சனி, 26 அக்டோபர், 2019

நாம் தமிழர் தோற்றமும் ஆரியப் பார்ப்பனர்களின் ஆனந்தமும்

seeman as devoteekolathur mani 445கீற்று:  தோழர் சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த தோழர் மணி செந்தில் அவர்கள், தி.வி.க. தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கு ஒரு திறந்த மடலை எழுதியுள்ளார். தனது தலைவரைப் போலவே எவ்வித சான்றுகளும் இன்றி ஒரு முழுநீள மடலைத் தயாரித்துள்ளார். சில முக்கியமான பொய்களுக்கு மட்டும் பதில் தர வேண்டியுள்ளது. இலை மலர்ந்தால் ஈழம் மலருமா?
“இனம் அழிந்தபோது காங்கிரசை வீழ்த்த, அந்த காலகட்டத்தில் ஈழம் பெற்றுத் தருவேன் என்று உறுதியளித்த ஜெயலலிதாவை ஆதரிப்போம் என்கிற முடிவினை நீங்கள் தானே எடுத்தீர்கள்..?? இந்த நொடி வரை அண்ணன் சீமான் மீது ஒரு விமர்சனமாக வைக்கப்படுகிற அந்த முக்கிய முடிவினை எடுத்தது நீங்கள் தானே..??”< 2009 நாடாளுமன்றத் தேர்தலில், பெரியார் திராவிடர் கழகம், காங்சிரசுக் கூட்டணியை எதிர்த்துத் தேர்தலைச் சந்தித்தது உண்மை. தேர்தல் குறித்து முடிவெடுக்க, 29.03.2009 அன்று சேலத்தில் பெ.தி.க.வின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் கூடியது. நானும் அக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளேன். அக்கூட்டம் நடைபெறும் போது, தலைவர் கொளத்தூர் மணி சிறையில் இருந்தார். தோழர் சீமானும் கூட அப்போது சிறையில் தான் இருந்தார்.
அப்போது, காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் மட்டும், காங்கிரசைத் தோற்கடிக்க, அதற்கு எதிராகத் தீவிரமாகப் பிரச்சாரம் செய்வது என்றும், மற்ற தொகுதிகளில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. காங்கிரஸ் போட்டியிடும் இடங்களில் தீவிரமான எதிர்ப் பிரச்சாரம் - தி.மு.க. போட்டியிடும் இடங்களில் எதிர்த்து வாக்களிப்பது மட்டும் என்ற நிலைப்பாடு தான் அன்று அறிவிக்கப்பட்டது. அதாவது தி.மு.க.வையும், காங்கிரசையும் ஒரே தளத்தில் வைத்து முடிவெடுக்கவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இடைத் தேர்தலில் திமுக தோல்வி ஏன்? விக்கிரவாண்டி . நான்குநேரி ..

stalin and udhayanidhi  கீற்று :  2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் மோடி எதிர்ப்பு அலையை உருவாக்கியவர்கள் தமிழக மக்கள்.
தி.மு.க கூட்டணி திருப்பூர், நாகபட்டிணம், மதுரை ஆகிய தொகுதிகளில் பணம் கொடுக்கவில்லை. ஆனால் அதிமுக கூட்டணி பணம் கொடுத்தது. பணத்தையும் வாங்கிக் கொண்டு நாங்கள் மோடிக்குப் போட மாட்டோம் என வெளிப்படையாகவே மக்கள் தெரிவித்தனர். முடிவுகளும் எதிர்பாராமல் வந்தது. அங்கெல்லாம் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. தமிழகத்தின் வாழ்வாதாரங்களை அடியோடு பறிக்கிற ஹைட்ரோ கார்பன், உயர் மின் கோபுரங்கள், எண்ணெய்,எரிவாயுக் குழாய் திட்டங்கள், எட்டுவழிச்சாலை இது போன்ற திட்டங்களுக்கு எதிராக எந்த உறுதியான நிலைபாட்டையும் திமுக கூட்டணி மேற்கொள்ளவில்லை.
38 நாடாளுமன்ற உறுப்பினர்களை வைத்துக் கொண்டு டெல்லித் தலைநகரில் தமிழகத்தின் உரிமைக் குரலை வலுவாக எழுப்பாமல் மழுப்பி வருகின்றனர் என்ற குற்றச்சாட்டு நடுநிலையாளர்களால் தெளிவாகவே முன்வைக்கப்பட்டு வந்தது.
அதே போல எழுவர் விடுதலையை சாதிக்கும் வரையிலான போராட்டத்தை திமுக அணி எடுக்காமல் ஒரு பார்வையாளனாகவே உள்ளது. அரசியல் சட்டக் கடமையை நிறைவேற்றாத ஆளுநருக்கு எதிராக போராடாமல் கள்ள மௌனம் காப்பது ஏன்?

குர்திஷ் தேசம் – மலைகளைத் தவிர நண்பர்கள் யாரும் இல்லை

kurdistan2kurdish2  மீராபாரதி:  குர்திஸ் மக்களின் வரலாறும் இப்பொழுது அங்கு என்ன நடைபெறுகின்றது என்பதும் தொடர்பான சிறிய மேலோட்டமான பார்வை இது. ஒரு பாடகரின் குறிப்பை மொழிபெயர்த்துள்ளேன்.
imagesகுர்திஸ் மக்கள் இப்பொழுது வாழ்க்கின்ற நிலத்தில் பல ஆயிரம் வருடங்களுக்கு மேலாக வாழ்கின்றனர்.  இது இவர்களின் தாய் நிலம்.  முதலாம் உலகப் போரின் பின்பும் ஓட்டமான் சம்ராஜியத்தின் விழ்ச்சியின் பின்பும்  பிரிட்டிஸ் பிரான்ஸ் ஆட்சியாளர்கள் இந்த நிலத்தில் குர்திஸ்தான் (Kurdistan) என்ற நாட்டை உருவாக்கலாம் எனவும் அதில் அவர்கள் அமைதியாக வாழலாம் என உறுதியளித்தனர். ஆனால் வழமையைப் போல இந்த நிலத்தைப் புதிதாக உருவாகிய இராக், இரான், துருக்கி, மற்றும் சிரியா போன்ற நாடுகளுக்கு துண்டு துண்டாகப் பிரித்துக் கொடுத்து அவர்கள் தமது உறுதிமொழியை மீறி இந்த மக்களுக்கு துரோகமிழைத்தனர். அன்றிலிருந்து இந்த நான்கு நாடுகளும் குர்திஸ் மக்களை இனவழிப்பு செய்தும் ஒடுக்கியும் வருகின்றனர். முக்கியமாக துருக்கி அன்றிலிருந்து இன்றுவரை மிக மோசமான இனவழிப்பு நடவடிக்கைகளை இவர்களுக்கு எதிராக மேற்கொண்டது. குறிப்பாக குர்திஸ் மொழியை குர்திஸ் பெயர்களை போல பல விடயங்களைத் தடைசெய்தது.  மேலும் குர்திஸ் மக்களை குர்திஸ் (Kurds) என அழைக்க மறுத்து “மலைகளில் வாழும் துருக்கியர்” (Mountain Turks” ) எனக் கூறி இவர்களைப் படிப்பறிவில்லாத காட்டுமிராண்டிகள் என இழிவு செய்தனர். இருப்பினும் குர்திஸ் மக்கள் 80களிலும் 90களிலும் துருக்கிய அடக்குமுறைகளுக்கு எதிராகப் போராடி பல ஆயிரம் மக்களையும் போராளிகளையும் இழந்தனர். ஆனாலும் இன்றுவரை எந்த முன்னேறமும் இல்லை.

இஸ்லாமியமத வெறியர்களும் இந்து மதவெறியர்களும் ஒரே பாதையில் செல்லும் .. சமூகவிரோதிகள்

Don Ashok :  மத அடிப்படைவாதம் என்பது இருபுறம் கூரான கத்தி. இந்துத்துவாவும்,
இஸ்லாமிய அடிப்படைவாதமும் எதிர் எதிர் துருவங்கள் போலத் தெரியும். ஆனால் உண்மையில் ஒன்றை ஒன்று உரம்போட்டு வளர்க்கும். ஒன்றில்லையேல் மற்றொன்றில்லை.
ஒருபக்கம் இந்தியா முழுக்க விஷம்போல் பரவி இருக்கும் இந்துத்துவாவை நாம் கண்டித்தும் எதிர்த்துக் கொண்டிருக்கும்போது இஸ்லாமிய அடிப்படைவாதம் வளர்வதை அமைதியாகக் கடக்க முடியாது, கூடாது. தவ்ஹீத் ஜமாத்தில் ஏற்கனவே காதலர் தினம் என்றால் "கற்பு கொள்ளையர் தினம்" என பைத்தியக்காரர்கள் போல போஸ்டர் அடிப்பார்கள். அதுவாவது பரவாயில்லை, பொதுப்பண்டிகை. ஆனால்
இப்போது ஒருபடி மேலே போய் பட்டாசு வாங்காதீர்கள் என தீபாவளிக்கு போஸ்டர் அடித்திருக்கிறார்கள். இந்த வேண்டாத வேலை இவர்களுக்கு எதுக்கு? இந்துத்துவா என்றால் என்னவென்ற அறியாத ஒருவனை இது எரிச்சலைடய வைக்குமா வைக்காதா? இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் செயலால், "ஆமா. பாஜககாரனுங்க சொல்றது சரிதான். இவனுங்க இப்படிதான்," என்ற எண்ணம் ஏற்பட்ட அந்த இளைஞன் இந்து அடிப்படைவாதியாக மாறுவான்.

ஹரியான பாஜக கூட்டணி ஒப்பந்தம் ... சிறையில் இருந்து வெளியே வந்த அஜய் சௌத்தாலா ..

Ganesh Babu : நேற்றுதான் ஹரியானாவில் ஜனநாயக ஜனதா கட்சிக்கும்
பா.ஜ.கவுக்கும் இடையில் கூட்டணி முடிவானது. அதற்குள் இன்று திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜ.ஜ.க தலைவர் துஷ்யந்த் சவுதாலாவின் தந்தை அஜய் சவுதாலா சிறை நிர்வாகத்தால் இரண்டு வாரங்கள் விடுப்பில் வெளியே அனுப்பப்படுகிறார். இவர் தனது தந்தை ஓம் பிரகாஷ் சவுதாலா முதல்வராக இருந்தப்போது ஆசிரியர் நியமனத்தில் ஊழல் செய்த வழக்கில் தந்தையோடு சிறையில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேப்போல 2018ஆம் ஆண்டு ஊழல் வழக்கு ஒன்றில் கைதாகி ஓராண்டு சிறையில் இருந்த சிக்கிம் முதல்வரும், பி.ஜே.பி கூட்டணிக் கட்சித் தலைவருமான திரு.பிரேம் சிங் தமங் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின்படி அடுத்த 6ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிடமுடியாது என்பது சட்டம். ஆனால் திடீரென கடந்த மாதம் 6ஆண்டுகளாக இருந்தத் தடையை 1ஆண்டாக தேர்தல் ஆணையம் குறைத்ததையடுத்து அவர் தேர்தலில் நின்று தனது முதல்வர் பதவியை தக்கவைத்துக்கொள்ளலாம் என்ற நிலை உருவாக்கப்பட்டு, அதன்படி நேற்றைய முன்தினம் அவர் தேர்தலில் ஜெயித்தும்விட்டார்.
ஊழலை ஒழிக்க வந்த 'புனிதர்' நரேந்திர மோடி ஊழல்வாதிகளை தண்டிக்கும் விதம் இதுதான்.

தீபாவளி பற்றி அறிஞர் அண்ணா கூறியது : ஆரியத்தீயும் ஆரிய வாளியும் கலந்ததெனவரும் இப்பண்டிகையை பகீஷ்கரிக்க வேண்டும்.

தீ...வாளி! அறிஞர் அண்ணாவின் கட்டுரை :
தமிழரின் தன்மானத்தைச் சுட்டுக் கருக்கும் ஆரியத் தீ! தமிழரின் வாழ்வைச் சித்திரவதை செய்யும் வாளி! இந்தத் தீவாளி, வருகிறது. தீபம் ஏற்றுங்கள், புத்தாடை புனையுங்கள், புன்முறுவல் செய்யுங்கள் என்று புராணீகர்கள் கூறுவர், தீபாவளி ஸ்நானம் என்று மகத்துவம் கூறுவர், மடைத்தனத்தை வளர்க்க, தன்மானமுள்ள தமிழரே! தீபாவளி கொண்டாட வேண்டாம் என்று உம்மைப் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம் - காரணத்தோடு. 
முரட்டுப் பிடிவாதக்காரரும், மூடமதியிலே மூழ்குவதிலே, சேற்றிலே அமிழ்ந்து ஆனந்திக்கும் எருமைபோலக் களிப்போரும், எட்டிலே உள்ள எதற்கும், எம்மால் புதுப்பொருள் கூறமுடியும், புலமையின் காரணமாக, என்று கூறுவோருக்கும், மனைதோறும் அகல்விளக்குச் சுடர்விடும் அழகு, நமது நாட்டுக்கலையின் கனிவு என்றுகூறும் கலாரசிகர்கட்கும், நாம், மதிவழிநடமின் என்று கூறி, சொல்லை இழக்க விரும்பவில்லை. 
புறம்போக்கு நிலத்திலே பொழுது புலருமுன் ஆரம்பித்து, விண்கருக்கும்வரை உழுதாலும் பயனில்லை. புத்தியின் உச்சியை அடைந்துவிட்டதாகக் கருதும் பேர்வழிகளும், புறம்போக்குக்கும் அதிக வித்தியாசமில்லை. புரட்சி வேகம் நாட்டிலே பெருக்கெடுத்து ஓடும்போதுதான், புறம்போக்குகளும், வயலாகி, வளம்பெறும் ஆனால் புரட்சி வேகம் உண்டாக தீவிரவாதிகள் முதலிலே, ஆரியத்தீயும் ஆரிய வாளியும் கலந்ததெனவரும் இப்பண்டிகையை பகீஷ்கரிக்க வேண்டும். 

நிர்மலா தேவிக்கு மன நிலை பாதிப்பு? வீட்டு பொருட்களை தூக்கி எறிகிறார் ..

நிர்மலாதேவி கல்வீசி தாக்கியதால் கார் கண்ணாடி சேதமடைந்துள்ளது.மனநிலை பாதிப்பா?- நிர்மலா தேவி செய்த செயலால் அதிர்ச்சிமாலைமலர் : மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் சிக்கியுள்ள நிர்மலாதேவி வீட்டில் உள்ள பொருட்களை ரோட்டில் வீசி எறிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிர்மலாதேவி வீசி எறிந்த பொருட்கள் நடுரோட்டில் சிதறிக் கிடக்கிறது. பாலையம்பட்டி: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்த நிர்மலாதேவி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்ததாக கடந்த வருடம் கைது செய்யப்பட்டார். இவருக்கு உடந்தையாக இருந்ததாக கருப்பசாமியும், முருகனும் கைதானார்கள். 6 மாதத்துக்கு மேல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு சில மாதங்களுக்கு முன்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியது.
இவர்கள் மீதான வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் நிர்மலாதேவியின் நடவடிக்கைகளில் மாறுதல் ஏற்பட்டது. சில நேரங்களில் சுயநினைவின்றி தானாக பேசிக்கொள்வது மற்றும் வினோதமான செயல்களில் ஈடுபட்டு வந்தார்.

சேரி பாஷை (தமிழ்) பேசாதே என்று அடிக்கும் வட இந்திய ஆசிரியை பிரதிக்சா தஞ்சாவூர் ..சோழன்மாளிகையில்

;திருத்தவத்துறை : தமிழ்நாட்டுப் பள்ளியில் தமிழ் பேசினால் அடிக்கும்
வடஇந்திய ஆசிரியர்.
தமிழைத் தாழ்ந்தமொழி என்றும் தமிழர்களைத் தங்கள் ஊரில் அடித்து உதைத்ததாகவும் மாணவர்களிடம் கூறிய ஆசிரியை மற்றும் அதற்குத் துணை நிற்கும் தலைமை நிர்வாகியையும் உடனடியாகப் பணி நீக்கம் செய்க.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம், சோழன்மாளிகையில் டாக்டர்.சி.எசு.கல்யாணசுந்தரம் நினைவுப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் பிரதிக்சா என்னும் வடஇந்தியப்பெண் ஆங்கில ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார், இவர் ஏழாம் வகுப்பிற்கு பாடம் எடுக்கும் போது, தமிழ் ஒரு சேரிமொழி என்றும் தமிழ்மொழி பேசும் தமிழர்களை தங்கள் ஊரில்(போபால்) குச்சியால் அடித்துத் துரத்தி விரட்டியடிப்போம் என்றும் கூறி தமிழில் பேசும் மாணவர்களுக்கு தண்டமும் விதித்துள்ளார். இதுகுறித்து மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூற, பெற்றோர் பள்ளியின் சி.இ.ஒ வாகப் பணியாற்றும் கர்நாடகவைச் சேர்ந்த முரளிராவிடம் புகார் அளித்தும் அவர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த முரளிராவ் சி.இ.ஓ வாகப் பதவியேற்ற பின்தான் அதிக அளவில் தகுதியற்ற வடநாட்டு ஆசிரியைகளை நியமித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆசிரியை பிரதிக்சா எவ்விதப் பணி அனுபவமும் இல்லாத போதிலும் அவருக்கு ரூபாய் 45,000 மாதச்சம்பளத்துடன் ஆசிரியைகளை வழிநடத்தும் பொறுப்பிலும் உள்ளார்,

சுர்ஜித்தைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கும் முயற்சி நடக்கிறது

சுர்ஜித்தைக் காப்பாற்ற குழிக்குள் இறங்கும் வீரர்கள்!மின்னம்பலம் : நேற்று (அக்டோபர் 25) மாலை சுமார் 5:40 மணியளவில் திருச்சி மாவட்டம், நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளைக் கிணறுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை சுர்ஜித்தை மீட்க 25 மணி நேரங்கள் கடந்தும் தீவிர மீட்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியில் சுர்ஜித் வில்சன் என்ற இரண்டு வயது குழந்தை 26 அடி ஆழ்துளைக் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். பிரிட்டோ ஆரோக்கியராஜ்- கலாமேரி தம்பதியரின் மகனான அவரை மீட்டெடுக்க முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு முழுவதும் அவரை மீட்க மீட்புப்படையினர் தொடர்ந்து போராடி வந்த நிலையில் அதிகாலை 2:30 மணியளவில் எதிர்பாராத விதமாக 26 அடி ஆழத்தில் இருந்து 70 அடி ஆழத்திற்கு குழந்தை கீழே தள்ளப்பட்டார். இதனால் அவரை மீட்டெடுக்கும் பணிகளில் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. எனினும் அனைவரும் அவரை மீட்க தொடர்ந்து முயற்சி செய்து வந்தனர்.

சுர்ஜித் 100 ஆழத்துக்கு சென்றது .. பக்கவாட்டில் குழிதோண்டி மீட்க 4 மணிநேரம் ஆகும்!

