சனி, 16 செப்டம்பர், 2017

சாரணர் தலைவர் மணி ஒரு திராவிட சித்தாந்தி ... ஆர் எஸ் எஸ் காரர் அல்ல ..பொய்யுரைத்த பாஜகவினர்

Shankar A : · பச்சைப் பொய். சாரணர் இயக்கத்தில் தற்போது வெற்றி பெற்றுள்ள
மணி ஆர்எஸ்எஸ் இயக்கத்தை சேர்ந்தவர் என்று எச்.ராஜா படு தோல்வி அடைந்த மூன்று மணி நேரத்திற்கு பிறகு, பக்தாள், புது கதையை கூறி வருகின்றனர். அதாவது தற்போது வெற்றி பெற்றுள்ள மணியும், சங் பரிவாரை சேர்ந்தவர்தானாம். இந்த செய்தி வெளியானது முதல் தொடர்ந்து மணியோடு உரையாடிய பத்திரிக்கையாளர்களை தொடர்பு கொள்ள முயற்சித்து, ஒருவரை பிடித்தேன். இந்த செய்தி குறித்து மணியிடமே கேட்டுள்ளார். அவர் கூறியது "சார், நான் பள்ளிக் கல்வி இயக்குநராக இருந்து ஓய்வு பெற்றவன் நான் எப்படி ஆர்எஸ்எஸ் அல்லது அதன் சார்பான இயக்கத்தில் உறுப்பினராக இருக்க முடியும் ? நான் உண்மையில் திராவிட அரசியலை பின்பற்றுபவன். எந்த இயக்கத்தையும் சேர்ந்தவன் கிடையாது. ஆனால் எனக்கு திராவிட அரசியல்தான் பிடித்த சித்தாந்தம் " என்று கூறியுள்ளார். கீழே விழுந்த மண்ணை துடைத்துக் கொண்டு, எத்தனை பெரிய பொய்யை உண்மையென்று பரப்ப முயற்சி செய்கிறார்கள் பார்த்தீர்களா.. பொய் அம்பலப்படும் என்று தெரிந்தும் கூசாமல் பொய் கூறுவதுதான் பக்தாளின் வேலை.

சமுக வலையை பார்த்து அலறும் அமித் ஷா BJP is starting to lose the social media game and it's scaring Amit Shah

Mathava Raj  :   ”சமூக வலைதளங்களில் பரப்பப்படும் விஷயங்களை
நம்பாதீர்கள்” என அமித்ஷா அலற ஆரம்பித்திருக்கிறார். சமூக வலைத்தளங்களை அதிகமாக பயன்படுத்தும் கட்சி, அதிகமான fanகளை, followerகளைக் கொண்ட கட்சி என்றெல்லாம் பிரசித்தி பெற்ற பாஜக இப்போது சமூக வலைத்தளங்கள் என்றாலே பதறுகிறது. சமூக வலைதளம் மக்களின் இடம். சுதந்திர வெளி. சங்பரிவாரத்தின் அதிகாரம், ஆணவம், ஒடுக்குமுறைகள் அங்கு செல்லுபடியாகவில்லை. அமித்ஷாவின் அலறலில் கிடைக்கும் செய்தி. ’மக்களின் திருப்பியடிக்கும் காலம் ஆரம்பித்திருக்கிறது’.

When BJP party president Amit Shah recently warned the youth to be wary of propaganda on social media, it was a lesson in irony. After all, Shah's party is probably the biggest beneficiary of the sort of propaganda he was warning against.

சாதாரண சாரணர் தேர்தலிலேயே இத்தனை தில்லுமுல்லுகளை அரங்கேற்றிய பாஜக !

ஒரு சாதாரண பதவிக்கு நடக்கும் தேர்தலிலேயே இவர்கள் இத்தனை அயோக்கியத்தனமாக நடந்துக்கொள்வார்கள் என்றால், இதை வைத்தே உ.பி, அசாம் போன்ற மாநிலங்களில் நடந்தப் பொதுத் தேர்தல்களின்போது இவர்கள் என்னவெல்லாம் செய்திருப்பார்கள் என்பதை நாம் எளிதாகப் புரிந்துக்கொள்ளலாம்.
தேர்தலைக்கூட விடுங்கள், சாதாரன தொலைக்காட்சி விவாதங்களிலேயே இந்த பா.ஜ.க ஆட்களை நோக்கி கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லாதப்பட்சத்தில் கத்திக் கூச்சல் போட்டு ஆட்டையைக் கலைத்துவிடும் நாராயணன், கல்யாணராமன், சேகர், வானதி, பா.ராகவன் வகையறாக்களின் ஈனத்தனத்தைதான் நாம் எத்தனையோ முறை பார்திருக்கிறோமே.
 சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் பா.ஜ.கவின் தேசிய செயலாளர் எச்.ராஜா படுதோல்வியடைந்தார். உண்மையில் இது ஒரு செய்தியே அல்ல. காரணம், இவர்கள் மண்ணைக் கவ்வப்போவது உறுதி என்றுத் தெரிந்தே வெறும் ஊடக வெளிச்சத்திற்காகவும், ஆளும் அ.தி.மு.கவே தங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதைவைத்து தமிழகத்தில் பா.ஜ.க வேகமாக வளர்ந்துவருகிறது என்பதைப் போன்ற ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்தவுமே இவர் இதில் போட்டியிட்டிருக்கலாம்.

சென்னையில் தென்னாபிரிக்க போதை பொருள் .. ஒரு கோடி ரூபாய் பெறுமதி .. பெண் கைது

டெல்லியில் இருந்து கடத்தி வரப்பட்ட ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்த சென்னை போலீசார் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த பெண்ணை கைது செய்தனர். சென்னை: டெல்லியில் இருந்து சென்னை வரும் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் போதைப்பொருள் கடத்தப்படுவதாக சென்னையில் உள்ள போதைப்பொருள் தடுப்பு அதிகாரிகளுக்கு தகவல் வந்தது. இதையடுத்து, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரெயிலில் சென்னை வந்த பயணிகளிடன் அதிகாரிகள் தீவிரமான சோதனை நடத்தினர்.
தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒரு பெண்ணிடம் இருந்த பொருட்களை சோதனையிட்டபோது, டின்களில் அடைக்கப்பட்ட உணவுப் பொருட்கள் என்ற போர்வையில் 44 டப்பாக்களில் போதைப்பொருள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சுமார் 40 வயது மதிக்கத்தக்க டில்லியா எடினா என்ற அந்தப் பெண்ணை கைது செய்த போலீசார், அவர் கடத்திவந்த சுமார்  22 கிலோ எடையுள்ள ‘எபெட்ரைன்’ என்னும் போதைப்பொருளை கைப்பற்றினர்.

100 கோடி சொத்துக்களை கைவிட்ட ஜெயின் தம்பதிகள் .. முளைச்சலவை செய்த ஜெயின் மதவாதம்!

மத்திய பிரதேச மாநிலத்தில் இளம்தம்பதி தங்களின் ரூ.100 கோடி சொத்து மத்திய பிரதேச மாநிலம் நீமுச் எனும் ஊரில் வசித்து வருபவர் ராஜேந்திரசிங் ரதோர்.
மற்றம் 3 வயது குழந்தையை விட்டுவிட்டு வரும் 23ம் தேதி முதல் துறவு வாழ்க்கையை தொடங்கவுள்ளனர்.
சிமெண்ட் தொழிற் சாலைகளுக்கு சாக்கு தயாரித்து கொடுக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். கோடீசுவரரான இவரது ஒரே மகன் சுமித் ரதோர் (வயது35).
லண்டனில் உள்ள கல்லூரியில் ஏற்றுமதி- இறக்குமதி நிர்வாகம் பற்றிய டிப்ளமோ படித்த அவர் 2 ஆண்டுகள் அங்கு பணி புரிந்து வந்தார். பிறகு மத்திய பிரதேசம் திரும்பி இவர் தனது தந்தையின் சாக்கு தயாரிக்கும் நிர்வாகத்தை செய்து வந்தார்.

பெங்களூரு பேருந்து நிலையத்துக்கு பெரியார் பெயர் .. அமைச்சர் இராமலிங்க ரெட்டி

பேருந்து நிலையத்துக்கு பெரியாரின் பெயர் : கர்நாடக அமைச்சர்!தந்தை பெரியாரின் பெயர் பெங்களூருவில் உள்ள பேருந்து நிலையத்துக்குச் சூட்டப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.
தந்தை பெரியார் புரட்சிகரமான சமூகச் சிந்தனையாளர். பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, சுயமரியாதை, சாதிப் பாகுபாடுகளைக் களைதல், சமூக நீதி, பெண்ணுரிமை ஆகியவை குறித்த அவரது சிந்தனைகளும் செயல்பாடுகளும் தமிழகத்தில் ஆழமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன.
வரும் 17 ஆம் தேதி நாளை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலித் சங்கர்ஷ சமிதியின் சார்பில் பெங்களூரு அரசு ஊழியர்கள் மாளிகையில் செப்டம்பர் 15 (நேற்று) பெரியாரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில், பெரியார், அம்பேத்கர் உள்ளிட்டோரின் உருவப் படங்களுக்கு கர்நாடக உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

லண்டன் சுரங்க ரயில் குண்டு வெடிப்பு: 18 வயது இளைஞர் கைது

tamilthehindu :லண்டன் சுரங்க ரயிலில் நடந்த குண்டுவெடிப்பில் சுமார் 24 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பாக சந்தேக நபர்களை வேட்டையாடிய போலீஸார் 18 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
ஆனாலும், ஒரு நபருக்கு மேல் இந்தத் தாக்குதலில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கும் அதிகாரிகள் ரகசிய புலனாய்வு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதால் விவரங்களை வெளியிட இடமில்லை என்று தெரிவித்துள்ளனர்.

சாரணர் தேர்தலில் எச் .ராஜா படுதோல்வி ! வெற்றி பெற்ற மணிக்கு ! 234 வாக்குகளும் எச்.ராஜா 51 வாக்குகள்

palai.karthi : சாரண-சாரணியர் இயக்க தேர்தல் இன்று நடந்தது. இத்தேர்தலில்
தலைவர் பதவிக்கு பாஜக தேசிய தலைவர் எச்.ராஜா போட்டியிட்டார். அவருக்கு போட்டியாளாராக முன்னாள் பள்ளி கல்விதுறை இயக்குநர் மணி போட்டியிட்டார். தனக்கு வாக்குகள் கிடைக்காது என தெரிந்த எச்.ராஜா தேர்தலை நிறுத்த முயற்சி செய்தார். ஒரு இமெயிலைக் காட்டி மத்திய சராணர் இயக்கம் தேர்தலை நிறுத்தி விட்டது. அதனால் தேர்தலை நிறுத்துங்கள் என்று பிரச்சனை செய்தார். பின்னர் ட் வாக்கு எண்ணிக்கையை நிறுத்தச் சொன்னார். ஆனால் தேர்தல் அதிகாரி கலாவதி தேர்தல் நேர்மையாக நடைபெறுகிறது என்று சொல்லி எச்.ராஜா தரப்பினரின் அழுத்தங்களுக்கு பணியாமல் தேர்தலை நடத்தினார்.
ஒரு வழியாக முடிவு அறிவிக்கப்பட்டது. மொத்தம் 499 வாக்குகளைக் கொண்ட இந்த தேர்தலில் தலைவர், 3 துணை தலைவர்கள், மாவட்ட ஆணையர், லீடர், ட்ரெய்னர் ஆகிய பொறுப்புகளுக்கு இந்த தேர்தல் நடந்தது.சாரணர் இயக்கத்தில் உறுப்பினர்களாக உள்ள முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள், ஆசிரியர்கள் ஆகியோர் ஓட்டுப்போட தகுதியானவர்கள்.இந்நிலையில் 499 வாக்குகளில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட எச்.ராஜா பெற்ற வாக்குகள் வெறும் 51 வாக்குகள். பதிவான 285 வாக்குகளில் மணி 234 வாக்குகளும் எச்.ராஜா 51 வாக்குகளையும் பெற்றார்கள். 2 வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மிடாஸ் சாராயம் வாங்குவதை குறைத்த டாஸ்மாக் - சசிக்கு 600 கோடி இழப்பு ..

Mathi - Oneindia Tamil  : சென்னை: சசிகலா குடும்பத்துக்கு சொந்தமான மிடாஸ்
ஆலையில் இருந்து மதுபானங்களை கொள்முதல் செய்வதை தமிழக அரசு வெகுவாக குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் மிடாஸ் ஆலைக்கு ரூ600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 2002-ம் ஆண்டு சசிகலா குடும்பத்தினர் மிடாஸ் மதுபான ஆலையை தொடங்கினர். 2003-ம் ஆண்டு முதல் தமிழக அரசு மிடாஸில் கொள்முதலை தொடங்கியது. 2011-ம் ஆண்டில் மிடாஸின் ஆண்டு வருமானம் ரூ360 கோடியாக இருந்தது. தற்போதைய நிலையில் மிடாஸின் ஆண்டு வருமானம் ரூ1,200 கோடி என கூறப்படுகிறது.

GST - ஹிட்லரின் ‘ஒரே மக்கள், ஒரே நாடு, ஒரே தலைவன்’ பாணியில் ‘ஒரே நாடு, ஒரே சந்தை, ஒரே வரி

மின்னம்பலம் : 2017ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் தேதி முதல் இந்தியா ஜி.எஸ்.டி. வரித் திட்டத்தைச் செயல்படுத்தியது. ஜி.எஸ்.டி என்பது புதிய வரி அல்ல. அது ஒரு புதிய வரி விதிப்பு முறை. இதுவரையில் செயல்பாட்டிலிருந்த விற்பனை வரி போன்ற பல வரிகளை ஒருங்கிணைத்து ஒரே வரியாக வசூலிக்கும் திட்டம். குறிப்பாக நாடு முழுவதும் ஒரேவிதமான வரி விதிக்கப்பட்டு வசூலிக்கப்படும் திட்டமாகும். இந்தக் குறிப்பிடத்தக்க வரிவிதிப்பு முறையைப் புரிந்துகொள்ள இந்திய அரசியலமைப்பைப் பற்றி நாம் நினைவுகூர்வது அவசியமாகும்.
இந்திய ஒன்றியம்:
இந்தியா என்பது ஓர் ஒன்றியமாகும். இந்திய நிலப்பரப்பு மொழிவாரி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு மாநிலமும் ஓர் அரசால் ஆளப்படுகிறது. இந்தியா முழுமையையும் ஆட்சி செய்ய ஒன்றிய அரசு உருவாக்கப்பட்டது. ஏன் ஒரே அரசாக ஏற்படுத்தப்படவில்லை? இந்திய பரப்பு ஒன்றாக இருந்தபோதிலும், அதன் பல பகுதிகள் பல அடையாளங்களைப் பெற்றிருந்தன.

கனிமொழி :அரசிடமிருந்து 14 வருடங்களில் 2 ஆயிரத்து 300 கோடிகள் முழுங்கிய ராஜா முத்தையா மருத்தவ கல்லூரி

 கனிமொழி : உகாண்டா பிரதமர் உடம்பு சரியில்லைன்னா  தமிழ்நாட்டுக்குதாம்மா வந்து மருத்துவம் செய்துகொள்வேன்’ என்று என்னிடம் சொன்னார். அவர் மட்டுமில்லை. உலகத்தின் பல தலைவர்கள், பலர் தமிழ்நாட்டுக்குத்தான் மருத்துவம் பார்க்க வருகிறார்கள். ஆனால், இவர்களைத்தான் தரமில்லை என்று மத்திய அரசு சொல்கிறது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் சிறந்த மெடிக்கல் டூரிஸம் நடக்கும் மாநிலமாக இருக்கிறது.
அண்ணாமலை பல்கலைக்கழகத்துக்குட்பட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கள் நிர்வாகத்துக்கு எதிராக 15 நாள்களாக போராடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் போராட்டத்தில் செப்டம்பர் 14ஆம் தேதி கலந்துகொண்டு திமுகவின் முழு ஆதரவைத் தெரிவித்தார், திமுக மகளிரணிச் செயலாளரும் கழக மாநிலங்களவைக் குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி. போராட்டத்தை வாழ்த்தி அவர் பேசுகையில், “தான் நிர்வாகம் செய்கிறேன் என்று சொல்லி அரசே எடுத்துக்கொண்ட பல்கலைக்கழகம் இது. அன்றைய முதல்வரே இதுபற்றி சட்டமன்றத்தில் அறிவித்தார். அப்படிப்பட்ட பல்கலைக்கழகத்துக்குட்பட்ட மருத்துவக் கல்லூரியில் நியாயமான கட்டணங்கள் வசூலிக்கப்படவில்லை. பொதுவாக தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் ரூபாய் 13 ஆயிரம், 14 ஆயிரம் என்றுதான் கட்டணம் இருக்கிறது. ஆனால், அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ்ஸுக்கு 5 லட்சத்துக்கு 82 ஆயிரம், பி.டி.எஸ்ஸுக்கு 3 லட்சத்து 40 ஆயிரம், முதுநிலை மருத்துவப் படிப்புக்கு 9 லட்சம் வசூலிக்கப்படுகிறது என்று சொல்லியிருக்கிறீர்கள்.

சிதம்பரம் :என் மகனை தொந்தரவு செய்யாதீர்கள், என்னிடம் விசாரணை நடத்துங்கள்!

ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் ‘என் மகனை தொந்தரவு செய்யாதீர்கள், என்னிடம் விசாரணை நடத்துங்கள்’: ப.சிதம்பரம் ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் தனது மகனை தொந்தரவு செய்யாமல் சி.பி.ஐ. அதிகாரிகள் தன்னிடமே விசாரணை நடத்த வேண்டும் என ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். < புதுடெல்லி: மத்திய நிதி மந்திரியாக ப.சிதம்பரம் பதவியில் இருந்த போது ஏர்செல் நிறுவன பங்குகள் மலேசியாவில் உள்ள மேக்சிஸ் நிறுவனத்துக்கு கடந்த 2006-ம் ஆண்டு விற்பனை செய்யப்பட்டது. இதில் முறைகேடு நடந்ததாக வழக்கு பதிவு செய்துள்ள சி.பி.ஐ. அதிகாரிகள், இதன் விசாரணைக்கு ஆஜராகுமாறு ப.சிதம்பரத்தின் மகனான கார்த்தி சிதம்பரத்துக்கு கடந்த 13-ந்தேதி சம்மன் அனுப்பினர்.
இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. தவறான தகவல்களை பரப்புவதாக முன்னாள் நிதி மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார். இது குறித்து தனது ‘டுவிட்டர்’ தளத்தில் அவர் கூறுகையில், ‘ஏர்செல் மேக்சிஸ் விவகாரத்தில் அன்னிய முதலீடு மேம்பாட்டு வாரியத்தின் (எப்.ஐ.பி.பி.) பரிந்துரையை ஏற்று நான்தான் ஒப்புதல் அளித்தேன். எனவே இந்த விவகாரத்தில் எனது மகனை தொந்தரவு செய்யாமல் என்னிடமே சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்...   உங்கள் மகன் கார்த்திக்கின் தாய் நளினிதான் பெரிய வக்கிலாச்சே?நீட் தேர்வுக்கு எதிராக பேசி மாணவர்களின் வாழ்வில் அடித்த புண்ணியவதி .. கடவுளிடம்தான் கேட்க வேண்டும் என்று நீட்டுக்கு நீட்டிய   ஆலோசனை மறக்க முடியுமா? 

'ஜாக்டோ-ஜியோ போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.



teachers
உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு குறித்து மதுரையில் வெள்ளிக்கிழமை, சங்க உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் 'ஜாக்டோ-ஜியோ' மாநில நிர்வாகிகள்.
Ads by Kiosked
தமிழகம் முழுவதும் கடந்த 9 நாள்களாக வேலைநிறுத்த போராட்டத்தை மேற்கொண்டிருந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் உயர்நீதிமன்றத்தின் கடுமையான எச்சரிக்கை காரணமாக வெள்ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.
போராட்டத்தை திரும்பப் பெறுமாறு உத்தரவிட்டுள்ள சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, இதுதொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலர், வரும் 21ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர்(ஜாக்டோ-ஜியோ) செப்டம்பர் 7 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி மதுரையைச் சேர்ந்த டி.சேகரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இலங்கை .. இங்கிலாந்து பத்திரிகையாளர் முதலை கடித்து மரணம் Financial Times journalist Paul McClean killed by crocodile

விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங்கைக்கு வந்த பிரிட்டன்
பத்திரிகையாளர், முதலை கடித்து உயிரிழந்த சம்பவம் அவர்களின் நண்பர்கள் மற்றும் உறவினர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது. விடுமுறையை கழிக்க இலங்கை வந்த பிரிட்டன் பத்திரிகையாளர் முதலை கடித்து உயிரிழந்த சோகம் கொழும்பு: பிரிட்டனைச் சேர்ந்த பத்திரிகையாளர் பால் மெக்லன் (வயது 24). லண்டனில் இருந்து வெளியாகும் பைனான்சியல் டைம்ஸ் பத்திரிகையின் செய்தியாளரான இவர், விடுமுறையை கழிப்பதற்காக நண்பர்களுடன் இலங்கை வந்திருந்தார். நேற்று பிற்பகல் பனாமா கடற்கரைக்குச் சென்றுள்ளனர். அப்போது, கடலை ஒட்டியுள்ள நீர்நிலையில் பால் மெக்லன் இறங்கி கால் கழுவியுள்ளார். அப்போது, அங்கு பதுங்கியிருந்த முதலை அவரை கடித்து உள்ளே இழுத்துச் சென்றுவிட்டது.

வரிபணம் எங்குளுது!!! வளர்ச்சி திட்டம் மட்டும் உங்களுக்கு!!

Paul Rajspan : காக்கிநாடா உங்களுக்கு!!
பாவாட நாடா எங்களுக்கு!!!
மீத்தேன் ஹைட்ரோ கார்பன் எங்களுக்கு!
புல்லட் ரயில் குஜராத்துக்கு!
சூரிய சக்தி மின் திட்டம் உங்களுக்கு!
ஆணு சக்தி மின் திட்டம் எங்களுக்கு!
ஏய்ம்ஸ் உங்களுக்கு!!!
நீட் எங்களுக்கு!!!
IIT இருப்பது தமிழ்நாட்டு !!!
மாணவர்கள் மட்டும் வடநாடு!!!
மருத்துவ கல்லூரி எங்களுது!!
மாணவர் மொத்தம் உங்கஊரு!!
நீட்டுக்கு நீதிமன்றம் தீர்ப்ப எடுத்துக்கோ!!
காவிரிக்கு வாட்டால் நாகராஜிடம் கேட்டுக்கோ!!!
வரிபணம் மொத்தம் எங்குளுது!!!
வளர்ச்சி திட்டம் மட்டும் உங்களுக்கு!!!
கரும்பு, தேயிலை, அரிசி எங்களுது!
விவசாய கடன் தள்ளுபடி மபிக்கு!!!
இப்படி தான் தம்பி எங்க பொழப்ப ஓட்டிட்டு இருக்கோம்!!

கமல் பாஜகாவை ஒருபோதும் விமர்சிப்பதில்லை.... அதிமுகவை தாண்டி எதையும் பேசுவதே இல்லை...

மார்ட்டின் சந்தர் கிங் : · கமல் அரசியல் பேசுகிறார்.. கேரளா முதல்வரை
சந்திக்கிறார். முரசொலி பவள விழாவில் பங்கேற்றார் என்பதெல்லாம் ஓகே.. ஆனால் அவர் அதிமுகவை தாண்டி எந்த அரசியலையும் பேச மறுக்கிறார். இதுவரை மத்தியில் ஆளும் மக்கள் விரோத பாஜகவைப் பற்றி எதுவும் பேசவில்லை.. இந்த மாதிரியான நேரத்தில் அரசியல் கட்சியை தொடங்குகிறேன் என்று சொல்கிறார். தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுகவின் எதிர்ப்பு வாக்குகளை பிரித்து பாஜகவிற்கு சாதகமாக அதன் B டீமாக செயல்படுவாரோ என்ற அச்சமும், பாஜகவின் ஸ்லீப்பர் செல்லோ என்ற ஐயமும் வருவதை தடுக்க முடியவில்லை.. அவர் பாஜகவைப் பற்றி பேசினால் தான் அவர் யார் என்று உணர்த்தும். அதை கமல் செய்வாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்!

வெள்ளி, 15 செப்டம்பர், 2017

இந்தி தெரியாத தமிழகம் மீது வடநாட்டுக்கு ஏன் இந்த வயிதெரிச்சல்? இரகசியம் இதுதான்!

இரவிக்குமார்  t; இந்தி தெரியாத மாநிலமும்!
இந்தி தெரிந்த மாநிலமும்!!
வளர்ச்சி!வீழ்ச்சி!!

50 வருடம் ஹிந்தி தெரியாமல்
பின்னோக்கி ?????????இருக்கும் ஒரு மாநிலத்தின் கதை!

உயர் கல்வி :---
--------------------
பள்ளிக் கல்வியை முடித்து, உயர் கல்வி (கல்லூரி) சேர்பவர்கள், இந்தியாவிலேயே தமிழ் நாட்டில் தான் அதிகம்...

அகில இந்திய சராசரியைவிட இருமடங்கு அதிகம்.. தமிழ் நாடு - 38.2%..

பிஜேபி ஆளும் வட மாநிலங்கள் குஜராத் - 17.6% ; ம.பி - 17.4% ; உ.பி - 16.8% ; ராஜஸ்தான் - 18.0% ; இந்திய சராசரி : 20.4%

கல்வி நிலையங்களின் தரம் :--
-----------------------------------------------
2017 -- ஆண்டுக்கான இந்தியாவின் சிறந்த நூறு கல்வி நிறுவனங்களின் ரேங்க் பட்டியலை,மத்திய அரசின் HRD துறை வெளியிட்டுள்ளது... அந்தப் பட்டியலின் படி,

முதல் 100 சிறந்த கல்லூரிகளில் 37 கல்லூரிகள் இருப்பது தமிழ் நாட்டில்..

பிஜேபி பல ஆண்டுகளாக ஆளும் மோடியின் மாடல் மாநிலம் குஜராத்தில் இருபத்தோ வெறும் மூன்றுதான்..

கேரளா CM பினராயி விஜயன் ... கள்ளு விற்ற காசும் பீடி சுற்றிய காசும்தான் சோறு போட்டுது. ..

Pravin Kumar: தமிழ்நாட்டு மக்களுக்கு, கேரள மக்கள் மீது இப்போது பொறாமையோ பொறாமை!
நல்ல தலைவர் இல்லாமல் தமிழகம் தத்தளிக்க, கேரளத்தைப் பிரமாதமாக ஆட்சிசெய்கிறார் பினராயி விஜயன்.
#கேரள மருத்துவமனைகளின் அலட்சியத்தால் தமிழகத்தைச் சேர்ந்த முருகன் இறந்தபோது, அந்தப் பிரச்னையை மனிதநேயத்தோடு அணுகினார். சில நடிகர்கள் அடுத்தடுத்து தமிழக #அரசியலில் குதிக்கப்போவதாகச் சொல்லப்படுகிறது. ரஜினி, கமல் மீதும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
அரசியல் கற்க #கமல்ஹாசன் தேடிச் சென்ற தலைவர் பினராயி விஜயன்.

#கேரள முதலமைச்சராக, தேர்ந்த அரசியல்வாதியாக அறியப்பட்டுள்ள பினராயி விஜயன், தன் சொந்த வாழ்க்கை பற்றி மீடியாக்களிடம் வாய் திறந்ததில்லை.

மோடி தினகரனோடு சேரும் வாய்ப்பு இன்னும் இருக்கிறது? அரசியல் இதெல்லாம் ஜகஜமப்பா..

Venkat Ramanujam #நாளைஅரசியல் * மோடி #EPS #OPS கழற்றி விட்டு விட்டு,
டிடிவி தினகரனோடு (sasikala facion) கூட கூட்டு சேரும் வாய்ப்பு உள்ளதா .. ஏன் இல்லை நிறையவே இருக்கிறது .. பிஜேபி அணுமுறையை பாருங்கள் அவர்கள் அதிமுகவில் கடந்த ஒரு மாதமாக எந்த அணியையும் குற்றம் சாட்டவில்லை .. இதை தினகரனும் பிஜேபி பற்றி வாய் திறக்காமல் வழி மொழிகிறார் .. இதை உணர்ந்ததால் தன்பால் ., எடப்பாடி சொல்படி செயல்படாமல் இருக்கிறார் என்று கோட்டை தகவல் சேர்ந்து அதிமுக #EPS & #OPS அணியை மேலும் மேலும் குழப்புகிறது .. இதை தான் sleeper cells என்று வருணித்து சிலாகிக்கிறாரா தினகரன் என்றால் .. உறுதியாக மறுக்க முடியாது .. #அதிமுக எவ்வளவுக்கு எவ்வளவு உடைகிறதோ பலவீனப்படுகிறதோ அது தங்களுக்கு நன்மை என்று நினைக்கிறது #RSS , #பிஜேபி . மோடி செல்வாக்கு இந்திய அளவில் சரிந்து வரும் வேளையில் இன்னொரு 16 மாதத்தில் 2019 ஆம் ஆண்டு தேர்தல் அறிவிப்பு வரும் நிலையில் ... யார் கண்டது மறுபடியும் ஒரு தியானம் நடந்து பன்னிர் செல்வம் பெங்களூரு சிறை சென்று கண்ணீர் கூட விடலாம் ..

திமுக எம் எல் ஏக்களிடம் பதவி விலகல் கடிதங்கள் பெறப்பட்டதா? திமுக அதிரடிக்கு ஆயத்தம்?

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க
உத்தரவிட வேண்டும்; எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்யும் முயற்சிக்கு தடை விதிக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்குகளில் சாதகமான தீர்ப்பு கிடைக்காவிட்டால் கடைசி ஆயுதமாக கூண்டோடு ராஜினாமா முடிவுக்கு திமுக வந்துள்ளதாக கூறப்படுகிறது.
அதிமுக இரண்டாக பிளவுபட்ட நிலையிலேயே திமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்திருந்தால் பொதுத்தேர்தல் நடந்திருக்குமே என அங்கலாய்ப்பை பொதுமக்கள் வெளிப்படுத்தினர். ஆனால் திமுக அமைதி காத்தது. இதேபோல் தினகரன் அணி போர்க்கொடி தூக்கியுள்ள தற்போதைய சூழலில் திமுகவின் வியூகம் மீது அதிருப்தி நிலவுகிறது. ஆனால் திமுக செயல் தலைவர் ஸ்டாலினோ, கொல்லைப்புறமாக திமுக ஆட்சி அமைக்காது என திட்டவட்டமாக கூறி வருகிறார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது என்பதை தினகரன் அணி எம்.எல்.ஏக்கள் ஆளுநரிடம் கடிதம் கொடுத்தபோதே வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

"புரியாத புதிர்: தயாரிப்பாளரை நெருக்கும் கந்துவட்டி .... 14 லட்சத்துக்கு வட்டி 2 கோடி 20 லட்சம் ?

திரைப்பட பைனான்சியர் இரண்டு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டுவதாக 'புரியாத புதிர்' படத்தின் தயாரிப்பாளர் புகார் அளித்திருப்பது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளரை மிரட்டும் கந்துவட்டி கும்பல்!பல்வேறு பிரச்சினைகளையும் தடைகளையும் தாண்டி செப்டம்பர் 1ஆம் தேதி வெளியான படம் 'புரியாத புதிர்'. ‘மெல்லிசை’ எனப் பெயரிட்டு, 3 ஆண்டுகளுக்கு முன்பே படப்பிடிப்பு முடித்து, நீண்ட போராட்டத்துக்குப் பின்பு பெயர் மாற்றம் செய்யப்பட்டு இந்த படம் வெளியானது. விஜய் சேதுபதி, காயத்ரி நடித்திருந்த இப்படத்தை அறிமுக இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியிருந்தார்.
இந்த படத்தின் தயாரிப்பாளர் தீபன் பூபதி, தன்னை ஷங்கர் என்ற திரைப்பட பைனான்சியர் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாகச் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் அளித்துள்ள புகார் மனுவில், ஷங்கர் என்ற திரைப்பட பைனான்சியரிடம் தான் 2014ஆம் ஆண்டு 14 லட்சம் ரூபாய் வட்டிக்கு வாங்கியதாகவும், அதற்கான வட்டியைச் சரியாகச் செலுத்தி வந்த நிலையில் 'புரியாத புதிர்' படம் வெளியான அன்று 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை கொடுத்து அவரிடம் வாங்கிய கடன்தொகையை முழுமையாக அடைத்துவிட்ட நிலையில் தற்போது மேலும் 2 கோடி ரூபாய் தர வேண்டும் என்று ஷங்கர் மிரட்டுவதாகக் கூறியுள்ளார்.

தினகரன் : ஒரே வாரத்தில் ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம்!

மின்னம்பலம் : ஒரு வாரத்திற்குள் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோரை
வீட்டுக்கு அனுப்புவோம் என்று சென்னை அடையாறிலுள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய தினகரன் தெரிவித்துள்ளார்.
முதல்வருக்கான ஆதரவை தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பெற்றுள்ள நிலையில்,இவர்கள் தகுதி நீக்கம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்வது குறித்த நடவடிக்கைகள் தொடங்கப்பட்டு விட்டதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் தெரிவித்திருந்தார்.
வரும் 20ஆம் தேதிவரை சட்டசபையில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கூடாது என்று நேற்றைய தினம் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செங்கோட்டையன் உதயசந்திரனை ஒதுக்குவது ஏன்? லஞ்சம் ....? 7500 தற்காலிக ஆசரியர்களை நியமனம் ....

தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் கல்வித்துறை மேம்பாட்டு ஆலோசனைக்
கூட்டத்தில், கல்வித்துறையில் பல அதிரடி மாற்றங்களைக் கொண்டு வந்த கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனுக்கு அழைப்பு இல்லாத விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல்வித்துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்ற பின் பொதுத் தேர்வுக்கான தரவரிசை ரத்து, 11ம் வகுப்பிற்கு பொதுத்தேர்வு என பல அதிரடி நடவடிக்களை அவர் மேற்கொண்டு பலரின் பாராட்டுகளை பெற்றார். மேலும், நேர்மையான அதிகாரி எனவும் பேரெடுத்தார். மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணி நியமனம், பணி மாறுதல் ஆகிய விவகாரங்களில் நடைபெற்ற முறைகேடுகளில் இவர் நேர்மையாக நடந்து கொண்டதால், இவருக்கும், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே மோதல் இருந்து வந்ததாக தெரிகிறது.
எனவே, உதய சந்திரனை மாற்றும் முயற்சியில் தமிழக அரசு இறங்கியது. ஆனால், அதற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், அவரை வேறு பணிக்கு மாற்றக்கூடாது என சென்னை நீதிமன்றமும் உத்தரவிட்டது.

ஜெ. மரணம்... விசாரணை குழு... எல்லாம் மறந்த பன்னீர்செல்வம் !

"ஜெ. மரணம் தொடர்பான மர்மத்தை விசாரிக்க கமிஷன் அமைக்கப்படும்னு
உத்தரவாதம் கொடுத்து ஓ.பி.எஸ். அணியை தன்னோடு சேர்த்த இ.பி.எஸ்., அ.தி.மு.க. பொதுக்குழுவில் அது தொடர்பா எந்தத் தீர்மானமும் நிறைவேற்றலையே?'' "ஓ.பி.எஸ். முதல்வரா இருந்தப்ப சென்னையை ஒரு காட்டு காட்டிய வர்தா புயல் சமயத்தில் மேற்கொள்ளப்பட்ட நிவாரணப் பணிகளுக்காக நன்றி தெரிவித்து தீர்மானம் போட்டு ஓ.பி.எஸ். தரப்பை குளிர்வித்த இ.பி.எஸ்., ஜெ.வின் மரண மர்மம் சம்பந்தமான விசாரணை பற்றிய தீர்மானத்தை நிறைவேற்றலை. முதல்வர் பதவி பறிபோனதும் நியாயவான் போல ஜெ. சமாதியில் தியானம் இருந்து தர்மயுத்தம் நடத்திய ஓ.பி.எஸ்.ஸும் துணை முதல்வராகிவிட்ட நிலையில், விசாரணை கமிஷன் சம்பந்தமான தீர்மானத்தை வலியுறுத்தலை. ஜெ. மரண மர்மத்தை அவரோட சமாதியிலேயே போட்டு புதைச்சி, பன்னீர் தெளிச்சிடலாம்னு முடிவெடுத்துட்டாரு போல."  நக்கீரன்

மதிமுக மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்!

