சனி, 9 ஜூன், 2018

கொங்குப் கவுண்டர் சமூகம் பார்ப்பன அடிமையானது தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்தின் சேவையால்..

Thamizh Inian : பொதுவாகவே கொங்கு இனம்
பார்ப்பன வேத மத
சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் கடந்த இருபது, முப்பது ஆண்டுகள் வரை ஏற்றுக்கொள்ளவே இல்லை.
80களுக்குப் பிந்தைய காலகட்டத்தில் தான் பார்ப்பன ஆதிக்கத்தை கொங்கு இனத்தின் ஒரு பிரிவினரான கவுண்டர் சமூகம் அனுமதித்தது.
இதற்கு முழு முதற் காரணம் பொள்ளாச்சி நா. மகாலிங்கம் தான்.
அவருக்கு இந்திய அளவில் வியாபாரம் செய்ய ஆர்.எஸ். எஸ் இன் தயவு தேவைப்பட்டது. அதனால் பார்ப்பனர்களை தஞ்சம் அடைந்தார்.
தன் உறவினர் வீட்டு நிகழ்ச்சிகளில் பார்ப்பன ஆதிக்கம் ஊடுருவச் செய்தார்.
காலப் போக்கில் அது சமூகம் முழுவதும் பரவியது.
நா.மகாலிங்கத்தின் நிர்வாகப் பணிகளில் தன் சமூகத்து இளைஞர்களுக்கு வாய்ப்பளிப்பது போல் அளித்து அவர்களை அப்படியே ஆர்எஸ்எஸ் சிந்தனைக்குள்ளும்
சாதி வெறிக்குள்ளும் ஆழ்த்தினார்.

தீரன் சின்னமலை காலத்திலிருந்து பார்ப்பன ஆதிக்கத்தை ஏற்க மறுத்து கொங்கு மண்ணின் மாண்பைக் காத்து நின்ற தன் சமூகத்தை
தனது சொந்த லாப சுய நலனுக்காக பார்ப்பன அடிமைகளாக்கி சாதி வெறியர்களாக்கி
கவுண்டர் இன முன்னேற்றத்தை மீண்டும் 50 ஆண்டுகளுக்குப் பின்னோக்கித் தள்ளிய பெருமை பொள்ளாச்சி நா. மகாலிங்கத்தையே சாரும்.

சென்னை - சேலம் 8 வழி சாலையை எதிர்க்கும் மக்களை அதிகாலை வீடு புகுந்து கைது செய்த போலீஸ்

Mohan Prabhaharan - Oneindia Tamil  சேலம்-சென்னை பசுமை வழிச்சாலை எதிர்ப்பு போராட்டம் தீவிரம்.. பலர் கைது -   சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய 5 மாவட்டங்கள் வழியாக இந்த சாலை சென்னை வந்தடையும்படி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 
இந்த சாலை அமைக்கும் பணிகளுக்காக 7 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. 
இதனால், விவசாய நிலங்கள், வனப்பகுதி, ஆறுகள் பாதிக்கப்படும் என்றும், 150 கிராமங்களில் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. 
இதன் காரணமாக இந்த திட்டத்திற்கு சேலம் மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களின் கிராமங்களில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதனால் பெரும் போராட்டம் வெடிக்கும் அபாயம் உள்ளதாக உளவுத்துறை தகவல் அளித்தது. இந்நிலையில், ஆச்சாங்கூட்டப்பட்டி, சேரிக்காடு, கொப்பனூர் உள்ளிட்ட பகுதிகள் கடந்த 4 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வந்த 6 விவசாயிகளை இன்று அதிகாலை சேலம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

காலா படத்துக்கு பாராட்டுக்கள் குவிகிறது .. ஆனால் வசூலில் .... புறக்கணிப்பு ஒருபுறம் சாதாரண ரசிகரின் ஏமாற்றமும் ..

LR Jagadheesan : ”விமர்சகர்களும் பொதுமக்களும்
படக் குழுவே எதிர்பார்க்காத வகையில் காலா படத்துக்கான பாராட்டுகள் குவிந்துகொண்டிருக்கின்றன.
ஆனால், சராசரி சினிமா பார்வையாளர்கள் காலா படத்தை அந்த அளவுக்கு விரும்பவில்லை. அதுதான் திரையரங்குகள் காலியாக இருப்பதன் காரணம் என்கின்றனர் சினிமா விநியோகஸ்தர்கள், தியேட்டர் உரிமையாளர்கள்.
வழக்கமாக ரஜினிகாந்த் நடித்த படங்கள் வெளியிடப்படும் அனைத்து நாடுகளிலும் காலா ரிலீஸ் ஆகவில்லை.
கைவிட்ட வெளிநாடுவாழ் தமிழர்கள்
தமிழ்ப் படங்களுக்கு முதல் நாள் வெளிநாட்டு ப்ரீமியர் காட்சிகளில் மிகப் பெரும் வசூல் கிடைக்கும். காலாவுக்கு எதிர்பார்த்ததில் நான்கில் ஒரு பங்கு தான் கிடைத்திருக்கிறது.
அமெரிக்கா, லண்டன், கனடா, நார்வே, மலேசியா, சிங்கப்பூர் இந்த நாடுகளில் வாழும் இலங்கை, இந்தியத் தமிழர்கள்தான் தமிழ்ப் படங்களுக்கான பிரதான வாடிக்கையாளர்கள். இவர்களில் பெரும்பான்மையோர் காலா படத்தைப் புறக்கணித்துவிட்டனர்.
ஆந்திரா, கேரள மாநில சினிமா ரசிகர்கள் காலா படத்தைக் கண்டுகொள்ளாமல் புறக்கணித்துவிட, சமூக வலைதளங்களில் படம் மிகப் பெரிய வெற்றி என்ற பிம்பத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.
365 நாட்கள் ஓடியதாக போஸ்டர் ஒட்டப்பட்ட கபாலி படத்தின் வசூல் பற்றிய பிம்பம் அப்போது பூதாகரமாக உருவாக்கப்பட்டது. ஆனால், கபாலி பட விநியோகஸ்தர்களுக்கு நஷ்டமான தொகையில் ஒரு பகுதியை திருப்பிக் கொடுத்தார் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு.
காலா ஆடியோ வெளியீட்டில் லிங்கா நஷ்டத்தைப் பற்றிப் பேசிய ரஜினி கபாலி நஷ்டம் பற்றிப் பேசாமல் கடந்துபோனார்.”

மும்பை .. வெள்ளம் இயல்பு வாழ்க்கை முடக்கம்

மிதக்கும் மும்பை!மின்னம்பலம்: தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட இந்த வருடம் முன்கூட்டியே தொடங்கியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக மும்பையில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. ரயில், விமானம், வாகனப் போக்குவரத்து முடங்கியுள்ளது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர்.
இதேபோன்று கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. தெலங்கானா, ஆந்திராவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது. தமிழகத்திலும் ஆங்காங்கே மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் மகாராஷ்டிர மாநிலத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. மும்பையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழையால், பெரும்பாலான சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில வாகனங்கள் பழுதாகி ஆங்காங்கே நிற்பதனால், வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வேல்முருகன் : அதிமுக அரசு திணிக்கப்பட்ட தலைமைச் செயலரால் இயக்கப்படுகிறது

THE HINDU TAMIL : ஜூன் 12-ல் மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வழியில்லை. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு திணிக்கப்பட்ட தலைமைச் செயலரால் இயக்கப்படுவதுதான் இதற்குக் காரணம் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கால நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் இருந்துவிட்டு கடைசி நேரத்தில் போய் கையை விரித்துவிட்டது அதிமுக அரசு. ஆம். இந்த ஆண்டும் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறக்க வாய்ப்பில்லை; காரணம் அணையில் போதிய நீர் இல்லை; நீர் வரத்தும் போதிய அளவுக்கு இல்லை என்று சொல்லிவிட்டார் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அதையும் சட்டப்பேரவையிலேயே, விவாதிக்க அனுமதி இல்லாத 110 விதியின் கீழேயே அறிவித்துவிட்டார் முதல்வர். ஏன் இப்படிச் செய்தார்?

