வெள்ளி, 9 ஜனவரி, 2026

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விசாரிக்க லண்டன் சென்ற போலீசாரின் செலவுகளை கேட்டு RTI மனு தாக்கல்

Thilini Ranasinghe ...
  Shanmugam Poothappar  :  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை விசாரிக்க போலீசார் இங்கிலாந்து பயணம்: செலவு கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மனு தாக்கல்!
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா சம்பந்தப்பட்ட வழக்குடன் தொடர்புடைய லண்டனிலுள்ள பல்கலைக்கழகத்திற்கு இலங்கை அதிகாரிகள் மேற்கொண்ட விஜயம் தொடர்பாக, நாட்டின் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் காவல்துறையினரிடம் தகவல் கோரியதாக திலினி ரணசிங்க என்ற நபர் கூறுகிறார்.
காவல்துறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசிய ரணசிங்க, இலங்கையின் எட்டாவது நிறைவேற்று ஜனாதிபதியை சிறையில் அ டைப்பது தொடர்பான வழக்கு தொடர்பாக அதிகாரிகள் இங்கிலாந்துக்குச் சென்றதாக வெளியான செய்திகள் தொடர்பான உண்மைகளை உறுதிப்படுத்த இலங்கை காவல்துறைக்குச் சென்றதாகக் கூறினார்.

நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர் + நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத்! இரண்டு கருங்காலிகள்

May be an image of daisGauthaman Munusamy  :   நேற்று, உன்னாவ் தலித் சிறுமி பாலியல் வன்புணர்வு வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் பாஜக எம்.எல்.ஏ குல்தீப் செங்காருக்கு  2 டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதிகள் தண்டனையை நிறுத்தி, அவருக்கு பிணை வழங்கியும் உத்தரவிட்டதை பற்றி எழுதியிருந்தேன். 
பதிவின் லிங்க் கீழே 
இந்த ஆணையை வழங்கிய இரண்டு நீதிபதிகள் யார், இவர்கள் பின்னணி என்ன என்று பார்த்தால்....
நீதிபதி ஹரிஷ் வைத்தியநாதன் சங்கர்
🔸கோத்ரா கலவரம் வழக்கில் குஜராத் அரசு சார்பில் ஆஜரான சிறப்பு அரசு வழக்கறிஞர்.
🔸ராமஜென்மபூமி வழக்கு வழக்கில் கோயில் கட்ட வேண்டும் என்று வாதிட்ட வழக்கறிஞர்.
🔸 மார்ச் 2025ல் "பிராமண சமூகங்கள் இந்து மறுமலர்ச்சியுடன் வரலாற்று உறவுகளைக் கொண்டுள்ளன" என்ற சர்ச்சைக்குரிய அறிக்கை:

வியாழன், 8 ஜனவரி, 2026

ஸ்ரீதர் வேம்பு விவகாரத்து வழக்கு.. ரூ.15,288 கோடிக்கு ‛பாண்ட்' செலுத்த அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

 tamil.oneindia.com  - Nantha Kumar R  : வாஷிங்டன்: ஜோஹோ நிறுவனத்தின் நிறுவனரான ஸ்ரீதர் வேம்பு மற்றும் அவரது மனைவி பிரமிளா சீனிவாசன் ஆகியோரின் விவாகரத்து வழக்கு அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ரூ.15,288 கோடிக்கு(1.7 பில்லியன் டாலர்) ‛பாண்ட்' தாக்கல் செய்ய அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன் பின்னணி பற்றி இங்கு பார்க்கலாம்.
உலகின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக ஜோஹோ செயல்பட்டு வருகிறது. 
இந்த நிறுவனம் நம் நாட்டை தலைமையிடமாக கொண்டு உலகம் முழுவதும் செயல்பட்டு வருகிறது. 

பாலகிருஷ்ணா மேனன் என்கின்ற சின்மயானந்தா - விவேகானந்தர் பாறை . இலங்கை ஆஞ்சனேயர் சீதா கோயில்களும் அதன் கட்டுக்கதை வசனம் டைரெக்ஷன்!


