சனி, 26 மே, 2018

காடுவெட்டி குரு அவர்களுக்கு இரங்கல்களும், இழப்பிற்கு வருத்தங்களையும் ...

ரூ 60 இலட்சம்  இல்லாமையால்? 
Sowmian Vaidyanathan : வன்னியர் சங்க மாநில தலைவர் காடுவெட்டு ஜெ. குரு
அவர்களுடை உரையின் ஆடியோ ஒன்றை ஐந்தாறு வருடங்கள் முன்பு கேட்க நேர்ந்தது. மேடைப்பேச்சு போன்ற அலங்கார வார்த்தைகள் எல்லாம் ஏதுமின்றி... ரொம்ப கலோக்கியலான, மண் வாசனை கலந்த அடிமன ஆற்றாமையை அமைதியாக வெளிப்படுத்திய பேச்சு அது.
அதை எனது பாமக நண்பர் ஒருவர் போடுவதாகச் சொன்ன போது வேண்டாமே என்று தான் தவிர்த்தேன். காரணம் அவர் தலைவர் கலைஞரையோ அல்லது சாதி சார்ந்து மாற்று சாதியினரை குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து தரக்குறைவாக விமர்சனம் ஏதும் செய்திருப்பாரோ... அதை ஏன் நாம் கேட்க வேண்டும் என்ற எண்ணம் தான். ஆனால் நண்பரோ, நீங்கள் மறுதலிக்கும் காரணம் எனக்குப் புரிகிறது, ஆனால் இதைக் கேட்டுப்பாருங்கள் என்று கூறவே... உரையைக் கேட்க ஆரம்பித்தேன்..!
அவர் பேச்சின் கண்ட்டண்ட் இது தான்...
எங்களுக்கும் அவங்களுக்கும் என்ன பிரச்சினை? ஒன்னுமே கிடையாது. எங்க ஆளுங்கள கிராமத்துப் பகுதில வந்து பாருங்க. குடிசை வீடு தான். தினக் கூலி தான், சுகாதரமற்ற குடியிறுப்புக்கள் தான். அன்னிக்கு வேலைக்கு போகலன்னா வீட்டுல அடுப்பு எரியாது, புள்ளைங்கள படிக்க அனுப்பறது எல்லாம் பெரிய விஷயம். தாழ்த்தப்பட்ட மக்களுக்கும் எங்களுக்கும் பொருளாதார ரீதியா எந்த வித்தியாசமுமே கிடையாது. ஆனா எங்களுக்கு பக்கத்து ஏரியாவுல தான் இருப்பாங்க.... வருஷத்துல அங்க இருக்குற நாலு பேருக்கு திடீர்னு அரசாங்க உத்தியோகம் கிடைச்சிடும், இப்பிடியே வருஷா வருஷம் அங்கேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா மேல வந்துருவாங்க. ஆனா எங்க ஆளுங்க ஒட்டு மொத்தமா அப்படியே தான் இருப்பாங்க...!

தூத்துக்குடி வழக்கறிஞர் வள்ளிநாயகம் விடியோ - மார்க்சிஸ்ட் கனகராஜ்

தூத்துக்குடியில் வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும் ஒரு சல்யூட் - மார்க்சிஸ்ட் கனகராஜ் தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸாரால் கொடூரமாக தாக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை நேரில் பார்த்து நெல்லை வழக்கறிஞர்கள் குழு நேரடி பேட்டிகள் எடுத்து முகநூல் வழியாக வெளி உலகுக்குக் கொண்டு வந்து கொடுத்து வருகிறது. 
நெல்லை வழக்கறிஞர் வள்ளிநாயகம் சுட்கி தொடர்ந்து இதுகுறித்த விரிவான தகவல்களை வீடியோவுடன் வெளி உலகுக்குக் கொண்டு வந்து கொடுத்து வருகிறார். தூத்துக்குடியில் போலீஸாரின் தாக்குதலுக்குள்ளானவர்கள் குறித்த முழுமையான செய்திகளை ஊடகங்களால் தர முடியாத நிலையே நிலவுகிறது. காரணம் பல்வறு கட்டுப்பாடுகள், தடுப்புகள், மிரட்டல்கள், நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள். இதனால் அங்கிருந்து வரும் வீடியோக்கள், அங்குள்ளவர்களிடமிருந்து கிடைக்கும் தகவல்களைக் கொண்டுதான் வெளியுலகுக்கு செய்திகள் வந்து கொண்டுள்ளன. தூத்துக்குடி நிலவரத்தைப் பொறுத்தவரை செய்தி ஊடகங்களை விட சமூக வலைதள ஊடகங்கள்தான் பெரும் பங்காற்றி வருகின்றன.

தி.மு.க கூட்டணிதான் முக்கியம்; சீட் அல்ல! - ராகுலுக்கு சோனியா

Prabha - Oneindia Tamil : டெல்லி: லோக்சபா தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் தேசியக் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. 'ஒவ்வொரு மாநிலத்திலும் வலுவான கட்சிகளோடு கூட்டணியை உறுதிப்படுத்துங்கள். தி.மு.க கூட்டணியில் நமக்கு சீட் முக்கியமல்ல. கூட்டணிதான் முக்கியம்' என ராகுல்காந்தியை அலெர்ட் செய்திருக்கிறார் சோனியா காந்தி. 
பாஜகவுக்கு எதிராக தேசிய அளவில் மூன்றாம் அணியை உருவாக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. அதன் ஒருகட்டமாக, கோபாலபுரத்துக்கு வந்து கருணாநிதியை சந்தித்தார்.  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். காங்கிரஸைத் தவிர்த்து, இப்படியொரு அணி கட்டமைக்கப்படுவதை ராகுலும் சோனியாவும் ரசிக்கவில்லை. "மூன்றாவது அணிக்கான முயற்சி வெற்றி பெற்றால், நிச்சயம் அது மோடிக்குத்தான் கை கொடுக்கும். பா.ஜ.கவை எதிர்ப்பதற்காக நாமெல்லாம் ஓரணியில் திரள வேண்டும்' என காங்கிரஸ் நிர்வாகிகள் பேசி வந்தனர். இதற்குத் தொடக்கப் புள்ளி போடும்விதமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனை சந்தித்துப் பேசினார் ராகுல் காந்தி. 

ஸ்டெர்லைட்: பிரிட்டன் எதிர்க்கட்சி எதிர்ப்பு! பிரிட்டன் பங்குசந்தையில் இருந்து நீக்கவேண்டும் என்று அறிவிப்பு

ஸ்டெர்லைட்: பிரிட்டன் எதிர்க்கட்சி எதிர்ப்பு!John McDonnell has called for mining firm Vedanta to be delisted from the London Stock Exchange after  13 people died in violent protests ...
John McDonnell, the UK’s Shadow Chancellor, said removing Vedanta Resources from the London financial markets would prevent reputational damage from the “rogue” company which has been operating “illegal” mining concerns for years.
UK Opposition wants Vedanta delisted from London Stock Exchange Activists claim it has led to respiratory and skin problems, fainting and other illness, especially among children. The plant releases its waste into the sensitive Gulf of Mannar Biosphere Reserve, an area of coral reefs and mangrove forests, the protesters claim.

tamilthehindu :தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக லண்டனில் உள்ள அதன் இயக்குனர் அணில் அகர்வாலின் வீட்டை முற்றுகையிட்டு தமிழர்கள் போராட்டம் நடத்தினர். ஸ்டெர்லைட் ஆலையை நடத்தி வரும் வேதாந்தா குழுமத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். மேலும் அணில் அகர்வால் மற்றும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக இந்திய தூதரகத்தில் மனுவும் அளித்தனர். அத்துடன் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகவும், வேதாந்தா குழுமத்திற்கு எதிராகவும் இங்கிலாந்து நாட்டு எம்.பிக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.
லண்டனில் போராட்டம் நடத்திய தமிழர்கள்
 இதையடுத்து இங்கிலாந்து நாட்டின் எதிர்கட்சியான தொழிலாளர் கட்சி முதன்முறையாக ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளது. இதுகுறித்து செயல் தலைவரும், அக்கட்சி எம்.பி.யுமான ஜான் மெக்டொனால்டு கூறியதாவது:

சட்ட விரோதக் காவலில் 95 பேர் சித்திரவதை!

மின்னம்பலம : தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் தொடர்பாக 95 இளைஞர்களை சட்ட விரோதக் காவலில் வைத்து சித்திரவதை செய்தது தெரியவந்துள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். அவர்களில் 14 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்திருந்தார். இதற்கிடையில், போராட்டகாரர்களில் 126 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் சிலர் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டதாக தகவல் பரவியது.
சட்ட விரோதக் காவலில் 95 பேர் சித்திரவதை!இதைத் தொடர்ந்து, வழக்கறிஞர் சந்திரசேகர், தூத்துக்குடி பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்ற தலைமை நீதிபதி பகவதி அம்மாளிடம் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதனை ஏற்று, வல்லநாடு துப்பாக்கிப் பயிற்சி சரகத்தில் சட்டவிரோத காவலில் யாராவதுவைக்கப்பட்டுள்ளார்களா என்று நேரில் விசாரிக்குமாறு விளாத்திக்குளம் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளிமுத்துவேலிடம் நீதிபதி பகவதி அம்மாள் வலியுறுத்தினார்.

விலைபோன ஊடகங்கள்: கோப்ராபோஸ்ட் ‘ஸ்டிங் ஆபரேஷன்’!

விலைபோன ஊடகங்கள்: கோப்ராபோஸ்ட்  ‘ஸ்டிங் ஆபரேஷன்’!
மின்னம்பலம் :“நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் மக்களை நேரடியாக நெருங்குவதைவிட, மக்களை தினம்தினம் சென்றடையும் ஊடகங்களை விலைபேசி அவர்கள் மூலம் மக்கள் மனதில் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்த நினைக்கின்றன இந்துத்துவ சக்திகள். இதற்காகக் கடந்த சில மாதங்களாக இந்தியாவின் முக்கியமான ஊடகங்களை இந்துத்துவ சக்திகள் விலை பேசி, தங்களுக்குச் சாதகமான செய்திகளையும், சமுதாயத்தைப் பிளவுபடுத்தும் செய்திகளையும் வெளியிடத் தூண்டுகின்றன. எங்களின் ‘ஸ்டிங் ஆபரேஷன்’ மூலம் இது உறுதியாகிறது’’ என்கிறார்கள் கோப்ராபோஸ்ட் இணைய தள ஊடக நிறுவனத்தார்.
இந்துத்துவத்துக்கும் அது சார்ந்த குறிப்பிட்ட கட்சிக்கும் ஆதரவாகப் பிரபல பெரு ஊடக நிறுவனங்கள் பெருமளவு பணம் வாங்கிக்கொண்டு செயல்படத் தயாராக இருப்பதாக இரு மாதங்கள் முன்பு கோப்ராபோஸ்ட் செய்தி வெளியிட்டது. இதன் அடுத்த கட்டமாக இந்துத்துவ சக்திகள் போல வேடமிட்டு இந்தியா முழுதும் சுமார் 24 ஊடக நிறுவனங்களை கோப்ரா போஸ்ட் பத்திரிகையாளர்கள் அணுகினார்கள். இந்த ‘ஸ்டிங் ஆபரேஷ’னில் ஊடகங்கள் விலைபோனதை வீடியோ பதிவோடு வெளியிட்டுள்ளது கோப்ராபோஸ்ட்.

காடுவெட்டி குரு மரணம் - 9 மாவட்டங்களில் கடைகள் அடைப்பு: பேருந்து கண்ணாடிகள் உடைப்பு

காடுவெட்டி குருவால் பாதிக்கப்பட்ட ஒரு அப்பாவி
நக்கீரன் :வன்னியர் சங்க தலைவரும், பாமக முன்னாள் சட்டமன்ற
உறுப்பினருமான காடுவெட்டி குரு அவர்கள் நேற்று உடல் நலக் குறைவால் காலமானார்.< அவரது உடல் சொந்த ஊரான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள காடுவெட்டி கொண்டு செல்லப்பட்டது. நாளை உடல் தகனம் நடக்கிறது. ஜெ.குரு மறைவைத் தொடர்ந்து சொந்த ஊரான காடுவெட்டியில் கடைகள் அடைக்கப்பட்டன. கடலூர், விழுப்புரம், சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர், திருவள்ளூர் மாவட்டங்களில் பஸ் மீது கல்வீச்சு போன்ற வன்முறைச் சம்பவங்கள் நடந்தன. கடைகளும் அடைக்கப்பட்டன. கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு பகுதியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன.
பண்ருட்டி, புதுநகர், முதுநகர், ரெட்டிச்சாவடி, சிதம்பரம், கருவேப்பிலங்குறிச்சி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி டவுன்ஷிப் ஆகிய இடங்களிலும் கடைகள் அடைக்கப்பட்டன. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், மீன்சுருட்டி, அரியலூர், உடையார்பாளையம், செந்துறை உள்ளிட்ட பகுதிகளில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.<"> அரியலூர் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் தனியார் பஸ்கள், ஆட்டோ, வேன்கள் இயங்கவில்லை. தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன. அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மாவட்டம் முழுவதும் ஏராளமான போலீசார் பகுவிக்கப்பட்டனர்.

ஜெயலலிதா பேசிய ஆடியோ ... இது நார்மல்தான்- ரத்த அழுத்தம் பற்றி youtube


மாலைமலர் :சென்னை: ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் ஆறுமுகசாமி ஆணையம் விசாரணை நடத்தியது.
இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது. அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர். இவர்கள் ஒவ்வொருவரிடமும் சசிகலாவின் வக்கீல் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார். இந்நிலையில், அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27-ம் தேதி பதிவு செய்யப்பட்ட, 52 வினாடிகள் கொண்ட ஆடியோ ஒன்றை ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் மருத்துவர் சிவக்குமார் இன்று தாக்கல் செய்தார். 

சிகிச்சையின்போது ஜெயலலிதா கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு

மாலைமலர் : சென்னை: மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மரணத்தில் குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.
ஜெயலலிதா சிகிச்சை பெற்றபோது அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் ஜெயலலிதாவின் செயலாளர்கள், உதவியாளர்கள், பாதுகாவலர்கள், கார் ஓட்டுனர்கள், போயஸ் கார்டனில் வசித்தவர்கள் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இவர்கள் தவிர ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, அவரது கணவர் மாதவன், அரசு டாக்டர் பாலாஜி, இளவரசி மகள் கிருஷ்ணபிரியா, மகன் விவேக், சசிகலாவின் சகோதரர் திவாகரன் உள்பட 40-க்கும் மேற்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் சிலரை ஆணையம் மீண்டும் வரவழைத்து குறுக்கு விசாரணை நடத்தி வருகிறது.
 அந்த வகையில் இன்று ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன், சிறப்பு அதிகாரியாக இருந்த சாந்தஷீலா நாயர், குடும்ப டாக்டர் சிவக்குமார், கவர்னர் மாளிகை அலுவலக ஊழியர் சீனிவாசன் ஆகியோர் இன்று விசாரணை ஆணையத்தில் ஆஜர் ஆகினர்.

நாடார்களும் பாஜகவும் .. பார்ப்பனர்களும் பாஜகவும் ...

Bilal Aliyar : தமிழக பாஜகவின் ஒரே எம்பி நாடார் இனத்தை சேர்ந்தவர்
தமிழகத்தின் ஒரே மத்திய அமைச்சர் நாடார் இனத்தை சேர்ந்தவர்
தமிழக பாஜகவின் மாநில தலைவர் நாடார் இனத்தை சேர்ந்தவர்
தமிழக பாஜகவில் வலிமையான பொறுப்பில் இருப்பவர்கள் நாடார் இனத்தை சேர்ந்தவர்கள்
தமிழகத்தில் பாஜகவை வளர்ப்பதில், முன்னிலை ப்படுத்துவதில் தங்கள் பொருள், பண உதவிகளை அதிகமாக வழங்கி வருபவர்கள் நாடார் இனத்தை சேர்ந்தவர்கள்.
நிற்க
அரசியல் ரீதியாக தங்களுக்கு, தங்களின் இருப்புக்கு உதவி செய்யும் ஒரு சமூகத்தையே, அவர்கள் வலிமையாக உள்ள புவிபரப்பில் வெளிப்படையாக துப்பாக்கி சூடு, அடிதடி நடத்தி, வீட்டிற்குள் புகுந்து தாக்குவதை பாஜக ஆதரிக்கிறது என்று சொன்னால், கண்ணை மூடிக். கொண்டு மோடியை இஸ்லாமியர்கள் எதிர்க்கிறார்கள் என சொல்பவர்களை பார்த்து காறி உமிழ தோன்றுகிறது.
பாஜகவின் அரசியல் என்பது சிறுபான்மை எதிர்ப்பு என்பதில் கூட சந்தேகம் வரலாம், ஆனால் இந்துக்களின் சிறுபான்மை இனமான அந்த 3% சதவீத பிராமணர்களின் ஆதரவு என்பதில் மட்டும் சந்தேகமே இல்லை....

2ஜி: ராசா, கனிமொழி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு! 2ஜி: ராசா, கனிமொழி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!

minnampalam : 2ஜி வழக்கு தொடர்பாக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை தொடர்ந்துள்ள மேல்முறையீட்டு மனுவுக்குப் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோருக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2ஜி வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்வதாக டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி கடந்த டிசம்பர் 21ஆம் தேதி அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை சார்பில் தனித்தனியாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.பி.கார்க் முன்பு இந்த மனுக்கள் நேற்று (மே 25) விசாரணைக்கு வந்தன. அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “2ஜி முறைகேட்டால் அரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. 2ஜி வழக்கு என்பது தேசத்தின் அவமானம்” என்று குறிப்பிட்டார்.

மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகள் 15 பேர் கைது

மதுரை: மக்கள் அதிகாரம் அமைப்பின் நிர்வாகிகளை நள்ளிரவில் வீடு புகுந்து
போலீசார் கைது செய்தனர். மதுரை, தூத்துக்குடி, நெல்லை, சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் 15 பேர் கைது செய்யப்பட்டனர். ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் போலீசார் இந்நடவடிக்கையை மேற்கொண்டனர்.

தூத்துக்குடி: ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த மக்கள் அதிகாரம் அமைப்பினரை போலீஸார் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்தனர். ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் கடந்த 3 மாதங்களாக போராட்டங்கள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று போராட்டம் விஸ்வரூபம் எடுத்தது. மக்கள் ஆட்சியரை சந்திப்பதற்காக அந்த அலுவலகம் நோக்கி பேரணியாக புறப்பட்டனர். அப்போது அங்கு வந்து அவர்களை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். எனினும் அவர்களையும் மீறி மக்கள் முன்னேறி சென்றதால் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

20 வருட திட்டம்; ஸ்டெர்லைட் பின்வாங்காது. Exiting Thoothukudi not on the cards', says Sterlite CEO P. Ramnath ...

வெப்துனியா :
     தூத்துக்குடியில் இயங்கி வந்த ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்று அந்தபகுதி மக்கள் பல வருடங்களாக போராடி வரும் நிலையில், இந்த போராட்டம் கடந்த மூன்று மாதங்களாக தீவிரம் அடைந்தது. இந்த மூன்று மாதங்களாக இருந்த மக்களின் ஆவேசம் இந்த மூன்று நாட்களில் வெளியாகி தூத்துக்குடி போர்களமாக மாறியது.இதனிடையே தூத்துகுடி ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் இயங்க வாய்ப்பு இல்லை என தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய கலெக்டராக பொறுப்பேற்ற சந்தீப் நந்தூரி உறுதியளித்தார். அதேபோன்று தமிழக அரசும் முதல் உலையை மூட உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்நிலையில், ஸ்டெர்லைட் ஆலையின் சிஇஓ இது குறித்து ஆங்கில பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறிய சில பின்வருமாறு..கடந்த ஐந்தாறு ஆண்டுகளில் ஆலையால் எவ்வித அசம்பாவதிமும் நடக்கவில்லை. இப்போது இந்தப் போராட்டங்கள் எல்லாம் திடீரென எங்கிருந்தோ உருவாகுகின்றன. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு மட்டும் ஆலை நிர்வாகம் ரூ.500 கோடிக்கு மேல் முதலீடு செய்திருக்கிறது.

தூத்துக்குடி சட்டவிரோத காவலில் 95 பேர் சித்ரவதை நேரில் பார்த்த நீதிபதி அதிர்ச்சி

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக சட்டவிரோத காவலில் 95 பேர் சித்ரவதை நேரில் பார்த்த நீதிபதி அதிர்ச்சி
 தினத்தந்தி :  தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக 95 வாலிபர்களை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது. தூத்துக்குடி, தூததுக்குடி சம்பவம் தொடர்பாக 95 வாலிபர்களை சட்டவிரோத காவலில் வைத்து போலீசார் சித்ரவதை செய்தது தெரிய வந்துள்ளது. அந்த வாலிபர்களுக்கு ஜாமீன் அளிக்கப்பட்டது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து, 126 கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன், பலர் சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டதாகவும் தகவல் பரவியது. இதுதொடர்பாக சந்திரசேகர் என்ற வக்கீல், தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாளிடம் ஒரு மனு கொடுத்தார். சட்டவிரோத காவல் பற்றி விசாரணை நடத்தி, அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதை ஏற்று, வல்லநாடு துப்பாக்கி பயிற்சி சரகத்தில், சட்டவிரோத காவலில் யாராவது வைக்கப்பட்டுள்ளார்களா? என்று நேரில் போய் விசாரிக்குமாறு விளாத்திகுளம் மாஜிஸ்திரேட்டு காளிமுத்துவேலுக்கு மாஜிஸ்திரேட்டு பகவதி அம்மாள் உத்தரவிட்டார்.

உடலுறுப்பு திருட்டு: எடப்பாடிக்குக் கடிதம் எழுதிய பினராயி!

உடலுறுப்பு திருட்டு: எடப்பாடிக்குக் கடிதம் எழுதிய பினராயி! மின்னம்பலம்: கேரளாவைச் சேர்ந்தவருக்கு சிகிச்சையளித்துவிட்டு, கட்டணத்திற்காக உடலுறுப்பைத் திருடிய சேலம் தனியார் மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்குமாறு கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக முதல்வருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள கில்லிகுரிஷி பகுதியைச் சேர்ந்த ஓட்டுநர் மணிகண்டன். இவர் ஆறு பேருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாகனத்தில் சென்னைக்கு வந்துள்ளார். அப்போது சேலம் மாவட்டம், மீனாட்சிபுரம் அருகே வாகனம் வந்துகொண்டிருந்தபோது விபத்துக்குள்ளானது. இதில் வாகனத்தில் இருந்த 7 பேரும் காயமடைந்த நிலையில், அருகில் இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
பலத்த காயமடைந்த மணிகண்டனுக்கு மேல்சிகிச்சைக்காக, அங்கிருந்து 120 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் விநாயகா சூப்பர் ஸ்பெஷாலிட்டி என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மணிகண்டன் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், கடந்த 22ஆம் தேதி அவர் மூளைச் சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் அவரது உறவினர்களிடம் தெரிவித்தனர்.

சுட உத்தரவிட்டது ராஜ்நாத் சிங்? மத்திய அரசின் வாய்மொழியான உத்தரவு’

 டிஜிட்டல் திண்ணை: சுட உத்தரவிட்டது ராஜ்நாத் சிங்?
மின்னம்பலம்  : “முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பெரும் தலைவலியாக இருக்கிறது தூத்துக்குடி விவகாரம். நேற்று பத்திரிகையாளர்களிடம் முதல்வர் விளக்கம் கொடுத்தாலுமேகூட, அதற்கும் பல விமர்சனங்கள் வந்திருக்கின்றன. அதுவும் குறிப்பாக 10க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிட்டது யார் என்ற கேள்விக்கு இன்னமும் உரியவர்கள் விடையளிக்கவில்லை.
தூத்துக்குடித் துப்பாக்கிச் சூடு என்பது தமிழகத்தில் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடுகளை எல்லாம்விட வேறுபட்டது. அதாவது மக்கள் போராட்டங்களைக் கலைக்க நடத்தப்படும் துப்பாக்கிச் சூடாக இல்லாமல், செலக்ட் செய்து எலிமினேட் செய்யும் அதாவது தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரைக் கொலை செய்யும் ராணுவ உத்தியாகவே இந்தத் துப்பாக்கிச் சூடு அமைந்திருக்கிறது. அதனால்தான் இதற்கு யார் உத்தரவிட்டார் என்ற கேள்வி அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறது.
நேற்று தலைமைச் செயலகத்தில் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துப்பாக்கிச் சூட்டுக்குத் தான் உத்தரவளிக்கவில்லை என்று இலைமறைகாயாகத் தெளிவுபடுத்திவிட்டார். தமிழகத்தின் போலீஸ் துறையை நிர்வகிக்கும் முதலமைச்சருக்கே தெரியாமல் துப்பாக்கிச் சூடு நடத்தித் தமிழக மக்களைக் கொல்ல உத்தரவிட்டது யார் என்று தலைமைச் செயலகத்தில் விசாரித்தபோதுதான், அந்த அதிர்ச்சிகரமான பதில் தெரியவருகிறது.

8 பேர் சினைப்பர்களால் சுடப்படவில்லை .. நேருக்கு நேராக அருகில் நின்றுதான் சுட்டு கொல்லப்படனர்


Kalaiwannan Kalai : எனது சந்தேகம் நிரூபணமானது. ஊர்தியில் இருந்து திசைதிருப்புவதற்காக SLR சுடுகலனால் சத்த வெடிவைத்துவிட்டு, மிக அருகில் போராட்டக்காரர்களோடு சிவில் உடையில் நின்ற வேறு கொலைகாரக் குழு ஒன்றுதான் அவர்களைச் சுட்டுக்கொன்றுள்ளது. இந்தியன் SLR சுடுகலனின் அதிகூடிய தாக்கமான தூரவீச்சு 600மீற்றர். அதாவது 600மீற்றரில் உள்ள ஒரு இலக்கை காயப்படுத்தலாமே தவிர அவ்வாறு துல்லியமாகக் கொலைசெய்ய முடியாது.
சாதாரண குறிச்சூட்டுச் சுடுகலனால் (normal sniper) 300மீற்றர் தூரத்தில் உள்ள இலக்கை துல்லியமாகச் சுடமுடியும். அதுவும் அணை (mount) கொடுக்கப்படாமல் நின்ற நிலையில் (standing position) அவ்வாறு 300 மீற்றரில் துல்லியமாகச் சுடமுடியாது, ஆனால் காயப்படுத்தலாம்.
காவல்துறை கூறியது போன்று 800 மீற்றரில் இருந்து அந்த SLR ஆல் அவ்வாறு துல்லியமாகச் சுடமுடியாது. அவர்கள் சுட்ட அந்த SLR சுடுகலனில் குறிச்சூட்டுச் சுடுகலனுக்கு உரிய 'ஒளியியல் தொலைபார்வைக் குறிகாட்டி' (obtical scope sight) பொருத்தப்பட்டிருக்க வில்லை. அது, வெறும் குறிகாட்டியுடன் கூடிய சதாரண சுடுகலன்.

