சனி, 1 ஜூலை, 2017

குடியரசுத் தலைவர் தேர்தலில் எம்.எல்.ஏ,எம்.பிக்கள் மனச்சாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்-மீராகுமார்

சென்னை எம்.ஆர்.சி.நகர் உள்ள தனியார் ஓட்டலில் ஜனாதிபதி தேர்தலில்
எதிர்கட்சிகளின் ஆதரவு கோரும் நிகழ்ச்சி நடைபெற்றது. குடியரசுத் தலைவர் தேர்தல் எதிர்க்கட்சிகள் வேட்பாளர் மீராகுமார், திமுக செயல் தலைவர் ஸ்டாலினை சந்தித்து ஆதரவு கோரினார். அதனைதொடர்ந்து குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீராகுமார் செய்தியார்களிடம் கூறியதாவது: சமூக நீதி மற்றும் ஜனநாயக் மரபுகளை காப்பதில் மாபெரும் சக்தியாக விளங்குபவர் திமுக தலைவர் கருணாநிதி. கடந்த சில நாட்களில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சில நிகழ்வுகள் நடந்துள்ளன. மதசார்பின்மை,சமூக நீதிக்கு மு.க.ஸ்டாலின் குரல் கொடுத்து வருகிறார். ஊடக சுதந்திரம்,பேச்சுரிமைக்காக போராடி வருகிறேன்.ஜனநாயகத்தின் மீது மதிப்பை கொண்டது தமிழகம். தமிழ்நாடு எப்போதும் சமூக நீதிக்காக போராடும் மாநிலம்.

சென்னை .திமுகவிடம் திருமதி மீரா குமார் ஆதரவு கேட்டார் (படங்கள்)

ஜனாதிபதி தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் போட்டியிடும் முன்னாள்
சபாநாயகர் மீரா குமார் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை சந்தித்து ஆதரவு கேட்பதற்காக இன்று மாலை சென்னை வந்தார். சென்னை விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இன்று மாலை தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலினை, மீரா குமார் சந்தித்தார். அப்போது ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்டுக்கொண்டார். சென்னை லீலா பேலஸ் தனியார் ஓட்டலில் நடந்த இந்நிகழ்ச்சியில் திருநாவுக்கரசர், துரைமுருகன், ஆர்.எஸ். பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், டி.கே.ரங்கராஜன், கனிமொழி, டி.ராஜா மற்றும் தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளின் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கலந்துகொண்டனர்.nakkeeran  படங்களை பெரிதாக காண்பதற்கு படங்கள் மீது அழுத்தவும்

115 வயதான தமிழக மூதாட்டி மரணம்!

115 வயதான தமிழக மூதாட்டி மரணம்!
மின்னம்பலம் : உலகிலேயே அதிக வயதான மனிதராக இருந்த இத்தாலியைச் சேர்ந்த எம்மா மொரானோ என்ற மூதாட்டி 117 வயதில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தார். அதேபோன்று தமிழகத்தைச் சேர்ந்த மிகவும் வயதான மூதாட்டி கடந்த இரு தினங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார்.
தரமற்ற உணவு மற்றும் நாகரீக உணவு பழக்க வழக்கங்கள் என்ற பெயரில் நச்சு கலந்த உணவு வகைகளை உண்பதால் 60 வயதில் வர வேண்டிய நோய்கள் 20 வயதிலேயே வந்துவிடுகிறது.30 வயது இளைஞர்கள் மாரடைப்பால் இறக்கின்றனர் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் பண்டைய கால மக்கள் இயற்கையான உணவு வகைகள், மண்பானை சோறு, சுத்தமான குடிநீர் என ஆரோக்கியமான உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தனர். இதனால் அவர்களின் வாழ்நாள் 60 வயதிலேயே முடியாமல் 100 வயதுக்கு மேல் நீடித்தது. அதன்படி அவர்கள் மகன், பேரன், கொள்ளு பேரன் என மூன்றுக்கும் மேற்பட்ட சந்ததியினரை சந்தித்த பின்னரே உயிரிழக்கின்றனர்.

ப.சிதம்பரம் :ஜிஎஸ்டி நிறைவானதல்ல, மிகப்பெரிய தவறுகள் நிரம்பியது

.மத்திய அரசு, மாநில அரசு இரண்டுக்குமே இதில் அதிகாரம் உள்ளது இதுவும் பெரிய பிரச்சினைதான், பெட்ரோலியம் பொருட்களை இதற்குள் கொண்டு வராமல் விட்டது, மின்சாரம், மதுபானம், ரியல் எஸ்டேட்டின் பல பகுதிகள் ஆகியவையும் ஜிஎஸ்டியில் இல்லை, இதில் வெறுக்கத்தக்க பகுதி என்னவெனில் லாபத்துக்கு எதிரான பிரிவு. இந்தக் குழப்பான பிரிவை வடிவமைத்தவர்களுக்கு  பொருளாதாரம், வணிகம், சந்தைப் பொருளாதாரம் என்று எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஜிஎஸ்டி வரி முறை முழு நிறைவானதல்ல மேலும் பெரிய தவறுகள் நிரம்பியது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். “பெரும்பான்மை சிறு மற்றும் நடுத்தர தொழிற்துறையினர் மீது திணிக்கப்பட்ட நிறைவற்ற, தவறுகள் நிரம்பிய ஜிஎஸ்டி வரியாகும் இது. நாடு இதற்குத் தயாராகாத போது, இதில் உள்ள சிக்கல்கள் அகற்றப்பட வேண்டும் என்பது தெளிவாகத் தெரியும் போது பாஜக அரசு தனது பதற்றத்துடன் இதனை அறிமுகம் செய்துள்ளது. இது குறித்த நியாயமான விமர்சனங்களை பாஜக புறக்கணித்தது. இந்த ஜிஎஸ்டி வரி முறை நிபுணர்களால் தயாரிக்கப்பட்டதல்ல, இது தலைமைப்
பொருளாதார ஆலோசகர் ஆலோசனையில்லாதது இந்த ஜிஎஸ்டி. காங்கிரஸ் சிந்தித்த ஜிஎஸ்டி அல்ல இது, மேலும் நாட்டுக்கு தகுதியான ஜிஎஸ்டி அல்ல இது. துல்லியமற்றதுடன் கூடுதலாக பலதரப்பட்ட சமரசங்களும் இதில் நிகழ்ந்துள்ளன, இதன் பெரிய தவறுகள் உள்ள பகுதி பலதரப்பட்ட வரிவிதிப்பாகும்.

ஜி.எஸ்.டி; வரி விபர பட்டியல் ..என்னென்ன பொருட்களுக்கு எவ்வளவு வரி ?

BBC :ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, இன்றுமுதல் (சனிக்கிழமை) நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டது. சுமார் 1200க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு ஜி.எஸ்.டி கவுன்சில் வரி நிர்ணயம் செய்துள்ளது. தனித்தனிப் பிரிவுகளின்கீழ் 5 முதல் 28 சதவிகித வரி வரம்புகளில் பல்வேறு பொருட்களுக்கான வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டியால் விலை உயரும் உயிர்காக்கும் மருந்துகள் - சிறு நகரங்கள், கிராமங்களில் தட்டுப்பாடு அபாயம் “திங்கட்கிழமை முதல் சினிமா காட்சிகள் ரத்து” ஜி.எஸ்.டி வரியால் சிறு தொழில்கள் பாதிப்பு - சங்கபரிவார் அமைப்பு ஆட்சேபம்
பூஜ்ஜியம் வரி (வரி விதிக்கப்படாத பொருட்கள்)
• பால்
• தானியங்கள்
• பழங்கள்
• உப்பு
• அரிசி, அப்பளம், ரொட்டி
• விலங்குகளுக்கான தீவனம்
• காண்டம்கள்
• கருத்தடை மருந்துகள்
• புத்தகங்கள்
• விறகு
• வளையல்கள் (விலைகுறைவானவை)

சவக்குழிக்குள் தள்ளுகிறது': மத்திய அரசு மீது மம்தா தாக்கு

கோல்கட்டா: ‛ஜி.எஸ்.டி.,யை அமல்படுத்தி, நாட்டின் ஜனநாயகம்

சுதந்திரத்தை, மத்திய அரசு சவக்குழிக்குள் தள்ளுகிறது' என மேற்குவங்க முதல்வரும், திரிணாமுல் காங்., தலைவருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது:> நாடு முழுவதிலுமுள்ள சிறு வர்த்தகர்களை, ஜி.எஸ்.டி.,யின் மூலம் மத்திய அரசு துன்புறுத்துகிறது. 1947ம் ஆண்டு ஆக., 14 நள்ளிரவில் நமக்கு சுதந்திரம் கிடைத்தது.ஆனால் 2017, ஜூன் 30 நள்ளிரவில், ஜனநாயகம், சுதந்திரம், சவக்குழிக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்தியில் கேலிக்கூத்தான ஆட்சி நடக்கிறது. ஜி.எஸ்.டி., சட்டத்தில், வர்த்தகர்களுக்கு எதிராக, ஜாமினில் வெளியே வர முடியாத பிரிவுகள் உள்ளன. இதனால் வியாபாரிகள் கடும் அச்சத்தில் உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். dinamalar

பெங்களூர் .. ஹிந்தி வெறியர்கள் கன்னடத்திற்கு எதிராக .. ஆங்கில விவாதத்திலும் பாஜகவினரின் ஹிந்தி கூச்சல்பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எஸ் வி சேகருக்கு கடிதம் எழுதியது தவறா?

