சனி, 12 நவம்பர், 2016

கெஜ்ரிவால்: நோட்டு செல்லாது.. பாஜக-வினருக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தெரியும்...


ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாமல் போகும் என்பது பாஜக-வுக்கும் அவர்களது நண்பர்களுக்கும் முன்னதாகவே தெரியும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டியுள்ளார்.
கறுப்புப் பண ஒழிப்பு நடவடிக்கையில் அடுத்த கட்டமாக, ரூ.500, ரூ.1000 நோட்டுகளை புழக்கத்திலிருந்து திரும்பப்பெறுவதாகவும் மக்கள், தங்களிடமுள்ள இந்த ரூபாய் நோட்டுகளுக்குப் பதிலாக புதிய நோட்டுகளை அஞ்சல் நிலையங்கள், வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்றும் பிரதமர் அறிவித்தார்.
இது, பொதுமக்களுக்கு பல்வேறு சிரமங்களை அளித்தாலும், நாட்டு நலன் கருதி பல்வேறு தரப்பினரும் இந்த நடவடிக்கைக்கு வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில், இந்த விவகாரத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பாஜக மீது கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.  (அது ராஜதந்திரமுங்கோ . அவிங்க லாபத்துக்கு எதுவும் பண்ணலாம் விபசாரம் உள்பட .. மனு சாஸ்திரத்தில்...?)
இதுதொடர்பாக அவர் வியாழக்கிழமை வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியதாவது, ‘ரூ.2000 நோட்டை மத்திய அரசு அறிமுகப்படுத்துவதன் நோக்கம் என்ன? இதனால் ஊழலும் கறுப்புப் பணமும் அதிகரிக்கவே செய்யும். அதே நேரத்தில், பொதுமக்களுக்கு எந்த நன்மையும் ஏற்படாது. அவர்களுக்கு பாதிப்புதான் அதிகரித்துள்ளது.
ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு வெளியாகும் என்பது பாஜக-வினருக்கும், அவர்களது நண்பர்களுக்கும் (ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள்) ஒரு வாரத்துக்கு முன்னதாக தெரிந்துவிட்டது. இதற்கு ஆதாரங்கள் உள்ளன. அவர்கள் அனைவருமே தங்களிடம் இருந்த பணத்தை தங்கமாகவும் சொத்துகளாகவும் மாற்றிவிட்டனர்.
உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட 4 மாநிலத் தேர்தல்களில் எப்படியாவது வெற்றி பெற்றுவிட வேண்டுமென்று நோக்கில் இதுபோன்ற பல்வேறு திரைமறைவு நடவடிக்கைகளில் பாஜக ஈடுபட்டு வருகிறது. கோடிக்கணக்கில் கறுப்புப் பணம் வைத்திருப்பவர்களிடம் 15 முதல் 20 சதவிகிதம் கமிஷன் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு புதிய நோட்டுகள் மாற்றித் தரப்படுவதாக பொதுமக்கள் என்னிடம் தெரிவித்துள்ளனர். இணையவழி பணப்பரிமாற்ற நிறுவனமான பேடிஎம் விளம்பரத்தில் பிரதமர் மோடியின் படம் இடம்பெற்றுள்ளது. இது வெட்கக்கேடான செயல். பிரதமராக இருப்பவர் தனியார் நிறுவன விளம்பரத்தில் நடிகராக இருப்பதை மக்கள் விரும்புகிறார்களா?’ என்று கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதே நேரத்தில் கெஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள சத்யேந்திர ஜெயின், ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதை வரவேற்றுள்ளார்.
இதனிடையே, ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே பாராட்டுத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ‘மத்திய அரசு எடுத்த இந்த நடவடிக்கை தைரியமான, புரட்சிகரமான நடவடிக்கை ஆகும். இதன்மூலம் கறுப்புப் பணம் தடுக்கப்படும். ஊழல் போன்ற முறைகேடுகள் குறையும். பயங்கரவாதத்துக்கு நிதி கிடைப்பது தடுக்கப்படும்’ என்றார்.  minnambalam.com

கருத்துகள் இல்லை: