சனி, 2 மார்ச், 2024

யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தை முற்றுகையிட்டு மீனவர்கள் போராட்டம் !

தேசம் நெட்  arulmolivarman  வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டம் 5ஆம் திகதி கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகம் வரை நடைபெறும் என கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி. சுப்பிரமணியம்  தெரிவித்துள்ளார்.
இன்று (02) அவரது இல்லத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டமானது முல்லைத்தீவிலே நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் 5ஆம் திகதி நாங்கள் வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகத்தை முற்றுகை இடுவதற்கான போராட்டத்துக்கு ஏற்பாடு செய்திருந்தோம்.

ஓட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம்... ஸ்டாலின் முடிவு? சீனியர்கள் அதிர்ச்சி! Aara

மின்னம்பலம் :  திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினின் பிறந்த நாளை ஒட்டி அவருக்கு கூட்டணித் தலைவர்கள் முதல் தொண்டர்கள் வரை பலரும் வாழ்த்து சொன்ன காட்சிகள் இன்பாக்சில் வந்து விழுந்தன.
“மக்களவைத் தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில்… தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர், பாஜக தலைமையிலான கூட்டணி ஆகிய நான்கு முனை போட்டி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
அதேநேரம் பாஜக இந்த தேர்தலில் எப்படியாவது மூன்றாவது இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்பதுதான் அக்கட்சியின் தேசியத் தலைமையின் திட்டம். அதை வைத்து அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கியப் பங்காற்ற வேண்டும் என்பதும் பாஜகவின் தொடர் திட்டம்.

Karnataka வெடித்தது சிலிண்டர் இல்லை.. வீரியமிக்க வெடிகுண்டு- கர்நாடக முதல்வர் சித்தராமையா

மாலை மலர்  : கர்நாடகா மாநிலம், பெங்களூரு வைட் பீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் இன்று வெடி விபத்து ஏற்பட்டது. வெடி விபத்தில், உணவகத்தில் இருந்த 3 ஊழியர்கள் மற்றும் ஒரு வாடிக்கையாளர் என 4 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாநகர காவல் ஆணையர் விரைந்து ஆய்வு செய்தார். மேலும், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் தேசிய புலனாய்வு முகமை அமைப்பினர் ஆய்வு நடத்தியுள்ளனர்.
இதில், சிலிண்டர் வெடிக்கவில்லை என்று முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 10 விநாடிகளில் இரண்டு முறை வெடி சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது.

வெள்ளி, 1 மார்ச், 2024

ஜாபர் சாதிக் பின்னணியில் இருந்த போதைப்பொருள் கும்பல்

 மாலைமலர் : சென்னை டெல்லியில் கைலாஷ் பார்க் பகுதியில் உணவுப்பொருள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த போதைப் பொருட்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு பிடிபட்டது.
தேங்காய் பவுடர் மற்றும் சத்துமாவு பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து சூடோ பெட்ரின் என்கிற போதைப்பொருள் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கு கடத்தப்பட்டிருப்பது அம்பலமானது.
இதுதொடர்பாக கடந்த 15-ந் தேதி சென்னையை சேர்ந்த முகேஷ், முஜிபுர், விழுப்புரத்தை சேர்ந்த அசோக்குமார் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளரான ஜாபர் சாதிக்குக்கு போதைப் பொருள் கடத்தலில் பெரிய அளவில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதை தொடர்ந்து தி.மு.க. அயலக அணியில் பொறுப்பில் இருந்த ஜாபர் சாதிக் அதிரடியாக நீக்கப்பட்டார். சினிமாவிலும் தடம் பதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் ஜாபர் சாதிக் பல படங்களையும் தயாரித்து வந்தார்.

சாந்தனின் உடலை இலங்கைக்கு அனுப்ப – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு !

 thinakkural.lk சென்னையில் உயிரிழந்த சாந்தனின் உடலை
இலங்கைக்கு அனுப்பி வைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திய முன்னாள் பிரதமா் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று விடுவிக்கப்பட்ட சாந்தன், திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்தாா்.
அவர் இலங்கை திரும்பலாம் என கடந்த 24 ஆம் திகதி இந்திய மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது. இந்நிலையில், கல்லீரல் செயலிழப்பு காரணமாக சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சாந்தன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (28) காலை மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது.


அவரின் உடலை இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், சாந்தனை இலங்கைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது ஏன் என தமிழக அரசிடம் வினவியுள்ளது.

சாந்தனை கடந்த 27 ஆம் திகதி எயார் அம்பியூலன்ஸ் மூலம் இலங்கைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது, ஆனால் அவரது உடல் மருத்துவ ரீதியாக ஒத்துழைக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திமுக - காங்கிரஸ் தொகுதி பங்கீடு . 12 தொகுதி கேட்கும் காங்கிரஸ்..7-ஐத் தாண்டாத திமுக..தமிழகம் வரும் முக்கிய தலைவ

மின்னம்பலம் - vivekanandhan  : திமுக-காங்கிரஸ் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரும் தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்படாமல் தொடர்ச்சியாக இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை அந்த எண்ணிக்கையிலிருந்து குறையக் கூடாது என்பது காங்கிரசின் கணக்காக இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை எப்படியாவது அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
கடந்த முறை 9 சீட்டு என்றால் இந்த முறை 12 சீட்டுகளை பெற வேண்டும், அப்போதுதான் நாம் புதிதாக ஏற்றிருக்கும் தலைமைப் பொறுப்புக்கு மரியாதையாக இருக்கும் என்பது செல்வப்பெருந்தகையின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் திமுக தரப்போ 5 தொகுதிகளில் ஆரம்பித்து அதிகபட்சமாக 7 தொகுதிகள் என்று அதைத் தாண்டாமல் நிற்கிறது.

தருமபுர மடத்தை ரவுடிகளிடமிருந்து மீட்டெடுத்த நம் முதல்வருக்கு நன்றி - தருமபுரம் ஆதினம் !

கலைஞர் செய்திகள் -Praveen  :  தருமபுரம் ஆதீன மடம் என்பது பல ஆண்டுகளாக தமிழ் தொண்டாற்றிவரும் சைவ மடம். ஆன்மீக சேவை மட்டுமின்றி அப்பகுதி மக்களுக்கு இலவச கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றையும் வழங்கி வருகிறது.
இந்த மடத்தின் ஆதீனத்தின் ஆபாச வீடியோ மற்றும் ஆடியோ இருப்பதாகக் கூறி அவரை பல கோடி தொகை கேட்டு கொலை மிரட்டல் விடுத்ததாக பா.ஜ.க.வின் மாவட்ட தலைவர் அகோரம் மீது புகார் எழுந்தது.
இது குறித்து ஆதீனகர்த்தரின் சகோதரும், உதவியாளருமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் நிர்வாக பொறுப்பில் இருந்து வரும் விருத்தகரி என்பவர், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

கி பி 3 நூற்றாண்டில் இருந்து கி பி 7 நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது”

இலக்கியா :  ”கி பி 3 நூற்றாண்டில் இருந்து கி பி 7 நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது” மகாவம்சத்தில் புதைந்துள்ள…உண்மைகளும் வரலாற்று சான்றுகளும் – ( பகுதி 27)
இன்று தமிழர்கள் பெரும்பாலும் வாழும் பகுதிகளான இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் தொல்பொருள் ஆய்வுகளில் காணப்படும் புத்த மத வழிபாட்டு தடயங்கள் அல்லது சான்றுகள், அங்கு சிங்களவர்கள் வாழ்ந்ததாக இலங்கை வாழ் பெரும்பான்மையான சிங்களவர்கள் இன்று நம்புகிறார்கள்.
அவர்கள் எனோ கி பி மூன்றாம் நூற்றாண்டில் இருந்து கி பி ஏழாம் நூற்றாண்டு வரையும் தமிழர் மத்தியில் பௌத்தம் மேலோங்கி இருந்தது என்ற வரலாற்று உண்மையை கவனத்தில் கொள்வதில்லை.

வியாழன், 29 பிப்ரவரி, 2024

ஜெயலலிதாவை நியாயப்படுத்த/ஆதரிக்க எந்த ஒரு காரணமும் கிடைக்காது.

 Uma Pa Se   :  திமுக தலைவர் ஸ்டாலின் வாய்ப்புக்கிடைக்கும் போதெல்லாம் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை Validate செய்வது நீண்டநாள் நோக்கில் சரிவராது என்று சொன்னபோது, அதெல்லாம் ராஜதந்திரம் என்று சில நண்பர்கள் நியாயப்படுத்தினார்கள்.   
ஜெயலலிதா வெறும் ஊழல் குற்றவாளி மட்டுமல்ல, சமூக குற்றவாளி.
ஊழல் மட்டுமே அளவுகோலாக வைத்தால்கூட ஜெயலலிதாவை யாரும் அடித்துக்கொள்ள முடியாது என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.
 இப்படி எந்தவொரு விஷயத்தை எடுத்துக்கொண்டாலும் ஜெயலலிதாவை நியாயப்படுத்த/ஆதரிக்க எந்த ஒரு காரணமும் கிடைக்காது.
நேரில் பார்த்து, முழுவதுமாக ஆழ்ந்துணர்ந்து நான் கண்டுகொண்ட சர்வாதிகாரி ஜெயலலிதா தான்.ஜெயலலிதா என்று எழுதினால் கூட அங்கிருந்து என்ன எதிர்வினைவரும் என்று ஜெயலலிதா பெயரை ஜெயலலிதா என்று சொன்ன,எழுதிய ஆட்களுக்குத் தெரியும்.

திமுக கூட்டணியில் இறுதி கட்டத்தை எட்டிய தொகுதி பங்கீடு

திமுக VS அதிமுக VS பாஜக.. தமிழ்நாட்டில் வெற்றி யாருக்கு? குமுதம் கருத்துக் கணிப்பு

 tamil.oneindia.com  -Jeyalakshmi C :  சென்னை: லோக்சபா தேர்தலுக்காக கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொகுதி பங்கீடு ஒப்பந்தங்கள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில் தமிழ்நாட்டில் திமுக 33 தொகுதிகளில் வெற்றி பெரும் என்று குமுதம் ரிப்போர்ட்டர் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் தேதி இன்னமும் அறிவிக்கப்படவில்லை என்றாலும் தமிழ்நாட்டில் அதிமுக, திமுக, பாஜக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் பணியை தொடங்கி விட்டன.
அதிமுக கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்று இன்னமும் முடிவாகவில்லை. அதே நேரத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் தொகுதி பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி வருகின்றன.