நக்கீரன் : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்மறுமலர்ச்சி திராவிட
முன்னேற்றக் கழகம்பேரறிஞர் அண்ணா 109 ஆவது பிறந்தநாள் மாநாடு தஞ்சாவூரில் நடைபெற்றது.  தஞ்சை புதிய பேருந்து  நிலையத்திற்கு அருகே 15ம் தேதி மதியம் துவங்கிய மாநில மாநாட்டில் 23 தீர்மானங்கள் கொண்டு வரப்பட்டன.
தீர்மானம் : 1  ;உலகின் உயர்ந்தோங்கிய மக்கள் ஆட்சி நாடாகத் திகழும் இந்தியாவுக்குப் பெருமை சேர்ப்பது, வேற்றுமையில் ஒற்றுமையும், நாட்டின் பன்முகத் தன்மையும்தான் என்பதை மறுக்க முடியாது. ஆனால், கடந்த 2014-ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பாரதிய ஜனதா கட்சியினர், நாடாளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மை பெற்றுள்ள காரணத்தால் தாங்கள் நினைத்ததை யெல்லாம் செயற்படுத்தி வருகின்றார்கள். ஒரே மதம், ஒரே மொழி, ஒரே பண்பாடு, ஒரே நாடு எனும் இந்துத்துவக் கருத்தியலை நடை முறைப்படுத்தும் வகையில்தான், கடந்த மூன்று ஆண்டுக் கால மோடி ஆட்சியின் செயல்பாடுகள் இருக்கின்றன.சிறுபான்மை மக்களின் மீதான தாக்குதல், சகிப்பு இன்மை, மதவாதத்திற்கு எதிராகக் குரல் கொடுத்த சிந்தனையாளர்கள் நரேந்திர தபோல்கர். எம்.எம். கல்புர்கி, கோவிந்த் பன்சாரே, கௌரி லங்கேஷ் ஆகியோரின் படுகொலை, பசுவதைத் தடுப்பு எனும் பெயரால் நடத்தி வரும் வன்முறைகள், அரசியல் சட்டத்தின் முகப்புரையில் இருந்து மதச்சார்பின்மை, சோசலிசம் ஆகியவற்றை நீக்க முயற்சி, இந்திய வரலாற்று ஆய்வு நிறுவனம் மற்றும் கல்வி நிறுவனங்களில் ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் நியமனம்,

சாரணர் இயக்கதுக்குள் நுழைய எச்.ராஜா துடிப்பது ஏன்?

நதிகளை இணைப்பதற்கு மிஸ்டுகால் கொடுங்கள் என்கிற சாமியார் ஜக்கிவாசுதேவ்  முன்வைத்த 80009 80009 என்ற எண் ஏற்கனவே பா.ஜ.கவின் மிஸ்டுகால் திட்டத்திற்குப் பயன்படுத்திய எண்தான். நதிஇணைப்பு என்ற பெயரில், மிஸ்டுகால் செய்பவர்களின் தரவுகளைப் பெற்று அவர்களை பா.ஜ.க.வில் இணைப்பதற்கான வேலைகள் ஈஷா தரப்பில் மறைமுகமாக நடந்துவருகின்றன. அதுபோலவே, சாரணர் இயக்கத்தில் உள்ள மாணவர்களையும் பா.ஜ.க. பக்கம் திருப்புவதற்கான திட்டங்களும் தீட்டப்பட்டுள்ளன. சாரணர் இயக்கம் போலவே இந்திய செஞ்சிலுவை சங்கம் உள்ளிட்டவற்றிலும் ஆர்.எஸ்.எஸ். ஆட்கள் ஊடுருவி வருகின்றனர். தன்னார்வலர்கள் நிறைந்த சுயேட்சை அமைப்பாக சாரணர் இயக்கம் இயங்க வேண்டும் என்பதுதான் அதை நிறுவியவரான பிரிட்டிஷ் ராணுவ அதிகாரி பேடன் பவலின் கொள்கை. (மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)

தமிழிசை சவுந்தரராஜன் பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக நியமனம்

பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன்  நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. பாரத் பெட்ரோலியத்தின் அலுவல் சாராத இயக்குனராக தமிழிசை சவுந்தரராஜன் நியமனம் புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:- பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் அலுவல் சாராத இயக்குநராக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரது பதவிக்காலம் 3 ஆண்டுகள் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மாலைமலர்

மருத்துவ கவுன்சில் மிகப்பெரிய மோசடி ஒன்றை செய்துள்ளது.. NEET தமிழகத்துக்கு வெளி மாநில மாணவர்கள் ..

#TNagainstNEET 2011லேயே நீட்டுக்கு எதிராக மருத்துவர் புருனோ அவரது வலைப்பதிவில் எழுதி இருந்த குறிப்பு கீழே:
மருத்துவத்திற்கான பொது நுழைவு தேர்வு - தமிழக அரசு எதிர்ப்பது சரியா
மருத்துவ இளங்கலை படிப்பில் சேருவதற்காக பொது நுழைவுத்தேர்வு ஒன்றை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை சில நாட்களாக எழுப்பப்பட்டு வருகிறது
இது குறித்து நடந்து வரும் வழக்கில், பொது நுழைவு தேர்வு நடத்த மத்திய அரசின் அனுமதி பெற்று விட்டதாக மருத்துவ கவுன்சில் உச்ச நீதிமன்றத்தில் பொய் கூறியதை அடுத்து உச்ச நீதிமன்றம் அவ்வாறு நடத்துவதற்கு மருத்துவ கவுன்சிலுக்கு அனுமதி அளித்துள்ளது
தமிழக அரசு பொது நுழைவு தேர்விற்கு எதிராக தனது நிலையை ஏற்கனவே தெரியப்படுத்தியுள்ளது. பார்க்க சுட்டி
இந்நிலையில் பொது நுழைவுத்தேர்வு என்பது மாணவர்களின் நலன் கருதி என்பது போலவும், பல நுழைவு தேர்வு எழுதுவதற்கு பதில் ஒன்று மட்டும் எழுதினால் போதும் என்பது போலவும் (அவர்களின் கூற்றுப்படி 22 தேர்வுகளுக்கு பதில் ஒரு தேர்வு - இது குறித்து விரிவாக பார்க்கலாம்), தமிழக அரசு மாணவர்களின் நலனுக்கு எதிராக இருப்பது போலவும் விஷ(ம)ப்பிரச்சாரம் ஒன்று வலைத்தளங்களிலும், சமூகவலைத்தளங்களிலும், மின்னஞ்சல் குழுமங்களிலும் நடைபெற்று வருகிறது

ஏன் அவரை பேரறிஞர் என அழைக்கிறார்கள்? அண்ணாவின் 108 வது பிறந்த நாள்! 15 - 09- 1909

சாய் லட்சுமிகாந்த் : ஏன் அவரை பேரறிஞர் என அழைக்கிறார்கள்?? அப்படி
அண்ணாவை நான் பேரறிஞர் என்று சொல்ல காரணம் அவர் ஆற்றிய அறிவார்ந்த உரைகளையோ, தீட்டிய புத்தகங்களையோ, யேல் பல்கலைக்கழகம் கூப்பிட்டு சிறப்பித்ததனாலோ ( இங்கே இப்போது உள்ள சில டுபாக்கூர் டிகிரி ஹோல்டர்கள் போல்லல்லாமல்) அல்ல... அவர் திராவிட நாடு கோரிக்கையை கைவிட்டதனால் தான் அவரை பேரறிஞர் என்கிறேன்.. விளங்கவில்லையா?? சொல்கிறேன் (இது என்னுடைய கருத்து அல்ல ஒரு கண்டத்தின் மாபெரும் தலைவர் தன் மருத்துவரிடம் பகிர்ந்துக்கொண்ட செய்தி) ஒரு அறிஞன் என்பவன் தற்காலத்துக்கு மட்டும் யோசிக்காமல் தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயல்படுபவன் ஆவான்.. உலக அறிஞர்கள் ஒவ்வோருவரும் அப்படியே... அண்ணா மட்டும் அன்று திராவிட நாடு கோரிக்கையை கைவிடாவிட்டால் என்ன நடந்திருக்கும் என்று யோசியுங்கள்.. ஹைதராபாத் இந்தியாவுடன் எப்படி இணைக்கப்பட்டது, காஷ்மீர் இன்றளவும் இந்தியாவுடன் எப்படி ஒட்டிவைக்கப்பட்டுள்ளது என்று சிந்தித்தீர்களேயானால் அண்ணாவின் தீர்க்கதரிசனம் பேராற்றல் புரியும்...

