சனி, 1 நவம்பர், 2014

கர்நாடகாவில் மாணவியை பலாத்காரம் செய்து வாயில் விஷம் ஊற்றி கொலை!

A Class 8 student died at a private hospital in Manipal on Friday, two days after she was kidnapped and allegedly raped by unidentified miscreants near Thirthahalli in Shivamogga district.
It is learnt that the rapists had poisoned Nandita, a resident of Balebailu near Thirthahalli, after allegedly gang-raping her at Anandagiri hills. The victim was brought to Manipal for emergency treatment on October 30.
தீர்த்தஹள்ளி அருகே பள்ளி மாணவியை கற்பழித்து அவரது வாயில் விஷம் ஊற்றி மர்மநபர்கள் கொலை செய்த பயங்கர சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள். மயங்கி கிடந்த பள்ளி மாணவி சிமோகா மாவட்டம் தீர்த்தஹள்ளி நகரை சேர்ந்த 16 வயது இளம்பெண், அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வந்தாள். இந்த நிலையில், கடந்த 29–ந் தேதி பள்ளிக்கு சென்ற மாணவி அதிகநேரம் ஆனபோதிலும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் அவளை அக்கம்பக்கத்தில் உள்ள உறவினர் வீடுகளில் தேடிப்பார்த்தனர். ஆனால் எங்கு தேடியும் அவள் கிடைக்கவில்லை. இந்த நிலையில், ‘உங்களது மகள் தீர்த்தஹள்ளி நகரையொட்டி உள்ள ஆனந்தகிரி மலை பகுதியில் மயங்கிய நிலையில் கிடக்கிறாள்’ என்று மாணவியின் பெற்றோருக்கு அன்று மாலை தகவல் வந்தது. இதையடுத்து, அவர்கள் பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடோடி சென்றனர். அங்கு மயங்கிய நிலையில் கிடந்த மாணவியை பார்த்து பெற்றோர் கதறி அழுதனர்.

நைஜீரியா: கடத்திய 219 மாணவிகளுக்கும் திருமணம் செய்துவிட்டதாக போகோ ஹரம் தீவிரவாதிகள் தெரிவிப்பு

நைஜீரியாவின் போர்னோ மாகாணத்தில் சிபோக் என்ற இடத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 14–ந்தேதி பள்ளி விடுதியில் இருந்து 276 மாணவிகளை கடத்திச் சென்ற போகோ ஹரம் தீவிரவாதிகள் மறைவிடத்தில் சிறை வைத்தனர். தீவிரவாதிகளின் பிடியில் இருந்து தப்பிவந்தவர்கள் போக மீதமுள்ள 219 மாணவிகளை 'செக்ஸ்' அடிமைகளாக விற்கப் போவதாக அந்த அமைப்பினர் மிரட்டல் விடுத்தனர். இது உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. நைஜீரிய ராணுவத்தால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. அதை தொடர்ந்து அவர்களை மீட்க அமெரிக்கா ராணுவத்தை அனுப்பியுள்ளது. இந்நிலையில், நைஜீரிய அரசு கடந்த வாரம் தீவிரவாதிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதாகவும், போர் நிறுத்தத்துக்கு போகோ ஹரம் இயக்கத்தினர் ஒப்புக் கொண்டுள்ளதாகவும், கடத்தி வைத்துள்ள 219 மாணவிகளை விடுதலை செய்ய அவர்கள் சம்மதம் தெரிவித்து விட்டதாகவும் சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

தொழிலாளர்களைக் கைவிட்டது நோக்கியாவா? ஏராளமான சலுகைகளை நோக்கியாவுக்கு அளித்த தமிழக அரசு ஏன் அதை கையகப்படுத்தவில்லை ?

நோக்கியா ஆலை | கோப்புப் படம்: பிஜோய் கோஷ்
நோக்கியா ஆலை | கோப்புப் படம்: பிஜோய் கோஷ்
உலகின் மிகப் பெரிய ஜனநாயகம் தன் மக்களை இப்படியா கைவிடுவது?
நோக்கியன் விர்டா என்ற நதி, பின்லாந்து மக்களின் பேச்சு வழக்கில் நோக்கியா எனச் சுருங்கிவிட்டது. அந்த நதியின் கரையில் 1868-ம் ஆண்டு அமைந்த காகிதக் கூழ் தயாரிக்கும் தொழிற்சாலைக்கு, ஐடெஸ்டெம் என்கிற உரிமையாளர் நோக்கியா எனப் பெயரிட்டுள்ளார். அடுத்தடுத்து வளர்ந்த நோக்கியா நிறுவனம், 1980-களின் ஆரம்பத்தில் உருவாக்கப்பட்ட செல்பேசிக்கும் அந்தப் பெயரையே சூட்டி, செல்பேசி உலகில் ஏக சக்ரவர்த்தியாக வளர்ச்சியும் பெற்றது. உலகில் 10 தொழிற்சாலைகள் மூலம் செய்யப்படும் உற்பத்தியைக் கொண்டு, சந்தையில் பெரும் பகுதியைத் தன் கையில் வைத்திருந்த நிறுவனம்தான் நோக்கியா.

கேரளாவில் முத்தத் திருவிழா திட்டமிட்டபடி நாளை நடைபெறும்:


இந்திய கலாச்சாரத்தை இளம் தலைமுறையினர் சீரழித்து வருவதாக குற்றம்சாட்டும் ஒரு அரசியல் கட்சியைச்  BJP சேர்ந்த தொண்டர்கள் சமீபத்தில் கேரள மாநிலம், கோழிக்கோட்டில் உள்ள ஒரு புதிய ஓட்டலை அடித்து, உடைத்து, துவம்சப்படுத்தினர். அந்த ஓட்டலில் இளம்வயது ஆண்களும், பெண்களும் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்டதால், நாங்கள் தலையிட நேர்ந்தது என தாக்குதல் நடத்தியவர்கள் தெரிவித்தனர். இந்த காட்சிகளை தொலைக்காட்சி சேனல்கள்  கடந்த 23-ம் தேதி ஒளிபரப்பியதையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது. கலாச்சார பாதுகாவலர்கள் என்ற போர்வையில் சட்டம்-ஒழுங்கை சிலர் தங்களது கையில் எடுத்துக் கொண்டு வன்முறை வெறியாட்டங்களில் ஈடுபடுவதை ஆதரித்தும், கண்டித்தும் கேரள மக்களிடையே பரபரப்பான பட்டிமன்றங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வரும் நவம்பர் 2-ம் தேதி, மாலை 5 மணியளவில் கொச்சி நகரில் உள்ள கடற்கரையோர உணவகம் ஒன்றின் பொதுவெளியில் ஆணோடு பெண்கள் கட்டியணைத்து, முத்தமிடும் திருவிழாவுக்கு ‘ஃபேஸ்புக்’ மூலம் ஒரு அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவராக ஈவிகேஎஸ் இளங்கோவன் நியமனம்!

சென்னை: தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்த ஞானதேசிகன் பதவி விலகியதை அடுத்து, புதிய தலைவராக ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நியமித்து, காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி உத்தரவிட்டுள்ளார்.  இதனை தமிழக காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பார்வையாளர் முகுல் வாஸ்னிக் சனிக்கிழமை காலை அறிவித்தார். 65 வயதாகும் இளங்கோவன் ஏற்கெனவே தமிழக காங்கிரஸ் தலைவராகவும் மத்திய அமைச்சராகவும் பதவி வகித்தவர்.
tamil.oneindia.com/

யுவன் சங்கர் ராஜா திருமணம் மணமகள் கீழக்கரையை சேர்ந்த ஜபருன்னிஸா!

சென்னை: யுவன் சங்கர் ராஜா 3வது திருமணம்
செய்கிறார்.இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா கடந்த 2005ம் ஆண்டு லண்டனை சேர்ந்த பாடகி சுஜாவை மணந்தார். ஒன்றிரண்டு வருடத்திலேயே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இருவரும் விவாகரத்து பெற்றனர். பிறகு ஷில்பா மோகன் என்பவரை மணந்தார். அவருடனும் பிரச்னை ஏற்பட்டு பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் யுவன் இஸ்லாம் மதத்துக்கு மாறினார். தினமும் 5 வேளை தொழுவதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் யுவனுக்கும் ராமநாதபுரம் கீழக்கரையை சேர்ந்த ஜபருன்னிஸாவுக்கும் நட்பு ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தனர். நேற்று முன் தினம் இருவருக்கும் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்தது. நேற்று யுவன் தாயாரின் நினைவு தினம். இதற்காக குடும்பத்தினர் சொந்த ஊருக்கு சென்று சாமிகும்பிட்டனர். அங்கிருந்த யுவன் சகோதரர் கார்த்திக் ராஜாவிடம் இதுபற்றி தொலைபேசியில் கேட்டபோது,‘யுவனின் நிச்சயதார்த்தம் பற்றி உறுதியாக தெரியவில்லை. ஆனால் அவருக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக எனக்கும் தகவல் வந்தது என்றார்.யுவன், ஜபருன்னிஸா திருமணம் வரும் டிசம்பர் மாதம் துபாயில் நடக்க உள்ளது.

.tamilmurasu.org

இலவசமாக வெங்காயத்தை அறுவடை செய்து எடுத்துகொள்ளுமாறு தேனீ விவசாயிகள் அறிவிப்பு!

தேனி,அக்.31 (டி.என்.எஸ்) தேனி அருகே உள்ளது அரைப்படித்தேவன்பட்டி கிராமம். இங்குள்ள விவசாயிகள் வெங்காயம், தக்காளி போன்ற காய்கறி பயிர்களை சாகுபடி செய்துள்ளனர். தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையினால் வயல்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் வெங்காயத்தை அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.தண்ணீர் தொடர்ந்து தேங்கியதன் காரணமாக வெங்காயம் அழுகி வருகிறது. மேலும் கஷ்டப்பட்டு அறுவடை செய்யப்படும் வெங்காயத்திற்கு போதிய விலையும் கிடைக்கவில்லை. மார்க்கெட்டில் வியாபாரிகள் 3 ரூபாய்க்கு கேட்கிறார்கள். தரமான வெங்காயமாக இருந்தால் 5 ரூபாய் விலை போகிறது. இதனால் அறுவடை கூலி, ஏற்று இறக்கு கூலி கூட கையில் இருந்துதான் தர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த விவசாயிகள் வெங்காயத்தை பொதுமக்கள் வயலுக்கு வந்து இலவசமாக எடுத்து செல்லலாம் என அறிவித்து விட்டனர்.

புற்றுநோய் மருந்து விலையேற்றம் ! Cancer drug price goes up from Rs 8,000 to Rs 1.08 lakh

government decision to decontrol prices of 108 drugs -- used to treat tuberculosis, AIDS, diabetes and heart ailments -- has jacked up their prices. In some cases, prices have seen an unbelievable rise.
The price of Glivec, an anti-cancer tablet, for example, has risen from Rs 8,500 to Rs 1.08 lakh.
Plavix, used to treat blood pressure and heart ailments, will cost Rs 1,615, against the earlier Rs 147. An anti-rabi injection, Kamrab, priced at Rs 2,670, will now cost Rs 7,000.
In a circular issued before Prime Minister Narendra Modi's visit to the US, the government asked the National Pharmaceutical Pricing Authority (NPPA), an autonomous body, to withdraw its May 2014 guidelines on drug price control.
வாஷிங்டன்: 'ரத்த புற்றுநோய்க்கான மருந்தின் விலையை உயர்த்தும்படி, இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம்' என, அமெரிக்காவுக்கு, அங்குள்ள தன்னார்வ அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.அமெரிக்காவைச் சேர்ந்த, பி.எம்.எஸ்., என்ற மருந்து நிறுவனம், ரத்த புற்றுநோய்க்கான, 'டசாடினிப்' என்ற மருந்தை தயாரிக்கிறது. அமெரிக்காவில், சமீபத்தில் இந்த மருந்தின் விலையை அந்த நிறுவனம், மூன்று மடங்கு அதிகரித்தது.இதையடுத்து, இந்தியாவிலும் இந்த மருத்தின் விலையை அதிகரிக்க அனுமதிக்கும்படி, அந்த நாட்டின் வர்த்தக பிரதிநிதி குழுவிடம், அந்த நிறுவனம் வலியுறுத்தியுள்ளது.இதையடுத்து, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை பெறுவதற்கு உதவுவதற்காக செயல்படும், யு.ஏ.சி.டி., என்ற தன்னார்வ அமைப்பு, அமெரிக்க அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.அதில், 'ரத்த புற்றுநோய்க்கான மருந்தின் விலையை அதிகரிக்கும்படி, இந்தியாவுக்கு எந்தவிதமான நெருக்கடியும் கொடுக்க வேண்டாம். இந்தியாவில் ஏராளமான ஏழை மக்கள், இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். விலையை உயர்த்தினால், அவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்' என, தெரிவித்துள்ளது. dinamalar.com

கேரளாவில் BARகள் 250 மூடப்பட்டது இன்னும் 69 பார்கள் மட்டுமே உள்ளது ,அவையும் விரைவில் மூடப்படும்? கள்ளுக்கு தடையில்லை!

திருவனந்தபுரம்: கேரளாவில் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி நேற்று இரவோடு இரவாக 250 பார்கள் மூடப்பட்டன. இதனால் இன்று முதல் கேரளாவில் 62 பார்கள் மட்டுமே செயல்படும்.கேரளாவில் வரும் 10 ஆண்டுகளில் படிப்படியாக பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் உம்மன்சாண்டி ஏற்கனவே அறிவித்திருந்தார். இதன்படி மதுவிலக்கை அமல்படுத்தும் நடவடிக்கையில் கேரள அரசு தீவிரம்காட்டி வருகிறது. கேரளாவில் மொத்தம் 5 ஸ்டார் ஓட்டல்களில் செயல்படும் பார்கள் உள்பட 730 பார்களும், 389 அரசு மதுபான கடைகளும் உள்ளன. இந்நிலையில் கடந்த ஏப்ரல் 1ம் தேதி முதல் தரம் இல்லாத 418 பார்கள் மூடப்பட்டன. இதையடுத்து 312 பார்கள் மட்டுமே இயங்கி வந்தன. இவற்றில் 5 ஸ்டார் ஓட்டல்களில் செயல்படும் 21 பார்களை தவிர மற்ற பார்களை மூட கடந்த இரு மாதங்களுக்கு முன் கேரள அரசு உத்தரவிட்டது.

ஸ்ரீ பெரும்புதூர் நோக்கியா தொழிற்சாலை இன்றுமுதல் மூடப்படுகிறது!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் நோக்கியா செல்போன் தொழிற்சாலை இயங்கி வந்தது. உலக அளவில் மிகப்பெரிய செல்போன் தொழிற்சாலைகளில் ஒன்றான இங்கு நேரடியாக 8 ஆயிரம் பேரும், மறைமுகமாக 25 ஆயிரம் பேரும் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர். இந்த நோக்கியா தொழிற்சாலை கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு வழக்கில் சிக்கியது. இதைத்தொடர்ந்து இந்த ஆலையை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு விற்க நோக்கியா நிறுவனம் முடிவு செய்தது. இது தொடர்பாக இந்த ஆண்டு தொடக்கத்தில் ஒப்பந்தம் போடப்பட்டது. தமழக அரசின் பல சலுகைகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இத்தொழிற்சாலையை தமிழக அரசே ஏற்று நடத்தவேண்டும் என்று கலைஞர் வேண்டுகோள் விடுத்திருந்தார்

சகாயம் விசாரணைக்கு தகவல் சேகரிக்க சமுக ஆர்வலர்கள் குழு அமைக்கபடுகிறது! தமிழக அரசு sabotage பண்ணுகிறதா?

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கிரானைட் மற்றும் கனிமவளம் கொள்ளை குறித்து விசாரிக்க உள்ள, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்திற்கு, தேவையான ஆதாரங்களை சேகரித்து வழங்க, சமூக ஆர்வலர்கள் ஒன்று இணைந்து, சகாயம் ஆய்வுக்குழு ஆதரவு அமைப்பை உருவாக்கி உள்ளனர்.தமிழகத்தில், கிரானைட் மற்றும் கனிமவளம் முறைகேடு குறித்து விசாரிக்க, சென்னை உயர் நீதிமன்றம், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சகாயத்தை, சிறப்பு அதிகாரியாக நியமித்தது. தனக்கு உதவியாளர்களை நியமிக்கும்படி, அரசுக்கு, சகாயம் கடிதம் அனுப்பினார். அரசு கண்டுகொள்ளவில்லை.

சினிமா நடிகர்களின் நிஜ முகம் வெறும் பொய்,அசிங்கம்! திரையில் தெரிவதற்கும் நிஜத்துக்கும் சம்பந்தமே இல்லை! எவனும் விதிவிலக்கில்லை.

ஒரு திரைப்பட தயாரிப்பு உதவியாளரின் குமுறல்கள் : சினிமான்னா ஜாலின்னு எவன் சொன்னான் என்று ஆவேசத்துடன் அவர் கூறியவற்றை நிதானமாக தொகுத்து தருகிறோம்.
வெளிப்புறப் படப்பிடிப்பு ஒன்றில் புரொடக்சன் பாய் எனப்படும் தயாரிப்பு உதவியாளரின் ஒரு நாள் வேலை என்ன?
“சன்ரைஸ்” கால்ஷீட் அல்லது 9 மணி காலஷீட் என்றால் விடியற்காலை 3.30 மணிக்கு எழுந்திருக்கணும். டீ மாஸ்டரை எழுப்பி, முதலில் தங்களுக்கு டீ போட்டு வாங்கி குடித்து விட்டு படப்பிடிப்பு குழுவினருக்கு தேநீர் தயாரிக்க வேண்டும்.
5 ஸ்டார் ஹோட்டல், 3 ஸ்டார் ஹோட்டல், சாதாரண லாட்ஜ், டார்மிட்டரி என தரவாரியாக பிரிக்கப்பட்டு தங்கியிருக்கும் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஏற்கனவே சொல்லப்பட்ட முறையில் டீயை பிளாஸ்குகளில் நிரப்பி வகை பிரித்து அனுப்புவாங்க. ஸ்டார் ஹோட்டலில் தங்கி இருப்பவங்களுக்கு அங்கேயே காப்பி கிடைச்சாலும், அதை குடிச்சாலும் குடிக்கலைன்னாலும், இங்கிருந்தும் காபி கொண்டு போய் சேர்க்கணும். கதவைத் தட்டி கொடுத்து விட்டு வர வேண்டும். எழுந்து வரவில்லை என்றாலும், வெளியில் வைத்து விட்டு வர வேண்டும்.
வேக்-அப் கால் வசதி இல்லாத இடங்களில் தங்கியிருப்பவர்களுக்கு டீ எடுத்து வந்திருக்கேன்னு சொல்லி எழுப்பி விடணும்,. அப்படியே வெச்சிட்டு போய்ட்டா, “என்னா திமிராடா, வைச்சிட்டு போயிட்டியா”ன்னு திட்டு விழும்.
 
முகம் கழுவ பிஸ்லரி வாட்டர், குடிக்க இளநீர், ஆரஞ்சு ஜூஸ், சாப்பிட எண்ணெய் இல்லாம பொரிச்ச கிரில்ட் சிக்கன், தண்ணி அடிக்கிறதுன்னா மினிமம் 3 ஆயிரம் ரூபாய் பாட்டில், பாட்டிலே வெல்வெட் துணி சுத்தியிருக்கும். இந்த மாதிரி வாழ்க்கையில் இருப்பவனுங்க சராசரி சிந்தனையில் இருக்க மாட்டான் என்பது உண்மைதான். ரேசன் அரிசி சோறு சாப்பிட்டு விட்டு கட்டாந்தரையில் தூங்கிற மக்களைக் கொண்ட நாட்டில், உள்ளே போட்டிருக்கிற ஜட்டியிலிருந்து தலையில தடவுற எண்ணெய் வரைக்கும் இம்போர்டட்தான். அதையும் சினிமா செலவில் வாங்கி விட்டு அதை தூக்கிக் கொண்டு போறவன்தான் இந்த சினிமா நடிகருங்க!

உலக நாயகன் கமலஹாசன் ஆளவந்தான் படம் எடுத்து கலைப்புலி தாணுவை நோகடித்த கதை எல்லோருக்கும் தெரியும். அமெரிக்காவில் இருந்து மேக்அப் மேன் வரவழைத்தது, படப்பிடிப்பு காலம் முழுவதற்கு தாஜ் ஹோட்டலில் ரூம் போட்டது, அதுக்கு எக்ஸ்பர்ட், இதுக்கு இம்போர்ட் என்று அவரை ஓட்டாண்டியாக்கியது இவை தொடர்பாக அவர் ஊடகங்களுக்கு கொடுத்த பேட்டிகளை வாசகர்களே தேடிப் படித்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். எனினும் தாணு போன்றவர்களே இப்படிப்பட்ட கோமாளிகளை வைத்துத்தான் கோடிசுவர்களாக ஆனாவர்கள்.

மோடி :பட்டேல் பிறந்த நாளில் சீக்கியர் படுகொலை இதயத்தில் ஈட்டிபாச்சியது!

புதுடில்லி: ''தேச ஒற்றுமைக்காக பாடுபட்ட, இந்தியாவின் இரும்பு மனிதர், சர்தார் வல்லபாய் படேலின் பிறந்த நாளில், 30 ஆண்டுகளுக்கு முன், நாட்டின் ஒற்றுமையையே உலுக்கும் விதத்தில், சீக்கியர் படுகொலை சம்பவம் நடைபெற்றது. அது, குறிப்பிட்ட அந்த மதத்தினர் மனதில் மட்டும் காயத்தை ஏற்படுத்தவில்லை; பல்லாயிரம் ஆண்டு பாரம்பரியம் கொண்ட, நம் நாட்டின் இருதயத்தில், ஈட்டியை பாய்ச்சியது போல் ஆகிவிட்டது,'' என, பிரதமர்
நரேந்திர மோடி பேசினார்.  அதே போன்றுதான் குஜராத்தில் நடந்த இனக்கலவரமும் இதயத்தில் பாய்ந்த ஈட்டி போல அல்லாமல்..பேக்கரி எரிப்பில் கொல்லப்பட்டவர்களை பற்றியும்..ஓர் மதத்தை சார்ந்தவர்களை குறிவைத்து கர்ப்பிணி பெண் என்றுகூட பாராமல் கொல்லப்பட்டதையும் நிச்சயம் நினைவு கூறுவார்கள் வருங்கால பிரதமராக யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. காலம் மாறினாலும் பட்ட காயங்கள் மாறாது வடுவாக ரணமாக வலிக்கவே செய்யும். படேலுக்கு பிரம்மாண்டமான சிலையை வைப்பதை யாரும் விமர்சிக்காமல் இருக்க இதுபோன்ற பேச்சுக்கள் துணை நிற்கும் என்று எண்ணி பேசிய பேச்சு இது. ஈட்டியாய் குத்தப்போகும் செலவு (3000 கோடி)இந்த பிரம்மாண்டமான சிலைக்கு. அதனால்தான் இப்போதிருந்தே பாசத்தை கொட்டுகின்றார் பிரதமர்..வேஷக்கார பிள்ளை..ரோஷமில்லை இது..வேஷம்..

வெள்ளி, 31 அக்டோபர், 2014

காட்சிக்கு தேவை என்று ஆடைகுறைப்பு? பாவம் சுனைனா ?

சென்னை: பாவாடை கட்டி குளிக்க மறுத்து விவாதம்  செய்தார் சுனேனா.விஜய் சேதுபதி, கிருஷ்ணா, சுனேனா நடிக்கும் படம் ‘வன்மம். இதுபற்றி இயக்குனர் ஜெய்கிருஷ்ணா கூறியது:ஒருவர் பேசும்பேச்சு மனிதனை சந்தோஷப்படுத்தும் அல்லது காயப்படுத்தும். இருநண்பர்களிடையே எழும் பிரச்னையில் ஒருவர் சொல்லும் கடுமையான ஒரு வார்த்தை அந்த நட்பையே முறித்துவிடுகிறது. அதன்பிறகு அவர்கள் வாழ்க்கை எப்படி திசைமாறுகிறது என்பதே கதை. விஜய்சேதுபதிக்கு ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரம், கிருஷ்ணாவுக்கு காதலுடன்கூடிய ஜாலியான கதாபாத்திரம். 2 ஹீரோக்கள் இருந்தாலும் கிருஷ்ணாவுக்கு மட்டும்தான் ஜோடி. சுனேனா நடிக்கிறார். கிராமப்புறங்களில் குளம், கண்மாயில் குளிக்கும் பெண்கள் பாவாடையை மார்புவரை கட்டிக்கொண்டு குளிப்பார்கள். அப்படியொரு காட்சி இப்படத்துக்கு தேவைப்பட்டது. சுனேனாவிடம் அதுபோல் உடை அணியும்படி கேட்டபோது, அப்படி நடிக்க முடியாது என்று  நீண்ட நேரம் விவாதம் செய்துகொண்டிருந்தார். காட்சிக்கு முக்கிய தேவை என்பதால் கண்டிப்பாக நடிக்க வேண்டும் என்றேன். கடைசியில் ஒப்புக்கொண்டு நடித்தார்.

உணவுகிடங்குகளில் கோதுமை வீணாகிறது ! இத்தாலிய பாஸ்தா இறக்குமதி எகிறுகிறது! இதுதான் வளர்ச்சியோ ?

punjab potato 1
ந்தியா ஒரு விவசாய நாடு. விவசாயம் இந்த நாட்டின் முதுகெலும்பாகும்.  கண்டிப்பாக பள்ளியில் சமூக அறிவியல் பாடத்தில் குடிமையியல் பகுதியில் உங்களுக்கு இப்படி சொல்லிக் கொடுத்திருப்பார்கள். ஆனால் இன்றைய நிலையில் இந்திய அரசாங்கம், விவசாயிகளின் குரல்வளையை நசுக்குவதில் பன்னாட்டு நிறுவனங்களின் பேராதரவுடன் களமிறங்கியுள்ளது.  கீழே சொல்லப்படும் விடயம் பல்வேறு பரிமாணங்களில் உங்களுக்கு வந்தடைந்திருப்பினும், இந்த பொருளாதார மேதாவித்தனம், விவசாயத்தை அழிப்பதில் நேரடிப்பங்கு வகிக்கிறது.
உங்களின் கவனத்திற்காக இந்த இரு செய்திகளை நினைவு கூர்கிறேன். முதல் செய்தி பஞ்சாபில் உருளைக்கிழங்கின் விலை வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து, வாங்கவும் ஆளில்லாமல், விளைபொருட்களை என்ன செய்வதென அறியாத விவசாயிகள் அவற்றை சாலையோரம் வீசிச்சென்றனர்.  இரண்டாவது செய்தி: இந்திய அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து உருளைக்கிழங்கை இறக்குமதி செய்ய அனுமதி அளித்திருப்பது.  இதற்கு அரசின் தரப்பில் சொல்லப்பட்ட காரணம், உள்நாட்டின் தேவையை சமாளிப்பதற்கும், பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும் இந்த இறக்குமதி உதவும் என்பது.  இவை ஒருபுறம் இருக்க, இந்த ஆண்டிற்கான உருளைக்கிழங்கின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்குகையில் சொற்பமான அளவில் 2.3% சதவீதம் மட்டுமே குறைந்துள்ளது.

பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்க அதிகார வர்க்கத்தில் கோஷ்டி ஒன்று முனைப்புடன் ?

விஷயம் தெரிந்தால் அதிர்ந்து போவீர்கள். பன்னீர் செல்வம் முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக அதிகார வர்க்கத்தில் பெரும் கோஷ்டி ஒன்று முனைப்புடன் செயலாற்றுகிறது. இவர்கள் முதல்வர் சொல்லியோ அவருக்கு தெரிந்தோ அவ்வாறு இயங்கவில்லை. சொந்தக் காரணங்களும் வேறு வகையான பாசமும் அவர்களை இயக்குகிறது. ஜெயலலிதா மீதும் இவர்களுக்கு எந்த காழ்ப்புணர்ச்சியும் கிடையாது. அவர் மீது மிகுந்த மரியாதை வைத்துள்ளனர். ஆனால், கடவுளாகப் பார்த்து வழங்கியிருக்கும் வாய்ப்பை வீணாக்கிவிடக் கூடாது என்ற உணர்வுடன் கண்ணுக்குத் தெரியாமல் கைகோர்த்து வேலை நடத்துகின்றனர்.
 கதிர் :   மது அருந்தும் உந்துதலில் இருந்து விடுவிக்கும் சிகிச்சைப் பெறுவதற்காகத்தான் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளிநாடு சென்றுள்ளார் என்று அவருடைய முன்னாள் நண்பர் ஒருவர் கேலிப் புன்னகையுடன் சொன்னார்.  எனினும் அவர்கள் எல்லாரும் எப்போது குடிக்கிறார்கள் என்பது நெருக்கமானவர்களுக்கு மட்டுமே தெரியும். விஜயகாந்த் விவகாரம் நாடறியும். நாளை முதல்வர் நாற்காலியில் அமர விரும்பும் ஒருவருக்கு அந்த இமேஜ் நிச்சயமாக ஒரு பாரம். அதை இறக்கி வைக்க அவர் வெளிநாடு சென்று சிகிச்சை பெறுகிறார் என்றால் அதை பாராட்டுவது உசிதம். மேலை நாடுகளில் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் போதை அடிமைத் தளையில் இருந்து மீள சிகிச்சை எடுத்துக் கொண்ட செய்திகள் உண்டு. தாழப் பறக்கும் காக்கைகள் 7: திசை திரும்பும் தமிழக அரசியல் மலேசியா செல்ல காரணம் எதுவாக இருந்தாலும், தமிழக அரசியலில் பெரிய மாற்றம் ஏற்படுவதற்கான அறிகுறிகளை தேமுதிக தலைவர் சரியாக புரிந்து கொண்டிருக்கிறார் என்பது தெரிகிறது. ஏனைய கட்சிகளின் தலைவர்கள் புரிந்துகொள்ளவில்லை என்பதல்ல.

வாசன் ஞானதேசிகன் தமிழ் மாநில காங்கிரஸ் ? மூழ்கும் கப்பலில் இருந்து தப்பி ஓடும் மாலுமிகள் ?

சென்னை: தமிழக காங்கிரஸில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்று கூறப்பட்டு வரும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் இன்று தமது வீட்டில் ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக்குப் பின்னர் ஞானதேசிகனுக்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறிய வாசன், தனிக்கட்சி குறித்த கேள்விக்கு பதிலளிக்க மறுத்துவிட்டார். தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகுவதாக ஞானதேசிகன் சோனியா காந்திக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து சென்னையில் கட்சி தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் தமது ராஜினாமா குறித்து விளக்கம் அளித்தார்  காங்கிரசில் இருந்து எல்லா சுகபோகங்களும் அனுபவிச்சாச்சு  இனி புதிய மனகிழ்  மன்றங்கள்  தேவைதானே ?முதல்ல தனிகட்சி  அப்புறம் ஏதாவது ஒரு கூட்டணி  அதுக்கப்புறம்  ஒருவேளை  காங்கிரசே எதிர்காலத்தில் பதவிக்கு வந்தால் நாமெல்லாம் பிறவி காங்கிரஸ் என்று கூறி மீண்டும் கப்பல்ல ஏறிடலாம்ல ?  நாய் புளைப்பு என்கிறது இதுதாய்ன் ?

2ஜி: தயாளு அம்மாள், ராசா, கனிமொழிக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி குற்றச்சாட்டுப் பதிவு

டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ராசா, திமுக எம்.பி கனிமொழி, திமுக தலைவர் மனைவி தயாளு அம்மாள் உள்ளிட்டோருக்கு எதிராக அன்னிய செலாவணி மோசடி குற்றச்சாட்டை பதிவு செய்துள்ளது டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம்.  ஆ.ராசா மத்திய அமைச்சராக இருந்தபோது, சட்ட விரோதமான முறையில், ஷாகித் பல்வாவின் டி.பி. நிறுவனத்துக்கு சொந்தமான ஸ்வான் டெலிகாம் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸ் அளித்ததற்காக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. இதற்காக திமுக நடத்தும் கலைஞர் தொலைக்காட்சிக்கு ரூ.200 கோடியை ஷாகித் பல்வா லஞ்சமாக கொடுத்தார் என்பதும் குற்றச்சாட்டு. ஆனால், இதை கடனாக வாங்கி வட்டியுடன் திருப்பிச் செலுத்திவிட்டோம் என்கிறது கலைஞர் டிவி. இந் நிலையில் இந்க ரூ. 200 கோடி பணம் கலைஞர் டிவிக்கு தரப்பட்டதில் அன்னிய செலாவணி மோசடியும் நடந்துள்ளதாக அமலாக்கப் பிரிவு குற்றம் சாட்டியுள்ளது.

TV தொகுப்பாளினி ஐஸ்வர்யாவுக்கு அமெரிக்க மாப்பிள்ளை !

சன் டிவி தொகுப்பாளினி அழகு ஐஸ்வர்யா சத்தமில்லாமல் ரிஜிஸ்டர் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதே சூட்டோடு சூட்டாக தலை தீபாவளியும் கொண்டாடி விட்டாராம். மாப்பிள்ளை அமெரிக்காவில் இருப்பதால் விசாவிற்காக திருமணம் நடைபெற்றதாகவும் ஊடகங்களுக்கும், சொந்தங்களுக்கும் சொல்லி பிப்ரவரியில் மீண்டும் ஊர் அறிய திருமணம் நடைபெறும் என்றும் கூறியுள்ளார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா கைபிடித்துள்ள மாப்பிள்ளையின் பெயர் ப்ரனேஷ். பிறந்தது மும்பை என்றாலும் சென்னையில்தான் வசிக்கின்றனராம். நிச்சயம், ரிஜிஸ்டர் திருமணம் முடிந்த கையோடு மாப்பிள்ளை அமெரிக்கா சென்று விட்டாராம்.

கலி.பூங்குன்றன்: துடைப்பக்கட்டையா ? முதல்ல கையால் மலத்தை அள்ளி தலையில் சுமப்பதை நிறுத்துங்கள் !


Gujarat turns a blind eye to manual scavenging  
கைகளால் மலம் அள்ளும் தொழில் இன்றும் உள்ள மாநிலங்கள் முதலிடம்
உத்தரப்பிரதேசம்,
இரண்டாமிடம் டில்லி,
மூன்றாமிடம் ராஜஸ்தான்,
நான்காமிடம் குஜராத்
அய்ந்தாமிடம் மத்தியப்பிரதேசம்
ஆறாமிடம் பிகார்
ஏழாமிடம் ஆந்திரா-தெலுங்கானா
எட்டாமிடம் அரியானா
ஒன்பதாமிடம் சத்தீஷ்கர்
பத்தாமிடம் ஒரிசா
தமிழ்நாட்டில் இன்றும் சுமார் 30,000 குடும்பங்கள் கைகளால் மலம் அள்ளும் தொழில் செய்துவருகின்றனர்.
அய்.டி. கம்பெனிகள், இணையதளம், முகநூல், மால்கள், காபி ஷாப், பங்குச் சந்தை, செவ்வாய்க் கோளை நோக்கிப் பறந்து கொண்டிருக்கும் மங்கள்யான் விண்கலம் எனப் பளபளப்பாகக் காட்டப்படும் இந்தியாவின் இருண்ட, இழிந்த பக்கம்தான் கையால் மலம் அள்ளும் தொழில்.
இந்தத் தொழில் இந்தியாவின் ஏதோவொரு பின்தங்கிய மாநிலத்தின், பின்தங்கிய குக்கிராமத்தில் நடைபெறலாம் என யாராவது நினைத்துக் கொண்டால், அதைவிட அறியாமை வேறு எதுவும் இருக்க முடியாது.
கையால் மலம் அள்ளும் இழிதொழில் பின்தங்கிய பிகாரில் மட்டுமின்றி, வளர்ச்சிக்கே வழிகாட்டும் மாநிலமாகப் பீற்றிக் கொள்ளப்படும் குஜராத்திலும் இன்றளவும் நடந்து வருகிறது.

படேல் பிறந்தநாள் மோடி முஸ்தீபு ! இனி இவர்தான் ஜம்மா அம்பேத்கார் நேருவெல்லாம் சும்மா ?

சுதந்திர இந்தியாவின் முதல் உள்துறை மந்திரியான சர்தார் வல்லபாய் படேலின் 139 வது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவருக்கு மரியாதை செலுத்தினார்.
பிரிந்து கிடந்த 562 சமஸ்தானங்களை இணைத்து, ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்கி, நாட்டின் இரும்பு மனிதர் என்ற பெயரைப் பெற்றவர் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது பிறந்த நாள் இன்று (வெள்ளிக்கிழமை) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.இதையொட்டி டெல்லியில் இன்று ‘ஒற்றுமைக்கான ஓட்டம்’ என்ற பெயரில் பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற ஓட்டம் நடைபெற்றது. நல்லா தேடிப்பாருங்க வேற குஜாராதிங்களும் வரலாற்றில் இருப்பாய்ங்க அவிங்க பேரிலையும் எதுனாச்சும் கொண்டாடணுல ? வரலாறு முக்கியம் அமைச்சரே?

கேரளாவில் 700 மதுகூடங்கள் மூடுவதற்கு நீதிமன்றம் அனுமதி ! 5 Star ஹோட்டல்களில் மது தாராளம் ! ஏழைகளுக்கு மட்டுமே மதுவிலக்கு !

கேரள மாநிலத்தில் ஐந்து நட்சத்திர அந்தஸ்துக்குக் கீழ் இயங்கும் ஹோட்டல்களில் உள்ள 700 மதுக் கூடங்களை (பார்) மூடுவதற்கு அந்த மாநில உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், பாரம்பரியம் மிக்க ஹோட்டல்கள், நான்கு நட்சத்திர அந்தஸ்து ஹோட்டல்களில் உள்ள 33 மதுக் கூடங்கள் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கேரள அரசின் புதிய மதுபானக் கொள்கைக்கு எதிராக, கேரள உயர் நீதிமன்றத்தில் மதுக்கூட உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில், நீதிபதி சுரேந்திர மோகன் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
இதுதொடர்பாக, நீதிபதி தனது உத்தரவில் மேலும் கூறியிருப்பதாவது:
இந்த மாநிலத்தில் மது அருந்தும் பழக்கம் அதிகரித்துக் கொண்டே இருப்பதால், மதுவின் தேவையும் ஆண்டுதோறும் அதிகரித்துக் கொண்டே உள்ளது.இனி சினிமா அரசியல்போன்ற  துறைகளில் உள்ள  மாபியாக்கள் மட்டுமே அங்கு மது அருந்தலாம் 

அழகிரியும், ஸ்டாலினும் எனக்கு ஒன்று தான் : வைகோ

முத்துராமலிங்கத் தேவர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அவரது சிலைக்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் ம.தி.மு.க.,வினர் மாலை அணிவித்தனர். பின் நிருபர்களிடம் வைகோ பேசியபோது, ’’தலித் மக்களை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அழைத்து சென்ற பெருமை தேவரையே சாரும். ஏழை மக்களுக்கு தனது சொந்த நிலங்களை தானமாக தாரை வார்த்து கொடுத்தவர் தேவர்.

காமராஜர் மூப்பனார் படத்துக்கு பதிலாக ராகுல் படமா? ஞானதேசிகன் ராஜினமா ! தமிழ் மாநில காங்கிரஸ் ?

புதிய உறுப்பினர் அட்டை சம்பந்தமான பிரச்னையில், டில்லி மேலிட உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்த, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகனிடம், ராஜினாமா கடிதம் பெறப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நாடு முழுவதும் புதிய உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகளை துவக்குவதற்கான ஆலோசனைக் கூட்டம் டில்லியில் சமீபத்தில் நடந்தது. அதில், சோனியா, ராகுல் படங்கள் கொண்ட உறுப்பினர் அட்டையை மட்டும் வழங்க வேண்டும் என, மேலிடம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழக காங்கிரஸ் சார்பில் தயாரிக்கப்பட்டுள்ள புதிய உறுப்பினர் அட்டையில், காமராஜர், மூப்பனார் படங்கள் இடம் பெற்றிருந்தன. மேலிடத்தின் இந்த உத்தரவை ஏற்க முடியாது என, ஞானதேசிகன் எதிர்ப்பு தெரிவித்து, கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதையடுத்து, அவரிடமிருந்து ராஜினாமா கடிதம் பெறப்பட்டு விட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளது.
இதற்கிடையில், காமராஜர் மற்றும் மூப்பனார் படங்கள் இல்லாத உறுப்பினர் அட்டையை நாங்கள் வாங்க மாட்டோம் என, வாசன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.இது குறித்து, காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட காங்., தலைவர் எஸ்.டி.நெடுஞ்செழியன் கூறுகையில், ''தமிழகத்தில், காமராஜர், மூப்பனாரை முன்னிலைப்படுத்தி தான் கட்சியை வளர்க்க முடியும். அவர்களின் படங்களை போடவில்லை என்றால், கட்சியே இல்லாத நிலை ஆகி விடும்.  ஒரு ஊரில் 10 பேர் காங்'கிரசில் இருந்தால் அந்த 10 பெரும் தலைவர்களே,அந்தந்தக் கோஷ்டிக்கு. இதில் மேலும் உடைவதற்கு என்ன இருக்கு?

திருநாவுகரசர் : திருமண நிகழ்ச்சியில் சந்திப்பதை கூட்டணி அச்சாரம் என்று கருத கூடாது !

திருமண நிகழ்ச்சியில் கட்சித்தலைவர்கள் சந்திப்பதை கூட்டணிக்கு அச்சாரமாக நினைக்கக்கூடாது : திருநாவுக்கரசர் காங்கிரஸ் தேசிய செயலாளர் திருநாவுக்கரசர் தேவர் ஜெயந்திக்காக பசும்பொன் சென்றார்.  அங்கே அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,  ‘’திருமண நிகழ்ச்சியின்போது கட்சித்தலைவர்கள் சந்தித்து பேசுவது உண்டு.இதை கூட்டணிக்கு அச்சாரமாக நினைக்கக்கூடாது. தேர்தல் நேரத்தில் தான் கூட்டணி குறித்து பேசமுடியும். தற்போது பலவீனமாக உள்ள காங்கிரஸ் தன்னை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. பால் விலை, மின்சார கட்டண உயர்வு குறித்து தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்’’ என்றார். அவிங்க சந்தித்துகூட்டணிக்கான அச்சாரம் மட்டுமல்ல கூட்டணியே தான் என்று ஓரளவு சொல்லியே விட்டார்கள் . இவரு அதுக்கு போயி ஏன் பயப்படனும் ? புரியல்லையே ?

வியாழன், 30 அக்டோபர், 2014

முன்னாள் மத்திய அமைச்சர் ராஜா அதிரடி சவால் ! குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யுங்கள்!

இதன் மூலம் ராஜா அவர்கள் மிகவும் தெளிவாக தனது நியாயத்தை முன்வைக்கிறார், ஆனால் ஏன் மீடியாக்கள் இதை இருட்டடிப்பு செய்கிறார்கள்? ஆண்டாண்டு காலமாக கொழுத்த இலாபம் கண்ட செல்போன் கம்பனிகளும் ஜாதி வெறியர்களும் திராவிட கொள்கைகள் மீது தீராத வெறுப்பு கொண்டவர்களும் கைகோர்த்து ராஜாவுக்கும் கனிமொழிக்கும் எதிராக சதிவலை பின்னி அதில் ஓரளவு வெற்றியும் பெற்று விட்டார்கள் . ஆனால் எப்பொழுதும் எல்லோரையும் முட்டாளாக்க முடியாது, உண்மை வெளிப்படும் நேரம் வந்துவிட்டது, பிரமோத் மகாஜன் காலத்தில் இருந்து நடந்து கொண்டு நடைமுறையில் தவறு என்றால் அது தவறு மட்டுமே , அதில் ராஜாவும் கனிமொழியும் எங்கிருந்து வந்தார்கள் . ஆதிக்க ஜாதியின் அப்பட்டமான பொய் காவியம்தான் இந்த ஈஸ்ட்மன் கலர்  டூ ஜி ஸ்பெக்ட்ரம் !

3 கோடி மதிப்புள்ள இடத்தை 20 லட்சத்திற்கு தா.பாண்டியன் ? கம்யுனிஸ்ட் கட்சிப் பிரமுகர் வழக்குப்பதிவு

திருச்சியில் மின்வாரிய தொழிற்சங்கத்திற்கு சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு விற்பனை செய்ததாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தா.பாண்டியன் மீது திருச்சி மாவட்ட ஏ.ஐ.டி.யு.சி செயலாளர் என்.மணி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. என்.மணி என்பவர் திருச்சி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் விவரம் வருமாறு:– 1937 ஆம் ஆண்டு ‘சௌத் மெட்ராஸ் எலக்ட்ரிசிட்டி சப்ளை கார்ப்பரேஷன்’ என்ற நிறுவனம் தொடங்கப்பட்டு 1973–ல் தமிழ்நாடு மின்வாரியத்துடன் இணைக்கப்பட்டது.

திருமாவளவனுக்கு திருமண அழைப்பு விடுக்காத அரசியல் நாகரிக அய்யா மருத்துவர் ராமதாஸ் !

1
நேற்று, மருத்துவர் அய்யா வீட்டின் திருமண நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்ட வைகோவும் ஸ்டாலினும் பரஸ்பரம் அன்பை பரிமாறிக் கொண்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள்,
‘இது அரசியல் நாகரீகம்’
அன்று கலைஞருக்கு திருமண அழைப்பிதழை தந்து விட்டு, கோபாலபுர வீட்டு வாசலில் நின்று மருத்துவர் அய்யா சொன்னார்,
‘அரசியல் நாகரீகம் தெரிந்தவர் கலைஞர்.’
அடுத்தவர்கள் அரசியல் நாகரீகம் பற்றி பாராட்டிய மருத்துவர் அய்யா, அவரும் அதை பெயரளவிலாவது கடைப்பிடித்திருக்க வேண்டும். ஆனால் அவரோ, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனுக்கு அழைப்பிதழே தரவில்லை. வன்னியஜாதி தலைவருக்கு தலித் தலைவர்  என்றால் அவ்வளவு இளக்காரமா? ஐ யாம் சாரி வேறு என்னதான் காரணம் ?

ராமதாஸ் வீட்டு கல்யாணத்தில் கலைஞர் :முன்னாள் முதல்வர் என்பதிலும் பார்க்க உங்கள் தாத்தா என்று....

முதலில் மணமகளும், அடுத்து மணமகனும் வாழ்க்கை ஒப்பந்தஉறுதி மொழியை இங்கே ஏற்றுக் கொண்ட போது, தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோரெல்லாம் எந்த வரிசையிலே
முன்னாள் முதலமைச்சர் என்று குறிப்பிட்டதற்குப் பதிலாக...... : 
ராமதாஸ் இல்ல விழாவில் கலைஞர் பேச்சு
 பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் இல்லத் திருமண விழாவில் திமுக தலைவர் கலைஞர் ஆற்றிய உரை:
’’வெள்ளம் போல் குழுமியிருக்கின்ற தமிழ்ப் பெருங்குடி மக்களே, அய்யா டாக்டர் ராமதாஸ் அவர்களே, உங்களுடைய இனிய முன்னிலையில் மிகுந்த மகிழ்ச்சியோடும் இரண்டறக் கலந்த அன்புப் பெருக்கோடும் மண விழாவினை நிறைவேற்றிக் கொண்டுள்ள மணமக்களே,  மணமக்கள் உறுதிமொழி ஏற்கும்போது குறிப்பிட்டார்கள் - “முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்க ளுடைய வாழ்த்துக்களோடு இந்த மணவிழாவினை நிறைவேற்றிக் கொள்கிறோம்” என்று கூறினார்கள்.

காஞ்சி சங்கர மடத்தில் ரூ.3992 கோடி கருப்புப் பணம்! Firm 'laundered' crores in donations to mutt!

ஒரே ஆண்டில் மட்டும் ரூ3992 கோடி நன்கொடை கிடைத்தது எப்படி? என மத்திய குற்றப் பிரிவு அதிகாரிகள் கிடுக்கி பிடி , சங்கரனின் சாம்ராஜ்யம் தகர்கிறது .

காஞ்சிபுரம், அக்.29_ காஞ்சிபுரம் சங்கர மடத் திற்கு ரூ.3992 கோடி ரூபாய் வங்கிகளில் வைக் கப்பட்டுள்ளது. இந்தப் பண வருவாய்க்கான விவரங்கள் இல்லை; கணக்கில் வராத இந்தக் கருப்புப் பணம் குறித்து விசாரணை தொடங்கப் படுகிறது.
2011_2012 ஆம் ஆண் டில் சங்கர மடத்திற்கு ரூபாய் 3992 கோடி நன் கொடையாக வந்த விவரம் குறித்து மத்தியப் புலனாய் வுத்துறை விசாரணையைத் துவங்கியுள்ளது. தென்னிந்தியாவில் காஞ்சிபுரத்தில் காஞ்சி சங்கராச்சாரியாரைத் தலை வராகக் கொண்டு காஞ்சி காமகோடி மடம் செயல் பட்டு வருகிறது. இம்மடத் திற்கு சொந்தமான வங்கிக் கணக்கில் 2011_2012 ஆம் ஆண்டிற்கான வரவாக ரூபாய் 3992 கோடி வைப்பு நிதியாக செலுத்தப்பட் டது.

ஜெயா தரப்பு சுப்ரமணியம் சாமிக்கு எதிராக தொடர்ந்த 5 அவதூறு வழக்குகளிற்குக்கும் உச்ச நீதிமன்றம் தடை

சென்னை: ஜெ., முதல்வர் பதவி இழந்து நிற்பதற்கு காரணமான சுப்பிரமணியசாமி தொடர்ந்து வழக்குகள் அடிப்படையில் விரட்டுகிறார். அவரை அரசியல் ரீதியாகவும், கோர்ட் மூலமாகவும் பல்வேறு செக் வைத்து முன்னேறி செல்கிறார் சாமி. சொத்துக்குவிப்பு வழக்கை முதன் முதலில் ஆரம்பித்து வைத்தவரே பா.ஜ., தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியசுவாமிதான். இதனால் 4 ஆண்டு சிறைத்தண்டனை பெற்று , 22 நாட்கள் பெங்களூருவில் சிறைவாசம் அநுபவித்தார் ஜெ., . தீர்ப்பு வருவதற்கு முன்னர் ஜெ., முதல்வராக இருந்த போது சாமி மீது தமிழக அரசு சார்பில் 5 அவதூறு வழக்கு போடப்பட்டது. ஜெயாவுக்கு ஜெயாவே வைத்துகொள்ளும் ஆப்புக்களில் இந்த அவதூறு வழக்கு வியாதியும் ஒன்று ,தனிகாட்டு ராணியாக இருக்க ஆசைபட்டு அது கிடைந்தே விட்டது ,

இலங்கையில் நிலச்சரிவு ! 300 இந்திய வம்சாவளித் தமிழர் பலி ! ஒட்டு மொத்த கிராமமே புதைந்தது

கொழும்பு: இலங்கை மலையகத்தில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் 300 இந்திய வம்சாவளித் தமிழர் மண்ணோடு மண்ணாக புதைந்த பதுளை மீரியபெத்த பெருந்தோட்ட கிராமத்தில் இன்றும் 2வது நாளாக மீட்புப் பணி தொடர்கிறது.  இலங்கையில் கொட்டித் தீர்த்த பருவமழையால் இந்திய வம்சாவளித் தமிழர்கள் வாழும் மலையகத்தின் பல இடங்களில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டன. பதுளை மாவட்டம் ஹல்துமுல்ல பிரதேசத்துக்குட்பட்ட மீரியபெத்த பெருந்தோட்டம் என்ற கிராமத்தில் நேற்று காலை ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவில் ஒட்டுமொத்த கிராமமே மண்ணோடு மண்ணாக புதைந்து போனது. 

கொச்சியில் காதலர்கள் Mass K I S S போராட்டம் 2–ந் தேதி அனுமதி இல்லாவிடினும் நடைபெறும் ! ராகுல பசுபாலன் அறிவிப்பு !


கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள ஓட்டல் ஒன்றில் ஒழுக்கக்கேடான செயல்கள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதைத் தொடர்ந்து அந்த ஓட்டலை பாரதீய ஜனதா இளைஞர் அணி தொண்டர்கள் சமீபத்தில் சூறையாடினர். இதற்கு எதிராக குறும்பட இயக்குனர் ராகுல் பசுபாலன் தலைமையில் ‘பேஸ் புக்’ சமூக வலைத்தள ஆர்வலர்கள் (சுதந்திர சிந்தனையாளர்கள்) போர்க்கொடி உயர்த்தி உள்ளனர். ஓட்டல் சூறையாடப்பட்டதை கண்டித்து, கொச்சியில் மரைன் டிரைவ் மைதானத்தில் வரும் 2–ந் தேதி ‘காதல் முத்தம்’ ( ‘கிஸ் ஆப் லவ்’) என்ற பெயரில் நூதன போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு ‘பேஸ் புக்’கில் 20 ஆயிரம் பேர் ‘லைக்’ போட்டு ஆதரவு தெரிவித்தனர். இந்த போராட்டத்தின்போது ஒருவரை ஒருவர் அன்புடன் கட்டித்தழுவி, முத்தமிட தீர்மானித்திருந்தனர். குறைந்தது 200 பேர் இதில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பு உள்ளது.

நடிகர் கார்த்திக் தனது மனைவிகளால் உயிருக்கு ஆபத்தாம் ?பாதுகாப்பு தேவையாம் ? போலீசில் புகார் !

நடிகர் கார்த்திக், போலீசில் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். தனது சொத்துக்கள் அபகரிக்கப்பட்டு விட்டது என்றும், தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்றும் புகாரில் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டு இருக்கிறார்.
நடிகர் முத்துராமன் மகன் மறைந்த பழம்பெரும் நடிகர் முத்துராமனின் மகன் நடிகர் கார்த்திக். கார்த்திக்கும் ஏராளமான படங்களில் நடித்து புகழ்பெற்றவர். கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும் தற்போது படங்களில் நடித்து வருகிறார். இந்த சினிமா புகழ் குடும்பத்தில் சொத்துப்பிரச்சினை பெரும் பூதாகரமாக வெடித்துள்ளது.
சமீபத்தில் நடிகர் கார்த்திக், தனது சொத்துக்களை தனது குடும்பத்தினரே அபகரித்துக் கொண்டனர் என்று வருத்தத்துடன் பேட்டி கொடுத்தார். கார்த்திக் தற்போது, சென்னை ஆழ்வார்பேட்டை, கஸ்தூரி எஸ்டேட் 1–வது தெருவில் வசிக்கிறார். கார்த்திக் நேற்றுமுன்தினம் நள்ளிரவு 11.30 மணி அளவில், சென்னை தேனாம்பேட்டை போலீஸ் நிலையத்தில் பரபரப்பு புகார் மனு ஒன்றை கொடுத்தார். அக்காவை கட்டிகிட்டு அப்படீய தங்கச்சியையும் லவட்டி கொண்டு போயி? அவிங்கல சகோதரிங்களா இருக்க விடாம சக்களத்திகளாக்கிய உனக்கு இது தேவைதாய்ன் 

ஆவின் பால் பெட்டியெல்லாம் மினி சுப்பர் மார்கெட் ? அடாவடி ஆக்கிரமிப்பு !

இதில் அப்போது என்பது, தி.மு.க., ஆட்சியையும், இப்போது என்பது அ.தி.மு.க., ஆட்சியையும் குறிப்பதாக புரிந்து கொள்ள வேண்டும். இதற்கு உதாரணத்தை, தேடிப்போய் நீங்கள் பார்க்க வேண்டியதில்லை. மாநில நெடுஞ்சாலை, மாநகராட்சி சாலைகள், அரசு அலுவலக வளாகங்களில் பார்த்தாலே, அப்பட்டமாய்த் தெரிந்து விடும். தி.மு.க., ஆட்சியின் போது, மதுக்கரை ரோட்டில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்பட்ட இடத்திலும், அரசு கலை அறிவியல் கல்லூரி அருகில் அமைக்கப்பட்ட நடைபாதையிலும், பல கோடி ரூபாய் மதிப்பில் அகலப்படுத்தப்பட்ட பங்கஜா மில் ரோடு, பாலக்காடு ரோடு உள்ளிட்ட பல இடங்களிலும், இன்றைக்கு காளான்களைப் போல 'ஆவின் பாலகங்கள்' முளைத்து வருகின்றன. ஆவின் பூத் என்பது, ஆவின் பால் பாக்கெட்களை மட்டும் விற்பதற்காக, உருவாக்கப்பட்ட விற்பனை மையம். நகர்ப்புறங்களில், குடியிருப்புப் பகுதிகளில், 4 அடிக்கு 4 அடி என்ற அளவில், ஆவின் நிறுவனமே வழங்கும் இரும்புப் பெட்டிகள் தான், ஆவின் பூத் என்றழைக்கப்படுகின்றன. ஆவின் பால் பாக்கெட்களை பத்திரப்படுத்துவதற்காக இவை வழங்கப்படுகின்றன. இன்று வரை, இந்த ஆவின் பூத்களில் பால் பாக்கெட்களைத் தவிர, வேறு எதுவும் விற்கப்படுவதில்லை. நல்ல வேளை சின்னதா 10 க்கு 10 பொட்டி கொடுத்தாங்க, கொஞ்சம் பெரிசா கொடுத்தா அதவே நைட்டு பூரா லாட்ஜு ஆக்கி காசு பாத்துடுவாணுக.

கலைஞர் அறிக்கைக்கு பின் பன்னீர்செல்வம் 60 கோடியை நிவாரண பணிக்கு அறிவித்தார்!

நான் யோசனை கூறிய பின், 60 கோடி ரூபாய், வெள்ள நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் என, முதல்வர் பன்னீர்செல்வம் அறிவித்தாரே தவிர, முன்கூட்டியே யோசித்து, தமிழக அரசு தானாக அறிவிக்கவில்லை' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:
நான் வெளியிட்டது வெற்று அறிக்கை என்கிறார் முதல்வர் பன்னீர்செல்வம். தமிழக மக்கள், மழை வெள்ளத்தினால், பாதிக்கப்பட்டுள்ளனர். பயிர்கள் மூழ்கிக் கிடப்பதால், விவசாயிகள் வேதனையில் உள்ளனர். அவர்களுக்கு உதவிட வேண்டும் என, நான் அறிக்கை வெளியிட்டது, பன்னீர்செல்வம் மொழியில் வெற்று அறிக்கையாம்.நான் யோசனை கூறிய பின், 60 கோடி ரூபாய் நிவாரண பணிக்காக ஒதுக்கப்படும் என, முதல்வர் தெரிவித்திருக்கிறாரே தவிர, இந்த அறிவிப்பை கூட தமிழக அரசு தானாகவே முன் கூட்டியே யோசித்து அறிவிக்கவில்லை என்பது தான் உண்மை.இவ்வாறு, கருணாநிதி கூறியுள்ளார்.dinamalar,com மக்களுக்கு என்ன நன்மை கிடைத்தாலும் அதற்கு மூல காரணமாக இருப்பவர் கலைஞர் தான் என்பது நிதர்சனம். அவரது சொல்லுக்கு பின்பே அதிமுக அரசு அசைந்து கொடுக்கும் என்பது பாலகர்களுக்கும் தெரிந்தது தான்.

தொழில் தொடங்க சுமுக சூழ்நிலையில் 142வது இடத்துக்கு இந்திய சறுக்கியது !

வாஷிங்டன்: 'தொழில் துவங்க சுமுகமான சூழ்நிலை நிலவும் நாடுகள்' என்ற தலைப்பிலான, உலக வங்கிபட்டியலில், கடந்த ஆண்டை விட இந்தியா, இரண்டு இடங்கள் வீழ்ச்சி அடைந்து, 142வது இடத்தைப் பிடித்துள்ளது. 189 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், இந்தியா முதல் 50 இடங்களுக்குள் வர வேண்டும் என, பிரதமர் நரேந்திர மோடி இலக்கு நிர்ணயித்து, 'மேக் இன் இந்தியா' பிரசாரத்தை செயல்படுத்துகிறார். இந்த நிலையில்,இந்தியா 142வது இடத்திற்கு சரிந்திருக்கிறது. உலக நாடுகளின் தொழிலதிபர்கள், முதலீட்டாளர்கள், குறிப்பிட்ட ஒரு நாட்டில் முதலீடு செய்யும் முன், அந்த நாட்டில் தொழில் துவங்க ஏற்ற சூழ்நிலை நிலவுகிறதா என்பதை கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதற்காக, உலக வங்கி அமைப்பு, ஒரு பட்டியலை வெளியிடுகிறது. எந்தெந்த நாடுகளில், தொழில் துவங்க சுமுகமான நிலை, எளிமையான சூழ்நிலை உள்ளது என்பதை, 10க்கும் மேற்பட்ட அடிப்பைட அம்சங்களைக் கொண்டு கணக்கிட்டு, பட்டியல் வெளியிட்டு வருகிறது.அந்த வகையில், நடப்பு 2014ம் ஆண்டிற்கான பட்டியலை, உலக வங்கி நேற்று வெளியிட்டுள்ளது. அதில், இந்தியா, 142வது இடத்தைப் பிடித்துள்ளது. மோடி இதற்கும் எதாவது பதில் சொல்லுவார்.வெள்ளை வேட்டி கட்டியவனெல்லாம் உத்தம புத்திரன் என நம் வாக்காளர்கள் போல் நம்புவதற்கு எத்தனையோ தில்லாலங்கடிகளை பார்த்த சர்வதேச ஜகஜ்ஜால கூட்டம் ஒன்றும் ஏமாளிகளல்ல.

புதன், 29 அக்டோபர், 2014

ராகினி திவேதியால் திரிஷா ரானா காதல் முறிந்ததா? ம்ம்ம் ஏதோ நீங்கள் கேட்டவை ?


சென்னை: திரிஷா - ராணா காதலை முறித்த ஹீரோயின் பற்றி தகவல் வெளியாகி உள்ளது. திரிஷாவும், நடிகர் ராணாவும் நீண்ட நாட்களாக காதலித்து வருவதாக கோலிவுட்டில் பேசப்படுகிறது. நாங்கள் நண்பர்களாகத்தான் பழகுகிறோம் என்று இருவரும் கூறி வந்தனர். ஆனால் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும்போது இருவரும் ஜோடியாக பங்கேற்று வந்தனர். சமீபத்தில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். ராணாவுடனான பிரிவு பற்றி தனது இணைய தள பக்கத்தில் சூசகமாக தெரிவித்திருந்தார் திரிஷா.மற்ற நடிகைகளுடன் நெருங்கி பழகுவதால்தான் ராணாவை திரிஷா பிரிந்தார் என்று பேசப்படுகிறது. இதுபற்றி இருவருமே வெளிப்படையாக தெரிவிக்கவில்லை. திரிஷா-ராணா காதலுக்கு தடையாக இருக்கும் நடிகை யார் என்பதுபற்றி தற்போது தகவல் வெளியாகி உள்ளது. ‘அறியான்‘, ‘நிமிர்ந்து நில்‘ போன்ற தமிழ் படங்களிலும் பல்வேறு மலையாள படங்களிலும் நடித்த ராகினி திவேதிதான் இந்த காதல் முறிவுக்கு காரணமாம்.சமீபத்தில் ராணாவுக்கும், ராகினி திவேதிக்கும் இடையே ஏற்பட்ட நெருக்கமான நட்புதான் திரிஷா கோபத்துக்கு காரணம். இதுபற்றி அறிந்த திரிஷா, ராணாவிடம் கேட்டபோது அவர் சரிவர பதில் சொல்லவில்லையாம். இதையடுத்தே இருவரும் பிரிந்துவிட்டதாக கூறப்படுகிறது. - tamilmurasu.org/

கருப்புபண இந்தியர்களின் பட்டியலை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுப்பு! அப்படி போடு?

டெல்லி, வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.வெளிநாட்டு வங்கிகளிடம் இருந்து கருப்புப் பணம் பதுக்கிய இந்தியர்களின் பட்டியலை மத்திய அரசு கைபற்றியது. இந்த பட்டியலை  இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த பட்டியல் குறித்து கூறிய உச்ச நீதிமன்றம், சீலிடப்பட்ட பெயர் பட்டியலில் உள்ள விவரங்களை வெளியிட முடியாது என்றும், சிறப்பு விசாரணைக் குழுவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் மட்டுமே உறைகளை பிரித்து விவரங்களை பார்க்க முடியும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மேலும், கருப்புப் பண விவகாரத்தில் சிறப்பு விசாரணைக் குழுவினர், நவம்பர் மாதத்துக்குள் விசாரணையை முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவில் கூறியுள்ளது.இதையடுத்து வழக்கு விசாரணையை டிசம்பர் 3ம் தேதிக்கு ஒத்தி வைத்தது உச்ச நீதிமன்றம்.tamil.chennaionline.com/

நடிகை சுவேதா உயிருக்கு விபசார வழக்கில் சிக்கிய தொழில் அதிபர்களால் ஆபத்து?

Hyderabad: Month after her arrest, it has been reported that actress Shweta Basu might have been facing life threat as a few business tycoons are scared thinking their names may have been revealed in the prostitution case.
சென்னை: விபசார வழக்கில் சிக்கிய நடிகை சுவேதாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரையுலகில் பரபரப்பாக பேசப்படுகிறது.தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்திருப்பவர் சுவேதா பாசு. கடந்த மாதம் இவர் விபசார தடுப்பு சட்டத்தின் கீழ் ஐதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் மகளிர் காப்பகத்தில் தங்கி இருக்க கோர்ட் உத்தரவிட்டது. அதன்படி, காப்பகத்தில் தங்கி இருக்கிறார். இதற்கிடையில் தனது மகளை காப்பகத்தில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று சுவேதாவின் தாயார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இருப்பினும் சுவேதா விடுவிக்கப்படவில்லை.இதற்கிடையில், சுவேதாவை விபசாரத்தில் ஈடுபடுத்திய முக்கிய புள்ளி யார் என்பதை பகிரங்கமாக போலீசார் அறிவிக்க வேண்டும் என்று சில நடிகர், நடிகைகள் வலியுறுத்தி வருகின்றனர்.

அருண் ஜெட்லி ஒப்புகொள்கிறார் : எதிர்கட்சியாக இருந்தபோது பரபரப்புக்காக CAG அறிக்கை( 2G) பயன்பட்டது !

முந்தய ஆட்சி காலத்தில் சி ஏ ஜி உத்தேச இழப்பு பற்றி பரபரப்பு அறிக்கைகளை விட்டது அது அப்போது அன்றைய அரசுக்கு அது நெருக்கடிகளை கொடுத்தது எதிர்கட்சிகளுக்கு அது தேவை பட்டது  Thats all you are honor ?
தலைமைக் கணக்கு தணிக்கையாளர் தங்களது அறிக்கைகளை பரபரப்பாக்கி, தலைப்புச் செய்தியாக்க வேண்டாம் என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கேட்டுக் கொண்டுள்ளார். புது டெல்லியில் நடைபெற்ற சி.ஏ.ஜி. மாநாட்டில் அருண் ஜேட்லி பேசும்போது இவ்வாறு கூறினார். "ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவின் மீதே ஆய்வு செய்யப்படுகிறது என்பதில் தணிக்கையாளர் கவனமாக இருக்க வேண்டும், மேலும், நியாயமான நடைமுறைகள் பின்பற்றுள்ளனவா என்பதைப் பார்த்தால் போதுமானது. அவர் முடிவுகளை பரபரப்பாக்க வேண்டிய தேவையில்லை. அவர் தலைப்புச் செய்திகளில் இடம்பெற வேண்டிய அவசியமும் இல்லை. தணிக்கையாளர் செயல்பூர்வமாக இருக்க வேண்டும், ஆனால் செயல்பூர்வமும், சுயகட்டுப்பாடும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள். முடிவு எடுக்கப்பட்ட விவகாரங்களில் என்ன நடைமுறை பின்பற்றப்பட்டிருக்கிறது என்பதை அவர் கூர்ந்து ஆய்வு செய்தால் போதுமானது” என்றார் அருண் ஜேட்லி. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு மற்றும் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஆகியவற்றில் ஏற்பட்ட உத்தேச இழப்பாக முறையே சுமார் ரூ.1.76 லட்சம் கோடி மற்றும் ரூ.1.84 லட்சம் கோடி என்று சி.ஏ.ஜி முந்தைய ஆட்சி காலக்கட்டத்தில் தெரிவித்திருந்தது, அரசுக்கு ஏகப்பட்ட நெருக்கடிகளை கொடுத்தது. எதிர்கட்சிகளுக்கும் அப்போது அத்தகைய ‘பரபரப்பு’ தேவைப்பட்டது. ஆனால் இப்போது ‘ஏற்கெனவே எடுக்கப்பட்ட முடிவுகளின் நடைமுறைகளை தீர ஆய்வு செய்தால் போதுமானது, உத்தேச இழப்புகளை வெளியிட்டு தலைப்புச் செய்திகளுக்குள் சி.ஏ.ஜி. இடம்பெறுவது கூடாது என்று அறிவுறுத்தியுள்ளார் அருண் ஜேட்லி. திங்களன்று இதே சி.ஏ.ஜி. மாநாட்டில் நாடாளுமன்ற பொதுக் கணக்குக் குழு தலைவரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான கே.வி.தாமஸ், நிதி முறைகேடு என்ற விவகாரத்துடன் சி.ஏ.ஜி தன்னை மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும், உத்தேச இழப்புகள் பற்றி ‘வானாளவிய’மதிப்புகளை தெரிவிக்கக் கூடாது என்று கூறியதும் இதனுடன் இணைத்து நோக்கத்தக்கது.tamil.thehindu.com

வடநாட்டு BJP எம்.பி.யின் திடீர் தமிழ்க்காதல் பார்ப்பன கபடநாடகம்! எதிரிகள் ஜாக்கிரதை ?

தருண் விஜய்tarun-vijay-1 பார்ப்பனக் கொடுங்கோன்மை. அதனை எதிர்த்துப் போராடியதன் மூலம்தான் ஒடுக்கப்பட்ட சாதிகளைச் சேர்ந்த மக்கள் கல்வி பெற முடிந்தது. தங்களுடைய பழைய பொற்காலத்தை புதிய நிலைமைகளுக்கு ஏற்ப மீட்டுருவாக்கம் செய்து கொள்வதுதான் இந்துத்துவ சக்திகளின் நோக்கம்.
“வேத-உபநிடதம் மட்டுமின்றி திருக்குறளும் படிக்க வேண்டும்” என்று தருண் விஜய் தனது பேட்டியில் குறிப்பிடுகிறார். பார்ப்பனியத்தை எதிர்த்த புத்தரை விஷ்ணுவின் அவதாரமாகச் சித்தரித்து விழுங்க முயன்றதைப் போலவே, வள்ளுவரையும் ஒரு ரிஷி ஆக்கி, திருக்குறளை தர்ம சாத்திரப் பட்டியலில் சேர்த்து நிறுவனமயப் படுத்துவதுதான் இதன் நோக்கம். தன்னை எதிர்த்து நின்ற பழங்குடிகளையும், மொழிகளையும், இனங்களையும் நசுக்கி அழித்தது மட்டுமல்ல, அரவணைத்தும் அழித்திருக்கிறது பார்ப்பனியம் என்பதே வரலாறு. அத்தகைய அரவணைப்புதான் தருண் விஜயின் தற்போதைய தமிழ்க் காதல்.
த்திய அரசு நிறுவனங்களின் சமூக வலைத்தளங்களில் இந்தி, சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வார கொண்டாட்டம், ஆசிரியர் தினத்தை குரு உத்சவ் ஆக மாற்றுதல், பல்கலைக்கழகங்களில் இந்தித் திணிப்பு… என்று மோடி அரசின் இந்துத்துவ வெறி நடவடிக்கைகள் ஒன்றன் பின் ஒன்றாக அமலாகிக் கொண்டிருக்கும் சூழலில், உத்தர்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தருண் விஜய் என்ற பாரதிய ஜனதாக் கட்சி எம்.பி, தமிழின் மேன்மை பற்றி பொளந்து கட்டி வருகிறார். ஆர்.எஸ்.எஸ்-ஐச் சேர்ந்த பார்ப்பனக் குள்ள நரி தருண் விஜய்.

வைகோ கூட்டணிக்கு தயார் ! திமுகவும் தயார் ? ஸ்டாலின் வைகோ சந்திப்பு !

கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி! வைகோ பேட்டி! பாமக நிறுவனர் ராமதாஸ் இல்ல திருமண விழா காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் வியாழக்கிழமை காலை நடைபெற உள்ளது. இதனையொட்டி புதன்கிழமை மாலை நடைபெற்ற விழாவில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்க வந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மு.க.ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.இந்த சந்திப்புக்குப் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த வைகோ, இருவரும் பரஸ்பரம் நலம் விசாரித்துக் கொண்டோம். அரசியல் நாகரீகம் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமான அமைந்த சந்திப்பு. அன்பு சகோதரர் ஸ்டாலினை சந்தித்தது மகிழ்ச்சி. திமுக தலைவர் கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்தேன். ஸ்டாலின் உடனான சந்திப்பின்போது சட்டமன்ற தேர்தல் குறித்து பேசவில்லை. கூட்டணி அமைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விரும்பினால் மகிழ்ச்சி என்றார்.nakkheeran,in

இலங்கையில் பயங்கர நிலச்சரிவு 14 உடல்கள் மீட்பு ! 300 பேர் நிலை தெரியவில்லை?

இலங்கையில் பயங்கர நிலச்சரிவு  14 உடல்கள் மீட்பு<இலங்கையின் தென் மத்திய பகுதியில் கடந்த சில நாட்களக கடும் மழை பெய்து வருகிறது. இதில் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து 120 மைல் தொலைவில் உள்ள ஹால்டுமுல்லா கிராமத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதுஇந்த நிலச்சரிவில் 140 வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் வீடுகளில் வசித்த 400க்கும் மேற்பட்டவர்கள் மண்ணில் புதைந்து உள்ளனர். இதில் 14 பேரின் உடல்கள் மீடகப்பட்டன. 250 க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை . தொடர்ந்து அந்த பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. nakkheeran,in

swiss கருப்பு பண பட்டியல் வெறும் கோயிந்துகள் மட்டுமே?

கருப்புப் பணம்ருப்பு பண விவகாரத்தில் குரங்குகளே வெட்கப்படும் அளவுக்கு பல்டி மேல் பல்டி அடித்து வருகிறது பாரதிய ஜனதா கும்பல். தேர்தல் பிரச்சார காலத்தில் தாங்கள் வென்று ஆட்சிக்கு வந்து நூறே நாட்களில் மொத்த கருப்பு பண குவியலையும் வாரி வந்து கொட்டுவோம் என்று பீற்றினார்கள். ஆட்சிக்கு வந்ததில் இருந்து வளைந்து நெளிந்து நெம்பி குனிந்து – பதஞ்சலி முனிவரே யோசித்திராத கோணத்தில் தலை எது வால் எது என்று தெரியாத ஒரு ’ஸ்திதியில்’ காட்சி தந்து கொண்டிருக்கிறது பாரதிய ஜனதா கும்பல். கருப்பு பணம் தொடர்பான வழக்கில் சில நாட்களுக்கு முன் தங்கள் தரப்பை முன்வைத்த பாரதிய ஜனதா அரசு, அவ்வாறு பெயர்களை வெளியிடுவது தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாகவும், இந்தியா செய்து கொண்டிருக்கும் இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தை மீறுவதாவும் இருக்கும் என்று தெரிவித்திருந்தது.

Aicell- Maxis முறைகேடு மாறன் சகோதர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு !


ஏர்செல் - மேக்சிஸ் வழக்கு மாறன் சகோதரர்களுக்கு சம்மன் அனுப்ப முடிவு ஏர்செல்- மேக்ஸிஸ் முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்புவது குறித்து 12 மணிக்கு விசாரணை நடைபெறுகிறது.ஏர்செல் பங்குகலை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதிமாறன் நெருக்கடி தந்ததாக குற்றச் சாட்டு எழுந்தது. மேக்சிஸ் நிறுவனம் கலாநிதிமாறன் நிறுவனத்தில் 3,500 கோடி முதலீடு செய்ததாக புகார் எழுந்தது.சிபிஐ குற்றப்பத்திரிகையில் மாறன் சகோதரர்கள், மேக்சிஸ் தலைவர் உள்ளிட்டோர் உள்ளனர். மாறன் சகோதரர்களூக்கு சம்மன் அனுப்புவது குறித்து டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நேரில் ஆஜராக சம்மன் அனுப்ப வேண்டும் என்பது சிபிஐ கோரிக்கை ஆகும்.nakkheeran.in/

திராவிடன் என்று ஒருவரும் இல்லையாமே? FAKE சு .சாமி ஆரிய கூத்து ஆடுகிறார்!

பழ. கருப்பையா :ஆரியக் கூத்தாடுகிறார் சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி!
  "திராவிடத்தைப்பற்றி வாய் கிழியப் பேசுகிறார்கள்; "திராவிடன்" என்று எவனாவது இருக்கிறானா என்று மரபியல் சோதனை (genetic test ) செய்து பார்த்தும் எந்தத் திராவிடனும் இல்லை என்ற முடிவுதான் எட்டப்பட்டிருக்கிறது.'' 'ஆரியனும் இல்லை; திராவிடனும் இல்லை. எல்லா இந்தியர்களும் ஒரே வகையான மரபணுக்களைத்தான் பெற்றிருக்கிறார்கள். ஆனால், இங்கே உள்ள வரலாற்று நூல்கள் மட்டும், 'இந்தியா பல இனங்களை உள்ளடக்கிய (multi-ethnic) ஒரு நாடு" என்று பேசுகின்றன. ஆகவே, நேரு காலத்து வரலாற்று ஆசிரியர்கள் எழுதிய இந்த நூல்கள் கொளுத்தப்பட வேண்டும்!'' ''இங்கு, இந்து நாகரிகம் ஒன்றுதான் உண்டு; யூத கிருத்துவ நாகரிகத்துக்குப் பிந்தையது இந்து நாகரிகம் என்று காட்டுவதற்காக அதன் தலையை வெட்டி, அதன் கால நீளத்தைக் குறைத்துவிட்டார்கள் (truncated )!"  இப்படி எல்லாம் ஓர் ஆங்கில நாளிதழில் என்னென்னவோ பிதற்றியிருக்கிறார், நம்முடைய சோழவந்தான் சுப்பிரமணியன் சுவாமி.போயும் போயும் இந்த போலி ஆசாமி சுப்ரமணியம் சாமி போன்ற நபர்களை வைத்துதான் பார்பனர்கள் தங்கள் ஸ்தானத்தை உயர்த்த வேண்டிய நிலைக்கு தாழ்ந்துவிட்டனர் ! பார்பனர்களை இவர் ஒருவரே இனி தலை தூக்க முடியாதபடி கேவலப்படுத்தி விடுவார் , அந்த அளவு ஒரு தரங்கெட்ட  கைக்கூலி புரோக்கர் இவர்,

கருப்புப்பணம் பதுக்கிய 627 பேர் பட்டியலை உச்சநீதிமன்றத்தில் மத்தியரசு அளித்தது !

கருப்புப்பணம் பதுக்கிய 627 பேர் பட்டியல் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் வெளிநாடுகளில் கருப்புப்பணம் பதுக்கியவர்களின் முழுப்பட்டியலை உச்சநீதிமன்றத்தில் அளித்தது மத்திய அரசு.  சீலிட்ட உறையில் வைத்து உச்சநீதிமன்றத்தில் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.  ஆவணங்கல் 3 பகுதிகளாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் முகுல் ரோஹத்தி பட்டியலை தாக்கல் செய்தார்.கருப்புப்பணம் பதுக்கியவர்கள் பட்டியலில் 627 பெயர்கள் உள்ளன.   இதில் பாதிக்கு மேல் இந்திய குடிமக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.nakkheeran,in

ஹரியாணா: 125 அடி ஆழத்தில் சுரங்க பாதை அமைத்து வங்கியில் 77 லாக்கர்கள் உடைக்கப்பட்டு திருட்டு !

ஹரியாணாவில் 125 அடி நீள சுரங்கம் அமைத்து தேசியமயமாக்கப்பட்ட வங்கியின் 77 லாக்கர்களை உடைத்து நூதன முறையிலான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
ஹரியாணாவின் சோனிபட் என்ற மாவட்டத்தின் கோஹானா பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கியின் கிளையில் இந்த அதிர்ச்சிகரமான கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.
வார இறுதி விடுமுறை தினங்களுக்கு பின்னர் திங்கட்கிழமை அன்று வங்கி திறக்கப்பட்டபோது இந்த திருட்டுச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இதனை கண்ட வங்கியின் கிளை மேலாளர் தேவேந்திர மாலிக் இது குறித்து கோஹானா பகுதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ரூ. 40 லட்சம் ரொக்கப் பணமும் பல கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளும் மர்ம நபர்களால் கொள்ளையடிக்கப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

142 நாடுகளில் பெண் உரிமை பேணுவதில் இலங்கை 79 வது சீனா 87 வது இந்தியா114 வது ......

பெண்களுக்கு சம உரிமை வழங்கும் 142 நாடுகளின் பட்டியலில் இந்தியா 114-ஆவது இடத்தில் பின் தங்கியுள்ளது.
உலக பொருளாதார அமைப்பு (டபிள்யூ.இ.எஃப்.) ஆண்டுதோறும் வெளியிடும் இந்தப் பட்டியலில், கடந்த ஆண்டு இந்தியா 101-ஆவது இடத்தில் இருந்தது.
இந்த முறை, 13 இடங்கள் சரிந்து இந்த இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
பெண்களுக்கான பொருளாதார உரிமைகள், கல்வி, சுகாதாரம், உயிர் வாழ்தல் ஆகிய பிரிவுகளில் சராசரிக்கும் குறைவான புள்ளிகளை இந்தியா பெற்றுள்ளதாக டபிள்யூ.இ.எஃப் மதிப்பீட்டு அறிக்கை தெரிவிக்கிறது.
அந்த அறிக்கையின்படி, பெண்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தல், பெண்கள் வருவாய், கல்வியறிவு, ஆண் - பெண் பிறப்பு விகிதம் ஆகியவற்றில் மிக மோசமான 20 நாடுகளில் ஒன்றாக இந்தியா விளங்குகிறது.
எனினும், அரசியல் ரீதியாக பெண்களுக்கு உரிமைகள் வழங்கும் மிகச் சிறந்த 20 நாடுகளின் பட்டியலில் இந்தியா இடம் பிடித்துள்ளது.

இங்கிலாத்தில் இந்திய குடும்பம் மர்ம மரணம்! இரண்டு மகள்களும் பெற்றோரும் இறந்து கிடந்தனர் !

Four members of the same family have been found dead at a house in Bradford.
Jitendra Lad, 49, his wife Daksha, 44, and their two daughters Trisha, 19, and Nisha, 17, were found at a property on Blackberry Way, Clayton at about 20:30 GMT on Monday, police said.
இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர் ஜதீந்திர லாட் (வயது 49). இவர் மனைவி துக்ஷா (44), மகள்கள் திரிஷா (19), நிஷா (17) ஆகியோருடன், இங்கிலாந்து நாட்டின் வடக்கு பகுதியில் உள்ள கிளேட்டன் என்ற அழகிய கிராமத்தில் வசித்து வந்தார். அக்கம்பக்கத்தினருடன் இணக்கமான நல்லுறவை பராமரித்து வந்துள்ளனர். தொடர்ந்து சில நாட்களாக இவர்களது வீடு திறக்கப்படாமல் இருந்தது.

சீனாவின் கடும் எதிர்ப்பையும் மீறி இந்தியாவும் வியட்நாமும் எண்ணெய் வள ஆய்வு ஒப்பந்தம் !

அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ள வியட்நாம் பிரதமர் நிக்யூன் டான் டங் நேற்று, டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதாரத்தை மேம்படுத்துவது, வியட்நாமின் கடற்பாதுகாப்புக்காக போர்க்கப்பல்கள் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றன. பேச்சுவார்த்தையின் முடிவில் தென் சீனக்கடல் பகுதியில் வியட்நாம் அருகே எண்ணெய் வள ஆய்வுக்கு ஒத்துழைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே பாதுகாப்பு, விண்வெளி உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக வெளியிட்ட அறிக்கையில், ‘இந்தியாவின் கிழக்கு நோக்கிய கொள்கையில் ஒரு முக்கிய தூணாக வியட்நாம் விளங்குகிறது என்பதை இந்தியா மீண்டும் உறுதி செய்துள்ளது. விளைவுகள் கடுமையாக இருக்கும் என்று சீன மீண்டும் எச்சரித்துள்ளது

செவ்வாய், 28 அக்டோபர், 2014

3000 கோடியில் வல்லபாய் படேலுக்கு சிலை ! 450 கோடி மட்டுமே மங்கல்யான் செலவு ! 182 மீட்டரில் பட்டேல் சிலை நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ?

குஜராத்: சர்தார் வல்லபாய் படேலுக்கு 182 மீட்டரில் பிரமாண்ட சிலை அமைக்கப்படுகிறது. இந்த சிலையை அமைக்க பிரபல கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி சுமார் 3000 கோடி ரூபாயில் ஒப்பந்தம் செய்துள்ளது. குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டம், நர்மதா ஆற்றின் நடுப்பகுதியில் சர்தார் சரோவர் டேமில் இருந்து 3.2 கி.மீ தொலைவில் ‘சாதுபெட்’ என்ற இடத்தில் இந்த சிலை அமைய உள்ளது. உலகத்திலேயே இந்த சிலை தான் மிக உயரமான சிலையாக உருவமெடுக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.dinakaran,com

வெளிநாட்டு கருப்புபண முழு பட்டியலும் தாக்கல் செய்யவேண்டும் ! உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அதிரடி உத்தரவு !

வெளிநாடுகளில் கருப்புப் பணம் பதுக்கியுள்ள இந்தியர்களின் முழுப் பட்டியலையும் நாளைக்குள் (புதன்கிழமை) தாக்கல் செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து உச்ச நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது, “நீதிமன்றத்தின் முந்தைய உத்தரவில் மத்திய அரசு மாற்றம் கோரக்கூடாது. முந்தைய உத்தரவில் ஒரு வார்த்தையைக் கூட மாற்ற முடியாது. வெளிநாட்டு வங்கிகளில் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பட்டியலை நாளைக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் புதிய அரசு உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாற்றுமாரு வைக்கப்பட்ட கோரிக்கை ஏற்புடையதல்ல. ஏனெனில், இதற்கான உத்தரவு நீதிமன்றத்தில் வெளிப்படையாக பிறபிக்கப்பட்டு அரசும் அதனை ஏற்றுக் கொண்டுள்ளது. நீங்கள் இது குறித்து எதுவும் செய்ய முடியாது. கணக்கு வைத்திருப்பவர்கள் பற்றிய தகவலை முதலில் எங்களிடம் தாக்கல் செய்யுங்கள், அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் தீர்மானிக்கும்.

பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்க வேண்டும்: லலிதா குமாரமங்கலம்


பாலியல் தொழிலில் சுரண்டலைத் தடுக்க, அதனைச் சட்டபூர்வமாக்க வேண்டும் என்று தேசிய மகளிர் ஆணையத் தலைவர் லலிதா குமாரமங்கலம் வலியுறுத்தியுள்ளார். இந்தத் தொழிலை சட்டபூர்வமாக்குவதன் மூலம் பணி நேரம், சம்பளம், உடல் ஆரோக்கியம், கல்வி மற்றும் அவர்கள் குடும்பத்தினருக்கு பொருளாதார மாற்றுகளை வழங்க முடியும் என்று அவர் கூறுகிறார். மேலும், பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவது, எச்.ஐ.வி. பாதிப்பு ஆகியவற்றையும் தடுக்க முடியும் என்கிறார் அவர். இது குறித்து தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு அவர் தெரிவித்தபோது, “பாலியல் தொழிலை சட்டபூர்வமாக்குவது என்பது அந்தத் தொழிலை ஒழுங்கு முறைப்படுத்துவதாகும். இந்தத் தொழிலில் ஈடுபடும் பெண்களில் பெரும்பாலானோர் கடத்தி வரப்பட்டவர்களாக இருக்கின்றனர். சட்டபூர்வமாக்கினால் பெண்களை வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவதை தடுக்கலாம்.

கத்தி பட 2 ஜி ஸ்பெக்ட்ரம் வசனம் ! வழக்கு பாய்கிறது ! நீதிமன்ற அவமதிப்பு , நாட்டுக்கு அபகீர்த்தி ....

2 ஜி வழக்கு குறித்த வசனம்: கத்தி படத்திற்கு எதிராக வழக்கு நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படத்திற்கு எதிராக மதுரை மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.மதுரை என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்தவர், வக்கீல் ராமசுப்பிரமணியன். இவர் மதுரை மாவட்ட 6வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:கடந்த 27-ந்தேதி அன்று மதுரையில் ஒரு தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த கத்தி திரைப்படம் பார்த்தேன். அந்த படத்தில் டெல்லி சிறப்பு கோர்ட்டில் நடந்து வரும், 2 ஜி வழக்கை சுட்டிக்காட்டி வசனம் பேசப்படுகிறது. நிலுவையில் உள்ள அந்த வழக்கை பற்றி அவர்,2 ஜி-ன்னா என்னானு தெரியுமா? வெறும் காத்த மட்டும் வச்சு கோடி கோடியா கொள்ளையடிச்சவங்க உள்ள ஊருடா...என்று இந்தியாவைப் பற்றியும் நாட்டை ஆட்சி செய்தவர்களை பற்றியும் இந்த திரைப்படத்தில் கேவலமாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

தெருதெருவாய் கூட்டுவது ? தெரிந்து கொள்ள படம் பிடித்தால் சுயநலமுண்டு !

மொத்த இந்தியாவும் துடைப்பக் கட்டையும் கையுமாக தெருவில் இறங்கி விட்டதாக நம்மை நம்பச் சொல்கின்றன முதலாளித்துவ பத்திரிகைகள். காந்தி ஜெயந்தி அன்று தில்லியில் உரையாற்றிய மோடி, அடுத்த ஐந்தாண்டுகளுக்குள் (அதாவது 2019 காந்தி ஜெயந்தி நாளுக்குள்) இந்தியாவை மொத்தமாக துடைத்து சுத்தமாக்கி விடுவதே லட்சியம் என்று முழங்கியிருக்கிறார்.
மோடி வழக்கமான பிரதமர் இல்லை என்பதால், இந்த வேலையை வித்தியாசமான கோணத்திலிருந்து யோசித்திருக்கிறார். அதாவது, உள்ளுக்குள் குமுறிக் கொண்டிருக்கும் பாரதமாதவுக்கு பொட்டு வைத்து பூவைத்து சிங்காரிக்கும் வேலையை தான் மட்டும் செய்தால் பத்தாது என்று சிந்தித்திருக்கிறார். இது அவரது கிச்சன் கேபினட் எழுதிக் கொடுத்த விளம்பரப் படம் என்றாலும் அவரது லட்சியத்தில் அதாவது விளம்பர படத்தில் மொத்த நாடும் பங்கேற்க வேண்டும் என்று வேறு விரும்பியிருக்கிறார். எப்படி பங்கேற்க வைப்பது?

வினவு : ஏழைகளை வதைத்து பணம் பறிக்கும் போலீசும் நீதித்துறையும்?

trial-prisoners-2இலட்சக்கணக்கான நிராபராதிகள் தண்டிக்கப் படுவதற்குக் காரணமே நீதிபதிகள்தான். நிரபராதிகளான ஏழைகளை வதைத்து கோடிக் கணக்கில் பணம் பறிக்கும் கொள்ளைக் கூட்டமாகவே போலீசும் நீதித்துறையும் இயங்குகின்றன
சிறையிடப்பட்டுள்ள ஒரு விசாரணைக் கைதி, அவர் செய்துள்ளதாகக் கூறப்படும் குற்றங்களுக்கு சட்டப் புத்தகத்தில் பரிந்துரைக்கப்பட்டுள்ள தண்டனைக் காலத்தில் பாதியளவுக் காலத்துக்கும் மேலாகச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தால், அத்தகையோரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்படி தமிழகத்தில் மூன்றாண்டுகளுக்குட்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்படும் சிறு குற்றவழக்குகளில் கைதாகி சிறையிடப்பட்டுள்ள ஏறத்தாழ 3,000 விசாரணைக் கைதிகள் உள்ளிட்டு, நாடெங்கும் ஒரு இலட்சத்துக்கும் மேலான விசாரணைக் கைதிகள் அக்டோபருக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும், இது இந்திய நீதித்துறை ஓசையின்றி செய்துள்ள புரட்சி என்றும் ஊடகங்கள் பெருமையுடன் குறிப்பிடுகின்றன.