மதிமுக திமுக தொகுதி உடன்பாடு சிக்கலில் .. அடம்பிடிக்கும் வைகோ? ..

 மின்னம்பலம் - vivekanandhan : ஸ்ட்ரிக்டாக நடந்து கொண்ட திமுக..அப்படி என்னதான் கேட்டது மதிமுக?
திமுக-மதிமுக இடையே தொகுதிப் பங்கீடு குறித்த மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. மதிமுக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட வேண்டும் என மீண்டும் திமுக தரப்பினால் தொடர்ந்து கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறது. ஆனால் அதை முழுதாக நிராகரித்த மதிமுக தரப்பு, இந்த முறை தனிச்சின்னத்தில் தான் போட்டியிடுவோம், உதயசூரியனில் போட்டியிட முடியாது என உறுதியாக சொல்லியிருக்கிறது.
குறிப்பாக மக்களவை தொகுதியைப் பொறுத்தவரை திருச்சி பாராளுமன்றத் தொகுதியை தங்களுக்கு ஒதுக்கவேண்டும் என்றும், அடுத்ததாக ஒரு ராஜ்யசபா சீட்டும் ஒதுக்க வேண்டும் என்றும் மதிமுக கேட்டிருக்கிறது. திருச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகனான துரை வைகோவை களமிறக்கத் திட்டமிட்டுள்ளது மதிமுக.

கோவையை கேட்கும் சி.பி.எம்..ஒத்து வராத திமுக..காரணம் என்ன?

 மின்னம்பலம்  - vivekanandhan :   இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.ஐ), மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) இரண்டு கட்சிகளுக்கும் திமுகவுடன் தொகுதிப் பங்கீடு முடிவுக்கு வந்திருக்கிறது. கடந்த பாராளுமன்றத் தேர்தலைப் போலவே இரண்டு கட்சிகளுக்கும் தலா 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
சி.பி.ஐ கட்சியைப் பொறுத்தவரை கடந்த முறை அவர்களுக்கு வழங்கப்பட்ட நாகப்பட்டினம் மற்றும் திருப்பூர் ஆகிய 2 தொகுதிகளும் மீண்டும் அவர்களுக்கே ஒதுக்குவதென முடிவாகியுள்ளது.
சி.பி.எம் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் கடந்த முறை ஒதுக்கியதை விட கூடுதல் தொகுதிகளை வழங்க வேண்டும் என்று கோரியிருந்தனர். ஆனால் இறுதியாக திமுக தரப்பிலிருந்து இரண்டு இடங்களுக்கே ஒப்புதல் அளித்துள்ளனர்.

12 தொகுதி கேட்கும் காங்கிரஸ்..7-ஐத் தாண்டாத திமுக..என்ன நடக்கிறது

 மின்னம்பலம் -vivekanandhan :  திமுக-காங்கிரஸ் இடையே இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரும் தொகுதிப் பங்கீடு குறித்த உடன்பாடு எட்டப்படாமல் தொடர்ச்சியாக இழுபறி நீடித்து வருகிறது.
கடந்த 2019 பாராளுமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு திமுக கூட்டணியில் 9 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்த முறை அந்த எண்ணிக்கையிலிருந்து குறையக் கூடாது என்பது காங்கிரசின் கணக்காக இருக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள செல்வப்பெருந்தகை எப்படியாவது அதிக தொகுதிகளைப் பெற வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.
கடந்த முறை 9 சீட்டு என்றால் இந்த முறை 12 சீட்டுகளை பெற வேண்டும், அப்போதுதான் நாம் புதிதாக ஏற்றிருக்கும் தலைமைப் பொறுப்புக்கு மரியாதையாக இருக்கும் என்பது செல்வப்பெருந்தகையின் நோக்கமாக இருக்கிறது.
ஆனால் திமுக தரப்போ 5 தொகுதிகளில் ஆரம்பித்து அதிகபட்சமாக 7 தொகுதிகள் என்று அதைத் தாண்டாமல் நிற்கிறது.

ஜோ பைடனுக்கு பதிலாக மிச்செல் ஒபாமா…? அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் யார்? Admin

ஹிந்து தமிழ் :  அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக, தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் களமிறங்குவதற்கு அக்கட்சியில் கணிசமானோர் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
உலக நாடுகள் பலவும் 2024-ம் ஆண்டின் தேர்தல்களை சந்திக்கின்றன. அவற்றில் அமெரிக்காவும் ஒன்று. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயகக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சி வேட்பாளர்கள் நேரடியாக மோதுவார்கள்.
கட்சியின் வேட்பாளர், உட்கட்சியினர் ஆதரவு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார். குடியரசுக் கட்சியின் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்னேறி வருகிறார். ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனே மீண்டும் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார்.