ராதா மனோகர் 
1942 இல் கேரளாவில் திரு பாலகிருஷ்ண மேனன் என்ற இளைஞர் காங்கிரசின் குயிட் இந்தியா Quit India  இயக்க நடவடிக்கையில் ஈடுபட்டார் . 
அந்த இயக்கத்தின் துண்டு பிரசுரங்களை விநியோகித்தார் 
இவரை கைது செய்யும் நோக்கோடு போலீஸ் தேடிய பொழுது தப்பி ஓடி அன்றய இந்தியாவின் வடமேற்கு எல்லையில் உள்ள அபோத்தாபாத் (இன்றைய  பாகிஸ்தான்)  Abbottabad  என்ற சிற்றூரில் ஒழிந்திருந்தார்.
பிற்காலத்தில் இந்த ஊரில் வைத்துதான் ஒசாமா பின் லாடனை அமெரிக்கா போட்டு தள்ளியது.
இந்த கிராமத்தில் இரண்டு வருடங்கள் ஒழித்திருந்த பின்பு போலீஸார் தன்னை மறந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை ஏற்பட வேறு சில இளைஞர்களோடு பஞ்சாபுக்கு வந்தார்.
ஆனால் அங்கு இவரும் இவரது நண்பர்களும் போலீசிடம்  பிடிபட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.

முலைவரிபோட்ட மலையாளிகளையும், அந்த கேவலத்துக்குப்பொறவும் இந்துமதத்தை தூக்கிப்புடிக்கிற ..

 புகச்சோவ் புகச்சோவ்  : ஊளப்பயவுள்ளய....!
1, சுசீந்திரம் அபிராமி ஆச்சியை ஆற்றின்கல் அம்மவீட்ல அடச்சிவச்சிட்டு, அவ புள்ளைக ராமன்தம்பி, கொச்சுராமன்தம்பி ரெண்டுபேரையும் சூழ்ச்சியா விருந்துக்கு கூப்புட்டு கொன்னுட்டு, தமிழச்சி அபிராமி ஆச்சியின் மகன்களுக்கு சொந்தமான வேணாட்டின் ஆட்சியை, மருமக்கத்தாயத்தின் பேரில்  கொள்ளையடித்த நம்பூதிரிமவன் மார்த்தாண்டவர்மாவை ஆதரிக்கிற கன்னியாக்குமரிக்கார ஊளைகளை, நான் திட்டினா மட்டும் நல்லாயிருவானுகளா என்ன....!
2, முலைவரி கட்டினவனுகளே!
முலைவரி விதித்த நம்பூதிரி நாயர்மார்களின் இந்துமதத்தை ஆதரிக்கிறான்னா....!!!!
அந்த கருமம்புடிச்ச கன்னியாக்குமரி ஊளைகளை, நான் திருந்துங்கடான்னு சொன்னா மட்டும், திருந்திருவானுகளா என்ன...!?
3, கோனாருக்கும், குறவருக்கும், குயவருக்கும், சவளக்காரருக்கும், நாடாருக்கும், ஈழவருக்கும், புலையருக்கும், தீயருக்கும் சொந்தமான சேரநாட்டின் சிற்றரசுகளை, சநாதன மதத்துக்காக ஒழித்துக்கட்டிவிட்டு, பத்மநாபனின் ராஜ்யத்தில் பிரமண ஷத்ரிய வைஷ்ய சூத்ரரை தவிர, வேறுயாருக்கும் ஆட்சியுரிமை இருக்கக்கூடாதுன்னு, வேணாட்டை திருவிதாங்கூர் ஷேத்ர ராஜ்யமாக்கினார்களே....!!!!

திமுக தொண்டர்கள் கூட்டணிக்கு எதிராய் பதிவுகளுக்கு போட வேண்டாம்.தலைவர்களிடம் பேசுங்கள்.

 Krithika Tharan :  அமைதியா இருந்தாலே போதும்
உண்மையை சொன்னால் இணையத்தில் எனக்கு காங்கிரசை விட தி.மு.க நட்புகள் அதிகம். நேரிலுமே அவர்களே அதிகம். கட்சி ரீதியாகவே காங்கிரஸ் நட்புகள் இப்போ அதிகமாகி வருகின்றனர். 
அதுவும் கர்னாடகத்தில் அதிகம்.
தேர்தலில் பல தொகுதிகளில் வேலை பார்த்த நேரடி அனுபவம் உண்டு. இருபக்க சிக்கல்களையும் பார்த்துள்ளேன். கட்சியே இல்லாமல் சிவிக் சொசைட்டி மூலமாகவும், சக்தி அபியான் வழியாக மொழி தெரியாத மாநிலங்களிலும் வேலை செய்துள்ளேன்.
அதைத் தவிர பேட்டிகள், மீடியா நட்புகள் மூலமாய் கள நிலவரத்தை தலைவர்களிடம் எப்படியாவது கொண்டு சேர்த்து விடுவேன். 
இதற்காகவே என் வாட்ஸ் ஆப் செய்திகளை பார்த்து பதில் அளிப்பவர்கள் பலர் உண்டு. கனெக்ட் இங்கு முக்கியம். யாரிடம் சொன்னால் செய்தி போகும் என்பதும் அதன் எதிர்வினையை மீடியாவில் கவனிக்கலாம். அதுக்கெல்லாம் நமக்கு நல்ல பெயர் கிடைக்காது. நல்லது நடக்கணும் என செய்வது. இதன் மூலம் பல கட்சி நட்புகள் உண்டு.
இப்போ தி.மு.க, காங்கிரஸ் சிக்கல்களை இந்த அனுபவம் மூலமாய் கவனிக்கிறேன்.

திராவிடர்-தமிழர் சொல்லுக்கான 50 நிமிட விளக்கம்! இதுக்கு மேல தெளிவா விளக்க முடியாது!!

Adharmam manoj@Eri-Oliyan-Vaenthi : பஞ்சாப்காரன் ஆரிய மரபணு பஞ்சாபி பேசுபவன்.
ஹரியானாகாரன் ஆரிய மரபணு ஹரியான்வி பேசுபவன்.
குஜராத்திக்காரன் ஆரிய மரபணு குஜராத்தி பேசுபவன்.
தமிழன் திராவிட மரபணு தமிழ் பேசுபவன்.
தெலுங்கன் திராவிட மரபணு தெலுங்கு மொழி பேசுபவன்
கன்னடன் திராவிட மரபணு கன்னட மொழி பேசுபவன்.
தமிழ் பார்பனர்கள் ஆரிய மரபணு, சமஸ்கிருத மொழி பேசுபவன் 
குஜராத்தி பார்பனர்கள் ஆரிய மரபணு சமஸ்கிருத மொழி பேசுபவன்
UP பார்ப்பனர்கள் ஆரிய மரபணு சமஸ்கிருத மொழி பேசுபவன்.
இப்போ சீமான் இரண்டு பிரச்னை பண்ணுகிறான்.
பார்பனன் தமிழன் என்கிறான். 
ஆனால் சீமானுக்கு தெரிவிக்க வேண்டியது பார்பனர்கள் ஆரிய மரபணு உடையவர்கள், 

ஜனநாயகன் ரிலீஸ் ஒத்திவைப்பு ! பராசக்தி முன்பதிவும் நிறுத்திவைப்பு!

 மின்னம்பலம்- Kavi : தணிக்கை சான்றிதழ் கிடைக்காததால் சிக்கலை எதிர்கொண்டுள்ள ஜனநாயகன் பட ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படம் வரும் ஜனவரி 9ஆம் தேதி வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்‌ஷன் அறிவித்தது.
ஆனால் மத்திய திரைப்பட தணிக்கை வாரியம், ஜனநாயகன் படத்துக்கு தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை.
இதுதொடர்பாக பட தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு ஜனவரி 9ஆம் தேதி வழங்கப்படும் என்று நீதிபதி ஆஷா கூறியிருக்கிறார்.

புதன், 7 ஜனவரி, 2026

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதவிக்கு இடைத்தேர்தல் ஆபத்து? பதவி போய்விடும் என்று ட்ரம்ப் புலம்பல்

 தினமலர் : வாஷிங்டன்: இடைக்காலத் தேர்தலில் குடியரசுக் கட்சி வெற்றி பெறாவிட்டால் நான் பதவி நீக்கம் செய்யப்படுவேன், என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சொந்த கட்சியினரிடையே புலம்பித் தள்ளியுள்ளார்.
அமெரிக்காவில் புதிய அதிபர் தேர்வு செய்யப்பட்ட பின், அவர் இரண்டாவது ஆண்டை நிறைவு செய்யும் நேரத்தில் இடைக்கால தேர்தல் நடப்பது வழக்கம்.  
இந்த தேர்தல் என்பது அமெரிக்காவில் கீழ்சபையான காங்கிரசில் 435 இடங்களுக்கும், மேல்சபையான செனட்டில் உள்ள 100 இடங்களில் 3ல் ஒரு பகுதியான, 33 இடங்களுக்கும் நடக்கும்.

பாஜக ஆட்சி அமைய எடப்பாடி பாடுபடுகிறார் : முதல்வர் ஸ்டாலின் - அமித்ஷா செய்த நல்ல காரியம் : நன்றி சொன்ன முதல்வர் ஸ்டாலின்

 மின்னம்பலம் -Kavi : திண்டுக்கல் மாவட்டம், வேலுநாச்சியார் வளாகத்தில் இன்று (ஜனவரி 7) நடைபெற்ற அரசு விழாவில்  முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டார். 
அப்போது முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
அமைச்சர்களுக்கு பாராட்டு
பின்னர் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர்,  “எங்களைப் பொறுத்தவரையில், இது ‘ஐ.பி.’ மாவட்டம். திண்டுக்கல் பூட்டு எவ்வளவு உறுதியானதோ, அதே அளவிற்கு உறுதியுடன் இந்த மாவட்டத்தை கட்டிக் காத்து, வளர்ச்சியை நோக்கி அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் நம்முடைய  அமைச்சர் ஐ.பி.

திராவிட தோழர்களுக்கு இருக்கும் ஈழ உணர்வு ஏன் புலம்பெயர் தமிழருக்கு இல்லை

 ராதா மனோகர் : தோழர் அருள்மொழியின் இந்த பேட்டியில் நாம் முக்கியமாக கவனிக்க வேண்டிய சில விடயங்கள் உள்ளன!
போராட்ட காலங்களில் ஏறக்குறைய எல்லா திராவிட அமைப்புக்களுக்கும் புலிகளையே ஆதரித்து நின்றனர்.
அவர்களின் சகோதர படுகொலைகள் இஸ்லாமிய இனச்சுத்திகரிப்பு போன்ற அக்கிரமங்களை கண்டும் காணாதது போல நடந்த கொண்டமை மிகப்பெரிய சோகம்.
ஆனால் நாம் அதை இப்போது கடந்து போகவேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
திராவிட இயக்கங்களின் ஆதார கோட்பாடே சுயமரியாதைதான் - சமூகநீதிதான் -சுயசிந்தனைதான்!   
இதில் எந்த புரிதலும் அற்ற துரோகிஸ்தானியர்களை திராவிட சித்தாந்தவாதிகள் ஆதரித்தமை திருத்தவே முடியாத ஒரு வரலாற்று தவறுதான்.
இப்போது அவர்களில் பலரும் இது பற்றி சிந்திக்கிறார்கள்.
மறுபரிசீலனை செய்கிறார்கள்.

செவ்வாய், 6 ஜனவரி, 2026

திருப்பரங்குன்றம் தீபத்துாணில் தீபம் ஏற்ற வேண்டும்; தமிழக அரசின் அப்பீல் மனு தள்ளுபடி

 தினமலர் :  மதுரை : திருப்பரங்குன்றம் மலை தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று கோரிய வழக்கில் , அரசின் மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன . நீதிபதி ஜி . ஆர் . சுவாமிநாதன் தீர்ப்பை உறுதி செய்யும் வகையில் இரு நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது
திருப்பரங்குன்றம் மலை உச்சியிலுள்ள தீபத்துாணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என , தனி நீதிபதி ஜி . ஆர் . சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்தார் .

CBI பிடியில் சிக்கிய விஜய்! விசாரணையில் நடந்தது என்ன? நக்கீரன் கோபால் பேட்டி

 நக்கீரன் :   கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி இரவு நடைபெற்ற தவெக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பெண்கள், குழந்தைகள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். 
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 மேலும், ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் 3 பேர் கொண்ட ஆணையத்தை அமைத்து ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மேற்பார்வையில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

பராசக்தி - 1965 இந்தி திணிப்பு போராட்டம் இலங்கை தமிழ் அரசியலுக்கு உதவியது


 ராதா மனோகர்
: 1965 இல் நடந்த  இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் வெடித்தது.
இதற்கு முன்பே 1939 இலும் இந்தி எதிர்ப்பு போராட்டம் தமிழகத்தில் தீவிரமாக நடந்தது. 
65 இல் நடந்த போராட்டத்தை மையமாக வைத்து  புதிய பராசக்தி திரைப்படம் வெளியாக உள்ளது 
இது சாதாரண மக்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களுக்கும் பெரும்   ஆர்வத்தை தூண்டி இருக்கிறது! 

May be an image of text that says "பராசக்தியால் திமுக விற்கு ஆவதை விட அழிவது தான் அதிகமாக இருக்கும் போல காங்கிரஸ் காரர்கள் மட்டும் படம் பார்க்காமல் இருக்க ஏதாவது Option இருக்கா? ym CHIEF MINISTER m. (CONGRESS) mt TAMILMTMEY EMES TAMII Google GoogleP அடேங்கப்பா, இது நம்ம லிஸ்டுலயே இல்லையே!"
இது பற்றி அந்த கால இலங்கை பத்திரிகைகளில் இச்செய்திகள் எப்படி வெளியாகி இருக்கும் என்ற ஆவலின் காரணமாக தேடியதில் பல செய்திகள் கிடைத்தன 
இந்த போராட்டம் இலங்கை தமிழ் மக்களிடையே பெரும் எழுச்சியையும் உணர்ச்சியையும்  எழுப்பி இருந்தது.
அந்த காலக்கட்டங்களில் வியட்நாமில் பௌத்த மதத்திற்கு எதிராக பல அடக்கு முறைகள் நடந்துள்ளன.
அதற்கு இலங்கை சர்வதேச மட்டத்தில் பல கண்டன குரல்களை எழுப்பி இருந்தது 

குடியிருக்கும் வீட்டை கொழுத்தி குளிர் காயும் தமிழக காங்கிரஸ்

 Uma Pa Se  :  சொந்த அண்ணன் அழகிரியையே arms distance ல் வைக்க முடிந்த ஸ்டாலினால், 
நிச்சயமாக நட்புணர்வினால் brother என்று சொல்லும் Rahul Gandhi யை arms distance ல் அல்லது தாராளமா எங்க போக பிடிச்சிருக்கோ அங்க நல்லா இருங்க என்று அனுப்பி வைக்க இயலும். இயலவும் வேண்டும்.
குரங்கு குட்டியை விட்டு ஆழம் பார்க்கும் என்பார்கள்.
அவ்வாறான குட்டிகள் தான் மாணிக்க தாகூர், இந்த பிரவீன் சக்கரவர்த்தி வகையறா எல்லாம். அவர்களுக்கான கண்டனங்களோ எதிர்வினையோ Congress high command கொடுத்த பாடில்லை. 
இத்தனைக்கும் எவ்வித blackmail politcsக்கும் இடம் கொடுக்காத ஆள் தான் மு.க ஸ்டாலின். அப்படி இருக்கையில் போயும் போயும் உத்திரபிரதேசம் உத்தம தேசம் என்று மண்டிபோட்டு மானசீகமாய் தொழும் ஆட்களுக்கு கூட்டணிமேல் மரியாதை எல்லாம் இருக்க வாய்ப்பில்லை.
இத்தனைக்கும் இவர்தான் கரூர் விவகாரத்தில் Hotline போட்டு விஜயை ராகுல் காந்தியிடம் பேச வைத்தவர் என்று பில்ட் அப் எல்லாம் கொடுத்தார்கள். அவ்வாறன ஆள் தான் இந்த உத்திரபிரதேசம் வாழ்க என்கிறார். 

இலங்கை மீண்டும் நிதி வங்குரோத்து அடையுமா?

