சனி, 29 மே, 2010

தீண்டாமை ஒழிப்பு பேரணி: 50 ஆயிரம் பேர் பங்கேற்றனர்

புதுக்கோட்டையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மற்றும் இன்றும் தீண்டாமை ஒழிப்பு மாநாடு நடைபெறுகிறது.
தொடக்க நாளான நேற்று மாநாட்டு திடலில் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட தியாகிகளின் சுடர்களை பெற்றுக் கொள்ளும் நிகழ்ச்சி நடந்தது.

ஜெர்மனி தியாகிகளின் சுடரை அனைத்திந்திய விவசாய சங்க பொதுச்செயலாளர் கே. வரதராஜன் பெற்றுக்கொண்டார். திருப்பூர் ரத்தினசாமியின் சுடரை மத்தியக் குழு உறுப்பினர் வரதராஜன் பெற்றுக்கொண்டார். தியாகி மேலவளவு முருகேசன் சுடரை குடியாத்தம் எம்எல்ஏ லதா பெற்றுக்கொண்டார்.

தொடர்ந்து பிரதிநிதிகளின் மாநாடு கே.வரதராஜன் தலைமையில் நடந்தது. மாநாட்டில் தீண்டாமை ஒழிப்பு கவியரங்கம், தீண்டாமை ஒழிப்பு நாடகம் போன்ற கலை இரவு நடந்து கொண்டிருக்கிறது.
இன்று மாலை 5  மணிக்கு திலகர் திடலில் இருந்து பேரணி துவங்கியது.   இப்பேரணியில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இன்னும் சற்று நேரத்தில்  மணிக்கு பிரகாஷ் காரத் கலந்துகொள்ளும் பொதுக்கூட்டம் சின்னப்பா பூங்காவில் நடைபெறுகிறது.

ஐஃபா விழாவில் பங்கேற்கும் நடிகர்-நடிகைகள் விவரம்

கொழும்பில் வரும் ஜூன் 3,4,5 தேதிகளில் நடக்கும் ஐஃபா விழாவில் ஷாரூக்கான், சல்மான்கான், அமீர்கான், கத்ரீனா கைஃப், லாரா தத்தா, ப்ரியங்கா சோப்ரா, அக்ஷய் குமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக ஐஃபா இணையதளத்தில் வெளியாகியுள்ள அறிவிப்பில், ஐஃபாவின் புதிய தூதராக சல்மான்கான் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், வட இலங்கையின் நடக்கும் அபிவிருத்திப் பணிகளில் ஐஃபா அறக்கட்டளையுடன் இணைந்து அவர் செயல்படுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விழாவில் ஷாரூக்கான் பங்கேற்று நடனம் ஆடுகிறார். நடிகைகள் தீபிகா படுகோன், மல்லிகா ஷெராவத், 3 இடியட்ஸ் படக்குழு, சாயிஃப் அலிகான், ஜான் ஆப்ரகாம் போன்ற கலைஞர்களும் பங்கேற்பார்கள் எனத் தெரிகிறது.

ஐஃபா விழாவில் பங்கேற்கும் இந்திய நடிகர்களின் எந்தப் படமும் இனி தென்னிந்தியாவில் வெளியாகாது என்று தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இந்திப் படங்களுக்கு பெங்களூர், மைசூர், சென்னை, ஐதராபாத், விஜயவாடா, திருவனந்தபுரம் மற்றும் கொச்சி நகரங்கள் முக்கிய வருவாய் ஆதாரங்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக ஷாரூக்கானுக்கு சென்னையில் எக்கச்சக்க ரசிகர்கள் உள்ளனர்.

அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஐஸ்வர்யா ராய் மற்றும் ஜெயா பச்சன் என அமிதாப் குடும்பத்துக் கலைஞர்கள் மட்டுமே தமிழ் அமைப்புகள் வேண்டுகோளை மதித்து ஐஃபா விழாவில் பங்கேற்க மாட்டோம் என வெளிப்படையாக அறிவித்துள்ளனர்.

தென்னிந்தியாவின் பிற மொழிக் கலைஞர்களான மம்முட்டி, மோகன்லால், வெங்கடேஷ், நாகார்ஜூன், புனித் ராஜ்குமார் போன்றவர்கள் ஏற்கெனவே இந்த விழாவைப் புறக்கணித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். தங்களின் நிலையை சம்பந்தப்பட்ட திரைப்பட சங்கங்களுக்கும் தெரிவித்துள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளர் ராதா ரவி நேற்று கூறினார்.

திரையுலக அமைப்புகளின் இந்த அறிவிப்பையும் தாண்டி பாலிவுட் பிரபரலங்கள் ஐஃபா விழாவில் பங்கேற்பார்களா... அப்படி பங்கேற்றால் கண்டிப்பாக தடை அமலுக்கு வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாமக உங்களோடு கூட்டணிக்கு வருமா வராதா? : கலைஞர் பதில்

முதலமைச்சர் கருணாநிதி தலைமைச்செயலகத்தில் இன்ற செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் சமீபகாலமாக பொது மக்கள் மீது தாக்குதல் தொடுக்கிறார்கள். அந்தப் பிரச்சினையை சமாளிப்பது என்பது மத்திய அரசுக்கு ஒரு பெரிய கேள்விக் குறியாக இருக்கிறது. அதைப் பற்றி உங்கள் கருத்து என்ன?

அவர்களது இலட்சியங்கள் உயர்ந்தவைகளாக இருக்கலாம். அவர்களது கொள்கைகள் சிலாக்கியமானவைகளாக இருக்கலாம். ஆனால் அவற்றை நிறைவேற்றுவதில் இப்போது அவர்கள் கையாளுகின்ற முறைகள் மனித நேயத்திற்கு முற்றிலும் விரோதமானவைகளாக இருக்கின்றன.


இன்றைக்குக் கூட ஒரு பத்திரிகையிலே பார்த்தால், ரெயிலைத் தகர்த்ததில் மாண்டு போனவர்களின் படங்கள் எல்லாம் வெளி வந்திருக்கின்றன.

அதிலே மிகப் பரிதாபகரமான ஒரு காட்சி - இறந்து போன ஒரு குழந்தையின் சவத்தை பயணிகள் தூக்கிச் செல்கின்ற காட்சி. இதிலே அந்தக் குழந்தைகளுக்கும் மாவோ இயக்கத்திற்கும் எந்தவிதமான மாறுபாடான கருத்தும் கிடையாது.

ஆனால் இப்போது ஒரு புது முறை - பழைய முறை தான் - இருந்தாலும் புதுமுறையாகக் கையாளப்படுவது - சமுதாயத்திலே உள்ள - ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மற்றவர்கள் இறப்பைப் பற்றிக் கவலைப்படாமல் - தங்களின் நோக்கம் நிறைவேற வேண்டும் என்று கருதுகின்ற நிலை வளருவது நல்லதல்ல.

அந்த இயக்கங்களின் அடிப்படையான பொதுவுடைமைக் கொள்கைகளில் எனக்கு மாறுபாடு இல்லை. ஆனால் அவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் இந்த முறை சரிதானா என்பதை அந்த இயக்கங்களின் தலைவர்கள் சிந்திக்க வேண்டும்.

இன்று நேற்றல்ல, நீண்ட காலமாக நான் சொல்லி வருகின்ற ஒரு கருத்து இது. அந்தக் கருத்தை இந்தியாவிலே எங்கேயோ ஒரு மூலையில் தமிழ் நாட்டிலேயிருந்து நான் ஒலிக்கின்றேன். அந்தக் கருத்துக்கு மாவோ தலைவர்கள் மதிப்பளித்து மனித நேயத்தைக் காப்பாற்றுவதற்குப் பக்க பலமாக இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

இன்று காலையில் இதைப்பற்றி நான் விரிவாக முரசொலியில் கடிதமே எழுதலாம் என்றிருந்தேன். அதற்கு உங்களின் இந்தக் கேள்வி தூண்டுகோலாக அமைந்துள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் அதைப் பற்றி விரிவாக எழுதுவேன்.

பா.ம.க. உங்களோடு கூட்டணிக்கு வருமா வராதா என்பது ஒரு விவாதமாக இருக்கிறது. அதுபற்றி?
 நாளைக்குத் தான் எங்கள் கட்சியின் உயர்நிலை செயல் திட்டக்குழு நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் என்ன முடிவு செய்வார்கள் என்று தெரியவில்லையே

3 விபச்சாரப் பெண்களை கொன்றதாக குற்றவியல் ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இங்கிலாந்தில் 3 விபச்சாரப் பெண்களை கொன்றதாக கொலைகள் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த குற்றவியல் ஆராய்ச்சியாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிராட்போர்ட் பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் ஆராய்சிப் பிரிவில் படித்து வந்தவர் ஸ்டீபன் கிரிபித்ஸ் (40). தனது பி.எச்.டி. டாக்டர் பட்டத்துக்காக '19ம் நூற்றாண்டில் கொலைகள்' என்ற தலைப்பில் குற்றவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார்.

பிராட்போர் பகுதியில் சூசனா பிளாமையர்ஸ் (36), ஷெல்லி ஆர்மிடேஜ் (31), சூசன் ரஷ்வோர்த் (43) ஆகிய மூன்று விபச்சாரப் பெண்கள் கொலையான வழக்கில் இவர் கைது செய்யப்பட்டார்.

நேற்று நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட இவரிடம், உன் பெயர் என்ன என்று நீதிபதி கேட்க, 'மனித மாமிசம் உண்ணும் வில்' (crossbow cannibal) என்று பதிலளித்து அதிர்ச்சி தந்தார்.

இவரால் கொல்லப்பட்ட பெண்களில் ஒருவர் இந்த வகை வில்லால் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.

கொல்லப்பட்டவர்களில் சூசனா பிளாமையர்சின் சில உடல் பகுதிகள் ஒரு ஆற்றுப் பகுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. மற்ற இருவரும் கடந்த ஜூன் மாதம் காணவில்லை. இவர்களது உடலோ, பாகங்களோ இன்னும் கிடைக்கவில்லை.

பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதொன்றல்லமுதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன்

கடந்த காலங்களில் நாங்கள் பௌத்த   மதநிகழ்வுகளில் பங்கு பெற்றாத நடை முறை  இருந்தது.         ஆனால் தற்போது அந்நிலைவரம் மாற்றப்பட்டு ஏனைய மதங்களையும்    மதித்து நடக்க வேண்டிய சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது.எல்லா மதங்களும்  நல்ல விடயங்களையே கூறுகின்றன.
அதேபோன்றே பௌத்தம்.     அவை கூறும் கருத்துக்களை பின்பற்றுவதன் மூலம்    நாம் சிறந்த மனிதனாகவும்    மற்றவர்களுக்கு    வழிகாட்டியாகவும் இருக்க முடியும் »     இவ்வாறு கிழக்கு மாகாணசபை    முதலமைச்சர்    சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.
கல்குடா பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி     சீ. ஐ. சமரசிங்க தலைமையில்      நடைபெற்ற வெசாக் தின     மதவழிபாடு அன்னதான நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.    இந் நிகழ்வில் கிழக்கு மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் விஜேய குணவர்த்தன,     மட்டக்களப்பு      மாவட்ட பொலிஸ் அத்தியட்சர் ஐ.எம். கருணாரட்ன ஆகியோரும் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
அங்கு மேலும் அவர் உரையாற்றும் போது, பௌத்தம் பாவம் செய்ய வேண்டாம் எனக் கூறுகிறது. எமது சமூகத்தை வளர்க்க எல்லா மதநிகழ்வுகளிலும் பங்கு கொண்டு மனிதனாக வாழப்  பழகிக்கொள்ளவேண் டும் என்ற நிலைப்பாடு உள்ளது.  பௌத்த மதம் சிங்களவர்களுக்கு மாத்திரம் சொந்தமானதொன்றல்ல என்ற வரலாற்று உண்மைகள் என்னவென்பதை நீங்கள் அறிவீர்கள்.        எனவே தமிழ் மக்களும் பௌத்த மதசிந்தனைகளை பின்பற்றி மனிதனாக வாழப் பழகிக் கொள்ள வேண்டும்.
கடந்த கால கசப்பான உணர்வுகளை மறந்து சகல இன மக்களையும் ஒன்று சேர்க்கும் நிகழ்வாக எல்லோரும் ஒற்றுமையாக வாழப் பழகிக்கொள்ளக் கூடிய சூழ்நிலையை செவாக்தினத்தில் உருவாக்க வேண்டும் என்றார்.