Don Ashok :சுபவீ தரத்திற்கு எஸ்.வீ.சேகருக்கு கடிதமே எழுதியிருக்கக் கூடாது
என வருந்தினேன். அப்படிப்பார்த்தால் கலைஞர் தரத்திற்கு ஜெயலலிதாவுடன் அரசியல் செய்திருக்க கூடாது. மதிமாறன் தரத்திற்கு நாராயணனுடன் பேசியிருக்கவே கூடாது. ஆனால் என்ன செய்ய முடியும்? தமிழக அரசியல் சூழல் தரமானவர்கள் vs தரமானவர்கள் என்றில்லாமல் தரமானவர்கள் vs மகா-தரமற்றவர்கள் என்றுதானே இருக்கிறது.
"அதென்ன மாற்றுக் கருத்தினரை மகா-தரமற்றவர்கள் எனச் சாடுவது? அப்படி என்ன திமிர் உங்களுக்கு?" என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம்.
சுபவீ எஸ்.வீ.சேகருக்கு எழுதிய கடிதத்தையும் எஸ்.வீ.சேகர் சுபவீக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தையும் ஒப்பிடுங்கள்.
எஸ்.வீ.சேகரின் கடிதத்தில் சுபவீயைப் பற்றி 'தன் சாதியில் மணமகன் எடுத்தவர். சாதி சங்கத்தில் பொருளாளராக இருந்தார்," என்றெல்லாம் பொய்கள் குவிந்துகிடக்கின்றன.

தேவதாசி முறை ஒழித்த புரட்சி பெண் மூவலூர் இராமாமிர்தம் அம்மா ..ஜூன் 28 1883 – . 1962

Nallathambi Nsk: தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண் போராளி மூவலூர்
இராமாமிர்தம் அம்மா அவர்களின் நினைவு தினம் :- * பெண்களுககெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.
* குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள், நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.
* இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883-ம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.
* ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் இராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.

Lynching / கும்பல் கொலை ! இந்தியாவின் பொதுவெளிகளைக் கும்பல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன.

writerasai.blogspot.com  மனஷ் ஃபிராக் பட்டாச்சார்ஜீ (‘தி இந்து’ தமிழ் நாளிதழில் 29-06-2017 அன்று என் மொழிபெயர்ப்பில் வெளியான கட்டுரை)
 பிரெஞ்சு தத்துவ மேதை சார்த்தர் இப்படிச் சொன்னார்: “பாசிஸம் என்பது அதனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையைக் கொண்டல்ல, அவர்களை எந்த விதத்தில் அது கொல்கிறது என்பதை வைத்துத்தான் வரையறுக்கப்படுகிறது.” இந்தியாவின் பொதுவெளிகளைக் கும்பல்கள் ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. கும்பல் கொலை என்பது அரசியல் கருத்து வெளிப்பாடுகளின் மிகக் கொடூரமான வடிவம். சமீபத்திய சம்பவம், மதுராவுக்குச் செல்லும் ரயிலில் கடந்த 22-ம் தேதி நடந்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமை வரவிருந்த ரம்ஜானுக்கென்று புத்தாடைகள் உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக டெல்லிக்குச் சென்றுவிட்டு வீடு நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்த ஹஃபீஸ் ஜுனைத் என்ற 16 வயது முஸ்லிம் பையன் ஒரு கும்பலால் கொல்லப்பட்டான். அவனது மூன்று சகோதரர்களும் தாக்கப்பட்டார்கள். அந்த நான்கு முஸ்லிம் இளைஞர்களிடமும் அவர்கள் உட்கார்ந்திருந்த இருக்கைகளைத் தங்களுக்குத் தரும்படி 15 பேர் அடங்கிய கும்பல் ஒன்று கேட்டதாகத் தகவல்கள் கிடைத்திருக்கின்றன. இருக்கைகளைத் தர மறுத்ததால் மதரீதியிலான வசைகள் அவர்கள் மீது வீசப்பட்டிருக்கின்றன. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்கள் என்று அவர்கள் வசைபாடப்பட்டிருக்கிறார்கள்.

savukkuonline.com: குட்கா விற்ற காசு கசக்காது... இந்த உயர் உயர் அதிகாரிகளை அம்பலப்படுத்துவது நமது கடமை.

DSC_0081_0ஒரு வருடம் முடியப் போகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னையை அடுத்த செங்குன்றத்தில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த குட்கா கோடவுனில் சோதனை நடத்தி ஆவணங்களை கைப்பற்றி ஒரு வருடம் முடியப் போகிறது.  7 ஜுலை 2016 அன்று அந்த சோதனை நடைபெற்றது.  இந்த சோதனைகளில் கிடைத்த ஒரு பதிவேடுதான் இந்த சோதனையை முக்கியத்துவம் பெறச் செய்கிறது.

தமிழகத்தில் குட்கா தடை செய்யப்பட்டு சில ஆண்டுகள் ஆகின்றன.  குட்கா உடல்நலத்திற்கு பெரும் தீங்கு விளைவிக்கக் கூடியது என்பதால்தான் இது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை முழுமையாக செயல்படுத்த வேண்டிய கடமை, உள்ளாட்சி அமைப்புகளின் சுகாதாரத் துறையினருக்கும் காவல் துறையினருக்குமே உள்ளது.    ஆனால் இந்த வேலிகள் பயிரை மேய்ந்த கதையைத் தான் நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
முன்னாள் தலைமைச் செயலாளர் ராம் மோகன ராவ் வீடு மற்றும் அலுவலகத்தில் வருமான வரித் துறை அதிகாரிகள் வீட்டில் 21 டிசம்பர் 2016 அன்று சோதனை நடத்தியதும்தான் ஜார்ஜ் கலங்கிப் போனார். வருமான வரித் துறையினர் குட்கா தயாரிப்பாளரிடமிருந்து மாமூல் பெற்றது குறித்து எழுதிய கடிதம் வருமான வரித் துறையினர் சோதனையில் சிக்கியது என்பதை அறிந்த பிறகே, மறு நாளே 22 டிசம்பர் 2016 அன்று குட்கா விவகாரத்தில் மாமூல் வாங்கிய இன்ஸ்பெக்டர்கள் மற்றும் டிஎஸ்பிக்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நல்லவர் போல உள் துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதுகிறார். 

வெள்ளி, 30 ஜூன், 2017

Don Ashok: மூளை வளர காயத்திரி .. அந்த பலான உறுப்பு' கிடுகிடுவென வளர என்ன மந்திரம்

அன்புள்ள டான்,
எஸ்.வீ.சேகர் சார் சுபவீக்கு எழுதிய கடிதம் கண்டேன். அதில் வரும் மருத்துவ தகவல் ஒன்று என்னை மலைக்க வைத்தது. காயத்ரி மந்திரம் சொன்னால் மூளை வளரும் என சொல்லியிருந்தார். எனக்கும் ஒரு 'பலான' உறுப்பு வளர வேண்டும். நீங்கள் அவருடன் பல டிவி விவாதங்களில் பங்கேற்றவர். நான் நிறைய போலி மருத்துவர்கள், ஆன்லைன் ஆசாமிகள், ஹீலர்களிடம் காசு கொடுத்து ஏமாந்தும் ஒரு மி.மீ கூட அதிகம் வளரவில்லை. கொஞ்சம் தயவுகூர்ந்து எந்த மந்திரம் சொன்னால் 'அந்த பலான உறுப்பு' கிடுகிடுவென வளரும் என கேட்டு சொல்வீர்களா? அவருக்கு ஃபீஸ் அனுப்பிவிடுகிறேன் என்றும் மறக்காமல் சொல்லிவிடுங்கள்.
-ஆவலுடன் காத்திருக்கும் பெயர் வெளியிட விரும்பாத அபலை.
அன்புள்ள பெ.வெ.அ.
உங்கள் பிரச்சினை புரிகிறது. இந்திய ஆண்களில் பலருக்கு சிந்தனை செய்யும் மூளையே அந்த பலான உறுப்புதான் எனும்போது உங்களுக்கு அதிலேயே சிக்கல் என்கிறீர்கள். என் அனுதாபங்கள். எஸ்.வி.சேகரின் கடிதம் நானும் படித்தேன். ஆனால் அதை ஆழ்ந்து படித்தால் அதில் முரணான தகவல்கள் உள்ளதை அறியலாம். பொதுவாக காயத்ரி மந்திரம் என்பது அவர் சார்ந்த சாதியினர் மட்டுமே படிப்பது. அதனால்தான் மற்றவர்கள் படிக்க கூடாது என்பதற்காக 'அனைத்து சாதியினரும் அர்ச்சகர்' ஆகும் சட்டத்திற்கு தடை வாங்கினார்கள்.

Stanley Rajan : கமலஹாசன் இலுமினாட்டி ... இது இலுமினாட்டி அது அலுமினாட்டி.. யோவ் கம்முனாட்டி ..

அவ்வப்போது வரும் புலம்பல்தான், இப்பொழுது விஜய் டிவியில்
கமலஹாசன் ஒற்றைகண் முன்னால் தோன்றுவதில் அது மறுபடியும் ஒப்பாரியாக்கபடுகின்றது,
அதேதான் இது இலுமினாட்டி சதி, விஜய் டிவி இலுமினாட்டி, கமலஹாசன் இலுமினாட்டி என சிலர் தொடங்கிவிட்டார்கள்
இந்த இலுமினாட்டி என்றால் என்ன?
அன்றைய ஐரோப்பா மக்களை சிந்திக்கவோ, யோசிக்கவோ விடவில்லை. பிரபுக்கள் ஒரு பக்கமும், அதற்கு மேல் கிறிஸ்துவ மதவாதமும் மக்களை அடக்கி வைத்தன, அவர்களை சிந்திக்கவே விடவில்லை.
இந்நிலையில்தான் அவர்களுக்கு அறிவு ஒளி கொடுக்க சிலர் ரகசியமாக இயங்கினார்கள், லத்தீன் மொழியில் இலுமினாட்டி (Illuminate) என்றால் ஒளிகொடுத்தல் என்று பொருள், ஆங்கிலத்தில் அது (Enlighten) என வரும்
புரட்சி என்பதே அர்த்தமில்லாமல் கோமாளிகளுக்கு எல்லாம் புரட்சி தலைவன் என பட்டமழிக்கும் தமிழகத்தில் , அறிவு இயக்கம் என சொல்லபடும் இலுமினாட்டி , மிக மர்மமான கும்பலானதில் என்ன ஆச்சரியம்?
உண்மையில் இலுமினாட்டி என்றால் பகுத்தறிவு இயக்கம் என பொருள், அப்படியானால் இன்றைய திமுகதான் உண்மையான இலுமினாட்டி,
இதனை சொன்னால் ஒப்புகொள்வார்களா? மாட்டார்கள், விடுங்கள் போகட்டும். இலுமினாட்டி வரலாறு இப்படி வருகின்றது
அன்றைய ஐரோப்பா இன்றைய அதிமுக போல் திருத்தமுடியாத, அறிவில்லா மக்களால் நிரம்பியிருந்தது, அவர்களுக்கு அறிவு போதித்தவர்கள் அன்றைய இலுமினாட்டிகள்

ஓடிஷா நியம்கிரி மலையை வேதந்தாவுக்கு விற்க மத்திய மாநில அரசுகள் ... டோங்கரா பழங்குடிகள் போர்க்கொடி!

நியாம்கிரி டிசா மாநிலத்தின் ராயகடா, கலாகண்டி
மாவட்டங்கள் பாக்சைட் எனப்படும் அலுமினியத் தாதுவளம் மிக்கவை. இம்மாவட்டங்களின் நியாம்கிரி மலைக்குன்றுகளில் கிட்டத்தட்ட 75 மில்லியன் டன் பாக்சைட் தாதுவளம் இருக்கிறது. தமிழ்நாட்டில் வைகுண்ட ராஜனைப்போல், ஒடிசாவில் வேதாந்தா எனப்படும் தரகு முதலாளி நிறுவனமும் பன்னாட்டு கம்பெனிகளும் நியாம்கிரி மலைக்குன்றுகளின் இயற்கை வளங்களை அபகரிக்க அம்மண்ணின் பழங்குடி மக்கள் மீது அரசின் துணையோடு பச்சை வேட்டை நடத்தி வருகின்றனர்.
மலைக்குன்றுகளில் கிட்டத்தட்ட 75 மில்லியன் டன் பாக்சைட் தாதுவளம் இருக்கிறது
டோங்கிரியா பழங்குடிகள் தங்கள் பகுதியில் சுரங்கம் தோண்ட அனுமதிக்க மாட்டோம் என்று நெடுங்காலமாகவே போராடி வருகின்றனர். மலைகளைத் தங்கள் தாயாக போற்றும் இம்மக்கள் உச்சநீதிமன்றத்தில் சட்டப் போராட்டமும் நடத்தியிருக்கின்றனர். இதன்படி ஏப்ரல் 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் நியாம்கிரி சுரங்கம் தோண்டுவது தொடர்பாக ‘கிராமசபைகள் தீர்மானம் நிறைவேற்றலாம்’ என உத்தரவிட்டது.

வழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன் திடீர் பணக்காரர் ஆனது எப்படி? பாஜக பிரமுகர் வெளியிட்ட ஆதாரம்

வழிச் செலவுக்குக்கூட பணம் இல்லாத வானதி ஸ்ரீனிவாசன் திடீர் பணக்காரர்
ஆனது எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார் பாஜகவைச் சேர்ந்த பாலசுப்ரமணிய ஆதித்தன் என்பவர். தமிழக பாஜக பொதுச்செயலாளராக இருக்கும் வானதி ஸ்ரீனிவாசன் மீது இவர் பல திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை தனது முகநூலில் எழுதியுள்ளார்.
“திருமதி வானதி மற்றும் திரு சு.ஸ்ரீநிவாசன் அவர்களுக்கு வணக்கம். உங்கள் இருவர் சார்பிலும் தனித்தனியே எனக்கு Legal Notice அனுப்பியுள்ளீர்கள்.
அதை பெற்றுக் கொண்டேன்: கடந்த 2003 ம் ஆண்டு நான் பாஜக தூத்துக்குடி மாவட்ட பொருளாளராகவும், திருச்செந்தூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளராகவும் இருந்த போது திருச்செந்தூரில் ஆர்பாட்டம் நிகழ்ச்சிக்கு பேச வந்து இருந்தீர்கள். வழிச் செலவு பணமும் தந்து சில நூறையும் தந்தோம். >அப்போது நீங்கள் ஒரு நடுத்தர வாழ்வில் இருந்தீர்கள் என்பதை நன்கு அறிவேன். அது மட்டுமல்ல மைலாபூரில் நம் கட்சி நிர்வாகிக்கு சொந்தமான வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடையில் ரூ 700 விலை உள்ள Sealing Fan 5 Installment க்கு வாங்கி அதில் 4 தவணை மட்டும் தாங்கள் கட்டிய விபரம் உட்பட அரசல் புரசலாக நம் பாஜகவினரே பல முறை பேசிக்கொண்டு இருந்துள்ளார்கள். இது கூட உங்களை சிறுமைப் படுத்த இங்கு குறிப்பிடவில்லை. உங்கள் பொருளாதார சூழலை சுட்டிக் காட்டவே விரும்புகிறேன் . ஒரு தவணை உங்களால் கட்ட முடியவில்லையாம்.

BBC :திரையரங்குகள் திங்கள் முதல் காட்சிகள் நிறுத்தம் ..ஜி எஸ் டி வரிவிதிப்புக்கு எதிராக தியேட்டர் உரிமையாளர்கள்

தமிழகத்தில் வரும் திங்கட்கிழமை முதல் அனைத்துக் காட்சிகளையும் ரத்து
செய்ய முடிவெடுத்திருப்பதாக தமிழ்நாடு திரையரங்க வர்த்தக சபையின் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், ஏற்கனவே நலிவடைந்துவரும் இந்தத் தொழிலில் தமிழக அரசு 30 சதவீதம் நகராட்சி வரியாக செலுத்த வேண்டும் என்று புதிதாக அரசாணை வெளியிட்டிருப்பதாகவும், இதனால் இரட்டை வரி விதிப்புமுறைக்கு ஆளாகி பெரும் நஷ்டத்துக்கு உள்ளாக நேரிடும் என்றும் அவர் கவலை தெரிவித்தார். கேரள மாநிலத்தில் ஆளும் அரசு நகராட்சி வரி வேண்டாம் என்று அரசாணை வெளியிட்டுள்ளதாகவும், தமிழக அரசு இந்த விவகாரத்தில் உடனடியாக நல்ல தீர்வை எட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். தமிழக அரசாங்கத்துடன் சுமூக தீர்வு எட்டப்படும் வரை சனிக்கிழமையும், ஞாயிற்றுக்கிழமையும் வழக்கமான விலையில் திரையரங்குகளில் டிக்கெட் விற்கப்படும் என்றும், இந்த விவகாரத்தில் சுமூக தீர்வு எட்டப்படாத பட்சத்தில் திங்கட்கிழமை முதல் தமிழகத்தில் அனைத்து திரையரங்குகளிலும் காட்சிகள் ரத்து செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். இறுதியாக, சினிமா டிக்கெட் கட்டணங்களை திரையரங்குகளே நிர்ணயித்துக் கொள்ளும் உரிமையும் தமிழக அரசு வழங்க வேண்டும் என்றும் அபிராமி ராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில், ஜூலை 1 முதல் அமலுக்கு வரும் ஜி.எஸ்.டி. வரியை ஆதரிப்பதாகவும் ராமநாதன் தெரிவித்தார்

இந்திராணி தாக்கப்பட்டது உண்மை: மருத்துவ அறிக்கையில் தகவல்

மும்பை : 'மகளை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள, இந்திராணி  புகார் கூறியிருந்தார். அதைத் தொடர்ந்து, இந்திராணிக்கு மருத்துவப் பரிசோதனை செய்வதற்கு கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, மும்பை'சிறையில் தாக்கப்பட்டதாக இந்திராணி கூறுவது உண்மைதான். அவரது உடலில், தாக்கப்பட்டதற்கான காயங்களும், அடையாளங்களும் உள்ளன. விரைவில் மருத்துவ அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்ய உள்ளோம்' என, பரிசோதனை செய்த, டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

BBC :ஆறு இஸ்லாமிய நாட்டவர்கள் அமெரிக்க செல்ல தடை .. இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் சர்ச்சைக்குரிய பயண தடை அமலாகியுள்ள நிலையில், ஆறு பிரதான இஸ்லாமிய நாடுகளிலிருந்து வரும் பயணிகள் மற்றும் அனைத்து அகதிகளும் தற்போது கடுமையான நுழைவு விதிகளை எதிர்கொள்ளவேண்டியுள்ளது. இந்த தடையின் கீழ், அகதிகள் மற்றும் குறிப்பிட்ட இஸ்லாமிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள், அமெரிக்காவில் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது வணிக ரீதியாக தொடர்புகள் இல்லாமல் இருந்தால், அமெரிக்காவுக்குள் நுழைய விசா மறுக்கப்படலாம் அல்லது அவர்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்படலாம். தாத்தா, அத்தை, மாமா, மருமகள், உறவினர்கள் ஆகியோர் "உண்மையான'' உறவுகளாக கருதப்படுமாட்டார்கள். இரான், லிபியா, சிரியா, சோமாலியா, சூடான் மற்றும் ஏமன் ஆகிய நாட்டு மக்கள் மற்றும் அனைத்து அகதிகளுக்கும் இந்த விதிகள் பொருந்தும்.

ஹரியான ..மூன்று சட்ட மாணவர்களுக்கு தலா 20 வருடம் தண்டனை .. பாலியல் வன்முறை ,,,வாட்சைப் ஆதாரம் சாட்சியமானது

ஹரியானா மாநிலத்தில் ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் மேலாண்மை பயின்று வந்த 20 வயது மாணவியை 2 வருடங்களாக மிரட்டி கற்பழித்ததற்காக மூன்று சட்ட மாணவர்களுக்கு தலா 20 வருடம் தண்டனை விதித்து சாட்டை சுழற்றியுள்ளது ஹரியானா நீதிமன்றம்.
அதுவும் சட்ட வரலாற்றில் முதல்முறையாக வாட்சப் உரையாடல் செய்திகளை (electronic form of evidence) ஆதாரமாக கொண்டு இந்த வரலாற்று தீர்ப்பு இவர்கள் செவுளில் சப் என அறையப்பட்டுள்ளது, தனது தீர்ப்பில் கூட இச்செய்திகளை சேர்க்க முடியாதபடி அவ்வளவு கீழ்த்தரமான கொச்சை வார்த்தைகளால் இந்த பெண் பலவந்தப்படுத்தப்பட்டு மிரட்டி பணியவைக்கப்படுகிறாள் என தீர்ப்பில் குறிப்பிட்டு மனம் வருந்தியுள்ளார் நீதிபதி சுனிதா.
மிகுந்த எதிர்ப்புகளையும், போராட்டத்தையும் கடந்தே இந்த நீதி இந்த மாணவிக்கு வழங்கப்பட்டுள்ளது, அதற்காக இந்த பெண் அனுபவித்த வலிகள், வேதனைகள் வார்த்தைகளால் விவரிக்க முடியாது,

நீட் தேர்வு .. வெளிநாடுகளை குறி வைக்கும் பெற்றோர்கள்

siva: tamiloneindia.com:  சென்னை: நீட் தேர்வில் ஏற்பட்ட குளறுபடிகளால், தங்களுக்கு தமிழ்நாட்டில் எம்.பி.பி.எஸ். படிக்க வாய்ப்பு கிடைக்காது என்று மாணவர்கள் வெளிநாடுகளில் மருத்துவக் கல்வி பயில்வதற்கான வாய்ப்புகளைத் தேடி வருகின்றனர்.
பல ஆண்டுகளாக, நம் மாணவர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவக் கல்வியைத் தொடர்ந்து மேற்கொண்டு வந்தாலும், இந்த ஆண்டு இவ்வாறு இடம் தேடும் மாணவர்களின் எண்ணிக்கை 65% உயர்ந்துள்ளதாகக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டில் மருத்துவக் கல்வி பயில்வது எளிதானதா? கட்ட வேண்டிய கல்விக் கட்டணம் மற்றும் நன்கொடை எவ்வளவு? எந்த நாட்டு மருத்துவக் கல்வி தரமானது மற்றும் அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொள்ளக் கூடியது என்ற கேள்விகளோடு, இந்தக் கல்விப் பிரிவில் கடந்த 14 ஆண்டுகளாகச் செயல்பட்டு வரும் லிம்ரா ஓவர்சீஸ் எஜுகேஷன் நிறுவனத்தின் இயக்குநர் திரு முகமது கனி அவர்களை அணுகினோம்.

ஜி எஸ் டி வரிவிதிப்பு விழாவை எதிர்கட்சிகள் புறக்கணித்தன!

அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு: அருண் ஜெட்லி
ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு முறை ஜூன் 30ஆம் தேதி
நள்ளிரவு முதல் அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக ஜூன் 30ஆம் தேதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பல முக்கிய தலைவர்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ள உள்ளனர். ஆனால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது என சில அரசியல் கட்சிகளின் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “ஜி.எஸ்.டி-யை அமல்படுத்த மத்திய அரசு ஏன் இவ்வளவு அவசரம் காட்டுகிறது? ஜி.எஸ்.டி-யைச் சந்திக்க இந்தியா இன்னும் தயாராகவில்லை. எனவே ஜி.எஸ்.டி-க்கான சிறப்பு நாடாளுமன்ற நிகழ்ச்சியில் திரிணாமுல் காங்கிரஸ் பங்கேற்காது” என அவர் தெரிவித்துள்ளார்.

கடத்தப்பட்ட நஜீப் .. தகவல் தெரிவித்தால் 10 லட்சம் ,, சி பி ஐ அறிவிப்பு JNU மாணவன் ..

நஜீப்பைக் கண்டுபிடித்தால் ரூ.10 லட்சம் பரிசு: சிபிஐ!காணாமல் போன நஜீப் அகமது குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று சிபிஐ தெரிவித்துள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நஜீப் அகமது, டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முதலாம் ஆண்டு பயோ டெக்னாலஜி பயின்று வந்தார். இவர், பல்கலைக்கழக வளாகத்தினுள் அமைந்திருக்கும் மஹி - மாந்தவி விடுதியில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி காலை 11 மணி முதல் நஜீப் அகமதுவைக் காணவில்லை. அவரைக் கண்டுபிடித்து தருமாறு பல்கலை மாணவர்களும் அவருடைய தாயும் பல்வேறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி உரையை தொடர்ந்து அப்பாவி படுகொலை! அஹிம்சை பேசிக்கொண்டே கொலையும் செய்வாய் .. ...


ஜார்கண்ட் மாநிலம் ராம்கார் மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி, ஒருவர் கடுமையாக தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்று காலை பிரதமர் மோடி பசு சேவகர்களால் அப்பாவிகள் கொல்லப்படும் சம்பவங்கள் குறித்து பேசியிருக்கும் நிலையில், மாட்டிறைச்சியைக் காரணம் காட்டி ஒருவர் கொல்லப்பட்டது அதிர்ச்சியையும், நாட்டின் பாதுகாப்பின்மையையும் உணர்த்துகிறது. ஜார்கண்ட் மாநிலத்தில் அலிமுதீன் அலியாஸ் அஸ்கர் அன்சாரி என்பவரை தபது மாருதி வேனில் மாட்டிறைச்சி எடுத்துச் சென்றதற்காக, பஜர்தந்த் என்ற கிராமத்தின் அருகே வழிமறித்து கடுமையாக தாக்கப்பட்டார். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அன்சாரியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அன்சாரி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

புத்தர் சிலைகள் எல்லாம் திருமால் சிலைகள் ஆயின ,,

Selva Sel :உண்மையைச் ஆராய்ச்சியின் மூலம் சொல்ல எனக்கு பிடிக்கும்
புத்தரை தோல்வியின் பயத்தில் கடவுளாக ஏற்று ,வைணவக் கடவுள் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாக மாற்றிய இந்து மத பௌத்தமும் தமிழும் - மயிலை திரு.சீனி. வேங்கடசாமி (1900-1980)
8. இந்துமதத்தில் பௌத்தமதக் கொள்கைகள்
தமிழ்நாட்டிலே, ஏன்? இந்தியாவிலேயே பௌத்த மதம் இப்போது
மறைந்துவிட்டது. அந்த மதம் மறைந்து விட்டபோதிலும் அதன் பெரிய கொள்கையில் பல நாளிது வரையில் இந்து மதத்தில் நின்று நிலைபெற்று வருகின்றன. பௌத்த மதக் கொள்கை மட்டுமன்று, பண்டைத் திராவிடரின் சமயக் கொள்கைகளும், ஜைனரின் மதக் கொள்கைகளும் இப்போதைய இந்து மதத்தில் கலந்து காணப்படுகின்றன. அவ்வக் காலத்தில் நடை முறையிலிருந்த சிறந்த கொள்கைகளை இந்து மதம் தன்னிடத்தில் ஏற்றுக் கொண்டிருக்கின்றது. இஸ்லாம் மதத்தையும் இந்து மதத்தின் உட்பிரிவுகளில் ஒன்றாகச் சேர்க்க அக்பர் சக்கரவர்த்தி காலத்தில் முயற்சி செய்யப்பட்டது. 'அல்லா உபநிஷத்' என்னும் ஒரு புதிய உபநிஷத்து இயற்றப்பட்டது என்பது ஈண்டு நினைவுகூரற்பாலது.

நடிகை பாவான கடத்தல் வழக்கு விசாரணை 12 மணித்தியாலங்கள் நடிகர் திலீப்பிடம் விசாரணை

கொச்சி: நடிகை பாவனா கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தலுக்கு
ஆளாக்கப்பட்ட வழக்கில், மலையாள நடிகர், திலீப் மற்றும் அவரது நண்பரிடம் போலீசார் நேற்று, 12 மணி நேரத்துக்கு மேல் விசாரணை நடத்தினர்; இது, கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில், சித்திரம் பேசுதடி, தீபாவளி, வெயில் உள்ளிட்ட படங்களிலும், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களிலும் நடித்துள்ள நடிகை பாவனா, 31, காரில் சென்று கொண்டிருந்த போது, மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டார்.
பிப்ரவரியில் நடந்த இந்த சம்பவத்தால், அவர் மிகவும் மன உளைச்சல் அடைந்தார். இது குறித்து, கேரள மாநில போலீசார், மூன்று பேரை கைது செய்துள்ளனர். இந்நிலையில், மலையாள நடிகர் திலீப் உடனான மோதல் போக்கால், பாவனா பழிவாங்கப்பட்டதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இரசாயன பால் அல்லது கலப்பட பால்: ..ஹைட்ராக்ஸைடு, அமோனியா, யூரியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு

பாதி கலப்பட பால்:
பாதி அளவு இயற்கை பாலுடன் இன்ன பிற பொருட்கள் சேர்த்து யம் ஹைட்ராக்ஸைடு, அமோனியா, யூரியா, சோடியம் ஹைட்ராக்ஸைடு, கார்பன் ட்ரை ஆக்ஸைடு இவற்றில் ஒன்றை சேர்க்கிறார்கள்.
தயாரிக்கப்படுவது கலப்பட பால். கொள்முதல் செய்யப்படும் பாலிலிருந்து பிற பால் பொருட்களை உற்பத்தி செய்ய கொழுப்பை நீக்குகிறார்கள். மீண்டும் பாலின் அடர்த்தி மற்றும் புரதத்தை அதிகரிக்க விலங்குகளின் கொழுப்பு அல்லது கொழுப்பு பவுடர் சேர்க்கிறார்கள். சில சமயம் பாலின் அடர்த்தியை அதிகரிக்க மைதா மாவு, ஜவ்வரிசி மாவு, ஸ்டார்ச், மரவள்ளிக் கிழங்கு மாவு சேர்க்கிறார்கள். இவ்வாறு சேர்க்கப்படும்போது பால் கெடாமல் இருக்க பொட்டாசி
ரசாயன சிந்தட்டிக் பால்!

நன்றி பார்பனர்களே ! நாங்கள் தயாராவே இருக்கிறோம் !!!

Raja Rajendran: எஸ்.வி.சேகரின் லைவ் கேட்டேன். சாதி, மதம், தாய் - தந்தை
மாதிரி,  அதை ஒருபோதும் பழிக்காதீர். மாறாக தன் சாதிப் பெருமையை உரக்கப் போற்றுவீர். போலி மத எதிர்ப்பைச் செய்யாதீர், அதிலும் குறிப்பாக இந்து மதத்தை கீழ்மைப் படுத்தாதீர்கள், மோடியைத் திட்டாதீர்கள்...........
இதெல்லாம் அவர் கருத்துக்கள். அதைப் பிறகு பார்க்கலாம். தொடர்கிறார்.
99.9 மார்க் எடுத்தாலும் பிராமணர்களுக்குச் சீட் கிடைப்பதில்லை, நாங்கள் பாவப்பட்ட ஜென்மம், எங்கள் தாத்தாக்களுக்கு தாத்தாக்கள் செய்த
பாவத்துக்கு இன்னும் தண்டனையை அனுபவிக்கிறோம். எங்காவது அப்பா செய்த தப்புக்கு பையனைத் தண்டித்து பார்த்திருக்கிறீர்களா ?
3 விழுக்காடு பார்ப்பனர்கள் மீதி 97 விழுக்காடு மக்களை ஆட்டுவிக்கிறார்கள் என்று கூறும் மதிமாறன் இனி, நியூஸ் 7 சேனலுக்குள் காலடி வைக்க விட மாட்டேன் என அதன் முதலாளி, திரு.வைகுந்த ராஜன் என்னிடம் வாக்களித்தார். திருப்பதி நாராயணன்தான் தரக்குறைவாக நடந்துக் கொண்டார் என நடக்கவிருந்த கண்டனக் கூட்டத்தில் திமுக சார்பாக கலந்துக் கொள்ள இருந்தவரை, ஸ்டாலினிடம் சொல்லி, அவரை பின் வாங்க வைத்துவிட்டேன். சபாஷ். இங்க நாம் உள்ளே புகுவோம்.
ஒரு சின்ன ஆராய்ச்சியை மேற்கொள்வோம். பாவம் பார்ப்பனர்கள் என சேகர் கண்ணீர் வடிக்கும் அந்த 3% பார்ப்பனர்கள் நிலை இன்றைய தேதியில் எப்படி இருக்கிறது இந்திய ; தமிழக அளவில் ???

வியாழன், 29 ஜூன், 2017

ஸ்டாலின் எஸ்.வி.சேகருக்கு பதில் : நட்புக்காக, திராவிட இயக்கக் கொள்கைகளை விட்டுகொடுக்க முடியாது!

Specialcorrespo:  எதிர்கட்சி தலைவர் தெரிவித்த கருத்துக்கள் விவரம் : நடிகரும்
நண்பருமான எஸ்.வி.சேகர் அவர்கள் என்னிடம் அலைபேசியில் பேசினார். சட்டமன்ற நிகழ்வுகளில் பங்கேற்றிருந்த நிலையில், “நீங்கள் சொல்வதை கவனிக்கிறேன்” எனத் தெரிவித்து, அது பற்றிக் கவனம் செலுத்துமாறு கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. அவர்களிடம் தெரிவித்தேன். சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் நடைபெற்று வந்தநிலையில், மக்கள் பிரச்சினைகளில் தொடர்ந்து கருத்தைச் செலுத்திட வேண்டிய அவசரமும் அவசியமும் ஏற்பட்டதால், இது குறித்து உடனடியாக கவனம் செலுத்த நேரமோ வாய்ப்போ நேர்ந்திடவில்லை. டி.வி. விவாதம் தொடர்பான ஆலோசனைக் கூட்டத்தில் கழகத்தின் சார்பில் பங்கேற்கவிருந்த உறுப்பினரும் எனது கருத்தினை அறிந்தபின் பங்கேற்கலாம் என்பதால் அந்த நிகழ்வைக் கடமை உணர்வோடு தவிர்த்திருக்கிறார்.

பார்பன விமர்சனம் ... பார்ப்பன அன்பர்கள் கோபித்தாலும் உண்மையை விளக்கவேண்டும் .. நாளை அந்த வாய்ப்பு அருகி விடலாம்

வாசுகி பாஸ்கர்: பார்ப்பனிய விமர்சனம் பார்பனர்களுக்கே தேவை
என் பள்ளி கால நண்பனை பல வருடத்திற்கு பிறகு சந்திக்க நேர்ந்தது, பிறகு முகநூலில் நட்பாகி போனோம், வழக்கமாக நிரம்பி கிடக்கும் சாதி எதிர்ப்பு பதிவுகளை பார்த்து ஒரு கம்மன்ட் போட்டான், அது 'சாதிய வெறி தான் தவறு, ஆனால் சாதியில் நம் அடையாளங்கள் மறைந்து கிடக்கிறது, சாதி அடையாளம் அவசியம்' என்பதாக இருந்தது, நாளடைவில் நாங்கள் மிக நெருக்கமாக பழக ஆரம்பித்தோம், ஒன்றாகவே பொழுதுகளை கழித்தோம், அவரவர் படிக்கும் புத்தகங்களை, சம்பவங்களை குறித்து விவாதித்தோம், கேள்விகளை பதிலுக்கான ஆரம்பமாக பார்த்தோம், நாங்கள் இருவரும் தனித்து இருக்கும் போது இப்படியாக சைக்காலஜி, தனி மனித உணர்வு, சமூக அரசியல், சினிமா, பொதுப்புத்தி, வரலாறு என்று தலைப்புகள் நீளும். மனதில் இருந்து சொல்ல வேண்டுமானால், என்னை அதிகம் சமூகம் சார்ந்த சிந்தனையை நோக்கி தள்ளிய காலம் அது தான், என்னை நான் நெறி படுத்திய காலமும் கூட.

ஆஸ்திரேலியாவின் ஆதி குடிகள் அபோரிஜன்ல்ஸ் திராவிடர்கள்தான்


Amudhavalli.. Oneindia Tamil: மதுரை: ஆஸ்திரேலிய பழங்குடிகளான அபார்ஜினல்களும் திராவிடர்களும் /தமிழர்களும் ஒன்று என்று மதுரையில் நடைபெற்ற கருத்தரங்கில் எழுத்தாளர் கர்ணன் கூறியுள்ளார்
 மதுரை உலக தமிழ் சங்கம் சார்பில் ஆஸ்திரேலிய பழங்குடியினர் வாழ்வியலும் புலம்பெயர்ந்த தமிழர் வாழ்வியலும் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்று நடைபெற்றது. உலக தமிழ் சங்க இயக்குனர் சேகர் தலைமை வகித்தார். பேராசியர் மோகன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில் ஆஸ்திரேலிய தமிழ் எழுத்தாளர் சங்க செயலாளர் கர்ணன் பேசியதாவது: அபாரிஜனல்கள்-திராவிடர் ஒற்றுமை ஆஸ்திரேலியாவில் வாழும் பூர்வ குடி மக்களான அபாரிஜனல்களும், திராவிடர்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அவர்களின் வாழ்வியல் முறைகள், போர்க் கருவிகள், அவர்கள் பேசும் மொழியில் உள்ள ஒற்றுமைகள் ஆய்வின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஆஸ்திரேலிய பழங்குடியினர், திருநீறு, குங்கும் பூசுகின்றனர்.

பிக் பாஸ் : பத்தே நாளில் பிக்பாஸ் சூட்டிங் ஓவர்.. 100 நாளுன்னு பூவா சுத்துறீங்க? வாட்ஸ் அப் லீக்ஸ்

veerakumaran. சென்னை: பிக்பாஸ் பார்த்தால் உங்களை கடவுளால் கூட காப்பாற்ற முடியாது என்று கூறி ஒரு வாட்ஸ்அப் தகவல் வைரலாக பரவி வருகிறது.
அந்த மெசேஜ் இப்படி சொல்கிறது. விஜய் TV யின் பிக்பாஸ்! நிறைய பேருக்கு இந்த நிகழ்ச்சியை பற்றி முழுசா தெரிந்திருக்க வாய்ப்பில்லை! ஹிந்தியில் பல வருஷமா ஓடிட்டு இருக்குர நிகழ்ச்சி இப்போ தமிழ்நாட்டுக்கு வந்திருக்கு!!
100 நாள்னு சொன்னாலும் அதோட சூட்டிங்க மிஞ்சி போனா பத்தே நாள்ல முடிச்சிடுவாங்க, அத அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேர கணக்குல பிரிச்சு 100 நாளைக்கு ஒளிபரப்புவாங்க !! என்னன்ன நடக்கனும் பேசனும்னு எல்லாமே முன்கூட்டியே ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டு தான் சூட்டிங்கே தொடங்கும்!
ஒவ்வொருத்தரா மக்கள் ஓட்டு போட்டு வெளியேத்திட்டு இருப்பாங்க, ஆனா உண்மையிலேயே யாரு வெளியேரனும்னு முடிவு பண்ணிதான் அதுக்கு ஏத்த மாதிரி காட்சிகள் அமைக்க பட்டிருக்கும் !!!
நிறைய சண்டைகள் , மோதல்கள், விவாதம், சச்சரவில் தொடங்கி காதல், கள்ளகாதல், பாலியல் தொல்லைகள் உட்பட நடப்பதுபோல் காட்சிகள் அரங்கேறும் !!! மக்கள் அதை கண்டு கொதித்தெழுந்து தவறு செய்தவனுக்கு எதிராக ஓட்டு அளித்து வெளியேற்றும்படி நடைபெறும்!!! சிலர் தாங்கலாகவே உள்ளே இருக்க முடியாமல் கோபத்தில் வெளியேருவதுபோல் வைத்து TRP ஏற்றுவார்கள் !!!

பழனியில் 500 அதிரடிப்படையினர் ... கலவரத்தை தூண்ட RSS முயற்சி!


பழனியில் நிலவும் பதற்றத்தை தணிக்க 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிப்பு பழனி: பழனியில் நிலவும் பதற்றத்தை தணிக்க 500க்கும் மேற்பட்ட அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். பழனியில் நேற்று மாடுகளை ஏற்றிச்சென்ற வாகனம் தடுத்து நிறுத்தப்பட்டதால் மோதல் ஏற்பட்டது. இதனால் அங்கு பதற்றம் நிலவுகிறது. அதன் காரணமாக திண்டுக்கல் எஸ்.பி சக்திவேல் தலைமையில் பழனி நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தினகரன்

ஜுனைத் கொலை குற்றவாளிகள் 4 பேர் கைது .. அரசு ஊழியர் உட்பட ..

கார்த்திக்.சி மாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன், டெல்லியில் . கத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் அரசு ஊழியர் உள்பட நான்கு பேரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். நாடு முழுவதும் மாட்டுக்கறி உண்பவர்கள் மற்றும் மாடுகளை விற்பனைக்காகக் கொண்டுசெல்பவர்களை, பசுக் காவலர்கள் தாக்கும் சம்பவங்கள் தொடர்ந்து வருகின்றன. ராஜஸ்தான், குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தச் சம்பவங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், டெல்லியில் கடந்த இரு தினங்களுக்கு முன்,  ரயிலில் மாட்டுக்கறி எடுத்துச்சென்ற இஸ்லாமியச் சிறுவர்கள், பசுக் காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த சிறுமி!

உண்டியல் பணத்தை லஞ்சமாக கொடுத்த சிறுமி!இன்றைய காலத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை லஞ்சம் இல்லாமல் எந்தவித காரியமும் நடப்பதில்லை. இந்நிலையில், தன் தாயின் தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்ய தனது உண்டியல் பணத்தை போலீசாருக்கு லஞ்சமாக கொடுக்க முன் வந்த சிறுமியின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசத்தில் மீரட் அருகே உள்ள கிராமத்தில் சீமா கௌசிக் என்பவர் வசித்து வந்தார். இவர், கணவர் வரதட்சணை கேட்டு கொடுமை செய்ததால், கடந்த ஏப்ரல் மாதம் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான அவரது கணவர் சஞ்சீவ் குமார், அவரது தந்தை மற்றும் இரண்டு சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சீமாவின் தந்தை சாந்தி ஸ்வரூப் போலீசில் புகார் கொடுத்தார். ஆனால், சஞ்சீவ் குமார் மட்டும் கைது செய்யப்பட்டார். பணம் இல்லாமல் எதுவும் நடக்காது, அதனால் இந்த வழக்கில் மற்றவர்களை கைது செய்ய,போலீசார் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.

சூலமங்கலம் ஜெயலட்சுமி காலமானார்! புகழ் பெற்ற சூலமங்கலம் சகோதரிகள்..

பிரபல ஆன்மீக பாடகி சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார் சூலமங்கலம் சகோதரிகளில் இளையவரான ஜெயலட்சுமிக்கு வயது 85 ஆகும். சூலமங்கலம் ஜெயலட்சுமி உடல் பெசன்ட்நகர் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அருகே உள்ள சூலமங்கலம் கிராமத்தில் பிறந்த சூலமங்கலம் சகோதரிகள் ராஜலட்சுமி, ஜெயலட்சுமி பாடிய பக்தி பாடல்கள் மிக பிரபலம். இவர்கள் பாடிய கந்த சஷ்டி கவசம் முருக பக்தர்களால் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது. சகோதரிகளில் மூத்தவர் ராஜலட்சுமி தனது 53வது வயதில் 1992ம் ஆண்டில் காலமாகிவிட்டார். 1937ம் ஆண்டில் ஏப்ரல் 24ம் தேதி பிறந்த ஜெயலட்சுமி 85வயது வயதில் மரணம் அடைந்தார்.நக்கீரன்

இயற்கை... பெண்களை படம் பிடித்த RSS .. கேட்க வந்தவர் தாக்குதல் மரணம் .. பொதுவெளியில் சிறு நீர் கழித்த மத்திய அமைச்சர்

Union Agriculture Minister Radha Mohan Singh Urinating Public
கடந்த பத்து தினங்களுக்கு முன்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் நடந்த
சம்பவம். ஒரு கிராமத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மலங்கழிப்பதற்கென கிராமங்களில் இருக்கக்கூடிய பொதுவிடத்தில் மலங்கழித்துக்கொண்டிருந்தனர். அதை ஸ்வச்ச பாரத் திட்ட அதிகாரிகள் வந்து படம்பிடிக்கிறார்கள். அதாவது மலங்கழிக்கிற பெண்களை போட்டோ எடுத்து அவமானப்படுத்துவதன் மூலம் தூய்மை இந்தியா திட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு தரப்போகிறார்களாம்.
பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். செய்தி அறிந்து ஜாபர் ஹூசைன் என்ற 50 வயது மதிக்கத்தக்க நபர் ஸ்வச்சபாரத் அதிகாரிகளை தடுக்க வருகிறார். அவரது மனைவியும் மகளும் அந்த பெண்கள் கூட்டத்தில் ஒருவர். தடுக்கவந்த ஹூசைன் ஸ்வச்சபாரத் அதிகாரிகளால் தாக்கப்பட்டு கடைசியில் செத்துப்போய்விட்டார் . (ஜாபர் ஹூசைன் என்ற பேருக்காகவே அவ்வளவு கொடூரமாக தாக்கப்பட்டாரா என்பது தனிச்செய்தி)

டிடி, கோபிநாத், ப்ரியங்காவின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Is it the salary detail of DD, Gopinath? சென்னை: சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளர்களின் சம்பளம் என்று கூறி ஒரு பட்டியல் தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளராகும் ஆசை பலருக்கும் உள்ளது. நிகழ்ச்சி தொகுப்பாளராகி பெரிய திரைக்கு சென்றவர்களும் உண்டு. அதனால் சின்னத்திரையில் நுழைந்துவிட்டால் பெரிய திரைக்கு செல்லலாம் என்று சில இளைஞர்கள் நினைக்கிறார்கள்.

கோபிநாத் - ரூ. 5 லட்சம்
டிடி- ரூ. 3.5 லட்சம்
மா.கா.பா.ஆனந்த் - ரூ. 2. லட்சம்
ஜெகன்- ரூ. 2 லட்சம்
ப்ரியங்கா- ரூ. 1 லட்சம்
பாவனா- ரூ. 1 லட்சம்
ஜாக்லீன்- ரூ. 1 லட்சம்
இந்த பட்டியலில் உள்ள பலரும் விஜய் டிவியில் பணியாற்றுகிறார்கள். அங்க யாரோ கசியவிட்டுட்டாங்களோ? tamiloneindia

புதிய 200 ரூபாய் நோட்டுகள் விரைவில்

கோல்கட்டா: புதிய 200 ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் பணியை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது. இப்புதிய நோட்டுகள் விரைவில் புழக்கத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரூபாய் நோட்டு வாபஸ்: ஊழயை ஒழிக்கும் பொருட்டு ரூ. 500 மற்றும் ரூ1000 நோட்டுகள் செல்லாது என கடந்த ஆண்டு நவ., 8ம் தேதி மத்திய அரசு திடீர் அறிவிப்பு வெளியிட்டது. தொடர்ந்து பண நெருக்கடியை சமாளிக்க, பாதுகாப்பு அம்சங்களுடன் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சிட்டு புழக்கத்தில் விட்டது.
: இந்நிலையில் பணப் பரிவர்த்தனையை எளிமையாக்கும் நோக்கில், புதிய ரூ.200 நோட்டுகளை அச்சிட முடிவு செய்த ரிசர்வ் வங்கி, அதற்கான பணியை துவக்கியுள்ளது. மேலும் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுகள் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடனும், கள்ள நோட்டுகள் அச்சிடாதவாறும் இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு நோட்டுக்கு உள்ளும் ஒவ்வொரு லாப்டாப் வைப்பாய்ங்க அது சட்டேர்லைட் தொடர்பில் இருக்கும் அப்பிடீன்னும் சொல்வாய்ங்க 

சீனா ,, விமான புரோபெல்லருக்குள் காசு வீசியதால் விமான எஞ்சின் கோளாறு

பீய்ஜிங் : சீனாவில் விமானத்தின் என்ஜினில் மூதாட்டி ஒருவர் சில்லறை
நாணயங்களை வீசி எறிந்த சம்பவத்தால், விமானத்தில் இருந்த 150 பயணிகள் வெளியேற்றப்பட்டனர்.
சீனாவின் சர்வதேச விமான நிலையத்தில் சீனா தெற்கு விமானம் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று ஷாங்காய் மாநகரில் உள்ள புடோங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து குவான்சோவுக்கு புறப்படுவதற்கு தயாராக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் ஏற்பட்ட கோளாறால் விமானத்தில் இருந்த 150 பயணிகளும் இறக்கி விடப்பட்டனர்.

அனைத்துச் சமூகப் பயன்களையும் இன்றளவும் மிகக் கூடுதலாக அனுபவித்துவருவது பார்ப்பனர்கள்தானே?

Ganesh Babu : எங்க தாத்தாவுக்கு  தாத்தா காலத்துல ஏதோ பண்ணிட்டாங்கனு -எஸ்.வி.சேகர் வெச்சுக்கிட்டாலும், அதற்காக நாங்க என்ன செய்வோம்? அப்பா செய்தக் குற்றத்துக்கு பிள்ளையை தண்டிப்பதற்கு சட்டத்திலேயே இடமில்லையே" பகவத் கீதை, வேதம், மனு(அ)நீதி போன்ற இந்துப் புனித நூல்களின் அடிப்படையிலான பார்ப்பன ஆதிக்கமும், மனித உரிமை மீறல்களும் ஏதோ தாத்தாவுக்கு தாத்தா காலத்தில் நடந்தப் 'பழையக் கதை' என்று சொல்வதே அயோக்கியத்தனமானது. 'அனைவரைவிட உயந்தவன் பிராமணன்' என்றுச் சொல்லி சாதிய அடுக்கின் உச்சியில் அமர்ந்துக்கொண்டு அதன் அனைத்துச் சமூகப் பயன்களையும் இன்றளவும் மிகக் கூடுதலாக அனுபவித்துவருவது பார்ப்பனர்கள்தானே?
நாட்டின் ஜனாதிபதியாகக்கூட மற்றவர்களால் ஆகிவிடமுடிகிறது, ஆனால் கோவில்களில் அர்ச்சகராக மட்டும் ஆகமுடியாது என்பதன் பின்னணி 'நான் உன்னைவிடப் புனிதம்' என்றக் கருத்தியலின்தானே!
அதனால்தான் சாதிய அமைப்புக்கு(caste-system) எந்த ஆபத்தும் வந்துவிடாமல் அதனைக் காப்பாற்றுவதில் பார்ப்பனர்கள் இத்தனை உறுதியாக இருக்கிறார்கள்.

பேராசிரியர் சுப.வீரபாண்டியன் எஸ்.வி. சேகருக்கு பதில் மடல் ... சேகருக்கு பின்னால் இருக்கும் வன்முறை கும்பல் ..

இப்போது என் தம்பி மனைவிதான் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் என்பதையும் சேர்த்துச் சொல்லியிருக்கலாம். அதிகார மிரட்டல் எப்படியெல்லாம் வெளிப்படுகிறது பாருங்கள். நியூஸ்7 தொலைகாட்சி நெறியாளருக்கும் ஒரு மிரட்டல் அவரின் பதிலில் உள்ளது. அதன்மூலம், இனி எல்லா ஊடகங்களும், ஊடக நெறியாளர்களும் எங்களுக்குப் பயந்து, எங்களுக்குச் சாதகமாகத்தான் பேச வேண்டும் என்று சொல்லாமல் சொல்கிறார் அவர்.
சில நாள்களுக்கு முன் நியூஸ் 7 தொலைக்காட்சியில், பாஜக நாராயணன், எழுத்தாளர் மதிமாறன் ஆகியோருக்கிடையே நடைபெற்ற உரையாடலையொட்டி, எஸ்.வி.சேகரின் காணொளி வெளியாகி இருந்தது. அது தொடர்பாக அவருக்கு நான் எழுதியிருந்த திறந்த மடலும், அதற்கு அவர், பத்திரிகை.காம் இணையத்தளத்தில் கூறியிருந்த பகிரங்க பதிலும் அனைவரும் அறிந்ததே. அதன் தொடர்ச்சியாகவே இந்தப் பதிவு இடம்பெறுகின்றது.
என்னுடைய மடல் சமூக அரசியல் தளத்தில் நின்று பல செய்திகளைப் பேசியது. ஆனால் அதற்குவிடையளித்த அவரோ, பல்வேறு தனிமனிதத் தாக்குதல்களை என் மீது தொடுத்திருக்கிறார். அரசியலற்ற தனிமனிதச் சண்டைகளில் ஈடுபட எனக்கு எப்போதும் விருப்பமில்லை. எனவே இனிமேல் அவருக்கு மறுமொழி கூறிக்கொண்டிருப்பதைத் தவிர்த்துவிட்டு, சமூக நீதியில் அக்கறை கொண்ட மக்களுக்கான விளக்கமாய் இந்தப் பதிவை நான் பொதுவெளியில் முன்வைக்கின்றேன். "சாதி மதம் என்பது அவரவருக்குத் தாய் தந்தைதான். அதாவது தாய் தந்தை இருப்பவர்களும், மதிப்பவர்களும் என் கருத்தை ஏற்றுக் கொள்வார்கள்" என்று சே.வி சேகர் குறிப்பிட்டுள்ளார். அவருடைய சாதிப்பற்றை இதனை விடத் தெளிவாக வெளிப்படுத்த முடியாது. தன்னை முழுமையாக வெளிப்படுத்திக் கொண்டமைக்கு அவருக்கு நம் நன்றி.

குறும் / பெரும் பட இயக்குனர்கள் குறும்பட விழாக்களுக்கு செல்லவேண்டும் ... உங்கள் உள்ளே இருக்கும் படைப்பாளி ...

jeyachandra.hashmi: ஒரு ஐ போன் கேமிரா ஆன் ஆகி இருக்கிறது. லென்ஸ்
வழியே ஒரு வெள்ளைத் தாள் மட்டும் தெரிகிறது. பொதுமக்கள் வந்து என்ன இது என்று விசாரிக்கும் குரல்கள் கேட்கிறது. இந்த தாளை படம்பிடிக்கிறேன் என்கிறார் இயக்குனர். மக்கள் ஆர்வமாகி அவருடன் சினிமாவை பற்றி பேசுகிறார்கள். அரசியல் பற்றி நக்கலடிக்கிறார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக பேசுகிறார்கள். இறுதியில் போலீஸ் வருகிது. போலீஸ் ஸ்டேஷனை படம் பிடிக்கிறார் என்று இயக்குனரை ஸ்டேஷனுக்கு கூட்டிச் செல்கிறார்கள். அவர் எடுத்த காட்சியை காட்டச் சொல்கிறார்கள். (திரை கருப்பாகி வெறும் சத்தம் மட்டும் கேட்கிறது). வெறும் வெள்ளைத்தாள் மட்டுமே ரெக்கார்ட் ஆகியிருப்பதை பார்த்து அவரையும் ஃபோனையும் விடுவிக்கிறார்கள். மீண்டும் வெள்ளைக் காகித ஷுட்டிங் தொடங்குகிறது.

ரயில் டிக்கெட்டுக்களில் தமிழ் உட்பட மாநில மொழிகள் அந்தந்த மாநிலங்களில் ..

சென்னை: இனி ரயில் டிக்கெட்டுகளில் தமிழும் இடம் பெறும் என ரயில்வே
மேலும் மாநில வாரியாக அந்தந்த மாநில மொழிகள் ரயில் டிக்கெட்டுகளில் இடம்பெறும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் இந்த முடிவை அமல்படுத்த 6 மாதம் ஆகும் எனத்தெரிகிறது. இனி டெல்லியில் ஓடும் ரயில்களுக்கான டிக்கெட்டுகளில் இந்தி, ஆங்கிலம் இடம்பெறும் அதேபோல் சென்னையை மையமாகக் கொண்டு ஓடும் ரயில்களில் இந்தி ஆங்கிலம் இவற்றுடன் தமிழ் மொழியும் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. . ரயில் பயணிகளின் நலச்சங்கத்தின் கோரிக்கையை ஏற்று ரயில்வே வாரியம் இதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. டெல்லியில் ரயில்வே கழக அலுவலகத்தில் இன்று அகில இந்திய ரயில் பயணிகள் வசதிகள் மேம்பாட்டு கமிட்டியின் கூட்டம் நடைபெற்றது. இதில் ரயில்வே வாரிய அதிகாரிகள் மற்றும் இக்குழுவின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

Big Boss .. விஸ்வரூவம் -2 - சபாஷ் நாயுடு.. 1500 கோடி வசூலிக்க திட்டமிடும் விஜய் tv.

