ஹைதராபாத்: கள்ளக்காதலி வீட்டிலிருந்து தப்பிக்க முயன்றபோது, 6வது மாடியிலிருந்து தவறி விழுந்து நடிகர் பால பிரசாந்த் மரணமடைந்தார்.
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம்
குண்டக்கல்லைச் சேர்ந்தவர் பால பிரசாந்த் (வயது25). இவர் ஐதராபாத்தில்
தங்கி இருந்து குறும் படங்களில் நடித்து வந்தார்.
இவர், ‘இப்பட்லோ ராமுடிலா சீத்தலா எவர்
உண்டா பாபு’ என்ற தெலுங்கு படத்தில் கதாநாயனாக அறிமுகமாகி நடித்து வந்தார்.
படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்து விட்டது. அடுத்த மாதம் படம் ரிலீஸ் ஆக
உள்ளது.