவளியை முன்னிட்டு தி.நகரில் வரும் 8ம் தேதி முதல் ஆட்டோக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இது பற்றி போக்குவரத்து போலீசார் விடுத்துள்ள அறிக்கை: தீபாவளியை முன்னிட்டு தி.நகர், சவுந்தர பாண்டியனார் அங்காடி பகுதியில் வரும் 8ம் தேதி காலை 8 மணி முதல் போக்குவரத்தில் மாற்றம் செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. பனகல் மேம்பாலம் ஒரு வழிப்பாதையாக செயல்பட உள்ளது. வடக்கு உஸ்மான் சாலையில் இருந்து மேட்லி சந்திப்பை நோக்கி செல்லலாம்.

அம்பானியிடம் அமெரிக்காவில் 250 தியேட்டர்கள் 24 நகரங்களில்

இந்திய சினிமா: வெளிநாடுகளில் என்ன   நிலை?

தற்போது இந்தியாவில் தயாரிக்கப்படும் அனைத்துத் திரைப்படங்களும், வெளிநாட்டு மார்க்கெட்டையும் மனதில் வைத்தே தயாரிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது

நியூ ஜேர்சி, அமெரிக்கா: ரிலையன்ஸ் நிறுவனம் வெளிநாடுகளில்  இயக்கிவரும் ‘BIG Cinemas’ தியேட்டர்கள், முன்பைவிட அதிக எண்ணிக்கையில் தமது கதவுகளைத் திறந்துள்ளன. வெளிநாடுகளில் இந்திய திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகரித்து வருவதால், இது சாத்தியமாகியுள்ளது என ரிலையன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.
“இந்தியத் திரைப்படங்களுக்கு முன்பைவிட அதிக வரவேற்பு வெளிநாடுகளில் இருக்கின்றது” என்று தெரிவித்துள்ள ரிலையன்ஸ் மீடியா வேர்க்ஸ் பிரிவின் தலைமை அதிகாரி அனில் அர்ஜூன், “இதனால்தான், அமெரிக்காவின் பல மாநிலங்களிலும் தியேட்டர்களை வெற்றிகரமாக இயக்க எம்மால் முடிகின்றது” என்கிறார்.

விருந்து டேபிள்களில் தண்ணீருக்குப் பதிலாக வைன் வந்திருக்கிறது.

அக்கா தலையைத் தாழ்த்திக்கொண்டு வைன் கிளாசில் கவனம்!

இப்போது காலம் மாறிவிட்டது. போதைக்காக மாத்திரமே மது என்ற நிலை மாறி உயர் வகுப்பினர் விருந்து டேபிள்களில் தண்ணீருக்குப் பதிலாக வைன் வந்திருக்கிறது. இந்தியாவில் பெண்கள் வைன் அருந்துவது முன்புபோல பெரிய விஷயமல்ல.
இந்தியாவிலுள்ள இந்த அழகான மலைப்பிரதேசத்தைப் பாருங்கள். இதன் பெயர் குண்டமகெரே. கர்நாடக மாநிலத்தில் இருக்கிறது. பச்சைப் பசேல் என்றுள்ள இதன் அடிவாரத்தில் தலையில் ஒருவித முண்டாசு அணிந்த விவசாயிகள் தினை, சோளம் போன்ற இந்தியாவின் சம்பிரதாயமான தானியங்களையும், பட்டுப்புழுக்களை வளர்க்க உதவும் முசுக்கொட்டை மரங்களையும் வளர்த்து வந்ததை நீங்கள் கண்டிருக்கலாம்.


இப்போது இந்த மலையடிவாரத்துக்குப் போனால், வேறுவிதமான ஒரு காட்சியைத்தான் காணவேண்டியிருக்கும். தினை, சோளம், முசுக்கொட்டை மரங்கள் எதுவுமே கண்ணில் படாது. ஆனால் அதற்காக பயிர்கள் இல்லை என்றில்லை. இருக்கின்றன. இவை வேறு பயிர்கள். அவற்றின் பயன்பாடும் வேறு (சேச்சே… கஞ்சாச் செடி இல்லீங்க)
கபில் குரோவர்
இதோ மலையடிவாரத்தில் வேளான்மை செய்யும் கபில் குரோவரைப் பாருங்கள். இவரைப் போன்றவர்களின் நிலங்கள் இப்போது திராட்சைத் தோட்டங்களாக மாறி விட்டன.  இவரது தந்தை கான்வெல் 1989ம் ஆண்டிலேயே திராட்சைத் தோட்டங்களை வளர்க்க ஆரம்பித்து விட்டார்.

Jaffna Central 40 Computers கணினிக் கூடம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கென கனடா பழைய மாணவர் சங்கத்தினால் புதிதாக நவீன முறையில் அமைக்கப்பட்ட கணினிக் கூடத்தை பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திறந்து வைத்தார்.

யாழ் மத்திய கல்லூரிக்கென கனடா பழைய மாணவர் சங்கத்தின் கோரிக்கைக்கு அமைவாக கனடாவைத் தளமாகக் கொண்டியங்கும் கோம் எவ் கோப் என்ற மத நிறுவனம் 40 கணினிகளை கொண்டதான நவீன கணினிக் கூடத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

முன்பதாக கல்லூரியின் பிரதான வாயிலிலிருந்து மாணவர்களின் இசை அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்ட அமைச்சர் அவர்கள் புதிய கணினிக் கூடத்தை திறந்து வைத்ததுடன் அதன் பணிகளையும் சம்பிராயப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.