ஆலஞ்சியார் : ஐம்பெரும் காப்பியங்கள்..
சிலப்பதிகாரம்.. மணிமேகலை சீவகசிந்தாமணி.. வளையாபதி குண்டலகேசி ..
சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி வளையாபதி சமணர்கள் காப்பியம்/வாழ்வியல் ..
மணிமேகலை குண்டலகேசி பௌத்தவ காப்பியம்..
..சிலப்பதிகாரம் இரண்டாம் நூற்றாண்டில் எழுதபட்டது.. சங்கம் மருவிய காலத்தில் எழுதபட்டது குண்டலகேசி ஒன்பதாம் நூற்றாண்டில் எழுதபட்டதாக சொல்லபடுகிறது..
தமிழ் மண்ணில் சமணமும் பௌத்தமும் மட்டுமே நிலைபெற்றிருந்ததை இந்த ஐம்பெரும் காப்பியங்கள் நமக்கு உணர்த்தும்..
திருத்தக்க தேவர் என்ற சமணப் புலவர் இயற்றியுள்ள 'சீவக சிந்தாமணி', தமிழ் இலக்கியத்திலுள்ள மகா காவியங்களுள் ஐம்பெரும் காப்பியங்களுள் தலை சிறந்ததாக மதிக்கப்படுகிறது. ..
சிலப்பதிகாரம் மணிமேகலை பெரியபுராணம் மட்டுமே தமிழ் களத்தை மைய்யமாக கொண்டு எழுதபட்டது மற்றவைகள் பிற ஆதிக்கத்தை நமக்கு உணர்த்துவதாக அமைந்தது
சனி, 10 டிசம்பர், 2022
உச்சிபிள்ளையார் கோவில் ஸ்ரீரங்கம் காஞ்சி திருப்பதி இவையெல்லாம் சமணர் கோவில்களாகதானே இருந்தது
இலங்கை வடக்கு கிழக்கில் 450 க்கும் அதிகமான ஆடு மாடுகள் உயிரிழப்பு - கொட்டில்களில் நெருப்பு மூட்டி பாதுகாக்கும் மக்கள்
jaffnamuslim.coம் : சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கால்நடைகள் பல உயிரிழந்துள்ளன.
நேற்று வீசிய பலத்த காற்று மற்றும் குளிர் காரணமாக வடக்கு மாகாணத்தில் 300ற்கும் மேற்பட்ட மாடுகளும் 180ற்கும் மேற்பட்ட ஆடுகளும் உயிரிழந்துள்ளதாக அரச கால்நடை வைத்திய அதிகாரி சங்க வைத்தியர் ச. சுகிர்தன் தெரிவித்தார்.
அதேவேளை யாழ் மாவட்டத்தில் 80ற்கும் மேற்பட்ட ஆடுகளும் 20 தொடக்கம் 30ற்கு மேற்பட்ட மாடுகளும் உயிரிழந்துள்ளன.
மழையுடன் கூடிய குளிரான காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என்பதால் கால்நடை வளர்ப்போர் கால்நடைகளை மிகவும் அவதானமாக பாதுகாக்குமாறும் இவ் இறப்பு இன்னும் கூடலாம் என வைத்திய அதிகாரி தெரிவித்துக் கொண்டார்
இமாச்சல பிரதேச முதல் மந்திரியாக சுக்விந்தர் சிங் சுகு தேர்வு - நாளை காலை பதவியேற்கிறார்
மாலை மலர் : சிம்லா: இமாச்சல பிரதேச சட்டசபைக்கு கடந்த மாதம் 12-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. அங்கு நடந்த தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் 75.6 சதவீத வாக்குகள் பதிவாகின. 68 இடங்களில் காங்கிரஸ் கட்சி 40 இடங்களில் அமோக வெற்றி பெற்றது. அங்கு 1985-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சி மாற்றம் என்ற சரித்திரம், இந்த முறையும் மாறவில்லை; தொடருகிறது.
குஜராத்தில் சாதனை வெற்றி பெற்ற பா.ஜ.க. இங்கு ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்குப் பின்னர் மீண்டும் காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று, ஆட்சி அமைக்கிறது.
இந்நிலையில், இமாச்சல பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் பிரசாரக் குழுவுக்கு தலைமை தாங்கிய நடத்திய சுக்விந்தர் சிங் சுகு, மாநில முதல் மந்திரியாக அறிவிக்கப்பட்டு உள்ளார்.
ஹமிர்பூர் மாவட்டத்தில் உள்ள நந்தௌன் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சுக்விந்தரை முதல் மந்திரியாக கட்சித் தலைமை இன்று அறிவித்துள்ளது.
Tamil Nadu Climate Summit தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் நார்வே எரிக் சோல்ஹிம் மாண்டேக் சிங் அலுவாலியா உள்ளிட்ட பேராளர்கள் முன்னிலையில் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
minnambalam.com - Jegadeesh : இயற்கையை காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உண்டு. காலநிலை மாற்றம் என்பது இந்தியாவுக்கான பிரச்சினை மட்டுமல்ல, உலகளாவிய பிரச்சினை என முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 9 )தொடங்கி வைத்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழ்நாட்டுக்காக மட்டுமல்ல; இந்தியாவுக்காக மட்டுமல்ல உலகத்தின் நன்மைக்காக இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இயற்கைக்கு எல்லை இல்லை. இயற்கைக்கு வரையறை இல்லை. இயற்கை என்பது அனைவருக்கும் பொதுவானது. இயற்கையைக் காக்க வேண்டிய கடமை அனைவருக்கும் உரியது என்கின்ற அடிப்படையில் இந்த மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணாமலையார் கோவிலில் ஒலித்த இந்திப் பாடல்; பக்தர்கள் அதிர்ச்சி
nakkheeran.in திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தீபத்திருவிழாவில் சுமார் 35 லட்சம் பக்தர்கள் கலந்துகொண்டனர். மகாதீபம் அன்று மட்டும் சுமார் 25 லட்சம் பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
மகாதீபம் அன்று கோவில் வளாகத்தில் மூன்றாம் பிரகாரத்தில் விநாயகர், முருகர், அண்ணாமலையார், பராசக்தி, சண்டிகேஸ்வரர் வரிசையாக ஆடலுடன் தூக்கி வந்து காட்சி மண்டபத்தில் வைப்பர். இறுதியாகவே அர்த்தநாரீஸ்வரர் வெளியே தூக்கி வருவார்.
ஆண்டுக்கு ஒருமுறை மகா தீபத்தன்று தனது சன்னதியில் இருந்து வெளியே வந்து கொடிமரம் அருகிலிருந்து அங்கே குழுமியிருக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கு 5 நிமிடம் மட்டுமே காட்சியளிப்பார் அர்த்தநாரீஸ்வரர். அப்போது சரியாக 6 மணிக்கு 2668 உயரமுள்ள மலை உச்சியில் தீபம் ஏற்றப்படும், அதுவே திருவிழாவின் உச்சம்.
வெள்ளி, 9 டிசம்பர், 2022
மாமல்லபுரத்தை நெருங்கும் மாண்டஸ் புயல்.. முழு விபரம் ... சென்னையில் மழை
மாலை மலர் : வங்கக்கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது.
நள்ளிரவில் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 85 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும்.
வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த தீவிர புயலான மாண்டஸ் வலுவிழந்து புயலாக மாறி கரையை நோக்கி நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
மாண்டஸ் புயல் இன்று நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில் கரையை கடக்க வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மாண்டஸ் புயல் காரணமாக இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், வேலூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, நீலகிரி, கிருஷ்ண கிரி, தருமபுரி, சேலம், திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை விமான நிலையத்தில் 25 விமான சேவை நிறுத்தம் .. மாண்டஸ் புயல் எதிரொலி-
மாலை மலர் : மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
வங்கக் கடலில் நிலவிய மாண்டஸ் தீவிர புயல், வலுவிழந்து புயலாக மாறியுள்ளது.
இந்நிலையில், மேற்கு வடமேற்கு திசையில் மாண்டஸ் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியால், சென்னை விமானநிலையத்தில் இருந்து தூத்துக்குடி, மைசூர், கோழிக்கோடு, விஜயவாடா, பெங்களூரு, திருச்சி, மதுரை, ஹைதராபாத், ஹூப்ளி, கண்ணூர் உள்ளிட்ட இடங்களுக்கு செல்லும் 25 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உதயநிதி அமைச்சராகிறார் .. இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் ஒதுக்கப்படுகிறது.
ஆனால் இதுவரை 34 பேர் தான் அமைச்சர்களாக இருக்கிறார்கள்.
உதயாநிதிக்காக ஏற்கனவே திட்டமிட்டு 35 வது இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவையில் 35 ஆவது அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்கிறார்.
அவருக்கு தற்போது மெய்யநாதன் வகித்துவரும் இளைஞர் மற்றும் விளையாட்டு நலன் ஒதுக்கப்படுகிறது. மெய்யநாதனுக்கும் அவரிடம் மீதம் இருக்கும் சுற்றுச்சூழல் துறை ஒதுக்கப்படுகிறது.
அத்துடன் தற்போது கூட்டுறவுத்துறை அமைச்சராக இருக்கக்கூடிய ஐ.பெரியசாமிக்கு ஊரக வளர்ச்சித்துறையும், ஊரக வளர்ச்சி துறை அமைச்சராக இருக்கும் பெரிய கருப்பனுக்கு கூட்டுறவுத் துறையும் ஒதுக்கப்படுகிறது.
வியாழன், 8 டிசம்பர், 2022
டைம்ஸ் பத்திரிகை 2022 ஆம் ஆண்டின் வீரர்கள்- ஈரான் பெண்கள்! Women of Iran: TIME Heroes of the Year 2022
New menace to lanka Ceylonese party with indian interests by J R. Jayavardana 2 may 1947 UNP party paper.. flashback
The news that Dr.Colvin R de Silva and Mr.S.C.C.Anthonipillai were arrested in India for participating in strike of labourers of one of the largest textile mills in south India is an event of passing more than interest.
i do not think we need to go in to the merits of the strike. For though it is notorious that indian workers are very poorly paid in comparison with the wages paid in Ceylon. We have not the information nor the power to interfere in a matter coming with in the province of Madras Government
What concern us is the strike, ostensibly under the leadership of the Madras labour party, Is control by the Bolshvic Leninist Party of India.