புதன், 28 பிப்ரவரி, 2024

உதயநிதியின் நம்பர் 6 பிளான் - ஒரே கல்லில் ஆறு மாங்காய்!

tamil.oneindia.com -  Shyamsundar :  லோக்சபா தேர்தலுக்கான ஆலோசனைகள், பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அதிமுக இன்னும் கூட்டணி எதையும் அமைக்க முடியாமல் திணறி வருகிறது. இன்னொரு பக்கம் திமுக பெரும்பாலும் கூட்டணியை 10 நாட்களில் இறுதி செய்துவிடும்..
பழைய கூட்டணியே இந்த முறை இந்தியா கூட்டணி என்ற பெயரில் தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முக்கியமாக லோக்சபா தேர்தலுக்காக சிங்கிள் பிளான் ஒன்றை திமுக களமிறக்க உள்ளதாம்.
 அதாவது ஒற்றை இலக்க பிளான். அதன்படி காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை கொடுத்தது போல 10 தொகுதி தரப்படாது. ஒற்றை இலக்கத்தில் 8- தொகுதிகள் வரை மட்டுமே கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி சாந்தன் காலமானார்!

 தினத்தந்தி  :ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையான சாந்தன் உடல்நிலையில் பின்னடைவு
ராஜீவ் கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன், உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சென்னை, : முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இலங்கை தமிழர் சாந்தனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதன் பின்னர், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த அனைவரும் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இதில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சாந்தனும் விடுதலை செய்யப்பட்டார்.

மோடியும் லட்சுமி மித்தலும் சேர்ந்து போட்ட ஊழல் திட்டம் .. முறியடித்த சுமந்திரன் MP

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வளிக்கத் தவறிய ரணில் அரசாங்கம் : சுமந்திரன்  சுட்டிக்காட்டு - ஐபிசி தமிழ்
சுமந்திரன்MP
May be an image of 5 people, hospital and text
திரு..சுவாமிநாதன்!
May be an image of 2 people, dais and text that says '©BCCL C BCCL 2024. ALL RIGHTS RESERVED.'
luxmi mittal narendra modi

ராதா மனோகர் :  அண்மையில் இலங்கை  தமிழரசு கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட சுமந்திரன் அதில்  தோல்வி அடைந்தார்.
சுமந்திரனின் தோல்வி நாக்பூரில் (ஆர் எஸ் எஸ் தலைமை செயலகம்) திட்டமிடப்பட்டது என்றுதான் எண்ணுகிறேன்.
திரு சுமந்திரன் இந்திய பாஜக அரசின் வெறுப்புக்கு ஏன் ஆளானார்?
சுமந்திரன் கிறிஸ்தவர் என்பதை தாண்டி சுமந்திரன் மீது மோடியரசு கோபமாக இருப்பதற்கு ஒரு வரலாற்று காரணம் இருக்கிறது.
சுமார் ஏழெட்டு வருடங்களுக்கு முன்பு ஒரு அசல் குஜராத்தி கொள்ளையை சுமந்திரன் தடுத்து நிறுத்தி இருக்கிறார்
மோடியின் செல்லப்பிள்ளையான லக்ஷ்மி மிட்டலின் ஆஸ்லர் மிட்டல் கம்பனியின் பொருத்து வீட்டு கொள்ளையை சுமந்திரன் முன்பு தடுத்து நிறுத்தினார்அதை அவ்வளவு சுலபத்தில் மோடி குழுமம் மறந்து விடுமா?

அதிலும் சுமந்திரனின் தோல்வியை உறுதி செய்யும் பொறுப்பு கிழக்கு மாகாண யோகேஸ்வரனிடம் வழங்க பட்டிருக்க வேண்டும்..
அவர்தானே வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் மோடி புகழ் பாடுவதும் அர்ஜுன் சம்பத்தின் மேடைகளில் போட்டி போட்டுகொண்டு சினிமாஸ் கோப்பில் சிரிப்பவர்? 

எதிர்காலத்தில் மீண்டும் ஒரு குஜராத்து கொள்ளை நடக்க வேண்டுமென்றால் சுமந்திரன் ஒதுங்கி நிற்கவேண்டுமே?   நிற்பாரா?   மாட்டார்.
இந்த கோணத்தில்  இந்த விடயத்தை  ஆய்வு செய்வதற்கு உரிய மேலதிக தரவுகள் பின்வருமாறு:        

செவ்வாய், 27 பிப்ரவரி, 2024

அனில் அம்பானி நிறுவனம் திவால்.. ரிலையன்ஸ் கேப்பிட்டல்-ஐ கைப்பற்றிய இந்துஜா குழுமம்..!!

அனில் அம்பானி நிறுவனம் திவால்.. ரிலையன்ஸ் கேப்பிட்டல்-ஐ கைப்பற்றிய இந்துஜா குழுமம்..!!

tamil.goodreturns.in  - Prasanna Venkatesh :  இந்தியாவின் பெரும் பணக்காரரான முகேஷ் அம்பானி-யின் சகோதரன் அனில் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் குரூப் நிறுவனமான ரிலையன்ஸ் கேப்பிட்டல் (Reliance Capital Ltd) பெரும் கடன் சுமையால் பாதிக்கப்பட்ட நிலையில்..
இதை கையகப்படுத்தும் இந்துஜா குழுமத்தின் IndusInd International Holdings Ltd (IIHL) நிறுவனத்தின் திட்டத்திற்குத் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயம் (NCLT) செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) ஒப்புதல் அளித்துள்ளது.
இது ரிலையன்ஸ் கேப்பிட்டல் நிறுவனத்தின் நீண்ட கால கையகப்படுத்தல் செயல்பாட்டில் ஒரு மைல் கல்லாக பார்க்கப்படுகிறது.

போரின் வடுக்களை காட்டி இயல்பு வாழ்வை விழுங்குவோரை சாடும் திரைப்படம் Chocolat Movie

May be an image of 2 people, chocolate bar and text
May be pop art of 7 people and text
May be an image of chocolate bar and text that says 'MIRAMAL FILMS PRODUCTION PRODUCED BY DAVID BROWN KIT GOLDEN LESLIE HOLLERAN CHOCOLAT LASSE ALLSTROM FILM FROM THE NOVEL 3Y JOANNE HARRIS Juliette Binoche Judi Dench Alfred Molina ena Olin and Johnny Depp SHOOTING NOW MIRAMAX'

ராதா மனோகர் : Chocolat -  மனித வாழ்வு ஓரு சொக்கலேட்டு போல...ரசிக்கவேண்டும்...
“Life is what you celebrate. All of it. Even its end.”
 A woman and her daughter open a chocolate shop in a small French village that shakes up the rigid morality of the community.
சொக்கலேட் மிகவும் அழகான ஆனால் புரட்சிகரமான திரைப்படம் .
இரண்டாவது உலக போர்  முடிந்து சுமார் பதினைந்து வருடங்களுக்கு பின்பு இன்னும் பழமையை கைவிடாத ஒரு பிரெஞ்சு கிராமத்தை சுற்றி கதை செல்கிறது.
அந்த கிராமத்தில் மிகவும் பழம் வாய்ந்த ஒரு நபராக தேவாலயத்தின் பாதிரியார்..
அவரை பின்னணியில் இருந்து இயக்கம் உள்ளூர் மேயர்..
பாதிரியார் மூலமாக அந்த கிராமத்தில் ஏறக்குறைய ஒரு சர்வாதிகாரி மாதிரி இருக்கிறார் அந்த மேயர். இவர்களின் வழிகாட்டல்களை அல்லது போதனைகளை தவிர சுயமாக எதையுமே சிந்திக்காத எதுவுமே தெரியாத கிராமத்து மக்கள்.

கருத்துக் கணிப்பில் கட்சிகளின் வாக்கு சதவிகிதம்-தமிழக மக்கள் யார்? Election 2024 Survey |PTT

opinion poll

திமுக கூட்டணியில் விசிகவுக்கு 3 தொகுதிகள்? - விரைவில் தொகுதிப் பங்கீடு - வெளியான தகவல்!

tamil.samayam.com - எழிலரசன்.டி  :  மக்களவைத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது.
தற்போது திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விசிக, முஸ்லீம் லீக், கொமதேக ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்றன.
 புதிதாக மக்கள் நீதி மய்யம் மட்டும் இணையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூட்டணியில் இருந்தாலும் மமக, தவாக ஆகிய கட்சிகளுக்கு தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
கடந்த தேர்தல் போலவே கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு நாமக்கல் தொகுதியும், முஸ்லீம் லீக் கட்சிக்கு ராமநாதபுரமும் ஒதுக்கப்பட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

தமிழரசுக் கட்சியை புலியரசுக் கட்சியாக்கும், ‘றோ – புலிகளின்’ நாடகம் அரங்கேற முன்னரே அம்பலம்

தேசம் நெட் - arulmolivarman ; எழுபது ஆண்டு வரலாற்றைக் கொண்ட தமிழரசுக் கட்சி, நடாத்திய ஒரேயொரு அரையும் குறையுமான ஜனநாயகத் தேர்தலோடு கட்சியின் அதிகாரத்தை புலத்தில் வாழும் புலிகள் கைப்பற்றமுனைந்துள்ளனர்.
தமிழரசுக் கட்சித் தேர்தலுக்கு முன்னரேயே கட்சி பிளவுபடும் என்பதையும் எம் ஏ சுமந்திரன் தேர்தலில் தோற்றால் வெளியேற்றப்படுவார் என்பதையும் தேசம்நெற் எதிர்வு கூறியிருந்தது.
இதனை உறுதிப்படுத்தும் பல விடயங்கள் தேர்தல் நடந்தது முதல் தற்போது வரை நடந்தேறிவருகின்றது.
எம் ஏ சுமந்திரனின் பின்னணியில் தமிழரசுக் கட்சி உறுப்பினர்களின் உறுப்புரிமைகள் பற்றி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் தொடரப்பட்டுள்ள வழக்குகள் மட்டும் இதனை உறுதிப்படுத்தவில்லை.
 புலத்து புலிகள் குறிப்பாக ‘றோ’ புலிகள் சற்று மிடுக்காகவே உறும ஆரம்பித்துள்ளன.      

திங்கள், 26 பிப்ரவரி, 2024

பல்டி அடிக்க காத்திருக்கும் எம்எல்ஏக்கள்.? அதிமுக டூ பாஜக, பாஜக டூ அதிமுக செல்லப்போவது யார்.? வெளியான தகவல்

tamil.asianetnews.com - ajmal Khan : சீட் கொடுக்கவில்லை, மதிப்பு கொடுக்கவில்லையென கூறி கட்சி தாவும் நிகழ்வு தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக பாஜகவிற்கு முக்கிய அரசியல் கட்சி தலைவர் செல்ல இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறும் நிகழ்வு ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், சீட் கிடைக்கவில்லை, உரிய மதிப்பு கொடுக்கவில்லையென கூறி தலைவர்கள் கட்சி மாறும் நிகழ்வும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.
அந்த வகையில் பல மாநிலங்களில் இருந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் முதல் எம்எல்ஏவரை கட்சி மாறி வருகிறார்கள்.