 வீரகேசரி : 2022 பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டு வந்த இலங்கைக்கு, 2025 நவம்பரில் தாக்கிய ‘தித்வா’ புயல் புதிய சவாலாக அமைந்துள்ளது.
4.1 பில்லியன் டொலர் நேரடிச் சேதங்கள் மற்றும் 3.7 லட்சம் வாழ்வாதார இழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், நாடு மீண்டும் வங்குரோத்து நிலையை அடையுமா என்ற அச்சம் எழுந்துள்ளது.
121 சர்வதேச நிபுணர்கள் கடன் மீள்செலுத்துகையை நிறுத்தி, புதிய கடன் மறுசீரமைப்புக்குச் செல்ல வலியுறுத்துகின்றனர்.
இருப்பினும், 2022 போன்ற திட்டமிடல் சீர்குலைவு தற்போது இல்லை எனவும், இந்தியாவின் 450 மில்லியன் டொலர் போன்ற சர்வதேச உதவிகள் கிடைப்பதாலும் மீள முடியும் என உள்நாட்டு நிபுணர்கள் கருதுகின்றனர்.

திங்கள், 5 ஜனவரி, 2026

நகைமுகன் - தமிழகத்தின் கோடரிக்காம்பு -விஷங்களை விதைத்த நஞ்சுமுகன்

May be an image of one or more people and people smiling

 Giri Sundar  :  திமுக ஆட்சியைக் கலைக்க 'காரணம்' காட்டிய கைக்கூலி... 'யார் தமிழர்' எனும் நச்சு விதையை முதலில் விதைத்தவர் - நகைமுகன்! (14 Mar 2016 காலமானார்) 
தமிழக அரசியலில் இன்று நாம் காணும் பல குழப்பங்களுக்கும், பிரிவினைவாத பேச்சுகளுக்கும் "காப்புரிமை" (Patent) சொந்தக்காரர் ஒருவர் உண்டென்றால் அது நகைமுகன் தான்.
வெறும் ஆள்கடத்தல், ரியல் எஸ்டேட் ரவுடியாக மட்டுமே அறியப்பட்ட இவரின் அரசியல் முகம் அதைவிட ஆபத்தானது. 90-களின் இறுதியில் திமுக ஆட்சியைக் கலைக்கத் துடித்த டெல்லி சக்திகளுக்கும், தமிழகத்தில் சாதி-இன வேற்றுமையை உருவாக்க நினைத்தவர்களுக்கும் கிடைத்த மிகச்சிறந்த ஆயுதம் இவர்தான்.
1. திமுக ஆட்சியைக் கலைக்கத் தீட்டப்பட்ட 'நாடகம்':
90-களின் பிற்பகுதியில் கலைஞர் கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருந்த நேரம். எப்படியாவது "சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டது", "தமிழகத்தில் தீவிரவாதம் தலைதூக்கிவிட்டது" என்று காரணம் காட்டி, 356-வது பிரிவின் கீழ் ஆட்சியைக் கலைக்க சுப்பிரமணிய சுவாமி உள்ளிட்ட டெல்லி மேலிடத் தலைவர்கள் துடித்துக் கொண்டிருந்தனர்.

இயக்குநர் பாரதிராஜா தீவிர சிகிச்சை பிரிவில்- மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு,

 மாலை மலர் :  'சிவப்பு ரோஜாக்கள்', 'கிழக்கு சீமையிலே', 'முதல் மரியாதை', 'வேதம் புதிது' என தனது படைப்புகளால் இந்திய சினிமாவையே கவனிக்க வைத்த இயக்குனர் பாரதிராஜா, தனது மகன் மனோஜ் மறைவுக்கு பிறகு (கடந்த மார்ச் மாதம்) மனமுடைந்து போனார்.
உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜாவுக்கு வீசிங் போன்ற சுவாச பிரச்சனைகளும் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த வாரம் பாரதிராஜா அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

திராவிட தலைவர் எல் கணேசனுக்கு வைகோ செய்த துரோகங்கள்

No photo description available.

 வல்லம் பசீர்  :   பெரிய கருப்பு (வைகோ)  நீலிக்கண்ணீர் வடிகிறது .
எல்.ஜி என்ற மனிதர் இல்லாமல் போயிருந்தால் பெரிய கருப்பு (வைகோ) அரசியலில் எந்த அடையாளத்தையும் பெற்றிருக்காது . பேரறிஞர் பெருந்தகையிடம் பெரிய கருப்பை அறிமுகப்படுத்தியவர் எல்ஜி . திராவிட மாணவர் முன்னேற்ற கழகத்தில் பெரிய கருப்புக்கு (வைகோ)  துணைச் செயலாளர் பொறுப்பு வழங்கி அவருக்கு முகவரி தந்தவர் எல்.ஜி .  
பெரிய கருப்பு (வைகோ) முதன்முதலாக தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை பெற்றுத்தந்தவர் எல்.ஜி .
பெரிய கருப்பு ( வைகோ) தனிக்கட்சி துவங்கி தமிழ்நாட்டு அரசியலில் நிலைபெற வேராகவும் , விழுதாகவும் இருந்தவர் எல்.ஜி . 
பெரிய கருப்பு ( வைகோ) சிறையில் இருந்த 19மாத காலம்  இயக்கத்தை கட்டிக்காத்தவர் எல்.ஜி .

கலைஞரின் பராசக்தி பெயரில் புதிய பராசக்தி வெளியாவது ஏற்புடையதா?

 ராதா மனோகர் : கலைஞரின் பராசக்தி பெயரை மீண்டும் பயன்படுத்தி பராசக்தி என்ற பெயரில் ஒரு படம் வெளியாகிறது!
பழைய நல்ல  படங்களின் பெயர்களை  மீண்டும் புதிய படங்களுக்கு சூட்டுவது 
ஒரு தவறான நடைமுறை!
அதிலும் கலைஞரின் பராசக்தி ஒரு பெரும் சமூக அரசியல் புரட்சிக்கு வித்திட்ட படம்!
புதிய பராசக்தியின் வரவு பழைய பராசக்திக்கு மீள்வரவை கொடுக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அதிலும் கண்ணை கவரும் வண்ண கலரில் கலைஞரின் பராசக்தி விரைவில் வரும் என்று நம்புகிறேன்!
பராசக்தி பற்றி சில நினைவுகள்  மீள் பதிவு :    திராவிட சினிமாக்கள் அரங்கேற்றிய சமூக புரட்சி பற்றி இன்று பெரிதாக பேசப்படுவதில்லை.
மாறாக ஆரிய பார்ப்பனீய சினிமாக்கள் ஏதோ மக்களின் நலன் சார்ந்த கருத்துக்களை விதைப்பதாக பொதுவெளியில் பரப்புரை நடக்கிறது
அன்றைய திராவிட சினிமாக்கள் வெறும் சமூக சீர்திருத்தங்களை தாண்டி ஒரு சிந்தனை புரட்சியை நடத்தி காட்டியிருக்கிறது

குஷ்பு : பாஜகவுக்கு மட்டுமல்ல சனாதனத்துக்கும், கடவுளுக்கும் எதிரி திமுகதான்!

 hindutamil.in  - செ.ஞானபிரகாஷ்  :  புதுச்சேரி: “நீங்கள் வெல்லும்போது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் சரியாக வேலை செய்கிறதா?” என்று காங்கிரஸ், திமுகவுக்கு நடிகை குஷ்பு கேள்வி எழுப்பினார்.
புதுச்சேரியில் பாஜக அனைத்து பிரிவுகளின் மாநாட்டில் இன்று மாலை பங்கேற்ற தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் குஷ்பு பேசியதாவது: “புதுச்சேரியில் பாஜக ஆட்சி நடக்கிறது என்று சொல்வது பெருமையாக இருக்கிறது. மோடியை திட்டுவதற்காக மட்டுமே எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் சிந்திக்கிறார்.

லாட்டரி மார்ட்டினை மிரட்டிய அமித்ஷா! அதிர்ச்சியில் ஆதவ்- சார்ல்ஸ்!

 லாட்டரி மார்ட்டினை மிரட்டிய அமித்ஷா! அதிர்ச்சியில் ஆதவ்- சார்ல்ஸ்!