பிக்பாஸ் நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் நடிகர் கமலுக்கு கோடி ஊதியமும் அவருடைய விஸ்வரூவம் -2 படத்தையும், சபாஷ் நாயுடு என இன்னொரு படத்தையும் கமல் நிர்ணயிக்கிற தொகைக்கு வாங்குவதாக பேசி முடிக்கப்பட்டு கமல் இந்நிகழ்ச்சிக்குள் கொண்டு வரப்பட்டார்.
த்ரிஷா , ஸ்னேகா போன்ற பல நடிகைகளை வைத்தே விஜய் தொலைக்காட்சி முதலில் இந்நிகழ்ச்சியை நடத்த முயன்றது. ஆனால் அவர்கள் கேட்ட தொகை கட்டுப்படியாகாத காரணத்தால் மார்க்கெட் போன நடிகர் நடிகைகளை அழைத்து லம்பாக ஒரு தொகை பேசி பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் கொண்டு வந்தார்கள்.
நிகழ்ச்சி சுவராஸ்யத்திற்காக சினிமா அல்லாத பிரமுகர் வேண்டும் அவர் தமிழ், தமிழர் அரசியல் பேசுகிறவராக இருக்க வேண்டும் என்று இயக்குநர் கவுதமனை அழைத்து பெருந்தொகை பேசியது விஜய் டிவி நிர்வாகம் ,ஆனால் தான் கலந்து கொள்ள முடியாது என மறுத்திருக்கிறர் இயக்குநர் கவுதமன்.

ஏமாற்றப்படுவதை அறியாதவரா ஜூலி? Big boss-25 லட்சத்துக்கு ... மெரினா ஜூலி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நூறு நாட்களுக்கு 25 லட்ச ரூபாய் வரை பேரம் பேசி முன் பணமும் பெற்றுள்ளார் ஜூலி என்ற செய்திகள் வெளியாகி உள்ளது.
சுமார் 20 லட்சத்திற்கு அதிகமான மக்கள் வந்து சென்ற ஜல்லிக்கட்டு போராட்டம் உலகை ஈர்த்தது அதன் ஐக்கியத்தாலும், போர்க்குணத்தாலும் ஜல்லிக்கட்டு என்பதை ஒரு அடையாளமாக வைத்து பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு கூட்டு மனச்சிதைவுக்கு உள்ளான சமூகம், மெரீனா போராட்டத்தோடு தன்னை இணைத்துக் கொண்டது. நம் சமகாலத்தின் மிகப்பெரிய அரசியல் எழுச்சியாக நடந்த அப்போராட்டத்திற்கு நடிகர் லாரன்ஸ், ஆர்.ஜெ.பாலாஜி, ஹிப் ஹாப் ஆதி போன்றவர்கள் உரிமை கொண்டாடிய போதிலும் யாராலும் கைப்பற்ற முடியாத போராட்டமாக நடந்து முடிந்தது மெரினாவில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம். அது சமரசமற்ற மக்கள் மயப்பட்ட போராட்டமாக நடந்த காரணத்தால்தான் மக்களை அச்சுறுத்தும் விதமாக போலீசார் இறுதியில் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு இன்னொரு மெரினா போராட்டம் உருவாகக் கூடாது என பொது மக்களுக்கு எச்சரிக்கையும் விடுத்தனர்.

ஜல்லிகட்டு ஜூலியும் - பிக் பாஸ் நிகழ்ச்சியும் .. ஜல்லிகட்டையும் ஜூலியையும் போட்டு தாக்கிய காயத்திரி ரகுராம்!

எழில் : சர்வதேச அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற நிகழ்ச்சி - பிக் பாஸ். தற்பொழுது இந்நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். சமீபத்தில் இந்த நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் நடிகர் கமல்ஹாசன் முதன் முறையாக தொலைக்காட்சியில் அடியெடுத்து வைத்துள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கும், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8.30 மணிக்கும் ஒளிபரப்பாகவுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதா, காயத்ரி ரகுராம், ஆர்த்தி உள்ளிட்ட 15 பேர் போட்டியாளர்களாகப் பங்கேற்றுள்ளார்கள். இவர்களில் ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்று, கோஷங்கள் மூலம் அரசியல்வாதிகளை விமரிசனம் செய்து புகழ்பெற்றவரான ஜூயானாவும் ஒருவர்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடைபெற்ற சமயத்தில் இவருடைய கோஷங்கள் வீடியோக்களாக சமூகவலைத்தளங்கில் அதிகம் பகிரப்பட்டன. அப்போது, வீரத்தமிழச்சி என்கிற பட்டமும் அவருக்கு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு அவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டதாக வாட்ஸப்பில் வதந்திகள் உருவாகியதால் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு ஒரு பேட்டியில், தான் நலமுடன் உள்ளதாக ஜூலி அறிவித்தார்.

புதன், 28 ஜூன், 2017

ஜோதிமணி : விவாதங்களில் பாஜக தோலுரிக்கப்படுக்கிறதே என்கிற பயம்.... நியுஸ் 7 வீடியோவில் நன்றாகவே தெரிகிறது.

நியூஸ்7 தொலைக்காட்சி விவாதம், அதையொட்டிய எஸ்.வி .சேகர்
காணொளி இவை வெறும் சிறுதுளி தான்.
மோடி அரசின் மூன்றாண்டுகால படுதோல்வி,தமிழர் விரோதப் போக்கு இவற்றை தோலுரிக்கும் விவாதங்களை எதிர்கொள்ள முடியாமல் நாளுக்குநாள் பிஜேபி தடுமாறி வருகிறது.
இதை சமாளிக்க சம்பந்தமில்லாமல் பேசுவது,உரக்கப் பேசுவது,சக பேச்சாளர்களை அநாகரிகமாக தனிப்பட்ட முறையில் விமர்சிப்பது, ஆணவத்தோடும்,அகம்பாவத்தோடும் நடந்து கொள்வது, ஏன் இரண்டு கோடி வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை? பொருளாதாரம் ஏன் சரிந்து வருகிறது? என்று கேட்டால் கூட இந்துக்களுக்கு எதிராகப் பேசுகிறீர்கள் என்று கூச்சல் போடுவது( சிறுபான்மையினரை மட்டுமல்ல, விவசாயிகள், கூலித்தொழிலாளிகள், சிறு,குறு,நடுத்தர தொழில்முனைவோரையும் மோடி அரசு அழித்து வருகிறது. அவர்கள் எல்லாம் இந்துகள் அல்லவா?) இவையெல்லாம் விவாதங்களில் எல்லோரும் பார்ப்பதுதான். ஒருவிதத்தில் அவர்கள் தங்களைத் தாங்களே எக்ஸ்போஸ் செய்துகொள்கிறார்கள் என்றுதான் மக்கள் பேச்சிலிருந்து புரிந்துகொள்ள முடிகிறது. இவற்றையெலாம் தாண்டி பிஜேபியின் சார்பாக விவாதங்களில் கலந்துகொள்பவர்களை மட்டுமல்லாமல் ,மற்ற கட்சிகள் சார்பாக , கட்சி சார்பற்று விவாதங்களில் கலந்துகொள்பவர்களையும் அவர்களே தீர்மானிக்கிறார்கள்.

சீமான் ஆரியர்கள் வடவர்கள் விரும்புவதை நிறைவேற்ற துடிக்கிறார்!

Damodaran: நியூஸ் 7 சானலில் வியூகம் நிகழ்ச்சியில்...
சீமானின் ஒரு கேள்விக்கு கூட பதில் சொல்லமுடியாமல்
Chief editor முகம் வெந்து கரியாகி அசடு வழிந்தான் அந்த நெறியாளர் ( பெயர் தெரியாது )
ரஜினி அரசியலுக்கு வருவது குறித்த விவாதம் அது...
தமிழரை தமிழன் தான் ஆளவேண்டும்
யார்வேண்டுமானாலும் இங்கே வந்து வாழட்டும்
ஆனால் தமிழன் தான் ஆள வேண்டும்
என்பதுதான் சீமானின் மைய கருத்து.
சீமான் முன் வைத்த வாதங்கள் அற்புதம்
தமிழரை நிச்சயம் எழுச்சி பெற செய்யும்.
அவருடைய கருத்துகள் எல்லாம் எனக்கு என்னுடைய கருத்தாகவே உணர்ந்தேன்...
ஆனால்....ஆனால்....ஆனால்....

தமிழர் எழுச்சி தமிழர் ஆட்சி என்னும் போர்வைக்குள் புகுந்து கொண்டு
தமிழர் வாழ்வுக்கும் சமூக நீதிக்கும் தமிழின எழுச்சிக்கும் அரும்பாடுபட்ட நீதிக்கட்சி திராவிட இயக்கம் திமுக வை ..
தமிழின பகைவர்களாக சித்தரிக்கும் கீழ்மையை கயமையை
நம்மால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.