சனி, 16 ஏப்ரல், 2016

வீரலக்ஷ்மியின்( பம்பரம்) வீரதீர பராக்கிரம்...வாடகையும் தரமாட்டேன்...வீட்டையும் காலி செய்யமாட்டேன்..

வேட்பாளர் தம்பட்டம் மதிமுக கூட்டணியில் மதிமுகவின் பம்பரம் சின்னத்தில் நிற்பவர்தான் தமிழர் முன்னேற்றப் படை வீரலட்சுமி. இவரது தமிழர் முன்னேற்றப்படையில் பொதுச் செயலாளராக இருப்பவர் கணேசன். இவர் பூந்தமல்லி, நசரத்பேட்டை, ஜெயபிரகாஷ் நாராயணன் தெரு, எண் 740 என்ற வீட்டில் குடியிருந்து வருகிறார். இது வாடகை வீடு.
ஆறு மாதங்களுக்கு முன், இவரது வீட்டின் உரிமையாளர் வீரலட்சுமியை வீட்டை காலி செய்யுமாறு கூறியுள்ளார். நான் தமிழகமே அஞ்சி நடுங்கும் ஒரு இயக்கத்தின் தலைவி. என்னையா வீட்டை காலி செய்யச் சொல்கிறாய் என்று வீரலட்சுமியும், கணேசனும் சேர்ந்து, வீட்டு உரிமையாளரை அடித்துள்ளனர். அது நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாராகியுள்ளது. நசரேத்பேட்டை காவல் நிலையத்தில் ஆய்வாளர் அலெக்சாண்டர், சட்டப்படி நியாகமாக நடவடிக்கை எடுத்து, கணேசன், வீரலட்சுமி  ஆகிய இருவரையும் எச்சரிக்கை செய்துள்ளார்.

மதிமாறன்: அனல்காற்று ....தெரு கூட்டுபவர்களுக்கு சம்பளத்துடன் விடுமுறை...கர்பிணிகள்...

இன்று சென்னையில் அனல் காற்று வீசும். பகல் 12 லிருந்து 3 வரை வெளியில் செல்லாதீர்கள். பாதிப்பை ஏற்படுத்தும். தவிர்க்க முடியாதபோது பாதுகாப்பாகச் செல்லுங்கள்’ என்று இந்திய வானிலை ஆய்வுத்துறை அறிவித்திருக்கிறது.
அரசும் அதைப் பரிந்துரைத்து மக்களுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறது.
நாமும் வேலையிருந்தாலும் அந்த நேரத்தில் வெளியில் போவதை தவிர்க்க விரும்புகிறோம். தவிர்த்தும் விடுகிறோம். நம் குடும்ப உறுப்பினர்களையும் அக்கறையோடு பாதுகாக்கிறோம். இது முறையானதுதான்.
ஆனால், கல்குவாரியில், சாலைபணிகளில் வேலை செய்யும் தொழிலாளர்கள் இந்த வெப்பத்தை தவிர்க்கவும் முடியாது, தப்பிக்கவும் முடியாது.
குறிப்பாகப் பெண்கள், அதிலும் நிறைமாத கர்பிணிகள், குழந்தைப் பெற்று 10 நாட்கள் கூட ஆகாமல் வேலைக்கு வந்திருக்கும் பெண்களின் துயரம் கொடூரம்.

நீதித்துறையின் செயல்பாடுகள் சரியாக இல்லை ! குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி அதிருப்தி

Judicial activism should not lead to the dilution of separation of powers, Mukherjee said.
போபால் நகரில் தேசிய நீதித்துறை அகாடமி வளாகத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுக்காக அமைக்கப்பட்ட மாளிகையை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று திறந்து வைத்து உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், “இந்திய அரசியல் சட்டம் அரசின் துறை ஒவ்வொன்றிக்கும் தனித்தனியாக வழங்கியுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப, அவைகளின் எல்லைக்கு உட்பட்டு செயல்பட வேண்டும். மற்ற அரசியல் அமைப்புகளின் செயல்பாடுகளில் தலையிடக் கூடாது. நீதித்துறையின் செயல்பாடுகள், அரசியலமைப்பு வழங்கும் அதிகாரப்பகிர்வை நீர்த்துப்போக செய்யக்கூடாது. இந்திய அரசியலமைப்பில் நிர்வாகம், மக்களின் பிரதிநிதிகள் கொண்ட அமைப்புகள், நீதிமன்றங்கள் ஆகிய மூன்றிற்கும் இடையேயான சமநிலை அனைத்து சூழ்நிலைகளிலும் பராமரிக்கப்பட வேண்டும்.
 நீதிமன்றங்களில் ஏராளமான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இங்கு பார்ப்பானுக்கும் பணக்காரனுக்கும் கிடைக்கிற நீதியே வேற வேற வேற...வேற .பக்கத்திலேயே  நிக்குதே தத்து... 

பழ.கருப்பையா: பணத்தால் நான்: பணத்தோடு நான்: பணத்திற்காகத்தான் நான்..300 ரூபாய்,பிரியாணி.= கைதட்ட வேண்டும்.

விருத்தாசலத்தில் நடக்கும் பொதுக்கூட்டத்திற்கு செல்கிறார் ஜெயலலிதா. இரண்டு பேர் சாகின்றனர்; 17 பேர் மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்படுகின்றனர். இது, பொதுக் கூட்டத்திற்கு சென்றவர்களின் நிலை. அது பொதுக்கூட்டம் தானே, போர்க்களம் அல்லவே! பின் ஏன் சாவுகள் நிகழ வேண்டும்?
ஈ.வெ.ரா., அண்ணாதுரை, முத்துராமலிங்க தேவர், ராஜாஜி போன்ற தலைவர்களின் சிந்தனை திறன் மிக்க பேச்சைக் கேட்க, மக்கள் கடலெனத் திரண்டனர். அவர்களின் பேச்சுகள் நிகழும் மைதானங்கள், மாலை நேர கல்லுாரிகளாகவே மாறின. அந்த வகையில், பழைய தலைமுறையின் கருத்து வளமும், சொல்வளமும் மிக்க பேச்சாளர்களில் இன்று எஞ்சி இருக்கும் இருவர், கருணாநிதியும், அன்பழகனும் தான்.
ஜெயலலிதா, எழுதி தரப்பட்டதை படிப்பவர். பேச்சு, பெரிய பெரிய எழுத்துக்களில் அச்சடித்து கொடுக்கப்பட்டிருக்கும். 'நான் செய்தேன்; நான் ஆணையிட்டேன்; எனது தலைமையிலான அரசு' என்றெல்லாம் சொல்லும்போது, குரலை உயர்த்தி இடைவெளி அளிப்பார். அப்போதெல்லாம் கைதட்ட வேண்டும். எல்லாமே ஒருவகை ஏற்பாடு தான்.

