சனி, 3 பிப்ரவரி, 2018

சசிகலாவுக்கு எடப்பாடி தூது .... எகிறிப்பாய்ந்து உதறிய சசிகலா ?

வெப்துனியா: சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று சிறையில் உள்ள சசிகலா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அனுப்பிய தூதை நிராகரித்து விட்டார் என செய்திகள் வெளி வந்துள்ளது. பாஜகவின் அழுத்தம் காரணமாகவும், ஆட்சியை தக்க வைத்துக் கொள்வதற்காகவும்  முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் இணைந்த கூட்டணி அணி தினகரனை ஒதுக்கி  வைத்துள்ளது. ஆனால், தினகரனோ எடப்பாடி அரசுக்கு தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வருகிறார்.
அவரின் பக்கம் 18 எம்.எல்.ஏக்கள் மற்றும் சில எம்.பி.க்கள் உள்ளனர். மேலும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றார். ஊடகங்களுக்கும் பேட்டி அளிக்கும் போதும், மக்கள் முன்பு பேசும் போதும் தொடர்ந்து எடப்பாடி அரசுக்கு எதிராக பேசுகிறார்.
இதனால், எடப்பாடி அரசு மீது மக்கள் கொண்டுள்ள அதிருப்தி தனக்கு சாதகமாக அமையும் என கணக்குப் போட்டு காய்களை நகர்த்தி வருகிறார்.

மீனாட்சி அம்மன் தீவிபத்து ஆட்சியாளர்க்கு ஆபத்து?.. மந்திரவாதிகளை நாடும் எடப்பாடி ... ( மந்திரம் செபிப்பவங்க)

மின்னம்பலம் :“மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில்
நேற்று  இரவு நடந்த தீ விபத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை செம அப்செட் ஆக்கியிருக்கிறது. தீ விபத்து என்ற தகவல் நேற்று இரவு முதல்வருக்கு சொல்லப்பட்ட போதே, ‘கோயில்ல தீ பிடிக்கிறது நல்லது இல்லையே... அதுவும் தைவெள்ளிக் கிழமையில்ல இன்னிக்கு...’ என வருத்தமாக சொல்லியிருக்கிறார்.
இன்று காலை, முதல்வருக்கு வேண்டப்பட்ட ஜோதிடர்கள் சிலர் அவரை சந்தித்துப் பேசியிருக்கிறார்கள். ‘பொதுவாக கோயிலில் தீ என்பது ஹோமம் வளர்க்கும் போதும், தீபம் ஏற்றும் போது மட்டுமே இருக்க வேண்டும். இது தானாக பற்றிய தீ. கோபத்தின் உச்சம் அந்த தீயில் தெரிந்தது. பொதுவாக கோயிலில் தீப்பற்றினால் அரசனுக்கு ஆபத்து என்பதுதான் அந்தக் காலத்தில் தொட்டு இருந்து வரும் ஐதீகம். அதனால், இப்போது கோயிலில் தீப்பிடித்ததும் நல்லதுக்கு இல்லை. இதை இரண்டு விதமாகப் பார்க்கணும். மீனாட்சியின் எல்லையில் தீ என்றால் அதனால் ஆட்சிக்கு ஆபத்து என்பது ஒரு பக்கம் இருந்தாலும் நீங்களும் உங்கள் உடல் நலத்திலும் கவனமாக இருக்கணும்..’ என்று சொல்லி இருக்கிறார்கள். அதற்கு முதல்வரோ, ‘நடந்திருக்கக் கூடாது. நடந்துடுச்சு. இதுக்கு என்ன பரிகாரம் செய்யணும்..?’ என கேட்டாராம். அதற்கு ஜோதிடர்களும் சில பரிகாரங்களை சொல்லி இருக்கிறார்கள். ‘அந்த பரிகாரங்களை உடனடியாக செய்யுங்க...’ என அவர்களிடம் சொல்லி இருக்கிறார்.

பிச்சை தராத வாலிபரை திருநங்கைகள் ஓடும் ரெயில் இருந்து தள்ளிவிட்டனர்

வெப்துனியா :வாலிபரிடம் பிச்சை கேட்டு கொடுக்காததால் ஆத்திரமடைந்த திருநங்கைகள் அவரை ரயிலில் இருந்து தள்ளி விட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் தாட்டிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா (32). இவரது நண்பர் தரம்வீரப்பா (20) உள்பட 5 பேர் கட்டிட வேலைக்காக ரயிலில் கோவைக்கு சென்று கொண்டிருந்தனர். ரயில் கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த சாமல்பட்டி ரயில் நிலையத்திற்கு அருகே சென்று கொண்டிருந்தது. ரயிலில் ஏறிய திருநங்கைகள் பயணிகளிடம் பிச்சை எடுத்து கொண்டிருந்தனர். சத்தியநாராயணா, தரம்வீரப்பா ஆகிய 2 பேரும் திருநங்கைகளுக்கு பணம் கொடுக்க மறுத்துவிட்டனர்.
 இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த திருநங்கைகள் சத்தியநாராயணாவை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டனர். அவரைக் காப்பாற்ற தரம்வீரப்பா ரயிலில் இருந்து குதித்தார்.

BBC : முருகானந்தம் கோரிக்கை ... இந்தி நடிகர் நடிகைகள் நாப்கின் படத்தை தங்களின் டுவீட்டரில் .

மாதவிடாய் காலத்தில் பெண்கள் பயன்படுத்தும் சேனிடரி நேப்கின் குறித்து
சமூகத்துக்கு இருக்கும் அசௌகரிய உணர்ச்சியை போக்கும் நோக்கத்துடன், சேனிடரி நேப்கினுடன் உங்களால் ஒரு புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளத்தில் பகிர முடியுமா என்று தமிழர் ஒருவர் விடுத்த சவாலை பாலிவுட்டின் பிரபல இந்தி நட்சத்திரங்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர். ;அமீர்கான், அட்சய் குமார், சோனம் கபூர், ராதிகா ஆப்தே, ட்விங்கிள் கண்ணா உள்ளிட்டோர் சேனிடரி நேப்கினுடன் போஸ் கொடுக்கும் தங்கள் படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளனர்.
இந்த சவாலை விடுத்த தமிழர் பெயர் அருணாசலம் முருகானந்தம். கோவையை சேர்ந்த இவர், மலிவு விலையில் சேனிட்டரி நேப்கின் தயாரிப்பதற்கான இயந்திரத்தை வடிவமைத்தவர். இவரை சமூகத் தொழில் முனைவோர் என்று ஊடகங்கள் அழைக்கின்றன.
இவரது வாழ்க்கை வரலாற்றைக் கொண்டு 'பேட் மேன்' என்ற பெயரில் ஒரு திரைப்படம் தயாராகிவருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தீவிபத்து ... மதக்கலவரம் உண்டாக்க சதி? சிலைகள் புராதான சின்னங்களும் எரிந்தன ....

மீனாட்சி அம்மன் கோவிலில் சிலைகள்-தூண்கள் சேதம்: மேற்கூரை-புராதன சின்னங்களும் எரிந்தனமாலைமலர் :மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிலைகள், தூண்கள் மற்றும் புராதன சின்னங்களும் எரிந்து சேதமடைந்தன.
 மதுரை: உலக பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 5 நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் கிழக்குவாசலில் மட்டும் மீனாட்சி-சுந்தரேசுவரருக்கு தனித்தனி வாசல்கள் உள்ளன. இந்த வாசல்களில் 50-க்கும் மேற்பட்ட கடைகள் அடுத்தடுத்து உள்ளன. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வெளிநாட்டினரும், பல்வேறு மாநிலத்தவரும் தினந்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசனம் செய்வதால் கோவில் பிரகாரங்களில் எப்போதும் கூட்டம் அதிகமாகவே காணப்படும்.
சுற்றுலா பயணிகளின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இங்கு புராதன சிலைகள், படங்கள், வளையல்கள், பொம்மைகள் சிறுவர்களை கவரும் வகையில் பேட்டரி பொருத்திய பல்வேறு விளையாட்டு சாதனங்கள் அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும்.
நேற்று இரவு கோவிலின் வழிபாடு முடிந்த பிறகு வழக்கமான நேரத்தில் நடை சாத்தப்பட்டது. அதன் பிறகு கோவில்வாசலில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன. அனைவரும் வெளியேறிய பின்னர் பாதுகாப்பு போலீசார் மட்டும் கோவில் வாசலில் பணியில் இருந்தனர்.

தலித் மாணவி தற்கொலை 2000 ரூபாய் தேர்வு கட்டணத்துக்காக அவமனபடுத்தியதால்... ஹைதராபாத்

Vijay Bhaskarvijay : 2000 ருபாய் தேர்வுக் கட்டணம் செலுத்தாத காரணத்தால் (ஹைதிராபாத்தில்)
பதினாலு வயது மாணவியை தேர்வு எழுத விடாமல் வெளியே அனுப்பி அவமானப்படுத்தி இருக்கிறார்கள்.
அப்பெண் தற்கொலை செய்து கொண்டாள்.
இப்போது அவள் அம்மா “நான் பத்தாயிரம் ரூபாய் கூட கொடுக்கிறேன். என் மகள் கிடைப்பாளா” என்கிறார். தனியார் மயம் ஆகும் கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றால் வருங்காலத்தில் பலர் இப்படி கல்வி நிலையங்களால் மருத்துமனைகளால் கொலை செய்யப்படுவார்கள்.
கல்வியும் மருத்துவமும் எப்போது அரசின் கட்டுப்பாட்டில் மட்டுமே இருக்க வேண்டும். பணம் இல்லாமல் இருப்பதற்கும் கல்வி கற்பதற்கும், மருத்துவம் பார்ப்பதற்கும் சம்பந்தம் மிகக் குறைவாக இருக்க வேண்டும்.
அப்படி இருந்தால் மட்டுமே சமுதாயம் விளங்கும்.

டெல்லி 14 வயது மாணவன் பள்ளிகூடத்தில் கொலை ... சகமாணவர்கள் கழிவறையில் வைத்து ..

பள்ளிக் கழிவறையில் மாணவர் கொலை!மின்னப்மலம் : டெல்லியில் தனியார் பள்ளியைச் சேர்ந்த 14 வயது மாணவரைச் சக மாணவர்கள் கழிவறையில் வைத்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு டெல்லியின் சதத்பூர் பகுதியிலுள்ள ஜீவன் ஜோதி பள்ளியில் 14 வயதுடைய மாணவர் துஷார், நேற்று பள்ளிக்கூட கழிவறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதையடுத்து அவரை உடனடியாக மீட்டு ஆசிரியர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு மாணவரைப் பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகக் கூறினர்.
பள்ளி நிர்வாகம் மாணவர் டயரியாவால் பாதிக்கப்பட்டு இருந்தார் என்று கூறுகிறது. ஆனால், பெற்றோர் தரப்பில் சில மாணவர்கள் துஷ்கரை தாக்கியதால் அவர் இறந்திருக்கக்கூடும் என்று குற்றம்சாட்டினர். இதையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

விஜய் மக்கள் இயக்கம் ... கொள்கை விளக்கம் : ஆளப்போறான் தமிழன்

விஜய்க்குக் கிடைக்காத ‘விஜய் மக்கள் இயக்கம்’!மின்னம்பலம்:  200 கோடி ரூபாய் வசூலித்ததாகச் சொல்லப்படும் மெர்சல் படத்தைவிட, விஜய் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ‘விஜய் மக்கள் இயக்கம்’ ஒருவழியாக வெளியிடப்பட்டுவிட்டது.
ரசிகர்களைச் சந்திப்பது, போட்டோ எடுப்பது, குடும்பத்தைப் பற்றி விசாரிப்பது, நிர்வாகிகளுக்கான வழிகாட்டுதல்களை வரையறை செய்வதென ரஜினி, கமலுக்கு முன்பே தனது ரசிகர்களை ஒரு இயக்கத்துக்கான கட்டுக்கோப்பான அமைப்பாக மாற்றியவர் நடிகர் விஜய். மெர்சல் திரைப்படத்தின் வளர்ச்சியும், அது ஏற்படுத்திய பிரச்னைகளும், தாக்கமும் விஜய் மக்கள் இயக்கத்திலிருந்து விஜய்யைத் தள்ளி இருக்க வைத்தது. மெர்சல் ரிலீஸுக்குப் பிறகான கடும் மன உளைச்சலிலிருந்து வெளியேறி, வெளிநாட்டு சுற்றுலா பயணங்களை முடித்துக்கொண்டு தற்போது முருகதாஸ் படத்துக்காகத் தன்னை தயார் செய்துவருகிறார் விஜய். அதேசமயம் தனது விஜய் மக்கள் இயக்க செயல்பாடுகளையும் முன்னெடுக்கும் விதமாக www.vijaymakkaliyyakam.in என்ற இணையதளத்தை உருவாக்கியிருக்கிறார்.

பாஜக ஹிந்தி தாக்குதல் ஆரம்பம் : டெல்லி தமிழ்நாடு இல்லம் இனி வைகை , பொதிகை இல்லம் ... கர்நாடக இல்லம் இனி காவிரி இல்லம் ...

மின்னம்பலம் : டெல்லியில் இருக்கும் தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்துக்கு வைகை இல்லம், பொதிகை இல்லம் என்று புதிய பெயர் சூட்ட பட்டிக்கிறது. இதைவிட அதிர்ச்சியாக கர்நாடக அரசின் இல்லத்துக்கு காவிரி இல்லம் என்று பெயர் சூட்டப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. இதன்மூலம் காவிரி என்ற பெயர்கூட தமிழகத்துக்குச் சொந்தம் இல்லை என்ற ஒரு சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு அரசின் சார்பில் டெல்லி செல்லும் அரசு பிரதிநிதிகள், விளையாட்டுப் போட்டிகளுக்கான செல்லும் மாணவர்கள், போட்டித் தேர்வுக்காகச் செல்லும் இளைஞர்கள் தங்குவதற்காக டெல்லி சாணக்யபுரியில் 1962ஆம் ஆண்டு தமிழ்நாடு இல்லம் முதன்முதலாக அமைக்கப்பட்டது. ஆண்டுகள் பல ஆன நிலையில் இன்னும் விரிவாக்கம் தேவை என்பதால் 2004ஆம் ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழ்நாடு இல்லம் புதிய கட்டடத்தைக் கட்டினார். இது புதிய தமிழ்நாடு இல்லம் எனப்படுகிறது.

பாகிஸ்தான் அமைச்சர் மனைவியை சுட்டுகொன்று தற்கொலை செய்துகொண்டார்

மனைவியை சுட்டுக்கொன்ற பாக். அமைச்சர் தானும் தற்கொலை மாலைமலர்:  இ்ஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் சிந்து மாகாண அமைச்சர் தனது மனைவியை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
பாகிஸ்தானின் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹசர்கான் பைஜரானி, இவரது மனைவி பரிதா ரஸாக், பைஜரானி, சிந்து மாகாணத்தில் அமைச்சராகவும், மனைவி பரிதா ரஸாக் பத்திரிகை நிருபராகவும் உள்ளார். நேற்று கராச்சியில் உள்ள அவர்களது வீட்டில் துப்பாக்கியால் சுடப்பட்ட நிலையில் இருவரும் பிணமாக கிடந்தனர்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாக கடைகளில் பயங்கர தீ விபத்து!

