சனி, 27 நவம்பர், 2010

3 ரெட்டிகள் மோதல் துவங்கியது.சக்தியற்றவர் ராகுல் : ஜெகன் டி.வி., சொல்கிறது: ஆந்திராவில்

ஆந்திராவில் மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டியின் தொல்லையை எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது ஆந்திர மாநிலத்தின் தற்போதைய கேள்வி. சமீப காலமாக காங்., கட்சிக்கு எதிராக அவரது சொந்த சாக்சி டி.வி.,யில் நிகழ்ச்சி நடந்து வருகிறது. கடந்த வாரம் நடத்தப்ட்ட நிகழ்ச்சியில் பிரதமர் ஒரு ரப்பர் ஸ்டாம்பு என்றும் எதற்கெடுத்தாலும் சோனியாவின் முடிவை எதிர்பார்த்து இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. இது குறித்து காங்., உயர் மட்டம் இது தொடர்பான முழு விவரத்தையும் அனுப்பி வைக்குமாறு மாநில காங்., பொறுப்பாளர்களிடம் கேட்டது.

இதற்கிடையில் நேற்று இந்த சாக்சி டி.வி.,யில் ஒரு நிகழ்ச்சி நடந்தது. இதில் பீகார் தேர்தல் முடிவுகள், காங்கிரசுக்கு ஏற்பட்ட தோல்வி குறித்து கருத்து பரிமாற்றம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் பீகார் மாநிலத்தில் காங்கிரசுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு ராகுலின் அணுகுமுறையின் நுணுக்கத்தில் உள்ள குறையே . ராகுலின் வழிகாட்டுதல் சரி இல்லை. இவரது பிரசாரத்திற்கு ஆதரவு இல்லை. இவர் ஒரு சக்தியற்றவராகவே கருதப்படுகிறார் என்றும் விமர்சித்தது. இந்த பிரச்னை காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

ஜெகன்மோகன் கட்சிக்கு விரோதமாக செயல்படுகிறார் என மத்திய அமைச்சரும் மாநில மூத்த தலைவருமான ஜெயபால் ரெட்டி கூறியுள்ளார். அவரது டி. வி., நிகழ்ச்சிகள் காங்கிரஸ் கட்சியை பலப்படுத்தும் நோக்கில் உள்ளது. இவரது தந்தை ராஜசேகர ரெட்டி காங்கிரஸ் கட்சியின் நம்பி்க்கை ஸ்திரமாக இருந்தவர் ஆனால் அவரது மகன் போக்கு வேறு விதமாக இருக்கிறது. இவர் மீது எடுக்கப்படும் முடிவுகள் விரைவில் இருக்கும் என்றார்.

டில்லியில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி : இந்நிலையில் புதிதாக முதல்வராக பொறுப்பேற்ற கிரண்குமார் ரெட்டி டில்லி சென்றுள்ளார். அங்கு அவர் காங்., தலைவர் சோனியாவை சந்தித்து பேசுகிறார். யார், யாரை அமைச்சராக நியமிக்கலாம், என்றும் மாநில அரசியல் நிலவரம் குறித்தும் விவாதிக்கிறார்.

ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை: ஆந்திராவில் ராஜ சேகர ரெட்டி மறைவுக்கு பின்னர் ஜெகன்மோகன் ரெட்டி, முதல்வராகவோ அல்லது மத்திய அமைச்சராகவே நியமிக்கப்படலாம் என்ற அவரது ஆதரவாளர்களின் கனவு வீண் ஆகிப்போனது. இதனையடுத்து தந்தை மறைவு காரணமாக அதிர்ச்சியில் இறந்த குடும்பத்தினரை சந்திக்க செல்வதாக யாத்திரை புறப்பட்டார்.

இதுவும் காங்கிரசுக்கு ஜெகன் மீது அதிருப்தியை அதிகரித்தது.  கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனது ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோனையும் ந‌டத்தியுள்ளார் ஜெகன். இந்நிலையில் இவரது டி.வி.,க்க்ள் நடத்தும் நிகழ்ச்சியால் ஜெகன் மீது எந்த மாதிரி நடவடிக்கை எடுக்கலாம், இதனால் கட்சிக்கு இழப்பு இருக்குமா என்றும் காங்., உயர்மட்ட தலைவர்கள் யோசிக்கத்துவங்கியுள்ளனர்.
நா.ஜெயகுமார். - PONDICHERRY,இந்தியா
2010-11-27 15:54:58 IST
இது தான் உண்மை. ஜகன் அவர்களே உங்களை போல ஆட்கள் தான் பிஜேபி க்கு தேவை. அப்போ தான் இந்த நாட்டை காப்பாற்ற முடியும். எதுவாக இருந்தாலும் நல்ல முடிவாக எடுப்பீர்கள் என நம்புகிறோம்...
மு.கோபால் - கரூர்,இந்தியா
2010-11-27 15:46:12 IST
முதல்ல ராகுல் காந்தி மாதிரி வாரிசு கோட்டால வர்ற அரசியல் வாதிகளை ஒதுக்கி தள்ளிட்டு உண்மையா மக்களுக்காக உழைக்கிறவங்கள கண்டு பிடிங்கப்பா. காமராஜர் இருந்த கட்சில இப்போ கழிசடைகளா இருக்கு வெட்ககேடு...
சில்லு வண்டு - துபாய்குறுக்குதெரு,இந்தியா
2010-11-27 14:20:01 IST
இவரு சொல்வது ஒரு பக்கம் உண்மை தான்;;;;...
raja - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-11-27 14:15:19 IST
இந்த இத்துப்போன ராகுல் காந்தியால் ஒன்றும் ... கூட முடியாது, என்பதை அனைவரும் அறிவார்கள். அதனை சாக்ஷி தொலைக்காட்சி உறுதிப்படுத்தியுள்ளது. வரும் தேர்தலில் நமது காங்கிரஸ் கட்சி டமால் தான்....
ebenezer - chennai,இந்தியா
2010-11-27 13:48:06 IST
தம்பி ஜெகன், செய்வதை நன்றாக செய். இந்திய காங்கிரஸ் தலைவர்களில் நீ ஒருத்தன் தான் சுத்த ஆண் பிள்ளையாக இருக்கிறாய். உன்னை பெற்ற தாயை கடவுள் ஆசிர்வதிப்பாராக. எனக்கு விவரம் தெரிந்ததிலிருந்து காமராஜர் தமிழ்நாட்டை நல்ல கண்ட்ரோல் ல் வைத்திருந்தார். இந்த நன்றி கெட்ட ராகுலின் பாட்டி இந்திராகாந்தியின் சுயனத்தால் தூக்கி எறியப்பட்டு அவமானப்படுத்தபட்டார். அதோடு தமிழ்நாட்டில் அழிந்தது காங்கிரஸ். உன் அப்பா, அதேபோல் ஆந்திராவில் காங்கிரஸ் சை நன்றாக வளர்த்து வந்தார். உனக்கு இருக்கும் பிடியை விட்டுகொடுக்காதே. மத்தியில் காங்கிரஸ் ஆட்சி கவிழ நாட்கள் எண்ணப்பட்டுவிட்டது. ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூட்டு குழு விசாரணைக்கு போனால் சோனியாவின் ஊழல் வெளி வந்துவிடும். அதோடு முடிந்தது காங்கிரஸ். சோனியா குடும்பமும் எங்கே ஒடபோகுதோ தெரியவில்லை. அடுத்தது பி ஜே பி ஆட்சி தான்....
பிரபு - மதுரை,இந்தியா
2010-11-27 13:30:34 IST
இது மன்னர் ஆட்சி அல்ல, ராஜசேகர ரெட்டி ஆந்திர மக்களின் ஏகோபித்த ஆதரவோடும், அரசியல் முதிர்ச்சியோடும் செயல்பட்ட தலைவர். அவரோட வாரிசு என்பதால் மட்டுமே மக்களின் ஆதரவு வந்து விடாது. தந்தையே இழந்து நிற்கிற தனயன் endr...

Kamalahasan:உதவுவதால் நான் தியாகி இல்லை, இது என் கடமை! - கமல்ஹாசன்

 
                    னது ரசிகர் மன்றங்களை நற்பணி இயக்கங்களாக மாற்றிய முதல் நடிகர் கமல்ஹாசன் தான். பல சமூக பிரச்சனை களுக்காக தனது பல்வேறு தருணங்களில் தனது முழு ஆதரவையும் அளித்து வரும் நடிகர்களில் கமல்ஹாசன் முக்கியமானவர். தனது 'மன்மதன் அம்பு' படத்தின் ரிலீஸ் வேலைகள் இருந்தாலும் 'பெற்றால் தான் பிள்ளையா?' என்ற பிரச்சாரத்தின் மூலம் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தேவையான ஆதரவை திரட்டி வருகிறார் கமல்.

 

தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் சார்பில், ஊடக கலந்துரையாடல் நிகழ்ச்சி இன்று (27.11.2010) நடைபெற்றது. இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். 

கமல்ஹாசன் பேசுகையில், எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு தகுந்த சரியான கல்வி, ஊட்டச்சத்தான உணவு மற்றும் மருத்துவ சிகிச்சைகள் கிடைக்கச் செய்வது நாம் ஒவ்வொருவரின் கடமை. பொதுமக்களின் ஆதரவு பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வாழ்வில் பெரும் மாற்றத்தினை உருவாக்கும். ஒவ்வொரு குழந்தைக்கும் கனவுகள் உண்டு. அவர்களின் கனவுகளை நினைவாக்க நாம் அவர்களுக்கு உதவ வேண்டும். 

இந்த குழந்தைகளுக்கு உதவ நான் சித்தமாய் இருக்கிறேன் என்பதை அவர்களிடம் நான் தெரிவித்தேன் அதற்காக அவர்கள் என்னை பாராட்டினார்கள், பாராட்டுவதற்காக அதை நான் செய்யவில்லை. இது என் கடமையாகவே நான் நினைக்கிறேன். நாம் நமக்குள்ளே ஒருவருக் கொருவர் பாராட்டிக் கொண்டே இருக்க வேண்டாம், சமுதாயத்தில் நமக்கான வேலைகள் நிறைய இருக்கிறது. இது நான் செய்ய வேண்டிய கடமை என்பதை விட, நாம் செய்ய வேண்டிய கடமை. எல்லோரும் சேர்ந்தால் சுமையைக் குறைக்க முடியும். எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட சில குழந்தைகளை நான் நேரில் சந்தித்தேன். அவர்களைப் பார்க்கும் போது தான், நான் செய்ய வேண்டிய கடமைகளை நான் உணர்தேன்.



இதுவரை என்னை நீங்கள் விளம்பர படங்களில் பார்த்திருக்கவே முடியாது. விளம்பரங்களில் வரும் சம்பாத்தியம் எனக்கு தேவையில்லை என்று நினைத்து   தேடி வந்த பல வாய்ப்புகளை எல்லாம், கொள்கை ரீதியாக உதறித் தள்ளியவன் நான். ஆனால் அரசாங்கத்திற்கு எங்களுடைய உள்ளுணர்வை தெரிவிக்கும் வகையில் ஒரு முதல் அடியை எடுத்து வைக்கலாம் என்றே நினைக்கிறேன். 

நான் விளம்பரப் படங்கள் செய்வதாக இருந்தால் அந்த பணத்தை தொடமாட்டேன். அதை அப்படியே இந்த சமுதாய வளர்ச்சிக்கு பயன்படுத்துவதாக இருந்தால் விளம்பரப் படங்களில் நடிக்க நான் தயார். என்னுடைய வருவாய் எனக்கு வசதியாக இருக்கும் என்பதை என் கலை உலகம் எனக்கு கொடுத்துள்ளது. 250  சம்பளத்தில் வேலையை துவங்கினேன். 10,000  ருபாய் சம்பாதித்தால் அதுவே போதும் என்று நான் நினைத்தது உண்டு. ஒரு லட்சம் சம்பளம் கொடுத்தால் ஒரு படம் மட்டும் நடித்து விட்டு அப்படியே வசதியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால் இன்று கோடிகளை எட்டிய பிறகு தான்... நான் நினைத்த வாழ்கையை வாழ்ந்து பார்க்க முடிந்தது.

மற்ற நடிகர்கள் எல்லாம் எத்தனையோ சந்தர்பத்தில் விளம்பர படங்களில் என்னை நடிக்க சொல்லியிருக்கிறார்கள். ஆனால் அப்போது நான் மறுத்து விட்டேன். பொருட்கள் விற்பது என் வேலை இல்லை. எனக்கு தெரிந்த வேலை சினிமா மட்டுமே. அதனால் தான் 25  வருடமாக அந்த வேலையை நான் நிராகரித்து வந்தேன். ஆனால் விளம்பரப் படங்களில் நான் நடிப்பதால் அதில் வரும் பணம் இப்படி ஒரு நல்ல செயலுக்கு உதவுமேயானால் அதை செய்ய நான் தயார்.

அரசாங்கத்திடம் ஒரே ஒரு வேண்டுகோள், ஒரு தனி மனிதனாக நான் என்ன கொடுக்கிறேனோ, அதே மாதிரி இரண்டு மடங்கு பணம் நீங்கள் கொடுத்து விடுங்கள். இதை நிர்பந்தமாக வைக்க முடியாது 
என்றாலும் ஒரு வேண்டுதலாகவே வைக்கிறேன்.  

என்னென்ன உதவிகள் என்னால் செய்ய முடியுமோ அதை நான் செய்ய தயாராக இருக்கிறேன். இதை ஒவ்வொருவரும் செய்ய வேண்டும் என்பதே என் வேண்டுகோள். நான் செய்வதை தியாகமாக நான் கருதவில்லை. இதுவரை வேண்டாம் என்று ஒதுக்கி வைத்ததை இவர்களிடம் கொடுக்கிறேன். உங்களிடமும் ஏதாவது அப்படி இருக்குமேயானால் அதை இதற்காக பயன்படுத்துங்கள் என்றார்.

கமலின் 'பெற்றால் தான் பிள்ளையா?' என்ற இந்த பிரசாரத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகை திரிஷா, நடிகர்கள் மாதவன், ரமேஷ் அரவிந்த் போன்றவர்கள் முன்வந்துள்ளனர்.

கனிமொழி கேள்வி?தமிழர் புனரமைப்பு பணிகள் இந்தியாவுக்கு திருப்தி அளிக்கிறதா?


இலங்கையில் தமிழர் புனரமைப்பு பணிகள் இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா என, கனிமொழி எம்.பி.,  கேள்வி எழுப்பினார்.
இலங்கையில், உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் மக்களுக்கு வீடு கட்ட மத்திய அரசு வழங்கியுள்ளள பணத்தை இலங்கை அரசு சரிவர பயன்படுத்த வருகிறதா? அந்தப் பணிகள், இந்திய அரசுக்கு திருப்தி அளிக்கிறதா? இலங்கை தமிழர்களுக்கு சம அதிகாரம் வழங்க வகை செய்யும் 13வது திருத்தத்தை அமல்படுத்த இலங்கை அரசு தயாராக உள்ளதா என்று கனிமொழி எம்.பி. கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு வெளியுறவுத்துறை இணையமைச்சர் பிரனீத் கவுர் அளித்துள்ள பதிலில்,

இலங்கையில் இடம் பெயர்ந்த இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்டிக் கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள், முகாம்களில் உள்ள அனைத்து தமிழர்களும் மறுகுடியேற்றம் செய்யப்பட்டு விடுவர் என்று இலங்கை அதிபர் ராஜபக்சே உறுதி அளித்துள்ளார்.
தமிழர் அமைப்புகள் மற்றும் பிரரையும் இணைத்து, அதிகார பரவல் குறித்து இலங்கை அரசு பேச்சு 
நடத்த வேண்டும் என்று இந்தியா தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் இந்தியா வந்த இலங்கை அதிபர், அனைத்து சமுதாயத்தினரும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வு காண முயற்சி எடுப்பதாக கூறினார் என்று இணையமைச்சர் பிரனீத் கவுர் தெரிவித்துள்ளார்.