சன்டிவி, தினமலர் ,தினகரன் , இந்தியா டுடே,இன்னும் ஏராளமான ஊடகங்கள் பணத்துக்கு விலைபோய் விபசாரம் அம்பலம்

New Delhi: Nearly two months after Cobrapost first reported how some media houses were prepared to strike business deals to promote the Hindutva agenda and help polarise voters in the run up to the 2019 elections, the website has released a second batch of video recordings shot surreptitiously by an undercover reporter that shows managers and owners of some of the largest newspapers and TV channels succumbing to the same package of Hindutva advertorials.
Cobrapost Sting: Big Media Houses Say Yes to Hindutva, Black Money, Paid News

வெள்ளி, 25 மே, 2018

காடுவெட்டி குரு காலமானார்

நக்கீரன் : வன்னியர் சங்கத்தலைவரும், பாமகவின் முன்னணி தலைவரும்,
முன்னாள் எம்.எல்.ஏவுமான காடுவெட்டி ஜெ.குரு ( 57) காலமானார். சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக சிகிச்சைபெற்று வந்தார்.
கடந்த சில நாட்களாக மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிக்சிசை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று இரவு அவர் சிகிச்சை பலனின்றி காலமானார். அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் பிறந்த குரு, பாமக சார்பில் 2முறை எம்.எல்.ஏவாக இருந்துள்ளார். ல் ஆண்டிமடம், 2011ல் ஜெயங்கொண்டம் தொகுதிகளில் போட்டியிட்டு வென்றவர் ஜெ.குரு. ஜெ.குரு நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஒரு ஆண்டாக சிரமப்பட்டு வந்தார். புத்தாண்டு தினத்தன்று திடீரென்று உடல்நிலை மோசம் அடைந்ததால் சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை

தூத்துக்குடி .. ஆர்எஸ்எஸ் பாஜக வின் திட்டமிட்ட படுகொலை,, பலநாட்கள் ஸ்கெட்ச் போட்டு நடத்தப்பட்டது ..

நாங்கள்சொன்னால் நம்புங்கள் மக்களே,,இது ஆர்எஸ்எஸ்பாஜக வின்
திட்டமிட்ட படுகொலை,,என்பதை உணருங்கள்,,அவர்கள் இந்துமுஸ்லீம் கலவரம் எதில்ப்பார்த்தார்கள்,, நடக்கவில்லை, சர்ச்சுகளைக்கொளுத்தினார்கள் ஏதும் நடக்கவில்லை,,அடுத்து ஆண்டாளை தூக்கிக்கொண்டு ஆடினார்கள்,. என்னசெய்தும்,ஏதும் நடக்கவில்லை,,,அவனுங்க ளோட தந்திரம் பலிக்கவே இல்லை,,,அதனால் வெகுண்டு,,செய்த கொலைகள்தான் இது,,அவர்களுக்கு ரத்தம்தான் பிடிக்கும் மனித ரத்தம்,, முகநூல் பதிவு
pushinan :பாஜகவும் அடிமை அதிமுகவும் இணைந்து திட்டமிட்ட படுகொலைகள். இவனுக்கு முங்கூட்டியே தெரிந்திருக்கிறது. 3% பார்ப்பனன் ஆட்சி அதிகாரத்தை வைத்து நம்மை ஆட்டிப்படைக்கிறான், அழிக்கிறான்!

கடலில் மூழ்கப்போகும் தமிழ்நாடு .. பொறிக்கிடங்கு விளையாட்டு நினைவிருக்கா?

Sumathi Purani : கடலில் மூழ்கப்போகும் தமிழ்நாடு
#பொறிக்கிடங்கு விளையாட்டு நினைவிருக்கா ?
இப்ப தமிழ்நாட்டிலே உங்களுக்கு தெரியாமல் வெளிநாட்டு நச்சுஎரிவாயு கம்பெனிகள் நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளை உடைத்து அதில் உள்ள கனிமங்களை எடுக்கிறான்கள் .
நவீன வகை ஆயுதங்களையும் , கருங்கல் பாறைகளை உக்கவைக்கும் கெமிக்கல்களையும் பயன் படுத்தி நிலத்துக்கு அடியில் உள்ள பாறைகளை உடைத்து குழாய்கள் மூலம் அதை வெளியில் எடுக்கின்றனர் . இதனால் நிலத்துக்கு அடியில் மிகப்பெரிய இடைவெளி உண்டாகும் வெள்ளப்பெருக்கு வரும் போது நிலத்துமேல் ஏற்பாடும் நீர்த்தேக்கம் காரணமாக உங்கள் நிலம் நிலத்துக்கடையில் புதைந்து விடும் மக்கள் எல்லாம் மண்ணுக்குள் புதைந்து இறந்து விடுவார்கள் .
#பொரிக்கிடங்கு திட்டம் ஆனது தமிழ்நாட்டை சூழவுள்ள கடல்களை கொண்டுதான் தமிழ்நாட்டை மூழ்கடிக்க போறாங்கள் .
இப்ப கடற்கரையை அண்டிய பிரதேசங்களின் எரிவாயு எடுத்தால் கடல்நீர் நிலத்துக்கடியில் வந்து அந்த பிரதேசம் கடலில் மூழ்கி விடும் .
உங்கள் அறிவு என்ன சொல்லும் , தூத்துக்குடி ,நெடுவாசல் இயற்க்கை சீற்றத்தால் கடலில் மூழ்கி விட்ட்து அல்லது நிலத்துக்கடியில் புதைந்து விட்ட்து என்று யோசிப்பிங்க. ஊடகங்களும் பொய் செய்தியைத்தான் தெரிவிக்கும் .

ஸ்டெர்லைட் .. கன்னடர்கள் ஆர்ப்பாட்டம் .. பெங்களூர் ஸ்டெர்லைட் அலுவலகம் முன்பாக

ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகமான வேதாந்தாவின் அலுவலகம் பெங்களூரு எம்.ஜி சாலையில் உள்ள ப்ரெஸிடீஜ் மெரிடியன் என்ற வணிக வளாகத்தில் செயல்படுகிறது. வேதாந்தாவுக்கு எதிராகவும், தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் மே 24 ஆம் தேதி மதியம் மூன்று மணியளவில் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். சுமார் ஐம்பது முதல் நூறு பேர் வரைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். தமிழக அரசு, காவல்துறை, மத்திய அரசு, அரசியல் காட்சிகள் என சகலரையும் விளாசினார்கள்.
தமிழர்களுக்காகப் போராடிய கன்னடர்கள்!

மின்னம்பலம்: காவிரி விவகாரத்தில் தமிழர்களுக்கும் கன்னடர்களுக்கும் இடையே இரு மாநிலங்களிலும் உள்ள சிற்சில அமைப்புகளால் வெறுப்புணர்வு பல வருடங்களாக தூண்டப் பட்டுவந்திருக்கிறது. இதற்கு இலக்காகி பெங்களூருவில் பல தமிழர்கள் தாக்கப்பட்டு, தமிழர்களின் உடைமைகளும் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்தப் பின்னணியில், தூத்துக்குடியில் நடந்த கொடூரத் துப்பாக்கிச் சூட்டுக்குக் கண்டனம் தெரிவித்து கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஸ்டெர்லைட் ஆலையை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள் கன்னடர்கள். மொழி தாண்டிய மனித நேயத்துக்கான அடையாளமாக இந்த போராட்டம் பார்க்கப்பட்டு, பாராட்டப்படுகிறது.
இதுகுறித்து எழுத்தாளர் மணிகண்டன் தனது வலைப்பூவில் செய்துள்ள பதிவு கன்னட -தமிழ் இனங்களுக்கு இடையே உண்டாக்கப்படும் பகைமை எனும் மாயாவாதங்களைத் தகர்ப்பதாக அமைந்துள்ளது.
அந்தப் பதிவு இதோ...

14 பேரின் நிலைமைக் கவலைக்கிடம்: ஆட்சியர்!