காஷ்மீரிலும் காங்கிரஸ், என்சி, பிடிபி சுமூக தொகுதி உடன்பாடு! பாஜக கனவில் மண் அள்ளி போடுதே!

tamil.oneindia.com - Mathivanan Maran :  டெல்லி: "இந்தியா" கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜம்மு காஷ்மீரின் தேசிய மாநாட்டு கட்சி, மக்கள் ஜனநாயக கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி சுமூகமான தொகுதி உடன்பாட்டை எட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எந்த நேரத்திலும் வெளியாகுமாம்.
"இந்தியா" கூட்டணியில் உள்ள ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாதி, தேசிய மாநாட்டு கட்சி ஆகியவற்றுடன் காங்கிரஸ் கட்சி தொகுதி உடன்பாட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தியது.
இந்தப் பேச்சுவார்த்தைகளில் தொடக்கத்தில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அத்துடன் இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தப்பி ஓடினார். உ.பி.யில் ராஷ்டிரிய லோக் தள் கட்சியும் பாஜக அணிக்கு தாவியது.

திமுக + இந்தியா கூட்டணி வேட்பாளர்கள் - உத்தேச பட்டியல்

 May be a doodle of text that says 'கடசி தி.மு.க தமிழ்நாட்டில் இறுதியானது இந்தியா கூட்டணி மக்களவை 2024 சின்னம் தொகுதிகள் கூட்டணி ட்சிகளுக்கு போக மற்ற தொகுதிகள் பாண்டிச்சேரி 21 காங்கிரஸ் 8 சிறுத்தைகள் 2 விழுப்புரம் நாமக்கல் மயிலாடுதுறை பொள்ளாச்சி விக்ககுமரி னியாகுமரி கன் திருவள்ளுர் சிதம்பரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி(மார்க்சிஸ்ட்) 2 இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மதுரை 2 ம.தி.மு.க திருப்பூர் நாகப்பட்டினம் (ராஜ்ய சபா-1) மக்கள் நீதி மய்யம் திருச்சி (ராஜ்ய சபா-1) இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோவை 1 கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி இராமநாதபுரம் மனிதநேய மக்கள் கட்சி ஈரோடு வேலூர்'

ஏ.டி.பன்னீர்செல்வம் சென்ற விமானமும் தமிழகத்தின் தலைவிதியும் நடுக்கடலில்.. 1940... மார்ச் 1..

No photo description available.
 1940 Imperial Airways Handley Page HP42E "Hannibal

இந்த விமானம் திராவிடர்களால் மறக்கவே முடியாத ஒரு விமானம்  
இந்த விமானம்தான்   சர் A.T.பன்னீர்செல்வத்தை சுமந்து சென்று காணாமல் போன விமானம்
அந்த 1940... மார்ச் 1..  இங்கிலந்தில் இந்திய அமைச்சருக்கான செயலாளராக பொறுப்பேற்க திராவிடர் இயக்க மூத்த தலைவர் சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் ஓமன் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது. அவரது விமானம் விபத்துக்குள்ளாகாமல் இருந்தால் பாகிஸ்தானைப் போல திராவிட நாடு  அன்று உதயமாகி இருக்கும் என கண்ணீர்வடித்தனர் பெரியார் உள்ளிட்ட பெருந்தலைவர்கள்.
The Mystery
   At sunrise on 1st March 1940 Imperial Airways Handley Page HP42E "Hannibal" departed from its eastern base at Karachi Drigh Road airfield bound for Egypt with eight people aboard. Some six hours later it departed after refueling from Jiwani and while crossing the Gulf of Oman - was never seen again.
Crew     Passengers
Captain
N. Townsend
 Ras Bahdur Sir A. T. Pannirselvam, (13a)
high ranking Indian Government official
First Officer
C. J. Walsh  Air Commodore Harold. A. Whistler, DFC/, DSO, Chief of Air Staff  RAF

சென்னை ஆணவப் படுகொலை.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்..

tamil.samayam.com - ஜே. ஜாக்சன் சிங்  :  சென்னையிலும் ஆணவப் படுகொலை.. நள்ளிரவில் அரங்கேறிய பயங்கரம்.. பாய்ந்தது ஆக்சன்
தனது தங்கையை காதல் திருமணம் செய்த தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை, பெண்ணின் அண்ணன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை: சென்னையில் காதல் திருமணம் செய்து கொண்ட இளைஞர் படுகொலை செய்யப்பட்ட நிலையில், இதுதொடர்பாக அவரது மனைவியின் அண்ணன் உட்பட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சாதி ஆணவப் படுகொலை தமிழ்நாட்டிற்கு புதிது அல்ல. அப்படி ஏராளமான சம்பவங்கள் நடந்திருந்தாலும், அவை பெரும்பாலும் நெல்லை, மதுரை போன்ற தென் மாவட்டங்களிலும், வட மாவட்டங்களில் கிராமப்புறங்களிலும் தான் நடந்திருக்கின்றன.

