சனி, 23 ஏப்ரல், 2016

உளவுத்துறை (மயிலாப்பூர்) ரிப்போர்ட் :ம ந கூ அன் கோ 130 முதல் 150 தொகுதிகளை கைப்பற்றும்...சீமான் அரசியலுக்கு முழுக்கா?

வருகின்ற சட்டமன்ற தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி-தேமுதிக-தமாகா கூட்டணி ஆட்சி அமைக்கும்: உளவுத்துறை ரிப்போர்ட் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.இது குறித்து அரசியல் கட்சியின் நாளிதழ் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், “234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று ஜெயலலிதா நினைத்த உச்சபட்ச சாதனையை எட்டிவிட்டார். ஆனால் ஜெயலலிதா எதிர்பார்த்த வெற்றி கிடைக்காது என்று உளவுத்துறை பகீர் ரிப்போர்ட் கொடுத்துள்ளது.இதனால் ஜெயலலிதாவின் பிரச்சாரத்திலும் சோர்வு ஏற்பட்டுள்ளது. மேலும் உளவுத்துறை ரிப்போர்ட்டில் மக்கள் நல கூட்டணி 130 முதல் 150 தொகுதிகளை கைப்பற்றும் என்று உளவுத்துறை கொடுத்த ஷாக் ரிப்போர்ட் தான் ஜெயலலிதாவை இந்தப் பாடுபடுத்துகிறது.அதனால் தான் தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா அணி வேட்பாளர்களை அறிவித்ததும் ஜெயலலிதா ஒன்றன் பின் ஒன்றாக வேட்பாளர்களை மாற்றி வருகிறார். அதேபோன்று திமுக வேட்பாளர்கள் ஒரத்தநாடு, சோழவந்தான் தொகுதியில் போட்டியிட அச்சப்பட்டு விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது” என்று கூறியுள்ளது.வெப்துனியா.காம் நாம் தமிழர் கட்சியை விட ம ந கூ அன் கோ அதிக ஓட்டுக்கள்  பெற்றால் தான்தனது நாம் தமிழர் கட்சியையே கலைத்து விடுவதாக   சீமான் பேராசிரியர் அருணனுக்கு சவால் விட்டிருக்கிறார் . அதான் நாம் கொஞ்சம் ரோசிக்கிறோம் 

எந்த மோசமான தாயும் பிறர் தன் முன்னே கூசி குனிந்து விழுவதை சகிக்க மாட்டார்... அதை ரசிப்பவர் பெயர் வேற !

nakkeeran.com
நடிகை ஜெயலலிதா அவர்களே.. ''தேர்தல் பிரச்சாரம் ஆரம்பித்த நாள் முதல் நீங்கள் தாய் வேடம் போட்டு மக்களை ஏமாற்ற முயற்சிக்கிறீர்கள். நீங்கள் தாயல்ல… மாற்றாந் தாய் என்பதை மக்களுக்கு தெளிவு படுத்தவே இந்த மடல். தாயின் பரிபூரணமான பாசத்தையும், அளவில்லாத அன்பையும் இந்த உலகத்தில் எதனோடும் ஒப்பிடவே முடியாது. மனிதராகப் பிறந்த ஒவ்வொருவரும், உணர்வு பூர்வமாக அறிந்து கொண்ட விஷயம் இது. மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற வரிசையிலும் தாய்க்குதான் முதலிடம். அத்தகைய தாய்ப்பாசத்தை வைத்து, கீழ்த்தரமான அரசியல் செய்யும் உங்களை மன்னிக்கவே முடியவில்லை. கருணையின் வடிவமானவள்தான் தாய். அத்தகைய கருணை எதுவுமில்லாமல், ஈவு, இரக்கம் சற்றும் பாராமல், ஆயிரக்கணக்கான மக்களை நாள் முழுவதும் வெயிலில் வாட்டி வதைக்கும் கொடுமையான அரக்ககுணம் படைத்த, அகங்காரம் பிடித்த சர்வாதிகாரியாகத்தான் உங்களைப் பார்க்க முடிகிறது. எந்தத் தாய் தன் குழந்தையை துன்பத்தில் வாடவிட்டு, சுகமாக ஓய்வெடுத்துக் கொண்டிருப்பாள்? மண்டையைப் பிளக்கும் வெயிலில், பிள்ளையின் தலையை தன் முந்தானையால் மூடிக் கொண்டு நடப்பவள்தான் தாய். கொதிக்கும் மணலில், தன் செருப்பை பிள்ளைக்கு அணிவித்து, காலில் கொப்புளம் போட தன்னையே வருத்திக் கொள்பவள்தான் தாய். இரண்டு புறமும் ஏராளமான ஏர் கூலர்கள் சூழ, பிரச்சார மேடையில் சுகமாய் அமர்ந்திருக்கும் உங்களை, பெற்ற தாயின் இடத்தில் எப்போதுமே வைத்துப் பார்க்க முடியாது. ரோம் நகரம் பற்றி எரிந்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனுக்கும், மக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் வாடிக் கொண்டிருக்கும் போது, ஆட்சியின் சாதனைகளை பட்டியலிடும் கேவலமான உங்கள் போக்குக்கும் எந்த வேறுபாடும் இல்லை.

அந்த 100 கோடிகள் லபக் ! அதிகாரிகள் அதிமுக கூட்டணி ? தேர்தல்..................கமிஷன்

விகடன் .com கரூரில் அ.தி.மு.க பிரமுகர் அன்புநாதனின் வீடு மற்றும் குடோனில் பிடிபட்ட நோட்டுக் கட்டுகளால் பலத்த அதிர்வலைகளைக் கிளப்பி வருகிறது. பணம் பறிமுதல் செய்யப்பட்டதைவிடவும், அதை மறைப்பதற்கு மாவட்ட அளவிலான அதிகாரிகள் சிலர் செய்யும் தில்லுமுல்லுகளால் அதிர்ந்து போய்
இருக்கிறார்கள் அரவக்குறிச்சி மக்கள். ரெய்டு நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகளை அழித்துவிட்டதாகவும் பேசப்படுகிறது. யார் இந்த அன்புநாதன்?t;அ.தி.மு.க.வின் ஐவரணி அமைச்சர்களில் சிலரோடு நெருங்கிய தொடர்பில் இருப்பவர்தான் இந்த அன்புநாதன். அவர்களின் பணத்தை இவர்தான் பதுக்கி வைத்திருந்தாராம். திருச்சியில் இருந்து மதுரை செல்வதாக இருந்தால் கூட விமானத்தில்தான் பறப்பார்.
சமீபத்தில் ஜெயலலிதா கட்சியின் சீனியர்கள் சிலர் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தபோது, அன்புநாதன் சம்பந்தப்பட்ட வீடு, தோப்புகளில் ரெய்டு நடந்ததாக சொல்லப்பட்டது. இந்நிலையில்,10 சட்டமன்ற மன்ற தொகுதிகளுக்கான தேர்தல் செலவு செய்யும் பொறுப்பு ஒரு அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டது.  அந்தப் பணத்தைத்தான் அன்புநாதன் பதுக்கி வைத்திருந்தாக சொல்லப்படுகிறது. கரூர், அய்யம்பாளையத்தில் அன்புநாதன் என்பருக்குச் சொந்தமான குடோனில் இருந்து சுற்றுவட்டார ஊர்களுக்கு பணம் கடத்தப்பட்டு அங்கங்கே பதுக்கி வைப்பதுதான் திட்டம். அதற்காக, அன்புநாதன் குடோன் உள்ள ஏரியாக்களில் தினமும் சில மணிநேரம் கரண்ட் கட் ஆகியிருக்கிறது.

இதயத்துக்கு ரத்தத்தை செலுத்தும் புதிய கருவி கண்டுபிடிப்பு: இஸ்ரோ விஞ்ஞானிகள் சாதனை


ஏப்.23_ இதய மாற்று அறுவை சிகிச்சை நேயாளிகளுக்கு உதவும் வகையில், இதயத்துக்கு ரத் தத்தைச் செலுத்தும் புதிய கருவியை இந்திய விண் வெளி ஆராய்ச்சி நிறுவனத் தின் (இஸ்ரோ) விஞ்ஞானி கள் கண்டுபிடித் துள்ளனர். இதயம் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மாற்று இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இதய தானம் செய்வோரின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. அதேநேரம் மாற்று இதயம் தேவைப் படும் நோயாளிகளின் எண்ணிக்கை உலகம் முழு வதும் அதிகமாக உள்ளது.
இதற்காக விஞ்ஞானி கள் செயற்கை இதயம் தயாரித்து பரிசோதனை முறையில் பொருத்தி ஆராய்ச்சியும் செய்துவரு கின்றனர். எனினும், முழு அளவில் இது இன்னும் வெற்றி பெறவில்லை. அதேநேரம் செயற்கை இதயத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து நோயாளிகளுக்கு பொருத்த கோடிக் கணக் கில் செலவாகிறது.

மதுரை ஆதீனம் இதய தெய்வத்தை சந்தித்து அருளாசி பெற்றது...பிரசாரம் செய்யப்போவதாகவும் சுவாமிகள் அருள்வாக்கு!

தமிழக சட்டமன்றத்துக்கு நடைபெறவுள்ள தேர்தலில், அ.இ.அ.தி.மு.கவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யவுள்ளதாக மதுரை ஆதீன மடாதிபதி தெரிவித்துள்ளார் அதிமுக தலைவி ஜெயலலிதாவுடன், மதுரை ஆதீன மடாதிபதிகள் அக்கட்சியின் தலைவரும் தமிழக முதல்வருமான ஜெயலலிதாவை இன்று மதுரை ஆதீன மடாதிபதி அருணகிரியும், இளைய மடாதிபதியும் சந்தித்து பேசினர். இதன்பிறகு அவர் அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வார் எனும் செய்தி வெளியிடப்பட்டது.

தமிழிசை : வைகோ சமூகநீதியை முதலில் தனது கட்சியில் கடைப்பிடிக்கட்டும்... ஜோசியர் சொல்கேட்டு பச்சை தலைப்பாகை?

விகடன்.com :நெல்லை:வைகோ திடீரென தலையில் பச்சைத் துண்டைக் கட்டிக் கொண்டிருப்பதற்கு என்ன காரணம் என்பது பற்றி பா.ஜ.க மாநிலத் தலைவர் தமிழிசை செளந்தரராஜன் பரபரப்பு தகவலை வெளியிட்டார். நெல்லையில் பா.ஜ.க தேர்தல் காரியாலயத்தை திறந்து வைத்த அவர்,  செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக பாரதிய ஜனதா உருவெடுத்து வருகிறது. எங்களது கட்சிக்கு மக்கள் ஆதரவு பெருமளவில் பெருகி வருகிறது. நாங்கள் வெளியிட்டு உள்ள தேர்தல் அறிக்கையில் இருக்கும் தொலைநோக்குத் திட்டங்களுக்கு, மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இது எங்களை எதிர்ப்பவர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

வைகோ : ஜெயாவின் தோழி சசிகலா திமுகவுக்கு 15 சதவீதம் கமிசன் கொடுத்தார்..சசி நடத்தும் மிடாஸ் 15 சதவீதம்...

விகடனி.com: மிடாஸிடம் 15 சதவீத கமிஷனை வாங்கியது தி.மு.க..! - வைகோ சொல்லும் 'குடி’ கணக்கு :மக்கள்  நலக் கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ. ஒவ்வொரு கூட்டத்திலும் தி.மு.க, அ.தி.மு.க மீது அவர் வைக்கும் குற்றச்சாட்டுகள் அதிர வைக்கிறது. நேற்று சிவகங்கையில், சி.பி.ஐ கட்சி வேட்பாளர் குணசேகரனை ஆதரித்துப் பேசினார்.
திறந்தவேனில் நின்றபடி,  கொளுத்தும் வெயிலில் தலையில் பச்சைத் துண்டோடு பேச்சைத் தொடங்கிய வைகோ, " தி.மு.க, அ.தி.மு.க ஆகிய இரண்டு கட்சிகளாலும் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது. இந்த இரண்டு கட்சிகளும் மது விஷயத்தில் மட்டும் மிகுந்த ஒற்றுமையோடு இருக்கிறார்கள். தி.மு.க ஆட்சியில் இருந்தால் ஜெயலலிதாவின் தோழி நடத்தும் மிடாஸ் மதுபான ஆலையில் இருந்து சரக்குகளை ஏகபோகமாக வாங்குவார்கள். அ.தி.மு.க ஆட்சியில் இருந்தால், தி.மு.கவினர் நடத்தும் மதுபான ஆலைகளில் இருந்து பல்லாயிரம் கோடிகளுக்கு சரக்குகளை வாங்கிக் கொள்வார்கள்.

எல்லா வேட்பாளர்களுக்கும் கடும் எதிர்ப்பு அவரவர் கட்சிகளில் கிளம்பி உள்ளது.... தேர்தல் முடிவுகளில் ருசிகரமான திருப்பங்கள்?


அ.தி.மு.க., - தி.மு.க.,வில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு எதிர்ப்பு முற்றுகிறது. பல தொகுதிகளிலும், கட்சித் தொண்டர்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருவதால், இரு கட்சிகளிலும் வேட்பாளர் மாற்றம் தொடர்கிறது.
அ.தி.மு.க.,வில், 227 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல், 4ம் தேதி வெளியானது. அதைத் தொடர்ந்து தி.மு.க.,வும், 174 பேர் அடங்கிய வேட்பாளர் பட்டியலை, 14ம் தேதி வெளியிட்டது. அ.தி.மு.க.,வில்...: * ஈரோட்டில், அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள தென்னரசுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த கணவன், மனைவி இருவர், சென்னை போயஸ் தோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர் சங்கராபுரம் தொகுதி வேட்பாளருக்கு எதிராக, அ.தி.மு.க.,வை சேர்ந்த குடும்பத்தினர், போயஸ் தோட்டம் முன், தீக்குளிப்பு போராட்டம் நடத்த முயன்றனர்   மக்களுக்குச் சேவை செய்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்த, அவர்கள் வாழ்வாங்கு வாழ வேண்டும் என்ற ஆசைதான் காரணம் .... இதற்காக போராடும் இவர்களை வாழ்த்த வேண்டும் .... வையக் கூடாது ..

நடிகை நமிதா அதிமுகவில் இணைந்தார். கொள்கை முடிவாம்...

திருச்சியில் நடைபெற்ற அதிமுக பிரச்சாரப் பொதுக் கூட்டத்தில் முதல்வர் ஜெயலலிதா முன்னிலையில் நடிகை நமீதா அதிமுகவில் இணைந்தார்.
முன்னதாக, அதிமுகவில் இணைய விருப்பம் தெரிவித்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு நடிகை நமீதா கடிதம் எழுதினார்.
அதில், ''நமீதா ஆகிய நான் தமிழ் திரைத் துறையில் நடிகையாக உள்ளேன்.தங்களது சீர்மிகு நிர்வாகமும், ஆட்சி முறையும் தமிழகத்தை இந்தியாவின் சிறந்த மாநிலமாகத் திகழ வைத்துள்ளது.
சிறந்த தலைவியாகத் திகழும் தங்கள் தலைமையில் நானும் இணைந்து என்னாலான பங்களிப்பைத் தர விரும்புகிறேன்.தங்கள் தலைமையில் அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன்'' என்று தெரிவித்தார்.

கருணாநிதியின் கபடநாடகங்களைக் கண்டு தமிழக மக்கள் ஏமாறமாட்டார்கள்: ஜெயலலிதா

திருச்சி: இலங்கை தமிழர்கள் பிரச்சினையில் கருணாநிதி போடும் இரட்டை வேடங்களையும், மதுவிலக்கு பற்றி கருணாநிதி போடும் கபட நாடகங்களையும் தமிழக மக்கள் நன்கு அறிவார்கள் என்று அதிமுக பொதுச்செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார். 
திருச்சி, கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், வேலூர், விழுப்புரம் மாவட்டங்களிலுள்ள சட்டசபைத் தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஜெயலலிதா திருச்சி ஜி கார்னர் மைதானத்தில் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார் Jaya blasts Karunanidhi அப்போது பேசிய ஜெயலலிதா திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் பெரும்பாலானவற்றை நிறைவேற்றவில்லை தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இந்த ஜெயலலிதாதான் என்று கூறினார்.

ஒலிம்பிக் தூதராக சல்மான் கான் நியமனம்...Drunk & Drive killing Salman Khan Goodwill Ambassador for Rio Olympics 2016

Salman Khan named as Indian contingent’s Goodwill Ambassador for Rio Olympics 2016
டெல்லி: 2016ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான இந்தியாவிற்கான நல்லிணக்க தூதராக பாலிவுட் நடிகர் சல்மான் கான் நியமிக்கப்பட்டுள்ளார். மது போதையில் கார் ஒட்டி ,பாதையில் படுத்திருந்த ஏழைகளின் உயிரை காவு கொண்ட இந்த சினிமாக்காரனுக்கு என்ன தகுதி இருக்கிறது? அழிந்து கொண்டு வரும் மானை வேட்டையாடிய வழக்கு ஒரு புறம். பணக்காரன் செய்யும் கிரிமினல் குற்றங்கள் எல்லாம் வீர தீர செயலாக போற்ற படுகிறது. அவர்களுக்கு பத்ம பட்டமும் ராஜ்ய சபா பதவியும் கூட  அளிக்க படுக்கிறது. ரியோ டி ஜெனிரோவில் நிச்சயம் இந்த ஒலிம்பிக் தூதரால் நாட்டு மானம் போகப்போகிறது. உலகம் கண்ணை மூடி கொண்டு இருக்கவில்லை     

BBC: பாகிஸ்தானில் சர்தார் சூரன் சிங் சுட்டுக் கொலை...பக்துன்தவா மாகாண சபை உறுப்பினராவார்.

பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள சீக்கிய மதத்தவர்களின் முன்னணி தலைவர் ஒருவரின் கொலைக்கு தாமே பொறுப்பு என பாகிஸ்தானிய தாலிபான்கள் கூறியுள்ளனர்.;கடந்த வெள்ளிக்கிழமையன்று கைபர் பக்தூன்க்வா மாகாண சபையின் உறுப்பினரான சர்தார் சூரன் சிங் சுட்டுக்கொல்லப்பட்டார்.
நாட்டின் வடமேற்கேயுள்ள அந்த மாகாணத்தின் முதலமைச்சருக்கு ஆலோசகராகவும் அவர் இருந்தார்.
கடந்த மூன்று ஆண்டுகளில் அந்த மாகாண சபையின் நான்கு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
அவரது கொலைக்கு பொறுப்பேற்றுள்ள பாகிஸ்தானிய தாலிபான்கள், கடுமையான இஸ்லாமியச் சட்டங்கள் நடைமுறைபடுத்தப்படும் வரை இப்படியான கொலைகள் தொடரும் எனக் கூறியுள்ளனர்.

பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறை: வீதியில் வீசப்பட்ட தமிழ் நூல்கள்

10 ஆயிரம் தமிழ் நூல்களை வீதியில் வீசி, பெங்களுருவில் திருக்குறள் மன்ற நூலகம் சூறையாடப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&பெங்களூரில் தமிழர்கள் அதிகளவில் வசித்துவரும் அல்சூர் பகுதியில் உள்ள தாமோதர் முதலியார் தெருவில் அமைந்துள்ளது திருக்குறள் மன்றத்தின் தமிழ் நூலகம். இந்த நூலகத்தின் முகப்பில் பெயர்ப் பலகையில் எழுதப்பட்டிருந்த தமிழ் மற்றும் ஆங்கிலப் பெயர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு யாரோ தார்பூசி அழித்தனர்.
இந்த நிலையில், தமிழ் நூலகம் செயல்படுவதை விரும்பாத சமூக விரோதிகள் சிலர் வியாழக்கிழமை நூலகத்தின் பூட்டை சட்ட விரோதமாக உடைத்து, உள்ளே நுழைந்து நூல்கள் அடுக்கப்பட்டிருந்த மரச் சட்டங்களை அடித்து நொறுக்கியதோடு, ஜன்னல்களை உடைத்தெறிந்து, அதன்மூலம் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை வீதியில் வீசிச் சென்றனர்.

கூட்டத்துக்கு ஆட்கள் சப்பிளை பண்ணும் கம்பனி.....திருச்சியில் பாஜக பிரமுகரின் கடத்தல் தொழில்

திருச்சி,: -பொதுக்கூட்டங்களுக்கு, ஆட்களை அனுப்பும் தனியார் நிறுவனம், கட்சிகளின் கூட்டங்களில், 'விசிட்டிங் கார்டு' கொடுத்து, 'கேன்வாஸ்' செய்து வருகிறது. கட்சி தலைவர்கள் பங்கேற்கும் கூட்டத்தில், அதிகளவில் கூட்டத்தை காட்டும் கலாசாரம் உள்ளது. இதற்காக, கட்சி நிர்வாகிகள், தனியார் நிறுவனங்களை நாடி வருகின்றனர். சேர், பாத்திரங்கள் வாடகைகைக்கு விடும் கடைகள் போல், ஆட்களை, அரசியல் கூட்டங்களுக்கு அனுப்பி வைக்கும் நிறுவனங்கள் சில  செயல்படுகின்றன. அதில் ஒன்று, 'தேர்தல் இறுதிச்சுற்று மேன்பவர்' நிறுவனம். இது, பா.ஜ., பிரமுகர் ஒருவரால், சென்னையை தலைமையிடமாக கொண்டு நடத்தப்படுகிறது.    இவர்களை உடனடியாக பிடித்து ஜெயிலில் தள்ள வேண்டும்....இது ஆட்கடத்தலுக்கு வழி வகுக்கும்.....மற்ற மாநிலத்து ஆட்களை கூட கடத்தி கொண்டு வந்து இந்த தொழிலுக்கு சேர்த்து விடுவர்.... பட்டியில் ஆட்களை அடைப்பது போன்று அடைத்து வைத்து கூட்டங்களுக்கு அழைத்து போயி அப்படியே திரும்ப அழைத்து வந்து பட்டியில் அடைத்து விடுவர்..........

EVKS.இளங்கோவனின் சகோதர் வீட்டில் வருமானவரி துறை விசாரணை

தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
 சென்னையில் உள்ள பிரபலமான நகைக் கடையில் சோதனை மேற்கொண்டதன் தொடர்ச்சியாக வருமான வரித்துறை அதிகாரிகள்
 ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் சகோதரர் மதிவாணன் வீட்டிலும் விசாரணை செய்தனர்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

Megalomaniac Jayalalithaa ராஜாதி ராஜ ராஜமார்த்தாண்ட ராஜகுல திலக ராஜ வைராக்கிய இதுதாங்க மேகாலோ மேனியாங்கிறது


விகடன்.com :ஜெயலலிதாவின் ஆரம்ப கால அரசியல் புகைப்படம் ஒன்று என்னிடம் உண்டு. ஜீப்பின் முன்புறம் உள்ள பேனட் மீது நின்றுகொண்டு மக்கள் மத்தியில் அவர் ஆவேசமாகப் பேசும் படம் அது. அங்கிருந்து ஒவ்வொரு தேர்தலிலும் அவர் பேசும் படங்களை வரிசையாக நகர்த்திக்கொண்டே வந்தால், அவரது தேர்தல் மேடைகளும் வாகனங்களும் அடுத்துவரும் காலத்தை முன்கூட்டிச் சொல்லும் குறியீடுகளாகத் தோன்றுகின்றன. காலந்தோறும் அவை மாறிவந்திருக்கின்றன. மக்களிடமிருந்து விலகிவந்திருக்கின்றன. அந்த மேடைகள் வெளிப்படுத்தும் மேலாதிக்க உணர்வையும் அந்நியமாதலையும் அடுத்து வரும் காலகட்டத்தில் மேலும் மேலும் அதிகரித்திருக்கின்றன
ஜெயலலிதாவின் நிர்வாகச் செயல்பாடுகள்.

அம்மா டோஸ் : குனிஞ்சு குனிஞ்சு கும்பிட தெரியறது கொஞ்சமாவது.....? 10...15 வருடங்களுக்கு முன்பு எங்கிருந்தீர்கள்? யோசிச்சு பாருங்க ...?.

அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட ஒட்டன்சத்திரம் தொகுதி மாற்றப்பட்டு, வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதிமுகவின் வேட்பாளர் பட்டியல் மாற்றத்தால் இதுவரை 27 பேர் முன்னாள் வேட்பாளர்களாக ஆகியிருக்கிறார்கள். இந்நிலையில் இன்னும் பல வேட்பாளர் மாற்றங்கள் வரலாம் என காதை கடிக்கின்றது கார்டன் வட்டாரம். காரணம் கடந்த 2 தினங்களுக்கு முன், கார்டனில் நடந்த சூரசம்ஹாரம். அன்றைய தினம் வேட்பாளர் தேர்வில் முக்கிய பங்காற்றிய
கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களையும், முன்னாள் பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவரையும் ஜெயலலிதா வறுத்தெடுத்தார் என்கிறார்கள். எந்த தேர்தலானாலும், வேட்பாளர் அறிவிப்பதில் துவங்கி பிரசார பயணங்கள் திட்டமிடுவதை வரை கடந்த காலங்களில்,  ஜெயலலிதா தலைமையிலான அதிமுகதான் ரேஸில் முந்தி நிற்கும். வெற்றி யாருக்கானதாக இருந்தாலும் தேர்தல் பணியில் அது காட்டுகிற சுறுசுறுப்பு, மற்ற கட்சிகளுக்கு கிலி ஏற்படுத்திவிடும். தேர்தல் நேர அதிரடிகளிலும் ஜெயலலிதா அப்படித்தான்.மனதில் பட்டதை அதிரடியாக செய்வார். அதன்மீதான விமர்சனங்களுக்கு பொருட்படுத்தமாட்டார். ஆனால் இந்த முறை வேட்பாளர் மாற்றம் தொடர்ந்து கொண்டிருப்பதில் முதன்முறையாக ஜெயலலிதா எரிச்சலுக்குள்ளானார் என்கிறார்கள் கட்சி வட்டாரத்தில்.