நான் தவறாக எதையும் பேசவில்லை துணை முதல்வர் ராமசாமி.

மதுரை மாநாட்டில் நான் தவறாக எதையும் பேசவில்லை. எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் முழு அங்கீகாரம் அளிப்பேன் என்றுதான் கூறினேன். இதில் இந்திய இறையாண்மை எங்கே வந்தது என்றார் பினாங் துணை முதல்வர் ராமசாமி.

மதுரையில் சீமான் நடத்திய நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் ராமசாமி கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்துப் பேசியதாக உளவுத்துறை இந்திய வெளியுறவுத்துறைக்கு தகவல் அனுப்பியுள்ளது.

இதையடுத்து மலேசிய அரசுக்கு, இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசிய ராமசாமி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய வெளியுறவுத்துறை கடிதம் அனுப்பியுள்ளது.

இந்நிலையில் பினாங்கு துணை முதல்வர் ராமசாமியைத் தொடர்பு கொண்டு இது குறித்துக் கேட்டோம்:

அவர் கூறுகையில், வேறொரு நாட்டில் பேசும்போது எப்படிப் பேச வேண்டும் என்று கூட தெரியாதவனல்ல நான். தமிழ் ஈழத்திற்காகவும், என் தொப்புள் கொடி உறவுகளுக்காகவும் நான் எப்போதும் குரல் கொடுப்பேன்.

அதனால்தான் சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினேன். இன்னும் ஒரு ஆண்டில் மலேசியாவில் தேர்தல் வரப்போகிறது.

இத்தேர்தலில் நாங்கள் வெற்றி பெற்றால் ஈழத்தமிழர்களுக்கு முழு அங்கீகாரம் அளிப்போம். புலிகள் அமைப்பு மீதான தடையை நீக்குவோம். இதை நான் தமிழகத்தில் சீமான் மாநாட்டில் மட்டும் பேசவில்லை. எங்கள் நாட்டிலும் பேசி வருகிறேன்.

ஈழத் தமிழர்கள் விஷயமாக நேற்று கூட ஐ.நா. அதிகாரிகளிடம் பேசினேன். மலேசிய உள்துறையிடமும் பேசினேன். இந்திய வெளியுறவுத்துறையின் கடிதம் பற்றி எதுவும் என்னிடம் தெரிவிக்கவில்லை.

இந்த விவகாரம் குறித்து என்னிடம் கேட்டால், நான் விளக்கமளிக்கத் தயாராக இருக்கிறேன். எங்கள் நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஈழத் தமிழர்களுக்கு முழு உரிமையும் அங்கீகாரமும் அளிப்பேன் என்று கூறியது இந்திய இறையாண்மையை எப்படிப் பாதிக்கும்? என்றார்.

புலிகள் அமைப்பின்் முக்கிய உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்

புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினர் ஒருவர் புல்மோட்டை கட்டக்குளம்மீதிரியாய பிரதேசத்தில் வீடொன்றில் மறைந்திருந்த போது நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். செல்வகுமார் உதயகுமார் என்பவே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் கடந்த காலங்களில் பல பிரதேசங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தகவல்களி கிடைத்துள்ளதாக காவற்துறையினர் கூறியுள்ளனர். சந்தேக நபர் தடுப்பு காவல் உத்தரவின் பேரில் தடுத்து வைக்கப்பட்டு புல்மோட்டை காவற்துறையினரால் விசாரிக்கப்பட்டு வருகிறார்.

தமிழ்த் திரைப்பட இயக்குனர் விசேட காவற்துறை பிரிவினரால் கைது

Director Chandran Rutnamநுகேகொட பாகொட வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் டெட்டநேட்டகர்கள், வெடி மருந்துகள் உள்ளிட்ட குண்டு வெடிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை மறைத்து வைத்ததாக கூறப்படும் தமிழ்த் திரைப்பட இயக்குனர் விசேட காவற்துறை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்

அனுமதிப் பத்திரமின்றி 4.95 கிலோ கிராம் வெடி மருந்து, 7 டெட்டநேட்டர்கள் மற்றும் உபகரணங்களை தன்வசம் வைத்திருந்த சம்பவத்துடன் சந்தேகத்தின் பேரில் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்ட தமிழரான திரைப்பட இயக்குனர் அரிச்சந்திரன் குமார்ரட்ணம் நேற்று நுகேகொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டார். அவரை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் திஸ்ஸ விஜேரத்ன உத்தரவிட்டார். விசேட அதிரடிப்படையில் குண்டு செயலிழக்கும் பிரிவின் ஊடாக கைப்பற்றப்பட்ட டெட்டநேட்டர்களை செயலிழக்க செய்து, அது தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்பிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

வெடிப் பொருட்களை வைத்திருப்பதற்கான அனுமதிப் பத்திரம் தன்னிடம் இருப்பதாக சந்தேக நபர் கூறிய போதிலும் அதனை நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இதனால் விசாரணைகளை நிறைவுசெய்ய முடியவில்லை எனவும் இதனால் சந்தேகநபரை பிணையில் விடுவிக்க வேண்டாம் எனவும் காவற்துறையினர் கேட்டுக்கொண்டனர். இதனையடுத்து, சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் விடுத்த பிணை கோரிக்கையை நிராகரித்த நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

