செவ்வாய், 8 நவம்பர், 2016

கொங்குமண்டலம் ஜெயாவிடம் ஏமாறுவது வாடிக்கைதானே ? கொ.ம.தே.க ஈஸ்வரனின் கொலம்பஸ் கண்டுப்பிடிப்பு? ..

ஜெயாவிடம் ஏமாறுவது என்ன கொங்கு பகுதிக்கு புதுசா??? அதிமுகவிடம்
ஏமாறவே உள்ள மக்கள் அவர்கள்....//
அவினாசி – அத்திக்கடவு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அதிமுக ஜெயா அரசால் மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்.. -- கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன்
தற்போது தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் மத்திய அரசிடம் இருந்து பெறப்பட்ட தகவலில் 2013-ம் ஆண்டு மத்திய அரசு அவினாசி - அத்திக்கடவு திட்டத்திலுள்ள தவறுகளை திருத்தி அனுப்பும் படியும், திட்டம் தொடர்பான சில விளக்கங்களை கேட்டும் தமிழக அரசுக்கு கடிதம் அனுப்பியிருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக திட்டம் தொடர்பான திருத்திய கருத்துரையை மத்திய அரசுக்கு தமிழக அரசு இதுவரை அனுப்பவில்லை.
மத்திய அரசின் கடிதத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு மேல் இத்திட்டத்துக்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால் மத்திய அரசு செயல்படுத்துகின்ற திட்டப் பட்டியலில் இருந்து தற்போது அவினாசி – அத்திக்கடவு திட்டம் நீக்கப்பட்டதாக தெரிகிறது. ஆனால் சட்டசபையிலும், நீதிமன்றத்திலும் திருத்திய கருத்துரையை மத்திய அரசுக்கு அனுப்பியுள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
அவினாசி – அத்திக்கடவு திட்டத்தின் செயல்பாடுகளை பற்றி சட்டசபையிலும், நீதிமன்றத்திலும், விவசாயிகளிடமும் மற்றும் பொதுமக்களிடமும் உண்மைக்கு புறம்பான தகவலை தமிழக அரசு தெரிவித்திருக்கிறது. அதிமுக தங்களின் அரசியல் ஆதாயத்துக்காக செயல்பட்டு அரசின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை கேலிக்கூத்தாக மாற்றியுள்ளது. அவினாசி – அத்திக்கடவு திட்டத்தை அதிமுக நிறைவேற்ற எந்த முயற்சியும் எடுக்காமல் காலந்தாழ்த்தி மக்களை ஏமாற்ற நினைப்பது கண்டனத்துக்குரியது. அவினாசி – அத்திக்கடவு திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் விவசாயிகளும், பொதுமக்களும் அரசியல் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு ஒன்றிணைந்து போராட முன்வர வேண்டும். இத்திட்டம் செயல்படுத்தப்படும் என்று மக்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள்"  முகநூல் பதிவு   prakash JP

கருத்துகள் இல்லை: