சமீப காலமாக ஆதார் அட்டையைச் சுற்றி
எக்கச்சக்க களேபரங்கள் நடந்து வருகின்றன. ஓட்டுநர் உரிமம், பான் கார்டு என ஒவ்வொன்றிற்கும் ஆதார் கார்டு அவசியம் என அறிவுறுத்தி வருகிறது மத்திய அரசு. மறுபக்கம் உச்சநீதிமன்றமோ அரசின் மானியத் திட்டங்களுக்கு ஆதார் கார்டு அவசியம் எனக் கட்டாயப்படுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளது. ஆனாலும் மத்திய அரசு கேட்பதாக இல்லை.
இந்நிலையில், வி.வி.ஐ.பிகளின் ஆதார் கார்டு விவரங்கள் வரிசையாக லீக்காகி வருகின்றன. சில நாட்களுக்கு முன் ட்விட்டரில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் ஆதார் விவரங்கள் வெளியாகி வைரலானது. அதற்கு தோனி கடும் அதிருப்தி தெரிவித்திருந்தார். ஏற்கெனவே ஆதார் பாதுகாப்பில்லை எனக் கூறி வந்தவர்களின் குரல் இந்தச் சம்பவத்திற்குப் பிறகு மேலும் வலுப் பெற்றுள்ளது.