சனி, 23 ஜனவரி, 2016

சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்கள் வெளியீடு


இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான சுபாஷ் சந்திர போஸ் தொடர்பான 100 ரகசிய ஆவணங்களை இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி இன்று வெளியிட்டார்.சுபாஷ் சந்திர போஸின் பிறந்த தினமான இன்று தேசிய ஆவணக் காப்பகத்தில் இந்தக் கோப்புகள் டிஜிட்டல் முறையில் வெளியிடப்பட்டன.
சுபாஷ் சந்திர போஸின் குடும்ப உறுப்பினர்கள் இந்த நிகழ்வின்போது உடனிருந்தனர்.
இனி ஒவ்வொரு மாதமும் 25 ரகசியக் கோப்புகளை வெளியிடுவதற்கு தேசிய ஆவணக் காப்பகம் திட்டமிட்டுள்ளது.

விஜயதரணி காங்கிரசில் இருந்து விலகுகிறார்.....பாஜக ...அதிமுக...வாசன் கட்சி...?

தமிழக மகிளா காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து விஜயதாரணி எம்.எல்.ஏ., நீக்கியதை அடுத்து ஜி.கேவாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழக காங்கிரஸ் கட்சி தலைவராக  ஈவிகேஎஸ் இளங்கோவன் பொருப்பேற்றாதிலிருந்து அவருக்கு ஆதரவாக விளவங்கோடு எம்எல்ஏ விஜயதாரணி செயல்பட்டு வந்தார். இதனால், ஈவிகேஸ் இளங்கோவன் ஆதரவால் விஜயதாரணியை தமிழக மகிளா காங்கிரஸ் தலைவராக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் மேலிடம் நியமித்தது.

அரியானாவில் சீனா 6750 கோடி முதலீடு செய்ய ஒப்புதல்..குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள்

அரியானா மாநிலத்தில் 6750 கோடி ரூபாய் முதலீடு செய்வதற்கு சீனாவைச் குறிப்பாக, வாண்டா குழுமம், சீனா லேண்ட் டெவலப்மெண்ட் பிரைவேட் லிமிடெட், செட்.டி.இ உள்ளிட்ட பல நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
சேர்ந்த 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ஒப்புதல் அளித்துள்ளன. இந்தியாவின் அரியானா மாநிலம் பெரிய அளவில் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதல்வர் மனோகர் லால் கத்தார் தலைமையிலான குழு சீனாவின் ஷாங்காய் நகருக்கு வந்துள்ளது. ஷாங்காயில் தொழிலதிபர்கள் மற்றும் இந்தியர்கள் மத்தியில், பேசிய முதலமைச்சர் கத்தார், அரியானாவில் தற்போது தொழில் துவங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை உருவாகியிருப்பதை சுட்டிக்காட்டி, முதலீடு செய்வதற்கு அழைப்பு விடுத்தார்.

ஜெ., விடுதலையை எதிர்ப்பது ஏன்? சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க., விளக்கம்

புதுடில்லி: தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ள, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன், சுப்ரீம் கோர்ட்டில் நேற்று, மனு சமர்ப்பிக்கப்பட்டதற்கான காரணங்களை குறிப்பிட்டார்.
சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, அவர் தோழி சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கில், சிறப்பு கோர்ட் அளித்த தீர்ப்பை, கர்நாடகா ஐகோர்ட் ரத்து செய்தது.இதை எதிர்த்து, தி.மு.க., பொதுச் செயலர் அன்பழகன் சார்பில், அவர் வழக்கறிஞர் பிரகாசம், மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.  தி.மு. க ஊழல் பண்ணியிருந்தா அவங்களும் கண்டிப்பா தண்டனை அனுபவிக்கனும். அதை நிரூபிக்க அ.தி. மு.க கேஸ் போடலாம்ல?  யாரு வேண்டாம்னு சொன்னா? வாய் கிழிய பேசற அடிமைகளே.. உங்க ஆத்தா தப்பு பண்ணுச்சா இல்லையான்னு சொல்லுங்க.. அடுத்தவன் தப்பு பண்ணுனான்.. அதனால எங்க ஆத்தாவும் பண்ணுச்சுனு சொல்ல வெட்கமா இல்லையா உங்களுக்கு? .

சட்டசபை : திமுக ஆட்சி அமைக்க 37.7%; அதிமுகவுக்கு 35.7% பேர் ஆதரவு - கருத்து கணிப்பு.மக்கள் ஆய்வகம்

சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் திமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 37.7%; அதிமுக தலைமையில் ஆட்சி அமையும் என்று 35.7% பேர் ஆதரவு தெரிவித்துள்ளதாக லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகத்தின் "மக்கள் ஆய்வகம்" கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள், தேர்தல் பிரச்சனைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் தொடர்பாக "மக்கள் ஆய்வகம்" ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை அறிவித்துள்ளது. சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பேராசிரியர் ராஜநாயகம் இந்த முடிவுகளை வெளியிட்டு கூறியதாவது: சட்டசபை தேர்தல் தொடர்பாக கடந்தாண்டு ஆகஸ்ட்டில் ஒரு கருத்துக்கணிப்பை வெளியிட்டிருந்தோம்.
39 லோக்சபா, 120 சட்டசபை தொகுதிகளில்.. இப்போது, மழை வெள்ள பாதிப்புக்குப்பிறகு மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்பதை அறிய, தமிழகத்தின் 39 லோக்சபா தொகுதிகளுட்பட்ட 120 சட்டசபை தொகுதிகளில் கருத்துக்கணிப்பு நடத்தினோம். ஜனவரி 7 முதல் 19 வரை நடந்த இக்கருத்துக்கணிப்பில் 5, 464 பேர் பங்கேற்றனர்.

மலேசியா தைப்பூச திருவிழாவில் கார் புகுந்ததில் 5 பேர் பலி..பக்தர்கள் கூட்டத்தில்


மலேசியாவில் உள்ள முருகன் கோயிலில் தை பூசத்திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பத்கர்கள் குவிந்துள்ளனர். இந்த நிலையில் பக்தர்கள் செல்லும் பாதையில் பிஎம்டபிள்யு கார் ஒன்று வேகமாக வந்து புகுந்தது. இதில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். nakkheeran,in

உங்கள் முதல் புத்தகத்தை எழுதுதல்பற்றி, சில ஆலோசனைகள்: என். சொக்கன்


nchokkan.wordpress.com :பல நண்பர்கள் என்னிடம் புத்தகம் எழுதுவதுபற்றிக் கேட்டுள்ளார்கள். அவரவர் தங்களுடைய துறையில் நிபுணர்கள், அல்லது அதற்கான நியாயமான முயற்சியில் இருப்பவர்கள், அதனை நூலாக எழுத என்ன வழி, நான் எதை எழுதலாம், நல்ல தலைப்பை எப்படித் தேர்வு செய்வது, பதிப்பகங்களை எப்படி அணுகுவது, அவர்கள் எப்போது நமக்குப் பதில் அனுப்புவார்கள், அதற்கு ஏதேனும் செலவு ஆகுமா, அல்லது அவர்கள் நமக்கு ராயல்டி தருவார்களா என்றெல்லாம் அவர்களுடைய கேள்விகள் இருக்கும்.
இந்நண்பர்களிடம் எனக்குத் தெரிந்ததைச் சொல்வேன். ஏற்றுக்கொண்டு முயன்று நூல் எழுதி வெளியிட்டவர்களும் உண்டு, எழுதாதவர்களும் உண்டு. அவரவர் வசதி, அவரவர் முயற்சி.
முதல் நூல் எழுதும் ஆர்வம் உள்ளவர்களுக்காக, என்றைக்காவது இதுபற்றிப் பொதுவில் எழுதவேண்டும் என்று நினைப்பேன், அதற்கான நேரம் இதுவரை அமையவில்லை.

மரசெக்கு நல்லெண்ணெய்,தேங்காய் எண்ணெய்.....ரசாயனம் கலக்காதது..தீங்கு விளைவிக்காதது

இப்போதெல்லாம் நாள்தோறும் சந்தைக்கு வரும் ஒவ்வொரு புது சமையல்
எண்ணெயுமே ‘ஆரோக்கியத்துக்கு உத்தரவாதம்’ என்று விளம்பரப்படுத்திக் கொண்டு, வருவதால் நம்மில் பலருக்கு குழப்பம் அதிகரிப்பதுதான் மிச்சம். இந்தக் குழப்பத்துக்கு விடை காண்பதற்கு முன், இந்த எண்ணெய் நல்லதா, கெட்டதா, கண்டிப்பா தேவையா? என்கிற தகவல்களைத் தெரிந்து கொள்வோம்..
எண்ணெய் என்பது கொழுப்பு.; இந்த கொழுப்பு ஏன் தேவை? உடலுக்குத் தேவையான சக்தி கிடைக்க,  செல்களின் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலத்தைக் கொடுப்ப தற்கு, உள் உறுப்புகளைப் பாதுகாப்பதற்கு… புரதத் திலும் மாவுச் சத்திலும் உள்ளதைப் போல 2 மடங்கு ஆற்றல், கொழுப்பில் இருந்து கிடைக்கிறது.
ஒரு கிராம் புரதத்தில் கிடைப்பது 4 கலோரிகள் என்றால் அதே அளவு கொழுப் பிலோ 9 கலோரிகள்! கண்ணுக்குத் தெரிந்தது, கண்ணுக்குத் தெரி யாதது என கொழுப்பில் 2 வகை.

இந்து பத்திரிக்கை : சாதிய நிழல் படிந்த தமிழக கல்வி நிறுவனங்கள்!..தலித் ஒடுக்குமுறை பள்ளிகளிலேயே ஆரம்பித்துவிடுகிறது'

சென்னை ஐஐடியில் நடந்த மாணவர் போராட்டம் | கோப்புப் படம்.சென்னை ஐஐடியில் நடந்த மாணவர் போராட்டம் | கோப்புப் படம். தமிழகத்தில் தலித் ஒடுக்குமுறை பள்ளிக்கூடங்களிலேயே ஆரம்பித்துவிடுகிறது' ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை இந்திய கல்வி நிறுவனங்கள் பலவற்றிலும் சாதியத்துக்கு எதிரான போராட்டங்களை வலுக்கச் செய்திருக்கிறது.
இந்தச் சூழலில், சாதி பாகுபாடு உயர் கல்வி நிறுவனங்களில் எந்த அளவுக்கு வேரூன்றியிருக்கிறது. அரசாங்கத்தின் அதிரடி பட்ஜெட் குறைப்புகளும், அவசரகதி முடிவுகளும் ஒரு தலைமுறையையே எவ்வாறு துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது என்பதை 'தி இந்து' ஆங்கில நாளிதழ் பகுப்பாய்வு செய்துள்ளது.

இளங்கோவன் : ஜெயலலிதாவுக்கு ரூ.12 கோடி கொடுத்தால் துணைவேந்தர் பதவி... எம்ஜியாரிடம் பறித்துவிட்டு அவரையே துரத்தியவர்தானே

எம்.ஜி. ஆரிடம் இருந்தது அனைத்தையும் பறித்துக் கொண்டு விரட்டிவிட்டவர் தான் இந்த ஜெயலலிதா என தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தெரிவித்துள்ளார். சேலம் கோட்டை மைதானத்தில் வியாழக்கிழமை இரவு காங்கிரஸ் கட்சியின் பொதுக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில்,
ஜெயலலிதா ஆட்சியில் அனைத்துமே பணம் தான். பணம் கொடுக்காவிட்டால் ஒரு வேலையும் நடக்காது. சேலம் என்றாலே மாம்பழம் தான். அப்படிப்பட்ட மாம்பழத்தை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது விவசாயிகள் மகிழ்ந்தனர். ஆனால் தற்போதோ எங்கும் சாராயம் தான் இருக்கிறது.
பெரியார் பல்கல்கழக ஆசிரியர்கள் என்னை சந்தித்து, துணை வேந்தர் எங்களை எல்லாம் நீக்கிவிட்டு புதியவர்களை வேலைக்கு எடுக்கிறார். அவர்களிடம் ரூ.6 முதல் 7 லட்சம் வரை வாங்குகிறார் என்றார்கள். தமிழகத்தில் பல்கலைக்கழக துணை வேந்தராக ஜெயலலிதாவுக்கு ரூ.12 கோடி கொடுக்க வேண்டும்.  இந்த ஆளு வாயை திறந்தாலே கொட்டுவார்...அம்மா..அய்யா என்று பார்க்கமாட்டார்   அம்புட்டு தைரியம்....

வெள்ளி, 22 ஜனவரி, 2016

தாஜிகிஸ்தான் :13,000 ஆண்களின் தாடி...போலீசார் வழித்தார்கள்...Police shaved 13,000 men..Tajikistan

தாஜிகிஸ்தான் நாட்டில் இஸ்லாமிய அடிப்படை வாதத்திற்கு எதிரான நடவடிக்கைகளை அந்த நாட்டு அரசு மேற்கொண்டு வருகிறது. ஆண்கள் தாடிவளர்ப்பது  பெண்கள் முகத்தை மூடிவது போன்று ஒரு தீவிரவாத வெளிப்பாடாகவே பார்க்கப்படும்  நிலையில் இந்த நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இஸ்லாமியத் தீவிரவாதம் மற்றும் அந்நிய தாக்கங்களுக்கு எதிராக நடத்தப்பட்டுவரும் நாடளாவிய நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அரசாங்கம் கூறுகிறது. பெண்களும், ஹிஜாப் எனப்படும் தலையங்கிகளை அணியக்கூடாது என்று கோரப்படுகிறார்கள். பல்கலைக்கழகங்களிலும் பள்ளிக்கூடங்களிலும் இந்த ஹிஜாப் அணிய ஏற்கனவே தடை இருக்கிறது.தாஜிகிஸ்தானில் ஒரே ஒரு பிரதேசத்தில் மட்டும், சுமார் 13,000 ஆண்களின் தாடிகளை தாங்கள் சமீபத்தில் மழித்துவிட்டதாக போலிஸார் கூறுகின்றனர்.ஏனைய பிரதேசங்களிலும் இந்த நடவடிக்கைகள் ஆரம்பித்து உள்ளதாக தெரியவருகிறது
Police in Khatlon say they have shaved the beards of nearly 13,000 men They called me a Salafist, a radical, a public enemy. And then two of them held my arms while another one shaved half of my beard."
Djovid Akramov says he was stopped by Tajik police outside his house, along with his seven-year-old son, last month - and taken to the police station in Dushanbe where he was forcibly shaved.

ஏர் டெல் இரண்டாயிரம் ரூபாய்க்கு....16,420 ரூபாய் கட்டணமாக...ரசீதுகள் கவனம் .

Arun Mo முகநூல் : ஏர்டெல் – உண்மையைச் சொல்
Arun Mo's photo.கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கும் மேலாக ஏர்டெல் அலைபேசி சேவையைத்தான் பயன்படுத்திவருகிறேன். ஆனால், இரண்டு மாதங்களுக்கு முன்பாக இரண்டாயிரம் வரவேண்டிய கட்டணத்தொகை, 16,420 ரூபாய் கட்டணமாக வந்தது. அதிர்ந்துபோனேன்.
காரணம், என்னுடைய பேக்கேஜ் 1800 அழைப்புகள், 1800 குறுந்தகவல்கள், 4GB இணைய சேவை ஆகிய இலவச வசதிகளை உள்ளடக்கியது. இந்த இலவச சேவைகளைத் தாண்டினால் கூட கட்டணம் இரண்டாயிரத்தைத்தாண்ட வாய்ப்பில்லை. ஏர்டெல் வாடிக்கையாளர் சேவை மையத்தை அணுகி இதுபற்றி புகார் தெரிவித்த போது. கட்டணத்தொகையில் குறை இருப்பதாகவும் சரி செய்து அனுப்புவதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால், மீண்டும் மூன்று நாட்களில் உங்கள் பில் தொகை சரியானதே என்று குறுந்தகவல் வந்தது.

ரோகித் வெமுலா கொலை – பார்ப்பனக் கொடுங்கோன்மையின் நேரடி சாட்சி....தகவல்கள் – ஆதாரங்கள் – படங்கள்

rohit-vemula-driven-to-death-cartoon-2“தலித்துகளை பலிகொடுக்கிறதுதாண்டா மேக் இன் இந்தியா. ஆன்ட்ராய்டு காலத்துலயும் நாங்கதாண்டா ஆண்டைகள்”" ரோகித் வெமுலாவின் தற்கொலைக்குக் காரணமான மத்திய மனிதவளத்துறை மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானியின் நேரடி தலையீட்டை நிரூபிக்கும் கடிதங்கள்
ஸ்மிருதி இரானிரோகித் வெமுலா – ஹைதராபாத் மத்திய பல்கலைக் கழகத்தின் இரண்டாம் ஆண்டு முனைவர் பட்டப் படிப்பு மாணவர். இப்பல்கலைக்கழகத்தில் இயங்கி வரும் அம்பேத்கர் மாணவர் அமைப்பின் முன்னணியாளர்களில் ஒருவர். இந்தப் பல்கலையில் சேர்ந்ததில் இருந்தே அரசின் மக்கள் விரோத செயல்பாடுகளைக் கண்டித்து மாணவர்களை ஒன்று திரட்டி பல்வேறு போராட்டங்கள் நடத்தியிருக்கிறார். யாகூப் மேமன் தூக்கிலிடப்பட்ட போது அதனை எதிர்த்து பல்கலைக் கழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறார்.
இப்படிப்பட்ட போர்க்குணமிக்க போராளியான ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக் கிழமை (17-01-2016) அன்று தனது நண்பரின் அறையில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஆர்.எஸ்.எஸ் கும்பலின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக போராடுபவர்களை எந்த அளவிற்கு ஆர்.எஸ்.எஸ் கும்பல் அடக்கி, ஒடுக்கி, அவர்களை தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தள்ளிவிடுகிறது என்பதற்கு நம் கண் முன் நிற்கும் உதாரணம் தான் ரோகித் வெமுலா.

செம்பரம்பாக்கம் ஏரி பிரச்னை எதிர்க்கட்சிகள் சொல்வதெல்லாம் சுத்த பொய்! இதயதெய்வம்........பன்னீர்செல்வம்!

இந்த உண்மைகளை சொல்ல இத்தனை நாட்களா? அடுத்த நாளே சொல்ல வேண்டாமா?சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு குறித்த,
எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு, சட்டசபையில் நேற்று, பொதுப்பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விளக்கம் அளித்தார்.கற்பனை குற்றச்சாட்டு: அப்போது, அவர் கூறியதாவது:
'செம்பரம்பாக்கம் ஏரி உரிய நேரத்தில் திறக்கப்படவில்லை. திடீரென, 2015 டிச., 1ம் தேதி இரவு, மிக அதிக அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதால் தான், அடையாறில் பெருவெள்ளம் ஏற்பட்டு, சென்னையில் பாதிப்பு ஏற்பட்டது. தண்ணீர் திறப்பது தொடர்பாக, முதல்வரின் உத்தரவு கிடைக்க தாமதம் ஏற்பட்டது' என, பல்வேறு கற்பனை குற்றச்சாட்டுகளை, எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கூறி வருகின்றன.    மழை ஆரம்பிக்கிற முன்னாடி சைதை துரைசாமி, 500 கோடியில மழை நீர் வடிகால் பணிகள் சிறப்பாக செய்து முடிக்கப்பட்டது நு சொன்னாரு, இப்ப பன்னீர் செல்வம் சட்ட சபையில 29000 கன அடி நீர் தான் திறந்து விட பட்டது னு சொல்றாரு. 500 கோடி செலவு செய்தும் இவ்வளவு உயிர் சேதம் ஆகி இருக்கு னா, அப்ப என்ன வேலை செய்திருக்கிறார்கள் னு தெரியல, ஆக 500 கோடி தேர்தல் செலவுக்கு

குடிகாரர்கள் குஷி...அமைச்சர் நத்தம் விசுவநாதன் குடிமகன்களின் வயிற்றில் பால்/நஞ்சு வார்த்தார்


சென்னை: ''தமிழகத்தில் மது விலக்கை
அமல்படுத்தவே முடியாது,'' என, சட்டசபையில் நேற்று, அந்தத் துறையின் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் திட்டவட்டமாக அறிவித்தார். இதனால், 'குடி'மகன்கள் அனைவரும், குஷி அடைந்துள்ளனர். மது விலக்கை வலியுறுத்திய எதிர்க்கட்சிகள் ஏமாற்றம் அடைந்தன.
தமிழகத்தில் மது விலக்கை வலியுறுத்தி, கடந்த சில மாதங்களாக ஏராளமான போராட்டங்கள் நடந்தன. ஆளுங்கட்சியைத் தவிர்த்து, மற்ற கட்சிகள் எல்லாமே, இதை ஆதரித்து குரல் கொடுத்தன. தேர்தல் நெருங்கும் நேரத்திலாவது, இதற்கு அரசு செவி சாய்க்கும் என்ற எதிர்பார்ப்பு, மக்களிடத்திலும் இருந்தது.    மது உற்பத்தி தொழில்சாலையே அக்கா ,தங்கை மேற்பவையில் நடக்கிறது மது கொள்முதலும் அவர்கள் தொழில் சாலையில் நடக்கிறது அப்படி இருக்கையில் அவர்கள் தலையில் அவர்களே மண்ணை அள்ளி போட்டு கொள்வார்களா ?

சவுக்கு :வீழ்ச்சியிலிருந்து நீதித்துறையை....ஒவ்வொரு குடிமகனும் மனதுக்குள் விஜயகாந்தைப் போலவே “தூ” என்று துப்பிக்கொண்டு

c8savukku.com :குற்றவாளி ஜெயலலிதா அல்ல 3 : ஆருஷி தல்வார் கொலை வழக்கைப் பற்றி கேள்விப் பட்டிருப்பீர்கள்.    இந்திய நீதித்துறை வரலாற்றில் வழங்கப்பட்ட மிக மோசமான தீர்ப்புகளில் அது ஒன்று.     புலனாய்வு செய்த அமைப்பான சிபிஐ தனது அறிக்கையில், இந்த வழக்கில் யார் மீதும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முடியாது என்று கூறியிருந்தபிறகும், விசாரணை நீதிமன்றம், அந்த அறிக்கையை தள்ளுபடி செய்து, ஆருஷியின் பெற்றோர் மீது வழக்கு நடத்தியது.    அவசர அவசரமாக நடத்தப்பட்ட அந்த வழக்கு விசாரணையில், எதிர் தரப்பு சாட்சியங்களில் உள்ளவர்களை முழுமையாக விசாரிக்க அனுமதிக்காமல், தேவையான ஆவணங்களை முழுமையாக தராமல் நடத்தி முடிக்கப்பட்டது அந்த வழக்கு.   சந்தேகத்தின் பலன் குற்றவாளிக்குத் தரப்பட வேண்டும், சந்தேகத்திற்கு இடமற குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற குற்றவியல் நடைமுறையின் அடிப்படைகள் காற்றில் பறக்க விடப்பட்ட வழக்கு அது.
ஆருஷி வழக்கில் நீதிமன்றம் வெளிப்படுத்திய ஆர்வத்தில் 25 சதவிகித ஆர்வத்தை ஜெயலலிதாவின் வழக்குகளில் காண்பித்திருந்தால் கூட இந்நேரம் அவர் சிறையில் இருப்பார்.   ஆனால், ஒரே ஒரு நீதிமன்றம் கூட அவ்வாறான ஆர்வத்தை காண்பிக்கவில்லை.  மாறாக, ஜெயலலிதாவை காப்பாற்றுவதையே குறிக்கோளாகக் கொண்டு அனைத்து நீதிமன்றங்களும் செயல்பட்டன.

சட்டப்பேரவையில் கலைஞர் மீது உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றம்

திமுக தலைவர் கலைஞர் மீது கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவை முன்னவர் ஓ.பன்னீர்செல்வம் கொண்டுவந்த உரிமை மீறல் தீர்மானம் நிறைவேறியது. திமுக தலைவர் கலைஞர் மீதான உரிமை மீறல் பிரச்சனை குறித்த விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் அறிக்கை தாக்கல் செய்தார்.
இதையடுத்து சட்டப் பேரவையில் கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்ட திமுக உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. முன்னதாக தமிழக சட்டப்பேரவையில் வீட்டு வசதி மற்றும் வேளாண்மை துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடந்தது. இந்த விவாதத்துக்கு அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் பதில் அளித்தார். அப்போது அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் சில ஆட்சேபனையான கருத்துக்களை தெரிவித்ததாக தி.மு.க. தலைவர் கலைஞர் புகார் கூறி இருந்தார்.

விஜயதாரணி தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கம்

தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவர் பதவியில் இருந்து விஜயதாரணி
நீக்கம் விளாத்திக்குளம் சடடமன்றத் தொகுதி காங்கிரஸ் உறுப்பினராக இருப்பவர் விஜயதாரணி. இவர் தமிழக காங்கிரஸ் மகளிர் அணி தலைவராகவும் பதவி வசித்து வந்தார். இந்த நிலையில் அப்பதவியில் இருந்து விஜயதாரணி நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக மகளிரணி தலைவராக ஜான்சிராணி நியமிக்கப்பட்டுள்ளார். ஜான்சிராணி திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் nakkheeran,in

ரோகித் வெமுலா தற்கொலை: பிரதமர் மோடி வாய் திறக்க வேண்டும் - குமாரி செல்ஜா


தராபாத் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த ‘தலித்’ மாணவர்
ரோகித் வெமுலா, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த விவகாரம் பற்றி பிரதமர் மோடி வாய் திறந்து பேசவேண்டும் என்று காங்கிரஸின் முக்கிய தலைவர் குமாரி செல்ஜா வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில் “தலித் குழந்தைகள் கஷ்டப்பட்டு மேலே வருகிறார்கள். ஆனால் அவர்கள் தேச விரோதிகள் என்று அவர்களின் சொந்த அமைச்சராலேயே அழைக்கப்படுகிறார்கள்.

சிறந்த நாடுகள் பட்டியல் 1 ஜெர்மனி,2 கனடா,3 இங்கிலாந்து, 4அமெரிக்கா ...இந்தியா 22 இடத்தை பிடித்துள்ளது

உலகில் வாழ்வதற்குரிய சிறந்த நாடு பட்டியலில் ஜெர்மனி முதல் இடம்
பிடித்துள்ளது. இந்த பட்டியலில் இந்தியாவிற்கு 22-வது இடம் கிடைத்துள்ளது. உலகில் வாழ்வதற்கு சிறந்த நாடுகள் எவை என்ற பட்டியல் சுவிச்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலக பொருளாதார மாநாட்டு கூட்டத்தில் வெளியிடப்பட்டது. உலகின் 60 நாடுகளின் கலாசாரம், தொழில், பாரம்பரியம், வர்த்தகம், வாழ்கை தரம் போன்ற 24 வகை தகுதிகளின் அடிப்படையில் ஆய்வு செய்து இந்தப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் ஒட்டு மொத்த மதிபெண் அடிப்படையில் ஜெர்மனி முதல் இடத்தை பிடித்துள்ளது. இரண்டாவதாக கனடாவும் மூன்றாவதாக இங்கிலாந்தும் உள்ளன.  அமெரிக்கா இந்தப் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. சுவீடன், ஆஸ்திரேலியா, ஜப்பான், பிரான்ஸ், நெதர்லாந்து, டென்மார்க் ஆகியன அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 22 வது இடத்தை பிடித்து உள்ளது. மாலைமலர்.com

இளையராஜா மலையாள உரை....நிஷாகாந்தி அவார்டு...ஐந்து ஏக்கரில் இசைப்பள்ளி


புவனகிரி MLA செல்வி ராமஜெயம் வட்டசியரை வறுத்தெடுக்கும் ஆடியோசிதம்பரம் தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டு புவனகிரி தனி தாலுகாவாக சில மாதங்களுக்கு முன்புதான் ஜெயலலிதா துவக்கிவைத்தார். புவனகிரி வட்டாட்சியர் அலுவலகத்தின் முதல் வட்டாட்சியராக ராஜவேல் பணியாற்றி வருகிறார். வழக்கம் போல் செவ்வாய்கிழமை ராஜவேல் பணியில் இருந்துள்ளார். புவனகிரி அதிமுக பெண் எம்எல்ஏவும், முன்னாள் அமைச்சருமான செல்வி ராமஜெயம், வட்டாட்சியரை செல்போனில் தொடர்பு கொண்டு வெள்ள நிவாரணம் வழங்குவது குறித்து கேட்டுள்ளார். அப்போது வட்டாட்சியரை எம்எல்ஏ கடுமையான வார்த்தையால் ஒருமையில் திட்டியுளளார்.

வியாழன், 21 ஜனவரி, 2016

குப்பவண்டி டாட் காம் சந்திரகுமார் எம்.பி.ஏ

edit jan 20aanthaireporter.com:  பிளஸ் டூ படிச்சவங்க கூட நான் ‘வொய்ட் காலர்’ ஜாப்புக்குத்தான் போவேன்னு அடம்பிடிக்கறத பாக்கிறோம். ஏதாவது ஒரு பாடத்தில பட்டப்படிப்பு, ‍முதுகலைப் பட்டம், பொறியியல் படிச்சு முடிச்சவங்க தங்களுக்கு தகுதியான வேலை கிடைக்கறவரை வீட்ல சும்மா இருக்கனும்னு நினைக்கிறாங்க. ஆனா எதைச் செஞ்சாலும் அதுல நேர்மையும் நாணயமும் இருந்தா அந்த வேலை செய்யறதுல தப்பில் லேன்னு துணிஞ்சு சிலபேரு இறங்கி வேலை செய்யறாங்க. அவங்களோட வெற்றி தான் பிற்காலத்துல அனைவரும் பேசப்படற லெவலுக்கு போகுது..

ரோகித் வெமுலா தற்கொலை: பி.ஜே.பி – ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலை !


ஹைதராபாத் பல்கலைகழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை: ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே! “ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலை ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி., ஏ.பி.வி.பியின் பச்சைப்படுகொலையே!” என்பதை வலியுறுத்தியும், அதற்கு காரணமான மத்திய அமைச்சர்கள் பண்டாரு தத்தாத்ரேயா, ஸ்மிரிதி இரானி மற்றும் துணைவேந்தர் அப்பாராவை கைது செய்யக் கோரியும் புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியின் சார்பாக 21-01-2016 அன்று காலை 11.30 மணி அளவில் சென்னை அண்ணாசாலை அஞ்சல் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. vinavu.com

காஞ்சி வழக்கு தீர்த்த அல்லது வழக்கறுத்த ஈசன்...பீப் பாட்டுகாரன் வருகையால் பூஸ்ட் கிடைத்த...கண்றாவி

IMG_3139தமிழகத்தில் ‘திடீர் சாம்பார், திடீர் புளியோதரை’ கணக்கில் பிரபலமாகும் சினிமா நடிகர்களுக்கு போட்டியாக திடீர் கோவில்களும் உண்டு.  அப்படித்தான் காஞ்சிபுரத்தில் வழக்கு தீர்த்த ஈசன் என்றழைக்கப்படும் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தமிழக பக்தர்களின் திடீர் புன்ணியஸ்தலமாகிவிட்டது. பொறுக்கி பாடல் பாடிய நடிகர் சிம்பு தனது பொறுக்கித்தனத்தை மெயின்டைன் செய்ய உதவி கேட்டது மேற்படி புண்ணியஸ்தலத்தல்தான். ஆம் இங்கேதான் எல்லா பக்தர்களின் பிரச்சினைகளும் அவர்கள் கிரிமினல்களாகவே இருந்தாலும் தீர்க்கப்படுகிறது என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.
திருமுறைப் பாடல் பெற்ற சைவ திருக்கோவில்கள் 1028, மங்கள சாசனம் பெற்ற வைணவ 168 கோவில்கள் நிறைந்துள்ள காஞ்சியில் பீப் பாடலால் புகழ் பெற்று தன்னிகரற்ற ஸ்தலமாக திகழ்கிறது இந்த புண்ணியஸ்தலம்.
தமிழகத்தின் வரலாறு காணாத வெள்ளத்தை அடித்து சென்ற இந்த பொறுக்கி பாடலின் நாயகனை பெற்றெடுத்த டி.ராஜேந்தரின் காலடி பட்டு தமிழகத்தின் திடீர் கதாநாயகானாக வலம் வருகிறார் வழக்கறுத்தீஸ்வரர்.
அந்த புன்ணிய ஸ்தலத்திற்குள் நாமும் காலடி எடுத்து வைத்தோம். அந்த முகூர்த்த நேரத்தில் கண்டு கேட்ட காட்சிகளை வினவு வாசகர்களுக்கு தருகிறோம்.

அம்மா call center...டாஸ்மாக் ரிசீதா..விளையாடறீங்களா...

தமிழக அரசு புதிதாக துவங்கி உள்ள, அம்மா அழைப்பு மையத்தை, நேற்று தொடர்பு கொள்ள முயன்ற பெரும்பாலான மக்களுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது. தமிழக மக்கள், தங்கள் அனைத்து குறைகளையும் தெரிவிக்க, மாநில அரசு சார்பில், 24 மணி நேர, கட்டணமில்லா தொலைபேசி சேவை, '1100', நேற்று முன்தினம் துவங்கப்பட்டது. முதல் நாளன்று, 2,000 புகார்கள் பெறப்பட்டன.
ஆனால், இரண்டாம் நாளான நேற்று, பொதுமக்கள் அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது, தொடர்ந்து, 'பிசி, பிசி' என வந்ததால், புகார் தெரிவிக்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். அதிருப்தியடைந்த பலர், இச்சேவையில் உள்ள குளறுபடிகளை பற்றி, 'பேஸ்புக்' சமூக வலைதளத்திலும், தங்கள்கருத்துக்களை பதிவு செய்தனர்.

காவலாளியை Hummer கார் ஏற்றி கொன்ற கிங் பீடி கம்பனி அப்துல் காதருக்கு ஆயுள் தண்டனை

திருவனந்தபுரம்: வீட்டு காம்பவுண்ட் கதவை
தாமதமாக திறந்ததால்,
காவலாளி மீது, காரை ஏற்றி கொலை செய்த வழக்கில், பிரபல பீடி நிறுவன அதிபர் முகமது நிஷாமை, 'குற்றவாளி' என, கேரள கோர்ட், உறுதி
செய்துள்ளது; இவருக்கான தண்டனை விவரம், இன்று அறிவிக்கப்பட்டது. இதன்படி அவருக்கு 24 வருட சிறை தண்டனை மற்றும் 80.3 லட்சம் ரூபாய் அபராதம் விதி்ககப்பட்டுள்ளது. தமிழகத்தில் தயாராகும், 'கிங்' பீடி நிறுவன இயக்குனராக உள்ளவர் நிஷாம். புகையிலை ஏற்றுமதி தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்; இவருக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில், 5,000 கோடி ரூபாய் சொத்துகள் உள்ளன. இவரது வீடு, கேரள மாநிலம் திருச்சூரில் உள்ளது;
இங்கு சந்திரபோஸ் என்பவர், காவலாளியாக வேலை செய்து வந்தார். கடந்தாண்டு, வீட்டின் கதவைத் திறக்க, சந்திர போஸ் தாமதம் செய்ததால், ஆத்திரமடைந்த நிஷாம், அவர் மீது காரை மோதினார். காயமடைந்த சந்திரபோஸ், தப்பி ஓட முயன்றார். அவரை காரில்துரத்திச் சென்று, சுவரோடு மோதினார் நிஷாம்.  கதவை திறக்க தாமதம் என்பதால் ஹம்மர் காரை மோதி துரத்தி துரத்தி ரசித்திருக்கிறான்..மயங்கி விழுந்த காவலாளியின் தலையில் காலால் உதைத்து நாய் இன்னும் மரிக்கல்லையா என்றும் கேட்டுள்ளான்...இவனுக்கு ஏன் தூக்கு தண்டனை கிடைக்கல? பணம் ... 

பெங்களூரில் ஐபிஎம் ஊழியை கொலை ! குற்றவாளி பிடிபட்டார் Kusum Rani Singla · IBM techie found dead in her Bengaluru flat

பெங்களூர்: பெங்களூரில் வீட்டில் தனியாக இருந்த ஐபிஎம் ஊழியை குசும்
ராணி சிங்க்ளா சமூக வலைதளம் மூலம் பழக்கமான நபரால் கொலை செய்யப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குசும் ராணி சிங்க்ளா(31). ஐபிஎம் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். நொய்டாவில் பணியாற்றி வந்த அவர் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பெங்களூருக்கு மாற்றப்பட்டுள்ளார். தென்கிழக்கு பெங்களூரில் உள்ள காடுகோடியில் உள்ள மகாவீ்ர் கிங்ஸ் அபார்ட்மென்ட்டில் தோழியுடன் தங்கி வேலைக்கு சென்று வந்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை இரவு 7.30 மணிக்கு பணி முடிந்து வீட்டிற்கு வந்த தோழி குசும் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததை பார்த்து உடனே போலீசாருக்கு தகவல் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குசுமின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் குற்றவாளியை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்தனர். குசும் லேப்டாப் வயரால் கழுத்தை நெறித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நத்தம் விஸ்வநாதன் : தமிழ்நாட்டில் மதுவிலக்கு சாத்தியமில்லை

தமிழ்நாட்டில் மதுவிலக்கை அமல்படுத்துவது சாத்தியமில்லை என்று தமிழக
சட்டப்பேரவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்திருக்கிறார். மதுவிலக்கினால் ஏற்படும் வருவாய் இழப்பை மத்திய அரசு வழங்கினால், உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்றும் அவர் கூறியிருக்கிறார். "மதுவிலக்கு சாத்தியமில்லை" -தமிழ்நாடு அமைச்சர் தமிழ்நாட்டில் முழுமையாக மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென தேமுதிகவின் சட்டமன்ற உறுப்பினர் பார்த்தசாரதி கேள்வி எழுப்பினார். இதற்குப் பதிலளித்த மதுவிலக்குத் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், மதுவிலக்கை அமல்படுத்தும் சூழல் தற்போது தமிழகத்தில் இல்லை என்று தெரிவித்தார்.

ஜல்லிக்கட்டுத் தடை:மறுசீராய்வு மனு தள்ளுபடி

ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு விதிக்கப்பட்டிருக்கும் தடையை நீக்க வேண்டுமெனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மறுசீராய்வு மனுக்களை இந்திய உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு இந்திய உச்சநீதிமன்றம் மீண்டும் மறுப்பு பொங்கல் தினத்தையொட்டி, தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டுப் போட்டிகளுக்கு 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் நிரந்தரத் தடைவிதித்தது. காளைகளை காட்சிப் படுத்தக்கூடாத விலங்குகளின் பட்டியலில் மத்திய அரசு இடம்பெறச் செய்ததையடுத்து இந்தத் தடை விதிக்கப்பட்டது. இந்தத் தடையை மறுசீராய்வு செய்ய வேண்டுமென ஜே.கே. ரித்தீஷ், ராஜசேகரன், பாரம்பரிய விளையாட்டுக் கழகம் ஆகியவற்றின் சார்பில் மூன்று மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டன.

Arun Mo: இடஒதுக்கீட்டுக்கு எதிராக பாடல்....தலித் தற்கொலைகளை கண்டுகொள்ளாத திரையுலகம்

 பீப் பாடலும், கிளாமர் பாடலும்...
இட ஒதுக்கீடு பற்றி தமிழ் திரைப்பட வியாபாரிகளுக்கு மத்தியில் இருக்கும் புரிந்துணர்வு மிகுந்த அச்சத்தை ஏற்படுத்துகிறது. ஷங்கர் தொடங்கி முருகதாஸ் வரை, இப்போது விஜய் ஆண்டனி என எல்லாரும் இட ஒதுக்கீட்டை ஏதோ மாபெரும் குற்றமாக, சமூக அவலமாக பார்க்கிறார்கள். அல்லது இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத்தான் நாம் கருத்து சொல்கிறோம் என்கிற சுய சிந்தனை கூட இல்லாமல் கருத்துகளை திரைப்படங்களை திணிக்கிறார்கள். எந்த அளவிற்கு இவர்கள் சமூக அக்கறை கொண்டவர்கள் என்பதை இட ஒதுக்கீடு பற்றிய இவர்கள் பார்வையே எடுத்துரைக்கிறது. இத்தனைக்கும் இந்த மூவரும் (ஷங்கர் பற்றி தெளிவாக தெரியவில்லை) இட ஒதுக்கீட்டு பயன்களை ஏதோ ஒருவகையில் அனுபவித்துதான் வந்திருப்பார்கள். தான் வாழும் சமூகம் பற்றி எவ்வித அக்கறையும் இல்லாத ஒரு பெரும் வியாபாரக் கூட்டத்தை தமிழ்நாடு இன்னமும் கலைஞர்கள் என்றே பெயரிட்டு அழைக்கிறது. நடிகர் சங்க நண்பர்கள் எல்லாரும், தலித் படுகொலை, தலித் மக்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்காகவும் குரல் கொடுக்க வேண்டும். பீப் பாடலுக்கு எதிராக கூட திரைப்படத் துறையை சார்ந்த பலரும் கருத்து தெரிவித்திருந்தார்கள். ஆனால் இது போன்ற நஞ்சை கக்கும் பாடல்களுக்கு எதிராக யாருமே வாய் திறப்பதில்லை. சினிமாகாரர்கள் அப்படித்தான் என்றால், எந்த அரசியல் தலைவர்களும் கூட இது போன்ற விசக்கிருமிகளுக்கு எதிராக குறைந்தது அறிக்கை கூட விடுவதில்லை.

இயற்கை விதிகளை அறியாமல் நாம் இயற்றிய விதிகள்......

சுய சிதைவை நோக்கி மனித இனம்: பேராசிரியர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை
Stephen Hawking says humanity is inching closer to demise, and we are to blame.
We are not going to stop making progress, or reverse it, so we have to recognize the dangers and control them. I'm an optimist, and I believe we can,"  he said.
எமது வாழ்வும் இந்த பிரபஞ்சத்தின் வாழ்வும் ஒன்றில் ஒன்று தங்கியே உள்ளன. இந்த பிரபஞ்சம் என்று நான் குறிப்பிடுவது எம்மை சுற்றி உள்ள இந்த உலகத்தைத்தான்.
எமக்கும் இந்த பிரபஞ்சதிற்கும் உள்ள இயற்கை விதிகள் ஒன்றுதான்.
எமக்கு முன்பாக நடந்து செல்லும் ஒரு வழிப்போக்கனும் நானும் பிரிக்கவே முடியாத படி இணைந்துதான் இருக்கிறோம்.
விஞ்ஞான ரீதியாக மட்டும் அல்ல  மெய்ஞானம் என்று கூறுபவர்களின் கூற்றுப்படியும் இதுதான் உண்மை.
உண்மையில் நான் வேறு அவன் வேறு அல்ல ... அல்லது அவன் வேறு அது வேறு அல்ல.
சற்று முன்பு கூட அவனின் ஒரு அங்கமாக இருந்த பல நுண் அணுக்கள் எனது அங்கமாக சுழற்சி வேகத்தில் மாறிவிடுகிறது.
இது விஞ்ஞான ரீதியான உண்மையாகும்.
இந்த நுண் அணுக்கள் வெறும் பௌதீக சமாசாரம் மட்டும் அல்ல.
அவை ஒவ்வொன்றிலும் செய்திகள் உணர்வுகள் உள்ளன.
அவற்றில் உள்ள செய்திகள் , உணர்வுகள் அல்லது உணர்ச்சிகள் என்பன சதா ஒரு பொருளில் இருந்து இன்னொரு பொருளுக்கு அல்லது இன்னொரு
ஜீவராசிக்கு மாறிக்கொண்டே இருக்கின்றன.

புதன், 20 ஜனவரி, 2016

வைகோ :வெறுமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது ஆளுநர் உரை

அனைத்துத் துறைகளிலும் ஜெயலலிதா அரசின் தோல்விகளை ஆளுநர் உரை
வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கின்றது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆற்றிய உரையில் வழக்கம் போல முதல்வருக்குப் புகழாரம் சூட்டி உள்ளதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.
அதிமுக அரசின் நான்கரை ஆண்டு காலச் செயல்பாடுகளை மக்கள் நன்றாக உணர்ந்துள்ளனர். தமிழக சட்டமன்றத்தில் கடந்த கூட்டத் தொடர் வரையிலும் முதல்வர் ஜெயலலிதா விதி எண் 110 இன் கீழ் 180 க்கும் மேற்பட்ட அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டேதான் இருந்தார். எதுவுமே நிறைவேற்றப்படவில்லை; எல்லாமே வெற்று ஆரவார அறிவிப்புகளாகவே இருக்கின்றன.சமசீர் கல்வி புத்தங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சியை ஆரம்பித்து நிவாரண பொருட்கள் மீது ஸ்டிக்கர் ஒட்டி முடிவுக்கு வருகிறது. வாக்களர் ஸ்டிக்கரை கையில் எடுக்க போகிறார்களா அல்லது மீண்டும் புதிய ஸ்டிக்கர் ஆட்சிக்கு வழிவிட போகிறார்களா.....அடிமை கூட்டம் என்ன என்னசெய்யும்னு சொல்ல முடியாது

பாகிஸ்தான் பல்கலைக்கழகம் தாலிபன் தாக்குதல் 20 பேர் பலி 51 பேருக்கு கடும் காயம்


பாகிஸ்தானின் வடமேற்குப் பகுதியில் அமைந்திருக்கும் சார்சத்தாவில் உள்ள பச்சா கான் பல்கலைக்கழகத்தின் மீது துப்பாக்கிதாரிகள் தாக்குதல் நடத்தியதில் 20 பேர் கொல்லப்பட்டும் 50 பேர் காயமடைந்தும் உள்ளனர். பச்சா கான் பல்கலைக்குள் நுழைய முயன்ற இவர்கள் குறைந்தது மூன்று பேரையாவது காயப்படுத்தியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குண்டுவெடிக்கும் சத்தமும் கேட்டதாக இந்தச் சம்பத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
சார்சத்தா நகரம் பெஷாவரிலிருந்து 50 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது.
உள்ளூர் நேரப்படி காலை 9.30 மணியளவில் பயங்கரவாதிகள் பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்ததாக ஜியோ தொலைக்காட்சிக்கு வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் சீக்கியர் - 3 முஸ்லிம் பயணிகள் விமானத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர்

அமெரிக்காவை சேர்ந்த சீக்கியர் ஷான் ஆனந்த். கடந்த மாதம் இவர் கனடாவின் டொரண்டோவில் இருந்து நியூயார்க் நகருக்கு அமெரிக்க ஏர்லைஸ் விமானத்தில் பயணம் செய்தார். அவருடன் முஸ்லிம் நண்பர்கள் பைமுல் ஆலம் உள்ளிட்ட 3 பேரும் இருந்தனர். இவர்களில் பைமுல் ஆலம் தவிர 2 பேர் வங்காள தேசம் மற்றும் அரேபியநாடுகளை சேர்ந்தவர்கள். இவர்கள் அனைவரும் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்கள்.  4 பேரும் விமானத்தில் ஏறி தங்களது இருக்கைகளில் அமர்ந்தனர். ஆனந்தும், ஆலமும் திடீரென இருக்கை மாற்றி அமர வைக்கப்பட்டனர். அதன் பின்னர் வெள்ளைக்கார விமான பணிப்பெண் வந்து ஆனந்துடன் வங்காள தேசத்தை சேர்ந்த முஸ்லிம் பயணியை விமானத்தில் இருந்து வெளியேறும்படி கூறினார். இது குறித்து அவர்கள் காரணம் கேட்டனர்.

ஜல்லிக்கட்டை எதிர்க்கவில்லை; விலங்கு சித்ரவதையையே எதிர்க்கிறோம்...கொள்ளைக்கார Peta கொள்கை விளக்கம்?

 பீட்டா அமைப்பு வெளிச்சத்துக்கு வந்தது. 'உள்நாட்டு ரகமான காளைகளையும், பாரம்பரியத்தையும் முற்றிலும் ஒழித்துக்கட்ட, நடத்தப்பட்ட சர்வதேச சதி இது' என, தமிழக அரசியல் கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் குற்றஞ்சாட்டின.இதுகுறித்து, பீட்டா அமைப்பு தன் இணையதளத்தில் அளித்துள்ள விளக்கம்:< ஜல்லிக்கட்டை நாங்கள் எதிர்க்கவில்லை; விலங்குகள் மீதான சித்ரவதையையே எதிர்க்கிறோம்   காளை மாட்டை காட்சி பொருளாக ஏன் சேர்த்தீர்கள், நாயை ஏன் விலக்கினீர்கள்? காட்சி பொருள் என்று சேர்த்துவிட்டால் அதை வீட்டில் வளர்க்க முடியாது. அதற்க்கு பதில் கூறுங்கள்? தமிழக அரசாங்கம் வேண்டிக்கொண்ட, சுப்ரீம் கோர்ட் உறுதிபடித்திய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டிக் கொண்ட வழக்கை இன்னும் விசாரிக்க வில்லை, உங்களுடைய வழக்கை மட்டும் ஒரே நாளில் எடுத்துக் கொண்டு தடை செய்ய வேண்டிய அவசியம் என்ன, யார் இதன் பின்னணில் உள்ளனர் ? உங்களுக்கு எது இவ்வளவு பணம், அரசாணை எதிர்த்து நீங்கள் வழக்கு தொடர வேண்டிய அவசியம் என்ன ? தீவிர வாதத்தை தடுக்க போராட வேண்டியது தானே எங்களுடைய பாரம்பரியத்தை அழிக்க உனக்கு எவ்ளோ திமிர் இருக்க வேண்டும்,

ஸ்மிருதி இரானி: தலித் மாணவர் தற்கொலைக்கு ஜாதி சாயம் பூசுவதா?

டெல்லி: ஹைதராபாத்தில் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை செய்த விவகாரத்தை தலித் முத்திரை குத்தி ஜாதி பிரச்சினையாக மாற்ற வேண்டாம் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி கேட்டுக்கொண்டார். ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில், பாஜக மாணவர் பிரிவான ஏபிவிபி நிர்வாகிகளை தாக்கியதாக அம்பேத்கர் மாணவர் அமைப்பை சேர்ந்த ரோகித் வெமுலா உட்பட 5 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருந்த நிலையில், ரோகித் தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். This was not a Dalit vs non-Dalit matter: Smriti Irani இந்த விவகாரத்தை தலித் மாணவர் தற்கொலை என்ற அடிப்படையில் அரசியல் கட்சிகள், ஊடகங்கள் அணுகிவரும் நிலையில், அவ்வாறான போக்கு சரியில்லை என்று ஸ்மிருதி இரானி இன்று தெரிவித்தார்.

தற்கொலை என்ற பெயரில் தலித் கொலைகள்...மதிமாறன்

ஒப்பாரிகளே போராட்ட முறை-பிணத்தை அடக்கம் செய்வதே லட்சியம்
அம்பேத்கர் இந்து. அவர் இந்து மதத் தலைவர்’ என்ற போது நமக்குக் கோபம் வர வில்லை. ஆனால், அவனே தான் டாக்டர் அம்பேத்கர் பெயரில் அமைப்பு வைத்தால் அடித்து ஆளையே கொலை செய்கிறான். இந்து அமைப்புகளுக்கு எதிராக டாக்டர் அம்பேத்கர் பெயரில் இயங்கும் தலித் இளைஞனை கொலை செய்வதும்,
டாக்டர் அம்பேத்கரை இந்து என்று சொல்வதும் வேறு வேறு அல்ல. இந்து, பார்ப்பனிய எதிர்ப்பு, ஜாதி ஒழிப்பு என்ற டாக்டர் அம்பேத்கரின் போர்குணத்தோடு இயங்குபவர்களின் எண்ணிக்கை மிக மிகக் குறைவாக இருக்கிறது. அதனாலேயே அவர்கள் மீது வன்முறை நடக்கிறது. (ஹைதராபாத் பல்கலை கழகத்திலும் Rohith Vemula உட்பட அய்ந்தே மாணவர்கள் தான் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பு பெயரில் இயங்கியதால் தண்டிக்கப் பட்டவர்கள்.

விமான விபத்துகளின் போது தப்பிக்க வாய்ப்பு...புதிய கண்டுபிடிப்பு

கிவிவ்: விமான விபத்தின் போது பயணிகள் பாதுகாப்புடன் தப்பிக்கும் வகையில் புதிய தொழில்நுட்ப விமானத்தை உக்ரைன் நாட்டு பொறியாளர் வடிவமைத்துள்ளார். இவரது இந்த புதிய முயற்சியால் விமான விபத்தால் உயிரிழப்புகள் பெருமளவு தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. என்னதான் நவீன தொழில்நுட்பங்களுடன் விமானம் தயாரிக்கப்பட்டாலும், அவை தொழில்நுட்ப கோளாறு காரணமாக நொறுங்கி விழுவது, மலையில் மோதி விபத்திற்குள்ளாவது, நடுவானில் எஞ்சின் கோளாறு ஏற்பட்டு தீப்பிடித்து எரிவது ஆகிய எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படுவது அன்மைகாலமாக சகஜமாகி வருகிறது.இது உலக நாடுகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

உலகின் பெரும் பணக்காரர்கள் எங்கே இருக்கிறார்கள்?

 பணம் எங்கே? உலக பொருளாதாரம் குறித்து விவாதிக்க உலகத் தலைவர்கள்
இந்த வாரம் சுவிஸ்ஸிலுள்ள டாவோஸில் கூடுகின்றனர். இந்த மாநாட்டில் பொருளாதார ஏற்றத் தாழ்வு முக்கியமாக விவாதிக்கப்படும் ஒரு விஷயம்.உலகளவில் அதிகப்படியான பெரும் கோடீஸ்வரர்கள் அமெரிக்காவிலேயே உள்ளனர் இச்சூழலில் உலகளவில் செல்வம் எங்கு எப்படி பரவியுள்ளது அது எப்படி மாறிவருகிறது என்பது குறித்த ஒரு பார்வை.
பொருளாதார ஏற்றத் தாழ்வு அதிகரித்து வரும் ஒரு உலகளாவியப் பிரச்சினை.
ஆண்டுதோறும் கிரெடிட் ஸ்விஸ் எனும் ஸ்விஸ் வங்கி, உலகப் பொருளாதாரம் மற்றும் அது எங்கு எப்படி குவிக்கப்பட்டுள்ளது என்பதை நாடு வாரியாக, பிரதேச வாரியாக ஆய்வு செய்து வெளியிடுகிறது.

உச்ச நீதிமன்றம் :தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு எப்படி சாத்தியம்? நாடு முழுவதும் 50%தான்

டெல்லி: நாடு முழுவதும் 50% மட்டுமே இடஒதுக்கீடு அமலாகும்போது தமிழகத்தில் மட்டும் 69% இடஒதுக்கீடு கொள்கை எப்படி அமலாக்கப்படுகிறது என்பதை விளக்கும்படி தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மண்டல் குழு தாக்கல் செய்த அறிக்கையின்படி மத்திய அரசு பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பிரதமராக வி.பி.சிங் ஆட்சியில் இருந்த போது உத்தரவிடப்பட்டது. இது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் மாநிலங்களில் இடஒதுக்கீடு 50%க்கு மேல் இருக்கக்கூடாது என்று உத்தரவிட்டது. supreme court ஆனால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு என்பது பின்பற்றப்பட்டு வந்தது. 

செவ்வாய், 19 ஜனவரி, 2016

சொத்து குவிப்பு....16 அம்சப்பட்டியல் சுப்ரீம் கோட்டில் கர்நாடக அரசு தாக்கல்

சொத்து குவிப்பு வழக்கில் 16 அம்சங்கள் கொண்ட பட்டியல்: சுப்ரீம்கோர்ட்டில்
கர்நாடகா தாக்கல் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து கர்நாடக அரசு, திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஆயிரக்கணக்கான பக்கங்கள் கொண்ட ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டியிருப்பதால் ஒவ்வொரு தரப்பும் வாதிட உள்ள முக்கிய அம்சங்களை பட்டியலிட்டு மனுவாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 8ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது. அதன்படி ஜெயலலிதா உள்ளிட்டோரை விடுவித்த கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பின் 16 முக்கிய அம்சங்களை சுட்டிக்காட்டி கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்துள்ளது.

சுந்தரத்தெலுங்கினில் டப்பிசைத்து... எழுவாய்/பயனிலை/செயப்பாடு எல்லாம் மாற்றிப்போட்டு

1501759_1405339143041454_892997285_nvadhini.com :டாக்டர் ராஜசேகர் ஒரு தமிழர் என உங்களுக்கு தெரியும். தில்லுமுல்லு தேங்கா சீனிவாசன் சொல்வதுபோல் அவர் ஒரு ‘அமிஞ்சிக்கரை டாக்டர்’. ஆனால் அவரே தன் மொழிமாற்ற தமிழ்ப்படங்களுக்கு தானே டப்பிங் பேசமாட்டார். ராஜசேகரின் ’குரல்வளம்’ ஒரு காரணமென்றாலும் சாய்குமார் என்பவரை வைத்துதான் எல்லா படங்களிலும் தமிழ் பேசியிருப்பார். இந்த சாய்குமார் இருக்கிறாரே, அவரின் பேச்சுமொழி (ஆக்சண்ட்) ஒரு பக்கா தெலுங்கா தமிழாவென சொல்லமுடியாத ஜோலார்பேட் பார்டர் தமிழ். சாய்குமார் பின்னர் அவரே ஹீரோவாக மாறினார். அந்தப்புரத்தில் சௌந்தர்யா ஜோடியாக வருவாரே அவர் தான்.
தெலுங்கர்கள் டபுள் பேட்டா கொடுத்து இருமொழிப்படங்கள்‘ ஒருநாளும் எடுத்ததில்லை (இஞ்சி இடுப்பழகி வரை ஓபி தான்).

அதிமுக MLA பழகருப்பையா ஒப்புதல் வாக்குமூலம்:அதிகாரிகளும் மந்திரிகளும் கொள்ளை அடிக்கிறாங்க....நார் நாராக கிழிக்கிறார்

சென்னை
: கட்சி பொதுக்குழுக்களில் ஏகமனதாகவே தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள்; மந்திரிகள் கொள்ளையடிக்கிறார்கள்; கீப் வீட்டுக்கு போவதுகூட பொதுப்பணி என்பதாகிவிடுகிறது என சரவெடியாக தாக்கிப் பேசியிருக்கிறார் அதிமுக எம்எல்ஏ பழ. கருப்பையா. ஆனாலும் அவர் இன்னமும் அதிமுகவில் தொடர்ந்து நீடிக்கிறார் என்பதுதான் அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது. சென்னையில் துக்ளக் ஆண்டுவிழாவில் பழ. கருப்பையா பேசியதாவது: ADMK Mla dares Politicians இந்த நாட்டில் பெரிய கேடு வந்ததற்குக் காரணம் அரசியல்வாதியும், அதிகாரவர்க்கமும் ஒன்றோடு ஒன்று கைகோர்த்ததன் விளைவுதான். அரசியல்வாதிகள் இன்று ஊழல் செய்யக் காரணம், அவர்களை அதிகாரிகள் வளைத்துப்போட்டு ருசி காண்பித்துவிட்டார்கள்.
இன்று மந்திரியும், தலைமைச்செயலாளரும் கூட்டுச் சேர்ந்து கொள்ளை அடிக்கும் நிலை வந்துவிட்டது சட்டசபையில் 110 விதியின் கீழ் முதல்வர் அவர்கள் எவ்வளவு பேச உரிமை உள்ளவரோ, அவ்வளவு உரிமையோடு பேசுவதற்கு உரிமை உடையவர் சரத்குமார். இப்போது, அமைச்சர்கள் என்றால் அடாவடித்தனம் வந்துவிடுகிறது. ஐந்தாறு பி.ஏ-க்கள் வைத்துக்கொள்கிறார்கள். சால்வை எடுக்கக்கூட ஒரு பி.ஏ இருக்கிறார். இன்றைக்கு, பதவிகளில் இருப்பவர்கள், தங்களுடைய கீப் வீடுகளுக்குப் போகும்போதுகூட பாதுகாப்பு வண்டிகளோடு செல்கிறார்கள். காரணம், அதுவும் பொதுப்பணிதான் என்கிறார்கள்.

இந்தியா: 2.36 லட்சம் கோடீஸ்வரர்கள்... 4-வது அதிக பணக்காரர்களை கொண்ட ஆசிய...

 1. ஜப்பான் (12,60,000 மில்லியனர்கள்)
 2. சீனா (6,54,000 மில்லியனர்கள்)
 3. ஆஸ்திரேலியா (2,90,000 மில்லியனர்கள்)
 4. இந்தியா (2,36,000 மில்லியனர்கள்)
 5. சிங்கப்பூர் (2,24,000 மில்லியனர்கள்)
 6. ஹாங்காங் (2,15,000 மில்லியனர்கள்)
 7. தென் கொரியா (1,25,000 மில்லியனர்கள்)
 8. தைவான் (98,200 மில்லியனர்கள்)
 9. நியூசிலாந்து (89,000 மில்லியனர்கள்)
 10. இந்தோனேசியா (48,500 மில்லியனர்கள்)
ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அதிகளவில் கோடீஸ்வரர்களை கொண்ட நாடாக இந்தியா அறிவிக்கப்பட்டுள்ளது. 2016-ம் ஆண்டிற்கான ஆசியா பசிபிக் வெல்த் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.  

வாட்ஸ் அப் பயன்படுத்த இனி கட்டணம் கிடையாது

கோப்புப் படம் வாட்ஸ் அப் சேவையை பயன்படுத்த இனி கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வாட்ஸ் அப்பின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கூறியுள்ளதாவது:
வாட்ஸ் அப் செயலியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்த ஆண்டுக்கு ஒருமுறை கட்டணம் செலுத்தும் நடைமுறை இருந்து வந்தது. ஆனால், பெரும்பாலான வாட்ஸ் ஆப் பயனர்களிடம் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் இல்லை என்பது எங்கள் கவனத்துக்கு வந்ததன் பேரில், வாட்ஸ் அப் பயன்படுத்த இனி கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது.

துபாயில் காணாமல்போன தொழிலதிபர் அய்யப்பன் பிணம் கடலில் கரை ஒதுங்கியது...

இந்தியாவைச் சேர்ந்த அய்யப்பன் என்பவர் எழுதுபொருள் வர்த்தகத்தை
செய்தபடி, துபாயில் உள்ள முஹைஸ்னா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான்கு மாதங்களுக்கு முன்னர் அவரது மனைவியும் இரு குழந்தைகளும் தாய்நாடான சென்று விட்டனர். கடந்த 15-ம் தேதி நடைபெற்ற முன்னாள் கல்லூரி மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்துவந்த அய்யப்பன்(65) கடந்த 13-ம் தேதி திடீரென மாயமானார். கைபேசியை அவர் எடுத்துச் செல்லாததால் அய்யப்பனின் இருப்பிடத்தை கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில், புஜிரா நகரில் உள்ள டிபா கடற்பகுதியில் கடந்த வியாழக்கிழமை அவரது பிரேதம் மிதப்பதாக தெரியவந்த போலீசார் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். அதே கடற்கரையோரம் அவரது காரும் நின்றிருந்ததால் இது தற்கொலையா? அல்லது விபத்துசார்ந்த மரணமா?

வெளிநாட்டினர் ஆங்கிலம் கற்காவிட்டால் இங்கிலாந்தை விட்டு வெளியேறவேண்டும் .. பிரதமர் கேமரூன்

இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினர் ஆங்கிலம் கற்காவிட்டால் நாட்டைவிட்டு வெளியேற்றம்: பிரதமர் கேமரூன்லண்டன், ஜன. 19– இங்கிலாந்தில் குடியேறும் வெளிநாட்டினர் ஆங்கிலம் கற்காவிட்டால் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரதமர் கேமரூன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இங்கிலாந்தில் தற்போது ஏராளமான வெளிநாட்டினர் குடியேற்ற உரிமை பெற்றுள்ளனர். அவர்கள் தங்களது வாழ்க்கை துணை அதாவது கணவன் அல்லது மனைவியின் மூலம் குடியுரிமை விசா பெற்றுள்ளனர்.
அவர்களில் பெரும்பாலான பெண்களுக்கு ஆங்கிலம் தெரிவதில்லை. அதனால் அவர்கள் வெளி மனிதர்களுடன் ஆன தொடர்பை துண்டித்து கொள்கின்றனர். எனவே இங்கிலாந்தில் புதிய திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ரோஹித் வேமுலா மரணம் ஹைதாராபாத் பல்கலையில்....முசாபர்நகர் பாக்கி ஹை ஆவணப்படம்தான் காரணமா?


ரோகித் வெமுலா
இந்துத்துவப் பாசிசம் கொன்று தீர்த்த தலித் மாணவன் ரோகித் வெமுலா!- நாம் செய்ய வேண்டியது என்ன?

ரோகித் வெமுலா
ஹைதராபாத் பல்கலைக் கழகம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ரோகித் வெமுலா, பல்கலைக்கழகத்தின் அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு எதிராக 15 நாட்களுக்கும் மேலாக போராடிக் கொண்டிருந்த நிலையில் ஞாயிறு (17-01-2016) அன்று இரவு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கிய நான்கு பேர் பலி...சென்னை


தமிழகத்தின் தலைநகர் சென்னையின் புறநகர் பகுதியில் உள்ள தனியார் உணவு விடுதியின் கழிவுநீர் தொட்டியின் உள்ளே இறங்கிய நான்கு பேர் இன்று செவ்வாய்கிழமை பலியாயினர். காஞ்சிபுரம் மாவட்டத்தின் துரைப்பாக்கம் அருகில் உள்ள காரப்பாக்கம் பகுதியில் துப்புரவு தொழிலில் ஈடுபட்ட ஓரே குடும்பத்தை சேர்ந்த மூவரும், தனியார் உணவு விடுதியின் ஊழியர் ஒருவரும் என மொத்தமாக நான்கு பேர் இந்த சம்பவத்தில் இறந்துள்ளதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் உறுதி செய்கின்றன. கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் ஈடுப்பட்டிருந்த குமார் என்பவர் முதலில் விஷவாயு தாக்கி முதலில் பலியானதாகவும், தொடர்ந்து அவரை காப்பாற்ற உள்ளிறங்கிய சரவணன், வேல்முருகன் மற்றும் ராஜேஷ் ஆகியோரும் பலியானதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.வல்லரசு கனவு காணும் மேட்டுக்குடி நடுத்தரவர்க்கமே முதலில் இதை கொஞ்சம் பார்....peta கூட இதுக்காக வழக்கு போடலாமே?  

கலைஞர் :ஐதராபாத் தலித் மாணவரின் தற்கொலை...மீது சட்டப்படி நடவடிக்கை தேவை

ஐதராபாத் பல்கலைக் கழக தலித் மாணவரின் தற்கொலைக்குக் காரணமானவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது நியாயமான, சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும் என திமுக தலைவர் கலைஞர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திரா, குண்டூரைச் சேர்ந்த தலித் மாணவர் ரோகித் வெமுலா. இவர் ஐதராபாத் பல்கலைக் கழகத்தில், அறிவியல் தொழில் நுட்பம் மற்றும் சமூகக் கல்வி பிரிவில், ஆராய்ச்சி (பி.எச்.டி.) படிப்பைப் படித்து வந்தார். பல்கலைக் கழகத்தில் இயங்கி வந்த அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பில் ரோகித் வெமுலா உறுப்பினராகச் செயல்பட்டு வந்தார். அந்தப் பல்கலைக் கழகத்தில் "முஷாபர்நகர் பகி ஹை" என்ற ஆவணப் படம் ஒன்றைத் திரையிடுவது குறித்து, அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்புக்கும், அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத் (ஏ.பி.வி.பி.) அமைப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து ரோகித் வெமுலா உட்பட ஐந்து பேரை, பல்கலைக் கழக நிர்வாகம் "சஸ்பென்ட்" செய்தது. பல்கலைக் கழக விடுதியிலிருந்தும் இந்த ஐந்து மாணவர்களும் நீக்கப்பட்டுள்ளார் கள். அதனால் அந்த ஐந்து மாணவர்களும், பல்கலைக் கழக வளாகத்திற்குள்ளே திறந்த வெளியில் படுத்து வந்திருக்கிறார்கள்.

எத்தனை கோணம் எத்தனை பார்வை’....ரிலீசே ஆகாத ஜெயகாந்தன் திரைப்படம்

jeyakanthan
etthani_konam_etthani_parvaiமேல் ஏப்ரல் 16, 2015 தற்செயலாக அவார்டா கொடுக்கறாங்க தளத்தில் இந்தப் பதிவு கண்ணில் பட்டது. தோழி சாரதா சொன்னவற்றை இங்கே மீள்பதித்திருக்கிறேன்.
ஜெயகாந்தனின்எத்தனை கோணம் எத்தனை பார்வை’ வண்ணத் திரைப்படம், அழகான ஒரு படைப்பு. மிக மிக யதார்த்தமான ஒரு படம். எந்த ஒரு கட்டத்திலும் செயற்கைக் கோணம் தட்டாது. நான் பல ஆண்டுகளுக்கு முன் பார்த்ததாலும், ஒரே ஒரு முறை மட்டுமே பார்த்திருந்ததாலும் கதையமைப்பு கோர்வையாக நினைவில் இல்லை. ஆனால் மிக நல்ல படம் என்பது மட்டும் மனதில் மிக அழுத்தமாகப் பதிந்துள்ளது. மிகவும் அருமையான படம். வெளிநாட்டில் நான் பார்த்தேன் .இந்தியாவில் இன்னும் ஏன் வெளியாகவில்லை? ஒரு நேர்மையான கலைஞனின் ஒரு நல்ல படைப்பு கவனிக்க படவேயில்லை  

மத்திய அமைச்சர் மீது வழக்கு...ஹைதராபாத் தலித் மாணவன் தற்கொலைக்கு அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயாவின் ஜாதி வன்கொடுமை


Dalit Student Suicide : Case Filed Against Union Minister Bandaru Dattatreya ஐதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் தலித் ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், மத்திய இணை அமைச்சர்  பண்டாரு தத்தாத்ரேயா மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் அப்பாராவ் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவர்கள் போராட்டம்  காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. ஆந்திரா, தெலங்கானாவின் பொது தலைநகரான ஐதராபாத்தில் மத்திய  பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு, ஆராய்ச்சி படிப்பு படித்து வந்த குண்டூரைச் சேர்ந்த ரோகித் வெமுலா (25) உட்பட 5 மாணவர்கள்  கடந்த மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இவர்கள் அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள். கடந்த ஆகஸ்ட் மாதம், அம்பேத்கர் மாணவர் கூட்டமைப்பை சேர்ந்தவர்களுக்கும், பாஜவின் ஆதரவு பெற்ற அகில பாரதிய வித்யார்தி பரிஷத்  அமைப்பை சேர்ந்த மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக, ரோகித் வெமுலா உள்ளிட்ட 5 மாணவர்களை சஸ்பெண்ட்  செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது.

சிவகார்த்திகேயனுக்குதான் பொங்கல் வெற்றி....கெத்து,கதகளி சுமார்...தாரைதப்பட்டை காலி

விஷால், உதயநிதியை ஊதித் தள்ளிய சிவகார்த்திகேயன் இந்த பொங்கல்
பண்டிகையில் 4 படங்கள் வெளியாகின. அதில் ரஜினி முருகன் வசூல் வேட்டையில் முன்னனியில் இருப்பதாக தெரிகிறது.அவ்வை சண்முகியாகும் சிவ கார்த்திகேயன்?" இந்த பொங்கலுக்கு சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன், விஷால் நடிப்பில் கதகளி, உதயநிதியின் கெத்து மற்றும் பாலா இயக்கத்தில் தாரை தப்பட்டை ஆகிய படங்கள் வெளியாகின.இதில் தாரை தப்பட்டை குறித்து மோசமான விமர்சனங்களே வருகின்றன. கெத்து, கதகளி படங்கள் ரசிகர்களிடம் ஓரளவிற்கு வரவேற்பை பெற்றுள்ள போதிலும் சிவகார்த்திகேயன் நடித்த ரஜினி முருகன் வசூலில் இந்த படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.

ரஜினிக்கு ரூ.10 மணியார்டர் அனுப்பிய ரசிகர்...பணக்கஷ்டமாம்

தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு நெல்லையச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ. 10 மணியார்டர் னுப்பியுள்ளார்.நெல்லை மாவட்டம், திருமலையப்ப புரத்தை சேர்ந்தவர் ராமநாதன். இவர், தமிழக வெள்ள நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் கொடுத்த ரஜினிக்கு நெல்லையச் சேர்ந்த நபர் ஒருவர் ரூ. மணியார்டர்;அனுப்பியுள்ளார். கூடவே ஒரு கடிதமும் அனுப்பியுள்ளார்.அந்த கடிதத்தில், சென்னையில் மழை வெள்ளம் பாதிப்பின்போது, தமிழக மக்களின் நிவாரண நிதிக்காக இந்தி, தெலுங்கு என சம்பந்தமே இல்லாத குறைந்த ஊதியம் பெறும் நடிகை நடிகைகள் கூட பல லட்சம் வாரிக் கொடுத்திருக்கிறார்கள்.

ஆண்களைக் காப்பாற்ற ஒரு சட்டம்...பொய் வழக்குப் போடும் பெண்களிடம் இருந்து

இன்றைக்கும் ஆண்கள் பல வகைகளில் குடும்ப வாழ்வில் மனைவியால்
வன்முறைக்கு ஆழ்த்தப்படுவது அன்றாட நிகழ்ச்சியாகி விட்டது. உளவியல், பொருளாதாரம், உடல், பேச்சு இப்படி பலவகையிலும் கண்வன் மனவியால் துன்புறுத்தப்படுகிறான். ஆனால் அது சட்டத்தினால் அங்கீகரிக்கப்படவில்லை. குடும்ப வன்முறை என்பது கனவன் மனைவிமீது செய்வது மட்டும்தான் என்று D.V.Act வரையறுத்துள்ளது. அந்த D.V. Act படி கணவன் தலையைத் திருப்பிக் கொண்டால் கூட அது வன்முறை; உடனே மனைவி புகார் கொடுத்து கனவனை அவனுக்குச் சொந்தமான வீட்டிலிருந்தே விரட்டி அடித்து, அதற்காக மனைவிக்கு கப்பம் கட்ட வைக்கலாம். ஆனால் மனைவி கணவனை ஆண்மையற்றவன், ஒன்றுக்கும் லாயக்கில்லை என்று இன்னொரு ஆணுடன் ஒப்பிட்டு திட்டினாலும், ஏன் அடித்தால் கூட அது குற்றம் கிடையாது!

Peta சைதன்யா கொடுரி :சட்டம் கொண்டுவந்தாலும் மீண்டும் தடை வாங்குவோம்..டாலருக்கு மாரடிக்கும்.மேட்டுக்குடி ..


jallikattu jan 14ஜல்லிக்கட்டு நடந்த இடத்துக்குச் சென்று பீட்டா அமைப்பினர் ஆதாரங்களை திரட்ட வில்லை. ஆனால், எங்களுக்காக பல்வேறு ஆதாரங்கள் தமிழகத்தில் இருந்து தமிழர் கள்தான் அனுப்பி வைத்தனர். அதனை வைத்தே நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் முறை யிட்டோம். நாங்கள் கொடுத்த ஆதாரத்தையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக் கொண்டனர். இதனிடையே மத்திய, மாநில அரசுகள் அவசரச் சட்டம் கொண்டு வந்தா லும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டை நடத்த முடியாது” என்று பீட்டா இந்தியா (People for the Ethical Treatment of Animals) அமைப்பின் அறிவியல் ஆலோசகர் சைதன்யா கொடூரி தெரிவித்தார்.

திங்கள், 18 ஜனவரி, 2016

விவசாயத்திற்கு கொள்ளி ! பில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் WTO-GATS மற்றும் TISA..

tata with gatesபில்கேட்ஸ் – டாடா இந்திய விவசாயத்திற்கு வைக்கும் கடைசிக் கொள்ளி ! டந்த டிசம்பர் 14 அன்று நைரோபியில் நடைபெற்ற உலக வர்த்தகக் கழக மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டு என்ன பேசியது என்பது இன்று வரை வெளியிடப்படவில்லை.
ஆனால் மாநாட்டு உறுப்பினர்களின் ஒப்பந்தம் டிசம்பர் 19-ம் தேதி கையெழுத்திடப் பட்டிருக்கிறது. இந்த ஒப்பந்தம், உறுப்பு நாடுகளின் விவசாயத்தை முற்றாக உலகச் சந்தைக்கு திறந்துவிடும் அம்சங்களை முன்வைத்திருக்கிறது.
இதன் படி, இனி WTO-ல் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகள்
 • விவசாயிகளுக்கு வழங்கும் மானியத்தை உடனடியாக குறைக்க வேண்டும்.
 • எந்தவொரு நாடும் பொதுவில் தானியங்களைக் சேகரித்து வைக்கக் கூடாது. மாறாக அவை சந்தைக்கு திறந்து விடப்படவேண்டும்.

பிரான்சில் பொருளாதார அவசர நிலை பிரகடனம்

பிரான்சில் சமூக, பொருளாதார கட்டமைப்பை மாற்றுவதற்கான நேரம்
வந்துவிட்டதாகவும், பொருளாதார அவசர நிலை ஏற்பட்டிருப்பதாகவும் அந்நாட்டு அதிபர் பிரான்காயிஸ் ஹாலண்டே தெரிவித்துள்ளார். பாரிசில் இன்று நடந்த தொழிலதிபர்களுடனான ஆண்டுக் கூட்டத்தில் இதுபற்றி பேசிய அவர், பிரான்சில் நிலவி வரும் கடுமையான பொருளாதார பிரச்சனைகள், வேலையில்லாத் திண்டாட்டம் ஆகியவற்றை போக்குவதற்கான பல்வேறு பொருளாதார மீட்சி திட்டங்களை வெளியிட்டார். குறிப்பாக, தொழிலாளர்களை அரவணைத்து செல்லக்கூடிய தொழில் கொள்கைகளை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், தொழில் நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு ஆதரவான முறையில் புதிய பயிற்சிகளை வழங்கவும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வழிவகுக்கும் புதிய திட்டங்களை அறிவித்தார்.