BBC :இந்தி தினம்: .. இந்தி ஆதிக்க தினம் ! இந்தி பேசாத மாநிலங்கள் மீது மோசமான வன்முறை’

இந்திய அரசியல் நிர்ணய சபை, தேவநாகரி எழுத்து வடிவத்தில் எழுதப்படும்
இந்தி மொழியை இந்தியாவின் ஆட்சி மொழியாக, கடந்த 1949-ஆம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட செப்டம்பர் 14-ஆம் நாள் இந்தி தினமாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. பல தசாப்தங்களாக இந்தித் திணிப்பை எதிர்த்து வந்த வரலாறு கொண்ட தமிழ் நாட்டில், இந்தி தினம் குறித்த கருத்துகள் எப்படி இருக்கின்றன ?
இந்தி தினம் கொண்டாடப் படுவதையொட்டி தமிழ்நாட்டில் சில மத்திய அரசுத் துறைகள் சார்பில், இந்தி மொழியின் முக்கியத்துவம் குறித்து ‘தமிழில்’ கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் நடந்துள்ளன. பல்வேறு மத்திய அரசு நிறுவனங்களும் இந்தி மொழி தினத்தை வெவ்வேறு வழிகளில் அனுசரித்துள்ளன.< ஆட்சியில் அமர்ந்த திராவிடக் கட்சிகள்: சுதந்திரத்துக்கு முன்பே, 1937-ஆம் ஆண்டு பிரிக்கப்படாத மதராஸ் மாகாணத்தில் சி.ராஜகோபாலாச்சாரி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம், பள்ளிகளில் இந்தி கற்பிப்பதைக் கட்டாயமாக்கியபோது அதற்கெதிராக நீதிக்கட்சியும், பெரியார் தலைமையில் பின்னர் திராவிட கழகமாக உருவான இயக்கமும் எதிர்த்தன.

கிரேஸ் பானுவை ரிமாண்டில் நிர்வாணமாக்கிய காண்டுமிராண்டி போலீஸ் ...

மிகுந்த வலியோடு, நிர்வாணமாக தலைகுனிந்து நின்றேன்...திருநங்கை கிரேஸ் பானு நீட் தேர்வை  எதிர்த்துப் போராட்டம் நடத்திச் சிறை சென்ற திருநங்கை கிரேஸ் பானுவை, சிறைக் காவலர்கள் நிர்வாணப்படுத்தி அவமானப்படுத்தியுள்ளனர்.நீட் தேர்வால் அனிதா என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டார். இதுபோன்ற அவலம் இனியும் தொடரக்கூடாது என்ற காரணத்தால்தான் கடந்த 7-ம் தேதி WTO அலுவலகத்தில் பூட்டுபோடும் போராட்டம் நடத்தினோம். உலக வணிக அமைப்பில் உள்ள கல்வியை, சேவைப்பட்டியலில் சேர்க்கக்கோரியும் மத்திய அரசுக்கு எதிரான முழக்கங்களையும் எழுப்பினோம். அப்போது அங்கு வந்த போலீஸார், ‘ரிமாண்ட் செய்யமாட்டோம்’ என்று கூறி, பின்னர் எங்களைக் கைதுசெய்து, பல மணி நேரம் அலைக்கழித்து நள்ளிரவில் மேஜிஸ்டிரேட் முன்பு நிறுத்தினர். அதன் பின்னர் மேஜிஸ்டிரேட், எங்களை 15 நாள்கள் ரிமாண்டில் வைக்க உத்தரவிட்டார். பின்னர், புழல் சிறைக்கு எங்களை அழைத்துச் சென்ற போலீஸார், ‘பெண் கைதிகள் அறையில் வைத்து சோதனை நடத்த வேண்டும் என்றும், அதற்கு நீங்கள் நிர்வாணமாக நிற்க வேண்டும்’ என்றும் கூறினர்.

வியாழன், 14 செப்டம்பர், 2017

புதுகோட்டை ONG எண்ணெய் கிணற்றில் தீ !

புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார் கொல்லையில் ஓ.என்.ஜி.சி.
நிறுவனம் அமைத்துள்ள எண்ணெய் கிணறு ஒன்றில் இன்று மாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது. புதுக்கோட்டை: ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் திடீர் தீ விபத்து புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நல்லாண்டார்கொல்லையில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் எண்ணெய் கிணறுகள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய் கிணறு ஒன்றில் இன்று திடீரென தீ பிடித்தது. தீ பிடித்ததால் ஏற்பட்ட புகை வானத்தில் கருமேகமாக சூழ்ந்தது. மக்கள் வசிப்பிடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் இந்த தீ விபத்து ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் உடனடியாக தீயணைப்பு துறை மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணற்றில் தீ விபத்து ஏற்பட்டதை கேட்டு வட்டாட்சியர் அங்கு விரைந்து வந்தார். அங்கு கூடியிருந்த மக்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஐயர்கோர்ட்டே .... கூட்டல் கணக்கு கூட தெரியாத... வெட்டி சம்பளம் வாங்கிட்டு

நீதிபதி கிருபாகரன் அவர்கள் அவரையோ அவரின் தீர்ப்பையோ , நீதிமன்றத்தையோ விமர்சிக்க கூடாது ... அப்படி செய்தால் நீதிமன்றம் அவமதிப்பு ஆகும் என்று கூறி இருப்பதால் ....
அரசு பள்ளி ஆசிரியர்கள் நீட் தேர்வில் 5 மாணவர்கள் மட்டுமே பாஸ் செய்ததற்க்கு வெட்கப்படனும் னு சொன்னியே .. நீட் தேர்வு CBSE சிலபஸ் ல நடந்தது அதற்கு ஆசிரியர்கள் என்ன செய்ய முடியும் ?? அவங்க எந்த சிலபஸ் நடத்துறாங்கனு கூட தெரியாத முட்டா புண்ணகையே ... அறிவுகெட்ட அற்ப பதரே ....
பல்லாவரம் சிறு குழந்தையை கற்பழித்து கொன்று எரித்த கொலகாரனுக்கு குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை ரத்து செய்தாயே ... மெழுகுவர்த்தி ஏற்றி நினைவேந்தல் செய்த திருமுருகன் காந்தியின் மீதான குண்டர் சட்டத்தை ஏன்டா ரத்து செய்யல ? கேனப் புண்ணாக்கு ஐயர்கோர்ட்டே ....
கூட்டல் கணக்கு கூட தெரியாத கூமுட்டை குமாரசாமி தீர்ப்பை நினைச்சு வெட்கப்பட்டு எப்படா நீதிபதிகள் தூக்குல தொங்குவீங்க .... ??
கபாலி படத்துக்கு ஒரே நாளில் தீர்ப்பு சொல்ல முடியுது ஆனால் அரியலூர் நந்தினியை கற்பழித்து கொன்று கருவருத்து , கிணற்றில் போட்ட இந்து முண்ணனி மாவட்ட தலைவன் மணிகன்டனுக்கு ஏன்டா இன்னும் தீர்ப்பு சொல்லல லுச்சா பய நீதிமன்றமே .... ?

