சனி, 9 அக்டோபர், 2010

தலைவர்களை இழந்தாலும் கொள்கைகளையும், லட்சியங்களையும் இழக்கவில்லை: சோனியா காந்தி

Current events

அருணாச்சல் தனி நாடு? அரசு துறை பரபரப்பு

புதுடில்லி இந்தியாவின் மாநிலங்களான அருணாச்சல பிரதேசத்தையும், காஷ்மீரையும் சர்வதேச "உணவு மற்றும் விவசாய அமைப்பு' தனித்தனி நாடுகளாகக் குறிப்பிட்டுள்ளது, பரபரப்பை கிளப்பியுள்ளது.
பால் பண்ணையில் இருந்து வெளியிடப்படும் பசுமைக் குடில் வாயுக்களைப் பற்றிய 2010ம் ஆண்டிற்கான அறிக்கையை, உணவு மற்றும் விவசாய அமைப்பு (எப்.ஏ.ஓ.,) வெளியிட்டுள்ளது. அதில், கிழக்கு ஆசிய நாடுகள் பட்டியலில், இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலங்களான அருணாச்சல பிரதேசம் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள், தனி நாடுகளாகக் குறிப்பிடப்பட்டுள்ளன. "அருணாச்சல்' என்ற பெயர் "அருணாஷல்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர, காஷ்மீரின் ஒரு பகுதியும் தற்போது சீனாவின் பிடியில் இருப்பதுமாகிய "அக்சய் சின்' பகுதியும் தனி நாடாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள எப்.ஏ.ஓ., சர்ச்சைக்குரிய பகுதிகள் பொதுவாக தனி நாடுகளாகக் குறிப்பிடப்படுவது வழக்கம் தான் என்று கூறியுள்ளது.
வினோத் - சென்னை,இந்தியா
2010-10-09 17:23:39 IST
சர்வதேச "உணவு மற்றும் விவசாய அமைப்பு' அவர்களுக்கு தெரிந்த தகவல் கொண்டு தயாரித்த அறிக்கை இது. இது போல உள்ள அமைப்பு சர்வதேச அமைப்புக்கு பொதுவான வரைபடம் கொண்டு அறிக்கை தயாரித்தல் வேண்டும், நாம் நிச்சயம் அவர்களுக்கு அதை சொல்லி தரவேண்டும்....
krishna - UAE,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 15:23:09 IST
Good. Now what is the reaction from PM, Is he aware about it? Who knows he is having time to monitor the corruption rate like 2G spectrum, KWG (kalmadi wealth games)......Awake India.....Arise India.....Jai Hind........
சு. சத்திய அருணாசலம். - திருநெல்வேலி,இந்தியா
2010-10-09 15:08:17 IST
இதுக்கு நம்ம ரெண்டு மத்திய அறிவு ஜீவிகள் என்ன சொல்லுவாங்க? சொல்லுங்க பாப்போம்? அதே தான், இந்தியா இதை வன்மையாக கண்டிகிரதுன்னு ஒரு அறிக்கை அனுப்பிட்டு மறுபடியும் தூங்க போய்டுவாங்க. வோட்டு போட்ட நாம தான் வேட்டு சத்தம் கேட்ட குயில் மாதிரி பதறி போய் இருக்கோம்....
வெண்ணிலா - madurai,இந்தியா
2010-10-09 13:52:50 IST
கவலை பட வேண்டாம் அருணாச்சல பிரதேசத்தை மூன்றாக பிரித்து நமக்கு ஒரு பகுதி கொடுத்தால் போதும் அதை வாங்கி கொண்டு யாருக்கும் லாபமும் இல்லை யாருக்கும் நஷ்டமும் இல்லை என்று சொல்லி கொள்ளலாம்...
வினோத் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 12:32:13 IST
உண்மையில் நாட்டின் நிலவரம் என்னவென்று வேறு மாநிலத்தவர்களுக்கு தெரிவிக்க அரசும் முன்வராது, தொலைக்காட்சி, நாளேடுகளும் வராது. ஏன் என்றால் இன்று அனைத்தும் அரசியலாகிவிட்டது, தனிமனிதனின் லாபனஷ்டத்தை நோக்கதிலேயே சென்றுகொண்டிருக்கிறது. குறுகிய காலத்தில் அரசியல்வாதிகளின் தொலைகாட்சி, நாளேடு என்று துவங்க பட்டு இன்று அனைத்தும் தனிநபர்களின் சொந்த வெறுப்பு விருப்புகலையே வெளியிடுகின்றன, அதில் எவன் கூறுவது உண்மை என்று புரியாமல் ஏதோ நடக்கிறது என்று மக்களும் அவர்களின் பாதையில் செல்கின்றார்கள். இதனை முதலில் மாற்ற வேண்டும், நீதிமன்றங்களை போல் நடுநிலையாகவும், அரசுக்கு சாதகம், பாதகம் பாராமல் நாட்டின் அணைத்து நிலவரங்களையும் உண்மையில் மக்களை சென்றடைய சட்டம் வழி வகுக்கனும். நமது மக்கள் கட்சிக்காக கூட்டம் கூடாமல், நாட்டிற்கு நலனளிகும் விஷயம் இருந்தால் கூடவேண்டும், ஆலோசனை செய்ய வேண்டும் மற்ற எதற்காகவும் நேரத்தை வீனளிக்காமல் வீட்டையும் நாட்டையும் நினைத்தாள் அன்று இதற்கெல்ல தீர்வு கிடைக்கும்.........
வினோத் - துபாய்,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 11:58:38 IST
நமது அரசியல் சட்டமும், அரசியல் வாதிகளும் எப்படி என்று நம்மை விட நன்கு உணர்துள்ளனர்கள் நமது அண்டை நாட்டவர்கள், ஆகையால் தான் பட்டபகலில் அவர்களது கொடியை இங்கே வந்து துணிச்சலாக நட்டுவிட்டு செல்கிறார்கள். ரானுவதினர்களுக்கு அறிந்தே நடக்கிறது என்று அம்மாநில மக்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். அதை நாம் மீடியாவில் பார்த்தும் என்ன செய்கிறது நம் அரசு ஒன்றுமில்லையே. உடனடியாக அந்நாட்டுக்கு இரண்டு நாள் சுற்று பயணம் செல்வார்கள் அவ்வளவு தான். அதற்கு மக்கள் தரப்பிலும் பெரிதாக எதிர்ப்பு இருக்காது. பிறகு அரசும் மறந்து வேறு வேலைய பாக்க ஆரம்பிதுடுவார்கள். இன்னும் சொல்ல போனால் உண்மை நிலவரம் அங்கு என்ன என்பது அங்குள்ள மக்களுக்கும், நமது அரசுக்குமே தெரியும்...........
CRV கணேஷ் - மஸ்கட்,ஓமன்
2010-10-09 10:50:52 IST
காஷ்மீராகட்டும், அருனாச்சலகட்டும் இது இரண்டுமே பாகிஸ்தானுக்கம் சீனாவுக்கும் ஒரு நாள் போகபோகிறது. நமது அரசு எதற்கும் லாயக்கில்லை. ஈஸ்ட் பெங்காலுக்கும் கச்ச தீவிற்கும் என்ன கதி ஆயிற்று?...
அடுத்தவன் ஆள பக்க பிறந்தவன் - கேடுகெட்டஊர்,இந்தியா
2010-10-09 09:02:15 IST
சர்ச்சைக்குரிய பகுதியி தனி நாடாக சொல்வது வழக்கம் தான் என்று கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.ஆக மொத்தம் இந்திய கு எதிராக அதிக பட்ச அந்நிய வெளி சக்திகள் இய்னகுகின்றது என்பது வெளிபடியாகவே விளங்குகிறது.ஆட்சின் தரமும் விவேகமும் மிக மோசமான நிலையில் உள்ளதை உணர முடிகிறது.எங்கே போகும் இந்த பாதை...யாரோ யாரோ யார் அறிவாரோ.......
sundaram - Ruwais,ஐக்கிய அரபு நாடுகள்
2010-10-09 09:00:04 IST
மனதிற்கினிய மனமோஹனமே, புரிந்ததா. உடனடியாக, ஆலிவர் ரோடு, சி, ஐ. டி. நகர் கோபாலபுரம் அல்லது அறிவாலயத்துக்கு தொடர்பு கொண்டு அடுத்து என்ன செய்யலாம் என்று அறிவுரை கேளு. அந்த ஆலோசனைப்படி செயல்படு. இந்தியாவின் பகுதிகளை வெளிநாட்டவர்க்கு தாரை வார்க்க மாமியாருக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அந்த மாமியார் மெச்சிய மருமகளுக்கும் சந்தர்ப்பம் கிடைக்கிறது. உடனே செயல்படு....
வை சுப்பாராவ் - சிங்கப்பூர்,இந்தியா
2010-10-09 06:28:48 IST
இந்திய அரசின் திறமையோ திறமை; இதி மருத்துபேச ஆளில்லை ! F A O வுடனான எல்லா தொடர்புகளையும் வேரோடு களையும் உறுதியான முடிவு ஒன்றே நிலையை சரியாகும்; மீண்டும் இதுபோன்ற செயல்களுக்கு ஒரு முடிவு கட்டும்....
வீரமணி nk - Singapore,சிங்கப்பூர்
2010-10-09 05:12:58 IST
நீங்கள் தூங்குவதற்கும் ஊழல் செய்வதற்கும் மட்டுமே நேரம் ஒதுக்குகிறீர்கள்....
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-09 03:34:30 IST
இதுப்பேர்த்தான் இந்தியாவின் காமன்வேல்த்தோ,கீழே இலங்கைக்காரன் பயம் உண்டாக்கிறான்,மேலே காஷ்மீரின் ஒரு பகுதியும் தற்போது சீனாவின் பிடியில் கொடுத்துவிட்டு பயந்துக்கொண்டு வாழ்வது ஒரு வாழ்வா சொல்லுங்கள், பயந்து வாழ்வது ஒரு வாழ்வா அருணாசலத்தில் ஒரு பகுதி போய் விட்டது,இப்பொழுது இந்த தனி நாடு வேறு, சர்ச்சைக்குரிய பகுதிகள் எப்பொழுதும் இந்தியாவின் ஒரு பகுதித்தான். ஆகையால் அதை பிரித்து பேசவேண்டாம்....
தமீம் - kuwait,இந்தியா
2010-10-09 02:08:46 IST
நம்முடைய உரிமையை எங்கேயும் விட்டு கொடுக்க கூடாது ! மத்திய அரசாங்கம் என்ன பண்ணிக்கிட்டு இருக்கு ! அவர்கள் எப்புடி நம்மோட இடத்தை சர்ச்சைக்குறிய பகுதி என்று குறிபிடலாம். இது எதிர்கால தலை முறைக்கு பெரிய ஆபத்தை தரக்கூடியது . இதனை இப்போதே கில்லி எரிய வேண்டும் ....
ப.சேகர் - சிங்கப்பூர்,சிங்கப்பூர்
2010-10-09 01:55:35 IST
நாட்டுப்பற்றே இல்லாத இந்த காங்கிரஸ் சர்க்கார் இருக்கும் வரை இனி ஒவ்வோர் மாநிலமும் இப்படி தனி தனியான தேசம் என்று சொன்னாலும் ஒரு மண்ணும் செய்யப்போவதில்லை..!! சீனாவின் ஆதிக்கம் இந்தியாவிற்குள் தொடர்ந்து ஊடுருவி வருவதை இன்னும் நாம் கண்டுகொள்ளாமல் இருப்பது "சீனாவுக்கு" பயந்து தான் என்பதும் உண்மையே..! ஆட்சிக்கு கேட்ட பெயர் வந்தாலும் பரவாயில்லை ஆனால் :"பதவி" போய்விட்டால்..!! அதனால்தான் துணிச்சலாய் நாம் இன்னமும் சீனாவின் செயலை வன்மையாய் "கண்டிக்கவே" இல்லை.அவர்களது "படை"பலம் ஒரு காரணம் என்பதை மறுக்கவும் முடியாது.இதுதான் காங்கிரசின் நிலைப்பாடு..!! இந்த விஷயத்தில் பா ஜ க பெட்டர்..துணிச்சலாய் கண்டிப்பர்..இவர்கள் சீனா சென்று அவன் காலில் விழுந்து கெஞ்சி வருவதன் காரணமாய் இந்த நிலை நமக்கு..! துணிச்சல் மிக்க நாட்டு பற்று மிக்க பிரதமர் அமைந்தால் மட்டுமே நாம் நமது நாட்டை காப்பாற்ற முடியும்..சிந்திப்ப்போமா இனியாவது..??...
Babu - GrandRapids,யூ.எஸ்.ஏ
2010-10-09 01:25:34 IST
அப்படியா? அப்புறம் ஏன் ஈழத்தை தனி நாடக அறிவிக்கவில்லை? ஒருவேளை தமிழர்களை கொன்றால் சர்ச்சை இல்லையோ? அவர்களெல்லாம் ஈனப் பிறவிகளோ? இவுலகத்தில் தேவை இல்லாமல் பிறந்துவிட்டவர்களோ? நல்ல கொள்கையடா உங்கள் கொள்கை?...
Moorthy - USA,இந்தியா
2010-10-09 00:26:13 IST
அப்பிடின்னா இது வரைக்கும் இந்திய அரசுக்கு அந்த வழக்கம் கவனத்தில் வரவில்லையா? ஏன் இதுவரை மாற்றவோ

பெரியார்-அண்ணா ஒருபுறம் ராஜராஜன்-ராஜேந்திரன் பெயரை மறுபுறம் சூடிக்கொள்வதும்

வருணாசிரமம் வளர்த்தவனே ராஜராஜன்!
(அருணன்)
இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தித்தான்- ராஜராஜ சோழன் காலத்தில் தான் தமிழகத்தில் நிலப்பிரபுத்துவம் வேர் பிடித்து நின்றது. மூன்று வகை நிலவுடை மையாளர்கள் தோன்றினார்கள். பெரும்பா லான நிலங்கள் பெரும் வேளாளர்களுக்குச் சொந்தமாக இருந்தன. இதுவெள்ளான் வகைஎனப்பட்டது. அரசுக்கு வரி செலுத்திய கிராமம் இந்த வகையைச் சார்ந்தது என்கிறது திருவாலங்காட்டுச் செப்பேடு. கிராமத் தொழில் செய்வோருக்கு ஊழிய மானியமாக ஒதுக்கப்பட்ட நிலம் இரண்டாவது வகையா கும். பிராமணர்களுக்குத் தானமாக தரப்பட்டபிரமதேயம்”, “தேவதானம்எனப்பட்டவை மூன்றாவது வகையாகும்.

நிலமானது பிராமணர்கள் குழு ஒன்றுக் குக் கூட்டாகத் தரப்பட்டால் அது பிரமதேயம், அதுவே தனியொரு பிராமணருக்குத் தரப்பட் டால் அதுஏகபோக பிரமதேயம்”. கல்கி எழு தியபொன்னியின் செல்வன்சரித்திர நாவ லில் அநிருத்த பிரம்மராயர் என்கிற மந்திரி வருவார். இவருக்குப் பத்துவேலி நிலம் இப் படி ஏகபோக பிரமதேயமாகத் தரப்பட்டதாக அன்பில் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

முதலாம் ராஜராஜன், ராஜேந்திரனின் ஆட்சிக்காலங்களில் பிரமதேயக் கிராமங் களின்தனித்தன்மையைக் காக்க வேண்டி இதர வகுப்பினரின் நில உரிமைகள் சுருக்கப் பட்டனஎன்கிறார் புகழ்பெற்ற வரலாற்றாளர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரியார். இதற்குச் சில திட்டவட்டமான ஆதாரங்களைத் தந்திருக் கிறார் அவர். அவை-”ராஜராஜனின் 17ம் ஆண்டில் (கி.பி.1002) ஒரு பொதுக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது. அதன்படி பிரமதேயங்களில் நிலம் வைத்திருக்கும் மற்ற வகுப்பினர் எல் லோரும் தங்களுடைய நிலங்களை விற்று விடவேண்டும். நிலம் பயிரிடுவோரும் மற்ற நில மானியங்களை அனுபவிப்போரும் மட் டும் இதற்கு விதிவிலக்கு. அவ்வாறு விற்கப் பட்ட நிலங்களை வாங்கும் பிராமணர்கள் பணத்தை உடனடியாக இதற்காக நியமிக்கப் பட்ட விசேஷ அதிகாரியிடம் கட்டிவிட வேண்டும். ராஜகேசரி சதுர்வேதி மங்கலத் தில் இவ்வாறு விற்கப்பட்ட நிலங்களை அர சனின் தமக்கை குந்தவை தேவியாரே வாங்கி அவ்வூர்க் கோவிலுக்குத் தானமாக அளித் தார். இதுபோன்றுமுதலாம் ராஜேந்திரன் காலத்திலும் புலியூர்க் கோட்டத்தில் உள்ள வேளச்சேரி என்னும்பிரமதேயத்திற்கும் ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டது

ராஜராஜ சோழன் காலத்து சமூகக் கட்ட மைப்பு வருணாசிரமமே என்பதை இது துல்லியமாகக் காட்டுகிறது. அதுவே தங்களது ஆதிக்கத்திற்கு ஏற்றது என்று நிலப்பிரபுக் களும், அவர்களது தலைவராகியப் பேரரசரும் உணர்ந்து அதை நிலைநிறுத்தியிருக்கிறார் கள். கோவில் கட்டுமானமும், அதைச் சுற்றிப் பின்னப்பட்ட சமூக உறவுகளும்கூட அடிப் படையில் நிலப்பிரபுத்துவக் காப்பு வேலைகளே.

கோவில்களுக்குத் தானமாக வழங்கப் பட்ட நிலங்களேதேவதானம்”. சிவன் கோவில் என்றால் சூலாயுதமும், விஷ்ணு கோவில் என்றால் சங்கு சக்கரமும் பொறிக்கப்பட்ட கற்கள் அந்த நிலத்தில் ஊன்றப்பட்டன. இந்த நிலங்களிலிருந்து கிடைத்த வருமானத் தைக் கொண்டு வருணாசிரமக் கல்வி போதிக்கப்பட்டது. நீலகண்ட சாஸ்திரியார் கூறுகிறார்- “உயர்கல்வியானது சாதி தழு வியே கற்பிக்கப்பட்டது. மடங்கள்-கோவில் களைச் சார்ந்தபள்ளிகளிலும் கல்லூரிகளி லும் இது பயிற்றுவிக்கப்பட்டது

முதலாம் ராஜேந்திரன் காலத்தில் தென் னாற்காடு மாவட்டத்தின் (எண்ணாயிரம்) ராஜராஜசதுர்வேதி மங்கலத்தில் ஒரு கல் லூரி இயங்கியது. அங்கே 340 மாணவர்களும், 14 ஆசிரியர்களும் இருந்தார்கள். அவர்கள் படித்ததும் இவர்கள் சொல்லிக்கொடுத்ததும் சமஸ்கிருத நூல்கள். நான்கு வேதங்கள், பல சூத்திரங்கள், ரூபாவதரா இலக்கணம் போன்ற வையே அந்தக் கல்லூரியின் பாடத்திட்டம். ஆக, வேதக்கல்வி சொல்லிக்கொடுத்தது தான் சோழர்கால ஆட்சி.

இதிலே வேதனையானதொரு நகைமுரண் உண்டு. அதை சாஸ்திரியார் முத்தாய்ப்பாகக் கூறுகிறார்- “சமஸ்கிருதத்தில் உயர்படிப்பு முறை அமைந்திருந்தது குறித்து நமக்கு மேற் கண்ட விபரங்கள் தெரிகின்றன. ஆனால், அதே காலத்தில் தமிழ்க் கல்வியின் தன்மைஎவ்வாறு இருந்தது என்பது பற்றி நம்பிக்கை யான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை

வருணாசிரமத்தின் ஒரு முக்கியமான கூறாக, தாய்மொழிக் கல்வியைப் புறக்கணித்துசமஸ்கிருதத்தை முனனிறுத்துவது இருந் தது. இடைக்காலத்தில் சமண-புத்த மதங் களைஒழித்துக்கட்டத் தமிழ் இசைப்பாடல்க ளைப் பயன்படுத்திக்கொண்டார்களே தவிர, காரியம்முடிந்ததும் மீண்டும் தங்கள் பழைய நிலைமைக்குத் திரும்பி விட்டார்கள். அதைத் தான் ராஜராஜன் - ராஜேந்திரன் காலம் உணர்த்துகிறது. சிதம்பரம் கோவிலில் பதுக் கப்பட்டிருந்த மூவர் தேவாரத்தை ராஜராஜன் மீட்டெடுத்தான் என்பதும் கர்ண பரம்பரைக் கதையாகக் கூறப்படுகிறதே ஒழிய வலுவான கல்வெட்டு ஆதாரம் இல்லை.

மற்றொரு புகழ்பெற்ற வரலாற்றாளரான கே. கே.பிள்ளையும் கூட கீழ்க்கண்டமுடிவுக்கே வந்தார் - “பிற்காலச் சோழர் காலத்தில் வட மொழியும் வடமொழி நூல்களும் எந்தஅள விற்குப் போற்றி வளர்க்கப்பெற்றன என்ப தைத் தெளிவாய் அறிந்து கொள்ள முடிகின் றது. ஆயின், தமிழ்மொழி வளர்ச்சி பற்றி அறிந்து கொள்வதற்கான ஆதாரம் ஏதும் கிடைக்க வில்லைதேவாரம் ஓதுவதற்குக் கோவில்க ளில் ஓதுவார்களை நியமித்தான் ராஜராஜன் என்பதைத் தவிரமற்றபடி அவனது காலத்து கல்வி முறை சமஸ்கிருத மயமாகவே இருந்தது. கோவிலில் அர்ச்சனை மொழியாக சமஸ்கிருதம் இருந்தது என்றே நீலகண்ட சாஸ்திரியார் கருதுகிறார். அதற்கு ஏராளமான கல்வெட்டு ஆதாரம் உண்டு என்கிறார்.

அரசு நிர்வாக அமைப்பில் சில புதுமை களைச் செய்தான். உள்ளாட்சி அமைப்பு களை முறைப்படுத்தினான் என்பது உண் மையே. ஆனால் அவையெல்லாம் வருணாசி ரமக் கட்டமைப்பிற்குள் உள்ளடங்கியவையே என்பதை மறந்துவிடக்கூடாது. பிரபலமான உத்திரமேரூர்ச் சாசனம் அன்று நிலவிய கிராம சபை பற்றிப் பேசுகிறது. அதன் உறுப்பினர் களது தகுதி பற்றியும் பேசுகிறது. அதில் ஒன்று- “பிராமணர் அல்லாதவர்கள்கிராம சபையில் உறுப்பினராகும் தகுதியற்றவர்கள் ஆவர்இதன் பொருள் பிரமதேயக் கிராமங் களை பிராமணர்களே நிர்வாகம் செய்து கொண்டார்கள் என்பது. பிற கிராமங்களை பிராமணரல்லாத நிலப்பிரபுக்கள் நிர்வாகம் செய்து கொண்டார்கள். இந்த இரண்டிலும் பஞ்சமர்கள் போன்ற அடித்தட்டு உழைப் பாளிகளுக்கு எந்தப்பங்கும் இல்லை என் பதே யதார்த்தமாகும். அவர்கள் கிட்டத்தட்ட அடிமை நிலையில் வைக்கப்பட்டிருந்தார்கள். இவர்களில் பண்ணையடிமைகளும் இருந் தார்கள், தினக்கூலிகளும் இருந்தார்கள்.

இதிலே பெண்கள் நிலை மிகப் பரிதாப மானது. தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு இரு பெண்கள், அவர்களது நண் பர்கள், உறவினர்கள் தங்களைத்தாங்களே விற்றுக்கொண்டார்கள். வயலூர் கோவிலுக் குத் திருப்பதிகம் பாடவும், ஈசனுக்கு வெண்சாமரம் வீசவும் மூன்று பெண்கள் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.

இது பிற வேலைகளுக்கு விற்கப்பட்டவர் கள், வாங்கப்பட்டவர்கள். தேவரடியார்கள் என்று தாசித் தொழிலுக்காகவே உருவாக்கப் பட்டவர்கள் கதை தனி. அது பற்றி நிறைய கல் வெட்டுக்கள் கிடைத்துள்ளன. தென்னாற் காடு திருவக்கரை சந்திர மவுலீசுவரர் கோவி லுக்கு சில வேளாளப்பெண்மணிகள் தேவரடி யார்களாக கி.பி.1098ல் விற்கப்பட்டார்கள்.எங்களடியாள் அங்காடியும் இவள், மகள் பெருங்காடியும், இவள் மக்களும் திருவக்கரை உடைய மாதேவர்க்கு தேவரடியாராக நீர் வார்த்துக் கொடுத்தோம்என்பது நம்மை உருக்கும் அக்னி வார்த்தைகள்.

சதி எனப்படும் உடன்கட்டை ஏற்றுகிற பழக்கம் சங்க காலத்திலேயே துவங்கிவிட் டது. அது சோழர்கள் காலத்தில் சர்வசா தாரணமாக நடந்தது. ராஜராஜனின் தந்தையா கிய சுந்தரசோழன் மாண்டபோது அவனோடு உடன்கட்டை ஏறினாள் அவனது மனைவி வானவன் மாதேவி என்பாள். தென்னாற்கா டில் கிடைத்த வீரராஜேந்திரனின் (கி.பி.1063-1070) கல்வெட்டு ஒன்று கணவனை இழந்த மனைவியின் மனப்போராட்டத்தை உணர்த்து கிறது. தனது சக்களத்திகளுக்கு அடிமையாக வாழ்வதைவிட அவள் உடன்கட்டை ஏற விரும்பினாள். இதைத் தடுக்க முயன்றவர் களைக் கண்டு அவளுக்கு கோபம் வந்த தாகப் பொறித்து வைத்திருக்கிறார்கள். இதன் மூலம் அன்று நிலவிய பலதார மணத்தின் கொடுமை, மனைவியே விரும்பி உடன் கட்டை ஏறியதாகத் தோற்றம் காட்டும் தந்திரம் எனப் பல செய்திகள் வெளிப்படுகின்றன.

பொருளியல் வாழ்வில் நிலப்பிரபுத்துவ மும், அதன் சமூகக் கட்டமைப்பாக வருணா சிரமமும் இருந்தன என்பதே ராஜராஜன்-ராஜேந்திரன் காலத்து நடப்பாகும். வருணா சிரமம் வளர்த்தவர்களே இவர்கள். இதை மறந்துவிட்டு அவர்களைப் போலவே தற்போ தைய மத்திய - மாநில அரசுகள் இயங்குகின் றன என்று காங்கிரஸ், திமுக தலைவர்கள் மார்தட்டுவது கேலிக்குரிய விஷயமாகும். எது பெருமை என்று தெரியாமலேயே பெருமை யடித்துக் கொள்வதாகும்.

பெரியார்-அண்ணா பெயரை ஒருபுறம் சொல்வதும், ராஜராஜன்-ராஜேந்திரன் பெயரை மறுபுறம் சூடிக்கொள்வதும் முற்றிலும் முரணான விஷயங்கள் என்பதை திமுக தலைவர்கள் உணர வேண்டும். கட்சிக் கரைவேட்டி கட்டிக்கொண்டு, புதிய அரசு செயலகக் கட்டிடத்தில்அமைச்சர் நாற்காலி யில் உட்கார்ந்து கொண்டு, இருபுறமும் பெண் கள் சாமரம்வீசவேண்டும் என்று நினைக் கக்கூடாது!

வரலாற்றை முன்னோக்கி நடத்த வேண் டுமே தவிர, பின்னோக்கி நகர்த்தக்கூடாது. தமிழனின் புராதனக் கலை ஆற்றலைப் போற்றுவோம், பாதுகாப்போம். அதே நேரத் தில் அவன் கடந்து வந்த சமூக-பொருளாதார ஒடுக்குமுறைக்கு மீண்டும் திரும்ப மாட் டோம் மாறாக சமத்துவ சமுதாயப் பாதையில் நடைபோடுவோம் என்பதில் உறுதியாக இருப்போம்.

Jayalalitha: அடக்குமுறைகளைக்கு அஞ்சாமல் பணியாற்றியவர் எஸ்.எஸ்.சந்திரன்

அடக்குமுறைகளைக் கண்டு அஞ்சாமல் கடமையுடன் செயல்பட்டு அதிமுக கொள்கைகளை பட்டி தொட்டியெங்கும் பரப்பியவர் எஸ்.எஸ்.சந்திரன் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.

இதுதொடர்பாக ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை:

அன்புச் சகோதரர் எஸ்.எஸ். சந்திரன் மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

அதிமுக கொள்கைகளையும், ஆளும் கட்சியினுடைய முறைகேடுகளையும் மக்களுக்குப் புரியும் வகையில், எளிமையான முறையில் பட்டி தொட்டியெங்கும் பரப்பி வந்தவர் எஸ்.எஸ். சந்திரன். மக்களை கவர்கின்ற வகையில் மிகவும் ஜனரஞ்சகமாக, நகைச்சுவை உணர்வோடு பேசும் அவருடைய பேச்சுத் திறன் மிகவும் பாராட்டுதலுக்குரியது.

ஓய்வில்லாமல் தொடர்ந்து உழைத்துக் கொண்டிருந்தார். உடல் நலனில் கவனம் செலுத்துங்கள்; ஓய்வெடுத்துக் கொள்ளுங்கள் என்று நான் அவரிடம் பலமுறை அறிவுறுத்தி இருக்கிறேன். அதையும் பொருட்படுத்தாமல், முழு மூச்சுடன் கட்சிப் பணியாற்றி வந்தார்.

ஆளும்கட்சியின் மிரட்டலுக்கும் அஞ்சாமல் கடமை உணர்வுடன், கட்சிக்காக தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு சிறப்புற பணியாற்றியவர் எஸ்.எஸ். சந்திரன். பலமுறை திமுகவினரின் கொலை வெறித் தாக்குதலுக்கு ஆளானவர்.

அவருடைய அளப்பரிய கட்சிப் பணியையும், பேச்சுத் திறனையும் பாராட்டும் வகையில், அவரை அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளராக நியமித்தேன். இது மட்டுமல்லாமல், கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டு திறம்பட பணியாற்றியவர்.

அரசியலில் மட்டுமல்லாமல் திரைப்படத் துறையிலும் தன்னுடைய முத்திரையை பதித்த எஸ்.எஸ். சந்திரன், 700 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து மக்கள் மனதை கவர்ந்தவர்.

அதிமுகவை பொறுத்த வரையில், அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு ஆகும். திரைப்படத் துறைக்கும் அவருடைய மறைவு மிகப் பெரிய இழப்பு.

அன்புச் சகோதரர் எஸ். எஸ். சந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.

நேரில் சென்று அஞ்சலி:

முன்னதாக சென்னை வில்லிவாக்கத்தில் உள்ள எஸ்.எஸ்.சந்திரன் வீட்டுக்கு விரைந்த ஜெயலலிதா அங்கு அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் சந்திரன் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.


துடிதுடித்துப் போனேன்-வைகோ:

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில்,

திராவிட இயக்கக் கொள்கை வீரரும், கலை உலகின் நகைச்சுவைத் தென்றலும், அ.தி.மு.க. முன்னணியினருள் ஒருவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புச் சகோதரர் எஸ்.எஸ். சந்திரன் மாரடைப்பால் மறைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியால் துடிதுடித்துப் போனேன்.

அறிஞர் அண்ணாவின் தம்பிமார்களுள் ஒருவராக, கலை உலகில் முத்திரை பதித்தவர் எஸ்.எஸ். சந்திரன். சிரிக்க வைப்பதோடு சிந்திக்கத் தூண்டும் கருத்துக்களை, நகைச்சுவை ததும்பச் சொல்லி, ரசிகர்களைப் பரவசப்படுத்தினார். ஏராளமான படங்களில் நடித்து உள்ளார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு இருதய நோய் தாக்கி, ராமச்சந்திரா மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்றபோது, அருகிலேயே இருந்தவன் நான். புன்முறுவல் மாறாத முகத்துடன், அன்பும், பாசமும் மிளிர பழகுகின்ற இனிய இயல்பு உடையவர். ஆயினும், அடக்குமுறைக்கு அஞ்சாது, ஆதிக்கசக்திகளை எதிர்த்துத் துணிச்சலாகப் போராடி வந்தவர்.

அ.தி.மு.க. மேடையில் முழங்கி விட்டுத்தான் அவர் உயிர் ஓய்ந்து இருக்கிறது.

ஈடு செய்ய முடியாத அவரது இழப்பால் துயரத்திலே தவிக்கும் குடும்பத்தினருக்கும், அ.தி.மு.க. தோழர்களுக்கும், ம.தி.மு.க. சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

பதிவு செய்தவர்: TruthTobeTold
பதிவு செய்தது: 09 Oct 2010 6:29 pm
Dont bring admk and dmk in here.may god bless peace ur (sss) soul in peace.

பதிவு செய்தவர்: நரசிம்மராவ்
பதிவு செய்தது: 09 Oct 2010 6:21 pm
கலைஞர் யாரையும் அசிங்கமாக பேசவோ அல்லது மனம் புண்படும் படி நடந்து கொள்வதும் இல்லை. எதரி என்றாலும் அவரிடம் சென்று உதவி என்றால் முதல் உதவி அந்த எதிரிக்கு தான். அவர் துரோகி ஒன்றுமில்லை. மனசாட்சி உள்ள மனிதர். நீண்டநாள் வாழ்கிறார். தமிழ்குடிமகன் இப்படிதான் நீண்டநாள் கலைஞரிடம் இருந்து பின் காசுகாக ஜெயாவிடம் சென்று கலைஞரை பழித்தார். இதே நிலை தான் அவருக்கும் வந்தது. கலைஞரிடம் உள்ள மனசாட்சியுள்ள மனது ஜெயலலதா விடம் இல்லை என்பது உண்மை

கொழும்பு – யாழ்ப்பாணம் பஸ்களுக்கு அனுமதிக்கட்டணம் 11இலட்சம் ரூபா

போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கம: கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையிலான பயணப் போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களுக்கான வீதி அனுமதிக்கட்டணமாக 11 இலட்சம் ரூபாவை அறவிடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையை சேர்ந்த 106 பஸ்கள்   கொழும்பிலிருந்து   யாழ்ப்பாணத்துக்கான சேவையில் ஈடுபடுகின்றன.      இவற்றில் சில பஸ்களிடம் இருந்தே வீதி அனுமதிக்   கட்டணம்  தற்போது அறவிடப்படுகின்றது.   எனவே  இனிவரும்  காலங்களில்   அனைத்து  பஸ்களிடமிருந்தும்   அனுமதிக் கட்டணங்கள் அறவிடப்படும்.
யாழ். பஸ் சேவை தொடர்பில்  கடந்தகாலங்களில்  கேள்விப்பத்திரங்கள்  கோரப்பட் டபோது   23 இலட்சம் ரூபாவுக்கும்   கேள்வி பத்திர விண்ணப்பங்கள் கிடைத்தன.
ஆனால் அந்தளவு அறவிட முடியாது என்று நாங்கள் தீர்மானித்ததுடன் 11 இலட்சம் ரூபாவை கட்டணமாக அறவிட முடிவெடுத்தோம். மேலும் எதிர்காலங்களில் அரசாங்கம் நிர்ணயிக்கும் கட்டணங்களிலேயே பஸ்கள் சேவையில் ஈடுபடவேண்டும்.
கொழும்பு மற்றும் யாழ்ப்பாணத்துக்கு இடையில் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கும் எண்ணம் அரசாங்கத்திடம் தற்போது இல்லை. எதிர்காலத்தில்  தேவைகள்  ஏற்படின்   கேள்விபத்திரம்   மூலம் முயற்சிக்கலாம்.
நாட்டில் சிறப்பான போக்குவரத்து சேவை ஒன்றை கொண்டு நடாத்த போக்குவரத்துத்துறை ஊழியர்களும் பொது மக்களும் ஆதரவு வழங்கவேண்டும். முக்கியமாக பயணிகள் தாம் செலுத்தும் பணத்துக்காக பற்றுச்சீட்டுக்களை பெற்றுக்கொள்ள வேண்டும்.  எனவே பஸ்களில் பயணிகள் பற்றுச்சீட்டுக்களை பெறவேண்டும் என்பதுடன் சிறந்த பஸ் சேவையை உறுதிபடுத்தும் பொருட்டு    நாடளாவிய ரீதியில் பஸ்களில் அறிவித்தல்களை ஒட்டவுள்ளோம்.       மேலும் தனியார் துறையினர் ஊடாக நாட்டில் 18000 ஆயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுகின்றன.    போக்குவரத்துச்சபையின் சார்பில் 5200 பஸ்களே சேவையில் ஈடுபடுகின்றன.

Canadian Tamil Congress Poobalupillaiபொன்சேகாவின் விடுதலைக்காகப் போராடுவோம்

பொன்சேகாவின் விடுதலைக்காகப் போராடுவோம்! கனேடிய தமிழர் பேரவை

ஜனநாயக தேசிய முன்னணியின் தலைவர் சரத் பொன்சேகாவுக்கு விதிக்கப்பட்டிருக்கும் இரண்டரை வருட கடூழிய சிறைத் தண்டனையை எதிர்த்துப் புலம்பெயர் தமிழர்கள் போராடுவார்கள் என்று கனேடிய தமிழர் பேரவை அறிவித்துள்ளது. இலங்கையில் உள்ள சிறைகளில் வாடும் தமிழ் உறவுகளின் விடுதலைக்காக மட்டும் அன்றி சரத் பொன்சேகாவின் விடுதலைக்காகவும் புலம்பெயர் தமிழர்கள் போராடுவார்கள் என்று பேரவையின் பேச்சாளர் டேவிட் பூபாலபிள்ளை தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து ஊடகம் ஒன்றுக்கு மேலும் தெரிவித்துள்ளவை வருமாறு:-
”முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகாவுடன்தான் எமக்கு முரண்பாடுகள் இருந்தன. ஆனால் அரசியல்வாதி சரத் பொன்சேகாவுடன் எமக்கு எவ்விதமான பிரச்சினையும் இல்லை. பொன்சேகா நீதிக்குப் புறம்பான விதத்தில் நடத்தப்பட்டுள்ளார். இராணுவ நீதிமன்றத்தால் சிறைத் தண்டனைத் தீர்ப்பு விதிக்கப்பட்டுள்ளார். இவையெல்லாம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆசிர்வாதத்துடனும், அறிவுறுத்தலுடனுமே இடம்பெற்றுள்ளன.
ஜனாதிபதியின் குடும்பத்தினரும் இவற்றின் பின்னணியில் உள்ளார்கள். முன்னாள் இராணுவ தளபதியை இப்படியெல்லாம் கொடுமைப்படுத்துகின்ற இச்சர்வாதிகார அரசு தமிழர்களை எப்படிக் கொடுமைப்படுத்தி இருக்கும்? பொன்சேகாவை சிறை வைத்திருப்பதன் மூலம் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் அவருக்கு வாக்களித்த மில்லியன் கணக்கான மக்களை அரசு அவமானப்படுத்துகின்றது. சர்வாதிகார மஹிந்த அரசு மனித உரிமைகள், ஜனநாயகம் ஆகியவற்றை ஒரு பொருட்டாகக் கூட மதிக்கவில்லை என்பது பொன்சேகா விடயத்தில் கூட நிரூபணம் ஆகி உள்ளது.”

3rd International Airport in Kilinochchii இரணைமடு பிரதேசத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமா

இரணைமடு பிரதேசத்தில் மூன்றாவது சர்வதேச விமான நிலையம்

70 மில்லியன் ரூபா செலவில் கிளிநொச்சி இரணைமடு பிரதேசத்தில் இலங்கையின் மூன்றாவது சர்வதேச விமான நிலையத்தை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. விடுதலைப்புலிகளின் விமான ஒடுதளம் அமைந்திருந்த பிரதேசத்தில் இந்த விமான நிலையம் அமைக்கப்படவுள்ளது. 1.6 கிலோ மீற்றர் நீளம் கொண்ட இரணைமடு விமான ஒடுத்தளம் நீளத்தை 3 கிலோ மீற்றர் நீளமாக விரிவுப்படுத்தப்படவுள்ளது. அத்துடன் நிர்மாணிக்கப்படவுள்ள கிளிநொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.

இலங்கைக்கு பணிந்தது இந்தியா : மீனவர்களுக்கு மாற்று ஏற்

இலங்கை கடற்படையின் எதிர்ப்புக்கு பணிந்து, தமிழக மீனவர்களை மாற்று மாவட்டத்தில் பிழைப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம், இலங்கை கடற்பகுதியை சார்ந்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அந்நாட்டு கடற்படையினர், தொடர்ந்து தமிழக மீனவர்களை துன்புறுத்தி வருகின்றனர். இது தொடர்பான பல்வேறு போராட்டங்கள், எதிர்ப்புகளுக்கு பிறகும் தீர்வு கிடைக்கவில்லை.சமீப காலமாக இலங்கை கடற்படையின் தாக்குதல் அதிகரித்து வருவதால், ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிழைப்புக்கு வழியின்றி வீட்டில் முடங்கியுள்ளனர். இந்நிலையை போக்க வலியுறுத்தி நாளை மறுநாள் (செப்., 11), கச்சத்தீவு நோக்கி போராட்டம் செய்ய விசைப்படகு மீனவர்கள் அறிவித்திருந்தனர்.இதைத் தொடர்ந்து, அனைத்து விசைப்படகு சங்கங்களைச் சேர்ந்த மீனவர்களுடன் ராமநாதபுரம் டி.ஆர்.ஓ., ஜீவராஜ் பேச்சு வார்த்தை நடத்தினார்.

இதில் போலீஸ் மற்றும் மீன்வளத்துறை அலுவலர்களும் பங்கேற்றனர். பிரச்னை பிழைப்பு சம்பந்தமாக இருப்பதாக, தற்போது அதற்கான ஏற்பாடுகளை செய்ய மீனவர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் அருகே உள்ள பாலக்குடியில் தங்கும் தளம் அமைத்து, மீன் பிடிக்க ஏற்பாடு செய்ய அதிகாரிகள் முடிவு செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே சந்தை கிராமத்திலும் இதே போன்ற தளம் அமைத்து உதவுமாறு, மீனவர்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.இலங்கை வசம் உள்ள, தமிழக மீனவர்களின் படகுகளை மீட்டுத் தரவும் வலியுறுத்தப்பட்டது. இலங்கை கடற்படையின் நீண்ட நாள் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல், அவர்களுக்கு பணிந்து, இங்குள்ள மீனவர்களுக்கு மாற்று மாவட்டத்தில் பிழைப்புக்கு வழி தேட அதிகாரிகள் முன்வந்தது
Shunmugavel - virudhunagar,இந்தியா
2010-10-09 10:10:01 IST
வேதனை அல்ல கேவலம் . . . மஹா கேவலம் ....
2010-10-09 09:55:46 IST
காரி து துதுதுதுதுதுதுதுதுது,,,,,,,,,,,,,,,,,,,,,, மானகெட்ட அரசாங்கம் மாநில மற்றும் மத்திய...
senthilkumar - Tirunelveli,இந்தியா
2010-10-09 09:50:42 IST
இன்னும் கொஞ்ச நாள்ல இலங்கைக்காரன் ஈழத்த நம்ம கிட்ட இருந்து புடுங்குன மாதிரி தமிழ் நாட்டையும் புடுங்க போறான் அப்பவும் நம்ம இந்திய தலைவர்களும் தமிழக தலைவர்களும் வேடிக்கை தான் பாக்க போறாங்க நம்மளும் போத்திக்கிட்டு போய் சாக வேண்டியதுதான்....
ரமேஷ் - சென்னை,இந்தியா
2010-10-09 09:28:29 IST
அரசு அவர்களே, இந்திய ஒற்றுமை தான் பலம். நாம் தனித்து இருந்தால் வெள்ளையன் மீண்டும் வருவான்....
கார்த்தி - திருப்பூர்,இந்தியா
2010-10-09 09:27:59 IST
டே கைப்புள்ள துண்டுக்கு எங்க இருக்கு நேரம் ? குடும்பத்த கவனிக்கவும் சினிமா விழாக்களுக்கு குத்து விளக்கு எத்தவுமே சரியாய் இருக்கே ?... அட ராமா ராமா !...
பார்த்து நொந்தவன் - ராமேஸ்வரம்,இந்தியா
2010-10-09 09:21:06 IST
எல்லாம் அண்டை நாடுகளுக்கு விட்டுகொடுக்கும் தாரை வார்த்துக் கொடுக்கும் பொற்காலம்.வாழ்க வளர்க.சாதனை மாபெரும் சாதனை.இது போன்ற நிகழ்வுகள் இந்த ஆட்சி காலத்தில் நிறைய பார்க்க கிடைத்தது எம்பாகியம் ஐயா...இதை நக்கல் நையாண்டி யுடன் சொல்லவில்லை.கணில் நீர் வழிய புலம்பி சொல்கிறேன்....வாழ்க வளர்க....தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா...இந்த வாசகத்தை சொல்ல துடிக்குது மனசு...ஆனால் சொல்ல வழி இல்லாமல் தவிக்கும் உங்கள் தமிழன்......
S.Ganesan - அபுDhabi,இந்தியா
2010-10-09 09:15:15 IST
SUPPOSE DMK Chielf take emotional step and show some support to Fishermen, immediately Jaya will complain to Congress and then they dismiss the DMK Government, then in the election, we will promptly elect the Jaya only. How we the tamil state people will support those who supports the Fishermen? Is n't it?...
ர sivakumar - coimbatore,இந்தியா
2010-10-09 08:03:09 IST
இந்திய ராணுவம் நாட்டில் உள்ளத என்ன கண்டு பிடிக்க சி பி யீ விசாரனை வைக்க வேணும்...
முருகேஷ் - நாகப்பட்டினம்மஞ்சக்கொல்லை.,இந்தியா
2010-10-09 07:39:35 IST
என்ன கொடும சார் இது.......
முஹம்மத் அமின் - paris,பிரான்ஸ்
2010-10-09 03:11:20 IST
தூ,தூ என்ன மானங்கெட்ட பொழப்பு இது, இந்திய மக்களை சொரணை கெட்ட மனிதர்களா,யார் யாரிடம் பயப்படுவது,வெட்கம் இந்தியன் என்று சொல்வதற்கே வெட்கப்படுகிறேன்.யாராவது "இந்தியன்"இல்லையா மானத்தைக்காப்பாற்ற....
ஈழவேந்தன் - செமின்கிரேனியர்மொரிசியஸ்,மொரிஷியஸ்
2010-10-09 01:31:43 IST
இந்திய அரசு எதை தான் கிழிச்சது இதுவரை .கையாலாகாத இந்த காங்கிரஸ் இந்தியாவை ஆள்வது தொடருமானால் சிங்களவன் மட்டுமில்லை சீனன் பாகிஸ்தானியன் நம்மை இந்தியாவிருந்தே விரட்டிவிடுவார்கள் .மீன்பிடிப்பையே தொழிலாக வைத்திருக்கும் தமிழக மீனவர்களை சிங்களவனுக்கு பயந்து மாற்று மாவட்டத்தில் இடம் கொடுப்பது என்பது நாம் அவர்களிடம் தோற்றுவிட்டோம் என்பதைத்தான் காட்டுகிறது .வாழ்க இந்தியா, ஓங்குக தமிழன் புகழ் ....
கே.கைப்புள்ள - nj,இந்தியா
2010-10-09 00:57:55 IST
சரி... சரி... சரிடா, இதுதான் பொலைக்கிரதுக்கு ஒரே வழி, பொலைக்கிரதுக்கு உண்டான ஒரே வழியும் போய்டிச்சு, அதுவும் ஒன்னு ரெண்டு பேருக்கு இல்ல, மொத்தமா ரெண்டு மூணு ஊருக்கே போயடிச்சுன்னு சொல்ற அளவுக்கு பிரச்சினை பெரிசா இருந்தா, இந்த ஊர்ல, இந்த பில்லா மாறி பெரிசா கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு இருக்கிற துண்டார் என்னதான் பண்ணுறாரு? ஏதோ ஒருத்தன் ரெண்டு பேரு கடலுக்கு போக முடில, சீக்கு வந்து படுத்து கெடக்கானுகன்னா கூட சரி போ ன்னு விட்டுடலாம். இப்படி ஒரு மாவட்டமே பொழைக்க வழி இல்லாம சாவ போற லெவல் க்கு வந்து இருக்கு, இன்னும் இந்த துண்டு என்னையா பண்ணிக்கிட்டு இருக்கு? அட என்ன கருமம்டா, இந்த கன்யாகுமரி, ராமநாதபுரம் இந்த பக்கத்த சேர்ந்தவனுகளுக்கு என்னிக்குமே ஒரு நல்ல காலம் பொறக்காதா? இந்த துண்டு, அவனுகளுக்கும் சேந்துதானயா முதலமைச்சரு. அவனுக பாவம், எப்போ பாத்தாலும் இப்படி தினமும் செத்து செத்து பொலைக்கிரானுகளே அவனுகளுக்கு ஒரு நல்லததான் செஞ்சு தொலைச்சாதான் என்னவாம்? ச்சை, என்ன ரோதனைடா இந்த கையாலாகத கருமங்கள வெச்சுக்கிட்டு. டேய், ஏண்டா நீங்களாச்சும் என்ன எதுன்னு யோசிச்சு ஓட்ட போட்டு தொலைக்க கூடாதாடா? ஒருக்கா ஓட்டு போட்டுட்டா அடுத்து அஞ்சு வருசத்துக்கு கஞ்சிக்கு வழி இருக்கா என்ன எதுன்னு யோசிக்கவே மாட்டீங்களாடா?...
அரசு - chennai,இந்தியா
2010-10-09 00:28:40 IST
வட இந்திய ஆட்சியாளர்களுக்கு தமிழக மீனவர்கள் படும் கஷ்டம் எல்லாம் எப்படி தெரியும். இலங்கை கடற்படையை சமாளிக்க டெல்லி யை நம்பி பிரயோஜனம் இல்லை. தமிழர்களும் இந்தியர்கள் தான் என்ற எண்ணமே வட இந்திய அரசியல்வாதிகளிடம் இல்லை. இதற்க்கு எல்லாம் ஒரே தீர்வு. தனி தமிழ்நாடு....

எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் மரணம்

சென்னை:சினிமா நகைச்சுவை நடிகரும் அ.தி.மு.க.,வில்கொள்கை பரப்பு செயலாளருமான எஸ்.எஸ்.சந்திரன் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 69. திருவாரூர் அருகே உள்ள இடும்பாவனத்தில் நடந்த அதிமுக நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் மன்னார்குடியில் உள்ள லாட்ஜில் தங்கியிருந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே அவர் கட்சி ஆட்களிடம் தனக்கு உடல் நிலை சரியில்லை என தெரிவித்துள்ளார். கட்சியினர் அவரை உடனடியாக அங்கு இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அங்கிருந்து கும்பகோணத்தில் இருக்கும் மற்றொரு மருத்துவமனைக்கு எஸ்.எஸ்.சந்திரனை கொண்டு சென்றனர். அங்கிருந்த டாக்டர்களும் அவரது மரணத்தை உறுதி செய்தனர். உடனடியாக உடல் வேன் மூலம் சென்னை கொண்டு செல்லப்பட்டது.
மாலத் தீவு மணியன் - மாலே,இந்தியா
2010-10-09 10:05:40 IST
எஸ் .எஸ் சந்திரன் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ....
radhakrishnan - qatar,இந்தியா
2010-10-09 09:59:46 IST
GREAT LOSS TO HIS FAMILY AND ALSO TO HIS PARTY ALL INDIA ADMK AND THIS IS THE TIME HIS PARTY NEEDS HIM FOR AN GREAT CAMP AGAINST THE MINORTY GOVERNMENT LET HIS BE PEACE...
Y. Rajagopalan - Bangkok,தாய்லாந்து
2010-10-09 09:49:15 IST
Very sad news. AIADMK has lost one of the best orator i.e speech with comody. Even though he has health problem, he worked for the party very hard and sincere. Pray for his soul rest in peace. Y. Rajagopalan, Bangkok...
Radhaqkrishnan - qatar,இந்தியா
2010-10-09 09:47:35 IST
My hearty condolences to the beloved leader...
மஞ்சினி - Pondicherry,இந்தியா
2010-10-09 09:43:59 IST
I Pray the allmighty to give peace and blessing to his soul...
Balaji - trichy,இந்தியா
2010-10-09 09:13:17 IST
அவர் ஆத்ம சாந்தி அடையட்டும்...
செபஸ்டிராஜ் - மதுரைஅண்ணாநகர்,இந்தியா
2010-10-09 09:01:40 IST
அம்மாவுக்கு பெரிய ஈடு செய்ய முடியாத இழப்பு ஆகும். கழக கண்மணிகளுக்கும் ஜீரணிக்க முடியாத முடிவாகும் அருமையான பேச்சாளர் நகைசுவை பேச்சாளர்.நானும் வருந்துகிறேன்...
மூ.கர்ணன் நிதி - திருவாரூர்,இந்தியா
2010-10-09 08:46:21 IST
ஆழ்ந்த இரங்கல்கள் அவர் குடும்பத்தாருக்கும் அவர் சார்ந்த கட்சினர் அனைவருக்கும்.ஏற்கனவே நெஞ்சு வழியால் அவதி பட்டு ற்றேஅத்மேன்ட் எடுத்தவர் இப்போது கட்சிக்காக பனி செய்து கொண்டிருக்கும் பொது கொள்கைகளை பரப்பி கொண்டிருக்கும் பொது தங்கிருந்த லோட்கே இல் இருந்து ஆஸ்பத்திரில் அனுமதிக்க பட்டு இறந்திருக்கிறார்.அன்னாருடைய ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திகிறேன். மூ.கர்ணன் நிதி...
arul - bangalore,இந்தியா
2010-10-09 08:44:35 IST
sirantha nagaisuvai nadigarai izhanthu thavikkum sulnilai manathai nerudukirathu, nitchayam avar enrenrum makkalin manathil kudiiruppar...
P.Velmurugan - Singapore,சிங்கப்பூர்
2010-10-09 08:26:56 IST
அற்புதமான நகைச்சுவை பேச்சாளர் மற்றும் நகைச்சவை நடிகர். அரசியல் avarai அலைக்கழித்துவிட்டது. அவரது ஆத்மா சாந்தி அடைய அரசியல் மறந்து ஆண்டவனை பிரார்த்திப்போம்....

தமிழ் இணையத்தள வடிவமைப்புப் போட்டி 2010 – யாழ். மாவட்டம்!

மொறட்டுவைப் பல்கலைக்கழகத்தின் உள்ளூர் மயமாக்கப்பட்ட செயல்களுக்கான சிறப்பு மையமானது, கணினியை உள்ளூர்மொழிகளில் பயன்படுத்துவது சம்பந்தமான ஆய்வுகள் மற்றும் செயற்திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறது.இம்மையத்தினால் மென்பொருள்கள் இலங்கைக்காக தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உள்ளூர்மயமாக்கம் (Localisation) செய்யப்பட்டு வருகின்றன.

அத்தோடு உள்ளடக்க உள்ளூர்மயமாக்கம், உள்ளூர்மொழிகளில் உள்ளடக்க அபிவிருத்தி, உள்ளூர்மொழிகளில் கணிமை பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப்பட்டறைகள் ஆகியனவும் இம்மையத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் ஆகும். இச்சிறப்பு மையமானது LAKapps மையம் எனவும் அழைக்கப்படுகிறது.
தமிழ்மொழியில் கணிமை தொடர்பான செயற்திட்டம் ஒன்று கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. இதற்கமைய பாடசாலை மாணவர்கள், பொதுமக்களுக்கான விழிப்புணர்வு கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் கிழக்கு மாகாணத்தில் பல பாடசாலைகளிலும், அறிவகங்களிலும், கணினி வளநிலையங்களிலும் நடாத்தப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக கிழக்குமாணத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான ஒரு இணையத்தள வடிவமைப்புப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசில்கள் வழங்கப்பட்டன. இச்செயற்திட்டம் மாணவர்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இவ்வருடம் யாழ் மாவட்டத்தில் தமிழ் கணிமை சம்பந்தமான செயற்திட்டம் ஒன்று இந்த LAKapps மையத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைய யாழ் மாவட்டத்தில் உள்ள யாழ்ப்பாணம், வலிகாமம், வடமராட்சி, தென்மராட்சி ஆகிய கல்வி வலயங்களிலுள்ள பல பாடசாலைகளிலும் புலோலி கணினி வள நிலையத்திலும், யாழ். உயர் தொழில்நுட்பவியல் நிறுவகத்திலும் தமிழ் கணிமை சம்பந்தமான விழிப்புணர்வுக் கருத்தரங்குகள், தமிழ் இணையத்தள வடிவமைப்பு பற்றிய பயிற்சிப்பட்டறைகள் ஆகியன நடத்தப்பட்டன.
இக்கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகளில் ஏறக்குறைய 1000 மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஏனைய பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.
யாழில் நடைபெறும் இந்தச் செயற்திட்டத்தின் ஒரு பகுதியாக இப்போது யாழ். பாடசாலை மாணவர்களுக்கான தமிழ் இணையத்தள வடிவமைப்பு போட்டி ஒன்று நடத்தப்படவுள்ளது. இதில் யாழ் பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களும் பங்குபெறலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவங்களை வலயக் கல்விப் பணிப்பகங்களிலும் http://www.lakapps.lk/llcj/ என்ற இணையத்தளத்திலும் பெற்றுக்கொள்ளலாம். இதற்கான இறுதித் திகதி 10.10.2010.
போட்டிக்குரிய விதிமுறைகள் மற்றும் அறிவுறுத்தல்கள் அனைத்தும் விண்ணப்பப் படிவத்தில் இணைக்கப்பட்டுள்ளன. ஏற்றுக்கொள்ளப்பட்ட விண்ணப்பதாரிகள் தங்களது இணையத்தளங்களை நவம்பர் மாதம் 10ஆம் திகதிக்கு முன்னர் அபிவிருத்தி செய்து முடித்து எமக்கு சமர்ப்பிக்கவேண்டும்.
இப்போட்டியில் 1ஆம், 2ஆம் மற்றும் 3ஆம் இடங்களைப் பெறும் இணையத்தளங்களை வடிவமைத்த வெற்றியாளர்களுக்கு பெறுமதிமிக்க பரிசில்கள் வழங்கப்படும்.
அத்தோடு ஒவ்வொரு வலயத்திலிருந்து மேலதிகமாக தகுதியான இரண்டு இணையத்தளங்களுக்குச் சிறப்புப் பரிசில்களும் தகுதியானவை என நடுவர்களால் தெரிவு செய்யப்படும் இணையத்தளங்களை வடிவமைத்த மாணவர்களுக்கு பங்கு பற்றியதற்கான சான்றிதழ்களும் வழங்கப்படும். இவை அனைத்தும் நவம்பர் மாதம் இடம்பெறும் விருது வழங்கும் விழாவில் வழங்கப்படும்.
இந்த செயற்திட்டம் பற்றிய மேலதிக விபரங்களுக்கும் விசாரணைகளுக்கும்
இணையத்தளம் http://www.lakapps.lk/llcj/
மின்னஞ்சல் – sarvesk@uom.lk
தொலைபேசி – 0114216061 – உடன் தொடர்பு கொள்ளலாம்.

வட ஆப்கானில் குண்டுவெடிப்பு : கவர்னர் மொஹமட் ஒமார் கொலை!

வட ஆப்கானின் குண்டுஸ் மாகாண கவர்னர் முஹமட் ஒமார் சற்று முன்னர் இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.பள்ளியொன்றில் தொழுகையில் ஈடுபட்டிருந்த வேளை, அங்கு இடம்பெற்ற குண்டுவெடிப்பிலேயே அவர் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

முறுகண்டி ஹொட்டல் திறப்பு விழாவில் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டால் தமிழரங்கத்தின் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்ளமாட்டேன்-ஆனந்தசங்கரி!

புலிகள் பாணியில் செயற்பட்டுவரும் அரசு தமிழ் மக்களின் காணிகளையும், ஆலய காணிகளையும் பலாத்காரமாக அபகரித்து வருகின்றது. முறுகண்டியில் கட்டப்பட்டுவரும் ஹாட்டல் கட்டும்பணியை தடுத்து நிறுத்த வேண்டும். இது புனிதமான முறுகண்டி ஆலய பகுதியை அசிங்கப்படுத்தும் நடவடிக்கை இது குறித்து ஜனாதிபதி உட்பட எவரவர் கவனத்திற்கு கொண்டுவர வேண்டுமோ அவர்களது கவனத்திற்கு கொண்டுவந்துள்ளேன்.

இந் நிலையிலும் இதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளவில்லை. இவ் ஹொட்டல் திறப்பு விழா எதிர்வரும் 7ம் திகதி இடம்பெறவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவத்தார். அவ்வாறான திறப்பு விழாவில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டால் அவர் பங்கு கொள்ளும் “தமிழரங்கத்தின்” சந்திப்பில் நான் கலந்து கொள்ள மாட்டேன் என்பதை அவரிடமே தெரிவித்துள்ளதாகவும் தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி தமிழ்மிரர் இணையத்திற்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

ஜயலத் ஜயவர்தன ஜெனீவாவில் சமர்ப்பித்த பிரேரணை நிராகரிப்பு..!

இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன ஜெனீவாவில் நடைபெற்ற ஜனநாயக மற்றும் மனித உரிமைகள் தொடர்பான பாராளுமன்ற அமைப்பில் சமர்ப்பித்த பிரேரணை அந்த அமைப்பினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த சமரசிங்க அப்பிரேரணை தொடர்பாக சமர்ப்பித்த இலங்கையின் உண்மைநிலை தொடர்பான விளக்கத்தை கருத்திற்கொண்ட அமைப்பு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன சமர்ப்பித்த பிரேரணையை முற்றாக நிராகரித்தது. மேற்படி அமைப்பின் கூட்டத் தொடரில் பங்குபற்றிய இலங்கை அரசாங்க அணியில் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் தலைமையில் நீர்ப்பாசன மற்றும் நீர் முகாமைத்துவ அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நிருபமா ராஜபக்ஷ ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்திய அணியில் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தனவுடன் ஐக்கிய தேசியக் கட்சியின் அகில விராஜ் காரியவசம் மற்றும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சுரேஷ் பிரேமசந்திரன் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். ஜயலத் ஜயவர்தனவின் பிரேரணையில் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் அரசாங்கம் சர்வாதிகார போக்கில் நடந்து கொள்வதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டிருந்தன.

பாராளுமன்றத்தில் நவராத்திரி பூஜைவழிபாடு


வருடந்தோறும் நடைபெறும் நவராத்திரி பூஜை இன்றைய தினம் (8) பாராளுமன்றத்தில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ பிரதி சபாநாயகர் பிரியங்கா ஜயரட்ன பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.

பாராளுமன்றத்தில் புத்த சாசன மத அலுவல்கள் அமைச்சு மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரனையுடன் நடைபெற்ற இப்பூஜை வழிபாடுகளில் அமைச்சர்கள் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

சரஸ்வதி பூஜையைத் தொடர்ந்து கலை நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

ரஞ்சிதா :மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது

ஞ்சிதா.இந்தியாவின் மிகப் பெரிய சர்ச்சையில் சிக்கி தற்போது தெளிந்த மனதுடன் இருக்கிறார். ‘‘இந்த சர்ச்சையில் எந்த உண்மையும் இல்லை.

என்னைப் பற்றிய தப்பான செய்திகளைப் பார்த்தபோது என் உச்சந்தலையில் விஷம் ஏறியது போல் இருந்தது.பரபரப்பை கிளப்புவதற்காக என் பிரச்சனையில் மீடியா பல கதைகளை கிளப்பிவிட்டு விட்டது’’ என்கிறார். சர்ச்சைகளுக்குப் பிறகு பத்திரிகைக்குத் தரும் முதல் பேட்டி இதுதான். கேள்விகளை மின்னஞ்சல் மூலம் பெற்று பதில் தந்தார்.

தற்போது வாழ்க்கை எப்படி இருக்கிறது?

“ஒரு மிகப்பெரிய சூறாவளி என் வாழ்க்கையைச் சூறையாடியிருக்கிறது.

அதிலிருந்து மீண்டு ஒரு புது வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயம் எனக்கிருக்கிறது. எதிர்பாராத புதிய சவால்கள்  நம்மை நாமே அறிந்து கொள்வதற்கான ஒரு வாய்ப்பு. அந்த சூறாவளிக்குப் பிறகும் என் வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது.புத்தகங்கள் வாசிப்பது, மனதில் தோன்றுகிற கருத்துக்களை எழுதுவது, பயணங்கள் மேற்கொள்வது என்றிருக்கிறேன்.’’
உங்களைச் சுற்றி திடீரென சர்ச்சைகள் கிளம்பியபோது உங்கள் கணவர் என்ன சொன்னார்? அவர் உங்களைப் புரிந்து கொண்டாரா?


“என் கணவர் ஒரு மிகச் சிறந்த மனிதர்.  நான் இன்றைக்கு இருக்கும் இந்த கசப்பான கால கட்டத்தில் என்னை முழுமையாகப் புரிந்துகொண்டு, எந்தெந்த விதத்தில் எல்லாம் எனக்கு ஆதரவாக இருக்க முடியுமோ அவ்வளவு ஆதரவாக,அக்கறையோடு என்னைப் பார்த்துக்கொள்கிறார். எந்த சூழ்நிலையையும் எதையும் எதிர்கொள்ளும் தைரியத்தைக் கொடுக்கிறார்.’’

உங்களுடைய குடும்பத்தினர் இந்த சர்ச்சையை எப்படி எடுத்துக் கொண்டார்கள்? அவர்களிடமிருந்து எந்த மாதிரியான ஆதரவு கிடைத்தது?
“என்னுடைய அப்பா, அம்மா மற்றும் சகோதிரிகள் எனக்கு மிகப் பெரிய பலத்தையும், தைரியத்தையும் கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் மட்டுமில்லாமல் ஆன்மிகப் படிப்புகளும் எனக்கு சக்தியைக் கொடுக்கின்றன. எங்கள் குடும்பத்தில் எல்லோருமே மனதளவில் காயம்பட்டிருக்கிறார்கள். அதே நேரம் என்னைச் சுற்றி நிகழ்ந்த சர்ச்சைகளை அவர்கள் மிக முதிர்ச்சியுடன் கையாண்டார்கள்.என் குடும்பம் இல்லை யென்றால் இந்த பிரச்னையை எப்படிச் சமாளித்திருப்பேன் என்று எனக்கே தெரியவில்லை.பொதுவாகவே எங்களுக்குள் அன்பு அதிகமுண்டு.இந்த சம்பவங்களால்  நாங்கள் இன்னும் மிக நெருக்கமாகிவிட்டோம்.  என் பெற்றோர், சகோதரிகள் என்மீது அன்பு காட்டுவது யதார்த்தமான விஷயம்.ஆனால் என் அத்தை (மாமியார்) எனக்குக் கொடுத்த ஆதரவும், அன்பான வார்த்தைகளும் உண்மையிலேயே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வரம்.என் அத்தையை நினைத்து பெருமைப்படுகிறேன்.’’

ஏன்நடிகையானோம், ஏன் பிரபலமானோம்... இப்படி வருத்தப்பட்டதுண்டா?

“ஒரு நடிகையாக வேண்டுமென்று நான் என்றைக்கும் ஆசைப்பட்டதும் இல்லை. நடிப்பு நானாகப் போய் தேடிக் கொண்ட தொழிலும் இல்லை.

இன்று அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. ஆனால் சமீபத்திய சம்பவம் மூலம் ஒரு நடிகை அல்லது பிரபலமாக இருப்பவர்கள் மிகவும் சுலபமாக பாதிக்கப்படக்கூடியவர்களாக இருக்கிறார்கள் என்பதை  உணர வைத்திருக்கிறது. சினிமா சாராத ஒரு சாதாரணப் பெண் இதே போன்ற சர்ச்சையில் சம்பந்தப் பட்டிருந்தால் மீடியாவின் கரம் இவ்வளவு கடுமையான இரும்புப்பிடியாக இருந்திருக்காது என்று நம்புகிறேன்.

நம்முடைய வாழ்க்கை ஒரு நாணயம் மாதிரி. அதற்கு இரண்டு பக்கங்கள் உண்டு.இதுவரையிலும் வாழ்க்கையின் நல்ல பக்கத்தையே அனுபவித் திருக்கிறேன்.இப்போதுதான் அதனுடைய அடுத்த பக்கத்தையும் அனுபவிக்க ஆரம்பித்திருக்கிறேன்.என்னுடைய வேண்டுகோள் ஒன்றே ஒன்றுதான். நடிகைகளும் உங்களைப் போல் மனிதர்கள்தான். உங்கள் வீட்டுப் பெண்களைப் போன்ற பெண்கள்தான்.வானத்திலிருந்து தானாக குதித்துவிடவில்லை.உங்களைப் போல் நடிகைகளுக்கும் உணர்ச்சிகள் இருக்கிறது. தயவுசெய்து அதை மறந்துவிடாதீர்கள்.’’

பிரச்னைகள்,சர்ச்சைகளுக்கு மத்தியில் உங்களையும் மனதையும் அமைதியாக அதே நேரம் நிதானமாக செயல்பட வைத்தது எது?

“என்னைப் பொருத்தவரை  மூன்று விஷயங்களில் மிகத்தெளிவாக இருக்கிறேன். ஒன்று, எந்த சம்பவத்தாலும் நான் பாதிக்கப்படக்கூடாது.

இரண்டாவதாக  யாராலும் என் மனமோ, எண்ணமோ பாதிக்கப்படக்கூடாது.

மூன்றாவதாக  என்மீது வேறு யாரும் ஆதிக்கம் செலுத்தக்கூடாது. இந்த மூன்று விஷயங்களால்தான் என்னால் இன்றும் கண்கள் அயர்ந்து நன்றாக தூங்கமுடிகிறது.நடந்தது எல்லாம் நல்லதுக்குதான்.என்னுடைய வாழ்க்கையில் நடக்கின்ற எந்த விஷயங்களாக இருந்தாலும் அது என்னுடைய அனுகூலமான,நல்ல நேரத்திற்காகவே நடக்கிறது என்ற நம்பிக்கை எனக்கு எப்போதுமே உண்டு.சமீபத்திய சம்பவம்கூட நான் ஒரு படி முன்னேற உந்துதலாக இருக்குமென நம்பு கிறேன்.அதனால் இதை ஒரு பாஸிட்டிவான சவாலாகத்தான் நினைக்கிறேன்.’’

 கர்மா, ஆத்மா இவற்றின் மீது உங்களுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறதா? உங்களது வாழ்க்கையில் இவற்றை நீங்கள் உணர்ந்திருக்கிறீர்களா?

”கர்மா, ஆத்மா, மறுபிறவி இந்த மூன்றுமே இந்தியாவில் எல்லோருடைய அன்றாட வாழ்க்கையிலும் ஏதோ ஒரு அடிப்படையில் உறவாடுகிற விஷயங்கள். என்னுடைய பர்ஸனல் வாழ்க்கையைப் பொருத்தவரை முடிவே இல்லாத மாபெரும் சக்தி ஒன்றுதான் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. நான் நடிகை யானதிலிருந்து, என் வாழ்க்கையில் நடந்த பெரும்பாலான பர்ஸனல் விஷயங்கள் எதுவுமே நான் திட்டமிட்டபடி நடந்தது இல்லை. இதற்கெல்லாம் காரணம் என்னுடைய கர்மா என்பதை உணர்ந்திருக்கிறேன்.”

 ஆன்மிக வாழ்க்கையில் உங்களை ஈடுபட வைத்தது எது? ஏன்?

“நான் மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டதால் ஆன்மிகத்தில் இறங்கினேன் என்று நினைக்கிறார்கள்.வாழ்க்கையில் கவலைப்படுவதற்கு என்ன இருக்கிறது.எனக்கும் நெருக்கடிகள் இருந்திருக்கிறது.அதனால் வருத்தப்பட்டும் இருந்திருக்கிறேன்.ஆனால் மன அழுத்தத்தினால் நான் ஒருபோதும் பாதிக்கப்பட்டது இல்லை.குழந்தைப் பருவத்திலிருந்தே எனக்கு ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகம்தான்.’’

 இந்த சர்ச்சையினால் நீங்கள் மாறியிருக்கிறீர்களா?

“இந்த சம்பவத்திற்குப் பிறகும் நான் அப்படியேதான் இருக்கிறேன்.

மாறவில்லை. இன்றும் எனது புத்தக வாசிப்பு தொடர்கிறது. தினமும் ஐந்து மணிநேரம் தூங்குகிறேன்.எல்லாமும் அப்படியே இருக்கிறது.ஆனால் மக்கள் மத்தியில் நான் மாறிவிட்டேன் என்று நினைக்க ஆரம்பித்துவிட்டார்கள் போலிருக்கிறது.என் மீதான பார்வையில் வித்தியாசம் ஏற்பட்டு இருப்பது புரிகிறது. ஆனால் இதே போன்ற சம்பவங்கள் நடப்பது எனக்கு இது முதல் முறை அல்ல.நான் நடிக்க ஆரம்பித்தபோது நெருங்கிய சொந்தங்கள்,நண்பர்கள் என்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பித்தார்கள்.சினிமா ஒரு நல்ல துறையாக,மதிக்கக்கூடிய தொழிலாக அவர்களுக்குத் தெரியவில்லை.

பிறகு நடிகையாக நான் பெயர்,புகழ் பெற்ற பிறகு அதே நண்பர்கள், உறவினர்கள் அதே சினிமாவினாலேயே என்னிடம் நெருங்கி வந்தார்கள். இது வட்டம் மாதிரி.இதே வட்டம். இன்றும் வேறு விதமாக தொடர்கிறது.’’

 மீண்டும் நடிக்க வரும் எண்ணமிருக்கிறதா?

“எதிர்காலம் நம் கையில் இல்லை. காலத்திற்கு ஏற்றபடி அது மாறிக்கொண்டே இருக்கும்.உண்மையில் உங்கள் கேள்விக்கான பதில் என்னிடம் இப்போது இல்லை.’’

பரபரப்பை கிளப்பிய அந்த சம்பவத்திற்குப் பிறகு நீங்கள் நித்யானந்தரைச் சந்தித்தீர்களா?

“நான் அவரைச் சந்திக்கவில்லை.’’.
இரா. ரவிஷங்கர்படங்கள் : ஆர். கோபால்அட்டைப்படம் - சித்ராமணி
www.kumudam.com 

Delhi 2010 32 கோடி மதிப்பிலான 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி

காமன்வெல்த்: 7 லட்சம் டிக்கெட் விற்பனை
காமன்வெல்த் போட்டிக்காக 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலர் லலித் பனோட் தெரிவித்துள்ளார்.
போட்டி துவங்கிய சில நாள்கள் பல அரங்கங்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடிக் காணப்பட்டன. சர்வதேச காமன்வெல்த் சம்மேளனத் தலைவர் மைக் ஃபென்னல் இதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தார். இதையடுத்து டிக்கெட் விற்பனையை அதிகரிக்கவும், கூட்டம் சேர்க்கவும், போட்டி ஒருங்கிணைப்புக் குழு பல நடவடிக்கைகளை மேற்கொண்டது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய போட்டி ஒருங்கிணைப்புக் குழுவின் பொதுச் செயலர் லலித் பனோட், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் டெல்லியில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இப்போது டிக்கெட் விற்பனையும் அதிகரித்துள்ளது.

இதுவரை ரூ. 32 கோடி மதிப்பிலான 7 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகி உள்ளன. இதனால் பெரும்பாலான போட்டி அரங்கங்களில் ரசிகர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. எனினும் நெட் பால், வில்வித்தை போன்ற ஒரு சில போட்டிகளுக்கு பார்ரவையாளர்களின் கூட்டம்  குறைவாகத்தான் உள்ளது என்றார்.