தோழர் செந்தில்வேல் என்ன நீங்க பேசுறீங்க……


ரி.பி.சியில் நடைபெறும் அரசியல் கலந்துரையாடல்களை சில வேளை கேட்கும்போது ஒரே நகைச்சுவையாக இருக்கும். அரசியல் தலைவர்கள் பங்குபற்றும் நிகழ்ச்சியென்றால் அது சில சமயங்களில் காnடியாக இருக்கும்.
போன வியாழக்கிழமை நடைபெற்ற அரசியல் கலந்துரையாடலில் தற்போது ஐரோப்பாவில் நிற்கும் புதிய ஜனநாயக மாக்சிய லெனிய கட்சியின் தலைவர் தோழர் செந்தில்வேல் அவர்கள் தொலைபேசியூடாக கலந்து கொண்டார்.
கடந்தகாலங்களில் புலிகளின் போராட்டத்தை பகிரங்கமாக ஆதரித்த கட்சிகளில் தோழர் செந்தில்வேல்  அவர்களின் பு.ஜ.மா.லெ.கட்சி முக்கியமானது. புலிகளின் அராஜகங்களுக்கு எதிராக குரல் கொடுக்காமல் புலிகளை ஆதரித்து நின்றது. புலிக்கும் இடதுசாரிக்கொள்கை களுக்கும் ஏழாம் பொருத்தம். வர்க்கப்போராட்டம் என்றால் கிறுக்குப்போராட்டம் என விளக்கம் கொடுக்கும் புலிகளின் போராட்டத்தில் என்ன நியாயத்தை கண்டு பு.ஜ.மா.லெ.கட்சி ஆதரித்ததோ தெரியவில்லை.
தற்போது புலிகள் இல்லை. தோழர் செந்தில்வேல் புலிகளையும் விமர்சனத்திற்கு உட்படுத்துகிறார். நல்ல விடயம். தமிழ்மக்கள் மத்தியில் இருந்த கொஞ்ச நஞ்ச இடதுசாரிச் சிந்தனைகளுக்கு ஆப்பு வைத்ததே புலிகள் இயக்கம் அது ஆடிய கரகாட்டத்தில் எல்லாச் சிந்தனைகளும் மழுங்கடிக்கப்பட்டு புலியிசம் மட்டுமே தமிழ்மக்கள் கட்டாயம் ஏற்றுக்கொள்ள வேண்டிய கொள்கையாக இருந்தது.
அப்போதெல்லாம் தோழர் செந்தில்வேல் போன்றவர்களால் புலியை எதிர்த்துப்போராட முடியவில்லை. அப்படி எதிர்த்திருந்தால் என்னவாகியிருப்பார் என்பதை நாங்கள் சொல்லித்தான் தெரியவேண்டும் என்றில்லை.
தற்பேதைய நிலமை என்ன. புலிகள் இல்லை. தோழர் செந்தில்வேல் அவர்களால் சுதந்திரமாகப் பேசமுடிகிறது. அரசாங்கத்தையும் புலிகளையும் ஏன் தமிழ்கட்சிகளையும் பகிரங்கமாக விமர்சிக்க முடிகிறது.
இந்த மாற்றம் எப்படி ஏற்பட்டது. இதற்காக யார் யார் எல்லாம் போராடினார்கள். இது தெரியாதா தோழர் செந்தில்வேல் அவர்களுக்கு
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தோழர் செந்தில்வேல் அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்பதே எமது கருத்து. எல்லாவற்றிற்கும் மாக்சிய நிலைப்பாட்டையே உதாரணமாக காட்டிய அவர் நடைமுறை பிரச்சினைகளுக்கான தீர்வு தொடர்பாக தெளிவாக விளக்கத்தை தரமுடியவில்லை.
எல்லாமே பிழை என்கிற போக்கு ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதென்றால் சரியானது எது. அது ஏன் மக்கள் மத்தியில் உருவாக்கப்படவில்லை என்கிற கேள்விகள் உள்ளன. தீவிர மாக்சியம் பேசுகிறவர்கள் சிலர் எல்லாமே பிழை என்று சொல்கிறார்களே தவிர சரியான திசைக்கு மக்களை வழிநடாத்திச்செல்கின்ற தலைமையை உருவாக்க முடியாமல் திக்கு முக்காடி நிற்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
கருத்து மக்களை பற்றிக்கொண்டால் சக்தியாக உருவடுக்கும் என சொல்லப்படுகின்ற கோட்பாடு ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதுதான். கடந்த 30வருடமாக புலியிசத்தில் நனைந்து தடிமல் பிடித்துப்போய் நிற்கிற தமிழ்மக்கள் மத்தியில் பற்றிக்கொள்ளக்கூடிய நிலையில் இடதுசாரிச்சிந்தனைகள் மழுங்கடிக்கப்பட்டு நிற்கின்றன. அதற்கு தோழர்: செந்தில்வேல் அவர்கள் புலிகளை ஆதரித்த போக்குகளும் முக்கிய காரணமாகும்.  பல இடதுசாரிகள் இந்த தவறைச் செய்தமை முக்கியமாகும்
இதனால்தான் தமிழ்மக்களின் தற்போதைய இளம்தலைமுறைகள் இடதுசாரிச்சிந்தனைகளை உள்வாங்கக்கூடிய நிலையில் இல்லை. அது மேற்கத்தைய கருத்தியல்களையும் சீரழிந்த கலாச்சாரத்தையும் உள்வாங்கி பலவீனப்பட்டுப்போய் நிற்கிறது.
சரி ரி.பி.சி வானொலியில் என்ன காமெடி நிகழச்சி எனக் கேட்கிறீர்களா?. தொலைபேசி உரையாடலில் விhவதத்தில் கலந்து கொள்ளும் அரசியல் தலைவர்களை நோக்கி எழுப்பப்படும் கேள்விகளின் முன்னரே அவர் கதைக்கத்தொடங்கி விடுவதால் அவருக்கு கேள்விகள் சரியாக விளங்குவதில்லை. கேள்விகளை கேட்கத்தொடங்கினாலும் மறுமுனையில் அவர் தொடர்ந்து கதைத்துக்கொண்டிருப்பார்.
சுவிஸில் இருந்து ஜெயா என்று ஒருவர் அடிக்கடி வருவார்.  தமிழ்சினிமாக்களில் கப்பம் வசூலிக்க வருகின்ற அடியாட்கள் மாதிரித்தான் வருவார். வானொலி அறிவிப்பாளருக்கும் ஏனையோருக்கும் அவர் வணக்கம் சொல்வது கூட ஏதோ மிரட்டுவது மாதிரி இருக்கும். அவர் என்ன பேசுகிறார் என்று சொல்லி முடிவதற்குள் விஷயத்தை சொல்லிவிட்டுப் போய் விடுவார். தோழர்செந்தில்வேல் கூட பயந்து போயிருப்பார்.
லண்டனில் இருந்து வருகின்ற குமாரலிங்கம் என்கிற புலி விசுவாசிக்கு வயதாகி விட்டது. காசி ராமேஸ்வரம் என்று போய்ட்டு வந்தால் புலிப்பாவத்திலிருந்து விடுபடலாம்.
புலி விசுவாசிகளுக்கு கேள்விகள் கேட்கத் தெரியாது. ஏதோ கேட்கவேண்டும் என்பதற்காக கேட்டு விட்டுப்போவார்கள்..சிலர் தூஷணம் பேசிவிட்டுப்போவர்கள்.
போஸ்ட் ஆபிசில் போய் இறைச்சி என்ன விலை என கேட்கிற மாதிரி புலிகள் வந்து கேள்விகள் கேட்டுவிட்டுப்போக வானொலி நிர்வாகி டென்சனாகி விட இப்படியே சில காமெடிகளும் நடக்கும்.  
அது சரி காமெடி இல்லாவிட்டால் எந்த சினிமாப்படம் ரசிக்கும்படியாக இருக்கும்…….

கடன் வழங்க பல ஆயிரம் கோடி லஞ்சம்... 21 நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

டெல்லி: கடன் வழங்க பல ஆயிரம் கோடி ரூபாய் கை மாறிய விவகாரத்தில் தொடர்புடைய 21 நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த ஊழலில் அந்நிறுவனங்களின் தொடர்பு குறித்த விவரங்களைக் கோரியுள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய வங்கிகளின் அதிகாரிகள், கடன் வழங்க லஞ்சம் வாங்கியிருப்பது அம்பலமானது. இதுபற்றிய அறிக்கையை விரிவாகப் பெற இந்திய அரசு முயன்று வருகிறது.

எனவே இந்த ஊழலுடன் தமக்கு இருக்கக் கூடிய சாத்தியமான தொடர்புகள் குறித்த தகவல்களைத் தரவேண்டும் என்று மேலும் 21 முன்னணி வணிக நிறுவனங்களுக்கு உத்தரவிட்டுள்ளதாக மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் விளைவாக பல நிறுவனங்களின் பங்குகள் சரிய ஆரம்பித்துள்ளன. பங்குச் சந்தையே ஆட்டம் காணும் நிலை உருவாகியுள்ளது.

பெரிய வணிக நிறுவன வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குவதற்காக லஞ்சம் பெற்றார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில், அரசு வங்கிகளைச் சேர்ந்த 8 அதிகாரிகள் புதன்கிழமையன்று கைது செய்யப்பட்டார்கள்.

கைது செய்யப்பட்ட பெரும் புள்ளிகளில் பாங்க் ஆஃப் இந்தியா, இந்திய மத்திய வங்கி மற்றும் பஞ்சாப் தேசிய வங்கி ஆகிய வங்கிகளைச் சேர்ந்தவர்களும் அடங்குவர்.

இந்தியாவில் காமன்வெல்த் போட்டிகளில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், 2 ஜி அலைக்காற்றை ஒப்பந்தங்களில் இடம் பெற்றதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக இந்த புதிய ஊழல் பார்க்கப்படுகிறது.

இதன் முழு விவரமும் வெளிவரும்பட்சத்தில், தற்போது 2 ஜி முறைகேட்டில் அடிபடும் தொகையான ரூ 1.78 லட்சம் கோடியை விட அதிக தொகை விவரங்கள் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

சிவாஜிலிங்கமே ஜடா ஜடா….!

தமிழ் அரங்கத்தினர் ஜனாதிபதியை நேற்று சந்திச்சு உரையாடினதாக செய்திகள் வந்துள்ளன. அதில் சிங்களவர் வந்து யாழ்ப்பாணத்தில் குடியேறுவதைப் பற்றி சிவாஜிலிங்கம் ஏடாகூடமாக கேட்டுவைக்க ஜனாதிபதிக்கு வந்ததே கோபம். கொழும்பில் தமிழர்களும் முஸ்லீம்களும் ஆதிக்கம் செலுத்துவார்களாயின் யாழ்ப்பாணத்தில் சிங்களவர் குடியேறுவதில் தவறில்லை என ஒரு போடு போட சிவாஜிலிங்கம் வெலவெலத்துப்போய்விட்டார். பிறகு பத்திரிகையில் கொடுத்த பேட்டியில் ஜனாதிபதியுடனான சந்திப்பு திருப்திகரமாக இல்லையென அறிக்கை வேறு கொடுத்திருக்கிறார்.
சிவாஜிலிங்கத்தின் கடந்தகால வரலாறு புலிகளுக்காக குரல் கொடுத்ததுதான். இதை உலகே அறியும். புலிகளைக் காப்பாற்ற முடியாமல் போனபின் லண்டனில் இருந்த சிவாஜிலிங்கம் புலம்பெயர் புலிகளுக்கிடையிலான உள்மோதல்களை கண்டு இந்த விசரன்களுடன் நானிருப்பதை விட நாட்டுக்குப்போய் நிம்மதியதாக இருக்கலாம் என நாட்டுக்கு ஓடிப்போனார். நாட்டுக்கு வருவதில் பிரச்சினையில்லை. வந்தால் வாயைப்பொத்தியபடி இருக்க வேண்டும் என்கிற உத்தரவின் பிரகாரம் சிவாஜிலிங்கம் எந்தவித பிரச்சினையுமின்றி நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டார். ஜனாதிபதி லெக்சனும் கேட்டுப்பார்த்தார். தேர்தலில் போட்டியிட்டுப்பார்த்தார் வெற்றி கிடைக்கவில்லை. இப்போ தமிழரங்கத்தில் சேர்ந்து இருக்கிறார்.
தமிழ்மக்களுக்காக குரல் கொடுப்பதென்றால் சிங்களமக்கள் மத்தியில் அது நியாயமான கோரிக்கையாகத் தெரிய வேண்டும். சிரிப்பே முகத்தில் வராத சிவாஜிலிங்கம் தொடர்பாக சிங்கள மத்தியில் நல்ல அபிப்பிராயம் இல்லை. புலியின் பிரதிநிதியாகவே அவர் இனங்காட்டப்பட்டிருக்கிறார் ஆகவே தமிழரங்கத்தில் சிவாஜிலிங்கம் மௌனமாக இருப்பது தமிழரங்கத்திற்கு நல்லது.
குடியேற்றம் தொடர்பான கேள்விகள் சிவாஜிலிங்கத்திடமிருந்து வருமாயின் அது புலித்தன்மை கொண்டதாகவே இருக்கும். அக்கேள்வியை தமிழரங்கத்தில் இருந்து வேறு யாரும் கேட்டிருந்தால் ஜனாதிபதி இப்படி எகிறிப்பாய்ந்திருக்கமாட்டார். இதனை தமிழரங்கத்தினர் புரிந்து கொள்வது நல்லது.
எப்படியாயினும் சிவாஜிலிங்கம் போன்றவர்களை முன்னிலைப்படுத்தி தமிழரங்கம் செயற்படுமாயின் அதற்கு சிங்கள மக்கள் மத்தியில் நல்ல அபிப்பிராயம் இருக்காது என்பதே ரீ வடையின் அபிப்ராயம்.
என்ன விளங்கிச்சோ சிவாஜிலிங்கம்!

செந்திவேல்:தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பாக தமது கட்சி தமிழ் அரங்கத்துடன் இணைந்து செயற்படத்


 பொதுவான அரசியல் தீர்வு ஒன்றை தமிழ் அரங்கம் முன் வைக்குமானால் அதில் மக்களின் எதிர்பார்ப்புக்களை உள்ளடக்கியிருக்குமானல் கட்சியில் கோட்பாடுகளுக்கு அப்பால் சென்று ஆதரிக்கத் தயார் என புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொதுச் செயலாளார் சி.கா செந்திவேல் தெரிவித்தார். இன்றைய நிலையில் அரசுடன் சேர்ந்து இருக்கின்றவர்கள் அல்லது அரசாங்கத்தை ஆதரித்துக் கொண்டு ஜனநாயகம் பேசுகின்றவர்கள் தங்களின் சொந்த நலன்களை பாதுகாத்துக் கொள்ளவும் சுயநலன்களுக்காகவும் எனவும் தெரிவித்த அவர், புலிகளின் ஆதரவாளர்கள் அரசாங்கத்தை ஆதரிப்பது தம்மிடம் இருக்கும் சொத்துக்களை பாதுகாத்து கொள்ளவே எனவும் குறிப்பிட்டார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தொழில் அமைச்சராக இருந்த காலத்தில் கூட தொழிளார்களின் உரிமைப் பிரகடணத்த  ெய்யவில்லை எனவும் அதேபோல மேற்குலக முதலாளித்துவத்திற்கு எதிரான போக்குகளைக் கொண்டிருப்பதாக கூறினாலும் அதில் எவ்வித நேர்மையும் இல்லை  எனவும் குறிப்பிட்டார்
புலியின் முக்கிய உறுப்பினர்களை விடுதலை செய்து தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளும் இந்த அரசாங்கம் அவசரகாலசட்டம் பயங்கரவாதசட்டத்தின் கீழ் கைது செய்யபட்டு சிறையில் வைத்திருக்கும் தமிழ் கைதிகள் குறிப்பாக ஜம்பதுக்கும் மேற்பட்ட பெண் கைதிகள் தொடர்பாக  எந்தவித சட்ட நடவடிக்கையும்  மேற்கொள்ளவில்லை எனவும் குற்றசாட்டிய அவர் அவர்களுக்காக தமது கட்சி தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.வேட்டியைக் கட்டிக் கொண்டு திருநீறை பூசிக்கொண்டு செல்வது அல்ல எனவும் மாற்றுக் கருத்துடைவர்களுடைய கருத்தினை அங்கீகரித்து சமூகங்களுக்கிடையே நட்பு உறவை ஏற்படுத்துவதன் ஊடாகத்தான் தற்போது மிகமோசமாக ஏற்பட்டிருக்கும் கலாச்சார அழிவினை நிறுத்த முடியும் எனவும். சி.கா செந்திவேல்; குறிப்பிட்டார்.
அரசாங்கத்தால் அமைக்கப்பட்டிருக்கும் ஆணைகுழுவானத  ஒர மாயையை உருவாக்குவதற்காக உருவாக்கப்பட்டது எனவும் அதேபோன்றே ஜ.நாவினால் உருவாக்கப்பட்ட விசாராணை குழுவும் அரசாங்கத்திற்கு அழுத்தத்தை கொடுக்கலாமே தவிர வேறு ஏதுவும் செய்ய முடியாது எனவும் குறிப்பிட்டார்.
இன்று சீன அரசாங்கம் உண்மையான சோசலிச நெறிமுறைகளைப் பின் பற்றவில்லை என்பதை அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன எனவும் சீனாவில் தீடீர் என ஏற்பட்ட பொருளாதார வளர்ச்சியின் காரணமாக அது உலகச்சந்தையை நோக்கி சென்றமையே அடிப்படைக்காரணம் என்றும் அதே போன்றே இந்தியாவில் உள்ள மாக்சிச மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் பாரளுமன்ற அரசியல் நோக்கி தங்களின  நடைமுறையை மேற்கொண்டுள்ளதாகவும் இவை பாட்டளி மக்களின் அடிப்படைப்பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது எனவும் தெரிவித்தார்.
வியாழக்கிழமை இரண்டரை மணியத்தியாலங்கள் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் புதிய ஜனநாயக மாக்சிச லெனிச கட்சியின் பொது செயலாளார் சி.கா செந்திவேல் மற்றும் ரிபிசி அரசியல் ஆய்வாளர்களான விஸ்வலிங்கம் சிவலிங்கம் ஜெகநாதன் பணிப்பாளர் வீ.இராமராஜ் மற்றும் தோழர் ஜெயபாலனுடன் பல நேயர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

விபச்சார வழக்கில் என்னை கைது செய்ய முயற்சி! -வனிதா புதிய புகார்

Vanitha Familyசென்னை: தந்தை மீது தினசரி ஒரு குற்றச்சாட்டு, பேட்டி என்கிற அளவுக்கு இறங்கிவிட்டார் நடிகர் விஜயகுமார் மகள் வனிதா.

நடிகை வனிதா தனது தந்தை மீது இன்றும் ஏராளமான குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அதில் தனக்கும் குடும்பத்தினருக்கும் எதனால் பிரச்சினை ஏற்பட்டது என்றும் விளக்கியுள்ளார்.

அவரது பேட்டி:

14வது வயதில் மாணிக்கம் என்ற படத்தில் நடித்தேன். ராஜ்கிரண் ஜோடி. அதிலிருந்தே எனக்கு பிரச்சினைகள் ஆரம்பித்து விட்டன. தவிர்க்க முடியாத காரணத்தால் எனது 16-வது வயதில் வீட்டை விட்டு வெளியேறினேன். தோழி வீட்டில் இருந்த என்னை அடித்து உதைத்து அழைத்துச் சென்றனர்.

பின்னர் டி.வி.யில் நடித்தபோது என்னுடன் ஜோடியாக நடித்த ஆகாஷ் என்னை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். குடும்பத்தில் இருந்து தப்பிப்பதற்காக அதற்கு சம்மதித்தேன். அப்பாவிடம் இதைச் சொன்னபோது என்னை அடித்து உதைத்தார்.

ஆகாஷுடன் விவாகரத்து ஏன்?

ஒரு வாரத்துக்குப் பிறகு தான் திருமணத்துக்கு சம்மதம் கிடைத்தது. இந்த திருமணத்துக்குப் பிறகும் நான் நிம்மதியாக இல்லை. இதற்கிடையே எனக்கு முதல் குழந்தை ஸ்ரீஹரி பிறந்தான். பணப் பிரச்சினை ஏற்பட்டது. கணவர் ஆகாஷை பிரிந்து விட முடிவு செய்தேன். இதற்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர். 2-வது பெண் குழந்தையும் பிறந்தது.

எதற்கெடுத்தாலும் கோபப்படும் என் கணவர் ஆகாஷடன் சேர்ந்து வாழ முடியவில்லை. 7 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தேன். ஆனால் அப்பா, விவாகரத்து செய்தால் பத்திரிகையில் அதை பெரிதாக்குவார்கள். எனவே அவரை பிரிந்து வந்து விடு. நம்ம வீட்டில் குழந்தையை பார்த்துக் கொள்ளலாம் என்றார்கள். இந்த கால கட்டத்தில்தான் எனக்கும் அப்பாவுக்கும் நேரடியாக பிரச்சினைகள் அதிகமாக உருவாகின.

அக்கா கவிதாவின் விவாகரத்து:

எனது அக்கா கவிதாவை 16 வயதிலேயே நடிகை விஜயகுமாரியின் மகனுக்கு திருமணம் செய்து வைத்தனர். ஒரு குழந்தை பிறந்த பிறகு விவாகரத்து செய்துட்டாங்க. பின்னர் வேறு திருமணம் செய்து வைத்தனர்.

ஆனால் ஆகாஷடன் வாழ முடியாத எனக்கு விவாகரத்து விஷயத்தில் முட்டுக்கட்டை போட்டனர். இதை கேட்டபோது அப்பா அடித்து உதைத்தார். ஆகாஷும் 2007-ல்தான் விவாகரத்துக்கு சம்மதித்தார்.

அருணுக்கு திருமண ஏற்பாடு நடந்தது. அப்போது என்னை வீட்டை விட்டு வெளியேற்றினர். என் பையனை கணவரிடம் இருந்து மீட்கும் போராட்டம்... விவாகரத்து பிரச்சினை... இதற்கிடையே கைக் குழந்தையுடன் நான் அநாதையாக தெருவில் நின்றேன்.

என் தோழி வீட்டில் குழந்தையுடன் தங்கினேன். அருண் திருமணத்துக்குக் கூட என்னை கூப்பிடவில்லை. பிறகு தனியாக வீடு பார்த்து தங்கினேன். 2 மாதம் கழித்துதான் அம்மா என்னை அழைத்தார். சென்று பார்த்தேன்.

இந்த நிலையில் ராஜனை சந்தித்தேன். இருவரும் விரும்பி திருமணம் செய்து கொண்டோம். 2007-ல் எங்கள் திருமணம் ஹைதராபாத்தில் நடந்தது. இது எளிமையான பதிவுத் திருமணம். ராஜனோடும் எனக்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த சமயத்தில் ஆகாஷிடம் இருந்த மகன் ஸ்ரீஹரியை என்னுடன் தங்கி இருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன் பிறகு வெள நாட்டில் வாழ முடிவு செய்து நியூசிலாந்தில் உள்ள ஆக்லாந்தில் நானும் ராஜனும் 2 குழந்தைகளோடு வாழ்ந்தோம். அப்பாவும்- அம்மாவும் எங்களுடன் வந்து ஒரு மாதம் தங்கினார்கள். பின்னர் சென்னையில் குடியிருக்கலாம் என்று நினைத்து அங்கிருந்து திரும்பினோம்.

தற்போது அப்பா பெயரில் விஜயகுமார் மீடியா என்ற பெயரில் நிறுவனம் தொடங்கி நடத்தி வருகிறேன். வாரந்தோறும் வெள்ளிக்கிழமை என் குழந்தைகளை அப்பா வீட்டுக்கு அழைத்துச் செல்வார். ஞாயிறு இரவு திரும்ப கொண்டு விடுவார். தீபாவளிக்கும் குழந்தைகளை அழைத்துக் கொண்டு போனார். ஆனால் திரும்ப விடவில்லை.

நவம்பர் 7-ந்தேதி போய் கேட்ட போது, மகன் ஸ்ரீஹரி இருக்கட்டும். மற்ற 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு போ என்று அப்பா சொன்னார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. அப்போது அருண் என்னை முரட்டுத்தனமாக அடித்தார். உடனே இதுபற்றி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தேன். 20-ந் தேதி மீண்டும் கணவர் ராஜனுடன் சென்று மகனை கேட்ட போது மீண்டும் தகராறு ஏற்பட்டது. கேவலமாகத் திட்டி என்னை அடிக்க முயன்ற அப்பாவை என் கணவர் தடுத்தார்.

இதற்காக எந்த தவறுமே செய்யாத என் கணவர் மீது அப்பா போலீசில் புகார் செய்தார். போலீசாரும் என் கணவர் ராஜனை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். என்னை அடித்ததாக அருண் மீது கடந்த 7-ந்தேதி கொடுத்த புகார் மனு மீது நடவடிக்கை இல்லை. நான் இதுவரை வாழ்க்கையில் போராடிக் கொண்டுதான் இருக்கிறேன்.

உண்மைகளை வெளியே சொல்லுவேன் என்று நான் அறிவித்தேன். எனவே, என் மீது விபசார வழக்கு போட்டு சிறையில் தள்ளவும் தயங்க மாட்டார்கள். என் மானம் போனாலும் பரவாயில்லை. என் கணவர், பிள்ளைகள் உயிர் போனாலும் பரவா யில்லை. அவங்க மட்டும் கவுரவமாக வாழ வேண்டும் என்று நினைக்கும் அப்பா- அம்மாவை இப்போதுதான் பார்க்கிறேன்.

எந்த பிரச்சினை வந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன். எத்தனை பொய் வழக்கு போட்டாலும் தாங்குவேன். ஆனா எனது அப்பா காலில் இனி விழ மாட்டேன்...", என்றார் ஆவேசமாக.

M16-UK.உளவுத்துறையின் மட்டமான செயல்:ஆப்கன் விவகாரத்தில் அம்பலம்

mi6லண்டன்:ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு வார்த்தை நடத்திய "போலி' தலிபான் தலைவரை பேச்சு வார்த்தையில் ஈடுபடுத்தியது, பிரிட்டனின் ரகசிய உளவுத் துறை என்பது இப்போது தெரிய வந்துள்ளது. எனினும், இது குறித்து பிரிட்டன் உளவுத்துறை மவுனம் காத்து வருகிறது.ஆப்கானிஸ்தானில், தலிபான்களுடன் பேச்சு வார்த்தை நடத்த அதிபர் ஹமீத் கர்சாய் முன்வந்தார். எனினும், தலிபான் தலைவர் முல்லா ஒமர், "நேட்டோ' படைகள் வெளியேறிய பின்னர் தான் பேச்சு வார்த்தை என்று கறாராக கூறிவிட்டார்.
இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக, கர்சாயுடன் தலிபானின் இரண்டாம் கட்டத் தலைவர் முல்லா அக்தர் முகமது மன்சூர், பாக்., நகரான குவெட்டாவில் இருந்து பிரிட்டனின் ராணுவ விமானம் மூலம் காபூலுக்கு வந்து, மூன்று சுற்று பேச்சு வார்த்தைகளை நடத்தியதாக செய்திகள் வெளிவந்தன. தலிபான் இதை மறுத்தது.இந்நிலையில், அமெரிக்க மற்றும் ஆப்கன் அதிகாரிகள் சிலர், கர்சாயுடன் பேச்சு வார்த்தை நடத்தியது, தலிபான் தலைவர் மன்சூர் அல்ல, குவெட்டாவில் ஒரு கடை வைத்து நடத்தும் சாதாரண நபர் என்ற செய்தியை வெளியிட்டனர்.இதையடுத்து, மன்சூருடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை என மறுப்பு தெரிவித்தார் கர்சாய்.
இந்நிலையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஆப்கன் அதிபரின் தலைமை அதிகாரி, மன்சூர் என்ற பெயரில் ஒரு நபரை கூட்டி வந்து, ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட வைத்தது, பிரிட்டன் அதிகாரிகள் தான் என்ற உண்மையை போட்டு உடைத்துள்ளார். பிரிட்டனின் ரகசிய உளவுத் துறையான "எம்.ஐ.6' தான், குவெட்டாவில் கடை வைத்து பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவரை அழைத்து வந்து, பேச்சு வார்த்தை நடத்தச் சொல்லி பணம் கொடுத்ததாக, அமெரிக்காவில் இருந்து வெளியாகும், "நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை கூறியுள்ளது.
இவ்விவகாரத்தில் அமெரிக்கா, நேட்டோ, ஆப்கன் மற்றும் பிரிட்டன் உளவுத்துறைகள் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றன. இதுகுறித்து பிரிட்டன் மவுனம் சாதித்து வருகிறது.ஆனால், ஆப்கனின் கந்தகார் மாகாணத்திற்கான அமெரிக்கப் பிரதிநிதி பில் ஹாரிஸ் இதுகுறித்து கூறுகையில், "பிரிட்டன் உளவுத்துறை மீது மட்டும் குற்றம் சுமத்த முடியாது. இது போன்ற முட்டாள்தனமான செயல்களை அமைப்பு ரீதியாக மட்டுமே செயல்படுத்த முடியும்' என்று கூறியுள்ளார்.எனினும், ஆப்கன் போரை விரைவில் நிறுத்த, அமெரிக்காவை விட பிரிட்டன் அதிக ஆர்வத்தில் உள்ளது என, சில அமெரிக்க அதிகாரிகள் விமர்சித்துள்ளனர்.

முதலாவது பெண் உப வேந்தர் யாழ் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகும் வாய்ப்பு !

- நமது யாழ் நிருபர்
யாழ் பல்கலைக்கழகத்திற்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கான உப வேந்தரை தெரிவு செய்ய இன்று நடைபெற்ற தேர்தலில் திருமதி அரசரட்ணம் அவர்கள் 15 வாக்குகளை பெற்று முதலாவதாக தெரிவாகியுள்ளார். அடுத்த இரண்டு தெரிவாக தற்போதைய துணை வேந்தர் பேராசிரியர் சண்முகலிங்கமும், பேராசிரியர் ரட்ணஜீவன் கூலும் தலா 9 வாக்குகள் பெற்று தெரிவாகியுள்ளனர். இம் மூவருள் ஒருவரை ஜனதிபதி அவர்கள் துணை வேந்தராக தெரிவு செய்வார். யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன், தினக் குரல் மற்றும் வீரகேசரி பத்திரிகைகளும், தமிழ் தேசிய கூட்டமைப்பும், சீறீ லங்கா சுதந்திர கட்சியின் யாழ் மாவட்ட அமைப்பாளரும் மற்றும் புலம் பெயர் நாடுகளிலுள்ள தமிழ் தேசிய வாதிகளும் பகிரங்கமாக பேராசிரியர் கூலுக்கு ஆதரவாக பகீரத பிரச்சாரம் செயது வந்திருந்த நிலையில் இத் தேர்தலில் திருமதி அரசரட்ணம் தெரிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Subramaniam Swamy: ஒரே ஒரு ஸீட்தானே கேட்டேன். தந்தீங்களா? சாதியைச் சொல்லித் திட்டுறேள்

சுவாமிக்கு தூது விட்டு...

''டெல்லியில் வலம் வந்த சுப்பிரமணியன் சுவாமியை, தமிழக அரசியல் வாரிசுப் பிரமுகர் ஒருவர் சந்தித்து நெடுநேரம் பேசிக்கொண்டு இருந்தாராம். 'நீங்கள் கையில் எடுத்து இருக்கும் பிரச்னையின் தீவிரத்தைக் குறைத்துக்கொள்ளக் கூடாதா?’ என்று கெஞ்சும் குரலில் அவர் கேட்டதுதான் தாமதம், பொரிந்து தள்ளி விட்டாராம் சுவாமி!''



''தன்னை ஆ.ராசா சந்தித்துப் பேசியதைத் தான் ஜூ.வி. நிருபரிடம் பேட்டியாகக் கொடுத்திருந்தாரே சுவாமி. அதன் அடுத்த எபிஸோடா இது?''

''எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று நினைப்பவர்கள், யாரையும் சந்திப் பார்கள் அல்லவா? அந்த வாரிசுப் பிரமுகர் கேட்டதும் கொந்தளித்த சுவாமி, 'இப்பத் தான் இந்த சுவாமியை உங்கள் கண்ணுக்குத் தெரியுதா? சுவாமின்னா யாருன்னு கேட்ட வாளாச்சே நீங்க? உங்களுக்குத்தான் என்னைப் பிடிக்கவே பிடிக்காதே? 95-ம் வருஷத்துல உங்களுக்கு எவ்வளவோ பெரிய ஹெல்ப் பண்ணினேன். கைம்மாறா நான் என்ன கேட்டேன். ஒரே ஒரு ஸீட்தானே கேட்டேன். தந்தீங்களா? அதுக்கு முன்னாடி இருந்தே என்னை நீங்க மதிச்சதில்லை. ஆட்சிக்கு சிக்கல் ஏற்படுத்துற நெருக்கடி கொடுத்த பிறகும், உங்களுக்கு என்னோட மரியாதை எல்லாம் தெரியலே இல்லையா? கேட்டா... என்னோட சாதியைச் சொல்லித் திட்டுறேள். நான் எடுத்த விஷயத்துக்கும் சாதிக்கும் என்ன சம்பந்தம்? நான் பொறந்த சாதியில எத்தனை பேரை எதிர்த்து நான் சண்டை போட்டிருக்கேன்னு பட்டியல் தரட்டுமா?’ என்று கேட்டு நிறுத்தினாராம் சுவாமி!''

''என்ன சொன்னாராம் அந்தப் பிரமுகர்?''