மீனாட்சி அம்மன் கோவிலில் 3 வாசல்கள் வழியாக தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிமாலைமலர் : மீனாட்சி அம்மன் கோவிலில் தீ விபத்து நடந்த கிழக்கு வாசல் மூடப்பட்டுள்ளது. மற்ற 3 வாசல்கள் வழியாக பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். #MeenakshiAmmanTemple மதுரை: மீனாட்சி அம்மன் கோவிலின் 4 கோபுரங்கள் வழியாகவும் பக்தர்கள் கோவிலுக்கு செல்வது வழக்கம். இதில் முக்கிய வாசல்களாக கருதப்படுபவை கிழக்கு மற்றும் தெற்குவாசல்கள்.
சுவாமி-அம்மன் சன்னதிகளுக்கு என தனித்தனி கிழக்கு வாசல்கள் உள்ளன. இந்த வாசல்களில் ஏராளமான கடைகள் உள்ளன. இதில் சுவாமி சன்னதி கிழக்குவாசல் கடைகளில் தான் நேற்று இரவு தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக கிழக்கு வாசல் மூடப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக இன்று கோவிலுக்குள் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்களா? என்ற சந்தேகம் ஏற்பட்டது.

சந்தையூர் தடுப்பு சுவர் .... உண்மை நிலவரம் ... எவிடன்ஸ் கதிர் விளக்கம்

மதுரை அருகே தாழ்த்தப்பட்ட மக்களுக்குள்ளேயே விரிசலை ஏற்படுத்தி உள்ள சுவர் பிரச்சினையில் தமிழக முதல்வர் தலையிட்டு உயர்நிலைக் குழுவை அமைத்து இரு தரப்பினரையும் உடனே அழைத்துப் பேசி சுமுகத் தீர்வு காண வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
5 ஆண்டாக பதற்றத்தை ஏற்படுத்தும் ‘சந்தையூர் சுவர்’: மற்றொரு உத்தபுரமாக மாறாமலிருக்க சுமுகத்தீர்வு காணப்படுமா?  
Vincent Raj :சந்தையூர் பறையர் சமூகத்து மக்களும் அருந்ததியர் சமூகத்து மக்களும் எந்தவித முரண்பாடுகளும் இல்லாமல் அன்புடன் வாழ்ந்து வந்தனர்.அரசு புறம்போக்கு நிலத்தை அனுபவிப்பது குறித்து இரண்டு தரப்புக்கும் சில ஆண்டுகளாக பிரச்னை ஏற்பட்டது.இட பிரச்னை என்றால் ஊடகம் கவனம் பெறாது தீண்டாமை பிரச்னையாக மாற்றுவோம் என்கிற அரசியல் தந்திரம்தான் இந்த பிரச்னைக்கு அடிப்படை.இந்த தந்திரத்தை உள்ளூர் அருந்ததியர் மக்கள் செய்யவில்லை.அங்கு உள்ள அருந்ததியர் மக்கள் எளிமையானவர்.அன்பானவர்கள்.இட பிரச்னையை அரசியலுக்காக தீண்டாமை பிரச்னையாக மாற்றி இன்று இரண்டு ஒடுக்கப்பட்ட சமூக மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்தியது யார் என்பதை என் அன்புக்கு உரிய நண்பர்களிடமே கேட்கிறேன்.நாங்கள் தீண்டாமையை கடைபிடிக்கவில்லை.வேண்டும் என்றால் எங்கள் கோவிலுக்கு அருந்ததியர் சமூகத்து ஆள் ஒருவர் பூசாரியாக இருக்கட்டும்.அருந்ததியர் சமூகத்து கோவிலுக்கு நாங்கள் பூசாரியாக இருக்கிறோம்.

தெலுங்கு தேசம் 22 எம்பிக்கள் பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறது ..

B.J.P,BJP,Bharatiya Janata Party,பா.ஜ,தேசிய ஜனநாயக கூட்டணி,நெருக்கடி,தெலுங்கு தேசம், விலக,முடிவு
தினகரன் :'மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த பட்ஜெட்டில் ஆந்திர மாநிலத்திற்கு தேவையான நலத்திட்டங்கள் ஏதும் இடம் பெறவில்லை' என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி பகிரங்கமாக குற்றஞ்சாட்டியுள்ளது. தொடர்ந்து தங்கள் மாநிலம் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியிலிருந்து விலக வேண்டும் என, தெலுங்கு தேசம் எம்.பி.,க்கள், சந்திரபாபு நாயுடுவிடம் வலியுறுத்தியுள்ளனர். இதையடுத்து, தே.ஜ., கூட்டணியில் நீடிப்பது பற்றி முடிவெடுக்க கட்சி, எம்.பி.,க்கள் முக்கிய நிர்வாகிகளுடன் சந்திரபாபு நாயுடு நாளை ஆலோசிக்கவுள்ளார். இது தே.ஜ., கூட்டணியில் புதிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியில் ஆளும், பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி அரசு பொறுப்பேற்று, நான்கு ஆண்டுகள் நிறைவடையவுள்ள நிலையில் இந்த ஆட்சியின் கடைசி முழு பட்ஜெட்டை பா.ஜ.,வை சேர்ந்த, நிதியமைச்சர், அருண் ஜெட்லி, நேற்று முன்தினம் தாக்கல் செய்தார். அடுத்த ஆண்டு துவக்கத்தில் லோக்சபா தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதால், வாக்காளர்களை கவரும் வகையில் பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் இடம் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது உறுதி ! ரஜினி கமல் விஷால் பாணியில் ....


வெப்துனியா :கடந்த டிசம்பர் 31ஆம் தேதி சூப்பர்
ஸ்டார் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என்று அறிவித்துவிட்டு பின்னர் ரஜினி மக்கள் மன்றம் என்ற செயலியையும் தொடங்கி விறுவிறுப்பான ஆரம்பகட்ட அரசியல் பணியை செய்து வருகிறார் அதேபோல் உலகநாயகன் கமல்ஹாசனும் வரும் 21ஆம் தேதி 'நாளை நமதே' என்ற கோஷத்துடன் புதிய கட்சியை ராமநாதபுரத்தில் அறிவிக்கவுள்ளார் இந்த நிலையில் இளையதளபதி விஜய்யும் தனது ரசிகர்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சியாக புதிய அதிகாரபூர்வ இணையதளம் ஒன்றை தொடங்கவுள்ளார். இதனையடுத்து செயலியையும் அவர் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவையனைத்தும் அரசியலுக்குவர அவர் ஆயத்தமாகிறார் என்பதையே காட்டுகிறது விஜய்யின் இணையதளம் மிகவிரைவில் தொடங்கவுள்ளதாகவும், அந்த இணையதளத்தின் முகவரி மிகவிரைவில் அறிவிக்கப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பட்ஜெட் அதிர்ச்சி .. பங்கு சந்தை கடும் சரிவு ... முதலீட்டாளர்கள் 4.6 லட்சம் கோடி ரூபாய் இழப்பு

மத்திய பட்ஜெட்டில் எதிரொலியாக மும்பைப் பங்குச்சந்தை கடந்த 3 ஆண்டுகளுக்குபின் மிகப்பெரிய வீழ்ச்சியைச் இன்று சந்தித்தது. முதலீட்டாளர்களுக்கு ரூ.4.6 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளில் இழப்பு ஏற்பட்டது.
tamilthehindu :2018-19-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அப்போது பங்குச்சந்தையில் நீண்ட காலத்தில் முதலீடு செய்பவர்களுக்கு வரியான எல்டிசிஜியை அறிமுகப்படுத்தினார். இந்த வரியின் அறிமுகமாவதன் தாக்கம் பங்குச்சந்தை இன்று காலை தொடங்கியதில் இருந்தே காண முடிந்தது.
காலையில் இருந்த சரிவுடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தையில் வர்த்தகத்தின் இடையே அதிகட்சமாக 900 புள்ளிகள் வரை சரிந்தது.

