சனி, 19 அக்டோபர், 2019

பஞ்சமி நிலம் ... அண்ணா அறிவாலயம் .. வரலாற்று பதிவு


Muralidharan Pb : வரலாறு என்றால் என்ன? 33 ஆண்டுக்கு பிறகும் இப்படி
யாராவது ஒருவன் அதைப் பற்றி பேசி அதன் பிண்ணனியை உலகுக்கு கூறிட வேண்டும். ஆனால் தவறான வகையில் பேசுபவனுக்கு தகுந்த வழியில் வரலாறை மூளைக்குள் எட்டுகிற மாதிரி கூற வேண்டும்.
(மீள் பதிவிலிருந்து)
எப்போதுமே சில சரித்திர சின்னங்கள் தானாக வந்து அமைவதில்லை. அதற்கு பின்னால் பல அவமானங்கள், சினம், சீற்றம் உள்ளடங்கி இருக்கும்.
அப்பேற்பட்ட ஒரு அவமானத்தையும், அதன் பின்னர் நடந்த ஒரு நினைவையும் இன்று காண்போம். அப்போதெல்லாம் புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டமன்ற வளாகத்திலேயே தான் ஒவ்வொரு சட்டமன்ற கட்சிகளின் அலுவலகம் அமைந்திருந்தது. 1985 மே மாதம், திமுக தலைவருக்கு ஒரு கடிதம் வருகிறது, அதுவும் பேரவைத்தலைவர் எழுதாமல், துறைச் செயலாளர் எழுதியது, 'பேரவையில் உள்ள திமுக அலுவலகத்தில் சுவற்றில் சுவரொட்டிகள் ஒட்டி இருப்பதாகவும், திமுகவின் தலைவர்கள் வண்டிகள் போர்டிகோவில் நிறுத்தப்பட்டிருக்கின்றன. அது பெரும் இடைஞ்சலாக இருப்பதாலும், வெறும் 26 சட்டமன்ற உறுப்பினர்களே கொண்ட கட்சிக்கு பெரிய அறை தேவையில்லை, காங்கிரஸ் கட்சியினர் உபயோகப்படுத்தாமல் வைத்திருக்கும் அறையை ஒதுக்கப்பட்டுள்ளதாகவும்' குறிப்பிட்டிருந்தது.
கட்சித்தலைவர் கலைஞர் பதிலளிக்கையில்,'இனி தடையாக என்றுமே கார்களை நிறுத்தமாட்டோம், சுவரொட்டிகள் ஒட்டமாட்டோம் .காங்கிரஸ் காலத்திலேயே திமுகவிற்கு ஒதுக்கப்பட்ட இடம்,

மகாராஷ்டிரா ரூ.200 கோடி சொத்து... சண்டையிடும் மனைவிகள்... - அநாதையாக இறந்த கோடீஸ்வரர்

ரூ.200 கோடி சொத்து... சண்டையிடும் மனைவிகள்... யாரும் கவனிக்கவில்லை! - அநாதையாக இறந்த கோடீஸ்வரர் 
vikatan.com : மகாராஷ்ட்ராவைச் சேர்ந்த நிகில் ஜவேரிக்கு 200 கோடி மதிப்புள்ள சொத்து இருந்தும் கடைசி காலத்தில் கவனித்துக்கொள்ள ஆள் இல்லாமல் மருத்துவமனையில் உயிரிழந்தார். > மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர் நிகில் ஜவேரி. இவருக்கு 200 கோடி மதிப்புள்ள சொத்துகள் இருந்தும் மருத்துவமனையில் அநாதையாக உயிரிழந்துள்ளார். ஜவேரியின் உடலைக்கூட வாங்க முன்வராத உறவுகள், அவரது 200 கோடி சொத்துக்கு சண்டையிட்டு வருகின்றனர்.
நிகில் ஜவேரிக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இரண்டாவது மனைவிக்கு ஒரு மகனும் உள்ளார். இரண்டு மனைவிகளையும் ஜவேரி விவாகரத்து செய்துள்ளார். 2009-ம் ஆண்டு ஜவேரி உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஐவேரிக்கு நரம்பியல் தொடர்பான பிரச்னைகள் இருப்பதாகக் கூறினர். தன் சகோதரி வீட்டில் வசித்து வந்தவர் திடீரென கடந்த 2013-ம் ஆண்டு ஜவேரி மாயமானார்.

மகளைக் கொன்ற வழக்கில் இந்திராணி பேனர்ஜிக்கு சி.பி.ஐ மன்னிப்பு வழங்கியது Indrani Mukerjea pardoned from CBI chargesheet

INX case: Why Indrani Mukerjea was pardoned from CBI chargesheet
According to the CBI, Indrani has not been included in the chargesheet as an accused since her application for becoming approver and grant of pardon has been accepted by the court on 11/07/2019. (Photo: File)! டான் அசோக் :  மகளைக் கொன்ற வழக்கில் இந்திராணி பேனர்ஜிக்கு சி.பி.ஐ மன்னிப்பு வழங்கியுள்ளது. எதற்கு? 15 பேர் சேர்ந்து 10 லட்ச ரூபாய் 'மகா' ஊழல் செய்ததாக ப.சிதம்பரத்தின் மீது சார்ஜ்ஷீட் போட உதவியதற்கு!! ப.சிதம்பரம் பரம்பரை பணக்காரர். லட்சம் லட்சமாக சம்பளம் வாங்கும் வழக்கறிஞர். அவர் மேல் 15/10 என 75000ரூபாய்க்கு வழக்கு போட்டிருக்கிறார்கள். இதற்குத்தான் சுவர் எல்லாம் ஏறிக்குதித்து கைது செய்தார்கள். இந்த சில நாட்களில் கண்டிப்பாக அரசுக்கான வழக்கு செலவு 10லட்சத்திற்கு மேல் ஆகியிருக்கும். ஒருவரை பழிவாங்க வேண்டும் என முடிவெடுத்துவிட்டால் கிறுக்குத்தனமாக வழக்கம் போடலாம், மகளைக் கொன்றவரை மன்னிக்கவும் செய்யலாம் என்பதுதான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் புதிய இந்தியா! ஜெய்ஹிந்த்!
www.asianage.com : The chargesheet was filed on Friday when the SC reserved its order against Chidambaram.
 According to the CBI, Indrani has not been included in the chargesheet as an accused since her application for becoming approver and grant of pardon has been accepted by the court on 11/07/2019. (Photo: File)
New Delhi: The Central Bureau of Investigation (CBI), on Friday, charged former finance minister P Chidambaram for misusing his position in facilitating an FDI proposal of INX group companies.
However, Indrani Mukerjea, former promoter of INX media and accused-turned approver in the case, was spared the charges on grounds of being pardoned by a Delhi Court, CNBC TV18 reported.
According to the CBI, Indrani has not been included in the chargesheet as an accused since her application for becoming approver and grant of pardon has been accepted by the court on 11/07/2019.
The chargesheet has names of 14 accused people including former minister P Chidambaram and son Karti.

லலிதா ஜுவல்லரி கொள்ளை பின்னணியில் ஒரு முன்னாள் போலீஸ் அதிகாரி ? முருகன் அலுமினிய தொழிற்சாலை . படத்தயாரிப்பு ....

முருகன் போலீசில் சிக்காமல் இருக்க வழிகாட்டிய முன்னாள் அதிகாரி மாலைமலர் :  பள்ளி படிப்பை தாண்டாத முருகனின் கிரிமினல் தனத்திற்கு பின்னால் மூளையாக செயல்பட்டது ஒரு முக்கிய முன்னாள் அதிகாரி என கூறப்படுகிறது.
போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட சுற்றுலா வேனை படத்தில் காணலாம்.திருச்சி: தமிழகம், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் வங்கி மற்றும் நகைக்கடை கடைகளில் கொள்ளையடித்து 3 மாநில போலீசாருக்கு தண்ணி காட்டி வந்த பிரபல கொள்ளையன் திருவாரூர் முருகன், கூட்டாளிகள் தற்போது போலீஸ் பிடியில் உள்ளனர். இதில் முருகன் பெங்களூர் போலீஸ் காவல் விசாரணையிலும், சுரேஷ் திருச்சி மாநகர போலீஸ் விசாரணையிலும், கூட்டாளி மதுரை கணேஷ் சமயபுரம் போலீஸ் காவல் விசாரணையிலும் இருந்து வருகிறார்கள்.
கர்நாடக வங்கியில் 2015-ம் ஆண்டு அடித்த 150 கிலோ தங்கம், சென்னை அண்ணாநகரில் 20 வீடுகளில் நடந்த கொள்ளை, மதுரை நகைக்கடை பஜாரில் அடகுக்கடையில் 1,500 பவுன் கொள்ளை என பல வழக்குகளில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகை- பணத்தை கொள்ளையடித்த முருகன் கூட்டாளிகள், இந்தாண்டு திருச்சியை மையமாக கொண்டு கொள்ளையடிக்க தொடங்கி இருந்தனர்.
ஜனவரி 7-ந்தேதி உப்பிலியபுரம் வங்கி, 18-ந்தேதி மண்ணச்சநல்லூர் வங்கி, ஜனவரி 26-ந்தேதி சமயபுரம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கி என கொள்ளையடித்த முருகன் கூட்டாளிகள் கடைசியில் அக்டோபர் 2-ந்தேதி திருச்சி சத்திரம் பஸ்நிலையம் லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்த சம்பவத்தில் சிக்கிக்கொண்டனர்.

பிஎம்சி மோசடி: சிகிச்சைக்குப் பணமின்றி முதியவர் உயிரழப்பு .. PMC Bank scam: Depositors stage protest near RBI headquarters


பிஎம்சி மோசடி: சிகிச்சைக்குப் பணமின்றி முதியவர் மரணம்!மின்னம்பலம் : பிஎம்சி வங்கி மோசடியால், அதன் வாடிக்கையாளர்கள் அடுத்தடுத்து உயிரிழந்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா வங்கி, ஹவுசிங் டெவலப்மெண்ட் மற்றும் இன்பிராஸ்ட்ரக்சர் லிமிடெட் என்ற கட்டுமான நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கியின் விதியை மீறி முறைகேடாகக் கடன் வழங்கியது தெரியவந்தது. இந்த மோசடியைத் தொடர்ந்து இந்த வங்கிக்கு ரிசர்வ் வங்கி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக இந்த வங்கியில் பணத்தை டெபாசிட் செய்த வாடிக்கையாளர்கள் ரூ.40,000 மட்டுமே எடுக்க முடியும் என்று அறிவித்தது.

கல்கி / அம்மா பகவான் தப்பி ஓடிவிட்டார் .. ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள் தவிப்பு!

பக்தர்கள் நிதி வீடியோக்கள் பகவானை"யே காணவில்லையாம்.. கல்கி ஆசிரமத்தில் பரபரப்பு.. விசாரிக்க முடியாமல் ஐடி அதிகாரிகள்  தவிப்பு!.
tamil.oneindia.com - hemavandhana : சென்னை: கல்கி பகவானையே காணவில்லையாம்.. விஷ்ணுவின் அவதாரம் என்று அறிவித்து கொண்ட 70 வயது சாமியாரும், அவரது மனைவி அம்மா பகவானும் மாயமாகிவிட்டனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் சென்னையில் டான் போஸ்கோவில் ஸ்கூல் படித்தார். டி.ஜி வைஷ்ணவாவில் காலேஜ் முடித்தார்.
இதற்கு பிறகு கொஞ்ச நாள் எல்ஐசி ஏஜெண்ட்டாக இருந்தபோது, ஜே.கிருஷ்ணமூர்த்தியின் சிந்தனைகளுக்கு அறிமுகம் ஆனார்.. அவரது சிந்தனைகள் விஜயகுமாரை ஈர்த்தது.. அப்போதுதான் தியானத்தின் மீது ஒரு பிடிப்பு ஏற்பட்டு, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.

ராஜேந்திர பாலாஜி : காஷ்மீரை போல முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகும்

ஆர்ப்பாட்டம் எஸ்.டி.பி.ஐ ஆர்பாட்டம் இந்தப் பேச்சுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்'-ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக  கடுகடுக்கும் எஸ்டிபிஐ!
vikatan - செ.சல்மான் பாரிஸ் - ஈ.ஜெ.நந்தகுமார் ; `'எங்களுக்கு வாக்களிக்காத முஸ்லிம்களுக்கும், கிறிஸ்தவர்களுக்கும் கோரிக்கையை ஏன் நிறைவேற்ற வேண்டும்? அ.தி.மு.கவுக்கும் முஸ்லிம்களுக்கும் என்ன சம்பந்தம்?' ``காஷ்மீரைப் போன்று தமிழக முஸ்லிம்களை ஒதுக்கி வைக்கும் நிலை உருவாகும்" என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேசியதைக் கண்டித்துப் பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் மதுரை தெற்குவாசல் பகுதியில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிவரும் ராஜேந்திர பாலாஜியை அமைச்சர் பொறுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று பேசியவர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்குப் பின் மதுரை மாவட்டத்தலைவர் முஜிபுர் ரஹ்மான் செய்தியாளர்களிடம் பேசும்போது, ``நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, முஸ்லிம்கள் பற்றி மிக மோசமாகவும் மறைமுக எச்சரிக்கை விடுக்கும் வகையிலும் பேசியுள்ளார்.

The One and Only...Parasakthi . நிகரற்ற வரலாற்று புரட்சி நிகழ்த்திய பராசக்தி .. 17-10 - 1952

சமூகநீதி சுயமரியாதையை பேசி பிரமாண்ட வெற்றியை பெற்ற முதல் தமிழ் திரைப்படம் பராசக்தி !
கொழும்பில் 294 நாள்களும், யாழ்ப்பாணத்தில் 116 நாள்களும் ஓடியது. வெளிநாட்டில் முதன்முதலில் வெள்ளிவிழா கண்ட முதல் தமிழ் சமுக  திரைப்படம் என்ற பெருமை பராசக்திக்குதான் உண்டு பராசக்தி திரைப்படம் 60-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் 50 நாள்களைக் கடந்தும், 10 திரையரங்குகளில் 100 நாள்களைக் கடந்தும் ஓடியது. ஆசியாவின் மிகப் பெரிய திரையரங்கமான, மதுரை தங்கம் திரையரங்கில் முதலில் திரையிடப்பட்ட திரைப்படமும், 100 நாள்களை கடந்து ஓடிய முதல் படமும் பராசக்தி என்பது குறிப்பிடத்தக்கது. கதை, வசனம் இசைத் தட்டாகவும், புத்தகமாகவும் வெளிவந்த முதல் சமூகப் படமும் இதுவே!.
Rebel Ravi ; The One and Only...Parasakthi
Parasakthi was released on the very same day 67 years ago. And Tamil Cinema was not the same afterwards. Parasakthi was not an ordinary film, it was not even a trend mere setter. Parasakthi was an harbinger of social reforms.
Parasakthi hit Tamil society like a bolt from blue. It shook the collective conscience of the Tamils.
People couldn't believe their eyes and ears. They started seeing the magnum opus again and again to memorize the chaste,alliterative Tamil lines spoken in the film by the vibrant and dynamic youngster, newcomer Sivaji Ganesan.

Parasakthi was originally a play written by Pavalar Balasundaram, a left intellectual. The film rights were bought by National Pictures Perumal. He was a disciple of Anna, the founder of Dravida Munnetra Kazhakam DMK. It was Anna who forced Perumal to caste Ganesan as the lead. Though the partner AVMeiyappa Chettiar wanted a DMK actor KRRamasamy to play the protagonist's role, Anna convinced both the producer and the actor that Sivaji will be better suited for that role. It was Anna who suggested that Kalaignar Karunanidhi writes the dialogues. And the rest was History.
Parasakthi challenged every accepted norm of the Tamil society.
The hero attacked the rich. He represented the quintessential Tamil working class.
He spoke for women's rights.

ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்னோம்ன்னு ஜம்பம் பேசி ... சீமானே ...


எம் புள்ள விடுதலையாகணும் என முப்பது வருஷம் போராடினேன்
செங்கொடிங்கிற பிள்ளை தன்னை எரிச்சி தியாகம் பண்ணுச்சு ....
தமிழ்நாட்டில் இருக்கிற காங்கிரஸ் கட்சியை தவிர அத்துனை பேரும் கட்சி பேதம் மறந்து எம் புள்ள விடுதலைக்கு குரல் கொடுத்தாங்க போராடினாங்க எல்லாவற்றிற்கும் மேல தம்பி திருமாவளவன் டெல்லிக்கு அழச்சிட்டு போயி அமித்ஷாகிட்டயே என் புள்ள விடுதலைக்கு கோரிக்கை வைத்தாரு
தமிழக அரசும் எம் புள்ளைய விடுதலை பண்ணணும் என தீர்மானம் நிறைவேத்துச்சு ...
காலம் கனிந்து எம் புள்ள சிறையிலிருந்து வந்துடுவான் என் கண்ணீருக்கும் போராட்டத்திற்கும் ஒரு முடிவு வந்துடும் என நம்பியிருந்த நேரத்துல ....
அடுக்கி வெச்ச பானைகள் மேல யானை ஏறி மிதிச்ச மாதிரி அற்ப ஓட்டு வாங்கணுங்ம்ங்கற ஒரே காரணத்திற்காக ....
எந்த பொய்ய சொல்லி எம் புள்ளைய உள்ள தள்ளுனாங்களோ அது பொய் இல்ல ராஜீவ் காந்தியை நாங்கதான் கொன்னோம்ன்னு ஜம்பம் பேசி என் புள்ளையின் விடுதலையை தடுக்க நீ ஒரு காரணமாயிட்டியே சீமானே .....
காங்கிரஸ்காரனும் பாஜக வினரும் எம் புள்ள விடுதலையை தடுக்கும்போது வேதனையா இருந்தது வலிக்கல

அண்ணா பல்கலை. டீன் .. ஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான் ஒத்துக்கலை.. தண்டித்து விட்டார்


Hemavandhana |tamil.oneindia.com :  ஏகப்பட்ட பாலியல் தொல்லை.. நான்
ஒத்துக்கலை.. அந்த ஆத்திரத்தில் எனக்கு பனிஷ்மென்ட் தந்தாரு" என்று திருக்குவளையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறுப்பு முதல்வர் மீது பெண் துணை பேராசிரியர் அளித்துள்ள குற்றச்சாட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
நாகை மாவட்டம் திருக்குவளையில் அண்ணா பல்கலைக் கழக வளாகம் உள்ளது. இங்கு துணை பேராசிரியராக வேலை பார்ப்பவர் ஹேமா. இவருக்கு கல்லூரி பொறுப்பு முதல்வர் துரைராசன் அடிக்கடி பாலியல் தொல்லை
கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 
ஒருநாள் டீனிடம் கையெழுத்து வாங்க அவரது ரூமுக்கு ஹேமா செல்லவும், அப்போது எல்லைமீறி விட்டாராம்.. 
இதனால் அங்கிருந்து நாசூக்காக தப்பி வந்த ஹேமா, வீட்டிற்கு வந்து கணவனிடம் நடந்ததை சொல்லி அழுதுள்ளார். பிறகு டீனுக்கே போன் செய்து, தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் கண்ணீருடன் கூறி தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார்.

மெக்சிகோவில் இருந்து 311 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர்

311 Indians deported by Mexico arrived in Delhi tamil.oneindia.com : டெல்லி: மெக்சிகோவில் இருந்து நாடு கடத்தப்பட்ட 311 இந்தியர்கள் இன்று தனி விமானம் மூலம் டெல்லி திரும்பினர்.
மெக்சிகோவில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் குடியேறுகின்றனர். இது அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.
இதனால் சட்டவிரோதமாக குடியேறுவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மெக்சிகோவுக்கு அமெரிக்கா பல்வேறு கடுமையான நிபந்தனைகளை விதித்து வருகிறது. இதனையடுத்து மெக்சிகோவும் முழு வீச்சில் சட்டவிரோதமாக நுழைந்தவர்களை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி: பன்னீருக்கு எடப்பாடியின் பகீர் நிபந்தனை!

டிஜிட்டல் திண்ணை:  மகனுக்கு மத்திய அமைச்சர் பதவி:  பன்னீருக்கு எடப்பாடியின் பகீர் நிபந்தனை!மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும், வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.
“சில நாட்களாகவே அதிமுக சீனியர்கள் முதல், தொண்டர்கள் வரை பலரும் விவாதித்துக் கொள்ளும் ஒரு சப்ஜெக்ட் என்றால் சசிகலா பற்றி ஓ.பன்னீர் கூறியதுதான். சத்தியத்தின் கோட்டைக்குள் சாத்தான்கள் நோட்டமா என்று நமது அம்மாவில் சசிகலா வகையறாக்களை சாத்தான்கள் என்று குற்றம் சாட்டி எடப்பாடி உத்தரவின் பேரில் கவிதை வெளியான சில நாட்களிலேயே, சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அவரை அதிமுகவில் மீண்டும் சேர்த்துக் கொள்வது பற்றி தலைமை முடிவு செய்யும் என்று பல படிகள் ஒரேயடியாக இறங்கி வந்து பேட்டி கொடுத்தார் ஓ.பன்னீர் செல்வம். இதனால் அதிமுகவில் மீண்டும் சலசலப்புகள் கிளம்பிவிட்டன.

கல்கி ஆச்சிரமம் தோண்ட தோண்ட பணம், அமெரிக்கா டாலர்! 500 கோடி வரி ஏய்ப்பு

 இந்த இடங்களில் கணக்கில் வராத 49 கோடி ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.  18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது. 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கல்கி சாமியாரின் ஆசிரமம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.   tamil.news18.com:
கல்கி சாமியாருக்கு சொந்தமான இடங்களில் இருந்து கணக்கில் வராத 49 கோடி ரூபாயை பறிமுதல் செய்துள்ள வருமான வரித்துறை, 500 கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், கல்கி சாமியாரின் ஆசிரமம் மற்றும் அவரது மகனுக்கு சொந்தமான இடங்களில் நடத்திய சோதனையில், 2014-15-ஆம் நிதியாண்டு முதல் 500 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 18 கோடி ரூபாய் மதிப்பிலான அமெரிக்க டாலர் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் வருமானவரித்துறை கூறியுள்ளது.
26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 26 கோடி ரூபாய் மதிப்புள்ள 88 கிலோ தங்க நகைகள் மற்றும் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆயிரத்து 271 கேரட் வைர நகைகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

தமிழக வேலை தமிழருக்கே ! ட்டதாரி இளைஞர்கள் போர்க்கொடி ... ஆர்ப்பாட்டம் ..

PUDUKKOTTAI DEGREE HOLDERS STRIKE NEED FOR JOB
nakkheeran.in - பகத்சிங் : தமிழ்நாடு அரசு வேலைகளைக் கூட அனைத்து மாநிலத்தவர்களுக்கும் வழங்கி வருகிறது தமிழ்நாடு அரசு. தமிழ்நாட்டில் கோடிக்கணக்காண இளைஞர்கள் படித்து படடங்களை வாங்கி வைத்து விட்டு வேலை இல்லாமல் தவிக்கும் நிலையில் தான் தமிழக அரசு இப்படி வஞ்சிக்கிறது.
மற்ற மாநிலங்களில் அந்தந்த மாநில பணிகளில் 100 சதவீதமும் அந்த மாநிலத்தவருக்கே.. மத்திய அரசு வேலையில் 80 சதவீதம் அந்தந்த மாநிலத்தை சேர்ந்தவருக்கே என்பதில் உறுதியாக இருக்கும் போது, தமிழகத்தில் மட்டும் யார் வேண்டுமானாலும் வந்து வேலை செய்யலாம் என்று சொல்வது தமிழக இளைஞர்களுக்கு அரசாங்கம் செய்யும் கொடுமை.
இந்த நிலையில் தான் தமிழக அரசியல் கட்சிகள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் முடிவுகளை மாற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தனர். ஆனால் இதற்கு வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் களமிறங்கினால் தான் அரசுகள் கவனிக்கும் என்ற நிலை இருந்தது. தமிழக அரசு விதியை மாற்று என்ற முழக்கத்துடன்.. முதல் கட்டமாக புதுக்கோட்டை காந்தி பேரவை சார்பில் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்களை ஒன்றிணைத்து பிரமாண்டமான உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

BBC : யாழ்ப்பாணம் – தமிழ்நாடு விமான சேவை: “பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவருகிறது


BBC : இலங்கையில் 41 வருடங்களுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டுள்ள
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம், இன்றையச் சூழலில் தமிழக மக்களுக்கும், ஈழத் தமிழர்களுக்கும் இடையில் உள்ள உறவினைப் மேலும் பலப்படுத்துமா? 1942ம் ஆண்டு இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய படைகளால் முதல் முறையாக யாழ்ப்பாணம் பலாலி பிரதேசத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது. இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் பலாலி விமான நிலையம் இலங்கை படையினரிடம் கையளிக்கப்பட்டது.
1947ம் ஆண்டு முதல் முறையாக பலாலியில் இருந்து இந்தியாவிற்கு விமான சேவை ஆரம்பிக்கப்பட்டது.

ஆப்கானிஸ்தான் மசூதியில் குண்டுவெடிப்பு - 62 பேர் உயிரிழப்பு


BBC : ஆப்கானிஸ்தானில் இன்று (வெள்ளிக்கிழமை) மசூதி ஒன்றில் மக்கள் தொழுகையில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது குண்டுவெடித்ததில் 62 உயிரிழந்ததாகவும், இருபதுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஆப்கானிஸ்தானின் கிழக்கு பகுதியிலுள்ள நங்கர்ஹார் மாகாணத்தில் நடைபெற்ற இந்த குண்டுவெடிப்பில் மசூதியின் மேற்கூரை தகர்ந்து விட்டதாக இந்த சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை
ஆப்கானிஸ்தானில் கடந்த கோடைகாலத்தின்போது, தாக்குதல்களினால் உயிரிழந்த பொது மக்களின் எண்ணிக்கை முன்னெப்போதுமில்லாத அளவை அடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்த அடுத்த நாளே இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது.
கடந்த ஜூலை மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் 1,174 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐநா கூறுகிறது.
இது ஒரு தசாப்தத்திற்கு முன்னர் ஐ.நா. இதுகுறித்த பதிவுகளை மேற்கொள்ள தொடங்கியதில் இருந்து பதிவாகியுள்ள மிகவும் மோசமான காலாண்டாகும்

வெள்ளி, 18 அக்டோபர், 2019

உச்சநீதி மன்ற தலைமை நீதிபதியாக பாப்டே நியமனம்

தினமலர் :  புதுடில்லி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்து வரும் ரஞ்சன்
கோகாய் பதவிக்காலம் முடிவதை அடுத்து நீதிபதி பாப்டே தலைமை நீதிபதியாக நியமிக்கப்படவுள்ளார்.
பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்புகளை வழங்கியவர் ரஞ்சன் கோகாய். இவர் மீது கோர்ட் பெண் பணியாளர் ஒருவர் செக்ஸ் புகார் கூறினார். ஆனால் விசாரணையில்இது பொய் புகார் என்று தெரிய வந்தது. தற்போது அவர் அயோத்தி விவகார வழக்கை விசாரித்து வருகிறார்.
இந்த வழக்கில் விரைவில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. கடந்த 2018 அக்டோபர் 3 ம் தேதி முதல் பதவி வகித்து வரும் கோகாய் பதவி காலம் வரும் நவம்பர் மாதம் 17 ம் தேதி நிறைவு பெறுகிறது. ஒரு வருடம் 5 மாத காலம் இந்நிலையில் தலைமை நீதிபதியாக எஸ். ஏ.பாப்டே என்பவரை நியமிப்பதாக ரஞ்சன் கோகாய் சட்ட அமைச்சகத்திற்கு எழுதியுள்ள பரிந்துரை கடிதத்தில் கூறியுள்ளார்.

பஞ்சமி நிலம்: ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்!

பஞ்சமி நிலம்: ராமதாஸுக்கு ஸ்டாலின் சவால்!மின்னம்பலம் : ரசொலி அலுவலகம் தொடர்பான ராமதாஸின் விமர்சனத்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
நாங்குநேரி   தொகுதியில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் ஸ்டாலின், நேற்று முன் தினம் இரவு தூத்துக்குடி பாலகிருஷ்ணா திரையரங்கில் நடிகர் தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் திரைப்படத்தை கண்டுகளித்தார். மேலும், “அசுரன் படம் மட்டுமல்ல பாடம். பஞ்சமி நில உரிமை மீட்பை மையமாக வைத்து சாதிய சமூகத்தைச் சாடும் - சாதி வன்மத்தை கேள்வி கேட்கும் துணிச்சல்காரன்” என்று குறிப்பிட்டு தனுஷுக்கும் வெற்றிமாறனுக்கும் பாராட்டு தெரிவித்திருந்தார். சமீப காலமாக திமுக-பாமக இடையே அறிக்கைப் போர் நடந்துவரும் நிலையில், ஸ்டாலின் அசுரன் திரைப்படம் பார்த்து தெரிவித்திருந்த கருத்தை பாமக நிறுவனர் ராமதாஸ் விமர்சித்தார். “பஞ்சமி நில மீட்பு குறித்து பேசும் அசுரன் படம் அல்ல... பாடம்: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் - ஆஹா.... அற்புதம்... அசுரன் கற்றுத் தந்த பாடத்தை ஏற்று, முரசொலி அலுவலகத்திற்காக வளைக்கப்பட்ட பஞ்சமி நிலங்களை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பார் என்று நம்புவோம்” என்று ராமதாஸ் தெரிவிக்க, இந்த விவகாரம் சர்ச்சையானது.

எழுவர் விடுதலை: நிராகரித்த ஆளுநர்!

 எழுவர் விடுதலை: நிராகரித்த ஆளுநர்!மின்னம்பலம் : எழுவர் விடுதலையில் ஆளுநர் முடிவு தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டு 27 வருடங்களுக்கு மேலாக சிறையில் உள்ள பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ராபர்ட் பயஸ் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநரே முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதனையடுத்து, ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டுமென தமிழக அமைச்சரவையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் இயற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதற்கு முன்பாக அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணனிடம் கருத்து கேட்கப்பட்டிருந்தது. அரசியலமைப்பின் 161வது பிரிவை பயன்படுத்தி 7 பேரையும் ஆளுநர் விடுவிக்க முடியும் என அவர் தெரிவித்திருந்தார்.

ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்

இந்திராணி முகர்ஜி - பீட்டர் முகர்ஜிஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு - ப.சிதம்பரம் உள்பட 14 பேர் மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்    மாலைமலர் :ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் மத்திய முன்னாள் மந்திரி ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம், பீட்டர் முகர்ஜி உள்பட 14 பேர் மீது டெல்லி சி.பி.ஐ. கோர்ட்டில் இன்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுடெல்ல. ஐ.என்.எக்ஸ். மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து ரூ.305 கோடி நிதி திரட்ட மத்திய நிதி அமைச்சகம் அனுமதி வழங்கியதில் ப.சிதம்பரமும், அவரது மகன் கார்த்தி சிதம்பரமும் முறைகேடுகள் செய்ததாக புகார்கள் எழுந்தன.
ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் உள்ளிட்டோர் மீது சி.பி.ஐ.யும், அமலாக்கத்துறையும் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

நீட் தேர்வில் கர்நாடக துணை முதல்வர் புரந்தேந்திரப்பா பண்ணிய பிராடு வேலைகள் 300 சீட்டுகளை...

