சென்னை : ஜவுளி மில்களில் வேலை, தங்குமிடம், உணவு அளித்து மொத்தமாக ஊதியம் வழங்கும் ‘சுமங்கலி’ திட்டம் பெண்களை கொத்தடிமையாக்குவதாக இந்தியாவில் இருந்து ஜவுளி இறக்குமதி செய்யும் மேற்கத்திய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழகத்தில் ஏராளமான ஜவுளி மில்கள் உள்ளன. இந்திய ஆடை மற்றும் ஜவுளி ஏற்றுமதியில் தமிழகம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய ஏற்றுமதியில் 80 சதவீதத்தை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பெறுகின்றன. இந்நிலையில், தமிழக ஜவுளி மில்களில் ‘சுமங்கலி’ என்ற பெயரில் பெண்களுக்கான திட்டம் செயல்படுகிறது.
ஜப்பானில் இருந்து 90களில் அறியப்பட்ட இந்த திட்டத்தின்கீழ் 18&21 வயது பெண்களுக்கு வேலை அளிக்கப்படுகிறது. தங்குமிடம், உணவு அளிப்பதுடன் 3 ஆண்டு ஒப்பந்த காலம் முடியும்போது ரூ.36,000 முதல் ஸி56,000 வரை ஊதியம் அளிக்கப்படும். இந்த திட்டத்தில் 3 ஆண்டுகள் வேலையில் இருந்து வெளியேற முடியாது என்பதால் அதை கொத்தடிமையாக நடத்துவதாக அமெரிக்க, ஐரோப்பிய சில்லறை ஜவுளி மற்றும் ஆடை விற்பனை நிறுவனங்கள் கருதுகின்றன.