''அமைதியாக உட்கார்ந்திருந்தாராம். சுவாமிதான் யாருடைய பதிலையும் எதிர் பாராமல் ஊசிப் பட்டாசாக வெடிக்கும் ரகம் ஆச்சே! இன்னும் என்னென்னவோ பழைய கதைகளை எல்லாம் சொல்லித் தீர்த்திருக்கிறார். கடைசியாக, 'உங்களுக்கு என்ன ஹெல்ப் வேணும்னாலும் பண்றோம்’ என்று சொல்லப்பட்டதாம். 'எனக்கா? நான் பிச்சை எடுத்துக் கட்சி நடத்துறவன்... மண் வித்துக் கட்சி நடத்துறவன் இல்லே. என்னை ஹார்வர்டு யுனிவர்சிட்டி கிளாஸ் எடுக்க எப்ப வர்றேள்... எப்ப வர்றேள்னு கேட்டுட்டு இருக்கு. மரியாதையாப் போய் உட்கார்ந்து ராஜாவா வாழலாம். அதை விட்டுட்டு இங்க ஏன் இருந்து நான் கஷ்டப்படுறேன்’ என்று சொன்னாராம். கடைசியில் இன்னும் கறார் வார்த்தைகளை சுவாமி உதிர்க்க... சந்திப்பு எந்த முடிவும் இல்லாமல் முறிந்துபோனதாம்!''

''அவரை சந்தித்துப் பேசியதே தைரியம்தானே?''

''இந்தப் பிரச்னை எப்படி முடியும்? எப்போது அணையும் என்பதுதான் கருணாநிதியின் கவலையாக இருக்கிறது. டெல்லி பாலிடிக்ஸ் தன்னை இந்த அளவுக்குப் போட்டுத் தாக்கும் என்று கொஞ்சமும் நினைக்கவில்லையாம் கருணாநிதி. தன்னை சந்திக்க வந்த முன்னாள் அமைச்சர்

டி.ஆர்.பாலுவிடம் மணிக்கணக்காகச் சில விஷயங்களைச் சொல்லி வருத்தப்பட்டாராம். இறுதியாக, 'டெல்லியில் எத்தனையோ விஷயங்கள் நடந்திருக்கு. எதையுமே எனக்கு சொல்லலையே?’ என்று கருணாநிதி சொல்ல, 'எனக்குத் தெரியாமத்தான் பல விஷயங்கள் நடக்க ஆரம்பிச்சிருச்சே. எனக்கே மந்திரி பதவி கிடைக்காமப் பண்ணிட்டாங்களே’ என்று அவர் தன்னுடைய வருத்தங்களைச் சொல்ல... 'டெல்லியில் லாபி பண்ண நமக்கு சாமர்த்தியம் பத்தலைய்யா! அதனால்தான் இவ்வளவு சிரமப்பட்டோம்!’ என்ற கருணாநிதி, 'ஸ்டாலினிடம் சில விஷயங்களைப் பேசியிருக்கேன். எதுவா இருந்தாலும் அவர் சொல்றதைக் கேட்டுட்டுச் செய்’ என்று உத்தரவு போட்டாராம். கடந்த சில ஆண்டுகளாக, 'தான் உண்டு... தன்னுடைய இலாகா உண்டு’ என்று இருக்கும் தயாநிதி மாறன் வசம் இனி டெல்லி மீடியேட் வேலைகளை ஒப்படைக்க கருணாநிதி நினைத்து இருப்பதாகவும் சொல்கிறார்கள். இதற்கு அழகிரி, ஸ்டாலின் இருவரும் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் ஒரு தகவல்!''

வடக்கில் யுத்தத்தினால் பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகளில் 1551 பேர் மாணவர்களாவர் : அமைச்சர் தினேஷ் குணவர்த்தன!


யுத்தத்தினால் வடக்கில் பெற்றோரை இழந்த பிள்ளைகள் 1746 பேர் உள்ளனர். அவர்களில் 1551 பேர் பாடசாலை மாணவர்கள் என அரசாங்கம் தெரிவித்தது.பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது அனுரகுமார திஸாநாயக்க கேட்டிருந்த கேள்விகளுக்கான பதிலை ஆளும் கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்த்தன சபைக்கு ஆற்றுப்படுத்திய பதிலிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாய்மூல கேள்வி நேரத்தில் அனுரகுமார திஸாநாயக்க மீள்குடியேற்ற அமைச்சரிடம் வடக்கு பிரதேசத்திலுள்ள யுத்தத்தினால் பெற்றோரை இழந்த பிள்ளைகளின் எண்ணிக்கை, இப்பிள்ளைகளில் பாடசாலை மாணவர்களின் எண்ணிக்கை, பாடசாலை செல்லும் மாணவர்களின் எண்ணிக்கை பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்காகவும் பாடசாலை செல்லாத மாணவர்களுக்காகவும் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் என்ன? போன்ற கேள்விகளை கேட்டிருந்தார்.
இக்கேள்விகளுக்கு மன்றுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட பதிலின் பிரகாரம் யுத்தம் காரணமாக வடக்கில் பெற்றோரை இழந்த 1746 பிள்ளைகள் உள்ளனர்.
அவர்களில் 1608 பேர் பாடசாலை மாணவர்கள் எனினும் 1551 பேரே பாடசாலை செல்கின்றனர். இவர்களுக்காக அவுஸ்திரேலிய உதவி வழங்கும் அமைப்புகள் நிதி உதவி வழங்கி வருகின்றன. பாடசாலை மாணவர்களுக்கான சீருடை, சப்பாத்து, தைத்த ஆடை என்பன வழங்கப்படுகின்றன. மாலை வேளைகளில் விசேட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
தொழிற் பயிற்சி வழங்க 17 நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் சுயதொழில் அறிவை மேம்படுத்த விசேட திட்டங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்தியா அழுத்தம்! தீர்வுக்கு ஒழுங்கமைவான பேச்சை தொடங்குமாறு

யுத்தத்தால் இடம்பெயர்ந்த தமிழர்களின் புனர்வாழ்வு மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான விடயங்களுக்கு தீர்வு காண ஒழுங்கமைவான பேச்சுவார்த்தையை ஆரம்பிக்குமாறு இலங்கைக்கு இந்தியா நேற்று வெள்ளிக்கிழமை அழுத்தம் கொடுத்திருக்கும் அதேநேரத்தில் சிறுபான்மைத் தமிழருக்கு தீர்வுப் பொதியை வழங்கும் விவகாரம் தனது ராடாரிலிருந்து தூரவிலத்தி வைக்கப்படவில்லை எனவும் பார்வைக்கெட்டிய தூரத்திலேயே அந்த விடயம் இருப்பதாகவும் இலங்கை பதிலுக்கு உறுதியளித்திருக்கிறது.

இந்திய இலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 7 ஆவது சந்திப்பிற்கு இணைத்தலைமைத்துவத்தை வகித்து வருகை தந்திருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸும் ஆணைக்குழுக் கூட்டம் முடிவடைந்த பின் இருவரும் இணைந்து பங்கேற்ற செய்தியாளர் மாநாட்டின் போதே இந்த கருத்துகளை முன்வைத்தனர்.
கடந்த வருடம் மே மாதம் இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்திருப்பதானது அரசியல் இணக்கப்பாடு மற்றும் புனர்வாழ்வு தொடர்பாக தீர்க்கப்படாமல் இருக்கும் சகல விடயங்களுக்கும் பரிகாரம் காண்பதற்குவரலாற்றுபூர்வமான வாய்ப்பை அளித்திருப்பதாக கிருஷ்ணா தெரிவித்தார்.புரிந்துணர்வு மற்றும் பரஸ்பரம் கருத்துகளை உள்வாங்கிக் கொள்வதன் மூலமாக இவற்றை மேற்கொள்ள முடியுமென்ற நம்பிக்கையை கிருஷ்ணா வெளியிட்டார். இந்த விடயத்தை நிறைவேற்றுவதற்கு கட்டமைப்பு ரீதியான பேச்சுவார்த்தை பொறிமுறையானது விரைவில் ஆரம்பிக்கப்படுமென்பது எமது நம்பிக்கையாகும் என்றும் அவர் கூறியுள்ளார். இந்த வருடத்தின் இறுதிக்குள் இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் நோக்கமென எமக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றும் கிருஷ்ணா கூறியுள்ளார்.
இடம்பெயர்ந்த தமிழர்களில் பெரும்பான்மையானோர் மீள்குடியேற்றப்பட்டுள்ள அதேசமயம், சுமார் 17 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை இப்போதும் முகாம்களில் இருப்பதாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா, ஆனால், இடம்பெயர்ந்த மக்கள் இப்போதும் தமது காலில் நிற்பதற்காக முயற்சித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார்.இதேவேளை, தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கவலை தொடர்பாகக் குறிப்பிட்ட கிருஷ்ணா தமிழர்களைக் கொண்ட மாநிலத்திற்கு அவர் பிரதிநிதித்துவத்தை வகிக்கின்றார். இந்த விவகாரம் குறித்து இலங்கை அரசு உணர்வுபூர்வமானதாக இருக்குமென்பதில் நான் உறுதியாக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.
கூட்டு ஆணைக்குழு கூட்டத்திற்கு முன்பாக கிருஷ்ணா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதி மாளிகையில் நேற்று காலை சந்தித்தார். நாங்கள் சில கருத்துகளை பறிமாறிக் கொண்டோம் என்று ஜனாதிபதியுடனான சந்திப்புப் பற்றி அவர் குறிப்பிட்டார். அர்த்தபுஷ்டியுடனான அதிகாரத் தீர்வுப் பொதியானது இலங்கையில் இறுதியானதும் நிலையானதுமான சமாதானத்தை உருவாக்க உதவுமென்று அவர் குறிப்பிட்டதுடன், அந்தப் பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.இதேவேளை, செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் சிறுபான்மைத் தமிழருக்காக தீர்வுப்பொதியானது இலங்கையின் ராடரிலிருந்து விலகியிருக்கவில்லை என்று கூறியுள்ளார். புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் கண்ணிவெடி அகற்றல் மற்றும் புனர்வாழ்வு போன்ற முக்கியமான விடயங்களுக்கு அரசாங்கம் தீர்வைக் கண்டுகொண்டிருப்பதாக பீரிஸ் கூறினார்.
அதேசமயம், இந்த விடயம் குறித்து தமிழ்க் கூட்டமைப்பின் கருத்துகளைப் பெற்றுக்கொள்வதற்காக அண்மையில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தமிழ்க் கூட்டமைப்புடன் கலந்துரையாடியதாகவும் அவர் தெரிவித்தார் கிருஷ்ணா இதேவேøளை தொடர்ந்து தெரிவிக்கையில்;இந்தியஇலங்கை கூட்டு ஆணைக்குழுவின் 7 ஆவது அமர்வின் போது பல்வேறுபட்ட பயனுள்ள விடயங்கள் குறித்து பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸுடன் கலந்துரையாடியுள்ளேன்.அதேவேளை, இலங்கையில் இடம்பெயர்ந்துள்ள மக்கள் குறித்து தமிழக முதல்வர் எம்.கருணாநிதி கூறியுள்ள விடயங்களையும் கவனத்தில்கொண்டு இலங்கை அரசாங்கம் செயற்படவேண்டும்.
இடம்பெயர்ந்தவர்களில் பெரும்பாலான மக்கள் மீள்குடியேற்றப்பட்டிருந்தாலும் இன்னும் ஒரு தொகையினர் முகாம்களிலேயே உள்ளனர்.மக்களை மீளக்குடியேற்றுவதில் சில பிரச்சினைகள் உண்டு.ஆனாலும் மீள்குடியேற்றம் குறித்து இலங்கை அரசு அக்கறையுடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்படவேண்டும்.இந்தியஇலங்கை உறவின் ஆழத்தினை வெளிப்படுத்தும் முகமாக வடக்கு,கிழக்கில் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக 50 ஆயிரம் வீடுகளை அமைக்கும் திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதேவேளை, நாளை (இன்று)யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கில் 500 உழவியந்திரங்கள் வழங்கப்படவுள்ளது எனத் தெரிவித்தார்.இந்நிலையில் இலங்கையின் தென்பகுதியில் சீன உதவியுடனான துறைமுகம் அமைக்கப்பட்டுள்ள அதேவேளை, இந்தியத் துணைத் தூதரகம் அங்கு அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இலங்கையுடன் சீனா உறவைப் பேணுவதில் இந்தியாவிற்கு பாதிப்பு உண்டா என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணா;
வேறு நாடுகளுடன் உறவுகளை பேணுவது இலங்கையின் சொந்த விடயம்.அதில் நாம் தலையிடப்போவதில்லை.சீனாவுடன் இலங்கை பாரம்பரியமாக உறவினைப் பேணி வந்திருக்கலாம்.இந்நிலையில் சீனாவுடன் இலங்கை உறவைப் பேணுவதால் இந்தியாவுக்கும் இலங்கைக்குமான உறவில் பாதிப்பு ஏற்படப்போவதில்லை.இலங்கை வேறு நாடுகளுடன் உறவைப் பேணுவதற்கு நாம் மதிப்பளிக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, சிறுபான்மைத் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வுகாண இந்தியா வலியுறுத்துமா என்ற கேள்விக்கு பதிலளித்த கிருஷ்ணா;
இலங்கையின் மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்குரிய அரிய சந்தர்ப்பம் இலங்கை அரசுக்குக் கிடைத்துள்ளது.
பரஸ்பர புரிந்துணர்வுடன் கூடிய தீர்வினை பெற்றுக்கொள்ள அரசு செயற்படுமென இந்தியா நம்புகின்றதெனத் தெரிவித்தார்.
இச்செய்தியாளர் மாநாட்டில் கிருஷ்ணா தொடர்ந்து தெரிவிக்கையில்;
கல்வி,கலாசாரம், விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் அபிவிருத்தி ஒத்துழைப்பு,
சேவைகள் மற்றும் முதலீடு,வர்த்தகம் உள்ளிட்ட இருதரப்பு உறவுகள் குறித்து கூட்டு ஆணைக்குழு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
வடபகுதியின் ரயில் பாதை புனரமைப்பிற்கான 416 மில்லியன் அமெரிக்க டொலர் நிதிஉதவி குறித்த உடன்படிக்கை இன்று (நேற்று) கைச்சாத்திடப்பட்டுள்ளது.இந்த ரயில்பாதை புனரமைப்புப் பணிகள் நாளை(இன்று) ஆரம்பமாகின்றது.
அதேவேளை, கைதிகள் பரிமாற்றம் மற்றும் பரஸ்பர சட்ட உதவி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.இதேவேளை பொருளாதார தொடர்புகள் மக்களுக்கும் மக்களுக்கும் இடையேயான நேரடித் தொடர்புகளை ஏற்படுத்தல் ஆகிய விடயங்களிலும் அக்கறை செலுத்தப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையேயான தந்திரோபாய உறவில் அம்பாந்தோட்டையிலும் யாழ்ப்பாணத்திலும் இரு துணைத் தூதரங்களை ஆரம்பித்தமை முக்கிய மைல்கல்லாகும்.
அதேவேளை, கொழும்பு தூத்துக்குடி,தலைமன்னார்இராமேஸ்வரம் கப்பல்சேவையை விரைவில் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் இதுகுறித்த உடன்படிக்கை பூரணமடைந்துள்ளது.
அதேவேளை, கடந்த வருடம் மே யில் நிறைவடைந்த யுத்தமானது மீள்குடியேற்றம் மற்றும் அரசியல் தீர்வு குறித்த சகல பிரச்சினைகளையும் புரிந்துணர்வுடனும் பரஸ்பர வசதிகளுடனும் தீர்க்கவேண்டிய வரலாற்று சந்தர்ப்பத்தைத் தந்துள்ளது.
அதேவேளை, சகல இடம்பெயர்ந்த மக்களையும் இவ்வருட இறுதிக்குள் மீளக்குடியமர்த்துவதென இலங்கை உறுதி அளித்துள்ளது.
மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான மீன்பிடி குறித்த ஏற்பாடுகளிற்கான அக்டோபர் 2008 உடன்படிக்கையை பூரணமாக அமுல்படுத்தவேண்டிய தேவை குறித்து இலங்கை அரசிடம் வலியுறுத்தியுள்ளேன்.
மேலும் மீன்பிடி குறித்த கூட்டு செயலணிச் சந்திப்பு விரைவில் நடத்துவதற்கும் இன்றைய (நேற்று) சந்திப்பில் இணக்கம் காணப்பட்டுள்ளது எனத்தெரிவித்தார்.
பீரிஸ்அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் கூறியதாவது;
கூட்டு ஆணைக்குழுவின் 7 ஆவது அமர்வின் போது முக்கிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன. இந்தியஇலங்கை கூட்டு ஆணைக்குழுவின் அனைத்து விடயங்கள் குறித்தும் பேசப்பட்டு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதுடன் இவற்றின் தரமான செயற்பாடுகளுக்கான பரஸ்பர வழிகள் குறித்து நாம் பேசியுள்ளோம்.
கண்ணிவெடி அகற்றல் மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய விடயங்களில் இந்தியா உதவி வழங்க தீர்மானித்துள்ளது.
அத்துடன் வடக்கு,கிழக்கு மக்களின் விவசாய அபிவிருத்திக்கு உதவுவதற்கும் முன்வந்துள்ள இந்திய அரசு, வடக்கின் மூன்று பிரதான ரயில் பாதைகள் அமைப்பதற்குமான நிதி உதவியையும் வழங்குகின்றது.
மீள்குடியமரும் மக்களுக்கான வீட்டுதவித்திட்டத்தின் ஒரு கட்டமாக ஆயிரம் வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் நாளை ஆரம்பிக்கப்படுகின்றது.
அதேவேளை, இரு நாட்டு மீனவர்களிடையேயுமான பிரச்சினைகளைத் தீர்க்கும் பொருட்டு இரு செயலணிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் இதில் ஒரு குழு தொடர்புகளை நிர்வகிக்கும் அதேநேரம் மற்றைய குழு சுற்றுலாத்துறையை கவனிக்கும்.
மேலும் யாழ்.பல்கலைக்கழகத்தின் விவசாயப் பீடத்தினை நவீனமயப்படுத்தவும் இந்தியா ஆதரவு வழங்கியுள்ளது. இதேவேளை, அரசியல் தீர்வு குறித்த விடயம் நீண்டகாலப் பிரச்சினையாக உள்ளது. ஆனால் தற்பொழுது மோதல்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் மக்களின் உடனடிப் பிரச்சினையைத் தீர்க்கவேண்டிய தேவை உள்ளது.
மக்களின் குடியேற்றம், விவசாயம், நீர் போன்ற அடிப்படை மனிதாபிமானப் பிரச்சினைகளை முதலில் தீர்க்கவேண்டியுள்ளது. ஆனாலும் அரசியல் தீர்வு விடயத்தை நாம் பின்தள்ளிவைக்கவில்லை. அரசியல் தீர்வு குறித்த பேச்சுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அண்மையில் தமிழ்க் கூட்டமைப்பினருடன் ஜனாதிபதி இது குறித்த பேச்சுகளில் ஈடுபட்டார். அத்துடன் ஏனைய சில தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுடனும் பேச்சுகள் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.

அழிந்தும் அழிய மறுக்கும் யாழ்ப்பாணம்!



- ஜோர்ஜ் இ.குருஷ்சேவ் எல்லா முட்டைகளையும் ஒரு கூடைக்குள் வைக்கக் கூடாது என்பார்கள். கூடை விழுந்தால் எல்லா முட்டைகளும் நொருங்கிவிடும். எங்கள் நம்பிக்கைகள் எல்லாவற்றையும் புலிகள் என்ற கூடைக்குள் வைத்ததால் தான் எங்கள் நம்பிக்கைகள் எல்லாம் கணப் பொழுதில் தகர்ந்து போனது. மேலும்

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வந்த மக்கள் வைப்பிலிட்ட தொகையினை பட்டியலிட்ட ஜனாதிபதி!

யுத்தத்தின் இறுதிக் காலகட்டத்தில் வன்னியிலிருந்து வவுனியாவுக்கு வந்த தமிழ் மக்கள் முகாம்களில் அமைக்கப்பட்ட வங்கிகளில் வைப்புச் செய்த பணம் மற்றும் நகைகளின் விபரங்களை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்று தமிழ்க் கட்சிகளின் அரங்கத்துடனான சந்திப்பின்போது எடுத்துக்கூறியுள்ளார்.

இராமநாதன் முகாமில் அமைக்கப்பட்டிருந்த வங்கியில் 400 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் மனிக்பாம் முகாமில் 973 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் கிளிநொச்சியில் 1.43 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் முகாம்களில் அமைக்கப்பட்டிருந்த இலங்கை வங்கியில் 500 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
இதேபோல் மாங்குளத்தில் 650 பேரின் கணக்குகளில் 278 மில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இதனைவிட இராணுவம் வன்னியில் கைப்பற்றிய தங்கம் வங்கிகளில் 16 பெட்டகங்களில் வைக்கப்பட்டுள்ளதாகவும் அதன் பெறுமதி 400 மில்லியன் ரூபா எனவும் இராணுவத்தினர் 800 மில்லியன் ரூபா பணத்தினை கைப்பற்றி வங்கியில் வைப்பிலிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இந்தச் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறிய நிலையில் அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவேண்டும் என தமிழ்க்கட்சிகளின் அரங்கத்தினர் கோரிக்கை விடுத்தபோதே ஜனாதிபதி புள்ளிவிபரங்களுடன் இவற்றைத் தெரிவித்ததாக சந்திப்பில் கலந்துகொண்ட தமிழ்க்கட்சியொன்றின் தலைவர் தெரிவித்தார்.

Sri Lanka. வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு புதிய விசாமுறை அறிமுகம்

இலங்கையில் முதலீடுகளை செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு விரும்பியபோது வந்து செல்வதற்கான விசா முறை அறிமுகம் செய்யப்படவுள்ளது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கை தூதரகங்களின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த விசாக்கள் வழங்கப்படவுள்ளது. இலங்கையில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு வர்த்தகர்கள் இதுவரைகாலமாக சுற்றுலா விசாக்களிலேயே இலங்கைக்கு வருகின்றனர்.எனவே விரும்பியபோது தடைகள் இன்றி இலங்கைக்கு வந்து செல்வதற்காக ‘மல்டிபல்’ விசா முறையொன்றை அரசாங்கம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

நந்தலாலா – ஐங்கரன் படங்கள் எல்லாம் ஊறவைத்தே வெளியாகின்றன

என்ன காரணமோ தெரியவில்லை, அங்காடித் தெரு, இப்போது நந்தலாலா – ஐங்கரன் படங்கள் எல்லாம் ஊறவைத்தே வெளியாகின்றன. ஊறவைத்ததால் ருசியில் மாற்றம் ஏற்பட்டது என்னவோ உண்மை. நல்லவிதமாகத்தானா?
ஏகதேசமாக ப்ரிவியூ பார்த்தவர்கள் எல்லாரும் புகழ்ந்து தள்ளும்போது இது ரெகுலர் கோடம்பாக்கம் ’டாக்’ என்று பட்சி சொன்னது. இருந்தாலும் நெருப்பில்லாமல் புகையுமா என்ற எண்ணமும் ஓட, மட்டுப்படுத்தப்பட்ட எதிர்பார்ப்புடன்தான் பார்க்கத் தொடங்கினேன்.
எடுத்த எடுப்பிலேயே சொல்ல வேண்டிய சிறப்பம்சங்களைச் சொல்லிவிடுகிறேன்.
1. அஸ்வத் ராம் – தமிழ் சினிமாவில் குழந்தைகளைக் கொடுமைப்படுத்துவது கணிசமாகக் குறைந்துவிட்டிருந்தாலும், ஒரு தர்ஷீல் சஃபாரி (தாரே ஜமீன் பர்) மாதிரி அருமையான, அளவான நடிப்பைக் காட்ட குழந்தைகள் இல்லை. இந்தப்பையன் மிக அருகில் வருகிறான்.
2. ஒளிப்பதிவு – பச்சைப் பசேலென்ற காட்சிகள் மச்சுபிச்சுவிலும் இருக்கின்றன, அதே கண்ணுக்குக் குளிர்ச்சி சேலம் ஈரோட்டிலும் இருக்கிறது.
3. இசை – ஏறத்தாழ இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தே மெல்ல ஊர்ந்து வரும் தேரு என் காரில் ஓடி கவர்ந்துவிட்டிருந்தது. படத்தில் இருமுறை ஆரம்பித்த ஜோரில் முடிந்துவிடுகிறது. வாண்டுக்கூட்டத்தையும் நரிக்குறவர் பாட்டையும் படத்தில் காணவில்லை. தாலாட்டு கேட்க நானும், ஒண்ணுக்கொண்ணு துணையிருக்கு பாடல்கள் மட்டும்தான் கொஞ்சம் நீளமாக வருகிறது. வழக்கம்போல, இயக்குநர், நடிகர்கள் வேலையில் பாதியை இளையராஜா செய்திருக்கிறார். வசனங்களைப் பாதியாகக் குறைத்து கதையை உணர்த்துவது என்ன, சோகம் கோபம் மகிழ்ச்சி அழுகை – எந்த உணர்ச்சியாக இருந்தாலும் அதை மெதுவாக ஆரம்பித்துக் கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டுவது என்ன – கண்ணை மூடிக்கொண்டு பார்த்தாலும் கதையை உணர்த்துவது என்ன – ராஜாங்கம்!
நிறைய விஷயங்களைச் சொல்ல வசதியான ரோட் ட்ரிப் கதை. வழிப்பறிக் கொள்ளை, கடத்தல் முயற்சி, ஜாதிக் கலவரம், நெடுஞ்சாலை ராணிகள், தூங்கும் லாரி ட்ரைவர், பீரடிக்கும் ஓப்பன் டாப் இளைஞர் கார், ரோஜாப்பூக்கள் ஒட்டிய தேனிலவு கார் – எல்லா சாத்தியங்களும் உபயோகித்திருக்கிறார். சில இடங்கள் புத்திசாலித்தனமாகவும், சில இடங்கள் க்ளீஷேவாகவும்.
பாரதிராஜா வெள்ளுடை தேவதைகள் ஸ்லோமோஷன் போல மிஷ்கின் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டிருக்கிறார் – கால்களை மட்டும் தொடரும் கேமரா, திடீரென வெட்டப்படும் காட்சி வேறெங்கோ தொடங்கி பொறுமையாக, அதீதப்பொறுமையாக அதிர்ச்சியைக் கொடுப்பது – சில இடங்களில் அட போடவைத்தாலும் பல இடங்களில் வாங்கய்யா சீனுக்கு என்று கதறவைக்கிறது. சண்டை போடுபவர்கள் ஒவ்வொருவராக வந்து அடிவாங்குவது / கொடுப்பது, நிற்பவர்கள் நாடகத்தனமாக நகர்வது போன்றவை தமாஷாக இருக்கின்றன.
ஜாதிக்கலவரமும் தொடரும் காட்சிகளும் சுவாரஸ்யம். கற்பழிப்பில் இருந்து காப்பாற்றப்பட்டவளின் ‘என்ன ஜாதி’ கேள்விக்கு ‘மெண்டல்’ என்ற பதில், நொண்டி என்றழைக்கப்படும்வரை வேகமாக வந்தவன் சோர்ந்துவிழுதல்..
ஆனால் இதே சுவாரஸ்யத்தை படம் முழுக்கக் கொடுக்க முடியவில்லை இயக்குநரால். ஸ்லோவாக நகர்ந்தால் அவார்டு நிச்சயம் என்ற நிலைமை மாறி பலகாலம் ஆச்சு சார்!
அவ்வப்போது மகா கிறுக்காகவும், சிலசமயம் சாதா கிறுக்காகவும், சில சமயங்களில் மெச்சூர்டாகவும் நடித்துக் குழப்புகிறார் மிஷ்கின். காசுக்கும் நோட்டுக்கும் வித்தியாசம் தெரியாத பைத்தியம் சிறுவனின் அம்மா சொன்ன நீண்ட கதையைப் (வசனம் இல்லை, இளையராஜா தயவில்தான் நான் புரிந்துகொண்டேன்) புரிந்துகொண்டு புத்திசாலித்தனமாகச் செயல்படுகிறான். ‘நல்லா இருக்கியா’ என்று தெளிவாகக் கேட்டு பலூன் விற்கிறான்.
படம் பார்த்துவிட்டு வந்துதான் கிகிஜிரோ கதையை ஐஎம்டிபியில் பார்த்தேன். மிஷ்கின் சிலபல வருடங்களுக்கு முன்பே பார்த்துவிட்டிருக்கிறார்.
தமிழின் முதல் உலகப்படம் என்ற பில்ட் அப்பையெல்லாம் மறந்துவிட்டு ஆங்காங்கு பளிச்சிடும் காட்சிகளுக்காகவும் இசைக்காகவும் – நிச்சயம் பார்க்கலாம்.

தயாளுவுக்கு 600 கோடி ரூபாயை மாறன் கொடுத்ததாக நம்புகிறேன்...''

ஆ.ராசா தொடங்கி... அத்துறையில் முக்கியப் பதவிகளை வகித்த அதிகாரிகள் வரை வரிசையாகப் பட்டியல் எடுத்து... அவர்களின் ஜாதகங்களை சி.பி.ஐ. அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது. 2008-10 இடைப்பட்ட காலகட்டத்தில் இத்துறைக்குள் துள்ளி நுழைந்த திடீர் கம்பெனிகள், அதிரடிப் பணக்காரர்கள், இவர்கள் வாங்கிப் போட்ட சொத்துகள் போன்ற விவரங்களும் திரட்டப்படுகின்றன. சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகை தயாராகி, கைதுப் படலம் ஆரம்பமாகும்போது, சென்னை - திருச்சி மார்க்கமாக, மும்பை வழியாகப் போய் அது டெல்லியைத் தொடலாம் என்கிறார்கள்.

''சி.பி.ஐ-யின் குற்றப்பத்திரிகைக்கு லட்டு மாதிரி கிடைத்திருக்கும் டேப் ஆதாரம்தான் கடந்த சனி, ஞாயிறு கிழமைகளில் தி.மு.க மேலிடம் வரை பரபரப் பாக அலசப்பட்டது...'' என்கிறார்கள் உள்விஷயம் அறிந்த வர்கள்.



கடந்த 2009-ம் ஆண்டு மே மாதத்தின் இறுதியில் மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்கும்போது தி.மு.க. தனக்குத் தேவையான துறைகளைக் கைப்பற்றத் துடித்த நிகழ்வுகள் அனைவரும் அறிந்ததுதான். டெல்லிக்குப் பயணம் போன முதல்வர் கருணாநிதி, ஒரு வார காலம் அங்கேயே தங்கியிருந்தார். மத்திய தொலைத் தொடர்புத் துறை தனக்குத்தான் வேண்டும் என்று கோரிக்கை வைத்த தயாநிதிமாறனுக்கு அது தரப்படவில்லை. மாறாக ஆ.ராசாவுக்கே அத்துறை வாங்கித் தரப்பட்டது.

தன்னுடைய கட்சிக்கு எந்தெந்தத் துறைகளை வாங்குவது என்பதும்... அவற்றை யாருக்குத் தருவதுஎன்பதும் கட்சித் தலைமையின் தனிப்பட்ட உரிமை. ஆனால், மீடியாக் களில் பரப்பப்படும் தொலைபேசி உரையாடல்கள் நிஜமாக இருக்கும்பட்சத்தில்... தி.மு.க-வின் தலைவரையும் தாண்டி 'ஒரு அதிகார மையம்' இருந்து கொண்டு இலாகா ஒதுக்கீட்டை தீர்மானித்திருக்கிறது என்பது உறுதியாகி விடும்.

டெல்லியில் பிரபலமான பவர் புரோக்கர்களில் மிக முக்கியமானவர் நீரா ராடியா. பெரும் முதலாளிகள், கம்பெனிகள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் இவர் களுடன் வலியப் போய் நட்பை ஏற்படுத்திக் கொண்டு, இடைத் தரகு செய்து, வேலைகளை முடித்துக் கொடுக்கும் 'லாபியிஸ்ட்'டாகவே நீரா ராடியா இப்போதும் வலம் வருகிறார். சாதாரண எம்.பி-க்கள் முதல் பிரதமர் அலுவலகம் மற்றும் சோனியா வீடு வரை இவருக்கு சொந்தங்கள் உண்டு என்கின்றன டெல்லி வட்டாரங்கள். யாருக்கு மந்திரி பதவி, எந்தத் துறைக்கு எவர் மந்திரி என்று டெல்லி தமிழ்நாடு ஹவுஸில் கருணாநிதி மண்டையை உடைத்துக் கொண்டிருந்தபோது, 'ஆ.ராசாதான் தொலைத் தொடர்புத் துறை மந்திரி' என்று உறுதிபட போனில் தகவல் சொல்கிறது நீரா ராடியாவின் குரல்! தயாநிதிமாறன் கைக்கு அந்தத் துறை வந்துவிடக் கூடாது என்று நீரா ராடியாவும் துடித்திருக்கிறார்.

இப்படிச் சொல்லவைக்கும் ஒன்றரை மணி நேர டேப் ஒன்றில் இருப்பவை நீரா ராடியா, ஆ.ராசா மற்றும் கனிமொழி ஆகியோரின் தொலைபேசிப் பரிவர்த்தனைகள்தான் என்பது மீடியாக்களில் வந்த தகவல். டெல்லி சேனலின் பவர்ஃபுல் பத்திரிகையாளர் பர்க்கா தத் என்பவர் பேசியதாகவும் சில பதிவுகள் காட்டப்படுகின்றன.