14 பேரின் நிலைமைக் கவலைக்கிடம்: ஆட்சியர்!மின்னம்பலம : தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 14 பேரின் நிலைமைக் கவலைக்கிடமாக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, அப்போதைய மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் மருத்துவமனைக்கு சென்று 15 நிமிடங்கள் மட்டுமே இருந்துள்ளார். அதுவும் மருத்துவரின் அறையில் பத்து நிமிடம் இருந்துவிட்டு திரும்பியுள்ளார். பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல் வந்ததால், அங்கிருந்த மக்கள் “கொலைகார ஆட்சியரே ஓடு” என முழக்கமிட்டனர்.

முழு அடைப்புப் போராட்டம்: தலைவர்கள் கைது!

முழு அடைப்புப் போராட்டம்: தலைவர்கள் கைது!மின்னம்பலம்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து முழு அடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் உட்பட பலரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது காவல் துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெறும் என திமுக மற்றும் அதன் தோழமைக் கட்சிகள் அறிவித்தன. அதன்படி இன்று முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்றுவருகிறது. திமுக, காங்கிரஸ், மதிமுக, சிபிஐ, சிபிஐ(எம்), விடுதலைச் சிறுத்தைகள் உட்பட பல்வேறு கட்சிகள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
முழு அடைப்புப் போராட்டம் காரணமாகப் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. எனினும், சென்னையில் பேருந்துகள், கோயம்பேடு காய்கறிச் சந்தை போன்றவை வழக்கம்போல் இயங்கிவருகின்றன.

திருச்சி சமயபுரம் யானைக்கு மதம் பிடித்தது: பாகனை அடித்துக்கொன்றது

பாகன் ராஜேந்திரன்
tamilthehindu :திருச்சி சமயபுரம் கோவில் முன் பக்தர்கள் கூட்டம், யானை மாசினியுடன் கொல்லப்பட்ட பாகன் ராஜேந்திரன்(பழையபடம்) கோவிலுக்குள் பாகன் உடலுடன் யானை படம்: ஞானவேல் முருகன் ;
சமயபுரம் கோயில் யானைக்கு திடீரென மதம் பிடித்ததில் பாகனைக்
கொன்றது. யானைக்கு மதம் பிடிப்பதற்கு சற்று நேரம் முன்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்ற அமைச்சர் துரைக்கண்ணு உயிர் பிழைத்தார்.
சமயபுரம் கோயில் மிகவும் பிரசித்தி பெற்ற கோயில் ஆகும். இந்த கோயிலுக்கு இந்தியா முழுவதுமிருந்து பக்தர்கள் வருவது உண்டு. 9 வயதாகும் மாசினி என்றழைக்கப்படும் பெண் யானை, கடந்த 2006-ம் ஆண்டு ஆறுமாத குட்டியாக தாயைப் பிரிந்த நிலையில் திருச்சி வனப்பகுதியில் மாசினி கோயில் அருகே கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் அதன் பெயர் மாசினி என்று அழைக்கப்பட்டது.

காலையிலிருந்து கோயில் யானை வித்தியாசமான நிலையில் நடந்துள்ளது. இதைப் பார்த்து பாகன் கஜேந்திரன் சந்தேகமடைந்துள்ளார். இன்று முக்கியமான நாள் என்பதால் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலுக்கு வந்தனர், அமைச்சர் துரைக்கண்ணுவும் கோயிலுக்கு வந்தார். அவர் வந்துசென்ற சிறிது நேரத்தில் பாகன் யானையின் அருகில் சென்றார். அப்போது யானை அவரை திடீரென தூக்கி வீசியது. பாகனை மிதித்துக் கொன்றது.

கனடாவில் இந்திய ஓட்டலில் குண்டுவெடிப்பு 15 பேர் காயம் ,, இருவர் படுகாயம்

வெப்துனியா :கனடாவில் உள்ள இந்திய ஓட்டலில்
குண்டுவெடிப்பு – 15 பேர் காயம் கனடாவின் டோரண்டோ மாகாணத்தில் உள்ள இந்திய ஓட்டலில் நடத்தப்பட்ட குண்டுவெடிப்பில் 15 பேர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டோரண்டோ: கனடாவின் ஒண்டாரியோ மாகணத்தின் உள்ள மிசிஸாயுகா பகுதியில் பாம்பே பேல் என்ற இந்திய ஓட்டல் அமைந்துள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு திடீரென குண்டு வெடித்தது. இந்த தாக்குதலில் 15 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் 3 பேர் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்நிலையில், இச்சம்வம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் இரண்டு மர்ம நபர்கள் ஓட்டலுக்குள் வந்து சென்றது தெரியவந்துள்ளது. அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

எல்லையில் தமிழ் ராணுவத்தினர் கடும் கோபம் :சுடுவதற்கு உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது?


வெப்துனியா :தூத்துக்குடியில் பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய தமிழக போலீசாரை கண்டிக்கும் விதமாக எல்லையில் உள்ள ராணுவ வீரர்கள்  பேசும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் நடத்திய போரட்டம் கலவரமாக மாறியதைத் தொடர்ந்து இதுவரை 13 பேர் போலீசாரின் துப்பாக்கிக் குண்டுகளுகு பழியாகியுள்ளனர். இது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
முதலில் எச்சரிக்க வேண்டும், பின் வானை நோக்கி சுட வேண்டும், அதன்பின் முட்டிக்காலுக்கு கீழேதான் சுட வேண்டும். அப்படி இருக்கும் போது மக்களின் தலையில், நெஞ்சில் ஏன் போலீசார் சுட்டனர். அதுவும்,  தீவிரவாதிகளை சுடுவதற்கும், என்கவுண்டர் சமயங்களிலும் பயன்படுத்த வேண்டிய ஸ்னைப்பர் துப்பாக்கியை பயன்படுத்தியது தவறு என்கிற கருத்தும் எழுந்துள்ளது.

கர்நாடகா நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் குமாரசாமி.. 117 எம்எல்ஏக்கள்

மாலைமலர் :கர்நாடக சட்டசபையில் முதல் மந்திரி குமாரசாமி ஆட்சி மீதான நம்பிக்கை
தீர்மானித்தின் மீது இன்று நடைபெற்ற வாக்கெடுப்பில் 117 எம்.எல்.ஏ.க்கள் அரசுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பெங்களூரு: சமீபத்தில் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி ஆட்சி அமைக்க உள்ளன.< இதற்கிடையே, விதான் சவுதாவில் மஜத தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.
இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக பாஜகவின் எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார்.

சென்னை: எதிர்கட்சிகள் முழு அடைப்பு போராட்டம் - போலீசார் குவிப்பு

தினத்தந்தி : தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தை கண்டித்து தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இன்று (வெள்ளிக்கிழமை) தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முழுஅடைப்பு போராட்டத்தையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் பாதுகாப்பு பணியில் 20 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டிருகிறார்கள்.
தலைமைச் செயலகம் உள்ளிட்ட முக்கிய அரசு அலுவலகங்கள், பஸ், ரெயில் நிலையங்களில் போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருக்கிறார்கள்.> மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பஸ்-ரெயில்கள் ஓடும் என்று தெரியவந்துள்ளது. நேற்று இரவில் இருந்தே முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அத்தியாவசிய பொருட்கள் எவ்வித இடையூறுமின்றி பொதுமக்களுக்கு கிடைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் அறிவித்துள்ளனர்.

விமர்சகரை விளாசிய கிருத்திகா உதயநிதி .. காளி படம் ..

Siva - Oneindia Tamil புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி-வீடியோ சென்னை: காளி படத்தை விமர்சித்த புளூ சட்டை மாறனை விமர்சித்துள்ளார் கிருத்திகா உதயநிதி 
 காளி படத்தை இயக்கிய கிருத்திகா உதயநிதி புளூ சட்டை மாறன் தன் படத்தை விமர்சித்த விதம் பிடிக்காமல் அவரை விவாதத்திற்கு அழைத்துள்ளார்.
 மாறன் மறுக்கவே வீடியோ மூலம் தனது கருத்தை பதிவு செய்து அவருக்கு அனுப்பியுள்ளார். மாறன் வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் கிருத்திகா கூறியிருப்பதாவது, 
 விமர்சனம் விமர்சனம் புளூ சட்டை சாரின் காளி பட விமர்சனத்தை நான் விமர்சனம் செய்யப் போகிறேன். படத்தை விமர்சிப்பது என்றால் கதபாத்திரங்கள் பற்றி பேசுவது, திரைக்கதை பற்றி ஆராய்வது, நடிப்பு எப்படி, பாடல்கள் எப்படி என்று அனைத்தையும் பற்றி பேச வேண்டும். விஜய் ஆண்டனி விஜய் ஆண்டனி ஒரு படத்தை முழுதாக எடுத்து விமர்சனம் செய்ய வேண்டும். அதை விட்டுவிட்டு விஜய் ஆண்டனியின் நடிப்பை பற்றியும், படத்தை ஒன்லைனில் சொல்வதும், இந்த படத்தை பாருங்க, பார்க்காதீங்க என்று விமர்சனம் செய்துவிட்டு இது தான் விமர்சனம் என்று புளூ சட்டை சொல்லும்போது அதை எப்படி ஏற்றுக் கொள்வது என்று தெரியவில்லை.