Four of Whose leaders in India are Ceylonese. Namely Dr.Colvin R.De Silva , Mr.Leslly Gunavardana, Mr. S.C.C.Anthonipillai and Mrs. Carolin Anthonipillai
This then is an Indian political party
It work lies mainly with Indian workers. To establish itself it must work for and put in the forefront the interest of Indian workers.
Their objects are no doubt laudable. They follow in the tradition of Mahatma Gandhi and Pandit Nehru .Who have devoted their life to raising Indian masses ,including worker from poverty and misery.
Similar movements exists in other countries too.
In Ceylon we have the labour party and various socialists parties which have worked for several years to improve lot of the workers.
It is however when the Bolshvik Leninist Party seeks to establish in Ceylon, too , and work in Ceylon through its ceylon unit that the workers of the ceylon as well as the millions who call this land their mother land should begin to ponder on how the activities of this indian political party will affects the people of this country.
மூழ்கிய தாமரை.. குஜராத்தை மட்டும் வென்றுவிட்டு.. மற்ற 6 மாநிலங்களில் அடி வாங்கிய பாஜக! ...2024?
தமிழிசை சௌந்தரராஜன் சொல்வது போல இதை வெற்றிகரமான தோல்வி என்றுதான் சொல்ல வேண்டும்!
குஜராத் சட்டசபை தேர்தலில் வென்று 7வது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. இதுவரை 6 தேர்தல்களில் வென்றதை விட அதிக இடங்களை வென்று இந்த முறை மிகப்பெரிய பெரும்பான்மையோடு பாஜக ஆட்சி அமைத்துள்ளது. 2017ல் இங்கு 99 இடங்களில் மட்டும் வென்ற பாஜக, இந்த முறை 156 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் வெறும் 17 இடங்களுக்கு சுருங்கி உள்ளது. ஆம் ஆத்மி 5 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
ஹிமாச்சலில் காங்கிரஸ் வெற்றி! கேம் சேஞ்சிங்? குஜராத் பாஜக வெற்றியை மறக்கடித்த செய்தி
nakkheeran.in : காங்கிரசுக்கு ஆக்சிஜன் அளித்த ஹிமாச்சல் வெற்றி; கேரள ஸ்டைலில் ஆட்சியை திருப்பி போட்ட மக்கள்
நடந்து முடிந்த குஜராத், ஹிமாச்சல் தேர்தல் முடிவுகள் காலை முதலே வெளியாகி வரும் நிலையில் தற்போது பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னணி நிலவரம் வெளியாகி உள்ளது.
குஜராத், இமாச்சல் மாநிலத்தின் கருத்துக்கணிப்புகளை எல்லாம் பொய்யாக்கும் வகையிலான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளது.
அந்த வகையில் குஜராத்தில் 120 சீட் வரை பாஜக ஜெயிக்கலாம் என்ற கருத்துக்கணிப்பை உடைத்து 150 தொகுதிகளுக்கு மேல் பாஜக வெற்றிபெற்று 7 முறையாகத் தொடர்ந்து ஆட்சியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது.
சென்னை-யாழ்ப்பாணம் இடையே 12-ந்தேதி முதல் விமான சேவை
மாலைமலர் : சென்னை - இலங்கையின் வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து சென்னைக்கு மீண்டும் விமான சேவையை தொடங்க இருப்பதாக இலங்கை அரசு அறிவித்துள்ளது. அதன்படி சென்னை- யாழ்ப்பாணம் இடையேயான விமான சேவை வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது.
இதை அலையன்ஸ் ஏர் மூத்த அதிகாரி ஒருவர் உறுதி செய்தார். முதல் கட்டமாக வாரத்துக்கு 4 விமானங்கள் சென்னை- யாழ்ப்பாணம் இடையே இயக்கப்படுகின்றன.
ஏற்கனவே 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான போக்குவரத்தை தொடங்க சோதனை செய்யப்பட்டன.
அதே ஆண்டு நவம்பர் மாதம் சென்னை-யாழ்ப்பாணம் இடையே விமான சேவை தொடங்கப்பட்டது. 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை இந்த விமான போக்குவரத்து நடைபெற்றது.
சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில், அர்ஜுன் சம்பத்தை விரட்டி அடித்த வழக்கறிஞர்கள்!
/tamil.asianetnews.com/ : சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க முயன்ற அர்ஜுன் சம்பத்தை வழக்கறிஞர்கள் விரட்டி அடித்தனர்.
சட்ட மேதை அம்பேத்கரின் நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அம்பேத்கரின் நினைவு தினத்தையொட்டி பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வளாகத்தில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு, இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் மாலை அணிவிக்க வந்தார், ஆனால், இதற்கு மறுப்பு தெரிவித்த வழக்கறிஞர்கள் நீதிமன்ற வளாகத்திற்குள் நுழைய விடாமல் விரட்டி அடித்தனர்.
நகைச்சுவை நடிகர் சிவநாராயணமூர்த்தி காலமானார்.. பிரபலங்கள், ரசிகர்கள் அஞ்சலி
நடிகரும் இயக்குநருமான விசு இவரை அறிமுகம் செய்து வைத்தார். பூந்தோட்டம் எனும் படத்தில் முதல் முதலாக நடித்த சிவநாராயணமூர்த்தி 200க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர்.
காமெடி போலீஸ் கதாபாத்திரங்கள் என்றாலே முதலில் நினைவுக்கு வருபவர் இவர் தான்.
பட்டுக்கோட்டையை சேர்ந்த தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் T. சிவ நாராயணமுர்த்தி (இன்று) 07.12.2022 இரவு 8.30 மணியளவில் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்.
புதன், 7 டிசம்பர், 2022
பணக்கார நாடான கத்தாரில் ஏன் இந்த அளவுக்கு வறுமை? BBC
கத்தாரில் ஏழ்மையை காண்பதும் அதைப் பற்றிப் பேசுவதும் எளிதான காரியமல்ல. அதைப் பற்றிப் பேசுபவர்களும் மிகவும் கவனமாகவே பேசுகிறார்கள்.
"இது மிகவும் கடினமான பிரச்னை. முதலில் உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் நிர்வாகம் இதில் மிகவும் கண்டிப்பாக உள்ளது," என்று தன் பெயரை வெளியிட விரும்பாத ஒரு டாக்சி டிரைவர் பிபிசி முண்டோவிடம் தெரிவித்தார்.
கத்தார் உலகின் பணக்கார நாடுகளில் ஒன்று. ஆனால் அங்கும் வறுமை உள்ளது. அது பற்றி இங்கு வெளிப்படையாகப் பேசப்படுவதில்லை. ஏழ்மை இங்கு அதிக அளவிற்கு மறைக்கப்பட்டிருப்பதே அதற்குக் காரணம்.
வெளிநாட்டு தொழிலாளர்கள் தனிமைப்படுத்தப்பட்ட, மிகவும் தொலைதூர இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சுற்றுலாப் பயணிகள் வழக்கமாக வரும் பகுதிகளிலிருந்து வெகு தொலைவில் உள்ளனர். முக்கியமாக எண்ணெய் மற்றும் எரிவாயு மூலம் கிடைக்கும் வருமானம் காரணமாக கத்தாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 180 பில்லியன் டாலர்களாக உள்ளது.
யானை சிலையின் கீழ் சிக்கிக்கொண்ட நபர்..கோயிலில் பரிகாரம் செய்ய முயன்றவருக்கு நேர்ந்த சோகம்: வைரல் வீடியோ
அந்த வகையில் குஜராத்தட்டில் அமைந்துள்ள கோவில் ஒன்றில் அங்கிருக்கும் யானையின் சிலையின் கீழ் சென்று வருவது நேர்த்திக்கடனாக கருதப்பட்டு வருகிறது.
அதன்படி அந்த சிலையின் கீழ் தினமும் ஏராளமானோர் சென்று நேர்த்திக்கடன் செய்வது வழக்கம்.
இந்த நிலையில், அந்த கோவிலுக்கு வந்த நபர் ஒருவர் பரிகாரம் செய்வற்காக கோவிலின் நடைமுறைப்படி அந்த யானை சிலையின் கீழ் சென்றுள்ளார்.
குஜராத்தில் பாஜக? இமாச்சலில் காங்கிரஸ்...? - நாளை வாக்கு எண்ணிக்கை
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளும் இந்த எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் கட்சிகள் பெரும் எதிர்பார்ப்பில் காத்துக் கிடக்கிறார்கள்.
குஜராத்தில் கடந்த 25 ஆண்டுகளாக ஆட்சியிலிருந்து வரும் பாஜகவுக்கு இந்த முறையும் வெற்றி வாய்ப்பு இருப்பதாகவே தேர்தலுக்கு பிந்தைய அனைத்து கருத்துக்கணிப்புகளும் தெரிவிக்கின்றன.
குறிப்பாகத் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ள 182 தொகுதிகளில் 120க்கும் மேற்பட்ட தொகுதிகளில் பாஜக வெற்றிபெற வாய்ப்புள்ளதாகத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பெரும்பாலான தேசிய ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
4644 புதிய அடுக்குமாடி வீடுகள்: முதலமைச்சர் திறந்து வைத்தார் . ஈரோடு, கோவை, மதுரை மாவட்டங்களில்
மாலை மலர் : சென்னை: தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ.405.90 கோடி செலவில் 8 மாவட்டங்களில் 15 திட்டப்பகுதிகளில் கட்டப்பட்டுள்ள 4644 அடுக்குமாடி குடியிருப்புகளை காணொலிக் காட்சி வாயிலாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மேலும், 4,500 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீட்டு ஆணைகளையும், தாமாக வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 11,300 பயனாளிகளுக்கு தலா ரூ.2.10 லட்சம் வீதம் ரூ.237.30 கோடி மதிப்பீட்டிலான பணி ஆணைகளையும், 350 பயனாளிகளுக்கு குடியிருப்பு மற்றும் மனைகளுக்கான கிரயப் பத்திரங்களையும் வழங்கிடும் அடையாளமாக 8 பயனாளிகளுக்கு ஆணைகளை வழங்கினார்.
அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ கோவை செல்வராஜ் திமுகவில் இணைந்தார்.
மாலைமலர் : திமுக அரசு சிறப்பாக செயல்படுவதாக பாராட்டு அதிமுக கம்பெனியாக மாறி விட்டதாக பேட்டி அ.தி.மு.க செய்தி தொடர்பாளராக இருந்த முன்னாள் எம்.எல்.ஏ.கோவை செல்வராஜ்,
ஒபிஎஸ், இபிஎஸ் இடையேயான மோதலை அடுத்து ஓ.பன்னீர்செல்வம் பக்கம் சென்றார்.
இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இதையடுத்து அ.தி.மு.க.வில் இருந்து விலகி விட்டதாக அவர் அறிவித்தார்.
திராவிட பாரம்பரியமுள்ள கட்சியிலேயே சேருவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினை சந்தித்த கோவை செல்வராஜ், திமுகவில் இணைந்தார்.
அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, செந்தில் பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
ஒருவேளை 1993ல் சன் டிவி ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால்........... புதிய தலைமுறை, விஜய் டிவி, தந்தி, News 7, News 18, Polimer எல்லாம்
Kandasamy Mariyappan : ஊடகத்துறையில் நடப்பது என்ன?
மீண்டும் ஊடகங்கள் RSS, சங்க பரிவார, ஃபாசிச கும்பலின் கைகளுக்கு சென்றதாகவே பார்க்கிறேன்.!
2007ல் செய்த அருவருக்கத்தக்க செயலை தவிர்த்து சன் குழுமம் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு.!
சிந்தித்து பாருங்கள்., ஒருவேளை 1993ல் சன் டிவி ஆரம்பிக்கப்படாமல் இருந்திருந்தால்...........
தமிழ்நாடு இந்நேரம் சங்கிகளின் கோரப்பிடியில் சென்றிருக்கும்.!
இந்த ஒற்றைக் காரணத்திற்காகத்தான் ராமதாசு, விஜயகாந்த் போன்ற RSSன் அல்லக்கைகளும், தமிழிசை, முருகன், அண்ணாமலை போன்ற RSSன் அடிமைகளும் நீங்கள் அந்த டிவியா என்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் கிண்டல் செய்வது.!
எப்படியாவது சன் டிவியை ஓரங்கட்டி விட்டால்., அவர்களின் திட்டத்தை மக்களிடம் திணித்து விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு உண்டு.!
காரணம் புதிய தலைமுறை, விஜய் டிவி, தந்தி, News 7, News 18, Polimer எல்லாம் அவர்களின் கட்டுப்பாட்டில்.!
இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்த ஜனாதிபதி அனுமதியா? இலங்கை அமைச்சர் விளக்கம்!
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்படுமா என மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் நாடாளுமன்றத்தில் இன்று கேள்வியொன்றை எழுப்பியிருந்தார்.
அதற்கு சிங்கள மொழியில் பதிலளித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இந்த விவகாரத்தில் ஜனாதிபதி தனக்கு முழுமையான அதிகாரத்தை வழங்கியுள்ளதாக கூறினார்.
நாடாளுமன்ற உறுப்பினர் விஜித்த ஹேரத் எழுப்பிய கேள்விக்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய பதிலின் ஊடாக, இந்திய மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அதிகாரத்தை ஜனாதிபதி வழங்கியுள்ளதாக வெளிப்படுகின்றது.
செவ்வாய், 6 டிசம்பர், 2022
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்- ரிக்டரில் 6.2 ஆக பதிவு
இது ரிக்டரில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. நிலநடுக்கம் ஜெம்பர் பகுதியில் இருந்து 284 கி.மீ. தென்மேற்கே உணரப்பட்டு உள்ளது.
கிறிஸ்தவ மதம் மாறும்படி 21 ஆண்டுகளாக அடி, உதை; கணவர் மீது மனைவி போலீசில் புகார்.. மகாராஷ்டிரா
தினத்தந்தி : 21 ஆண்டுகளாக மதம் மாற வற்புறுத்தி தினமும் அடித்து, உதைத்த தனது கணவர் மீது மனைவி போலீசில் புகாரளித்து உள்ளார்.
மராட்டியத்தின் புனே நகரில் எரவாடா காவல் நிலையத்தில் 43 வயதுடைய பெண் ஒருவர் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்து உள்ளார்.
அதில், எரவாடா பகுதியில் வசித்து வந்த ரவீந்தர் சிங் பன்வார் சிங் ராஜ்புரோகித் என்பவர் 21 ஆண்டுகளுக்கு முன்பு, தனது மதத்தில் இருந்து விலகி, கிறிஸ்தவ மதத்திற்கு மாறியுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் தனது மனைவியையும், அவரது பெற்றோரையும் மற்றும் குழந்தைகளையும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி தொடர்ந்து வற்புறுத்தி வந்துள்ளார்.
இதற்காக உடல் மற்றும் மனரீதியோக அவர் தனது மனைவியை அடித்து, துன்புறுத்தி வந்துள்ளார்.
அமைச்சர் துரைமுருகனின் அண்ணன் மகள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
தமிழ்நாட்டில் மூத்த அமைச்சர்களில் ஒருவர் துரைமுருகன். திமுக பொதுச்செயலாளராக உள்ள துரைமுருகன் காட்பாடியில் வசித்து வருகிறார்.
இப்போது தமிழக அரசில் நீர்வளத்துறை அமைச்சராக உள்ள துரைமுருகனின் மூத்த சகோதரர் துரை மகாலிங்கம். இவர் மறைந்து ஓராண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது.
திருச்சி சூர்யா சிவா பாஜகவில் இருந்து விலகினார் அதிரடி டுவீட்
இந்த விவகாரம் தொடர்பாக, டெய்சி சரண், சூர்யா சிவா ஆகியோரிடம் திருப்பூரில் வைத்து பா.ஜ.க. ஒழுங்கு நடவடிக்கை குழுவினர் தனித்தனியாக விசாரணை நடத்தினர். இதையடுத்து, சூர்யா சிவாவை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கி பாஜக அறிவித்தது.
கைது செய்யப்பட்ட மதபோதகருக்கு சொந்த மகள் உள்பட மொத்தம் 20 மனைவிகள் .. அமரிக்கா
கொலராடோ அமெரிக்காவைச் சேர்ந்த மத போதகர் சாமுவேல் ராப்பிலி பேட்மேன் (46).ஒரு குழுவின் போதகராக சாமுவே இருந்துள்ளார். 2019 ஆம் ஆண்டி இந்த் குழுவின் தலைமையை ஏற்றுக்கொண்ட பிறகு, சாமுவேல் தன்னை ஒரு தீர்க்கதரிசி என்று பிரகடனம் செய்யத் தொடங்கினார்.
முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல் சீட் தருவது மதத்திற்கு எதிரானது – இமாமின் கருத்து
விகடன் தமிழினி : முஸ்லிம் பெண்களுக்கு தேர்தல் சீட் தருவது மதத்திற்கு எதிரானது – இமாமின் கருத்து தால் சர்ச்சை
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. அங்குள்ள 182 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இருக்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், 89 தொகுதிகளுக்கு முதல் கட்ட வாக்குப்பதிவு டிசம்பர் 1ஆம் தேதி நடைபெற்றது. மீதமுள்ள தொகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில், குஜராத்தின் அகமதாபாத்தில் உள்ள ஜம்மா மசூதியின் தலைமை மத குருவான ஷாஹி இமான் தேர்தல் குறித்தும் அதில் இஸ்லாமிய பெண்கள் போட்டியிடுவது குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்துள்ளார்.
பரந்தூர் விமான நிலையம்: சர்வதேச ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழ்நாடு அரசு .
தினமணி : பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு அரசு, சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் ரூ.20,000 கோடி முதலீட்டில் 2028-ம் ஆண்டுக்குள் விமான நிலையம் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 4,700 ஏக்கர் பரப்பளவில் புதிய விமான நிலையத்தை அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சென்னையின் 2-வது விமான நிலையமாக பரந்தூரில் விமான நிலையம் அமைக்க ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில், பரந்தூரில் விமான நிலையம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம், சர்வதேச ஒப்பந்தப்புள்ளி (டெண்டர்) கோரியுள்ளது.
திங்கள், 5 டிசம்பர், 2022
விரைவில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழ்.. முதல்வரின் முயற்சிக்கு கிடைத்த 2-வது வெற்றி !
Kalaignar Seithigal - Praveen : முரசொலி தலையங்கம்
சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை கொண்டுவர தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ச்சியாக எடுத்த முயற்சிகள் பலரையும் மனமாற்றம் அடைய வைத்துள்ளன.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மாநில மொழியான தமிழ் மொழி வழக்காடு மொழியாக ஆக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அதனை வழிமொழிந்திருக்கிறார் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ அவர்கள். அவரது வழிமொழிதலை வரவேற்கிறோம். இதற்கான அவரது அனைத்து முயற்சிகளும் வெல்ல வேண்டும் என்று வாழ்த்துகிறோம்.
குஜராத், இமாச்சல பிரதேச மாநிலங்களில் மீண்டும் பாஜக ஆட்சி- தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பில் தகவல்
இதேபோல் குஜராத்தில் மொத்தம் உள்ள 182 சட்டசபைத் தொகுதிகளுக்கு இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. இரண்டு மாநிலங்களிலும் தேர்தல் முடிவுகள் வரும் 8ந் தேதி வெளியாகின்றன.
