சென்னை: அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம்
தேர்தல்களில் பிரச்சாரம் செய்ய உள்ள நட்சத்திர பேச்சாளர்களின் பெயர்
பட்டியலை கட்சிகள் வெளியிட்டுள்ளன. இதில், திமுக மற்றும் அதிமுக நட்சத்திர
பேச்சாளர்கள் பட்டியலில், முறையே அக்கட்சித் தலைவர்கள் கருணாநிதி மற்றும்
ஜெயலலிதா பெயர்கள் இல்லை.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதிகளுக்கு வரும்
19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. ஏற்கனவே வேட்புமனுத் தாக்கல் முடிந்து
விட்ட நிலையில், வேட்பாளர்கள் தங்களது தொகுதிகளில் தீவிர பிரச்சாரத்தில்
ஈடுபட்டு வருகின்றனர்.
திமுக, காங். மீது தமிழிசை விமர்சனம்
திமுக, காங். மீது தமிழிசை விமர்சனம்
Politics
Powered by
இதன்படி, தேர்தல் கமிஷன் அனுமதி பெற்ற நட்சத்திர பேச்சாளர்கள்,
பிரசாரத்திற்கு சென்றால், அவர்களின் போக்குவரத்து செலவு, வேட்பாளர் செலவுக்
கணக்கில் சேர்க்கப்படாது. ஆனால், அனுமதி பெறாத நட்சத்திர பேச்சாளர்கள்,
பிரசாரத்திற்கு சென்றால், அவர்களின் போக்குவரத்து செலவு, வேட்பாளர் செலவுக்
கணக்கில் சேர்க்கப்படும்.
இந்த சூழ்நிலையில், இந்த மூன்று தொகுதி தேர்தலில் பிரச்சாரம் செய்ய உள்ள
நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம்
வழங்கியுள்ளன.
வழக்கமாக, அதிமுகவின் நட்சத்திரபேச்சாளர்கள் பட்டியலில், அக்கட்சியின்
பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா பெயர் முதலிடத்தில்
இருக்கும். இதேபோல், திமுக பட்டியலில் அக்கட்சித் தலைவர் கருணாநிதி பெயர்
முதலிடத்தில் இடம் பெற்றிருக்கும்.
ஆனால், இம்முறை இவர்கள் இருவருமே உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப்
பெற்று வருகிறார். கருணாநிதியும் உடல்நலக் குறைவு காரணமாக ஓய்வில்
இருக்கிறார்.
இதனால் மூன்று தொகுதித் தேர்தலுக்காக இந்தக் கட்சிகள் அளித்துள்ள நட்சத்திர
பேச்சாளர் பட்டியலில் இவர்கள் இருவரின் பெயரும் இல்லை.
அதிமுக சார்பில் வழங்கப்பட்டுள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில்
முதலிடத்தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பெயர் உள்ளது. மேலும்,
அமைச்சர்கள், நடிகர், நடிகையர் என 40 பெயர்கள் உள்ளன.
இதேபோல், திமுக அளித்துள்ள பெயர் பட்டியலில் முதலிடத்தில் அக்கட்சியின்
பொருளாளர் ஸ்டாலின் பெயர் முதலிடத்தில் உள்ளது. அதை தொடர்ந்து,
துரைமுருகன், கனிமொழி என, 40 பேர் இடம் பெற்றுள்ளனர்.
பாஜகவின் பட்டியலில், அமித் ஷா, முரளிதர ராவ், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை
சவுந்தரராஜன், இல.கணேசன், எச்.ராஜா என, 40 பேரும், தேமுதிக பட்டியலில்,
விஜயகாந்த், பிரேமலதா, சுதீஷ் உட்பட 40 பேரும் உள்ளனர்.
பாமக அளித்துள்ள பெயர் பட்டியலில், அக்கட்சியின் இளைஞரணித் தலைவர்
அன்புமணியின் பெயர் முதலிலும், அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பெயர்
இரண்டாவதாகவும் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது
Read more at:://tamil.oneindia.com/n
Read more at:://tamil.oneindia.com/n
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக