சனி, 11 செப்டம்பர், 2021

நீச்சல் குளத்தில் பெண் காவலருடன் டிஎஸ்பி நிர்வாணமாக உல்லாசம்.. டிஜிபியிடம் கதறிய கணவன். அதிர்ச்சி வீடியோ.

DSP naked with female guard in swimming pool .. Husband screaming with DGP. Shocking video.

Ezhilarasan Babu -  tamil.asianetnews : அந்த வீடியோவில் உள்ளவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என்றும் சமூக வலைத்தளத்தில் கோரிக்கைகள் எழுந்தன. பின்னர் அது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த வீடியோவில் இருப்பது பீவர் மாவட்ட டிஎஸ்பி ஹரிலால் சைனி என்பதும்,
நீச்சல்  குளத்தில் பெண் காவலருடன் டிஎஸ்பி ஒருவர் சல்லாபத்தில் ஈடுபட்டுள்ள சம்பவம் மிகுந்த  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு குழந்தையின் கண்ணெதிரில் அநாகரிகமாக நடந்து கொண்டது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்நிலையில்  அந்த டிஎஸ்பி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடன் அநாகரீகமான செயலில் ஈடுபட்ட அந்த குழந்தையின் தாயும், பெண் காவலரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

BREAKING! குஜராத் முதலமைச்சர் விஜய் ரூபானி திடீர் ராஜினாமா

 zeenews.india.com : குஜராத் முதலமைச்சர் திடீர் ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எதிர்பாராத நடவடிக்கையாக, விஜய் ரூபானி இன்று குஜராத் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறவிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 11, 2021) குஜராத் முதல்வர் பதவியில் இருந்து விஜய் ரூபானி ராஜினாமா செய்தார். இதுதொடர்பாக பேசிய அவர், தனக்கு முதல்வராக வாய்ப்பு கொடுத்த பாஜக தலைமைக்கு மிகவும் நன்றி என்று தெரிவித்துள்ளார்.

கலைஞரும் இலங்கையின் வடக்கு கிழக்கும் மாகாண சபை அரசும்

டெலோ இயக்க தலைவர் சிறி சபாரத்தினம்- குட்டிமணியும், தங்கதுரையும் சிறையில்  கொடுராமக கொலை செய்யப்பட டெலோவின் தலைவரானார் | Thinappuyalnews
The return of the exile - Frontline

அமரர் ராஜீவ் காந்தியின் முயற்சியால் உருவான இலங்கை வடக்கு கிழக்கு மாகாண அரசை புலிகள் பிரேமதாச கூட்டணியிடம்  இருந்து  காப்பாற்ற முடியாமல் போன வரலாறு பற்றி இன்னும் போதிய புரிதல் பொதுவெளிக்கு இல்லை.
அதன் முதலமைச்சர் திரு வரதராஜர் பெருமாள் தரப்பினருக்கு இதனால் கலைஞர் மீது ஒரு ஏமாற்றம் இருப்பதாக பரவலாக ஒரு வாதம் வைக்கப்படுகிறது
கலைஞர் அந்த மாகாண அரசை காப்பாற்ற தவறி விட்டார் என்று இன்றும் கூட வாதங்கள் வைக்கப்படுகிறது
அதில் எவ்வளவு தூரம் உண்மை இருக்கிறது என்பதை ஆய்வு செய்யவேண்டிய கடமை இருக்கிறது.
அதை ஆய்வு செய்ய பலரும் தயங்குவதற்கு சில காரணங்களும் உண்டு
குறிப்பாக வை கோபாலசாமி அவர்கள் அன்றைய காலக்கட்டங்களில் முழுக்க முழுக்க ஒரு புலித்தலைவராகவே செயல்பட்டிருந்தார்
இந்த வைகோவின் புலி அவதாரத்தை பற்றி இன்று பலரும் பேசுவதை தவிர்க்கிறார்கள்
ஏனெனில் அவர் தற்போது திமுக கூட்டணியில் இருக்கிறார் .
எனவே இவரின் பழைய புலி அவதார உண்மைகளை பேசினால் அவர் மனம் புண்படக்கூடும் . அவரோ தற்போது தனது கடந்த கால தவறுகளை ஓரளவு உணர்ந்துவிட்டார் என்றும் கருத படுகிறது
ஏனெனில் புலிகளின் தொடர்புகளை முள்ளிவாய்க்கால் சம்பவங்களின்போது அறவே கைவிட்டு விட்டார் என்றும் கூறப்படுகிறது
திரு வைகோ. திரு நெடுமாறன் . ஆசிரியர் வீரமணி . அண்ணன் குளத்தூர் மணி போன்றவர்களின் மனம் புண்படும் என்பதற்காக வரலாறு முழுவதும் திமுக வீண் பழி சுமக்கவேண்டுமா?

2000 கோடி முதலீடு . 4000 பேருக்கு வேலை வாய்ப்பு! மத்திய கிழக்கு DP World குழுமம் தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் .

 கலைஞர் செய்திகள்  : முன்னணி கார் நிறுவனமான ஃபோர்டு, சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளதால் இந்தியாவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளது. இதனால் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ள
இதற்கிடையே, தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலின் முதலமைச்சரான பிறகு வெளிநாட்டு முதலீடுகள் அதிகளவில் ஈர்க்கப்பட்டு வருகின்றன. 4000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகியுள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் DP World நிறுவனத்தின் ரூபாய் 2,000 கோடி முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று முகாம் அலுவலகத்தில், ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த DP World குழுமம், தூத்துக்குடி, திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதூர், சேலம், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய நகரங்களில் 2,000 கோடி ரூபாய் முதலீட்டில் கன்டெய்னர் முனையம், சிறு துறைமுகம், குளிர்பதனக் கிடங்கு, பல்பொருள் கிடங்குப் பூங்கா, நவீன வர்த்தகக் கிடங்கு மண்டலம் மற்றும் தகவல் தரவு மையம் போன்றவற்றை நிறுவ திட்டமிட்டு தமிழ்நாடு அரசுடன் அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.

ஆட்சி கலைப்பு... திருமாவளவன் பேச்சால் திமுக உடன்பிறப்புகள் ஷாக்?

 Giridharan N | Samayam Tamil  : யாரை ஆளுநராக கொண்டு வந்தாலும் அவர்களுக்கு தமிழ்நாட்டின் ஆட்சியை கலைத்துவிடும் தெம்பும், திராணியும் கிடையாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் கெத்தாக கூறியுள்ளார்.
 சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் தொல்.திருமாவளவன்
ஹைலைட்ஸ்:
சென்னை அசோக் நகரில் உள்ள விசிக அலுவலகத்தில் மறைந்த இம்மானுவேல் சேகரின் 12 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன், இமானுவேல் சேகரன் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது:
ஆதிதிராவிட பழங்குடி நலத்துறை ஆணையம் உருவாக்கியதற்கு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன் இந்த ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் சிக்கல் உள்ளது என்பதால், தலித் சமூகம் அல்லாத ஒருவரை இப்பதவிக்கு நியமிக்க வேண்டும்.

12,959 அர்ச்சகர்களுக்கு தலா ரூ.1000 ஊக்கத்தொகை- புதிய திட்டத்தை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

மாலைமலர் : யாரும் செய்யாத, யாரும் கேள்விப்படாத 120 அறிவிப்புகளை சேகர்பாபு சட்டமன்றத்தில் அறிவித்தார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டி பேசினார்.
சென்னை:  தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோவில்களில், ஒரு கால பூஜை திட்டம் 12,959 கோவில்களில் செயல்பாட்டில் உள்ளது.
இந்த கோவில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரிகள் மற்றும் பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.
இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரர் கோவில் திருமண மண்டபத்தில் இன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமை தாங்கினார்.

ஆப்கானிஸ்தான் முன்னாள் துணை அதிபரின் சகோதரர் கொலை- தலீபான்கள் அட்டூழியம்

தினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஆட்சி அதிகாரத்தை தலீபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
காபூல்,   ஆப்கானிஸ்தானில் தலீபான் பயங்கரவாதிகள் ஆட்சியை கைப்பற்றி இருக்கும் நிலையில், அங்கு விரைவில் புதிய அரசை அமைப்பதற்கான நடவடிக்கைகளை அவர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இது ஒருபுறம் இருக்க தலீபான்களின் அரசை ஏற்காத முன்னாள் துணை அதிபர் அம்ருல்லா சலே, தன்னைத்தானே ஆப்கானிஸ்தானின் அதிபர் என பிரகடனப்படுத்தி உள்ளார்.
அவரது சொந்த மாகாணமான பஞ்ச்ஷீரில் தலீபான்களுக்கும், எதிர்ப்பு படைகளுக்கும் இடையே தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அம்ருல்லா சலேயின் மூத்த சகோதரரான ரோகுல்லா சலேயை தலீபான்கள் சிறைப்பிடித்துள்ளனர்.
பின்னர் அவரை சித்ரவதை செய்து ெகாலை செய்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்து உள்ளன. அதேநேரம் சில நாட்களுக்கு முன்னரே பஞ்ச்ஷீர் மாகாணத்தில் தலீபான்களுக்கு எதிராக நடந்த சண்டையில் ரோகுல்லா கொல்லப்பட்டதாக அந்த மாகாணவாசி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

தலிபான்களின் புதிய அரசு பதவியேற்கும் விழா இன்று ரத்து... இரட்டை கோபுர தாக்குதல் தினம்

 vishnupriya R -  Oneindia Tamil:  காபூல்: ஆப்கானிஸ்தானில் இன்று புதிய அரசு அமையும் என தலிபான்கள் அறிவித்த நிலையில் அந்த பதவியேற்பு விழாவை ரத்து செய்துள்ளனர்.
தலிபான்களின் நட்பு நாடுகளும் கூட்டமைப்புகளும் தொடர் அழுத்தத்தால் இவர்கள் விழாவை ரத்து செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்தன. இந்த நிலையில் அதே ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இரட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டது.
அப்போது அவர்களுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததால் அவர்கள் மீது அமெரிக்க ராணுவம் போரிட்டது.
இதனால் அவர்களின் ஆட்சியை அமெரிக்கா அகற்றியது. பின்னர் ஜனநாயக ரீதியில் தேர்தல் நடத்தி 2004 ஆம் ஆண்டு புதிய அரசு அமைந்தது. அப்போது முதல் 2014 ஆம் ஆண்டு வரை அதிபராக ஹமீது கார்சாய் தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து அஷ்ரப் கானி அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டு 2021 ஆம் ஆண்டு வரை ஆட்சியில் நீடித்தார்.

வடிவேலு நடிக்கும் புதிய படம் 'புரொடக்சன் 23'

 மின்னம்பலம் : எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும்வரை நகைச்சுவை நடிகனாக தொடர வேண்டும் என்பதே எனது ஆசை' என 'வைகைப்புயல்' வடிவேலு தெரிவித்தார்.
லைகா நிறுவனம் சார்பில் 'புரொடக்சன் 23' என்ற பெயரில் தயாராகும் பெயரிடப்படாத புதிய படத்தில் வடிவேலு கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இப்படத்தை இயக்குனர் சுராஜ் இயக்குகிறார். இதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் நேற்று மாலை வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில் இயக்குனர் சுராஜ் பேசுகையில்,'' கொரோனா காலகட்டத்தில் அனைவரும் சோகமயமாக இருந்தபோது நானும், வடிவேலுவும் சிரித்து பேசி உருவாக்கிய கதை இது.
வடிவேலு இதற்கு முன் இத்தகைய கேரக்டரில் நடித்ததில்லை. அவருடைய ரீ என்ட்ரி முழுநீள நகைச்சுவை படமாக இருக்க வேண்டும் என விரும்பினார். அதற்காக இரண்டு ஆண்டுகள் செலவழித்து சிரித்து சிரித்து உருவாக்கிய கதைதான் இது.

வெள்ளி, 10 செப்டம்பர், 2021

தாலிபான் பாகிஸ்தான் ரகசிய டீல் - பன்ச்சீர் வலி உங்களுக்கு காஷ்மீர் எங்களுக்கு? Panjshir for Kashmir: A secret Pak-Taliban deal

 செல்லபுரம் வள்ளியம்மை  : தாலிபானுக்கு பஞ்சீர் வலியை பறித்து கொடுத்த பாகிஸ்தானுக்கு காஷ்மீரை பறித்து கொடுக்குமா தாலிபான்? இதுதான் இவர்களுக்கு இடையே உள்ள டீல்...
ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதி மாநிலமான பன்சீர் வலி (பன்சீர் பள்ளத்தாக்கு)  சோவியத் ராணுவத்தோடு சுமார் ஐந்து ஆண்டுகள் மோதி தங்கள் பகுதியை தக்கவைத்த பெருமைக்கு உரிய நிலமாகும்
1980 இல் இருந்து 1985 வரை சோவியத் ராணுவத்தோடு நடந்த போரில் சோவியத் ராணுவத்தால் முறியடிக்க முடியாத பெரும் படையாக இவர்களின் முஜாகிதீன் படைகள் இரு விளங்கின
இதன் தளபதியாக இருந்து  அகமத் ஷா மசூத் பாகிஸ்தானின் உதவியோடு அல் கைடா பயங்கரவாதிகளின் தற்கொலை செல்போன் குண்டு சதியால் September 9, 2001 இல்  கொல்லப்பட்டார்  
அகமத் ஷா மசூத் கொல்லப்பட்ட இரண்டு நாட்களில் அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலை அல் கைடா நிகழ்த்தியது . இந்த சுருக்கமான வரலாற்று பின்னணியில் இருந்து கொண்டுதான் இன்று பன்ச்சீர் வலியில் நடக்கும் சம்பவங்களை நோக்கவேண்டும்
பன்ச்சீர் வலியானது ஒருபோதும் தாலிபான்களின் பாணியிலான இஸ்லாமிய அடிப்படை வாதத்தை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
இன்று பாகிஸ்தானின் ராணுவமும்  விமானங்களும் ட்ரான் கருவிகளும் இணைந்து தாலிபான்களால் நெருங்கவே முடியாமல் இருந்த பன்ச் சீர் வலியை கைப்பற்றி தாலிபான்களுக்கு கொடுத்துள்ளார்கள்

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல.. திட்டமிட்ட தொடர் பொய்களால் கட்டமைக்கப்பட்டது! சாத்தூர் சேகரனார்

May be an image of 1 person

Sundar P  : சமசுகிருதம் மொழி அல்ல!   - சாத்தூர் சேகரனார்
சமசுகிருதம் உலகமொழிகளின் தாய் என்றும் இந்திய மொழிகளின் தாய் என்றும் சான்றுகள் இன்றி உளறி வந்தனர்.
1947க்கு முன் பிராமணப் பண்டிதர்கள் தம் பதவியாலும் பவிசாலும் மாறிமாறிக் கூறி வந்து எப்படியோ இந்தப் பொய்களைக் காத்து வந்தனர்.
1947 இந்தியாவிற்கு மட்டும் விடுதலை வரவில்லை. இந்திய மொழிகளுக்கும் விடுதலை கிடைத்தது.
ஒவ்வொரு மொழியின் மொழி அறிஞர்களும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், தத்தம் மொழியை முழுமையாக ஆராய முடிந்தது. இதன் பலனாக பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின.
(அ) சமசுகிருதம் வெறும் பாவை மொழி
(ஆ) இந்தியாவின் உள்ளும் சரி இந்தியாவின் வெளியிலும் சரி ஒருநாள் ஒருபொழுது கூட பேசப்படாத மொழி
(இ) சமசுகிருதம் இந்தியாவின் எந்தமொழிக்கும் – குறிப்பாக வட இந்திய மொழிகளுக்குக் கூட தாயல்ல
(ஈ) சமசுகிருதத்திற்கு சொந்த எழுத்து கூட கிடையாது. தமிழ் இலக்கியத்தில் வரும் தொடர். "பார்ப்பன மகனே பார்பன மகனே…. எழுதாக்கற்பு......"
(உ) எழுதில்லாத மொழி எப்படி மாபெரும் இலக்கியங்களை எழுத முடிந்தது?
15ம் நூற்றாண்டில் சாயனர் என்னும் விசயநகர அமைச்சர்,  அரச தயவு பெற்று பிராகிருத மற்றும் தென்னிந்திய இலக்கியங்களை சமசுகிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூல நூல்களை அழித்து விட்டார்.

ஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்?

"ஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்?
"ஆட்டோமொபைல் துறையை ஆட்டம்காணச் செய்யும் Chip பற்றாக்குறை": கார் நிறுவனங்களின் வருவாய் இழப்புக்கு காரணம்?
கலைஞர் செய்திகள் : சிப் பற்றாக்குறை காரணமாக கார் நிறுவனங்களில் ஒரு பில்லியன் டாலர் வரை வருவாய் இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் ஆட்டோ மொபைல் துறைகளில் எலெக்ட்ரானிக் சாதனங்களின் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்துள்ளது. மேலும் விலை உயர்ந்த கார்களில் எலெக்ட்ரானிக்ஸ் சிப் (Chip) அதிகம் பயன்படுத்தப்படுகிறது. மேலும் கொரோனா தொற்று காரணமாக எலெக்ட்ரானிக்ஸ் தேவையும் அதிகரித்துள்ளது.
சிப் தயாரிப்பில் முக்கிய நாடாக தைவான் உள்ளது. தற்போது அங்கு கடும் தண்ணீர் பஞ்சம் நிலவுவதால் சிப் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிப் தயாரிக்க அதிகமாக தண்ணீர் தேவைப்படும் என்பதும் ஒரு காரணமாக உள்ளது. இதனால் ஆட்டோமொபைல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் துறையில் சிப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது வரக்கூடிய ஆண்டுகளில் இந்த துறைகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

'போலீஸ்' ஆளுநர் ஆர் என் ரவி - காங்கிரஸ் எச்சரிக்கை!

'போலீஸ்' ஆளுநர்- காங்கிரஸ்  எச்சரிக்கை!

மின்னம்பலம் : தமிழகத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் வரவேற்பும் வாழ்த்தும் தெரிவித்துள்ள நிலையில்... தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்,. அழகிரி வேறு விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
“முழுக்க, முழுக்க காவல் துறை பின்புலம் கொண்ட அவரை நாகாலாந்து ஆளுநராக மத்திய அரசு நியமித்தது. இந்நிலையில், அவர் தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டிருப்பதில் உள்நோக்கம் இருப்பதாகச் சந்தேகம் எழுந்துள்ளது” என்று சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறார் கே.எஸ். அழகிரி.
இன்று (செப்டம்பர் 10) கே.எஸ். அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “ரவீந்திர நாராயண ரவி என்கிற ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மத்திய அரசு நியமித்துள்ளது. பாட்னாவைச் சேர்ந்த இவர் 1976 ஆம் ஆண்டு கேரள மாநில ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார்.

திருவண்ணாமலை ஹோட்டலில் உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழப்பு- மூன்று பேர் கவலைக்கிடம்!

May be an image of 1 person and text that says 'JUST IN SUN NEWS அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி உயிரிழப்பு! திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தனியார் உணவகத்தில் அசைவ உணவு சாப்பிட்ட 10 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு! 12 பேர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில், 3 பேருக்கு தீவிர சிகிச்சை -போலீசார் விசாரணை L SUNNEWSTAMIL SUNNEWS sunnewslive.in 10SEP2021 10SEP2'

நக்கீரன் : திருவண்ணாமலையில் அசைவ உணவு சாப்பிட்ட சிறுமி ஒருவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்ட நிலையில், இந்த சம்பவத்தில் 10 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி வட்டம், லட்சுமி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.
கூலித் தொழிலாளியான இவர் அவரது பிள்ளைகள் லக்க்ஷனா, பிரியதர்ஷினி, கரண் என்ற நால்வர் மற்றும் பாரதியார் நகரைச் சேர்ந்த விஷ்ணு, சீனிவாசன், யாகூப், திலகவதி. பையூர் கிராமத்தைச் சேர்ந்த பாஸ்கர், பிரணவ், சந்தியா என மொத்தம் 12 பேரும் ஆரணி நகர்ப் பகுதியில் உள்ள ஒரு தனியார் பிரியாணி கடையில் நேற்று முன்தினம் பிரியாணி  சாப்பிட்டதாகக் கூறப்படுகிறது. அதேபோல் வீட்டுக்கும் பொட்டலம் வாங்கிச் சென்று சாப்பிட்டுள்ளனர்.

திமுகவுக்கு மேலும் 2 மாநிலங்கள் அவை எம்பி பதவிகள் கிடைக்கிறது

ராஜ்யசபா தேர்தல்: திமுக வேட்பாளர்களாக சண்முகம், வில்சன் போட்டி-  மதிமுகவுக்கு 1 இடம்! | DMK to announce Rajyasabha Candidates on today -  Tamil Oneindia

  Vigneshkumar  -   Oneindia Tamil  :  சென்னை: தமிழ்நாட்டில் காலியாக உள்ள இரண்டு ராஜ்ய சபா எம்பி பதவிகளுக்குத் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அதிமுகவின் சொதப்பலான நடவடிக்கை காரணமாகவே இந்த இரண்டு இடங்களும் இப்போது திமுகவின் வசம் வருகிறது
தமிழ்நாட்டில் இருந்து மாநிலங்களவைக்கு மொத்தம் 18 உறுப்பினர்கள் உள்ளனர்.
மக்களவை தேர்தலைப் போல மாநிலங்களை உறுப்பினர்களைப் பொதுமக்கள் நேரடியாகத் தேர்ந்தெடுப்பதில்லை. மாறாக மாநிலச் சட்டசபை மூலமே மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள
2 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாநிலங்களவையில் 3இல் பங்கு தேர்தல் நடைபெறும் என்பதால் மாநிலங்களவையில் கட்சியை வலுவாக வைத்திருப்பது அனைத்து கட்சிகளுக்குமே சவாலான ஒன்றாகவே இருக்கும்.

கங்கை அமரன் முதல்வரிடம் கோரிக்கை? என்னிடம் மிரட்டி வாங்கிய பையனூர் பங்களாவை.. மீட்டுதாருங்கள்..

Velmurugan P -   tamil.oneindia.co : சென்னை : என்னிடம் மிரட்டி வாங்கப்பட்ட பையனூர் பங்களாவை, சசிகலாவிடம் இருந்து எனக்கே மீட்டுக் கொடுங்கள் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு கங்கை அமரன் கண்ணீருடன் கோரிக்கை வைத்திருக்கிறார். விரைவில் முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து கோரிக்கை வைக்கப்போவதாக கூறியிருக்கிறார்.
2017-ம் ஆண்டு சசிகலாவுக்கும் அவருடைய குடும்பத்தினருக்கும் சொந்தமான 187 இடங்களில் வருமான வரித்துறையினரின் சோதனை நடத்தினர்.
அப்போது நடத்திய ஆவணங்கள் அடிப்படையில் சென்னை போயஸ் கார்டனிலுள்ள 10 கிரவுண்ட் நிலம் உள்ளிட்ட ரூ. 300 கோடி ரூபாய் சொத்துகளைக் கண்டறிந்து பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கினர்.

பெண்களுக்கு எதற்கு மந்திரி பதவி... அவர்கள் குழந்தைகளை பெற்றெடுக்கட்டும் - தலிபான்கள்

 Arsath Kan  -   Oneindia Tamil :   காபூல்: ஆப்கானிஸ்தானில் பெண்கள் ஒருபோதும் அமைச்சராக வர முடியாது என்றும் அவர்கள் குழந்தைகளை பெற்றெடுத்து நிம்மதியாக இருக்கட்டும் எனவும் தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
அண்மையில் ஆப்கானிஸ்தானை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்த தலிபான்கள் இடைக்கால அரசையும் நிறுவி அதற்கான அமைச்சரவை பட்டியலையும் வெளியிட்டனர்.
அதில் ஒரு பெண்ணுக்கு கூட வாய்ப்பு வழங்காதது சர்வதேச அளவில் விவாதத்திற்கு உள்ளானனது.
இந்நிலையில் தலிபான் செய்தித் தொடர்பாளர் சையது ஷக்ருல்லா ஹஷிமி ஆப்கானிஸ்தான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ஆப்கானிஸ்தானில் பெண்கள் அமைச்சர்களாக ஆக முடியாது என்றும் பெண்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்தால் அது அவர்களால் தாங்கமுடியாத சுமை என்றும் கூறியுள்ளார்.

அக்டோபர் 1ம் தேதி முதல் இந்த இரண்டு வங்கிகளின் காசோலைகள் செல்லாது..

 மாலைமலர் : வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட கிளையில் இருந்து புதிய காசோலை புத்தகத்தைப் பெறலாம் அல்லது ஏடிஎம்கள், இணைய வங்கி உதவியுடன் புதிய காசோலை புத்தகங்களை கோரலாம்.
புதுடெல்லி: ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய இரண்டு வங்கிகளும், 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சாப் நேசனல் வங்கியுடன் இணைக்கப்பட்டன, இருப்பினும் தற்போதுவரை இந்த இரண்டு பழைய வங்கிகளின் காசோலை புத்தகங்களை பயன்படுத்த அனுமதிக்கப்படுகின்றன.
இந்நிலையில், அக்டோபர் 1ம் தேதி முதல், ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (ஓபிசி) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா (யுபிஐ) ஆகிய வங்கிகளின் பழைய காசோலை புத்தகங்கள் நிறுத்தி வைக்கப்படும் என பஞ்சாப் நேஷனல் வங்கி (பிஎன்பி) அறிவித்துளள்து.
வாடிக்கையாளர்கள் பழைய இ-ஓபிசி மற்றும் இ-யுஎன்ஐ காசோலை புத்தகத்தை, புதுப்பிக்கப்பட்ட பிஎன்பி ஐஎப்எஸ்சி மற்றும் எம்ஐசிஆருடன் கூடிய பிஎன்பி காசோலை புத்தகமாக மாற்றிக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வியாழன், 9 செப்டம்பர், 2021

தமிழில் பெயர் வைப்பதை இசுலாம் ஏன் தடுக்கிறது...?

 Saadiq Samad Saadiq Samad :  கேள்வி: தமிழில் பெயர் வைப்பதை இசுலாமிய "மதம்" ஏன் தடுக்கிறது...?
அது அந்த மதத்தின் பாசிச குணமா அல்லது அந்த மதத்தை பின்பற்றும் சிந்திக்கும் திறனற்ற அடிமைகளின் அடிமை குணமா...?
பதில் :  இஸ்லாத்தின் அடிப்படை ஆதாரங்களான குரான் மற்றும் ஹதீஸ்களின்  பெயர் , மற்றும் வணக்க வழிபாடுகள் அரபியில் தான் இருக்க வேண்டும் என்ற எந்த கட்டுப்பாடும் இல்லை  
காரணம் முஹம்மதின் ஆரம்ப நோக்கம் அரேபியாவை நோக்கியே இருந்ததால்
 மாற்று மொழியை பற்றி முஹம்மது சிந்திக்கவில்லை.
பின் வந்தவர்களே முஹம்மதின் இஸ்லாத்தை அரபிய பகுதிக்கு வெளியில் கொண்டு வந்தார்கள்
அதன் பிறகுதான் குரான் திருத்தம் ஹதீஸ்கள் குவிப்பு என உரு மாறியது  
இஸ்லாமும் பல வழிகளில் பிரிவும் பிளவும் பட்டது அந்த சூழலில் தான் இஸ்லாத்தை தக்க வைக்க இருக்கும் ஒரே ஆயுதம் அரபி என்ற முடிவுக்கு வந்தார்கள்.

ஆப்கன் மத்திய வங்கி ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ் - ‘கோவை பிரதர்ஸ்’ பாணியில் ஆள் பிடிக்கும் தாலிபான்கள்!


கலைஞர் செய்திகள் :ஆப்கானிஸ்தான் மத்திய வங்கியின் ஆளுநராக ஹாஜி முகமது இட்ரிஸ் நியமிக்கப்படுவதாக தாலிபான்கள் அறிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்காவின் படைகள் திரும்பப் பெறப்பட்ட நிலையில், தனது ஆட்சியைக் காப்பாற்ற முடியாமல் அந்நாட்டு அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு வெளியேறிவிட்டார்.
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலை தாலிபான்கள் கைப்பற்றிவிட்டனர்.
இதனால் அந்நாட்டு மக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் விமான நிலையங்களில் குவிந்தனர்.
பேருந்தில் ஏறுவதைப் போல, விமானங்களின் பக்கவாட்டுப் பகுதிகளில் ஏறி, பறக்கும்போது கீழே விழுந்து உயிரைவிட்ட அவலமும் அரங்கேறியது.
இந்நிலையில் மீண்டும் தங்களது நாட்டு மக்களுக்கு தாலிபான்கள் கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.

தமிழ்நாடு புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமனம்

மாலைமலர் : தமிழ்நாடு  ஆளுநராக பதவி வகித்த பன்வாரிலால் புரோகித் பஞ்சாப் மாநில ஆளுநராக நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
சென்னை:  தமிழ்நாடு  ஆளுநராக பன்வாரிலால் புரோகித் பதவி வகித்து வந்தார். இவர் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், புதிய  ஆளுநராக ஆர்.என்.ரவி என்பவரை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார்.
ஆர் என் ரவி நாகாலாந்து ஆளுநராக பதவி வகித்து வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், பஞ்சாப் மாநில ஆளுநராக பன்வாரிலால் புரோகித் நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.

கீழடி அகழாய்வு, உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மு.க.ஸ்டாலின்

   News18 Tamil :  தமிழர்கள் பண்டைய நாகரீகத்தினர் என்பதற்கான அசைக்க முடியாத தொல்லியல் சான்றுகள் உள்ளன என்றும், இதை யாராலும் அசைக்கவோ, மாற்றவோ முடியாது, சிவகங்கை மாவட்டம் கீழடியில் தற்போது நடைபெற்று வரும் அகழாய்வு உலக அரங்கில் கவனத்தை ஈர்த்துள்ளது எனவும் தமிழக சட்டப்பேரவையில் கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விதி எண் 110-ன் கீழ் அறிவிப்புகளை வெளியிட்டார்.
‘வீழ்வது நாமாக இருந்தாலும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்ற வாசகத்துடன் தொடங்கிய அந்த அறிவிப்பை மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
அப்போது, தமிழினத்தின் பெருமையை பறைசாற்றும் அறிவிப்பாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன் என்று கூறினார்.
திமுக எப்போதெல்லாம் ஆட்சி பொறுப்பேற்கிறதோ அப்போதெல்லாம், வள்ளுவர் கோட்டம் அமைத்தது, தமிழ் வாழ்க என எழுத வைத்தது, தமிழ் வழிபாட்டு உரிமை வழங்கியது, தமிழை கணினி மொழியாக்கியது, உலகம் முழுவதும் தமிழை பரப்பியது, செம்மொழி மாநாடு நடத்திய என தமிழ் அரசை நடத்தியது தான் திமுக அரசு எனறு கூறினார்.

இலங்கை வடக்கில்‌ 7 நாட்களில்‌ 106 பேர்‌ உயிரிழப்பு

 வீரகேசரி : வடக்கு மாகாணத்தில்‌  கடந்த ஒருவாரத்தில் 4,083 கோவிட்‌-19 நோய்த்‌ தொற்‌றாளர்கள் அடையாளம்‌. காணப்பட்டனர்‌. அத்துடன்  106பேர் உயிரிழந்துள்ளர் என சுகாதாரத்‌ துறை தாவுகள்‌ தெரிவிக்கின்றன. இவற்றுடன் வடக்கு மாகாணத்தில்‌, 19 தொற்றால்‌ பாதிக்‌பட்டு உயிரிழந்தோர் மொத்த  எண்ணிக்கை 515 ஆக உயர்வ டைத்துள்ளது.
வடக்கு மாகாணத்தில்‌ நேற்று முன்தினம்‌ 7 ஆம்‌.”திகதி செவ்வாய்க்கிழமை. 569 பேர்‌ கொரோனா வைஸ்‌ தொற்றுடன்‌ அடையாளம்‌ காணப்பட்டனர்‌. அவர்களில்‌,
யாழ்ப்பாணம்‌ மாவட்டத்தில்‌, 246 பேரும்‌ வவுனியாவில்‌ 150 பேரும்‌ கிளிநொச்சியில்‌ 99 பேரும்‌ முல்லைத்தீவில்‌ 39 பேரும்‌ மன்னாரில்‌ 31 பேரும்‌ அடங்குகின்றனர்‌.
மாகாணத்தில்‌ நேற்று முன்‌ ‘தினம்‌ 22 பேர்‌ கோவிட்‌-19 நோயினால்‌ உயிரிழந்தனர்‌.
வவுனியா மாவட்டத்தில்‌ மட்டும்‌ 18 பேர்‌ நேற்று முன்தினம்‌ உயிரிழந்தனர்‌.
மாழ்ப்பாணத்தில்‌ 5 பேரும்‌ முல்லைத்தீலில்‌ ஒருவரும்‌. மரணமடைந்தனர்‌.
செப்ரெம்பர்‌ மாதத்தின்‌ முதல்‌ ஏழு நாள்களில்‌ வடக்கு மாகாணத்தில்‌ 4,093
கோவிட்‌-19 நோய்த்‌ தொற்‌றாளர்கள் அடையாளம்‌. காணப்பட்டனர்‌.

கட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- அங்காடிகளில் விற்பனை அதிகரிப்பு

பூஜை பொருட்களை வாங்கும் பெண்கள்
மாலைமலர் : விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மதுரை மார்க்கெட்டுகளில் பிளாஸ்டர் ஆப் பாரிஸ் மற்றும் களிமண்ணால் உருவாக்கப்பட்ட சிறிய மற்றும் பெரிய விநாயகர் சிலைகள் விற்பனைக்காக வந்துள்ளது.
கட்டுப்பாடுகளை மீறி திரண்ட மக்கள் கூட்டம்- மார்க்கெட்டுகளில் விற்பனை அதிகரிப்பு
சென்னை:  : கொரோனா 2-வது அலை சற்று ஓய்ந்துள்ள நிலையில் 3-வது அலை தாக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
எனவே அனைத்து மாநிலங்களிலும் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டு இருந்தாலும், கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து நீடித்து வருகின்றன.
தற்போது பண்டிகை காலம் தொடங்கி இருப்பதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தேவையான கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு ஏற்கனவே கூறி உள்ளது.
இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநில அரசுகளும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.

ஆந்திராவின் பார்ப்பனர் நலத்திட்டங்களின் கேலிக்கூத்து! ஜெகன் மோகன் அரசின் இந்துத்வா

little farce of Brahmin welfare schemes, Pratap Bhanu Mehta, பிராமணர்கள் நலத்திட்டம், பிராமணியம், சமூகநீதி, பிரதாப் பானு மேத்தா, social justice, the new brahminism, caste politics

tamil.indianexpress.com : இது ஒவ்வொருவருக்கும் குறைந்து வரும் வாய்ப்புகளைக் கொண்ட ஒரு தேசத்தை பிரதிபலிக்கிறது, அடையாளத்தின் குறுகிய எண்ணம் கொண்ட கருத்துக்களை அடைய அவர்களை ஊக்குவித்து அதை சமூக நீதி என்று அழைக்கிறது என்று பிரதாப் பானு மேத்தா எழுதியுள்ளார்.
பிரதாப் பானு மேத்தா, கட்டுரையாளர்
மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி இரண்டும் கேலிக்குரிய கருத்துக்களாக மாறிவிட்டன. இதன் புதிய மற்றும் தெளிவான வெளிப்பாட்டை நீங்கள் காண விரும்பினால், தென் மாநிலங்களால் நிறுவப்பட்ட புதிய பிராமணர் நலத் திட்டங்களைப் படியுங்கள்.
தெலங்கானா பிராமணர் சம்க்ஷேம பரிஷத், அல்லது andhrabrahmin.ap.gov.in அல்லது கர்நாடக மாநில பிராமணர் மேம்பாட்டு வாரியத்தின் இணையதளங்களில் சொல்ல ஒரு செய்தி இருக்கிறது.
அம்மாநிலங்கள் ஒவ்வொன்றும் பிராமணர் நலனுக்காக ஒரு தனி நிறுவனத்தை உருவாக்கியுள்ளனர் அல்லது ஆதரித்துள்ளனர்.

தாலிபானையும் அல்-காய்தாவையும் இணைக்கும் ஆப்கானிஸ்தான் உறுதி மொழி

Hibatullah Akhundzada (main focus left) leads the Taliban and Ayman al-Zawahiri heads al-Qaeda

BBC : ட்ரிஸ் எல் பே  -     பிபிசி மானிடரிங்  : ஆப்கானிஸ்தானை மீண்டும் தாலிபன் கைப்பற்றியதில் ஒரு முக்கிய கேள்வி எழுந்துள்ளது. தங்களது நீண்ட கால நட்பு இயக்கமான அல்-காய்தாவுடனான தாலிபன்களின் உறவு எப்படி இருக்கும் என்பதுதான் அந்தக் கேள்வி.
தாலிபனுக்கும் அல்-காய்தாவுக்கும் இடையிலான உறவு, "பேயா" என்ற ஒரு விசுவாச உறுதிமொழியால் பிணைக்கப்பட்டுள்ளது. 1990களில் ஒசாமா பின் லேடன் தாலிபன் தலைவர் முல்லா உமருக்கு அளித்த உறுதிமொழி இது.
இது பலமுறை புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் தாலிபன்கள் இதை வெளிப்படையாக அங்கீகரிக்கவில்லை.
அமெரிக்காவுடனான 2020 அமைதி ஒப்பந்தததுக்குப் பிறகு, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்-காய்தா உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் இருக்காது என்று தாலிபன் ஏற்றுக்கொண்டது. ஆகஸ்ட் 15ம் தேதி காபூலைக் கைப்பற்றிய பிறகு இந்த ஒப்பந்தத்தை அவர்கள் மீண்டும் ஒரு முறை அறிவித்தார்கள். ஆனால் தாலிபன் இயக்கத்தினர் அல்-காய்தாவை வெளிப்படையாக நிராகரித்ததாகவும் தெரியவில்லை.அதேசமயம் அமெரிக்காவைப் பற்றிய தன் எண்ணத்தையும் அல்-காய்தா மாற்றிக்கொள்ளவில்லை.

தென் மாவட்ட அமைச்சர் பி.ஏ.க்களுக்கு தர்ம அடி.. சீனியர் கோதாவில் அடாவடி மிரட்டல்.

 Mathivanan Maran -   Oneindia Tamil :  சென்னை: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் சில மாற்றங்கள் விரைவில் இருக்கக் கூடும் என்கின்றன கோட்டை வட்டாரங்கள். அமைச்சர்கள் சிலரது செயல்பாடுகளில் கடும் அதிருப்தி அடைந்திருப்பதால் அமைச்சரவை மாற்றம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும் தலைமை செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சிக் காலங்களில் அமைச்சரவை மாற்றம் என்பது அடிக்கடி நிகழக் கூடியது.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவுக்கு எதிரானவர்கள் என்பதற்காக சீனியராக இருந்த ஆர்.எம்.வீரப்பன் உள்ளிட்ட அமைச்சர்களை கூண்டோடு தூக்கியடித்த வரலாறும் உண்டு.
அதே பாணியைத்தான் ஜெயலலிதாவும் பின்பற்றினார்.
ஜெயலலிதா முதல்வராக இருந்த போது அமைச்சரவையில் இடம்பெற்றிருந்தவர்களுக்கு எப்போதும் திக் திக் மனநிலைதான். விடிந்து எழுந்தால் பதவி இருக்குமா? இல்லையா? என்பது தெரியாத திரிசங்கு நிலையில்தான் இருந்தனர் அந்த நாள் அமைச்சர்கள்.
அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் blank blank அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் அதிமுக ஆட்சிக் காலத்தில் எந்த துறைக்கு யார் அமைச்சர் என்பதே தெரியாத அளவுக்குதான் நிலைமை இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் அண்ணா, கருணாநிதி ஆகியோர் முதல்வர்களாக இருந்த போது அமைச்சரவை மாற்றம் என்பது அரிதான ஒன்றாகவே இருந்தது.

திருமாவளவனின் மைக்கை பறித்து மேடையிலிருந்து இறங்கு மாறு .. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரி போராட்டம்:

 tamil.indianexpress.com  : ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் நடந்த போராட்டத்தில், திருமாவளவன் பேசியபோது அவரிடம் இருந்து மைக்கை பறித்து மேடையை விட்டு கீழே இறங்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
சாதி வாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை கிண்டியில் நடைபெற்ற போராட்டத்தில், விசிக தலைவர் திருமாவளவன், ஆதரவு தெரிவித்து பேசியபோது போரட்ட ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் அவருடைய மைக்கை பறித்து மேடையை விட்டு கீழ் இறங்கச் சொன்னதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாட்டில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வலியுறுத்தி ‘146 BC, 115 MBC / DNT சமூகங்களின் சமூகநீதி கூட்டமைப்பு சார்பில் சென்னை, கிண்டியில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் மற்றும் விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உள்ளிட்டோர் கலந்து கொண்டார்.

நியூசிலாந்து தாக்குதல்தாரி இலங்கையில் தாக்குதல் நடாத்த திட்டமிட்டாரா? – விஷேட விசாரணை முன்னெடுப்பு

 வீரகேசரி : நியூசிலாந்தில் பல்பொருள் அங்காடி ஒன்றில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையரான மொஹம்மட் சம்சுதீன் அஹமட் ஆதில் தொடர்பிலான சி.ஐ.டி. மற்றும் எஸ்.ஐ.எஸ். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆதிலின் முகப்புத்தக பதிவொன்றினை மையப்படுத்தி, அவருக்கு இலங்கையில் உள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு எதிராக தாக்குதல்  ஒன்றினை நடாத்தும் எண்ணம் இருந்தது என தகவல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஆதில் இலங்கையில் தாக்குதல் ஒன்றினை நடாத்த திட்டமிட்டாரா என விசாரணைகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது.
சமூக வலைத் தளங்களிலும், சில ஊடகங்களிலும், நியூசிலாந்து ஊடகங்களை மேற்கோள் காட்டி, ஆதில், இலங்கைக்கு வந்து இங்குள்ள நியூசிலாந்து நாட்டவர்களுக்கு நல்ல பாடம் ஒன்றினை புகட்ட வேண்டும் என  முகப்புத்தகத்தில் பதிவிட்டிருந்ததாகவும், அதனூடாக அவர் இலங்கையில் தாக்குதல் ஒன்றுக்கு திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.

புதன், 8 செப்டம்பர், 2021

புதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும்! அமைச்சர் கயல்விழி செல்வராஜ் அதிரடி அறிவிப்பு

கலைஞர் செய்திகள்  : புதிய சமத்துவ புரங்கள் அமைக்கப்படும்!  தமிழ்நாடு அமைச்சர் கயல்விழி செல்வராஜ்  அதிரடி அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் வீடற்ற இருளர் இன பழங்குடியினருக்கு ரூ.13.29 கோடி மதிப்பீட்டில் 443 புதிய வீடுகள் கட்டப்படும் என அமைச்சர் கயல்விழி செல்வராஜ் பேரவையில் அறிவித்துள்ளார்.
"அதிமுக அரசு கிடப்பில் போட்ட சமத்துவபுரம் மீண்டும் செயல்படும்” : முக்கிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் 23 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அவர் வெளியிட்ட அறிவிப்புகள் பின்வருமாறு:
ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் 150 பள்ளிகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி மதிப்பீட்டில் புதிய வகுப்பறைகள் மற்றும் ஆய்வக கட்டிடங்கள் கட்டப்படும். 39 அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளில் 100 கூடுதல் வகுப்பறைக் கட்டிடங்கள், ஆய்வகக் கூடங்கள் மற்றும் சுற்றுச்சுவர் ரூ.21.13 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய 30 அறிவிப்புகள் .. பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை குறிப்பு

கலைஞர் செய்திகள் விக்னேஷ் செல்வராஜ் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை கொள்கை விளக்கக் குறிப்பு சமர்பிக்கப்பட்டது.
 மேலும், பிற்படுத்தப்பட்டோர் மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் புதிய 30 அறிவிப்புகளை பேரவையில் வெளியிட்டுள்ளார்.
அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு: 259 கல்லூரி விடுதிகளில் 2 கோடியே 59 லட்சம் ரூபாய் செலவில் செம்மொழி நூலகம் ஏற்படுத்தப்படும்.

259 கல்லூரி விடுதிகளுக்கு 1 கோடியே 44 இலட்சத்து 40 40 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும்.

கவிஞர் புலமைப்பித்தன் காலமானார்! தலைவர்கள் அஞ்சலி!

 நக்கீரன் செய்திப்பிரிவு  :  அதிமுகவின் முன்னாள் அவைத் தலைவரும் பாடலாசிரியருமான புலமைப்பித்தன் (வயது 86) உடல்நலக்குறைவால் காலமானார்.
அவர், உடல்நலக்குறைவு காரணமாகச் சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (08/09/2021) காலை 09.33 மணிக்குச் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
புலமைப்பித்தனின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காகச் சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
திரைத்துறையைச் சேர்ந்தவர்கள், அரசியல் பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்திவரும் நிலையில் தற்பொழுது சசிகலா அவரது இல்லத்திற்குச் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
அதேபோல் அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தமிழ்நாடு அரசு தீர்மானம் .. வெளியேறிய பாஜக உறுப்பினர்கள்

 Josephraj V | Samayam Tamil :  தமிழ்நாடு சட்ட மன்ற கூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது. இதன் பிறகு பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது மதநல்லிணக்கம் குறித்து பேசும் க முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பின்பற்றுவது இல்லை என குற்றம்சாட்டினார்.
நயினார் நாகேந்திரன்
சட்டமன்ற கூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது. இதன் பிறகு பாஜக சட்டமன்ற கட்சி தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தபோது மதநல்லிணக்கம் குறித்து பேசும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அதனை பின்பற்றுவது இல்லை என குற்றம்சாட்டினார்.
தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தை பாஜக வெளிநடப்பு செய்தது.

சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்.. பையனூர் பங்களா உட்பட

 மாலைமலர் :சசிகலாவுக்குச் சொந்தமான சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கி வருமானவரித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
சசிகலாவுக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கம்
சசிகலாவுக்கு செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் கிராமத்தில் 49 ஏக்கர் பரப்பில் நிலம் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 100 கோடி ரூபாய் இருக்கும்.
இந்த சொத்துகளை சசிகலா அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களில் பேரில் வாங்கியுள்ளதாக தெரிகிறது.
இந்த 49 ஏக்கர் சொத்தும் 10க்கும் மேற்பட்டவர்கள் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.
இதையடுத்து வருமானவரித் துறை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகளை முடக்கியுள்ளது. இன்று பையனூர் கிராமத்தில் சசிகலாவுக்குச் சொந்தமான 49 ஏக்கர் நிலத்தையும் வருமானவரித் துறை முடக்கியுள்ளதற்கான நோட்டீஸை ஒட்டும்.

கோடநாடு வழக்கு... நேபாளம் விரையும் தனிப்படை?

 நக்கீரன் செய்திப்பிரிவு  :   லகிரி மாவட்டம் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் விசாரணையானது மிகத் தீவிரமாக நடைபெற்று வருகிறது. கோடநாடு கொலை வழக்கில் ஏற்கனவே காவல் உதவி கண்காணிப்பாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்ட நிலையில் இதில் மேலும் நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டது.
இதனால் இந்த வழக்கில் மொத்தம் ஐந்து தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று நாட்களாகவே அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு வருகிறது.
நேற்று கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் ஷாஜி, அனீஸ் என்ற இருவரிடம் சுமார் 5 மணிநேரம் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர்.
இந்நிலையில் இந்த வழக்கில் பங்களா காவலாளி கிருஷ்ணா தாபாவை நேபாளத்திலிருந்து அழைத்துவரத் தனிப்படை நேபாளம் விரைய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த வழக்கில் முக்கிய சாட்சியமான நேபாள நாட்டைச் சேர்ந்த கிருஷ்ணா தாபாவை ஏற்கனவே கடந்தமுறை அழைத்துவந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர் அமரர் ராஜ மகேந்திரன் 19 May 1943 - 25 July 2021

R. Rajamahendran - Wikipedia

 செல்லபுரம் வள்ளியம்மை  : அண்மையில் மறைந்த இலங்கையின் மிகப்பெரிய தொழிலதிபர் அமரர் ராஜேந்திரன் ராஜ மகேந்திரன் அவர்களின் வாழ்க்கை வரலாறு பல பெருமைக்கு உரிய செய்திகளை தன்னகத்தே கொண்டதாகும்
இலங்கை சுதந்திரத்திற்கு பின்னர் ஏற்பட்ட  பொருளாதார வளர்ச்சியில் ராஜ மகேந்திரனின் பங்கு பிரமிக்க தக்கதாக உள்ளது.
1930 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் மூளாய் என்ற கிராமத்தில் இருந்து சுப்பிரமணியம்  மகாதேவன் என்ற இளைஞரும் . கொக்குவில் என்ற கிராமத்தில் இருந்து சின்னத்தம்பி மகாதேவன் என்ற இளைஞரும் கொழும்புக்கு வேலை தேடி வந்தனர்
அவர்களுக்கு இரு அமெரிக்க கம்பனிகளில் வேலையும் கிடைத்தது  got jobs in two associated American companies named L.D. Seymous and Dodge and Seymour
சரியாக ஒன்பது வருடங்களுக்கு பின்பு இரண்டாம் உலக போர்  ஆரம்பமானது
அதன் காரணமாக அந்த இரு கம்பனிகளின் பங்குகளையும் இந்த இரு இளைஞர்களுக்கு விற்று விட்டு அந்த அமெரிக்கர்கள் சென்றுவிட்டனர்
1939  ஆம் ஆண்டு இந்த இரு கம்பனிகளும் இந்த இளைஞர்களின் கைகளுக்கு வந்தது
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கம்பனிகளின் பங்குகளை வாங்கிய இலங்கையர்கள் என்ற பெருமையையும் இவர்கள் பெற்றார்கள்
இவர்களின் முதலாவது கம்பனி பெயரை o ‘L.D. Seymour Company Mahadevan Limited’ என்று மாற்றினார்கள்.

சாத்தான்குளம் ஜெயராஜ் - பென்னிக்ஸ் கொலை வழக்கு... ஜாமீன் கேட்ட போலீஸ் குற்றவாளிகள்.. மறுத்த உச்ச நீதிமன்றம்.!

Sathankulam father-son murder case ... The culprits who asked for bail .. The Supreme Court abruptly refused.!

Asianet Tamil  : சாத்தான்குளத்தில் தந்தை, மகன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு சிறையில் இருக்கும் போலீஸாருக்கு ஜாமீன் வழங்க உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.
சாத்தான்குளத்தில் தந்தை - மகன் போலீஸாரால் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள்.
அவர்களில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர், சப்இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், “இவ்விவகாரத்தில் உயிரிழந்த பென்னிக்ஸ் மற்றும் ஜெயராஜ், எங்கள் விசாரணையில் இறக்கவில்லை. இதயப் பாதிப்பு, சுவாசப் பிரச்சினை ஆகிய காரணத்தால்தான் இறந்தார்கள். மருத்துவமனை செல்லும் வழியில்தான் இறந்தனர். இந்த வழக்கில் வெளிப்படைத்தன்மை இல்லை. எனவே, வழக்கு விசாரணையை சில காலம் ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரினர்.
இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், “நீங்கள் எதுவும் செய்யவில்லையெனில், அவர்கள் ஏன் கஸ்டடியிலிருந்து விடுவிக்கப்படவில்லை?

Taliban பிரதமர் , துணை பிரதமர்கள், அமைச்சர்கள் என அனைவருமே ஐநாவால் பயங்கரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள்

அரசு அமைகிறது

Velmurugan P  -  tamil.oneindia.com  : காபூல்: உலகிலேயே தேடப்படும் அரசாங்கம் என்றால் அது ஆப்கானிஸ்தானில் அமையும் புதிய அரசு தான் ஏனெனில் ஆப்கானிஸ்தானின் புதிய பிரதமர், இரண்டு துணை பிரதமர்கள், வெளியுறவு மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர்கள் என அனைவருமே ஐநா சபையால் பயங்கரவாதிகள் என பட்டியலிப்பட்டவர்கள் ஆவர்.
ஆகஸ்ட் 15ம் தேதி காபூலை கைப்பற்றிய தாலிபன்கள், ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் அமெரிக்க படைகள் முழுமையாக ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டும் என்று கெடுவிதித்தனர். அதன்படியே அமெரிக்க படைகளும் வெளியேறிவிட்டன,புதிய ஆட்சியை ஆப்கானிஸ்தானில் அமைப்பதற்கு தாலிபன்கள் தயாராகி வருகின்றனர். பல்வேறு குழுவினரிடம் நிர்வாக அமைப்பில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்து பேசி வருகிறார்கள். ஆப்கன் புதிய பிரதமர் : ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்க தாலிபன்கள் தற்போது தயாராகிவிட்டனர். இதை அங்குள்ள ஊடகங்கள் உறுதி செய்துள்ளன. தாலிபன்கள் 'முல்லா முகமது ஹசன் அகுந்தை' ஆப்கானிஸ்தான் நாட்டின் புதிய அரசின் தலைவராக (பிரதமர்) பரிந்துரைத்துள்ளனர். மேலும் தாலிபன்களின் தலைவர் அப்துல் கனி அரசின் துணை தலைவராகவும் (துணை பிரதமர்) பொறுப்பேற்க உள்ளார்.

நனையும் மாஸ்க்: திணறும் மாணவர்கள்: அறிவாரா அன்பில் மகேஷ்?

 மின்னம்பலம் : முழு ஆண்டு பொதுத் தேர்வுக்குக் கூட பயப்படாத மாணவர்களும் பெற்றோர்களும் இப்போது மூன்றாவது அலையை பற்றிய ஒரு வித பயத்தோடே கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் பள்ளி சென்று வருகிறார்கள்.
சில நாட்களிலேயே மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் கொரோனா தொற்று என்று செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. இதுகுறித்து கருத்து தெரிவித்த மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தொற்று பள்ளிக்கு வந்ததால் ஏற்பட்டிருக்காது. பள்ளிக்கு வருவதற்கு முன்பே ஏற்பட்டிருக்கும்” என்று கூறினார்.
அதன் பிறகு, “தொற்று கண்டறியப்பட்ட பள்ளிகள் சீல் வைக்கப்படும்” என்கிறார். 9,10,11,12 மாணவர்களுக்கு மட்டுமே இப்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் , “தொடக்கப் பள்ளிகளையும் திறக்கலாமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்” என்று பேட்டி தருகிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

தலிபான்கள் அடாவடி " கண்கள் மட்டும் தெரியும் வகையில் முகத்தை முழுமையாக மூடவேண்டும்"

 தமிழ் மிரர்  : ஆப்கன் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிலும் மாணவிகள் கட்டாயம் முகத்தை முழுவதுமாக மூடி அபாயா மற்றும் நிகாப் அணிய வேண்டும் என்று தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் வகுப்புக்கள் பால் இன ரீதியில் பிரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் திரையினால் மறைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
தலிபான்கள் வெளியிட்டிருக்கும் கல்வி தொடர்பான நீண்ட அறிக்கையில் மாணவிகள் ஆசிரியைகளால் மட்டுமே படிப்பிக்கப்பட வேண்டும்.
அது சாத்தியமில்லாவிட்டால் நல்ல நடத்தையுள்ள முதியவர்களால் படிப்பிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
தலிபான்களின் முதலாவது ஆட்சி 2001ஆம் ஆண்டு முடிவடைந்த பின்னர் வளர்ந்துள்ள தனியார் கல்லூரிகள் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு இந்த ஆணை பொருந்துவதாகும்.
அவர்களின் காலகட்டத்தில் ஒரே பாலின வகுப்பறைகள் தொடர்பான விதிகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியேறும் போதெல்லாம் குடும்பத்தின் ஆண் உறுப்பினர் ஒருவர் உடனிருக்க வேண்டும் என்றும் மற்றும் பல விதிகள் காரணமாக பெண்கள் பெரும்பாலும் கல்வியிலிருந்து விலக்கப்பட்டனர்.

கொடநாடு வழக்கு மேல் விசாரணைக்குத் தடையில்லை - உச்ச நீதிமன்றம்

 மாலைமலர் : ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதிமன்றில்  அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.
புதுடெல்லி,  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் காவல்துறையின் மேல்விசாரணைக்கு தடை கோரிய மேல்முறையீட்டு மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
கொடநாடு வழக்கின் சாட்சியாக கருதப்படும் அனுபவ் ரவி காவல் துறையின் மேல் விசாரணைக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்ந்தார்.
அவரது மனுவை உயர்நீதிமன்றம்  தள்ளுபடி செய்து, மேல் விசாரணை செய்ய முழு அனுமதி உள்ளது என்று  தெரிவித்திருந்தது.
இதனைத் தொடர்ந்து ஐகோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து காவல்துறையின் மேல் விசாரணைக்கு தடை விதிக்க கோரி உச்சநீதி மன்றத்தில்  அனுபவ் ரவி மேல்முறையீடு செய்தார்.

இலங்கையில் 17 பேரடங்கிய ISIS குழுவினர் பெண்களுக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தல்.. சமூக ஊடக லீக்ஸ்

No photo description available.

Rishvin Ismath  :  யார் இவர், இப்படியான அதிகாரத்தை இவருக்கு யார் கொடுத்தது என்று கேட்டுவிட்டு, இது ஒரு வெறும் தனி மனிதனின் பைத்தியகாரத் தனம் என்று சொல்லி "இதற்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பில்லை" என்று நழுவிவிட முடியாது.
ஒரு பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு ஊறு விளைவித்த பலூன் பிரச்சினை, சேலையை உலக மகா ஆபாச ஆடையாக பிரகடனப் படுத்திய ஆர்ப்பாட்டம் என்ற வரிசையில் தற்பொழுது இந்தப் 17 பெயரர் அடங்கிதாக தெரிவிக்கப்படும் இலங்கையின் ISIS குழுவினர் சுமுக வாழ்வு மீது விடுத்துள்ள பகிரங்க அச்சுறுத்தல் மற்றும் அதற்குக் கிடைத்துள்ள ஆதரவு என்று விடயம் கைமீறி சென்றுகொண்டு இருக்கின்றது.
தமிழர்களுக்கு மத்தியில் தோன்றிய விடுதலை ஆயுதக் குழுக்களை ஓரளவிற்கு வளரவிட்டமை, புலிகள் இந்திய இராணுவத்தால் அடக்கப்பட்டு இருந்த சமயம், இந்திய இராணுவத்தை வெளியேற்றி, புலிகளுக்கு ஆயுதமும் கொடுத்ததன மூலம் தமிழர்களுக்கு மத்தியில் ஆயுதக் குழு இருப்பதை உறுதிசெய்தமை என்று திட்டமிட்டு செயற்பட்ட சிங்கள பேரினவாதம், எப்படி தமிழ் ஆயுதக் குழுக்களையும், புலிகளையும் சாட்டாக வைத்து தமிழர்களை கல்வி மற்றும் அரச துறைகளில் பின்னுக்கு தள்ளியதோ, அதே போன்று, முஸ்லிம்களை பொருளாதார, கல்வி ரீதியில் ஒட்டுமொத்தமாக பின்னுக்கு தள்ள விரும்புவதால், முஸ்லிம்களுக்கு மத்தியில் தெளிவான இஸ்லாமிய பயங்கரவாதக் குழுக்கள் உருவாகுவதை ஆவலோடு எதிர்பார்த்து இருப்பதால், மேலே குறிப்பிட்டது போன்ற ஆரம்பநிலை இஸ்லாமிய பயங்கரவாதிகள் குறித்து அரசு கவனம் செலுத்தப் போவதில்லை என்பதை ஊகிக்கலாம்.

ஆப்கானில் அரபி மொழி பேசும் தாலிபான்கள் கர்ப்பிணி காவலரை சுட்டு கொன்றனர்

பானு நெகர் கொல்லப்படும் போது அவர் 8 மாத கர்பிணி என்கின்றனர் அவரது குடும்பத்தினர்

BBC  : ஆப்கானில் அரபி மொழி பேசும்  தாலிபான்கள் கர்ப்பிணி காவலரை  சுட்டு கொன்றனர்
பானு நெகர் கொல்லப்படும் போது அவர் 8 மாத கர்பிணி என்கின்றனர் அவரது குடும்பத்தினர்
ஆப்கானிஸ்தானில் தாலிபன் புதிய ஆளுகைக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரும் வேளையில், புதிய அரசு பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்க குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டும் தாலிபன் அழைப்பு விடுத்திருக்கிறது.
அங்கு கடந்த 20 ஆண்டுகளாக பெண்கள் அனுபவித்து வந்த ஜனநாயக உரிமைகளை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தாலிபன் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானில் கர்ப்பிணியாக இருந்த காவலர் ஒருவரை தாலிபன்கள் சுட்டுக் கொன்ற சம்பவத்தை பார்த்ததாக சிலர் பிபிசியிடம் கூறியுள்ளனர்.

5 பொது, 4 தனி... 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு!

கலைஞர் செய்திகள் :  9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அண்மையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தாய் மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.
இதையொட்டி 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந்தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

தந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் - மு.க.ஸ்டாலின்

tamil.news18.comதந்தை பெரியார் பிறந்த செப்டம்பர் 17ஆம் நாள் சமூகநீதி நாளாக கொண்டாடப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாடு சட்டமன்றத்தில் விதி எண் 110-ன்கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில்,
“மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, திராவிட முன்னேற்றக் கழகம் முதன்முறையாக 1967 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தபோது, 'இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை' என்று பேரறிஞர் அண்ணா அவர்கள் அறிவித்தார்கள். ஆறாவது முறை ஆட்சிக்கு வந்திருக்கும் திராவிட முன்னேற்றக் கழக அரசு,
அந்தப் பகுத்தறிவுப் பகலவனின் அறிவுச்சுடரைப் போற்றும் விதமாக, வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை விதி எண் 110-ன்கீழ் மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களின் அனுமதியோடு, இந்த மாமன்றத்தில் வெளியிடுவது என் வாழ்வில் கிடைத்தற்கரிய நல்வாய்ப்பு என்பதை எண்ணி மகிழ்கிறேன்.

தாலிபான் தலைவர்களிடையே மோதல்! தாலிபான் முல்லா அப்துல் கனி பரதர் காயம்

 தினத்தந்தி : ஆப்கானிஸ்தானில் ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.
காபூல்,  ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறியதை தொடர்ந்து தலீபான் பயங்கரவாதிகள் கடந்த மாதம் 15-ந் தேதி ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர்.
இதைத் தொடர்ந்து அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார்.
இதையடுத்து ஆட்சி அதிகாரம் தங்கள் வசமனதாக அறிவித்த தலீபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என தெரிவித்தனர்.
இந்த புதிய அரசில் தலீபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தலீபான் பயங்கரவாத அமைப்புக்கும் ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தலீபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

திங்கள், 6 செப்டம்பர், 2021

தனுஷ்கோடியில் இருந்து இலங்கை வர முயன்ற பெண் நடுக்கடலில் கைது

தமிழகத்தில் இருந்து தப்ப முயன்ற முல்லைத்தீவு யுவதிக்கு நேர்ந்த கதி! -  ஜே.வி.பி நியூஸ்

BBC : முல்லைத்தீவு – முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த சிவனேசன் கஸ்தூரி (வயது19) என்ற யுவதியே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவது, இறுதிக்கட்ட யுத்தத்தின் போது, இலங்கையில் இருந்து தப்பி, தமிழகத்தை சென்றடைந்து, அங்கு உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் தங்கியிருந்தார்.
அங்கு நபரொருவருடன் ஏற்பட்ட காதலால், 2018ஆம் ஆண்டு விமானம் மூலம், சென்னைக்கு வந்துள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
விசா முடிந்த பின்னர், இலங்கைக்கு திரும்பி செல்லாமல், சென்னை – வளசரவாக்கத்தில் உள்ள உறவினர் வீட்டில், அவர் சட்டவிரோதமாக தங்கி வாழ்ந்து வந்துள்ளார்.

ஆப்கானில் அதிர்ச்சி திருப்பம்.. சில முக்கிய தலைவர்கள் கொலை.. தாலிபான்களிடம் சமாதானம் பேசும் கொரில்லா படை!

Shyamsundar -   Oneindia Tamil:  காபூல்: ஆப்கானிஸ்தானில் தாலிபான் படைகளுக்கு எதிராக ஒரே எதிர்ப்பு குரலாக இருந்த பஞ்சசீர் மலை கொரில்லா படை போராளிகள் தற்போது தாலிபான்களிடம் பேச்சுவார்த்தை நடத்தும் முடிவிற்கு வந்துள்ளனர்.
அங்கு தாலிபான்களுக்கு எதிராக நார்தன் அலயன்ஸ் குழுவை சேர்ந்த இவர்கள் கடுமையாக போராடி வந்த நிலையில் தற்போது பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டதால் தாலிபான்களுடன் பேச்சுவார்த்தை செய்ய முடிவு செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியை 1996ல் இருந்தே எதிர்த்த போராளி குழுதான் நார்தன் அலயன்ஸ். அங்கு முஜாகிதீன் அமைப்பு ரஷ்ய படைகளுக்கு எதிராக எதிர்த்து போராடிய போது அதில் இந்த குழுவும் ஒன்றாக இருந்தது.
பின்னர் ரஷ்ய படைகள் வெளியேறிய பின் முஜாகிதீன் அமைப்பு பல பிரிவுகளாக உடைந்தது. இதில் ஒரு அமைப்பான தாலிபான்கள் அங்கு 1996ல் ஆட்சிக்கு வந்தது.
தாலிபான்களின் கடுமையான கட்டுப்பாடு, மோசமான ஆட்சியை தொடக்கத்தில் இருந்து எதிர்த்த இஸ்லாமிய பூர்வ குடி மக்கள்தான் நார்தன் அலயன்ஸ்.

தலிபான்கள் பஞ்சிர் வலியை கைப்பற்றியதாக அறிவிப்பு

 hindutamil.in : பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தலிபான்களின் தாக்குதலை ஈரான் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சகம் தரப்பில், “பஞ்ச்ஷீர் மாகாணத்திலிருந்து வரும் செய்திகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. அங்கு தலிபான்கள் நடத்திய தாக்குதல் கடுமையான கண்டனத்துக்குரியது. தலிபான்கள் பேச்சுவார்த்தை மூலம் தங்களது பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள வேண்டும்.
ஆப்கானிஸ்தான் ஆக்கிரமிப்பை ஏற்றுக்கொள்ளும் நாடு அல்ல. ஆப்கானிஸ்தான் ஒரு பிரதிநிதித்துவ அரசாங்கத்தை நிறுவுவதற்கும் ஆப்கானிஸ்தான் மக்களின் அனைத்துத் துன்பங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்க ஈரான் ஆதரவாகச் செயல்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடைகளில் நின்று வேலை செய்பவர்களுக்கு இருக்கைகள் கட்டாயம்!-பேரவையில் சட்ட முன்வடிவு தாக்கல்!

 நக்கீரன்  : தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஒருமாத காலமாகத் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இதில் பல்வேறு புதிய அறிவிப்புகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துவருகிறது.
இந்நிலையில், இன்று கடைகள் மற்றும் நிறுவனங்களில் நின்று கொண்டு பணியாற்றுபவர்களுக்கு இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என்பதற்கான சட்டத்திருத்தம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதற்கான சட்டமுன்வடிவை தொழிலாளர் நலத்துறை அமைச்சர் திட்டக்குடி கணேசன் தாக்கல் செய்தார். தமிழகத்தில் கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஊழியர்கள் வேலைநேரம் முழுதும் நிற்கவைக்கப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு பல்வேறு உடல் நலக்கேடுகள் ஏற்படுகிறது. ஏற்கனவே கடந்த 4 ஆம் தேதி நடைபெற்ற தொழிலாளர் நலத்துறை ஆலோசனைக் கூட்டத்தில் நின்று வேலை செய்யும் ஊழியர்களுக்கு இருக்கை வழங்க வேண்டும் என்ற கருத்துக்களின் அடிப்படையில் இந்த சட்டமுன்வடிவு கொண்டுவரப்பட்டுள்ளது.  1947 ஆம் ஆண்டு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டத்தில் இந்த திருத்தம் கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.

செப்டம்பர் 11’ தாக்குதல்: கடத்தப்பட்ட விமானத்துக்குள் நடந்தது என்ன?

கடத்தல்காரர்கள்
கட்டடம்
BBC : (உலக வல்லரசுகளில் முன்னோடி என்ற அடையளத்துடன் விளங்கி வந்த அமெரிக்காவின் அடித்தளத்தையே அசைத்துப் பார்க்கும் ஒரு சம்பவம் 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நடந்தது. அந்த சம்பவத்தின் சுவடுகளை திரும்பிப் பார்க்கும் வகையில் இன்று முதல் அடுத்த சில தினங்களுக்கு தினமும் ஒரு நினைவை தொடராகப் பதிவு செய்கிறது பிபிசி தமிழ். அதில் முதலாவது கட்டுரை இது.)

செப்டம்பர் 11 அமெரிக்காவின் ஆன்மாவை பயங்கரவாதிகள் சிலர் அசைத்துப் பார்த்த நாள். ஒட்டுமொத்த உலகத்தின் போக்கையும் மாற்றிய நாள்.பல்வேறு நாடுகளில் அமெரிக்கா பயங்கரவாதத்துக்கு எதிரான போரைத் தொடங்குவதற்கும் இந்த நாளே தொடக்கப் புள்ளியாக அமைந்தது. விமான நிலையங்களின் பாதுகாப்பையும், விமானப் பயணத்தின் தன்மையையும் நிரந்தரமாக மாற்றியது.நெஞ்சை உருக வைக்கும் ஆயிரக்கணக்கான சோகக் கதைகளும், நூற்றுக்கணக்கான வீரதீர நினைவுகளையும் ‘செப்டம்பர் 9’ சுமந்து கொண்டிருக்கிறது.

ஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை? மோடிக்கு சிவசேனா கேள்வி

tamil.indianexpress.com :Why do you hate Nehru so much? Sanjay Raut asks Centre: சுதந்திர தின சுவரொட்டிகளில் நேரு புகைப்படம் தவிர்ப்பு; ஸ்டாலின் காட்டும் அரசியல் முதிர்ச்சி ஏன் உங்களிடம் இல்லை? மத்திய அரசுக்கு சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கேள்வி
இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மத்திய கல்வி அமைச்சகத்தின் அமைப்பால் வெளியிடப்பட்ட சுவரொட்டியில் இருந்து முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் படத்தை தவிர்ப்பது மத்திய அரசின் “குறுகிய மனநிலையை” காட்டுகிறது என்று சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.
மேலும், மத்திய அரசு ஏன் நேருவை மிகவும் வெறுக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

விதவை தாயிடமிருந்து 13 வயது சிறுமியை ரவுடி கடத்தி சென்ற ரவுடியை கைது செய்யவேண்டும்

May be an image of one or more people
May be an image of 1 person and beard

Arumugam Selvi  : விதவை தாயிடமிருந்து 13 வயது சிறுமியை ரவுடி கடத்திச் சென்றான்.
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு காவல் நிலையத்திற் குட்பட்ட தேவநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த விதவை தாய்  இசக்கியம்மாள், மூன்று ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவரை உடல் நலக்குறைவால் இழந்தார். அவர் தனது 14, 13 வயது மகள்கள் மற்றும் 12 வயது மகனுடன்  கூலி வேலைகளை செய்து வாழ்ந்து வந்தார்.  
அதே கீழதேவநல்லூர் பறையர் மக்கள் மீது  நான்கு கொடுமைகளைச் செய்தவர் சுடலையின் மகன் முப்பிடாதி என்பவர் என அடையாளம் காணப்பட்டார். 15.10.2020 அன்று, விதவை  தாய்  எசக்கியம்மாள் வேலைக்குச் சென்றபிறகு அவரது வீட்டிற்குள் நுழைந்து, முப்பிடாதி கத்தியால் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார். பெண்ணின் சகோதரர் வீட்டிற்குள் வந்து முப்பிடாடி வீட்டை விட்டு வெளியே ஓடினார்
சிறுமியின் தாய் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்து எதிரி மீது போக்சோ சட்டம் - 2012 -ன் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். ஜாமீனில் வெளிவந்த  முப்பிடாதி 13 வயது சிறுமி பலமுறை குறிவைத்து பட்டுள்ளார். இது தொடர்பாக எசக்கியம்மாள் போலீசிலும் புகார் அளித்துள்ளார்.
04.09.2021 அன்று நீண்ட நாட்களுக்குப் பிறகு இடையன்குளம் அமீர்ஜம்மாள் மேல்நிலைப் பள்ளி திறக்கப்பட்டதில் இருந்து அந்த பெண் காலை 8.15 மணிக்கு சைக்கிளில் பள்ளிக்குச் செல்கிறாள்.

ஆசிரியர் தினமும் தத்துவ மேதை ராதாக்கிருஷ்ணனனும் .. இவரின் "இந்தியா தத்துவ இயல்" உண்மையில் எழுதியது Prof Jadunath Sinha ’

 

Dr. Sarvepalli Radhakrishnan: The teacher who stole from his student's thesis
In January 1929, one Jadunath Sinha, then a little known young Lecturer of Philosophy in the Meerut College, having a brilliant academic track record, created a sensation in the literary world by accusing Dr. Radhakrishnan of plagiarizing extensively from the first two parts of his thesis titled 'Indian Psychology of Perception, Vol I & Vol II, which were submitted by him to the Calcutta University (CU) for the coveted Premchand Roychand Studentship (PRS) of 1922. While Jadunath Sinha had submitted the Vol. I of his thesis in 1922, he submitted Vol. II of the thesis in 1923. The piracy has been made from these two parts of his thesis.
Jeevan Malla India : புத்தகத்தில் உள்ள எழுத்து என்பது அதை யார்
எழுதினார்களோ அவர்களின் பொக்கிஷம் அல்லது புதையல். அப்படிப்பட்ட பொக்கிஷத்தை திருடினால் எழுத்தாளனுடைய மனநிலை எப்படி இருக்கும்? என்பதை ஒரு எழுத்தாளனால் மட்டுமே அந்த வேதனையை உணர முடியும்.
இந்தியாவில் முதல் எழுத்துத்திருட்டு வழக்கு யார் மீது என்றால், நீங்கள் எல்லாம் ஆசிரியர் தினம் என கொண்டாடி கொண்டு இருக்கின்றீர்களே…! அதே டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது தான்.
யார் இந்த ராதா கிருஷ்ணன்?

எடப்பாடி விரைவில் கைது?; ஆதாரம் சிக்கியதாக தகவல்!

Josephraj V | Samayam Tamil  :  கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் எடப்பாடி பழனிச்சாமிக்கு தொடர்பு இருப்பது ஆவணங்களில் தெளிவாக இருப்பதாகவும், அவர் சிறைக்கு செல்வது உறுதி என்றும் தமிழக முக்கிய கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கணித்துள்ளார்.
இந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வஞ்சித் பகுஜன் அகாடி கட்சியின் 4 மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மாநில பொதுச்செயலாளர் முத்துசாமி தலைமையில் தர்மபுரியில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து சுமார் 50க்கும் மேற்பட்ட முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
இதன் பிறகு முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
பண்டிதர் அயோத்திதாசர் மணிமண்டபம் கட்டுவதற்கு ஆணை பிறப்பித்த தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் கட்சியின் சார்பில் நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

ஆண்களுடன் இனி செக்ஸ் இல்லை - கருக்கலைப்பு சட்டம் ...அமெரிக்க பெண்கள் போராட்டம்!

 News18 Tamil  :      கருக்கலைப்பு சட்டத்தை அரசு திருத்தும் வரையில் ஆண்களுடன் செக்ஸில் ஈடுபடாமல் செக்ஸ் ஸ்டிரைக்கில் பெண்கள் ஈடுபட வேண்டும்
 இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என அமெரிக்காவில் பெண்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் ‘செக்ஸ் ஸ்டிரைக்’ என்ற பெயரில் இனி ஆண்களுடன் செக்ஸில் ஈடுபட வேண்டாம் என நூதன போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என பெண்களுக்கு நடிகையும், பாடகியுமான பெட்டே மிட்லர் அழைப்பு விடுத்திருக்கிறார்.
செக்ஸ் ஸ்டிரைக் ஏன்?
கருக்கலைப்பு செய்வது குற்றம் என்றும் கருக்கலைப்பு செய்து கொள்ள இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் இதற்காக தடையும் இருந்து வருகிறது.

பஞ்சிர் வலியில் 600 தலிபான்கள் கொலை! தாலிபான்களுக்கு ஆதரவாக பாகிஸ்தான் விமானங்கள்!

  ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர்களின் கிளப் ஹவுஸ் உரையாடல்கள் மூலம் ஆப்கானிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள பஞ்சிர் வலியில் நடக்கும் போர் பற்றிய செய்திகள் கொஞ்சம் அறியக்கூடியதாக இருக்கிறது  அங்கு தற்போது வெளியுலக தொடர்பு அவ்வ்வளவாக இல்லை
பஞ்சிர் பள்ளத்தாக்கில் தாலிபானின் முக்கிய தளபதி பஞ்சிர் வலி போராளிகளால் கொல்லப்பட்டுள்ளார்
அதன் பின்பு பாகிஸ்தானின் விமான தாக்குதல் பஞ்சிர் வலி போராளிகளின் இருப்பிடங்கள் மீது நடத்தப்பட்டுள்ளது
தாலிபான்கள் பாகிஸ்தானின் அவுட் சோர்ஸ் ஆர்மி என்பதை இந்த செய்தி நிரூபிக்கிறது.
மின்னம்பலம் : மேலும் காபூலில் ஐ எஸ் ஐ எஸ் பயக்கங்கரவாதிகள் முகாமிட்டு இருப்பதாகவும் கூறுகிறார்கள்
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அமைக்க தயாராகி வரும் நிலையில், அந்நாட்டின் வடகிழக்கு மாகாணமான பஞ்ச்ஷீரில் சுமார் 600 தலிபான்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வருகின்றன. இதனால் ஆப்கானிஸ்தானின் அரசியல் ஸ்திரமற்ற தன்மை நீடிக்கிறது.