வீணை. எஸ்.பாலச்சந்தரே என் குரு: இயக்குநர் மகேந்திரன் அரிய தகவல்கள்

இயக்குநர் மகேந்திரன் தமிழ் சினிமாவில் புதுமைகளைப் புகுத்தியவர்களில் குறிப்பிடத்தக்கவரான இயக்குநர் வீணை எஸ்.பாலச்சந்தர் குறித்து இயக்குநர் மகேந்திரன் பல அரிய தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். வீணை எஸ்.பாலசந்தரின் நினைவைப் போற்றும் விழா புதன்கிழமை சென்னை - உட்லேண்ட்ஸ் திரையரங்கில் நடந்தது. புகழ்பெற்ற திரைப்பட இயக்குநராகவும் புகழ்பெற்ற வீணை வித்வானாகவும் அறியப்பட்டவர் வீணை எஸ்.பாலசந்தர். ஒவ்வோர் ஆண்டும் இவரது நினைவைப் போற்றும் விழாவை வீணை எஸ்.பாலசந்தர் அறக்கட்டளை நடத்தும். > இந்தாண்டு விழாவின்போது, திரைப்படத் துறையில் எஸ்.பாலசந்தர் நிகழ்த்தியிருக்கும் பல புதுமைகளை நினைவுகூரும் விதமாக நிகழ்ச்சியை இயக்குநர் மணிரத்னம் ஒருங்கிணைத்திருந்தார். இயக்குநர்கள் பார்த்திபன், மிஷ்கின் உள்பட பல திரைப்பட பிரமுகர்கள் விழாவுக்கு உறுதுணையாக இருந்தனர்.

கோவில்பட்டி....வைகோ போட்டியிடுகிறார்..மதிமுக தொகுதிகள் விபரம்...

சென்னை : மதிமுக வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டார். கோவில்பட்டி தொகுதியில் வைகோ போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேமுதிக- மக்கள் நலக் கூட்டணியில் மதிமுகவுக்கு 29 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இத்தொகுதிகளுக்கான விருப்ப மனுக்கள் நேற்று பெறப்பட்டு நேற்று மாலை முதல் இரவு வரை நேர்காணலும் நடத்தப்பட்டது.  இதனைத் தொடர்ந்து சென்னை அண்ணாநகரில் இன்று காலையில் தேர்தல் பிரசாரத்தை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடங்கினார். அப்போது மதிமுக போட்டியிடும் 29 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலையும் வைகோ வெளியிட்டார். மதிமுக வேட்பாளர்கள் 27 தொகுதிகளிலும், தமிழர் முன்னேற்றப்படை வீரலட்சுமியும், தமிழ் புலிகள் கட்சியைச் சேர்ந்த நாகை திருவள்ளுவனும் பம்பரம் சின்னத்தில் 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றனர். மதிமுக வேட்பாளர் பட்டியல்: 
1. கோவில்பட்டி - வைகோ
 2. திருப்போரூர் - மல்லை சத்யா 
3. காரைக்குடி - செவந்தியப்பன்

BBC :அமெரிக்காவுக்கு சவுதி கடும் எச்சரிக்கை: 9/11 தாக்குதல்கள்....தங்கள் மீது பொறுப்பு சுமத்தப்பட்டால்,,,,?

அமெரிக்காவில் கடந்த 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் தேதி நடைபெற்ற பங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பில் தாங்கள் மீது பொறுப்பு சுமத்தப்பட்டால் கடும் பெருளாதார விளைவுகள் ஏற்படும் என சவுதி அரேபியா எச்சரித்துள்ளது. n தாக்குதலில் நொறுங்கி விழுந்த கட்டடங்கள் அந்தத் தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவே பொறுப்பு எனக் குற்றஞ்சாட்டும் வகையிலான மசோதாவொன்று அமெரிக்க நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. n விமானம் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் இரட்டைக் கோபுரம் வெடித்துச் சிதறியது. அந்த மசோதா நிறைவேறி சட்டமானால், 9/11 தாக்குதல்களுக்கு சவுதி அரேபியாவுக்கு எதோவொரு வகையில் பங்கு இருந்தது எனக் கூறி அமெரிக்க நீதிமன்றங்களில் வழக்கு தொடுக்க வழி ஏற்படும். அப்படியான சட்டம் நிறைவேறினால் பல நூறு பில்லியன் டாலர்கள் மதிப்பிலான அமெரிக்கச் சொத்துக்களை விற்றுவிட நேரிடும் என சவுதி அரேபியா அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

குனிஞ்சு கும்பிட்டாக....மண்சோறு சாப்பிட்டாக ....மேசையில தட்டினாக........ஆனா தொகுதிபக்கம் போகலையே.....போகலியே?

விகடன்.com‘அமாவாசை’ அலறல்கள்! ப.திருமாவேலன், ஓவியம்: ஹாசிப்கான்

ஜெயலலிதாவுக்கு, தனது கட்சியில் 227 நல்லவர்கள்-வல்லவர்களைக் கூடத் தேர்வுசெய்யத் தெரியாதா என்ன?< திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில், மதுரை மீனாட்சி அம்மன் கோயில், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில், திருச்செந்தூர் முருகன் கோயில், நாகர்கோவில் நாகராஜா கோயில் ஆகிய திருத்தலங்களில் பூஜித்தும், கர்ப்பக்கிரகத்தில் வைத்து ஆசீர்வாதம் வாங்கியும் எடுத்துவரப்பட்ட வேட்பாளர் பட்டியல், மூன்று நாட்களில் ஏழு முறை மாற்றப்பட்டுவிட்டது. இன்னும் 10 நாட்களில் 100 முறைகூட மாற்றப்படலாம். திங்கள்கிழமையா, செவ்வாய்க்கிழமையா, புதன் ஓரையா, ஏகாதசியா, வடக்கே சூலமா, தெற்கே சூலமா என்றெல்லாம் பார்த்துப் பார்த்து வெளியிட்ட வேட்பாளர் பட்டியலிலேயே இத்தனை திருத்தங்கள் என்றால், என்ன விசாரணையும் ஆராய்ச்சியும் நடத்தி, இவர்களை வேட்பாளர்களாகத் தேர்வுசெய்தார் ஜெயலலிதா?

தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை : அண்ணா நூலகம் பாராமுகம்....தனி குழு அமைக்க வேண்டி வரும்

சென்னை, அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யவில்லை என்றால், தனியாக ஒரு குழு அமைக்கப்படும் என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு எச்சரிக்கை செய்துள்ளது.பராமரிப்பு இல்லை சென்னை ஐகோர்ட்டில் ஓய்வுபெற்ற பேராசிரியர் மனோன்மணியம் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், ‘தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கோட்டூர்புரத்தில் கட்டப்பட்ட அண்ணா நினைவு நூற்றாண்டு நூலகத்தில் அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. புத்தகங்கள் முறையாக பராமரிக்கப்படவில்லை’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, வக்கீல்கள் பி.டி.ஆஷா, எம்.சுந்தர் ஆகியோரை சட்ட ஆணையர்களாக நியமித்து, நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது. அவர்கள் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டு இருந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்ய அரசுக்கு ஐகோர்ட்டு ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.

BBC :ஜப்பானில் 7.4 ரிக்டர் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் அடுத்தடுத்து இரண்டு தடவை. 7.4 and 7.0 Earth quake strikes Japan

7.4  and 7.0 Earth quake strikes Japan; rescuers try to free residents
ஜப்பானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானின் குமமோட்டா-ஷி என்ற இடத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.மிகவும் சக்தி வாய்ந்த 7.1 மற்றும் 7.4 அளவு கொண்ட இரண்டு நிலநடுக்கங்கள் அங்கு அடுத்தடுத்து ஏற்பட்டுள்ளன.தொடர்ச்சியான அதிர்வுகளும் உணரப்பட்டுள்ளன. இதையடுத்து விடுக்கப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை பின்னர் விலக்கிக்கொள்ளப்பட்டது. ஒரு மீட்டர் உயரத்துக்கு கடல் அலைகள் எழும்பக் கூடும் எனவும் முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. கியூஷூ தீவின் கடற்கரைப் பகுதிகளில் உள்ளவர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டனர். கடல் நீரில் கடுமையான சுழற்சி இருக்கும் எனவும் ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.

