சனி, 16 ஜூன், 2012

ஓடும் ரயிலிலிருந்து அனுஷ்கா குதித்துவிட்டார்


கார்த்தி, அனுஷ்கா ஆகியோர் அலெக்ஸ் பாண்டியன் படப்பிடிப்பிற்காக மைசூர் சென்றுள்ளனர். மைசூரில் ஹீரோ, ஹீரோயினை வில்லன் சேஸ் செய்யும் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இந்த சண்டைக் காட்சியில் தான் அனுஷ்காவும், கார்த்தியும் ரயிலிலிருந்து குதித்ததாக கூறப்பட்டது. 
இந்த சண்டைக் காட்சி பற்றி பேசிய இயக்குனர் சுராஜ் “ ஹெலிகாப்டரில் துரத்தும் வில்லனிடமிருந்து தப்பிக்க ஹீரோ, ஹீரோயின் ரயிலின் மேல் ஓடுவது போன்ற காட்சி மைசூரில் படமாக்கப்பட்டது. குறிப்பிட்ட தூரம் வரை ரயில் மீது ஓடிய பின்னர் இருவரும் அங்கிருந்து கீழே குதிப்பது போன்ற காட்சியை திட்டமிட்டு, டூப் நடிகர் நடிகையை வரவழைத்திருந்தோம். 

இணையதளம் மூலம் 40 பெண்களை ஏமாற்றி மோசடி!

தமிழக பெண்கள் புகாரில் சிக்கிய மும்பை நபர்!
மும்பையைச் சேர்ந்தவர் அமீர்கான் என்கிற ஆரிஸ்கான். இவருக்கு வயது 27. இவர் தன்னை இணையதளம் மூலம் நம்பவைத்து மோசடி செய்துவிட்டதாக சென்னை மன்னடியைச் சேர்ந்த ஒரு பெண் சென்னை போலீஸ் கமிஷனரிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒரு புகார் அளித்திருந்தார்.
இதேபோன்று சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த என்ஜீனியரிங் மாணவி ஒருவரும் புகாரை அதே மாதம் கொடுத்திருந்தார். அவர் கொடுத்த புகாரில் தன்னை ஏமாற்றியவர் பெயர் வித்யோக் என்றும், ஐஏஎஸ் பயிற்சி அதிகாரி என்றும் குறிப்பிட்டிருந்தார். வித்யோக்கின் முகவரியாக விழுப்புரம் மாவட்டத்தை கூறியிருந்தார். இந்த இரண்டு பெண்களும் கொடுத்த புகார் ஒரே நபரைப் பற்றியதுதான்.

சிரஞ்சீவியால் காங்கிரசுக்கு எந்த லாபமும் இல்லை


 Andhra Pradesh Jagan Mohan Reddy Routs Chiru Base

ஹைதராபாத்: ஓப்பனிங் எல்லாம் நல்லாத்தான் இருந்துச்சு...என்ற வசனம் யாருக்கு பொருந்துகிறதோ இல்லையோ ஆந்திர அரசியலில் நடிகரும் எம்.பி.யுமான சிரஞ்சீவிக்குத்தான் பொருந்தும்...
பிரஜா ராஜ்ஜியம் கட்சியை பிரம்மாண்டமாக தொடங்கி அதிரடியாக சட்டப்பேரவைத் தேர்தலில் 18 தொகுதிகளைப் பெற்று கதிகலங்க வைத்தார் சிரஞ்சீவி. இந்த அமர்க்களத்தைக் கண்டு ஆடிப்போன காங்கிரஸ் கட்சி, சிரஞ்சீவிக்கு எம்.பி. பதவி, அமைச்சர் பதவி என்றெல்லாம் வலைவீசி தங்களது கட்சியில் ஐக்கியப்படுத்திக் கொண்டது.
காங்கிரஸ் கட்சியிலிருந்து ஜெகன் மோகன் ரெட்டி கூண்டோடு வெளியேறிப் போனதால் உருவாகும் வெற்றிடத்தை சிரஞ்சீவி நிரப்புவார் என்று கணக்குப் போட்டது காங்கிரஸ்.
ஆனால் அண்மையில் நடந்து முடிந்த மினி பொதுத்தேர்தலில் சிரஞ்சீவியின் செல்வாக்கை ஜெகன் சூறாவளி சூறையாடிப் போய்விட்டது.

நித்தியின் உடலுக்கு மதுரை மசாஜ்!!

Viruvirupu
“இன்னமும் ஒரு வருடத்துக்கு யாருடைய முதுகையும் பதம் பார்க்க கூடாது” என்ற நிபந்தனையுடன் நித்தி சுவாமிகளுக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. கேள்வி கேட்ட செய்தியாளருக்கு ரத்தம் வரும் விதத்தில் ‘திருச்சாத்து’ சாத்திய காரணத்தால், நமது சகலகலா வல்லவரான சாமியார் கைதாகியிருந்தார்.

Beer விலை உயர்வால் தமிழக அரசுக்கு ரூ 300 கோடி கூடுதல் வருவாய்!

பொதுமக்கள், நித்தியை படீர் படீர் என தாக்கத்தொடங்க,

ஏய்.. கள்ளச்சாமி நித்யா னந்தா...''’என்றபடி ஆவேசமாக ஓடிவந்த பொதுமக்கள்,

 அந்த நித்தி ஆபாசப் படங்களை அடிக்கடி போட்டுப் பார்த்துட்டு அந்த வெறியோடு ஆசிரமப் பக்தைகளை சீரழிக்கிறார்'ன்னு என்னிடம் கண்ணீர் விட்டார்
கர்நாடகாவில் நித்திக்கு எதிரான சூறாவளியைக் கிளப்பிய ஆர்த்தி ராவின் பகிரங்கப் பேட்டியையும், நித்தியின் பிடதி ஆசிரமத்தை கர்நாடக போலீஸ் 11-ந் தேதி சுற்றி வளைத்ததையும் கடந்த நக்கீரன் இதழில் "கும்பமேளாவில் நித்தி அடித்த ஆபாசக்கூத்து! ஆர்த்தி ராவ் கண்ணீர் வாக்குமூலம்' என்ற தலைப்பில் அட்டைப்படக் கட்டுரையாகத் தந்திருந்தோம்.
அடுத்த நிகழ்வுகளை பதிவுசெய்யும் நோக்கத்தில் 12-ந் தேதி பிடதியை நோக்கிப் பயணமானோம். பெங்களூரில் இருந்து மைசூர் செல்லும் சாலையில் 50-வது கிலோ மீட்டரில் பிரமாண்ட மாகக் காட்சியளித்தது பிடதி ஆசிரமம். அங்கே நித்தியின் படத்தோடு வைக்கப்பட்டி ருந்த வினைல் போர்டுகள் எல்லாம் கர்நாடக மக்க ளின் கோபத்தால் கிழித் தெறியப்பட்டிருந்தது. விளம்பர போர்டுகளும் உடைக்கப்பட்டிருந்தன. ஆசிரமத்தைச் சுற்றிலும் போலீஸ் தலைகளே தென்பட்டன.
ஆசிரமத்தில் தங்கியிருந்த பணி யாளர்கள் தங்கள் மூட்டை முடிச்சைக் கட்டிகொண்டு வெளியே வருவதையும் நாம் பார்க்க முடிந்தது.

ஜனாதிபதி ரேஸில் அப்துல் கலாம் தோல்வியடைய சான்ஸ்

Viruvirupu புது டில்லியை மையம் கொண்டு கலக்கிக் கொண்டிருந்த ஜனாதிபதி ரேஸ், காங்கிரஸ் வேட்பாளர் பிரணாப் முகர்ஜி என்று அறிவிக்கும் அளவில் வந்து நிற்கிறது. இதில் ஆழ்ந்த சிக்கலில் ஆழ்ந்திருப்பவர்கள் இருவர். ஒருவர், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமை தமது வேட்பாளர் என அறிவித்த மமதா பானர்ஜி. மற்றையவர் அவரால் அறிவிக்கப்பட்ட, சாட்சாத், அப்துல் கலாம்.
ஆக்டிவ் அரசியலில் மற்றுமொருமுறை சிக்கி திண்டாடியிருக்கிறார் அப்துல் கலாம் என்ற இந்தியாவின் பெருமைக்குரிய விஞ்ஞானி. தி.மு.க. தலைவர் கருணாநிதி, “கலாம் என்றால், கலகம் என்றொரு அர்த்தம்” என்று எந்த முகூர்த்தத்தில் சொன்னாரோ தெரியவில்லை, “கலாம் என்றால், பரிதாபம்” என்று மாறிவிட்டது அவரது நிலைமை.

அவுக இந்த மாதிரி குத்திட்டாக!
மமதா மற்றும் சிலரின் முயற்சிகளில், தமக்கு ஒரு சான்ஸ் இருப்பதாக அவர் நம்பினார் என்றே எடுத்துக் கொள்ளலாம். எப்படியென்றால், “நீங்கள் ஜனாதிபதி வேட்பாளரா?” என்ற கேள்விக்கு, “இல்லை” என்ற ஒற்றைப் பதிலுடன் அவர் விலகிச் சென்றிருக்க முடியும்.
ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை.

மம்தா பானர்ஜி: The game is not over.



ஜக்கிய முற்போக்கு கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி முன்மொழிந்த பெயர்களை காங்கிரஸ் ஏற்க மறுத்ததுடன், பிரணாப் முகர்ஜியின் பெயரையும் அறிவித்தது.
 இந்நிலையில், கோல்கட்டாவில் நிருபர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி,  The game is not over. வரும் நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாருங்கள். முலாயம் சிங் மீது எனக்கு வருத்தம் கிடையாது. அவர் ஒரு அரசியல்வாதி என்று தெரிவித்துள்ளார்

சீனாவின் முதலிடம் பறிபோகும்: அதிக தொழிலாளர்களை உருவாக்கும் இந்தியா

புதுடில்லி: உலகில் அதிக தொழிலாளர்களை உருவாக்கும் நாடு என்ற பெருமையை, இன்னும் சில ஆண்டுகளில் சீனாவிடம் இருந்து, இந்தியா தட்டிப் பறிக்கவுள்ளது. அதேநேரத்தில், இந்தியாவில் உருவாகும் தொழிலாளர்களில், 5.8 கோடி பேர், குறைந்த தொழில் திறன் உடையவர்களாகவே இருப்பார்கள் என்றும், இவர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பது சிரமமாக இருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச தொழில் நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கி வரும், பிரபல கன்சல்டிங் நிறுவனமான "மெகன்சி அன் கோ' சர்வதேச அளவிலான தொழிலாளர் பிரச்னைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தடகள வீராங்கனை பிங்கி ஆணா..?: கற்பழித்து விட்டதாக பெண் புகார்- கைது!


கொல்கத்தா: ஆசிய கோப்பை தடகளப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றவரான பிங்கி பிரமனிக் என்ற வீராங்கனையை போலீஸார் கற்பழிப்பு வழக்கில் கைது செய்துள்ளனர். 
அவர் உண்மையில் ஆண் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் பிங்கியைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.
2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 4×400 தொடர் ஓட்டப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய மகளிர் அணியில் இடம் பெற்றிருந்தவர் பிங்கி. அதேபோல அதே ஆண்டு மெல்போர்னில் நடந்த காமன்வெல்த் போட்டியில் வெள்ளி வென்றார். 3 ஆண்டுகளுக்கு முன்பு அவர் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

நித்தியின் சீடர்களிடம் மாட்டிக்கொண்ட மதுரை ஆதீனகர்த்தர்


suji dsouza - melbourn,ஆஸ்திரேலியா

எதோ நடக்கக் கூடாதது நடந்து விட்டிருக்கு அவருக்கு. உதவிட எல்லோரும் தயார்.இப்போது நித்தியும் ஜெயிலில் இருக்க்கிறான்.இது தான் சரியான தருணம்.உண்மையை உலகுக்குக் கூறவும்.தமிழ் நாட்டை காப்பாற்றவும்.

சென்னை: தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தனது கணீர் பேச்சால் மக்களைக் கவர்ந்த மதுரை ஆதீனகர்த்தர், தற்போது நித்தியின் சீடர்களிடம் சிக்கி சிறைக் கைதியாக, மிகவும் கவலையுடன் உடல் தளர்ந்தவராக, யாரையுமே தன் விருப்பப்படி தொடர்பு கொள்ள முடியாதவராக இருக்கிறார் என, அவரின் நெருங்கிய நண்பர்களும், சீடர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.
கம்பீரமான நடை, தெளிவான பேச்சு, கணீரென்ற குரல்... இது, மதுரை ஆதீனகர்த்தரின் அடையாளம். மேடையில் யாருக்கும் அஞ்சாமல் பேசும் துணிவு, மனதில் பட்டதை வெளிப்படையாக தெரிவிக்கும் தைரியம், இவையெல்லாம் அவரது தனிச் சிறப்பான அடையாளங்கள். ஆனால், கடந்த இரு மாதங்களுக்கு மேலாக அவரது நிலைமையே தலைகீழாக மாறிவிட்டது. அவரால் தன் விருப்பப்படி யாரையும் தொடர்பு கொள்ள முடியாத நிலையில், சிறைக் கைதியாக உள்ளார். அவரது தனிப்பட்ட அலைபேசியும் கூட, இப்போது அவர் வசம் இல்லை. அதையும், நித்தியின் சீடர்கள் தங்கள் வசப்படுத்தியுள்ளதாக, ஆதீனகர்த்தரின் நெருங்கிய நண்பர்கள் கவலை தெரிவித்துள்ளனர். அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அஞ்சுகின்றனர்.

வெள்ளி, 15 ஜூன், 2012

குடிகார ‘பார்களை’ விஞ்சும் குடியரசுத் தலைவர் தேர்தல்!

குடியரசுத் தலைவர் தேர்தலில் பட்டையைக் கிளப்பும் மூன்று பெண்கள் யார்? இந்திய பேரரசி சோனியா, வங்கத்து அரசி மம்தா, தமிழகத்து ராணி ஜெயலலிதா மூவரும் என்ன செய்வார்கள் என்ற பீதிதான் ‘ஆண்கள்’ கோலேச்சும் இந்திய ஜனநாயகத்தில் பலரையும் அலைக்கழிக்க வைக்கிறது. அந்த வகையில் இந்தத் தேர்தல் ஏதோ ஒரு வகையில் ‘பெண்ணுரிமை’க்கு இலக்கணம் படைத்திருக்கும் தேர்தல் எனலாம்.
ஒரு ரப்பர் ஸ்டாம்பை தயாரிப்பதற்கு இத்தனை ஆர்ப்பாட்டங்களா என்று நீங்கள் கேட்கலாம். மானாவாரியாக முத்திரை குத்துவதுதான் இந்த ஸ்டாம்பின் வேலை என்றாலும், கூட்டணிதான் இனி மத்தியில் எடுபடும் எனுமளவுக்கு, சமூக நீதி காத்த கட்சிகளாக கருதப்படும் சிற்றரசர்கள் ஆங்காங்கே தங்களது படை பரிபாலனங்களுடன் செட்டிலாகிவிட்ட் நிலையில், நாளைக்கே எந்த கூட்டணிக்கும் பெரும்பான்மை கிடைக்க வில்லை என்றால் ரப்பர் ஸ்டாம்ப் அப்போது மட்டும் முக்கியத்துவம் பெறுகிறது. இந்தக் கருத்தைத்தான் சோ ராமசாமியும் தெரிவித்திருக்கிறார். அதாவது இந்த இக்கட்டிலும் தமது பார்ப்பனிய மேலாண்மையை செலுத்தும் அளவுக்கு குடியரசுத் தலைவரின் குட்டியூண்டு அதிகாரம் அவருக்கு தேவைப்படுகிறது.

மோகன்லால் விரைவில் கைது? யானை தந்தம் விவகாரம்

Mohanlal Get Arrested
திருவனந்தபுரம்: மலையாள நடிகர் மோகன்லாலின் வீட்டில் யானைத் தந்தங்கள் கைப்பற்றியது தொடர்பாக அவர் மீது கேரள வனத்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனால் அவர் விரைவில் கைது செய்யப்படுவார் என்று கூறப்படுகிறது.
பிரபல மலையாள நடிகரான மோகன்லாலின் எர்ணாகுளம், திருவனந்தபுரம், சென்னை வீடுகளில் கடந்தாணடு வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மோகன்லால் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததற்கான ஆதாரங்கள் சிக்கன. மேலும் எர்ணாகுளத்தில் உள்ள அவருடைய வீட்டில் இரண்டு யானை தந்தங்கள் கைப்பற்றப்பட்டன. வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி பல மாதங்கள் ஆன பிறகும் மோகன்லால் வீட்டில் கைப்பற்றப்பட்ட தந்தங்கள் குறித்தோ, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது குறித்தோ எந்த விசாரணையும் நடைபெறாமல் இருந்தது.

ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு அப்பாவி! – சோ

பல வாசகர்கள் ‘சோவின் உடலுக்கு என்ன? குணமாகி விட்டதா? என்ன நடந்தது?’ என்றெல்லாம் விசாரித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘சோ’ ஆஸ்பத்திரியில் சுமார் 12 நாட்கள் இருந்து விட்டு, வந்தாகி விட்டது. தன்னுடைய அனுபவத்தை ‘சோ’ கூறுகிற கட்டுரை இது.

எம்.ஜி.ஆர். செத்துப் பிழைத்தவர். நான் உபதேச வெள்ளத்தில் மூழ்கி எழுந்தவன்.

ஆஸ்பத்திரியில் இருந்தாலும் இருந்தேன். ஓர் உபதேச மழையே என் மீது பொழிந்து விட்டது. எனக்கு உபதேசம் செய்யாதவர்களே யாரும் கிடையாது. எனக்கு வந்த நோய் ஒருபுறம் இருக்கட்டும். இந்த உபதேசப் பிரளயத்தைப் பார்ப்போம்.
என்னைப் பார்க்க வந்து சுமார் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, இறுதியில் ‘இதோ பார்! யார் கிட்டேயும் அநாவசியமா பேசிக்கிட்டிருக்க வேண்டாம். யார் வந்தாலும் அஞ்சு நிமிஷத்துலே திருப்பி அனுப்பிடு. பேசாம படுத்துக்கிட்டிரு. அவங்களா போயிடுவாங்க. இல்லேன்னா அவனவன் அரை மணி நேரம் உட்கார்ந்துடுவான். அதுக்கு இடம் கொடுக்காதே. அது உனக்கு நல்லதில்லை. என்ன! போயிட்டு வரட்டுமா?’ என்று சொல்லி போனவர்கள் பலர்.

யாகங்கள் நடத்திக் கொண்டே பெரியார் பெயரை உச்சரிப்பதா?

முதல்வரை நோக்கி கலைஞர் வினா!

சென்னை, ஜூன் 15- வேத ஆகம பாராயணங் களோடு மழைக்காக யாகம் நடத்துபவர்கள் எல்லாம் தந்தை பெரி யார் பெயரைப் பயன் படுத்தலாமா என்ற அறிவார்ந்த வினாவை எழுப்பியுள்ளார் திமுக தலைவர் கலைஞர் அவர்கள்.
முரசொலியில் இன்று தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் எழுதியுள்ள பதிலில் குறிப்பிட்டுள்ளதாவது:
கேள்வி :-  மத்திய அரசின் பாடப் புத்தகங் களில்  இந்தி எதிர்ப்புப் போராட்டத்தைக்  கிண் டல் செய்து  வெளி வந்த கார்ட்டூனை அகற்ற வேண்டு மென்று கடை சியாக தமிழக முதல மைச்சர் ஜெயலலிதாவும் ஓர் அறிக்கை வெளி யிட்டிருக் கிறாரே?

ஜெயா ஒரு ரவுடி என்பதை மறக்கலாமா?மறந்துவிடாதீர்கள்

ஜெயலலிதா பற்றி கருணாநிதியின் ‘தில்’லான வார்த்தை விளையாட்டு!

Viruvirupu
தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு, முதல்வர் ஜெயலலிதாவை கிண்டல் அடிப்பதற்கு கற்றுக் கொடுக்கவா வேண்டும்? அதுவும், பெயர் குறிப்பிடாமல் வார்த்தை விடுவதில் கில்லாடி அவர். தமது 89-வது பிறந்தநாள் விழாவில் நேற்று (புதன்கிழமை) அவர் அடித்த காமென்ட் ஒன்று, கார்டனில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருப்பதாக அ.தி.மு.க. வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
எமக்கு பரிச்சயமான அ.தி.மு.க. பிரமுகர் ஒருவர், “இப்படித்தான் துரைமுருகன் சில மாதங்களுக்கு முன் ஒருதடவை வார்த்தை விளையாட்டு காட்டப்போய், அம்மாவின் கோபத்துக்கு ஆளானார். அப்போது அவருக்கு என்ன சிக்கல்கள் வந்தன என்பதை அவரிடம் கேட்டுப் பாருங்கள். இப்போது இவர் (கருணாநிதி), ஆரம்பித்திருக்கிறார்” என்றார்.
சொல்வது புரிகிறதா உடன்பிறப்பே..
பிறந்தநாள் விழாவில் அப்படி என்னதான் வார்த்தை விளையாட்டு விளையாடினார் கருணாநிதி?
“தி.மு.க. மீது, தேவையில்லாமல் சீண்டிப் பார்க்கிறார்கள். எம்மவர்கள்மீது கண்டபடி கேஸ்கள் போடுகிறார்கள். அது பழிவாங்கல் நடவடிக்கை இல்லாமல் வேறென்ன? ஒருவர் குண்டாக இருந்தால் போதும், அவர் மீது குண்டர் சட்டம் பாய்கிறது” என்று தொடங்கியவர் அடுத்து கூறிய வாக்கியத்தைக் கவனியுங்கள்:
“நாளைக்கே எங்களுக்கும் காலம் வரும். குண்டாக இருப்பவர் மீது, குண்டர் சட்டம் பாய்வதென்றால், எதிர்காலத்தில் யார் மீதெல்லாம் குண்டர் சட்டம் பாய வேண்டும் என்று யோசித்துப் பார்க்க வேண்டும்.

நித்தி எமது நண்பர்; ரஞ்சிதா எமது சொத்து மதுரை ஆதீனம் சிறப்பு பேட்டி

Viruvirupu
“நித்தியானந்தா மதுரைக்கு வந்து என்னுடன் இணைந்து கொள்வார்” என்று கூறியிருக்கிறார் மதுரை மூத்த ஆதீனம் அருணகிரிநாதர். “அவரை எனது வாரிசாக மட்டுமின்றி, பல விஷயங்களில் உற்ற நண்பராகவும் கருதுகிறேன்” என்றார் எமக்கு அளித்த பேட்டியில்.
இரு தினங்களுக்குமுன் (நித்தியானந்தா சரணடைந்தபோது) மதுரை ஆதீனத்தின் மனநிலைக்கும், தற்போதைய மனநிலைக்கும் இடையே வித்தியாசம் இருப்பதை காண முடிகிறது. நித்தி சுவாமிகள் சரணடைந்தபின் கருத்து தெரிவித்த பெரிய சாமியார், ஒருவித விரக்தி மனநிலையில் இருந்தார்.

மமதா : நான் ஆணையிட்டால்…பேயறைந்துபோல் காங்கிரஸ்

காங்கிரஸ் கட்சிக்கு பிரச்னையை உருவாக்கவும் தெரியும்; அதைத் தீர்க்கவும் தெரியும்! – கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திமுகவுக்கும் காங்கிரஸுக்கும் இடையே தொகுதிப்பங்கீட்டில் சிக்கல் எழுந்தபோது மத்திய அமைச்சர் பிரணாப் முகர்ஜி உதிர்த்த வாசகம் இது. ஆட்சியைப் பிடித்தபிறகு காங்கிரஸ் கட்சி தன்னுடைய கூட்டணிக் கட்சிகளிடம் எப்படியெல்லாம் அலட்சியத்துடனும் திமிர்த்தனத்துடனும் நடந்துகொள்ளும் என்பதற்கு சத்திய சாட்சியமாக அமைந்த வாசகம் இது.
ஸ்பெக்ட்ரம் தொடங்கி தேர்தல் வரை திமுகவிடம் காட்டிய துரைத்தனத்துக்கு இப்போது வட்டியும் முதலுமாக வாங்கிக்கட்டிக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் கட்சி. உபயம்: மமதா பானர்ஜி. காங்கிரஸ் கட்சியிடம் இருந்தே பாலபாடம் கற்றுக்கொண்டு, தற்போது அதே கட்சிக்கு விஷப்பரீட்சை வைத்துக்கொண்டிருக்கிறார் மமதா பானர்ஜி. மமதாவின் அதிரடி காய் நகர்த்தல்களால் பேயறைந்துபோல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி.

பில்லா 2 எக்கச்சக்க 'கட்' அதிருப்தியில் விநியோகஸ்தர்களும் தியேட்டர்காரர்களும்

Billa Gets A Producer Not Happy With The Cuts படத்துக்கு 'ஏ'- அதிருப்தியில் தயாரிப்பாளர்- ஜுன் 21-ல் ரிலீஸ் ஆகுமா?

அஜீத் நடிப்பில் அடுத்து வரவிருக்கும் பில்லா 2 படத்தில் வன்முறைக் காட்சிகள் அதிகம் இருப்பதால், படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கைக் குழு.
படம் அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை 21-ம் தேதி வெளியாகும் என கூறப்பட்டாலும், இன்னும் உறுதியான தகவல் வெளியாகவில்லை.
அஜீத், பார்வதி ஓமணக் குட்டன், புருனா அப்துல்லா நடித்துள்ள படம் பில்லா 2. யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சக்ரி டோலெட்டி இயக்கியுள்ளார்.
இன் என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ள இந்தப் படத்தை, தமிழகத்தில் வெளியிடுகிறார் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.

Andhra காங்கிரஸ் ஆட்சிக்கு ஆபத்து?இடைத்தேர்தலில் படுதோல்வி:

ஹைதராபாத்: ஆந்திராவில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி 4 இடங்களிலாவது வெற்றி பெற்றால் தான் அரசுக்கு ஆபத்தில்லை என்ற நிலையில் வெறும் 2 இடங்களை மட்டுமே கைப்பற்றியுள்ளது. இதனால் அரசுக்கு ஆபத்து ஏற்படும் சூழல் நிலவுகிறது.
ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 13 மையங்களில் எண்ணப்பட்டன. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆளும் காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. ஆனால் தெலுங்கு தேசம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.

அதிமுக வெற்றி BUT அமைச்சர்கள் பீதி...! வாக்குகள் குறைந்து இருந்தால்


 Admk Ll Secure Pudukkottai But
 பல அமைச்சர்கள் யாருக்கும் தெரியாமல் தோல்வி அடைந்து இருப்பார்கள். அவர்கள் யார் என அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா விரைவில் அறிவிப்பார்.
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் வெற்றி பெறப் போவது யார் என்று சின்ன பையனைக் கேட்டால் கூட அதிமுக தான் என்று சொல்வான். தொகுதியின் உள்ள 1,94,680 வாக்காளர்களில் 1,43,277 பேர் தங்களது வாக்குகளைப் வெற்றிகரமாக பதிவு செய்தனர்.
புதுக்கோட்டையில் வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை நடந்தது. அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்கு வித்தியாத்தில் தான் வென்றுள்ளார். அதிமுக கணக்குப் போட்டபடி வாக்கு வித்தியாசம் 1 லட்சத்தை தாண்டவில்லை.

இந்த இடைத்தேர்தலில் தேமுதிக வேட்பாளர் ஜாகீர் உசேன் கூட கவலைப்படாத போது வெற்றிக் களிப்பில் உள்ள அதிமுக அமைச்சர்கள் தான் தங்களது அடி வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறார்களாம்.

Andhra ஜெகன் அபாரவெற்றி 19 இல் 16 தொகுதிகளை ஜெகன் கட்சி கைபற்றியது

 Ap By Polls Results Live Ysr Cong Ahead In 14 Seats

ஆந்திரா இடைத்தேர்தல்: 19ல் 16 இடங்களில் ஜெகன் கட்சி அபார வெற்றி- காங்கிரஸ் படுதோல்வி

ஹைதராபாத்: ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் நடந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டன. இதில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது.
ஆந்திராவில் 18 சட்டசபை தொகுதிகளுக்கும், 1 லோக்சபா தொகுதிக்கும் கடந்த 12ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. தேர்தல் அன்று பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் 13 மையங்களில் எண்ணப்பட்டன. இதில் சொத்துக்குவிப்பு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் 15 சட்டசபை தொகுதிகள் மற்றும் 1 லோக்சபா தொகுதியிலும் அபார வெற்றி பெற்றுள்ளது. இது தவிர காங்கிரஸ் 2 இடங்களிலும், தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Sonia: பிரணாப் முகர்ஜி ஜனாதிபதி பதவி வேட்பாளர் சோனியா அறிவிப்பு!

 Upa Announce Pranab Mukherjee As President
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவதாக காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். இன்று மாலை கூடிய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி கூட்டத்தி்ல அவர் பிரணாபின் பெயரை முன்மொழிந்தார். இதை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் ஒருமனதாக ஏற்றுக் கொண்டனர்.
இதையடுத்து ஜூன் 24ம் தேதி நிதியமைச்சர் பதவியை பிரணாப் முகர்ஜி ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விஜயகாந்த்: ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி!


சரியான சாட்டையடி! ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி! விஜயகாந்த் பெருமிதம்!


புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைத்துள்ளது என்றும் பணத்தைக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்ற ஊழல் போக்கிற்கு வாக்காளர்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் சூளுரைத்து களம் இறங்கினர். இந்த சுனாமியை எதிர்த்து நமது இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் தங்களது உழைப்பின் மூலம் 30,500 (21.3%) வாக்குகள் பெற்று ஆளும் கட்சியினர்க்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

புதுக்கோட்டையில் 71,498 வாக்கு வித்தியாசத்தில் அதிமுக வெற்றி- டெபாசிட்டை தக்க வைத்த தேமுதிக!

 Counting Votes Begins Pudukottai
புதுக்கோட்டை: புதுக்கோட்டை இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வீ.ஆர். கார்த்திக் தொண்டைமான் 71,498 வாக்குகள் வித்தியாசத்தில் பெரும் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேடாபாளர் என். ஜாகீர் உசேன் 30,500 வாக்குகள் பெற்று டெபாசிட்டை தக்க வைத்து, திராணியையும் நிரூபித்தார்.

ஆர்த்திராவ்தான் நித்தியின் அறையில் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான

ஆர்த்திராவ்தான், நித்தியின் அறையில் ரகசியக் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகளைப் பதிவு செய்தவர்

கர்நாடகாவில் நித்திக்கு எதிரான சுனாமி கிளம்பக் காரணமாக இருந்தவர் நித்தியின் முன்னாள் பெண் சீடரான ஆர்த்திராவ்.
ஏசியா நெட்டின் கன்னட சேனலான சுவர்ணா தொலைக்காட்சியில், நித்யானந்தாவின் முகத்திரையை பகிரங்கமாய் கிழித்து, கர்நாடக மாநிலத்தையே நித்திக்கு எதிராகப் பொங்க வைத்திருக்கிறார் ஆர்த்தி ராவ். நித்தி தன்னை எப்படி எப்படியெல்லாம் தன் இச்சைகளுக்குப் பயன்படுத்திக்கொண்டார் என்று கண்ணீரும் கம்பலையுமாக அவர் விவரித்ததைப் பார்த்த பெண்கள் கண்ணீர்விட்டு அழுதனர். ஆன்மீகத்தையே ஆபாசமாக்கிவிட்டாரே என ஆண்கள் கொந்தளித்தனர். இப்படி கர்நாடகாவையே அதிரவைத்த இந்த ஆர்த்திராவ்தான், நித்தியின் அறையில் ரகசியக் கேமராவைப் பொருத்தி, ரஞ்சிதாவுடனான நித்தியின் லீலைகளைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. நித்தியின் இன்னொரு முகத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடம் தெரிவிக்க இரண்டு மாதங் களாக முயற்சி செய்து முடியாமல் போன ஆர்த்தி ராவை நக்கீரனுக்காக நாம் சந்தித்தபோது, மளமளவென தன் மனதில் இருந்ததையெல்லாம் மடைதிறந்த வெள்ளம்போல் கொட்ட ஆரம்பித்துவிட்டார். இதோ நித்தியால் சீரழிந்த அவரது வாழ்க்கை...
‘""நான் ஆச்சாரமான பிராமணக் குடும்பத்தில் பிறந்தவள். மெக்கானிக்கல் என்ஜினியரிங் படிச்ச நான், மேற்படிப்பை ஸ்காலர்ஷிப்பில் அமெரிக்காவில் படிச்சேன். அங்கேயே வேலை தேடிக்கொண் டேன். அங்கு நான் காதல் திருமணமும் பண்ணிக்கொண்டேன். அமெரிக்காவில் பரபரப்பாக வாழ்க்கை போய்க்கொண்டிருந்தது. இந்த நிலையில் என் மனம் அமைதி யைத் தேடியது. நான் இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவள் என்ப தால், நித்யானந்தாவின் ஆசிரமத்திற்கு 2004-ல் கர்ப்பிணியாக என் கணவர் சகிதம் வந்தேன். என்னை நித்யானந்தா அபார்ஷன் பண்ணிக்கச் சொல்லிவிட்டார் .நித்யானந்தாவிடம் நேரடியாக தியானப் பயிற்சி எடுத்துக்கொண்ட ஆனந்த ஸ்பூரணாவின் முதல் குரூப்பில் நானும் என் அப்பா ஸ்ரீதர் ராவும் இருந்தோம்.

86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க 86.56 கோடி செலவு செய்த மாயாவதி

லக்னோ: முன்னாள் உத்தர பிரதேச முதல்வர் மாயாவதி தான் முதல்வராக இருந்த போது தனது பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார் என்று அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேச மாநில சட்டசபை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆளும் சமாஜ்வாடி கட்சி உறுப்பினர் ரவிதாஸ் மல்ஹோத்ரா முன்னாள் முதல்வர் மாயாவதியின் பிரமாண்ட பங்களா குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் அபிஷேக் மிஸ்ரா கூறுகையில்,
மாயாவதி தான் முதல்வராக இருக்கையில் மால் அவென்யூவில் உள்ள பங்களாவை பராமரிக்க மட்டும் ரூ.86.56 கோடி செலவு செய்துள்ளார். அதிலும் எலக்ட்ரிக்கல் பணிக்கு மட்டும் ரூ.20.09 லட்சம் செலவு செய்துள்ளார். இது குறித்து இதுவரை எந்த புகாரும் வராததால் விசாரணைக்கு உத்தரவிடப்படவில்லை என்றார்.
5 ஏக்கரில் அமைந்துள்ள மாயாவதியின் பங்களாவை கட்ட அரசு கஜானாவில் இருந்து ரூ.86 கோடி எடுக்கப்பட்டது என்ற குற்றச்சாட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆக ரூ.86 கோடியில் கட்டிய பங்களாவை பராமரிக்க ரூ.86.56 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது

நித்தியின் ஆண்டு வருமானம் 90 கோடிஅம்பானியின் ஆண்டு சம்பளம் 15 கோடி

ஒரு ஆண்டில் மட்டும் 90 கோடி ரூபாய் சம்பாதிக்கும் "நித்தி'

நித்திஆண்டுக்கு யின் வருமானம்
சென்னை: இந்தியாவின் பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியின், 2009ம் ஆண்டின், சம்பளம் 15 கோடி ரூபாய். அதே ஆண்டு, "கிளு கிளு' சாமியார் நித்யானந்தாவின் வருமானம், 90 கோடி ரூபாய்!
சிலை விற்பனை: நித்யானந்தாவின் நெருங்கிய சீடரான ராஜேஷ் கிருஷ்ணன் என்ற நித்ய சேவகானந்தா என்பவரின் பெயரில், அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில், டியூரேட் நகரில், "நித்யானந்தா டெம்பிள் ஆர்ட்ஸ்' என்ற நிறுவனம் இயங்கி வந்தது. கடந்த 2007ல், துவக்கப்பட்ட இந்த நிறுவனம், இந்தியாவில் தயாரிக்கப்படும் பல்வேறு சாமி சிலைகள், கவரிங் நகைகள், ருத்ராட்ச மாலைகள், விதவிதமான காவி மற்றும் பல வண்ண ஆடைகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து, அமெரிக்காவில் வசித்து வரும் பக்தி மிக்க இந்தியர்கள், நித்யானந்தா சீடர்கள் மற்றும் வெளிநாட்டவரிடம் விற்பனை செய்து வந்தது. இதில், அனைத்து பொருட்களும் பல மடங்கு லாபத்திற்கு விற்கப்பட்டன. உதாரணத்திற்கு, 10 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள சிலை, லட்சக்கணக்கான ரூபாய்க்கு விற்கப்படும். இதன் மூலம், 2009ல், அவர் 12 கோடி ரூபாய் சம்பாதித்து உள்ளார்.

??புதுக்கோட்டை இடைத்தேர்தல்: அதிமுக 150000 வாக்குகள் முன்னிலை???


கடந்த 13.06.2012 அன்று புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று (15.06.2012) காலை 8 மணிக்கு தொடங்கியது.
முதல் சுற்றில் அதிமுக 4,287 வாக்குகள் பெற்றுள்ளது. தேமுதிக 1,054 வாக்குகள் பெற்றுள்ளது. அதிமுக 3233 வாக்குகள் முன்னிலையில் உள்ளது.

வியாழன், 14 ஜூன், 2012

திவ்யதர்ஷினி:எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும்.. 'டிடி' யின் அழகு ரகசியம்!

துறுதுறு பேச்சு, சிரிக்கும் கண்கள் என 14 வயதில் தொடங்கிய நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணியை இன்றைக்கும் அதே உற்சாகத்தோடு செய்து வருகிறார் டிடி என்று செல்லமாக அழைக்கப்படும் திவ்யதர்ஷினி.
விஜய் டிவியில் ஹோம் ஸ்வீட் ஹோம் நிகழ்ச்சியை திவ்யதர்ஷினி - தீபக் ஜோடிக்காகவே பார்க்கின்றவர்கள் பலர் இருக்கின்றனர். நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது வாழ்க்கையை தொடங்கியதைப் பற்றியும் தன் அழகின் ரகசியத்தை பராமரிப்பது குறித்தும் நம்மிடையே பகிர்ந்து கொண்டுள்ளார் படியுங்களேன்.
நிகழ்ச்சித் தொகுப்பாளர் பணி எனக்கு பிடித்தமானது என்பதால் அதை சந்தோஷமாக உற்சாகமாக செய்ய முடிகிறது. அக்கா பிரியதர்ஷினி டிவி நிகழ்ச்சித்தொகுப்பாளர் என்பதால் அதே வழியில் நானும் நிகழ்ச்சித் தொகுப்பாளராக தொடங்கிய பணியை தொடர்கின்றேன்.
எப்படி உங்களால மட்டும் இப்படி பேசிக்கிட்டே இருக்க முடியுது என்று நிறைய பேர் என்னிடம் இப்படித்தான் கேட்கிறார்கள். அதற்குக் காரணம் எல்லாம் எனக்கு சொல்ல தெரியல. ஆனா எப்பவுமே சிரிச்சுக்கிட்டே இருக்கணும்னு நினைப்பேன்.

பரமக்குடி தலித் இனப்படுகொலை-சட்ட விரோத மரணதண்டனை

டி.அருள் எழிலன்-

எனது கள்ளத்தோணி படப்பிடிப்புக்காக மரக்காணம் சென்றிருந்தோம். மாலையில் கிடைத்த ஒரு சின்ன ஓய்வில் அங்கிருந்த சிறுவர்களை அழைத்து ஆளுக்கொரு பாடலை பாடச் சொன்ன போது ஒரு சிறுவன் திருமாவளனைப் புகழ்ந்து ஒரு பாடலைப்பாடினார். நாங்கள் அனைவருமே அச்சிறுவனை கொண்டாடினோம். காரணம் அவன் திருமாவைப் புகழ்ந்து பாடினான் என்பதற்காக அல்ல. ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த தனக்காக திருமா போராடுவதாக நம்பும் அவனது நம்பிக்கைக்காக அவனை பாராட்டி விட்டு வந்தோம். எந்த விதத்திலும் அது எங்களுக்கு உறுத்தலாக இல்லை. கமுதி பள்ளச்சேரி தலித் காலனியில் உள்ள பழனிக்குமார் என்னும் சிறுவன் தன் தலைவர் என்று நம்பும் இமானுவேல் சேகரனைப் புகழ்ந்து சுவரில் கிறுக்கியதாகவும், தேவர் சாதியினரைத் திட்டி சுவரில் எழுதியதாகவும் சொல்லப்படுகிற நிலையில் கோவில் திருவிழா ஒன்றுக்கு சென்று வந்த பழனிக்குமார் என்ற அந்த சிறுவன் தேவர் சாதியினரால் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்படுகிறான். இந்த வழக்கை மர்ம நபர்கள் கொலை செய்தனர் என்று பதிவு செய்த போலீஸ் எதிரிகளைத் தேடுவதாக பாவனை செய்து கொண்டிருக்கிறது. இதெல்லாம் தனிக்கதை என்றாலும் . இந்தக் கொலைக்கும் நேற்று நடக்கவிருந்த இமானுவேல் சேகரன் நினைவு நாள் விழாவுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கிறது.

காமராஜ் திரைப்படம் ரியல் Hero வின் கதை


திரையில் தோன்றும் ரியல் ஹீரோ! 

 பஞ்ச் டையலாக் பேசி, பறந்து பறந்து சண்டைபோடும் எத்தனையோ ரீல் ஹீரோக்களை தமிழ் சினிமா சந்தித்திருக்கிறது. அவர்கள் எல்லோரும் திரையில் மட்டுமே ஹீரோக்களாக இருப்பவர்கள். ஆனால் விரைவில் ஒரு ரியல் ஹீரோ தமிழ்திரையில் புதுப்பொலிவுடன் தோன்ற இருக்கிறார்.
 வின் கதை 
ரமணா கம்யூனிகேஷன்ஸ் சார்பாக பெருந்தலைவர் காமராஜரின் வாழ்க்கை வரலாறு “காமராஜ்” என்ற பெயரில் திரைப்படமாக தயாரிக்கப்பட்டு 2004ம் ஆண்டு வெளியிடப்பட்டது. மக்களின் ஆதரவைப் பெற்ற அத்திரைப்படம், பத்திரிகைகள், ஊடகங்கள், சினிமா விமர்சனங்களின் ஏகோபித்த பாராட்டினையும், தமிழக அரசின் அந்த ஆண்டிற்கான சிறப்பு விருதினையும் பெற்றது.
இப்போது அத்திரைப்படம், நவீன டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் மெருகேற்றப்பட்டு, பல புதிய காட்சிகளோடு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது.

ஞானி: மீடியா என்ற கத்தி (அ) ரியாலிட்டி ஷோ…

இரண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் இந்த வாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. ஒன்று தமிழில் ஸீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிர்மலா பெரியசாமி வழங்கும் சொல்வதெல்லாம் உண்மை. இன்னொன்று ஹிந்தியில் செய்யப்பட்டு பல மொழிகளில் ஒலிமாற்றம் செய்யப்பட்டு ஸ்டார் டிவி சேனல்களில் ஒளிபரப்பாகும் நடிகர் அமீர்கான் வழங்கும் சத்யமேவ ஜெயதே. அசட்டுத்தனமான சீரியல்கள், அரை ஆபாசமான திரைப்படங்கள் இவற்றையே ஒளிபரப்பிக் கொண்டிருக்கும் போக்கிலிருந்து சற்று விலகி ரியாலிட்டி ஷோ எனப்படும் உண்மை நிகழ்ச்சிகளை தொலைக்காட்சிகள் ஒளிபரப்பத் தொடங்கியதற்கு இரு காரணங்கள் உண்டு.