இந்நிலையில் இமாச்சல் பிரதேசம் மற்றும் குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று டிவி9 குஜராத்தி மற்றும் ரிபப்ளிக் டிவி, நடத்திய தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இதேபோல் டைம்ஸ் நவ், நியூஸ் எக்ஸ் நடத்திய கருத்து கணிப்பில் இமாச்சல பிரதேசத்தில் பாஜக பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பிடிக்கும் என்பது தெரிய வந்துள்ளது.
சாதி வாங்கலையோ சாதி.. காசு கொடுத்து வாங்கிய சாதி அடையாளங்கள் ஒல்லாந்தர்(டச்சு)ஆட்சிக்காலம் (1658-1795)
Dhinakaran Chelliah : சாதி வாங்கலையோ சாதி!
தமிழ்நாட்டில் பிராம்மணர்களின் ஆதிக்கம் எப்படியோ, அப்படித்தான் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்களின் ஆதிக்கமும்.
தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான இடைநிலைச் சாதிகள் யாழ்ப்பாணத்தில் வெள்ளாளர்கள் என்றே அறியப்படுகிறார்கள்.
இது எப்படி சாத்தியமானது என்ற கேள்விக்கு விடையாக அமைந்ததுதான் “யழ்ப்பாணக் குடியேற்றம்” எனும் ஆய்வு நூல்.
கேரளம்,ஆந்திரம்,கன்னடம்,துளுவம்,கலிங்கம்,
ஒரியா, என பல பிரதேசங்களிலிருந்து மக்கள் குடியேறிய பகுதியே யாழ்ப்பாணம் என்பதை மிகத் தெளிவாக “யாழ்ப்பாணக் குடியேற்றம்”ஆய்வு நூல் ஆசிரியர் திரு.முத்துக்குமாரசுவாமிப்பிள்ளை அவர்கள் குறிப்பிடுகிறார்
(முதற் பதிப்பு 1982).கேரளத்திற்கும் யாழ்ப்பாணத்திற்கும் மிக நெருங்கிய தொடர்பு பற்றி இந்நூல் தரவுகளுடன் குறிப்பிடுகிறது.
இந்த ஆய்வு நூலை எழுதுவதற்கு 36 தமிழ் நூல்களையும்,5 வடமொழி நூல்களையும்,36 ஆங்கில நூல்களையும் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.
இவர் சென்னை லொயாலாக் கல்லூரி தலைமைத் தமிழ் விரிவுரையாளர் மற்றும் இளைப்பாரிய அராவி இந்துக் கல்லூரி அதிபருமாவார்.
ஜெயலலிதா ஜாதக அப்டேட் .. சனி, 14 மே, 2016
இவருக்கு 22-08- 2012 இல் இருந்து குரு திசை ஆரம்பம் இது 2028 வரை
இருக்கும். மூலம் நட்சத்திரத்தில் அமைந்து உள்ள குருவானவர் அதீத பலத்தை
கொடுத்து திடீரென்று பிரச்சனைகளையும் கொடுத்து விடுவார். அவற்றில் இருந்து
மீள்வதற்குள் போதும் போதுமென்றாகிவிடும்.அதிலும் குரு திசையில் நடப்பதோ
சனி புத்தி. குருவுக்கு சனி அமைந்திருப்பது அதன் எட்டாவது ஸ்தானத்தில்.
சனிக்கு குரு அமைந்திருப்பது ஆறாவது ஸ்தானம். சஷ்டாஷ்மமம் என்று சொல்வார்கள்.
இதில் ஏராளமான தோல்விகள் தொல்லைகள் எல்லாம் ஏற்படும். உயரத்தில் இருப்பது
போல் தோன்றினாலும் இருப்பது என்னவோ படுகுழியில்தான். தர்ம வழியில் நடந்தால்
மட்டுமே மீள முடியும். ஆனால் எதிலும் குறுக்கு வழியை நாடும் கிரிமினல்
தனம் இவரிடம் நிறையவே உண்டு. கோவில் பராமரிப்பு கிரகசாந்தி ஒன்றுமே
கைகொடுக்காது. விழுங்கியது கடப்பாரை .. சுக்கு கஷாயம் என்ன செய்யும்?இவர் யார் சொன்னாலும் எதையும் கேட்கமாட்டார். எல்லோரையும் பயன் படுத்துவார். 2016/05 jayalalithaa horoscom
President Vladimir Putin 2 டைப் கேன்சர், நரம்பியல் பாதிப்பு, 10 கிலோ வெயிட் லாஸ்! அதிபர் மாளிகையிலேயே சுருண்டு விழுந்த புதின்
tamil.oneindia.com - Vigneshkumar : மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புதின் உடல்நிலை குறித்து ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் பகீர் அளிப்பதாகவே உள்ளது. இதற்கிடையே ரஷ்ய பாதுகாப்புப் படையில் பணிபுரியும் அதிகாரி புதின் உடல்நிலை குறித்து சில பரபர கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்
ரஷ்ய அதிபர் புதின் குறித்து இப்போது ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளது.
குறிப்பாக அவரது உடல்நிலை சார்ந்து வரும் தகவல்கள் பகீர் தருவதாகவே உள்ளது.