காவற்துறையினருக்கு கிடைத்த தகவலையடுத்து, நீதிமன்ற அனுமதியுடன் மேல் மாகாண புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் நுகேகொட பாகொட வீதியில் அமைந்துள்ள 6வது ஒழுங்கையில் ரோஷி அபேவிக்ரம என்பவரது வீட்டை சோதனையிட்டதாகவும் வீட்டின் மேல் மாடியில் இருந்த வெடிப் பொருட்கள் பெட்டியொன்றில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டதாகவும் காவற்துறையினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். போர் தொடர்பான அலிமங்கட, அக்னியன் போன்ற படங்களுக்காக பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் வெடிப் பொருட்களை தான் வைத்திருந்தாக குமார் ரட்ணம் தெரிவித்தாகவும் எனினும் அவர் பாதுகாப்பு அமைச்சின் அனுமதிப் பத்திரத்தை இதுவரை காவற்துறையில் சமர்பிக்கவில்லை எனவும் காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். குமார் ரட்ணம் சிங்கள திரைப்படங்களை இயக்கி வரும் தமிழராவர், அவர் பல முக்கிய சிங்களப் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

கனடா, இந்திய ராணுவத்தினர்-உளவுத்துறையினருக்கு விசா வழங்க கனடா மறுப்பு

டெல்லி: இந்திய ராணுவம், மத்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் இந்திய உளவுத்துறையில் பணியாற்றுவோருக்கும் பணியாற்றி ஓய்வு பெற்றவர்ர்களுக்கும் விசா வழங்க கனடா மறுத்து வருகிறது.

இந்திய எல்லை பாதுகாப்பு படையில் கான்ஸ்டபிளாக பணியாற்றி ஓய்வு பெற்ற பதேசிங் பாந்தர் என்பவர், கனடா செல்ல விசா கோரினார். டெல்லியில் உள்ள கனடா தூதரகம் அவரை வரவழைத்து விசாரித்தது.

அப்போது அங்கிருந்த அதிகாரிகள், காஷ்மீரில் வன்முறையில் ஈடுபடும் எல்லை படையில் பணியாற்றியவர் நீங்கள் என்று கூறி, அவருக்கு விசா வழங்க மறுத்து விட்டனர். இதற்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

எல்லைப் பாதுகாப்புப் படையை மக்களுக்கு எதிராக வன்முறையில் ஈடுபடும் படை என்று கூறியது குறித்து கனடா தூதரகத்திடம் மத்திய வெளியுறவுத்துறை விளக்கம் கோரியது. இதையடுத்து நாங்கள் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை என்று தூதரகம் மறுத்தது.

இந் நிலையில் ஏற்கனவே இந்திய ராணுவம் மற்றும் உளவுத் துறையினர் பலருக்கும் கனடா விசா வழங்க மறுத்துள்ள விவரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

மத்திய உளவுத்துறையின் முன்னாள் அதிகாரி எஸ்.எஸ்.சித்து கனடாவில் உள்ள தன்னுடைய மகனை பார்க்க கடந்த மார்ச் மாதம் விசா கோரி விண்ணப்பித்தார். ஆனால், அவர் பணியாற்றிய உளவுத்துறை, ஜனநாயக நாடுகளில் உளவு பார்த்தல், ஆட்சி கவிழ்ப்பு, தீவிரவாதம் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடியது என்றும், ஆகவே, அவருக்கு விசா வழங்க முடியாது என்றும் டெல்லி கனடா தூதரகம் கூறிவிட்டது.

இதேபோல், ஓய்வுபெற்ற ராணுவ லெப்டினன்ட் ஜெனரல்கள் ஏ.எஸ்.பாகியா, ஆர்.என்.பத்ரா, ராணுவத்தில் தற்போது பிரிகேடியர் அந்தஸ்தில் பணியாற்றி வரும் 3 அதிகாரிகள் ஆகியோருக்கும் கடந்த 2 ஆண்டுகளில் கனடா விசா வழங்க மறுத்துள்ள விவரங்கள் வெளியாகியுள்ளன.

மேலும், அடுத்த மாதம் ஜி-20 மாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மன்மோகன் சிங் கனடா செல்கிறார். அதுதொடர்பாக, பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய மத்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் கனடா செல்ல விசா கோரி விண்ணப்பித்திருந்தார். ஆனால் அவருக்கும் கனடா விசா வழங்க மறுத்தது.

பின்னர் மத்திய அரசு நேரில் தலையிட்டதையடு்த்த அவருக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.

கனடா தூதரகத்தின் இந்த செயல்கள் குறித்து மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், இந்தப் பிரச்சினையை கனடாவின் கவனத்துக்கு எடுத்துச் செல்லுமாறும், கனடாவை மன்னிப்பு கோர வைக்க வேண்டும் என்றும், சம்பந்தப்பட்ட கனடா தூதரக அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கோர வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரு வாரத்துக்குள் கனடா இதைச் செய்யாவிட்டால், இந்தியா வழியாக ஆப்கானிஸ்தான் சென்று வரும் கனடா நாட்டு ராணுவத்தினர், உளவுப் பிரிவினர், அதிகாரிகளை திருப்பி அனுப்பி பதிலடி கொடுப்போம் என்றும் ஜி.கே.பிள்ளை எச்சரித்துள்ளார்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள கனடா தூதர் சோபி அகரை மத்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் வரவழைத்து, கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத்துறை செயலாளர் நிருபமாராவ் நிருபர்களிடம் கூறுகையி்ல், இந்திய அதிகாரிகளுக்கு விசா வழங்க மறுத்தது குறித்து கனடா தூதரகம் மற்றும் கனடா அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளோம். அதற்கு கனடா வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவம் மீது மிகுந்த மரியாதை வைத்திருப்பதாக தெரிவித்துள்ளது என்றார்.
Post Comments ]

பதிவு செய்தவர்: WORLD
பதிவு செய்தது: 29 May 2010 12:38 am
நல்ல வேலை செய்து இருக்கிறார்கள் பாதுகாப்பு துறையினருக்கு விசா கொடுக்க கூடாது அவர்கள் கனடா சென்று அங்கிருக்கும் சில தமிழர்களை தவறாக வழி நடத்தி தமிழருக்கு அவ பெயர் கிடைக்க செய்வார்கள் தேங்க்ஸ் கனடா


பதிவு செய்தவர்: jack
பதிவு செய்தது: 29 May 2010 12:29 am
இந்தியா இந்த பிரச்சினையை பேசி தீர்க்க வேண்டும். அதை விட்டு விட்டு ஆப்கான் வரும் கனடா இராணுவத்தினரை திருப்பி அனுப்பினால் அவர்கள் பாகிஸ்தான் வழியாக ஆப்கான் செல்வார்கள். கனடா பாகிஸ்தானுடன் நெருக்கமாகி விடும், அது மட்டும் இல்லாமல் இந்தியா வரும் கனடா ராணுவத்தால் இந்தியாவிற்கு பொருளாதார நன்மைகள் உண்டு.