நீட் பரீட்சையில் எந்தெந்த வகையிலெல்லாம் பிராட் பண்ண முடியும் என்பதற்கு ஒரு உதாரணம்!
கர்நாடக துணை முதல்வர் புரந்தேந்திரப்பா நடத்திய விஷயங்களை பாருங்கள்!
அவர் குடும்பத்தில் இரண்டு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன! ஒன்று சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி இன்னொன்று சித்தார்த்தா இன்ஸ்டிட்டியூட் ஆப் மெடிக்கல் சயின்ஸ்!
ஒரு ஏஜண்ட் ஒருவரை அமர்த்திக் கொள்கிறார்கள்! அவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டா செல்கிறார்! அங்கிருந்து மருத்துவம் முதலாண்டு அல்லது இரண்டாமாண்டு படிக்கும் மாணவர்கள் சுமார் 300 பேர்களை அழைத்து வருகிறார்! அவர்களை நீட் பரீட்சை எழுத வைக்கிறார்! அவர்களும் ரேங்க் வாங்கி பாஸ் ஆகிறார்கள்! அவர்கள் கௌன்சிலிங்க் எங்கு வேண்டுமென்றால் சித்தார்த்தா காலேஜையே சொல்கிறார்கள்!
முதல் ரவுண்ட் கௌன்சிலிங் வருகிறார்கள்! அதற்கு ரெக்கார்ட் வெரிபிகேஷன் இல்லை என்பதால் நீட் மார்க்கை கொடுத்து சீட் பெறுகிறார்கள்! பின் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு அவர்களுக்கு பைன் எதுவும் இல்லை!
அடுத்து இரண்டாம் ரவுண்ட் கௌன்ஸின்லிங் வருகிறது! அதிலும் அவர்கள் வருகிறார்கள்! சேராமல் விடுகிறார்கள்! ஆனால் இங்கு 2 லட்சம் ஃபைன் கட்ட வேண்டும்! அதை ஏஜண்ட் கட்டுகிறார்!
அடுத்து மாப் அப் ரவுண்ட் என்ற ரவுண்ட் வருகிறது! இதற்கும் அவர்கள் வருகிறார்கள்! இதிலும் சேராமல் விடுகிறார்கள்! இதற்கு ஃபைன் 2 லட்ச ரூபாய் அதை ஏஜண்ட் கட்டி விடுகிறார்!

அமித் ‌ஷா : இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும்

இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் - அமித் ‌ஷா வலியுறுத்தல் மாலைமலர் :  இந்திய கண்ணோட்டத்தில் இந்தியாவின் வரலாற்றை மாற்றி எழுத வேண்டும் என்று அமித் ‌ஷா வலியுறுத்தினார்.
 வாரணாசி: உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் குப்த பேரரசர் ஸ்கந்தகுப்த விக்ரமாதித்தன் குறித்த 2 நாள் சர்வதேச கருத்தரங்கம் நேற்று தொடங்கியது. இதை மத்திய உள்துறை மந்திரி அமித் ‌ஷா தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
இங்கு மேடையிலும், பார்வையாளர்கள் வரிசையிலும் திறமையான வரலாற்று அறிஞர்கள் உள்ளனர். உங்கள் அனைவருக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன். இந்திய வரலாற்றை இந்தியாவின் கண்ணோட்டத்தில் மாற்றி எழுத வேண்டியது அவசியம். யார் மீதும் பழி போடாமல் எழுத வேண்டும்.
நமது வரலாற்றை எழுத வேண்டியது நமது பொறுப்பு. எத்தனை காலத்துக்கு ஆங்கிலேயர்களையே குற்றம் சாட்டிக்கொண்டிருக்க போகிறோம்? யார் மீதும் பழி சுமத்த வேண்டியது இல்லை. உண்மை என்னவோ, அதை மட்டும் எழுதுங்கள். அது காலம் கடந்தும் நிற்கும்.

ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து

ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து தினத்தந்தி :  ஜம்மு காஷ்மீரில் சட்ட மேலவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவு நேற்று (வியாழக்கிழமை) ரத்து செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகர், கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்தது.  அம்மாநிலத்தை ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மறுசீரமைப்பு 2019 சட்டத்தின் படி அம்மாநிலத்தின் லடாக் பகுதி சட்டசபை இல்லாத யூனியன் பிரதேசமாகவும் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மறுசீரமைப்பு சட்டம் விதி 54-ன் படி, ஜம்மு-காஷ்மீரில் 62 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த சட்ட மேலவையை கலைப்பதற்கான உத்தரவை பொது நிர்வாகத்துறை  வெளியிட்டுள்ளது.

பாஜகா பாசிசத்தின் எதிர்ப்பு குறியீடு.... ப.சிதம்பரம்


ப.சிதம்பரம் .. மீது பலருக்கும் நியாயமான விமர்சனங்கள் உண்டு .. கோபங்கள் கூட உண்டு. அவற்றில் நியாங்கள் கூட உண்டு .
ஆனால் .... இன்றய காலக்கட்டத்தில் ஒரு மோசமான பாசிசத்தின் எதிர்ப்பு குறியீடாக காலம் அவரை நகர்த்தி விட்டது.
இந்திய பொருளாதாரத்துக்கு திரு.சிதம்பரத்தின் பங்களிப்பு இலகுவில் கடந்து போய்விட கூடிய ஒன்றல்ல .
பிரதமர் நாற்காலியை தொட்டு விடும் தூரத்தில் இருந்தவர் .. அந்த அளவுக்கு தகுதி நிறைந்தவர்.
இன்று அவருக்கு எதிராக கூறப்படும் குற்றச்சாட்டுககள் உள்நோக்கம் கொண்டவை என்பது முழு உலகமும் அறிந்த உண்மை ..
சிதம்பரத்தின் மீதான அரசின் தாக்குதலுக்கு அவரது கட்சியே நியாயமான எதிர்ப்பை காட்ட முடியாத அளவு பலவீனப்பட்டு உள்ளது .
எந்த எதிர்கட்சியும் இந்த விடயத்தில் மத்திய அரசுக்கு தொல்லை கொடுக்கும் அளவுக்கு கடுமையாக எதிர்க்கவில்லை..
இது ஒரு மோசமான நிலை.
சிதம்பரத்தின் நிலை இன்னும் மோசமானால்கூட ஒன்றும் பிரச்சனை இல்லை என்ற நம்பிக்கை அமித்ஷா மோடி கும்பலுக்கு வரலாம் ..
முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய விடயம். அவரது வயது மூப்பு .
சிதம்பரத்தின் நிலையில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் ...
இனி எவரையும் எதுவும் செய்யலாம் என்ற நம்பிக்கையை அயோக்கிய ஆட்சியாளர்கள் பெற்று விடுவார்கள் ...
அந்த நிலையை நோக்கி ஏற்கனவே நெருங்கி விட்டார்கள் .
இது ஒரு முடிவின் ஆர்ம்பமாக்த்தான் தெரிகிறது !
சிதம்பரத்தை காப்பாற்ற ஜனநாயக சக்திகளால் முடியாவிட்டால் ... ..
அடுத்தது நீங்களாகவே கூட இருக்கலாம் ..

மிசாக் காலம் ..ஸ்டாலின் மீது கடுமையான தாக்குதல் .. சிட்டி பாபு எப்படி இறந்தார்? துக்ளக்’ இதழிலிருந்து....

ஸ்டாலின்- சிட்டிபாபு
ஒருநாள் இரவு 11 மணிக்கு மேல் என் அறைக் கதவு திறக்கப்பட்டு, என் கால்மீது ஏதோ விழுந்தது போன்ற சப்தம். எழுந்து பார்த்தால், ஒரு உருவம். ‘யார் என்று குரல் கொடுத்தேன். அப்படி என் மீது விழுந்தவர் மு.க.ஸ்டாலின். அவரது உடல் முழுவதும் பிரம்படி அடையாளம்.
மிசாக் காலம் .. நெருக்கடி நிலை பிரகடனம் செய் யப்பட்டதன் பின்னணி, அதன் பாதிப்புகள், மிசா கைதிகள் அனுபவித்த கொடுமைகள் பற்றி இப்பகுதியில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி நினைவு கூர்கிறார்:
“இந்தியாவில் நெருக்கடி நிலை 1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25 ஆம் தேதி பிரகடனம் செய்யப்பட்டது. இந்த முடிவை அன்றையப் பிரதமர் இந்திரா காந்தி எடுப்பதற்கு அரசியல் போக்குகளும், சில சம்பவங்களும் காரணமாக அமைந்தன. லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் நாராயண் தொடங்கிய முழுமைப் புரட்சி இயக்கத்திற்குக் கிட்டிவந்த பரவலான ஆதரவு, சமஷ்டிபூர் ரயில் பாதையில் நடந்த குண்டுவெடிப்பில் அன்றைய ரயில்வே அமைச்சர் மிஸ்ரா உயிரிழந்தது, ஃபெர்னாண்டஸ் மீதான பரோடா டைனமைட் சதி வழக்கு ஆகியவை அச்சமயத்திய நிகழ்வுகளாகும்.
“நெருக்கடி நிலை கொண்டு வரப்படுவதற்கு 10 நாட்களுக்கு முன்பாக, அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் ராஜ்நாராயணனால் தொடரப்பட்டிருந்த தேர்தல் வழக்கில், “ரேபரேலி தொகுதியில் இந்திரா காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டது செல்லாது” என்று நீதிபதி சின்ஹா தீர்ப்பளித்திருந்தார்.