ஜாபர் சாதிக் திமுகவில் இருந்து நீக்கம்: துரைமுருகன் உத்தரவு! அயலக அணி துணை அமைப்பாளர்

tamil.asianetnews.com  - Manikanda Prabu  :  திமுக சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் ஜாபர் சாதிக் அக்கட்சியின் இருந்து நீக்கப்பட்டுள்ளார்
டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ ரசாயன வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3,500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், அதன் மொத்த மதிப்பு ரூ. 2,000 கோடி எனவும் தெரிய வந்துள்ளது.
மேலும், இந்த போதைப்பொருள் கடத்தல் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது திரைப்பட தயாரிப்பாளரும், திமுகவின் சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளருமான ஜாபர் சாதிக் என்பதும் போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ஜாபர் சாதிக் திமுகவை சார்ந்தவர் என்பதால், பலரும் அக்கட்சியை விமர்சித்து வந்தனர்.

தூத்துக்குடியில் கனிமொழி : பாஜக மீண்டும் வந்தால்.. மகளிர் உரிமைத்தொகை கிடைக்காது!

 tamil.oneindia.com - Mani Singh S :  தூத்துக்குடி: பாஜக மீண்டும் ஆட்சி அமைத்தால் மகளிர் உரிமை தொகை திட்டம் நிறுத்தப்படும் அபாயம் உள்ளதாக கனிமொழி எம்பி பேசினார். மேலும்,
மத்திய அரசு ரூ. 20,000 கோடி ஜிஎஸ்டி வரியை தரவில்லை என்றும் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் திமுக மகளிர் அணி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. லோக்சபா தேர்தல் தொடர்பாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தூத்துக்குடி எம்பி கனிமொழி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது கனிமொழி பேசியதாவது:- நடைபெற உள்ள லோக்சபா தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல். ஒரு காலகட்டத்தில் சமஸ்கிருதம் படித்தால் மட்டும் தான் மருத்துவராக முடியும் என்ற நிலை இருந்தது.
அதையெல்லாம் மாற்றியது திராவிட இயக்கம்.

திரையில் தெரிந்த திராவிட ஆட்சி சுபகுண ராஜன் தொடர்

May be an image of 5 people and text that says 'முரசொலி பாசரை திராலிட திராவிடக் கொள்கைகளை, சமதர்ம நோக் கங்களை, சமூகநீதிச் சிந்தனைகளைத் திரைத்துறை மூலம் மக்களிடம் கொண்டு சேர்த்தனர் நமது முன்னோடிகள் அந்த வகையில், திரைப்படம் என்கிற கத்தின் அரசியல் மாற்றத்துக்கான திருப்புமுனைகளை ருவாக்கின, திராவிடம் பேசிய திரைப்படங்கள். அந்த வரலாற்றை மீண்டும் பாசிக்கத் தருகிறதுதி திராவிட சினிமா. 43 சினிமா வீ.மா.ச.சுபகுணராஜன் திரையில் பிரதிபலித்த திராவிட ஆட்சி! உருவாக்கப்பட்ட கட்டாயத்துக்கு ஆளானார்கள் திரையில் 'திராவிட மாடல்' இயக்கம், திட்டங்களின் அதனை வாழ்வாக வாழத்தான் செய்வார்களே இருக்க மாட்டார்கள் செய்தியாகு 'திராவிட மாடல்' மாற்றங்கள் நிகழந்தாக திரும்ப'

 Subagunarajan V M S :   ஒரு இயக்கம், அதிலும் ஒரு பெரும் சமூகமாற்றத்திற்காக தன்னை அர்பணித்துக் கொண்ட ஒன்றின் செயல்பாட்டு தளங்களில் ,
காலத்திற்கேற்ற மாற்றங்கள் நிகழ்ந்தாக வேண்டும்.
அதிலும் சாமன்யர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம் பதினெட்டே ஆண்டுகளில் ஆட்சிக்கட்டில் அமர்ந்தது இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாபெரும் மைல்கல்தான்.
ஆனால் அதன்வழி பெறப்பட்ட அதிகாரத்தைக் கொண்டு எப்படியான மாற்றங்களை, திட்டங்களை செயல்படுத்தினார்கள் என்பதே அவர்கள் குறித்த மதிப்பீடுகளை உருவாக்கும்.
அது கருதியே அண்ணா, ‘ நமக்குக் கிடைத்திருப்பது பதவியல்ல, பணி செய்யும் வாய்ப்பு ‘ என எச்சரித்து விட்டே ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்.
ஆட்சியதிகாரம் பெற்று விட்ட இயக்கம், ஏற்கனவே   திராவிட சினிமாக்கள் மொழிந்த கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மீளவும் திரையில் பேச முடியாது என்பதுதானே உண்மை.

ஞாயிறு, 25 பிப்ரவரி, 2024

ஓட்டுநர் இல்லாமல் ஓடிய சரக்கு ரயில்! ஜம்மு - காஷ்மீரில்

நக்கீரன் : ஜம்மு - காஷ்மீரில் உள்ள கதுவா ரயில் நிலையத்தில் ரயில் ஓட்டுநர்களின் பணி மாற்றத்திற்காக சரக்கு ரயில் ஒன்று நிறுத்தப்பட்டது.
அப்போது ரயிலை எஞ்சினை இயக்கத்தில் வைத்துவிட்டு ஓட்டுநர்கள் ரயிலை விட்டு இறங்கியுள்ளனர். இதனையடுத்து அந்த ரயில் திடீரென ஓட்டுநர் இல்லாமல் புறப்பட்டுள்ளது.
அதிவேகமாக சென்ற ரயில் 5 ரயில் நிலையங்களைக் கடந்து சுமார் 70 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலம் பதான்கோட் நோக்கி வேகமாக சென்றுள்ளது.

