![]() |
ராதா மனோகர் : ஆர் எஸ் எஸ் இயக்கத்தை தடைசெய்யவேண்டும்
இந்தியா மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும்.
இது போன்ற கடுமையான முழக்கங்கள் இந்தியாவுக்கு எதிராக கனடாவில் எழுவது சாதாரண நிகழ்வுகள் அல்ல!
இவை வெறும் கனடா மட்டும் தொடர்புடைய நிகழ்வுகள் மட்டுமல்ல.
அமெரிக்காவும் கனடாவும் பல வழிகளில் நெருங்கிய சகோதர நாடுகள்தான்
அமெரிக்காவின் கருத்துக்களும் கனடாவின் கருத்துக்களும் பல விடயங்களில் வேறு வேறு அல்ல.
இந்திய மதவாத அரசியலை உலக நாடுகள் எப்படி நோக்குகின்றன என்பதற்கு தற்போதைய கனடாவின் இந்துத்வாவுக்கு எதிரான கருத்துக்கள் கவனத்திற்கு உரியன.
இந்திய மதவாத அரசியல் வெறும் தெற்காசிய பிரச்சனை என்ற கட்டத்தை தாண்டி இது ஒரு அமெரிக்க கனடா மற்றும் உலக நாடுகளின் முக்கிய பிரச்சனையாக மாறிக்கொண்டு வருகிறது.
இதற்கான அறிகுறிதான் கனடாவில் எழுந்துள்ள ஆர் எஸ் எஸ் தடை என்ற முழக்கம்.