![]() |
பிபிசி பாரசீக சேவை : இரானின் கடைசி ஷா-வின் (மன்னர்) மகனான ரெசா பஹ்லவி, அந்நாட்டில் சமீபத்தில் வெடித்த போராட்ட அலைகளின் தொடர்ச்சியாக, வியாழக்கிழமையன்று ஒரு பெரிய புதிய போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
கடந்த 1979ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சியால் பதவியிறக்கப்பட்ட மன்னரின் மூத்த மகனான இவர் யார்?
பிறந்தது முதலே இரானின் 'மயில் சிம்மாசனத்தை' அலங்கரிக்கத் தயார் செய்யப்பட்ட ரெசா பஹ்லவி, 1979ஆம் ஆண்டு புரட்சி அவரது தந்தையின் முடியாட்சியைத் தூக்கியெறிந்தபோது, அமெரிக்காவில் போர் விமானி பயிற்சியைப் பெற்றுக் கொண்டிருந்தார்.
ஒரு காலத்தில் மேற்கத்திய நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்த அவரது தந்தை முகமது ரெசா ஷா பஹ்லவி, தஞ்சம் புக வேறு நாடு கிடைக்காமல் திணறியதையும், இறுதியில் எகிப்தில் புற்றுநோயால் இறந்ததையும் அவர் தொலைவில் இருந்து கவனித்தார்.