இது தொடர்பான விவரங்கள் 12.05.2010 தேதியிட்ட ஜூ.வி-யிலும் வெளி யாகி இருந்தது. ஆனால், அப்போது வெளியில் கசிந்தது சில நிமிடம் ஓடிய டேப்தான். ஆனால், இப்போது வடக்கு மீடியாவில் அதுவே முழுமையாக வெளிவர ஆரம்பித்துள்ளது. ''வருமான வரி ஏய்ப்பு தொடர்பான விசாரணை அதிகாரிகள் ரகசியமாக சில தொலைபேசிகளை ஒட்டுக் கேட்பார்கள். தொழி லதிபர்களோடு தொடர்புடையவர் என்பதால், நீரா ராடியாவின் போன் டேப் செய்யப்பட்டுள்ளது!'' என்கிறார்கள் டெல்லியில்.

தனியார் இணையதளம் ஒன்றில் இந்த உரையாடல் வெளியாகி... டி.வி-க்களும் கடந்த வெள்ளிக்கிழமை இதை கபளீகரம் செய்யத் துவங்கின! விவரங்களை அறிந்தபோது முதல்வர் கருணாநிதி அதிர்ச்சி அடைந்து விட்டதாகக் கூறப்படுகிறது. அதற்கு முந்தைய நாள்தான் மதுரை திருமண விழாவில் பேசிய பிரணாப் முகர்ஜி, ''தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி தொடர்கிறது!'' என்று சொன்ன வார்த்தைகளில் தெம்பாகியிருந்தார் கருணாநிதி! இந்த முழுநீள டேப் விவகாரம் அவர் மகிழ்ச்சியை மறுபடி சிதைத்துவிட்டது என்கிறார்கள்.

இது பற்றி கனிமொழியிடம் கருணாநிதி கோபப்பட்டுக் கேட்டதாகவும் தி.மு.க. வட்டாரத்தில் செய்திகள் உலவுகின்றன. இதுபற்றிச் சொல்பவர்கள், ''அப்படிக் கனிமொழியிடம் தலைவர் கேட்டதைத் தொடர்ந்து, 'இப்படியெல்லாம் நியூஸ் வெளியே வந்ததுக்குக் காரணமே தயாநிதி மாறன்தான்' என்று தலைவரிடம் சிலர் சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். ஆனால், தலைவரோ அவசரப்பட்டு இதை நம்பி இன்னுமொரு குடும்பச் சண்டைக்கு கால் கோள் விழா நடத்தத் தயாராக இல்லை. எனவே, தயாநிதிமாறனையே அழைத்துப் பேசியிருக்கிறார். எதற்கு அழைப்பு என்று புரிந்து, இந்த டேப் ஆதாரத்தில் உள்ள பேச்சுகள் அத்தனையையும் வரிக்கு வரி தமிழில் மொழிபெயர்ப்பு செய்து எடுத்துச் சென்றிருக்கிறார் தயாநிதிமாறன். இதில் நீரா ராடியாவுடன் ஆ.ராசா, கனிமொழி, பத்திரிகையாளர்கள் வீர்சங்வி, பர்கா தத் ஆகியோர் பேசியதாகக் கூறப்படும் விவரங்கள் தெளிவாக வரிசைப்படுத்தப்பட்டு இருந்ததாம்...'' என்று கூறுகிறார்கள்.

ஆ.ராசா, கனிமொழி, பர்கா தத் ஆகிய மூவரும் 22.5.2009-ம் தேதியன்று காலையில் பேசியதாகச் சொல்லப்படும் விஷயங்கள் பற்றியே தயாநிதி மாறன் முழுமையாக டைப் செய்து கொண்டு போயிருந்தாராம். அன்றைய தினம் கருணாநிதி டெல்லியில்தான் இருந்தார். இன்னும் யாருக்கு எந்தத் துறை என்று ஒதுக்கப்படாத நேரம் அது. அந்தத் தருணத்தில்தான் தொலைத் தொடர்புத் துறை ஆ.ராசாவுக்கே என்று வாக்குறுதி தருகிறது நீரா ராடியாவின் குரல்.

இந்த டேப் உரையாடல், மீடியாவிலிருந்து மறு முறை பதிவு செய்யப்பட்டு முதல்வருக்கு போட்டுக் காண்பிக்கப் பட்டதாகவும், ஆனால் அதில் சில இடங்கள் முழுமையாக இருக்காது என்று தெரிந்தே தயாநிதிமாறன் அதன் தமிழ் மொழிபெயர்ப்பை எடுத்துச் சென்று காட்டியதாகவும் சிலர் சொல்கிறார்கள். அவருடன் கருணாநிதியின் மகள் செல்வியும் உடனிருந்ததாகக் கூறப்படுகிறது.

''சுமார் 35 நிமிடம் எடுத்துக்கொண்டு இந்த உரையாடல் களை கருணாநிதி உன்னிப்பாகப் படித்துப் பார்த்தார். 'இதை முழுசா படிச்சுட்டு யாரு மேல தப்புன்னு தீர்ப்பு சொல்லுங்கப்பா!' என்று செல்வி சொல்லியிருக்கிறார். படித்து முடித்த கருணாநிதி, 'இதுக்கு என்ன தீர்ப்பை என்னால சொல்லமுடியும்?' என்று கம்மிய வார்த்தைகளில் மறுக... 'இல்லப்பா... எப்படியெல்லாம் நடந்திருக்குன்னு பாருங்க. உங்களை மீறி நடந்துகொள்வது யாருனு நீங்களே பாருங்க...' என்று சொன்னாராம் செல்வி.

'யாரும்மா இந்தப் பெண்மணி... இவங்க நினைச்சா என்ன பதவியும் வாங்கித் தரமுடியுமா?' என்று கேட்ட கருணாநிதி, 'மொத்தத்தில் நீங்க யாருமே என்னை நம்பல. இந்தப் பெண்ணையும் வேற யார் யாரையோவும்தான் நம்புறீங்க...' என்று பொதுவாகச் சொல்லிக் கண் கலங்கி விட்டாராம்!

இப்படியெல்லாம் தற்போது பரவிக் கிடக்கிறது தி.மு.க-வின் முக்கிய வட்டாரங்களில்! நீரா ராடியாவுக்கும் பத்திரிகையாளர் வீர் சங்வீக்கும் நடந்ததாகச் சொல் லப்படும் உரையாடலில் வேறொரு விஷயமும்வருகிறது. ''மாறனுக்கு பதவி தரவேண்டும் என்ற நிர்பந்தம் எங்கிருந்து வருகிறது?'' என்று சங்வீயின் குரல் கேட்பதாகவும்... அதற்கு நீராவின் குரல், ''ஸ்டாலினும் அவரது சகோதரி செல்வியும் தான்... ஏனென்றால் ஸ்டாலினுடைய அம்மா தயாளுவுக்கு 600 கோடி ரூபாயை மாறன் கொடுத்ததாக நம்புகிறேன்...'' என்று கூறுவது போலவும் அந்த டேப்பில் வருகிறது!

இதை இந்தப் பேச்சுவார்த்தையின்போது கருணாநிதியிடம் தயாநிதிமாறன்சுட்டிக் காட்டியதாகச் சொல்கிறார்கள். ''பாட் டிக்கு (அதாவது தயாளுவுக்கு!) நான் பணம் கொடுத்துதான் இந்த பதவியை வாங்கினேன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்? என்னைக் கேவலப்படுத்துவதாக நினைத்து கட்சியையும் உங்களையும் கேவலப்படுத்துறது யாரு? இவங்களுக்கு யாரு இப்படியரு பொய்யான தகவலைச் சொல்லியிருக்க முடியும்?'' என்பது போன்ற அர்த்தத்தில் தயாநிதிமாறன் தரப்பிலிருந்து முறையீடு செய்யப்பட்டதாகவும்கூட சொல்கிறார்கள்.

தன்னைப் பற்றியும் அழகிரி குறித்தும் அடிக்கப்பட்டதாக அந்த டேப்பில் உள்ள கமென்ட்கள் கருணாநிதியை ரொம்பவே வருத்தமடைய வைத்துள்ளதாம். ஸ்பெக்ட்ரம் தொடர்பாக, தான் வெளியிட்ட அறிக்கையில் பயன் படுத்திய சில புகழ்ச்சியான வார்த்தைகளைக் குறிப்பிட்டு, ''இதையெல்லாம் நான் எழுதியிருக்கக் கூடாது...'' என்று சொல்லிக் கொண்டாராம்.

''எவ்வளவு சாதனைகள், எவ்வளவு திட்டங்கள் போட் டோம்! எந்தப் பிரச்னையும் வந்ததில்லை... எதிர்க்கட்சிகள் ஆயிரம் சொன்னாலும் மாநிலத்தில் நமக்கு மக்கள் ஆதரவு குறையலை. இங்கே நாம் செஞ்ச எல்லா சாதனையும் வேஸ்ட் என்கிற மாதிரியில்லே டெல்லி மீடியாக்கள் தகவல்களைக் கசிய விடுது!'' என்பதே கட்சித் தலைமையின் முக்கிய வருத்தமாக அமைந்துள்ளது என்றும் கூறுகிறார்கள்.

மாவட்டம்தோறும் அமைக்கப்பட்ட தேர்தல் பணிக் குழுச் செயலாளர்களை, அடுத்த நாள் சனிக்கிழமையன்று மதியம் அறிவாலயத்தில் ஒன்று கூட்டும்படி துணை முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லியிருந்தாராம் கருணா நிதி. ''உரிய ஆலோசனைகள் பெற்று அவர்கள் உடனடியாக களப் பணி தொடங்கட்டும்...'' என்றும் சொல்லியிருந்தாராம். ஆனால், ஏனோ அவருக்கே உற்சாக மனநிலை அன்று மாலை வரை ஏற்படவில்லை. ஆலோசனைக் கூட்டம் கருணாநிதி இல்லாமலேயே நடந்து முடிந்திருக்கிறது!

கூட்டணி உண்டா... இல்லையா?’ முதல்வரின் பேச்சு டெல்லி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது

நாங்கள் திட்டவட்டமாக, தெளிவாக இருப்பதற்கு எங்களுக்கு தயவு செய்து வழிவிடுங்கள்.’’

-முதல்வர் கருணாநிதி கடந்த புதனன்று சென்னையில் நடந்த வேளாண் கருத்தரங்க அலுவலர் மாநாட்டில் சொன்ன வார்த்தைகள்,அரசியல் அரங்கில் ஏகப்பட்ட அதிர்வலைகளை உருவாக்கியிருக்கிறது.

காங்கிரஸ் கட்சி தலைமைக்கு ‘கூட்டணி உண்டா... இல்லையா?’ என்று தனது இறுதிக் கேள்வியைக் கேட்டுள்ளார் முதல்வர்.

காங்கிரஸ் தலைவர்களைத் தாக்கிப் பேசிய பேச்சாளரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், தொடர்ந்து தி.மு.க.வை விமர்சித்து வந்த இளங்கோவன்,யுவராஜ் மீது இதுவரை காங்கிரஸ் நடவடிக்கை எடுக்கவில்லை. கூப்பிட்டு கண்டிக்கக்கூட இல்லை. இந்த நிலையில், முதல்வர் பேசியிருப்பது கவனிக்கத்தக்கது.

கருணாநிதி திடீரென இப்படிப் பேச என்ன காரணம்? இதுவரை அமைதி காத்த அவர், பீகார் தேர்தல் முடிவுகள் வந்த நேரத்தில் பேசியிருப்பது யோசிக்க வேண்டிய விஷயம்.

கடந்த அக்டோபர் 2-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளையில்இருந்து இளைஞர்காங்கிரஸார் பாதயாத்திரையைத் தொடங்கினர்.

இதில் பங்கேற்ற இளைஞர்கள் வரும்வழியில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டம் எப்படி செயல்படுகிறது என்று பார்த்து வந்தனர். 108 ஆம்புலன்ஸ், இந்திரா காந்தி வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் திட்டங்களை எடுத்துக் கூறியதுடன், மாநில அரசுகளுக்கு மத்திய அரசின் பங்களிப்பு குறித்து விளக்கம் கொடுத்து வந்தனர்.

‘துணை முதல்வர், பத்து அமைச்சர் பதவி வேண்டும். மாநில அமைச்சர்களின் சொத்துப்பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும்’என்று தி.மு.க.அரசை கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தனர்.

இளைஞர் காங்கிரஸாரின் இந்த செயலால்,கோபம் வந்தாலும் வெளிக்காட்ட முடியாமல் தவித்தது தி.மு.க.

இதற்கிடையில், திருச்சியில் நடந்த காங்கிரஸ் முப்பெரும் விழாவில் கலந்து கொண்ட சோனியா காந்தியை விமான நிலையத்துக்குச் சென்று சந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார் கருணாநிதி. ராசா விவகாரத்தில் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து ஜெயலலிதா அளித்த பேட்டியும் தி.மு.க.வின் தூக்கத்தைக் கலைத்தது.

மெல்லவும் முடியாமல்,விழுங்கவும் முடியாமல் தவித்துக் கொண்டிருந்த தி.மு.க.வுக்கு பீகார் தேர்தல் முடிவுகள் ‘ஹார்லிக்ஸ்’ குடித்தது போல் அமைந்துவிட்டது.

பீகார் தேர்தலில் நான்கு இடங்களில் மட்டுமே வெற்றி பெற்று காங்கிரஸ் அதிர்ச்சியில் இருக்க..தி.மு.க தரப்போ...உற்சாகமானது.

இந்தத் தேர்தல் முடிவு குறித்து காங்கிரஸ் தலைவர்களிடம் பேசியபோது, ‘ராகுல் ஃபார்முலாவினால், பீகாரில் குறைந்தது 25 முதல் 30 சீட்டுகள் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம். அந்த வெற்றியின் அடிப்படையில் தமிழகத்திலும் ராகுல் ஒரு ஃபார்முலாவை கடைப்பிடிக்க இருந்தார்.

குறிப்பாக, கடந்த 40 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத காங்கிரஸை ஆட்சிக் கட்டிலில் அமர்த்த திராவிட கட்சிகளுக்கு எதிராக மூன்றாவது அணியை 2011 தேர்தலில் களம் இறக்குவதுதான் ராகுலின் திட்டமாக இருந்தது. இதன் அடிப்படையில்தான், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, சில மாதங்களுக்கு முன்பு தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தை சந்தித்துப் பேசினார்.

இந்நிலையில், பீகார் தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ள அதிர்ச்சியில் இருந்து ராகுல் உட்பட காங்கிரஸார் எவரும் மீளவில்லை. இதனால், ‘யுவபாத்’ நிறைவு விழாவிற்கு ராகுல், அகில இந்திய செயலாளர்கள் யாரும் வரவில்லை.ஒப்புக்காக மத்திய இணை அமைச்சர் அருண் யாதவ் வந்திருந்தார். இந்த யாத்திரை கோயம்பேட்டில் இருந்து அண்ணாநகர், நெல்சன்மாணிக்கம் ரோடு வழியாக காமராஜர் அரங்கம் வருவதாக திட்டமிட்டிருந்தனர்.நான்கு மணிக்கு நிகழ்ச்சிகள் நடக்கும் என்று சொல்லப்பட்டிருந்தது.

அண்ணா மேம்பாலம் கீழே அமைக்கப்பட்டிருந்த செம்மொழிப் பூங்கா திறப்பு மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் வேளாண் கருத்தரங்கம் மற்றும் அலுவலர் மாநாட்டில் முதல்வர் பங்கேற்பதால், இளைஞர் காங்கிரஸுக்கு முதலில் அனுமதி மறுக்கப்பட்டது.

அத்துமீறி நகருக்குள் பிரவேசிப்போம் என்று பதிலடி தந்தனர் இளைஞர் காங்கிரஸார். வேறு வழியின்றி அனுமதி தரப்பட்டது.

அதேநாள்... அதே நேரம்.. கருணாநிதியின் இரண்டு நிகழ்ச்சிகள் நடக்க இருந்ததால் இளைஞர் காங்கிரஸார் நடைபயணத்தை வேகமாக முடிக்க வேண்டும் என்று போலீஸார் கூறினர். ஆனால், அதற்கு இளைஞர் காங்கிரஸார், ‘நாங்கள் காரில் செல்லவில்லை. நடந்துதான் செல்கிறோம்.

காமராஜர் அரங்கிற்குச் சென்ற பிறகுதான் நாங்கள் நிகழ்ச்சியைத் தொடங்க முடியும். முதல்வரை வேண்டுமானால் நேரத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லுங்கள்’ என்று ஆவேசப்பட்டனர். அதோடு விழாவில் பேசிய யுவராஜ், ‘ராசா மீது தி.மு.க. நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று பேசினார்.இத்தகவல் உளவுத்துறை மூலம் கருணாநிதி காதில் ஊதப்பட்டது.

இதனால்தான் கோபத்தின் உச்சிக்குச் சென்றார் முதல்வர். ஏற்கெனவே இளைஞர் காங்கிரஸின் பிரசாரத்தால் கொதித்துபோய் இருந்த முதல்வரின் கோபம் காட்டாற்று வெள்ளம்போல பீரிட்டு வந்தது.

செம்மொழிப் பூங்கா திறப்பு விழாவிற்கு நான்கு மணிக்கு முதல்வர் வருவதாக இருந்தது. ஆனால் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தார், முதல்வர்.வந்ததும் பூங்காவைத் திறந்து வைத்துவிட்டு சுற்றிப் பார்க்காமல் விழாவுக்குப் போய்விட்டார்.

‘‘எட்டடி பாய்ந்தால், நாங்கள் பதினாறடி பாய்வோம். நான் கணக்கில் அவ்வளவு முட்டாள் அல்ல.அந்த எட்டடியோடு சேர்த்துதான் பதினாறு என்று நான் சொல்கிறேன். நாங்கள் தனியாக பதினாறு அடி பாயவேண்டும் என்று விரும்பவில்லை. சேர்ந்தே பதினாறு அடி பாய்வோம் என்றுதான் அவர்களை நம்பி சேர்ந்தே இருக்கிறோம்.

‘சேர்ந்தே இருப்பது தீது’ என்றால் சொல்லுங்கள்... யோசிக்கிறோம்’’ என்று ஆவேசமாகப் பொரிந்து தள்ளினார் முதல்வர்.

இது குறித்து தி.மு.க. எம்.பி.யும் அமைப்பு செயலாளருமான டி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசியபோது, ‘‘சிலர் தவறான தகவல்களை திரும்பத் திரும்ப சொல்லி வந்ததால் அவர்களை எச்சரிக்கவே, முதல்வர் அப்படிப் பேசினார். பீகார் தேர்தல் முடிவுகள், தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று தி.மு.க. நம்பவில்லை. காங்கிரஸார் மிகுந்த ஆசையில் இருந்தனர். அதில் மண் விழுந்துவிட்டது’’ என்றார்.

ஜி.கே.வாசன் ஆதரவாளரும் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவருமான கோபண்ணாவிடம் பேசியபோது,‘‘மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசுதான் செயல்படுத்தி வருகிறது. எனவே, இது மத்திய அரசு திட்டம்,மாநில அரசு திட்டம் என்று யாரும் பிரித்துப் பார்க்கக்கூடாது. முதல்வர் சரியாகத் தான் பேசியுள்ளார். பீகார் தேர்தல் முடிவை வைத்து அவர் அப்படிப் பேசியதாக நான் கருதவில்லை’’ என்றார்.

‘முதல்வரின் பேச்சு டெல்லி தலைவர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.ஜெயலலிதாவின் அழைப்பை காங்கிரஸ் ஏற்கவில்லை. இப்போது தி.மு.க.வை விட்டால் காங்கிரஸுக்கு வேறு வழியில்லை. தி.மு.க.கொடுப்பதைப் பெற்றுக் கொண்டு தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று தி.மு.க. நினைக்கிறது. ஆனால், காங்கிரஸ் வேறு மாதிரி ரியாக்ட் பண்ண ஆரம்பித்துள்ளது. விரைவில் அது தெரியவரும்’ என்கிறார் மூத்த காங்கிரஸ் தலைவர்.

‘‘காங்கிரஸ் உறவு வேண்டுமா என்று கலைஞரே முடிவு செய்யட்டும்’’

- இளங்கோவன் பதிலடி காங்கிரஸ் முன்னாள் மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் பேசினோம்.

‘‘பீகார் தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு முதல்வர் என்னவெல்லாமோ பேசியிருக்கிறார்.தமிழக அரசியல் வரலாற்றை ஒருமுறை திருப்பிப் பார்த்தால் அவருக்கே தெரியும்.ஒரு தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கட்சி 6 மாதங்களுக்குப் பிறகு மற்றொரு தேர்தலில் காணாமல் போயிருக்கிறது.தோல்வி அடைந்த கட்சி மீண்டும் வெற்றி பெற்ற வரலாறும் உண்டு என்பதை அவர் மறந்துவிடக் கூடாது. அவருடைய பேச்சில் அரசு,சிற்றரசு,பேரரசு என்றெல்லாம் தன் மங்காத சொல்லாற்றலைக் காட்டி உள்ளார்.

தனித் தமிழ்நாடு, திராவிட நாடு என்றெல்லாம் நினைவு கூர்ந்துள்ளார். அவர் எதை நோக்கிச் செல்கிறார் என்பதை அவரைப் பற்றி முழுமையாகப் புரிந்தவர்கள்தான் உணரமுடியும்.‘மத்திய அரசின் திட்டங்கள் என்றெல்லாம் ஏன் வேறுபாடு’ என்று கேள்வி கேட்கிறார்.

துணை முதல்வர் ஸ்டாலின் மகளிர் சுயஉதவிக் குழுக்களை தாங்கள் தான் உருவாக்கினோம், ‘99மணிநேரம் நின்று கொண்டே சுழல்நிதி கொடுத்தோம்’ என்றெல்லாம் சொல்கிறார். அந்தச் சுழல் நிதி வழங்குவது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளால்தான். அப்படியென்றால் மத்திய அரசின் உதவியும் இதிலிருக்கு என்பதை ஒருவரிகூட சொல்வதில்லையே ஏன்?

சில விஜயங்களை மறைத்து உங்களுக்குச் சாதகமாக மாற்றிக் கொள்கிறீர்கள்.அதை நாங்கள் சுட்டிக் காட்டினால்,தட்டிக்கேட்டால் உங்களுக்குக் கோபம் வருகிறது. இதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? இப்போது உறவு வேண்டுமா? வேண்டாமா? என்று கேள்வி எழுப்புகிறீர்கள். அந்த முடிவை எடுக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் நீங்கள்தான். காங்கிரஸ்காரர்கள் யாருடைய உறவுக்காகவும் என்றைக்கும் ஏங்கியது இல்லை. உதவி கேட்டு யார் கதவையும் தட்டியதும் இல்லை’’ என்றார் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்.

கொழுத்தாடு பிடிக்கும் கோவில் நிர்வாகங்கள்” “பண்பை இழக்கும் பாடசாலைகள்” ” குடாநாட்டில்

அண்ணன் சுவிஸ்ல தலையால மண் கிண்டுகிறான். அவன் தங்கை இங்கே நோண்டுகிறாள் நொக்கியாவை” அடிமேல் அடிவிழுந்தும் மீண்டும் மீண்டும் எழுந்து நிற்கின்ற குடாநாட்டு மக்களின் வாழ்வாதாரம் 90 வீதம் வெளிநாடு வாழ் உறவுகளின் கைகளில் தான் இருக்கின்றது.
எத்தனையோ துன்பத்தின் மத்தியில் இன்னொரு இனத்தினால் பொருளாதார ரீதியில் அடிவாங்கி அடிவாங்கி களைத்துவிட்ட குடாநாட்டு மக்களை இவர்கள் மிகவும் நல்லவங்களாடா எவ்வளவு அடிவாங்கினாலும் பேசாமல் இருக்கிறாங்கள் என எண்ணி வடிவேலு பாணியில் அடிக்காமல் விட்டு அட்டை போல் ஒட்டி இரத்தம் உறுஞ்ச நினைக்கும் பெரும்பான்மை சமூகத்தவர்களுக்கு இரையாக செல்ல துடிக்கும் தமிழ் மக்களை காப்பாற்ற எவரும் இனி வரப்போவதில்லை.
எமது இனத்தின் வீரப் போராட்டத்திற்கு உரம் போட்ட வெளிநாட்டு வாழ் தமிழச் சமூகம் தற்போது எமது இனத்தினை கலப்படப் பொருளாக்குவதற்கும் துணைபோக நிற்கிறதோ என எண்ணத்தோன்றுகிறது.
“பள்சர்களில் பறக்கும் பன்னாடைகள்” ஸ்கூட்டிபப்புகளில் திரியும் குமரிகள்” “கொழுத்தாடு பிடிக்கும் கோவில் நிர்வாகங்கள்” “பண்பை இழக்கும் பாடசாலைகள்” ” குடாநாட்டில் எங்கு பார்த்தாலும் சிரழிகின்றது
எமது தனித்துவமான கலை கலாச்சாரங்கள். “இயக்க நிலையில் சீராக இயங்கிய எமது பண்பாடு, கலாச்சாரங்கள் தற்போது இயக்கமற்ற நிலையல் சீரழிகின்றது”. சரியான பாதை காட்டுவதற்கு முறையான ஆட்கள் இல்லாத நிலையில் மேய்பன் இல்லாத மந்தைகள் போல மாறிவிட்டது எமது நிலை.
இவற்றுக்கு எல்லாம் முக்கியமான காரணம் வெளிநாடு வாழ் உறவுகள். ஏன் எதற்கு என கேட்காது தனது இரத்தத்தை வியர்வையாக்கி உழைக்கும் பணத்தினை தனது உறவும் உற்றாரும் ஊரும் நல்லா இருக்க அனுப்பும் பணம் இங்கே அவர்களை எவ்வாறு நாறடிக்கிறது என அவர்களுக்கு தெரியுமா?.
எடுத்திட்டாள் “ஸ்கூட்டிப்பப்”  அடுத்தவீட்டு வம்மி,  நீ உங்க இருந்து என்ன செய்யிறாய் தம்பி ,உன்ர தங்கச்சி அழுகிறாள் விம்மி, அதைச் சொல்லுறாள் ரெலிபோனில ஒரு கேடு கெட்ட மம்மி.
தம்பி அங்க என்ன செய்யுறான் எவ்வளவு கஸ்டப்படுகிறான் என்று நினைக்காமல்  ஓடுறதுக்கு அவளுக்கு வேணுமாம் ஒரு “ஸ்கூட்டி பப்” .
 ஏ.ஏல் ல பயோ படிச்சு மூன்று தடவையும் எடுத்து பெயலானவள் ஒரே தடவையில் “பாஸ் பண்ணி ஸ்கூட்டிபப்” ல “மெடிக்கல் பக்கல்டிக்கு” போற யுவதியைப் பார்த்து இப்படி கேக்குது.
அண்ணனும் தன் பாசத்தை காட்ட அனுப்புகிறான் பணம். ஏறுகிறது அவளுக்கு தலைகனம், மாறுகிறது அவளது குணம்.  அதற்கு பின் அவளுக்கு திருமணம் பார்பதென்றால் பள்சறில் பகட்டாய் திரிபவன்தான் வேணும் என்பாள். தனது தகுதிக்க மேல மாப்பிளை பார்க்க சொல்வாள். எல்லாவற்றக்கும் இருக்கிறார் ஒரு அண்ணா வெளிநாட்டில வெங்காயம் போல. என்ன கேட்டாலும் தலையாட்டி அனுப்புவதற்கு.
சிறுகச் சிறுக தேனி போல சேர்த்து சேமிப்பின் மறு வடிவமாய் இருந்த யாழ்குடாநாட்டு மக்கள் தற்போது கட்டுடைந்த குளத்து நீராய் தமது சேமிப்பை கரைப்பதைப் பார்த்து மனம் கொதிக்கிறது.
 ”யாரொரு நோவேன் யார்க்கெடுத்துரைப்பேன்” .குளித்துக் கொண்டு இருக்கும் போதும் குமரிட கையில கான்போன் கிடக்குது என்று ஒரு பெரியவர் மனம் நோவது யாருக்கு புரியும்.
பக்கத்து வீட்டு பரிமளா அக்காவை பருப்பு அவியிதில்லை என்ன செய்யலாம் என்று கான்போனிலேயே கருத்து பரிமாறுகிற அவலம் நடக்கிது குடாநாட்டில். “
குமரன் சேர்ட வகுப்புக்கு வந்த அந்த பெடியன் இங்கேயும் வாறானடி” என்று வகுப்பு நடக்கும் போதே போனில பேசுற மாணவிகள். உன்ரை ஆள் அங்க போறாளடா என்று போனிலேயே போட்டு வைக்கும் மாணவ மணிகள்
 கண்ட கண்ட படங்களை எல்லாம் கான்போனில வைச்சு காட்டும் அவலம் தற்போது எல்லா பாடசாலை மட்டத்திலும் பரவியிருக்கிறது.  ஓடுற பைக்ல கெல்மட்டுக்குள் சொருகிக்கொண்டு பெரிதாக தனியே சிரித்தபடி கதைத்துக் கொண்டுபோய் கால்வாய்க்குள் குப்பற விழுற சம்பவங்களும் ஏராளம்.
அவன் ஒரு புது மொடல் ஐபோன் வைச்சுருக்கிறான் எனக்கும் அப்படி அனுப்பு மாமா என்று வெளிநாட்டில் இருப்பவரிடம் கேட்டு வாங்கிய போனை பொம்பிளை பிள்ளைகள் வந்தால் நீட்டிக் காட்டியபடி கதைப்பது இன்னொரு புறம்.
பரதேசிபோல திரிஞ்சவன் எல்லாம் பல்சார் வைத்திருக்கிறாங்கள் எனக்கும் வேண்டித்தா என்று ஒற்றைக்காலில் நிற்கும் குறைமாத குஞ்சு. இப்படி இன்னும் சொல்ல முடியாத ஏராளமான சீர்கேடு விடயங்கள் குடாநாட்டில் நடந்தவண்ணம் இருக்கின்றன.
இவற்றுக்கு எல்லாம் அடிப்படை யார்?
 கேட்பதை எல்லாம் கொடுத்து கெடுக்கும் புண்ணியவான்கள் யார்??  இவர்களிடம் புரளும் பணத்துக்கு காரணம் யார்?? கேள்விகள் எல்லாவற்றுக்கும் சுட்டிக்காட்டும் ஒரே பதில் வெளிநாட்டு தமிழ் உறவுகள்தான். தான்
இன்பமாக வாழா விட்டாலும் தன் இனம், உறவுகள் எல்லாம் சந்தோசமாக வாழவேண்டும் என்ற நோக்கத்தில் இவர்கள் யாழ்ப்பாணத்தில் உள்ள உறவுகளுக்கு செய்யும் இவ்வாறன உதவிகள் குடாநாட்டு மக்களை சோம்பேறிகளாகவும் சோத்து மாடுகளாகவும் ஆக்கியிருப்பதை அறிவீர்களா?
உங்களிடம் உதவி கேட்கும் உங்கள் குடாநாட்டு உறவுகள் உங்களை வெங்காயமாக்கி இங்கு தாங்களும் வெங்காயமாக மாறுவதை நீங்கள் அறியாது இருப்பது மேலும் இந் நிலையை மோசமடையச் செய்யும்.
உதாரணமாக முதலில் உங்கள் உறவுகளில் ஒருவர் வாகனத்தை வாங்குவதற்காக உங்களிடம் உதவி கோரும் போது அவர்களுக்கு வாகனம் செலுத்தும் ஆற்றல் இருக்கிறதா, லைசன்ஸ் இருக்கிறதா, குடிப்பவரா என்பவற்றை எல்லாம் யோசியுங்கள். இல்லாவிடின் உங்களது உதவியே அவனையும் தெருவில் செல்வோரையும் பலிக்கடாவாக்கிவிடும். பாத்திரம் அறிந்து பிச்சை போடு என்ற பழமொழி யாருக்கு பொருந்துதோ இல்லையோ அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கும்.
தற்போது சீதனம் கூடுதலாக அதிகரித்து வெளிநாட்டு உதவி இல்லாத கன்னிகளின் கண்ணீருக்கு இலக்காகி இருப்பதும் நீங்கள்தான் என்பதை மறந்துவிடாதீர்கள். “சயன்ஸ் கோணர் போய் படிக்கிறன் என்று சயந்தனோடு திரிந்து சீரழிய நினைக்கும் உங்கள் சகோதர உறவுகளை சற்று உங்கிருந்தே உறுக்கி
வையுங்கள்.
இணையத்தளத்தில் எல்லாம் எங்களுக்கு தெரியவரும் என்றாவது சொல்லி பயப்படுத்தி வையுங்கள். அன்மையில் யாழ் சுப்பிரமணிய பூங்காவில் இரு மாணவர்கள் கொஞ்சிக்குலாவும் காட்சிகள் கொண்ட தொகுப்பு வீடியோ தற்போது மாணவர்களின் கையடக்க தொலைபேசிகளில் திரிவதை தங்களுக்கு தெரியப்படுத்துகின்றோம். அந்த இருவரில் ஒருவர் உங்கள் சொந்த உறவாகவும் இருக்கலாம். அந்தக் காட்சிகள் எமது கைகளில் இருக்கிறது. ஆனால் எமது காலாச்சரச் சீரழிவை நாம் ஒருபோதும் காட்டமாடடோம்.
எம்மினத்தை தற்போது ஆதிக்கம் செய்யும் ஒரு இனத்தால் எங்களின் கலாச்சார விழுமியத்தை கொத்திக் குதறி ஏப்பமிட்டுவரும் ஒரு திட்டமிட்ட நடவடிக்கைக்கு நாம் ஆளாகாமல் இருப்பதற்கு உங்களின் உறவுகளை திருத்தும் இவ்வாறான உதவியை குடாநாட்டு சமூக ஆவலர்கள் உங்களிடம் இருந்து பெறுவதற்கு வேண்டுகின்றார்கள். மேலும் இவ்வாறன தகவல்கள் வளரும்.
உங்கள் உறவுகளில் ஒருவன்

