மாத்தறை வரை கடை வைத்து அப்பாவி சிங்கள மக்களை ஏமாற்றிப் புகையிலை விற்கலாம் என்றால், ஒரு சிங்கள வியாபாரி யாழ்பாணத்தில் தனது வியாபாரத்தை நடத்துவதற்கு எது தடையாக இருக்க முடியும்.
மண்ணெண்ணெய் பேர்மிற் எடுத்து அதிக விலைக்கு, யாழ்ப்பாணத் தமிழனின் தலையில்  கொட்டி  கோடி கோடியாகச் சம்பாதித்தது யார்?
யாழ் – கொழும்பு பஸ் கட்டணத்துடன் தலைக்கு 1000 ரூபா அறவிட்டு பணம் பண்ணியது எந்த சிங்கள வியாபாரியுமல்ல.
யாழ்ப்பாணம், நல்லூர் கோவிலில் கும்பிட்டுக்கொண்டிருக்கும் போதுதான் அந்த அசாதாரண காட்சியைக் காணக்கூடியதாக இருந்தது. அருகே நின்று நல்லூர் கந்தனை வழிபட்டுக் கொண்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சிங்களமக்கள். அதில் பெரும்
பாலானவர்கள் பௌத்த விகாரை ஒன்றுக்குச் செல்லும் பாணியில் கைகளில் மலர் தட்டுக்களுடன் வந்திருந்தார்கள். பௌத்த பிக்குகளையும் இந்தக் கூட்டத்தில் காணக்கூடியதாக இருந்தது.
இவர்கள் கும்பிட்டுக்கொண்டிருந்தார்கள் என்று சொல்வதைவிட கோவில் சுற்றுவட்டாரத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்.
படங்களிலும், செய்திகளிலும் மட்டுமே அவர்களால் பார்க்கக்கூடியதாக இருந்த நல்லூர் கோவிலுக்கு நேரில் வரக்கிடைத்த பிரமிப்பை அவர்களுடைய முகங்களில் காண முடிகின்றது. கனவாக மட்டுமே இருந்ததை நேரில் பார்த்த பெருமிதத்தையும் அவர்களிடம் காண முடிந்தது.
நல்லூர் சுற்றுவட்டாரங்களில் தற்போது சிங்கள மக்களுடைய நடமாட்டமே அதிகளவுக்கு இருப்பதை அவதானிக்க முடிகின்றது. தேர்தலில் வாக்கு வேட்டைக்காக வந்த சிங்கள அரசியல்வாதிகளின் அடிச்சுவட்டைப் பின்பற்றி யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கும் சிங்களமக்களின் எண்ணிக்கை தற்போது பெருமளவுக்கு அதிகரித்திருக்கின்றது.
யாழ்ப்பாணம் வரும் சிங்கள மக்கள் எல்லோருமே தமது விஜயத்தின் முதலாவது கட்டமாக நல்லூர் கந்தசுவாமி கோவிலைத் தரிசிக்க அல்லது பார்வையிட வருவார்கள். அதனால் நல்லூர் சுற்றுவட்டாரங்களில் நின்றுகொண்டால் தினசரி யாழ்ப்பாணத்துக்கு எவ்வளவு சிங்களமக்கள் வந்து செல்கின்றார்கள் என்பதை ஓரளவுக்குக் கணக்கிட்டுக்கொள்ள முடியும். (தமிழ் மக்களும் கண்டிக்குப் போனால் தலதாமாளிகைக்கு விஜயம் செய்யத் தவறுவதில்லை.)
பிரபாகரன் கொல்லப்பட்டு புலிப் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்ட பின், ஏ-9 பாதை திறக்கப்பட்டு சுதந்திரமான போக்குவரத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அதனைப் பயன்படுத்தி சிங்கள மக்கள் துணிந்து யாழ்ப்பாணம் வந்து செல்கிறார்கள். தென் பகுதியிலிருந்து குறைந்த பட்சம் 25 பஸ்களிலாவது சிங்களமக்கள் நாளாந்தம் குடாநாட்டுக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனைவிட ஹைஎஸ் வான்கள், பஜிரோக்கள் போன்றவற்றிலும் சிங்களமக்கள் பெருமளவுக்கு யாழ்ப்பாணத்துக்குப் படையெடுக்கின்றார்கள்.
தென்பகுதியிலுள்ள அரசியல் தொடர்புடைய வட்டாரங்களும், பௌத்த மத சார்பான அமைப்புக்களும் இதற்கான ஏற்பாடுகளைச் செய்வதுடன் ஒவ்வொரு பகுதிகளிலிருந்தும் யாழ்ப்பாணப் பயணத்துக்காக ஆட்களைத் திரட்டுகின்றனர். உடனடியாகவே சிங்கள மக்கள் இந்தக் குழுக்களில் இணைந்துகொள்வதுடன், விருப்பத்துடன் யாழ்ப்பாணம் வருவதாக அவ்வாறு சென்றுவந்த ஒருவர் தெரிவித்தார்.
நல்லுர் கந்தசுவாமி கோவிலில் ஆரம்பமாகும் இவர்களுடைய யாழ்ப்பாணப் பயணம், யாழ் நகரிலுள்ள நாகவிகாரை, நயினாதீவு, தென்மராட்சி என விரிவடைந்துகொண்டு செல்லும்.
குடாநாட்டிலுள்ள தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கும் இவர்கள் செல்கின்றார்கள். இதனைவிட கிளிநொச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள விகாரையும் இவர்களுடைய கவனத்துக்குரிய முக்கிய இடமாக உள்ளது.
யாழ்ப்பாணத்திலுள்ள தங்கு விடுதிகள் அனைத்துமே ஹவுஸ் புல்லாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் பாடசாலைகளிலும், சிலர் துரையப்பா விளையாட்டரங்கிலும் கூட தங்கியிருப்பதாகத் தெரிகின்றது. அத்துடன் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியிலுள்ள பல வீடுகள் விடுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. இதனால் வீடுகளுக்கு பலத்த கிராக்கியும் ஏற்பட்டுள்ளது.
(தமிழர் பகுதிகள் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் தமிழர்கள் பெருமளவில் தென்பகுதிக்கு இடம்பெயர்ந்தார்கள். அப்போது கொழும்பிலும் இதே நிலை தான் தங்கு விடுதிகள் எல்லாம் திடீர் திடீர் என முளைத்தன. வீடுகள் எல்லாம் விடுதிகள் ஆகின).
சமையல் பாத்திரங்களுடன் அரிசி, பருப்பு, உப்பு, கருவாடு என எல்லாவற்றையுமே கொண்டுவரும் இவர்கள் தாம் தங்கியிருக்கும் இடங்களில் அடுப்புமூட்டி சொந்தமாகச் சமைத்துத்தான் சாப்பிடுவார்கள். சாப்பாட்டுக் கடைகளில் போய் சாப்பிடுபவர்களைக் காண முடியாது. (சயனற் தமிழர்களை நம்பி கடைகளில் சாப்பிடப் பயப்படுகிறார்கள் போலும்)
யாழ்ப்பாணத்தில் சிங்கள மக்களுடைய வருகை அதிகரித்திருப்பதற்குச் சமாந்தரமாக சிங்கள வர்த்தகர்களும் பெருமளவுக்குக் கடை விரித்துள்ளார்கள். வீட்டுத் தளபாடங்களிலிருந்து, சிறிய சிறிய பொருட்கள் வரையில் சந்தையில் நிறைந்துள்ளன.
சிறிய ரக தோடம்பழம் குவிந்துகிடக்கின்றது. யாழ்ப்பாணத்தில் தினசரி ஒன்பது லட்சம் ரூபாவுக்கு இந்தத் தோடம்பழம் விற்பனையாகின்றது.
சிங்களமக்களின் அதிகரித்த வருகையுடன் யாழ்ப்பாணப் பொருளாதார மற்றும் சமூகக் கட்டமைப்பிலும் பல மாறுதல்கள் திடீரென உருவாகத் தொடங்கியுள்ளது.
யாழ். நகரின் மத்தியிலுள்ள வீதியோரக் கடைகளில் விலைப் பட்டியல் அறிவித்தல்கள் அனைத்தும் சிங்கள மொழியில் மட்டுமே வைக்கப்பட்டிருப்பதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக வீதியோரங்களில் தோடம்பழங்களைக் குவித்து வைத்திருப்பவர்கள் சிங்கள மொழியில் மட்டுமே விலைகளைக் குறித்துவைத்துள்ளார்கள்.
யாழ். நகரிலும், நல்லூர் கோவிலை அடுத்துள்ள பகுதிகளிலும் கடை வைத்திருப்பவர்கள் மத்தியில் இதனால் ஒரு புதிய போட்டி உருவாகியிருக்கின்றது. சிங்கள மொழி தெரிந்தால்தான் அவர்களால் தமது வர்த்தக நடவடிக்கைகளை அதிகரித்துக்கொள்ள முடியும். அதனால் சிங்களம் தெரிந்த பணியாளர்களைப் பலரும் தேடத் தொடங்கியுள்ளார்கள். யாழ்ப்பாண சமூகத்தைப் பொறுத்தவரையில் அவர்கள் மாற்றங்களை உள்வாங்கி அதற்கேற்றவாறு தம்மை மாற்றிக்கொள்ளும் தன்மையைக் கொண்டவர்கள்.
இதனால் சிங்களமக்களின் அதிகரித்த வருகையால் ஏற்படும் திடீர்ப் பொருளாதார வாய்ப்புக்கள் சமூகத்தில் ஆரோக்கியமற்ற மாற்றங்களை உருவாக்கக்கூடிய ஆபத்துக்கள் உள்ளது என புலன்பெயர்ந்த புலிப் பினாமிகள் கருத்து வெளியிடுகிறார்கள். ஆனால்  சிங்களமக்களின் அதிகரித்த வருகையையிட்டு யாழ்ப்பாணத் தமிழர்கள் எவருமே பாதகமான ஒரு மனநிலையை வெளிப்படுத்தவில்லை.
புலிகளின் ஊடகங்களும், புலிப்பினாமிகளும் சிங்கள மக்களின் வடபகுதி விஜயம் பற்றி தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருகிறார்கள். இனவெறிப் பிரச்சாரத்தின் ஒரு அங்கமாகவே சிங்கள மக்களின் யாழ் விஜயம் பற்றிய இவர்களது கருத்துக்கள் இருக்கின்றன.
1980 க்கு முன் ஆயிரக்கணக்கான சிங்கள மக்கள் வட பகுதியெங்கும் நிரந்தர குடியிருப்பாளர்களாக இருந்தார்கள். தமிழ்த் தீவிரவாதம் தலையெடுத்த பின்னர் மிக மிக மனத்துயருடன் தென்னிலங்கைக்கு இடம் பெயர்ந்தார்கள்.
யாழ்ப்பாணத்தில் ஆஸ்பத்திரி வீதியில் சிங்கள மகாவித்தியாலயம் ஒன்று ஏற்கனவே இயங்கியது. 1977 வரையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் பெருமளவுக்குக் கல்வி கற்றுள்ளார்கள். சிங்களப் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் தமிழ் மாணவர்கள் படிக்கலாம் என்றால், தமிழர் பகுதிகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் சிங்கள மாணவர்களும் படிக்க வேண்டும். அப்படியான சுமூக நிலை உருவாக வேண்டும்.
புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகளுக்குக் கொடி பிடித்துத் திரிந்தவர்களும், புலிகளுக்கென்று பணம் சேகரித்தவர்களும், புலிப்பினாமிகளும் பெருமளவில் இலங்கைக்கு போய்வருகிறார்கள். புலிகள் இருக்கும் வரை அங்கு போகப் பயந்தவர்கள், மகிந்தாவால் புலிகள் ஒழிக்கப்பட்ட பின், தமது சொத்துக்களையும், சொந்தங்களையும் பார்த்து வர தாய்நாட்டுக்குப் போய்வருகிறார்கள். புலிகளை ஆதரித்த இவர்களால் புலிகள் இருக்கும் போது அங்கு போக முடியாமல் போனது எதனால்? நீங்கள் உங்கள் தாய்நாட்டிற்குப் போவதற்குத் தடையாக இருந்தது யார்? நீங்கள் அங்கு போவதற்கு வழி ஏற்படுத்தித் தந்தது யார்?
ஒரு தடவையல்ல ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள்  வங்குரோத்து நிலை பிரகடனப்படுத்தி திருட்டுத்தனமாகவும் போலித்தனமாகவும் பணம்பண்ணி, தொழில் அதிபர்களாக வலம் வரும் புலிகளின் தீவிர ஆதரவாளர்கள் இப்போ எங்கு நிற்கிறார்கள். இலங்கை அதிபர் மாளிகைக்குப் போய் நிதி வழங்கி மகிழ்கிறார்கள். பச்சோந்திகள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, புலன்பெயர்ந்த புலிப் பினாமிகள் போன்ற தமிழ் இனவாதிகளின் கேடுகெட்ட குரல்கள் ஒடுக்கப்பட்டால் தான் நாடு பூரண அமைதி பெறும்.
எமது நிலைப்பாட்டை சிங்கள மக்கள் புரிந்து கொள்ளாவிடில் ஒரு பிரபாகரன் அல்ல பத்துப் பிரபாகரன்கள் உருவாகுவார்கள் என சம்பந்தன் மிரட்டியுள்ளார்கள். சம்பந்தன் கூறுவது போல் பிரபாகரன்களாக மாறி உயிரிழக்க எந்தத் தமிழனும்  தயாராக இல்லை. வேணடுமானால் சம்பந்தன் உட்பட பத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர்கள் பிரபாகரன்களாக மாறி மண்டை பிழந்து சாகட்டும்.
சிவாஜிலிங்கம்,  குதிரை கஜேந்திரன் கும்பல் பழைய கதையை புதிய பாணியில் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். ஆனால் மகிந்தாவின் மறைமுக ஆசியுடன் தான் இவர்களின் குதிரையோட்டம் நடைபெறுகிறது என்பது அடிமுட்டாள்களான புலித்தமிழர்களுக்குப் புரிய பல நாட்கள் எடுக்கலாம்.
தமிழ்காங்கிரஸ் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தனது கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ளார். ஆனால் அவரது கட்சித் தலைவர் அப்பாத்துரை வினாயகமூர்த்தி தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் ஒட்டியிருக்கவே விரும்புகிறார்.
எமது அந்த அழகிய தேசத்தின் அமைதியைக் கெடுக்கவென கங்கணம்கட்டிச்  செயல்படும் நாடுகடந்த தமிழீழம் என்ற கூட்டத்தை தேசத்துரோகிகள் என்று பிரகடனம் செய்ய வேண்டும்.  அவர்களையும் கைது செய்து அவர்களது கூட்டாளிகளுடன் இணைத்து விடவேண்டும். அந்த நல்ல நாள் எப்போவரும்.
(சமரன்) (மாசி 22, 2010)  நன்றி சூத்திரம்