அவர் உடல்நிலை பாதிப்புகளாகத் தீவிர சிகிச்சை எடுத்து வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் கூறி வருகின்றனர்.
சவுக்கு சங்கர் - கசடற – 15 என்.டி.டி.வியின் கதை
அதுவரை நாம் பார்த்து பழகிய விதங்களில் இருந்து ஒரு மாறுதல். அந்த மாறுதல் ஸ்டைலாக இருந்தது.
புதிய உலகம் போல தெரிந்தது. பிபிசி செய்திகளின் தரம் அதில் தெரிந்தது.
ஆச்சரியமாய்ப் பார்த்திருக்கிறேன்.
NDTV என்ற பெயரை இந்தியாவெங்கும் அவர்கள் பரப்பிய காலம் அது.
செய்திகளாக மட்டுமல்லாமல் அதன் பின்னணியைப் பற்றி பேசுவார்கள்.
குறிப்பாக தேர்தல் சமயத்தில் அவர்கள் ஒவ்வொன்றையும் அலசுகிற விதம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
எத்தனையோ ஆங்கில செய்திஊடகங்கள் இந்த இருபதாண்டு காலங்களில் வந்துவிட்டன.
ஞாயிறு, 4 டிசம்பர், 2022
மகாராஷ்டிராவில் ஒருவரையே மணந்த இரட்டை சகோதரிகள்
BBC News தமிழ் : மகாராஷ்டிர மாநிலம் சோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள அக்லுஜ் எனும் பகுதியில் இரட்டை சகோதரிகள் ஒரே நபரை, ஒரே மேடையில் வைத்து திருமணம் செய்துள்ளனர். மும்பையைச் சேர்ந்த இரட்டை சகோதரிகள் ரிங்கி பாட்கோன்கர் மற்றும் பிங்கி பாட்கோன்கர். இவர்கள் ஐ.டி. துறையில் பணியாற்றும் பொறியாளர்கள்.
இவர்கள் மும்பையில் டிராவல்ஸ் தொழில் செய்துவரும் அதுல் ஆவதாடே என்பவரை டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் செய்துள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மாற்றம்? - மூத்த தலைவர்களிடம் டெல்லி மேலிடம் கருத்து கேட்பு
இந்த நிலையில் கடந்த மாதம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் விசுவரூபம் எடுத்தது.
2 வட்டார தலைவர்கள் நியமனத்தில் அதிருப்தி அடைந்த நெல்லை மாவட்ட காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து அழகிரியிடம் நியாயம் கேட்டனர்.
அப்போது அழகிரி ஆதரவாளர்களுக்கும், ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இந்த மோதல் தொடர்பாக அழகிரி ஆதரவாளரான ரஞ்சன்குமார் மீதும் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் இல்லை, மறைமுக போர்.!
Kandasamy Mariyappan : உண்மையில் தமிழ்நாட்டில் நடப்பது அரசியல் இல்லை, மறைமுக போர்.!
பொருளாதார, சாதி, மத ஆதிக்க பலம் வாய்ந்த, ஒன்றிய ஆட்சி அதிகார பலம் வாய்ந்த, ஏவுகனை பீரங்கி வசதிகளை கொண்ட ராணுவ பலம் வாய்ந்த, பண பலம் உள்ள RSS/BJP/ADMK என்ற அணிக்கும்...
சித்தாந்த புரிதல் குறைவாக உள்ள, வாழ்வாதார சிந்தனை குறைவாக உள்ள மக்களுக்காக சாதிய, மத, பொருளாதார ஆதிக்க சக்திகளை எதிர்த்து போராடும் சித்தாந்த பிடிப்போடு, குறைவான பண பலமுள்ள திமுக/கம்யூனிஸ்ட்/விசிக அணிக்கும் நடக்கும் மிகப்பெரிய போர்.!!!
உழைத்தவனுக்கு பதவியில்லை : ஆர்.எஸ்.பாரதியின் கலகக் குரல்!
சென்னை ஆர்.ஏ.புரம் தனியார் விடுதியில் மறைந்த முன்னாள் எம்.பி ஜின்னாவின் படத் திறப்பு நிகழ்வில் திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார்.
அப்போது ஜின்னாவை நினைவுகூர்ந்து பேசிய ஆர்.எஸ்.பாரதி, “எமர்ஜென்சி நேரத்தில் கலைஞரை விட்டுவிட்டு எல்லோரும் ஓடிவிட்டார்கள். மந்திரியாக இருந்தவர்களும் ஓடிவிட்டனர். கட்சி மாறினர்.
இந்த நேரத்தில் இதை நான் சொல்லியாக வேண்டும். தன்னந்தனியாக கலைஞர் உட்கார்ந்து கொண்டிருந்தார். அவரது கார் ஓட்டுநர் கூட சாவியைக் கொடுத்துச் சென்றுவிட்டார். வேலூர் சிறையிலிருந்து நான் ரிலீசாகி வந்ததும், ஒருவருட காலம் கலைஞரோடு இருந்தேன்” என்றார்