யாழ் குடாநாட்டிலிருந்து வெளிவரும் வன்செயல்கள் தொடர்பான

நாட்டில் யுத்தம் நிறைவடைந்து சாதாரண மக்கள் இயல்பு வாழ்விற்கு திரும்ப முனைந்து கொண்டிருக்கும் இத்தருணத்தில் விசமிகளின் செயற்பாடுகள் மக்களை மேலும் அச்சத்திற்குள் தள்ளிவிடுகின்றது. கடந்த சில வாரங்களுக்கு முன் உடுப்பிட்டி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிளில் இளைஞன் ஒருவர் பயணம் செய்து கொண்டிருந்தபோது அப்பாதையின் குறுக்கே கால்நடை (மாடு) ஒன்று பாய்ந்தபோது இளைஞன் மோட்டார் சைக்கிளினால் கீழே விழநேரிட்டுள்ளது.

தனக்கு நேர்ந்த விடயத்தில் ஆத்திரமடைந்த இளைஞன் கால்நடையின் வீட்டிற்கு சென்று உரிமையாளரை தாக்கி காயப்படுத்தியுள்ளான். சுமார் 75 வயதுக்கும் மேலான வயோதிபர் இளைஞனின் தாக்குலினால் மிகவும் நோய்வாய்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

குறிப்பாக யாழ் குடாநாட்டிலிருந்து வெளிவரும் வன்செயல்கள் தொடர்பான செய்திகள் யாவற்றிக்கும் தனிப்பட்ட குரோதங்கள் மற்றும் இவ்வாறான பகுத்தறிவு கெட்ட செயல்களுமே காரணமாகும் என அங்குள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

முஸ்லிம்களை வெளியேற்ற 24 மணி நேரம் கொடுத்தார்கள்ஆனால் எமக்கு கால் மணி நேரம்கூட்

ஆதிவாசிகளை விட மிகவும் மோசமான நிலையில் மீள்குடியமர்த்தப்படும் வன்னி மக்கள் காணப்படுகின்றார்கள்.              அவலத்திலும் அவலமாக உள்ளது.               உடன் பிறப்புக்கள் என்போர்,              வீர வசனம் பேசுவோர் அமைப்புக்களாக இணைந்து விரைந்து சென்று உதவவேண்டும்’ இவ்வாறு வன்னி சென்று திரும்பிய தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சகநேயன் பொ. பியசேன அங்குள்ள நிலைவரம் பற்றித் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில், மக்களை மீள்குடியேற்றம் என்ற போர்வையில் 10 தகடுகளையும் 06 கம்புகளையும் வழங்கி அனுப்புகிறார்கள். அவர்கள் இவற்றை வைத்துக் கொண்டு எவ்வாறு கூடாரம் அமைப்பது. கத்தி, மண்வெட்டி போன்ற ஏனைய உபகரணங்களுக்கு எங்கே போவார்கள்?   பலருக்கு ஆளுதவிகூட இல்லை.    வட கிழக்கிலிருந்து இளைஞர் அமைப்புகள் அங்கு சென்று சிரமதானம் செய்வதனூடாக அம்மக்களுக்கு உதவ    முடியும்.
எமது பிரதேச இளைஞர்கள் ஒன்றிணைந்து அங்கு சென்று அரச அதிபரூடாக பேசி பல உதவிகளைச் செய்ய வேண்டும்.   உடன் பிறப்புகள் என்றும், இரத்தம் என்றும் உணர்ச்சியுடன் வீர வசனம் பேசுவோர் இத்தருணத்தில் அவற்றைச் செயலில் காட்ட வேண்டும்.     புதிதாக மீள்குடியேற்றப்படும் சில குடும்பங்களில் தொழில் செய்யக்கூடிய இளைஞர்களோ, ஆண்களோ இல்லை.
அங்கு ஆலயங்கள், பாடசாலைகள், குடிமனைகள் இருந்த தடயங்களே இல்லாத அளவுக்கு சம்ஹாரம் இடம்பெற்றுள்ளது.  மக்கள் எந்த அடிப்படை வசதியுமில்லாமல் மீள்குடியேற்றப்படுகின்ற இச்சூழலில் நாம் அங்கு சென்று உதவ வேண்டும். அங்குள்ள பழைய கிணறுகளை மீண்டும் தோண்ட வேண்டாம் எனக் கூறியுள்ளேன்.                   முடியுமானவர்கள் குழாய்க் கிணற்றையா வது அமைத்துக் கொடுக்க ன்வர வேண் டும்.
அங்கு மக்கள் படும் துன்பங்கள் வார்த்தைகளால் வருணிக்க முடியாது.   குழந்தைகள் படும்பாடு சொல்லுந்தரமன்று.     மழைக்கு ஏற்ற புகலிடம் இல்லை. காலுக்கு பாதணிகள்கூட இல்லை.  பாடசாலைகளில் தளபாட வசதி குறைவு.  ஆசிரியர்கள் தொகை பற்றாக்குறையாகவுள்ளது. பிள்ளைகளுக்கு எழுதுவதற்கு பென்சில் கொப்பிகளும் இல்லாதுள்ளன.
அவர்களிடம் பேச்சுக் கொடுத்தால் அவர்கள் கூறும் வேதனைக் கதைகள் நெஞ்சைப் பிழிகிறது.            யாழ்ப்பாணத்திலுள்ள முஸ்லிம்களை வெளியேற்ற 24 மணி நேரம் கொடுத்தார்கள்.                  ஆனால் எமக்கு உயிரைக் கையில் பிடித்துக் கொண்டுசெல்ல கால் மணி நேரம்கூட வழங்கவில்லை என்று கூறும்   மக்கள்   நாம் கனவிலும் இப்படி நடக்கு மென்று எதிர்பார்க்கவில்லை என்றார்கள்.
இப்படி பல கதைகள்.     எனவே வட கிழக்கிலுள்ள பொது நல அமைப்புகள்,         அரசசார்பற்ற அமைப்புகள் விரைந்து செயற்பட வேண்டும்.  அவர்களது பகுதிகளுக்குச் சென்று முதலில் சிரமதானத்தை மேற்கொண்டு குடில் அமைக்க உதவ வேண்டும்.       அதேவேளை வேறு அத்தியாவசிய பொருட்களையும் வழங்க முடியும்.
மனிதாபிமானம் என்பது இதுதான்.     அதனை விடுத்து அறிக்கையை மட்டும் விட்டு விட்டு இருப்பது பொருத்தமாகாது.
அம்பாறையிலிருந்து என்னுடன் கை கோர்க்கும் பொதுநல அமைப்புகள் உடனடியாக தொடர்பு கொண்டால் அங்கு செல்ல சகலதையும் செய்வேன் என்றார்.
வவுனியாவிலுள்ள வலயம் 4 முகாம் அகதிகளின்          உள்ளக் குறல்களை பற்றிக் கூறியபோது அவர்,                 அங்கு 3,000 பேரளவில் இருக்கின்றனர்.    அங்கு காட்டு எலியின் தாக்கம்    தினம் தினம் அதிகத்து வருகின்றது.   அவை எம்மை தருணம் பார்த்து கடித்து விடுகின்றன. நுளம்பு வலையைக்கூட விட்டு வைப்பதில்லை.
04 நாள் பாவனைக்காக 10 லீற்றர் தண்ணீர் தருவார்கள்.      பழுதடைந்த குழாய்க் கிணறுகள் மூன்று உள்ளன.      அதிலிருந்து பெறும் நீரை ஏனைய தேவைகளுக்கு பயன்படுத்துகின்றனர்.  அங்கு சீனி, மா, அரிசி வழங்குகிறார்கள்.   ஆனால், ஏனைய உப்பு, மிளகாய் போன்ற சுவையூட்டிகளை கொள்வனவு செய்ய பணமில்லை.   குழந்தைகள் ஐஸ்பழம் கேட்டால் அதனை வாங்கிக் கொடுக்கவும் பணமில்லை.
மாறாக அடித்து கட்டுப்படுத்தி வைக்கிறார்கள் என்றார்.

தேர்தல் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி

நாட்டின் ஏனைய பிரதேச மக்கள் அனுபவிக்கும் சகல ஜனநாயக உரிமைகளையும் வடக்கு மக்களும் அனுபவிக்கும் வகையில் வடக்கில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி சபை தேர்தல்களை விரைவில் நடத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமென வடக்கு அபிவிருத்திச் செயலணியின் தலைவரும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சருமான பசில் ராஜபக்ஷ கிளிநொச்சியில் தெரிவித்தார்.

மன்னார் கிளிநொச்சி மாவட்டங்களுக்கு நேற்று முன்தினம் விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ மன்னாரிலும் கிளிநொச்சியிலும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி, சுன்னாகம், வவுனியா கிளிநொச்சிக்கான மின்சார இணைப்புத் திட்டத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

நேற்று முன்தினம் கிளிநொச்சிக்கு விஜயம் செய்த அமைச்சர் பசில் ராஜ பக்ஷ, கிளிநொச்சி மின் இணைப்புத் திட்டத்தின் பூர்வாங்க நடவடிக்கைகளை ஆரம்பித்துவைத்ததுடன் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைப் பிரிவையும் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

பயங்கரவாத சூழல் நிலவிய இருபது வருட காலத்திற்குப் பின்னர் கிளிநொச்சி அரசாங்க வைத்தியசாலையில் நேற்று முதல் சத்திர சிகிச்சைப்பிரிவு செயற்பட ஆரம்பித்துள்ளதுடன் முதலாவது நோயாளியும் சத்திர சிகிச்சைப் பிரிவில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனையடுத்து கிளிநொச்சி வைத்திய சாலையில் இடம்பெற்ற மாவட்ட சுகாதார அத்தியட்சகர் கெப் வாகனம் வழங்கும் வைபவத் திலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் ‘ஜய்க்கா’ நிறுவனங்கள் வடக்கின் சகல மாவட்டங்களிலு முள்ள சுகாதார அத்தியட்சகர்களுக்கு ‘கெப்’ வாகனங்களையும் ‘குரூஷர்’ வாகனங்களையும் வழங்கியது டன் பிரதேச சுகாதார அதிகாரிகளுக்கென 20 மோட்டார் சைக்கிள்களையும் பகிர்ந்தளித்தார்.

இந்நிகழ்வில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் ஜப்பானிய ‘ஜய்க்கா’ நிறுவனப் பிரதிநிதிகளுடன் அமைச்சர் சரத் அமுனுகமவும் கலந்து கொண்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பசில், வடக்கு மக்களின் சகல தேவைகளையும் பெற்றுக்கொடுப்பதில் அரசு மிகுந்த கவனம் செலுத்தியுள்ளது. அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, ரிசாட் பதியுதீன் ஆகியோரின் பங்களிப்போடு இதற்கான திட்டங்கள் முன்னெடுக்கப்படும்.

வடக்கில் மின்சாரம், குடிநீர், வீதி அபிவிருத்தி உட்பட சகல அடிப்படை வசதிகளும் உட்கட்டமைப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. அதற்காக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தயாராகவுள்ளன.

கைது,யேர்மனியில் இருந்து கொழும்பு சென்ற பெண் ஒருவர் காவல்துறைப் புலனாய்வாளர்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் சிலாபம் பகுதியை பிறப்பிடமாகவும், யேர்மனி பிராங்போர்ட் பகுதியை வதிவிடமாகவும் கொண்ட ஐம்பது அகவையுடைய இவர், யேர்மனியில் இருந்து கடந்த புதன்கிழமை கொழும்பை வந்தடைந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
யேர்மனியில் கடந்த ஆண்டு தமது அரசாங்கத்திற்கு எதிராகவும், தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாகவும் முன்னெடுக்கப்பட்ட தொடருந்து மறியல் போராட்டங்கள், சாலை மறியல் போராட்டங்கள், பிராங்போர்ட்டில் உள்ள இந்திய உப தூதரகம் முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றில் இவர் முன்மையான பாத்திரத்தை வகித்ததாகவும் இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சு குற்றம் சுமத்தியுள்ளது.

வெள்ளி, 28 மே, 2010

2010ல் வெளியான எந்தப்படமும் லாபம் கொடுக்கவில்லை. தமிழ்ப்படம், அங்காடித்தெரு ஆகிய படங்களால் மட்டுமே லாபம் கிடைத்தது. பையா படம் முதலுக்கு மோசமில்லாமல்

நடிகர் விஜய்யின் சமீபத்திய 6 படங்கள் தோல்வியைத் தழுவியதால் தங்களுக்கு ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் 35 சதவீதத்தையாவது ஜூன் 3வது வாரத்துக்குள் திருப்பித் தர வேண்டும் என்றும் திரையரங்க உரிமையாளர்கள் போர்க் கொடி உயர்த்தியுள்ளனர்.

இது தொடர்பாக இன்று தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். செக்கர்ஸ் ஹோட்டலில் நடந்த இந்த சந்திப்பின்போது, திரையரங்க உரிமையாளர்கள் சங்க தலைவர் அண்ணாமலை, செயலாளர் பன்னீர் செல்வம் ஆகியோர் கூறியதாவது:

2010ல் வெளியான எந்தப்படமும் லாபம் கொடுக்கவில்லை. தமிழ்ப்படம், அங்காடித்தெரு ஆகிய படங்களால் மட்டுமே லாபம் கிடைத்தது. பையா படம் முதலுக்கு மோசமில்லாமல் ஓடிவிட்டது.

விஜய் ரசிகர்களை மட்டுமல்ல, எங்களையும் ஏமாற்றி வருகிறார். தொடர்ச்சியாக விஜய் நடித்து வெளிவந்த 6 படங்களும் தோல்வி அடைந்துள்ளன.

5 படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலும், 6வது படம் விஜய் நடிக்கும் 50வது படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் சுறா படத்தை வாங்கினோம்.

240 திரையரங்குகளில் இப்படம் திரையிடப்பட்டது. படம் படுதோல்வி அடைந்தது. இந்தப் படத்தால் எங்களுக்கு 10 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. விஜய் நடித்து தொடர்ச்சியாக தோல்வியடைந்த 6 படங்களால் மொத்தம் ரூ.30 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை எந்த நடிகரும் தராத அளவுக்கு தோல்விப் படங்கள் மற்றும் நஷ்டத்தை அவர் தந்துள்ளார்.

நஷ்டத்தை ஈடு செய்த ரஜினி:

இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டதை உணர்ந்து ரஜினி, டி.ராஜேந்தர் ஆகியோர் பணம் கொடுத்து நஷ்டத்தை ஈடு செய்துள்ளார்கள். குறிப்பாக ரஜினிகாந்த் 35 சதவீத நஷ்டஈடு தந்து எங்களைக் காப்பாற்றினார். பாபா படத்துக்கு யாரும் கேட்காமலே நஷ்டஈடு தந்தார். ஒரே தொழிலில் இருப்போர் ஒருவருக்கொருவர் தோள்கொடுக்கும் மனப்பான்மை இது.

அது போல் விஜய்யும் எங்களுக்கு நஷ்டஈடு தருவார் என்று எதிர்பார்க்கிறோம். அவர் அப்படி தரவில்லையென்றால் வரும் ஜூன் மாதம் மூன்றாவது வாரம் எங்கள் சங்கம் கூடும். அப்போது, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசிப்போம். அது மிகக் கடுமையானதாக இருக்கும்.

விஜய் இனியாவது நல்ல கதைகளில் நடிக்க வேண்டும். தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடிக்கிறார். இதை நாங்கள் குறிப்பிடக் காரணம் இருக்கிறது. முன்பெல்லாம் படத்தை வாங்குவதற்கு முன் எங்களுக்கு பிரீமியர் ஷோ காட்டுவார்கள். அதிலேயே நாங்கள் படத்தை வாங்கலாமா வேண்டாமா என்று முடிவு செய்துவிடுவோம். ரஜினி் படத்துக்கே பிரீமியர் காட்டியிருக்கிறார்கள்.

ஆனால் இன்றைக்கு டிவியில் காட்டப்படும் கிளிப்பிங்குகள், பத்திரிகை- இணைய தளச் செய்திகள், வெளிநாடுகளுக்குத் தரும் பாடல் உள்ளிட்ட முன்னோட்டக் காட்சிகளை வைத்து ஒரு படத்தை வாங்குகிறோம்.

அதனால்தான் தரமில்லாத பல படங்களை வாங்கி நஷ்டமடைகிறோம். எனவே இனிமேல், எக்ஸிபிட்டர்களுக்கு கண்டிப்பாக புதுப்படங்களை பிரீமியர் ஷோ போட்டுக் காட்ட வேண்டும் என்றனர்.

இந்தக் கூட்டம் நேற்று முன்தினமே நடக்கவிருந்தது. ஆனால், அப்போது விஜய் தரப்பில் சமரசம் பேச முயற்சித்ததால் தள்ளிப் போடப்பட்டது. இடையில் சமரசப் பேச்சு தோல்வியடைந்ததால், தங்கள் முடிவை இன்று பிரஸ் மீட் வைத்து அறிவித்துள்ளனர் திரையரங்கு உரிமையாளர்கள்.

ஜூன் 3வது வாரத்துக்குள் விஜய் தரப்பில் நஷ்டஈடு தராவிட்டால் கடுமையான முடிவுகளை மேற்கொள்ளவிருப்பதாக திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வினியோகஸ்தர்கள் சங்கமும் விஜய் தரப்புக்கு இதுபோன்றதொரு நெருக்கடியைத் தந்துள்ளது நினைவிருக்கலாம்.

முன்னணி நடிகர் ஒருவரின் 6 படங்கள் தொடர் தோல்வியைத் தழுவியதாக பிரஸ் மீட் வைத்து தியேட்டர்காரர்கள் அறிவித்திருப்பது இதுவே முதல்முறை.