இதுவரை 6 பேர் மரணம்...லக்கானி, பார்பன மீடியாக்கள் ? .அர்விந்த் கேஜ்ரிவால் கூட்டத்தின் ஒரு மரணத்துக்கு குதியோ குதி


டில்லியில் கெஜ்ரிவால் கலந்து கொண்ட பொதுக் கூட்டத்தில் ஓர் ஆள் மரணமடைந்த போது பார்ப்பன ஊடகங்கள் எப்படியெல்லாம் எழுதின!
ஜெயாவின் தேர்தல் பொதுக்கூட்டங்களில் ஓரிருவர் சாவது கட்டாயமாகிவிட்டது.
இதுவரை 6 பேர் மரணம். இதற்கு மூலகாரண கர்த்தாவாகிய ஜெயாவை மேதகு சட்டம் இன்னும் ஏன் கைது செய்யவில்லை ? பதில் சொல்வது யார் ?.... தேர்தல் ஆணையம் உச்ச நீதி மன்றம் மனித உரிமை ஆணையம் மோடி அரசு..... இவை என்ன செய்துகொண்டு இருக்கிறது ? ஏனென்றால் மேற்சொன்ன எல்லாமே ஜெயாவின் கட்டுப்பாட்டில்தான் உள்ளன. இந்தியா ஒரு படு மோசமான சர்வாதிகாரதை நோக்கி போகிறது  என்பதற்கு இதை விட வேறு சான்று தேவை இல்லை.! Damodaran Chennai

ரோஹித் வேமுலா...தாய் சகோதரன் பௌத்த மதத்தை தழுவினார்கள் Rohith Vemula’s mother, brother embrace Buddhism


ரோஹித் வேமுலாவின் தாய் சகோதரன் ஆகியோர் புத்த மதத்தை தழுவினார்கள் மும்பையில் அம்பேத்கரின்  125 வது பிறந்த தினத்தில் இவர்களது மதமாற்றம் நடைபெற்றது. அம்பேத்காரின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் .வேமுலாவின் தாயும் சகோதரனும் தாங்கள் மதம் மாறியதால் ஜாதியின் கோரப்பிடியில் இருந்து விடுதலை அடைந்து விட்டதாக கருதுவதாகவும் தெரிவித்தனர். இவர்களின் துயரத்தை காலம் மாற்றவேண்டும் என்று நாமும் வாழ்த்துகிறோம்
Mother and brother of Dalit scholar Rohith Vemula, who committed suicide at Hyderabad Central University in January sparking strong protests across the country, today embraced Buddhism on the occasion of Dr. B.R. Ambedkar’s 125th birth anniversary.
Rohith’s mother Radhika and brother Naga Chaitanya Vemula, also known as Raja Vemula, were given ‘deeksha’ at a function in Dadar, Mumbai in the presence of Prakash Ambedkar, the grandson of Dr. B.R. Ambedkar.

அதிமுகவின் இந்துத்வா ஓட்டுக்களை குறிவைக்கும் தமிழக பாஜக....

தமிழகத்தில் அதிமுகவின் கிளை அமைப்பாகத்தான் பாஜக தனது வியாபரத்தை இதுவரை நடத்தி கொண்டிருந்தது.. ஜெயலலிதாவின் இமாலய ஊழல் வழக்குகளில் இருந்து அவரை காப்பாற்ற பாஜகவால் முடியவில்லை . பல உதவிகளை செய்தாலும் ஒட்டு மொத்தமாக கோப்புக்களை கடாசிவிடவேண்டும் என்ற ஜெயலலிதாவின் பூதகரமான கோரிக்கையை யாராலும் நிறைவேற்றுவது சாத்தியம் இல்லை. முன்பும் வாஜ்பாயின் ஆட்சியை ஜெயலலிதா கவிழ்த்ததும் இதே பிரச்னையை வைத்துதான் .
அதிமுக சிலவிடயங்களில் பாஜகவை விட படு தீவிரமான இந்துத்வா பார்ப்பனீய கட்சியாகவும் இருக்கிறது. எனவே புதிதாக ஒரு பார்ப்பனீய கட்சி இங்கு தேவையும் இல்லை . அதைவிட முக்கியமான ஒரு விடயம் என்னவென்றால் ஜெயலலிதாவிடம் அதிருப்தி கொண்டுள்ள இந்துத்வா வாக்காளர்கள் தமிழக பாஜக பக்கம் திரும்ப தொடங்கி விட்டார்கள். இது அதிமுகவின் வாக்கு வங்கியில் சகல தொகுதிகளிலும் சிறிய சிறிய வெடிப்புக்களை ஏற்படுத்தி சில துண்டுகளை திருடி விட்டது. இது வெளியே சொல்ல முடியாத வலியை ஜெயாவுக்கு  உண்டாக்கி விட்டது...
ஊழல் வழக்குகள் ஒரு புறம் இருந்தாலும் கட்சி பலமாக இருந்தால்தான் மத்திய அரசுகளை மிரட்டி மிரட்டி  வழக்குகளில் இருந்து தப்ப முடியும்.
பாஜகவுக்கு இப்பொழுதும் தமிழகத்தில் ஒன்றும் குடி முழுகி போய்விடவில்லை.
அவர்களின் கொள்கைகளை அதிமுக செவ்வனே நிறைவேற்றி கொண்டு வருகிறதே? அந்த திருப்தி என்ன லேசானதா?
இவை மட்டும் அல்லாமல் ராம் கோபாலன்களும் அர்ஜுன் சம்பத்துக்களும் இங்கே சாமியாடி சாமியாடி மக்களை மக்சிமம் பயமுறுத்தி  வைத்துள்ளார்கள். இதுக்குள்ள நீங்க வேற.....   

அம்மா எங்களை ஏன் கைவிட்டீர் ?......ம.ந.கூ அன் கோ.

மக்கள் நலக் கூட்டணிpwa-caption-1ருபது ஆண்டுகளுக்கு முன்பு திருநாவுக்கரசு உள்ளிட்டவர்களை அ.தி.மு.க.விலிருந்து துரத்தியபோது, அவர்களை உதிர்ந்த ரோமங்கள் எனத் திமிராக வருணித்தார் ஜெயலலிதா. அம்மாவால் கைவிடப்பட்டோர் சங்கம் என்று அழைப்பதற்குத் தகுதியான, விஜயகாந்த், வைகோ, முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகியோர் அந்த மாதிரியாக ஜெயலலிதாவால் வருணிக்கப்படாமல் இருப்பதற்கு ஒரே காரணம், வரவிருக்கும் தேர்தலில் இந்த மூன்றாவது அணி தன்னைக் காப்பாற்றுவதற்குப் பயன்படும் என்ற கணக்குதான். மக்கள் நலக் கூட்டணி : ஜெயாவால் கைவிடப்பட்ட அட்டை கத்திகள்! “இத்தனை காலம் தி.மு.க.,- அ.தி.மு.க., என்று மாறிமாறிக் கூட்டணி வைத்து விட்டு, இரண்டு பேரும் ஊழல் கட்சிகள் என்று இப்போதுதான் கண்டுபிடித்தது போலச் சொல்கிறீர்களே, இது அடுக்குமா?” என்ற தோரணையில் பத்திரிகையாளர்கள் பலரும் கேட்கவே, அவர்களை வாயடைக்கச் செய்யும் விதத்தில் ஒரு பதிலை எடுத்துவிட்டார் மார்க்சிஸ்டு கட்சியின் செயலர் ராமகிருஷ்ணன். இரண்டு கட்சிகளுடனும் மாறிமாறி கூட்டணி வைத்து அவர்களை எப்படியாவது திருத்த முயன்றார்களாம்.