வெள்ளி, 15 ஏப்ரல், 2016

அழகிரி வந்தால்தான் திமுக மீண்டும் வெற்றி? சொல்ல வேண்டியவங்ககிட்ட சொல்லுங்க அல்லது நீங்களே எழுதுங்க ..அழகிரி அதிரடி!

அழகிரி அதிரடி:உண்மையான விசுவாசிகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை! தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலை கடந்த 13-ம் தேதி அன்று, தி.மு.க-வினர் மட்டுமல்லாமல், அ.தி.மு.க-வினரும் ஆவலோடு எதிர்பார்த்தனர். இந்தப் பட்டியலைப் பார்த்து அ.தி.மு.க வேட்பாளர்களில் மாற்றங்கள் நடக்கும் என்றும் சிலர் சொல்லி வந்தனர். இன்னொருபுறம், தி.மு.க-வின் வேட்பாளர் பட்டியலைப் பார்த்து அழகிரி ஆதரவாளர்கள் அப்செட் ஆனார்கள், அவர்களிடம் விருப்பமனுக்கள் வாங்கப்படவில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும், வேட்பாளர்கள் தேர்வில் அழகிரியின் பங்களிப்பு எதுவும் இல்லை என்பது இந்தத் தரப்பினருக்கு பெரும் வருத்தம்.

இந்த "தெறி"யை பார்த்து நிஜமாகாவே அரண்டு போனதாக கிசு கிசு

விகடன்.com :பத்திரிகையாளர்கள் சூழ்ந்திருக்கிறார்கள். கலைஞர் வெளியே வருகிறார். அவரிடம், ""மதுவிலக்கை படிப்படியாகத்தான் குறைக்க முடியும் என்று தீவுத்திடலில் ஜெயலலிதா பேசியிருக்கிறாரே? 
முழுமையான மதுவிலக்கை உடனடியாகக் கொண்டு வர முடியாது என்கிறாரே, நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' எனக் கேட்கிறார்கள். ஏப்ரல் 9-ந் தேதி இரவு அவரிடம் கேட்கப்பட்டதும், ""எல்லாக் கேள்விகளுக்கும் நாளை மாலை விடை கிடைக்கும்'' என்கிறார் கலைஞர்.
அதுதான் அவர் வெளியிட்ட டீசர். மெயின் பிக்சரைப் பார்க்க ஏப்ரல் 10-ந் தேதி அறிவாலயத்தின் கலைஞர் அரங்கம் நிறைந் திருந்தது. தி.மு.கவின் தேர்தல் அறிக்கையை கலைஞர் வெளியிட, பேராசிரியர் பெற்றுக் கொண்டார். பக்கத்தில் ஸ்டாலின், துரைமுருகன், டி.ஆர்.பாலு, கனிமொழி உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள். முதல் நாள் சொன்னதுபோலவே பல கேள்விகளுக்கும் அதில் பதில் இருந்தது.

சுப்பிரமணிய சாமி :ஜெயலலிதா சிறை செல்வது உறுதி...மதுரை கிடைக்காத ஆத்திரங்கள் மக்களே..அதாய்ன் Black mail மக்களே

இதுகுறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணிய சாமி, “ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10ஆம் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்துவிடும். ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி” என்று கூறியுள்ளார்.மேலும் அவர் கூறுகையில், தமிழகத்தில் மதத்தின் பெயரால் நிகழ்த்தப்படும் கொடூரத்தை ஒடுக்குவதில் மாநில அரசு தவறிவிட்டது.இந்த விஷயத்தில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை.  தமிழகத்தில் யார் ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை முன்கூட்டியே அனுமானிக்க முடியாது” என்று கூறியுள்ளார்.வெப்துனியா.com

அம்பேத்கார் சிலைக்கு திருமாவளவன் ஸ்டாலின் மாலை அணிவிப்பு...(எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தேகம் )

அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க வந்த மு.க.ஸ்டாலினை விடுதலை சிறுத்தை திருமாவளவன் வரவேற்று அழைத்து சென்ற சம்பவம், தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பேத்கார் பிறந்த நாளையொட்டி நேற்று, தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி சார்பில் அவரின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து கட்சி நிர்வாகிகள், தலைவர்களின் வருகைக்காக காத்திருந்தார்கள். தொல். திருமாவளவனும் அங்கு நின்றிருந்தார். அப்போது, அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவிக்க, திமுக பொருளாலர் மு.க. ஸ்டாலின் அங்கு வந்தார். அவரைக் கண்டதும், திருமா கை குலுக்கி வரவேற்று அழைத்துச் சென்றார். மு.க.ஸ்டாலின் அம்பேத்கார் சிலைக்கு மாலை அணிவித்து போது திருமா, அவரின் அருகிலேயே நின்றார். அதன்பின் மு.க.ஸ்டாலின் திருமாவுடன் கை குலுக்கி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.webdunia.in

ஜெயலலிதா : கச்சதீவு பிரச்னைக்கு கருணாநிதிதான் காரணம்......பாகிஸ்தான் கருணாநிதிதாய்ன் .....சோமாலியா கருணாநிதிதாய்ன்..

அருப்புக்கோட்டை: கச்சத் தீவு தாரை வார்க்கப்படுவதற்கு கருணாநிதி உடந்தை என்பதை அழுத்தம் திருத்தமாக தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிய முதல்வர் ஜெயலலிதா உச்ச நீதிமன்ற தீர்ப்பு மூலம் கச்சத் தீவு மீட்கப்பட்டு மீனவர்களின் பராம்பரிய உரிமை மீட்கப்படும் என்றார்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் அருப்புக்கோட்டை, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், திருச்சுழி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம், முதுகுளத்தூர், விளாத்திகுளம், கோவில்பட்டி ஆகிய 14 பேரவை தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிமுகம் செய்துவைத்து முதல்வர் பேசினார்.

மோடி அரசுக்கு கி.வீரமணி எச்சரிக்கை: வெளியுறவுக் கொள்கையில் சிக்கல் வரும்..பாரத் மாதாக்கி ...

பாரத் மாதா கி ஜே’ என்ற முழக்கத்தை நாடு தழுவிய அளவில் கொண்டு செல்ல வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் கட்டளையிட்டுள்ளதோடு. பக்கத்து நாடுகள் பற்றியும் தெரிவித்துள்ள  கருத்து, வெளியுறவுக் கொள்கையில் மோடி அரசுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்று எச்சரித்துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்கள்.
;இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,தற்போது மத்தியில் உள்ள ஆட்சியைப் பலமாகப் பிடித்துள்ள பா.ஜ.க. அதனை வழி நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர்கள் அனைவரும், ‘காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும்’ என்ற எண்ணத்துடன் அவசரக் கோலத்தை அள்ளித் தெளிக்கும் நிலையில் ‘Now or Never’ என்கிற முடிவில் தம் விருப்பங்களையெல்லாம் தீர்த்துக் கொள்ள நடைமுறைப்படுத்திட, ‘ஹிந்துத்துவ சாம்ராஜ்யத்தை’ நிறுவ துடியாய் துடிக்கிறார்கள்!

