Karthikeyan Fastura : பணத்தோட்டம் சேனல் ஆரம்பிப்பதற்கு முன் நிறைய யோசனைகள் தயக்கங்கள் இருந்தன.
எதையும் professional ஆக செய்யவேண்டும் என்ற ஆசை இருக்கும்.
ஆரம்பத்தில் வீடியோ எடிட்டிங் நன்றாக இருந்தாலும் வீடியோ பதிவு மிக சுமாராக லைட்டிங் சரியில்லாமல் இருக்கும்.
இருந்தபோதிலும் உள்ளடக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த சமயத்தில் வெளியிட்டோம்.
பிறகு அதனை நிறுத்தி வைத்தோம். ஏனென்றால் அதற்கென்று ஒரு தனியாக ஆள் கிடைக்கவில்லை.
மூன்று மாதங்களுக்கு முன்பு இதில் நிபுணத்துவம் பெற்ற ராகேஷ் என்ற தொழில்முறை வீடியோ எடிட்டர் கிடைக்கவும் மீண்டும் பணத்தோட்டம் சேனலுக்கு உயிர் கொடுத்தோம்.
இம்முறை அதற்கென்று ஒரு தனி அறை ஒதுக்கி, அங்கு லைட்டிங் ஏற்பாடுகள் செய்து,
சனி, 26 மார்ச், 2022
பணத்தோட்டம் ... தனிமனித நிதி மேலாண்மை பற்றிய புரிதலுக்கும், சமூக பொருளாதார சிந்தனைக்கும்
மூப்பில்லா தமிழே தாயே.... முதலிடம் பிடித்த ஏ.ஆர்.ரஹ்மானின் பாடல்
மாலைமலர் : ஏ.ஆர்.ரஹ்மானின், ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற புதிய பாடல் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
பல படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் ஏ.ஆர்.ரகுமான், தற்போது புதிய தமிழ் கீதமான ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற பாடலை உருவாக்கி இருகிறார். மார்ச் 24ஆம் தேதி துபாய் எக்ஸ்போ-வில் ரகுமானின் கச்சேரியில் காட்சிப்படுத்தப்பட்ட இந்தப் பாடல், தற்போது யூடியூப் சேனலில் வெளியிட்டு இருக்கிறார்கள்.
‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் பெயருக்கு ஏற்றாற்போல், உலகின் மிகப் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழின் புகழை குறிக்கும் வகையில் எழுதப்பட்டுள்ளது. கவிஞரும் பாடலாசிரியருமான தாமரை எழுதிய இந்தப் பாடல்,
பழங்காலத் தமிழ்ப் பண்பாட்டையும், இன்று உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களால் பல்வேறு துறைகளில் நிகழ்த்தப்பட்ட சாதனைகளையும் கொண்டாடுகிறது.
அண்ணாமலை “24 மணி நேரத்திற்குள் மன்னிப்புக் கோர வேண்டும்! ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை! இல்லையேல் நூறு கோடி ரூபா அபராதம்!
மின்னம்பலம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தமிழ்நாட்டை வளர்த்தெடுக்கும் வகையில் துபாய் எக்ஸ்போ-22ல் கலந்துகொண்டதை கொச்சைப்படுத்தி, உள்நோக்கம் கற்பிக்கும் வகையில் பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை மீது தி.மு.கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எம்.பி., சார்பில் மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் எம்.பி வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
வேலூரில் எலக்ட்ரிக் பைக் விபத்து: அரசியல் தலைவர்கள் கோரிக்கை!
மின்னம்பலம் : வேலூரில் நேற்றிரவு சார்ஜ் போட்டிருந்த எலக்ட்ரிக் பைக் வெடித்து தந்தை, மகள் பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் எலக்ட்ரிக் வாகனங்களின் தரத்தை ஆய்வு செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சித் தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில், "வேலூர் அல்லாபுரத்தில் மின்சார இருசக்கர ஊர்தி வெடித்ததால் வீட்டிற்குள் ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கி தந்தை துரைவர்மா, 13 வயது மகள் பிரீத்தி ஆகியோர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து வேதனை அடைந்தேன்.
துபாய் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீட்டு ஒப்பந்தம்- முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்து
மாலைமலர் : துபாய் தொழில் முதலீட்டாளர் மாநாட்டில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று துபாயில் தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்றார். அப்போது, தமிழகத்தில் முதலீடு செய்ய முன்வருமாறு தொழில் முதலீட்டாளர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.
இந்த முதலீட்டாளர் மாநாட்டில் ரூ.1600 கோடி முதலீடு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசு கையெழுத்திட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னலையில் 3 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அதில், இரும்பு குழாய் தயாரிக்கும் நிறுவனத்துடன் ரூ.1000 கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஸ்டாலினுக்கு BMW கார் துபாய் அரசு வழங்கியதா? உண்மை என்ன?
tamil.indianexpress.com : தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல்வராக பதவியேற்று முதல்முறையாக வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு துபாயில் தொடங்கிய துபாய் எக்ஸ்போ தொழிற்கண்காட்சியில் பங்கேற்க சென்றுள்ளார். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை 6 மாதங்கள் நடைபெறும் இந்த தொழிற்கண்காட்சியில், 192 நாடுகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இதில் இந்தியாவிற்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் தமிழகத்திற்கான அரங்கு அமைப்பதற்காக தமிழகத்திற்கு அரங்கு அமைக்க தமிழக அரசு சார்பில் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகத்தின் பாரம்பரியம் கலாச்சாரம், தமிழ் மொழியின் முக்கியத்துவம் ஆகியவற்றை உணர்த்தும் வகையில் அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கை திறந்து வைப்பதற்காக முதல்வர் ஸ்டாலின், முக்கிய அமைச்சர்களுடன் நேற்று மாலை துபாய் சென்றடைந்தார்.
வெள்ளி, 25 மார்ச், 2022
ஐக்கிய அரபு அமீரக அமைச்சர்கள் தமிழ்நாடு வர மு.க.ஸ்டாலின் அழைப்பு!
நக்கீரன் செய்திப்பிரிவு : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்களைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் இன்று (25/03/2022) துபாய் பன்னாட்டு நிதி மையத்தில் (Dubai International Financial Centre) ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதாரத் துறை அமைச்சர் அப்துல்லா பின் டூக் அல் மர்ரி, (H.E. Abdulla Bin Touq Al Marri) ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் தானி பின் அகமது அல் சியோதி (H.E. Dr. Thani Bin ahmed Al Zeyoudi) ஆகியோரைச் சந்தித்து, பல்வேறு துறைகளில் தமிழகத்தில் முதலீடுகள் மேற்கொள்வது குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.
இச்சந்திப்பின்போது, ஐக்கிய அரபு நாடுகளில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையே உள்ள வர்த்தக உறவுகளை மேம்படுத்துதல், புத்தாக்கம் மற்றும் புத்தொழில்கள், தொழில் சூழலை மேம்படுத்துதல், விவசாயம், உணவு பதப்படுத்துதல், ஜவுளி மற்றும் ஆடைகள், நகை மற்றும் விலையுயர்ந்த கற்கள், மின்வாகனங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகனம் மற்றும் வாகன உதிரி பாகங்கள், பொறியியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இணைந்து பணியாற்றி முதலீடுகள் மேற்கொள்வதன் மூலம் தமிழ்நாட்டிற்கும், ஐக்கிய அரபு நாடுகளுக்கும் இடையே உள்ள பொருளாதாரம் மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.
தமிழகத்திற்கு பட்ஜெட் தேவையில்லை: அண்ணாமலை
மின்னம்பலம் : மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினாலே போதும், தமிழகத்திற்கு பட்ஜெட் தேவையில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'மக்களை ஏமாற்றிய திமுக பட்ஜெட்' என்ற தலைப்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் இன்று(மார்ச் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, திருப்பதி நாராயணன், கருநாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 'தாலி இங்கே தங்கம் எங்கே', 'ஆயிரம் ரூபாய் என்னாச்சி' போன்ற பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
மகள் கண்ணெதிரில் இயற்கைக்கு மாறான உடலுறவு.. சைகோ .. மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு மேற்கொள்வது பலாத்காரம்
tamil.asianetnews.co - Ezhilarasan Babu : மனைவியிடம் தவறாக நடந்து கொள்ளும் கணவன் விஷயத்தில் மட்டுமே இந்த உத்தரவுகளை வழங்குகிறோம் என நீதிபதி குறிப்பிட்டார். இந்த சமூகத்தில் ஒரு கணவரோ அல்லது வேறு யாரோ கற்பழிப்பு குற்றச்சாட்டுகளில் அலட்சியமாக இருக்கக் கூடாது. அவ்வாறு செய்வது சட்டத்தின்முன் சமத்துவமின்மையை வெளிப்படுத்துவது மட்டுமல்லாமல் அரசியலமைப்பை மீறுவதாகும் என அமர்வு முக்கிய கருத்துக்களை தெரிவித்தது.
தாலி கட்டிய கணவனாகவே இருந்தாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் உடலுறவு மேற்கொள்வது பலாத்காரம் தான் என பெங்களூரு உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. தன் மீது மனைவி கொடுத்த பலாத்கார வழக்கை ரத்து செய்ய வேண்டுமென கணவன் தாக்கல் செய்த மனு மீது நீதிமன்றம் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளது. இந்த வரலாற்று சிறப்பு மிக்க உத்தரவை கர்நாடக உயர்நீதி மன்றம் வழங்கியுள்ளது.
ஐயா இவரையும் விசாரிங்க.. இவருக்கு எல்லாம் தெரியும்” : எடப்பாடி பழனிசாமியை மாட்டிவிட்ட அதிமுக புகழேந்தி!
கலைஞர் செய்திகள் : எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.
எடப்பாடி பழனிசாமியையும் விசாரிக்க வேண்டும் என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்திடம் வா.புகழேந்தி மனு அளித்துள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் ஆஜராகச் சொல்லி எட்டு முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் காலம் தாழ்த்தி வந்த அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் 9வது முறையாக சம்மன் அனுப்பியதையொட்டி நேற்று விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்.
தோழர் மருதையன் :காஷ்மீர் பைல்ஸ் .. திராவிட நாடு பைல்ஸ் வந்தாலும் ஆச்சரியம் இல்லை
Kandasamy Mariyappan : எழுதி வைத்துக் கொள்ளுங்கள்..,
அடுத்த 50 ஆண்டுகளில் இந்தியா என்ற நாடு கண்டிப்பாக இருக்காது.!
பல நாடுகளாக உடைந்து கிடக்கும்.!
அந்த கருமத்தை பார்க்க என் வயதுடையவர்கள் உயிரோடு இருக்க மாட்டோம்.!
elvakumar Ramasamy உண்மை. அதற்கு முன்பாகவும் நடக்கலாம்.அதை தடுப்பதற்கு வழி மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி. மதவாத RSS/ Islamic fundamentals ஐ தடை செய்ய வேண்டும்.
Kandasamy Kandasamy : ஏன் அது நடக்காமல் தடுக்க வேண்டும்
Selvakumar Ramasamy : ஐரோப்பிய ஒன்றியம் போல் இருக்கலாம். ஒரே military block. அதுவும் சரிப்படாவிட்டால் தென் இந்தியா. வட இந்தியா சங்கிகளால் பேரழைவை சந்திக்கும்.
Madhu Thovalai : வாய்ப்பில்லை... திராவிடநாடே உருவாகவில்லை.. அந்த கொள்கையே கைவிட்டாச்சு..
Madhu Thovalai : இந்திய நாடா? ஒன்றியமா?
வியாழன், 24 மார்ச், 2022
சுவிஸ் - ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் ஏழாம் மாடியிலிருந்து குதித்து தற்கொலை!!
இன்று வியாழன் காலை 7:00 மணியளவில், சுவிஸ் நாட்டில் Montreux என்னும் இடத்தில் அமைந்துள்ள 7வது அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் இருந்து ஐந்து பேர் விழுந்து விட்டதாக Vaud பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதில் ஒரு ஆண், இரண்டு பெண்கள் மற்றும் ஒரு இளம் பெண் உயிரிழந்தனர். இளம்பெண் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஐந்து பேரும் பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் என்று தெரியவருகிறது.
40 வயதான தந்தை, அவரது 41 -வயது மனைவி, அவரது சகோதரி மற்றும் அவர்களின் 8 வயது மகள் ஆகிய நால்வர் உயிரிழந்துள்ளனர்.
15 வயது மகன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மாணவிகளை இப்படிதான் மயக்கி என்னுடைய காம வலையில் வீழ்த்தினேன்.. கைதான ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம்.
asianetnews.com : எனது வீட்டின் அருகே வசிக்க கூடிய 16 வயது மாணவி என்னிடம் நடனம் கற்றுக்கொள்ள வந்தார். அவர் கொஞ்சம் வசதி படைத்தவர். அவரிடம் பணம் இருப்பதை அறிந்த நான் மாணவியுடன் நெருங்கி பழக தொடங்கினேன். ஏற்கனவே 2 மனைவிகளை பிரிந்து வாழ்ந்து வந்த நான், சிறுமியை தனது வலையில் வீழ்த்த திட்டமிட்டேன்.
பாலியல் தொழிலுக்கு தள்ளிவிடுவதாக மிரட்டிஅடி பணிய வைத்தேன் என்று மாணவிகளை கடத்திய ஆசிரியர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லியை சேர்ந்தவர் மணிமாறன்(40). இவர் கோவையில் தங்கியிருந்த போது, தன்னிடம் டியூசன் படிக்க வந்த மாணவியை ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்றார். இதேபோல் கன்னியாகுமரியை சேர்ந்த கல்லூரி மாணவியிடமும் திருமணம் செய்து கொள்வதாக கூறி கடத்தி சென்றார்.
துபாயில் முதல்வர் ஸ்டாலின்.. நிகழ்ச்சி நிரல்
மின்னம்பலம் : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மார்ச் 24ஆம் தேதி பிற்பகல் நான்கு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்குச் சென்றார்
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாயில் உலகளாவிய தொழில் கண்காட்சி துபாய் எக்ஸ்போ என்ற பெயரில் நடைபெற்று வருகிறது.
இதில் இந்தியா சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில் தமிழ்நாடு அரசு அமைத்துள்ள உள் அரங்கை முதல்வர் ஸ்டாலின் நாளை மார்ச் 25ஆம் தேதி திறந்து வைக்கிறார்.
இன்று பிற்பகல் 2.50 மணிக்கு தன் இல்லத்திலிருந்து புறப்பட்ட முதலமைச்சரை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ,திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர். மின்னம்பலத்தில் ஏற்கனவே வெளியிட்ட செய்தியின்படி இன்று முதலமைச்சர் தனி விமானத்தில் புறப்பட்டார்.
இலங்கைத் தமிழர்களே.. கவலை வேண்டாய ம்” : நம்பிக்கை ஒளி பாய்ச்சிமுதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
கலைஞர் செய்திகள் : இலங்கை தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், விரைவில் அதற்கொரு விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் பதிலுரைக்குப் பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நிதித் துறை அமைச்சர் அவர்களும், வேளாண் துறை அமைச்சர் அவர்களும் பதிலுரையாற்றி, இந்த அவையில் இருக்கக்கூடிய அனைவருடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்கள்.
ரஷிய அதிபர் புதினுக்கு ரூ.15 லட்சம் கோடி சொத்து- 58 ஹெலிகாப்டர்கள், விமானங்களும் உள்ளன
மாலைமலர் : ரஷிய அதிபர் புதின் தற்போது உலகத்தின் கவனத்தை ஈர்த்து வரும் நிலையில் அவரது சொத்துக்களின் மதிப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது.
உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்திவரும் நிலையில் ரஷிய அதிபர் விளாடி மிர் புதின் உலக அளவில் அனைவரது கவனத்தையும் பெற்றுள்ளார்.
விளாடிமிர் புதின் 1952-ம் ஆண்டு ரஷியாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் பிறந்தார். 1975-ம் ஆண்டு ரஷியாவின் உளவு நிறுவனமான கே.ஜி.பி.யில் பணியில் சேர்ந்தார். ஆனால் அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்தும் குடும்பத்தினர் குறித்தும் இதுவரை வெளிப்படையான தகவல்கள் எதையும் தேரிவித்ததில்லை.
இந்த நிலையில் ஹெர் மிட்டேஜ் கேப்பிட்டல் மேனேஜ்மெண்ட் என்ற சொத்துக்களை மதிப்பிடும் நிறுவனம் புதினுக்கு 200 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இதன் இந்திய பணத்தின் மதிப்பு ரூ.15 லட்சம் கோடி ஆகும்.
விக்கிலீக்ஸ் ஜூலியன் அசாஞ்சேவை சிறையில் கரம்பிடித்த காதலி ஸ்டெல்லா மோரிஸ் !