நித்தியானந்தா:மதமா? சாதியா? சொத்தா? CD யா?

நித்தியானந்தா விவகாரம்: அசிங்கத்தில் விஞ்சி நிற்பது  மதமா? சாதியா? சொத்தா? சி.டி.யா?

ஆதினமாக முடி சூட்டப்படும் நித்தியானந்தா
இலஞ்சம் கொடுத்து அரசுப் பதவிகளைப் பெறுவதைப் போல, ஆன்மீகப் பதவிகளையும் பெற முடியும் என எடுத்துக் காட்டியிருக்கிறார், நித்தியானந்தா.  மதுரை ஆதீனத்தின் 292வது குரு மகாசந்நிதானமான அருணகிரிக்குக் கோடி ரூபாய் பணம் கொடுத்து, தங்கக் கிரீடம் கொடுத்து, வெள்ளி செங்கோல் கொடுத்து இன்னும் என்னவோவெல்லாம் கொடுத்து, நித்தியானந்தா அடைந்துள்ள இந்தப் ‘பெரும் பேற்றை’ வேறெப்படிச் சொல்ல முடியும்?  மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக நித்தியானந்தா நியமிக்கப்பட்டுள்ள இந்த ‘ஆன்மீகப் புரட்சி’யைக் கண்டு சாதாரண பக்தர்களைவிட, மற்ற பிற ஆதீனங்களும், மடங்களும், இந்து மதத்தின் காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் வானரப் படைகளும்தான் அதிர்ந்து நிற்கின்றன.

நித்தி மிகபெரும் சிறுவர் கடத்தல்காரன்? 50 சிறார்கள் அறையில் Baby Farm?

 50 Kids Rescued From Nithyanantha Ashram நித்தியானந்தா ஆசிரமத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 சிறார்கள்... யார்?



பெங்களூர்: நித்தியானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சோதனை நடத்திய அதிகாரிகளும், போலீஸாரும் அங்குள்ள அறை ஒன்றில் 50 சிறார்கள் அடைத்து  வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் அனைவரும் யார், எதற்காக மறைத்து வைக்கப்பட்டிருந்தனர் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.
நித்தியாந்தாவின் பிடதி ஆசிரமம் கர்நாடக அரசின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது. அங்கு சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது. அதிகாரிகள் பல அறைகளைப் பூட்டி சீல் வைத்து விட்டனர். நித்தி மிகபெரும் சிறுவர் கடத்தல் காரன்
அங்கு நடந்த சோதனையின்போது கஞ்சா பொட்டலங்கள், ஆணுறைகள், மது பாட்டில்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பக்தர்களுக்கு புனித நீர் என்ற பெயரில் கஞ்சாவைக் கலந்து கொடுப்பதாக ஏற்கனவே குற்றச்சாட்டு இருந்தது. அதை நிரூபிப்பது போல கஞ்சா பொட்டலங்கள் சிக்கியுள்ளன.
சில அறையில் வில், அம்பு, திரிசூலம், 5 அடி உயர சாமிசிலைகள், பஞ்சலோக பொருட்கள் இருந்தது. ஆசிரமத்தில் 3 கார்கள் நின்றது. அதன்மூலம் பணம், நகைகள் உள்பட சில பொருட்களை கடத்த முயற்சி நடந்ததாகவும் போலீசாரால் அது தடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மடத்தில் கார் மாயம் சகுனம் பார்த்த மதுரை ஆதீனம்


மதுரை: பெங்களூரூ புறப்பட்ட மதுரை ஆதீனத்தின் கார், அடுத்தடுத்து பழுதானதால், "சகுனம் சரியில்லை' என மடத்திற்கு திரும்ப தயாரானவரை, வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதே தொடர் சர்ச்சைகளுக்கு காரணம் என ஆதீன ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.
மதுரை ஆதீனம் அருணகிரி, கடந்த ஏப்.,23ல் தனது "பென்ஸ்'காரில் பெங்களூரூவுக்கு புறப்பட்டார். அவரை பின்தொடர்ந்து, இரு கார்களில் நித்யானந்தா சீடர்கள் சென்றனர். மதுரை காளவாசல் சிக்னல் அருகே வந்தபோது, ஆதீனத்தின் கார் பழுதானது. அதை டிரைவர் சரிசெய்து, கோச்சடையை தாண்டியபோது, மீண்டும் பழுதானது. இதனால் வெறுத்துப்போன ஆதீனம், "சகுனம் சரியில்லை. திரும்ப மடத்திற்கே வண்டியை விடு' என்றுக்கூறி, மடத்திற்கு செல்ல தயாரானார். ஆனால் சில நிமிடங்களிலேயே, நித்யானந்தா சீடர்கள் ஏற்பாட்டின்பேரில், வாடகை "இன்னோவா' கார் வந்தது. அதில் பெங்களூரூவுக்கு ஆதீனம் பயணமானார். அங்கு சென்று இருநாட்களில், இளைய ஆதீனமாக நித்யானந்தாவை அறிவித்தார். அதுமுதல், நித்யானந்தாவும், மதுரை ஆதீனமும் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கினர். இதற்கு ஆதீனம் புறப்பட்ட போது, "சகுனம்' சரியில்லாதது, அவரை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றதே காரணம் என ஆதரவாளர்கள் கருதுகின்றனர்.

அற்பர்களின் Carnival திருமணம் சிரஞ்சீவி Apollo Reddy 150 வகை உணவு

சிரஞ்சீவி மகன் ராம்சரண் திருமணம் :
150 வகை அறுசுவை உணவு
சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவுக்கும். அப்பல்லோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் சிரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனிக்கும் திருமணம் நிச்சயமானது.

ராம்சரண்தேஜா தெலுங்கில் முன்னணி நடிகராக உள்ளார். இவர் நடித்த மக தீரா படம் தமிழில் மாவீரன் என்ற பெயரில் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது.
ராம்சரண், உபசனா திருமணம் ஐதராபாத்தில் இன்று காலை நடந்தது. ஆடம்பரமாக இந்த திருமணம் நடத்தப்பட்டது. ஏற்கனவே திருமண சடங்குகள் கடந்த நான்கு நாட்களாக தொடர்ச்சியாக நடந்தது. நேற்று ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடந்தன.
ஐதராபாத் அருகே உள்ள மொய்னாபாத் கண்டிப்பேட்டையில் மண மகள் உபசனாவுக்கு சொந்தமான 120 ஏக்கர் பண்ணை வீடு உள்ளது. அங்கு திருமணத்துக்காக மணப்பந்தல் அமைத்து இருந்தனர். பந்தல் அருகே சினிமா ஆர்ட் டைரக்டர்களை வைத்து சிவன் கோவில் சமையல் கூடங்கள் பல கோடி செலவில் அமைக்கப்பட்டது.
மண மேடை மட்டும் 17 ஏக்கரில் அமைத்து இருந்தனர். மேடை முன்னால் 5 ஆயிரம் பேர் உட்கார நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன.ஒரே நேரத்தில் 2500 கார்களை நிறுத்த பார்க்கிங் வசதியும் செய்யப்பட்டு இருந்தது.

Pranab for President காங்கிரஸ் ஏன் பிடிவாதமாக இருக்கிறது?


 Why Congress Adamant On Pranab Mukherjee
டெல்லி: பிரணாப் முகர்ஜிதான் குடியரசுத் தலைவர் வேட்பாளர் என்பதில் காங்கிரஸ் ஏன் பிடிவாதமாக இருக்கிறது என்பது தெரியவில்லை. ஒரு வேளை இப்படி இருக்கலாமோ என்ற சந்தேகமும் ஒரு பக்கம் ஓடத் தொடங்கியிருக்கிறது.
காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை தற்போதுள்ள பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த தேர்தலுக்குப் பின்னர் மீண்டும் பிரதமர் பதவிக்கு வர மாட்டார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அடுத்த பிரதமர் ராகுல்காந்திதான் என்ற மனோபாவத்திற்கு காங்கிரஸார் வந்து விட்டனர். அவர் அரசியல் சதுரங்கத்தில் இன்னும் டிகிரியே வாங்கவில்லை என்ற போதிலும், ஏகப்பட்ட சொதப்பல்களைச் சந்தித்துள்ள போதிலும், தொடர் தோல்விகளின் நாயகனாக வலம் வருகின்ற போதிலும், அவரே எதிர்காலத் தலைவர் என்ற மன நிலையில்தான் காங்கிரஸார் உள்ளனர்.
இப்போதைக்கு ராகுல் காந்தி பிரதமர் பதவிக்கு உயருவதற்கு மன்மோகன் சிங் ரூபத்தில் சின்னதாக ஒரு உறுத்தல் உள்ளது. இருப்பினும் எப்போது வேண்டுமானாலும் ராகுலுக்காக பதவியை விட்டுத் தர மன்மோகன் சிங் தயாராகத்தான் இருக்கிறார். யாரும் போய் அவரிடம் கேட்க வேண்டிய அவசியம் கூட இல்லை. அவரே எப்போதடா இந்தப் பதவியிலிருந்து போவோம் என்ற மன நிலையில் இருக்கிறார்.

நட்பு காதலாக மாறும் தருணம் எப்போது?

How Turn Woman From Friend Lover
சிறுயதில் இருந்தே சிலர் நண்பர்களாக இருப்பார்கள். திடீரென்று ஒருநாள் இருவருக்கும் இடையே காதலாக மாறியிருக்கும். ஆனால் இருவரும் அதை வெளிப்படுத்திக் கொள்ள தயங்குவார்கள். எப்படி சொல்வது என்ன நினைப்பானோ என்று ஒருவித அச்ச உணர்வு ஏற்படும். நண்பர்களாக இருக்கும் இருவருக்குள் காதல் ஏற்படுவது இயல்புதான். அதை தகுந்த தருணம் பார்த்து தெரிவித்தால் வெற்றியாகும் என்கின்றனர் நிபுணர்கள். அவர்கள் கூறும் ஆலோசனைகளை படியுங்களேன்.
என்னதான் நண்பர்களாக இருந்தாலும் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் நெருக்கம் ஒரு ரசாயான மாற்றத்தை ஏற்படுத்தும். அடிக்கடி மிக அருகருகே இருக்க நேரிடுவதால் நட்பானது காதலாக கனியும். உடனே சட்டென்று காதலை வெளிப்படுத்த வேண்டாம். நேரம் பார்த்து எதிராளிக்கும் அந்த உணர்வு இருக்கிறதா என்பதை அறிந்து காதலை வெளிப்படுத்தலாம்.
நண்பர்களுக்கிடையே ஒத்த மனநிலை இருக்கும். நிறம், நடை, உடை, பாவனை, பிடித்த விஷயங்கள், கோட்பாடு, கொள்கை, சினிமா, வேலை என இருவருக்குமே ஒரே மாதிரியான எண்ண அலைகள் இருக்கும் இதனால் கூட நட்பானது காதலாக மாறிவிடும். ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள அக்கறை ஒருவருக்கொருவர் செய்துகொள்ளும் உதவி போன்றவை கூட மனதுக்குள் காதல் பூவை பூக்க வைக்கும்.
சந்தோசமோ, கவலையோ எதையும் உடனுக்குடன் பகிர்ந்து கொள்வது, வாழ்த்து சொல்வது, பரிசுப் பொருள் வழங்குவது, உடல்நலம் இல்லாத சமயம் உடனிருந்து கவனித்துக்கொள்வது போன்றவற்றால் காதல் அரும்பலாம்.

நித்தியின் King Size Bed & GYM சிஷ்யர்களும், சிஷ்யைகளும் இங்கே ஒன்றாக உடற்பயிற்சி செய்யும் காட்சி

நித்தியின் ‘ஸ்பெஷல் டச்’சில் திணறுகிறது மதுரை ஆதீனம்!

Viruvirupu
சமீப காலமாக, “என்னடா இது மதுரை(ஆதீனத்து)க்கு வந்த சோதனை” என்று தலையில் அடித்துக் கொண்டிருந்த பக்தர்கள் பலர், நித்தியானந்தாவின் கைதுக்குப் பின்னராவது, மதுரை ஆதீனம் பழைய நிலைக்கு திரும்புமா என்று எதிர்பார்க்க துவங்கியுள்ளனர்.
காரணம், நித்தியானந்தா அங்கே புகுந்தபின் அவரது ‘ஸ்பெஷல் டச்’சில் மதுரை ஆதீன மடம், ஷங்கர் படத்துக்கு ஆர்ட் டைரக்டர் போட்ட சினிமா செட் போல மாறி, அவர்களை திகைக்க வைத்திருந்தது.

நித்தி ஆஸ்ரமத்தில் கஞ்சா, மது பாட்டில், காண்டம்

 ஆஸ்ரமத்திலிருந்து பொருட்கள் வெளியே வீசப்பட்டுள்ளது. நித்யானந்தா போட்டோக்கள், சி.டி.,க்கள், பெண்கள் படத்துடன் சி.டி.,க்கள், தமிழ் வார இதழ்கள் கிடந்தன. சில இடங்களில் கஞ்சா, பீடி, மாத்திரைகள், காலி மதுபான பாட்டில்கள், காண்டம் ஆகியவையும் கிடந்தன.
கர்நாடக மாநிலம் பிடதி பிடதி நித்யானந்தா ஆஸ்ரமத்தில், சட்ட விரோத செயல்கள் நடப்பதாக புகார் வந்ததையடுத்து, கர்நாடகா முதல்வர் சதானந்தகவுடா, பிடதி ஆஸ்ரமத்தில் சோதனையிட்டு, "சீல்' வைக்கவும், நித்யானந்தா ஜாமினை ரத்து செய்து, கைது செய்யவும் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

சோனியா மறுப்பு! மன்மோகன் சிங்கை ஜனாதிபதி பதவிக்கு

 Cong Rejects Tmc Sp S Choice Pm As President
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்தலாம் என்ற மம்தா பானர்ஜி, முலாயம் சிங் யாதவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி நிராகரித்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன.
ராகுல் காந்தி அல்லது வேறு ஒருவரை பிரதமராக்க வசதியாக, சோனியா காந்தி தான் மன்மோகன் சிங்கின் பெயரை ஜனாதிபதி பதவிக்கு பரிந்துரைக்குமாறு மம்தாவிடம் சொன்னதாக தகவல்கள் பரவியுள்ளன. இந் நிலையில், இதை மறுக்கும் வகையில் மன்மோகன் சிங்கை ஜனாதிபதி பதவிக்கு நிறுத்த முடியாது என்று காங்கிரஸ் கூறியுள்ளது.

என்னத்தைச் சொல்ல... மதுரை ஆதீனம் விரக்தி!

 Madurai Aadheenam Upset Over Nithya
மதுரை: நித்தியானந்தா கைதாகி சிறைக்குப் போய் விட்டதால் மதுரை ஆதீனம் விரக்தியுடனும், அதிர்ச்சியுடனும் உள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது, என்னைத்தைச் சொல்ல, பொறுமையாக இருப்போம் என்று பதிலளித்துள்ளார். மேலும், இளைய ஆதீனமாக நியமிக்கப்பட்ட ஒருவரை நீக்கும் அதிகாரம் தனக்கு இருப்பதாகவும் அவர் பூடகமாக கூறியிருப்பது நித்தியானந்தாவை அவர் நீக்கும் முடிவை எடுக்கலாம் என்று மறைமுகமாக கூறுவதாக கருதப்படுகிறது.

இன்டர்நெட் புக்கிங் :விமானத்தில் வந்து விபச்சாரம்

மும்பையில் இருந்து கோவைக்கு அழகிகளை வரவழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இன்டர்நெட் மூலம் புக்கிங் செய்து அழகிகளை வரவழைத்து கோவையில் தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்யப்படுவதும் தெரிய வந்தது. 
 இதைத் தொடர்ந்து போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் விமான நிலையம் அருகில் உள்ள ஒரு லாட்ஜில் மும்பை அழகி இருப்பதாகவும் அங்கிருந்து அந்த அழகி தொழில் அதிபர்களுக்கு சப்ளை செய்யப்படுவதாகவும் பீளமேடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

ஒரு லட்சம் ஓட்டுக்கள்? குறைஞ்சா?அமைச்சர்களின் பதவிகள் கோவிந்தா

புதுக்கோட்டையில் 1 லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க வேண்டும் என்று அமைச்சர்களுக்கு உத்தரவு போட்டிருக்கிறார் முதல்வர். 1 லட்சத்தில் 1 ஓட்டு குறைந்தாலும், சில அமைச்சர்களின் பதவிகள் கோவிந்தா என்று அ.தி.மு.க. சர்க்கிள்களிலேயே கூறுகிறார்கள்.

Viruvirupu
தமிழக முதல்வர் ஜெயலலிதா மத்திய அரசுக்கு கடிதம் மேல் கடிதமாக கோரிக்கைகளுடன், வரைந்து தள்ளிக் கொண்டிருக்கிறார். கடைசியாக தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் இருந்து டில்லிக்கு போயுள்ள கோரிக்கைக் கடிதம், மேலதிக மண்ணெண்ணெய் வேண்டும் என்பதே.
அது பற்றி காமென்ட் அடித்திருக்கிறார் கருணாநிதி. “மத்திய அரசு எப்போதும் மண்ணெண்ணெய் அளவைக் குறைத்துக் கொடுக்கத்தான் பார்க்கும். நீங்கள்தான் சாமர்த்தியமாக செயல்பட்டு, மேலதிக சப்ளையை பெற்றுக்கொள்ள வேண்டும்” என்பதுதான் அவரது கூற்று.

ஓடிக் கொண்டிருந்த நித்தியானந்தா, சடன் பிரேக் அடித்து, சரணடைந்தார்!

கடந்த சில நாட்களாக ஓடிக்கொண்டிருந்த நித்தியானந்தா, இன்றிரவு ஓட வேண்டிய அவசியமி்ல்லை. அவரது பிடதி ஆசிரமம் அமைந்துள்ள ராம்நகர் மாவட்டத்தின் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் இன்று அவர் சரணடைந்தார். கர்நாடக போலீஸாரால் தேடப்பட்டு வந்த நித்தியானந்தா மதுரைக்கு வந்து சேர்வார் என்று கூறிக்கொண்டிருந்தார் மதுரை ஆதீனம்.
நல்ல வேளையாக அப்படியான கம்ப்ளிகேஷன் எதையும் ஏற்படுத்தாமல், தம்மீது வழக்கு பதிவான மாநிலத்திலேயே சரணடைந்திருக்கிறார் அவர்.
இது ஒரு அடிதடி மிரட்டல் வழக்குதான். நித்யானந்தாவின் அமெரிக்க சிஷ்யை ஆர்த்தி ராவ் என்பவர் கன்னட டிவி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நித்தியானந்தா தன்னை மயக்கி பலமுறை உடலுறவு வைத்துக் கொண்டதாக குற்றம் சாட்டியிருந்தார். அதில்தான் துவங்கியது பிரச்னை.

ரெஸ்ட் எடுங்க சுவாமி

புதன், 13 ஜூன், 2012

ஆண்டுக்கு ஒரு கார் மாற்றும் நித்தியானந்தா

nityananda quits favourite car before surrender ஹைடெக் சாமியார் நித்யானந்தாவின் கார்: சிறப்பு பார்வை

பத்திரிக்கைகளின் பரபரப்பு பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்து வரும் நித்யானந்தா எந்த விஷயத்திலும் ஹைடெக் சமாச்சாரங்களைத்தான் விரும்புவார். மைக் முதல் லேப்டாப் வரை ஹைடெக் சாமியாராக வலம் வந்த நித்யானந்தா கார் விஷயத்திலும் ஹைடெக் அம்சங்களை ஃபோர்டு எண்டெவர் பிரிமியம் எஸ்யூவி காரை பயன்படுத்தி வருகிறார்.
மதுரை ஆதின மடத்திற்கு சமீபத்தில் வந்திருந்தபோது கூட கேஏ04 எம்என் 4444 (KA 04 MN 4444) என்ற பதிவு எண் கொண்ட இந்த ஃபோர்டு எண்டெவர் காரில்தான் வந்திருந்தார். பிரிமியம் எஸ்யூவியான ஃபோர்டு எண்டெவர் பாதுகாப்பிலும் சரி, இடவசதியிலும் நிறைவான கார். இந்த காரின் முக்கிய அம்சங்களை காணலாம்.
பிரிமியம் எஸ்யூவி கார்கள் இடவசதியில் சிறப்பாக இருந்தாலும், இதில் ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மிக விசாலமான இடவசதியை கொண்டுள்ளது.  முன் வரிசையும், இரண்டாவது வரிசை இருக்கைகளும் அதிக இடவசதி கொண்டதாக இருக்கிறது.

முகத்திரையை நீக்க மறுத்த சவுதி பெண்களை ஏர்போர்ட்டோடு திருப்பியனுப்பிய பிரான்ஸ்

பாரீஸ்: முகத்திரையை நீக்க மறுத்த 3 சவுதி பெண்களை பிரான்ஸுக்குள் நுழைய அனுமதி மறுத்து அவர்களை திருப்பியனுப்பியுள்ளனர் என்று கூறப்படுகிறது.
கத்தார், தோஹாவில் இருந்து பர்தா அணிந்து முகத்திரையுடன் 3 சவுதி பெண்கள் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள சார்லஸ் டீ கால் விமான நிலையத்தில் வந்திறங்கினர். அங்குள்ள அதிகாரிகள் அந்த பெண்களை முகத்திரையை நீக்குமாறு கூறியுள்ளனர். ஆனால் அந்த பெண்கள் தங்கள் முகத்திரை நீக்க மறுத்துவிட்டனர். இதையடுத்து அப்பெண்கள் பிரான்ஸுக்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. மேலும் அவர்கள் உடனே தோஹாவுக்கு திருப்பியனுப்பி வைக்கப்பட்டனர் என்று கூறப்படுகிறது.
ஐரோப்பா கண்டத்தில் உள்ள நாடுகளில் பிரான்சிஸ் தான் முதன்முதலாக முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. பிரான்ஸை தொடர்ந்து பெல்ஜியம் மற்றும் ஹாலந்திலும் முகத்திரை அணிய தடை விதிக்கப்பட்டது.

INS விக்ரமாதித்தா'வில் ஆட்டோமேடிக் தோசை மெஷின்

பெங்களூரு :இந்திய கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலான ஐ.என்.எஸ்., விக்ரமாதித்தாவில், மின்னல் வேகத்தில் இட்லி, தோசை தயார் செய்யும், "ஆட்டோமேடிக்' மெஷின் பொருத்தப்பட்டுள்ளது. இதில், ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்ய முடியும்.
மைசூரை மையமாகக் கொண்ட மத்திய உணவு தொழில்நுட்பம் மற்றும் ஆய்வு மையத்தில், பல்வேறு உணவு தயார் செய்யும் மெஷின்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் பெங்களூருவைச் சேர்ந்த, எஸ்.கே., என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் இணைந்து, ஒரு மணி நேரத்தில், 1,000 இட்லி, 400 தோசை தயார் செய்யும் மெஷின்களை தயாரித்துள்ளனர்.

Fall of Fake Niththi


ஆந்திராவில் ஜெகனுக்கு 15 சீட் கிடைக்கும்: கருத்துக்கணிப்பு ஒட்டு மொத்த ரெட்டி சமூகமும் ஜெகனுக்கே ஓட்டு


 Ysr Congress May Get 15 Seats Andhra By Poll Exit Poll
ஹைதராபாத்: ஆந்திராவில் 18 சட்டசபைத் தொகுதிகளுக்கு நடந்த இடைத் தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 15 இடங்களை வெல்லும்.அதேபோல நெல்லூர் எம்.பிதொகுதி இடைத் தேர்தலிலும் ஜெகனுக்கே ஜெயம் கிடைக்கும் என்றும் எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ளன. மேலும் ஒட்டுமொத்த ரெட்டி சமூகமும் ஜெகன் கட்சிக்கே வாக்களித்துள்ளதாகவும் கருத்துக் கணிப்பு முடிவுகள் கூறுகின்றன.
ஆந்திராவில் நேற்று 18 சட்டசபைத் தொகுதிகளுக்கும், நெல்லூர் லோக்சபா தொகுதிக்கும் இடைத் தேர்தல் நடந்தது. இதில் ஒரு சட்டசபைத் தொகுதி தெலுங்கானா பகுதியில் உள்ளது. மற்ற தொகுதிகள் ஆந்திராவின் பிற பகுதிகளில் உள்ளன.ஜெகனுக்கு
ஆந்திராவில்நடந்த இடைத் தேர்தல்தான் அனைவரது எதிர்பார்ப்புகளையும் கவர்ந்துள்ளது. காரணம், ஜெகன் மோகன் ரெட்டியால் இங்கு காங்கிரஸ் பெரும் அடியை வாங்கப் போகிறது என்ற தகவலால்.
ஆந்திராவில் தேர்தலுக்குப் பின்னர் நடந்த எக்சிட் போல் கருத்துக் கணிப்பு முடிவுகள் காங்கிரஸ் கட்சியின் ஆந்திர அழிவுக்கு கட்டியம் கூறுவது போல அமைந்துள்ளது.

ஜனாதிபதி தேர்வில் திடீர் திருப்பம் மன்மோகன் சிங் முந்துகிறார்

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் தேர்வில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை ஏற்க முலாயம் சிங் மற்றும் மம்தா பானர்ஜி ஆகியோர் மறுப்பு தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்துல் கலாம், மன்மோகன் சிங், சோம்நாத் சட்டர்ஜி ஆகியோரில் ஒருவரை ஆதரிக்க இருவரும் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாட்டின் புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 19ம் தேதி நடக்கிறது. இதற்காக வேட்பாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டுள்ளன. தேர்தல் பணி என்றாலே எப்போதும் முன்னிலையில் இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா வழக்கம் போல் இதிலும் வேகம் காட்டினார். பிஜூ ஜனதாதளத்துடன் இணைந்து, லோக்சபா முன்னாள் சபாநாயகர் பி.ஏ. சங்மாவை ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கப்போவதாக அவர் அறிவித்தார்.

திரைப்படத்தை ரசிப்பதற்கு ‘பயிற்சி’ வேண்டும்! வழக்கு எண் 18/9 இரசிக்கப்பட்டதா?