கமல் ஹாசன் : நான் தனி கட்சி தொடங்க போகிறேன்!

Veera Kumar Oneindia Tamil சென்னை: தனிக்கட்சி தொடங்க உள்ளதாக நடிகர்
கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், ஏற்கனவே இதுகுறித்து வெளியான யூகங்கள் உண்மைதான் என்பதை அவர் உறுதி செய்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் தி குயன்ட் (The Quint) வெப்சைட்டுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியுள்ளதாவது: சமீபத்தில் கேரள முதல்வரை சந்தித்தேன். அதற்காக, நான் கம்யூனிஸ்டு கட்சியில் சேரப் போவதாக கூறினர். நான் பல்வேறு கட்சி தலைவர்களுடன் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்து இருக்கிறேன். ஆனால் எந்த கட்சியிலும் சேரும் எண்ணம் இல்லை. அரசியலில் மாற்றம் வேண்டும். புதிய சூழ்நிலை உருவாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்த மாற்றம் தொடங்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். ஏன் தமிழகம் என கேட்கலாம். ஏதாவது ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என நினைக்கிறேன். முதலில் எனது வீட்டிலிருந்து அதை தொடங்குகலாம் என்று நினைக்கிறேன்.

காஞ்சி ஜெயேந்திரர் சிறையில் விசாரணை லீக் : இந்து கடவுள்கள் எல்லாம் கிரிமினல்தானே ஏன் என்னைய மட்டும்?

Dear பக்தாள்ஸ் உங்கள் சங்கராச்சாரியாரின் வாக்குமூலம் உங்கள் அபிமான republic tvயில் தற்போது ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கிறது .. கண்டு அருள் பெறவும்

புல்லெட் ட்ரெயின் (கமிஷன் திட்டம்) சுமார் 1400 பேர்கள் மட்டுமே வந்து போகும் தடத்திற்கு ... தேவையா 1.08 லட்சம் கோடி செலவு

Venkat Ramanujam ஒரு மாசம் முன்னமே புக் பண்ணினா 1250 ரூபாய் மட்டுமே விமான கட்டணம்
. அதுவே ஒரு வாரம் முன்னர் புக் பண்ணின 2600 ரூபாய் மட்டுமே . ஒரு நாளைக்கு சராசரியா 18 விமானம் Ahmedabad - Mumbai வந்து போவுது இந்த தடத்தில் ..
இங்கே தான் நம்மிடம் உறிஞ்சி குடித்த கைக்காசை 20000 கோடிகள் போட்டு ., 88000 கோடிகள் கடனும் வாங்கி ஜப்பான் கிட்ட .. கவனிக்க not #makeinindia but made in japan .. ஆரம்பிச்சு ஐஞ்சு வருஷம் கழிச்சு 5000 ரூபாய் டிக்கெட் போட்டு அதனை 50 வருஷம் கடனில் அடைக்க திட்டம் போடுறாங்கோ மத்திய சர்க்கார் ..
Proposed Bullet train travel hrs is : 2~3 hrs
Existing Flight travel hrs is : 1:15 hrs
ie., Existing facility is not only 250% shorter in running time than proposed bullet train but also flight travel is approx 200~350 % less cost .
புல்லெட் ட்ரெயினை விட வேகமா நாள் ஒன்றுக்கு குறைவான செலவில் சுமார் 1400 பேர்கள் வந்து போகும் நிலையில் உள்ள தடத்திற்கு ... தேவையா 1.08 lakhs crores செலவு .. அதுவும் அதிக நேரம் செலவழித்து அதிக பயண பணம் எடுத்து கொண்டு ..
இந்திய மக்களின் உழைப்பு வரி பணம் இந்தியா முழுவதும் செலவு செய்யப்பட வேண்டாமா ..why shrunken it to 340 kms that too for few hundred people ?!!
#demonetisation போலவே இதையும் பாராளுமன்றம் அனுமதி வாங்கி இருக்க மாட்டார் . சட்ட மீறல் செய்யணும் நா அப்படி ஒரு அனந்த குஷி மோடிக்கு .. எவன் அப்பன் வீட்டு பணம் .. Law makers are law breakers here ..
இன்னும் 825 acres நிலம் கையகப்படுத்த படவே இல்லை அதுக்குள்
புல்லெட் ட்ரெயின் ஐந்து வருடத்தில் கிழிப்போம் என்ற இலக்கு வேற ..
இந்த 1.08 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிக ரயில்கள் விடலாம் . இருக்கும் ரயில் நிலைய மேம்பாட்டுக்கு செலவு செய்யலாம் .. மழை பெய்ஞ்சா அருவி மாதிரி சென்னை சென்ட்ரல் கொட்டுது http://bit.ly/railwaysfalls பாருங்க ..
சென்னை வண்டவாளமே தண்டவாளத்தில் இப்படி ஏறும் போது மற்ற ரயில் நிலைய கேவலம் பற்றி சொல்லவே வேணாம் .. 🐵 குஸ்மா கையில் பூமாலை .

ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு செல்லப்போகும் முன்னாள் பிரதமர் ?

savenra: இன்று குஜராத்
மற்றும் டெல்லியில் நடைபெற்ற :
♨️ சூரத் நகரில், பிஜேபி இளைஞர் பிரிவு கூட்டத்தை நடத்தவிடாமல் படேல் இளைஞர்கள் போராட்டம்.. பிஜேபி க்கு அடி மீதி .. வன்முறை.. பேருந்துகள் எரிப்பு.
♨️ Delhi University தேர்தலில் மாணவர் பிரிவு காங்கிரஸ் அபார வெற்றி ..
இரண்டுமே ஒரு மையப்புள்ளியை நோக்கி காலத்தை நகர்த்துகிறது .. பிஜேபி 2019 தேர்தலில் படு தோல்வி தோற்க மட்டும் போவதில்லை ..
📌 #நீட் அராஜகம் .,
📌 #பசு பேரில் பயங்கரம் .,
📌 #போலி தகவல்கள் .,
📌 நீதிமன்றத்தை அடக்கும் செயல் .,
📌 #demonetisation 56 lakhs croes LOSS ,
📌 #RBI பாழ் படுத்திய செயல்
📌 #petrolscam ,etc,
ஊழல் காரணமாக ஜெயிலுக்கு போகும் முன்னாள் பிரதமர் என்ற சிறப்பை பெற போகிறார் #மோடி .
அப்போது பாருங்கள் வேடிக்கையை .. இங்கு பேயாட்டம் போட்டு கொண்டு இருக்கும் சில்லுண்டிகள் H Raja Tamilisai Soundararajan Narayanan Thirupathy Dr K Krishnasamy Dr. Subramanian Swamy #gurumurthi etc., எல்லாமே மோடின்னா யாருன்னு கேட்டு துண்டை காணொம் துணியை காணொம்ன்னு பஜனை பாடுவார்கள்..