EVM மோசடிகள் தொடரும் ... இடைதேர்தல்களில் தோற்று.... நம்பவைத்து மீண்டும் தேர்தல் ஆணையம் + EVM மெசின் + பாஜக கூட்டணி

Swathi K : எதிர் கட்சிகள் கவனமாக இருக்கவேண்டிய நேரமிது. கடந்த 14 மாதத்தில் நடந்த MP, MLA இடைத்தேர்தல், உள்ளாட்சி தேர்தல்களில் 80% இடங்களில் பிஜேபி தோற்றுப்போயுள்ளது. யுனிவர்சிட்டி/ காலேஜ் தேர்தலில் பிஜேபி/ RSS மாணவர் அமைப்பு எல்லா இடங்களிலும் தோற்று இருக்கிறது. ஆனால் அவர்களுக்கு தேவைப்படும் சட்டசபை தேர்தலில் அவர்கள் வெற்றி பெற்று தான் வருகிறார்கள். குஜராத் ஒரு சின்ன உதாரணம். கள நிலவரப்படி அங்கு பிஜேபி வெற்றி பெற வாய்ப்பே இல்லை. ஆனால் மீடியாவை கைக்குள் வைத்து கருத்துக்கணிப்பை தனக்கு சாதமாக கொண்டுவந்து.. அப்புறம் கருத்துக்கணிப்புபடி ரிசல்ட் கொண்டுவர கிரிமினல்தனம் செய்யும் கூட்டம் தான் மோடி, அமித்ஷா &; கோ. நம்மள எல்லாம் சின்ன சின்ன பிஜேபி தோல்விகளுக்கு சந்தோசப் பட வைத்து 2019ல் பெரிய வெற்றியை பெற்று விட கூடாது.
குஜராத் தேர்தல் முடிவுக்கு சில நாட்கள் முன்னாள் நான் பதிவிட்டது.. அந்த தேர்தலில் நான் சொன்னது போல் தான் நடந்தது. இப்பவும் பாருங்கள்.. 2019 தேர்தல் கருத்து கணிப்பு'னு, மோடி அலை'னு மீடியாவை கைக்குள் போட்டு தனக்கு தேவையான கருத்துக்களை மக்கள் கருத்துக்கள்'னு சொல்லி.. அப்புறம் எலெக்க்ஷன் கமிஷின்'ன கைக்குள் வைத்து EVM உதவியுடன் கருத்துக்கணிப்பு படி வெற்றி பெற வாய்ப்பு இருக்கிறது..
பொய் சொல்வது, அந்த பொய்யை மறைக்க இன்னொரு பொய் சொல்வது.. இப்படி இதற்க்கு ஒரு முடிவே இல்லாமல் போயிட்டு இருக்கும்.. அப்புறம் அந்த பொய்யை உண்மையாக்க ஏதாவது கோல்மால், பித்தலாட்டம் செய்வது..

வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

திருவாரூர் கௌரவக் கொலை: 3 பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை

BBC :திருவாரூர் மாவட்டத்தில், காதல் திருமணம் செய்த தம்பதி மற்றும் அவர்களது நாற்பது நாள் குழந்தையை 2014ஆம் ஆண்டில் கொலை செய்த வழக்கில் மூன்று பேருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனை விதித்து தஞ்சாவூர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது. பிரதான குற்றவாளிகளான சிவசுப்ரமணியன், ராமகிருஷ்ணன், துரைராஜ் ஆகியோருக்கு தலா மூன்று ஆயுள் தண்டனைகள் வழங்கப்பட்டுள்ளன. குற்றம் சாட்டப்பட்ட நான்காவது நபரான மகேந்திரனுக்கு மூன்றரை ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறையில் இவர்களுக்கு நன்னடத்தை விதிகளின் கீழ் எவ்வித சலுகையும் காட்டப்படக்கூடாது என்றும் நீதிபதி கூறியிருக்கிறார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள கீழமருதூரில் தலித் வகுப்பைச் சேர்ந்த அமிர்தவல்லி என்ற பெண்ணும் ஆதிக்க சாதியைச் சேர்ந்த பழனியப்பன் என்பவரும் காதலித்துத் திருமணம் செய்துகொண்டனர்.
இவர்களது திருமணத்திற்கு பழனியப்பனின் உறவினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் தமிழ் இல்லை ! ஒரு அமெரிக்கரின் அதிர்ச்சி !

அவன், இவன், உவன். அவள் இவள் உவள் எவள். ஓர் எழுத்தை மட்டும் மாற்றும்போது முழுக்கருத்தும் எப்படி மாறிவிடுகிறது. ‘அதுவிதுவுதுவெது’ என்பதை பலதடவை சொல்லிப் பார்த்தேன். அந்த இனிமை என்னை ஏதோ செய்தது.
வினவு : 
ஹார்வார்டில் தமிழுக்கு முக்கியத்துவம் உள்ளதா?
தமிழ் தான் ஆதிச் செம்மொழியாக இன்றும் வாழும் ஒரு மொழி. அதை பாதுகாக்க வேண்டியது கடமை. ஹார்வார்ட் போன்ற முதன்மையான பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியை மட்டும் அவர்கள் கற்றுக் கொடுப்பதில்லை. சிந்திக்கவும் ஆராயவும் கற்றுக் கொடுக்கிறார்கள்.
2000 வருடங்களுக்கு மேலான தமிழ் மொழியின் நீண்ட சரித்திரத்தில் தமிழ் இன்று கடைசிப் படியில் உள்ளது என்றே நான் நினைக்கிறேன். சரித்திரத்தில் முன்னர் எப்போதும் தமிழ் இப்படியான நிலையை அடைந்ததில்லை. ஆங்கிலேயர் ஆட்சியில்கூட தமிழ் இவ்வளவு உதாசீனப்படுத்தப்பட்டதில்லை. ஹார்வார்டில் நிறைய மொழிகள் கற்றுக் கொடுக்கப் படுகின்றன. ஆராய்ச்சிகளும் மேற்கொள்ளப்படுகின்றன.
அழிந்துபோன நிலையிலுள்ள மொழிகளுக்கு முக்கியத்துவம் உண்டு. ஹிந்தி, உருது போன்ற மொழிகளைக் கற்க நிறைய மாணவர்கள் வருகிறார்கள். இன்றும் வாழும் செம்மொழியான தமிழுக்கு அதற்கான மதிப்பு கிடையாது. மற்றைய மொழிகளுக்கு மாணவர்கள் திரள் திரளாக வருவதுபோல தமிழ் மொழிக்கும் வரவேண்டும்.

பத்திரிகையாளர் மணி – மூத்த வழக்கறிஞர் என்.ஜி.ஆர். பிரசாத் உரை- வீடியோ... வினவு


னநாயகத்துக்கு பேராபத்து” நாட்டு மக்களை எச்சரிக்கிறார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ! என்ற தலைப்பின் கீழ் சென்னையில் 21.01.2018 அன்று மக்கள் அதிகாரத்தின் சார்பில் அரங்கக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் வழக்கறிஞர்கள், ஜனநாயக சக்திகள், பொதுமக்கள் என திரளாக கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்விற்கு மக்கள் அதிகாரத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜூ தலைமை தாங்கினார். ஓய்வு பெற்ற நீதிபதி அரி பரந்தாமன், மூத்த வழக்கறிஞர்கள், பத்திரிக்கையாளர், பேராசிரியர் என பலரும் நீதித்துறையின் இன்றைய நெருக்கடி நிலை குறித்து பேசினர்.
பத்திரிக்கையாளர் மணி அவர்கள் பேசுகையில்; “டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், கண்ணையா குமார் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட போது, “நாடு விடுதலை அடைந்து 70 ஆண்டுகள் முடிந்த பிறகு இதுவரையில் நடக்காத விசயங்கள் நடக்கின்றன” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கூறினர். பல ஊடகங்கள் இதை பற்றி பெரியதாக பேசவில்லை .

நாட்டை திருடி விற்ற மோடி அரசின் கடைசி பட்ஜெட் – முதல்கட்ட பார்வை !