சீமான் .. தப்பித்தவறிக் கூட பேசாத வார்த்தை லைக்கா

Shankar A : தம்பிகளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி ?
ப்ரொபைல் போட்டோவுல முறுக்கா நிப்பாங்க.
கவர் பிக்சரா, ஈழ படுகொலை போட்டோ, இல்லன்னா, விழித்தெழு தமிழா இது போன்ற வாசகங்கள் இருக்கும்.
பழைய சித்த வைத்திய குறிப்புகளை போட்டு, முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்லன்னு போஸ்ட் போட்ருப்பாங்க.
மவுண்ட் ரோட்ல ஒரு பஸ் இடிச்சு ரெண்டு பேரு செத்துட்டாங்கன்னு செய்தி வந்தாக் கூட, நிச்சயம் அந்த ட்ரைவர் வடுக வந்தேறியாத்தான் இருப்பான். தமிழினம் அழிக்கப்படுகிறதுன்னு சொல்லுவாங்க.
எதுத்து பேசறவன் எவனா இருந்தாலும் டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாங்க.
சீமானின் உரை வீடியோக்களை பகிர்ந்து, திமுக காரனுங்க இதோட செத்துடுங்கடான்னு போட்ருப்பாங்க.
தமிழன் ஏமாந்தது போதும். இத்தோடு ஒழியட்டும் போலி திராவிட அரசியல்னு அடிக்கடி போடுவாங்க.
இன்னும் தீவிரமான தம்பிகள், பெருஞ்சித்திரனார் படம் வைச்சிருப்பாங்க.
பிரபாகரனைப் பத்தி யாரு எங்க நல்லா போஸ்ட் போட்ருந்தா, அவன் ஒருவன்தான் வீரன். தமிழினத்தை வாழ்விக்க வந்தவன் னு கமென்ட் போடுவாங்க.
நாம் தமிழர் ஒன்றே மாற்றுன்னு அடிக்கடி போஸ்ட் போட்டு அவங்களே திருப்தி பட்டுக்குவாங்க.
சீமானை பத்தி யாரு தப்பா போஸ்ட் போட்டாலும், நேரா அந்த போஸ்டுக்கு போயின்னு வண்டை வண்டையா திட்டுவானுங்க. திட்டி முடிச்சிட்டு, அவங்க பேஜுக்கு போயி, தமிழ்க் கலாச்சாரம் மற்றும் பண்பாடு என்பதுன்னு ஹாயா பேசிக்கிட்டு இருப்பாங்க.

வியாழன், 24 மே, 2018

வேதாந்தாவை காப்பாற்றிய பிஜேபி. Savukku

தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் குறைந்தது 11 பேர் மாநில போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பிறகு, அந்த ஆலையின் தினமும் 1,200 டன் உற்பத்திக்கான சர்ச்சைக்குரிய விரிவாக்கத்திற்கு உயர் நீதிமன்றம் மே 23 தடை விதித்துள்ளது. ஆலை கட்டுவதற்கு முன்னர் அப்பகுதி மக்களை கலந்தாலோசிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அவ்வாறு சட்டப்பூர்வமாக செய்ய வேண்டியதில்லை என அந்த நிறுவனம் கூறியது.
பொதுமக்களை ஆலோசிக்காமல் ஸ்மெல்டரை விரிவாக்கம் செய்து உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க மத்திய அரசிடமிருந்து ஒரு சட்டப்பூர்வமான சுற்றுச் சூழல் அனுமதியைப் பெற்றுள்ளதாக வேதாந்தா நிறுவனம் கூறுகிறது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் ஆவணங்களின்படி பிஜேபி அரசாங்கம் 2014 டிசம்பரில் பசுமை விதிமுறைகளுக்கு  புதிய விளக்கமளித்தது. இது தூத்துக்குடியில் வேதாந்தாவின் ஆலை போன்ற ஆலைகளை அத்திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களை கலந்தாலோசிக்காமல் கட்டி உற்பத்தியை தொடங்க வழிவகுத்தது.

ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும்.. தமிழக அரசு அறிவிப்பு

: Kalai Mathi - Oneindia Tamil  தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். 
 தூத்துக்குடியில் கடந்த இரண்டு நாட்களாக வன்முறை நீடித்து வந்த நிலையில் நேற்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்புநிலையை கொண்டுவர பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மாலை அமைதி குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் ஆட்சியர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசினார். 
 அப்போது ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக அவர் கூறினார். மேலும் அவர் பேசியதாவது, ஆலையை மூடவே மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. 
 துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் படுகாயம், 83 பேர் காயம் அடைந்துள்ளனர். வன்முறையில் 29 ஆண் காவலர்களும் , 10 பெண் காவலர்களும் காயமடைந்துள்ளனர். ரூ. 1.27 கோடி வாகனங்கள் சேதம் ரூ. 1.27 கோடி வாகனங்கள் சேதம் 1.27 கோடி ரூபாய் மதிப்பிலான 110 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. 

லண்டன் வீடு முன்பும் ., பங்குச்சந்தையிலும் தமிழர்கள் போராட்டம் .. ஆடிப்போன அனில் அகர்வால்

பெரிதாக பார்க்க கிளிக்செய்யவும் 
Special Correspondent FB Wing :
ஸ்டெர்லைட் நிறுவனத்தின் மூலம் மக்களுக்குப்
பாதிப்புகள் இருக்கிறது என்பது நாம் அறிந்த நிலையில், நிறுவனத்தின் உற்பத்தி அளவை 8 லட்சம் டன்னாக உயர்த்தத் திட்டமிட்டு வரும் செய்தி மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

இதன் வாயிலாகவே மக்களின் போராட்டம் வெடித்தது. இந்த நிறுவனத்தின் இப்பகுதியில் இருக்கும் நிலத்தடி நீர் வளம் பெரிய அளவில் பாதிக்கப்படுகிறது என்று மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதேபோல் சில அமைப்புகள் அரசின் விதிகளை மதிக்காமல் புகைபோக்கி (chimney) உயரவும் குறைவாக வைத்துள்ளது ஸ்டெர்லைட் ஆலை, இதனால் காற்று மாசுபாடு இப்பகுதியில் மிகவும் அதிகமாக உள்ளது எனவும் இந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டியுள்ளனர்.

ஸ்டெர்லைட்டை மீண்டும் இயக்குவோம்’- சொல்கிறார் வேதாந்தா தலைவர் அனில் அகர்வால்

மலையரசு - விகடன் : 'தூத்துக்குடியில் நடந்த சம்பவங்களைக் கேட்கும்போது
எனக்கு வருத்தம் உண்டாகிறது' என வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் செயல்பட்டுவரும் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது நிகழ்த்த துப்பாக்கிச் சூட்டில், இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். மேலும், பொதுமக்களுக்கும் போலீஸுக்கும் இடையே தொடர்ந்து மோதல் உருவாகும் சூழ்நிலை தொடர்வதால், தூத்துக்குடியில் நாளுக்கு நாள் பதற்றம் அதிகரித்துவருகிறது. நிலவிவரும் பதற்றத்தைத் தணிக்க அமைதி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மத்திய அரசும் மாநில அரசும் தெரிவித்துள்ளன. துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் அனுதாபங்களைத் தெரிவித்துவருகின்றனர். மேலும், அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகளும் அமைப்புகளும் போராட்டங்களை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களுக்கு, வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், ``நேற்று நடந்த சம்பவங்களைக் கேட்கும்போது வருத்தம் ஏற்படுகிறது.

