சனி, 7 ஏப்ரல், 2012

சி.பி.ஐ., அமைப்பை மூட இதுவே சரியான நேரம்: ராஜஸ்தான் ஐகோர்ட் பாய்ச்சல்

ஜெய்ப்பூர்: தாராசிங் போலி என்கவுன்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில், சிலருக்கு சாதகமாகவும், மற்ற சிலருக்கு பாதகமாகவும், சி.பி.ஐ., நடந்து கொண்டது, அந்த அமைப்பின் மீதான நம்பிக்கையை பாழ்படுத்திவிட்டது. சி.பி.ஐ., அமைப்பை மூட, இதுவே சரியான நேரம் என, ராஜஸ்தான் ஐகோர்ட் காட்டமாகக் கூறியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், சாராய கடத்தல்காரர் தாராசிங் என்பவர், கடந்த 2006 அக்டோபரில், போலீஸ் என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இந்த வழக்கு தொடர்பாக, இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ராஜஸ்தான் மாநில அப்போதைய டி.ஜி.பி., ஜெயின், பா.ஜ., எம்.எல்.ஏ., ராஜேந்திர ரத்தோர் ஆகியோரும், இதில் அடங்குவர்.

ராமஜெயம் கொலை மர்மம் விலகுகிறது… இதோ அந்த தங்க முடிச்சு!

Viruvirupu
திருச்சி காவல்துறை வட்டாரங்களில் இருந்து கிடைத்த தகவல்களின்படி, ராமஜெயம் கொலை மர்மத்தை போலீஸ் உடைத்து விட்டனர் என்று தெரியவருகிறது. தமக்கு கிடைத்த எல்லா தடயங்களும், அதற்குரிய இடங்களில் சரியாக பொருந்துவதாக காவல்துறையில் எமக்கு தகவல் தரும் ஒருவர் தெரிவித்தார்.
போலீஸ் ஒரு விஷயத்தை முதலில் எஸ்டாபிளிஷ் பண்ணியிருக்கிறது. அது, ராமஜெயம் திருச்சி தில்லைநகர் ஏரியாவில் வைத்துதான் கொலைகாரர்களின் கைகளில் சிக்கியுள்ளார்.
ராமஜெயத்தின் வேறு சில தொடர்புகள் இந்த ஏரியாவுக்கு வெளியே இருப்பதால், அந்த இடங்களில் ஏதாவது ஒன்றுக்கு அவர் சென்று, அங்கு கடத்தப்பட்டிருக்கலாம் என்பதாவவும் ஆரம்பத்தில் போலீஸ் ஒரு தியரி வைத்திருந்தது. இப்போது, அந்த தியரி ட்ராப் பண்ணப்பட்டு விட்டதாக தெரிகிறது.

ஜனாதிபதி தேர்தலில் அப்துல் கலாம், சாம் பிட்ரோடா போட்டி?Sam pitroda

குடியரசுத் தலைவர் தேர்தலில் மீண்டும் அப்துல் கலாமை களமிறக்க பாஜக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
காங்கிரஸ் வேட்பாளர் என்று இப்போது பரபரப்பாக பேசப்படும் சாம் பிட்ரோடாவுக்கு போட்டியாக கலாம் நிறுத்தப்படக் கூடும் என்கிறார்கள்.

ஆனால் கலாம் இதற்கு ஒப்புக் கொள்வாரா தெரியவில்லை.
தற்போதைய குடியரசுத் தலைவரான பிரதிபா பாட்டீலின் பதவிக்காலம் வருகிற ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.இதனையொட்டி நாட்டின் 16 வது புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் தீவிரமடைந்துள்ளன.
இதில் தங்களது ஆதரவு பெற்ற அல்லது தங்களுக்கு விருப்பமான வேட்பாளரை களமிறக்குவதில் காங்கிரஸ்,பா.ஜனதா உள்ளிட்ட தேசிய கட்சிகள் முனைப்பு காட்டி வருகின்றன.

பார்வதி மேனன்!தனுஷுக்கு ஜோடியாக. இந்தியில்.

சில வருடங்களுக்கு முன் பூ என்று ஒரு படம் வந்தது நினைவிருக்கலாம். நிறைய பாராட்டுகளையும் கொஞ்சம் நஷ்டத்தையும் சம்பாதித்த படம் அது.
அந்தப் படத்தோடு தமிழ் சினிமாவில் காணாமல் போனவர் பார்வதி மேனன்.

இப்போது மீண்டும் நடிக்க வருகிறார். அதுவும் தனுஷுக்கு ஜோடியாக. ஆனால் தமிழில் அல்ல, இந்தியில்.
வந்தேமாதரம் உள்ளிட்ட புகழ்பெற்ற ஆல்பங்களைப் படமாக்கிய பரத் பாலா இயக்கும் புதிய இந்திப் படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க, பார்வதிதான் அவருக்கு ஜோடி.

மோசடி தங்ககாசு கொள்ளை முத்தூட் பைனான்ஸ் நிறுவன ஊழியர்

Muthoot Finance Gold coin Heistதங்கக் காசு கொள்ளை... அத்தனையும் 'பக்கா ட்ராமா' - ஒரே நாளில் கண்டுபிடித்து அசத்திய போலீஸ்!

 

சென்னை: சென்னை கோயம்பேட்டில் தங்ககாசு கொள்ளை அடிக்கப்பட்ட வழக்கில் நடந்தது அனைத்தும் அந்த நிறுவன ஊழியர் மற்றும் அவர் நண்பர்களின் 'பக்கா நாடகம்' என்பதை சென்னை போலீசார் அதிரடியாகக் கண்டுபிடித்து, தங்கக் காசுகளை மீட்டுள்ளனர்.

தென் சீனக் கடல் உலகின் பொது சொத்து!'- இந்தியா பதிலடி

தெற்கு சீன கடல் பகுதியில் இந்தியாவின் எண்ணெய் ஆய்வுப்பணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சீனாவின் மிரட்டலுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. அந்தப் பகுதி, உலகின் பொது சொத்து. எனவே ஆய்வு நடத்த இந்தியாவுக்கு உரிமை உள்ளது என்று இந்திய வெளியுறவுத் துறை பதிலளித்துள்ளது.
சீனாவின் தெற்கு கடல் பகுதியில் 52 தீவுகள் உள்ளன. இந்த தீவுகளும், அந்தக் கடல் பகுதியும் தங்களுக்கு சொந்தம் என்று சீனா கூறுகிறது. ஆனால், தங்களுக்குத்தான் சொந்தம் என்று வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ் நாடுகள் உரிமை கொண்டாடி வருகின்றன.

பாரதிராஜா படத்தில் இருந்து இனியா நீக்கம்

பாரதிராஜா எடுக்க உள்ள அன்னக்கொடியும், கொடி வீரனும் படத்திற்கு தலைப்பு வைத்த நேரமா அல்லது கதை எழுதிய நேரமா என்று தெரியவில்லை.. படம் எடுப்பது குறித்து பேச ஆரம்பித்ததில் இருந்து அவர் நீக்கம், இவர் நீக்கம் என்று தான் செய்தி வெளியிட்டுக் கொண்டிருக்கிறோம்...படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் முதலில் பார்த்திபன் நடிப்பதாக பேசப்பட்டு பிறகு அவரை நீக்கிவிட்டு அமீரை வைத்தார். அப்புறம் அவரும் போய் பாரதிராஜா தனது மகனையே நடிக்க வைப்பதாக முடிவானது. தற்போது இனியாவும் படத்தில் இருந்து நீக்கப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியானது. வெளியான தகவல் உண்மைதானா என்று கேட்க, இனியாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம்.அமீரையும், என்னையும் வைத்து எடுத்த காட்சிகளை தன்னுடைய அடுத்த படத்தில் பயன்படுத்திக் கொள்வதாக பாரதிராஜா சார் கூறியுள்ளார்.

இன்டர்நெட் லவ்': பெண் போல் நடித்து, ரூ. 15 லட்சம் சுருட்டிய ஆசாமி கைது

பெங்களூரு சந்திரம்மா லே-அவுட்டை சேர்ந்தவர் ராமமூர்த்தி, 39; சாப்ட்வேர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் இன்ஜினியராக பணிபுரிகிறார். இவர், திருப்பூர் எஸ்.பி.,யிடம் கொடுத்த புகாரில் கூறியிருப்பதாவது: தகவல் தொழில்நுட்பத் துறையில் பணிபுரிவதால், நண்பர்கள் அதிகம் உள்ளனர். இன்டர்நெட் மூலமும் பல நண்பர்கள் உள்ளனர்.
எட்டு ஆண்டுகளுக்கு முன், திருப்பூரை சேர்ந்த இந்துமதி என்பவருடன் நெட் மூலம் பழக்கம் ஏற்பட்டது. நெட் மூலம் தொடர்ந்து நட்பை வளர்த்துக் கொண்டோம்; காதலாகவும் மாறியது. ஊர் மட்டுமே தெரிந்த நிலையில், யார்? எப்படி இருப்பார் என்பது கூட தெரியாது. ஒருமுறை, நேரில் சந்திக்கத்தான் முடியவில்லை; புகைப்படத்தையாவது பார்க்க வேண்டும் என கேட்ட போது, இ-மெயில் மூலம் அழகான பெண் போட்டோவை அனுப்பி வைத்தார்.

மாணவனின் விலா எலும்பை உடைத்த ஆசிரியர் வீட்டு பாடம் செய்யாமல் வந்த

வீட்டு பாடம் செய்யாமல் பள்ளிக்கு வந்த ஆறாம் வகுப்பு மாணவனை, ஆசிரியர் அடித்ததில் மாணவனின் விலா எலும்பு உடைந்தது. இதைப்பற்றி கேட்கப்போன தாயையும், ஆசிரியர் எட்டி உதைத்தார்.
ஆந்திரா சித்தூர் மாவட்டம் சாடம் என்ற ஊரைச் சேர்ந்த மாணவன் உதய்குமார், 11. இவன் அதே ஊரில் உள்ள குருகுல பள்ளியில், விடுதியில் தங்கி, ஆறாம் வகுப்பு படித்து வருகிறான். இவன் கடந்த மாதம் 22ம் தேதி வீட்டுபாடம் செய்யாமல் பள்ளிக்குச் சென்றான். அவன் வீட்டுப் பாடம் செய்யாததை அறிந்த ஆசிரியர், அவனை அடித்து வெளியே அனுப்பியுள்ளார். இதில், அவனுக்கு காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்துள்ளது. அதைப்பார்த்த கிராமத்தினர் சிலர், ஆசிரியரை கண்டித்தனர். கிராமத்தினர் அங்கிருந்து சென்றதும், மீண்டும் அந்த மாணவனை அழைத்த ஆசிரியர், "நீ ஏன் கிராமத்தினரிடம் இந்த விஷயத்தை சொன்னாய்' எனக்கேட்டு, மாணவனின் நெஞ்சில் உதைத்துள்ளார்.

மம்தா அரசு:பள்ளி புத்தகங்களில் கார்ல் மார்க்ஸ் குறித்த பாடங்கள் நீக்கம்:

கோல்கட்டா: மேற்கு வங்க மாநில பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று பாடப் புத்தகங்களில் இருந்து, தத்துவமேதை கார்ல் மார்க்ஸ் பற்றிய பாடங்களை நீக்க, மம்தா தலைமையிலான திரிணமுல் அரசு முடிவு செய்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த 34 ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளின் ஆட்சி நடந்தது. கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலில், மம்தா தலைமையிலான திரிணமுல் அரசு வெற்றி பெற்று, ஆட்சியை பிடித்தது. மேற்கு வங்கத்தில் பள்ளி மாணவர்களுக்கான வரலாற்று பாடப் புத்தகங்களில், ஜெர்மனைச் சேர்ந்த தத்துவ மேதையான கார்ல் மார்க்ஸ் பற்றிய பாடங்கள் இடம் பெற்றிருந்தன. குறிப்பாக, எட்டு, ஒன்பது மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பாடங்களில், தொழில் புரட்சி குறித்து, கார்ல் மார்க்ஸ் கூறிய விவரங்கள் இடம் பெற்றுஇருந்தன.

கர்ணன் 70 தியேட்டர்கள் ஒரு கோடியை தாண்டி வசூலில் சாதனை


Karnanசென்னை சத்யம் தியேட்டரில் கர்ணன் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா. எம்ஜிஆரின் குடியிருந்த கோயில் படத்திற்கு பத்திரிகையாளர்களுக்கு பிரத்யேகக் காட்சி. சூப்பர்ஸ்டாரின் பாட்ஷா புதிய தொழில்நுட்பத்தில் டப் செய்யப்பட்டு பாலிவுட்டுக்குப் போகிறது. கால இயந்திரத்தில் பயணம் செய்வதுபோல இருக்கிறதா? இன்னும் சில பழைய படங்களும்கூட புதிய தொழில்நுட்ப வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றன. மீண்டும் ரசிகர்களைச் சந்தித்துள்ள கர்ணன் படத்திற்குக் கிடைத்த அமோக வரவேற்பும் வசூலும்தான் காரணம்.
சிவாஜிகணேசன், என்.டி.ராமராவ், முத்துராமன், அசோகன், சாவித்திரி எனப் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்த படமாக கர்ணன் இருக்கிறது. நல்ல தமிழில் பேசப்படும் வசனங்கள். அந்தக் காலத்திலேயே ஹாலிவுட் படங்களைப்போல எடுக்கப்பட்ட காட்சிகள். இனிமையான பாடல்கள் என 1964 இல் வெளிவந்த ஒரு முழுமையான பொழுதுபோக்குத் சித்திரம்தான் கர்ணன். அந்தப் படம் மீண்டும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது தமிழ்த் திரையுலகில் அனைத்துத் தரப்பினரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்திருக்கிறது. கடந்த மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் தமிழகம் முழுவதும் 70 தியேட்டர்களில் வெளியான கர்ணன், இதுவரையில் ஒரு கோடி ரூபாயை தாண்டி வசூலில் சாதனை படைத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சென்னையில் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ஹவுஸ்புல் காட்சிகளாக கர்ணன் ஒடிக்கொண்டிருக்கிறான்.

வெள்ளி, 6 ஏப்ரல், 2012

மின் கட்டண உயர்வு: சதிகள், கொள்ளைகள்!அதிர்ச்சியூட்டும் உண்மைகள்

மின் வாரியம் கூறும் கட்டணத்தைத் தரத் தயாராக இருப்பவர்களுக்கும் மின்சாரம் கிடைப்பதில்லை என்பதுதான்  மின்வெட்டு என்று கூறப்படுகிறது. கூடுதல் மின்சாரத்தை உற்பத்தி செய்வதன் மூலம் இந்த மின்வெட்டை முடிவுக்குக் கொண்டு வரப்போவதாக அரசு சொல்கிறது. மின் கட்டணத்தை உயர்த்துவதன் மூலமும் இந்தப் பற்றாக்குறையை ‘முடிவுக்கு’ கொண்டு வரலாம்.
பாட்டில் தண்ணீரும் கேன் தண்ணீரும் தண்ணீர் பஞ்சத்தை இப்படித்தான் ‘ஒழித்திருக்கின்றன’. குடிதண்ணீர் வாங்க காசில்லை என்ற பிரச்சினையை தண்ணீர் பற்றாக்குறை என்று யாரும் சொல்வதில்லை. அது பணப்பற்றாக்குறையாகிவிடுகிறது.

ஜெயலலிதா சசிகலாவுடன் கோவில் சென்று சாமி கும்பிட்ட

Jayalalitha and Sasikala
 
சென்னை: தங்கை சசிகலாவுடன் மீண்டும் இணைந்துள்ள முதல்வர் ஜெயலலிதா இன்று சசிகலாவுடன் சேர்ந்து கோட்டூர்புரம் பி்ள்ளையார் கோவிலுக்குச் சென்று அரை மணி நேரம் மனமுருக சாமி கும்பிட்டார்.
தனக்கு எதிராக செய்தார் என்று கூறி சசிகலாவையும், அவரது குடும்பத்தாரையும் சில மாதங்களுக்கு முன்பு நீக்கினார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் சில நாட்களுக்கு முன்பு திடீரென எனக்கு அக்காதான் முக்கியம், உறவினர்கள் தேவையில்லை. அக்காவுக்கு துரோகம் செய்தவர்கள் எனக்கும் துரோகம் செய்தவர்களே என்று உருக்கமாக ஒரு அறிக்கை வெளியிட்டார் சசிகலா.

சந்தைக்கு வந்த விலையில்லா லேப்டாப்!இலவசங்களால் கடன் சுமை

சந்தைக்கு வந்த விலையில்லா லேப்டாப்!
இலவசங்களால் தமிழனின் தலையில் தாங்க முடியாத கடன் சுமை!
அரசு, அரசு உதவி பெறும் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ மாணவியருக்கு தமிழக அரசு இலவசமாக மடிக்கணினி வழங்குகிறது. இந்த திட்டத்தால் அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் அனைத்து பிளஸ் 1, பிளஸ் 2 மாணவ மாணவிகளும், அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளும் பயனடைவார்கள்.
இந்த திட்டத்தின் கீழ் மொத்தம் 68 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படவிருக்கிறது.

நடிகை அல்போன்ஸா:தன் காதலன் தற்கொலை பற்றி விரிவாக விளக்கம்


குஷிப்படுத்துகிறாள் குலேபகாவலி! எம்.ஜி.ஆர். இன்றும் ஹீரோதான்!

சிவகாசி தங்கமணி தியேட்டரில் குலேபகாவலி இரவு 10 மணி காட்சி பார்த்தேன். ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. படம் முழுவதும் பாட்டுக்களே. ஆனாலும், பாடல் காட்சியின் போது டீ குடிக்கவோ, தம் அடிக்கவோ யாரும் அரங்கை விட்டுச் செல்லவில்லை.
புதுமையான கதை, அருமையான வசனம், மயக்கும் இசை, நேர்த்தியான நடிப்பு, கவர்ச்சி, காமெடி, சண்டை என இப்படி ஒரு மசாலா படத்தை 1955 களிலேயே மிகப் பிரம்மாண்டத்துடன் இயக்கியிருக்கிறார் டி.ஆர்.ராமண்ணா. படத்தை முடிக்கவே மனமில்லாததாலோ என்னவோ, மூன்று மணி நேரத்துக்கும் மேலாக குலேபகாவலி திரையில் ஜொலிக்கிறாள்.

ராமஜெயம் கொலை அதிமுக பெண் கவுன்சிலரிடம் தீவிர விசாரணை!

Shanti
திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கில் அடுத்தடுத்து திருப்பம் ஏற்பட ஆரம்பித்துள்ளது. தூத்துக்குடியைச் சேர்ந்த அதிமுக பெண் கவுன்சிலர் சாந்தி என்பவர் தற்போது போலீஸ் பிடியில் சிக்கியுள்ளார். அவரை திருச்சிக்கு அழைத்து வந்து போலீஸார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தியுள்ளனர்.

குமுதம் பத்திரிகையாளர் கிருஷ்ணா டாவின்ஸி மரணம்!

Viruvirupu
தமிழ் பத்திரிகையாளர்கள் மத்தியில், குழுதம் ஆசிரியர் குழுவில் இருந்து நன்கு அறியப்பட்ட கிருஷ்ணா டாவின்ஸி நேற்று மரணமடைந்தார். உடல்நலம் குன்றி சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கிருஷ்ணா, நேற்று மாலை 5 மணியளவில் மரணமடைந்ததாகத் தெரிய வருகிறது.
அவரது உடல் போரூரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக  வைக்கப்பட்டுள்ளது. இன்று பகல் 12 மணிக்கு அவரது இறுதி ஊர்வலம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
குமுதம் சஞ்சிகையில் கிருஷ்ணாவின் பெயர் போட்டு வெளியான ஆக்கங்களைவிட, அவரது பெயர் இல்லாமலேயே பிரசுரமான விஷயங்கள் அதிகம். ஒரு காலத்தில் குமுதத்தின் மூன்று தூண்களால் எழுதப்பட்டதாக அறியப்பட்ட அரசு பதில்கள் பகுதி, பின்னாட்களில் கிருஷ்ணாவால் எழுதப்பட்டது.
தமிழ் பத்திரிகையுலகில், நிஜமான World Affairs தெரிந்த மிகச் சிலரில் அவரும் ஒருவர் என்பதை, அவருடன் உலக விவகாரங்கள் பற்றி பேசியவர்கள் தெரிந்து கொண்டிருப்பார்கள்.
முழுமையாக World Affairs விஷயங்களுடன் தமிழில் ஜனரஞ்சகமாக மேகஸின் ஒன்று கொண்டுவரும் முயற்சியில், குழுதம் குழுமத்துடன் நாம் சிறிது காலம் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு முழுவதும் நிர்வாகத்துடன்தான் இருந்தது.
அதன்பின், தனிப்பட்ட முறையில் அதுபற்றி கிருஷ்ணாவுடன் டிஸ்கஸ் செய்தபோது, “தமிழ் மார்க்கெட்டில் இப்படி ஒரு மேகஸின் கிடையாது. போட்டி கிடையாது.  ரிஸ்க் எடுத்து ஆரம்பித்தால் இன்ஸ்டன்ட்-ஹிட் ஆகும். ஆனால், இங்கே யாரும் ரிஸ்க் எடுக்க மாட்டார்கள்” என்றார்.

இலங்கை செல்லும் குழுவில் அதிமுக எம்.பி.

புது தில்லி, ஏப். 5: இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலை குறித்து அறிய, இலங்கை செல்லும் இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் அதிமுகவும் இடம்பெறுகிறது.ஏப்ரல் 16 முதல் 25ம் தேதி வரை இலங்கைக்குச் சுற்றுப்பயணம் செல்லும் 14 பேர் கொண்ட இந்திய எம்.பி.க்கள் குழுவுக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் தலைமை தாங்குகிறார். வெங்கைய நாயுடு (பாஜக), டி.கே.எஸ். இளங்கோவன் (திமுக), என்.எஸ்.வி. சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாக்கூர், எம். கிருஷ்ணசாமி (நால்வரும் காங்கிரஸ்) ஆகியோருடன் பிற கட்சிகளின் எம்.பி.க்களும் குழுவில் இடம்பெற்றுள்ளனர். இந்திய எம்.பி.க்களின் இலங்கைப் பயணத்துக்கான ஏற்பாடுகளை வெளியுறவு அமைச்சகத்துடன் இணைந்து நாடாளுமன்ற விவகார அமைச்சகம் செய்து வருகிறது.

காங்கிரஸ்:மோடியைப் போல ஒரு மோசடிக்காரர்

அகமதாபாத், ஏப். 5- டைம் இதழ் தற்போது நடத்தி வரும் உலகின் 100 சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் தனது பெயரும் இடம் பெறுவதற்காக மோசடி வேலைகளை குஜராத் முதல்வர் நரேந்திர மோடி செய்து வருவதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து குஜராத் காங்கிரஸ் தலைவர் அர்ஜூன் மோத்வாடியா கூறுகையில்,
குஜராத் அரசின் பல்வேறு இணையதளங்களில் இருந்து பொதுமக்களுக்கு நூற்றுக்கணக்கான இமெயில்களை மோடி அனுப்பியுள்ளார். அதில் டைம் இதழின் ஆன்லைன் கணக்கெடுப்புக்கு தனக்காக வாக்களிக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்தியாவுக்கு சீனா மீண்டும் வலியுறுத்தல் தென்சீனக் கடலில் எண்ணெய் அகழாய்வு பணிகளை நிறுத்த

டெல்லி: தென்சீனக் கடற்பரப்பில் வியட்நாமுக்குச் சொந்தமான பகுதியில் எண்ணெய் அகழாய்வுப் பணிகளை இந்தியா மேற்கொள்வதை உடனே நிறுத்த வேண்டும் என்று சீனா மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
தென் சீனக் கடல் பரப்பில் எண்ணெய்வளமிக்க பல்வேறு தீவுகள் உள்ளன. இவை அனைத்துக்குமே சீனா உரிமை கோரி வருகிறது. ஆனால் புருனே,வியட்நாம், பிலிப்பைன்ஸ், மலேசியா உள்ளிட்ட பல நாடுகளும் தங்களுக்கும் உரிமை இருப்பதாக கூறி வருகின்றன.
தென்கிழக்கு ஆசிய பகுதியில் தென்சீனக் கடல் விவகாரம் சர்ச்சைக்குரியதாக வெடித்து வருகிறது.

போலி என்கவுன்டர் வழக்கில் BJP எம்.எல்.ஏ. கைது

ஜெய்ப்பூரில் சாராயக் கடத்தலில் ஈடுபட்டு வந்தவர் தாராசிங். கடந்த 2006-ஆம் ஆண்டு ஜூன் மாதம் சிறப்பு காவல் படையினர், கடத்தல்காரர் தாராசிங்கை காவலில் எடுத்தனர். பின்னர் தாராசிங்கை சட்டவிரோதமான முறையில் ஆளில்லாத இடத்தில் வைத்து, சுமார் 5 மாதங்கள் விசாரிக்கப்பட்டார்.
பின்னர் அவர் திட்டமிட்டு என்கவுன்டரில் கொல்லப்பட்டார்.இந்தப் போலி என்கவுன்டர் வழக்கை சிபிஅய் விசாரித்து வந்தது. இவ்வழக்கில் தேடப்பட்டு வந்த முன்னாள் காவல்துறை உதவி இயக்குநர் ஏ.கே.ஜெயின், சிபிஅய் சிறப்பு நீதிமன்றத்தில் ஏற்கெனவே சரணடைந்து விட்டார். இதைத் தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம், தாராநகர் தொகுதி பாரதீய ஜனதா எம்.எல்.ஏ ராஜேந்திர ரத்தோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். சரணடைந்த ஏ.கே.ஜெயினுடன், ரத்தோர் எப்போதும் தொலைப்பேசி தொடர்பில் இருந்து வந்துள்ளார். ஆனால் தான் தவறுதலாக கைது செய்யப்பட்டிருப்பதாகவும், வழக்கிலிருந்து விரைவில் மீண்டு, கட்சியை பலப்படுத்த இருப்பதாகவும் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

Jeyalalitha:திமுக ஆட்சியில் பேசும்போது 65 தடவை அமைச்சர்கள் குறுக்கிட்டு தடுத்தனர்

சென்னை: திமுக ஆட்சிக்காலத்தில் நான் சட்டசபையில் பேசியபோது அமைச்சர்கள் பலர் 65 தடவை குறுக்கிட்டு என்னைப் பேச விடாமல் தடுத்தனர் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார்.
சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திமுக உறுப்பினர் துரைமுருகன் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனது பேச்சின்போது அடிக்கடி அமைச்சர்கள் குறுக்கிட்டுப் பேசுகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
அதற்கு உடனே எழுந்த முதல்வர் ஜெயலலிதா, நான் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, 31-7-2006 அன்று சட்டசபையில் பேச முயன்றபோது அப்போதைய முதல்-அமைச்சர் உள்பட பல அமைச்சர்கள் 65 தடவை குறுக்கிட்டு பேசி, என்னை பேச விடாமல் தடுத்தனர் என்றார்.

சிதம்பரத்தில் கனிமொழி பேசுகிறார். ஸ்டாலின் ஆதரவாளர்கள் அதிருப்தி ?

ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறைவாசம் கண்டு, ஜாமினில் வெளிவந்துள்ள கனிமொழி, வரும் 15ம் தேதி மின் கட்டண உயர்வைக் கண்டித்து, சிதம்பரத்தில் நடக்கும் தி.மு.க., கண்டன பொதுக் கூட்டத்தில் பேசுகிறார் என்ற தகவல் கட்சியில் கசிந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பின், அரசியல் ரீதியில் கனிமொழி கலந்து கொள்ளும் முதல் பொதுக்கூட்டம் என்பதால், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் மத்தியில் முணுமுணுப்பு கிளம்பியுள்ளது.

மின் கட்டண உயர்வைக் கண்டித்து தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டங்கள், வரும் 9ம் தேதி மாவட்ட அளவில் நடக்கவுள்ளன. ஆர்ப்பாட்டத்தில் கனிமொழியின் பெயரும் இடம் பெறவில்லை. சென்னை பனகல் மாளிகை முன் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் ஸ்டாலின் பங்கேற்கிறார். வரும் 15ம் தேதி மின்கட்டண உயர்வை கண்டித்து, மாவட்ட வாரியாகப் பொதுக்கூட்டங்கள் நடத்தப்படும் என, தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் அறிவித்தார்.

சிதம்பரத்தில் கனிமொழி: யார், யார்? எந்தெந்த மாவட்டங்களில் பங்கேற்றுப் பேசுவர் என்ற பட்டியலும் கட்சியில் தயாராகி வருகிறது.

தனக்குத் தானே அரசு நிலத்தை 'ஒதுக்கி' கொண்ட மத்திய அமைச்சர்

Vilasrao Deshmukh and Sachin Tendulkar

தனக்குத் தானே அரசு நிலத்தை 'ஒதுக்கி' கொண்ட மத்திய அமைச்சர்: சச்சினுக்கு பாரத் ரத்னா கோருகிறார்!

 
மும்பை: மத்திய அமைச்சரும் மகாராஷ்டிர முன்னாள் முதல்வருமான விலாஸ்ராவ் தேஷ்முக் மீது அடுத்து இரு வேறு நில மோசடி புகார்கள் எழுந்துள்ளன.
முதலில் ஆதர்ஷ் நில ஊழல் வழக்கில் பெயர் நாறிய இவர் இப்போது மும்பையில் மீண்டும் இரு நில விவகார வழக்குகளில் சிக்கியுள்ளார்.
மத்திய கணக்குத் தணிக்கை அதிகாரியான சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2005ம் ஆண்டு விலாஸ்ராவ் முதல்வராக இருந்தபோது மும்பை போரிவலி பகுதியில் அரசுக்குச் சொந்தமான 23,840 சதுர அடி நிலம் மன்ஜாரா சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற அறக்கட்டளைக்கு ஒதுக்கப்பட்டது.
பல நூறு கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த நிலம் (அரசு வழிகாட்டுதலின்படி இதன் மதிப்பே ரூ. 30 கோடிக்கு மேல்.. மார்க்கெட் மதிப்பு ரூ. 100 கோடியைத் தாண்டும்) வெறும் ரூ. 6.56 கோடிக்கு இந்த அறக்கட்டளைக்கு பல் மருத்துவமனை கட்ட ஒதுக்கப்பட்டது. இதில் விஷேசம் என்னவென்றால், இந்த அறக்கட்டளையே விலாஸ்ராவ் தேஷ்முக்குக்கு சொந்தமானது என்பதே.

வியாழன், 5 ஏப்ரல், 2012

பிரபுதேவா கொடுத்த மிட்-நைட் பார்ட்டி!

கடந்த ஏப்ரல் 3-ம் தேதி ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிக்கான துவக்க விழா சென்னையில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பிரபுதேவா கலந்து கொண்டு நடனமாடினார்.

ஜெயலலிதா பற்றி அமெரிக்காவுக்கு பன்னீர்செல்வம் தெரிவித்த உண்மை!

Viruvirupu
அ.தி.மு.க. அமைச்சர்களுக்கு தனியாக சிந்தனை ஏதும் கிடையாது என்று தைரியமாக விளக்கம் கொடுத்திருக்கிறார், நிதியமைச்சரும், அ.தி.மு.க.-வில் #2 என்று கருதப்படும் நபருமான ஓ.பன்னீர்செல்வம். ஏற்கனவே தெரிந்த விஷயம்தான் என்றாலும், தாம் பூச்சியம் என்பதை சொல்வதற்கும் ஒரு ‘தில்’ வேண்டும்.
அது இவரிடம் இருப்பது, தமிழகம் செய்த அதிஷ்டம்.
பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் பதில் அளித்துப் பேசும்போதே, அ.தி.மு.க.வில் தாம் உட்பட, சக அமைச்சர்களின் ability and capability பற்றி தெளிவாக போட்டு உடைத்திருக்கிறார் இந்த தைரியசாலி அமைச்சர்.
அமைச்சர் தனது பேச்சை ஆரம்பித்தபோதே அதிர வைக்கும் ஏவுகணை ஒன்றை வீசினார். “பூகோள பாடத்தில் வேண்டுமானால் இந்தியாவின் தலைநகர் டில்லி என்று இருக்கலாம். ஆனால், அரசியல் வரைபடத்தில் இந்தியாவின் தலைநகர் இனி சென்னைதான். இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது, நம்ம அம்மாதான்” என்று அவர் கூறியதற்கு, சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகம் நன்றிக் கடிதம் அனுப்பி வைக்க கூடும்.
“உலகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போவது, நம்ம அம்மாதான்” என்று சொல்லாமல், இந்தியாவுடன் அவர் நிறுத்திக் கொண்டதால், அமெரிக்க ஜனாதிபதியின் நன்றியை, அவர்களது தூதரகம் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளது.
ஓ.பி.எஸ். நினைத்திருந்தால்,  அமெரிக்காவின் வல்லரசு கனவை ஒரு வாக்கியத்திலேயே நசுக்கியிருக்க முடியும்.
இந்த விஷயத்தில் அமைச்சரையும் குறைசொல்ல முடியாது. அமெரிக்கா இருப்பது ஆந்திராவுக்கு சற்று அப்பால் என்று நினைத்தே அவர் சொல்லியிருக்கவும் சான்ஸ் உண்டு. அமெரிக்கா வேறு ஒரு நாடு என்று யாராவது அவருக்கு சொல்லியிருந்தால், அம்மாவின் பவரை இந்தியாவுக்கு வெளியேயும் அவர் என்ஸ்டென்ட் பண்ணியிருக்க கூடும்.
“ஒருவரின் திறமையை எடைபோட வேண்டுமானால், முதலில் அவரைச் சுற்றியிருப்பவர்களின் திறமையை தெரிந்து கொள்ளுங்கள்” என்று ஆங்கிலத்தில் ஒரு கூற்று உண்டு. ஒரு மாநிலத்துக்கே நிதியமைச்சராக இருப்பவருக்கு அது நிச்சயம் தெரிந்திருக்கும் அல்லவா? முதல்வரைச் சுற்றியுள்ள சக அமைச்சர்கள் பற்றி தெளிவான கணிப்பீடு ஒன்றை பகிரங்கமாக இதோ அறிவிக்கிறார் அமைச்சர்:
“எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. அம்மாவின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. அம்மாவின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. அம்மாவின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. அம்மாவின் வழியே எங்கள் வழி”
இதைவிட அ.தி.மு.க. அமைச்சர்களைப் பற்றி நாலே வரியில் நறுக்கென்று வேறு யாராலும் கூறிவிட முடியாது.
நிதியமைச்சரின் இந்த தகமை பிரகடனத்தை, சட்டசபையில் இருந்த மற்றைய அமைச்சர்களும் மேஜையை தட்டி வரவேற்றது கண்கொள்ளாக் காட்சி. வேறு ஏதாவது நாட்டில் இது நடந்திருந்தால், எதிர்க்கட்சியில் உள்ளவர்கள்தான் கேலியாக மேஜையில் தட்டியிருப்பார்கள்!
எப்படியோ, நிதி அமைச்சர் கூறிய ‘பூச்சியம்’ ரேஞ்சில்தான் தாமும் உள்ளோம் என்று மற்றைய அமைச்சர்களும் கைதட்டி ஒப்புக் கொண்டார்கள் பாருங்கள்… அந்த வெள்ளை மனசு வேறு யாருக்கும் வராது. இவங்க ரொம்பவும் வெகுளிங்க சார்!

பா.ம.க.-வின் பெரிய, சின்ன டாக்டர்களுக்கு “டில்லியில் ???

சி பி.ஐ. வட்டாரங்களில் இருந்து கிடைக்குத் தகவல்களின்படி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மீதான கொலை வழக்கில் அவர்கள் எதிர்பார்த்த அனைத்துமே கிடைத்து விட்டதாக தெரிகிறது. “டில்லியில் இருந்து உத்தரவு வரவேண்டியதுதான் பாக்கி” என்றார், ரீஜனல் சி.பி.ஐ.-யில் இந்த விவகாரத்தைக் கவனிக்கும் அதிகாரி ஒருவர்.

போயஸ் கார்டனுக்கு சசிகலா அழைத்துச் செல்ல விரும்பிய இளவரசர்!


Viruvirupu



மூன்று மாதங்கள் முன்னாள் சகோதரியாக இருந்த சசிகலாவை, மீண்டும் இன்னாள் சகோதரியாக ஏற்றுக் கொண்ட ஜெயலலிதா, அந்த அம்னிஸ்டி எக்ஸ்டென்ஷனை முன்னாள் வளர்ப்பு மகன் விஷயத்தில் கொடுப்பதாக இல்லை. அத்தோடு நிறுத்திக் கொண்டால் பரவாயில்லை. “மு.வ.மகன் மீது கடும் கோபத்தில் உள்ளார் அம்மா” என்கிறார்கள் கார்டன் வட்டாரங்களில்.
பெங்களூருவில் சசிகலா தடம் மாறிச் சென்றதற்கு, சுதாகரனின் சமீபகால சினேகிதமும் ஒரு காரணம் என்று ஜெயலலிதா நினைக்கிறார் என்கிறார்கள், இவர்களது உள்விவகாரம் அறிந்தவர்கள்.
சமீப காலங்களில் சொத்துக் குவிப்பு வழக்குக்கான ஆஜராகும் போதெல்லாம், சசிகலா அதிகம் பேசிக் கொண்டது சுதாகரனுடன்தான் என்று இவர்களது நடவடிக்கைகளை ரிப்போர்ட் செய்ய சென்னையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்கள் கூறியதாக தெரிகிறது.

தமிழ் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி!

தமிழ் தேசியம்
பொதுவுடைமையைத் தனது பெயரில் தாங்கி, தேசிய இன விடுதலையைத் தனது இலட்சியமாக அறிவித்துக் கொண்ட ஒரு கட்சி குறுகிய இனவெறிக் கட்சியாக, அதுவும் பாசிச இனவெறிக் கட்சியாகவும் இருக்க முடியுமா? முடியும் என்று திரும்பத் திரும்பக் காட்டி வருகிறது, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி (த.தே.பொ.க.) என்ற பெயரிலுள்ள ஒரு அமைப்பு.
பாட்டாளி வர்க்க அரசியல் சித்தாந்தத்துக்கு மாறாக, எதிராக, இணையாக, தொழிற்சங்கப் பிழைப்புவாதத்தைத் தனது சித்தாந்தமாகக் கொண்டிருந்த நம்பூதிரிபாடின் சீடர்கள் அல்லவா, இவர்கள்! அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள்! தாங்களே அறிவித்துக் கொண்ட இலட்சியத்தையும் கொள்கையையும் மட்டுமல்ல; சொந்த அறிவையும் புதைகுழியில் போட்டுவிட்டு அவற்றுக்கு எதிரான நிலைக்கு வலிந்து வாதம் புரிகிறார்கள்.

எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது மும்பை அணி

கொஞ்சம் சென்னை, நிறைய வெண்ணெய்!


ஒரு பக்கம் சென்னை. மறுபக்கம் சச்சின். இருவரில் எவர் ஜெயித்தாலும் மகிழ்ச்சி என்பதால் உற்சாகத்துடன் ஐபிஎல்  ஐந்தாவது சீஸனின் முதல் போட்டியை ரசிக்கத் தொடங்கினேன். டாஸ் ஜெயித்து, சென்னையை பேட்டிங் செய்யப் பணித்தார் மும்பை கேப்டன் ஹர்பஜன்.
சென்னை அணியில் ரவீந்திர ஜடேஜாவின் பெயர் இருந்தது. அவருடைய சமீபத்திய ஆட்டங்கள் திருப்தி தராதவை என்பதால் அவர்மீது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. வழக்கம்போல, முரளி விஜய், பத்ரிநாத், ரெய்னா, பொலிஞ்சர் போன்ற நிலைய வித்வான்கள் இருந்தனர். மைக்கேல் ஹஸி இல்லாதது குறைதான். மும்பை அணியில் சச்சின், பொலார்ட், ராயுடு போன்றவர்கள் இருந்தனர். தென்னாப்பிரிக்காவின் லெவி மும்பை அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்டார்.
சென்னை அணி பேட்டிங்கை தொடங்கியது. வந்தவுடனேயே மும்பை அணிக்காக ஒரு விக்கெட்டை எடுத்துக் கொடுத்தார் சென்னையின் முரளி

ரூ. 75,000 கோடிக்கு பெட்டிங்!IPL ஐபிஎல் போட்டிகள்



IPL5

ரகசிய திருமணம், ஒவ்வொரு இடத்திலும் ஒரு உறவு.. கடைசியில் பரிதாப மரணம்!

சென்னை: திருமண பந்தத்தையும், தாம்பத்ய வாழ்க்கையையும் படு ரகசியமாக வாழ்ந்து வந்த ஒரு பெண் கடைசியில் பரிதாபமாக இறந்து போயுள்ளார் சென்னையில். அவரது ரகசியத் திருமணமும், காதல் வாழ்க்கையும், அவரது மரணத்திற்குப் பின்னரே தெரிய வந்து அந்தப் பெண்ணின் பெற்றோர் அதிர்ந்து போய் நிற்கின்றனர். கூடவே இப்பெண்ணின் மரணம் கொலையா என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.
காதல் வலையில் வீழ்ந்த பல பெண்களும் வீட்டுக்குத் தெரியாமல் தாலி கட்டிக் கொண்டு காதலர்களுடன் ரகசிய வாழ்க்கை வாழ்வதும், கடைசி நேரத்தில் குழப்பம் ஏற்பட்டு மரணத்தையோ அல்லது காதல் முறிவையோ சந்திப்பதும் அதிகரித்து விட்டது.

Jeyalalitha:திமுக கட்டியதற்காக புதிய தலைமைச் செயலகத்தை மாற்றவில்லை

திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமைச் செயலகத்தை இடம் மாற்றவில்லை என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார் நாமும் மற்றும் மகா ஜனங்களும் இதை அப்படியே உள்ளது உள்ளபடி நம்ப  முயற்சிப்போம் மேலும் அண்ணா அறிவாலயம் சாலைப்பணியாளர் விவகாரம் போன்ற ஏனைய விவகாரங்களுக்கும் இது பொருந்தும்..பட்ஜெட் உரை மீதான விவாதத்தில் பேரவை திமுக துணைத் தலைவர் துரைமுருகன் (காட்பாடி) புதன்கிழமை பேசும்போது, திமுக ஆட்சியில் கட்டப்பட்டது என்பதற்காக புதிய தலைமைச் செயலகத்தை மாற்ற வேண்டுமா, முதல்வர் ஜெயலலிதா செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இடநெருக்கடி இருப்பதாகக் கூறியிருந்தார், இப்போது தலைமைச் செயலகம் கட்டி முடித்த பிறகு அதைக் கிடப்பில் போடலாமா என்றார்.

10 லட்சம் பிற மாநில– இளைஞர்களை விழுங்கிவரும் தமிழகம் !!

தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது!தெற்கே வாருங்கள், இளைஞர்களே, ஆனால் இங்கே டிராகன்கள் காத்திருக்கிறது! வினவு">
மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்தவர்கள் நியாயமற்ற முறையில் அடிக்கடி தாக்குதல்களுக்கு ஆளாகும் நபர்களாகிவிட்டனர். பாதிக்கப்பட்ட குழுக்களான அவர்கள் பாதுகாப்பின்றி, எவ்வித சட்ட, சமூக காப்புமின்றி உள்ளனர்.
உழைப்புச் சுரண்டல் – இளைஞர்களை விழுங்கிவரும் தமிழகம் ”தமிழ்நாட்டில் ஏறக்குறைய 10 லட்சம் புலம்பெயர்ந்த பிற மாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  இங்கேயுள்ள தொழிலாளர்கள் குறைந்த கூலி மற்றும் அபாயகரமான பணி சூழல்களுக்கு வர மறுப்பதால் இந்த நிலை.  ஆனால் அத்தகைய புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் ‘வட இந்தியர்கள்’ மேலுள்ள தவறான எண்ணம் காரணமாக எளிதாக தாக்குதல்களுக்கு ஆளாகின்றனர்”டந்த வார இறுதியி்ல், அலங்கோலமான தோற்றத்துடன், உடம்பில் சட்டையின்றி வந்த ஒரு மனிதன் ஏறக்குறைய சாவை சந்திக்கும் அளவிற்கு தாக்கப்பட்டார்.  காவல்துறையினரும், வேடிக்கை பார்த்த பொது மக்களும் அந்த மனிதன் நினைவை இழக்கும் வரை தாக்கப்பட்டதை வேடிக்கை பார்த்தனர்.  ஒரு சிலர் உற்சாகத்துடன் அந்த தாக்கும் கூட்டத்தை ஊக்குவித்தனர்.

பன்னீ ர்ர்ர் செல்வம்: அம்மா'வின் நட்பே எங்கள் நட்பு பட்ஜெட் விவாதம்

 பட்ஜெட் மீதான பொது விவாதத்துக்கு, நிதியமைச்சர் பன்னீர்செல்வம் அளித்த பதில்
 ""எங்களுக்கென்று தனி சொந்தம் இல்லை. "அம்மா'வின் சொந்தமே எங்கள் சொந்தம். எங்களுக்கென்று தனி நட்பு இல்லை. "அம்மா'வின் நட்பே எங்கள் நட்பு. எங்களுக்கென்று தனி சிந்தனை இல்லை. "அம்மா'வின் சிந்தனையே எங்கள் செயல். எங்களுக்கென்று தனி வழி இல்லை. "அம்மா'வின் வழியே எங்கள் வழி. "அம்மா'வுக்கு எங்கள் உடல், பொருள், ஆவி என, அனைத்தையும் தத்தம் செய்தோம்,'' என்று, சசிகலா - ஜெயலலிதா உறவு குறித்து, நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதிலின் போது விளக்கினார்.

முதல்வர் வெளியிட்ட தொலைநோக்குத் திட்டத்தின் முக்கியமான நோக்கம், தமிழகத்தை வறுமையற்ற மாநிலமாக ஆக்குவதே. இவ்வாறு ஆக்க, தமிழகத்தை மாற்றியமைக்க வேண்டுமெனில், அனைவரையும் உள்ளடக்கிய வகையில் பொருளாதார வளர்ச்சி எட்டப்பட வேண்டும்.அதற்கு, நன்கு வடிவமைக்கப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

2011இல் 6 மில்லியன் டூ வீலர்களை விற்ற ஹீரோ


கடந்த நிதி ஆண்டில் மொத்தம் 60 லட்சத்துக்கும் மேல் இருசக்கர வாகனங்களை விற்று புதிய சாதனை நிகழ்த்தியுள்ளது ஹீரோ மோட்டோ கார்ப்.
நாட்டின் இருசக்கர வாகன உற்பத்தியில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் முதலிடத்தில் இருக்கிறது. பிற நிறுவனங்கள் எளிதாக பின்தொடர்ந்து வந்து எட்ட முடியாத உயரத்தில் தற்போது அந்த நிறுவனம் இருந்து வருகிறது.
கடந்த ஆண்டு கூட்டணியில் இருந்து ஹோண்டா கழன்று கொண்டதால் தொழில்நுட்ப அளவில் பின்னடைவை சந்திக்கும் நிலையில் ஹீரோ மோட்டோ இருக்கிறது. இருப்பினும், புதிய தொழில்நுட்ப பார்ட்னர்களை பிடிக்கும் முயற்சிகளை ஹீரோ நடத்தி வருகிறது.

புதன், 4 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலையில் பெண்தொடர்பு diversion tactic

ராமஜெயம் கொலை: பெண் தொடர்பை உங்களுக்கு சொன்னது யாருங்க?

விறுவிறுப்பு
ராமஜெயம் கொலையில் ஒரு பெண் விவகாரம் உள்ளது என்ற கதையே இப்போது பரபரப்பாக அடிபடுகிறது. இந்த கதை கேஸை முழுமையாக வேறு ஒரு திசையில் திருப்ப உதவுகிறது என்பதை சுலபமாக பார்க்க முடிகிறது. அதில் சில சந்தேகங்களும், கேள்விகளும் எழுகின்றன.
ராமஜெயம் கொல்லப்பட்ட தினத்தன்று அவரது செல் போனுக்கு அதிகாலை 3 மணிக்கு ஒரு அழைப்பு வந்து, அவர் லுங்கியுடன் வெளியே சென்றார் என்று ஒரு தியரி சொல்லப்படுகிறது. வழமையாக ட்ராக் சூட், ஸ்னீக்கர் அணிந்து வாக்கிங் செல்லும் ராமஜெயம், அன்று மட்டும் லுங்கியுடன் வாக்கிங் சென்றாரா? என்ற கேள்வியும் அத்துடன் தொடர்பாக கேட்கப்படுகிறது.

மசாலா கபே Sunder.C இயக்கும் 25வது படம்

டைரக்டரும், நடிகருமான சுந்தர்.சி. நீண்ட இடைவெளிக்கு பிறகு தன்னுடைய 25வது டைரக்ஷ்னாக இயக்கும் படம் மசாலா கபே. விமல், சிவா, அஞ்சலி, ஓவியா ஆகியோர் நடித்து வரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சந்தானம் நடிக்கிறார். சுந்தர்.சி யின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தன்னுடைய அவினி சினி மேக்ஸ் பேனரில் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

சந்தேகம்? அ.தி.முக.வுக்கு திருச்சியில் பெரும்சவாலாக இருந்தவர் ராமஜெயம்

பொதுத்தேர்தலின்போது அ.தி.முக.வுக்கு திருச்சியில் பெரும்சவாலாக இருந்தவர் ராமஜெயம் என்பதால், ஆளுந்தரப்பினர் காவல்துறை மூலம் இப்படி ஒரு புதுவித என்கவுன்டரை நடத்திவிட்டார்களோ என்ற சந்தேகம் திருச்சி மக்களிடம் இருக்கிறது.
திகிலிலிருந்து இன்னும் விடுபடவில்லை திருச்சியும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளும். அரசியல்ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் செல்வாக்குப் பெற் றிருந்த ராமஜெயத்தின் கொடூரக் கொலையால் யாருக்கு வேண்டு மானாலும் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தை பொதுமக்களிடம் உண் டாக்கியுள்ளது. திருச்சி மட்டு மின்றி, தமிழகத்தின் பல பகுதி களிலும் உள்ள தி.மு.க. வி.ஐ.பி.க்கள் இந்தக் கொலையால் பெரும் பதட்டத்திற்கு உள்ளாகியிருக்கிறார் கள். கொடூரம் நடந்து 5 நாட் களுக்கு மேலாகியும் திங்கள் இரவுவரை போலீசாரால் கொலை யாளிகளில் யாரையும் அடை யாளம் கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

கனடா திருநங்கை போர்க்கொடி!அழகிப் போட்டியிலிருந்து நீக்கப்பட்ட


நான் ஒரு பெண் என்பதில் எனக்கு எந்தவித சந்தேகமும் இல்லை. எனவே என்னை மிஸ் கனடாப் போட்டியில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று கனடாவைச் சேர்ந்த திருநங்கை ஒருவர் போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
அந்த அழகியின் பெயர் ஜென்னா தலக்கோவா. இவர் மிஸ் கனடா போட்டியின் இறுதிச் சுற்று வரை வந்தார். ஆனால் அதற்கு மேல் இவரை அனுமதிக்க முடியாது என்று போட்டியை நடத்தும் டொனால்ட் டிரம்ப் அமைப்பு கூறி விட்டது.

தமிழில் பேஸ்புக் பயன்படுத்தும் வசதி


மொபைல் போனில் தமிழில் பேஸ்புக் பார்க்கும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பேஸ்புக் இணையதளம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் பேஸ்புக் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் தமிழ், மலையாளம் உள்ளிட்ட 8 இந்திய மொழிகளில் பேஸ்புக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவில் நான்கரை கோடி பேர் பேஸ்புக் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு: இழுத்தடிக்க "போராடும்" சசிகலா ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கூடுதல் ஆவணங்களைக் கோரி சசிகலா தாக்கல் செய்த மனுவை பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.எம். மல்லிகார்ஜூனையா தள்ளுபடி செய்துள்ளார்.
தமிழக முதல்வராக 1991-1996-ம் ஆண்டு பொறுப்பு வகித்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக சொத்துக் குவித்தார் என்று தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதாவுடன் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு கடந்த பல ஆண்டுகளாக பல்வேறு தடைகளைத் தாண்டி பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. உச்ச்நீதிமன்றத்தின் அதிரடிக்குப் பிறகு சற்று விறுவிறுவென நடந்த இந்த வழக்கில் சசிகலா தரப்பு மீண்டும் முட்டுக் கட்டைகளைப் போட்டு வருகிறது.

ராணுவ தளபதி!: மத்திய அரசை மிரட்ட முயன்றாரா?இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக

டெல்லி: தனது வயது விவகாரம் தொடர்பாக கடந்த ஜனவரி 16ம் தேதி ராணுவத் தளபதி வி.கே.சிங் உச்ச நீதிமன்றத்தை அணுகிய தினத்தன்று ராணுவத்தின் இரு படைப் பிரிவுகள் டெல்லியில் குவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் 16ம் தேதி இரவில் இந்தப் படைப் பிரிவுகள் தலைநகரில் குவிக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசை மிரட்டுவதற்காக வி.கே.சிங் இந்த வேலையைச் செய்தாரா என்றும் கேள்வி எழுகிறது.

இது குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகரமான ரிப்போர்ட்:

Chennai IPL சல்மான் கான் ரகளை இல்லாமலா.

சென்னை: ஐபிஎல் 5 தொடக்க விழாவில் வழக்கம் போல ரகளையாக வந்தார் சூப்பர் ஸ்டார் சல்மான் கான். லாரியில் ஏறி வந்த அவர் வித்தியாசமான டான்ஸையும் போட்டு அனைவரையும் குதூகலிக்க வைத்தார்.

சல்மான் கான் என்றால் ரகளை இல்லாமலா...5வது ஐபிஎல் தொடக்க விழாவிலும் அது காணப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் ஒரு திறந்த லாரியில் அவரைக் கூட்டி வந்தனர்.
லாரியில் பல்புகள் சுற்றி வளைத்திருக்க சல்மான் கானின் பிரமாண்ட கட் அவுட்டை வேறு வைத்திருந்தனர். லாரியில், டான்ஸர்கள் சகிதம் வந்த சல்மான் கானைப் பார்த்து அத்தனை பேரும் ஆரவாரித்தனர்.

Nayanthara: மனித வாழ்க்கையில் பிரிவு என்பது சாதாரணமான விஷயம்

நடிகை நயன்தாரா நீண்ட இடைவெளிக்குப் பின் மறுபடியும் திரைபடங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுவரை எந்த செய்திக்கும் செவி சாய்க்காத நயன்தாரா தானாகவே பிரபுதேவாவை பிரிந்ததற்கான காரணத்தை

தமிழகத்தின் `சூயஸ் கால்வாய் சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்க்கும் ஆரியமாயை!

கூடங்குளம் அணுமின் நிலை யத்தைத் தொடங்கும்போது வாயை மூடிக் கொண்டிருந்து விட்டு,பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் செலவழித்து, அத்திட்டம் முடிவடைகின்ற நேரத்தில் அந்தத் திட்டம் கூடாது என்று எதிர்ப்பது எப்படியோ, அப்படித்தான் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கப்பட்டபோது வாயை மூடி மௌனமாக இருந்துவிட்டு, தற்போது பல கோடி ரூபாய்களைச் செலவழித்து முடித்து விட்ட நிலையில் ராமர் பாலம்; என்ற பெயரைப் பயன்படுத்தி முட்டுக் கட்டைபோட நினைப்பது சரிதானா
தமிழர்களின் நீண்டகாலக் கனவான சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட வேண்டுமென்ற  எண்ணத்தோடு  தி.மு.கழகம் நீண்ட காலமாகத் தொடர்ந்து  முயற்சி செய்து,  2005ஆம் ஆண்டு ஜூலை மாதம்  2ஆம்  தேதி யன்று  அய்க்கிய முற்போக்குக் கூட்டணித் தலைவர் திருமதி சோனியாகாந்தி மற்றும் என்னுடைய  முன்னிலையிலே  பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்கள் மதுரைக்கே வருகை தந்து, அந்தத் திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்து, திட்டப் பணிகளும் வேகமாக நடைபெற்று வந்த நேரத்தில், அந்தத் திட்டம் நிறை வுற்றுவிட்டால்  தி.மு.கழகத்திற்கும், அய்க்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் மிக முக்கியமான திட்டத்தைச் செயல்படுத்திய  சாதனையின் காரண மாகச்  சிறப்பான பெயர் வந்துவிடும் என்ற தீய எண்ணத்தோடு  ஒரு கூட்டம் அதனைக் கெடுக்கின்ற முயற்சியிலே ஈடுபட்டு, நீதிமன்றம்வரை சென்று  அந்தச் சேது சமுத்திரத் திட்டத்திற்கு முட்டுக் கட்டைபோடும் முயற்சியில் ஓரளவு வெற்றியும் கண்டது.

பள்ளிகள் துவக்க தனியாரை அழைக்கிறது மத்திய அரசு: 25 சதவீதம் மானியம்

இந்தியாவில் கல்வித் தரத்தை மேம்படுத்தும் வகையில், மேல்நிலைப் பள்ளிகளை நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்படவுள்ளது. அரசு - தனியார் பங்களிப்புடன் மேற்கொள்ளப்படவுள்ள இந்த திட்டத்தில், பங்கேற்க விருப்பமுள்ள நிறுவனங்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, சமீபத்தில் தாக்கல் செய்த பட்ஜெட்டில், "12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், நாடு முழுவதும் 6,000 மாதிரிப் பள்ளிகள் துவக்கப்படும். இதில், 2,500 பள்ளிகள், அரசு - தனியார் பங்களிப்புடன் துவக்கப்படும்' என, தெரிவித்திருந்தார்.

கொலையாளிகள் அடையாளம் தெரிந்தது?மனைவியை இழந்த ஆத்திரத்தில்

திருச்சி:தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் சகோதரர் ராமஜெயத்தை கொலை செய்தவர்களை, போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். "காதல் திருமணம் செய்து வைத்த விவகாரத்தில், அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம்' என்று, நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ராமஜெயம் கொலை வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் சைலேஷ்குமார் யாதவ், ஏழு தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். காதல் திருமணம் செய்தவர், தன் மனைவியை இழந்த ஆத்திரத்தில், ராமஜெயத்தை கொலை செய்துள்ளதாக நம்பத்தகுந்த போலீஸ் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க கல்லூரியில் 7 பேரை சுட்டுக் கொன்ற முன்னாள் மாணவன்

ஓக்லேண்ட்:  அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லூரிக்குள் புகுந்த முன்னாள் மாணவன் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டதில் 7 மாணவர்கள் இறந்தனர், இந்திய வம்சாவழி மாணவி உள்பட 3 பேர் காயமைடந்தனர்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் ஓக்லேண்டில் உள்ளது ஆய்கோஸ் பல்கலைக்கழகம். அந்த பல்கலைக்கழக கல்லூரிக்குள் கொரிய வம்சாவழியைச் சேர்ந்த கோ(43) என்பவன் நேற்று அத்துமீறி புகுந்தான். வகுப்புறைக்குள் புகுந்த அவன் அனைவரும் வரிசையில் நில்லுங்கள், நான் உங்களை எல்லாம் சுட்டுக் கொல்லப் போகிறேன் என்று கூறியுள்ளான். மாணவர்களும் செய்வதறியாது திகைத்தனர். உடனே அவன் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் 7 மாணவர்கள் பலியாகினர். இந்திய வம்சாவழி மாணவியான தேவிந்தர் கௌர்(19) உள்பட 3 பேர் காயமடைந்தனர்.

செவ்வாய், 3 ஏப்ரல், 2012

ராமஜெயம் கொலை - பின்னணியில் மர்ம பெண்?

ராமஜெயம் கொலையில் மர்ம பெண் ஒருவர் பின்னணியில் உள்ளாக பரபரப்பாக கூறப்படுகிறது.
திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் தம்பி கே.என்.ராமஜெயம் படுகொலை தொடர்பாக 7 தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கே.என்.நேரு அலுவலகத்துக்கு போனில் பேசிய ஆசாமி ஒருவர் கே.என். நேருவை கொலை செய்யப் போவதாக மிரட்டினார். இதனையடுத்து உஷாரான போலீசார் கே.என். ராமஜெயத்தின் கொலைக்கும், போன் மிரட்டலுக்கும் சம்மந்தம் இருக்கலாம் என்றும், போன் செய்த ஆசாமியை பிடித்தால் முக்கிய தகவல் கிடைக்கும் என்றும் எதிர்பார்த்து சண்முகவேல் என்பவரை வலை வீசி மடக்கி பிடித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் கே.என். நேரு மீது ஏற்கனவே இருந்த விரக்தியால் அப்படிக் கூறியது தெரிய வந்தது.

அமலா-ஆர்யா பிரிவிற்கு காரணம் முத்தமா!

திடீரெனஒருநடிகை பிரபலமானாலே கிசுகிசுக்கள் வருவது சகஜம் தான். ஆனால் அவை அடுத்தடுத்து பறந்துகொண்டே இருந்தால் யார் தான் பொருத்துக் கொள்வார்கள்.
இந்நிலையில் தான் இருக்கிறார் நடிகை அமலா பால்.சில நாட்களுக்கு முன் ஆர்யாவிற்கும் அமலா பாலுக்கும் காதல் என்று பரபரப்பாக பேசப்பட்டு அதன் பின் அனைவருக்கும் தனித்தனியே விளக்கம் கொடுக்கப்பட்டு இல்லை என்பது போல் ஆனது. அதன் பிறகு ஆர்யா ”வேட்டை படத்தில் வரும் முத்தக் காட்சியில்(லிப்-டூ-லிப்) எனக்கு சங்கடமாக இருந்த போது

சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதா? ஜெயலலிதாவுக்கு கண்டனம்

ராமர் பாலம் என்று கூறி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்குவதாக முதல்வர் ஜெயலலிதாவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார்.
இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  சேது சமுத்திர திட்டத்துக்கு 2005-ம் ஆண்டு மதுரையில் சோனியா காந்தி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டினார். திட்டப் பணிகள் வேகமாக நடைபெற்று வந்த நிலையில், ஒரு கூட்டம் அதற்கு முட்டுக்கட்டை போடும் முயற்சியில் ஈடுபட்டு ஓரளவு வெற்றியும் கண்டது.  சேது சமுத்திரத் திட்டத்தை நிறைவேற்றினால், ராமர் பாலத்துக்கு குந்தகம் ஏற்படும் என்று அந்தக் கூட்டம் கூறியது. அவர்களுக்கு துணைபுரியும் வகையில், ""ராமர் பாலத்தை தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்க வேண்டும்'' என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

விஜய் மல்லையாவுக்கு கிங்ஃபிஷர் ஊழியர்களின் ‘ராயல் சேலஞ்ச்’

கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ் ஊழியர்கள், தமக்கு கொடுக்கப்பட வேண்டிய ஊதியத்தை வழங்குவதற்கு நாளை (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி வரை அவகாசம் கொடுத்துள்ளனர். அதற்குமுன் செட்டில்மென்ட் செய்யப்படாவிட்டால், வேலை நிறுத்தம் செய்யப் போவதாகவும் அறிவித்துள்ளனர்.

போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா!நாட்டு மக்களுக்கு ஓர் நற்செய்தி

சென்னை:மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு, போயஸ் தோட்டத்துக்கு திரும்பினார் சசிகலா; இவருடன், இளவரசியும் வந்துள்ளார். சசிகலாவின் வருகை, அ.தி.மு.க.,வுக்குள்ளும், அதிகாரிகள் மட்டத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையே, வீடு இடிப்பு வழக்கில் கைதான சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.

திங்கள், 2 ஏப்ரல், 2012

அட்ற .......அட்ற...... நாக்கு முக்கு ... நாக்கு முக்கு .... நாக்கு முக்கு ..அட்ற

வாசகர் கடிதம் 1 
 நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது தான். இருவரும் மீண்டும் சேர்ந்து தோட்டத்தில் பூ பறிக்க தொடங்கி விட்டார்கள். இனி எல்லோர்க்கும் இருவரும் சேர்ந்து பூ சுற்றுவார்கள்? ஒன்றுமே உருப்படாது

வாசகர் கடிதம்2அப்பாடா... இந்த மூணு மாச கேப்ல எவனவன் சசிகலா குரூப்புக்கு எதிரா வேல செஞ்சான்னு குவிஞ்சுருக்கற புகார் கடிதம் மூலமா தெரிஞ்சாச்சு... எவ்வளோ நாளைக்குதான் ஐஏஎஸ் ஸ மாத்தறது, ஐபிஎஸ் ஸ மாத்தறது, மந்திரிய மாத்தறது ன்னு பழகிப்போன காரியத்தையே செய்யறது? இனிமே உலக கட்சி வரலாற்றுலேயே ஒரே அடியாக இருபது லட்சம் கட்சி தொண்டர்களை கட்சி ஒழுங்கு நடவடிக்கை மூலம் நீக்கிய ஒரே புரட்சிதலைவி ஜெயலலிதா அம்மயார்னு பேரு வாங்கப்போறாங்க பாருங்க... நடராஜன், திவாகரன் போன்ற உடன்பிறவா தங்கச்சியோட இரத்த சொந்தங்கள் ஒரு இரண்டு மாசம் இரும்புக்கம்பிக்குள்ள பாதுகாப்பா இருந்தா ஒடம்பு சும்மா தகதகன்னு மின்னும்னு தஞ்சாவூர்ல ஒரு சாமியார் சொல்லீருக்காரு, அது தெரியாம பெட்டிசன் போட்ட அண்ணாதிமுக காரங்களுக்கு இனிமே சொம்புதான்... தீர்க்கதரிசி அண்ணா தமிழா உன் விடிவுகாலத்த பாருன்னு ஆட்காட்டி விரல காட்டினாரு. பொன்மனச்செம்மல் புரட்சிதலைவர் எம்ஜிஆர் ஆட்காட்டி விரலோட இன்னொரு விரலையும் சேத்து இரட்டை இல்லை காட்டினாரு... நம்ம அம்மா அதிமுக காரனுக்கு அதுல ஒரு வெரல மடக்கி காட்டிடாங்க.... இந்த மூணு மாச பிரிவுக்கும் கருணாநிதியே காரணம்னு சொன்னாலும் சொல்லுவாங்க..
வாசகர் கடிதம்3

உல்லாச ஒசாமாவின் 3 மனைவிகளுக்கு 45 நாள் சிறை !


இஸ்லாமாபாத்: நாட்டிற்குள் சட்ட விரோதமாக புகுந்து குடியேறிய குற்றத்திற்காக மறைந்த பயங்கராவாதி ஒசாமாவின் 3 மனைவிள் மற்றும் 2 குழந்தைகளுக்கு 45 நாள் சிறைத்தண்டனை விதித்து பாக்., கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த மார்ச் மாதம் இந்த குற்றத்தின் படி 3 மனைவிகள் , 2 பெண்குழந்தைகள் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். எனவே இன்னும் 2 வாரம் மட்டுமே சிறையில் இருக்க வேண்டியது இருக்கும் என ஒசாமாவின் வக்கீல் முகம்மது ஆமீர் தெரிவித்தார் .
இவர்களது சிறைக்காலம் முடிந்ததும் விரைவில் அவர்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கவும் உள்துறை அமைச்சகத்திற்கும் கோர்ட் உத்தரவிட்டது. மேலும் 10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒசாமாவின் ஏனைய 2 மனைவிகள் சவுதியில் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திவாகரனுக்கு ஜாமீன்: தொலைந்த சகோதரி, கிடைந்த மகிழ்ச்சியில்!

அடிமைகள் திராவிட முன்னேற்ற கழகத்தின் அதிவேக காட்சி மாற்றங்கள் பழுத்த அடிமைகளான அமைச்சர்களையும் கூட தடுமாற வைக்கிறது.
Viruvirupu
சசிகலா மீண்டும் முதல்வர் ஜெயலலிதாவின் சகோதரியான புனர்ஜென்மம் பெற்ற பின் கோர்ட்டுக்கு வந்த முதலாவது ஜாமீன் மனு, வெற்றிகரமாக முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. வீடு இடிப்பு வழக்கில் சசிகலாவின் சகோதரர் திவாகரனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.

சயனைட் கொடுத்து கழுத்தை நெரித்து ராமஜெயம் படுகொலை- போலீஸ்

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் கொல்லப்பட்டிருப்பதாக பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 29ம் தேதி காலை வீட்டிலிருந்து வாக்கிங் போனபோது ராமஜெயம் கடத்தப்பட்டதாக அவரது குடும்பத்தினர் போலீஸில் புகார் கொடுத்திருந்தனர். சில மணி நேரங்களில் ராமஜெயத்தின் உடலை போலீஸார் மீட்டனர்.
அவரது உடல் திருச்சி அரசு பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்குப் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதுதொடர்பான அறிக்கையை தற்போது போலீஸார் திருச்சி மாஜிஸ்திரேட் கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளனர்.
அதில் கடத்தப்பட்ட ஒரு மணி நேரத்தில் ராமஜெயம் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவருக்கு சயனைட் கொடுத்தும், கழுத்தை நெரித்தும் கொலை செய்திருக்கலாம் என்று தெரிகிறது. அவரது தலையில் அடிபட்ட காயமும் உள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.
75 பேரிடம் விசாரணை

ஜெயா – சசி / அ.தி.மு.க எனும் அடிமைகளது கட்சி சுரண்டிச் சேர்த்த சொத்து

ஜெயா-சசிகலாஜெயா – சசி நட்பு என்பது வெறுமனே உணர்ச்சி சார்ந்த ஒன்றல்ல. ஊழல் – முறைகேடுகளால் கட்டியமைத்த மாபெரும் சாம்ராஜ்ஜியத்தின் பிரிக்கவொண்ணாத கூட்டாளிகள் என்பதே அவர்களுடைய உறவின் மையம்.
கேடி நம்பர் 1 - சீசன் 2 முடிந்தது
கிட்டத்தட்ட இரு மடங்காய் மின் கட்டண உயர்வை அறிவித்த கையோடு உடன் பிறவா சகோதரி சசிகலாவோடு இனி காயில்லை, பழம்தானென்று அழைத்திருக்கிறார் ஜெயலலிதா. மயிலாப்பூர் கும்பலுக்கு ஆதரவான தினமலர், ஹிந்து, தினமணி, குமுதம் முதலான பார்ப்பன ஊடகங்கள் இந்த செய்தியை வேண்டா விருப்பாக கொஞ்சம் சோகத்துடனேயே வெளியிட்டிருக்கின்றன.
கடந்த டிசம்பரில் ஆரம்பித்த இந்த நாடகம் இப்போது முடிவுக்கு வந்திருக்கிறது. எனினும் இதை முற்றிலும் நாடகம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. 1996ஆம் ஆண்டு நடந்த இதே போன்றொதொரு பிரிவு – சேர்க்கையிலிருந்து இந்த 2011-12 எபிசோடு அளவிலும் தன்மையிலும் வேறுபட்டது.
சசிகலாவின் சேர்க்கைதான் ஜெயாவின் ஊழலுக்கு காரணமென்று அவரது நீக்கத்தை போற்றிப் பாடிய பார்ப்பன ஊடகங்களின் திரித்தலை மறுத்து அப்போது ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஜெயா – சசி கும்பலின் ஊழல், அதிகார முறைகேடுகள், பார்ப்பனிய பக்தி, பாசிச ஆட்சி அனைத்திற்கும் ஜெயாவே பிரதானமான காரணமென்று அதில் சுட்டியிருந்தோம்.

மியான்மர்: ஆங் சான் சூகியின் ஜனநாயகக் கட்சிக்கு 43 தொகுதிகளில் அமோக வெற்றி

யாங்கூன்: சர்வதேச நாடுகளை திரும்பிப் பார்க்க வைத்திருக்கும் மியான்மர் நாடாளுமன்றத்தின் 45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 43 தொகுதிகளை கைப்பற்றியுள்ளதாக ஆங் சான் சூகியின் ஜனநாயகக் கட்சி தலைவர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் இத்தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக இன்னமும் அறிவிக்கப்படவில்லை.

45 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 44 தொகுதிகளில் ஆங் சான் சூகியின் ஜனநாயக் கட்சி போட்டியிட்டது. தலைநகர் யாங்கூனில் 4 தொகுதிகளை சூகியின் கட்சி கைப்பற்றியுள்ளது. கவ்மு தொகுதியில் போட்டியிட்ட சூகியும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை இரவு அறிக்கை ஒன்றை வெளியிட்ட ஆங் சான் சூகி, கட்சியின் வெற்றியை அமைதியான முறையில் கொண்டாடுமாறும் பிற கட்சியினருக்கு மதிப்பளித்து நடக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாங்கூன் உட்பட அனைத்து நகரங்களிலும் சூகியின் ஆதரவாளர்கள் வெற்றிக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

11.88 லட்சம் வீடுகளில் கேரளாவில் ஆட்களே இல்லை

திருவனந்தபுரம்: யாருமே வசிக்காமல், கேரளாவில் 11 லட்சத்து 88 ஆயிரம் வீடுகள் பூட்டியே கிடக்கின்றன என, கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.கேரளாவில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து, இயக்குனர் டாக்டர் வி.எம்.கோபாலமேனன் நிருபர்களிடம் கூறியதாவது: மாநிலத்தில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, கேரளாவில் 1 கோடியே 12 லட்சம் வீடுகள் உள்ளது தெரியவந்தது. கடந்த பத்தாண்டுகளில் மாநிலத்தில் வீடுகளின் எண்ணிக்கை 19.9 சதவீத வளர்ச்சி காணப்படுகிறது.

தமன்னா முகத்தை சிவக்க வைத்த சிரஞ்சீவி!

நடிகை தமன்னாவின் அழகைப் பற்றி புகழ்ந்து பேசி அவரை முகம் சிவக்க வைத்துவிட்டாராம் தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி.




தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜாவும், தமன்னாவும் நடித்துள்ள ரட்சா படத்தின் இசை வெளியீ்ட்டு விழா அண்மையில் நடந்தது. விழாவிற்கு வந்திருந்த சிரஞ்சீவி தமன்னாவின் அழகை சகட்டுமேனிக்கு புகழ்ந்து தள்ளியுள்ளார்.
அப்போது அவர் பேசியதாவது,
ஆஹா, தமன்னா இவ்வளவு அழகாக இருக்கிறார்களே. அவர்களைப் பார்க்கையில் எனது 150வது படத்தை உடனே துவங்கி அவரையே எனக்கு ஜோடியாக போட்டுவிடலாம் போலிருக்கிறதே. என்ன என் மகனுக்கு அவர் ஜோடியாக நடித்துள்ளதால் நான் அவருடன் நடிக்க முடியாது என்று வருத்தமாக கூறியுள்ளார்.
இப்படி சிரஞ்சீவி புகழ்ந்து தள்ள தமன்னாவுக்கோ வெட்கத்தில் முகம் சிவந்து விட்டதாம். மேலும் தமன்னாவுக்கும் மழைக்கும் அவ்வளவு பொருத்தமாக உள்ளது. அவர் நடிக்கும் படங்களில் ஒரு பாட்டிலாவது வெள்ளை நிற ஆடையைக் கொடுத்து மழையில் கிளுகிளுவென நனையவிடுகிறார்கள். அப்படி அவர் ஆட்டம் போட்ட அடடா, மழைடா அடைமழைடா பாடல் இன்னும் பலருக்கு பிடித்த பாடலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

கடாபியின் ரூ.7500 கோடி சொத்துக்கள் முடக்கம்

லிபியாவில், கடாபியின் ஏராளமான சொத்துக்களை புதிதாக அமைந்துள்ள அரசு கைப்பற்றியுள்ளது. ஆடம்பர மாளிகைகள், தங்க, வைர அணிகலன் கள் மற்றும் கோடிக் கணக்கான பணம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இவை தவிர கடாபி யும், அவரது குடும்பத் தினரும் பல நாடுகளில் சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளனர். அங்குள்ள வங்கிகளில் பணம் மற்றும் தங்க, வைர அணிகலன்கள் முதலீடு செய்யப்பட்டு உள்ளன. தற்போது அவை யும் கண்டுபிடித்து முடக் கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் இத்தா லியில் கடாபியின் சொத் துக்கள் இருப்பது கண் டறியப்பட்டுள்ளது. எனவே அங்குள்ள அவரது ரூ. 7,500 கோடி மதிப்பிலான சொத்துக் கள் முடக்கப்பட்டுள்ளன. நிலங்கள், பல கம்பெனி களில்  செய்யப்பட்டி ருந்த பங்கு முதலீடுகள் போன்றவை இதில் அடங்கும்.
லிபியா நாட்டின் அதிபராக இருந்தவர் மும்மர் கடாபி. சர்வாதிகாரி யான இவரது 42 ஆண்டு கால ஆட்சிக்கு எதிராக பொதுமக்கள் போராட் டம் நடத்தி இவரை விரட்டி அடித்தனர்.

தூத்துக்குடி-கொழும்பு 19 முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து'

தூத்துக்குடி, ஏப்.1: தூத்துக்குடி-கொழும்பு இடையே ஏப்ரல் 19 முதல் மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கப்படும் என, தூத்துக்குடி வஉசி துறைமுக சபைத் தலைவர் அ. சுப்பையா தெரிவித்தார்.    இதுதொடர்பாக தூத்துக்குடியில் அவர் செய்தியாளர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டி:    தூத்துக்குடி-கொழும்பு இடையே கடந்தாண்டு ஜூன் 13-ல் பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்கியது. இதுவரை 12,202 பேர் பயணம் செய்துள்ளனர். அதன் மூலம் ரூ. 7.8 கோடி உரிமம் கட்டணமாகவும், ரூ. 1.8 கோடி பயணிகள் கட்டணமாகவும் வருவாய் கிடைத்துள்ளது. எரிபொருள் பிரச்னை, தொழில்நுட்பக் காரணங்களால் நவம்பர் 18-ல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்நிலையில், போக்குவரத்தை ஏப்ரல் 19 முதல் மீண்டும் இயக்கத் திட்டமிட்டுள்ளோம்.    இதற்கு முன்னர் இருந்த பயணிகள் கப்பல் 1,044 பேர் பயணம் செய்யும் அளவுக்கு பெரியதாக இருந்தது. ஆனால் இப்போது, போக்குவரத்தை தொடங்கவுள்ள சிறிய கப்பலில் 450 பயணிகள் பயணம் செய்யலாம்.    செவ்வாய், வியாழன்தோறும் இந்தக் கப்பல் இயங்கும் என்றார் அவர்

வீரபாண்டிய கட்டபொம்மன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில்

பழைய படங்களை விரும்பி பார்க்கும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அடுத்த விருந்தாக வீரபாண்டிய கட்டபொம்மன் படம் தயாராக உள்ளது.சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்திற்கு மாற்றப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போதும் பல திரையரங்குகளில் கர்ணன் படம் ஓடிக் கொண்டிருக்கிறது.இந்த புதிய முயற்சி இன்னும் பல பழைய காலப் படங்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் என்று அப்போதே ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்திருந்தனர். அதற்கு பலனாக, வீரபாண்டிய கட்டபொம்மன் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக உள்ளது.கர்ணன் படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாக்கி ஸ்ரீ திவ்யா பில்ம்ஸின் ஷாந்தி சொக்கலிங்கம் இந்த தகவலை உறுதி செய்தார்.

16,800 வி.ஐ.பி.,க்களுக்கு 50 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு!

 ஆமா யார் அந்த VIP? இவனுங்க தான் பொறந்தானுங்களா இந்தியாவுல, நாங்கெல்லாம் தேவையில்லாம அனாவசியமா பொறந்துட்டமா?
புதுடில்லி: நாடு முழுவதும், 16 ஆயிரத்து 800 வி.ஐ.பி.,க்களுக்கு, 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளதாவும், இது, அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட, இரண்டு மடங்கு அதிகம் என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 2010 நிலவரப்படி, 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 16 ஆயிரத்து 788 வி.ஐ.பி.,க்களுக்கு, சம்பந்தபட்ட மாநில போலீசார், பாதுகாப்பு அளிக்கின்றனர். இந்த வி.ஐ.பி.,க்களுக்கான பாதுகாப்புப் பணியில், 50 ஆயிரத்து 59 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். அமைச்சர்கள், எம்.பி., மற்றும் எம்.எல்..,க்கள் உள்ளிட்டோர், இந்த வி.ஐ.பி.,க்களின் பட்டியலில் அடக்கம். வழக்கமாக, 16 ஆயிரத்து 788 வி.ஐ.பி.,க்களுக்கு, 28 ஆயிரத்து 298 போலீசார் மட்டுமே பாதுகாப்பு அளிக்க வேண்டும். ஆனால், தற்போது அனுமதிக்கப்பட்ட அளவை விட, இரண்டு மடங்கு அதிக போலீசார், வி.ஐ.பி.,க்களின் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நேரத்தில் நேரு சகோதரர்களை தீர்த்துக்கட்ட சதி?

திருச்சி: தி.மு.க., முன்னாள் அமைச்சர் நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை செய்யப்பட்ட அன்று, சென்னையிலிருந்து திருச்சி வந்த நேருவின் காரில் டயர் கழன்ற சம்பவம், தற்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது. ஒரே சமயத்தில் சகோதரர்களை தீர்த்துக்கட்ட நடந்த சதியா என்று தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட தி.மு.க., செயலரும், முன்னாள் அமைச்சருமான நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 29ம் தேதி, "வாக்கிங்' சென்றபோது, மர்மக் கும்பலால் கடத்தி, கொலை செய்யப்பட்டார். நேற்று முன்தினம், நேருவுக்கு போன் மூலம் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதன் மூலம் நேரு, ராமஜெயம் இருவரையும் கொலை செய்ய, மர்மக் கும்பல் திட்டமிட்டதாகத் தெரிகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில், மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது. ராமஜெயம் கொலை செய்யப்பட்ட அன்று காலை, "ராமஜெயத்தை காணவில்லை' என்று சென்னையிலிருந்த நேருவுக்கும் தெரிவிக்கப்பட்டது. நேரு, அவரது மகன் அருண் இருவரும், தங்களது பஜிரோ காரில் சென்னையிலிருந்து திருச்சி நோக்கி வந்தனர். வரும் வழியில் காரின் டயர் பகுதியிலிருந்து, "கடகட' வென பலத்த சத்தம் கேட்டது. இதையறிந்த நேரு, காரை நிறுத்தும்படி டிரைவரிடம் கூறியுள்ளார். காரை நிறுத்தும் போது, ஒரு டயர் கழன்று ஓடியதைக் கண்டு நேருவும், அவரது மகனும் அதிர்ச்சியடைந்தனர். இந்த சம்பவத்தை நேரு நேற்று உறுதிப்படுத்தினார்.

ஞாயிறு, 1 ஏப்ரல், 2012

விசுவாசமாத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லையே... நயனதாரா!

பிரவுதேவாவைப் பிரிவேன் என்று தான் ஒருபோதும் நினைத்ததே இல்லை. நான் அவருக்கு உண்மையாக, விசுவாசமாகத்தான் இருந்தேன், ஆனால் அவர் இல்லை என்று நயன்தாரா தெரிவித்துள்ளார்.
பிரபுதேவாவுடனான காதல் முறிந்ததற்கான காரணத்தை முதல் முறையாக வாய் திறந்து கூறியுள்ளார் நயனதாரா ஒரு பேட்டியில்.
இந்தப் பேட்டியில் பிரபு தேவாவுடான காதல் முறிய காரணம் என்ன என்பதை அவர் சொல்லியுள்ளார். இதுகுறித்து நயனதாரா கூறுகையில்,
காதலுக்காக எதையும் செய்யத் தயாராக இருந்தேன். பிரபுதேவாவுக்காக சிலவற்றை விட்டுக் கொடுத்தேன். இருப்பினும் திருமணம் வரை சென்ற எங்கள் காதல் இறுதியில் முறிந்தவிட்டது. எங்கள் விஷயத்தில் மட்டுமல்ல எத்தைனையோ பேரின் காதல் அல்லது திருமணம் முறிவது நடக்கத் தான் செய்கிறது.

நேருவுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர் சிக்கினார்!

திருச்சி: முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தரக்குறைவாக திட்டமி கொலை மிரட்டல் விடுத்த விவகாரத்தில் சங்கரன்கோவில் அருகே ஒருவரைப் போலீஸார் பிடித்துள்ளனர்.
நேருவின் தம்பி ராமஜெயம் சமீபத்தில்தான் திருச்சி அருகே கொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு குறித்து போலீஸார் தீவிரமாக விசாரித்து வரும் நிலையில் தற்போது கே.என்.நேருவுக்கும் மிரட்டல் வந்துள்ளது.

சங்கரன்கோவில் வெற்றிக்கு அரசு அளித்த பரிசு

ஏழை, எளிய, நடுத்தர மக்கள் பயன்படுத்தும் குறைந்த மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ.5,300 கோடியும், வசதி படைத்தோர் தொழிலதிபர்கள் பயன்படுத்தும் உயர் மின்னழுத்த இணைப்புகள் மூலம் ரூ.2,574 கோடியும் 

சென்னை, மார்ச் 31: சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் வெற்றிப் பெற்றதற்காக அதிமுக அரசு மக்களுக்கு அளித்துள்ள முதல் பரிசு மின் கட்டண உயர்வு என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.  இது தொடர்பாக சனிக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:  அதிமுக ஆட்சிக்கு வந்த 10 மாதக் காலத்தில் மின் கட்டணத்தை 37 சதவீதம் அளவுக்கு உயர்த்தியுள்ளனர். சங்கரன்கோவில் தொகுதி இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிக்கு வெற்றியைத் தேடித் தந்ததாகச் சொல்லப்படும் மக்களுக்கு, அரசு அளித்துள்ள முதல் பரிசு இது.

ஒரு மாணவனின் மரணம்

இன்று காலை தி ஹிந்துவில் படித்த ஒரு செய்தி என்னை மிகவும் பாதித்தது.
மணிவண்ணன் என்ற இந்தப் பையனை எனக்குக் கொஞ்சமாகத் தெரியும். சில மாதங்களாக கிண்டி பொறியியல் கல்லூரி (அண்ணா பல்கலைக்கழகம்) என்.எஸ்.எஸ் மாணவர்கள் சிலருடன் சேர்ந்து சில பணிகளை மேற்கொண்டிருக்கிறேன். அவ்வை சண்முகம் சாலையில் உள்ள சென்னை மாநகராட்சிப் பள்ளியில் படிக்கும் மாணவர்களைச் சந்திப்பதற்காக ஒரு நாள் ஒதுக்கியிருந்தோம். அண்ணா பல்கலை மாணவர்கள் சிலரை மாநகராட்சிப் பள்ளி மாணவர்கள் முன் கொண்டுவந்து நிறுத்தி, ‘இவர்கள் என்ன செய்துள்ளார்கள் என்று பாருங்கள்; இவர்களைப் போலவே நீங்களும் சாதிக்கலாம்’ என்று சொல்லி மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதுதான் இதன் நோக்கம்.

ராமஜெயம் கொலை: அடுத்த குறி கே.என்.நேரு? இரண்டு சாத்தியங்கள்!

Viruvirupu,




ஏற்கனவே பரபரப்பில் உள்ள திருச்சியில், “தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவுக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது” என்று வெளியான செய்தி மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலமானவர்களுக்கு அவ்வப்போது கொலை மிரட்டல்கள் வருவது சகஜம்தான். அதுவும் கே.என்.நேரு போன்ற அடிதடி சைடிலும் பரிச்சயம் உடைய அரசியல்வாதி என்றால், சற்று அதிகமாகவே வரத்தான் செய்யும்.
சாதாரண நாட்களில் இதையெல்லாம் சீரியசாக எடுக்க மாட்டார்கள்.
ஆனால் இன்று, நிலைமை வேறு. ஏற்கனவே ஒரு கொலை விழுந்துவிட்டது. கொலை செய்யப்பட்ட விதத்தைப் பார்த்தால், உச்சக்கட்ட துன்புறுத்தலின் பின் கொன்றிருக்கிறார்கள். பழிவாங்கல், அதீத வெறுப்பு என்று பல விஷயங்கள் தெரிகின்றன. அப்படி கொல்லப்பட்டவரின் அண்ணன் கே.என்.நேரு.

ஜெ., - சசி நடத்திய நாடகம் : சொல்கிறார் சு. சாமி

ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சாமி செய்தியாளர்களிடம் பேசியபோது,
‘’சசிகலா அ.தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்டது, மீண்டும் சேர்த்து கொள்ளப்பட்டது அனைத்தும் நாடகம்’’ என்று கூறினார்.
அவர் மேலும்,   ‘’ 2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேட்டை நாங்கள் தான் வெளிக்கொண்டு வந்தோம். இதனால் தி.மு.க., ஆட்சி அகற்றப்பட்டது.
ஆட்சி மாற்றத்தை தற்போதைய அரசு சரியாக பயன்படுத்தாமல் விலைவாசி உயர்வு, கட்டண உயர்வை மக்களிடம் திணிக்கிறது. 2ஜி ஊழல் புகாரில் தயாநிதி விரைவில் சிறை செல்வார்’’ என கூறினார்.