It takes 4 hours to restore the sidewalk pit!
nakkheeran.in - கலைமோகன் : திருச்சி மணப்பாறை அடுத்த நடுக்காட்டுபட்டியில் ஆள்துளை கிணற்றில் விழுந்த சுஜித்தை மீட்க தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சி எடுத்துவரும் நிலையில் தற்போது ரோபோ போன்ற கை அமைப்பு கொண்ட நவீன கருவி உள்ளே செலுத்தப்பட்டு வருகிறது. சுஜித் தற்போது 85 அடிக்கு கீழ் சென்றுள்ளான் என்ற தகவலும் கிடைத்துள்ளது. தேசிய பேரிடர் மீட்பு குழு முயற்சியை தொடர்ந்து நெய்வேலியை சேர்ந்த என்எல்சி மற்றும் தனியார் அமைப்புகளை கொண்டு ஆழ்துளை கிணற்றுக்கு அருகே சுரங்கள் தோண்ட திட்டமிட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 24 மணிநேரத்தை கடந்து இந்த மீட்பு பணி தொய்வின்றி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், இந்த ஆழ்துளை கிணறுக்கு பக்கவாட்டில் 3 மீட்டர் தொலைவில் ஒரு மீட்டர் அகலத்தில் சுரங்கம் தோண்டி அதனுள் ஆக்சிஜனுடன் பயிற்சி பெற்ற வீரரை அனுப்பி குழந்தை சுஜித்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இந்த 90 அடி சுரங்கமானது தோண்டப்பட 4 மணிநேரம் ஆகும் என என்எல்சி சுரங்க வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆழ்துளை கிணற்றுக்கு அருகில் மீண்டும் பள்ளம் தோண்டும் பணி தீவிரம்

 The intensity of re-drilling work near the deep wellnakkheeran.in - kalaimohan": ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுஜித்  26 அடியில் உட்கார்ந்த நிலையில் இருக்க, முதலில் மூச்சுத்திணறல் ஏற்படாமல் சுவாசக்க போதுமான ஆக்ஸிஜன் கொடுக்கபட்டுவருகிறது. தற்பொழுது சுஜித் மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வந்தாலும் கிணற்றுக்குள் உள்ள குழந்தைக்கு ஒருபுறம் மன தைரியத்தை கொடுக்க அவரது உறவினர்களும் தாய், தந்தை ஆகியோரும் மருத்துவக் குழுவினரின் பரிந்துரையின் பேரில் முயற்சி எடுத்து வருகின்றனர். கிணற்றில் உள்ள குழந்தை சுஜித்திடம் தாயான கலாமெரி'' அம்மா நான் இருக்கிறேன் பயப்படாதே'' என்று கூற அந்த குழந்தை ''உம்''  என பதிலளித்துள்ளது.
அதேபோல் தொடர்ந்து அந்த குழந்தையின் மாமாவும் உறவினர்களும் மேலே இருந்தவாறு அந்த குழந்தைக்கும் மன தைரியத்தைக் கொடுத்து வருகின்றனர்.மேலும் சுஜித்தை மீட்பதற்காக கோவையில் இருந்து மற்றொரு குழுவும் ஸ்ரீதர் என்பவரின் தலைமையில் சம்பவ இடத்திற்கு வந்துள்ளது.

பாஜக தங்கை பங்கஜாவை தோற்கடித்தது.. வலியா இருக்கு.. தேசியவாத காங். அண்ணனின் வருத்தம்!

சந்தோஷம் சர்ச்சை tamil.oneindia.com/authors/hemavandhana.: மகாராஷ்டிரா: மகாராஷ்டிர தேர்தலில் தங்கை பங்கஜா முண்டேவை தோற்கடித்து அண்ணன் தனஞ்செய் முண்டே ஷாக் கொடுத்துள்ளார். இந்த வெற்றி சந்தோஷமாக இருந்தாலும் கூட குடும்ப உறுப்பினர் ஒருவரை தோற்கடித்தது வலியாக இருக்கிறது என்று தனஞ்செய் கூறியுள்ளார்.
மகாராஷ்டிராவில் முண்டே குடும்பத்தினர், பிரமோத் மகாஜன் குடும்பத்தினர், பவார் குடும்பத்தினர் ஆதிக்கம் பல காலமாகவே உள்ளது. இதில் கோபிநாத் முண்டே முக்கியமான பாஜக தலைவர். தற்போது மறைந்து விட்டார். இவரது மகள்தான் பங்கஜா முண்டே.
இவரது உறவினர், அதாவது அண்ணன் முறை வருபவர்தான் தனஞ்செய் முண்டே. இருவரும் மகாராஷ்டிர தேர்தலில் எதிரும் புதிருமாக நின்றனர். பார்லி சட்டசபைத் தொகுதியில் பாஜக சார்பில் பங்கஜாவும், தேசியவாத காங்கிரஸ் சார்பில் தனஞ்செய் முண்டேவும் போட்டியிட்டனர். போட்டி என்றால் சாதாரணமாக இல்லை.. மிகக் கடுமையாக மோதிக் கொண்டனர்.

பிகில் ...யாழ்ப்பாணம் ராஜா தியேட்டர் அடித்து நொருக்கப்பட்டது ..

BBC :பிகில்’ படத்துக்கு டிக்கெட் இல்லை – விஜய் ரசிகர்களால் யாழ்ப்பாணம்
திரையரங்கம் சேதம்" பிகில் திரைப்படம் வெளியான நாளான இன்று சிறப்பு காட்சிகள் திரையிடப்படுவதில் தாமதம் ஆனதால் தமிழகத்தின் சில பகுதிகளில் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வரும் சூழலில், இலங்கையிலும் இதே போன்றதொரு சம்பவம் நடந்துள்ளது.
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் உள்ள ராஜா திரையரங்கம் பிகில் முதல் காட்சியை பார்ப்பதற்கு முண்டியடித்த விஜய் ரசிகர்களினால் சேதமாக்கப்பட்டுள்ளது.
விஜய் நடிப்பில் அட்லியின் இயக்கத்தில் இன்று வெளியாகியுள்ள பிகில் திரைப்படத்தின் சிறப்பு காட்சிகள் இலங்கையில் உள்ள திரையரங்குகளிலும் இன்று அதிகாலை முதல் திரையிடப்பட்டு வருகின்றது.

மகாராஷ்ட்ராவில் காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ்-சிவசேனா கட்சிகளின் கூட்டணி ஆட்சி முயற்சி?

சிவசேனாவை அழைக்கும் காங்கிரஸ் -மராட்டிய திருப்பம்!மின்னம்பலம் : சிவசேனாவை அழைக்கும் காங்கிரஸ் -மராட்டிய திருப்பம்! இந்தியாவின் வர்த்தகத் தலைநகரான மும்பையில் மாறி வரும் அரசியல் மேகங்கள் நாட்டையே கவனிக்க வைத்திருக்கின்றன.
மகாராஷ்டிர மாநிலத்தில் நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 288 தொகுதிகளில் பாஜக 106 இடங்களிலும், அதோடு கூட்டணி வைத்த சிவசேனா 56 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கின்றன. அதேநேரம் காங்கிரஸ் 44 இடங்களும், தேசியவாத காங்கிரஸ் 54 இடங்களிலும் வெற்றிபெற்றன. பாஜகவுடன்  சிவசேனா கூட்டணி அமைத்திருந்தாலும் தேர்தல் பரப்புரைக் களத்திலும் சரி, தேர்தலுக்குப் பிறகும் , தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின்னாலும் பாஜகவை சிவசேனா கடுமையாகத் தாக்கியே வருகிறது.

விக்கிரவாண்டி ..திமுகவுக்கு தலித் வாக்காளர்கள்தான் அதிக வாக்குகளை அளித்திருக்கிறார்கள்

விக்கிரவாண்டி: திமுகவின் கௌரவத்தைக் காப்பாற்றிய தலித் மக்கள்!விக்கிரவாண்டி: திமுகவின் கௌரவத்தைக் காப்பாற்றிய தலித் மக்கள்! மின்னம்பலம் : விக்கிரவாண்டி   சட்டமன்ற இடைத்தேர்தல் முடிவுகள் ஆய்வுக்கும் விவாதத்துக்கும் உட்ப்டுத்தப்பட்டு வருகின்றன. தொகுதிக்குள் இருக்கும் 275 வாக்குச் சாவடிகளில் எந்தெந்த வாக்குச் சாவடிகளில் திமுகவுக்கு வாக்கு அதிகம் விழுந்திருக்கிறது என்ற பட்டியலைத் தயாரித்துவிட்டார்கள் திமுகவினர்.
275 வாக்குச்சாவடிகளில் 21 வாக்குச்சாவடிகளில் மட்டும்தான் திமுக வேட்பாளர் புகழேந்தி கூடுதலாக வாக்குகள் பெற்றுள்ளார். விக்கிரவாண்டி நகரம் தவிர வெங்காமூர், சங்கீதமங்கலம், செலவானூர், அன்னியூர், டட் நகர், அரியலூர் திருக்கை, நங்காத்தூர், அகரம் சித்தாமூர், நரசிங்கனூர், வி.சாத்தனூர், தொரவி, ரெட்டிகுப்பம், ராதாபுரம் ஆகிய இடங்களில் உள்ள 18 வாக்குச்சாவடிகளும் தலித் வாக்காளர்கள் அதிகம் உள்ள வாக்குச் சாவடிகள் ஆகும்.
21, 35,36,44,59,60,66, 101, 123, 136,155,206,207, 219, 236,243, 245,246,249,250,261,263 ஆகிய வாக்குச் சாவடிகளில் மட்டுமே திமுக அதிக ஓட்டு வாங்கியுள்ளது.

ஆழ்துளை கிணற்றில் விழுந்த 2 வயது சிறுவன்: நலமாக இருப்பதாகத் தகவல்- 6 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெறும் மீட்புப் போராட்டம்

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே கைவிடப்பட்ட 26 அடி ஆழ ஆழ்குழாய் குழியில் 2 வயது சிறுவன் சுஜித் தவறி விழுந்தார்.
6 மணி நேரமாக குழந்தையை மீட்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆக்சிஜன் உதவியுடன் குழந்தை நலமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.அமைச்சர் விஜயபாஸ்கர் அந்த இடத்தில் இருந்து வருகிறார், குழந்தை நலமாக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். குழந்தைக்கு தைரியம அளிக்கும் விதமாக உறவினர்கள் பேசி வருகின்றனர், குழந்தையிடமிருந்தும் எதிர்வினை வருவதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவிக்கின்றன.
மதுரையிலிருந்து மணிகண்டன் என்பவர் தயாரித்த சிறப்புக் கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் டிவிட்டரில் =save sujith என்ற ஹாஷ்டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது. குழந்தைகாக அனைவரும் பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

வெள்ளி, 25 அக்டோபர், 2019

ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் நியமனம்

div dir="ltr" style="text-align: left;" trbidi="on"> மாலைமலர் : ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்கள் நியமனம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீர் ஒரு யூனியன் பிரதேசமாகவும், லடாக் ஒரு யூனியன் பிரதேசமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனியன் பிரதேச அந்தஸ்து வரும் 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவுள்ளது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு புதிய கவர்னர்களை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இதுதொடர்பாக, ஜனாதிபதி அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு கிரிஷ் சந்திரா முர்மு, லடாக் யூனியன் பிரதேசத்துக்கு ஆர்.கே.மாத்தூர் ஆகியோர் புதிய ஆளுநர்களாக நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.
இதேபோல், மிசோராம் மாநிலத்துக்கு பி எஸ் ஸ்ரீதரன் பிள்ளை ஆளுநராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே ஜம்மு காஷ்மீர் ஆளுநராக செயல்பட்டு வந்த சத்யபால் மாலிக், கோவா ஆளுநராக மாற்றப்பட்டு உள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை -மீட்பு பணிகள் தீவிரம் வீடியோ


தினத்தந்தி :  திருச்சி அருகே ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தை -மீட்பு பணிகள் தீவிரம் திருச்சி அருகே மணப்பாறையில் ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பதிவு: அக்டோபர் 25, 2019 18:34 PM திருச்சி, திருச்சி அருகே மணப்பாறையில் உள்ள நடுக்காட்டுப்பட்டியில் 30 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் 2 வயது குழந்தை சுர்ஜித் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தது. ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. பொதுமக்கள் உதவியுடன் குழந்தையை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆழ்துளை கிணற்றுக்கு அருகே பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டு வருகிறது.

கூகுள் குவாண்டம் கம்ப்யூட்டர்.. அடுத்த பெரும் உலக சாதனை!


கேட் மெட்ஸ்  -   .hindutamil.in: இன்றுள்ள தொழில்நுட்பத்தில் பிற சூப்பர் கம்ப்யூட்டர்களால் கணக்கிட முடியாத வேகத்தில் கணக்கிடும் குவாண்டம் கம்ப்யூட்டரை உருவாக்கியிருப்பதாக கூகுள் நிறுவனம் அறிவித்திருப்பது அறிவியல் உலகைக் கொண்டாட்டத்தில் ஆழ்த்தியிருக்கிறது. 1980-களிலிருந்து பல்வேறு நிறுவனங்களின் விஞ்ஞானிகளும் தொழில்நுட்ப நிபுணர்களும் இரவு பகலாக ஆராய்ந்துவரும் விஷயத்தில் கூகுள் எட்டியிருக்கும் சாதனை இது.
செயற்கை நுண்ணறிவு அல்லது ரோபாட்டுகள் தயாரிப்பில் இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் மிகப் பெரிய அளவில் பயன்படவிருக்கிறது. இதன் ஆற்றல் எப்படிப்பட்டது என்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: பாரம்பரியமான கம்ப்யூட்டர்கள் 10,000 ஆண்டுகள் எடுத்துக்கொண்டாலும் முடிக்கத் திணறும் ஒரு கணக்கின் விடையை இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் 3 நிமிடங்கள் 20 விநாடிகளில் கண்டுபிடித்துவிடுமாம்.
பெரும் கண்டுபிடிப்பு
இந்த குவாண்டம் கம்ப்யூட்டர் கண்டுபிடிப்பின் சாதனை எப்படிப்பட்டது என்றால், அமெரிக்காவின் ரைட் சகோதரர்கள் 1903-ல் விமானத்தைக் கண்டுபிடித்த சாதனைக்கு ஈடானது என்கிறார்கள். மனிதனால் விண்ணில் பறக்கும் விமானத்தைக் கண்டுபிடித்துவிட முடியும் என்று அனேக ஆண்டுகள் நம்பிவந்தாலும் அதைச் சாதித்தவர்கள் ரைட் சகோதரர்கள்தான். ரைட் ஆரம்பத்தில் கண்டுபிடித்த விமானம் உண்மையில் பயனுள்ள ஆகாய விமானமாக இருந்திருக்கவில்லை. ஆனால், ஒரு உண்மையை நிரூபிக்க அது வடிவமைக்கப்பட்டது என்று அதுபற்றிக் குறிப்பிடுகிறார் விஞ்ஞானி ஸ்காட் ஆரன்சன். குவாண்டம் கம்ப்யூட்டர் குறித்து உலகுக்கு கூகுள் அறிவிப்பதற்கு முன்னால் அதன் திறனை ஆராய்ந்தவர் இவர்.

தம்பதியை கொன்றதைப்போல் சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தேன் - பெண் வாக்குமூலம்

தம்பதியை கொன்றதைப்போல் சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தேன் - பெண் வாக்குமூலம்
ராஜாமணி  மாலைமலர்: வேடசந்தூர் தம்பதி கொலை வழக்கில் கைதான பெண் தனது சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விசாரணைக்காக கண்ணம்மாள், பூங்கொடி ஆகியோரை போலீசார் அழைத்து வந்த காட்சி. வெள்ளகோவில்:
வேடசந்தூர் தம்பதியை கொன்றதைப்போல் சம்பந்தியையும் கொலை செய்து புதைத்தேன் என்று பெண் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாசநாயக்கனூரை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 50). நிதி நிறுவன அதிபர். அவருடைய மனைவி வசந்தாமணி(44). இவர்களின் மகன் திருமண விழா வருகிற நவம்பர் மாதம் 1-ந் தேதி நடைபெற இருந்தது. இதற்காக கடந்த 10-ந் தேதி இரவு திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தண்டகுமார வலசில் உள்ள செல்வராஜின் அக்காள் கண்ணம்மாள்(54) வீட்டுக்கு திருமண அழைப்பிதழ் கொடுக்க செல்வராஜ் தனது மனைவியுடன் வந்துள்ளார்.

நடிகை ராகவியின் கணவர் தற்கொலை.. சின்னத்திரையிலும் .. சில படங்களிலும் நடித்தவர்

actress
actressநக்கீரன் : தமிழ் சினிமா மற்றும் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகை ராகவியின் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழ் சினிமா வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. நடிகை ராகவி தமிழ் சினிமாவில் ராஜா சின்ன ரோஜா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர். பின்பு மருதுபாண்டி, ஒன்ஸ்மோர் மற்றும் சில படங்களில் நடித்தவர். சின்னத்திரையில் திருமதி செல்வம், மகாலட்சுமி போன்ற நாடகங்களில் நடித்து பிரபலமானவர்.
இவரது கணவர் சசிகுமார் கடன் பிரச்சனை காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டதாக சொல்லப்படுகிறது. அதாவது, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆண் சடலம் இருப்பதாக சிலர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

பிகில் படம் தாமதம் : வன்முறையில் ரசிகர்கள்... ஊசிப்போன பட்டாசுக்கு ஒன்பது வத்திகுச்சி


மின்னம்பலம் :கிருஷ்ணகிரியில் பிகில் படத்தின் சிறப்புக் காட்சி வெளியிடுவதில் தாமதமானதால் விஜய் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.
பல்வேறு சர்ச்சைகளையும், தடைகளையும் தாண்டி நடிகர் விஜய் நடித்துள்ள பிகில் படம் இன்று (அக்டோபர் 25) வெளியானது. முதலில் சிறப்பு காட்சிகளை வெளியிட அனுமதி மறுத்த தமிழக அரசு, இறுதியாக நேற்று மாலை சிறப்பு காட்சிகளை வெளியிட அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியைத் தொடர்ந்து விஜய் ரசிகர்கள் நள்ளிரவு முதல் படத்தைப் பார்க்க ஆர்வமுடன் காத்திருந்தனர். கிருஷ்ணகிரியில் உள்ள தியேட்டர்களில் படம் பார்க்க தியேட்டர்கள் வெளியில் ரசிகர்கள் குவிந்தனர். முதலில் பட்டாசு வெடித்து, மேளதாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், 5 ரோடு ரவுண்டானா அருகே உள்ள தியேட்டர்களில் படம் வெளியிட தாமதமாகியுள்ளது. 3 மணிக்கு வெளியிடப்பட வேண்டிய சிறப்புக் காட்சி ஒரு மணி நேரம் தாமதமாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த விஜய் ரசிகர்கள், வன்முறையில் ஈடுபட்டுள்ளனர்.

20 பெண்களை கொன்ற பங்களூரு மோகனுக்கு தூக்கு தண்டனை .

Hemavandhana  - /tamil.oneindia.com : பெங்களூரு: மொத்தம் 20 பெண்கள்.. கர்நாடக மாநிலத்தில் 20 பெண்களைக் கொன்ற சீரியல் கில்லர் சயனைடு மோகனுக்கு மரண தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 
கடந்த 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை நடந்த சம்பவம் இது: கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவன் மோகன். பெண் பித்தன்.. எந்த பெண்ணை பார்த்தாலும் விடுவது இல்லை.. கல்யாணம் செய்து கொள்கிறேன் என்று சொல்லியே நெருங்கி அவர்களை நாசம் செய்துவிடுவான். அவர்களுடன் ஜாலியாக இருந்து கடைசியில் கொலையும் செய்துவிடுவான்.. இவன் முழு நேர வேலையும் இதுதான்.. இவன் ஒரு சைக்கோ கில்லர்! 
 2003 முதல் 2009-ம் ஆண்டு வரை மட்டும் 20 பெண்களை ஏமாற்றி கொன்றிருக்கிறான். அத்தனை பெண்களுக்கும் சயனைடு தந்துதான் கொலை செய்துள்ளான். அதனால் சயனைடு மோகன் என்றே அழைக்கப்பட்டான்.  ஏற்கனவே 3 கொலை வழக்குகளில் மரண தண்டனை மோகனுக்கு கிடைத்துள்ளது. இப்போது 4வது வழக்கிலும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2005ம் ஆண்டு பெங்களூரு கெம்பேகவுடா பகுதியில் ஒரு பெண்ணை சீரழித்து இதே போல கொன்றதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 
முதலில் வேலை வாங்கி தருவதாக பெண்களிடம் பேச்சு கொடுப்பார். வேலை கிடைக்கும் என்ற ஆசையில் பெண்கள் இவரிடம் தொடர்பு கொள்வார்கள்.

தந்தையை கவனிக்காத மகளிடம் இருந்து பறிபோன ரூ.3.80 கோடி சொத்து மதுரை ...