Giridharan N - Samayam Tamil : விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே தமது காதலி ஸ்டெல்லா மோரிசை, லண்டன் சிறைச்சாலையில் இன்று திருமணம் புரிந்து
தமது விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் மூலம் அரசாங்க ரகசியங்களை ஹேக் செய்தது தொடர்பான வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்ட ஜூலியன் அசாஞ்சே சிறை தண்டனை அனுபவித்து வருகிறார். 50 வயதான அவர், 2019 முதல் தென்கிழக்கு லண்டனில் உள்ள பெல்மார்ஷ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதற்கு முன்னர் லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் ஏழு ஆண்டுகளாக அவர் தங்கி இருந்தார். அப்போது 2011 ஆம் ஆண்டு அவருக்கும் ஸ்டெல்லா மோரிஸ் (37) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நட்பு பழக்கம் நாளடைவில் காதலாக மலர்ந்தது.
வைகோ தலைமையில் பொதுக்குழுக் கூட்டம் - புறக்கணித்த மதிமுக நிர்வாகிகள்
நக்கீரன் : மதிமுகவின் 28ஆவது பொதுக்குழுக் கூட்டம் பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் சென்னையில் இன்று கூடியது.
இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தப் பொதுக்குழுக் கூட்டத்தில் மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தலைமைக்குழு உறுப்பினர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். தமிழக அரசியல் சூழல் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட வளர்ச்சி குறித்து இன்றைய கூட்டத்தில் ஆலோசனை நடைபெறுகிறது.
இந்த நிலையில், இன்று நடைபெறும் கூட்டத்தை மதிமுகவின் அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி, சிவகங்கை, விருதுநகர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்கள் புறக்கணித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்த ஐந்து கட்சி கூட்டணி செய்த பச்சை துரோகம் .. வரலாறு
LR Jagadheesan : அனுபவஸ்தர் சொன்னா சரியாத்தான் இருக்கும்.
தமிழ்நாடு இன்றைக்கு இப்படி நாசமாவதற்க்கு முழு முதல் காரணமே இந்த ஐந்து பேர் செய்த கூட்டுச்சதி தானே.
ஸ்டாலின் ஆணவத்துக்கு பழிதீர்ப்பதாக சொல்லி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் சீரழித்த கும்பல் இந்த சதிகார கும்பல். நியாயமாய் இந்த ஐந்துபேரும் தமிழக வாக்காளர்களிடம் முதலில் பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும்.
பிகு: அப்ப ஸ்டாலின் ஆணவத்துக்கு கண்டனமில்லையா என்று நீட்டிமுழக்க வரும் நடுநிலை நல்லவர்களுக்கு இரண்டு பதில்கள்.
அதை அப்போதே கண்டித்து எழுதியிருக்கிறேன் என்பது முதல் பதில்.
இரண்டாவது பதில் ஸ்டாலினைவிட ஆயிரம் மடங்கு ஆணவத்துடன் இவர்களை நடத்திய ஜெயலலிதாவிடம் இந்த ஐவரும் எப்படி பம்மிப்பதுங்கிக்கிடந்தார்கள் என்பதற்கு சம்பவரீதியாக சாட்சிகள் இருக்கின்றன/. ஜெயலலிதாவின் அதிமோசமான ஆணவத்தை பொறுத்துக்கொள்ள முடிவதும்.
அதைவிட குறைவான ஆணவம் ஸ்டாலினிடம் வெளிப்பட்டால் அதற்கு எதிராக பொங்கி எழுவதிலும்.
டி ராஜேந்தர் கார் மோதி பிச்சைக்காரர் பரிதாபமாக உயிரிழப்பு.. பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
tamil.filmibeat.com - Mari S : சென்னை: இயக்குநரும் நடிகருமான டி ராஜேந்தரின் கார் மோதி பிச்சைக்காரர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
மாற்றுத் திறனாளியான அந்த பிச்சைக்காரர் சாலையை கடக்க முயன்ற போது டி ராஜேந்தரின் கார் எதிர்பாராத விதமாக மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டது.
இந்நிலையில், தற்போது அந்த விபத்து நடந்ததை பதிவு செய்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன.
சென்னை, தேனாம்பேட்டை இளங்கோ சாலை அருகே மாற்றுத்திறனாளியான பிச்சைக்காரர் ஒருவர் கடந்த மார்ச் 18-ம்தேதி சாலையை கடந்து சென்றார். அப்போது நடிகர் டி.ராஜேந்தர் சென்ற கார் எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியதில் பெரும் விபத்து நிகழ்ந்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதன், 23 மார்ச், 2022
ஹிஜாப் - கர்நாடக திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகளுக்கு தடை!
மின்னம்பலம் : கர்நாடக கடலோர மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் முஸ்லிம் வியாபாரிகள் கடை அமைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வைக்கப்பட்டுள்ள பேனர்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள உடுப்பி, தட்சிண கன்னடா, உத்தர கன்னடா மாவட்டங்கள் கடலோர கர்நாடக மாவட்டங்களாக அழைக்கப்படுகின்றன. இந்த மாவட்டங்களில் ஏப்ரல், மே மாதங்களில் கோவில்கள் திருவிழாக்கள் நடப்பது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா காரணமாக களையிழந்து இருந்த திருவிழாவை இந்தாண்டு விமரிசையாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.
மதிமுகவின் எதிர்காலம் - துரை வைகோ அரசியலில் பிரகாசிப்பார் என்று வைகோ நிச்சயம் ... ?
Raj Dev : மதிமுக....? வைகோவுக்கு எதிராக மதிமுகவில் எழுந்துள்ள குரலை கவனியுங்கள். அது சற்று விநோதமாக உள்ளது. வழக்கமான அதிருப்தி குரல்கள் ‘கூட்டணி பிடிக்கவில்லை;
வெளியேறு’ என்பதாக இருக்கும்.
ஆனால் ஒரு கூட்டணியில் இருக்கும் போதே கூட்டணி வேண்டாம்;
அதற்கு பதிலாக கட்சியையே இணைத்து விடலாம் என்று பேசுவதை எப்படிப் புரிந்து கொள்வது?
திமுக கூட்டணியிலிருந்து மதிமுக வெளியேறும் சூழ்நிலை எளிதில் நிகழப் போவதில்லை.
திமுக கூட்டணியில் இருக்கும் வரை அந்த சிறு சதவீத தொகுதி ஒதுக்கீட்டில் தான் ஒட்டுமொத்த மதிமுகவினரின் அரசியல் எதிர்காலமும் அடங்கி இருக்கிறது.
கட்சியை திமுகவுடன் இணைத்து விட்டால் அப்போது மதிமுகவினர் முன்புள்ள வாய்ப்புகளும், தொடர்புகளும் அகலமாகின்றன என்பது ஒரு கணக்கு.
மேற்கு வங்கத்தில் 7 பேர்கள் உயிரோடு எரித்து கொலை
விகடன் : மேற்கு வங்கம்: உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட கிராம மக்கள்! - மாநில அரசிடம் விளக்கம் கேட்கும் உள்துறை
மேற்கு வங்கத்தில், சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவர் பாது ஷேக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த அடுத்த நாளே பிர்பூம் கிராமத்தில் கலவரம் ஏற்பட்டு வீடுகள் எரிக்கப்பட்டன. ராம்பூரத் என்ற பகுதியில் நுழைந்த மர்மநபர்கள் அங்குள்ள 12 வீடுகளை வெளிப்புறமாக பூட்டி, வீடுகளுக்குள் எரிபொருளை ஊற்றி தீ வைத்தனர் எனச் சொல்லப்படுகிறது. இதனால் உள்ளே சிக்கிக்கொண்டவர்களால் வெளியில் வர முடியவில்லை. இந்த கொடூர சம்பவத்தில் 10 பேர் உடல்கருகி உயிரிழந்தனர். குறிப்பாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் தீயில் சிக்கி பலியாகிவிட்டனர்.
மலேசியாவில் அதிகரித்து வரும் ஜாதி மனோநிலை
Subashini Thf : மலேசியாவில் சாதி ! மலேசியா ரொம்பவே மாறிவிட்டது.
நான் பிறந்து வளர்ந்த காலத்தில் மலேசிய இந்தியர்களிடையே இன்றைக்கு இருப்பதுபோல சாதிப் பற்று இருந்ததை நான் சிறிதும் உணர்ந்ததில்லை. ஆனால் இன்றைக்குச் சாதி தொடர்பான ஆர்வம் என்பது மலேசிய தமிழ் மக்களிடையே மிக வேகமாக, அதேசமயம் ஆழமாக வேரூன்றி வருகிறது.
மலேசிய மக்கள் தொகையில் இந்தியர்கள் மட்டுமே என்று எடுத்துக்கொண்டால் தமிழ் மக்களுடன் கணிசமான தெலுங்கர்கள் மலையாளிகள் மற்றும் குஜராத்தியர் சீக்கியர் ஆகியோரைக் கூறலாம். ஆனால் பெரும்பான்மை தமிழர்கள்தான். ஆனால் இந்தத் தமிழ் மக்கள் சாதியால் இன்றைக்குத் தங்களைத் தாங்களே பிரித்து வைத்துக் கொண்டு வாழ்கிறார்கள் என்று அறிகிறேன்.
இலங்கை - பட்டினிச் சாவுக்கு பயந்து ” நடுக்கடலில் 37 மணி நேரம் போராடி அகதிகளாக தனுஷ்கோடி வந்த தமிழர்கள்
BBC : நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தால் உயிர்க்கு பயந்து அகதிகளாக தமிழகத்தில் தஞ்சம் அடைந்த நிலையில், தற்போது பட்டினிச் சாவுக்கு பயந்து நடுக்கடலில் சுமார் 37 மணி நேரம் உயிருக்கு போராடி குழந்தைகளுடன் தனுஷ்கோடி சேர்ந்ததாக வவுனியாவிலிருந்து அகதிகளாய் சென்ற இலங்கை தமிழர்கள் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சி காரணமாக உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களான, குழந்தைகளுக்கான பால் மா, அரிசி, பருப்பு, கோதுமை மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் கடும் விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் வாழும் மக்கள் தமிழகத்திற்கு அகதிகளாக படகுகள் மூலம் செல்ல ஆரம்பித்துள்ளனர்.
தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்
Abdul Muthaleef - Oneindia Tamil : சென்னை: தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக உள்ள மாவட்ட கண்காணிப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ள ஐபிஎஸ் அதிகாரிகள் 13 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு ள்ளதற்கான உள்துறைச் செயலாளர் உத்தரவும் இடமாற்றம் செய்யப்பட்ட அதிகாரிகள் விவரமும்:
1. மயிலாடுதுறை மாவட்ட எஸ்பி ஆக பதவி வகிக்கும் சுகுணா சிங் செங்கல்பட்டு மாவட்ட எஸ்பி ஆக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. சென்னை டிஜிபி அலுவலக நவீனமயமாக்கல் பிரிவு ஏஐஜியாக பதவி வகிக்கும் நிஷா மயிலாடுதுறை மாவட்ட எஸ்பியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
3. நாமக்கல் மாவட்ட எஸ்பி ஆக பதவி வகிக்கும் சரோஜ்குமார் தாக்கூர் கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்பி ஆக இடமாற்றம் நியமிக்கப்பட்டுள்ளார்.
விருதுநகர் பாலியல் வன்கொடுமை - யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுங்க.. முதல்வர் ஸ்டாலின் அதிரடி
Rajkumar R - Oneindia Tamil : விருதுநகர் : விருதுநகர் பாலியல் வழக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதில் சம்பந்தப்பட்ட அனைத்து குற்றவாளிகளையும் கைது செய்து அதிகபட்ச தண்டனை பெற்று தர வேண்டும் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.