உத்தரகண்ட்..உயர்நீதிமன்ற தடைக்கு எதிராக உச்சநீதி நீதிமன்றில் தடை உத்தரவு....பாஜக குதிரை பேரம் ஆரம்பம்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் ஹரிஷ் ராவத் தலைமையில் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடந்து வந்தது. ஆனால் முதல்–மந்திரிக்கு எதிராக முன்னாள் முதல்–மந்திரி விஜய் பகுகுணா தலைமையில் 9 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் போர்க்கொடி உயர்த்தினர். பாரதீய ஜனதா கட்சியுடன் அவர்கள் கை கோர்த்தனர். இதன் காரணமாக ஹரிஷ் ராவத் அரசு, சட்டசபையில் மார்ச் 28–ந் தேதி நம்பிக்கை தீர்மானத்தை எதிர்கொள்ள இருந்தது. ஆனால் அதற்கு முந்தைய நாளில் (மார்ச் 27–ந் தேதி) அங்கு அரசியல் சாசன எந்திரம் செயலிழந்து போய் விட்டதாக கூறி, ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. மத்திய அரசின் இந்த நடவடிக்கை, பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டதற்கு எதிராக ஹரிஷ் ராவத், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார். இதுக்குதான் பாஜக பயங்கரவாதி எம் எல் ஏ கணேஷ்ஜோஷி அந்த வாயில்லா  குதிரையை  அடித்து கொன்றான்.

ஜெயாவின் கண்டுபிடிப்பு : இரட்டை மேடை முறை ..இரட்டை குவளை முறையின் பரிணாமம்...கீழே உட்காரடா சூத்திர பயலே....?

எம்ஜிஆர் ..வெளியில் சொல்லத்தகாத காரணத்துக்காக கலைஞரிடம் பகைமை கொண்டார்...அதன் விளைவாக...
சினிமாவில் தனக்குள்ள செல்வாக்கை பயன் படுத்திக்கொண்டு ஒரு தனி கட்சி ...அதிமுக வை அமைத்தார்....ஆகவே அந்த கட்சியின் அடிப்படை லட்சியமே கருணாநிதியை அழிப்பதுதான்...அதை தவிர மக்கள் நலனோ...மொழி பண்பாடு கலாசாரம்..சமத்துவம்...சமூகநீதி பகுத்தறிவு மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்துதல்...தொழில்வளம்.. கல்வி வேளாண்மை ...அறிவியல் வளர்ச்சி என்பன போன்ற எந்த நோக்கமும் அதற்க்கு....ஒரு நாளும் இருந்ததே இல்லை.. அதிமுகவின் ஒற்றை கொள்கை கருணாநிதியை அழிப்பது மட்டுமே....கருணாநிதி மீதான பழி வாங்கும் உணர்ச்சியைத் தவிர வேறு கொள்கை அதற்கு கிடையாது.
அதிமுக .மக்கள் நலம் சார்ந்தது அல்ல.. 24 மணிநேரமும் எம்ஜிஆர்...கருணாநிதி மீது பழி சுமத்தி அவதூறு பரப்பி மக்கள் நெஞ்சில் கருணாநிதி எதிர்ப்பு என்னும் நஞ்சை விதைத்து வளர்த்தார்.

சுப்ரமணியம் சாமி ராஜ்யசபா நியமனம்... சொந்த செலவில் சூனியம் வைத்துகொண்ட சங்பரிவார்.

பிரேமலதாவை மூளைச்சலவை செய்து திமுகவுடன் கூட்டணி வைக்காமல் தேமுதிகவை டமால் பண்ணியதற்கும் மேலும் பாஜகவின் வேறு சிலதில்லு முல்லுக்களை நிறைவேற்றி கொடுத்ததற்கு இந்த பரிசாக இந்த பதவி சு.சாமிக்கு வழங்க பட்டுள்ளது.இந்த ஆள் எப்பொழுதும் யாருக்காகவோ மாமா வேலை பார்த்துக் கொண்டே இருப்பார். காரியம் பலிக்காவிட்டால் நீங்கள் எவ்வளவோ கொடுத்தாலும் நன்றி மறந்து கழுதருப்பு தொடங்கிடுவார். கேடி kingfisher விஜய் மல்லியா இவரது கட்சியின் தலைவராக ஒன்பது ஆண்டுகள் இருந்தவர்.. கில்லாடி தேவ கவுடா இவருக்கு நெருங்கிய நண்பர்..பாஜக ரொம்பவும் சிரமத்தில் இருக்கிறது  என்பது இதில் இருந்து தெளிவாக புரிகிறது..  அழுக்கு வேலைக்கு ஆள் எடுதுட்டாய்ங்க. 
சுப்ரமணியம் சாமி ,நடிகர் சுரேஷ் கோபி உள்பட 6 பேர் டெல்லி மேல்சபை உறுப்பினர்களாக நியமனம் பிரபல மலையாள நடிகர் சுரேஷ் கோபி, முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து, பிரபல குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், மூத்த பத்திரிகையாளர் ஸ்வபன் தாஸ் குப்தா, பொருளாதார நிபுணர் டாக்டர் நரேந்திர ஜாதவ், சுப்பிரமணியசாமி ஆகிய 6 பேரை டெல்லி மேல்–சபை உறுப்பினர்களாக நியமிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு மத்திய அரசு பரிந்துரை செய்து இருக்கிறது. இந்த 6 பேரின் நியமனம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நக்கீரன்,in  

