லவ் படத்துல நடிச்ச சந்திய நடிகைக்கு கோலிவுட்ல படங்களே இல்லையாம்...
இல்லையாம்... டபுள் ஹீரோயின், டிரிபிள் ஹீரோயின் படங்கள்ள நடிக்க வந்த
சான்ஸ மறுத்துட்டாராம். இப்ப மல்லுவுட் படங்கள்ள மட்டுமே
நம்பிகிட்டிருக்காராம். ‘இப்படித்தான் வந்தனமான நடிகையும் வந்த வாய்ப்ப
மறுத்ததால கோலிவுட் கைவிட்டுச்சி. அதே மிஸ்டேக்க நீயும் பண்ணாதேÕனு தோழிங்க
லவ் நடிகைக்கு அட்வைஸ் பண்றாங்களாம். அத காதுல வாங்காம, ‘பத்தோட பதினொன்னா
நடிக்க என்னால முடியாது. முக்கியமான வேஷமா இருந்தாதான் பண்ணுவேன்Õனு சூடு
பறக்க பதில் சொல்றாராம்... சொல்றாராம்... http://www.tamilmurasu.org காதல் சந்தியாவுக்கு சரியான சான்சே இல்லை
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பி.ஆர். பட்டனத்தைச் சேர்ந்த நல்ல முகமது- ஹாஜிரம்மாள் தம்பதியின் மகள் ஜனுபா பேகம் (16).
ஹாஜிரம்மாள் புதுக்கோட்டை கலெக்டர் மனோகரனிடம் சமீபத்தில் ஒரு மனு அளித்துள்ளார். அதில், ஜனுபா மணல்மேல்குடியில் உள்ள அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வந்தாள். இந்நிலையில் அவர் பள்ளிப் படிப்பை உடனே நிறுத்த வேண்டும் என்று கடந்த ஆகஸ்ட் மாத இறுதி முதல் பி.ஆர். பட்டினம் ஜமாஅத்தார் வற்புறுத்தினர் என்று அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து அவர் பிரபல ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு கூறுகையில்,
பூப்பெய்த பிறகு எந்த பெண்ணும் படிக்கக் கூடாது என்று ஜமாஅத்தார் எங்களை மிரட்டினர். அவர்களின் மிரட்டலையும் மீறி நான் என் மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்தேன். இதனால் அவர்கள் ஆத்திரமடைந்து எங்களை பள்ளிவாசலுக்கு இழுத்துச் சென்றனர். எனது கணவர், மகள் மற்றும் என்னை தாக்கியதுடன் பள்ளிப் பையையும் பறித்துக் கொண்டனர். எனது மகளின் டி.சியை அவர்களிடம் கொடுக்காவிட்டால் எங்கள் குடும்பத்தை ஊரை விட்டு ஒதுக்கிவிடுவோம் என்று எனது கணவரை எச்சரித்தனர். http://tamil.oneindia.in/