JNU பிரச்சனையா? பனாமா ஊழல் அம்பலமா? high light பண்ணு சியாசின் ! இதுதாண்டா சங்பரிவார் !

இராணுவத்தின் தேசப்பக்தி பனாமாவிலா ? சியாச்சினிலா ?
army_tradeபடங்கள் நன்றி: THE IRISH TIMESஜே.என்.யு விவகாரத்தில் ஆர்.எஸ்.எஸ் கும்பல் அம்பலப்பட்ட நேரத்தில் அவர்களுக்கு உடனடியாக கைகொடுத்தது சியாச்சின் பனிமலை. உலகின் மிக உயரமான போர் முனை என்று அறியப்படும் சியாச்சின் பனிச் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 21,000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. பிப்ரவரி 10-ம் தேதி அங்கே பாதுகாவலில் ஈடுபட்டிருந்த பத்து வீரர்கள் பனிச்சரிவில் சிக்கி உயிரிழந்தனர்.
உடனடியாக அந்தப் பிணங்களை வைத்து சமூக வலைத்தள மோடி பக்த ஜனசபா, தேசபக்தி பஜனையைத் துவங்கியது. “சியாச்சின் மலையினிலே… எங்கள் வீரர்கள் தேசம் காக்கப் போராடும் வேளையிலே… கண்ணையா குமார் என்ன சொன்னார் தெரியுமா….” என்று தொடை தட்டிக் கிளம்பிய தேசபக்த குஞ்சுகள் பனாமா ஆவணக் கசிவுகளில் இந்திய இராணுவத்தின் பெயர் அடிபடத் துவங்கிய பின் போன இடமும் தெரியவில்லை தங்கள் தலைகளை பூமிக்குள் புதைத்துக் கொண்ட தடமும் தெரியவில்லை. high light

கட்சிகளில் வேட்பாளர் இழுபறி....குழப்பம்......போட்டி வேட்பாளர்கள்....உள்ளடி...குழிபறிப்பு

தி.மு.க., வேட்பாளர்கள் அறிவிப்புக்கு, பல ஊர்களில் எதிர்ப்பும், மோதலும் வெடித்துள்ளது. இதனால், அ.தி.மு.க.,வைப் போல, தி.மு.க.,விலும், வேட்பாளர் மாற்றம் வருமா என்ற ஆவலும், எதிர்பார்ப்பும், அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ளது.
தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியல், நேற்று முன்தினம் மாலை வெளியானது. பல தொகுதிகளில், வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டவர்களுக்கு, கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. உருவபொம்மையை எரித்து, தலைமையின் முடிவுக்கு எதிராக, சில தொகுதிகளில் தி.மு.க.,வினர் கொந்தளித்துள்ளனர்.   அதிமுகவில் புதியவர்களுக்கு வாய்ப்பாம்.. யாராக இருந்தாலும் அங்கே அடிமைதானே.. அடுத்தமுறை கண்டிப்பாக தனக்கு வாய்ப்பில்லை என தெரிந்தவன், வெற்றி பெற்றாலும் தனது தொகுதிக்கு, தேர்ந்தெடுத்த மக்களுக்கு எதுவுமே செய்யாமல், வெறும் பெஞ்ச் தட்டிக்கொண்டு, காலில் விழுந்துவிட்டு ஐந்து வருடத்தை முடித்துவிடுவார்கள்.. அடுத்தமுறையும் தனக்கு வாய்ப்புவேண்டும், தனக்கு ஓட்டு கேட்க மீண்டும் அதே மக்களை சந்திக்க வேண்டிவரும் என்று நினைப்பவனே, தேர்ந்தெடுத்தால், அந்த மக்களுக்கும், தொகுதிக்கும் ஏதாகிலும் செய்யவேண்டும் என நினைப்பான்.. செய்வான்..

வேட்பாளர்கள் தேர்வு எதை மையமாக வைத்து நடந்தது? இளங்கோவன் பதில்

இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக்கிடம் வேட்பாளர்கள் பட்டியல் அளிக்கப்பட்டுள்ளது. 41 தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார் என கூறினோம். வெற்றி வாய்ப்பு பற்றி விவாதித்தோம். இன்னும் ஓரிரு நாளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் என்றார்.
 கேள்வி: வேட்பாளர்கள் தேர்வு எதை மையமாக வைத்து நடந்தது?

ஜெயலலிதா: என் ஆட்சி உங்களுக்கு வசந்தத்தை கொடுத்திருக்கிறது ... மக்களுக்காக நான். மக்களால் நான்


அருப்புக்கோட்டை : இன்று விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடந்த பிரசார கூட்டத்தில் அதிமுக., பொதுசெயலர் ஜெ., கருணாநிதியை கடுமையாக தாக்கினார்.இந்த கூட்டத்தில் அ.தி.மு.க., வேட்பாளர்களை ஆதரித்து அவர் மேலும் பேசியதாவது:
வரும் சட்டசபை தேர்தலிலும் அ.தி.மு.க.,வை வெற்றி பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். வளர்ச்சியின் பயன் அனைவரும் அடைய வேண்டும். அனைத்து துறைகளிலும் தமிழகத்தை தலைநிமிர செய்வதே அ.தி.மு.க.,வின் லட்சியம். கல்வி, மருத்துவம் விவசாயம் உள்ளிட்டவைகளில் தமிழகம் வளர்ச்சி பெற செய்வதே அ.தி.மு.க.,வின் லட்சியம். கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. இருண்ட தமிழகம் என்ற நிலை மாறி, மின்மிகை மாநிலமாக மாற்றப்பட்டுள்ளது.  தொழில் வளர, விவசாயம் விருத்தி அடைந்திட, தமிழக உரிமைகள் நிலை நாட்ட அமைதி , வளர்ச்சி பாதையில் பீடு நடை போட எங்களை வெற்றி பெற செய்யுங்கள// அப்போ 5 வருஷமா இதுக்கெல்லாம் ஒன்னும் கிழிக்கலேன்னு அவரே ஒத்துகுராறு. சாராயக் கடைகளை பெருக்கிறதிலேயே நேரத்தை செலவு பண்ணினா மத்ததுக்கு நேரம் இருக்காது.

குஷ்புவுக்கு R.K நகரை திமுக ரெடி ...ஆனா ராகுல் ஜோதிமணிக்கு அரவக்குறிச்சி கேட்டார் ! குஷ்புவிடம் இருந்து RK தப்பியது இப்படிதான்.

சென்னை: குஷ்புவுக்காக ஆர்.கே.நகரை திமுக விட்டுக் கொடுக்க திமுக முன்வந்ததாம். ஆனால் தொகுதியை மாற்றுவதாக இருந்தால் அரவக்குறிச்சியைத் தரட்டும். அதில் ஜோதிமணி நிற்க வேண்டும் என்று ராகுல் காந்தி கூறி விட்டாராம். ஆனால் அரவக்குறிச்சியை தர முடியாது என்று திமுக கூறி விட்டதாம். திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. தொகுதி ஒதுக்கீட்டுக்குப் பிறகு அரவக்குறிச்சி தொகுதி தொடர்பாக காங்கிரஸில் பெரும் முனுமுனுப்பு எழுந்தது. இந்தத் தொகுதியைக் குறி வைத்து ஜோதிமணி பல காரியங்களை செய்து வைத்திருந்தார். ஊர் ஊராகப் போய் மக்களைச் சந்தித்து வாக்குகளையும், ஆதரவையும் திரட்டி வைத்திருந்தார். DMK wanted to field Khusboo in R K Nagar, but Rahul asked Aravakurichi for Jothimani

தெறி படத்துக்கு விநியோகஸ்தர்கள் உள்ளடி..60 தியேட்டர்கள் முடக்கம்...செங்கல்பட்டில்....மாபியா?


சென்னை,ஏப்.15 (டி.என்.எஸ்) விஜய் நடிப்பில் நேற்று உலகம் முழுவதும் வெளியான ‘தெறி’ படம் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் சில பகுதிகளில் உள்ள ஒரு சில திரையரங்குகளில் வெளியாகவில்லை. குறிப்பாக செங்கல்பட்டு பகுதியில் உள்ள பெரும்பாலான திரையரங்குகளில் இப்படம் வெளியாகததால் விஜய் ரசிகர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்த நிலையில், ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர் தாணு, செங்கல்பட்டு பகுதிகளில் படம் வெளியாவததால் தனக்கு பல கோடி நஷ்ட்டம் ஏற்பட்டுள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் பேசிய தாணு, “தெறி படம் செங்கல்பட்டு பகுதியில் நிறைய தியேட்டர்களில் ரிலீஸ் ஆகவில்லை. எஸ்.பி.ஐ. சினிமாஸ் மூலம் செங்கல்பட்டு பகுதிக்கு ரிரீஸ் செய்ய கொடுத்திருந்தோம். அவர்களும் சரியான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கியது மத்திய அரசு! எத்தனையாவது?

வங்கிகளிடமிருந்து வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் இருந்து வந்த தொழில் அதிபர் மல்லையாவின் பாஸ்போர்ட்டை முடக்கி மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. பல்வேறு வங்கிகளில் இருந்து ரூ.9 ஆயிரம் கோடி வரை கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ள பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையா, இங்கிலாந்துக்கு தப்பி சென்றுள்ளார். அவருக்கு எதிராக வங்கிகளின் கூட்டமைப்பு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. இந்த நிலையில் 3 முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாத மல்லையாவின் பாஸ்போர்ட்டை ரத்துசெய்ய அமலாக்கத்துறை அதிகாரிகள் மத்திய அரசிடம் வலியுறுத்தினர். அவர்களின் பரிந்துரையை ஏற்று வெளியுறவு அமைச்சகம் விஜய் மல்லையாவின் பாஸ்போர்டை தற்காலிகமாக ரத்து செய்துள்ளது. சில நாட்களுக்கு முன்னர், விஜய் மல்லையா ரூ. 4,000 கோடி ரூபாயை வங்கிகள் கூட்டமைப்புக்கு திருப்பி தர முன்வந்தார், எனினும் அந்த கோரிக்கையை நிராகரிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் வங்கிகள் கூட்டமைப்பு தெரிவித்தது. மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விஜய் மல்லையாவிற்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  puthiyathalaimurai.com

பிரியங்காவின் கணவர் வதேரா அரசியலுக்கு வரப்போகிறார்? மோடியே வந்துட்டார்ர் இனி எவர்ர்ர் வந்தா....

பிரியங்காவின் கணவரும், சோனியா காந்தியின் மருமகனுமான ராபர்ட் வதேரா, தனது அரசியல் ஈடுபாடு குறித்து பதிலளித்து உள்ளார்.
நில மோசடி வழக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மகளான பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேரா. ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களை நடத்தி வரும் இவர் மீது, அரியானா மாநிலத்தில் நிலமோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அரியானாவில் முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனமான டி.எல்.எப். உடன் இணைந்து நில மோசடியில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றச்சாட்டு நிலுவையில் உள்ளது.

வரலட்சுமிக்கு மவுசு கூடியது.....தாரை தப்பட்டை ஊத்திகிட்டாலும்..

வரலட்சுமியின் சினிமா கரியர் அவர் எண்ணப்படி இப்போதுதான் அமைய ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தாரை தப்பட்டை படத்துக்குப் பிறகு. படம் டப்பா என்றாலும், வரலட்சுமியால் எந்த வேடத்திலும் நடிக்க முடியும் என்பதை தாரை தப்பட்டை உணர்த்தியது. தற்போது நிபுணன் மற்றும் மம்முட்டியுடன் ஒரு படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். வரலட்சுமி ஆக்ஷன் கதாபாத்திரங்களுக்கே முக்கியத்துவம் தருகிறார், அடிதடி உள்ள கதாபாத்திரங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறார் என அவரைப் பற்றி ஒரு வதந்தி உலவுகிறது. அதனை வரலட்சுமி மறுத்துள்ளார். அதிரடியான வேடங்களில் நடிக்கும் ஆசை இருக்கிறது. அதற்காக அந்த மாதிரி படங்களை மட்டுமே ஒப்புக் கொள்கிறேன் என்பது உண்மையில்லை. அழுத்தமான கதாபாத்திரங்கள் அமைந்தால் நடிப்பேன் என்றார். வெப்துனியா.காம்

ஒன்றாக (சாராய) தொழில்செய்த வளர்மதியும் கு.க,செல்வமும் ஆயிரம் விளக்கு.....வெளக்கெண்ணெய் அடுக்குமா .....?

12963730_952440278202581_2672602238198555608_n-horzவேட்பாளர் தம்பட்டம் – வளர்மதி & கு.க.செல்வம்s avukkuonline.com :இந்தத் தேர்தலில் மிகவும் துரதிருஷ்டம் செய்தவர்கள் யாரென்றால் அவர்கள் ஆயிரம் விளக்கு தொகுதி மக்கள்தான்.    சனியனுக்கும் சாத்தானுக்கும் இடையே சிக்கிக் கொண்டுள்ளார்கள்.   அதிமுகவில் வளர்மதி என்றால், திமுகவில் கு.க.செல்வம். இந்த குடும்பக் கட்டுப்பாடு (கு.க) செல்வமும், வளர்மதியும், அதிமுக ஜெயலலிதா ஜானகி அணியாக பிரிந்து இருந்தபோது, ஜானகி அணியில் இருந்தவர்கள்.   போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதா வீட்டில் சாணி வீசும் போராட்டம் நடந்தபோது, சாணியை வீசியவர் வளர்மதி.   அப்போது வளர்மதிக்கு இரு புறமும் தளபதியாக இருந்தவர்கள் சைதை துரைசாமி மற்றும் கு.க.செல்வம். கு.க.செல்வத்துக்கு மற்றொரு பின்னணி உண்டு.   சாராய அதிபர் ராமச்சந்திர உடையாருக்கு “தேவையானவற்றை” செய்து தரும் நபராக இருந்தார் செல்வம்.    அப்போது அவருக்கு தேவையானவற்றை சப்ளை செய்து வந்தவர் வளர்மதி.   பின்னாளில் வளர்மதியின் தொழிலுக்கும் உதவியாளராக மாறிப் போனார் செல்வம்.

அழகிரிக்கு ராஜ்யசபா உறுதிமொழி ?

ஆதரவாளர்களுக்கு, 'சீட்' வழங்கப்படாததால் அதிருப்தி அடைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, சென்னையில் நேற்று, தி.மு.க., தலைவர் கருணாநிதியை சந்தித்தார். இதுகுறித்து, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: கருணாநிதியை, மார்ச், 24ல், அழகிரி சந்தித்துப் பேசினார். அப்போது, கூட்டணி விவகாரம், கட்சி நிலவரம் குறித்தும், கருணாநிதியின் சுற்றுப்பயணம் குறித்தும், ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து, அவ்வப்போது கருணாநிதியும், அழகிரியும் தொலைபேசியில் பேசி வருகின்றனர்.கடந்த, 8ம் தேதி, சென்னையில் நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடந்த, தமிழரசு மணிவிழாவில் அழகிரி பங்கேற்றார். ஆனால், அப்போது, கருணாநிதியை அவரால் சந்திக்க முடியவில்லை. இந்நிலையில், நேற்று முன்தினம், வேட்பாளர்கள் பட்டியல் வெளியானதும், அந்த பட்டியலில் அழகிரி ஆதரவாளர்கள் யாரும் இடம்பெறவில்லை.  அழகிரியை பற்றி கேட்டால் ஸ்டாலின் படுமோசமாக முகத்தை வைத்துகொண்டு எகிறுவது ஏன்? அவர் உங்கள் சொந்த அண்ணன்தானே? கழகத்துக்கு பெரிய வெற்றிகளை எல்லாம் கொடுத்த ஒரு தொண்டர் என்ற மரியாதையாவது வேண்டாமா? இது திமுகவுக்கு நல்லதல்ல ....

நடிகர் விஜயின் தெறி...முழுக்க முழுக்க பிளாக் டிக்கெட்தான்...ரூ. 500-க்கு Sale...போலீசும் சேர்ந்து.....

நடிகர் விஜய் நடித்த ‘தெறி“ படம் இன்று (ஏப். 14) வெளியானது. இந்தப் படத்தின் முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே, அடுத்த சில நாட்களுக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று விட்டன. ஆனால், திரையரங்குகளில் இந்த டிக்கெட்டுகள் விற்கப்படவில்லை என்றும், வெளியே கூடுதல் விலைக்கு விற்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மதுரையில் 6 திரையரங்குகளில் ‘தெறி’ படம் வெளியிடப்படுகிறது. இதற்காக, கடந்த சில நாட்களாக இந்த திரையரங்குகளில் டிக்கெட் விற்கப்படுகிறது. ஆனால், ஒரு டிக்கெட் கூட திரையரங்கில் விற்கப்படவில்லை. திரையரங்கு முன்பும், மறைமுகமாக சில இடங்களில் வைத்தும் ரூ. 500-க்கு விற்கப்படுகிறது.பேசாம இன்டர்நெட்டில் அல்லது பர்மா பஜாரில் ........விப்பாய்ங்க போயி வாங்குங்க?

JNU கண்ணையா குமார் மீது செருப்பு வீச்சு...மகாராஷ்ட்டிரா...நாக்பூர்


I request the person who threw shoe at me to give me a complete pair. Some poor man can use it. I lost my slippers at Deekshabhoomi this morning and I know it’s heating outside so if someone wants to throw anymore shoes at me, please bring a pair so that I can use it outside,” he said. நாக்பூர் : மகாராஷ்ட்டிராவில் நடந்த அம்பேத்கர் விழாவில் பங்கேற்று பேசிய டில்லி பல்கலை மாணவ தலைவன் கண்ணையா குமார் மீது செருப்பு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
டில்லி ஜவஹர்லால் நேரு பல்கலை., மாணவ தலைவர் கண்ணையாகுமார். இவர் சமீபத்தில் பயங்கரவாதி அப்சல் குருவுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் விவகாரம் குறித்தும் பேசியதால் தேசவிரோத வழக்கு பதியப்பட்டது. தொடர்ந்து அவரும் அவரது கூட்டாளி மற்றும் துணை போன பேராசிரியர் ஒருவர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் தற்போது ஜாமினில் இருந்து வருகின்றனர். 
இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, அம்பேத்கர் பிறந்த நன்னாளில் அவரின் இனத்திற்கு ஏற்பட்ட இகழ்வாகவே இதை கருத வேண்டியிருக்கிறது,

நான் விரும்பிய சிலருக்கு வாய்ப்பு அளிக்க முடியாமல் போய்விட்டது : கலைஞர் கடிதம்

திமுக தலைவர் கலைஞர் கடிதம் ’பதினைந்தாவது  பொதுத்தேர்தல் வரும்  மே திங்கள் 16ஆம் நாள் நடைபெறவுள்ளது.  இந்தத்  தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணியில் இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சி சார்பில்  41 இடங்களிலும்,  இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில்  5 இடங்களிலும்,  மனித நேய மக்கள் கட்சி சார்பில் 5 இடங்களிலும், புதிய தமிழகம் கட்சி சார்பில் 4 இடங்களிலும், மக்கள் தே.மு.தி.க. சார்பில் 3 இடங்களிலும்,  பெருந்தலைவர் மக்கள் கட்சி, தமிழ்நாடு  விவசாயிகள், தொழிலாளர்கள் கட்சி,  சமூக சமத்துவப் படைக் கட்சி ஆகியவை தலா ஓரிடத்திலும் என்று 61 தொகுதிகள் தோழமைக் கட்சியினருக்கு வழங்கப்பட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் 173 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்கள் ஒதுக்கியதிலே கூட,  ஆற்காடு தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும்,  பின்னர் கழகத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த சோளிங்கர் தொகுதியில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்றும்,  ஆற்காடு தொகுதியில் கழகம் போட்டியிடுவதென்றும் இரண்டு கட்சியினரும் கலந்து பேசி ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது.

வியாழன், 14 ஏப்ரல், 2016

சீமான்:எந்த தாய் தன்மகனை குடிக்க சொல்லுவார் ? இந்த தமிழக (ஈழத்தாய்?) தாய் குடி குடி குடிச்சு சாவு என்கிறாரே?

தமிழகத்தை ஒரு தாய் போன்று ஆட்சி செய்வதாக கூறுகிறார் ஜெயலலிதா. எந்த தாய் டாஸ்மாக் கடைகளை திறந்து வைத்து தனது மகன்களை குடிக்கச் சொல்வார்? என நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சட்டசபை தேர்தலையொட்டி கோவையில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக அக்கட்சியின் தலைவர் சீமான் வாக்கு சேகரித்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு அவர் உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், தேர்வு நாங்கள் தேர்தலில் போட்டியிடவில்லை, வாக்கு கேட்டு உங்களிடம் வந்து நிற்கவில்லை. கடந்த 4 ஆண்டுகளாக படித்துவிட்டு தற்போது தேர்வுக்காக வந்துள்ளோம். நாங்கள் குறை கேட்க வரவில்லை. உங்களின் குறைகளை தீர்க்க வந்துள்ளோம்.

ஜப்பானின் புகழ் – ரோபோவா தற்கொலையா ?...Death.... rise among Japan’s vulnerable workers


ஜப்பானில் ஓவர்டைம் பார்ப்பதால் கசக்கிப் பிழியப்படும் தொழிலாளர்களின் மரணம் மிகப்பெரும் அளவில் அதிகரித்திருப்பதாக சொல்கிறது. அதுவும் பணிச்சுமையால் இறந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்களும் இளைஞர்களும் ஆவர்.
கார்டியனில் 08-04-2016 அன்று வெளிவந்த புகைப்படம், ஜப்பானின் ‘புகழ்’ பெற்ற கார் உற்பத்தியின் இன்றைய நிலையைக் காட்டுகிறது. அசெம்பிளி லைனில் எந்த தொழிலாளியுமின்றி ரோபோக்கள் மட்டுமே காரின் உப பாகங்களை கோர்த்து பொருத்துகின்றன. குட்டி நாடு ஜப்பான் ‘தொழில் வளர்ச்சியில் என்னமா அடிச்சு போறான் பாத்தியா?’ என்று முதலாளித்துவ அறிஞர் பெருமக்கள் வியப்பது உடன் நினைவுக்கு வருகிறதா?