வீட்டில் உள்ள பொருட்களை விற்றுத் தீர்க்கும் சூதாடி குடும்பத்தலைவன் சிறப்பானவனா?. இந்தியாவை கூறுபோட்டு விற்பதை பெருமையாக பீற்றிக் கொள்ளும் அரசை என்னவென்று சொல்வது ? ஏலக்கம்பெனி என்று தான் கூறவேண்டும்.
வினவு :மக்களுக்குக் கொடுக்க கிண்டப்படும் ‘அல்வா’ 
வரவிருக்கும் 2018 – 2019 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்திருக்கிறார் அருண் ஜெட்லி. தனது உரையை ஆங்கிலத்தில் தொடங்கிய நிதியமைச்சர், அவ்வப்போது ஹிந்தியிலும் பேசியிருக்கிறார். பார்ப்பனியத்தை ஆட்சித் தத்துவமாக்கத் துடித்து வரும் மோடி அரசின் மற்றுமொரு இந்தித்திணிப்பு நடவடிக்கை இது
இது குறித்து முகநூலில் வந்த ஒரு கண்டனச் செய்தியை ஆழி செந்தில்நாதன் பதிவு செய்திருக்கிறார்.
******
Aazhi Senthil Nathan
நிதி அமைச்சருக்கு கடும் கண்டனம்.
நிதிநிலை அறிக்கையில் பெரும்பாலும் இந்தியைப் பயன்படுத்தியதன் மூலம் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சிமொழி என்கிற நிலையை நோக்கி இந்தியாவை நகர்த்துகிறார்கள் ஹிந்தியர்கள். 1965 இல் தமிழர்களால் தோற்கடிக்கப்பட்ட இந்தி வெறியர்கள் இந்தி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழி என்கிற கனவை நிறைவேற்றத் துடிக்கிறார்கள்.
இந்தித் திணிப்பை எல்லா இந்தி பேசாத மாநிலங்களும் எதிர்க்கும் நிலையில், எதிர்ப்புகளைப் பொருட்படுத்தாமல், தனது மொழிவெறியைக் காட்டியிருக்கிறது இந்தி அரசு.

பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!

பிடல் காஸ்ட்ரோவின் மகன் தற்கொலை!மின்னம்பலம் :கியூப புரட்சியாளரும் அந்நாட்டின் முன்னாள் அதிபருமான பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கியூப புரட்சியாளரும் அந்நாட்டை சுமார் 50 ஆண்டுகள் ஆட்சி செய்தவருமான பிடல் காஸ்ட்ரோ கடந்த 2016ஆம் ஆண்டு காலமானார். பிடல் மறைவுக்குப் பின்னர் அவரது சகோதரர் ரவுல் காஸ்ட்ரோ ஆட்சிப் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், பிடல் காஸ்ட்ரோவின் மூத்த மகன் பிடல் ஏஞ்சல் காஸ்ட்ரோ டியஸ் பாலார்ட் தற்கொலை செய்துகொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அவருக்கு வயது 68 ஆகும்.
பிடலிடோ அல்லது லிட்டில் பிடல் என்று அறியப்படும் பாலார்ட், சோவியத் ஒன்றியத்தில் அணுக்கூறு இயற்பியல் குறித்து படித்துள்ளார்.

TDP Vs BJP war? தெலுங்கு தேசம்- பாஜக போர் ஆரம்பம் .... பாஜகவின் இடைதேர்தல் தோல்வியின் தாக்கம்?


தினகரன் :புதுடெல்லி: ராஜஸ்தான், மேற்குவங்கத்தில் எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ. தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல் முடிவுகள் பாரதிய ஜனதாவின் கூட்டணி கட்சிகளை கலக்கமடைய செய்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில் 2 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு சட்டமன்ற தொகுதியில் ஆளும் பாரதிய ஜனதாவுக்கு தோல்வி ஏற்பட்டது. இதேபோன்று மேற்குவங்கத்தில் ஒரு மக்களவை, ஒரு சட்டமன்ற தொகுதியில் நடத்தப்பட்ட இடைத்தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது.
இதனால் பாரதிய ஜனதாவுக்கு எதிரான அலை வீசுவதாக தெலுங்கு சேதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் கருதுகின்றன. இடைத்தேர்தல் தோல்வியால் மத்தியில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.

லாரியில் கீழு நசுங்கி பெண் மரணம் ... போக்குவரத்து காவல் சோதனை விபத்து

நக்கீரன் :போக்குவரத்து காவல்துறையினர் சோதனைக்காக நிறுத்திய லாரியில், மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மனைவியின் கண்முன்னே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஆவடியை அடுத்த திருமுல்லைவாயில் மணிகண்டபுரம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவர் தன் மனைவியுடன் சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகே மதுரவாயல் செல்லும் புறவழிச்சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு போக்குவரத்து காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த லாரியை சாலையின் நடுவே வந்து காவல்துறையினர் மடக்கியுள்ளனர்.

உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க பாஜக அறிவிப்பு ... மாநிலங்கள் அவையில் ...

வெப்துனியா :சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது என சசிகலா புஷ்பா எம்.பி.யின் கேள்விக்கு மத்திய இணைமந்திரி மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமாக பதிலளித்துள்ளார். "சென்னை ஐகோர்ட்டில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியாது -
புதுடெல்லி: சென்னை ஐகோர்ட் மற்றும் ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்காடு மொழியாக தமிழை ஏற்றுக்கொள்ள வேண்டும் என நீண்ட காலமாக எதிர்பார்ப்பு உள்ளது. இதனை வலியுறுத்தி கடந்த 2006-ம் ஆண்டில் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.
இந்நிலையில், சசிகலா புஷ்பா எம்.பி இது தொடர்பான கேள்வியை மாநிலங்களவையில் இன்று எழுப்பினார். இதற்கு, மத்திய சட்டத்துறை இணை மந்திரி சவுத்ரி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:- சென்னை ஐகோர்ட்டில் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக பயன்படுத்த வேண்டும் என தமிழக அரசிடம் இருந்து 2006-ம் ஆண்டு கோரிக்கை பெறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு பரிந்துரைக்கப்பட்டது. ஆனால், இந்த பரிந்துரையை ஏற்கமுடியாது என சுப்ரீம் கோர்ட் அனைத்து நீதிபதிகள் அமர்வு 11-10-2012 அன்று அறிவித்தது.
கடந்த 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளில் இதே போன்ற கோரிக்கை எழுந்த போது அதனை ஏற்க முடியாது என சுப்ரீம் கோர்ட் தெரிவித்தது. இதனால், தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க முடியவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசிட் வீச்சில் தப்பிய நடிகை ருபாலி ... மீண்டு வந்த சாதனை

வெப்துனியா ::உத்திர பிரதேசத்தை சேர்ந்த நடிகை ரூபாலி. இவர் திரைப்படங்களில் நடித்து வந்துள்ளார். தனது ஊருக்கு அருகாமையில் உள்ள நகரில் கடந்த 2013ல் கலை  நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றுள்ளார். இந்நிலையில் அங்கே அவர் அஜய் புஜரி என்பவரை சந்திக்க, அவர் சில நாட்களில் தனது காதலை வெளிப்படுத்தியதோடு, தன்னை திருமணம்  செய்துகொள்ளுமாறு வற்புறுத்துயுள்ளார். ஆனால் ரூபாலி ஏற்கனவே ஒருவரை காதலித்து வந்ததால், புஜரியின் காதலை மறுத்துள்ளார்.>இதனால் ஆத்திரமடைந்த புஜரி, அழகு இருப்பதால்தான் இத்தனை ஆணவம் என கூறி சென்றுள்ளார். ஒருநாள் திரைப்பட படப்பிடிப்பு முடித்து தமது அறையில்  வந்த ரூபாலிக்கு, தாம் அருந்திய உணவில் போதை மருந்து கலந்திருப்பது தெரிய வந்தது.
இதில் அவர் ஆழ்ந்து தூங்கியுள்ளார். அப்போது அங்கு 2  மணியளவில் ரூமிற்கு வந்த புஜரி தாம் மறைத்து வைத்திருந்த ஆசிட்டை போர்வையை திறந்து ரூபாலியின் மீது வீசியுள்ளார்.