பொடியள் படம் பார்க்கப் போட்டாங்கள்

தடம் மாறும் யாழ்ப்பாணம்
உதிஷ்டிரன்
raja theatreயாழ்ப்பாண நகரின் மத்தியில் எழிலுற தனக்கேயுரிய மிடுக்குடன் அமைந்திருக்கிறது அந்தப் பாடசாலை. அப்பிரபல பாடசாலையில் கல்வி கற்ற பலர் இன்றும் புகழ்பூத்த கல்விமான்களாக மிளிர்ந்து கொண்டிருக்கின்றனர். உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாடுகளிலும் கூட அந்தப் பாடசாலையில் பயின்றவர்கள் புகழ் பெறும் அளவிற்கு அப்பாடசாலையின் கல்வித்தரம் அன்றே மேலோங்கியிருந்தது. பல சீர் மிகு கல்வியாளர்களை உருவாக்க்கிய கலைக்கூடத்திற்கு தனிப்பட்ட அலுவல் ஒன்றின் நிமித்தம் அண்மையில் விஜயம் செய்த பாக்கியம் கிடைத்தது. அங்கு கல்வி கற்கும் ஆசிரியர் ஒருவரைச் சந்திப்பதற்காகவே சென்றிருந்தேன்.
அந்நேரம் அப்பாடசாலை ஆரவாரமின்றி இயல்பாக இருந்தது. வழமையை விட உயர்தர வகுப்பு மாணவர்களின் வரவு பெருமளவு வீழ்ச்சி கண்டிருந்தது. மரணச்சடங்குக்கோ அல்லது ஏதோவொரு விஷேட நிகழ்வுக்கோ சென்றுவிட்டார்களாக்கும் என்ற நினைப்பு என் மனதில் துளிர் விட்டது. இருந்தும் நான் வந்த ஆசிரியரைச் சந்திக்கும் நோக்கம் பூர்த்தியாகிய பின் அந்த ஆசிரியரிடமே மாணவர்களின் வருகை வீழ்ச்சி குறித்த சந்தேகத்தை வினாவினேன். அதற்கு அந்த ஆசிரியர் கூறிய பதில் என்னை சற்றே அசர வைத்தது.
"இன்று எந்திரன் படம் வெளிவருகிறதாம். அதனால்தான் பொடியள் படம் பார்க்கப் போட்டாங்கள்" என்றார் சாதாரணமாக. எப்படி இருக்கிறது நிலைமை. யாழ்ப்பாணக் குடாநாட்டு மக்கள் ஒரு காலத்தில் கல்வித்துறையில் கொடி கட்டிப் பறந்தார்கள். முன்னரெல்லாம் கல்வியே கருத்தென இருந்தார்கள். எமது வாழ்க்கையின் அச்சாணியாக கல்வித்துறை விளங்கியது. இதற்கு அன்றைய யாழ்ப்பாண நூலகம் சாட்சியாக இருந்தது. அந்நூலகத்தில் தவழ்ந்து விளையாடிய பலர் இன்றும் உயர் பதவிகளில் பல தேசங்களிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.அத்தகைய கல்வியின் உறைவிடமான அரும்பெரும் பொக்கிஷமான இந்நூலகம் முன்னர் இருந்த அதே பொலிவுடன் இன்று இல்லையே என நினைக்கும் போது வேதனைதான் மிஞ்சுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த நூலகத்தின் வீழ்ச்சி எம்மினத்தின் வீழ்ச்சிக்கு நிலைக்களமாக அமைந்தது என்று கூறினால் தவறாகாது. அந்தளவிற்குத் தென் ஆசியாவிலே பிரமாண்டமான நூல் நிலையமாக ஏறக்குறைய 1 இலட்சம் புத்தகங்களை தன்னகத்தே கொண்டு விளங்கிய பெருமை யாழ் நூலகத்தையே சாரும்.
இன்று குடா நாட்டின் கல்வித்தரம் கீழ்நிலைக்குச் சென்றதற்கு சினிமாக்களின் வரவுகளும் ஒரு காரணம் என்று சொன்னால் அது பிழையில்லை. சினிமாத்துறையின் அசுர எழுச்சியானது கல்வித்துறை மீதான மாணவர்களின் நாட்டத்தை, ஈடுபாட்டைக் குறைத்துள்ளது. சினிமாவானது எந்தளவிற்கு எமது சமூகத்தின் மீது தாக்கம் செலுத்தி வருகிறது என்பதற்கு யாழ்ப்பாண நகரில் இருக்கின்ற திரையரங்குகளின் எண்ணிக்கைகளைக்கொண்டு அறியலாம்.
யாழ்ப்பாண நகரில் அமைந்திருக்கும் திரையரங்குகளுக்கு ஒரு முறை சென்றால் அங்கு அரங்கேறும் அலங்கோலக்காட்சிகள் காண்போரை முகம் சுழிக்க வைக்கின்றன. அந்த அளவிற்கு கலாசார சீர்கேட்டின் உச்சத்தை அங்கு தரிசிக்கலாம். முன்னரெல்லாம் சினிமாத்திரையரங்குகளிற்கு சென்று படம் பார்க்கும் வழக்கம் எம்மவரிடையே இருந்ததுதான். தென் இந்தியாவிலே ஒரு புதிய படம் வெளிவருகின்றது என்றால் இங்கிருந்து கூட தென் இந்தியாவிற்கு இரவில் கடல் வழியாகச் சென்று படம் பார்த்து விட்டு விடியற்காலையிலே வந்து விடுவார்கள் என முதியவர் ஒருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்தளவிற்கு சினிமா மக்களை கட்டிப்போட்டிருந்தது உண்மைதான். ஆனால், இன்றுள்ள சினிமாத்துறையின் அடிநாதமே வேறு. சமூக கலாசாரச் சீரழிவுகளுக்குத் தூபமிடுபவையாகவே இன்றைய சினிமாக்களின் வரவு அமைந்திருக்கிறது. முற்றிலும் வருமானத்தைக் குறியாகக் கொண்டு தயாரிக்கப்படும் திரைப்படங்கள் மக்களின் வாழ்வியலில் பல்வேறுபட்ட தாக்கங்களைச் செலுத்துகின்றன. முன்னரெல்லாம் குடும்பப்பாங்கான சமூகப்பிரச்சினையை பிரதிபலிக்கும் படங்களே வெளியாகியிருந்தன. ஆனால், இன்று நிலைமை முற்றிலும் தலை கீழாக மாறியிருக்கிறது.
படம் பார்க்கவென ஒரு சினிமாத்திரையரங்குக்குள் நுழைந்தால் பல அலங்கோலமான காட்சிகளே எம் முன்விரியும். குடும்பத்துடன் இருந்து படம் பார்ப்பதற்கே கூசும் அளவிற்கு அக்காட்சிகள் விரசம் ததும்பும் வகையில் அமைந்திருக்கும். அது மட்டுமன்றி அப்படத்தை பார்ப்பதற்கென குடாநாட்டின் பல இடங்களில் இருந்தும் காதலர்கள் என்ற போர்வையில் உள்நுழையும் இளஞ்சோடிகள் செய்யும் காமலீலைகள் சகிக்க முடியாதளவிற்கு அருவருப்பூட்டுவனவாக இருக்கும். இத்தகைய அனுபவங்களை யாழ் குடாநாட்டில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று பார்த்தால் தெரிந்திருக்கும். சகிக்க முடியாத அளவிற்கு இளம் காதலர்கள் நடத்தும் அலங்கோலங்கள் அம்பலத்தில் அரங்கேறுகின்றன.
முன்னரெல்லாம் பெண்கள் திரையரங்குகளிற்குச் செல்ல மாட்டார்கள். அப்படித் திரையரங்கிற்குச் சென்றாலும் கணவனுடனோ அல்லது குடும்பத்தாருடனோ சென்றுதான் படம் பார்ப்பார்கள். ஆனால், இன்று நிலைமை அப்படி இல்லை. முன்பின் தெரியாத ஆடவனுடனோ அல்லது ஆண் நண்பன் என்ற ரூபத்தில் பழகும் இளைஞனுடனோ அல்லது சக வகுப்பு மாணவனுடனோ சென்று சேர்ந்திருந்து படம் பார்க்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இத்தகைய சம்பவங்கள்தான் வீதியில் அநாதரவாக கைவிடப்பட்டிருக்கும் சிசுக்களாக மாறுவதற்கு வழிகோலுகின்றன. காதல் சோடிகளுக்கென்றே பிரத்தியேகமான முறையில் திரையரங்குகளில் அமைக்கப்பட்டிருக்கும் மறைவான இருக்ககைள் காதல் லீலைகளை அரங்கேற்றுவதற்கு வாய்ப்புக்களை வழங்குகின்றன.
தவிரவும் பல இளைஞர்கள் மதுபோதையில் ரகளை செய்வது, புகைப்பிடிப்பது குடும்பத்துடன் படம் பார்க்கவரும் பெண்களுடன் சேட்டைகள் விடுவது போன்ற பல அட்டூழியங்களில் ஈடுபடும் நிகழ்வுகள் குடாநாட்டு திரையரங்குகளில் காணமுடிகிறது. கூட்டம் கூட்டமாக வரும் இளைஞர்களின் அட்டகாசத்தை தட்டிக்கேட்பதற்கு கூட ஒருவரும் முன்வருவதில்லை. ஏன் திரையரங்கு நிர்வாகம் கூட நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறது. காரணம் காலம், சூழ்நிலை என்பவை இவ் இளைஞர்களுக்கு அசாத்திய துணிச்சல்களுக்கு வழியேற்படுத்திக் கொடுக்கின்றன.
அங்கு வரும் இளைஞர்களில் பலர் பாடசாலைகளில் பயிலும் மாணவர்களே என்பது சோகம் தரும் விடயமாகும். எழுது கோல் ஏந்தும் கைவிரல்கள் சிகரெட்களை ஏந்தியவாறு படங்களில் வரும் கதாநாயகர்களாகத் தம்மைக் கற்பனை செய்து விடும் புகைகள் அத்திரையரங்கு முழுவதும் ஒரே புகைமூட்டமாக கவிந்திருக்கும். மற்றையவர்கள் சுதந்திரமாகப் படம் பார்ப்பதற்குக் கூடத் தடை ஏற்படுத்தப்படுகின்றது.
'தட்டிக் கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப்பிரசண்டன்' என்ற பழமொழியை மெய்ப்பிப்பது போலவே அவ் இளைஞர்களின் காடைத்தனம் மேலெழுகின்றது. ஆக, எமது சமூகம் இன்று அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எமது கலாசார விழுமியங்களிலிருந்து எம் சமூகம் அந்நியப்பட்டுச் சென்று கொண்டிருப்பதானது சமூகப்பிரக்ஞை உள்ளவர்களைக் கவலையில் ஆழ்த்தியுள்ளது.
ஒர் இனத்தின் வீழ்ச்சி என்பது அவ் இனத்தின் கலாசார சீரழிவின் உச்சத்தில் தங்கியுள்ளது. எமது பழம் பெருமை மிக்க பண்பாட்டு கூறுகள் கூட எமது வரலாற்றுப் புத்தகத்தில் நித்தியப்படுத்தப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் 'சிவபூமி' என்றும் 'யாழ்ப்பாண கலாசாரம் கந்தபுராணகலாசாரம்' என்றெல்லாம் பல்வேறு அறிஞர் பெருமக்களால் சிலாகித்துரைக்ப்பட்டுவரும் நிலையில், எமது கலாசார அடையாளங்கள் உன்னத இடத்தைப் பெற்றிருந்தன. ஆனால், அத்தகைய உயர் கலை கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எல்லாம் இன்று சிதைவடைந்து நலிவடைந்து செல்வது எமது இனத்திற்கு ஆரோக்கியமானதல்ல என்பதை நாம் விளங்கிக்கொள்ள வேண்டும்.
எனவே எமது முன்னோர்களால் கட்டிக்காத்து வளர்க்கப்பட்டு வந்த எமது பண்பாட்டு விழுமியங்கள் தொடர்ந்து வரும் எமது சந்ததிக்கும் முதுசொம்களாகப் பேணிக்காத்து வழங்க நாம் அனைவரும் முன்வரவேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு ஆகும்.
- யாழ்மண் -

இந்திய துணைத் தூதரகம் யாழ்ப்பாணத்தில் இன்று திறப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டிருக்கும் இந்தியத் துணைத் தூதரகத்தை இன்று யாழ்ப்பாணத்தில் திறந்து வைக்கிறார். இன்று காலை யாழ்ப்பாணம் செல்லும் அவர், விவசாயிகளுக்கு 500 டிராக்டர் வண்டிகளைக் கையளிப்பதுடன், யாழ்ப்பாணம் பலாலி வீதியில் அமைக்கப்பட்டிருக்கும் துணைத் தூதரகத்தை திறந்து வைக்கவுள்ளார். அதன் பின்னர் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் அமைக்கப்படவிருக்கும் 50,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தின் முதற் கட்டமான 1,000 வீடுகளை அமைக்கும் திட்டத்தை அரியாலையில் அங்குரார்ப்பணம் செய்யவுள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து மதவாச்சி செல்லும் இந்திய வெளிவிவகார வட பகுதிக்கான புகையிரதப் பாதை அமைக்கும் திட்டத்தையும் ஆரம்பித்து வைக்கவுள்ளார். இத்திட்டம் மூன்று கட்டங்களாக அமைக்கப்படவுள்ளன. மதவாச்சியிலிருந்து மடு வரையும், மடுவிலிருந்து தலை மன்னார் வரையிலும், ஓமந்தையிலிருந்து பளை வரையிலுமாக அமைக்கப் படவுள்ளன. அதேநேரம், ஹம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டிருக்கும் இந்திய துணைத் துதரகத்தை இந்திய வெளிவிவகார அமைச்சர் நேற்று திறந்து வைக்கவிருந்த போதும் நாட்டில் காணப்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக அங்கு செல்ல முடியாது போனதாக இந்தியத் தூதரகம் தெரிவித்தது.

கமலஹாசனின் மகள் இலங்கை வாலிபனுடன் காதல்

கமல்ஹாசன் மகள் அக்ஷரா, இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன் என்பவரை காதலிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக எடுத்துக் கொண்ட படம், இன்டர்நெட்டில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் கமல்ஹாசன் மற்றும் சரிகா தம்பதிக்கு 2 மகள்கள். மூத்த மகள் ஸ்ருதி. படங்களில் நடித்து வருவதுடன், இசை அமைப்பாளராகவும் உள்ளார். இந்தியில் லக் என்ற படம் மூலம் அறிமுகமானார்.   தமிழில் சூர்யாவுக்கு ஜோடியாக 7ம் அறிவு என்ற படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இவரது தங்கை அக்ஷரா மும்பையில் அம்மா சரிகாவுடன் வசிக்கிறார். சொசைட்டி என்ற படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். நடன இயக்குனராவும் உள்ளார்.
இலங்கை வாலிபர் ஜேஸன் ஜெயசீலன்(20) என்பவருடன் அக்ஷரா கடந்த ஒரு வருடமாக நட்புடன் பழகி வருவதாக தெரிகிறது. இந்த நட்பு காதலாக மலர்ந்துள்ளது. இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது வெளிப்படையாக தெரிந்த ஒன்றுதான் என்றாலும் இருவரும் காதலிக்கிறார்கள் என்பது அவர்களது குடும்பத்துக்கே இப்போதுதான் தெரியவந்திருப்பதாக தகவல்கள் சொல்கின்றன.
இருவரும் வெளியில் ஜோடியாக செல்வதுடன், நெருக்கமாக இருப்பது போன்ற போட்டோவை இன்டர்நெட்டில் வெளியிட்டுள்ளனர். அடிக்கடி நெட்டிலும் சாட் செய்து கொள்ளும் இவர்கள் அக்ஷு மற்றும் ஜேய்ன் என்ற புனைப்பெயர்களில் காதல் சம்பாஷணைகளை பரிமாறிக் கொள்வதாக தெரிகிறது