பெரம்பலூர் ..நரபலி... 6 குழந்தைகளை கொன்று காளிக்கு பலி கொடுத்த கும்பல்

பெரம்பலூர், ஏப். 21 மூலிகைச் செடிகளை வளர்க்கும் இடத்தில் குழந்தையை நரபலி கொடுத்துள்ளனர். ஆறு மனித மூளைகள் ஒரு பையில் கட்டி வைக்கப் பட்டு காளிக்கு பலி கொடுக்கப்பட்டுள்ளது’ என்ற செய்தி பெரம்ப லூர் முழுவதும் பரவத் தொடங்கியதும் மாவட் டம் முழுவதிலுமே பர பரப்பு பற்றிக் கொண்டது. இது தொடர்பாக இது வரை ஆறு  நபர்களை கைது செய்துள்ளது காவல்துறை.பெரம்பலூர் மாவட் டம், பாடாலூர் அருகே உள்ள நாரணமங்கலம் கிராமத்தில் மூலிகைச் செடிகளை வளர்க்கும் பண்ணை ஒன்று உள் ளது. இந்த மூலிகைச் செடிப் பண்ணையை பெரம்பலூரைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் நடத்திவருகிறார்.இது மலைகள் நிறைந்த பகுதி. மலைகளின் அடிவாரத்தில் பத்து ஏக்கர் பரப்பில் மூலி கைச் செடிகளை வளர்த்து வருகிறார். கடந்த சில கால மாகவே இவரது போக்கில் மாற்றம் தெரிந்தது.;“பில்லி, சூனியம், யார் கையையும்  கட்டிப் போட வேண்டும் என்றால் என்னை வந்து பாருங்கள். ஆண்ட வனையே கட் டிப் போடும் திறமை என்னிடம் உள்ளது. வாருங்கள் உங்களுக்கும் கற்றுத் தருகிறேன்’’ என்று இப்பகுதி இளைஞர் களிடம் கார்த்திகேயன், கூறி வந்ததாகச் சொல் கிறார்கள்.

ஏசி இல்லாமல் கோடையைச் சமாளிக்க என்ன செய்யலாம்?

01. உங்கள் வீடு காங்கிரீட்டில் கட்டப்பட்டு மொட்டைமாடியில் வெயில் கொதித்து (அது சிமென்ட் தரையோ, சதுர ஓடுகள் பதித்ததோ) அதன் சூடானது அந்த மொட்டை மாடித் தரை வழியே கீழிறங்கும். மதிய நேரத்தில் வெறும் காலில் உங்களால் அந்தத் தரையில் ஒரு நொடி கூட நிற்க முடியாத அளவிற்கு சூடேறி இருக்கும். பகல் முழுவதும் இப்படி அடுப்பில் வைத்த இட்லிக் குண்டானைப் போல இருக்கும் உங்கள் மாடித் தரையானது, மாலையில் குளிர்ந்திருக்கும். ஆனால் அந்தச் சூடு மெதுவாகக் காங்கிரீட்டினுள்ளே புகுந்து இப்பொழுது அடிப்பாகத்தை எட்டி இருக்கும். ஆக, பகலில் வீட்டின் உள்ளே மேல் பாகத்தில் குளிர்ச்சியாகவும், மாடித்தரையில் சூடாகவும் இருந்த இடம், இப்பொழுது அப்படியே தலைகீழாக மாடித்தரை குளிர்ச்சியாகவும், வீட்டினுள்ளே சீலிங் அதிக சூடாகவும் இருக்கும்.

திறந்த வெளி சித்திரவதை கூடங்களா பிரசார கூட்டங்கள்? ...ஜெயலலிதா : இறைவன் திருவடி நிழலில் ஆன்மா.....


VIKATAN :தேர்தல் பிரசாரம்  கொளுத்தும் கோடை வெயிலில் காசு கொடுத்து கூட்டி வந்து, மனித உயிர்களைக் கருக வைத்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பிரசாரம் நடத்துவதாக சமூக வலைத்தளங்களில் கடும் கொந்தளிப்புடன் காரசார விவாதங்கள் அரங்கேறி
வருகிறது.  சிதம்பரம் நகர 31-வது
வார்டைச் சேர்ந்த அதிமுக தொண்டர் எஸ்.கருணரனுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும், அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் நகரத்தைச் சேர்ந்த எம்.ராதாகிருஷ்ணனும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டுவிட்டு வீடு திரும்பும் வழியில் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டும் மிகுந்த வேதனையுற்றேன்.
அன்புச் சகோதரர்கள் கருணாகரன், ராதாகிருஷ்ணன் ஆகியோரை இழந்து வாடும் குடும்பத்தி னருக்கு ஆழ்ந்த இரங்களையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன், அவர்களது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

தேர்தல் திருவிழாவில் காணமல் போன அம்பி....நாமகட்டி வாங்க போகாதேன்னேன் கேட்டானா?

விகடன்.comகடந்த 2014 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியைப் பெற்று மத்தியில் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதாக் கட்சி, தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்தவே படாதபாடு பட்டுவருகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மத்தியில் ஆட்சியில் இருப்பதைக் காட்டி, வலுவான கூட்டணியை தங்களது தலைமையில் அமைத்துவிடலாம் என்று நம்பி, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்களை கட்டம் கட்டமாக சந்தித்தும் அந்த ஆசை பகல் கனவாகப் போயுள்ளது தமிழக பாஜகவுக்கு.

ஆணவ ராணி...வெறும் 300 ரூபாய்க்காக வாட்டும் வெயிலில் வதங்கவும் மக்கள் தயாராக இருக்கிறார்கள்


1
2.savukkuonline.com :மீண்டும் இரண்டு உயிர்ப்பலிகள் நிகழ்ந்திருக்கின்றன.   ஜெயலலிதாவின் சேலம் பொதுக்கூட்டத்துக்கு வந்திருந்த பச்சையண்ணன் மற்றும் பெரியசாமி ஆகியோர் வெயிலின் உக்கிரம் தாங்காமல் உயிர் இழந்திருக்கின்றனர். ஏற்கனவே ஏப்ரல் 11 அன்று விருத்தாச்சலத்தில் நடந்த பிரச்சாரக் பொதுக் கூட்டத்தில் கருணாகரன் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மரணமடைந்துள்ளனர். 481764365178801
ஜெயலலிதா செல்லும் இடங்களிலெல்லாம் மரணம் தாண்டவமாடுகிறது.   இந்த அகோரத்தை கண்டிக்க வேண்டிய ஊடகங்கள் எப்போதும் போல கனத்த அமைதி காக்கின்றன.      வட மாநிலத்தில் இறந்து போன காவல்துறையைச் சேர்ந்த ஒரு குதிரைக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தை இறந்து போன இரண்டு மனித உயிர்களுக்கு கொடுக்க ஊடகங்கள் மறுக்கின்றன.  இன்றைய டைம்ஸ் ஆப் இந்தியாவின் முதல் பக்கத்தில் காவல்துறையின் குதிரை சக்திமான் இறந்தது ஐந்து கால செய்தியாக வெளியாகியுள்ளது.     ஜெயலலிதாவின் கூட்டத்துக்கு வந்து இருவர் இறந்தது நாலு வரிச் செய்தியாக வெளியாகியுள்ளது.   இதுதான் ஊடகங்கள் மனித உயிர்களுக்கு அளிக்கும் மரியாதை.

