சனி, 30 ஏப்ரல், 2011


அமெரிக்காவில் இந்திய மருந்துக் கடை அதிபர் சுட்டுக் கொலை

அமெரிக்காவின் ட்ரென்டன் நகரில் ஆந்திராவைச் சேர்ந்த மருந்துக்கடை அதிபர் நேற்று சுட்டுக் கொல்லப்பட்டார்.


52 வயதான அர்ஜூன் தியாப ரெட்டி என்ற அவர் ட்ரென்டன் நகரில் புருன்ஸ்விக் பார்மஸி என்ற மருந்துக் கடையை நடத்தி வந்தார். அவரை அடையாளம் தெரியாத சிலர் கடைக்குள் புகுந்து சுட்டுக் கொன்றனர்.

துப்பாக்கிச் சத்தம் கேட்ட அடுத்த சில வினாடிகளில் 18 வயதான கருப்பின வாலிபர்கள் சிலர் கடையைவிட்டு வெளியே ஓடியதை சிலர் பார்த்துள்ளனர். அவர்கள் தான் ரெட்டியைக் கொலை செய்ததாகத் தெரிகிறது.

கொள்ளை முயற்சியில் இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மத்திய அமைச்சர் ஜெய்பால் ரெட்டியில் தூரத்து உறவினரான அர்ஜூன், 2009ம் ஆண்டு ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் மெஹ்பூப் நகர் மாவட்டத்தில் கல்வாகுர்தி தொகுதியில் போட்டியிட முயன்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English summary
Once again an NRI has become the victim of brutality abroad. 52-year-old Arjun Dyapa Reddy has been killed in USA on Friday, Apr 29. Mr Reddy was shot in chest, local newspaper reported on Saturday, Apr 30. Mr Reddy, who hailed from Andhra Pradesh, was the owner of Brunswick Pharmacy. Though, the intention behind the murder has not yet been clear, Police sources suspects a 18-19 year-old black man with dreadlocks who was seen running out of the shop soon after the murder.

இளங்கோவன்: தி.மு.க.,வினர் வாசன் ஆதரவாளர்களை வைத்து மட்டுமே தேர்தல் பணிகளை

""தமிழகத்தில் காங்கிரஸ் வேட்பாளர்கள் 63 தொகுதிகளிலும் வெற்றி பெறுவர்,'' என, அவிநாசிக்கு வந்த, முன்னாள் மத்திய அமைச்சர் இளங்கோவன் தெரிவித்தார்.

அவிநாசியில் அவர் கூறியதாவது: தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலில், காங்., கட்சி போட்டியிட்ட 63 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெறும். அதேபோல், மேற்கு வங்கம், அசாம், கேரளாவிலும் காங்., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும். தமிழக காங்., தலைவர் தங்கபாலுவை மாற்ற வேண்டுமென்று புகார் சென்றுள்ளது. அதுகுறித்து கட்சி தலைமை ஆய்வு செய்து வருகிறது. அடுத்த தலைவர் யார் என்பதை, சோனியா முடிவு செய்து அறிவிப்பார். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.

"2ஜி' ஸ்பெக்ட்ரம் விவகாரம் குறித்து கேள்வி கேட்டதற்கு, "அது குறித்து தற்போது கருத்து கூற விரும்பவில்லை' என்றார். இளங்கோவனிடம், காங்., தொண்டர்கள், சட்டசபை தேர்தல் குறித்து சரமாரியாக புகார் கூறினர். அவர்கள் கூறுகையில், "அவிநாசி தொகுதியில், தி.மு.க.,வினர் வாசன் ஆதரவாளர்களை வைத்து மட்டுமே தேர்தல் பணிகளை செய்தனர்; எங்களை எதற்கும் கூப்பிடவில்லை. தேர்தல் பணியில் ஈடுபட்ட பிற அணியை சேர்ந்தவர்கள், ஒழுங்காக பணியாற்றவில்லை. எங்களை தொடர்ந்து புறக்கணித்தால், கட்சி பணிகளில் நாங்கள் எதற்கு ஈடுபட வேண்டும்' என்றனர். அதற்கு இளங்கோவன், "தேர்தல் முடிவுக்கு பின், அனைத்தையும் பேசி தீர்த்து கொள்ளலாம். பொறுமையாக இருங்கள்' என்றார். இதனால், தொண்டர்கள் சமாதானம் அடைந்தனர்.

என் குடும்பத்தினர் சினிமா எடுத்தால் மட்டும் ஏன் இந்த நெஞ்செரிச்சலோ? - கருணாநிதி

என் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் ஈடுபட்டால் ஏன் தான் இந்த நெஞ்செரிச்சலோ? என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கை:

முதுபெரும் எழுத்தாளர்களில் ஒருவரும் எனது மனம் கவர்ந்த கருத்தாளர்களில் ஒருவருமான "சோலை'' எதை எழுதினாலும் அதை விருப்பு வெறுப்பின்றி ஒரே சீரான மனநிலையில் நான் படிப்பது வழக்கம். பாலும் நீரும் கலந்த கலவையில், தனக்கு வேண்டியதை மாத்திரம் எடுத்துக் கொள்ளும் அன்னப் பறவை போன்ற நிலையினின்று என்றைக்கும் தடுமாறாதவன் நான்.

ஆதலால், தமிழகத் திரைப்படத் துறை குறித்து அவர் எழுதியுள்ள ஒரு கட்டுரையை வார இதழ் ஒன்றில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. தொண்டாற்றியும் தொடர்ந்து தியாகங்கள் செய்தும் இயக்கத்தின் தருக்களாக வளர்ந்துள்ள என் பிள்ளைகள் அழகிரி, ஸ்டாலின், தமிழரசு ஆகியோரும், அவர்களுடைய பிள்ளைகளும் திரையுலகிலும் பொருளீட்டி புகழ் ஈட்டுவதை பொறுத்துக் கொள்ள முடியாத சிலர் எனக்கு நண்பர்களாக இருந்து கொண்டே நச்சுக்கணைகள் பாய்ச்சுவதை நாட்டுக்கு உணர்த்தி பகுத்தாய்ந்து; தெளிந்திடுக எனும் வேண்டுகோளோடு இந்த விளக்கத்தை அளிக்க விரும்புகிறேன்.

எனது அருமை நண்பர்கள்

1945-ம் ஆண்டு முதல் இதுவரையில் 75-க்கு மேற்பட்ட திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதி இருக்கிறேன். நான் திரைக்கதை வசனம் எழுதிய முதல் படங்களான அபிமன்யூ, ராஜகுமாரி ஆகியவற்றில் எனது அருமை நண்பர் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக தோன்றி இருக்கிறார்.

அவரை அடுத்து எனது அன்பு நண்பர் சிவாஜி "பராசக்தி'' படத்தில் கதாநாயகனாக நடித்து பெரும் புகழ் பெற்றார். இப்படி எனக்கும் திரைப்படக் கலைஞர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், இசைவாணர்கள், கவிஞர்கள், தொழிலாளர்கள் ஆகியோருக்கும் இருந்த தொடர்புகளையும், இருக்கின்ற தொடர்புகளையும் திரையுலகை தெளிவாக புரிந்தவர்கள் மறந்திருக்க முடியாது.

சினிமா துறைக்கு விடிவு காலம்

எழுத்து நடையின் வேகத்தில் சோலை, யாரோ ஒருவர், பெரியதோர் தயாரிப்பாளர் கோபத்தின் உச்சத்தில், இந்த ஆட்சி மாறினால்தான் சினிமா துறைக்கு விடிவு காலம் என்று ஆதங்கப்படுவதாகக் குறிப்பிட்டு, அவர் பெயரையும் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறார். தயாரிக்கப்பட்ட திரைப்படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று சினிமா வட்டாரத்தில் விமர்சிக்கிறார்கள் என்று சொல்லவும் சோலை தவறவில்லை.

என்ன செய்வது? படம் எடுப்பதற்கு ஆள் இல்லாமல், ஸ்டுடியோக்களையும், திரையரங்குகளையும் மூடிவிட்டு, அந்த இடங்களை திருமண மண்டபங்களாகவும், ஓட்டல்களாகவும், கிடங்குகளாகவும் மாற்றிடும் நிலைமை ஏற்பட்டது ஒரு காலம். தற்போது படங்களை வெளியிட தியேட்டர்களே கிடைக்கவில்லை என்று அலைகின்ற ஒரு நிலைமை ஏற்பட்டிருக்கிறது.

தியேட்டர் கிடைக்கவில்லை

நான் எழுதி வெளி வந்துள்ள "பொன்னர்-சங்கர்'' திரைப்படத்துக்கும் எங்கும் தியேட்டர்கள் கிடைக்கவில்லை அலையாய் அலைந்துதான் தியேட்டர்களை பிடிக்க முடிந்தது என்று அதன் தயாரிப்பாளர்கள் கண்ணீர் விட்ட நிகழ்ச்சி எல்லாம் எனக்குத் தெரியும்.

கடலூரில் ஒரு தியேட்டரில் "பொன்னர் சங்கர்'' திரைப்படம் திரையிடப்பட்டு அரங்கம் நிறைந்த காட்சிகளாக நடைபெற்றுக் கொண்டிருந்த போதே 2-ம் நாளே அந்த படத்தை கட்டாயப்படுத்தி எடுத்து விட்ட செய்திகள் எல்லாம் சோலைக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார் சத்திரம் ஒன்றியத்தில் ஒரு மூதாட்டி "கருணாநிதியின் பேரன் பேத்திகள் எல்லாம் சினிமா படம் எடுக்கிறார்களே, எப்படி?'' என்று கேட்டதாக சோலை எழுதி இருக்கிறார்.

மற்றவர்களையும் பாருங்கள்

பாவம்; அந்தப் பாட்டிக்கு ஏ.வி.மெய்யப்ப செட்டியார் திரைப்படம் எடுத்து பின்னர் அவருடைய மகன்கள் ஏ.வி.எம்.முருகன், ஏ.வி.எம். குமரன், ஏ.வி.எம்.பாலசுப்ரமணியம், ஏ.வி.எம். சரவணன், அவருடைய மகன் குகன், மருமகள் நித்யா போன்றவர்கள் எல்லாம் திரைப்படத் துறையிலே இருப்பதும், சிவாஜிக்குப் பிறகு அவருடைய மகன்கள் ராம்குமார், பிரபு, அவருடைய மகன் துஷ்யந்த் போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டதும்,

ரஜினி, அவரது மகள் ஐஸ்வர்யா, மருமகன் தனுஷ் ஆகியோர் திரைப்படத் துறையில் இருப்பதும் கமல், அவரது சகோதரர் சாருஹாசன், மகள் ஸ்ருதி, மற்றும் சுகாசினி, மணிரத்னம், அனுஹாசன் போன்றவர்கள் எல்லாம் இந்தத் துறையிலே ஈடுபட்டிருப்பதும் தயாரிப்பாளர் ஆர்.பி.சவுத்ரி மற்றும் அவரது பிள்ளைகள் ஜீவா, ஜித்தன் ரமேஷ் போன்றவர்கள் இருப்பதும், நடிகர் சிவகுமார், அவரது பிள்ளைகள் சூர்யா, கார்த்தி போன்றவர்கள் திரைப்படத் துறையில் ஈடுபட்டிருப்பதும் ரெட்டியார் சத்திரம் மூதாட்டிக்குத் தெரியாமல் போனதுதான் வேடிக்கை.

ஓட்டாண்டிகள்

அது மாத்திரம் அல்ல, கடந்த காலத்தில் எத்தனை படத் தயாரிப்பாளர்கள் படங்களைத் தயாரித்து அதை முடிக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டார்கள், எத்தனை பேர் படம் எடுத்த காரணத்தினாலேயே ஓட்டாண்டியாக ஆகி தெருவிலே நின்றார்கள் என்பதை எல்லாம் என் நண்பர் கவிஞர் கண்ணதாசன் எழுதி புத்தகமாக வெளியிட்டார்.

என் குடும்பத்திலே என்னுடைய பிள்ளைகளோ, பெண்களோ, பேரர்களோ அரசியலிலே ஈடுபட்டால் வாரிசு அரசியல் என்பதற்கும் திரைப்படத் துறையிலே ஈடுபட்டால் அதற்கு அர்த்தம் கற்பிப்பதற்கும் என்னதான் காரணமோ? ஏன்தான் இந்த நெஞ்செரிச்சலோ? ஆட்சி மாற வேண்டுமென்று துர்வாச முனிவரை போல கோபப்பட்ட தயாரிப்பாளருக்கு நான் நினைவூட்ட விரும்புவது, ஏன் அவரே பல முறை கொஞ்ச காலத்திற்கு முன்பு வரையில் பல மேடைகளில் சொல்லியதுதான். அவை வருமாறு:

சினிமா துறைக்கு அளித்த சலுகைகள்

குறைந்த செலவில் தயாரிக்கப்படும் தமிழ்ப் படங்களை ஊக்குவிக்கும் நோக்குடன் தகுதி வாய்ந்த தமிழ்த் திரைப்படங்களுக்கு அவை வெளியிடப்பட்டது முதல் 4 வாரங்கள் வரை கேளிக்கை வரியில் இருந்து விலக்கு அளிக்கும் திட்டம் முதன் முதலாக 12.12.1996 அன்று தி.மு.க. அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கு முன்பு இருந்த ஆட்சியில் கேளிக்கை வரி வசூலிக்கப்பட்டுத்தான் வந்தது.

புதிய படங்களுக்குக் கேளிக்கை வரியை 54 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக 1989-ம் ஆண்டில் குறைத்த தி.மு.க. அரசு, 1.8.1998 முதல் அதை 30 சதவீதமாகவும், 2000-ல் 25 சதவீதமாகவும் குறைத்தது. 10 ஆண்டுகளுக்கு முன்வந்த திரைப்படங்களுக்குக் கேளிக்கை வரியை 40 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக 1.8.1998 அன்று குறைத்ததுடன்; மொழி மாற்றுப் படங்களுக்கான கேளிக்கை வரியையும் பிற தமிழ்ப்படங்களுக்குக் குறைக்கப்பட்டது போல் குறைத்தது தி.மு.க. அரசு. இதே போல, இணக்க வரி விதிப்புகளும் அதற்கேற்றாற்போல் குறைக்கப்பட்டன.

கேளிக்கை வரி ரத்து

இந்த வரிக்குறைப்புகளின் மூலம் ஆண்டிற்கு ரூ.60 கோடி அளவிற்கான வரிச் சலுகைகளை தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இல்லாத அளவில் 1998-ம் ஆண்டிலேயே தி.மு.க. அரசு வழங்கியது. விற்பனை வரிச் சட்டத்தின்படி, திரைப்படங்களுக்கான உரிமை மாற்றம் மீது 1.4.1986 முதல் 11.11.1999 வரை செலுத்த வேண்டிய வரியை தள்ளுபடி செய்தது.

அத்துடன் உரிமை மாற்றத்திற்கான விற்பனை வரியை 12.11.1999 முதல் 11 சதவீதத்தில் இருந்து 4 சதவீதமாகவும் குறைக்கப்பட்டது. 1.4.2000 முதல் திரைப்படங்கள் குத்தகை மீதான 4 சதவீத விற்பனை வரி அறவே நீக்கப்பட்டது. திரைப்படங்களுக்கு தமிழ்ப் பெயர்கள் வைக்கப்படுமானால், அதற்கு முழு கேளிக்கை வரி முழுமையும் ரத்து செய்யப்பட்டிருப்பதும் இந்த ஆட்சியிலேதான்.

படப்பிடிப்பு க் கட்டணம் குறைப்பு

தொல்பொருள் ஆய்வுத் துறையின்கீழ் உள்ள மற்றும் கலைச்சின்னங்கள் உள்ள இடங்களுக்குச் செலுத்தி வந்த படப்பிடிப்புக் கட்டணம் ஓரிடத்திற்கு ஒரு நாளைக்கு ரூ.5,000 என்பதை ஆயிரம் ரூபாய் எனவும், ஏனைய இடங்களுக்கு ரூ.2,500 என்பதை ரூ.500 எனவும் 1996-ல் குறைத்தது தி.மு.க. அரசு. ராஜாஜி மண்டப படப்பிடிப்பு வாடகை தி.மு.க. ஆட்சியில் ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் என்று இருந்ததை 2003-ல் ஒரு லட்சமாக உயர்த்தியது ஜெயலலிதா அரசு.

2004 நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தோல்விக்குப்பின் அது ரூ.25 ஆயிரமாக குறைக்கப்பட்டது. அது, 25.6.2006 அன்று தி.மு.க. அரசினால் ரூ.10 ஆயிரமாக மேலும் குறைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பு நடத்தப்படும் இடங்களில் வகை-1 என்ற பிரிவில் குறிப்பிடப்பட்ட இடங்களுக்கு ஜெயலலிதா ஆட்சியில் ரூ.10 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.5 ஆயிரமாகவும், வகை-2-ன் கீழ்வரும் இடங்களுக்கு முந்தைய அ.தி.மு.க ஆட்சியில் ரூ.5 ஆயிரம் என்று விதிக்கப்பட்ட கட்டணம் ரூ.3,000 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தொழிலாளர்களுக்கு குடியிருப்பு

சின்னத் திரைக்கான படப்பிடிப்புக் கட்டணங்கள் பெரிய திரைக்கான கட்டணங்களில் 50 சதவீதம் மட்டுமே செலுத்தினால் போதும் எனவும் 25.6.2006 அன்று ஆணையிட்டது தி.மு.க. அரசு. தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் சண்டைப் பயிற்சியாளர்கள் சண்டைக் காட்சியின்போது உயிரிழக்க நேர்ந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ஒரு லட்ச ரூபாயும், செயல்பட முடியாத அளவிற்குக் காயம்பட்டு ஊனமடைய நேர்ந்தால் ரூ.50 ஆயிரமும் நிவாரண உதவி வழங்கும் திட்டம் 1996-ல் அறிமுகப்படுத்தி தொடர்ந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

திரைப்படக் கலைத்துறை, சின்னத்திரை சார்ந்த தயாரிப்பாளர்கள், கலைஞர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள், தொழிலாளர்கள் அனைவருக்கும் வீடுகள் கட்டுவதற்காக காஞ்சீபுரம் மாவட்டம் சிறுதாவூருக்கு அருகில் பையனூரில் 96 ஏக்கர் நிலம் வழங்கப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையின் உழைப்பாளிகள் நலன்களைக் காத்திட திரைப்படத் துறையினர் நல வாரியம் அமைக்கப்பட்டு இருக்கிறது. 9.7.2008 அன்று "உளியின் ஓசை'' படத்தின் மூலம் எனக்குக் கிடைத்த கதை வசனத்துக்கான ஊதியம் ரூ.25 லட்சத்தில் வருமானவரி போக ரூ.18 லட்சம் திரைத்துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றும் மூத்த கலைஞர்களுக்கு நேரடியாக வழங்கப்பட்டது.

போர்க் கருவிகள்

நண்பர் சோலை, திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலரின் எண்ணத்தை, தன் கட்டுரையின் வாயிலாக தெரிவித்திருப்பதையொட்டி இந்த விளக்கத்தை அவர்களுக்கு தெரிவித்திட உதவியதற்காக நன்றி தெரிவித்துக் கொண்டு திரையுலகத்திற்கு தி.மு.க. ஆட்சியிலே செய்யப்பட்ட ஒரு சில சாதனைகளை இங்கே சொல்லியிருக்கிறேன்.

இதை எல்லாம் செய்த குற்றத்திற்காகத்தான் இந்த ஆட்சி மாற வேண்டு மென்று திரைப்படத் துறையிலே உள்ள ஒரு சிலர் எண்ணுவார்களானால், அவர்களுக்கு விளக்கம் அளிக்க வேண்டிய பொறுப்பு நண்பர் சோலைக்குத்தான் உண்டு.

கலைத் துறை, இலக்கியத் துறை இரண்டையும் என் அரசியல் இலட்சியப் போராட்டத்திற்குத் தேவையான போர்க்கருவிகளாக நான் கருதுகிறேன். சில பேர் லட்சிய போரின் பக்கம் அடியெடுத்து வைக்காமல், தலைவைத்துப் படுக்காமல் கலைத்துறை, இலக்கியத் துறைகளால் மட்டுமே ஈர்க்கப்பட்டு செயல்படுகிறார்கள். காரணமின்றி அவர்களில் சிலருக்கு என் மீது அழுக்காறும், அசூயையும் ஏற்படுவது இயல்புதான். அதற்காக நான் என்னுடைய லட்சியத்தை புதைத்து விட்டு, லட்சங்களைத் தேடி அலைய மாட்டேன்.

-இவ்வாறு முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
English summary
Defending his family members' presence in Tamil film industry, Chief Minister M Karunanidhi today said children of famous stars including Rajnikanth and Kamal Hassan had also taken to the same profession.

திமுக கூட்டணியே ஆட்சியமைக்கும்!-தலைகீழான ஹெட்லைன்ஸ் டுடே கருத்துக் கணிப்பு

சென்னை: தேர்தலுக்கு முன்புவரை 'அதிமுகதான் ஜெயிக்கும், ஜெ முதல்வராவார்' என கூறிய இந்தியா டுடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் டுடே தொலைக்காட்சி, இப்போது நிலைமை திமுகவுக்கே சாதகமாக உள்ளதாகக் கூறியுள்ளது.


ஹெட்லைன்ஸ் டுடேயும் ஓஆர்ஜி நிறுவனமும் இணைந்து தேர்தலுக்குப் பின் நடத்திய கருத்துக் கணிப்பின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

மே 10ம் தேதி வரை கருத்துக் கணிப்பு வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்திருப்பதால், எக்ஸிட் போல் எனும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை நடத்தவில்லை என்றும், வாக்களித்த மக்களிடம் கருத்துக் கேட்டு அதன் அடிப்படையில் இந்த முடிவுகளை வெளியிட்டிருப்பதாகவும் ஹெட்லைன்ஸ் டுடே தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த இரு தினங்களில் 6000 வாக்காளர்களைச் சந்தித்து இந்த கருத்துக் கணிப்பை நடத்தியுள்ளனர். 2009 நாடாளுமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு இந்த சர்வே எடுக்கப்பட்டுள்ளது.

அதில், திமுக கூட்டணி 130 தொகுதிகள் வரை வெல்லும் என்றும் அதிமுக கூட்டணி 105 முதல் 120 தொகுதிகள் வரை கிடைக்க வாய்ப்புள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

திமுக மட்டும் தனியாக 90 தொகுதிகளுக்கு மேல் வெல்லும் வாய்ப்புள்ளதாகவும் இதில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து ஹெட்லைன்ஸ் டுடே கூறியிருப்பதாவது:

"இந்தத் தேர்தலில் ஜெயித்து முதல்வராவது அம்மாவா, கலைஞரா? இதை அதிகாரப்பூர்வமாகத் தெரிந்து கொள்ள இன்னும் 15 நாட்கள் உள்ளன. ஆனால், இந்தியா டுடே- ஓஆர்ஜி இணைந்து மேற்கொண்ட தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் திமுகவின் கையே ஓங்கியிருப்பது தெரியவந்துள்ளது. அதிமுக ஆட்சியமைக்க வாய்ப்பில்லை என்பதும் தெரிகிறது.

தேர்தலுக்கு கடைசி பதினைந்து நாளில், அதிமுகவை விட சிறப்பாக தேர்தல் பணியாற்றியதோடு, மக்களின் வாக்குகளைக் கவரும் அளவுக்கு சிறப்பாக செயல்பட்டுள்ளது திமுக.

இதன் விளைவு, இந்தத் தேர்தலில் 115 முதல் 130 தொகுதிகள் வரை திமுக கூட்டணிக்கே கிடைக்க வாய்ப்புள்ளது. அதிமுக அணி 105 முதல் 120 தொகுதிகள் வரை பெறக்கூடும். கடந்த தேர்தலை விட 33 முதல் 48 வரையிலான தொகுதிகளை திமுக இழந்தாலும், ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளும் என்பது உறுதியாகியுள்ளது.

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி, 36 முதல் 51 தொகுதிகள் வரை கூடுதலாகப் பெற்றாலும் ஆட்சியமைக்கும் வாய்ப்பில்லை.

இந்தத் தேர்தலில் சுவாரஸ்மான விஷயம், தேர்தலுக்கு முன்பு எடுத்த கருத்துக் கணிப்பில் 45 சதவீதம் பேர் திமுகவுக்கு ஆதரவாகப் பேசினார்கள். ஆனால் தேர்தலுக்குப் பின் கருத்துக் கணிப்பு நடத்தியபோது, 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் திமுகவுக்கே வாக்களித்ததாய் கூறியுள்ளனர்.

கிராமப் புறங்களில் 2ஜி, தமிழ் ஈழப் பிரச்சினைகள் எடுபடவில்லை. அங்கே அந்த மக்களின் தேவைகளை யார் சரியான முறையில் நிறைவேற்றினார்கள், நிறைவேற்றுவார்கள் என்பதே பிரதான பிரச்சனையாக இருப்பது இப்போது புரிகிறது. கிராமப் பகுதிகளில் திமுகவுக்கு பெரும் ஆதரவு நிலவுகிறது. அங்கு திமுக 5 சதவீதம் அதிகமாக வாக்குகளைப் பெறும்.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை, மொத்தத்தில் திமுக அணி 3 சதவீத வாக்குகளை கூடுதலாகப் பெறும் வாய்ப்புள்ளது. அதிமுகவுக்கு 7 சதவீத வாக்குகள் கூடுதலாகக் கிடைத்தாலும், கூட்டணி பலமின்மை அவருக்கு பாதகமாக உள்ளது. வைகோவை அவர் கடைசி நேரத்தில் இழந்திருக்கக் கூடாது. குறிப்பாக கடைசி நேரத்தில் அவரை புண்படுத்தி வெளியேற்றியது அதிமுகவுக்கு பெரிய பின்னடைவு. வைகோ இருந்திருந்தால் 3 சதவீத கூடுதல் வாக்குகள் கிடைத்திருக்கும். அது கதையையே மாற்றியிருக்கும்.

இதுவே இந்தத் தேர்தலில் ஆட்சியை மீண்டும் திமுகவிடம் ஒப்படைக்கப் போதுமானதாக உள்ளது.

முன்பை விட அதிக தொகுதிகளைப் பெற்றாலும், அதிமுக எதிர்க்கட்சி வரிசையிலேயே உட்கார வேண்டிய நிலைதான் அடுத்த 5 ஆண்டுகளும்.

கேரளாவில்...

கேரள தேர்தலைப் பொறுத்தவரை இந்த முறை காங்கிரஸ் வெல்வது உறுதியாகிவிட்டது. ஆனாலும் இடதுசாரி கூட்டணி 45 முகல் 52 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 92 வரையிலான வெற்றி பெற்று ஆட்சியைப் பிடிக்கக் கூடும் என தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.

அஸ்ஸாமில் தொங்கும் சட்டசபை அமைய வாய்ப்புள்ளது. காங்கிரஸ், இடதுசாரி கட்சிகள் இரண்டுமே சமபலத்தில் உள்ளன. இங்கு ஆட்சியை நிர்ணயிக்கப் போவது பாஜகதான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English summary
Will it be Amma or Kalaignar? It's exactly 15 days to judgment day, but Headlines Today-ORG post-poll survey points the Tamil Nadu election could go either way. The range of seats both DMK and AIADMK are projected to get in the survey indicates that there has been a significant change in the position where Jayalalithaa seemed almost certain to win the poll battle. Karunanidhi's party seems to have gained a lot of lost ground in the last 15 days of campaigning.

சினிமாவும் தணிக்கையும்

இந்தியாவில் சினிமாவுக்கு சென்சார் உண்டு. அதாவது இந்தியாவில் திரையிடப்படும் ஒவ்வொரு படமும் பொதுமக்கள் பார்ப்பதற்கு உகந்ததுதானா என்று சென்சார் செய்யப்பட்ட பின்னர்தான் பொது இடங்களில் திரையிடப்படுகிறது. சென்சார் என்பதைத் தமிழில் தணிக்கை என்று குறிப்பிடுகிறார்கள்.

 சினிமாவுக்காக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட படத்துக்குத்தான் தணிக்கை என்று இல்லை. வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட தணிக்கை செய்யப்பட்ட படத்துக்கும் தணிக்கை செய்யப்படாத படத்துக்கும்கூட தணிக்கை உண்டு. கதைப்படங்கள் என்றுதான் இல்லை. விளம்பரப் படங்கள், ஆவணப் படங்கள் என்று எல்லாவற்றுக்கும் தணிக்கை உண்டு.

 சினிமா என்பது கலைப்படைப்பு. கலைக்குத் தணிக்கை என்பது கொடுமையானது. அது சுதந்திரத்தைப் பாதிக்கும். சில நாடுகளில் உள்ளதுபோல சினிமா தயாரிப்பாளர்களின் சுயகட்டுப்பாடே போதும்; தணிக்கை தேவையில்லை என்று சினிமாவோடு சம்பந்தப்பட்டவர்கள், அசல் கலைஞர்கள் எல்லாம் சொல்லிப் பார்த்தார்கள். உச்ச நீதிமன்றம் வரையில் கலைஞர்களின் கோரிக்கை சென்றது.

 சினிமா கலைப்படைப்பு என்பது முழுக்க முழுக்கச் சரியான வாதமல்ல. அது வியாபாரம், கேளிக்கை, பொழுதுபோக்கு என்று பல அம்சங்களோடு சம்பந்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் பார்க்கும் சினிமாவில் ஆபாசம், வன்முறை, இனக்கலவரம் ஆகியவற்றைக் காட்சிகள் வழியாகவும், வசனங்கள், இசை வழியாகவும் தூண்டிவிட வாய்ப்புகள் உள்ளன. எனவே, சினிமாவுக்குத் தணிக்கை அவசியமாகிறது. ஆனால், கலையைப் பாதிக்காமல் தணிக்கை இருக்க வேண்டும் என்று தீர்ப்புக் கூறியது உச்ச நீதிமன்றம்.

 1952-ம் ஆண்டில் சுதந்திர இந்தியாவில் சினிமா தணிக்கைக்குழு அமைக்கப்பட்டது. அதற்கொரு தலைவரும், அவருக்கு ஆலோசனை வழங்க 23 பேர்கள்கொண்ட குழுவும் அமைக்கப்பட்டது. அதன் தலைமை அலுவலகம் மும்பை. தணிக்கைக்குழு சுதந்திரமானது. அதன் தீர்ப்பை எதிர்த்து நீதிமன்றம் செல்லலாம்.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பெரும்பாலும் சினிமாத்துறை சம்பந்தப்பட்டவர்களாகவே நியமிக்கப்பட்டார்கள். சிலசமயத்தில் ஓய்வுபெற்ற அரசு அதிகாரிகள் இடம்பிடித்துக் கொண்டார்கள். இந்தியாவில் சினிமா என்பது மும்பை இந்தி சினிமா, கொல்கத்தா வங்காளி சினிமா. எனவே, சினிமா தணிக்கைக்குழுத் தலைவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தி, வங்காளி சினிமா தயாரிப்பாளர்களாகவோ, இயக்குநர்களாகவோ, நடிகர் நடிகைகளாகவோ இருந்தார்கள். அதன் காரணமாக, தணிக்கைக்குழு என்பது பொதுமக்களுக்கு ஆதரவாக இருந்ததென்பதைவிட சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் நலம், வசூல் ஆகியவற்றைக் காப்பாற்ற ஒரு கருவியாக இருந்தது. சில சமயத்தில் ஆளுங்கட்சியின் ஆதரவாளர்கள் கலை, கலாசார அபிமானிகள் என்ற பெயரில் தணிக்கைக்குழுத் தலைவரானார்கள்.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவராக, தலைமைப் பதவியைப் பிடிக்கத் தனியாகத் தகுதி எதுவும் தேவையில்லை. ஆனால், சினிமாத்துறையில் இருப்பது கூடுதலான தகுதி. பிராபல்யத்தைக் கொடுக்கிறது. எனவே, சினிமாக்காரர்களில் சிலர் தணிக்கைக்குழுத் தலைவர் பதவியைக் குறிவைத்து அடைகிறார்கள். அதற்குக் காரணம் அதிகமான அளவில் பணம் புழங்கும், பிராபல்யம் கொடுக்கும், கேளிக்கைக் கொண்டாட்டங்கள் கொண்ட சினிமாத்துறையில் ஒரு முக்கியமான பதவியில் இருப்பதாகக் காட்டிக்கொள்வதுதான். அதனைப் பொது விதி என்றும் சொல்ல முடியாது.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவர் பதவி சள்ளைபிடித்தது. மோசமான, ஆபாசமான காட்சிகளையெல்லாம் அனுமதிக்க வேண்டிய நிர்பந்தம் கொடுப்பது. அதனால் கெட்ட பெயர் வாங்க வேண்டாம் என்று சிலர் ஒதுங்கிக் கொள்வதும் உண்டு.

 சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகித் தன் பேச்சால், பதவியைப் பாதியில் விட்டுவிட்டுப் போனவர்களும் உண்டு. பிரபல இயக்குநரும், நடிகருமான விஜய் ஆனந்த் அதற்கோர் எடுத்துக்காட்டு. பல ஆண்டுகளாக சினிமாவில் இருந்தவர். சினிமா தெரிந்தவர் என்று பெயரெடுத்தவர். அவர் சினிமா தணிக்கைக்குழுத் தலைவரான சிறிது காலத்துக்குள், ஆபாச சினிமாப் படத்தைத் தடைசெய்ய வேண்டிய அவசியமில்லை. நாடு முழுவதும் சில தியேட்டர்களைத் தேர்ந்தெடுத்து ஆபாசப் படங்கள் வெளியிட உரிமம் கொடுத்துவிடலாம். அதனால் பொழுதுபோக்குப் படங்களில் ஆபாசமான காட்சிகள் இடம்பெறாமல் போய்விடும் என்றார். அவர் பேச்சு பெரும் பிரச்னையைக் கிளப்பிவிட்டது. நாடு முழுவதிலுமிருந்து பலரும் கண்டனம் தெரிவித்தனர். அதனால், விஜய் ஆனந்த் தன் தலைவர் பதவியை ராஜிநாமா செய்துவிட்டுப் போய்விட்டார்.

 2011-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்திய சினிமா தணிக்கைக்குழுத் தலைவராகப் பிரபல பரதநாட்டியக் கலைஞர் லீலா சாம்சன் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவர் சென்னை, கலாழ்க்ஷத்ரா இயக்குநர். சங்கீத நாடக அகாதெமியின் தலைவர். அதோடுகூட பிரதமரின் கலாசார ஆலோசகர்.

 60 வயதாகும் லீலா சாம்சன் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது சினிமாக்காரர்களுக்கு அதிர்ச்சி அளித்தது. அது தங்களின் உள்வட்டத்துக்கு உரியது என்று கருதிக் கொண்டிருந்தவர்கள் சினிமாவுக்கே சம்பந்தம் இல்லாத ஆளை, அமைச்சர் பிடித்துப்போட்டு விட்டதாகக் கருதுகிறார்கள்.

 சினிமாவோடு சம்பந்தம் இல்லாதவர்கள் எல்லாம் வெளியாள்கள்தான். வெளியாள்கள் சினிமா பார்க்கவும், பாராட்டுக் கூட்டங்கள் நடத்தவும், பரிசு கொடுக்கவும், விருந்து வைக்கவும் உரியவர்கள். அவர்கள் சினிமா என்ற வட்டத்துக்குள் உள்ளே வரக்கூடாது. அது ஒரு மனோநிலை. அது ஜாதி அபிமானம் போன்றது. ஆனால் எல்லாத் தொழிலிலும் நிலைபெற்று இருக்கிறது. கலையாகவும், தொழிலாகவும் இருக்கும் சினிமாவில் கூடுதலாக இருக்கிறது.

 பொதுப் புத்தி கொண்ட எந்தக் குடிமகனும் சினிமா தணிக்கைக்குழுவிலும், தலைவர் பதவியிலும் இருக்கலாம். சிலர் இருந்து இருந்திருக்கிறார்கள்.

 இந்திய சினிமா எதிர்கொள்ளும் பிரச்னை ஆபாசம். வன்முறைதான். அதனைத் துல்லியமாகத் தீர்மானிக்க முடியாது. நீக்குப்போக்குடன்தான் தணிக்கை செய்ய வேண்டும். சட்டம், விதியென்பது ஒன்றுதான் என்றாலும் படத்துக்குப் படம் அதன் கதை, அது சொல்லப்படும் விதம், காட்சிகள், வசனம் சார்ந்து மாறுபடும். அதுவே, சினிமாவை முன்னெடுத்துச் செல்கிறது.

 மும்பையில் சிவப்பு விளக்குப் பகுதியில் சிக்கிக்கொண்ட ஓர் இளம் பெண்ணின் கதை சொல்லும் இந்திப் படத்துக்கு "யு' சான்றிதழ் கொடுத்தார்கள். மாநில அரசு, கேளிக்கை வரியில் இருந்து சலுகை அளித்தது. அதே படம் தமிழில் பிரபலமான சினிமாத் தயாரிப்பு நிறுவனத்தால் ரீமேக் செய்யப்பட்டது. தமிழ்ப் படத்துக்கு "ஏ' சான்றிதழ் கொடுக்கப்பட்டது. தயாரிப்பாளர் பெரிதாகச் சண்டை போட்டார். இந்தியா ஒரே நாடு. ஒரே தணிக்கைக்குழு. ஒரே விதிமுறைதான். அப்படியிருக்கத் தமிழ் சினிமாவுக்கு எப்படி மாற்றிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று கேட்டார்.

 மும்பையில் பெண்கள் சட்டப்படி விபசாரம் செய்ய சிவப்பு விளக்குப் பகுதி இருக்கிறது. சென்னையிலோ, தமிழ்நாட்டிலோ அப்படிப்பட்ட சிவப்பு விளக்குப் பகுதிகள் ஏதுமில்லை. எனவே, விபசாரத்தைப் பற்றி விளக்கமாகச் சொல்லும் காட்சிகள், வசனங்கள் கொண்ட படம் வயது வந்தவர்கள் பார்ப்பதற்குத்தான் தகுதியானது. எனவே, "ஏ' சான்றிதழ்தான் கொடுக்க முடியும்.

 நீங்கள் வேண்டுமானால் மேல்முறையீடு செய்து பாருங்கள். அவர்கள் உங்கள் விருப்பப்படிச் சான்றிதழ் கொடுக்கலாம் என்று சொல்லப்பட்டது.

 தணிக்கைக்குழுவின் முதல் முடிவுதான் முடிவு என்பது இல்லை. அதற்குமேல், மேல்முறையீடு இருக்கிறது. அதுவும் திருப்தி அளிக்காவிட்டால், மும்பைக்கு முறையீடு செய்யலாம். மத்திய தணிக்கைக்குழுவின் உறுப்பினர்கள் பார்த்துச் சான்றிதழ் கொடுப்பார்கள். அதிலும்,திருப்தியில்லையென்றால் உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று நீதிமன்றங்களை நோக்கிச் செல்லலாம்.

 சினிமா என்பது எத்தனைதான் கலையென்றாலும் அது பணம் சம்பந்தப்பட்டது. தயாரிப்பாளர் விரைவில் படத்தை வெளியிட்டு லாபம் எடுக்க ஆவலாக இருக்கிறார். சினிமா இயக்குநர், நடித்த நடிகர், நடிகை, இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் என்று சினிமாவோடு சம்பந்தப்பட்ட ஒவ்வொருவரும் படம் விரைவில் திரையிடப்பட்டு பெருவாரியான மக்கள் பார்த்து ரசிக்க வேண்டும். அதன் வழியாகப் புதிய வாய்ப்புகள் வரவேண்டும் என்றுதான் இருக்கிறார்கள். எனவே, அதிகமான சிக்கலில் மாட்டிக்கொள்ளும் படத்தைத் திட்டமிட்டு யாரும் எடுக்க முன்வருவது இல்லை.

 2006-ம் ஆண்டில் "டாவின்சி கோடு' என்ற ஹாலிவுட் ஆங்கிலப்படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இந்தியாவில் திரையிடத் தணிக்கைக்குழு படத்தைப் பார்த்துவிட்டு அனுமதி கொடுத்தது. ஆனால், சில மாநிலங்களில் இருந்து கிறிஸ்தவ அமைப்புகள் எங்கள் சமய உணர்வுகளை டாவின்சி கோடு புண்படுத்துகிறது. எனவே, படத்தைத் திரையிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு நெருக்கடி கொடுத்தார்கள். அதனால் தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப், நாகலாந்து, கோவாவில் டாவின்சி கோடு திரையிடப்படவில்லை.

 தணிக்கைக்குழு சான்றிதழ் கொடுத்தாலும்கூட, மாநில அரசுகள் படம் திரையிடப்படுவதால் சட்டம், ஒழுங்கு பாதிக்கப்படும். பொது அமைதி குலைந்துவிடும் என்று கருதினால் அந்தப் படத்தைத் திரையிடாமல் தடைசெய்து விடலாம்.

 இந்திய சினிமா தணிக்கைக்குழு சினிமாக்காரர்கள் தங்கள் ஆள் தலைவராகி அவர் கையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். சினிமாத் துறையோடு சம்பந்தம் இல்லாதவர் தலைவராகி விட்டார். அதனைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. சினிமாவுக்குச் சம்பந்தம் இல்லாதவரை எப்படித் தலைவராகப் போடலாம் என்று போராட ஆரம்பித்து இருக்கிறார்கள்.

 சினிமா தயாரிக்க, சினிமாப்படத்தை இயக்க, சினிமாப் படத்துக்குக் கதை, வசனம் எழுத, பாடல் எழுத, இசையமைக்க, நடிக்க முன்அனுபவம் இல்லையென்று யாரையும் தள்ளிவைப்பதில்லை. தணிக்கைக்குழுவின் வேலை நல்ல சினிமாவா, கெட்ட சினிமாவா என்று தரம் பார்ப்பதல்ல. ஒரு படத்துக்கு விருதோ, தண்டனையோ கொடுப்பதும் அல்ல. எவ்வளவு பணச்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கிறது, யார் யார் நடித்திருக்கிறார்கள், யார் இயக்குநர் என்று பார்ப்பதும் அவர்கள் வேலை இல்லை. ஒரு சினிமாப்படம் இந்தியக் குடிமக்கள் பார்க்கத்தக்கதா, ஆபாசம், வன்முறை அதிகமாக இருக்கிறதா, சமய நம்பிக்கைகளுக்கு எதிராக இருக்கிறதா, இன்னொரு நாட்டை நிந்தனை செய்கிறதா, எந்த வயதினர் படத்தைப் பார்க்கலாம் என்று பரிந்துரை செய்வதுடன் முடிந்து விடுகிறது.

 இந்த வேலையைச் செய்ய சினிமாத்துறையில் பல்லாண்டுகள் இருந்து அனுபவம் பெற வேண்டியதில்லை. அது பொது அறிவும், சமூகத்தின் மீது அக்கறையும், நேர்மையும் கொண்ட எந்தவொரு குடிமகனும், குடிமகளும் செய்வார்கள்.

 லீலா சாம்சன் இந்திய சினிமாத் தணிக்கைக்குழுத் தலைவராக நியமிக்கப்பட்டது பற்றி ஒருவர், சிறந்த நடனக்கலைஞராகிய அவர் அடிக்கடி மட்டமான படங்களைப் பார்த்து கொண்டிருக்கவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுவிட்டாரே என்று வருத்தப்பட்டு எழுதி இருந்தார்.

 லீலா சாம்சனுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதா, இப்படி ஒரு நிலைமை அவருக்கு ஏற்பட்டுவிட்டதே என்று வருத்தப்படுவதா என்று தெரியவில்லை

தினமணி

வெள்ளி, 29 ஏப்ரல், 2011

13 தடவைகள் என் மீது புலிகள் தற்கொலை முயற்சி ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஈ.பி.டி.பியினர் புலிகளால் கொலை


தருஸ்மனின் அறிக்கையில் புலிகளின் கொடூரம் காட்டப்படாதது ஏன்?
- அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா
douglas-15
ஐ.நா. செயலாளர் நாயகத்தினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையினை எழுதியிருப்பவர்கள் ஐ.நா வின் எந்தவொரு அமைப்புக்கும் உரித்தானவர்களல்லர்.

இவர்கள் இலங்கையையும் இலங்கையின் படை வீரர்களினதும் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் செயலாளர் நாயகத்தினால் கூலிக்கு அமர்த்தப்பட்ட எழுத்தாளர்கள் என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகமும் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். ஏசியன் ரிபியூன் என்ற இணையத்தளத் துக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் கூறியுள்ளதாவது;ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன், இந்தோனேசி யாவைச் சேர்ந்த மர்சூக்கி தருஸ்மன், தென்னாபிரிக்காவைச் சேர்ந்த யெஸ்மின் சூக்கா, ஐக்கிய அமெரிக்காவைச் சேர்ந்த ஸ்டீபன் ராட்னர் ஆகிய மூவர் கொண்ட நிபுணர் குழுவினை நியமித்ததன் மூலம் ஐ. நா. வின் வளங்களையும் நிதியையும் வீணடித்துள்ளார்.

ஐ. நா. செயலாளர் நாயகம், தொடர்ந்தும் தமது பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக சுய இலாப நோக்கத்துடன் சில நாடுகளினதும் அமைப்புக்களினதும் அபிலாஷைகளை திருப்திப்படுத்தும் விதத்தில் இலங்கை ஜனாதிபதிக்கும் இராணுவ தலைவர்களுக்கும் அவதூறு ஏற்படும் வகையில் இந்த எழுத்தாளர்களை நியமித்துள்ளார்.

எமது மக்களுக்கான உரிமை களைப் பெற்றுக்கொடுப்பத ற்காக நான் 15 வருடங்களாக இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்தி மோதல்களை முன்னெடுத்தவன். பின்னர் இந்நாட்டின் அரசியல் நீரோட்டத்தில் இணைந்து கொண்டேன். ஆனால், தற்போது தருஸ்மன் அறிக்கையின்படி, எனது மக்கள் கொல்லப் பட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஆனால் அவ்வறிக்கையில் குற்றஞ் சாட்டப்பட்டிருப்பதில் எவ்வித உண்மையும் இல்லை. இலங்கைத் தமிழர்கள் சார்பாக பேசுவதற்கு எனக்கு உரிமையும் அதிகாரமும் உண்டு. இந்த தமிழர்களே என்னை அவர்களது பிரதிநிதியாக 1994 ஆம் ஆண்டு முதல் தெரிவு செய்து வருகின்றனர்.

எல். ரீ. ரீ. ஈ. தலைவர் பிரபாகரனின் தவறான அரசியலினால் இந்த நாடு ஆயிரக்கணக்கான அப்பாவி சிவிலியன்களை இழந்துள்ளது. உண்மையில், கடந்த 30 வருடங்களாக வடக்கு, கிழக்கில் கொல்லப்பட்ட 70 ஆயிரம் அப்பாவி மக்களின் மரணங்களுக்கு பிரபாகரனே பொறுப்பானவராவார்.

தோல்வியுற்ற தலைவர் பிரபாகரனும் அவருடன் சேர்ந்த ஏனையோரும் துடைத்தெறியப்பட்ட பின்னரும் மேற்குலகில் எல்.ரீ.ரீ.ஈயினரின் ஒரு பகுதியினர் இன்னமும் செயற்பட்டுக் கொண்டிக்கின்றனர்.

இவர் நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. செயலகத்திற்கு உள்ளும் புறமும் எப்போதும் நோட்டம் விட்டுக் கொண்டிருப்பதாகவும் நியூயோர்க்கில் வசிக்கும் சிலர் ஐ.நா. செயலகத்திற்கு மிகவும் நெருக்கமான அதிகாரிகள் வீடுகளுக்குச் சென்று அவர்களுடன் வெளிப்படையாக பழகுவதன் மூலமும் இலங்கை அரசாங்கத்தினை குற்றஞ் சுமத்தியிருக்கும் அறிக்கையினை வெளியிடச் செய்வதற்கான தம்மாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாகவும் எமக்கு அங்கிருந்து தகவல்கள் கிடைத்த வண்ணமுள்ளன.

துரதிஷ்டவசமாக அவர்கள் நினைத்ததை நடத்தியுள்ளார்கள். இதற்காக ஆயிரக்கணக்கான டொலர்கள் கைமாறியிருப்பதாக நாம் அறிந்தோம்.

எல்.ரீ.ரீ.ஈ யினருடன் இறுதி மோதல் இடம்பெற்ற காலப் பகுதியான 2008 செப்டம்பர் இலிருந்து மே 2009 வரையான காலப் பகுதிக்குள்ளேயே இந்த தருஸ்மன் அறிக்கை எழுதிய குழுவினர் சுய விருப்பின் பேரில் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இவர்கள் காரணமாகத்தான் இக்காலப் பகுதியினுள் வந்துள்ளனர். மோதலின் இறுதித் தறுவாயில், எல்.ரீ.ரீ.ஈ யினரை தமது காலடிக்கு கொண்டு வருவதற்காக படையினர் ஈடுபட்டிருந்த வேளை எல்.ரீ.ரீ.ஈ யினர் மிகவும் துன்பகரமான மற்றும் பயங்கரமான சம்பவங்களுக்கு முகம் கொடுப்பதாக சித்தரித்துக் காட்டியுள்ளனர்.

அவர்கள் தமது கற்பனையில் சேவல் மற்றும் எருமை மாடுகளின் கதைகளை 196 பக்க அறிக்கையாக எழுதியுள்ளனர். நான் ஒரு தமிழ் அமைச்சர் என்ற போதிலும் பிரபாகரன் என்னைக் கொலை செய்வதற்காக 13 தடவைகளுக்கும் மேலாக தற்கொலைப் போராளிகளை என் மீது ஏவியுள்ளார். ஆயிரத்துக்கு மேற்பட்ட ஈ.பி.டி.பி அமைப்பாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்கள் எல். ரீ.ரீ.ஈ யினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இவை குறித்த விடயங்கள் தருஸ்மன் அறிக்கையில் தவறவிடப்பட்டுள்ளன ஏன்?

பிரபாகரனினாலும் அவரது ஆட்களினாலும் நடத்தப்பட்ட கொலைகள் மற்றும் நாசகரமான சம்பவங்களுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காகவும் நிலையான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதற்காகவும் எமது ஈ.பி.டி.பி இயக்கம் 2005 ஆம் ஆண்டு முதல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.

நான் ஒரு தமிழன். இலங்கைத் தமிழன். என்னை தமிழ் மக்களே வாக்களித்து பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்தனர். அப்படியிருக்க, எவ்வித சட்ட ஆதாரமும் இல்லாமல் பொறுப்புள்ள முறையில் குறைகளைக் கொண்டதாக அமைக்கப்பட்டிருக்கும் இந்த தருஸ்மன் அறிக்கையினை நான் நிராகரிக்கிறேன்.

இதன்போது கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையில், ஐக்கிய நாடுகள் சபையோ அல்லது ஏதேனும் நாடோ அப்பாவித் தமிழர்களுக்கு நிகழ்ந்த உயிரிழப்புகளுக்கும் அழிவுகளுக்கும் தமது இரக்கத்தைக் காட்ட நினைத்தால் அவர்கள் இழப்புகளுக்கான நட்ட ஈடுகளை வழங்க முன்வரவேண்டும். பிரபாகரனும் அவரது ஆட்களினது ஏவப்பட்ட பயங்கரவாத யுத்தத்தினால் கடந்த 30 வருடகாலமாக எனது மக்கள் துன்புற்றிருக்கிறார்கள்.

தால்விகளும் ஏமாற்றங்களும் நிறைந்த 60 வருடகால பயங்கரமான கதைதான் இந்த தமிழர் பிரச்சினை. 1987 இல் செய்யப்பட்ட இந்திய- இலங்கை ஒப்பந்தம், ஒரு சோகக்கதை, ஏமாற்றத்தி லேயே முடிவடைந்தது. ஏற்கனவே ஏற்படுத்தப்பட்டிருந்த பண்டா- செல்வா ஒப்பந்தம், டட்லி- செல்வா ஒப்பந்தம் ஆகியவற்றினூடாகவும் பிரச்சினைக்கான நிலையான தீர்வினைப் பெறமுடியாமல் போனது

புதன், 27 ஏப்ரல், 2011

sai trust மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம்

சத்ய சாயி பாபா

ஆங்கிலப் பத்திரிகைகள் ‘சத்ய சாயி பாபா மறைந்தார்’ என்று எழுத, தமிழ்ப் பத்திரிகைகள், ‘முக்தி அடைந்தார், சித்தி பெற்றார்’ என்றன. ஆந்திர மாநில அமைச்சர்கள் கண்ணில் நீருடன் பேசினர். மன்மோகன் சிங்(கே) நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார்.

40,000 கோடி ரூபாய் என்றும் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் மேல் என்றும் அவரது அறக்கட்டளையின் சொத்து மதிப்பு பற்றித் தகவல்கள் வெளிவந்துள்ளன. சொத்தைப் பராமரிக்கப்போவது யார் என்ற கேள்வி ஒருபக்கம். ஆனால் அடுத்த ஆன்மிக வாரிசு யார் என்று இதுவரை கேள்விகளும் இல்லை; எனவே பதில்களும் இல்லை. எங்கோ கர்நாடக கிராமத்தில் அடுத்த சாயி பாபா பிறந்து வருவார் என்பதுடன் இப்போதைக்கு முற்றுப்புள்ளி.

அரசியல்வாதிகளுக்கு சத்ய சாயி பாபாவிடம் வேறு பல ஆதாயங்களும் இருந்திருக்கலாம்.
கடந்த பல பத்தாண்டுகளில் இந்து மதப் பாரம்பரியத்தைப் பின்னணியாகக் கொண்டு ஆன்மிக சாம்ராஜ்ஜியத்தை உலகெங்கும் உருவாக்கிய வெகு சிலரில் சத்ய சாயி பாபாவும் ஒருவர். ஹரே கிருஷ்ணா இயக்கத்தை உருவாக்கிய பக்தி வேதாந்த பிரபுபாதா, ‘செக்ஸ் சாமியார்’ என்று எளிதில் புறந்தள்ளிவிட முடியாத ரஜனீஷ், Transcendental Meditation என்பதைப் பிரபலமாக்கிய மகேஷ் யோகி ஆகியோர் வட்டத்தில் வருபவர் சத்ய சாயி பாபா. முதல் மூவர் வேதாந்தம்/கிருஷ்ண பக்தி, தத்துவம்/தாந்திரிகம், வேதம்/தியானம் ஆகியவற்றை முன்வைக்க, சத்ய சாயி பாபா அற்புதங்கள்/கூட்டு வழிபாடு ஆகியவற்றை முன்வைத்தார். இந்த நால்வருமே உருவாக்கிய அகில உலகத் தொண்டர் குழாம் இவர்களது காலத்துக்குப்பின் குலைந்துள்ளது, குலையப்போவது புரிந்துகொள்ளக்கூடியதே. இவர்கள் யாருமே வலுவான அடுத்த நிலைத் தலைவர்களை உருவாக்கவில்லை. சொத்துகளை மட்டும் எக்கச்சக்கமாகச் சேர்த்தார்கள்.

சத்ய சாயி பாபா அறக்கட்டளைமூலம் பல நல்ல காரியங்கள் (கல்வி நிலையங்கள், சென்னைக்குக் குடிநீர், சூப்பர் ஸ்பெசியாலிடி மருத்துவமனையில் நடக்கும் இலவச சிகிச்சைகள்) நிகழ்ந்தேறியுள்ளன என்றாலும் அடிப்படையில் தனியான ‘சாமியார்’ ஒருவர் கோடிக்கணக்கான சொத்துகளைச் சேகரிக்கும் நிலை நாட்டுக்கு நல்லதல்ல, பொருளாதாரத்துக்கும் நல்லதல்ல. இந்தியாவில் பொதுவாக சாமியார்கள் புனிதப் பசுக்களாகவே கருதப்படுகிறார்கள். அதிலும் அரசியல் லாகவம் தெரிந்தவர்கள் என்றால் சொல்லவே வேண்டாம்.
இந்த நிலை மாறவேண்டுமானால் ஆன்மிக/மத அறக்கட்டளைகள் அனைத்தும் வலுவான கட்டுப்பாட்டுச் சட்டங்களுக்குக்கீழ் கொண்டுவரப்படவேண்டும். அவர்களுக்குக் கிடைக்கும் நன்கொடைகள் பட்டியலிடப்பட்டு, ஒவ்வோர் ஆண்டும் வரி வசூலிக்கப்படவேண்டும். கருப்புப் பணம் புரளாமல் இருக்க வகை செய்யப்படவேண்டும்., அந்நிய நாடுகளில் இந்த ஆசாமிகள் சொத்துகளைச் சேர்ப்பது கண்காணிக்கப்படவேண்டும்.

இவ்வாறு செய்வது, மத நம்பிக்கைகளில் தலையிடுவதாக ஆகாது. பணம் கொட்டும் வழியை ஓர் அரசு கவனமாகக் கண்காணிக்கத் தவறிவிட்டால் அதனால் நாட்டுக்குப் பெரும் கேடுதான் நிகழும்.

உதாரணத்துக்கு, பொதுமக்கள் கொடுத்துள்ள பல கோடி ரூபாய் பணம் இப்போது சத்ய சாயி அறக்கட்டளையை நிர்வகிக்கப்போகும் யாரோ சிலர் கையில். அந்தப் பணம் என்ன ஆகுமோ... மக்களுக்குப் பயன்படப்போகிறது என்பதில் எனக்கு நம்பிக்கை இல்லை. இதற்குமுன்பாவது சத்ய சாயி பாபா என்ற மனிதரால் தமக்கு ஏதோவிதத்தில் நிம்மதி என்று எண்ணிக்கொண்டு மக்கள் இந்தப் பணத்தை இந்த அறக்கட்டளைக்கு வழங்கினர். இப்போது அதுவும் கிடையாது.

எவ்வளவு விரைவில் இதுபோன்ற மத/ஆன்மிக அமைப்புகளின் நிதியைக் கட்டுப்படுத்தும் சட்டம் வருகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு நல்லது. ஆனால் இதனைக் கொண்டுவரக்கூடிய மனவலு இந்திய அரசியல்வாதிகளிடம் இப்போதைக்கு இல்லை என்றே நினைக்கிறேன். அடுத்த பத்தாண்டுகளிலாவது இது உறுதியாக ஏற்பட்டால் நல்லது.

NAKKEERAN.ஜெ. ஒன்றும் தோல்வியே கண்டிராத வேட்பாளர் அல்ல.

ஸ்ரீரங்கத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது

ஸ்ரீரங்கத்தில் ஒரு அதிர்ச்சி காத்திருக்கிறது என்று வாக்குப்பதிவு முடிந்ததும் தி.மு.க தரப்பு சொன்னதை நாம் வெளியிட்டிருந்தோம். ஆரம்பத்தில் அ.தி.மு.க தரப்பு இதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. ஆனால், தொடர்ந்துவந்த தகவல்களும் மற்ற பத்திரிகைகளில் ஸ்ரீரங்கம் நிலவரம்-மதில்மேல்பூனை என்ற அளவில் செய்திகள் வெளியிடப்பட்டதும் அ.தி.மு.க தலைமையை யோசிக்க வைத்தது. நிர்வாகிகளை அனுப்பி நிலவரம் அறியச் சொன்னது கொடநாடு.

சென்னையிலிருந்த நிர்வாகிகள் உடனே ஸ்ரீரங்கம் அ.தி.மு.க தேர்தல் பொறுப்பாளர்களைத் தொடர்புகொண்டு விசாரிக்கச் சொன்னதுடன், அ.தி.மு.க ஆதரவு பத்திரிகையாளர்களை அனுப்பி, எக்ஸிட்போல் ஒன்றும் எடுக்கச் சொல்லியுள்ளனர். நிர்வாகிகளும் பத்திரிகையாளர்களும் களமிறங்கி கருத்துகளைக் கேட்டனர்.

மகளிர் சுய உதவிக்குழு நிர்வாகிகளை முன்னாள் அமைச்சர் கே.கே.பாலசுப்ரமணியம், பரஞ்ஜோதி உள்ளிட்டோர் சந்தித்து, "உங்கள் குழு உறுப்பினர்களை உதயசூரியனுக்கு ஓட்டுப் போடச் சொல்லிட்டீங்களாமே' என்று கேட்க, ""நாங்கள் தனிப்பட்ட முறையில எந்த உத்தரவும் இட வில்லை. எல்லாம் அவரவர்களே ஏற்கனவே சொந்தமாக எடுத்த முடிவுதான். ஜெயலலிதாம்மா வந்தபோது அல்லூர் பகுதியில் நாங்கள் வரவேற்புக் கொடுக்கத் திரண்டிருந்தோம். நீங்க கண்டுக்காம போயிட்டீங்க. சிட்டிங் எம்.எல்.ஏ.வும் இதுவரை எங்களைக் கண்டுக்கிட்டதில்லை. அதே நேரத்தில் அமைச்சர் தான் (கே.என்.நேரு) இங்கே பல சுயஉதவிக்குழுக்கள் உருவாக காரணமா இருந்தார்'' என்று சொன்னதும், "நாங்க இதைத் தலைமைக்கு ரிப் போர்ட்டா கொடுக்கிறோம்' என்று சொல்லிவிட்டுச் சென் றிருக்கிறார்கள் அ.தி.மு.க. நிர்வாகிகள்.

மகளிர் சுயஉதவிக்குழு வுடன் பிராமணர்களில் ஒரு பிரிவினரும் ஜெ.வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருப்பது அ.தி.மு.க தரப்புக்குத் தெரியவந்துள்ளது. இவர்களில் பலர் உதயசூரியனுக்கும் சிலர் பி.ஜே.பி.க்கும் வாக்களித்திருப்பதாக அவர்கள் தரப்பில் பேச்சு நிலவுகிறது. அதுபோல, உடையார் சமூகத்தினர் பலர் ஐ.ஜே.கே வேட்பாளரின் மோதிரம் சின்னத்திற்கு வாக்களித்துள்ளனர். தங்கள் பலத்தைக் காட்ட இது ஒரு வாய்ப்பு என்கிறார்கள் உடையார் சமூகத்தின் நிர்வாகிகள். தி.மு.க வேட்பாளர் ஆனந்தன், முத்தரையர் சமுதாயத்தவர் என்ப தால், இச்சமூகத்தில் வழக்கமாக இரட்டை இலைக்கு வாக்களித்து வந்தோரில் பலர் இம்முறை தங்கள் சமுதாய வேட்பாளருக்கு சாதகமான மனநிலையில் இருந்ததாகவும் அ.தி.மு.க தரப்புக்கு ரிப்போர்ட் வந்துள்ளது.