வியாழன், 17 அக்டோபர், 2019

போலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்

போலீஸ் அதிகாரிக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்தேன் - முருகன் வாக்குமூலம்மாலைமலர் : திருச்சி நகைக்கடை கொள்ளையில் சிக்கி உள்ள முருகன் சென்னை போலீஸ் அதிகாரி ஒருவருக்கு ரூ.30 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி லலிதா ஜூவல்லரியில் சுவரில் துளைபோட்டு கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த கொள்ளைக்கு திட்டம் போட்டு கொடுத்த முக்கிய குற்றவாளியான திருவாரூர் முருகன் போலீஸ் பிடி இறுகியதால் பெங்களூரு கோர்ட்டில் சரண் அடைந்தான்.
இவன் மீது தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும் கொள்ளை வழக்குகள் உள்ளன. பெங்களூரில் மட்டும் பல்வேறு இடங்களை குறிவைத்து முருகன் கொள்ளையடித்துள்ளான். இதையடுத்து பெங்களூரு போலீசார் முருகனை காவலில் எடுத்தனர். அப்போது திருச்சிக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

கே.என்.நேருவுக்கு ரூ.109 கோடி கடன்... சொத்துக்களை ஏலத்துக்கு விடுகிறது வங்கி

trichy Indian Bank Auctioning Dmk ex minister Kn nehru family Assetstamil.oneindia.com - ArsathKan : திருச்சி: முன்னாள் அமைச்சரும், திமுகவின் முக்கிய தலைவருமான கே.என்.நேருவின் சொத்துக்களை ஏலம் விட நடவடிக்கை எடுத்துள்ளது இந்தியன் வங்கி.
திருச்சி கண்டோன்மென்ட் இந்தியன் வங்கி கிளையில் கடந்த 2002-ம் ஆண்டு கே.என்.நேருவின் குடும்பத்தினர் கடன் பெற்றுள்ளனர். நேருவின் தந்தை பெயரில் செயல்படும் ஜி.நாராயணன் அறக்கட்டளை நிறுவனத்திற்காக நேருவின் தம்பிகள் மணிவண்ணன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் ரூ.109 கோடி கடன் வாங்கியுள்ளனர்.
இதற்கான அடமானமாக மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட தாயனூர் கிராமத்தில் உள்ள 80 ஏக்கர் நிலம் உள்ளிட்ட கட்டிடங்களின் பத்திரங்கள் வங்கியில் வைக்கப்பட்டன.
கடன் தொகையை கட்டச்சொல்லி வங்கியில் இருந்து பலமுறை அறிவுறுத்தப்பட்டும், பணம் செலுத்தத் தவறியதால் கடந்த 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் 16-ம் தேதி நேரு குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்களை சுவாதீனம் எடுத்துக்கொண்டது இந்தியன் வங்கி. இந்நிலையில், அந்த நிலம் மற்றும் கட்டிடங்களை முழுமையாக விற்பனை செய்ய உள்ளதாகவும் இந்தியன் வங்கி அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் விமான நிலையம் 36 ஆண்டுகளுக்குப் பின் திறப்பு: சென்னையிலிருந்து முதல் விமானம் இயக்கம்

hindutamil.in :  36 ஆண்டுகளுக்குப் பின் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணத்தில் சர்வதேச விமான நிலையம் இன்று(அக்.17) வியாழக்கிழமை திறக்கப்பட்டு சென்னையிலிருந்து முதல் விமானம் இயக்கப்பட்டது.
இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் பலாலியில் இரண்டாம் உலகப் போரின் போது 1940-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களின் வான் படைத் தேவைக்காக விமானதளம் அமைக்கப்பட்டத இலங்கை சுதந்திரமடைந்த பின்னர் சென்னை மற்றும் தென்னிந்திய நகரங்களிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நடைபெற்றன.
1983-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டு யுத்தம் தொடங்கியபோது இந்தியாவிலிருந்து யாழ்ப்பாணம் பலாலிக்கு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. 36 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று (வியாழக்கிழமை) யாழ்ப்பாணம் விமான நிலையத்தினை அதிபர் மைத்ரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் திறந்து வைத்தனர்.
இலங்கைக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து, அமைச்ச்ர்கள் அர்­ஜூன ரண­துங்க,  மகேஸ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோழர் காலத்தில் சீனாவிற்கு சென்ற தூதுக்குழு

திணையகம் - - தினத்தந்தி : அப்போது மாமன்னர் ராஜ ராஜ சோழன் ஆட்சி
காலம். இன்றைக்கு இந்தோனேசியாவில் உள்ள சுமத்திரா நாடு ஸ்ரீவிஜயம் எனப்பட்டது.
இது சோழர்கள் வணிக தொடர்புடைய மிக முக்கியமான நாடு. சீனத்திற்கும், சோழ நாட்டிற்கும் இடையே முக்கியமான வணிக கேந்திரமாக ஸ்ரீவிஜயம் நாடு இருந்து வந்தது. இந்த நாட்டினர் சோழர்களுடன் நட்புறவுடன் இருந்தாலும் சோழ தேசத்து வணிகர்கள், சீன தேசத்துடன் நேரடி தொடர்பு கொள்ள தடையாக, மறைமுக சதியில் ஈடுபட்டு வந்தார்கள்.
சோழர்கள் தங்கள் அடிமை நாடு என்று சீனாவில் பொய்யான தகவல்களை பரப்பி வந்தார்கள். தங்களுக்கு நேர்ந்த அவமானத்தை வணிகர்கள் மாமன்னரிடம் முறையிட்டார்கள். இந்த சதியை, துரோகத்தை முறியடிக்க ராஜராஜ சோழன் ஒரு தூதுக்குழுவை சீனாவிற்கு அனுப்ப முடிவு செய்தார். தூதுக் குழுவில் இடம் பெற வேண்டியவர்கள் மிக கவனமுடன் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கல்கி ஆசிரமம் கடந்து வந்த பாதை... எல்.ஐ.சி ஊழியர் டூ விஷ்ணு அவதாரம்.

.nakkheeran.in - கிருபாகர் : நாடு முழுவதும் 400 க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள், ஒரு ஆசிரமம் மற்றும் அதற்கு சொந்தமான 40 இடங்களில் அதிரடியாக புகுந்து சோதனை மேற்கொள்கின்றனர். கணக்கில்
1949 ஆம் ஆண்டு தமிழகத்தின் வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே உள்ள நத்தம் பகுதியில், ஆந்திராவை பூர்விகமாக கொண்ட ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த விஜயகுமார் தான் பிற்காலத்தில் கல்கி பகவானாக தன்னை அறிவித்துக்கொண்டார். தனது 6 வயதில் குடும்பத்துடன் சென்னை வந்த அவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை சென்னையிலேயே முடித்தார். டான் போஸ்கோ பள்ளி, டி.ஜி வைஷ்ணவா கல்லூரி என தனது இளமை பருவம் முழுவதையும் சென்னையிலேயே கழித்த இவர்தான் இன்று ஆந்திராவை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் ஆசிரமங்கள் நடத்தி வருகிறார்.
காட்டாத பணம், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் குறித்து விசாரணை செய்கின்றனர். ஆந்திராவில் பல்கலைக்கழகம், ஆப்பிரிக்காவில் நிலம் என நீண்டுகொண்டே போகிறது அவர்களின் விசாரணை கேள்வி பட்டியல். இப்படி கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்களுடன் மிகப்பெரிய ஆன்மிக சாம்ராஜ்யமாக வளர்ந்துள்ள இந்த கல்கி ஆசிரமத்தின் தொடக்கம் என்ன..? எப்படி தனது வாழ்க்கையை தொடங்கினார் கல்கி ஆசிரமத்தின் முதன்மையானவராக கல்கி பகவான்..?

புதிய தலைமை நீதிபதியின் பின்னணி.. சென்னை உயர்நீதிமன்ற ....

புதிய தலைமை நீதிபதியின் பின்னணி!மின்னம்பலம் : சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக, பாட்னா உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹி நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமணி, மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றம் செய்யப்பட்டார். இதை எதிர்த்து அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி வினீத் கோத்தாரி நியமிக்கப்பட்டார்.
; கடந்த அக்டோபர் 15ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடியுள்ளது. அப்போது சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியை நியமிப்பது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கொலீஜியம் இன்று (அக்டோபர் 17) வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த ஏ.பி.சாஹிவை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு தலைமை நீதிபதியாக மாற்றியும், மேகாலயாவில் தலைமை நீதிபதியாக இருந்த ஏ.கே.மிட்டல், மத்தியப் பிரதேச நீதிமன்றத்துக்கு மாற்றியும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திரிபுரா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சய் கரோல், பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பண மோசடி வழக்கில் ஜோதிமணியிடம் விசாரணை... இவர் கலைஞரின் மகள் செல்வியின் மருமகனாவார்

மின்னம்பலம் : பண மோசடி வழக்கில் மறைந்த திமுக முன்னாள் தலைவர் கலைஞரின் மூத்த மகள் செல்வியின் மருமகன் ஜோதிமணி போலீஸ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
இரு வாரங்களுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஜாகீர் அகமத் தமான் என்பவர், சௌகார் பேட்டையைச் சேர்ந்த அழகு சாதனப் பொருள் வியாபாரி தினேஷை நேரில் தொடர்பு கொண்டு, தனக்கு தெரிந்தவரிடம் 100 ரூபாய் நோட்டுக்கள் கோடிக் கணக்கில் இருப்பதாகவும், 500 மற்றும் 2000 ரூபாய் மதிப்பிலான நோட்டுகளாக 80 லட்சம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தால் போதும். 20 சதவிகிதம் கமிஷன் தருவதாகவும் கூறியுள்ளார்.
இதையடுத்து சென்னை ஈசிஆர் சாலையிலுள்ள நீலாங்கரையில் ஒரு பங்களாவுக்கு 80 லட்சம் பணத்தோடு தினேஷ் சென்றார். அந்த வீட்டில் ஜோதிமணி, ஜாகீர் அகமத் தமான், முனியாண்டி, விக்னேஷ், டேவிட் உள்ளிட்ட 5 பேர் இருந்ததாகவும், தினேஷிடமிருந்து பணத்தை பெற்று, அதை எண்ணிப் பார்ப்பதாக கூறி முனியாண்டி, விக்னேஷ், டேவிட் ஆகியோர் வீட்டின் பின்புற கதவு வழியாக 80 லட்சம் பணத்தோடு தப்பியோடிவிட்டதாகவும் தினேஷ் நீலாங்கரை போலீஸில் புகார் கொடுத்தார்.

முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் .. லலிதா ஜுவல்லேர்ஸ் கொள்ளையரிடம் இருந்து ...

புதைத்து வைக்கப்பட்டிருந்த நகைகளை கொள்ளையன் முருகன் போலீசார் முன்னிலையில் தோண்டி எடுக்கும் காட்சிகள்திருச்சி கொள்ளை வழக்கில் திருப்பம் - முருகனிடம் நகையை பரிசாக பெற்ற தமிழ் நடிகைமாலைமலர் :வங்கியில் கொள்ளையடித்த நகைகளை பிரபல தமிழ் நடிகைக்கு முருகன் பரிசளித்ததாக போலீஸ் விசாரணையில் சுரேஷ் பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார். அந்த நடிகையிடம் போலீசார் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக்கடையில் கடந்த 2-ந் தேதி அதிகாலை சுவரில் துளைபோட்டு ரூ.13 கோடி மதிப்புள்ள 30 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் வைர நகைகளை திருவாரூர் முருகன் தலைமையிலான கும்பல் கொள்ளையடித்து சென்றது.
இந்த கும்பலை சேர்ந்த மணிகண்டன் திருவாரூர் போலீசில் சிக்கினார். தப்பி ஓடிய சுரேஷ், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் கோர்ட்டில் கடந்த 10-ந் தேதி சரண் அடைந்தார்.
பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் முருகன் சரண் அடைந்தார். மேலும் தனிப்படை போலீசார் திருவாரூரில் சுரேசின் தாயார் கனகவள்ளியையும், மதுரையில் முருகனின் கூட்டாளியான கணேசனையும், நகைகளை விற்று கொடுக்க உதவியாக இருந்த ராதாகிருஷ்ணன் என இதுவரை 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

முதல்வர் எப்படாடி பழனிசாமி வாகனத்தில் பணம்: கவுதமன் சாலை மறியல்.. வீடியோ


முதல்வர் வாகனத்தில் பணம்: கவுதமன் சாலை மறியல்!மின்னம்பலம் : அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாகக் கூறி விக்கிரவாண்டியில் இயக்குனர் கவுதமன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு வரும் 21ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெறவுள்ளது. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக சார்பில் முத்தமிழ்ச்செல்வனும், திமுகவின் புகழேந்தியும், நாம் தமிழர் கட்சி சார்பாக கந்தசாமியும் பிரதான வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். அண்மையில் தமிழ்ப் பேரரசு கட்சியைத் தொடங்கிய இயக்குனர் வ.கவுதமனும், விக்கிரவாண்டி தொகுதியில் சாவி சின்னத்தில் சுயேச்சையாக களமிறங்கியுள்ளார்.
சில நாட்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட கலெக்டரை சந்தித்த கவுதமன், விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக, திமுகவினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டுவருவதாகவும் அதனை தடுக்க வேண்டுமெனவும் மனு அளித்திருந்தார்.

இடதுசாரிகளுக்கு மட்டுமல்ல… புதிய தமிழகத்துக்கும் நிதியளித்த தி.மு.க.... ..2014 இல்

கிருஷ்ணசாமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினருக்கு தி.மு.க அளித்த நிதி தொடர்பான ஆவணம்2014 தேர்தலில் கிருஷ்ணசாமிக்கு பிரசாரம் செய்த ஸ்டாலின்...vikatan.com - எஸ்.ஏ.எம். பரக்கத் அலி : நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கு தி.மு.க 40 கோடி ரூபாய் கொடுத்த விவகாரத்தில், அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகள் எல்லாம் கர்ஜித்தபோது டாக்டர் கிருஷ்ணசாமி மட்டும் ஏன் கர்ஜிக்கவில்லை? அதற்குக் காரணம் என்ன? விகடன் விடை தேடியபோது கிடைத்த தகவல் இது! நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டணியில் இடம்பெற்ற கட்சிகளுக்கு, 40 கோடி ரூபாயை தி.மு.க. கொடுத்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. இதுதொடர்பாக கம்யூனிஸ்ட் கட்சிகளும் தி.மு.க-வும் மாறி மாறி விளக்கமளித்தன. ஆனாலும் சர்ச்சைகள் ஓயவில்லை.