விஜயதரணி போன்று கோவையிலும் விக்கெட் விழப்போகிறது” : அண்ணாமலை

 மின்னம்பலம் - christopher :  விளவங்கோடு எம்எல்ஏ விஜயதரணி போன்று கோயம்புத்தூரில் இருந்து முக்கிய விக்கெட் விழப்போகிறது என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை பேசுகையில், “திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கஞ்சா பழக்கம் அதிகரித்து வந்துள்ளது. டெல்லியில் இன்று 2000 கோடி ரூபாய் மதிப்பு போதை பொருள் கடத்த முயன்ற கும்பலை பிடிபட்டிருக்கிறார்கள்.
அவர்களில் முக்கிய குற்றவாளியாக திமுக நிர்வாகியான ஜாபர் சாதிக் என்பது தெரியவந்துள்ளது. அவரது சகோதரர் விசிகவில் முக்கிய பொறுப்பில் உள்ளார். இப்படி போதைப்பொருள் கடத்தலில் திமுக மற்றும் விசிக நிர்வாகிகள் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.
வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

இலங்கை ஹம்பாந்தோட்டை துறைமுகம் மியன்மார் துறைமுகத்துடன் இணைக்கப்பட்டு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்த...

May be an image of 8 people and text that says 'குருකி NEWS UPDATE குகுனி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம் www.kuruvi.lk'

kuruvi.lk :  ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டம்
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் உட்கட்டமைப்பு வசதிக்காக ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டுள்ள பாரிய முதலீடுகளை தேசிய பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் வகையில் தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை மியன்மார் துறைமுகத்துடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதனை கிழக்கு சீனாவின் சோங்கிங் துறைமுகம் வரையில் விரிவுபடுத்திப் பின்னர் ஆபிரிக்கா வரை அதனை மேலும் விரிவுபடுத்த எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, ஹம்பாந்தோட்டையை நாட்டின் பிரதான பொருளாதார மையமாக மாற்றுவதற்கான சாத்தியக்கூறுகளையும் சுட்டிக்காட்டினார். 

குடிபோதையில் விபத்தை ஏற்படுத்திய கிரிராஜன் எம்.பி.யின் மகன்!

 tamil.asianetnews.com - vinoth kumar :  போதையில் அதிவேகத்தில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற திமுக எம்.பி. கிரிராஜன் மகனை பொதுமக்கள் விரட்டி பிடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மாமல்லபுரத்தில் இருந்து செங்கல்பட்டு நோக்கி ஹூண்டாய் கார் ஒன்று நள்ளிரவு அதிவேகத்தில் சென்றது. அப்போது  திருக்கழுக்குன்றம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்கள் மீது மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றுள்ளது. ஆனால், இதில் யாருக்கும் காயமின்றி அதிஷ்டவசமாக உயிர் தப்பினர்.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சக வாகன ஓட்டிகள் அந்த காரை விடாமல் விரட்டி சென்றனர். இதனால் இன்னும் வேகமாக சென்ற கார் செங்கல்பட்டு ரயில்வே மேம்பாலம் அருகில் இருந்த இரும்புத் தடுப்பு மீது மோதி நின்றது.

காங்கிரஸ்- ஆம் ஆத்மி: 5 மாநிலங்களில் தொகுதிப் பங்கீடு! இந்தியா கூட்டணியில் முன்னேற்றம்!

 minnambalam.com - Aara : இந்தியா கூட்டணியில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு வந்த நிலையில்… பாசிட்டிவ் அம்சமாக காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி கட்சிகள் இடையே தொகுதிப் பங்கீடு எட்டப்பட்டிருக்கிறது.
இன்று டெல்லி, ஹரியானா, குஜராத், சண்டிகர் மற்றும் கோவா ஆகிய மாநிலங்களில் வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் இரு கட்சிகளும் தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தை நிறைவு செய்துள்ளன.
இன்று (பிப்ரவரி 24) டெல்லியில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சியின் சௌரப் பரத்வாஜ், அதிஷி, சந்தீப் பதக் மற்றும் காங்கிரஸின் முகுல் வாஸ்னிக், தீபக் பபாரியா, அர்விந்தர் சிங் லவ்லி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இவர்கள் அறிவித்தபடி,  டெல்லியில் மொத்தமுள்ள 7 இடங்களில் ஆம் ஆத்மி 4 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும் போட்டியிட முடிவாகியிருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி தெற்கு டெல்லி, புது டெல்லி, மேற்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி தொகுதிகளிலும், காங்கிரஸ் கிழக்கு, வடகிழக்கு டெல்லி மற்றும் சாந்தினி சவுக் தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. தற்போது நாட்டின் தலைநகரில் உள்ள ஏழு இடங்களும் பாஜகவிடம் உள்ளன.