பட்ஜெட் அம்பானி காட்டில் பணமழை ....

வெப்துனியா : 2018-19-ஆம் ஆண்டிற்கான மத்திய பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்துள்ளார். இந்த பஜெட்டால் பிரபல தொழில் அதிபர் அம்பனிக்கு லாபம் உள்ளதாக கூறப்படுகிறது.
அம்பானி ஜியோ சிம் அறிமுகம் செய்து, அதன் பின்னர் ஜியோ ஃபோனையும் அறிமுகம் செய்தார். இந்நிலையில் தற்போது மத்திய அரசு இதனை மறைமுகமாக ஊக்குவிக்கும் விதமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக இறக்குமதிக்கு வரி உயர்வு செய்யப்பட்டுள்ளது. இதனால் இறக்குமதி செய்யப்படும் செல்போன்களின் விலையானது 15 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது மக்கள் அதிகமாக பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்துமே வெளிநாட்டு இறக்குமதியே.

கூகிள் ஏழு லட்சம் செயலிகளை நீக்கி இருக்கிறது

ஏழு லட்சம் செயலிகளை களையெடுத்த கூகுள்: காரணம் இது தான்மாலைமலர் : கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏழு லட்சம் செயலிகளை கடந்த ஆண்டு மட்டும் நீக்கி இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது. புதுடெல்லி: கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2017-ம் ஆண்டில் மட்டும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டு இருந்ததாக ஏழு லட்சம் செயலிகளை நிக்கியதாக கூகுள் அறிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் (machnine learning)  தொழில்நுட்பத்துடன் கூகுள் ஏற்கனவே வரையறுத்து இருக்கும் விதிமுறைகளின் கீழ் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட செயலிகளை கண்டறிந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.
மெஷின் லெர்னிங் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் புரோகிராம் செய்யப்படாமல் தானாக செயல்களை புரிந்து கொண்டு, மேம்படுத்திக் கொள்ளும் வசதி பெற்று கொள்வது எனலாம்.

விஜய் சேதுபதி ... புழுதியை கிளப்பிக்கொண்டு ஒரு சுப்பர் குதிரை வருகிறது ... தமிழ்த்திரைக்கு ஒரு நிஜ சுப்பர் ......

மின்னம்பலம் :விஜய் சேதுபதி தமிழ் சினிமாவில் வியாபாரம் உள்ள கதாநாயகனாக மாறி இருக்கிறார்.
துணை நடிகராக நடித்துக்கொண்டிருந்த விஜய் சேதுபதி 2010இல் வெளியான ‘தென் மேற்குப் பருவக்காற்று’ படத்தின் மூலம் கவனம் ஈர்க்கும் கதாநாயகனாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ஐம்பது பேரை அடித்துத் துவைக்கும் ஆக்‌ஷன் ஹீரோவாக பில்டப் கொடுக்கும் நடிகர்கள் மத்தியில், இயக்குநர் கொடுக்கும் கதாபாத்திரத்துக்குள் தன்னை நுழைத்துக்கொண்டு கவனம் ஈர்த்தவர் விஜய் சேதுபதி. தமிழ் நடிகர்கள் தங்கள் இமேஜ் பாதிக்கும் என்பதற்காக நடிக்கத் தயங்கும் கதாபாத்திரங்களைப் புறக்கணிக்காது, தன் நடிப்பை மட்டும் நம்புகிற நடிகராக வளர்ந்து நிற்கும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான படங்கள் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரமானது இல்லை.
2017இல் ரிலீஸ் ஆன ‘கருப்பன்’ படம் தமிழ்நாடு உரிமை மட்டும் அவுட் ரேட் அடிப்படையில் வியாபாரமான படம். அதை வாங்கியவருக்கு குறைந்த அளவு நஷ்டம் ஏற்பட்டது.

நடிகர் ரஜினி ஒரு பார்ப்பனர் ... மாவீரன் சிவாஜியின் சாம்ராஜ்யத்தை களவாடிய பேஷ்வா பாஜி ராவ் உறவினர் ...


நடிகர் ரஜினிகாந்த கெய்க்வாட் ( பார்ப்பனர் ) என்ற  பெயரை கொண்ட அவரது முன்னோர்கள் மராட்டிய மாவீரன் சிவாஜியின் வம்சத்தை ஏமாற்றி மராட்டிய சாம்ராஜ்யத்தை கைப்பற்றிய முதலாம் பெஷ்வா பாஜி ராவ் என்ற பார்பன முதலமைச்சரின் உறவினர்கள்
Krishnavel T S : இந்திய சூப்பர் ஸ்டார்கள்
அமிதாப்பச்சன் என்ற பெயர் இந்தியாவில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் பெரும் அளவில் பேசப்பட்ட ஒரு பெயர் ஒரு நபர், மற்றொருவர் ரஜினிகாந்த்
இந்த கட்டுரை எழுத வேண்டிய காரணம் ஏன் ஏற்பட்டது என்றால், சில நாட்களுக்கு முன் ஒரு வடஇந்திய நண்பர் என்னிடம் பேசிக்கொண்டிருந்த போது “உங்கள்” தமிழ் நாட்டில் மட்டுமே சாதி மறுப்பு உள்ளது என்று பெரிதாக அலட்டிக் கொள்ளவேண்டாம்,
உங்களுக்கே தெரியும் “எங்கள்” வடஇந்தியாவில் முதல் பெயருக்கு பின் இருக்கும் இரண்டாவது பெயர் அவரவர் சாதியை குறிக்கும். அமிதாப்பச்சன் என்ற பெயரில் பச்சன் என்பது அவரது சாதி பெயர் அபிஷேக்பச்சன் என்பதில் பச்சன் சாதி பெயர்

வியாழன், 1 பிப்ரவரி, 2018

இடைத்தேர்தல்களில் பாஜக தோல்வி ... ராஜஸ்தான் மே.வங்கத்தில் காங்கிரஸ் திரினாமுல் வெற்றி

இடைத்தேர்தல் முடிவுகள் - பாஜக தோல்வி!மின்னம்பலம் :ராஜஸ்தான் மற்றும் மேற்கு வங்கத்தில் நடந்த இடைத் தேர்தல்களில் பாஜக தோல்வியை சந்தித்துள்ளது . ராஜஸ்தான் மாநிலத்தில் ஆளும் பாஜகவை எதிர்த்து காங்கிரசும் , மேற்கு வங்கத்தில் திருணமூல் காங்கிரசும் வெற்றி பெற்று உள்ளனர்.
ராஜஸ்தான் மாநிலத்தின் அஜ்மீர், அல்வார் மக்களவைத் தொகுதி மற்றும் மண்டல்கர் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர்களின் மறைவினால் இந்த தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த திங்கட்கிழமை ( 29 ,ஜனவரி) அன்று நடந்தது . அன்றைய தினமே மேற்குவங்கத்தின் உல்பெரியா மக்களவைத் தொகுதி மற்றும் நோவபாரா சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல்களும் நடைப்பெற்றன.
இந்த ஐந்து தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கையும் இன்று (1,பிப்ரவரி) காலை 7 மணியளவில் தொடங்கியது. ராஜஸ்தானைப் பொறுத்தவரை இந்த ஆண்டின் இறுதியில் சட்டப்பேரவைத் தேர்தலை சந்திக்கயிருப்பதால் அங்கே ஆட்சியிலிருக்கும் பாஜக விற்கு இது மிக முக்கியமான தேர்தலாக பார்க்கப்பட்டது .

ஸ்டாலின் : பட்ஜெட் 4 ஆண்டுகால வீண் முழக்கங்களின் தொடர்ச்சியே!

tamilthehindu :பாஜக சுய பரிசோதனை செய்தால் கடந்த நான்கு ஆண்டுகளாக, வாக்காளர்களுக்கு வெற்று வாக்குறுதிகளையும், வீண் முழக்கங்களையும் கொடுத்துத் தொடர்ந்து திசைதிருப்பி வருவது அவர்கள் மன சாட்சிக்கே தெரியும் என பட்ஜெட் குறித்து மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மத அடிப்படைவாதம், சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறை, அரசுக்கு நெருக்கமான ஒருசில அமைப்புகள் அதிகாரத்தைக் கையிலெடுத்துக் கொண்டு செயல்படுவது போன்ற காரணங்களால், ஜனநாயகம் சிறந்து விளங்கும் நாடுகளின் பட்டியலில் 32-வது இடத்திலிருந்த இந்தியா தற்போது 42-வது இடத்திற்கு சரிந்துவிட்டது.
இந்நிலையில், அடுத்துவரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக, தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய பாஜக அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழகத்திற்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநிலத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய ரயில்வே திட்டங்கள், நதிநீர் இணைப்புத் திட்டங்கள், ஒக்கி புயல் பேரிடர் நிவாரண நிதி போன்றவை குறித்து நிதிநிலை அறிக்கையில் எவ்வித அறிவிப்பும் இடம்பெறாதது மிகுந்த வருத்தமளிக்கிறது.
குறிப்பாக, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திர மோடியிடம் நேரில் கொடுத்த தமிழகத்திற்கான பல்வேறு திட்டங்களுக்கான கோரிக்கை மனுக்களில், ஒரு திட்டத்துக்கு கூட இந்த நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படவில்லை. மேலும், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக மக்களின் நலன் ஒட்டுமொத்தமாகப் புறக்கணிக்கப்பட்டிருப்பதற்கு திமுக சார்பில் எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தென் மாநிலங்களை அடியோடு புறக்கணித்த பட்ஜெட்


யாருக்காக இந்த பட்ஜெட் 2018? புறக்கணிக்கப்பட்ட தென் இந்தியா மாநிலங்கள்; பின்னணி என்ன??
வெப்துனியா :மத்திய அரசின் சார்பாக 2018 ஆம் ஆண்டின் ரயில்வே மற்றும் பொருளாதார பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பாக தாக்கல் செய்யப்படும் கடைசி முழுமையான பட்ஜெட் இதுவாகும். எனவே தேர்தலை கவனத்தில் வைத்து இந்த பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
;இந்த வருட பட்ஜெட் தாக்கலில் தென் இந்தியா புறக்கணிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது தென்னிந்தியாவில் இருக்கும் மூன்று மாநிலங்களுக்கு முக்கியமான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேர்தலை கவனத்தில் கொண்டே இந்த பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. எனவே, விரைவி தேர்தல் நெருங்கும் மாநிலங்கள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு இருப்பதாக தெரிகிறது.

ஏழைகளுக்கு எதிரான மத்திய பட்ஜெட் - எதிர்க் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டு

ஏழைகளுக்கு எதிரான மத்திய பட்ஜெட் - எதிர்க் கட்சி தலைவர்கள் குற்றச்சாட்டுமாலைமலர் :மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என பகுஜன் சமாஜ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. புதுடெல்லி: பாராளுமன்றத்தில் நிதி மந்திரி அருண் ஜெட்லி இன்று காலை பட்ஜெட்டை தாக்கல் செய்தார். விவசாயிகள் மற்றும் பெண்களின் நலன்களில் அக்கறை கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது என ஆளும் கட்சி தெரிவித்தது.< இந்நிலையில், மத்திய அரசின் பட்ஜெட் ஏழைகளுக்கு எதிராக அமைந்துள்ளது என பகுஜன் சமாஜ், திரிணாமுல் உள்ளிட்ட எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி:

2018 - 2019 பட்ஜெட் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்! - பட்ஜெட் அப்டேட்

நக்கீரன் :மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2018 - 2019ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையை தாக்கல் செய்தார்.


அதன் முக்கிய அம்சங்கள்.. 

1. அனைத்து பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை வழங்குவது. இனி அனைத்துப் பயிர்களுக்கும் உற்பத்தி விலையை விட ஒன்றரை மடங்கு குறைந்தபட்ச ஆதார விலை வழங்கப்படும்

2. கிராமப்புற சந்தைகள் இனி கிராமப்புற வேளாண் சந்தைகளாக மேம்படுத்தப்படும்

3. இந்த வருட பட்ஜெட் வேளாண்மை மற்றும் கிராமப்புற பொருளாதாரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது

4. மகளிர் சுய உதவிக் குழுக்கள் இயற்கை வேளாண்மை செய்வதற்கு ஊக்கப்படுத்தப்படும்

5. வேளாண் சந்தைகளை மேம்படுத்துவதற்கு ரூ.2,000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது

6. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் 2 கோடி கூடுதல் கழிவறைகள் கட்டித் தரப்படும்

7. 4 கோடி வீடுகளுக்கு இலவச மின்இணைப்பு வழங்கப்படும்

8. உஜ்வாலா திட்டத்தின் கீழ் 8 கோடி பெண்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகள் இலவசமாக வழங்கப்படும்

9.  ரயில்வே திட்டங்களுக்கு 1.48 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் 
10. அரசு நிறுவனங்களின் பங்குகளை விற்பதன் மூலம் 80,000 கோடி ரூபாய் நிதி திரட்டப்படும். 

ஸ்டாலின் கழக நிர்வாகிகளுடன் ஆய்வு .. சுதந்திரமாக கருத்துக்களை கூறுமாறு வேண்டுகோள்!

மின்னம்பலம் : திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், மாவட்டம் வாரியாக திமுக நிர்வாகிகளுடன் மேற்கொள்ளவுள்ள ஆய்வுக்கூட்டம் சென்னையில் இன்று (பிப்ரவரி 1) தொடங்குகிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏற்பட்ட தோல்வி திமுகவைச் சற்றே யோசிக்க வைத்துள்ளது. நிர்வாகிகள் சரிவர தேர்தல் பணியாற்றாததே தோல்விக்குக் காரணம் எனக் கூறப்பட்ட நிலையில், சில கீழ்மட்ட நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டன. ‘மாவட்டச் செயலாளர்கள் பலரும் தேர்தல் பணி செய்யாமல் முடங்கிவிட்ட நிலையில் கீழ்மட்ட நிர்வாகிகளை நீக்குவதால் என்ன பலன்’ என்ற குரல் திமுகவில் பரவலாக எழுந்தது. எனவே கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்று அக்கட்சியின் செயல்தலைவர் ஸ்டாலின் முடிவு செய்தார். உள்ளாட்சித் தேர்தல் எப்போது வேண்டுமானாலும் வரலாம் என்ற நிலை உள்ளதால், அதற்குள் கட்சியில் உள்ள பிரச்னைகளைத் தீர்த்து வலுப்படுத்த வேண்டும் என்பது அவரது எண்ணம்.

2ஜி: ஆ.ராசாவின் தமிழ்ப் புத்தகம்... மாதம் 21ஆம் தேதி !

2ஜி: ஆ.ராசாவின் தமிழ்ப் புத்தகம்!மின்னம்பலம் : 2ஜி வழக்கு குறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆங்கிலத்தில் எழுதிய ‘2ஜி சாகா, அன்ஃபோல்ட்ஸ்’ என்ற புத்தகம் வரும் மார்ச் 21ஆம் தேதி தமிழில் வெளியிடப்பட உள்ளது.
ஏழு வருடங்களாக நடைபெற்றுவந்த 2ஜி வழக்கில் கடந்த டிசம்பர் மாதம் வெளியான தீர்ப்பில் ஆ.ராசா, திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்ளிட்ட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 2ஜி வழக்கு தொடர்பான தனது அனுபவங்களை ஆ.ராசா புத்தகமாக எழுதியிருந்தார்.
‘2ஜி சாகா, அன்ஃபோல்ட்ஸ்’ என்ற தலைப்பில் இந்தப் புத்தகம் டெல்லி ரஃபி மார்க் இந்திய அரசியல் அமைப்புச் சட்ட சபாநாயகர் அரங்கில் வெளியிடப்பட்டது.

