மொய்லிvikatanஜூன் 26 தேதியிட்ட ஆனந்த விகடன் இதழில் “மிரட்டலும் துரோகமும்” என்ற தலைப்பிட்டு ஒரு தலையங்கம் வந்திருக்கிறது. அதில் பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயுத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லியின் மிரட்டல் லாபி குறித்து எழுதியிருக்கிறார்கள்.
பெட்ரோலியத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி.
அதாவது, “நமது நாட்டுக்குத் தேவையான பெட்ரோலிய வளம் நம்மிடமே நிலத்தடியில் தாராளமாகத் தேங்கிக் கிடக்கிறதாம். ஆனால், அதை முழுமையாக எடுக்க முடியாதபடி அதிகார வட்டாரமும், முகம் தெரியாத ஒரு கூட்டமும் தடை போடுகிறதாம். ‘பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி குறைந்துவிடக் கூடாது என்ற நோக்கில்தான் அந்த முகம் தெரியாத கூட்டம் முட்டுக்கட்டை போடுகிறது’ என்று சொல்கிறாரே தவிர, அந்தக் கூட்டத்தை அடையாளம் காட்ட மறுக்கும் மொய்லி, ‘எனக்கு முன் இருந்த பெட்ரோலியத் துறை அமைச்சர்களுக்கும் அந்த லாபியிடமிருந்து மிரட்டல் வந்துள்ளது’ என்று கூடுதல் தகவல் சொல்கிறார். ஆனால், முந்தைய பி.ஜே.பி. ஆட்சியில் இதே துறையின் அமைச்சராக இருந்த ராம் நாயக், ‘அப்படி எல்லாம் மிரட்டல் எதுவும் வந்தது கிடையாது’ என்று போட்டு உடைத்துவிட்டார்.” என்று எழுதியிருக்கிறது விகடன்.