யாரை குறிவைக்கிறார் சீமான்? என்னன்னவோ சொல்கிறார் ஆனால் பாடி லாங்குவேஜ் வேற என்னவோ சொல்கிறதே?

விகடன்.com :தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய கட்சிகள் தோன்றினாலும், அவைகள் பழைய கட்சிகளை சற்று பலவீனப்படுத்தியே வந்துள்ளன. 1957-ம் ஆண்டு அண்ணாதுரை தி.மு.கவைத் தொடங்கியபோது, கம்யூனிஸ்ட்டுகள் பலவீனப்பட்டார்கள். 96-ம் ஆண்டு ம.தி.மு.க உதயமானபோது, தி.மு.கவுக்கு மாற்று என முன்வைக்கப்பட்டது.
89-ம் ஆண்டு தொடங்கப்பட்ட பா.ம.க மாற்று சக்தியாக முன்வைக்கப்பட்டது. கால ஓட்டத்தில் அதுவும் கரைந்துபோனது. 2006-ம் ஆண்டு தே.மு.தி.க கால் பதித்தபோது, பா.ம.கவும், ம.தி.மு.கவும் பலவீனப்பட்டது.

பாஜகவின் தேர்தல் அறிக்கை : சமசீர் கல்வி கோவிந்தா ! நந்தன் பிறந்த நாளில் மட்டும் கோயில்களில் சமபந்தி விருந்து..... .

பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். | படம்: பிஜாய் கோஷ் மதமாற்ற தடைச் சட்டம்: யோகாசனம் தியானம் ,கோவில்கள் தனியாரிடம் (ஆர்.எஸ்.எஸ்)  ஒப்படைக்கப்படும் .பூரண மதுவிலக்கு, தினமும் 20 லிட்டர் இலவச குடிநீர்,(ஒரு லிட்டர் கோமியம்)...பசுவதை தடை சட்டம் கொண்டு வரப்படும் (பசுவின் தோல் ஏற்றுமதி செய்யப்படும்) கோயில் நிலங்கள், இடங்களை பிற மதத்தினர் வாடகைக்கு, குத்தகைக்கு எடுத்திருந்தால் அதற்கான ஒப்பந்தம் ரத்து செய்யப்படும். பாஜக தேர்தல் அறிக்கை
பாஜக தேர்தல் அறிக்கையை மத்திய அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டார். | படம்: பிஜாய் கோஷ்
தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கட்டாய மதமாற்ற தடைச் சட்டம், பசுவதை தடைச் சட்டமும் கொண்டு வரப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.
வரும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பாஜக தொலைநோக்கு அறிக்கையை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் கப்பல் துறை அமைச்சர் நிதின்கட்கரி இன்று வெளியிட்டார்.  இவங்க இலவச வீபுதி சந்தானம் குங்குமம் நாமக்கட்ட்டி தவிர மத்ததெல்லாம் அறிவிச்சிருக்காங்க

நீதிபதி ஜோசெப் மத்திய அரசுக்கு சாட்டை அடி! மாநில ஆட்சியை பறிக்கும் அதிகாரம் குடியரசு தலைவருக்கும் கூட ....கிடையாது

சென்னை: உத்தராகண்ட் மாநிலத்தில் குடியரசு தலைவர் ஆட்சியை மத்திய அரசு அமல்படுத்தியதை ஹைகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மூத்த பத்திரிக்கையாளர் கதிர் வேல் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளதாவது: குமாரசாமிகளையும் சில தத்து பித்துகளையும் பார்த்து இந்திய நீதித்துறை மீதே நம்பிக்கை சீர்குலைய தொடங்கியிருக்கும் சூழ்நிலையில், இதோ நாங்கள் இருக்கிறோம் என்று இந்திய அரசியல் சாசனத்தை உயர்த்தி பிடித்து எழுந்து நிற்கிறார் உத்தராகாண்ட் ஐகோர்ட் தலைமை நீதிபதி கே எம் ஜோசப். லயோலாவில் படித்தவர். கேரளா ஐகோர்ட்டில் பத்ததாண்டுகள் பணியாற்றியவர். தந்தை சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பணியாற்றியவர்.    பாஜகவிடம் நேர்மையை எதிர்பார்ப்பது கடினம் எனவே மேன்முறையீடு செய்வார்கள் என்றே கருதுகிறேன் ...அங்குதான் ஜெயலலிதா ஜாமீன் புகழ் தத்து இருக்கிறாரே /னே.

வியாழன், 21 ஏப்ரல், 2016

இதயதுல்லா காங்கிரசுக்கு டாட்டா?

வரும் சட்ட மன்றத் தேர்தலில் திமுக - காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிடுகிறது. இதில் 41 தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.இதில், சிறுபான்மை சமூகத்தினர்களுக்கு ஒரு தொகுதி கூட ஒதுக்கவில்லை என்றும், உரிய பிரிதிநிதித்துவம் கொடுக்கவில்லை என்றும் இதயத்துல்லா குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து, இதயத்துல்லா கூறுகையில், வேட்பு மனு தாக்கல் செய்ய இறுதி நாளான 29 ஆம் தேதிக்குள் சிறுபான்மையினர் ஒருவரை வேட்பாளராக காங்கிரஸ் கட்சி தலைமை அறிவிக்க வேண்டும். இல்லை எனில், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகுவதை தவிர வேறு வழியே இல்லை என்றார்.ஆக, காங்கிரஸ் கட்சிக்கு முழுக்கப் போட இதயதுல்லா ரெடியாகிவிட்டார். விடு.. ஜூட்.webdunia.com

ஒலிம்பிக் சுடர் சூரிய ஒளியின் குவியத்தாலேயே ஏற்றப்படுகிறது

உலகின் மிகப்பெரும் விளையாட்டுத் திருவிழா எனக் கருதப்படும் ஒலிம்பிக்
போட்டியின் மிக முக்கியமான ஒரு அம்சம், போட்டி காலம் முழுவதும் எரியும் ஒலிம்பிக் ஜோதி. கிரேக்கத்தில் பாரம்பரிய முறையில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும் அந்தச் சுடர் ஒவ்வொரு ஒலிம்பிக் போட்டியின் போதும் பழமையான பாரம்பரிய முறையில் கிரேக்கத்தில் ஏற்றப்படும். ஒலிம்பிக் சுடர் விளையாட்டு வீரர்களால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் பண்டைகால ஒலிம்பிக் போட்டிகளின்போது அச்சுடர் எப்படி ஏற்றப்பட்டதோ அதே முறையே இப்போதும் பின்பற்றப்படுகிறது.