கல்கி பகவான் 40 இடங்களில் ரெய்டு ... 1,200 கோடி ரூபாய் சொத்து. ஆந்திராவில் மட்டும் 5,000 ஏக்கர் அம்மா பகவான் என்கின்ற ... வீடியோ


மகன் கிருஷ்ணா உடன் கல்கி பகவான்கல்கி பகவான்லாஸ் ஏஞ்சல்ஸ் டு பெங்களூரு பிசினஸ்! - கல்கி பகவான் மகனை வளைத்த வருமான வரித்துறை?
 vikatan.com - மலையரசு : வேலூர் குடியாத்தம் அருகே உள்ள நத்தம்தான் விஜயகுமார் என்னும் கல்கி பகவானின் சொந்த ஊர். தந்தை ரயில்வே பணியில் இருந்ததால் விஜயகுமார் 6 வயது இருக்கும்போதே குடும்பத்துடன் சென்னைக்குக் குடிபெயர்ந்துவிட்டனர். ஆந்திர மாநிலத்தை தலைமையிடமாகக் கொண்டு கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீபகவான் என அழைக்கப்படும் விஜயகுமார் என்பவர்தான் இந்த ஆசிரமத்தை நிறுவி பல்வேறு ஆன்மிகப் பணிகளைச் செய்து வந்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமங்களை நடத்தி வரும் இவருக்கு சென்னையில் மட்டும் 20 இடங்களில் கிளைகள் உள்ளன.
அண்மையில் இந்த ஆசிரமம் சர்ச்சை ஒன்றில் சிக்கியது. வெளிநாட்டு பக்தர்களுக்கு போதை பொருள்களைக் கொடுத்ததுடன், சிறப்பு பூஜை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான ரூபாய் வசூல் செய்யப்படுகிறது என்ற புகார் எழுந்தது. நீதிமன்றம் வரை சென்ற இந்த சர்ச்சை இப்போதுதான் கொஞ்சம் ஓய்ந்துள்ளது.

கலவி கற்று கொடுக்கும் குளம் ..தொல்லியல் .. வீடியோ விளக்கங்களுடன் sex education ..


Sex education: கலவி கலைகள் கற்று தரும் குளம் உலகத்தில் உயிரினம் தோன்றிய போதே காமமும் சேர்ந்தே வந்தது.  ஆறறிவு பெற்ற மனிதயினம் தான்... நாகரிகம் வளர வளர காமத்தை தனியாக பிரித்து எங்கும், யாரிடமும் அதைப்பற்றி பேசக்கூடாது,  விவாதிக்ககூடாது என கலாச்சாரம் என்ற பெயரில் கடிவாளம் போட்டு பூட்டி வைத்துவிட்டது.
அந்த கடிவாளம் கழட்டப்பட முடியாமல் காலம் காலமாக அப்படியே இருந்து வருகிறது. 
இன்றைய யுகத்தில் , இந்தியாவில் காமம் பற்றி பேசுவது என்பது தீண்டத் தகாத, உச்சரிக்க கூடாத வார்த்தைகளாகிவிட்டன.  குறிப்பாக காமத்தை பற்றி இன்றைய >சமுகம் தன் தாய்-தந்தையிடம் கூட பேசி அறிந்து கொள்ள முடியாத நிலையை நம் கலாச்சாரத்தில் உருவாக்கி வைத்துவிட்டார்கள். இப்படி காமத்தை தீண்டத் தகாததை போல உருவாக்கிய நம் நாட்டில் தான் காமசூத்ரா படைக்கப்பட்டது என்பதை ஏனோ வசமாக மறந்துவிட்டார்கள். ;மனிதன் அறிந்து கொள்ள வேண்டும் என படைக்கப்பட்ட அந்த நூலை நம் நாட்டில் புரிந்து கொண்டோமா, ஏற்றுக்கொண்டோமா என்றால் இல்லை என்று சொல்லிவிடலாம். காரணம் அந்தளவுக்கு கலாச்சாரம் என்ற பெயரில் கட்டிப்போட்டுவிட்டார்கள்.

அமெரிக்காவில் இந்தியர் 4 பேரை கொலை செய்துவிட்டு .. பிணத்துடன் போலீசாரிடம் சரணடைந்தார்





indian-origin-man-surrenders-to-the-american-police-with-a-body-confesses-to-4-murdersஅமெரிக்காவில் பிணத்துடன் போலீசாரிடம் சரணடைந்த இந்திய-அமெரிக்கர்: 4 கொலைகள் செய்ததாக வாக்குமூலம் 

 hindutamil.in :வடக்கு கலிபோர்னியாவில் காவல் நிலையம் ஒன்றில் பணியில் இருந்த அதிகாரிகள் அதிர்ச்சியடையும் விதமாக நபர் ஒருவர் வந்து தான் சில கொலைகள் செய்திருப்பதாகவும் அதில் ஒருவரது பிணம் தன் காரில் இருப்பதாகவும் தெரிவித்ததை முதலில் நம்பவில்லை.
திங்களன்று மவுண்ட் ஷாஸ்டா போலீஸ் துறையின் முன் நண்பகல் 12.10 மணியளவில் நுழைந்த அந்த நபர் ரோஸ்வில்லில் உள்ள தன் வீட்டில் கொலை செய்திருப்பதாக அவர் கூறியதாகவும் போலீஸ் தரப்பில் கூறுகின்றனர், பிறகு அவரது காரை பரிசோதித்த போது அதில் ஒருவரது பிணமும் இருந்துள்ளது பிறகு வீடு ஒன்றில் இரண்டு சிறார்கள் உட்பட 3 பேர் பிணம் இருந்ததாகவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனை நியுயார்க் டைம்ஸ் ஊடகத்துக்கு விவரித்த சார்ஜண்ட் ராபரட் கிப்சன் “என் சர்வீசில் இப்படி நான் பார்த்ததில்லை, ஒருவர் பிணத்துடன் வந்து நான் கொலைகளைச் செய்திருக்கிறேன் என்று கூறியதில்லை” என்றார்.

பிரபாகரன் இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன்

Stanley Rajan : பிரபாகரன் என்பவர் யார்? "பிரபாகரன் ஒரு தீவிரமான
இலங்கை வெறியர், இலங்கை எனும் நாட்டுக்கு அவர்  செய்த உதவியும் சேவையும் அர்பணிப்பும் கொஞ்சமல்ல‌ இலங்கையில் ஈழம் கேட்டு பல தமிழ்குழுக்கள் போராடியபொழுது அவர்களை எல்லாம் ஒழித்து இலங்கை அரசுக்கு பெரும் உதவியாக இருந்தவர்  அவர்..
பல்வேறு தமிழ்குழுக்களை இலங்கை அரசு ஒழிக்கமுடியாமல் திகைத்தபொழுது அவர்களை எல்லாம் ஒழித்துகட்டி ந்து இந்திய படைகளை விரட்டிய வீரமான குடிமகன்
இலங்கை அரசுக்கு உதவியவன் இந்தியபடை இலங்கையினை ஆக்கிரமிக்க வந்தபொழுது தன் புலிபடையால் அதை எதிர்த்து பிரேமதாசாவுடன் இணை
இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருந்த ராஜிவினை சிங்களன் ராஜமுனி துப்பாக்கியால் அடித்தும் கொல்லமுடியாமல் போக, அந்த ராஜிவினை இந்தியாவுக்குள்ளே சென்று கொன்று இலங்கைக்கு
மிரட்டலை நீக்கியவன்
கடைசியாக எல்லா தமிழ்குழுக்களையும் ஒழித்துவிட்டு, அமிர்தலிங்கம் போன்ற தலைவர்களையும் ஒழித்துவிட்டு இனி போராட யாருமே இல்லை எனும் நிலையில் தானே சிங்கள ராணுவத்திடம் தலையில் கொத்து வாங்கி செத்த தியாகி
ஆம் அவன் மட்டும் இல்லையென்றால் ஈழத்தில் நல்ல தலைவர்கள் உருவாகியிருப்பார்கள், இந்திய ராணுவம் நிலைபெற்றிருக்கும் ஈழ எல்லைக்கோடு வகுக்கபட்டிருக்கும், எந்நாளும் இலங்கையின்
ஒருமைபாட்டுக்கு அச்சுறுத்தல் இருந்திருக்கும் இலங்கைக்கு யார் யாரெல்லாம் எதிரியோ அவர்களை ஒவ்வொருவராக கொன்ற மாவீரன்
அவர்  தமிழருக்கான போராட்டம் என சொல்லி முழுக்க முழுக்க
இலங்கையின் ஒருமைபாட்டுக்கும் சிங்களன் பலம் பெருகவும் உழைத்த நல்ல இலங்கை குடிமகன்