தமிழக பாஜகவில் பார்பனர் சாதிவெறி.. .மனமுடைந்த தமிழிசை.வானதி .பொன்னார் . வெளியேறுகிறார்கள் ?

tamil.  oneindia.com/authors/ lakshmi-priya. சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மற்றும் பாஜக உறுப்பினர் எஸ்.வி.சேகர் ஆகியோரின் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் அதிருப்தி அடைந்த தமிழிசை அவர்கள் குறித்து கட்சி மேலிடத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த தகவலை தமிழிசை மறுத்துள்ளார்.
கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வைரமுத்து ஆண்டாள் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
 மேலும் வைரமுத்துவை எச்.ராஜாவும், எஸ்வி சேகரும் கடுமையாக விமர்சித்தனர். அதேபோல் எச்.ராஜாவின் தந்தை கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தமிழ்த் தாய் வாழ்த்து பாடியபோது விஜயேந்திரர் எழுந்து நிற்க வில்லை என்ற சர்ச்சை ஏற்பட்டது. இதற்கு கடந்த 2010-ஆம் ஆண்டு முதுகில் ஆபரேஷன் செய்தபோது ஒரு நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது கருணாநிதி எழுந்து நிற்காதது குறித்த வீடியோவை சமூக வலைதளங்களில் எச்.ராஜா பரப்பினார்.

ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..!


விகடன் -இரா.கலைச் செல்வன்:
ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..! #DayZero
இது கடந்த டிசம்பர் மாதம் வந்த அறிவிப்பு.
குடி தண்ணீர் – 2 லிட்டர்.
சமையலுக்கு – 4 லிட்டர்.
2 நிமிட குளியலுக்கு – 20 லிட்டர்.
துணி துவைக்க &;; பாத்திரம் கழுவ – 23 லிட்டர்.
கழிவறை உபயோகத்துக்கு – 27 லிட்டர்.
இன்னும் பிற தேவைகளுக்கு – 4 லிட்டர்.
ஒரு நாளைக்கு சேமிக்க வேண்டியவை – 7 லிட்டர்.
ஆம்…ஒரு நாளைக்கு ஒருவர் 87 லிட்டர் தண்ணீரை மட்டுமே உபயோகிக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் மாதம் சட்டம் போடப்பட்டது. மீறினால், அபராதத் தொகையோடு தண்டனை. அதிர்ச்சியடைய வேண்டாம்… அது டிசம்பர் மாதம்.
Guardian_12453  ஒரு சொட்டுத் தண்ணீர் இல்லாமல் போன உலகின் முதல் பெரு நகரம்..! #DayZero Guardian 12453இந்திய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியினர் 2 நிமிடங்களுக்கு மேல், குளிக்க தண்ணீர் பயன்படுத்தக்கூடாதென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இப்பொழுது பிப்ரவரி 1 முதல் அதை இன்னும் குறைத்து ஒரு நாளைக்கு ஒருவருக்கு 50 லிட்டர் மட்டுமே உபயோகிக்க வேண்டும்! இப்பொழுதும் அதிர்ச்சியடைய வேண்டாம்… நீங்கள் அதிர்ச்சியடைய இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கின்றன.
உலகிலேயே முதன்முறையாக ஒரு பெரு நகரம் முற்றிலும்… முற்றிலும் என்றால் எதுவுமே இல்லாமல்… கொஞ்சம் கூட இல்லாமல்… சில சொட்டுக் கூட இல்லாமல் முற்றிலுமாக தண்ணீரில்லா நிலைக்குப் போகப்போகிறது. மிக விரைவில் எட்டப்படவிருக்கும் இந்த நாளை ஆங்கிலத்தில் “டே ஜீரோ” (Day Zero) என்று சொல்கிறார்கள்.

ஸ்டாலின் :நீட் விலக்கு மசோதா ,,, குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற என்ன செய்தீர்கள்?-

tamilthehindu :சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் மசோதாவுக்கு உடனடியாக குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் வாங்க முதல்வரும், அதிமுக எம்.பி.க்களும் என்ன செய்தீர்கள் என மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், ''கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழை மாணவர்கள் மருத்துவராகும் வாய்ப்புகளை முற்றிலும் கெடுத்து, கிராமங்களில் இருந்து, குறிப்பாக பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமுதாயங்களில் இருந்து மருத்துவர்கள் யாரும் உருவாகி விடக்கூடாது என்ற ஒரே உள்நோக்கத்துடனும், சதி எண்ணத்துடனும், மத்திய பாஜக அரசால் இன்றைக்கு நீட் தேர்வு திணிக்கப்பட்டு, தமிழக மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி எட்டாக் கனியாக்கப்பட்டுள்ளது.

ஒரே தேசம் ஒரே தேர்தல் ஒரே கட்சி ஒரே தலைவர் ... வடகொரியா கெட்டுது போ ..!

nakkeeran :மத்தியில் ஆளும் பாஜக அரசு ‘ஒரே தேசம் ஒரே தேர்தல்’ என்ற திட்டத்தை அறிவித்து, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்துவதற்கான வேலைகளில் இறங்கியுள்ளது. அதற்கான திட்டமிடலும், பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘ஸ்பீக்கிங் ட்ரூத் டூ பவர்’ என்ற புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் மேடையில் பேசிய ப.சிதம்பரம், ‘தற்போது இருக்கும் அரசியல் சாசனத்தை வைத்துக்கொண்டு நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தலை ஒரே நேரத்தில் நடத்தமுடியாது. அதற்கான அதிகாரத்தையும் நம் அரசியல் சட்டம் வழங்கவில்லை.
;நாட்டில் 30 மாநிலங்கள் உள்ளன. அவை அனைத்திற்குமான தேர்தலை நடத்துவதற்கு நாடாளுமன்ற ஜனநாயக ரீதியாக சாத்தியமில்லை. மத்தியில் ஆளும் அரசு ஒரே தேசம் ஒரே வரி என்று கொண்டு வந்த ஜி.எஸ்.டி. இன்று வெற்றுக் கூச்சல் ஆகியிருக்கிறது. இப்போது ஒரே தேசம் ஒரே தேர்தல் என்ற அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அது மீண்டும் ஒரு வெற்றுக்கூச்சலாகவே மாறும்’ என தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேச காஸ்கஞ்ச் வன்முறை சங்பரிவார் RSS வெறியாட்டம் வீடியோ


Chinniah Kasi : - தீக்கதிர் தலையங்கம் உத்தரப்பிரதேசம் காஸ்கஞ்ச் வன்முறை சங்பரிவார் அமைப்புகளால் திட்டமிட்டு உருவாக்கப்பட்டது என்பது தற்போது அம்பலமாகியிருக்கிறது. மக்கள் எப்போதெல்லாம் துன்பப்படுகிறார்களோ, அப்போது மக்களின் கோபம்ஆட்சியாளர்களின் பக்கம் திரும்பாமல் பார்த்துக்கொள்ள மதவெறி ஒரு ஆயுதமாகவே பயன்படுத்துகிறது பாஜக. இந்தியாவில் சட்டத்தின்ஆட்சி நடைபெறுகிறதா, சங்பரிவாரின்தனித்த ஆட்சி நடைபெறுகிறதா என்ற சந்தேகம்எழுவது சமீப காலமாக அதிகரித்து வருகிறது. தற்போது கூட உ.பி.யில் காஸ்கஞ்ச் பகுதியில் தடையை மீறி ஏபிவிபி உள்ளிட்ட சங்பரிவார் அமைப்பினர் ஊர்வலம் நடத்தியிருக்கின்றனர். கையில் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் நுழைந்த கும்பல், சிறுபான்மையினர் வசிக்கும் பகுதியில் சென்று பல ரவுண்டு துப்பாக்கியால் வானத்தை நோக்கிசுட்டு ரகளை செய்திருக்கின்றது. அதற்கானவீடியோ ஆதாரம் தற்போது வெளியாகியிருக்கிறது.