தந்தையை கவனிக்காததால் மகளிடம் இருந்து பறிபோன ரூ.3.80 கோடி சொத்து
மாலைமலர் : 80 வயது தந்தையை பராமரிக்காததால் கல்லூரி பேராசிரியையிடம் இருந்து ரூ.3.80 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் பறிக்கப்பட்டு மீண்டும் முதியவரிடம் ஒப்படைக்கப்பட்டது. மதுரை : மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ளது கரடிக்கல். இந்த கிராமத்தை சேர்ந்தவர் வைரவன் (80). காண்டிராக்டராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற இவருக்கு 2 மகன்கள், ஒரு மகள். இதில் 2 மகன்களும் இறந்து விட்டனர். இதனால் தனது மகளான ஓய்வுபெற்ற கல்லூரி பேராசிரியையுடன் வைரவன் வசித்து வந்தார்.
சில ஆண்டுகள் நன்றாக பராமரித்தார் அவரது மகள். இதனால் வைரவன் தனது பெயரில் உள்ள ரூ.3.80 கோடி மதிப்பிலான 6.37 ஏக்கர் நிலத்தை தனது மகள் பெயருக்கு மாற்றி கொடுத்து விட்டார்.
சொத்து கை மாறியதும் வைரவனை தனது மகள் சரியாக கவனிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் வைரவன் மன வருத்தத்தில் மகளிடம் இருந்து பிரிந்து விட்டார்.

அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் அவதி


அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தம் - நோயாளிகள் அவதி
அரசு பொது மருத்துவமனையில் காத்திருந்த பொதுமக்கள்மாலைமலர் : தமிழகத்தில் அரசு டாக்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால், அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னை: தமிழகத்தில் உள்ள 24 அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 18 ஆயிரம் அரசு டாக்டர்கள் பணியாற்றி வருகிறார்கள். பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள், மூத்த மருத்துவர்கள், உதவி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் என பல்வேறு அளவில் அரசு மருத்துவ மனைகளிலும் மருத்துவ கல்லூரிகளிலும் பணியாற்றுகின்றனர்.
அரசு டாக்டர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த சில மாதங்களாக பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். கடந்த ஆகஸ்டு மாதம் ஒருநாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு அரசுக்கு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

சிதம்பரம் விரைவில் வெளிவருவார் . ஆதாரம் இல்லாத சிபிஐ..

congressநக்கீரன் : ஐ.என்.எக்ஸ். நிறுவன முறைகேடு விவகாரத்தில் திகார் சிறையில் இருக்கும் ப.சிதம்பரத்தின் நிலைமை மிக மோசமாக இருப்பதாக சொல்லப்படுகிறது. ப.சிதம்பரம் மீது சி.பி.ஐ. தொடுத்த ஐ.என்.எக்ஸ் வழக்கு வீக்கான வழக்கு தான் என்று சொல்லப்படுகிறது. அந்த நிறுவனத்தின் உரிமையாளரான இந்திராணி முகர்ஜியை ப.சிதம்பரம் சந்தித்தார் என்பதற்கான ஆதாரத்தை கூட சி.பி.ஐ.யால் காட்ட முடியவில்லை என்று கூறுகின்றனர். அப்படிப்பட்ட வழக்கில் இத்தனை நாள் ப.சிதம்பரத்தை தங்கள் சாமர்த்தியத்தால் சிறையில் வைத்து, அவரது எடையில் 5 கிலோவைக் குறைத்திருக்கிறது சி.பி.ஐ. அடுத்து ப.சி.க்கு எதிராக களமிறங்கியிருக்கும் அமலாக்கத்துறை வசம் நிறைய புதிய ஆதாரங்கள் இருக்கு என்று கூறிவருகின்றனர்.

விக்கிரவாண்டி நாங்குநேரி.. திமுகவின் சறுக்கல்? வாரிசு அரசியல் மட்டுமல்ல, அதையும் தாண்டி முக்கிய நிர்வாகிகள்...?

ஜீவா வனத்தையன் தமிழரிமா : திமுக வின் கேடு வாரிசு அரசியல்
மட்டுமல்ல, அதையும் தாண்டி முக்கிய நிர்வாகிகள் தங்களுக்கு கட்சியில் மாற்று உருவாகி விடாமல் பார்த்துக்கொள்வதுதான்.
கட்சியின் நீண்டகால உறுப்பினர்களை வளர விடாமல் தங்களுக்கு அடுத்ததாக கட்சியில் தங்கள் வாரிசுகளையே முன்நிறுத்துவதும், அதற்காக திறமைசாலிகளை கட்சியில் புறக்கணிப்பதும் தான் மிகப்பெரிய சுயநலமாக மாறி விடுகிறது.
இந்த குற்றச்சாட்டுகள் நீண்ட காலமாகவே திமுகவின் மீது வைக்கப்படுகிறது. இந்த குற்றச்சாட்டு திமுகவின் உறுப்பினர்களாலேயே வைக்கப் படுவதுதான் வேதனை...!!
எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுவது போல வன்மத்தோடு நாம் திமுக மீது குற்றச்சாட்டு கூறவில்லை. வருத்ததோடுதான் இந்தக் குற்றச்சாட்டை முன்வைக்கிறோம். தற்போதுள்ள மாவட்ட செயலாளர்களின் ஆதிக்கத்தால் எத்தனை திறமைசாலிகளை திமுக இழந்திருக்கிறது சற்றே சுய பரிசோதனை செய்து பார்த்தால் புரிந்து கொள்ளலாம். நாங்கள் எந்த சுய பரிசோதனைக்கும் தயாரில்லை என்று திமுக நிர்வாகிகள் சொல்வார்களேயானால் அதற்காக நாம் போராடவெல்லாம் முடியாது.
ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் ஒருமுறை இந்திய அரசியல் மட்டுமல்ல, உலக அரசியலே மாறிக்கொண்டிருக்கிறது. ஆனால் திமுக மட்டும் தங்களை நிர்வாகக்குழுவை மாற்றி அமைக்காமல் இருப்பது கட்சிக்குள் இளரத்தம் பாய்வதை தடுப்பது போலுள்ளது. அப்படியே நிர்வாகிகள் மாற்றம் ஏற்பட்டாலும் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்தும் நிர்வாகிகளின் வாரிசுகளே கட்சிக்குள் கோலோச்சுவது புதிய உறுப்பினர்களை கவர வாய்ப்பற்று போகிறது.

கனடாவும் சீக்கியர்களும் ... ஜாதி... மதம் ... அரசியல் ... சில செய்திகள

சீக்கியர்களில் ஜாதி பாகுபாடு மிக மிக அதிகமாக இருக்கிறது ...
அதுவும் கனடாவில் இருக்கிறது .. ஜாதி மாறி திருமணம் செய்தால் கொலையே செய்துவிடுவார்கள் ..
அதுவும் கனடாவிலேயே கூலி கொலையாளிகளை அமர்த்தி பெற்ற மகளையே கொலை செய்த சீக்கிய பாரம்பரியம் எல்லாம் கனடாவிலும் உண்டு ..
ரவிதாஸ்கிரி குருத்துவாரா தாழ்த்தப்பட்ட ஜாதிக்கு உரியது .. அதன் மிக அருகிலேயே டேரா குருத்துவாரா உயர் ஜாதி என்று கூறிக்கொள்வோரின் கோயில் ..
இரு பகுதியினரும் ஒருவரின் கோயிலுக்கு மறு பகுதியினர் செல்வதில்லை ,, சட்டத்தை மீறிய சம்பிரதாயம் உள்ளது .. மீறினால் இருட்டடி வழங்குவார்கள் .. கிட்டத்தட்ட அதே ஒரு நிலைமை குஜராத்திகளின் இந்து கோயில்களிலும் வந்துவிட்டது .. பாஜக இந்தியாவில் ஆட்சிக்கு வந்த பின்பு அவர்களின் பார்ப்பனா பனியா ஜாதி வெறி அதிகரிந்து விட்டது ...
சீக்கிய தலைப்பாகையேடு போஸ் கொடுக்கும் கனடிய அமைச்சர்கள் அது ஜாதிக்குரிய நிறங்களோடு இருப்பதை பற்றி என்ன கூறுவார்கள் ?
இதுதான் ஆளும் ஜஸ்டின் கட்சியின் இமாலய தவறு .. இதுதான் வலது சாரி கொன்செர்வேர்டிவ் கட்சியின் வாக்கு வங்கி உயர்ந்ததற்கு முக்கிய காரணம் .. கியுபெக் மாகாணத்தில் 16 எம்பிக்களை வைத்திருந்த புதிய ஜனநாயக கட்சி ஒரே ஒரு இடத்தில மட்டுமே தற்போது வெற்றி பெற்று உள்ளது .
இந்த கட்சியின் தலைவர் ஒரு தலைப்பாகை அணிந்த சீக் என்பது ஒரு காரணமாக இருக்கலாம் அல்லவா?
இந்த மாகாண அரசு மத அடையாளங்களுக்கு எதிரான சட்டங்களை அறிவித்துள்ளது தெரிந்ததே.. முகநூல் பதிவு

லண்டன் ட்ரக்கில் 39 உடல்கள்: சீன நாட்டினர் ;;; சீன தூதரக அலுவலர் விரைந்தார்

39-found-dead-in-truck-near-london-were-chinese-nationals-reports-china-embassy-staff-heading.hindutamil.in/ :39 உடல்கள் இருந்த ட்ரக்கை லண்டன் போலீஸார் ஓட்டிச் சென்றனர். | ஏ.எப்.பி.
பீஜிங், ஏ.எஃப்.பி.
லண்டனின் கிழக்குப் பகுதியில் உள்ள தொழிற்பேட்டையில் லாரி ஒன்றில் மர்மமான முறையில் 39 பேரின் உடல்கள் கன்டெய்னரில் அடைத்து வைக்கப்பட்டிருந்தது கடும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது என்றால், அவர்கள் சீன நாட்டினர் என்று வெளியாகி வரும் தகவல்கள் தற்போது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பல்கேரியாவிலிருந்து வேல்ஸ் வழியாக படகில் வந்தவர்கள் இவர்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் இவர்கள் 39 பேரும் எப்படி கொல்லப்பட்டனர், கொல்லப்பட்டு எப்படி கன்டெய்னரில் அடைக்கப்பட்டனர் என்ற விசாரணை நடைபெற்று வரும் நிலையில் இந்த லாரியை ஓட்டி வந்த 25 வயதான வடக்கு அயர்லாந்தைச் சேர்ந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பங்களாதேஷ் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை


Nusrat-Jahan-Rafi வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை Nusrat Jahan Rafi e1571951935541Nusrat-Jahan-Rafi-protest-630x420 வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை வங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்துக் கொலை- 16 பேருக்கு மரண தண்டனை Nusrat Jahan Rafi protest    வீரகேசரி:  பங்காளதேசத்தில் மாணவி உயிருடன் எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் 16 பேருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. வங்காளதேசம் தலைநகர் தாகாவில் இருந்து 160 கி.மீ தொலைவில் உள்ள பெனி பகுதியை சேர்ந்தவர் நுஸ்ரத் ஜஹான் ரபி. 19 வயதான இவர் அப்பகுதியில் உள்ள முஸ்லிம் பள்ளியில் கல்வி பயின்று வந்தார். அந்த கல்வி நிறுவனத்தின் தலைமை ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை தருவதாக கடந்த மார்ச் மாதம் 27 தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டார். தலைமை ஆசிரியரை விடுதலை செய்யுமாறு உள்ளூர் அரசியல்வாதிகளின் உதவியுடன் பள்ளியின் சில மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.

கீழடி: அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி!

கீழடி: அடுத்த கட்ட அகழாய்வுக்கு அனுமதி! மின்னம்பலம் : கீழடியில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் நிலையில் ஆறாம் கட்ட பணிக்கு மத்திய அரசு இன்று (அக்டோபர் 24) அனுமதி வழங்கியுள்ளது. கீழடியில்  நடத்தப்படும் அகழாய்வு மூலம், 2600 ஆண்டுகளுக்கு முன்பே வைகை கரை நாகரிகம் சிறந்து விளங்கியதற்கான சான்றுகள் கிடைத்து வருகின்றன. பானை ஓடுகள், தந்தங்களால் செய்யப்பட்ட அணிகலன்கள், நீர் செல்வதற்கான குழாய்கள் போன்ற பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. தற்போது ஐந்தாம் கட்ட பணி நடைபெற்று வருகிறது.
நேற்று (அக்டோபர் 23) நடைபெற்ற பணியின் போது, YD6/3 என்ற குழியில் பனையின் விளிம்பு போன்ற ஒரு அமைப்பு தென்பட்டது. அதை முழுமையாக வெளிப்படுத்திய போது, சிவப்பு வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றோடு ஒன்று பொருந்திய நிலையிலிருந்தது தெரியவந்தது. இது பாதுகாப்பாக நீரை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்று தொல்லியல் துறை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

ஹரியானாவில் ஆட்சியமைக்கப் போவது யார்? மகாராஷ்டிரா ஹரியான தேர்தல்களால் காங்கிரஸ் மீள்கிறது? வீடியோ


BBC : கடந்த அக்டோபர் 21-ஆம் தேதியன்று நடந்த மகாராஷ்டிரா மற்றும் ஹரியாணா மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (வியாழக்கிழமை) காலை முதல் நடந்தது. மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி மீண்டும் வெற்றி பெற்றுள்ளது. அதேவேளையில் ஹரியாணாவில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கடந்த 2014-இல் இம்மாநிலத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் 47 தொகுதிகளை வென்று பாஜக ஆட்சியமைத்தது. மனோகர் லால் கட்டார் மாநில முதல்வராக பொறுப்பேற்றார். 19 தொகுதிகளை பெற்ற இந்திய தேசிய லோக் தளம் எதிர்கட்சியானது. அதுவரை ஆட்சியில் இருந்த காங்கிரஸ் கட்சி, 15 இடங்களை மட்டுமே வெல்ல, மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.
e>இந்நிலையில் தற்போதைய தேர்தல் முடிவுகளில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில், பாஜக 40 தொகுதிகளில் வென்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 31 தொகுதிகளில் வென்றுள்ளது. இரு கட்சிகளுக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மற்ற கட்சிகள் மீது அரசியல் பார்வையாளர்களின் கவனம் திரும்பியுள்ளது.
முன்னாள் துணை பிரதமர் தேவிலாலின் கொள்ளுப் பேரனும், ஹரியாணா மாநில முன்னாள் முதல்வரும், இந்திய தேசிய லோக் தளம் கட்சியின் தலைவருமான ஓம் பிரகாஷ் சௌதாலாவின் பேரனுமான துஷ்யந்த் தலைமையிலான ஜனநாயக் ஜனதா கட்சி 10 தொகுதிகளை வென்றுள்ளது.
இக்கட்சிக்கு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் கூட்டணியில் பங்கேற்க அறைக்கூவல் விடுத்துள்ளன.

விக்கிரவாண்டி: திமுக வீழ்ந்தது எப்படி? விரிவான flashback

விக்கிரவாண்டி: திமுக வீழ்ந்தது எப்படி?அக்டோபர் 21 ஆம் தேதி நடந்து முடிந்த விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல் முடிவுகள் அக்டோபர் 24 ஆம் தேதி வெளிவந்திருக்கின்றன. விக்கிரவாண்டி தொகுதியில் அதிமுக மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் விக்கிரவாண்டி தொகுதியைக் கைப்பற்றிய திமுக, இந்த இடைத்தேர்தலில் அதை அதிமுகவிடம் இழந்திருக்கிறது.
விக்கிரவாண்டி ரிசல்ட் விவரம்
அதிமுக சார்பில் போட்டியிட்ட முத்தமிழ்ச்செல்வன் ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 766 வாக்குகள் பெற்றிருக்கிறார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் புகழேந்தி 68 ஆயிரத்து 842 வாக்குகள் பெற்று தோல்வியைத் தழுவியிருக்கிறார். பதிவான வாக்குகளில் அதிமுக வேட்பாளர் 60% பெற்றிருக்கிற நிலையில் திமுக வேட்பாளர் புகழேந்தி 36.48 சதவிகிதத்தை ஈட்டியுள்ளார். இந்த இருவரைத் தாண்டி நாம் தமிழர் வேட்பாளர் கந்தசாமி 2 ஆயிரத்து 921 வாக்குகளைப் பெற்று வெகுதூரத்தில் மூன்றாம் இடத்தோடு நிற்கிறார்.
2016-2019 ஒப்பீடு!
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுக, திமுக, பாமக ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன. தேமுதிக, மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள், மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மக்கள் நலக் கூட்டணி அமைத்து அதன் சார்பில் மார்க்சிஸ்ட் கட்சி விக்கிரவாண்டியில் போட்டியிட்டது.

வியாழன், 24 அக்டோபர், 2019

இந்திய பயணிகள் விமானத்தை ஆபத்துக்கு உள்ளாக்கி அரசியல் ... பாஜகவின் தேசத்துரோக சதி?


JP Terry : உரக்க சொல்லப்படாமல் இருட்டடிப்பு செய்யப்பட்ட​ செய்தி:
மஹராஷ்டிரா, ஹரியானா தேர்தல் வாக்குபதிவுக்கு சில​ தினங்களுக்கு முன், பாகிஸ்தான் பகுதியில் பறக்கும் இந்திய​ பயணிகள் விமானத்திற்கு "பயணிகள் விமான கோடு" கொடுக்காமல் "இராணுவ​ விமான கோடு" கொடுத்து இந்தியா பறக்கவிடுகிறது.
இராணுவ​ கோடு கொண்ட​ இந்திய விமானம் தன் பகுதியில் பறப்பதை பாகிஸ்தான் அறிந்து கொள்கிறது. அன்று பாகிஸ்தான் அவசரப்பட்டு இராணுவ​ விமானம் என நினைத்து இந்திய​ பயணிகள் விமானத்தை தாக்கியிருந்தால்,
இந்திய​ விமானமும் அதில் பயணம் செய்த​ பயணிகளும் நடுவானிலேயே எரிந்து சாம்பல் ஆகியிருந்திருப்பார்கள். அப்படியொரு சம்பவம் நடந்திருந்தால் அதனை வைத்து இந்தியாவில் யார் ஆதாயம் அடைந்திருப்பார் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்.

ஆனால் பாகிஸ்தான் அவசரம் காட்டாமல் பொறுப்பாக​ செயல்படுகிறது. அது உண்மையிலேயே இராணுவ​ விமானம் தானா என்பதை உறுதி செய்ய​ முடிவெடுக்கிறார்கள்.
இறுதியில் அது இந்திய​ பயணிகள் விமானம் என அறிந்து அந்த​ விமானத்திற்கு பாதுகாப்பு கொடுத்து பயணிகளை பாகிஸ்தான் காப்பாற்றியது.

நாம் தமிழர் Vs பனங்காட்டுப் படை! -சீமானுக்கு அதிர்ச்சி கொடுத்த நாங்குநேரி

Hari Nadarvikatan.com - பி.ஆண்டனிராஜ் -எல்.ராஜேந்திரன் : நாங்குநேரி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியை விடவும் சுயேச்சை வேட்பாளரான ஹரி நாடார் அதிக வாக்குகளைப் பெற்றுள்ளார். நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 21-ம் தேதி நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அ.தி.மு.க சார்பாக நாராயணன், காங்கிரஸ் சார்பாக ரூபி மனோகரன் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும், நாம் தமிழர் கட்சியின் சார்பாக ராஜநாராயணன், ராக்கெட் ராஜாவின் பனங்காட்டுப் படை கட்சியின் சார்பாக ஹரி நாடார் ஆகியோர் களமிறங்கினர்.
இந்தத் தொகுதியில் சுயேச்சைகள் உள்ளிட்ட 23 பேர் போட்டியிட்டனர். தொகுதியில் பதிவான வாக்குகள், நெல்லை அரசு பொறியியல் கல்லூரியில் இன்று எண்ணப்பட்டன. அதனால் அந்தப் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலாகவே அ.தி.மு.க வேட்பாளர் நாராயணன் முன்னணியிலேயே இருந்தார்.
நாம் தமிழர் கட்சி கணிசமான வாக்குகளைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அக்கட்சியின் வேட்பாளரான ராஜநாராயணனுக்கு எதிர்பார்த்த அளவுக்கு வாக்குகள் கிடைக்கவில்லை. தற்போதைய நிலவரப்படி நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் 3,489 வாக்குகள் பெற்றுள்ள நிலையில், அவரைவிட சுயேச்சை வேட்பாளர் பனங்காட்டுப் படை வேட்பாளர் ஹரி நாடார் 4,243 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

அமைச்சர்களின் கடைசி நேர கைங்கர்யம்!- நாங்குநேரியில் அ.தி.மு.க வெற்றி பின்னணி

ADMK candidate Narayanan
Nanguneri boardvikatan.com - பி.ஆண்டனிராஜ் - எல்.ராஜேந்திரன் நாங்குநேரி சட்டமன்றத்துக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் கோட்டையைத் தகர்த்து அ.தி.மு.க வெற்றியைக் கைப்பற்றியிருக்கிறது. அ.தி.மு.க-வின் பிரசார வியூகத்துக்குக் கிடைத்த வெற்றியாகவே இதை அக்கட்சியினர் குறிப்பிடுகிறார்கள். நெல்லை மாவட்டம், நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிக்கு கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அ.தி.மு.க வேட்பாளராக ரெட்டியார்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன், காங்கிரஸ் சார்பாக சென்னையைச் சேர்ந்த தொழிலதிபரான ரூபி மனோகரன் ஆகியோர் களமிறங்கினார்கள். நாம் தமிழர் கட்சி வேட்பாளராக ராஜ்நாராயணன், பனங்காட்டுப் படை கட்சி சார்பில் ஹரிநாடார் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 23 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

மகாராஷ்டிரா . ஹரியானா தேர்தல் முடிவுகள் ... ஒரே பார்வையில் ..

மகராஷ்டிரா  மொத்த தொகுதிகள் 288
                               :பாஜக            156 தொகுதிகளில் வெற்றி !
                             காங்கிரஸ்  106 தொகுதிகளில்  வெற்றி
                      ஏனையவை      26 தொகுதிகளில்   வெற்றி !

ஹரியானா  மொத்த தொகுதிகள்  90 :
                               பாஜக    :       40       தொகுதிகளில்   வெற்றி   !
                               காங்கிரஸ் :30     தொகுதிகளில் வெற்றி !
                           ஏனையவை  :220   தொகுதிகளில்  வெற்றி  !
ஹரியானா   :
BBC : இன்று (வியாழக்கிழமை) நடந்துவரும் மகாராஷ்டிர மாநில சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் பகல் 2 மணி நிலவரப்படி பாஜக- சிவசேனா கூட்டணி 162 இடங்களிலும், காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி 101 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மகாராஷ்டிராவில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் பலவற்றிலும் பாஜக கூட்டணி 200க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்லும் என்று கணிக்கப்பட்ட நிலையில், தற்போதைய முன்னணி நிலவரங்களின்படி 160 முதல் 170 இடங்கள் வரை மட்டுமே இந்த கூட்டணி வெல்லும் வாய்ப்புகள் உள்ளது.
தேர்தலுக்கு முன்பு காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளில் இருந்து பல முன்னணி தலைவர்கள் தங்கள் கட்சிகளில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்தனர். சிலர் தங்களை சிவசேனாவிலும் இணைத்துக் கொண்டனர்.

நாங்குநேரி , விக்கிரவாண்டி தொகுதிகளில் அதிமுக பெருவெற்றி!

மாலைமலர் :   நாங்குநேரி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக
வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 32 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
நாங்குநேரி: தமிழகத்தில் நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் கடந்த 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்தே நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன், விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.
நாங்குநேரியில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன், விக்கிரவாண்டியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆகியோர் பின்தங்கினர்.
விக்கிரவாண்டியில் மதியம் ஒரு மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்த நிலையில், அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச் செல்வன், 44 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதேபோல் நாங்குநேரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் தொடர்ந்து முன்னிலையில் இருந்தார்.
பிற்பகல் 2.45 மணியளவில் வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்தது. ரெட்டியார்பட்டி நாராயணன், 32 ஆயிரத்து 333 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்./div> இடைத்தேர்தல் நடந்த 2 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றிருப்பதன்மூலம், சட்டசபையில் அதிமுகவின் பலம் 124 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது

நான்குநேரி , விக்கிரவாண்டி , காமராஜ் நகர் இடைத்தேர்தல் முடிவுகள் லைவ் ... வீடியோ

மகராஷ்டிரா ஹரியானா தேர்தல் முடிவுகள் லைவ் .. வீடியோ Maharashtra, Haryana election results LIVE

மகாராஷ்டிரம், ஹரியாணாவில் இன்று வாக்கு எண்ணிக்கை

mh  தினமணி :   மகாராஷ்டிரம், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இரு மாநிலங்களிலும் கடந்த 21-ஆம் தேதி சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற்றது. 288 தொகுதிகளைக் கொண்ட மகாராஷ்டிரத்தில் 61.13 சதவீதமும், 90 தொகுதிகளை உள்ளடக்கிய ஹரியாணாவில் 68 சதவீதமும் வாக்குகள் பதிவாகின. இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தேர்தல் அதிகாரிகள் கூறுகையில், மகாராஷ்டிரத்தில் 269 மையங்களில் வியாழக்கிழமை வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இதையொட்டி, வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 25 ஆயிரம் வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்றனர். மகாராஷ்டிரத்தில் ஆளும் பாஜக - சிவசேனை கூட்டணி ஆட்சியைத் தக்க வைக்கும் என்று கருத்துக் கணிப்புகளும், தேர்தலுக்கு பிந்தைய வாக்குக் கணிப்புகளும் தெரிவித்துள்ளன. இதனால், அந்தக் கூட்டணி உற்சாகத்தில் உள்ளது. அதேசமயம், கருத்துக் கணிப்பு முடிவுகளைத் தாண்டி, தங்களுக்கு வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி உள்ளது.ஆளும் கூட்டணியில், பாஜக 164 இடங்களிலும், சிவசேனை 124 இடங்களிலும் போட்டியிட்டன. எதிர்க்கட்சிக் கூட்டணியில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் முறையே 147, 121 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தன. 1,400 சுயேச்சைகள் உள்பட 3,237 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

விக்கிரவாண்டி, நாங்குநேரி: வாக்கு எண்ணிக்கை 8 மணிக்கு ஆரம்பம் .. வெற்றி யாருக்கு?

விக்கிரவாண்டி, நாங்குநேரி: யாருக்கு வெற்றி?மின்னம்பலம் :
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ளது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப் பதிவு கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. விக்கிரவாண்டி தொகுதியில் 84.41 சதவிகித வாக்குகளும், நாங்குநேரி தொகுதியில் 66 சதவிகித வாக்குகளும் பதிவாகின. விக்கிரவாண்டி தொகுதி வாக்கு எண்ணிக்கை விழுப்புரம் அருகேயுள்ள இ.எஸ்.பொறியியல் கல்லூரியிலும், நாங்குநேரி வாக்கு எண்ணிக்கை பாளையங்கோட்டை அரசு பொறியியல் கல்லூரியிலும் நடைபெறுகிறது. இதற்காக இரண்டு இடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களில் சீலிடப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீர் : பத்திரத்தில் கையெழுத்துப் போட்டால்தான் விடுதலை !


கலைமதிஅடக்குமுறையின் புதிய வடிவங்களாக முன்னெச்சரிக்கையாக கைது செய்யப்படுவதையும், கைதுசெய்யப்பட்டவர்களை பத்திரங்களில் கையெழுத்து வாங்கிக்கொண்டு விடுவிப்பதையும்  பாஜக அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் ஜம்மு – காஷ்மீரின் சிறந்து அந்தஸ்து வழங்கிய 370 பிரிவை நீக்கியது மோடி அரசாங்கம். போராட்டங்களுக்குப் பயந்து அரசியல் தலைவர்கள், கிளர்ச்சியாளர்கள், போராட்டக்காரர்கள் என பலர் கைது செய்யப்பட்டனர்.  இந்நிலையில் சில தலைவர்களை பத்திரத்தில் கையெழுத்து வாங்கிக் கொண்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய நிகழ்வுகள் குறித்து கருத்து சொல்லக்கூடாது, பேசக்கூடாது என பத்திரத்தில் கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கிக்கொண்டு தலைவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அரசியலமைப்பு தந்திருக்கும் அடிப்படை உரிமையான பேச்சு சுதந்திரத்தை இது மீறுகிறது என கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.

கீழடி நகர நாகரிகத்துக்கு மேலும் ஒரு சாட்சி: வடிகால் அமைப்புகள் கண்டெடுப்பு

கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்துக்கு மேலும் ஒரு சாட்சி: வடிகால்
அமைப்புகள் கண்டெடுப்பு- தொல்லியல் துறை தகவல்
(தினமணி 23.10.2019):

கீழடி அகழாய்வில் நகர நாகரிகத்துக்கு மேலும் ஒரு சாட்சி கண்டறியப்பட்டுள்ளது. சுடுமண் குழாய்களால் அமைக்கப்பட்ட வடிகால் அமைப்புகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, தொல்லியல் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:
கீழடி அகழாய்வில் ஒரு குழியில் சிவப்பு வண்ணத்தில் செம்மையாக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று இணைத்து நன்கு பொருத்திய நிலையில் காணப்பட்டன. ஒவ்வொரு குழாயும் 60 சென்டிமீட்டர் நீளமும், வாய்ப்பகுதி 20 சென்டிமீட்டர் விட்டமும் கொண்டுள்ளன. இரண்டு குழாய்களிலும் உள்ள 10 விளிம்புகள் ஒன்றுடன் ஒன்று இணைத்து காணும் போது சுருள் வடிவக் குழாய் போன்று காணப்படுகிறது.
இந்தக் குழாய் ஒன்றின் வாய்ப் பகுதியில் மூன்று துளைகள் இடப்பட்டுள்ளன. இந்தக் குழாய்களானது மிக கவனமாக ஒன்றுடன் ஒன்று நன்கு பொருத்தப்பட்டுள்ளதால், பாதுகாப்பான நீர் செல்வதற்கான வடிகால் குழாய் அமைப்பாக பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். சுருள் வடிவிலான சுடுமண் குழாயின் கீழே பீப்பாய் வடிவிலான மூன்று சுடுமண் குழாய்கள் ஒன்றுடன் ஒன்று பொருத்திய நிலையில் காணப்பட்டன. இந்த இரண்டு குழாய்களும் மேலும் கீழுமாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. எனவே இவை தனித்தனி பயன்பாட்டுக்கு உபயோகப்படுத்தப்பட்டிருக்க வேண்டும்.