கொல்லப்பட்டவர்கள் 26 பேர்.... ஆட்சியர் அலுவலகத்துக்குள் அழைத்து கொல்லப்பட்டனர் .. 26 உடல்களும் தூத்துக்குடி அரசு மருத்தவமனையில்

தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள். 
Troll Trousers 2.0 : தூத்துக்குடி அரசு மருத்துவமனை பகுதியில் இருந்து கிடைத்த அப்டேட்
மதியம் 1 மணி, 24-5-2018
1. துணை ராணுவம் எதுவும் வரவில்லை.
2. மற்றமாவட்ட காவல்துறைப்படைகள் தான் அதிகளவில் குவிக்கப்பட்டிருக்கின்றன.
3. நேற்றிரவு மட்டும் 300க்கும் மேற்பட்ட இளைஞர்கள் காவல்துறையினரால் அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார்கள். ஆனால் காவல்துறை கணக்கில் 132தான் சொல்லப்படுகிறது. மீதமுள்ள நபர்களை சட்டப்படி கைது செய்யவில்லை, எனவே இந்த சட்டமீறலை நிறுத்தவேண்டும்.
4. காவல்துறை அழைத்துச்சென்றவர்கள் போக, 100க்கும் மேற்பட்ட இளைஞர்களைக் காணவில்லை.
5. ஸ்டெர்லைட்டுக்கு மின்சாரம் நிறுத்தப்பட்டாலும், Sterlite நிறுவனமே தனியாக 160மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் யூனிட் வைத்திருக்கிறது. (SESA Sterlite) எனவே இது கண்துடைப்பு.
6. காவல்துறைதான் வதந்திகளை கிளப்புகிறது, நேற்றிரவு காவலர் 2 பேர் வெட்டப்பட்டதாக, குண்டு வீசப்பட்டதாக சொல்வது வதந்தி, அப்படி யாரும் செய்யவில்லை.
7. இணையம் இருந்தால் உண்மை வீடியோக்களைப் பகிரலாம், இல்லாததால் எங்கள் பக்க உண்மைகளைப் பகிர முடியவில்லை, அனைவரும் பயந்துபோய் பதுங்கியிருக்கிறோம்.
8. இறந்தவர்கள் எண்ணிக்கை 26 பேர். 26 உடல்களும் தூத்துக்குடி அரசுமருத்தவமனையில் இருக்கிறது, ஆனால் உறவினர்கள் பார்க்க அனுமதி மறுக்கப்படுகிறது.
9. ஒவ்வொரு பகுதி மக்கள் பிரதிநிதியும் அழைத்துப்பேசினாலே பிரச்சினை நின்றுவிடும், ஆனால் காவல்துறையை நம்பிப்போகமுடியவில்லை.
10. தூத்துக்குடி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று கையசைத்து உள்ளே வாருங்கள் என்று அழைத்ததே காவல்துறைதான், நம்பிப்போன மக்கள் பிரதிநிதிகளைத்தான் போலீஸ் சுட்டுக்கொன்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும், 15 பேர் இப்படி சுட்டுக்கொல்லப்பட்டார்கள்.

முதல்வர் பழனிசாமி : தற்காப்புக்காகவே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது ! பொய்யான தகவல்களை அளிக்கிறார் ஸ்டாலின்:

tamilthehindu : செய்தியாளர் சந்திப்பில் முதல்வர் பழனிசாமி. உடன் துணை முதல்வர் ஓபிஎஸ், தமிழக அமைச்சர்கள் | படம்: எல்.சீனிவாசன். திட்டமிட்டு துப்பாக்கிச் சூடு நடத்தவில்லை. தற்காப்புக்காக நடத்தப்பட்டது என்று முதல்வர் பழனிசாமி விளக்கம் அளித்தார்.
மேலும், திட்டமிட்டு அரசியல் நாடகத்தை அரங்கேற்ற வேண்டும் என்பதற்காகத் தன் அறையில் அமர்ந்து விட்டு ஊடகங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் தவறான செய்தியை அளித்திருப்பதாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
''இன்று காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தலைவர் அறையில் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடைபெறுவதாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், நான், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆய்வுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றோம். அப்போது, எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணைத் தலைவர், காங்கிரஸ் சட்டப்பேரவை தலைவர் ஆகியோர் கூட்டத்தின் நடுவிலேயே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறி விட்டனர்.

தூத்துக்குடி உயிரிழந்தவர்கள் உடலைப் பதப்படுத்தும் விவகாரம்.. தமிழக அரசு:கோரிக்கை.. உயர் நீதிமன்றம் நிராகரிப்பு

tamiltheyhindu :தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தோர் உடலை வரும் 30-ம் தேதி வரை பதப்படுத்தி வைக்க வேண்டும் என்று உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மாற்ற தமிழக அரசு வைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.
17-year-old Snowlin
துப்பாக்கிச் சூடு சம்பவத்தை தூத்துக்குடி மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை கோரி வழக்கறிஞர்கள் ஜிம்ராஜ் மில்ட்டன், பார்வேந்தன், பாவேந்தன் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் ஆகியோர் உடற்கூறு ஆய்வில் தனியார் மருத்தவரை அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, மறு உத்தரவு வரும்வரை உடற்கூறு ஆய்வு செய்த உடல்களைப் பாதுகாக்க உத்தரவிட்டு அதுதொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டு வழக்கு மே 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், நீதிமன்ற உத்தரவுப்படி உடல்களைப் பாதுகாக்கும் நிலையில், உடலைக் கேட்டு உறவினர்கள் போராட்டம் நடத்துவதால் அரசு எப்படி செயல்பட வேண்டும் என விளக்கமளிக்க தமிழக அரசு கோரிக்கை வைத்து இன்று முறையிட்டது. இந்த வழக்கை இன்று மதியம் நீதிபதிகள் ரவீந்திரன், வேல்முருகன் அமர்வு விசாரித்தது.

தூத்துக்குடி போராட்டத்தால் பங்குசந்தை ஆட்டம் கண்டது .. வேதந்தாவின் பங்குகள் சரிவு

அனில் அகர்வால்
முக்கிய நிறுவனங்கள்
ரத்த சிந்தும் மக்கள் மெட்டல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் tamil.goodreturns.in -prasanna: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடவேண்டும் என்பதற்காக மக்கள் போராடி வந்த நிலையில், போராட்டம் வன்முறையாக மாறியது, அரசு சொத்துக்கள் நாசமாகியது எனத் தேவையில்லாத காரணங்களுக்குக் காவல் துறையினர் துப்பாக்கியால் சுட்டு 12 பேரை அநியாயமாகக் கொன்று குவித்துள்ளனர்.
இதன் எதிரொலியாக ஸ்டெர்லைட் நிறுவனத்தின் தாய் நிறுவனமான வேதாந்தா பங்குகள் இன்று 5 சதவீதம் வரை சரிந்தது.
மெட்டல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் : வேதாந்தா நிறுவனத்தின் சரிவால் இந்திய பங்குச்சந்தையில் மெட்டல் மற்றும் எண்ணெய் நிறுவனங்கள் மீதான முதலீட்டை அன்னிய முதலீட்டாளர்கள் அதிகளவில் வெளியேற்றினர்.
இதன் எதிரொலியாக இன்று மும்பை பங்குச்சந்தை 1 சதவீதம் வரையில் சரிந்தது. ரத்த சிந்தும் மக்கள் : பொதுவாக வடமாநில மீடியாக்கள் தென் இந்தியாவைக் கவனிக்காமல் இருப்பது போலவே நேற்றைப் போராட்டத்தின் எதிரொலி இன்று காலையில் தான் எதிரொலித்தது.
இதன் காரணமாக இன்றைய வர்த்தகத்தில் மதியம் 12 மணிக்கு மேல் அன்னிய முதலீட்டாளர்களின் முதலீட்டு வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 320 புள்ளிகள் வரையில் சரிந்தது.

சவுதி பட்டத்து இளவரசர் அரசியல் எதிரிகளால் கொல்லப்பட்டாரா?

சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் எம்.குமரேசன் - விகடன் :சவுதி பட்டத்து இளவரசர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சவுதி மன்னராக சல்மான் பதவியேற்ற பிறகு, பட்டத்து இளவரசராக இருந்த முகமது பின் நயாஃப்பை  நீக்கம் செய்துவிட்டு, தன் மகன் முகமது பின் சல்மானை பட்டத்து இளவரசர் ஆக்கினார். தந்தைக்கு 80 வயதுக்கு மேலாகிவிட்ட நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சரான இளவரசர் சல்மான்தான் முக்கிய முடிவுகளை எடுத்துவந்தார். ஊழல்களில் திளைத்த இளவரசர்கள் உள்ளிட்ட 200 பெரும் பணக்காரர்களைச் சிறையில் (ரிட்ஸ் கார்ட்டன் ஐந்து நட்சத்திர விடுதி) அடைத்தார். ஊழல் செய்த பணத்தை அரசிடம் ஒப்படைத்தவர்கள் மட்டுமே விடுவிக்கப்பட்டனர்.

ரூ.240 கோடிக்காக ஸ்ரீதேவி கொலை; இன்சுரன்ஸ் பணம்தான் காரணம் ... ?

தினத்தந்தி :ரூ.240 கோடி ரூபாய் காப்பீடு பணத்திற்காக ஸ்ரீதேவி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் இதில் தாவூத் இப்ராகிமுக்கு தொடர்பு இருக்கலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. புதுடெல்லி கடந்த பிப்ரவரி 24 ந்தேதி நடிகை ஸ்ரீதேவி  தங்கியிருந்த ஓட்டலில்  மரணமடைந்தார். நடிகை ஸ்ரீதேவியின் இறப்பு குறித்து விசாரணை நடத்தி வரும் மும்பை காவல் துறையின் ஓய்வு பெற்ற உதவி ஆணையர் வேத் பூஷண் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.< துபாயில், ஸ்ரீதேவி தங்கியிருந்த ஓட்டல் தாதா தாவூத்தின் இப்ராகிமுக்கு  சொத்து எனக்கூறிய அவர், சவுதி இளவரசருக்கும் தாவூத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். இக்கொலையில் தாவூத்திற்கு தொடர்பு உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்! பதவியை விட்டு விலகுங்கள்: மு.க.ஸ்டாலின்

நக்கீரன் : நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும். பதவியை விட்டு விலகுங்கள் என முதல்வர் எடப்பாடியை பதவி விலகக்கோரி திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல்வரிடம் நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என கூறிவிட்டுதான் வெளிநடப்பு செய்தேன். ஜனநாயக ரீதியில் போராட்டத்தில் பங்கேற்றவர்களை சமூகவிரோதிகள் என முதல்வர் பொய் கூறியுள்ளார். சொந்த நாட்டு மக்களை சமூகவிரோதிகள் எனக்கூறும் முதல்வரை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.
துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூற ஏன் முதல்வர் செல்லவில்லை? நீங்கள் ஆண்டதும் போதும், மக்கள் மாண்டதும் போதும்! பதவியை விட்டு விலகுங்கள். முதல்வர் பதவி விலகி டிஜிபி நீக்கப்படும் வரை எங்கள் போராட்டம் தொடரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

ஸ்டாலின் கைது ... தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம்.. அதிரடி கைது!

Stalin condemned the protest by the DMK tamil.oneindia.com- hemavandhana. சென்னை: திமுக செயல் தலைவர் ஸ்டாலினின் கைது நடவடிக்கையை கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏராளமான திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.
தூத்துக்குடி சம்பவம் குறித்து முதலமைச்சரிடம் பேச அனுமதி வழங்கவில்லை என கூறி தலைமை செயலகத்தில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் மற்றும் திமுக சட்டமன்ற உறுப்பினர்களை காவல் துறையினர் கைது செய்தனர். இதனைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அக்கட்சியின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.< கோவையை அடுத்த வடகோவை பகுதியில் , திமுகவினர் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழக அரசை கண்டித்து திமுகவினர் கோஷங்களை எழுப்பினர். திமுகவினரின் போராட்டம் காரணமாக போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட 80 க்கும் மேற்பட்ட திமுகவினரை காவல் துறையினர் கைது செய்தனர்.

திருப்பதி உண்டியலில் திமுக எம்எல்ஏ கீதா ஜீவனுக்கு 70% பங்கு இருக்கிறது .. திமுக எதிர்ப்பு வியாதி ....

Rathinam Ramasamy : · #திருப்பதி #உண்டியலில் #திமுக #எம்எல்ஏவுக்கு 70% பங்கு
இருக்கிறது என்று சொன்னாலும் நம்புகிற புத்தியில்லாத கூட்டமாக மக்கள் இருந்தால் இன்னமும் அள்ளி விடலாம்!
 தூத்துக்குடி திமுக MLA கீதா ஜீவன் ஸ்டெர்லைட்டுக்கு எதிராக போராடி எடப்பாடி அரசினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வழக்கம்போல் பாஜக-அதிமுக-நாம் தமிழர் கொள்கைக் கூட்டணி திமுகவுக்கு எதிரான பொய்யான தகவல்களைப் பரப்புகிறது. இவர்களுக்கு திமுக எதிர்ப்பே முக்கியம். மக்கள் அல்ல. #banSterlite

பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி நிறுவனங்கள் இமாலயச் சாதனை!

விடுதலை :திருச்சி, மே 23: நடைபெற்று முடிந்த பத்தாம் வகுப்பு தேர்வில் பெரியார் கல்வி
நிறுவனங்கள் இமாலயச் சாதனையைப் படைத்துள்ளன. திருச்சியில் இரு பள்ளிகள், ஜெயங்கொண்டத்தில் ஒன்று, வெட்டிகாட்டில் ஒன்று ஆகிய பள்ளிகளில் தேர்வு எழுதிய 495 மாணவர்களில் ஒரே ஒருவர் மட்டுமே தோல்வியுற்றார்.

பூப்புனித விழாவில் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் கொண்டாட்டம்!

நேற்றும் துப்பாக்கிச் சூடு நடந்து, ஒருவர் இறந்துள்ளார். நிலைமை
நேரில் சந்தித்து ஆறுதல் சீரடையவில்லை. தூத்துக்குடியில் உணவும், குடிநீரும் இல்லாமல் அங்கே சென்ற பத்திரிக்கையாளர் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். கன்னியாக்குமரியில் உள்ள நூற்றுக்கணக்கான வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், இணையம் இல்லாததால் க்ரெடிட் கார்டுகளை பயன்படுத்த முடியாமலும், ஏடிஎம்மில் பணம் எடுக்க முடியாமலும் தவித்துக் கொண்டு உள்ளனர். துணை முதல்வர் பன்னீர்செல்வம், நேற்று நடந்த அவர் கட்சிக்காரரின் மகளின் பூப்பூ நீராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
tamil.oneindia.com-kalai-mathi.>சென்னை: நட்சத்திர ஹோட்டலில் நடைபெறும் கட்சி நிர்வாகியின் மகள் பூப்புனித விழாவில் துணை முதல்வர் ஓபிஎஸ் உட்பட அமைச்சர்கள் பலர் பங்கேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் போலீசார் கடந்த 2 நாட்களாக நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 70க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

தூத்துக்குடி போராட்ட ஆதரவு ..சின்னத்திரை நடிகை மீது வழக்குப் பதிவு!

மின்னம்பலம் :போலீஸ் உதவி கமிஷனர் உடையில் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தைக் கண்டித்து பேசிய சின்னத்திரை நடிகை நிலானி மீது, நான்கு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சின்னத்திரை தொலைக்காட்சித் தொடரில் நடித்து வருபவர் நிலானி. இவர் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பந்தமாக வீடியோ காட்சி ஒன்றை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார். படப்பிடிப்பில் இருந்தபடிபோலீஸ் உதவி கமிஷனர் உடையில் அவர் பேசியிருப்பது, உண்மையில் போலீஸ் அதிகாரி ஒருவர் தூத்துக்குடி சம்பவத்தைக் கண்டித்துப் பேசுவது போன்று இருக்கும்.
அந்த வீடியோவில் போலீஸ் யூனிஃபார்மைச் சுட்டிக்காட்டி பேசியவர், “அப்பாவி மக்கள் 10 பேரை சாகடிச்சுருக்காங்க. இந்த உடையை அணிவதற்கே கூசுது. நம்ம அண்ணன், தம்பி உறவுகளை அநியாயமா சாகடிச்சிருக்காங்க. நாம எல்லாரும் சேர்ந்து போராடணும். போராட்டத்தில இறந்தவர்கள் அனைவரும் இந்தப் போராட்டத்தை தலைமை தாங்குனவங்க. அதனால இது திட்டமிட்ட சதி” என்றார்.

அரசாங்கம் என்பது மக்களுக்காகத்தானே தவிர பணக்கார கார்ப்போரேட்களுக்காக அல்ல.

Shyam Shanmugaam L தூத்துக்குடியில் மே 22 அன்று நடந்த சம்பவங்களுக்குப்
பிறகு-
மறுநாள் மே 23 அன்று வெளி மாவட்டப் போலீஸ் குவிக்கப்பட்டபிறகும் போராட்டக்காரர்களை அடக்கத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு அதிலும் உயிர் இழப்பு ஏற்பட்டிருக்கிறது.
இது தவிர்த்திருக்கப்பட்டிருக்க வேண்டுமா, இல்லையா?
நெஞ்சில் கை வைத்துச் சொல்லுங்கள்.
மறைந்த ஜெயலலிதா தலைமையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2016 மே மாதம் 23 ஆம் தேதி அ.தி.மு.க ஆட்சிக்கட்டில் ஏறியது.
ஈராண்டு நிறைவு நாளான இந்த ஆண்டு மே 22ம், 23ம் இவ்வளவு கொடூரமாக நரவேட்டையில் முடிந்திருக்கிறது.
"மஞ்சள் டீ ஷர்ட்" அணிந்த போலீஸ் சீருடையில் இல்லாத நபர்கள் குறி பார்த்துத் துப்பாக்கிச் சூடு நடத்திய படக்காட்சிகளை ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
குற்றம் சாட்டப்பட்ட வேண்டியவர்கள் - தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவரும் காவல்துறை உயர் அதிகாரிகளும் தான். தலைமை வகிக்கும் அரசும் தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும்.
தூத்துக்குடியில் முத்தையாபுரம் அருகே உள்ள ஸ்பிக் உர ஆலையில் 1980வாக்கில் வேளாண்மை நிபுணராகப் பணியாற்றி இருக்கிறேன்.
பின்னர் தராசு 1996 காலகட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலை அபாயம் குறித்து எழுதி இருக்கிறேன்.