tamil.asianetnews.com - Thiraviaraj : ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய்.
91.04 acres of land worth Rs.2010 crore occupied by Jeppiar Education Group recovered
ஜேப்பியார் கல்வி குழுமத்தினால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட அரசு நிலம் 91.04 ஏக்கர் நிலம் செம்மஞ்சேரியில் மீட்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 2010 கோடி ரூபாய்.
ஜேப்பியார் கல்வி குழுமத்தை சேர்ந்த செயின்ட் ஜோசப் கல்லூரி நிர்வாகம் 91.4 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்திருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தில் மாணவிகள் தங்கும் விடுதிகள் கட்டப்பட்டுள்ளன. 20 ஆண்டுகளாக நடைபெற்ற இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவுப்படி இன்று 91.04 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது.
சனி, 18 செப்டம்பர், 2021
ஜேப்பியார் கல்வி குழுமம் ஆக்கிரமித்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலம் மீட்பு..!
திருநங்கைகள் நடத்தும் ‘டிரான்ஸ் கிச்சன்’... - பொதுமக்கள் பெரும் வரவேற்பு!
கலைஞர் செய்திகள் : மதுரை கோரிப்பாளையம் பகுதியில் திருநங்கைகள் திறந்துள்ள உணவகம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.
சமூகத்தில் திருநங்கைகள் மீதான பார்வையில் மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் மதுரை கோரிப்பாளையத்தில் உணவகத்தை திறந்துள்ளார் திருநங்கை ஜெயசித்ரா.
கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக வீட்டிலேயே உணவு சமைத்து சிறிய நிகழ்வுகளுக்கு வழங்கிவந்த ஜெயசித்ரா, சக திருநங்களைகளுடன் இணைந்து ‘டிரான்ஸ் கிச்சன்’ என்ற பெயரில் உணவகத்தைத் திறந்துள்ளார்.
இந்த உணவகத்தில் உணவு சமைத்தல், பரிமாறுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளிலும் திருநங்கைகளே ஈடுபடுகின்றனர். இந்த உணவகத்தில் 12 திருநங்கைகள் பணியாற்றுகின்றனர்.
திருநங்கைகளின் இந்த அசத்தலான முயற்சியை பாராட்டும் வகையில் நேற்று இந்த உணவகத்தை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் நேரில் வந்து திறந்துவைத்தார்.
தலிபான்களை குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல்!
நக்கீரன் : ஆப்கானிஸ்தானின் நங்கர்ஹார் மாகாணத்தின் தலைநகரான ஜலாலாபாத்தில், தலிபான்களைக் குறிவைத்து வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் இரண்டு தலிபான் அதிகாரிகள் உட்பட மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்ததாகவும், அதில் பெரும்பாலானவர்கள் பொதுமக்கள் என்றும் அத்தகவல்கள் கூறுகின்றன.
ரோட்டில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் மீது தலிபான் வீரர், வாகனத்தை ஏற்றியபோது குண்டுவெடிப்பு நிகழ்ந்ததென்று உள்ளூர் அதிகாரிகள் கூறியதாக ஆப்கான் ஊடகம் ஒன்று கூறியுள்ளது. தலிபான் அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதலுக்கு இதுவரை யாரும் பொறுப்பேற்கவில்லை.
அதேபோல் ஆப்கான் தலைநகர் காபூலிலும் குண்டு வெடித்ததாகவும், அதில் இரண்டு பெயர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கார்த்தியின் சொதப்பலால் வட்டி கொடுமையில் சிக்கிய தயாரிப்பாளர் எஸ் இலட்சணகுமார்!
மின்னம்பலம் : நடிகர் கார்த்தி இப்போது பொன்னியின் செல்வன் படத்தில் வந்தியதேவன் கதாபாத்திரத்தில் நடித்து முடித்துவிட்டார். அதைத் தொடர்ந்து முத்தையா இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் கார்த்தியின் நண்பரும் தயாரிப்பாளருமான இலட்சுமண் குமார் நெருக்கடிக்கு உள்ளாகிஇருப்பதாகச் செய்திகள் கசிந்துள்ளன.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் புதிய படமொன்றின் அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி நாளில் வெளியானது.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.இலட்சுமண்குமார் தயாரிக்கும் அந்தப்படத்தின் பெயர், முதல்பார்வை மற்றும் ட்ரெயிலர் ஆகியன 25.04.2021 அன்று வெளியானது.
படத்துக்கு சர்தார் என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.
படத்தில் சுல்தான் பட நாயகி ராஷ்மிகா மந்தனா மற்றும் கர்ணன் பட நாயகி ரெஜிஷா விஜயன் ஆகிய இருவரும் நடிக்கிறார்கள் என அறிவிக்கப்பட்டது. அப்படத்துக்கு இசை ஜி.வி.பிரகாஷ், ஒளிப்பதிவு ஜார்ஜ் சி.வில்லியம்ஸ். சர்தார் படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடந்ததோடு நிற்கிறது.
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ராஜினாமா
மாலைமலர் : பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது.
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ராஜினாமா கடிதத்தை கொடுத்த அமரீந்தர் சிங்
பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சிபுரிந்து வரும் காங்கிரஸ் அரசின் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங், தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். தன் ராஜினாமா கடிதத்தை, பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் சமர்பித்தார் அமரீந்தர் சிங்.
அமரீந்தர் சிங்கிற்கும் கட்சியின் மூத்த தலைவர் சித்துவுக்கும் இடையே நீண்ட காலமாக கருத்து வேறுபாடு உள்ளது. இதற்கிடையே, அமரீந்தர் சிங் முதல்வர் பதவியை ராஜினாமா செய்யலாம் என தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் அவர் அதிகாரப்பூர்வமாக தன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். இதனால் பஞ்சாப் அரசியலில் பரபரப்பான சூழல் காணப்படுகிறது.
ராகுல் காந்தியால் மோடியை தோற்கடிக்க முடியாது - திரிணாமுல் காங்கிரஸ் MP
News18 Tami : ராகுல் காந்தியை நீண்ட காலமாக கவனித்து வருகிறேன், அவர் மோடிக்கு மாற்றான தலைவராக தன்னை மேம்படுத்திக் கொள்ளவில்லை
ராகுல் காந்தி பிரதமர் மோடியை தோற்கடிக்கும் திறன் படைத்த தலைவர் கிடையாது, 2024 தேர்தலில் மம்தா பானர்ஜி தான் எதிர்கட்சிகளின் முகமாக இருக்க வேண்டும் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் மூத்த எம்.பி பேசியுள்ளார்.
பிரதமர் மோடியின் 71வது பிறந்த தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், பிரதமர் மோடிக்கு மாற்றான தலைவர் ராகுல் காந்தி இல்லை என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி ஒருவர் பேசியுள்ளது அரசியல் அரங்கில் சூட்டை கிளப்பியுள்ளது.
2014, 2019 என தொடர்ச்சியாக இருமுறை நாடாளுமன்ற தேர்தல்களில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.
வீடியோ காலில் பேசுகிறோம்.. சரண்டராக ரெடியான 4 பேர் டீம்.. கோடநாடு வழக்கில் திருப்பம்.. பின்னணி
கோடநாட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் குறித்து விசாரணை தீவிரமாக நடந்து வருகிறது. மொத்தம் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் வழக்கை துரிதமாக விசாரித்து வருகிறார்கள். கோடநாடு பாதுகாவலர் மரணம், கனகராஜ் மரணம், சயான் குடும்பத்தினர், கோடநாடு பொறியாளர் மரணம் உள்ளிட்ட பல மரணங்களை இதில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
கேரளாவில் ஒரு தனிப்படை, தமிழ்நாட்டில் 3 தனிப்படை, நேபாளத்திற்கு ஒரு தனிப்படை விரைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் வழக்கில் விரைவில் முக்கிய மாற்றங்கள் ஏற்படும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது. இந்த வழக்கில் முக்கியமான சாட்சியங்களாக பார்க்கப்பட்ட 4 பேர் தற்போது சரண்டர் ஆக ரெடியாகி உள்ளனர். தீபு, சதோஷ் சாமி, ஜித்தன் ஜாய், சதீசன் ஆகியோர் தற்போது சரண்டர் ஆக ஒப்புக்கொண்டுள்ளனர். இவர்கள் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை நடந்த சமயத்தில் கேரளாவிற்கு எல்லை பகுதி வழியாக தப்பி ஓடினார்கள். இவர்களுக்கு கேரளா தப்பி ஓட தமிழ்நாட்டில் சிலர் உதவியதாக கூறப்பட்டது.
Breaking News ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்! US, Britain, Australia form Indo-Pacific 'AUKUS' security alliance
அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான மறு நாள் இந்த விண்ணப்பத்தை செய்துள்ளது சீனா.
Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் 'பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டாண்மை ஒப்பந்தம்' அமெரிக்காவால் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ல் வெளியேறியது அமெரிக்கா. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கான முடிவை எடுத்தார்.
வெள்ளி, 17 செப்டம்பர், 2021
யாழ்ப்பாண குடியேற்றம் .. தென்னிந்தியாவில் இருந்து இலங்கைக்கு குடிபெயர்ந்தோர் பற்றிய நூல்
செல்லபுரம் வள்ளியம்மை : சென்னை லயோலா கல்லூரி தலைமை தமிழ் விரிவுரையாளர், அராலி இந்து கல்லூரி அதிபர் அமரர் செ.முத்துக்குமாரசாமி பிள்ளையவர்களால் எழுதப்பட்ட யாழ்ப்பாண குடியேற்றம் என்ற நூல் பல அரியசெய்திகளை கொண்டிருக்கிறது . இந்நூல் நூலகம் ஆவண காப்பகத்தில் இருக்கிறது
அதில் உள்ள சில செய்திகளை இங்கே தந்திருக்கிறேன்
குறிப்பாக அன்றைய யாழ்ப்பாணத்தின் குடிப்பரம்பல் பற்றிய சுவாரசியமான செயதிகள் இதில் உள்ளன .....
....
மலையாளத்தில் குடியேறிய நம்பூதிரிகள் அங்கிருந்த மலையாளிகளை நாட்டை விட்டு வெளியேற்றினார்கள் என்று கேரளோற்பத்தி என்னும் நூல் கூறுகிறது
இதே கருத்தை பேராசிரியர் வி .ரங்காச்சாரியம் கூறியிருக்கிறார்
நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மலையாளிகளில் சிலர் இருபது மைல் அகலமுள்ள பாலக்காட்டு கணவாயில் உள்ள வியாபார பாதை வழியாக யாழ்ப்பாணம் சென்று குடியேறினார்கள்
சிலர் அதே கணவாய் வழியாக சென்று கொல்லிமலை ஜவ்வாது மலை பச்சை மலைகளில் சென்று குடியேறி மறைந்து வாழ்கின்றனர்
வேறு சிலர் கடல் வழியாக கன்னியாகுமரி காயல்பட்டினம் ராமேஸ்வரம் மாந்தை வழியாக வந்து யாழ்ப்பாணத்திலும் தென்னிலங்கையிலும் குடியேறினர் noolaham யாழ்ப்பாண குடியேற்றம்
பெரியாரின் பிறந்தநாள் 'சமூக நீதி நாள்'- திமுக சார்பில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு
முதலமைச்சரும், திமுக தலைவருமான ஸ்டாலின் தலைமையில் உறுதிமொழி ஏற்கும் நிகழ்வு நடைபெற்றது. கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி திமுக முக்கிய நிர்வாகிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஷகீலா மட்டும் இல்லைன்னா அன்னைக்கே.. மேடையில் கண்ணீர் விட்டு கதறிய அங்காடி தெரு சிந்து!
Mari S - tamil.filmibeat.com : சென்னை: ஷகீலா அக்கா மட்டும் இல்லைன்னா நான் இப்போ உயிரோடவே இருந்திருக்க மாட்டேன் என மேடையில் கண்ணீர் மல்க நடிகை அங்காடி தெரு சிந்து பேசிய வீடியோ வைரலாகி வருகிறது.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் கடந்த 2010ம் ஆண்டு வெளியான படம் அங்காடித் தெரு.
அந்த படத்தில் மகேஷ், அஞ்சலி உடன் சிந்துவும் நடித்திருந்தார்.
மார்பக புற்றுநோய் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்த அவருக்கு சிகிச்சை அளிக்க நிதி தேவைப்பட்ட நிலையில், நடிகை ஷகீலா செய்த உதவியை மறக்க முடியாது என அவர் கூறியுள்ளார்.
அங்காடித் தெரு படத்தின் மூலம் பிரபலமான நடிகை சிந்து ஏகப்பட்ட சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தார். இந்நிலையில், சில ஆண்டுகளுக்கு முன் புற்றுநோய் பாதிப்பு காரணமாக சிந்து மிகவும் அவதிப்பட்டார். பல பிரபலங்களிடமும் உதவி கேட்டும் யாரும் உதவ முன் வரவில்லையாம்.
முதல் முறை கீமோ தெரபி சிகிச்சை செய்யப்பட்ட போது தான் ஏமாற்றப்பட்டதாகவும் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதன் விளைவாக மிகப்பெரிய பாதிப்பை சந்திக்க நேரிட்டதாகவும்,
அடுத்ததாக இரண்டாம் முறை கீமோ தெரபி சிகிச்சை செய்து கொள்ள சினிமா பிரபலங்களிடம் உதவி கேட்ட நிலையில், பலரும் கை விரித்து விட்டனர் என்றார்.
நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு! “ஃபேஸ்புக் நண்பர்கள் வழிகாட்டலால் சட்டம் படித்தேன்” :
கலைஞர் செய்திகள் - விக்னேஷ் செல்வராஜ் : நீதிபதி ஆவதே லட்சியம் என நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞர் சௌமியா சாசு தெரிவித்துள்ளார்.
உதகை காந்தல் குருசடி காலனியைச் சேர்ந்த சவுமியா சாசு, நீலகிரியின் முதல் திருநங்கை வழக்கறிஞராகியுள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு சக திருநங்கைகளோடு ஊட்டிக்கு சுற்றுலா வந்த திருநங்கை சௌமியா சாசுவுக்கு ஊட்டி பிடித்துப்போகவே அங்கேயே சக திருநங்கைகளோடு இணைந்து உழைத்து வாழ்ந்துவந்தார்.
சௌமியா இளங்கலை அறிவியல் பட்டம் முடித்திருந்த நிலையில், சமூக வலைதள நண்பர்களின் வழிகாட்டுதல் மற்றும் உதவியோடு கடந்த 2017-ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள அரசு சட்டக்கல்லூரியில் சேர்ந்தார்.
படிப்பை முடித்து தமிழ்நாடு பார் கவுன்சிலில் பதிவுசெய்துள்ள சௌள்மியா தற்போது வழக்கறிஞராக பயிற்சி பெற உள்ளார். இதன்மூலம் ஊட்டியின் முதல் திருநங்கை வழக்கறிஞராகியிருக்கிறார் சௌமியா சாசு.
இந்தியா - இலங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து விரைவில்... இலங்கை அமைச்சர் வியாழேந்திரன் பேச்சு
இலங்கை பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டைமான் மற்றும் இலங்கை கிராம அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் ஆகியோர் சிவகங்கை மாவட்டம் பட்டமங்கலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின் ராமேஸ்வரம், நாகை, புதுக்கோட்டை மாவட்ட மீனவ சங்க பிரதிநிதிகள் இலங்கை அமைச்சர்களை சந்தித்து, 'இந்திய இலங்கை மக்கள் வேற்றுமை இல்லாமல் உறவாக பழகி வருகிறோம். ஆனால், சமீப காலமாக தமிழக மீனவர்களை எதிரியாக நினைத்து இலங்கை கடற்படை தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவதுடன், அந்நாட்டு கடற்படையால் பல மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பலர் காணாமல் போயிருக்கிறார்கள்.
கள்ளக்காதலுக்காக மகனை( 14 வயது ) காதலன் மூலம் கொலை செய்த தாய் ... சென்னை பொன்னேரியை அடுத்த நெடுவரம்பாக்கம்
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி மாணவன் சூர்யா திடீரென மாயமானான். அவனை உறவினர்கள் தேடி வந்தனர். அவனை பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இதுபற்றி சோழவரம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் உள்ள கோவில் குளத்தில் அழுகிய நிலையில் ஒரு சிறுவனின் உடல் மீட்கப்பட்டது.
கலைஞர் குடும்ப திருமண நிகழ்ச்சியில் ஸ்டாலின் – அழகிரி பங்கேற்பு; வைரல் படங்கள்
முன்னதாக நடைபெற்ற நலங்கு நிகழ்ச்சியில் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் ஒன்றாக மேடை ஏறினாலும் இருவரும் பேச்சிக்கொள்ளவில்லை. இருவரும் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளும் வாய்பை வெளிப்படையாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அவருடைய சகோதரர் மு.க.அழகிரி இருவரும் எப்போது சந்திப்பார்கள் என்று திமுகவினர் எதிர்பார்த்திருந்த நிலையில், கருணாநிதி குடும்ப திருமண நிகழ்ச்சியில், மு.க. ஸ்டாலினும் மு.க. அழகிரியும் நிகழ்ச்சியில் ஒரே நேரத்தில் கலந்துகொண்டுள்ளனர். திருமண நிகழ்ச்சியில் சகோதரர்கள் இருவரும் கலந்துகொண்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.
மறைந்த முன்னாள் முதல்வரும் திமுக தலைவர் கலைஞர் மகள் செல்வி – செல்வம் தம்பதியரின் மகள் எழிலரசி – ஜோதிமணியின் மகள் பிரியா ஜோதிமணி திருமணத்தில்தான் கலைஞர் மகன்கள் மு.க.ஸ்டாலினும் மு.க.அழகிரியும் கலந்துகொண்டிருக்கிறார்கள்.
சொத்துக்களை வாங்கிக் குவித்த கே.சி.வீரமணி... 35 இடங்கள்.. 9 சொகுசு கார்கள், 5 கிலோ தங்கம் - பணம்...வழிகாட்டிய முக்கிய தொழிலதிபர்!
நக்கீரன் - ராஜ்ப்ரியன் : கடந்த 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளரைத் தோற்கடித்து வெற்றி பெற்றார் கே.சி.வீரமணி.
அப்போது மாவட்டச் செயலாளராக இருந்தாலும் அவருக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லை. வேலூர் எம்.எல்.ஏ.வாக இருந்த மருத்துவர் விஜய்- க்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.
அமைச்சராக இருந்த விஜய் ஊழல் விவகாரம் ஒன்றில் சிக்கியதால் சசிகலா சிபாரிசில், தொழிலதிபர் சேகர் ரெட்டியுடன் நட்பிலிருந்த கே.சி.வீரமணியை அமைச்சராக்கினார் முதல்வராகியிருந்த ஜெயலலிதா.
ஜெ மறைவுக்குப் பின்னும், சசிகலா சிறைக்குச் சென்றபின் சில அமைச்சர்கள் முதலமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமியுடன் முரண்டுப்பிடித்து அதை வெளிப்படுத்தினர்.
வியாழன், 16 செப்டம்பர், 2021
பாண்டி பஜார்! சுயமரியாதை சுடர் பட்டிவீரன்பட்டி W. P. A சௌந்தரபாண்டியன் நாடார் ... (W. P. A. Soundarapandian)
Sundar P : பட்டிவீரன்பட்டி ஊ.ப.அ. சௌந்தரபாண்டியன் நாடா...
(W. P. A. Soundarapandian)
நாடார் சமூகத்தின் முடிசூடா மன்னனாகவும் திகழ்ந்த சௌந்தரபாண்டியன் 15 செப்டம்பர், 1893 இல் பட்டிவீரன்பட்டியில் ஒரு பெருநிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தார்.
நாடார் மகாஜன சபையின் முக்கிய அங்கமாக விளங்கிய இவர், சென்னை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ‘ முதல் நாடார்’ என்ற பெருமைக்குரியவராக விளங்குகிறார்...
பெரியார் ஈ.வெ.ராவின் சுயமரியாதை இயக்கத்தோடு, தன்னை
இணைத்துக் கொண்ட சௌந்தரபாண்டியன் சிறு வயதிலிருந்தே பிராமண ஆதிக்கத்தை எதிர்த்து வந்தார்.
நாடார் மக்களின் நலனுக்காகவும், முன்னேற்றத்திற்காகவும் உறுதியாக செயல்பட்ட அவர், நாடார் மகாஜன சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அப்பதவியில் 1920 ஆம் ஆண்டிலிருந்து 1930 ஆம் ஆண்டு வரை செம்மையாக செயல்பட்டார்..,
திமுக எம்பி கதிர் ஆனந்தின் சமூகநீதி புரிதல்... உடன் பிறப்புக்களின் கடும் எச்சரிக்கை!
Devi Somasundaram திமுக காரனா இருக்க ஒரு யோக்கியதை வேணும் ...
சாதி,மதம், மொழி,இனம்,பாலினம்னு எந்த பிரிவினை இல்லாத மனிதன், திராவிடன்னு தன்னை உணர்ந்தா தான் அவன் திமுக காரன். ..
பா....பான் உள்ள நூல புடிச்சுகிட்டே சாதி ஒழிப்பு பேசற மாதிரி உள்ள சாதிய புடிச்சுகிட்டே திமுக காரனா இருக்க முடியாது ..
இன்னிக்கு நீங்க எம் பி யா இருக்கறதுக்கு பின்னாடி அப்டி தன்னை திராவிடன்னு நம்பி உழைச்சவன் உழைப்பு தான் இருக்கு ...
அதுகாச்சும் நன்றியோட இருஙக. இல்லன்னா ரொம்ப வருத்தப்படுவீங்க ..
எதிரிய கூட லேசா தான் அடிப்போம் ...நம்ம ஆளா இருந்துகிட்டே எதிரி கொள்கைக்கு கொடி புடிச்சா அடி கன்னாபின்னான்னு விழும்..கவனமா இருங்க .
தான் கடைசி பதவியாக ஆகிடாம பார்த்துக்கங்க ..
தன் மேல நம்பிக்கை உள்ளவன் சாதிய நம்ப மாட்டான் .
சுய கழிவிரக்கம் ஒரு நாள் உங்களையே அழிச்சுடும். ..உங்க மாதிரி சிலர் சில்றத்தனமா செய்ற வேலை போற வரதுலாம் திமுக வ பேசுது .
கலைஞர் கூட இத்தனை வருடம் பழகியும் அந்த அறிவை ,விசாலத்தை கற்க முடிலன்னா என்ன பயன்?
சிவசங்கரன் சுந்தரராசன் : செருப்பால அடி இந்த நாயை
Jesu Charlie : யோவ் துரைமுருகன் என்ன எளவுயா இது
Raja Rajpriyan : சமூகநீதி, சமத்துவம், பாலின சமத்துவம் கொள்கை ரீதியாக பேசும் கழகத்தின் எம்.பியின் இந்த கருத்து அதிர்ச்சியை தருகிறது.
M Ravi : அதிர்ச்சியடைய எதுவும் இல்லை. வாரிசு என்ற தகுதி இல்லை என்றால் இவரை நமக்கு யார் என்றே தெரியாது.
சமூக நீதி - கண்காணிக்கக் குழு: முதல்வர் மு க ஸ்டாலின் !
மின்னம்பலம் : தமிழ்நாட்டில் சமூக நீதி செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்டோருக்குக் கல்வி, வேலை வாய்ப்பு, பதவி உயர்வு, பணி நியமனம் ஆகியவற்றில் சமூக நீதியின் அடிப்படையில் இட ஒதுக்கீட்டு வழங்கப்படுகின்றன.
ஆனால் இந்த சமூக நீதி நடவடிக்கைகள் சரிவர பின்பற்றுவதில்லை என புகார்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், சமூக நீதி செயல்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் முதல்வர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று(செப்டம்பர் 16) வெளியிட்டுள்ள அறிக்கையில், “ திராவிட இயக்கம் என்பது சாமானியர்கள் உயர்வதற்காக, சாமானியர்களால் சரித்திரம் படைக்கப்பட்ட, தொடர்ந்து படைக்கப்படும் உயரிய வரலாற்றைக் கொண்டது” என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டார்கள். இந்த வரலாறு இன்று நேற்றல்ல; நூற்றாண்டுத் தொடர்ச்சியைக் கொண்டது.
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணிக்குச் சொந்தமான இடங்களில் சோதனை- முக்கிய ஆவணங்கள் சிக்கின
சென்னை : கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வருமானத்துக்கு அதிகமாக அமைச்சர்கள் சொத்துக்களை குவித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து முன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருகிறார்கள்.
கடந்த ஜூலை மாதம் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வீட்டிலும், கடந்த மாதம் (ஆகஸ்டு) முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
தமிழ்நாட்டில் வியாபாரிகள் பெயரில் பயங்கரவாதிகள் ஊடுருவல்?- உளவுத்துறை எச்சரிக்கை
மாலைமலர் : காஷ்மீரை சேர்ந்த பயங்கரவாதிகள் தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் பதுங்கி இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறையினர் எச்சரித்துள்ளனர்.
சென்னை: ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியதை தொடர்ந்து இந்தியாவில் செயல்படும் சில தீவிரவாத இயக்கங்கள் தங்கள் நடவடிக்கைகளை துரிதப்படுத்தியுள்ளன.
மேலும் தசரா பண்டிகை, ஆயுத பூஜை, தீபாவளி ஆகியவை அடுத்தடுத்து வரும் நிலையில் இந்தியாவில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட தீவிரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக உளவுத்துறையும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து நாடு முழுவதும் தீவிரவாத அமைப்புகளின் நடவடிக்கைகளை ராணுவத்தினரும், போலீசாரும் கண்காணித்து வருகிறார்கள். பயங்கரவாதிகள் தேடுதல் வேட்டையையும் முடுக்கிவிட்டுள்ளனர்.
டெல்லியில் நேற்று முன்தினம் போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தினார்கள். இதில் 6 பயங்கரவாதிகள் பிடிபட்டனர். அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த ஜன் முகமது ஷேக், டெல்லியை சேர்ந்த ஒசாமா, உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூல்சந்த், முகமது அபுபக்கர், ஜீஷான் கமர், முகமது ஆமிர் ஜாவித் என்பது தெரிய வந்தது.
அட்லான்டிக் பாராதீவுகளில் ஒரே நாளில் 1400 டால்பின்கள் கொன்று குவிப்பு... செந்நிறமாக காட்சியளித்த பாரோ கடல்
மாலைமலர் : ஒரே நாளில் ஏராளமான டால்பின்கள் கொடூரமாக கொல்லப்பட்டதை சர்வதேச பாதுகாப்பு குழுக்கள் கண்டித்துள்ளன.
நார்வே அருகில் அட்லாண்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது பாரோ தீவுகள். இயற்கை எழில் கொஞ்சும் இந்த தீவுகளில் வேட்டையாடுவதற்கு எந்த தடையும் இல்லை. நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இந்த தீவுகளில் வசிக்கும் உள்ளூர் சமூகத்தினர், கடல்வாழ் விலங்கினங்களை குறிப்பாக திமிங்கிலம் மற்றும் டால்பின்களை வேட்டையாடுகின்றனர்.
கிரைண்ட் அழைக்கப்படும் இந்த வேட்டையில் திமிங்கலங்களும் டால்பின்களும் கொடூரமாக கொல்லப்படுகின்றன. இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள கடல்நீர் செந்நிறமாக காட்சியளிக்கும். இதற்கு உலகம் முழுவதிலும் இருந்து எதிர்ப்பு தெரிவிக்கப்படுகிறது. எனினும், இந்த கொடூரமான வேட்டை தொடர்கிறது.
இலங்கையில் தமிழ் அரசியல் கைதியை துப்பாக்கி முனையில் மிரட்டிய அமைச்சர் பதவி விலகல்
BBC : அநுராதபுரம் சிறைச்சாலையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியொருவரை அச்சுறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தை அடுத்து, எழுந்த கண்டனங்களினால் சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த பதவி விலகியுள்ளார்.
தான் தொடர்பில் ஊடகங்களில் வெளியாகும் செய்திகளை அடுத்து, அரசாங்கத்திற்கு அபகீர்த்தியை ஏற்படுத்தாத நோக்கில், இன்று முதல் தனது சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சு பொறுப்பை ராஜினாமா செய்வதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு அனுப்பியுள்ள பதவி விலகல் கடிதத்தில் லொஹான் ரத்வத்த தெரிவித்துள்ளார்.
சிறைச்சாலையில் நடந்தது என்ன?
அநுராதபுரம் சிறைச்சாலையில் தனது சகாக்களுடன் சென்ற சிறைச்சாலைகள் மற்றும் மறுசீரமைப்பு ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த, தமிழ் அரசியல் கைதியை முழந்தாளிடச் செய்து, அவரது தலையில் துப்பாக்கி வைத்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன.
கலைஞரின் புதிய சட்டப்பேரவை வளாகம் மீண்டும் புத்துயிர் பெறுகிறது
அம்மையார் ஜெயலலிதாவால் ஓமந்தூரார் அரசு மருத்துவ மனையாக மாற்றப்பட்ட இந்த தலைமை செயலகம் பல சிறப்புக்களை கொண்டது
அம்மையார் வழக்கம்போல் கலைஞர் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியால் இந்த நவீன புதுமைகள் பல கொண்ட தலைமை செயலக வளாகத்தை உருமாற்றினார்
கடந்த 2006-11-ம் ஆண்டு வரையில் தி.மு.க. ஆட்சி நடைபெற்றது.
கலைஞர் சட்டமன்ற உறுப்பினராக 50 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தார். இதையொட்டி சென்னை அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ரூ.629 கோடி மதிப்பீட்டில் புதிய சட்டசபை அரங்கம் மற்றும் தலைமை செயலக கட்டிடம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது.
கலைஞர் தலைமையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவராக இருந்த சோனியாகாந்தி முன்னிலையில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், இந்த கட்டிடத்தை கடந்த 2010-ம் ஆண்டு மார்ச் 13-ந்தேதி நேரில் திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் இருந்த தலைமை செயலக அலுவல்கள் மாற்றப்பட்டன. சட்டசபை கூட்டமும் இங்கு நடைபெற்று வந்தன.
தமிழியை தமிழ் பிராமி என்று கூறும் மோசடி- ஒரு வரலாற்று மோசடி..!!!
Sundar P : அதென்ன தமிழ் பிராமி எழுத்து ? - ஒரு வரலாற்று மோசடி..!!!
28-10-2012 ஆம் நாளிட்ட ஆங்கில ஏடான இந்து நாளிதழில் வந்திருந்த ஒரு கட்டுரை.
தலைப்பு : “POTSHRED WITH TAMIL-BRAHMI SCRIPT FOUND IN OMAN”.
அதாவது ஓமன் நாட்டில் கண்டெடுக்கப்பட்ட ஓட்டுச்சில்லில் தமிழ்-பிராமி எழுத்துக்கள் என்பது அதன் பொருள்.
இதைப்பற்றி இந்துவின் இணையதள இதழிலும் வந்தது. இந்தச் செய்தி உண்மையிலேயே தமிழின் தொன்மையையும் தமிழர்கள் கடல் கடந்து மிகப்பழங்காலத்திலேயே பல நாடுகளில் தங்கள் குடியேற்றத்தைச் செய்து கால் பதித்து கலாச்சாரத்தைப் பதித்திருக்கிறார்கள் என்பது ஒவ்வொரு தமிழனும் நெஞ்சு நிமிர்த்தி பெருமை கொள்ளத்தக்கது.
மேற்கூறிய செய்திகளில் தெரிய வருவது நம்மை அதிசயத்தில் உறைய வைக்கிறது. இப்படிப்பட்ட தமிழ் எழுத்துக்கள் தாங்கிய ஓட்டுச்சில்லுகள் மத்தியத் தரைக் கடலின் மேற்குப்பகுதியான எகிப்து முதல் கிழக்குப்பகுதியில் தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகள் வரை பல்வேறு இடங்களில் கிடைக்கின்றன என்றும் இதற்கான செய்திகள் அவ்வப்போது இந்து நளிதழ் உட்பட பல்வேறு மேலை நாட்டு செய்தித்தாள்களிலும் வெளிவந்திருக்கின்றன.
அடடா! “யாதும் ஊரே யாவரும் கேளிர்!” என்று தமிழன் சும்மா பாட்டாக மட்டும் பாடி வைக்கவில்லை.! ஓட்டிலும் எழுதி பல நாடுகளில் ஒட்டி வாழ்ந்திருக்கிறான் என்பது எவ்வளவு பெருமைபடத்தக்க செய்தி!
இப்போது கண்டுபிடிக்கப்பட்ட ஓட்டுச்சில்லு கோர் ரோரி (KHOR RORI) என்ற ஓமன் நாட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
புதன், 15 செப்டம்பர், 2021
நீட் தேர்வு: தனுஷ், கனிமொழியை தொடர்ந்து மேலும் ஒரு மாணவி உயிரிழப்பு!
நக்கீரன் " இந்தியா முழுவதும் நீட் தேர்வு கடந்த 12ஆம் தேதி நடைபெற்றது.
சுமார் 16 லட்சம் மாணவர்கள் இந்தியா முழுவதும் இந்த தேர்வை எழுதினார்கள். தமிழ்நாட்டில் சுமார் 1.10 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை 18 நகரங்களில் அமைக்கப்பட்டிருந்த 224 மையங்களில் எழுதினார்கள். தேர்வுக்கு முந்தைய தினம் நீட் தேர்வு அச்சத்தின் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்துகொண்டார்.
அந்த அதிர்ச்சி நீங்குவதற்குள் 14ஆம் தேதி கனிமொழி என்ற மாணவி தேர்வு எழுதிவிட்டு வந்து தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
நீட் தேர்வு தொடர்பாக அடுத்தடுத்து உயிரிழப்புகள் நடைபெறுவதைக் கருத்தில்கொண்டு நீட் தேர்வெழுதிய அனைவருக்கும் கவுன்சிலிங் கொடுக்க தமிழ்நாடு அரசின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு, இன்று (15.09.2021) காலை முதல் அதற்கான பணிகள் தொடங்கியுள்ளன.
உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க தனித்துப் போட்டி! அதிமுக - பாமக இடையே வார்த்தைப் போர் துவங்கியுள்ளது
ஆப்கானிஸ்தான்: வண்ண ஆடை அணிந்து தாலிபனை எதிர்க்கும் ஆப்கன் பெண்கள் – வைரலாகும் ஹேஷ்டேக் #AfghanistanCulture
BBC : ஆடை வழி தாலிபன்களை எதிர்க்கும் பஹர் ஜலாலி
ஆப்கானிஸ்தானில் பெண்களின் ஆடை கட்டுப்பாடு குறித்து தாலிபன் அறிவித்த பிறகும், அதை எதிர்க்கும் விதத்தில் சில ஆப்கானிய பெண்கள் இணையத்தில் ஒரு போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.
DoNotTouchMyClothes, AfghanistanCulture என்கிற ஹேஷ்டேகுகளை பயன்படுத்தி அவர்கள் தங்களின் வண்ணமயமான பாரம்பரிய உடைகளின் தோன்றும் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.
இந்த போராட்டத்தை தொடங்கிய பஹர் ஜலாலியிடம் பிபிசி செய்தியாளர் சொடாபா ஹைதரே பேசினார்.
“கூகுளுக்குச் சென்று ‘ஆப்கன் பாரம்பரிய உடை’ என்று தேடிப் பாருங்கள், பல வண்ண பாரம்பரிய உடைகளைக் கண்டு வியந்து போவீர்கள். ஒவ்வொன்றும் மிகுந்த கை வேலைப்பாடுகள், அலங்காரங்கள், சிறு கண்ணாடிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தனித்துவம் வாய்ந்த ஆடைகளாக இருக்கும்,” என்கிறார் அவர்.
நீட் வினாத்தாள் ரூ.35 லட்சத்துக்கு விற்பனை...ஜெய்ப்பூரில் 8 பேர் கைது..!
tamil.asianetnews.co : நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீட் என்பது துரோகமும் - சூழ்ச்சியும் மட்டுமே என்பதற்கு புதிய உதாரணம், அதன் வினாத்தாள் 35 லட்சத்துக்கு விற்பனையானதேயாகும். ஜெய்ப்பூரில் நீட் வினாத்தாள் தேர்வுக்கு முன்பே கசிந்த விவகாரத்தில் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவு தேர்வு செப்டம்பர் 12ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக ஜெய்பூரில் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெய்பூரில் ராஜஸ்தான் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இன்ஜினியரிங் அண்ட் டெக்னாலஜி ஒரு நீட் தேர்வு மையமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அங்கு மதியம் 2 மணி முதல் 5 மணி வரை தேர்வு நடைபெற்றது. அந்த மையத்தில் 4 காவலர்கள் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இங்குதான் தானேஸ்வரி என்ற அந்த மாணவி தேர்வு எழுதச் சென்றிருந்தார்.
வானதி சீனிவாசன் மகன் ஆதர்ஷ் சென்ற கார் தலைகீழாகக் கவிழ்ந்து விபத்து!
விகடன் -நவீன் இளங்கோவன் -க .தனசேகரன் : சேலம் பட்டர்ஃப்ளை மேம்பாலத்தில் அதிவேகமாக வந்த கார், நிலைதடுமாறி தலைகுப்புறக் கவிழ்ந்திருக்கிறது.
கோவை தெற்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசனின் மகன் ஆதர்ஷ் (22). இவர் நேற்றிரவு வானதி சீனிவாசனை ரயில் மூலமாக சென்னைக்கு அனுப்பிவைத்துவிட்டு, கோவையிலிருந்து சென்னைக்கு மாருதி பலீனோ காரில் கிளம்பியிருக்கிறார்.
இரவு 11:30 மணியளவில் சேலம் கொண்டலாம்பட்டி பகுதியிலுள்ள பட்டர்ஃபிளை மேம்பாலத்தில் வந்தபோது, ஆதர்ஷ் ஓட்டிவந்த கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தின் தடுப்புச் சுவர் மீது மோதியிருக்கிறது.
இதில் கார் தலைகீழாகக் கவிழ்ந்து, சிறிது தூரத்துக்கு இழுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
உலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு.. அமெரிக்காவில் Dismantling Global Hindutva’ face threates from Hindutva groups in the US and India
ஹார்வர்டு உட்பட 50 மேற்பட்ட உலக புகழ் பெற்ற பல்கலை கழக அறிஞர்கள் கலந்து கொண்ட இந்த காணொளி மாநாடு உலகை திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.
இந்துத்வா என்றால் என்ன என்று உலகுக்கு புரிதல் உண்டாகும் நோக்கத்தில் இம்மாநாடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்துத்வாவின் முக்கிய அம்சமே ஜாதீய கொடுமைதான் என்பதை இம்மாநாடு மேற்கு உலகிற்கு தெளிவு படுத்தியள்ளது
இதுவரை காலமும் சமூக ஊடங்களிலும் சிறு சிறு கூட்டங்களிலும் முன்வைக்கப்பட்ட இந்துவாவின் கொடுமையான தன்மையை இம்மாநாடு பெரிய அளவில் உலக அரங்கில் கொண்டு போய் சேர்த்திருக்கிறது
வழமை போல இம்மாநாடு இந்துக்களின் நற்பெயரையும் இந்தியாவின் புகழுக்கு களங்கத்தை தந்துள்ளதாக இந்தியாவிலும் அமெரிக்காவிலும் உள்ள சங்கிகள் உரத்த குரலில் கூக்குரல் இடுகிறார்கள்.
உலக அரங்கில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் பெறும் முக்கியத்துவம்,
ஜாதிக்கு எதிரான போராட்டங்களுக்கு கிடைப்பதில்லை!
இந்துத்வா பற்றிய புரிதல் உலக அரங்கில் இதுவரை ஏற்படவில்லை என்பதே இதன் காரணமாகும்
தற்போது நடந்து முடிந்துள்ள உலக இந்துத்வா எதிர்ப்பு மாநாடு இந்த வகையில் பெரு வெற்றி பெற்றுள்ளதாக கருதப்படுகிறது
இம்மாநாடு பற்றி இந்துத்வா சக்திகள் கதறுவதை பார்க்கும்போது இம்மாநாடு அதன் நோக்கத்தை பெருமளவு பூர்த்தி செய்துள்ளதாகவே கருதுகிறேன் கருதுகிறேன் Al Jazeera. : US academic conference on ‘Hindutva’ targeted by Hindu groups
Dismantling Global Hindutva’ organisers and speakers face harassment and intimidation by Hindu right-wing groups in the US and India.
Al Jazeera] - Raqib Hameed Naik : Boston, US – For the first time in the United States, scholars and academics from various American and international universities have come together to organise a major online conference on Hindutva.
செவ்வாய், 14 செப்டம்பர், 2021
இலங்கை தமிழ் பெண் கம்சியா குணரத்தினம் நோர்வே நாடாளுமன்ற MP தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார்
kamzy gunaratnam |
Losliya |
Sivachandran Sivagnanam : சமூகவியல் படிக்கும் மாணவர்கள் யாரும் Losliya effect என்ற ஒரு தியறியை உருவாக்கி உங்கள் PhD ஆய்வாக செய்யலாம்.
விளையாட்டு இல்லை உண்மையாகவே சொல்கிறேன்.
இது எமது சமூகத்தில் இருக்கும் ஒரு அசிங்கமான பக்கம்.
சிம்பிள் தியரி : எமக்குத் தெரிந்த ஒருத்தன் உருப்படக்கூடாது. அதுவும் பெண் என்றால் வேண்டவே வேண்டாம்.
ஏற்கனவே இதுபற்றி ஒரு தடவை எழுதி இருந்தேன். இப்போது இந்த பெண்ணின் படம் வெளிவரப்போகிறது என்றதும் பழையபடி திரும்பவும், இதெல்லாம் ஒரு மூஞ்சியா, இந்த மூஞ்சிக்கு ஹீரோயின் வேடம் கேட்குதா என மீம்ஸ் போட தொடங்கிவிட்டார்கள்.
இதில் மிகவும் டேஞ்சரான ஆட்கள், "இனத்துக்காக உயிரையே கொடுத்த வீரப்பெண்கள்" என தொடங்கிற ஆட்கள்.
ஒரு இனத்தில் பிறந்து விட்டாள் என்பதற்காக எந்தவொரு பெண்ணும் அந்த இனத்தில் இருக்கும் ஒவ்வொரு ஆணும் நினைப்பது போல்தான் இருக்க வேண்டும் என நினைப்பது எவ்வளவு மோசமான, ஆபத்தான மனநிலை.
அண்மையில் சில பெண்கள் பற்றி வெளிவந்துகொண்டிருக்கும் மீம்ஸ்கள் தமிழ் சமூகத்தில் பெண்ணாக பிறப்பது அவ்வளவு பாவமான செயலா என எண்ணத் தோன்றுகின்றது.
இதில் ஆச்சரியமான விடயம், ஆண்களுக்கு நிகராக இந்த செயலில் பெண்களும் ஈடுபடுகிறார்கள்.
பட்டியலினத்தவர் படுகொலைகள் தூத்துக்குடி, மதுரையில் அதிகம் - அதிர்ச்சி தரும் ஆய்வு
ஆ. விஜயானந்த் - பிபிசி தமிழுக்காக : அரக்கோணம் சோகனூரில் தலித் இளைஞர்களை படுகொலை செய்த சாதி வெறியர்களை கைது செய்யக்கோரி சென்னையில் கடந்த ஏப்ரல் மாதம் நடந்த தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினரின் போராட்டம்.
தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டுகளில் பட்டியலினத்தைச் சேர்ந்த 300 பேர் கொலை செய்யப்பட்டுள்ளதாக 'எவிடென்ஸ்' என்ற அமைப்பினர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. `இந்த கொலைகளில் 13 சம்பவங்களுக்கு மட்டுமே தண்டனை கிடைத்துள்ளது,' என்கிறார் அந்த அமைப்பைச் சேர்ந்த கதிர்.
தமிழ்நாட்டில் கடந்த ஜனவரி 2016 முதல் டிசம்பர் 2020 வரையில் பட்டியல் சாதியினர், பட்டியல் பழங்குடியினர் ஆகியோர் கொல்லப்பட்டது தொடர்பாக எவிடன்ஸ் அமைப்பினர் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.
தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இதுதொடர்பான தகவல் பெறப்பட்டிருக்கிறது. கடந்த 2021 ஜனவரி மாதத்தில் இருந்து இந்தத் தகவல்களை எவிடென்ஸ் அமைப்பு திரட்டி வந்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 33 மாவட்டங்களிலிருந்து எஸ்.சி,
எஸ்.டி கொலைகள் குறித்த தகவல் பெறப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் மற்றுமொரு NEET தேர்வு தற்கொலை: பள்ளியில் முதலிடம் பெற்ற அரியலூர் மாணவி கனிமொழி மரணம்
BBC : நீட் தேர்வு சரியாக எழுதவில்லையோ என்ற அச்சத்தில் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கனிமொழி என்ற மாணவி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இவர் 12ஆம் வகுப்பில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்றிருந்தார்.
அரியலூர் சாத்தம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ஜெயலட்சுமி - கருணாநிதி தம்பதியினர். இருவரும் வழக்கறிஞர்களாகப் பணியாற்றிவருகின்றனர்.
இவர்களுக்கு கனிமொழி, கயல்விழி என இரண்டு மகள்கள் உள்ளனர். இவர்கள் அரியலூரில் உள்ள
துளாரங்குறிச்சியில் வசித்துவந்தனர்.
முதல் மகள் கயல்விழி பள்ளிப்படிப்பை முடித்து செவிலியருக்கான படிப்பை படித்து வருகிறார். இரண்டாவது மகள் கனிமொழி ஜெயங்கொண்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்புவரை படித்தார். அதற்குப் பிறகு நாமக்கல்லில் உள்ள க்ரீன் கார்டன் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளியில் படித்து, 12ஆம் வகுப்புத் தேர்வில் 600க்கு 562.28 மதிப்பெண்களைப் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார்.
ஆப்கன்., - பாக்., - இலங்கை போதை பொருள் பாதை: தமிழகம், கேரளாவை அச்சுறுத்தும் புதிய பிரச்னை
dhinalar : ''பாகிஸ்தானில் இருந்து இலங்கை வழியாக இந்தியாவுக்கு போதை பொருள் கடத்தப்படுகிறது. அதனால், தமிழகம், கேரளாவில் தீவிரவாதம் தலையெடுக்க வாய்ப்பு உள்ளது,'' என, எச்சரிக்கை மணி அடிக்கிறார், மேஜர் மதன்குமார்.வர் கூறியதாவது:சர்வதேச கடல் பகுதியில் இருந்து இலங்கை நோக்கி வந்த மீன்பிடி கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்து 5 கி.மீ., தொலைவில் இலங்கை கடற்படையிடம் பிடிபட்டது. அதில் 290 கிலோ ஹெராயின் இருந்தது. மீன் பிடி கப்பலில் இருந்தவர்கள், 'பாகிஸ்தான் மக்ரான் துறைமுகத்தில் இருந்து ஒரு கப்பல், ஹெராயின் ஏற்றிக் கொண்டு வந்துள்ளது. 'இலங்கையில் இருந்து 1,370 கி.மீ., தொலைவில் சர்வதேச கடல் எல்லையில் அந்த கப்பல் நிற்கிறது. அந்த கப்பலில் இருந்து தான், 290 கிலோ ஹெராயினை, கொழும்பு துறைமுகத்துக்கு எடுத்து செல்கிறோம்' என, கூறியுள்ளனர்.
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு (டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு, கே.ஆர்.என்.ராஜேஷ்குமார்)
மாலைமலர் : மேல்சபை தேர்தலில் வேறு கட்சிகள் போட்டியிட வாய்ப்பு இல்லை என்பதால் தி.மு.க. வேட்பாளர்கள் இருவரும் ஏகமனதாக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
மேல்சபை எம்.பி. தேர்தல்- தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிப்பு
பாராளுமன்ற மேல்சபையில் இரண்டு எம்.பி. இடங்கள் காலியாக உள்ளன.
அந்த இடங்களுக்கு வருகிற 4-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது.
மனுதாக்கல் செய்ய 22-ந்தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி இருக்கும் பட்சத்தில் அக்டோபர் 4-ந்தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழக சட்டசபையில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கை அடிப்படையில் அந்த 2 மேல்சபை எம்.பி. இடங்களையும் தி.மு.க. எளிதாக பெறும் என்பது ஏற்கனவே உறுதியானது.
அண்ணா பிறந்த நாளில் 700 கைதிகள் விடுதலை ! எதிர்க்கும் தமிழ்நாடு பாஜக
மின்னம்பலம் : தமிழ்நாட்டில் 700 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்கும் முடிவு ஆபத்தானது. அது தமிழ்நாட்டுக்கு மட்டுமல்ல; இந்தியாவுக்கே ஆபத்து என்று பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் பாஜக கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் நேற்று (செப்டம்பர் 13) நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் பாஜக தமிழ்நாடு பொறுப்பாளர் சி.டி.ரவி மற்றும் ஹெச்.ராஜா, ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சி.டி.ரவி, “சிறந்த முறையில் பிரதமர் நரேந்திர மோடி செயலாற்றி வருகிறார்.
நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்கிறார். கடந்த 20 ஆண்டுகளில் அவர் மீது எந்தவொரு லஞ்ச புகாரும் வரவில்லை. பிரதமர் மோடி மன் கி பாத் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் மூலம் மக்களிடம் நேரடி தொடர்பில் உள்ளார்.
திமுகவின் ஹனிமூன் முடிந்துவிட்டது. அவர்களின் எண்ண ஓட்டம் எப்போதும் ஒன்றிய அரசுக்கு எதிராக செயல்படுவதுதான். ஆனால், ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்கு எத்தனையோ நல்ல திட்டங்களை செய்து கொடுத்துள்ளது. ஆனால், திமுக அரசு ஒன்றிய அரசுக்கும், மோடிக்கும் எதிராக செயல்படுகிறது. அவர்களுக்கு நேர்மறையாக சிந்திக்க தெரியவில்லை. பாஜக எப்போதும் தமிழ்நாடு மக்களுடனும், தமிழ்நாட்டு வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருக்கும்.
பேராசிரியர் சுப வீரபாண்டியன் மாநிலங்கள் அவை உறுப்பினராகிறார்?
tamil.indianexpress.com : திமுகவில் உறுப்பினராக இல்லாவிட்டாலும் திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்க கொள்கைகளை உறத்து முழங்கிவரும் சுப.வீ என்றழைக்கப்படும் சுப.வீரபாண்டியன் பெயரும் ராஜ்ய சபா எம்.பி ரேஸில் இடம்பெற்றுள்ளது என்று திமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாட்டில் இருந்து காலியாக உள்ள 2 ராஜ்ய சபா எம்.பி பதவிகள் திமுகவுக்கே கிடைக்க வாய்ப்புள்ளதால் திமுகவில் முன்னணி நிர்வாகிகல் இடையே ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு உச்ச கட்ட போட்டி நிலவுகிறது.
இதில் திமுகவில் இல்லாத ஆனால், திமுகவுக்கு ஆதரவாக திராவிட இயக்கத்தின் கொள்கைகளை தொடர்ந்து உறத்து முழங்கி வரும் சுப.வீரபாண்டியன் பெயரும் பேசப்பட்டு வருகிறது.
லாபம் - எம்எல்ஏ ஆபிஸில் பணம் எண்ணும் இயந்திரம்... இதுதான் பாஜக... அண்ணாமலைக்கு திமுக எம்.பி பதிலடி.
தருமபுரியில் செந்தில்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “தருமபுரியில் பெண் குழந்தைகள் பருவம் அடைந்த பிறகு பள்ளிக்கு செல்வது நிறுத்தப்படுவது அதிகரிக்க பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லாதது காரணம்.
எனவே, இதைத் தடுக்க நவீன வசதிகளுடன் கூடிய கழிப்பிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் பள்ளிக் கல்வியைத் தொடர இதைச் செய்திருக்கிறோம்.
திங்கள், 13 செப்டம்பர், 2021
நீட் விலக்கு தீர்மானத்தை சட்டமன்றத்தில் முன்மொழிந்த முதல்வர் மு . க.ஸ்டாலின்
மின்னம்பலம் : ‘பிளஸ் டூ அடிப்படையில் மருத்துவ சேர்க்கை நடைபெறும்’ என்று நீட் தேர்வுக்கு எதிராக இன்று (செப்டம்பர் 13) சட்டப்பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உட்பட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நீட் தேர்வால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவராக வேண்டுமென்ற கனவு நிறைவேறுவதில்லை. இதனால் கடந்த காலங்களில் தமிழகத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் தற்கொலை செய்து தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர். நேற்றும் கூட சேலத்தைச் சேர்ந்த மாணவர் தனுஷ் தற்கொலை செய்துகொண்டார்.
இந்நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் இன்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் நேற்று தெரிவித்தார். ஒன்றிய அரசு நமது குரலுக்கு செவி சாய்க்க வில்லை எனில், அனைத்து மாநில முதல்வர்களின் ஆதரவை திரட்டி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
மெகா தடுப்பூசி முகாம் ரவுண்ட்அப்: இலக்கைத் தாண்டிய கோவை, திருச்சியின் ஊராட்சி 100%, மதுரை 5-ம் இடம்!
இலக்கை தாண்டிய கோவை!
``மெகா தடுப்பூசி முகாமில் கோவை மாவட்டத்தில் 1,50,000 பேருக்குத் தடுப்பூசி போட திட்டமிட்டோம். ஆனால், நேற்று ஒரே நாளில் 1,51,685 பேருக்குத் தடுப்பூசி செலுத்தி இலக்கை கடந்துவிட்டோம்'' என்று கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், `அதுக்கும் மேல...’ என ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு... விடுபட்ட 9 மாவட்டங்களுக்கும் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு
மாலைமலர் : சட்டமன்ற கூட்டம் நடந்ததால் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு தள்ளிப் போனது.
சென்னை: தமிழகத்தில் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வருகிறது.
இந்த மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த தேர்தலை நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அனைத்து கட்சி பிரதிநிதிகளுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆலோசனை நடத்தினார்.
நடிகர் வடிவேலுவின் பிரச்சினையை தீர்த்து வைத்த லைகா CEO தமிழ் குமரன்! பாமக ஜி கே மணியின் மகன்!
Rayar A - Oneindia Tamil : சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த 4 ஆண்டுகளாக ஒதுங்கி இருந்த நகைச்சுவை நடிகர் வைகைப்புயல் வடிவேலு நாய் சேகர் என்னும் புதிய படம் மூலம் தமிழ் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கிறார்.
வடிவேலு இன்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில் தனது புதிய படம் குறித்து நடிகர் வடிவேலு சென்னை தியாகராயநகரில் நிருபர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். மக்களின் ஆசிர்வாதம், வாழ்த்துக்கள் எனக்கு கிடைத்துள்ளது. திரையுலகத்தில் இருந்தும் எனக்கு வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். இந்த அளவுக்கு இந்த பிரச்சினையை முடித்து வைத்தது தமிழ் குமரன்தான். பாமக ஜி.கே.மணியின் தவப்புதல்வன்தான் இவர்.
ஞாயிறு, 12 செப்டம்பர், 2021
நகைக்கடன் தள்ளுபடி; முதல்வர் ஸ்டாலினின் ஜாக்பாட் அறிவிப்பு!
Mageshbabu Jayaram | Samayam Tamil : கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான தமிழக முதல்வரின் அறிவிப்பு குறித்து முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்
திமுக தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதி எப்போது நிறைவேற்றப்படும் என கேள்வி
சட்டமன்ற கூட்டத்தொடரில் கடைசி நாளான நாளை அறிவிப்பு வெளியாக வாய்ப்பு
தமிழகத்தில் கூட்டுறவுத் துறையின் கீழ் செயல்படும் கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகியவை பணம் மற்றும் நகைக்கு மிகவும் பாதுகாப்பான சேவையை அளித்து வருகின்றன. அதுமட்டுமின்றி குறைந்த வட்டியில் கடன் வழங்குவதால் கிராமப்புற, நகர்ப்புற மக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் உள்ளிட்டோர் பெரிய அளவில் பயனடைந்து வருகின்றனர். இந்த சூழலில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக திமுக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில், 5 சவரனுக்கு உட்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஆர்.என்.ரவியை அரசியல் கட்சிகள் எதிர்ப்பது ஏன்? புதிய ஆளுநர் நியமனத்தில் பா.ஜ.கவின் அரசியல் என்ன?
` நாகாலாந்தில் பா.ஜ.கவின் கூட்டணிக் கட்சிக்கே குடைச்சல் கொடுத்த ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டிலும் அதே வேலையைத்தான் செய்வார்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விமர்சிக்கிறது. ஆர்.என்.ரவியின் நியமனம் சர்ச்சையாவது ஏன்?
தமிழ்நாட்டின் ஆளுநராக கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பன்வாரிவால் புரோஹித் நியமிக்கப்பட்டார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஆளுநராக நியமிக்கப்பட்ட பன்வாரிலால், ஆய்வுக்கூட்டம் என்ற பெயரில் கோவை, கடலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களுக்குப் பயணம் செய்தார்.
தலைவி – கங்கனா ரணாவத் நடித்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்று படம் எப்படி உள்ளது?
முரளிதரன் காசி விஸ்வநாதன் - பிபிசி தமிழ் : நடிகர்கள்: கங்கனா ரணாவத், அரவிந்த் சுவாமி, சமுத்திரக்கனி, நாசர், மதுபாலா, தம்பி ராமைய்யா; சண்முகராஜா, பூர்ணா, ரெஜினா கஸாண்ட்ரா; கதை: கே.வி. விஜயேந்திர பிரசாத்; ஒளிப்பதிவு: விஷால் விட்டல்; இசை: ஜி.வி. பிரகாஷ்குமார்; இயக்கம்: ஏ.எல். விஜய்.
மிகப் பெரிய ஆளுமைகளின் வாழ்வை திரைப்படங்களாக எடுப்பது மிகச் சவாலான காரியம். அதனால், பெரும்பாலான bio-Pic திரைப்படங்கள், சம்பந்தப்பட்ட ஆளுமைகளை விதந்தோதும் சம்பவக் கோர்வைகளாகவே முடிந்துவிடுகின்றன. தலைவியும் அந்த வரிசையில் வரும் ஒரு திரைப்படம்தான்.
மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கையின் ஒரு பகுதியை மட்டும் காட்சிப்படுத்துகிறது ‘தலைவி’. குடும்பம் மிக சிரமப்படும் ஒரு காலகட்டத்தில், சினிமாவில் நடிக்கவரும் ஜெயலலிதா, மெல்லமெல்ல எம்.ஜி.ஆருடன் நெருக்கமாகிறார். திரைத்துறையின் உச்சத்திற்கு வருகிறார்.
நீட் தேர்வு அச்சம் காரணமாக மாணவர் தற்கொலை... மாணவனின் உடலுக்கு உதயநிதி ஸ்டாலின் நேரில் அஞ்சலி!
நக்கீரன் செய்திப்பிரிவு - பி.அசோக்குமார் : தமிழ்நாட்டில் பல மாணவர்களின் உயிர்களைக் குடித்த தேர்வு நீட். எந்த மாணவரும் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று அரசியல் கட்சித் தலைவர்களும், சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்த தி.மு.க. அரசு நாளை சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளது. இந்த நிலையில் இன்று மதியம் நாடு முழுவதும் நீட் தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது.
மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் ஆல்-பாஸ்.. தமிழக அரசு அறிவிப்பு!
Rayar - Oneindia Tamil : சென்னை: 10-ம் வகுப்பு, 11 ஆம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்து இருந்த மாற்றுத்திறனாளி தனித்தேர்வர்கள் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சிறந்த எஸ்யூவி சொந்தமாக வைத்திருக்க உங்களுக்கோர் வாய்ப்பு.. இங்கே கிளிக் செய்யுங்கள்!
தமிழ்நாட்டில் கொரோனா தற்போது கொஞ்சம் ஓய்வு எடுத்தாலும், ஏப்ரல், மே மாதங்களில் கொரோனா படுத்தியபாடை தமிழக மக்கள் அவ்வளவு எளிதில் மறந்து விட மாட்டார்கள். அந்த நேரத்தில் தினமும் 30,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகின.
கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை, படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்பட்டன. நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் தவித்தனர். அதன்பின்னர் நிலைமை ஓரளவு சீரடைந்தது.
நாளை நீட் தேர்வு நடக்கும் நிலையில்..நாளை மறுதினம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்நாளை நீட் தேர்வு நடக்கும் நிலையில்..நாளை மறுதினம் நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டசபையில் தீர்மானம்