டில்லியில் புழுதிப்புயல்.. விமானங்கள் திருப்பி விடப்படுகிறது .. Dust Storm Wind Speed Up-To 70 To 80 KMPH Hit Delhi And NCR


dhinamalar :புதுடில்லி: தலைநகர் டில்லியில் காலை முதல் தெளிவான வானிலை இருந்த நிலையில், மாலையில் திடீரென இருள் சூழ்ந்தது. தொடர்ந்து புழுதிப்புயல் வீச துவங்கியது. சதார்புர், அக்பர் சாலை, துவாரகா, ஆர்கே புரம் உள்ளிட்ட பல பகுதிகளில் புழுதிப்புயல் வீசியது. மக்கள் வெளியே வர முடியாமல், வீட்டிற்குள் முடங்கியுள்ளனர். இதனால், பல சாலைகள் வெறிச்சோடியுள்ளன. வாகனங்களில் செல்வோர் முகப்பு விளக்குகளை எரிய விட்டு செல்கின்றனர்.
மணிக்கு 70 கி.மீ., வேகத்தில் புயல் வீச வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் வரும் போதெல்லாம் "மோடியை கொல்ல" படம் ரிலீஸ் ஆகும் .. வரலாறு அப்படித்தாய்ன்

Troll Trousers 2.0 : எப்பல்லாம் தேர்தல் வரப் போகுதோ அப்பல்லாம்  மோடியைக்
கொல்ல சதியும் வந்திரும்
Puliyur Raja : இந்தப் பொய்யவே எத்தனை வருடத்திற்கு சொல்லி சொல்லி மக்களை முட்டாள் ஆக்குவீர்கள். ஆட்சிக்கு வந்தால் அதைச்செய்வேன் இதைச்செய்வேன்  மலையை கயிரா திருச்சிருவேன் என்று சொல்லுறது வந்தப்பிறகு மக்களுக்கு ஒன்றும் செய்வதில்லை கார்ப்பரேட்காரன்களின் கொட்டையைத் தாங்கி மயிரப்புடுங்வது இதைத்தானே காலம் காலமாக செய்கிறீங்க.
Dhamo Dharan லெட்டர்ல எழுதி மிரட்டுனாய்ங்களாம்!...எனக்கு சோறுதான் முக்கியம்! அதனால நம்பிட்டேன்!
 Tamil 2019 பாராளுமன்ற தேர்தல் வருவதால் இன்னும் பல சுவாரசியமான செய்திகள் எதிர் பார்க்கலாம்.
Mani Kandan சட்டசபை 110 விதியின் கீழ் அறிவிப்பு மாதிரி இருக்கு? இரண்டுமே செயல்பாட்டுக்கு வருவதில்லை.

வடகொரிய அதிபர் கொலை செய்யப்படுவார் என்று அச்சம் .. டிரம்ப்புடனான சந்திப்பில் ...

டிரம்ப்புடனான சந்திப்பில் தான் கொல்லப்படலாம் - வடகொரிய அதிபர் அச்சம் தினத்தந்தி :அமெரிக்க அதிபர் டிரம்புடனான சந்திப்பின் போது தாம் கொல்லப்படலாம் என வட கொரிய அதிபர் கிம் ஜாங் அன் தெரிவித்துள்ளார். பியாங்யோங்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் ஆகியோர் சிங்கப்பூரில் வரும் 12-ம் தேதி சந்தித்து பேசுகின்றனர். இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகின்றன. சிங்கப்பூரின் செண்டோசா ரிசார்ட்டில் இந்த சந்திப்பு நடக்கிறது. எனவே, சந்திப்புக்கு முன்னதாக கிம் நிர்ணயித்த அதிகாரிகள் அங்கு சென்று அதன் பாதுகாப்பு ஏற்பாட்டைக் கண்காணிக்க விருக்கிறார்கள்.< இந்நிலையில், சிங்கப்பூரில் நடக்க உள்ள சந்திப்பின் போது தாம் கொலை செய்யப்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவலை வடகொரிய அதிபர் கிம் ஜாங் அன் வெளியிட்டுள்ளார். இதுதொடர்பாக கடந்த ஞாயி்றன்று தனது ராணுவ தளபதிகள் மூவரை திடீரென மாற்றினார்.

இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு - விஞ்ஞானிகள்

இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு - விஞ்ஞானிகள் தகவல்தினத்தந்தி: இந்தியாவின் 16 மாநிலங்களில் உள்ள நிலத்தடி நீரில் கடுமையான யுரேனியக் கலப்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். புதுடெல்லி :  அமெரிக்காவின் டியூக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், தங்கள் ஆய்வின் அடிப்படையில் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளனர். அவர்கள் ஆய்வு தகவலில் கூறப்பட்டுள்ளதாவது:- இந்தியாவில் குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக இருக்கும் நிலத்தடி நீரில் யுரேனியத்தின் அளவு பரவலாக அதிகரித்து வருகிறது.
இந்தியாவின் 16 மாநிலங்களில் இருக்கும் நிலத்தடி நீரில் உள்ள யுரேனியத்தின் அளவு குறித்த தகவல்கள் தொகுக்கப்பட்டன. அதில் ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் 324 கிணறுகளில் உள்ள நீரில் யுரேனியத்தின் அளவு அதிகமாக உள்ளது. இது குடிநீரில் யுரேனியத்தின் அளவாக உலக சுகாதார அமைப்பால் இந்தியாவுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட அளவை விட அதிகமாக உள்ளது. இந்தியாவில் ஒரு லிட்டர் குடிநீரில் 30 மைக்ரோகிராம்களுக்கு மிகாமல் யுரேனியம் இருந்தால் அது பாதுகாப்பான குடிநீர் என உலக சுகாதார அமைப்பு வரையறுத்துள்ளது.

பிகார் பிளஸ் 2 இல் 100 க்கு 120 புள்ளிகள் .. மாணவர்களுக்கு இன்பமோ இன்பம் ... கல்வி மோசடியில் வடக்கின் புதிய சாதனை

பள்ளிக்கே போகாமல் நீட் இல் வெற்றி பெற்றவர்
tamil.thehindu.com/ நீட் தேர்வில் நாடுதழுவிய அளவில் முதலிடம் பிடித்த மாணவி கல்பனா குமாரி, பீகாரில் நடந்த 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் வருகைபதிவு இல்லாத அனுமதிக்கப்பட்ட நிலையில், இதே தேர்தவில், மொத்த மதிபெண்களை விடவும் கூடுதலான மதிப்பெண் வழங்கப்பட்ட அதிர்ச்சி தகவல் தற்போது அம்பலமாகியுள்ளது.
நாடுமுழுவதும் நீட் தேர்வு சமீபத்தில் நடந்தது. தமிழகத்தில் 1 லட்சத்து 7,288 மாணவர்களில், 1 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழகத்தைச் சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. தமிழக அரசு மற்றும் பல் வேறு தனியார் அமைப்புகளின் உதவியால் மிகுந்த சிரமத்துக்கிடையே ரயில்கள், பேருந்துகளில் சென்று மாணவர்கள் தேர்வு எழுதினர். இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.< தவறவிடாதீர்
நீட் தேர்வில் முதலிடம் பிடித்த பீகார் மாணவி குறித்து புதிய சர்ச்சை: வருகைப்பதிவு இல்லை என புகார்

ஆஸ்திரியா 50 இமாம்களை நாடுகடத்துகிறது .. 7 மசூதிகளும் மூடப்படுகிறது

A Muslim from Vienna reacts after Austria said it could expel up to 60 Turkish-funded imams and their families and would shut down seven mosques as part of a crackdown on "political Islam", triggering fury in Ankara.

டெல்லியில் 10 பேரால் கூட்டு பலாத்காரம்.. கென்யா நாட்டு பெண்

Kalai Mathi - Oneindia Tamil  டெல்லி: கென்ய நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் டெல்லியில் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
தலைநகர் டெல்லியில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கென்யாவை சேர்ந்த பெண் ஒருவர் 10 பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கென்ய நாட்டைச் சேர்ந்த 31 வயது பெண் ஒருவர், டெல்லியில் வேலைபார்த்து வருகிறார். 
தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்தர்புரா பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வருகிறார். காருக்காக காத்திருந்தார் காருக்காக காத்திருந்தார் புதன்கிழமை இரவு குருகிராமில் நண்பர்கள் வைத்த பார்ட்டியில் கலந்து கொண்டார். பின்னர் சதுர்பூர் வீட்டுக்குச் செல்வதற்காக, எம்.ஜி.சாலையில் உள்ள பிரிஸ்டல் அருகே வாடகை காருக்காகக் காத்திருந்தார். 