விருதுநகரில் இளம்பெண்ணை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கி அதனை விடியோ எடுத்துவைத்து மிரட்டிய புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் தாயாருடன் வசித்து வரும் 22 வயது இளம்பெண்ணுக்கு அதேபகுதியை சேர்ந்த ஹரிஹரன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போடாத 50 லட்சம் பேரை கண்டறிந்து தடுப்பூசி செலுத்துங்கள்” : முதல்வர் அதிரடி உத்தரவு!
கலைஞர் செய்திகள் : தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்களை கண்டறிந்து, தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டில் தற்போது வரையில் முதல் தவணை தடுப்பூசி போடாத சுமார் 50 லட்சம் நபர்களை கண்டறிந்து, தடுப்பூசி செலுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதலைமையில் கொரோனா நோய்த் தொற்று குறித்த
ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
செவ்வாய், 22 மார்ச், 2022
அனைத்து பேருந்துகளிலும் மகளிர் இலவச பயணம்?- செல்லூர் ராஜூக்கு பதிலளித்த அமைச்சர் ராஜகண்ணப்பன்
மாலைமலர் : சென்னை , தமிழக சட்டசபையில் இன்று உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.
அந்த வகையில் சட்டமன்ற உறுப்பினர் செல்லூர் ராஜூ, குறிப்பிட்ட பேருந்துகளில் தான் பெண்களுக்கு இலவசம் என்பதாகவும், அனைத்து பேருந்துகளிலும் பெண்களுக்கு இலவசம் என்று அரசு அறிவித்துள்ள நிலையில், இதுகுறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்று கேள்வி எழுப்பினார்.
நீ இல்லா உலகில் நான் வாழ மாட்டேன் எனத் தெரியாதா மீனா” – அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்த காதல் ஜோடி
vikatan : விருதுநகரில் காதல் ஜோடி அடுத்தடுத்து ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக உருக்கமான கடிதம் சிக்கியது. அதைக்கொண்டு ரயில்வே போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
விருதுநகர் அருகேயுள்ள பட்டம்புதூர், கோட்டைநத்தத்தைச் சேர்ந்தவர் சோலைமீனா (21). விருதுநகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் நர்ஸாகப் பணிபுரிந்துவந்தார்.
60 கிலோமீட்டருக்கு ஒரு சுங்கச்சாவடி: நிதின் கட்கரி
மின்னம்பலம் : தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்கும் சுங்கச் சாவடிகள் அடுத்த மூன்று மாதங்களில் மூடப்படும் என்று மத்திய சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று(மார்ச் 22) மக்களவையில் தெரிவித்தார்.
தமிழகத்தில் பல சுங்கச்சாவடிகள் விதிகளை மீறி செயல்படுவதாகவும், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008-ன்படி 60 கிலோமீட்டர் குறைவான இடைவெளியில் செயல்படும் சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என்றும் மக்களவையில் எம்பி திருமாவளவன் கோரிக்கை விடுத்தார்.
சசிகலா மீது எவ்வித சந்தேகமும் இல்லை என்றார் ஓ.பன்னீர்செல்வம்"- சசிகலா தரப்பு வழக்கறிஞர் பேட்டி!
நக்கீரன் : முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் குறித்து, விசாரிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம், தனது விசாரணையை முடுக்கிவிட்டுள்ளது. அந்த வகையில், அ.தி.மு.க.வின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், சசிகலா மற்றும் இளவரசி ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர்.
இந்த நிலையில், சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன், "சசிகலா மீது எந்தக் காலத்திலும் தனக்கு சந்தேகமில்லை என்றார் ஓ.பன்னீர்செல்வம். ஜெயலலிதா மரணத்தில், தனிப்பட்ட முறையில் சந்தேகம் உள்ளதா என ஓ.பன்னீர்செல்வத்திடம் கேட்டேன். மக்களின் சந்தேகத்தைப் போக்கவே ஆணையம் அமைக்கப்பட்டது என்றும்,
ஜெயலலிதா மரணத்தில் தனிப்பட்ட முறையில் சந்தேகம் இல்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
உடைகிறதா" மதிமுக.. வைகோவிற்கு எதிராக 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி.. திமுகவில் இணைக்க நெருக்கடி
ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த தான், தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண் வருவதா? என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார்.
மேலும், சில மதிமுக நிர்வாகிகள் மறைமுகமாக எதிர்ப்பையும் இதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர்..
ஆனால், மாவட்டச் செயலாளர்கள் துரை வையாபுரியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லி வந்தனர்..
திங்கள், 21 மார்ச், 2022
அமைச்சர்கிட்ட கேளுங்க.. அப்படியே கையால் மைக்கை திருப்பி.. பதில் அளிக்க மறுத்த கனிமொழி! என்ன நடந்தது?
Shyamsundar - Oneindia Tamil : சென்னை: செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து திமுக எம்பி கனிமொழி மைக்கை திருப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2007ல் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி சென்னை சங்கமம். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுக்க கவனம்பெற காரணம் அப்போது கனிமொழி சார்பாக இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டதால்தான்.
அதோடு இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் வந்து கலந்து கொண்டனர். பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களுக்கு அறிமுகம் கொடுத்ததில், பெரிய மேடை போட்டுக்கொடுத்ததில் இந்த நிகழ்ச்சி முக்கிய பங்கு வகித்தது.
டெல்லியில் திமுக அலுவலக திறப்பு விழா - சோனியா ராகுல் மம்தா தேஜஸ்வி ஓம் பிர்லா ஆகியோருக்கு அழைப்பு
நக்கீரன் செய்திப்பிரிவு : டெல்லியில் மிக பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டுள்ள, தி.மு.க.வின் தலைமை அலுவலகத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விரைவில் திறந்து வைக்க உள்ளார். இதற்கான, நிகழ்ச்சி ஏற்பாடுகளை தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.
வரும் 2ம் தேதி இந்த விழா நடைபெற உள்ள நிலையில், இதற்கான அழைப்பிதழை நாட்டின் முன்னணி அரசியல் தலைவர்களுக்கு திமுக தலைமை தங்கள் கட்சியின் எம்பிக்கள் வாயிலாக வழங்கி வருகிறது.
இந்த நிகழ்ச்சியில், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், மேற்கு வங்க முதலமைச்சருமான மம்தா பானர்ஜி, பீகார் மாநில சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரும், ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி உள்ளிட்டவர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.
காருக்குள் வைத்து 20 பெண்கள் சீரழித்த .சீரியல் நடிகர் முகமத் சையத் கைது
Rajkumar R - Oneindia Tamil : சென்னை : சென்னையில் இன்ஸ்டாகிராமில் பழகி 20க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக பிரபல விளம்பர மாடலும் சீரியல் நடிகருமான முகமது சையதை கைது செய்துள்ள போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொழில்நுட்பம் அதிகமாக வளர்ந்துள்ள நிலையில் செல்போன் தான் எல்லாமே என்று ஆகிவிட்டது. ஒற்றை செல்போனில் உலகமே கைக்குள்ளாக வந்துவிட்டதாக கருதும் நிலை தான் தற்போது உள்ளது.
சில நேரங்களில் செல்போன்களில் மூழ்கும் பெண்கள், இளைஞர்கள் சமுக வலைதளங்களான ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் உலாவி வருகின்றனர்.
அவ்வாறு உலா வரும் பெண்கள் தங்கள் வாழ்வையே தொலைக்கும் நிகழ்வுகளும் நடைபெறுவதைக் காணமுடிகிறது.
இதுபோன்ற ஒரு சம்பவம்தான் தற்போது சென்னையில் நடைபெற்றுள்ளது.
சீனா ஈஸ்டர்ன் விமானம் போயிங் 737 எம்யூ5735 விபத்து: 132 பேருடன் சீன விமானம் மலைப் பகுதியில் விழுந்து நொறுங்கியது
BBC : 132 பேருடன் பயணித்த சீனா ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் விமானம் குவாங்சி மாகாணத்தில் விபத்துக்குள்ளானதாக சீன அரசு அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
விமானத்தில் 123 பயணிகளும் 9 பணிக்குழுவினரும் இருந்தனர். என சீன விமானப் போக்குவரத்துத் துறை கூறியுள்ளது.
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் விபத்துக்கான காரணம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை.
மலைப்பாங்கான பகுதியில் போயிங் 737 ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதால், காடுகளில் தீ விபத்து ஏற்பட்டதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
MU5735 விமானம் குன்மிங்கில் இருந்து உள்ளூர் நேரப்படி பகல் 1:15க்கு (05:15 GMT) புறப்பட்டு குவாங்சோவுக்குச் சென்று கொண்டிருந்தது.
விபத்து நடந்த பகுதிக்கு மீட்புக் குழுவினர் அனுப்பப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
ஞாயிறு, 20 மார்ச், 2022
இலங்கை தமிழர்களின் பெயர்களில் இருந்த ஜாதி அடையாளங்கள் எப்படி நீங்கின?
பெயர்களில் உள்ள ஜாதி குறியீடுகளை தமிழகத்தில் மட்டுமல்லாது கடல் கடந்தது
இலங்கை தமிழர்களின் பெயர்களிலும் இருந்து அறவே ஒழித்து விட்டது என்பது வியப்புக்கு உரிய மிக பெரிய வரலாற்று செய்தியாகும்!
அங்குள்ள எந்த அரசியல் கட்சியும் பெயர்களில் இருந்த ஜாதி குறியீடுகளை ஒழிக்க வேண்டும் என்று எந்த காலத்திலும் பேசவில்லை. அவர்கள் எல்லோருமே ஏறக்குறைய ஜாதி ஆதிக்க வாதிகளாகவே இருந்தனர்.
அல்லது போதிய புரிதலற்று இருந்தனர். .
எவரும் எந்தக்காலத்திலும் ஜாதி அடையாள பெயர்களை பற்றி பேசாமலேயே அந்த மக்கள் தங்கள் ஜாதி குறியீடுகளை பாவிப்பதில்லை.
பெரியாரின் கருத்துக்கள் அங்கு தாக்கத்தை உண்டாக்கி இருக்கிறது.
50 பெண்கள்.. 500 ஆண்கள்! வேளச்சேரி எம்எல்ஏவுக்கு சொந்தமான ஈசிஆர் ரிசார்ட்டில் போதை பார்ட்டி? போலீசார் விசாரணை
Shyamsundar - Oneindia Tamil : சென்னை: சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் உள்ள ரிசார்ட் ஒன்றில் போதை பொருள் பார்ட்டி நடைபெற்றதாக எழுந்த புகாரை தொடர்ந்து அங்கு போலீசார் ரெய்டு நடத்தினர். வேளச்சேரி காங்கிரஸ் எம்எல்ஏ ஹசன் மவுலானாவிற்கு சொந்தமான ரிசார்ட் இது என்று கூறப்படுகிறது.
சென்னை ஈசிஆர் பகுதியில் பல்வேறு ரிஸார்ட்டுகள் உள்ளன. இங்கு அவ்வப்போது போதை பொருள் பயன்படுத்தி பார்ட்டிகள் நடப்பதாக கொடுக்கப்படும் புகார்களை வைத்து போலீஸ் ரெய்டு நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில்தான் நேற்று நள்ளிரவில் கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள ரிசார்ட் ஒன்றில் ரெய்டு நடத்தப்பட்டது. தாம்பரம் காவல் ஆணையர் ரவி ஆணையின்படி இந்த ரெய்டு நடத்தப்பட்டது.