நக்கீரன் -இரா. இளையசெல்வன்  :  புதுச்சேரியில் லட்சிய ஜனநாயக கட்சி எனும் பெயரில் அரசியல் கட்சியை ஆரம்பித்துள்ள லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ்சார்லஸ் மார்டின், கட்சி ஆரம்பித்த 20 நாட்களிலேயே கட்சியை நடத்த முடியாமல் திண்டாடிக் கொண்டிருக் கிறார். இந்த நிலையில், மத்திய அமைச்சர் அமித்சாவை சந்தித்துள்ளார் லாட்டரி அதிபர் மார்ட்டின். 
தனது பெயரின் முதல் எழுத்துக்களை வைத்து ஜே.சி.எம். எனும் பெயரில் மக்கள் மன்றத்தை நடத்தி வருபவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின். மக்களைச் சுரண்டி லாட்டரி பிசினஸில் கொழுத்த பணத்தை வைத்து இந்த மக்கள் மன்றத்தை நடத்திவந்த சார்லஸ், தமிழகத்தில் நடிகர் விஜய் கட்சி ஆரம்பித்ததைப் பார்த்து, புதுச்சேரியில் நானும் கட்சி ஆரம்பிப்பேன் என சொல்லி வந்தார். 

ஞாயிறு, 4 ஜனவரி, 2026

பேராசிரியர், சீனியர் மாணவிகளால் சித்ரவதை.. தலித் மாணவி உயிரிழப்பு - இமாச்சலப் பிரதேசத்தில் - வீடியோ ஆதாரம்

மாலை மலர் : இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்த தலித் மாணவி, பேராசிரியர் மற்றும் சீனியர் மாணவிகளின் துன்புறுத்தலால் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் உள்ள அரசு கல்லூரியில் பயின்ற 19 வயது தலித் மாணவி, ராகிங், பாலியல் துன்புறுத்தல் மற்றும் மன உளைச்சலால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த டிசம்பர் 26ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முன்னதாக அந்த மாணவி இறப்பதற்கு முன்பு கண்ணீர் மல்க பேசிய வீடியோ ஒன்று நேற்று வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திமுக - எல் கணேசன் காலமானார் - பழம்பெரும் திராவிட தலைவர்

 மின்னம்பலம் - Mathi  : திமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான எல்.கணேசன் என்ற எல்ஜி (வயது 92) மறைவைத் தொடர்ந்து அவரது உடலுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்தினார்.
திமுகவின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் எல்.கணேசன் (வயது 92). காவிரி டெல்டா மாவட்டங்களில் பேரறிஞர் அண்ணா காலம் முதல் திமுகவை வளர்த்தெடுத்த தளகர்த்தர். 1965 இந்தி திணிப்பு எதிர்ப்பு போரின் தளபதிகளில் ஒருவராக திகழ்ந்தவர். சட்டமன்றம், சட்ட மேலவை, மக்களவை, மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். திமுகவின் உயர்நிலை செயல் திட்ட குழுவின் உறுப்பினராக இருந்து வந்தார்.

ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் கைதும் பின்னணியும் - தேவானந்தாவுக்கு அடுத்து என்ன நேரப்போகிறது? – dbsjeyaraj

ரணிலை சந்தித்தார் டக்ளஸ் ~~~~~~~~ செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா  அவர்கள், தேசிய வைத்தியசாலையில் நேற்று அனுமதி்க்கப்பட்ட முன்னாள் ...

 டி.பி.எஸ். ஜெயராஜ் ; ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி.) தலைவரும் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கிறார். 
முன்னாள் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான அவர் டிசம்பர் 26 வெள்ளிக்கிழமை கொழும்பில் பொலிசாரால் கைது செய்யப்பட்டு மறுநாள் சனிக்கிழமை கம்பஹா மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டபோது 2026 ஜனவரி 9 ஆம் திகதிவரை அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 
அதற்கு முன்னதாக மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் பெறப்பட்ட 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
குற்றச்செயல் கும்பலைச் சேர்ந்த ஒருவருக்கு சுடுகலன் ஒன்றைக் கைமாற்றியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக இடம்பெற்று வரும் விசாரணை ஒன்று சம்பந்தமாகவே தேவானந்தா கைது செய்யப்பட்டதாக பதில் பொலிஸ் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் மினுர சேனரத் ஊடகங்களுக்கு கூறினார். தேவானந்தாவுக்கு வழங்கப்பட்டதாக கைத்துப்பாக்கி ஒன்று பாதாளஉலக குழுவின் தலைவரும் போதைப் பொருள் கடத்தல்காரருமான ‘ மகந்துரே மதுஷ் ‘ என்பவர் வசம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.