தமிழகத்தில் ஓராண்டில் 50,000 சிறிய தொழிற்சாலைகள் மூடல்.. பணமதிப்பிழப்பு - லஞ்சம்- ஜி எஸ் டி

Swathi K : பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி பிரச்சனைகளால், தமிழகத்தில்
மட்டும் 50,000 சிறிய தொழிற்சாலைகள் மூடல்.. ஒரே ஆண்டில் 5 லட்சம் பேர் வேலையிழப்பு, மத்திய அரசு நடவடிக்கையால் 11,000 கோடி முதலீடும் சரிந்தது - சட்டப்பேரவையில் அரசு தகவல்..
நாடு முழுவதும் இது தான் நடந்து வருகிறது.. நம்ம நிறைய நேரம் GDP (உள்நாட்டு உற்பத்தி) நம்பர் மட்டுமே பேசுரோம்.. GDP கூடுவது, குறைவது இருக்கட்டும்.. யார் மூலமாக நாட்டுக்கு வர வேண்டிய GDP குறைந்தது??? விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்கள் மூலம் நாட்டுக்கு வர வேண்டிய வருவாய் கடந்த இரண்டு வருடமாக கணிசமாக குறைந்து இருக்கிறது.. அந்த sectorல் லட்சக்கணக்கான வேலை இழப்பு, கடந்த 2 வருடத்தில் 6.78 லட்சம் கோடி ரூபாய் வருவாய் இழப்பு விவசாயம், சிறு, குறு தொழில்கள் செய்யும் மக்களுக்கு. இதெல்லாம் இவர்களின் "பண மதிப்பிழப்பு" மற்றும் "குறைப்பிரசவ GST"யினால். இது எல்லாமே மோடியின் கார்ப்பரேட் அஜென்டா.
விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்களை ஒழித்து அந்த இடத்தில் கார்பரேட் கம்பெனிகளை உக்கார வைக்கும் முயற்சியில் மோடி & கோ வெற்றி பெற்றுக் கொண்டு வருகிறார்👿. அதற்கான Transformation (மாற்றம்) தான் நடந்து வருகிறது. இந்த Transformation முடியும் போது இந்தியாவின் GDP ஓரளவுக்கு கூடும்.. ஆனால் அப்போது விவசாயம், சிறு, குறு, சுய தொழில்கள் ஒழிந்து இருக்கும்.. கார்ப்பரேட் கை முற்றிலுமாக ஓங்கி இருக்கும்😢.
2015: (நாட்டின் வருவாயில்)
விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்கள்- 51%
கார்ப்பரேட் - 33%
மற்றவை - 16% (public sector, etc.)
2018 (மார்ச் வரை): (நாட்டின் வருவாயில்)
விவசாயம், குறு, சிறு மற்றும் சுய தொழில்கள் - 39%

மளிகை கடையில் சத்துணவு முட்டைகள் விற்பனை .. 4000 கோடி சம்பாதிப்பேன் என்று சவால் விட்ட சரோஜாவின் சத்துணவு ,,,

தினகரன் :கெங்கவல்லி: தமிழக அரசு சத்துணவு திட்டத்தின் கீழ், அரசு மற்றும் அரசு
உதவி பெறும் பள்ளிகளில் உள்ள சத்துணவு மையங்களில் மாணவர்களுக்கு வாரம் 2 முறை முட்டை வழங்கப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டம் கெங்கவல்லி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மூலம் “சீல்” வைக்கப்பட்ட முட்டைகள் ஊராட்சிகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சத்துணவு அமைப்பாளர்கள், தங்களுக்கான முட்டைகளை எடுத்துச் செல்கின்றனர். இந்த முட்டைகளை, கெங்கவவல்லி கடைவீதி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள மளிகை கடைகளுக்கு தலா ₹2.50க்கு விற்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றன

நீட்’ தேர்வு ,, மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி தீவிர சிகிச்சை

‘நீட்’ தேர்வில் தோல்வி: மேலும் ஒரு மாணவி தற்கொலை முயற்சி
தீவிர சிகிச்சை
நிம்மியின் திமிர் பேச்சு
தினத்தந்தி :கண்டமங்கலம், மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வில் தோல்வி அடைந்ததால் மனமுடைந்து செஞ்சி அருகே பெரவளூரைச் சேர்ந்த மாணவி பிரதீபா, திருச்சி மாணவி சுபஸ்ரீ ஆகியோர் தற்கொலை செய்து கொண்டனர். செஞ்சி அருகே மேல்சேவூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி கீர்த்திகா விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அவருக்கு தீவிர
சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதுச்சேரி அருகே கண்டமங்கலம் அருகே மற்றொரு மாணவி அஷ்டலட்சுமி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 இதுபற்றிய விவரம் வருமாறு:-
 விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே உள்ள சேஷாங்கனூரை சேர்ந்த கூலித்தொழிலாளி ராதாகிருஷ்ணன். இவரது மனைவி பழனியம்மாள். தம்பதியின் மகள் அஷ்டலட்சுமி (வயது 18). கண்டமங்கலத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்தார். கடந்த மே மாதம் 16-ந் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான போது இவர் 738 மதிப்பெண்களே பெற்று இருந்தார்.

வெள்ளி, 8 ஜூன், 2018

நடிகர் சிவகுமார் ஐ டியில் ... 2 டன் காண்டம் கண்டெடுத்தாராம்.. . இன்னொரு எஸ் வி சேகர்?

இன்னும் இவர் மீது ஏன் வழக்கு பாயவில்லை?
David P Shenba : சமீபத்தில் பெண் பத்திரிக்கையாளர்கள் பற்றி தவறாகப் பேசிய புரியும் பெண்கள் பற்றி அவதூறாகப் பேசிய இவருக்கு என்ன தண்டனை?
SV சேகருக்கு எழுந்த எதிர்ப்பு நினைவிருக்கலாம். இன்றுவரை தலைமறைவாக உள்ளார். ஆனால் இப்படி ஐடி துறையில் பணி
1. ஐடி நிறுவன கழிப்பறைகளில் ஆணுறை உள்ளது
மறுப்பு: நான் இதுவரை பல நிறுவனங்களில் வேலை பார்த்துள்ளேன். 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் உள்ளவன். இவர் சொல்வதுபோல எங்கும் ஆணுறை வழங்கப்படுவதில்லை.
2. ஐடி நிறுவனங்கள் வாரவிடுமுறைகளில் ஊழியர்களுக்கு கடற்கரை விடுதிகளில் ரூம் போட்டுத் தருகிறார்கள்
மறுப்பு: இப்படி எந்த நிறுவனமும் செய்வதில்லை. இது சட்டவிரோதம்கூட.
3. வாரவிடுமுறைகளில் ஊழியர்களுக்கு கடற்கரை விடுதிகளில் இறைச்சியும் மதுவும் பரிமாறப்படும்
மறுப்பு: பெரும்பான்மை மக்களின் உணவான இறைச்சியை premarital sex மற்றும் மதுவுடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். இறைச்சி உணவு ஒழுக்கக்கேட்டுக்கு வழிவகுக்கும் என்ற போலியான கருத்தை பரப்பியுள்ளார்.
4. பத்து வருடம் இரவு கண்விழித்து உழைத்தால் மூளை சூடேறும்.

தமிழர்களை மருத்துவ துறையில் இருந்து ஒழித்து கட்டவே - நீட் - National Elimination Test for Tamils


Narain Rajagopalan  :  நீட்டிற்கு எதிரான ஏராளமான
என்னுடைய கட்டுரைகளில் ஒரு இடத்தில் இதை National Elimination Test for Tamils என்று எழுதி இருப்பேன். நடப்பதை எல்லாம் பார்த்தால் அதை செய்ய முடிவெடுத்து விட்டார்கள் என்று தெரிகிறது.
நீட்டிற்கு முன்பாக இந்திய ஒன்றியத்திலேயே சிறப்பான மருத்துவர்களை தமிழகம் உருவாக்கி இருக்கிறது. நீட் உள் நுழைத்தப் பிறகு இந்திய ஒன்றியத்திலேயே தேர்ச்சி விகிதத்தில் கடைசியில் தமிழகம் இருக்கிறது. ஆக, சிக்கல் தகுதித் தேர்வில் இருக்கிறதேயொழிய, மருத்துவ முனைப்புகளில் இல்லை.
அனிதா, சிவசங்கரி, பிரதீபா, சுபஸ்ரீ என வரிசையாய் (தற்) கொலைகள். எல்லா மரணங்களுக்கும் பொங்கலாம். RIP ஸ்டேட்டஸ் போடலாம். அவர்களின் குடும்பத்தின் முன் சமூகமாய் மன்னிப்புக் கேட்கலாம். 'அடேய் எதேச்சதிகார இந்திய அரசே' என்று அறைக்கூவல் விடலாம். இதில் எதுவுமே பயனில்லை.
சட்டரீதியாக இதை நீக்காமல் நமக்கு வாய்ப்புகளே இல்லை. சட்டசபையில் தீர்மானம் போடப்பட்டு குடியரசு தலைவருக்கு அனுப்பட்ட நீட் தமிழகத்திற்கு தேவையில்லை என்கிற சட்ட முன்வரைவு கிடப்பில் போடப்பட்டு அப்படியே இருக்கிறது. மோதிமுக அரசின் அமைச்சர்கள், நீட் தகுதித் தேர்வுக்காக அரசே இலவச பயிற்சி மையங்களை நடத்தும் என்று சொன்னார்கள். அரசு நடத்திய பயிற்சி மையங்களையும் சேர்த்து தான் (தனியார்களுக்கு இலட்ச இலட்சமாக கொட்டி கொடுத்தது தனி) இன்றைக்கு தமிழகம் கடைசி நிலையில் தள்ளப் பட்டு இருக்கிறது. ஆக, இங்கே சிக்கல் பயிற்சி மையங்களோ, படிப்போ கிடையாது. இந்த தேர்வே தமிழ் மாணவ, மாணவியர்களுக்கு எதிராக கட்டமைப்பட்டு இருக்கிறது.
அஞ்சலிக் கட்டுரைகள், எமோஷனல் கண்ணீர் விடல்களில் எனக்கு நம்பிக்கைப் போய் வருட கணக்காகிறது. தற்கொலைக்கு தூண்டியவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை அளிக்கலாம் என்று இபிகோ சொல்கிறது. அப்படியென்றால் நாம் அதிகப்பட்ச தண்டனையை அளிக்க வேண்டியது மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா, சிபிஎஸி இயக்ககம், மற்றும் இதை தொடர்ச்சியாக முன்னிறுத்தும் ஒன்றிய அரசின் மனித வளத்துறையின் கீழ் வரும் கல்வித் துறை.

நீட் கீர்த்தனாவின் தந்தை Dr. காசி : ஏழை பெற்றோர்களால் பிள்ளைகளுக்கு வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியாது

Maha Rajan : Dedicated to CBSE Bhakths .@
நீட் தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பெற்ற மாணவி கீர்த்தனாவின் தந்தை
Dr. காசி அவர்களின் பேட்டி ...
"அரசாங்கம் பயிற்சி வழங்குகிறதே...’ என்று பலர் சொல்கிறார்கள். அரசால் வழங்கப்பட்ட பயிற்சி ஓர் அரைகுறையான பயிற்சி மட்டுமே. அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் 11-ம் வகுப்பிலிருந்தே பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். பயிற்சிகள் ஏனோதானோ என்றில்லாமல் சிறப்பான ஆசிரியர்களால் வழங்கப்பட வேண்டும்.
என் மகள்தான் மாநிலத்தில் முதல் இடம். அவளுக்குத் தேவையான வாய்ப்புகளை, வசதிகளை என்னால் செய்துகொடுக்க முடிந்தது. என் மகளும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருக்கிறாள். ஆனால், ஏழை பெற்றோர்களால் அவர்களின் பிள்ளைகளுக்கு அதே அளவு வாய்ப்புகளை உருவாக்கித்தர முடியாது. இந்தத் தேர்வே ஒரு சமநிலையான தேர்வு கிடையாது என்பதுதான் உண்மை.
தமிழ்நாடு அரசு, மத்திய அரசிடம் குறைந்தது ஐந்து ஆண்டுகளாவது நீட் தேர்வுக்கு விலக்குப் பெற்றிருக்க வேண்டும்.

ஆன்லைன் மூலம் பொருட்செலவில்லாமல் உயர்கல்வி படிக்க நல்ல வாய்ப்பு.

Alwar Narayanan : யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம் !!!
https://onlinecourses.nptel.ac.in/
இன்று ஒரு அலுவலக நண்பரின் மூலமாக தெரிந்துகொண்டது. இந்தியாவில் உள்ள எல்லா IIT மற்றும் IISc கல்லூரிகளில் உள்ள பேராசிரியர்கள் சேர்ந்து இலவசமாக ஆன்லைன் மூலம் பல்வேறு தலைப்புகளில் (35000 மணிநேர வீடியோ) ஆவணப்படுத்தி உள்ளார்கள். கல்வியை இலவசமாக வழங்கவேண்டுமென்று அரசால் 2003 முதல் நடத்தப்படுகிறது.
கம்பியூட்டர் அல்லது ஸ்மார்ட் தொலைபேசி மூலம் இந்த கோர்ஸ் எடுக்கலாம். கடைசியில் வெறும் 1000/- ருபாய் கட்டி தேர்வு எழுதி சான்றிதழ் பெறலாம்.
வான சாஸ்திரம் முதற்கொண்டு வெல்டிங் வரை, விவசாயம், தொழில் நுட்பம், சுற்றுசூழல், விமான தொழில்நுட்பம், சமூகவியல், பொருளாதாரம், சுயதொழில் என்று கணக்கில்லாத தலைப்புகள் இருக்கின்றன.
https://onlinecourses.nptel.ac.in/
இதை சொடுக்கி படித்து பயன்பெறுங்கள். பெரும் பொருட்செலவில் உயர்கல்வி படிக்க வாய்ப்பில்லாதவர்களுக்கு நல்ல வாய்ப்பு.

தவ்ஹீத் ஜமாத் கலைக்கபடவேண்டிய அமைப்பு.,, பணத்தில் முறைகேடு.. காமகொடூர விளையாடல்கள்

ஆலஞ்சியார் : TNTJ.. நாற்றமடிக்கிறது.. தெளிவற்ற கொள்கை முழக்கமும்..
அதீத நம்பிக்கையும் ஒருநாள் பொய்த்து போகிறபோது.. அதுவரை நடத்திவந்த செயல்களின் நம்பகதன்மை இழந்துவிடுகிறது.. தனிமனித ஒழுக்கம் அவரின் தனிப்பட்ட விடயமாய் கருத்தில் கொண்டாலும் வெளியில் தூய்மை பேசி திரியும் பொய் முகத்தை கிழித்திவிடுகிற போது .. நிஜம் பல்லிளிக்கும்.. ..
இவர்களின் கொள்கை ஒரிறை .. அதில் மாற்றத்தையா சுன்னத்வல் ஜமாத் செய்தது இல்லை .. சில கலாச்சார நிகழ்வுகளை அந்தந்த மண் சார்ந்த விடயங்கள் சிலவற்றை தவிர்க்கமுடியாது செய்ததை இவர்கள் .. இறைமறுப்பென்றும்.. இதே ஷரியத்திலிருந்து பிரிந்து ஷிர்க்கில் போய்விட்டதாகவும் மிகப்பெரிய பிரச்சாரத்தை தொடுத்து சமுதாய மக்களை பிரித்ததில் பெரும் பங்காற்றியது.. அது உறவின் விரிசல் வரை கொண்டு சேர்த்து ஒரே குடும்பத்தில் பகைமையை வளர்த்தெடுப்பதில் பெரும்பங்காற்றியது..
ஒற்றுமையை சிதைக்கிற எந்தவொரு இயக்கமும் காலசக்கரத்தில் தானாக கழட்டிவிடப்படும்.. அதற்கான காரணவிடயங்களை காலம் செய்து கொண்டே இருக்கும்....
தனிநபர் புகழ்பாடல் இங்கில்லை என்றவர்கள்.. ஒவ்வொருவரின் சங்கதிகள் வெளியே வர நாற்றமடித்த நிலை.. பி.ஜே எனும் கயமையை தாண்டி.. தொடர்ந்து அல்தாபி.. இப்போது ..சையத் இபுராகிம் ..போலி பெயரில் இருந்து நிகழ்த்தியது வெளியாகியிருக்கிறது.. 

“காலா : காவிகளை தின்று செரித்த வேங்கை மவன் ரஞ்சித்

thetimestamil :ஹரி தாதா பேசும் தூய்மை பற்றிய வசனங்கள், தேசியம் பற்றிய வசனங்கள் நேரடியாக மோடியை சுட்டுபவை. நாட்டை தூய்மைப்படுத்தும், தேசியத்தை வலியுறுத்தும் அவர்களின் அரசியலுக்கு பின் உள்ள அதிகார வெறியை, சூழ்ச்சியை வெகுமக்களிடம் காலா பிரசங்கமில்லாமல் நிறுவுகிறது.
ப. ஜெயசீலன் :
  spoilers எதுவும் இல்லை..தைரியமாக படிக்கலாம்.
;art (கலை) :the expression or application of human creative skill and imagination, typically in a visual form such as painting or sculpture, producing works to be appreciated primarily for their beauty or emotional power”
அழகியல் சார்ந்தும், உணர்வெழுச்சி சார்ந்தும், ஓவியம்/சிற்பம் முதலான காட்சி வடிவங்கள் பிரயோகித்து/துணைகொண்டு வெளிப்படும் மனிதர்களின் படைப்பு திறன் மற்றும் கற்பனை திறன்.
மேல்சொன்னது கலை என்பதற்கான வரையறை. ஒரு பொருள்/வெளிப்பாடு எப்படி/எதனால் கலையாக மாறுகிறது?. ஒரு படைப்பு கலையாக மாறுவதற்கு காலம்/வெளி (time and space) முக்கிய காரணியாக விளங்குகிறது.
இரண்டு உதாரணங்கள். நீங்கள் தினமும் அணியும் ஜீன்ஸ் பேண்டுக்கு தற்காலத்தில் எந்த கலாபூர்வ அந்தஸ்தும் கிடையாது. அது வெறும் அழுக்கு ஜீன்ஸ். ஆனால் 1000 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு அகழ்வாராய்ச்சியில் உங்களது ஜீன்ஸ் கண்டுபிடிக்கப்பட்டால் அது விலைமதிக்க முடியாதா புராதான கலை பொருளாக அது கருதப்படும். இங்கு அதன் கலைத்தன்மையை “காலம்” தீர்மானிக்கிறது.

மின்னம்பலம் : முகேஷ் அம்பானியின் பெருந்தன்மை! ஆமா தியாகத்தின் திருவுருவம் ..

முகேஷ் அம்பானியின் பெருந்தன்மை!ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி இந்த ஆண்டும் தனது ஊதியத்தை உயர்த்திக்கொள்ளாமல் தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ரூ.15 கோடியைச் சம்பளமாகப் பெறவுள்ளார்.
இந்தியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானி சென்ற 2009ஆம் ஆண்டில் தனது ஊதியம் உயர்வு குறித்த விவாதம் எழுந்தபோது, ரூ.15 கோடியை மட்டுமே தான் சம்பளமாகப் பெறப்போவதாக வெளிப்படையாக அறிவித்தார். தனது பணியாளர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக, பணியில் அதிக அக்கறை செலுத்துவதையும் ஊதியத்தைப் பெரிதாக நினைக்கக்கூடாது என்பதையும் வலியுறுத்தும் வகையில் அம்பானி இந்த முடியை மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் இந்த ஆண்டும், தொடர்ந்து பத்தாவது ஆண்டாக ரூ.15 கோடியை மட்டுமே ஊதியமாகப் பெறப்போவதாக அம்பானி அறிவித்துள்ளார்.

கள்ளநோட்டு கும்பலோடு எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு? ஜே.அன்பழகன் சந்தேகம்!

கள்ள நோட்டுக் கும்பலுடன் முதல்வருக்குத் தொடர்பு?மின்னம்பலம் : சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஜெ.அன்பழகன், கள்ள நோட்டுக் கும்பலைச் சேர்ந்தவருடன் முதல்வர் இருக்கும் புகைப்படத்தை காட்டி, கள்ள நோட்டுக் கும்பல் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா என்று சந்தேகம் கிளப்பியுள்ளார்.
கோவை வேலாண்டிபாளையத்தில் ஜூன் 1ஆம் தேதி போலீசார் நடத்திய சோதனையில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவரிடம் இருந்து ரூ. 1 கோடியே 25 லட்சம் மதிப்பிலான கள்ள நோட்டுகள் கைப்பற்றப்பட்டன.
இதனையடுத்து ஆனந்தன், கிதர்முகமுது மற்றும் சுந்தர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கள்ள நோட்டுச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

சந்திரபாபு நாயுடு : திருப்பதியை அபகரிக்க மத்திய அரசு சதி!

minnambalam: சித்தூரில் நேற்று நடந்த நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட ஆந்திர
முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, திருப்பதி கோயிலை அபகரிக்க மத்திய அரசு சதி செய்ததாகக் குற்றம்சாட்டினார்.
கடந்த மார்ச் மாதம் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தார் ஆந்திர முதலமைச்சரும் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு. ஆந்திர மாநில அரசின் செயல்களை பாஜகவினர் விமர்சித்துவந்த நிலையில், அவர்களை எதிர்த்துத் தெலுங்கு தேசம் கட்சியினரும் பேசத் தொடங்கினர். நேற்று (ஜூன் 7) ஆந்திர மாநிலம் சித்தூரில் நடந்த கட்சிக் கூட்டமொன்றில் கலந்துகொண்டார் சந்திரபாபு நாயுடு. அப்போது, அவர் மத்திய அரசின் சமீபகால நடவடிக்கைகளை விமர்சித்தார்.
“திருப்பதி திருமலை கோயிலுக்கு எதிரான எந்தச் சதியையும் வெற்றி பெற விட மாட்டோம். மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இந்தக் கோயிலைக் கொண்டுவர முயற்சிகள் நடந்தன.

தினமலர் : இந்து கடவுள்களை காரணம் இன்றி எதிர்க்கும் 'காலா': ஏமாற்றப்பட்டாரா ரஜினி?

சென்னை: 'கபாலி' படத்திற்குப் பிறகு மீண்டும்
பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 'காலா', புதிதாக பல சர்ச்சைகளை உருவாக்கி உள்ளது. படத்தைப் பார்த்த பலரும், இயக்குனர் ரஞ்சித் தேவையற்ற பல காட்சிகளை வேண்டுமென்றே திணித்திருக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறார்கள்.
கடவுள் எதிர்ப்பு: படத்தைப் பார்த்த பொதுவான ரசிகர்கள், படத்தில் தேவையே இல்லாமல் இந்து மதக் கடவுள்களை எதிர்க்கும் விதத்தில் குறியீடுகளாக பல காட்சிகளை ரஞ்சித் வைத்திருக்கிறார் என்று கோபத்தில் இருக்கிறார்கள்.
படத்தின் ஆரம்பத்திலேயே தாராவி பகுதியில் உள்ள 'டோபிகானா'வை சில ஆட்கள் வந்து இடிக்க முயல்கிறார்கள். அவர்கள் அனைவரும் நெற்றியில் சிவப்பு பொட்டையும், கழுத்தில் காவி உடையையும் அணிந்திருக்கிறார்கள். அதற்குத் தலைமை தாங்கும் துணை வில்லன் சம்பத், கொல்லப்படும் போது, கடலில் விநாயகர் சிலைகளை அழுத்திக் கரைக்கிறார்கள். <>ராமர், கிருஷ்ணர்:
 அடுத்து, நானா படேகர் வீட்டைக் காட்டும் போதெல்லாம், அவர் இந்து மதத்தில் தீவிரப் பற்று கொண்டவர் என்பதைக் குறிக்கும் வகையில், பின்னணியில் கிருஷ்ணர் சிலை, அடுத்து ராமர் சிலை ஆகியவற்றை காட்டுகிறார்.
கிளைமாக்ஸ் காட்சியில், வில்லன் நானா படேகர் வீட்டில், ராமர் பூஜையுடன் ராமர் கதாகலாட்சேபம் நடந்து கொண்டிருக்கிறது. அப்போது ராமர், ராவணனை வதம் செய்வது பற்றி பாடப்படுகிறது. அந்த சமயத்தில் ராமன் புகழையும், பெருமையையும் பற்றி சொல்வதை விட ராவணன் பெருமைகளை உரக்கச் சொல்கிறார்கள்.

குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் மேட்டூர் அணை திறப்பு இல்லை.. கண்டித்து திமுக வெளிநடப்பு

tamilthehindu : குறுவை சாகுபடிக்காக இந்தாண்டும் மேட்டூர் அணை திறக்கப்படாது என முதல்வர் அறிவித்ததைக் கண்டித்து சட்டப்பேரவையில் இருந்து திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.
தமிழக சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை), விதி எண் 110-ன் கீழ், மேட்டூர் அணையில் போதிய நீர் இருப்பு இல்லாததால் இந்தாண்டும் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறந்துவிட வாய்ப்பில்லை என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும், குறுவை தொகுப்பு திட்டத்தையும் அறிவித்தார். இதையடுத்து, குறுவை தொகுப்பு திட்டத்திற்காக அமைச்சர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேச சபாநாயகர் அனுமதித்தார்.

இல்லுமினாட்டி புகழ் பாரிசாலன் கைது .. நாம் தமிழர் கட்சியினர் ,,


சென்னை: சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விமர்சனங்கள் வீடியோவாக வெளியிடுபவரும் இல்லுமினாட்டி குறித்து அதிகம் பேசுபவருமான பாரிசாலன் கைது செய்யப்பட்டுள்ளார்.
வேலூரில் உள்ள பஜாஜ் கம்பெனியில் தனது பைக்கை சர்வீஸ்க்காக விட்டபோது ஏற்பட்ட தகராறில் அந்நிறுவனத்தினர் பாரிசாலனை தாக்கினர். இதில் வாயில் ரத்தம் சொட்ட சொட்ட சமூக வலைதளங்களில் தன்னை அடித்தது தெலுங்கர்கள் என லைவ் வீடியோ போட்டார் பாரிசாலன்.
நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளரான பாரிசாலனுக்கு நீதிகேட்டு அக்கட்சியினர் பஜாஜ் கம்பெனியில் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து பாரிசாலனை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாரிசாலன் கைது செய்யப்பட்டது குறித்தும் அவர் தாக்கப்பட்டது குறித்தும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலும் கேலியுமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கனடா மாகாண தேர்தலில் இரு தமிழர்கள் வெற்றி .. ஒண்டாரியோ மாகாணம்eettv.com :கனடா- ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக ஈழத்தமிழர்கள் இருவர்கள் வெற்றி பெற்றுள்ளார்கள். ஒன்டாரியோ மாகாண சட்டமன்றத்துக்கு நேற்று தேர்தலில், இதில், முற்போக்கு கொன்சர்வேட்டிவ் கட்சியின் சார்பில் போட்டியிட்ட லோகன் கணபதி, மற்றும் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார்கள்.
லோகன் கணபதி;18,943 – 50.45% – வெற்றி பெற்றுள்ளார்,லிபரல் கட்சி வேட்பாளர் ஜோனிட nathan (Ljiberal) – 9,160 – 24.40% வாக்குகளையும், பெற்றுள்ளனர்
விஜய் தணிகாசலம் இவருக்கு, 16,224 வாக்குகள் கிடைத்துள்ளன. தேசிய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பெலிசியா சாமுவெல், 15,261 வாக்குகளைப் பெற்றார்.
இதன் மூலம். 963 வாக்குகள் வித்தியாசத்தில் விஜய் தணிகாசலம் வெற்றி பெற்றுள்ளார். லிபரல் கட்சி வேட்பாளர் சுமி சான் 8785 வாக்குகளையும், பசுமைக் கட்சியின் வேட்பாளர் பிரியன் டி சில்வா 1014 வாக்குகளையும், பெற்றுள்ளனர்.
இதற்கிடையே இதுவரை வெளியான முடிவுகளின்படி, ஒன்ராரியோ சட்டமன்றத் தேர்தலில், முற்போக்கு கொன்வர்வேட்டிவ் கட்சி 76 ஆசனங்களைக் கைப்பற்றி முன்னணியில் உள்ளது.

சென்னை ..சுவர் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு!

சுவர் இடிந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு!மின்னம்பலம்: சென்னை அண்ணா நகரில் மதில் சுவர் இடிந்து விழுந்ததில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர்.
அமைந்தகரை கக்கன் நகர் பகுதியில் அன்சர் வீட்டைச் சுற்றி, 6 அடி உயரம் கொண்ட மதில் சுவர் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட, இந்த மதில் சுவரில் விரிசல் ஏற்பட்டிருந்தது.
இந்நிலையில், சகோதரர்களான அன்சார் மற்றும் பைரோஸ் ஆகியோரின் குழந்தைகளான தயான்(வயது 8), முஸ்கான்(வயது 4) ஆகிய இருவரும் அந்த மதில் சுவரின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

கேரளா ராஜ்யசபா சீட் கே,எம்,மணிக்கு ... கூட்டணியிலேயே இல்லாதவர்... காங்கிரஸ் வட்டாரத்தில் குழப்பம்

மாலைமலர்: காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்து கடந்த 2 ஆண்டுகளாக
விலகி இருக்கும் கே.எம்.மாணி கூட்டணிக்கு ராஜ்யசபா சீட்டை காங்கிரஸ் தலைமை ஒதுக்கியுள்ளது அம்மாநிலத்தில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம்: மாநிலங்களவை துணை சபாநாயகர் குரியன் உள்ளிட்ட கேரளாவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட மூன்று எம்.பி.க்களின் பதவிக்காலம் இம்மாதத்துடன் முடிவடைய உள்ளது. தற்போது உள்ள எம்.எல்.ஏ.க்கள் பலத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இரண்டு எம்.பி.க்களை பெற முடியும். மீதமுள்ள ஒரு எம்.பி காங்கிரஸ் கட்சி பெற முடியும். குரியனை மீண்டும் தேர்வு செய்ய முன்னாள் மாநில காங்கிரஸ் தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தினமலர் அச்சம் : நீட் தேர்வுக்கு எதிராக பிரமாண்டமான கலவரம் வெடிக்கும் என்று நடுங்கம்?

போர்வையாளர்கள்,சதி,அடுத்த பகீர்,அம்பலம் தினமலர்: தமிழகத்தில், 'நீட்' தேர்வுக்கு எதிராக களமிறங்க,
பிளஸ் 2 பள்ளிக்கே செல்லாமல் நீட் பாஸ்
போர்வையாளர்கள்' சதித் திட்டம் தீட்டியுள்ள தகவல் வெளியாகி உள்ளது. இதற்காக, கிராமங்கள் தோறும், ரகசிய கூட்டங்கள் நடத்தி, ஆள் திரட்டி வருவதால், மீண்டும் வன்முறை வெடிக்கலாம் என, உளவுத்துறை எச்சரித்துள்ளது. சதிச் செயலை முறியடிக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தவும், மாவட்ட போலீசாருக்கு, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.
ஜெயலலிதா மறைவுக்கு பின், தமிழகத்தில், எதற்கெடுத்தாலும் போராட்டம் நடத்தும் சூழல் காணப்படுகிறது. சமூக விரோதிகள், மாவோயிஸ்ட் ஆதரவு அமைப்பினர், சில அரசியல் தலைவர்கள் மற்றும் போர்வையாளர்கள், சமீபத்தில், துாத்துக்குடியில், 'ஸ்டெர்லைட்' ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் ஊடுருவினர்.
இவர்கள், ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள, 17க்கும் மேற்பட்ட கிராமங்களில், வாடகை வீடுகளில் தங்கி, இளைஞர்களை மூளைச்சலவை செய்தனர்.< 13 பேர் பலி :அவர்களை, வன்முறை பாதைக்கு தயார்படுத்தினர். அதன் வாயிலாக, மே, 22ல், துாத்துக்குடியில் நடந்த பேரணியில், வன்முறையை துாண்டி விட்டதால், துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டு, 13 பேர் பலியாகினர். அதற்கு

நீட் தேர்வு மிகவும் வெளிப்படையாகவே தமிழ்நாடு மீது போர் தொடுத்துள்ளார்கள்

ஒரு நியூஸ் சொல்லட்டா சார்..?மின்னம்பலம் : நீட் விஷயத்தில் இவ்வளவு வெளிப்படையான புறக்கணிப்பு அரசியல் நடக்கும் என்று நிச்சயமாக யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். ஏனெனில், அரசியலுக்கும் மாணவர்களின் கல்விக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அரசியலுக்காக மாணவர்கள் பலிகடா ஆக்கப்பட மாட்டார்கள் என்று நினைத்துக்கொண்டிருந்தோம். அரசியல் என்று வந்துவிட்டால் பச்சிளம் குழந்தைகூட விதிவிலக்கல்ல என்று உணர்த்தியிருக்கிறது நீட் தேர்வு முடிவுகள்.
நீட் தேர்வு முடிவுகளில் நிகழும் மரணங்கள் நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாகத் தொடர்ந்துகொண்டே இருக்கின்றன. தமிழகத்தைத் தாண்டி டெல்லி, ஹைதராபாத் என்று எல்லா மாநிலங்களிலும் நீட் தோல்வியினால் மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்திகள் வலம்வந்து கொண்டேதான் இருக்கின்றன.
மற்ற மாநிலங்களில் நடக்கும் தற்கொலைகளுக்கும், தமிழகத்தில் நடக்கும் தற்கொலைகளுக்கும் ஒரு வித்தியாசம் உண்டு. மற்ற மாநிலங்களில் நீட் தேர்வுக்காகத் தயாரான மாணவர்களுக்கு இருந்த வசதி, நிச்சயமாகத் தமிழக மாணவர்களுக்கு வழங்கப்படவில்லை. ‘சமம்’ எனும் பெயரால் நடத்தப்பட்ட நீட் எனும் தேர்வின் சமநிலை தவறியதே தமிழகத்தின் தொடர் மரணங்களுக்குக் காரணம்.

சிவகங்கை: லிஃப்ட் கேட்டவருக்கு வெட்டு! சாதியை ஏன் முதலில் கூறவில்லை என்று ..

சிவகங்கை: லிஃப்ட் கேட்டவருக்கு வெட்டு!மின்னம்பலம்: சிவகங்கையில், சாதி தெரியாமல் லிஃப்ட் கொடுத்துவிட்டு, சாதி தெரிந்ததும் தலித்தை அரிவாளால் வெட்டிய ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த குற்றவாளியைக் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
சிவகங்கையில் உள்ள கச்சநத்தம் கிராமத்தில் ஆதிக்கச் சாதியினரின் சாதி வெறியால் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளுக்குள் கடந்த 28ஆம் தேதியன்று புகுந்து நடத்திய தாக்குதலில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் ஐந்து பேர் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தை வன்கொடுமை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்கிற கோரிக்கை பலமாக எழுப்பப்பட்டுவரும் நிலையில் மறுபடியும் ஒரு சாதிய கொடூரத் தாக்குதல் நடந்துள்ளது.
இதுதொடர்பாக நேரில் சென்று ஆய்வு மேற்கொண்ட எவிடன்ஸ் கதிரிடம் மின்னம்பலம் சார்பாகத் தொடர்புகொண்டு பேசியபோது, அவர் தெரிவித்த தகவல்கள்...

நடிகை வரலட்சுமி : ”பாஜக தலைவர் முரளிதரராவ் என்னை சந்தித்துப் பேசினார்!

அரசியல் என்ட்ரி: வரலட்சுமி விளக்கம்!மின்னம்பலம : பாஜகவில் தான் இணைந்துவிட்டதாக வெளியான தகவலுக்கு நடிகை வரலட்சுமி சரத்குமார் விளக்கமளித்துள்ளார்.
பாஜக ஆட்சியின் 4 ஆண்டு கால சாதனையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் விதமாக ஒவ்வொரு துறையிலும் சிறந்து விளங்கும் பிரபலங்களை சந்தித்து சாதனை விளக்க அறிக்கையை பாஜக தலைவர்கள் அளித்துவருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நடிகை வரலட்சுமியை சந்தித்தும் பாஜகவின் மேலிடப் பொறுப்பாளர் முரளிதரராவ் சாதனை அறிக்கையை நேற்று வழங்கினார்.
இதையடுத்து நடிகை வரலட்சுமி பாஜகவில் இணைந்துவிட்டதாக தகவல் பரவியது. இந்நிலையில் அதற்கு விளக்கமளிக்கும் விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வரலட்சுமி கருத்து ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

சிம்பு : எங்களுக்கு 1000 கோடிக்கு மேல் சொத்து உள்ளது.

simbuசிம்பு எப்போதும் படப்பிடிப்பிற்கு லேட்டாக வருகிறார் என்ற குற்றச்சாட்டு வெகுநாட்களாக இருந்து வந்தது.
இவர் கடைசியாக நடித்த ‘AAA’ படத்தில் இந்த பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து சிம்பு மணிரத்னம் இயக்கத்தில் ‘செக்க சிவந்த வானம்’ படத்தில் வெற்றிகரமாகவும், பிரச்சனை இல்லாமலும் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தில் நடித்ததை குறித்து பேசிய வீடியோ ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளார். அதில்… “செக்கச் சிவந்த வானம்’ படத்தின் படப்பிடிப்பு நல்லபடியாக முடிந்துவிட்டது. அதற்கு மணிரத்னமுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவர் இயக்கத்தில் நடித்தது சிறந்த அனுபவமாக இருந்தது. அஞ்சலி படம் பார்த்து இவருடைய இயக்கத்தில் நடிக்க வில்லை என்று வருத்தப்பட்டேன். மணிரத்னம் இயக்கத்தில் நம்மால் நடிக்க முடியாது என்று நினைத்தேன். ஆனால், எனக்கு மணிரத்னம் வாய்ப்பு கொடுத்தார். இந்த படத்தில் நடிக்க கூடாது என்று பல பிரச்சனைகள் தடைகள் வந்தாலும், அதையும் தாண்டி என் மேல் நம்பிக்கை வைத்தார். அவருக்கு பெரிய நன்றி. படத்தில் நடித்த அனைவருக்கும் நன்றி.

வியாழன், 7 ஜூன், 2018

வைகோ : நீட் எனும் மரணக் கயிற்றை அறுக்க வேண்டும்

வைகோ அறிக்கை : இந்தியாவிலேயே பனிரெண்டாம் வகுப்பில் அதிக
மதிப்பெண்களைப் பெற்று தேர்வு பெற்ற 91.1 தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் இந்தியாவில் 34 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் பள்ளி இறுதித் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரிகளில் பயின்ற எண்ணற்றவர்கள் உலகப் புகழ்பெற்ற மருத்துவர்களாக தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல நகரங்களிலும், உலகின் பல நாடுகளிலும் அற்புதமான மருத்துவச் சேவை செய்து வருகின்றனர்.
பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய, நடுத்தர குடும்பத்துப் பிள்ளைகள் நீட் தேர்வு எனும் மத்திய அரசின் நயவஞ்சகத் திட்டத்தால் மருத்துவப் படிப்புக்கு வாய்ப்புக் கிடைக்காமல், மனம் உடைந்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். அனிதா, பிரதீபா எனும் இளம் தளிர்கள் தங்கள் உயிரைப் போக்கிக் கொண்டனர்.
இந்நிலையில், திருச்சி - சமயபுரம் டோல்கேட், பிச்சாண்டார்கோவில் பகுதியைச் சேர்ந்த பேருந்து ஓட்டுநர் கண்ணன் என்பவரின் மகள் சுபஸ்ரீ நீட் தேர்வில் வெற்றி பெறாததால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சியையும், கலக்கத்தையும் தருகிறது.
தமிழகத்தின் மாணவ - மாணவிகளே! “வாழ்க்கையில் ஒரு கதவு மூடினால் இன்னொரு கதவு திறக்கும்” என்ற நம்பிக்கையோடு கிடைக்கின்ற கல்வி வாய்ப்பைப் பயன்படுத்துங்கள். நீங்கள் உயிரை மாய்த்துக்கொண்டால் உங்கள் பெற்றோரும், உடன் பிறந்தோரும் நெஞ்சம் வெடித்துக் கதறுவார்களே! என்பதை எண்ணிப் பாருங்கள்.

மொத்த மருத்துவ... எண்ணிக்கை : 63835. ஆகாஷ் கோச்சிங் - வெற்றி எண்ணிக்கை : 61649

Boopathi PT : MCI கணக்கு படி மொத்த மருத்துவ மாணவர்களின் எண்ணிக்கை
: 63835.
ஆகாஷ் கோச்சிங் சென்டரில் பயிற்சி எடுத்து வெற்றிபெற்றவர்களின் எண்ணிக்கை : 61649
எதிரியின் பலம் இவ்வாறு இருக்க அதிமுக
அரசு மாவட்டம் தோறும் கோச்சிங் சென்டர்
அமைக்கபோவதாக வந்த அறிவிப்பிற்கும் பதினோராம் வகுப்பிற்கு பொது தேர்வு என்ற அறிவிப்பிற்கும் , திமுக எதிர்ப்பு அறிவுஜீவிகள் வானுயர அமைச்சரை புகழ்ந்து எழுதியதை பார்த்து அப்பொழுதே அவர்களின் குரூர முகம் கண்டேன்.

அதிமுக ஜனநாயக கடமையாக கோச்சிங் சென்டர் அமைத்ததையும், திமுகவின் செயல்தலைவர் மாவட்டம்தோறும் அவ்வாறு கோச்சிங் சென்டர் அமைத்து செயல்படாமல் ஜனநாயக கடமையாற்ற தவறியதாக தூற்றுவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
இன்னொரு பக்கம், தானாக அமைந்த வாய்ப்பான ஜனாதிபதி தேர்தலை பயன்படுத்தாமல் கேட்காமலயே விழுந்தடித்து பஜகவிற்கு ஆதரவை அளித்த திராவிட செல்வர் தினகரன் அவர்கள் மாணவர்களின் பயண செலவை ஏற்பதாக விளம்பரம் செய்யப்பட்டு, அற்ப பிறவிகள் ஏன் ஸ்டாலின் தனி ரயில் விடலாமே என எகத்தாளம் பேசியதையும் பார்த்தேன்.

மனைவி கொலை - பிஹார் தப்ப முயன்ற கணவர்: ரயில் நிலையத்தில் மடக்கிப் பிடித்த போலீஸார்

tamilthehindu :கொலையாளி நவ்ஷாத் மனைவியுடன், ரயில்வே ஆய்வாளர் படம்: சிறப்பு ஏற்பாடு மனைவியைக் கொலை செய்துவிட்டு இரண்டு பிள்ளைகளுடன் பிஹார் தப்ப முயன்ற கணவரை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் போலீஸார் மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆசாத் நகரில் தங்கி வீடுகளுக்கு மொசைக் போடும் வேலை செய்து வந்தவர் நௌஷாத் (35). பிஹாரைச் சேர்ந்த இவருக்கு திருமணமாகி கோதல் (32) என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். நௌஷாத் தனது மனைவியுடன் குடும்பப் பிரச்சினை காரணமாக சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றியதில் கடந்த 6-ம் தேதி திடீரென தனது மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் வீட்டைப் பூட்டிவிட்டு யாருக்கும் தெரியாமல் தனது இரண்டு குழந்தைகளுடன் தப்பிச் சென்றார்.
இது குறித்த தகவல் அறிந்த கேரள போலீஸார் கோதலின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். நௌஷாத்தைப் பிடிக்க வலைவிரித்தனர்.

அனிதாவையும் பிரதீபாவையும் கீர்த்தனவா கொலை செய்தார்? அனிதா அண்ணன் ஆவேசம்

கீர்த்தனாவின் அம்மாவும் அப்பாவும் டாக்டர்கள் . அவருக்கு நீட் ஒரு பிரச்சனையே இல்லை. ஆனால் சமுகத்தின் நலிவடைந்த பிரிவு . வறுமையின் பின்னணியில் இருந்து வந்த அனிதா , பிரதிபா போன்றவர்கள் இனி எந்த காலத்திலும் மருத்துவர் ஆக முடியாது . நீட் இதுபோன்ற நலிவடைந்தோரின் கல்விக்கு சாவு மணி அடித்துள்ளது .
வெப்துனியா :சமீபத்தில் நடந்து முடிந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 12வது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்தையும் பெற்றவர் கீர்த்தனா. தாய், தந்தை இருவருமே டாக்டர்களாக இருக்கும் குடும்பத்தில் பிறந்த கீர்த்தனா, சிபிஎஸ்.இ பள்ளியில் படித்ததால் எளிதாக நீட் தேர்வில் மார்க் அதிகமாக எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.
;இந்த நிலையில் நீட் தேர்வு குறித்து கருத்து கூறிய கீர்த்தனா, 'நீட் தேர்வுக்கு சரியான முறையில் பயிற்சி பெற்றால் எல்லோருக்கும் எளிதாகத்தான் இருக்கும் என்று கூறினார். அவருடைய இந்த கருத்துக்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்கள் தெரிவித்தனர்
நீட் தேர்வால் அனிதா, பிரதீபா ஆகிய உயிர்கள் பலியாகி இருக்கும் நிலையில் நீட் தேர்வை ஆதரித்து பேசுவது தவறு என்று நெட்டிசன்கள் அவரை விமர்சனம் செய்து வந்தனர். இதற்கு அனிதா அண்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து தனது ஃபேஸ்புக்கில் கூறியதாவது:

தூத்துக்குடி மக்களின் வாக்குமூலங்கள்! மின்னம்பலம் .

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு குறித்த மக்கள் விசாரணைக் குழுவின் இடைக்கால அறிக்கை – பகுதி 2
கட்டுரையின் கடந்த பிரிவில் குறிப்பிட்டதுபோல, 144 தடையுத்தரவு போடப்பட்டிருப்பது பற்றிப் பேரணியில் பங்கெடுத்தவர்கள் பலருக்குத் தெரியவில்லை. அது சிறு பகுதியில் மட்டும் போடப்பட்டிருந்தது; மாவட்ட கலெக்டர் அலுவலகம் வரை செல்ல மக்கள் அனுமதிக்கப்பட்டனர். பிரதான சாலையின் மறுபக்கம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு நேரெதிரே கிராமங்களை நோக்கிச் செல்லும் சந்துகளில் மக்களின் சுதந்திரமான போக்குவரத்து காணப்பட்டது. போலீஸ் அவற்றில் தடுப்புகளைப் போடவோ அல்லது அந்தத் தெருக்களைக் கட்டுப்படுத்தவோ செய்யவில்லை. பிரதான சாலையைக் கிராமங்களுடன் இணைக்கும் இந்தச் சந்துகள் ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கிச் செல்ல வழித்தடங்களாக அமைந்தன. சில இடங்களில் மட்டும் போடப்பட்டிருந்த தடைகளால் தடுக்கப்பட மக்கள் இந்த சந்துகளைப் பயன்படுத்தி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை அடைய முடிந்தது. வாக்குமூலங்கள்படி, பேரணிக்காக ஒதுக்கப்பட்டிருந்த எஸ்.ஏ.வி. பள்ளிக்கூட மைதானத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தவர்களும் நிறுத்தப்பட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தவர்களை நோக்கி திசைதிருப்பிவிடப்பட்டனர்.

காலா - அடுத்தடுத்த காட்சிகளில் வேகம் பிடிக்கும் ,, நேரடி நிலவரம் .

காலா டிக்கெட்: நேரடி ரிப்போர்ட்!மின்னம்பலம் : ரஜினி நடிப்பில் காலா திரைப்படம்
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உலகம் முழுவதும் இன்று (ஜூன் 7) வெளியாகியுள்ளது. ரஜினி இதற்கு முன் ரஞ்சித் இயக்கத்தில் நடித்த கபாலி திரைப்படம் ஒரு சினிமாவாக எதிர்கொண்ட விமர்சனத்தைவிடவும் அதிக ரூபாய்க்கு டிக்கெட் விற்கப்படுகிறது என்ற விமர்சனம்தான் அதிக அளவில் இருந்தது. எனவே, காலா படத்தின் டிக்கெட் கட்டணம் எப்படி உள்ளது எனத் தெரிந்துகொள்ள இன்று மின்னம்பலம் டீம் அடித்த விசிட்டின் நேரடி ரிப்போர்ட் இங்கு கொடுக்கப்பட்டுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை சத்யம், பலாசோ, மாயாஜால் உள்ளிட்ட பெரும்பாலான திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் 207 ரூபாய். சில திரையரங்குகளில் ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்தவர்கள் டிக்கெட்டுகளை இந்தக் கட்டணத்தில் பெற்றுக்கொண்டு 500 ரூபாய் வரை விலை உயர்த்தி விற்கின்றனர். கபாலி திரைப்படத்திற்கு 1000 ரூபாய், 2000 ரூபாய் என்னும் விலையில் கவுண்டரிலேயே டிக்கெட்டுகளை விற்றது போன்ற சம்பவத்தைக் காலா படத்திற்குப் பார்க்க முடியவில்லை. காலைக் காட்சிகள் நிலவரப்படி ஆன்லைனில் டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தாலும் சில திரையரங்குகளில் சில சீட்டுகள் காலியாக உள்ளன.

ஆர் எஸ் எஸ் நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி கலந்து கொண்டார்,, பூனைக்குட்டி வெளியே வந்தது!

சர்ச்சைகளுக்கு மத்தியில் நாக்பூரில் பிரணாப் முகர்ஜி - ஹெட்கேவர் நினைவிடத்தில் மரியாதை
மாலைமலர்:  ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எதிர்ப்புகள் எழுந்திருந்த நிலையில், இன்று அவர் நாக்பூரில் உள்ள ஆர்.எஸ்.எஸ் தலைமையகம் வந்தடைந்தார். மும்பை: ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பயிற்சி பெற்றவர்களுக்கான உபச்சார விழா இன்று நடக்கிறது. இதற்கான அழைப்பு முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு அனுப்பப்பட்டபோதே சர்ச்சை வெடித்தது. அவர் நிகழ்ச்சியில் பங்கேற்பது உறுதியானதும் ஏராளமான காங்கிரஸ் தலைவர்கள் தங்களது அதிருப்தியை அவருக்கு கடிதமாக எழுதியிருந்தனர். இந்நிலையில், சர்ச்சைகள் மற்றும் சலசலப்புகளுக்கு மத்தியில் அவர் இன்று நாக்பூர் வந்தடைந்தார்.