ஹோலியை முன்னிட்டு இந்த ரிசார்டில் பெரிய பார்ட்டி நடத்தப்பட்டு இருக்கிறது. இதை பற்றி தகவல் கிடைத்து உடனடியாக மது மற்றும் போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் இங்கே விரைந்து சென்று சோதனை செய்தனர். நேற்று இரவு 1 மணிக்கு இந்த ரெய்டு நடத்தப்பட்டது. அப்போது அங்கே முழு போதையில் சிலர் பார்ட்டி நடத்தி வந்துள்ளனர்.
நடிகர் சங்கத் தேர்தலில் பாண்டவர் அணி வெற்றி!
நக்கீரன் : கடந்த 2019- ஆம் ஆண்டு நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று (20/03/2022) காலை சென்னையில் உள்ள குட் ஷெப்பர்ட் என்ற தனியார் பள்ளியில் ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் முன்னிலையில் தொடங்கியது. இத்தேர்தலில் நடிகர் நாசர் தலைமையிலான பாண்டவர் அணியும், நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியும் போட்டியிட்டன.
தலைவர் பதவிக்கு நடிகர் நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு நடிகர் விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்திக்கும் போட்டியிட்டிருந்தனர். அதேபோல் எதிரணியில் தலைவர் பதவிக்கு பாக்யராஜும், பொதுச்செயலாளர் பதவிக்கு ஐசரி கணேசும், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்தும் போட்டியிட்டிருந்தனர்.
ஆயிரம் அமித்ஷாக்கள் வந்தாலும் எங்களை அசைக்க முடியாது” : வட மாநிலங்களில் வைரலாகும் நெருப்புப் பேச்சு!
கலைஞர் செய்திகள் - விக்னேஷ் செல்வராஜ் : தமிழ்நாட்டின் முதலமைச்சரும், தி.மு.க தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடந்த 2020ஆம் ஆண்டு பேசிய அனல்பறக்கும் பேச்சு, இந்தி - ஆங்கில சப்-டைட்டில்களோடு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தமிழ் மொழி அறியாத வட இந்திய மாநிலங்களைச் சேர்ந்த பலரும் இந்த காணொளியை பார்த்தும், பகிர்ந்தும் வருகின்றனர். நம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தீப்பறக்கப் பேசிய இந்தக் காணொளி வட மாநிலங்களில் பெரும் பேசுபொருளாகி இருக்கிறது.
அந்தக் காணொளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:
“என்னை அரசியல் வாரிசு என அமித்ஷா சொல்வாரெனில் ஆம், நான் அரசியல் வாரிசு தான். நான் கலைஞரின் மகன். நான் கலைஞரின் ரத்த வாரிசு மட்டுமல்ல, கொள்கை வாரிசு. முத்தமிழறிஞர் கலைஞரின், கொள்கைக்கு, கோட்பாட்டுக்கு, லட்சியத்திற்கு வாரிசு.
பெண்களுக்கு மாதம் ரூ1000 திட்டத்தை கைவிட வேண்டும்: கவிஞர் தாமரை
மின்னம்பலம் : நடந்து முடிந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெற்ற முக்கிய அம்சங்களில் ஒன்று, "இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வழங்கப்படும்" என்பது.
திமுகவின் இந்த தேர்தல் அறிக்கை வாக்குறுதி தமிழ்நாட்டு பெண்களிடம் வெகுவாக எடுபட்டது. குறிப்பாக அதிமுகவை காட்டிலும் திமுகவுக்கு பெண்கள் ஓட்டு குறைவு என்ற ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருந்த நிலையில் பெண்களின் கவனத்தை திமுக மீது திருப்பியதில் இந்த வாக்குறுதிக்கும் ஒரு பங்கு இருக்கிறது.
ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டாவது பட்ஜெட்டை சமர்ப்பித்து விட்டபோதிலும் இல்லத்தரசிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை என்ற வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்ற முடியவில்லை.
கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்ற அனைத்து பயனாளிகளுக்கும் 31-ந் தேதிக்குள் கடன் தள்ளுபடி
தினத்தந்தி : கூட்டுறவு வங்கிகளில் 5 பவுனுக்கு உட்பட்டு நகைக்கடன் பெற்ற அனைத்து பயனாளிகளுக்கும் வருகிற 31-ந் தேதிக்குள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் நகைக்கடன் தள்ளுபடிக்கு தகுதியான 165 பயனாளிகளின் 5 பவுனுக்குள்ளான நகைகள் மீட்டு உரிய பயனாளிகளிடம் வழங்கும் நிகழ்வு நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நகைகளை உரிய பயனாளிகளுக்கு வழங்கினார்கள்.
முன்னாள் முஸ்லீம் தோழர் பாரூக் 5 ஆம் ஆண்டு நினைவு நாள் வீர வணக்கம்.
Jinna Maachu : இஸ்லாத்தில் நாஸ்தீகர்கள் !
இந்த கருத்தரங்கத்திற்கு வந்திருக்கும்
இசுலாமிய மத அடிப்படைவாதத்திற்குப் பலியான நம் தோழர் ஃபாரூக்கின்
ஐந்தாம் ஆண்டு நினைவேந்தல் கருத்தரங்க கூட்டத்தில், தலைமை ஏற்று வந்திருக்கும்
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் அண்ணன், கொளத்தூர் மணி அவர்களே
திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்களே
திராவிட இயக்கத் தமிழர் பேரவையைச் சேர்ந்த தோழர் இரா.உமா அவர்களே
தோழர் பீர் முகமது அவர்களே
தோழர் வசந்தன் அவர்களே