மக்கள் நலக் கூட்டணி - தமாகா போட்டியிடும் தொகுதி பட்டியல்

தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம்.
தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி - தமாகா தலைவர்கள் | கோப்புப் படம்.
மக்கள் நலக் கூட்டணிக்கு தேமுதிக ஒதுக்கிய தொகுதிப் பட்டியலை மதிமுக பொதுச் செயலாளரும், மக்கள் நலக் கூட்டணி ஒருங்கிணைப்பாளருமான வைகோ வெளியிட்டார்.
தேமுதிக- மக்கள் நலக் கூட்டணி - தமாகா இணைந்த கூட்டணியில் தேமுதிகவுக்கு 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
மக்கள் நலக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் மதிமுகவுக்கு 29 தொகுதிகளும், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 தொகுதிகளும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 25 தொகுதிகளும்,தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு 26 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டன.

அம்பேத்கர் கொள்கையைப் பரப்புவதைவிட பாதுகாப்பதே மிகவும் அவசியம்: கி.வீரமணி

பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 125ஆம் ஆண்டு பிறந்த நாளான இன்று, அவர்கள் போற்றிய ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு சனாதன எதிர்ப்புக் கொள்கைகளை முன்னெடுக்க உறுதி கொள்வோம் - ஆர்.எஸ்.எஸ். கூட்டம் அம்பேத்கரை அரவணைத்து அழிக்க நினைக்கும் வஞ்சகத்தை முறியடிப்போம் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கரின் 125ஆம் ஆண்டு பிறந்த நாள் பெருவிழா இன்று!டாக்டர் அம்பேத்கரின் கருத்துக்களும், கொள்கைகளும் புகழும் இன்று உலகளாவிய நிலைக்கு உயர்ந்து பரவி, விரவி விட்டன!

அழகிரி கோபாலபுரம் வந்தார்......அடப்போங்கப்பா மகன் அப்பாவிடம் வருவதெல்லாம் ஒரு நியுசா?

திமுக தலைவர் கருணாநிதியை முன்னாள் மத்திய அமைச்சரும் அவரது மகனுமான அழகிரி இன்று கருணாநிதியின் கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து பேசினார். மு.க.அழகிரி ஸ்டாலினுக்கு எதிராகவும், திமுகவுக்கு எதிராகவும் பேசி கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர். கட்சிக்கு விரோதமான நடவடிக்கையில் ஈடுபட்டதாக தற்காலிகமாக நீக்கப்பட்டார். மீண்டும் அவரது விமர்சனம் தொடர்ந்ததால் நிரந்தரமாக திமுகவில் இருந்து நீக்கப்பட்டார்.எனினும் அவ்வப்போது திமுகவை விமர்சித்தும், திமுகவை விமர்சிப்பவர்களை விமர்சித்து பேசி வந்தார். சில நேரங்களில் அழகிரியை கட்சியில் மீண்டும் சேர்க்கும் முயற்சிகள் நடந்து வந்தன.     திமுகவின் ஆரோக்கியத்துக்கு  வைட்டமின் (ழகிரி) மிக அவசியமாக தேவை...

தமிழிசை சௌந்தரராஜன்: தேர்தல் ஆணையம் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது .....(சொல்வது மத்தியில் ஆட்சி செய்யும் பாஜக)

ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது தேர்தல் ஆணையம்: தமிழிசை சவுந்தரராஜன் தேர்தல் ஆணையம் ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை குற்றச்சாட்டியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜெயலலிதா பிரச்சார கூட்டத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். இந்த மரணங்கள் குறித்து முறையான விசாரணை நடத்தப்பட வேண்டும். ஜெயலலிதாவின் கூட்டங்களுக்கு தேர்தல் ஆணையம் எவ்வித விதிமுறைகளையும் விதிப்பதில்லை. தேர்தல் ஆணையர் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறது என கண்டனம் தெரிவித்துள்ளார்.nakkheeran.com

சோனியா: மம்தா பானர்ஜி ஆட்சியில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள்

மம்தா பானர்ஜி தலைமையிலான ஆட்சியில்தான், நாட்டிலேயே அதிகமாக, மேற்கு வங்கத்தில் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெறுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா குற்றம்சாட்டினார். மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ள நிலையில், இரண்டாம்கட்ட வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஏப்.17) நடைபெறவுள்ளது. இதையொட்டி, மால்டா மாவட்டத்துக்குள்பட்ட சுஜாபூர் சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி புதன்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: மேற்கு வங்கத்தில் கடந்த 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின்போது பொதுமக்களுக்கு பல்வேறு வாக்குறுதிகளை மம்தா பானர்ஜி அளித்தார். ஆனால் ஆட்சிக்கு வந்ததும், தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு தாம் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் அவர் மறுந்துவிட்டார்.

BBC :பள்ளிவாசல்களில் ஜெர்மன் மொழியை பயன்படுத்த கோரிக்கை...AfD wants to shut down mosques

Mosque in Nurembergஜெர்மனியிலுள்ள பள்ளிவாசல்கள் ஜெர்மன் மொழியைப் பயன்படுத்த வேண்டும் என மூத்த அரசியல்வாதி ஒருவர் கோரியுள்ளார். n கொலோன் பெரிய பள்ளிவாசல் அதேபோல் பள்ளிவாசல்களுக்கு துருக்கி மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளில் இருந்து வரும் நிதியும் நிறுத்தப்பட வேண்டும் என கிறிஸ்டியன் சோஷியல் யூனியன் கட்சியின் பொதுச் செயலர் ஆண்ட்ரேயாஸ் ஷோயா(ர்) கூறியுள்ளார். அரசியல்மயமாக்கப்பட்ட இஸ்லாம் நாட்டின் ஒற்றுமையை  குலைக்கிறது, தனக்கு பொருந்தக்கூடிய வகையிலான இஸ்லாத்தை ஐரோப்பா வடிவமைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார். உள்ளூர் இமாம்கள் உள்நாட்டிலேயே பயிற்சிபெற வேண்டும் எனவும் ஷோயா கூறுகிறார் ஜெர்மனியப் பள்ளிவாசல்களில் பணியாற்றும் இமாம்கள் ஜெர்மனியில் பயிற்சி பெறவேண்டுமே அன்றி, வெளிநாடுகளில் அல்ல எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தெறி....சத்திரியன் படத்தின் காப்பி இல்லையாம்...இயக்குனர் அட்லி தெரிவிப்பு


 ’சத்ரியன்’ படத்தின் காப்பியா ‘தெறி’? - இயக்குநட் அட்லி பேட்டி
சென்னை,ஏப்.13 (டி.என்.எஸ்) விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘தெறி’ படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இப்படத்தை அட்லி இயக்கியுள்ளார்.
‘தெறி’ படம் குறித்து நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்த இயக்குநர் அட்லி,  “’தெறி’ படம் ரொம்ப நன்றாக வந்துள்ளது. படத்தின் கதையை விஜய் அண்ணாவிடம் சொன்னபோது, அதை கேட்டுவிட்டு சூப்பர் என்று சொன்னார், தற்போது படத்தை பார்த்துவிட்டும் அதையே தான் சொன்னார். தயாரிப்பாளர் தானு சாரும் படம் பார்த்துவிட்டு பாராட்டினார். மொத்தத்தில் ‘தெறி’ அனைத்து தரப்பினருக்கும் பிடித்த படமாக இருக்கும்” என்று கூறியதோடு, நிருபர்களிடன் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்.

தினமலர் கோபாலபுரத்தில் இருந்து நேரடி வர்ணனை?.......தேர்தல்னா நாலு விதமா பேசத்தான் செய்வாய்ங்க

நீண்ட நாள் தயாரிப்பான, தி.மு.க., வேட்பாளர் பட்டியல், நேற்று காலை வெளியாக இருந்தது. பட்டியலை வெளியிட்டு, பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுக்கும் ஆர்வத்துடன், அறிவாலயம் கிளம்ப தயாராக இருந்தார், தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின். அந்த நேரத்தில் வந்த செய்தியை கேட்டதும், பரபரத்த அவர், நேராக கோபாலபுரம் பறந்தார். பட்டியலும் கையுமாக இருந்த கருணாநிதியை சந்தித்தார். இருவருக்கும் இடையே நடந்த உரையாடலும், அதனால் எழுந்த கோபமும், ஸ்டாலினை பழையபடி, வீட்டுக்கே ஓட வைத்து விட்டது.இடையில் நடந்தது களேபரம். கருணாநிதி கேட்ட தொகுதியை, ஸ்டாலின் தர மறுத்ததும், பட்டியலை வெளியிட விடாமல், கருணாநிதி தடுத்ததும் தான் களேபரத்துக்குக் காரணம். தமிழகம் முழுவதும், மூன்று கட்ட சர்வே நடத்தி, வேட்பாளர் பட்டியலை தயார் செய்து கொடுத்தது, ஸ்டாலின் மருமகன்சபரீசன் டீம்.
பட்டியலில் இடம்பெற்ற பலரையும், கடைசி நேரத்தில் மாற்ற வேண்டும் என கருணாநிதி, கையில் பேனாவை எடுத்தது தான், ஸ்டாலின் டென்ஷனுக்கு காரணம்.

சிம்லா ஸ்பெசல்....ஜெயாவின் தொகுதியில் திமுக மகளிர் அணி சிம்லா முத்துசோழன்

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக சார்பில் வழக்கறிஞரும், திமுக மகளிர் அணியைச் சேர்ந்தவருமான சிம்லா முத்துச்சோழனை களம் இறக்கியுள்ளது திமுக. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலைச் சேர்ந்தவர் சிம்லா முத்துச்சோழன். பரம்பரை திமுககாரர். அரசியல்வாதி, சமூக சேவகி, வழக்கறிஞர், இல்லத்தரசி என பல முகம் கொண்டவர் சிம்லா. DMK fields Advocate Simla Muthuchozhan in RK Nagar திமுகவில் வட சென்னை மகளிர் சட்ட அணி ஒருங்கிணைப்பாளராக இருந்த அவர் தற்போது மாநில திமுக மகளிர் அணி கொள்கை பரப்புச் செயலாளராக இருக்கிறார். கலப்பு மணம் புரிந்தவர் சிம்லா.        இவரது ஜாதகத்துல ஏகப்பட்ட யோகங்கள் இருக்காம் அந்த யோகங்களை நம்பித்தான் இவரு அம்மாவோட சவால் விடுகிறார்.....அவிங்களும் ஜாதகம் இவங்களும் ஜாதகம்,   எந்த சோசியர் சரின்னு தெரியாமலா இருக்கும்? 

புதன், 13 ஏப்ரல், 2016

அரபிகளிடம் ஹவுஸ் டிரைவர் வேலைக்கு மட்டும் வந்திடாதீங்க.......ஒருவரின் உண்மை அனுபவம்

வெளிநாட்டிற்கு ஹவுஸ் டிரைவர் வேலைக்கு மட்டும் வந்துராதிங்க நண்பர்களே மன வலி உங்கள் கோபத்தை கூட உங்களால் வெளிபடுத்த முடியாது நம்மால் சுயமாக ஏதும் செய்ய முடியாது உடம்பில் உள்ள நரம்பு வெடிக்கும் அளவிற்கு நமக்கு கோபம் வரும் ஆனால் நம்மால் ஏதும் செய்ய முடியாது ஒரு துரும்பை கூட உங்கள் கபில் அனுமதி இல்லாமல் உங்கலால் அசைக்க முடியாது சுயமாக ஏதும் உங்களால் செய்ய முடியாது ( வேலை க்கு ஏற்ற ஊதியம் இல்லை என்றால் EXIT ல் சென்று விடுங்கள் இளமையை இங்கு வீணடிக்காதீர்கள்  சொற்ப சம்பளத்திற்காக ) பெருபாலும் எனக்கு வரும் போன் கால் உதவி கேட்டு வருபவர்கள் என்னை இன்பாக்ஸில் தொடர்பு கொள்பவர்கள் பெரும்பாலும் பல பிரச்சனைகளுக்கு ஆளாவது ஹவுஸ் டிரைவர்கலாகத்தான் இருகிறார்கள் என்னால் முடிந்த
உதவிகளை செய்கிறேன் மற்றும் ஆலோசனைகளை வழங்கி கொண்டு தான் இருக்கிறேன் ஒருத்தர் இரண்டு பேராக இருந்தால் உதவி விடலாம் ஒரு நாளைக்கு பலர் எனக்கு இன்பாக்ஸில் மெசேஜ் செய்கிறார்கள்

நடிகை அர்ச்சனா :திரைப்படங்களுக்கு சமுக அக்கறை இருக்கவேண்டும்...ஸ்ரீதர்,பீம்சிங்,கோபாலகிருஷ்ணன்...

தினமணி.com :தன்னம்பிக்கையை இழந்து விடாதீர்கள்! தினமணி மகளிர் மணி, எம்.ஓ.பி வைஷ்ணவா மகளிர் கல்லூரி இணைந்து நடத்திய சர்வதேச மகளிர் தினத்தையொட்டி நடைபெற்ற "மகளிர் - இன்று' கருத்தரங்கின் தொடர்ச்சி... திரைப்படக் கலைஞர் செல்வி அர்ச்சனா பேசியதாவது: "பொதுவாக சினிமாவுக்குள்ளே என்னென்ன இருக்கோ அதுதான் வாழ்க்கையிலும் அதிகமாக பிரதிபலிக்கிறது. ஏன்னா? சினிமா பவர் ஃபுல் மீடியா. அதைவைத்துதான் சினிமாவில் இருந்து ஒவ்வொரு உதாரணத்தையும் வழக்குரைஞர் சுமதி அழகா உங்களுக்கு விளக்கினாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கிறது. அவங்க பேசல; ஒரு கிளாஸ் நடத்தியிருக்காங்க உங்களுக்கும், என்னைப் போன்றவர்களுக்கும். ஒரு தாய் சொன்னது மாதிரி, ஆசான் மாதிரி சொல்லியிருக்காங்க. ஒரு சாதாரண இடத்திலிருந்த என்னைப் பார்த்ததும் யாரும் நடிக்க வாங்கன்னு வாய்ப்பு கொடுக்கல. ரொம்ப கஷ்டப்பட்டுதான் இந்த சினிமாவுக்குள் நான் வந்தேன்.