விஜயகுமார் ( கல்கி சாமியார்) பார்களில் தண்ணி அடித்துவிட்டு வீட்டுக்கு வர நேரமாகிவிடும்

சாவித்திரி கண்ணன் : விஜயகுமாரைப் பற்றி( கல்கி சாமியார்) நான் விசாரிக்க
களமிறங்கிய காலகட்டத்தில் அவர் விஸ்வரூப வளர்ச்சி காண தொடங்கிய ஆரம்ப நிலை!
இப்போது இருப்பது போல தேஜஸான உடல்வாகிலோ,பட்டு வேட்டி,பட்டு சட்டையிலோ அந்த காலத்தில் அவர் தோற்றம் காட்டவில்லை!
மெலிந்த தேகம்,காவி உடையில் அவர் நின்றபடி இருக்கும் ஒரே போட்டோ மட்டும் தான் அன்று!
சுமார் 25 வருடங்கள் கடந்துவிட்டதால், எல்லாம் நினைவில் இல்லை!
ஆனால்,ஒரே ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை அவர் வாழ்ந்த பெரம்பூர் இல்லத் தெருவாசிகள் சொன்னது மட்டும் மறக்க முடியாதது.
விஜயகுமாருக்கு சிகரெட் பிடிக்கும் பழக்கமும்,பாரில் அளவோடு தண்ணி அடிக்கும் பழக்கமும் இருந்தது. ஜே.கிருஷ்ணமூர்த்தியின் மீது ஈடுபாடு இருந்தது. கொஞ்சம் அறிவுத்தேடல் உள்ள இயல்பான மனிதர் தான் என்பதை நாம் யூகிக்கலாம்!
ஆகவே அவர் இரவு நேரம் கடந்து தான் வீட்டுக்கு வருவாராம்! அப்போது அவரது மனைவி நன்கு தூங்கிவிடுவாராம்.
அவர் மனைவிக்கு ஒரு சின்ன பலஹீனம் இருந்தது. அவர் தூங்கிவிட்டால் அவரை யாரும் சுலபத்தில் எழுப்ப முடியாது!

புதன், 23 அக்டோபர், 2019

BBC : கனடா தேர்தலில் மீண்டும் வென்ற இலங்கை தமிழர்! ..... யார் இந்த Gary ஆனந்தசங்கரி?

கனடா நாடாளுமன்ற தேர்தலில் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி
(சந்திரசங்கரி ஆனந்தசங்கரி )  21,241 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.
கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் பெரும்பான்மை வாக்கு வித்தியாசத்தில் இரண்டாவது முறையாக அந்நாட்டு எம்பியாகியுள்ளார் இலங்கை தமிழரான கெரி ஆனந்தசங்கரி.
ஆளும் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட கெரி ஆனந்த சங்கரி, இந்த தேர்தலில் 62.3 சதவீத வாக்குகள் பெற்று வென்றுள்ளார்.
ஸ்காபரோ ரூஜ்பார்க் தொகுதியில் 2015-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கெரி ஆனந்தசங்கரி, 34.8 வீத வாக்குகளை பெற்று வெற்றியை தன்வசப்படுத்திக் கொண்டார். யார் இந்த கெரி ஆனந்தசங்கரி? இலங்கையின் மூத்த தமிழ் அரசியல்வாதியான தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரியின் ( புலிகளின் கொலை பட்டியலில் இருந்தவர்)   இளைய புதல்வரே கெரி ஆனந்தசங்கரி.
இலங்கையில் காணப்பட்ட யுத்த சூழ்நிலையை அடுத்து, தனது 13ஆவது வயதில் புலம்பெயர்ந்து அவர் கனடா சென்றார்.
கனடாவில் தமிழ் இளைஞர்கள் மத்தியில் ஏற்படும் வன்முறைகளை தீர்த்து வைக்கும் வகையில், கனடாவில் இளைஞர்கள் சேவை நிலையமொன்றை அவர் ஆரம்பித்துள்ளார்.

பாஜக : தெலுங்கு தேசம் கட்சியை எங்களோடு இணையுங்கள் ...... NTR உருவாக்கிய கட்சியை அப்படியே முழுங்க ..

Explained : Explained: Why BJP wants TDP to ‘merge’ with it in Andhra PradeshExplained : தெலுங்கு தேசக் கட்சியை எங்களோடு இணையுங்கள் என்று பாஜக சொல்லக் காரணம்? 
 ஒரு சதவீதம் கூட ஓட்டு வாங்காத கட்சி, ஒரு பிராதான கட்சியோடு கூட்டணி வைக்க முடியாது, வேண்டுமானாலும் வந்து இணையுங்கள் என்று சொல்வதில் தான் பாஜகவின் அரசியல்...
லிஸ் மேத்யூtamil.indianexpress.com : 
தெலுங்கு தேசம் கட்சியை (டிடிபி) தங்களது கட்சியோடு ஒன்றிணைக்கும் திட்டத்தை பாரதிய ஜனதா கட்சி சமீப நாட்களில் பகிரங்கமாகவே கூறிவருகிறது. ஆந்திரா மாநில பாஜக தலைவர் ஜிவிஎல் நரசிம்ம ராவ், எங்களோடு இணைவதற்குத் தயாரா?  என்று இரண்டு முறை தெலுங்கு தேசக் கட்சியைப் பார்த்துக் கேட்டுள்ளார். தயாராக இருந்தால், அதுகுறித்த பேச்சுவார்த்தை தொடங்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் வெறும் 1 சதவீதம் ஓட்டு வாங்க முடியாத பாஜக, 40 சதவீத ஓட்டுவாங்கிய தெலுங்கு தேசக் கட்சியைப்  பார்த்து எங்களோடு இணைத்துக் கொள்ளுங்கள் என்று கூறுவது வேடிக்கையாய் இருந்தாலும், ஆந்திராவின் தற்போது நடக்கும் அரசியல் நிகழ்வுகளை நாம் புரட்டி பார்த்தால் தான் இதற்கான விளக்கம் கிடைக்கும்.

இன்போசிஸ் முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு... வீடியோ


இன்போசிஸ் பங்குகள்: முதலீட்டாளர்களுக்கு 53,000 கோடி இழப்பு!மின்னம்பலம் : இன்போசிஸ் நிகர லாபத்தை உயர்த்திக் காட்ட தலைமை அதிகாரிகள் செய்த மோசடிகள் தொடர்பான ‘விசில்பிளோவர்’ புகாரைத் தொடர்ந்து, இன்போசிஸ் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 53 ஆயிரத்து, 451 கோடி ரூபாய் அளவுக்கு குறைந்தது.
இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனங்களில் நாராயண மூர்த்தியின் இன்போசிஸ் நிறுவனமும் ஒன்று. இன்போசிஸ் நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் பல முறைகேடுகளை நிறுவனத்தில் முதன்மைச் செயல் அதிகாரி (CEO) சலீல் பரேக் மற்றும் முதன்மை நிதி அதிகாரி (CFO) நிலஞ்சன் ராய் செய்து இருப்பதாக நிறுவனத்தின் ஊழியர்கள் கடந்த செப்டம்பர் 20ஆம் தேதி இரு பக்க புகார் கடிதத்தை பெங்களூருவிலுள்ள நிறுவனத்தின் இயக்குநர் குழுவுக்கு அனுப்பியுள்ளனர். ஆனால், இதற்கு பதில் எதுவும் கிடைக்காத நிலையில், அக்டோபர் 3ஆம் தேதி அமெரிக்காவிலுள்ள ‘விசில்ஃப்ளோவர் பாதுகாப்புத் திட்டத்திற்கு’ கடிதம் எழுதப்பட்டது. அதன் பின்னர் தான் இந்த முறைகேடுகள் வெளிவரத் துவங்கியிருக்கிறது.

நீதிமன்றத்தில் மு.க.அழகிரி.. நில அபகரிப்பு வழக்கு

நில அபகரிப்பு வழக்கு:  நீதிமன்றத்தில் மு.க.அழகிரிமின்னம்பலம் : நில அபகரிப்பு தொடர்பான வழக்கில் மதுரை நீதிமன்றத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி இன்று ஆஜரானார்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிவரக்கோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சரும், கலைஞரின் மகனுமான மு.க.அழகிரிக்கு சொந்தமான தயா பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. தயா பொறியியல் கல்லூரி கட்டுவதற்காக அப்பகுதியில் இருக்கும் விநாயகர் கோயிலுக்கு சொந்தமான 44 சென்ட் நிலத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமித்ததாகவும், இது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமானது என்றும் கூறி நில அபகரிப்பு பிரிவு போலீஸில் 2014ஆம் ஆண்டு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணை செய்த போலீசார் அழகிரி மீது வழக்குப் பதிவு செய்தனர்.

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் ... விசாரணையை தாமதப்படுத்த அதிமுக முழு மூச்சில் ...

ராதாபுரம் வழக்கு: உச்ச நீதிமன்றத்தில்  என்ன நடந்தது?மின்னம்பலம் : ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவுகளை வெளியிட உச்ச நீதிமன்றம் பிறப்பித்த இடைக் காலத் தடை அக்டோபர் 23 ஆம் தேதியான இன்றோடு முடிகிறது. இந்த நிலையில் இந்த வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்த்து தமிழ்நாட்டு அரசியல் வட்டாரங்கள் காத்திருந்தன. ஆனால் வழக்கு இன்று பிற்பகல் வரை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை.
ராதாபுரம் சட்டமன்ற தொகுதியின் மறு வாக்கு எண்ணிக்கை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்துக்குள் அக்டோபர் 4 ஆம் தேதி நீதிமன்றத்தால் நியமனம் செய்யப்பட்ட கண்காணிப்பு அதிகாரி முன்னிலையில் நடைபெற்று முடிந்தது.
ஆனால் ராதாபுரம் தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. இன்பதுரை உச்ச நீதிமன்றத்தில் அவசரமாக மறுவாக்கு எண்ணிக்கைக்கு தடை கோரி வழக்குத் தொடர்ந்தார்.