அ.தி.மு.க நிர்வாகிகளின் கள ஆய்வும், அவர்கள் ஆதரவு பத்திரிகையின் கருத்தெடுப்பும் ரிப்போர்ட்டாக கொடநாட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில், ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலின் போது ஜெ.வுக்காக அ.தி.மு.க.வினர் பார்த்த வேலையில் 10-ல் 1 பங்கு வேலைகூட ஸ்ரீரங்கத்தில் நடக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், தி.மு.க தரப்பின் வேகம் புலிப்பாய்ச்சலில் இருந்திருக்கிறது என்றும் கூறப் பட்டுள்ளதாம்.


இந்த ரிப்போர்ட்டுகள், கொடநாட்டுக்கு ஃபேக்ஸ் செய்யப்பட்டிருப்பதால், அதனை உன்னிப்பாக கவனித்துவரும் ஜெ.வின் முகத் தில் பலவித மாறுபாடுகள் ஏற்படுவதாக அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகள் சொல்கி றார்கள்.


இந்தத் தொகுதியில் தி.மு.க வேட்பாளர் ஆனந்துக்காக வியூகங்களை வகுத்து, அதனைச் செயல்படுத்தியவர் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம். கரை வேட்டி கட்டாமல் ஒவ்வொரு வார்டுக்கும் சென்று அதன் பொறுப்பாளர்களைப் பெயர் சொல்லிக் கூப்பிடும் அளவுக்கு நெருங்கி வேலை செய்தவர் அவர். ஸ்ரீரங்கத்தில் உதயசூரியன் ஜெயிக்கவேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய டார்கெட்டாக இருந்தது என்கிறார் கள் உ.பி.க்கள்.


அவரிடம் தேர்தல் பணிகள் குறித்துப் பேசினோம்.


அ.தி.மு.க.வுக்கு மிகவும் சாதகமான- தொடர்ந்து வெற்றிவாய்ப்புள்ள தொகுதி ஸ்ரீரங்கம். அந்த அடிப்படையில்தானே ஜெ இங்கு போட்டியிட்டார். அவரை தி.மு.க எதிர்கொள்ள முடியும் என்பது எந்த விதத்தில் சரியாக இருக்கும்?


அ.தி.மு.க.வுக்கு ஸ்ரீரங்கம் சாதகமான தொகுதி என்பதே தவறான முடிவு. ஜெ.வுக்கும் இதே தவறான தகவலைச் சொல்லித்தான் இங்கே அவரை போட்டியிடச் செய்துவிட்டார்கள். எம்.பி. தேர்தலில் 20,500 ஓட்டு லீடிங் காட்டியதை பெரிய பலமாக நினைக்கிறார்கள். ஆனால், போன முறை போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் சாருபாலா, கட்சியினருடன் நல்ல அணுகுமுறை யைக் கடைப்பிடிக்க முடியவில்லை. பிரச்சாரத்திற் கும் முழு நேரத்தை ஒதுக்கவில்லை. கட்சியினரின் தேவையையும் நிறைவேற்றவில்லை. இந்த அதிருப்திதான் அ.தி.மு.க குமாரை எம்.பி.யாக் கியது.

ஜெ.வை ஜெயிக்க முடியும் என்று வியூகம் வகுத்தது எந்த நம்பிக்கையில்?

ஜெ. ஒன்றும் தோல்வியே கண்டிராத வேட்பாளர் அல்ல. ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டி ருக்கும் ரங்கநாதரே ஜெ.விடம் அப்பாயிண்ட் மென்ட் வாங்கிக்கொண்டுதான் பார்க்க வேண்டும் என்பதுபோன்ற நிலைமைதான் உள்ளது. அப்படியென்றால், பொதுமக்கள் எப்படி அவரை நெருங்க முடியும்? எங்கள் வேட்பாளர் ஆனந்தன் மிகவும் சாதாரணமானவர். எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவர். பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். அதனால், ஜெ.வை வெல்லமுடியும் என்று உறுதியாக நம்புகிறோம்.


அ.தி.மு.க. தரப்பில் மா.செ.க்களான கே.கே.பாலசுப்ரமணியம், பரஞ்ஜோதி, அண் ணாவி, எம்.பி. குமார் ஆகியோர் பொறுப் பெடுத்துச் செயல்பட்டார்கள். அது அவர் களுக்கு பலம்தானே?


அவர்கள் தினமும் ஒரு போட்டோ எடுத்து, பத்திரிகையில் வெளியிடச் செய்து, நாங் களும் வேலை பார்த்தோம் என்ற கணக்குக்காகத்தான் வேலை பார்த்தார்கள். அது தேர்தல் முடிவு வெளியாகும்போது தெரியும்.


உங்களுக்கு இவ்வளவு நம்பிக்கை ஏற்படுவதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது எது?


மூன்று காரணங்கள் இருக்கிறது. முதல் விஷயம், ஜெ.வின் பேச்சு. தி.மு.க. என்ற கட்சியே இருக்காத அளவுக்கு அதனைத் தோற்கடிப்போம் என்று பேசினார். அப்படிப்பட்ட ஜெயலலிதாவை ஏன் நாம் ஸ்ரீரங்கத்தில் தோற்கடித்துக் காட்டக்கூடாது என்று மனதுக்குள் ஏற்பட்ட சபதம் ஒரு காரணம். திருச்சி போலீஸ் கமிஷனர் மாசானமுத்து, ஜெ வந்தபோது பூச்செண்டு கொ டுத்து வரவேற்றார்.


முதல்வர் கலைஞர் வந்தபோது, பாதுகாப்புக்கே அவர் வரவில்லை. ஜெ வேட்பு மனு தாக்கலின்போது, தி.மு.க. தொண்டர்கள் மீது தடியடி நடந்தது. இதுபற்றி அமைச்சர், கமிஷனரிடம் போனில் கேட்ட போது, "நீங்க வேணும்னா என்னை மாற்றிக் கொள்ளுங்கள்' என்று அலட்சியமாகப் பதில் சொன்னார். ஜெ. ஆட்சிக்கு வந்தால் காவல்துறை எப்படி இருக்கும் என்பதற்கு இது ஒரு உதாரணம். மூன்றாவது காரணம், ஸ்ரீரங்கத்திற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ய வந்தபோது, தே.மு.தி.க.வினர் செருப்பை வீசினர். அது பற்றி கேள்வி கேட்ட எங்க கட்சியினரைக் கைது செய்தனர். ஆனால், நாங்கள் கொடுத்த புகாரின் மீது நடவடிக்கை இல்லை. இந்த அராஜகம் தொடராமல் இருக்கவேண்டு மென்றால் ஜெ.வை வீழ்த்தவேண்டும் என்ற முடிவுடன்தான் இந்தத் தொகுதியில் தீவிர கவனம் செலுத்தினேன்.

உங்களுடைய வேகம், ஸ்ரீரங்கம் தி.மு.க.வினரிடமும் ஏற்பட என்ன செய்தீர்கள்?

ஸ்ரீரங்கத்தில் நாம் பார்க்கப்போகிற வேலை, வரலாற்றுச் சிறப்புமிக்கது. நாம் வகுக்கப்போகும் வியூகமும், பார்க்கபோகிற தேர்தல் பணிகளும் இன்னும் 50 ஆண்டு காலத்திற்கு தமிழக அரசியல் வரலாற்றில் இடம் பிடிக்கவேண்டும். ராணுவச் சிப்பாய்கள்போல வேலை பார்க்க வேண்டும். எந்த வழக்கும் அடக்குமுறையும் வந்தாலும் நான் துணையிருப்பேன்.
பார்த்துக்கொள்ளலாம் என்று சொன்னேன். நான் சொன்னதைக் கேட்டு 100% வேலை பார்த்தார்கள். அந்தந்த சமுதாயத்தைச் சேர்ந்த முக்கிய பொறுப்பாளர்களுக்கும் மதிப்பளித்து செயல்பட்டோம்.

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என எதிர்பார்க்கிறீர்கள்?

அ.தி.மு.க.வினரைப்போல முதலில் 50 ஆயிரம் ஓட்டு லீடிங் என்று சொல்லி, அப்புறம் படிப் படியாக குறைந்து, ஆயிரம் ஓட்டி லாவது ஜெயிப்போம் என்று சுருதியைக் குறைக்கமாட்டோம். நான் உறுதியாகச் சொல்கிறேன். வெற்றி எங்களுக்குத் தான்; தோல்வி ஜெ.வுக்குத்தான்.

தி.மு.க. வேட்பாளர் ஆனந்த் நம்மிடம், ""எனக்கு முழுத்தெம்பே, அமைச்சரின் அறிவுரையும் அவர் சகோதரரின் வியூகமும் தான். வெற்றி நிச்சயம் என்ற சூழல் உருவானதற்கு இவர்கள் இருவரும்தான் காரணம். ஸ்ரீரங்கம் தொகுதியின் முடிவு தமிழக அரசியலில் புதிய வரலாற்றை உருவாக்கும்'' என்றார்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!
THANKS TO NAKKEERAN.IN

பரம்பரை யுத்தத்தை' முடித்து வைத்த ஜெ.வுக்கு நன்றி- கி.வீரமணி

சென்னை: நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதி ஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!!! என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழ்நாட்டின் எல்லா திசைகளுக்கும் சென்று தமிழ் மக்களிடையே உள்ள உணர்வுகளை நேரில் படித்தறியும் வாய்ப்பு கடந்த 19 நாள்கள் சூறாவளி தேர்தல் பிரச்சாரப் பயணத்தின்மூலம் நமக்குக் கிடைத்தது.

பெரும்பாலான மக்கள் குறிப்பாக ஏழை, எளிய, கிராம, நகர மக்கள், சிறுபான்மையினர் உள்பட கூடிய கூட்டத்தில் கண்ட அலை மீண்டும் கருணாநிதி ஆட்சியே என்ற சாதனைச் சரித்திரத்தின் தொடர்ச்சியை ஆதரித்தே பரவலாக இருக்கிறது என்பது அனைவருக்குமே புரிந்தது.

சென்ற சட்டமன்றத் தேர்தலில் கலைஞரின் தி.மு.க. கதாநாயகனான தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட வாக்குறுதிகளால் இதையெல்லாம் கொடுக்க முடியுமா அதெல்லாம் நடவாது என்று பிரச்சாரம் செய்து தோல்வியுற்ற அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா இத்தேர்தலில், அந்தச் சாதனைகளைக் கண்டு மிரண்டு போய், நாமும் அவ்வழியில் சென்றாவது

நடைபெற முடியாத வைகளைக்கூட இலவசங்களாகத் தருவோம் என்றார்; கலைஞரின் இப்போதைய கதாநாயகியான தேர்தல் அறிக்கையை காப்பியடித்தாவது வெற்றி பெற்றால் போதும் என நினைத்து, ஆடு களையும், மாடுகளையும், குடிநீரையும், அரிசியையும் இலவசமாகத் தருவோம் என்று கூறியாவது தாங்கள் மீண்டும் குறுக்கு வழியில் பொய்யுரை பரப்பியதன் மூலம் வில்லன் ஆட்சிக்கு வர முயற்சித்ததே அவரது முதல் (தார்மீக) தோல்வியாகும்!.

இரண்டாவது, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டிகளை அத்தனைப் பேருக்கும் கொடுக்க முடியுமா இவரால் என்று முன்பு கேட்ட அதே அம்மையார், இப்போது கருணாநிதி ஒரு கோடியே 62 லட்சம் இலவச தொலைக்காட்சிகளைக் கொடுத்ததாகக் கூறுகிறார்; அவற்றை இவர் மக்கள் வரிப் பணத்திலிருந்துதானே கொடுத்தார்? என்று கேட்டதே அவரது தோல்வி பயத்தின் வெளிப் பாடேயாகும்!.

10 ஆண்டுகள் இரு முறை முதல்வராக இருந்த அவர் இப்படி பேசியது அசல் கேலிக்குரிய ஒன்றல்லவா?.

எவர் ஆட்சிக்கு வந்தாலும், மக்களது வரிப் பணத்திலிருந்துதானே எந்த மக்கள் நலத் திட்டங் களையும் செய்ய முடியும்? எவரும் அவரது சொந்தப் பணத்திலிருந்து செய்வதில்லை; செய்யவும் முடியாது என்பது அரசியல் அரிச்சுவடி அல்லவா?

முதல்வர் கருணாநிதி தனது கதை, வசனம்மூலம் வரும் ஊதியத்தைக்கூட மக்களுக்கும், பொதுநலத் திற்கும்தானே தருகிறார்?.

முதல்வராக இருந்தபோது ஜெயலலிதா அம்மை யாரிடமே தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் மூலமாக தனது திரைப்பட வருமானத்தை சுனாமி உதவியாக அளித்தாரே, மறந்துவிட்டதா?.

அன்று முதல் அவர் தொடர்ந்து தனது வருவாயை அறக்கட்டளை மூலம் அறப்பணிகளுக்குத் தானே செலவழிக்கிறார்!.

தனது கோபாலபுரம் வீட்டினைக்கூட மருத்துவ மனைக்காக கொடையாகக் கொடுத்தவர் எப்படி ஒரு அரசுக்குரிய திட்டங்களை சொந்த பணம் மூலம் நடத்த முடியும்?.

அதே நேரத்தில், ஜெயலலிதா தனது கொடநாடு எஸ்டேட்டில் அங்கிருக்கும் ஏழை எளிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் நடந்துபோக ஓர் அவசரத்திற்குக்கூட பயன்படுத்த வழியைக்கூட விட மறுத்து உச்சநீதிமன்ற ஆணைக்குப் பிறகு அல்லவா அப்பிரச்சினைக்கு வழி பிறந்தது! (இன்னமும் கேட் திறக்கப்படாத நிலைதான்). மக்கள் வாக்காளர்கள் புரிந்துள்ளார்கள்.

எனவே, வேதனைகள் தொடரக் கூடாது; சாதனைகள் தொடரவேண்டும் என்றே நினைக்கிறார்கள்!.

முன்பு அம்மையார் ஆட்சி பற்றி பேய் ஆட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்ற பாரதியார் பாட்டைப் பாடிய இடதுசாரி நண்பர்கள், அவற்றை ஒரு 10, 12 இடங்களுக்காக அதை வசதியாக மறந்துவிட்டு, இன்று அ.தி.மு.கவின் பக்கம் போய் அதற்கு ஆலவட்டம் சுற்றும் அவலம் உள்ளது!.

சகோதரர் மானமிகு வைகோவையும், அவரது கட்சியையும் அவமானப்படுத்திய ஆணவம் + அகம்பாவம் மீண்டும் அரியணை ஏறக்கூடாது என்பதில் சகோதரர்களின் கோபம் நியாயமான ஒன்றல்லவா?.

பொடா புண் ஆரும் முன்பே அம்மையாரை ஆதரித்து நின்றவரை இப்படி அசிங்கப்படுத்தியது மன்னிக்க முடியாத குற்றம் அல்லவா? இவரை மிஞ்சியதாகக் காட்டிக் கொள்ள ஈழத் தமிழர் விசுவாசிகள் சிலர், எரிந்த வீட்டில் பிடுங்கியது லாபம் என்று ஈழத் தமிழர் ஆதரவுப் போர்வையில் இரட்டை இலைக்கு ஆதரவு தேடி திடீர் அவதாரம் எடுத்துள்ளது வெட்கக்கேடு அல்லவா?.

இதனை நன்கு புரிந்துள்ளார்கள் தமிழர்கள்!.

நாளை அமையப் போகும் ஆட்சி மீண்டும் கருணாநிதி ஆட்சியே. ஆறாவது முறை தமிழ் இன இராவணனின் ஆட்சிதான் அது! அதைச் சொன்னதற்காகவும், பரம்பரை யுத்தத்தை முடித்து வைத்ததற்காகவும் அம்மையாருக்கு நன்றி! நன்றி!! நன்றி!! என்று கூறியுள்ளார் வீரமணி.
English summary
Dravida Kazhagam leader K.Veeramani has thanked Jayalalitha for paving way for DMK's win in Assembly polls. She has listed out the wrongdoings of Jaya and her past rules.

நெருப்பாறுகளையும் தாண்டி வாகை சூடும் திமுக-கி.வீரமணி நம்பிக்கை

உணர்ச்சி கொப்பளிக்கும் அநீதிகள் கண்டு, உணர்ச்சிவயப்படாமல், அறிவுபூர்வ, ஆக்க பூர்வ, சட்டரீதியான பரிகாரங்களை நோக்கிச் செல்லும் நல்ல முடிவுகளை திமுக தலைமையும், அதன் குழுவும் எடுத்து சோதனைகளை உரங்களாக்கி தனது வெற்றிப் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.


இதுதொடர்பாக கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை:

சாதனைகளைச் சரித்திரமாக்கிய தி.மு.க., தேர்தல் தொடங்கு முன்பே அரசியல் ரீதியாகச் சந்தித்த சோதனைகளும், வேதனைகளும் தொடரவே செய்கின்றன!

சோதனை, நெருப்பாறு, அடைமழை போன்ற அவதூறுகள், ஆதாரமில்லாத அரசியல் அபாண்டங்கள் அதன் பாதையில் அது பார்த்தவை; பழகியவைதான்!

எதையும் தாங்கும் இதயம் படைத்த தலைமை அதன் தலைமை அண்ணா காலம் முதற்கொண்டு.

மார்பில் பட்ட குத்துக் காயங்களைவிட, முதுகில் பின்னால் இருந்து குத்தியவர்களையும், புண்களையும், ரணங்களையும் கூட தாங்கி, மக்களின் பேராதரவு, மகத்தான நெஞ்சுரம், நீரோட்டத்துடன் எதிர்நீச்சல் போட்டே பழகிய தந்தை பெரியாரிடம் கற்ற வித்தை இவைகளால், நெருப்பாறுகளையும் தாண்டி வாகை சூடிடும் வன்மையுள்ள இயக்கம் தி.மு.க. அதன் தலைவர் மானமிகு சுயமரியாதைக்காரர் கலைஞர்.

அதற்கு மேலும் ஒரு சோதனைதான். 2ஜி அலைக்கற்றை என்ற நடக்காத கற்பனை இழப்புக்கள், ஒரு லட்சத்து 76 ஆயிரம், 2 லட்சம் கோடி ரூபாய் ஊழல் என்று கூறிய கோணிப் புளுகன் கோயபெல்ஸ் அவதாரங்கள், குற்றப் பத்திரிகை (சி.பி.ஐ.யினால் தாக்கல்) செய்ததிலே அனுமான, உத்தேச இழப்பு 20 ஆயிரம் கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், ஏற்கெனவே கூறப்பட்ட ஒரு கோடியே 56 ஆயிரம் கோடி ரூபாய் ஏன் காணாமற் போனது? மூச்சுவிட மாட்டார்கள் புளுகுணி சித்தர்கள்! இந்தத் தொகை குற்றச்சாற்றில்கூட அனுமான இழப்புதான்.

இதில் வலிந்து சேர்க்கப்பட்டுள்ள கலைஞர் டி.வி., அதன் பங்குதாரர்கள் என்றெல்லாம் பார்ப்பன ஊடகங்களும், அரசியல் எதிரிகளும் போட்ட கூச்சல், அதன் காரணமாக கலைஞரின் மகள் என்ற நிலையில் கனிமொழி, துணைவியார் என்பதால் தயாளு அம்மாள் மீது வழக்குப் பாயவேண்டும் என்று இடைவிடாத அரசியல் பிரச்சாரம்.

இதற்கிடையில் கனிமொழி அவர்களுக்கு சம்மன் என்றவுடன், நேற்று ஒரு ஆங்கில நாளேடு, ‘‘அவர்மீது போடப்பட்டுள்ள வழக்கு பலவீனமான வழக்கு’’ என்று தலைப்பிடுகிறது நியாய உணர்வினாலோ, சட்டப் பார்வையாலோ அல்ல.

மாறாக, ஏன் மேலும் பலமாக வழக்குப் போடவில்லை என்ற ஆதங்கத்தினை, அதன் ‘‘அக்கிரகாரக் கவலையை’’ அள்ளித் தெளித்துள்ளது!

வழக்குப் பலவீனமானதா? பலமானதா? அதனுள் நாம் போக விரும்பவில்லை.

ஒன்று நிச்சயம், இதனை தி.மு.க. எதிர்கொள்ளும் சக்தி, வென்று காட்டும் ஆற்றல் சட்ட ரீதியாகவும், நியாயத்தின் அடிப்படையிலும் உண்டு.

ஊடகங்களே, பிராசிக்கியூட்டர்களாக ஆகிடும் விசித்திர நிலையும், அதற்குத் தலைவணங்கும் தம்பிரான்களும் வேறு எங்கும் காணப்பட முடியாத விசித்திரங்கள் இங்கேதான்!

உடனே தி.மு.க. உயர்நிலைக் குழு கூடுவது, அது ஒரு ஜனநாயக அமைப்பு என்பதைக் காட்டுகிறது!

உணர்ச்சி கொப்பளிக்கும் அநீதிகள் கண்டு, உணர்ச்சிவயப்படாமல், அறிவுபூர்வ, ஆக்க பூர்வ, சட்டரீதியான பரிகாரங்களை நோக்கிச் செல்லும் நல்ல முடிவுகளை அதன் தலைமையும், குழுவும் எடுத்து சோதனைகளை உரங்களாக்கி தனது வெற்றிப் பயிர்களின் விளைச்சலை அறுவடை செய்யும் என்ற நம்பிக்கை, தாய்க்கழகமான திராவிடர் கழகத்திற்கு உண்டு.

‘‘தொழுதகை யுள்ளும் படையொடுங்கும் ஒன்னார்
அழுதகண் ணீரும் அனைத்து’’ (குறள் 828)

எனும் குறளை அறியாதவரல்ல குறளோவியக் கலைஞர். கொக்கொக்க கூம்பும் பருவத்தில் செயதக்க செய்வார் பெறத்தக்க வெற்றி பெற்று சோதனைகளை வெல்வார் என்பது உறுதி என்று அவர் கூறியுள்ளார்.
English summary
DK leader K.Veeramnai has said that DMK will defeat the challenges it is facing the last few months with legally. He also said, DMK has the strength and legal arms to overcome the spectrum issue.

அதிர்ஷ்டத்தை அள்ளித்தரும் சாய் பாபா கார்-நெகிழ்ச்சியுடன் கூறும் உரிமையாளர்

சத்ய பாபாவின் பழைய கார் அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி கொடுப்பதாக, அந்த காரின் தற்போதைய உரிமையாளர் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.


மும்பை, பந்த்ரா பகுதியை சேர்ந்த டொயோட்டோ டெக் கார் சர்வீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இர்பான் மொகுல். இவரது வீட்டு கேரேஜில், நிறைய கார்கள் நிற்கின்றன. ஆனால், அங்கு நிற்கும் பழைய மாடல் ரோல்ஸ் ராய்ஸ் ஒன்றை அவர் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.

வேறு எந்த வின்டேஜ் காருக்கும் இல்லாத பெருமை இந்த காருக்கு உண்டு. ஆம். இந்த காரின் முதல் உரிமையாளர் சத்ய சாய்பாபா ஆவார். தற்போது இந்த காரை வைத்திருக்கும் மூன்றாவது உரிமையாளர் இர்பான் மொகுல். சாய்பாபா வைத்திருந்த இந்த கார் அதிர்ஷ்டத்தை அள்ளி அள்ளி கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து இர்பான் மொகுல் கூறியதாவது:

"கடந்த 1972ம் ஆண்டு கோலாலம்பூரிலிருந்து இந்த காரை சத்யசாய் பாபா வாங்கினார். இந்த கார் அனந்தபூர் பிரசாந்தி நிலையத்திலுள்ள சத்யசாய் உயர்கல்வி நிலையத்தின் பெயரில் பதிவு செய்யப்பட்டது. பாபா வெளியில் செல்லும்போது, இந்த காரில்தான் செல்வார். லட்சக்கணக்கான மக்களுக்கு அருளாசியை இந்த காரில் இருந்து சாய்பாபா வழங்கியுள்ளார்.

பின்னர் 1984ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த விவேக் பர்மன் என்ற தொழிலதிபரிடம் இந்த கார் விற்பனை செய்யப்பட்டது. பாபாவிடம் இருந்த வரை ஏடிஏ9 பதிவு எண்ணை கொண்டிருந்தது. டெல்லியில் இந்த காருக்கு டிஎன்ஏ 8888 என்ற பதிவு எண் வழங்கப்பட்டது.

கடந்த 1996ம் ஆண்டு இந்த காரை எனது தந்தை அமன் மொகுல் வாங்கினார். ஆனால், இந்த காரின் விலையை பற்றி எனது தகப்பனார் யாரிடமும் கூறவில்லை. அவரும்கூட பாபாவின் பக்தர்தான். இந்த கார் வந்த நாள்முதல்எங்களது வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி கண்டு வருகிறோம்.
]
இந்த காரை நான் அதிர்ஷ்டத்தின் அடையாளமாகவே கருதுகிறேன். எவ்வளவு விலை கொடுத்தாலும் காரை விற்க மாட்டேன். இதை விலைமதிக்கமுடியாத பொக்கிஷமாகவே கருதுகிறேன். இதை வைத்திருப்பதில் பெருமிதம் கொள்கிறேன்," என்றார்.

இர்பான் மொகுலின் சர்வீஸ் சென்டருக்கு கிரிக்கெட் நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கரின் கார்கள் வருகின்றன. இந்நிலையில், சாய்பாபாவின் தீவிர பக்தரான டெண்டுல்கர் உங்களிடம் காரை விலைக்கு கேட்டால் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு,"இந்த காரை சச்சின் என்னிடம் கேட்கமாட்டார். ஏனெனில், இந்த கார் எங்கள் வளர்ச்சிக்கும், வியாபாரத்திற்கும் எவ்வளவு முக்கியம் என்பது அவருக்கு(சச்சின்)தெரியும்,"என்று இர்பான் கூறினார்.

கனிமொழி: 'சட்டரீதியில் சந்திப்போம்'-திமுக உயர் நிலைக் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: 2ஜி விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், 2ஜி விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட முடியும் என திமுக நம்புகிறது. ஊடகங்களின் பிரசார மாயைக்கு திமுக இரையாகாது என்று திமுக உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 2வது குற்றப்பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் திமுக அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளது.

ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவுப்படி வரும் மே 6ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமனறத்தில் ஆஜராகும்போது, கைது செய்யப்படக் கூடும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந் நிலையில் திமுக இன்று தனது உயர் நிலை செயல் திட்டக் குழுக் கூட்டத்தைக் கூட்டியது. இக் கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்குத் தொடங்கியது.

இக் கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி, நிதியமைச்சரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன், துணை முதல்வரும் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றனர்.

அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில்,

பூதத்தை பூனைக்குட்டி விழுங்கி விட்டது போல

பூதத்தை பூனைக்குட்டி விழுங்கிவிட்டது என்று கூறுவதைப்போல, அனுமானமாக பலபல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக தலைமைக் கணக்காயர் தெரிவித்தது முதல் இந்தப் பிரச்சனையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயன்று வருவதை நாடறியும்.

2ஜி பிரச்சனையில் சிபிஐ விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்பாக தொலைத்தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை கைது செய்து திகார் சிறையில் வைத்துள்ளனர்.

கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு வட்டியுடன் திருப்பிச் செலுத்தியுள்ள விவரம் ஆவணங்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான கனிமொழி, இயக்குநர் சரத் ஆகியோரை சிபிஐ 2வது குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி வியப்பில் ஆழ்த்துகிறது.

2ஜி வழக்கை திமுக தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, பல ஏடுகளும் ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதோடு, ஐக்கிய முற்போக்கு கூட்டணியினரிடையே அவ நம்பிக்கையை உருவாக்கவும், கூட்டணியை உடைக்கவும், ஊழலையே கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சித் தலைவர்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகின்றனர். அப்படிப்பட்ட பிரச்சார மாயைக்கு திமுக இரையாகாது.

முறை அறிந்து செயல்பட்டு உண்மையை நிலைநாட்டும் சிறப்படைய திமுக. இந்த வழக்கிலும் உண்மையை நிலைநாட்டிட சட்டப்படியான நடவடிக்கையை திமுக மேற்கொள்ளும் என்று கூறப்பட்டுள்ளது.

நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராவாரா?-ஜெ. ஆஜரானாரா?:

அப்போது வரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா?. 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றார்.

கூட்டத்துக்குப் பின்னர் திமுக வெளியிட்ட அறிக்கையில், குற்றம் நிரூபிக்கப்படாதவரை யாரும் குற்றவாளி இல்லை. தவறான பிரசாரத்தின்மூலம் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியில் விரிசலை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக இக் கூட்டம் குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவன் கூறுகையில், 2 ஜி ஸ்பெக்ட்ரம் பிரச்சினையில் நீதிமன்றம் அறிவிப்பின் கீழ் சி.பி.ஐ. கனிமொழி பெயரை குற்றப்பத்திரிகையில் சேர்த்துள்ளது. சி.பி.ஐ. ஒரு தனி அமைப்பு. அவர்களின் நடவடிக்கை குறித்து கருத்து சொல்ல விரும்பவில்லை.

குற்றப்பத்திரிகையில் பெயர் சேர்க்கப்பட்டதால் தி.மு.க- காங்கிரஸ் கூட்டணியில் பாதிப்பு இல்லை. எங்கள் கட்சியின் நிலை குறித்தும், மேற்கொண்டு என்ன நடவடிக்கை எடுப்பது என்பது குறித்தும் இன்று முடிவு செய்வோம் என்றார்.

அத்வானியை காட்டி சமாதானப்படுத்தும் காங்கிரஸ்:

இந் நிலையில் பெயர் குறிப்பிட விரும்பாத காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தப் பிரச்சனையை அரசியல்ரீதியாகவும், சட்டரீதியாகவும் சந்திக்க வேண்டும் என்பதை திமுக புரிந்து கொள்ளும் என்று நம்புகிறோம். குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதாலேயே குற்றவாளி என்று அர்த்தமில்லை.

அத்வானி மீது கூட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆனாலும் அவர் அரசியலில் நீடித்துக் கொண்டுதானே இருக்கிறார் என்றார்.

3வது குற்றப்பத்திரிகை-அவகாசம் கோரும் சிபிஐ:

ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் இதுவரை 2 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளன. முதல் குற்றப்பத்திரிகை கடந்த 2ம் தேதியும், 2ம் குற்றப்பத்திரிகை நேற்று முன்தினமும் தாக்கல் செய்யப்பட்டன. 3வதாக ஒரு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவுள்ளது.

இந்தப் பணிகளில் சிபிஐ தீவிரமாக உள்ளது. ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய மேலும் பலரிடம் விசாரணை நடத்துவதுடன் மேலும் பல ஆதாரங்களையும் திரட்ட வேண்டியுள்ளதால் இதை தாக்கல் செய்ய அதிக காலம் தேவைப்படுகிறது.

ஆனால் ஸ்பெக்ட்ரம் வழக்கு விசாரணையை மே 31ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதற்குள் 3வது குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்ய முடியாது என்பதால் கூடுதல் கால அவகாசம் கேட்க சிபிஐ முடிவு செய்துள்ளது.

இதற்காக சுப்ரீம் கோர்ட்டில் புதிய மனு ஒன்றை தாக்கல் செய்ய உள்ளதாகத் தெரிகிறது. அதில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு பணம் மொரீசியஸ், சைப்ரஸ், செசல்ஸ் போன்ற வெளி நாடுகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாகவும், அது குறித்து விசாரணை நடத்த அதிக காலம் தேவை என்றும் சிபிஐ கூறும் என்று தெரிகிறது.
English summary
DMK has convened its high level committee meeting today. The meeting will discuss the issue of inclusion of Kanimozhi's name in spectrum case chargesheet.

சாய் பக்தர்களை கடுப்பேற்றிய நித்யானந்தா!

சத்ய சாய்பாபாவுக்கு அஞ்சலி செலுத்த நித்யானந்தா தனது பாதுகாவர்களுடன் பந்தாவாக வந்ததால் அந்தப் பகுதியில் தேவையற்ற சலசலப்பு ஏற்பட்டது. தன்னை விவிஐபிக்கள் இருந்த வரிசையில் அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கும் சாய்பாபா உறவினர்கள் மறுத்துவிட்டனர்.


பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த சாய்பாபா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த நேற்று முக்கிய அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், அரசு உயர் அதிகாரிகள், பீடாதிபதிகள் உள்பட பலர் வந்தனர். அவர்களுக்கு தனி வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. இவ்வரிசையில் செல்வோர் சாய்பாபா உடல் அருகே சென்று அஞ்சலி செலுத்தலாம்.

சாதாரண பொதுமக்கள் பல மீட்டர் தூரம் தள்ளி நின்றுதான் உடலை பார்க்க முடியும். இந்நிலையில் ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கி, கைதாகி இப்போது ஜாமீனில் வந்துள்ள நித்யானந்தாவும் சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்திருந்தார். அப்போது அவருடன் 4 பாதுகாவலர்களும் வந்தனர்.

பாதுகாவலர்கள் புடைசூழ அவர் அஞ்சலி செலுத்தச் சென்றார். விவிஐபிக்கள் இருந்த வரிசையில் தன்னை அனுமதிக்குமாறு அவர் கோரியதற்கு பாபாவின் ஊழியர்களும் உறவினர்களும் அனுமதி மறுத்துவிட்டனர். அவருடன் சென்ற பாதுகாவலர்களை தடுத்து நிறுத்திவிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

சிறிது நேரம் சாய்பாபா உடல் அருகே அஞ்சலி செலுத்திய நித்யானந்தா, வெளிய்றும் போதாவது விவிஐபி கேட் பக்கம் போக முயன்றார். ஆனால் அங்கும் தடுக்கப்பட்டு, பொதுமக்கள் வெளியேறும் வழியாகவே செல்லுமாறு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் வேகமாக ஆசிரமத்தை விட்டு வெளியேறினார்.

இதுகுறித்து சாய்பாபா பக்தர் ஒருவர் கூறும் போது, “சாய்பாபா உடலுக்கு அஞ்சலி செலுத்த மிகப் பெரிய தலைவர்கள் வந்தனர். அவர்கள் யாரும் தங்களுடன் பாதுகாவலர்களை பாபா உடல் வைக்கப்பட்டிருக்கும் இடத்திற்கு அழைத்து செல்லவில்லை.

ஆனால் நித்யானந்தா மட்டும் பாதுகாவலர்களுடன் உள்ளே சென்றது சரியல்ல. தன்னை அவர் விவிஐபி வரிசையில்தான் அனுமதிக்க வேண்டும் என்றார். அதற்கும் நாங்கள் அனுமதிக்கவில்லை. அவர் வந்ததை எந்த சாய் பக்தரும் விரும்பவில்லை. பாபாவின் உறவினர்கள் மிகப் பெரிய சங்கடத்துக்கு உள்ளாயினர் அவரது வருகையால்", என்றார்.

புட்டபர்த்தியில் நித்யானந்தா - படங்கள்
English summary
Nithyananda's dazed devotees and Sathya Sai Baba's family members alike yesterday when he was arrived Puttaparthy to pay his home to the late spritual leader. Throughout the time he was there, he appeared to be embarrassed as devotees and Sathya Sai Baba's family members made it clear that he was not welcome. Sai Baba's relatives ignored Swami Nithyananda's presence at the Sai Kulwanth Hall yesterday; made efforts to ensure that he isn't allowed into the auditorium through VVIP entrance.

சாய்பாபா உடல் அரசு மரியாதையுடன் அடக்கம்: இறுதிச்சடங்கு இணையதளத்தில் நேரடியாக ஒளிபரப்பு

புட்டபர்த்தி: கடந்த ஞாயிற்றுக்கிழமை ( 24ம் தேதி) பகவான் சாய்பாபா ஸித்தியடைந்தார். அவரது உடல் இன்று காலையில், அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. சாய்பாபாவின் இறுதிச் சடங்குகள் புட்டபர்த்தி குல்வந்த மண்டபத்தில் நடைபெற்றது.
முன்னதாக அவரது உடலுக்கு, தேசியக் கொடி போர்த்தப்பட்டு, 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க ஆந்திர அரசு மரியாதை அளிக்கப்பட்டது. புரோகிதர்கள் மந்திரங்கள் முழங்க இறுதிச் சடங்கு நடைபெற்றது. ஐந்து நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட புனித நீர் சாய்பாபாவின் உடல் மீது தெளிக்கப்பட்டது. கோ தானம் ( பசு தானம்) அளிக்கப்பட்டது. தொடர்ந்து பல்வேறு தானங்கள் அளிக்கப்பட்டது. முன்னதாக சர்வ சமய பிரார்த்தனையும் நடந்தது.

இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி, பா.ஜ., மூத்த தலைவர்கள் அத்வானி, வெங்கய்ய நாயுடு, கர்நாடக முதல்வர் எடியூரப்பா, ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கலந்து கொண்டு சாய்பாபா உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினர். லட்சக்கணக்கான பக்தர்கள் புட்டபர்‌த்தியில் குவிந்துள்ளனர்.


பொதுமக்கள் குல்வந்த் மண்டபத்தில் பகல் 11.45 மணியில் இருந்து அஞ்சலி செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


உலகெங்கும் உள்ள சாய்பாபாவின் பக்தர்கள் வசதிக்காக இந்த இறுதிச் சடங்கு நிகழ்ச்சிகள் தினமலர் இணையதளத்தில் நேரிடையாக ஒளிபரப்பியது. கீழே உள்ள இணைய தள முகவரி்யை கிளிக் செய்து நேரடி ஒளிபரப்பபைக் காணலாம்.

http://www.dinamalar.com/sathyasaibaba_live.asp

பாபாவின் சமாதி: நாடி கோபாலகிருஷ்ணன் என்ற ஜோதிடர் கணித்துக் கூறியிருக்கிறார்.



 அவர் சமாதி அடைந்து விடுவார் என்பதை, ஏப்ரல் 5, 2011 அன்றே கோபாலகிருஷ்ணன் என்ற ஜோதிடர் கணித்துக் கூறியிருக்கிறார். (பதிவிற்கு சம்பந்தமில்லாத விஷயம். இந்தத் தேர்தலில் தி.மு.க மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று மார்ச் 30 அன்று கணித்துக் கூறியிருக்கிறார். முன்னது அப்படியே பலித்தது போல் பின்னதும் பலிக்குமா என்பது இரு வாரங்களில் தெரிந்து விடும்)
மேலும் பல நாடி ஜோதிட ஏடுகளில் பாபாவின் முற்பிறவி மறுபிறவி பற்றிக் குறிப்பிட்டுள்ளதாக இந்தத் தளம் தெரிவிக்கிறது.
இந்தத் தளத்திலும் பாபாவின் நாடிக் குறிப்பு பற்றிப் பார்க்கலாம்.
இனிக் கீழே உள்ளது பாபாவின் தமிழ் நாடி ஜோதிடக் குறிப்பு.

பாபா நாடி - பக்கம் 1

பாபா நாடி - பக்கம் - 2

பாபா நாடி - பக்கம் - 3

பாபா நாடி - பக்கம் - 4

பாபா நாடி - பக்கம் - 5

பாபா நாடி - பக்கம் - 6

பாபா நாடி - பக்கம் - 7

பாபா நாடி - பக்கம் - 8

பாபா நாடி - பக்கம் - 9

பாபாவின் ரேகை அமைப்பு
இந்தப் பாடல்கள் தமிழிலேயே இருக்கின்றன. ஆதலால் நான் தனியாக விளக்கம் அளிக்க விரும்பவில்லை. படித்து விட்டு இந்தப் பதிவிற்காக என்னை வசைபாடுபவர்கள் பாடலாம். திட்டுபவர்கள் திட்டலாம்.  நன்றி

கலைஞர் டிவியை இயக்குவது கனிமொழி தான்: சிபிஐ

முதல்வர் கருணாநிதியின் மகளும் திமுக எம்பியுமான கனிமொழி 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பான முறைகேட்டில் சதிக்கு உடந்தையாக இருந்ததாக சிபிஐ தாக்கல் செய்த துணைக் குற்றப்பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.


அவர் மீது ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவு 7 மற்றும் 11 ஆகியவற்றின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

கலைஞர் டிவி பங்குதாரரான கனிமொழி மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி ஆகிய இருவரும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிபிஐ தனது முதல் குற்றப்பத்திரிகையை கடந்த 2ம் தேதி தாக்கல் செய்திருந்தது. அதில் முன்னாள் அமைச்சர் ராசா உட்பட ஒன்பது பேர் மீது 5 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

அவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் ஐபிசி 120 பி (கிரிமினல் சதித் திட்டம் தீட்டுதல்), ஐபிசி 420 (ஏமாற்றுதல்), ஐபிசி 468 (போலி ஆவணங்களைத் தயாரித்தல்), ஐபிசி 471 (போலி ஆவணங்களை பயன்படுத்துதல்) மற்றும் இந்திய ஊழல் தடுப்புச் சட்டம் 1988 (அரசு அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி தங்களுக்கு வேண்டப்பட்டோருக்கு ஆதரவாகச் செயல்படுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்தது.

இந் நிலையில் டெல்லி பாட்டியாலா ஹவுசில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி ஓ.பி.சைனி முன் சிபிஐ நேற்று தாக்கல் செய்த குற்றப் பத்திரிகையில்,

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு லைசென்ஸை ஸ்வான் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக பிரதி பலனாக கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடி லஞ்சம் தரப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. அதன்படி லஞ்சம் பெற்றதாக ராசாவின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கனிமொழி, சரத்குமார் ஆகிய இருவர் மீதும் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இவர்கள் மீதும் கலைஞர் டிவிக்கு பணம் வழங்கியதாக டிபி ரியாலிட்டி நிறுவனத்தின் துணை நிறுவனமான குசேகான் மற்றும் சினியுக் நிறுவனங்களின் அதிகாரிகளான கரீம் மொரானி, ராஜிவ் அகர்வால் ஆகியோர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்த 5 பேர் மீதும், இந்திய குற்றவியல் சட்டம் 120 பி (ஊழல் தடுப்பு) பிரிவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதன்படி ராஜாவின் மீது லஞ்சம் பெற்றதாகவும், கனிமொழி, சரத்குமார் ஆகியோர் மீது கிரிமினல் சதியில் ஈடுபட்டதாகவும், மொரானி, ராஜிவ் அகர்வால், அசீப் பல்வா ஆகியோர் மீது லஞ்சம் அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

48 பக்கங்கள் கொண்ட இந்தக் குற்றப் பத்திரிகையில், ஸ்பெக்ட்ரம் ஊழலின் பிரதான குற்றவாளியான ராஜாவுடன் அவர் அமைச்சராக இருந்த காலகட்டத்தில் கனிமொழி தொடர்ச்சியாக தொடர்பில் இருந்தார். கலைஞர் டிவி துவக்கப்படுவதற்கு முக்கிய பங்காற்றினார். தொலைத்தொடர்புத் துறையை ராஜாவுக்கு திரும்பவும் கிடைக்கச் செய்ததில் மிக முக்கிய பங்கு வகித்தார். இப்போதும் அந்தத் தொலைக்காட்சியை இயக்குவதில் ('active brain') முக்கிய நபர் கனிமொழி தான் என்று கூறப்பட்டுள்ளது.


இந்த இரண்டாவது குற்றப் பத்திரிகையின் முகப்பில், 'சப்ளிமென்டரி-1'என்று கூறப்பட்டிருப்பதால் அடுத்தடுத்து மேலும் துணை குற்றப் பத்திரிகைகள் தாக்கல் செய்யப்படவும் வாய்ப்புள்ளது.

இந்த குற்றப் பத்திரிக்கையை ஏற்ற நீதிபதி சைனி, கனிமொழி மே 6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டார். சரத்குமார், கரீம் மொரானி ஆகியோருக்கும் சம்மன் அனுப்ப உத்தரவிட்டதோடு, ராஜிவ் அகர்வாலையும், அசீப் பல்வாவையும் செவ்வாக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார்.

இந்நிலையில் இன்னொரு துணை குற்றப் பத்திரிகை அடுத்து மாதம் 30ம் தேதி தாக்கல் செய்யப்படும் என சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
English summary
Tamil Nadu chief minister M Karunanidhi's daughter Kanimozhi was the 'active brain' behind the operations of Kalaignar TV and was in regular touch with former telecom minister A Raja regarding the launch of the channel, claims the second chargesheet on the 2G scam filed by the CBI on Monday.

தமிழ் மட்டுமே தெரிந்ததால் குற்றவாளி முத்திரையிலிருந்து தப்பிய தயாளு அம்மாள்

முதல்வர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு தமிழ் மட்டுமே தெரியும் என்பதால் கலைஞர் டிவி தொடர்பான பல்வேறு பரிவர்த்தனைகளில் அவருக்கு தொடர்பு இருக்காது என்ற அனுமானத்தில் அவரது பெயரை குற்றப்பத்திரிக்கையில் சேர்க்காமல் விட்டுள்ளதாம் சிபிஐ.


இதுகுறித்து தனது 2வது குற்றப்பத்திரிக்கையில் சிபிஐ விரிவாகத் தெரிவித்துள்ளது.

கலைஞர் டிவியில் 60 சதவீத பங்குகளைக் கொண்டுள்ளவர் தயாளு அம்மாள். கனிமொழி, சரத்குமார் ரெட்டி ஆகியோருக்கு தலா 20 சதவீத பங்குகள் உள்ளன. அதிக அளவிலான பங்குகளைக் கொண்டுள்ளபோதிலும், சிபிஐயின் குற்றப்பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படவில்லை. இதற்கான காரணத்தை சிபிஐ குற்றப்பத்திரிக்கை தெளிவாக்குகிறது.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாளு அம்மாளை சாட்சிகளில் ஒருவராக சேர்த்துள்ளது சிபிஐ. அதாவது கனிமொழி உள்ளிட்டோருக்கு எதிராக இவர் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாளு அம்மாள் குறித்து சிபிஐ தனது குற்றப்பத்திரிக்கையில் கூறுகையில், கலைஞர் டிவி இயக்குநர்கள் குழுவிடம், தனக்கு வயதாகி விட்டதாலும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தனக்குத் தெரியாது என்பதாலும், கூட்டத்திற்கு வெறுமனே வந்து போவேன், வேறு எந்த பணியையும் தன்னால் மேற்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பாக உங்களது முழுத் திறமைகளையும், அறிவையும், புத்திசாலித்தனத்தையும் பயன்படுத்துமாறும் அவர் சரத்குமார் ரெட்டியைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

விசாரணையின்போது சிபிஐ கைப்பற்றிய ஒரு ஆவணத்தில், தனக்கு வயதாகி விட்டதையும், தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதையும் குறிப்பிட்டு எழுதிய கடிதம் கிடைத்தது. இதுகுறித்து 2007ம் ஆண்டு, ஜூன் 27ம் தேதி நடந்த இயக்குநர் குழுக் கூட்ட மினிட் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவன விவகாரம் தொடர்பாக தன்னால் எதையும் செய்ய முடியாது என்றும், அதுதொடர்பாக எதையும் தான் கவனிக்க முடியாது என்றும் தயாளு அம்மாள் தெரிவித்துள்ளார். எனவே கலைஞர் டிவி நிர்வாகம் தொடர்பான எதிலும் தயாளு அம்மாளுக்குத் தொடர்பு இல்லை என்று தெரிய வருகிறது - அதிக அளவிலான பங்குகளை வைத்துள்ளார் என்பதைத் தவிர.

தயாளு அம்மாளுக்குத் தமிழைத் தவிர வேறு எந்த மொழியும் தெரியாது என்பதை கம்பெனி பதிவாளருக்கும் முறைப்படி கலைஞர் டிவி தெரிவித்துள்ளது என்று கூறியுள்ளது சிபிஐ.

இதன் மூலம், தமிழ் மட்டுமே தெரிந்த காரணத்தால் குற்றவாளிப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்திலிருந்து தயாளு அம்மாள் தப்பியுள்ளார் என்பது புலனாகிறது.
English summary
Her non-understanding of any language other than Tamil saved Tamil Nadu chief minister Karunanidhi's wife Dayalu Ammal from being an accused in the 2G-spectrum scam. Dayalu has nearly 60% stake in Kalaignar TV, which received Rs 200 crore as bribe money in the scam. Interestingly, she has been made a witness in the case. The Central Bureau of Investigation (CBI) would use Dayalu's statement, as evidence against her step-daughter Kanimozhi and other accused in the scam. The CBI in its chargesheet said "She informed the board (Kalaignar TV) that due to her age and non understanding of any language other than Tamil, after appointment as director, she would attend the meeting only to suffice the legal requirement to have quorum and not for anything else".

சாய்பாபாவுக்கு பிரதமர், சோனியா அஞ்சலி: இன்று காலை 9.30க்கு பாபா உடல் அடக்கம்

புட்டபர்த்தி: பகவான் சாய்பாபாவின் உடலுக்கு பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்டோர் புட்டபர்த்தியில் நேற்று அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 9,30 மணிக்கு பாபாவின் உடல், பிரசாந்தி நிலையத்தில் அடக்கம் செய்யப்படுகிறது.

சாய்பாபா, கடந்த 24ம் தேதி காலை புட்டபர்த்தியில் உள்ள மருத்துவமனையில் ஸித்தியடைந்தார். புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலை தரிசிக்க பொதுமக்கள் நேற்று நள்ளிரவு வரை அனுமதிக்கப்பட்டனர். நேற்று மாலை 6 மணி வரை மட்டுமே பொதுமக்கள், பாபா உடலை தரிசிக்க அனுமதிக்கப்படுவார்கள் என, அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், தரிசன நேரம் நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டது.

பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா, மத்திய அமைச்சர் அம்பிகா சோனி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஆகியோர், தனி விமானம் மூலம் புட்டபர்த்திக்கு நேற்று வந்தனர். ஆந்திர கவர்னர் நரசிம்மன், முதல்வர் கிரண்குமார் ரெட்டி ஆகியோர், பிரதமரையும், சோனியாவையும் வரவேற்று பிரசாந்தி நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பிரதமரும், சோனியாவும், பாபாவுக்கு மவுன அஞ்சலி செலுத்தினர். குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, முன்னாள் பிரதமர் தேவகவுடா, கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமி, இலங்கை அமைச்சர் பசில் ராஜபக்ஷே, இலங்கை கிரிக்கெட் வீரர் அர்ஜுன ரணதுங்கா, விஸ்வ இந்து பரிஷத் தலைவர் அசோக் சிங்கால், சுவாமி நித்யானந்தா, இசைக் கலைஞர் பண்டிட் ரவிசங்கர், டிரம்ஸ் சிவமணி உள்ளிட்ட பலரும் பாபாவுக்கு நேற்று நேரில் அஞ்சலி செலுத்தினர்.

இன்று காலை 9.30க்கு பாபா உடல் அடக்கம்: பாபாவின் உடல் இன்று காலை 9.30 மணியளவில் அடக்கம் செய்யப்பட உள்ளது. மாநில அரசு, பாபாவுக்கு முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் செய்ய உள்ளது. பாபாவின் இறுதிச் சடங்குகளை அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்றுள்ளனர். இறுதிச் சடங்கின் போது மாநில முதல்வர் கிரண் குமார் ரெட்டி, கவர்னர் நரசிம்மன், பா.ஜ., தலைவர் அத்வானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு மட்டும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. பாபாவின் உடல், அடக்கம் செய்யப்படும் நிகழ்ச்சியை பிரமாண்ட எல்.சி.டி.,"டிவி' மூலம் பக்தர்களுக்கு ஒளிபரப்பப்பட உள்ளது. பிரசாந்தி நிலையத்தில் உள்ள சாய் குல்வந்த் கூடத்தில் ஒன்பது அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டப்பட்டு, பாபா உடல் அடக்கம் செய்யப்பட உள்ளது. 21 நாட்கள் முறைப்படி சடங்குகள் செய்யப்பட்டு, பாபாவின் நினைவாலயம் இங்கு அமைக்கப்படும்.

மாண்டியாவில் மறுபிறப்பு: வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ரவிசங்கர்ஜி, தற்போது ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவரது அமைப்பின் சார்பில் சத்தியோஜதா சுவாமிகள், சாய்பாபாவுக்கு இறுதியஞ்சலி செலுத்தினார். ரவிசங்கர்ஜி, ஜெர்மனியிலிருந்து விடுத்துள்ள செய்தியில் குறிப்பிடுகையில், "சாய்பாபா, கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தில், ஆறு ஆண்டுகளுக்கு பிறகு மறுபிறப்பு எடுப்பார். 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பொதுவாழ்வில் அவர் ஈடுபடுவார்' என்றார்.

உலகின் மிகக் குறைந்த புவியீர்ப்பு சக்தி காணப்படும் மையமாக இலங்கை!

உலகில் புவியீர்ப்பு சக்தி மிகவும் குறைவாக காணப்படும் மையமாக அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்ட விஞ்ஞானிகளால் இலங்கை கணிப்பிடப்பட்டுள்ளது. உலகின் புவியீர்ப்பு சக்தி பிரிந்து செல்லும் பரம்பல் முறை குறித்து அண்மையில் விஞ்ஞானிகள் ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தனர். அதன் போதே இலங்கையானது மிகவும் குறைந்த புவியீர்ப்பை கொண்ட மையமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

இலங்கையிலும் தென் மாகாணமும் அதன் கடலோரப் பகுதிகளுமே கூடுதலான அளவில் புவியீர்ப்பு சக்தி குறைவாக காணப்படும் பிரதேசங்களாகும். அதற்கான காரணம் குறித்து விஞ்ஞானிகளால் இதுவரை கண்டறிய முடியாமற் போயுள்ளது. பொதுவாக கடலோரப் பிரதேசங்களில் அதிகூடிய புவியீர்ப்பு சக்தி காணப்படுவது இயல்பாக இருந்த போதிலும் தென்னிலங்கையின் கடலோரப் பிரதேசங்கள் அதற்கு எதிர்மாறான பண்பைக் கொண்டுள்ளன. உலகின் அதிகூடிய புவியீர்ப்புச் சக்தி வலயமாக பிரிட்டன் மற்றும் கிரீண்லன்ட் தீவுகளுக்கிடையிலான கடல் பகுதி காணப்படுவதுடன் அங்கு 60 100 வரையான மிலிகல் (புவியீர்ப்புச் சக்தி அளவீடு) புவியீர்ப்புச் சக்தி நிலவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

செவ்வாய், 26 ஏப்ரல், 2011

சாய் பாபா மட்டுமே இந்த உன்னதத்தை எட்டி உள்ளார்

இன்று பகவான் சத்யா சாய் பாபா அவர்கள் மறைந்து விட்டார்கள். இது யாராலும் எதிர்பார்க்காத ஒன்றுதான். அவர் தொண்ணூற்றாறு வயது வரையில் வாழப்போவாதாக அறிவித்திருந்தார். 
1981 இல்  நான் பெங்களூரில் உள்ள ஒயிட் பீல்டிட்கு விஜயம் செய்திருந்தேன். அப்பொழுது அது ஏறக்குறைய ஒரு வெட்ட வெளி காடாகத்தான் இருந்தது. புட்டபர்த்தி அதைவிட காடாக இருந்ததாக கேள்விப்பட்டேன்.
அந்த சுற்றாடலுக்கு சற்றும் பொருத்தமற்ற காட்சியாக அழகான பள்ளி சீருடைகளுடன் செல்லும் சத்யா சாய் கல்லூரிகளின் மாணவர்கள் இருந்தார்கள்.
அந்த இனிய காட்சி வரப்போகும் ஆண்டுகளில் அப்பிரதேசம் எட்டப்போகும் உயரத்திற்கு பச்சை விளக்கு காட்டிற்று. மீதி வரலாறு உலகமே அறிந்த ஒன்று.
அவர் கடவுளா என்பது கேள்வியே அல்ல . அந்த சாதனைகள் அளப்பெரியன.இதுவரை யாரும் செய்த அளவில் அவர் செய்த தொண்டினால் அந்த மக்களின் வாழ்வு மேம்பட்டிருக்கிறது. பாபாவை தூற்றியவர்களைக்  கூட அவரின் மறைவு அதிர வைத்திருக்கிறது.
சாய் பாபா மட்டுமே இந்த உன்னதத்தை எட்டி உள்ளார் 

ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி சா. கந்தசாமி - வீடியோ

தமிழ் பாரம்பரிய அறக்கட்டளை சார்பாக சென்னை தியாகராய நகர், வெங்கட்நாராயணா சாலையில் உள்ள தக்கர் பாபா பள்ளியில் தமிழ் எழுத்தாளர் சா. கந்தசாமி, 18-ம் நூற்றாண்டில் புதுச்சேரியில் வாழ்ந்த துபாஷ் ஆனந்தரங்கப் பிள்ளை பற்றி ஆற்றிய உரை:

கனிமொழி மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல்-6ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக உத்தர

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.


அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.

இதையடுத்து வரும் மே 6ம் தேதி ஆஜராகுமாறு கனிமொழிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முறைகேடாக ஸ்பெக்ட்ரம் பெற்ற ஸ்வான் தொலைத் தொடர்பு நிறுவனத்தின் துணை நிறுவனமான டி.பி ரியாலிட்டி நிறுவனம் தனது இன்னொரு நிறுவனமான சினியுக் மற்றும் மற்றும் குசேகாவ் ஃப்ரூட்ஸ் அண்ட் வெஜிடபிள்ஸ் நிறுவனம் மூலம் கலைஞர் டிவிக்கு ரூ. 214 கோடியளவுக்கு நிதியதவி அளித்தது. இதை கலைஞர் டிவி வட்டியோடு திருப்பித் தந்துவிட்டாலும், அந்த நிதியுதவியை டிபி ரியாலிட்டி ஏன் தந்தது என்பது கேள்வியாகியுள்ளது.

குறைந்த விலையில் ஸ்பெக்ட்ரத்தை ஒதுக்கித் தந்தததற்கு லஞ்சமாகவே இந்தப் பணத்தை கலைஞர் டிவிக்கு அந்த நிறுவனம் தந்ததாக சிபிஐ கருதுகிறது.

இதையடுத்து கலைஞர் டிவியின் நிர்வாகி சரத் குமார் ரெட்டியிடம் சிபிஐ விசாரணை நடத்தியது. கலைஞர் டிவி அலுவலகத்திலும் சோதனை நடத்திய சிபிஐ, அதன் பங்குதாரர்கள் என்ற வகையில் தயாளு அம்மாள், கனிமொழி ஆகியோரிடமும் விசாரணை நடத்தியது.

இந் நிலையில் சிபிஐ இன்று டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ள துணை குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாள், கனிமொழி எம்.பி, சரத்குமார் ரெட்டி ஆகியோரின் பெயர்கள் சேர்க்கப்படும் என்று கூறப்பட்டது.

ஆனால், இன்றைய குற்றப் பத்திரிக்கையில் தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை. கனிமொழி, சரத் குமாரின் பெயர்களே இடம் பெற்றன.

கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2ம் தேதி சிறப்பு நீதிமன்றத்தில் 80,000 பக்கங்களைக் கொண்ட முதல் குற்றப் பத்திரிகையை சிபிஐ தாக்கல் செய்தது நினைவிருக்கலாம். அதில், முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, முன்னாள் தொலைத் தொடர்புத்துறைச் செயலாளர் சித்தார்த் பெகுரியா, ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியா, நீரா ராடியா, தொலைத்தொடர்புத் துறை முன்னாள் அதிகாரிகள், ஸ்வான் டெலிகாம் நிறுவன அதிபர் ஷாஹித் உஸ்மான் பல்வா, இயக்குனர் வினோத் கோயங்கா, யுனிடெக் வயர்லெஸ் நிறுவன இயக்குனர் சஞ்சய் சந்திரா, ரிலையன்ஸ் டெலிகாம் அதிபர் அனில் அம்பானி, ரிலையன்ஸ் குழுமத்தின் தலைமை அதிகாரிகள் கெளதம் தோஷி, ஹரி நாயர், சுரேந்திர பிபாரா ஆகியோர் மீது சிபிஐ குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மே 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், குற்றப் பத்திரிக்கையில் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது, திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு பெரும் பின்னடைவாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் தொலைக்காட்சியில் கனிமொழி, தயாளு அம்மாள் மற்றும் நிர்வாக இயக்குனர் சரத் குமார் ரெட்டி ஆகியோருக்கு முறையே 20, 60 மற்றும் 20 சதவீத பங்குகள் உள்ளன.

சிபிஐ இன்று தாக்கல் செய்த துணைக் குற்றப் பத்திரிகையிலும் ஆ.ராசாவின் பெயர் இடம் பெற்றுள்ளது. அவர் ஸ்பெக்ட்ரத்தை குறைந்த விலையில் ஒதுக்க தொலைத் தொடர்பு நிறுவனங்களிடம் லஞ்சம் பெற்றார் என்ற குற்றச்சாட்டை சிபிஐ கூறியுள்ளது.

கனிமொழி, சரத் குமார் தவிர சினியுக் நிறுவனத்தின் கரிம் மொரானி மற்றும் குசேகாவ் நிறுவனத்தின் ராஜிவ் அகர்வால் மற்றும் இந்த நிறுவனங்களின் பங்குதாரரான ஷாகித் உசேன் பல்வாவின் தம்பி ஆஷிப் பல்வா ஆகியோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

கருணாநிதியுடன் ஸ்டாலின்-சரத் குமார் ஆலோசனை:

இந் நிலையில் முதல்வர் கருணாநிதியுடன் துணை முதல்வர் ஸ்டாலின், சரத் குமார் ஆகியோர் இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தினர். இந்த விவகாரத்தை சட்டரீதியாக அணுகுவது குறித்து ஆலோசனை நடத்தியதாகத் தெரிகிறது.

தயாளு அம்மாள் பெயர் சேர்க்கப்படாதது ஏன்?-பாஜக:

இந்நிலையில் சிபிஐ குற்றப்பத்திரிகையில் கலைஞர் டி.வியின் 60 சதவீத பங்குகளை வைத்திருக்கும் தயாளு அம்மாளின் பெயர் சேர்க்கப்படாதது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.

டெல்லியில் நிருபர்களிடம் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீதாராமன் கூறுகையில், ஸ்வான் நிறுவனத்திடம் இருந்து பணம் பெற்ற கலைஞர் டி.வியில் தலா 20 சதவீத‌ பங்குகள் வைத்திருக்கும் இருக்கும் கனிமொழி, சரத்குமார் பெயர் குற்‌றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ள போது தயாளு அம்மாளின் பெயர் ஏன் சேர்க்கப்படவில்‌லை என்று கேள்வி எழுப்பினார்.
English summary
The second chargesheet in the 2G spectrum scam will be filed today by the Central Bureau of Investigation. Sources in the CBI say that M Karunanidhi's daughter, Kanimozhi, and his wife, Dayaluammal, will both be accused of benefiting from the scam. Sources claimed that the second chargesheet will focus on Rs214 crore transaction involving Kalaignar TV and the alleged payoff routed through Dynamix Realty, Kusegaon Realty and Cineyug Films.