பதிவு செய்தவர்: ரகு
பதிவு செய்தது: 28 May 2010 5:06 pm
சன் டிவி யா நம்பினால் இப்படி தான் நாடாகும் இனி மேல் ஆச்சு கடவிள் உனக்கு நல புதி வந்த சேரி

பதிவு செய்தவர்: கலாட்ட கணேஷ்
பதிவு செய்தது: 28 May 2010 5:06 pm
மடபசன்களா , 5 படம் படுதுடிச்சு,6 வது படத்த ஏன் வாங்கினீங்க ? தேவுடா தேவுடா நானும்தான் சுறா பார்த்தேன் , கண்ராவி படம்,எனக்கு யார்லே நஷ்ட ஈடு கொடுப்பாக ?

மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம பினாங்கு மாநில துணை முதல்வர் ்

டெல்லி: இந்தியாவில் தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவாகப் பேசிய மலேசியாவின் பினாங்கு மாகாண துணை முதல்வர் ராமசாமி மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

மலேசிய அரசுக்கு இந்தக் கோரிக்கையை இந்தியா விடுத்துள்ளது.

சீமானின் நாம் தமிழர் அரசியல் மாநாடு மதுரையில் மே 18ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ் ஆர்வலர்களும், ஈழ மக்களுக்கான பல்வேறு அமைப்புகளும் பங்கு கொண்டன.

மேலும் மலேசியாவின் பினாங்கு மாநில துணை முதல்வர் இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசியதாகக் கூறப்படுகிறது.

"மலேசியாவில் எங்கள் ஆட்சி அமைந்தால் விடுதலைப் புலிகளுக்கு அங்கீகாரம் அளிப்போம்" என்று அவர் பேசியதாக உளவுத்துறை குறிப்பு தெரிவிக்கிறது.

இது குறித்து இந்திய உளவுத்துறை மத்திய அரசுக்கு விரிவான அறிக்கையை அளித்தது. இதையடுத்து இந்த குறிப்புகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

இந் நிலையில், இந்திய வெளியுறவுத்துறை இந்த குறிப்புகளை மலேசிய அரசுக்கு அனுப்பி வைத்துள்ளது. மேலும், அத்துடன் ஒரு கோரிக்கை கடிதமும் அனுப்பியுள்ளது.

அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராக பினாங்கு துணை முதல்வர் ராமசாமி பேசியுள்ளார். எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பதிவு செய்தவர்: பெருமுக்குரிய நாடு என் நாடு
பதிவு செய்தது: 28 May 2010 4:45 pm
இந்தியாவுக்கு மனநோயும் பிடிக்க வில்லை மான நோயும் பிடிக்கவில்லை, இந்தியா நினைத்திருந்தால் 1990 லே விடிதலை புலிகளை ஒழித்து பிரபாகரனை கைவிலங்கிட்டு இந்தியாவுக்கு கொண்டுவந்திருக்கும்... தன வினை செய்தவன் தானே அழியட்டும் என்று விட்டுவிட்டது அவ்வளவுதான்... ஆனால் இந்தியா என்ற நாட்டில் கண்ட கண்ட நாய்கள் வந்து பிரபாகரன், விடுதலை புலிகள் என்று குறைக்ககூடது...

பதிவு செய்தவர்: வேதை தமிழன்
பதிவு செய்தது: 28 May 2010 4:36 pm
மலேசிய துணை முதல்வர் ஒரு டுபாக்கூர் பேர்வழி மலேசியாவில் வேலைக்கு போன இந்திய தமிழர்களை சம்பளம்கூட கொடுக்காமல் நாயை விட கேவலமாக நடத்தி சம்பளம் கேட்டால் அங்கு உள்ள தமிழ் ரவுடிகளை வைத்து அடித்து துன்புறுத்தும் தமிழர்களை ஒன்றுமே கூறாதவர். படகில் போன இலங்கை தமிழர்களை siraiyil adaitthu kodumai padutthum malasia arasai ethikkathavar ivar ethai parrum pesa arukathai illai

வலிகாமம், வட மராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய பகுதிகளில் "வெசாக்'' கோலாகலம்; யாழ். நகரில் வண்ணமிகு


வெசாக் பண்டிகையை ஒட்டி குடாநாட்டின் எல்லாப் பிரதேசங்களிலும் பரவலாகப் பந் தல்களும், வெளிச்சக் கூடுகளும் கட்டப்பட்டு விழாக்கோலம் பூண்டிருந்தது. வலிகாமம், வட மராட்சி, தென்மராட்சி, தீவகம் ஆகிய பகுதிகளில் பிரதான இடங்களில் பந்தல்கள் அமைக் கப்பட்டு, வெளிச்சக் கூடுகள் அமைக்கப் பட்டு, கண்கவர் மின்குமிழ்கள் பொருத் தப்பட்டிருந்தன.ஆரியகுளம் விகாரை மற்றும் நகரின் பல பகுதிகளிலும் வெளிச்சக்கூடுகள் கட் டப்பட்டு நகர் எங்கும் நேற்றிரவு வண்ண மயமாகக் காட்சியளித்தது. பிரதானமாக யாழ். துரையப்பா விளை யாட்டரங்கு, கோட்டை, பொது நூலகம் அடங்கிய பகுதிகளில் விசேட பந்தல்கள் மின்னொளியுடன் ரம்மியமாக அமைக்கப் பட்டிருந்தன. விதம்விதமான அலங்கார வெளிச்சக்கூடுகளும் கட்டப்பட்டிருந் தன. அப்பகுதியில் நாலா திக்கிலும் கண் கவர் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு பிரதேசம் முழுவதும் ஜெகஜோதியாகக் காட்சியளித்தது. விசேட மேடைகள் அமைக்கப்பட்டு பக்தி கீதங்களும் இசைக்கப்பட்டன. நேற்றைய நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். பிராந்திய படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கலந்துகொண்டார். படை அதிகாரிகள், அரச பிரமுகர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் நேற்றைய வெசாக் காட்சிகளைக் கண்டுகளித்தனர். நேற்றுக்காலையிலும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன. அங்கு அமைக்கப்பட்டிருந்த தானசாலைகளில் பொதுமக்களுக்கு உணவு வகைகள் படையினரால் பரிமாறப்பட்டன.

, கொளத்தூர் மணி ,வைகோ-நெடுமாறன் கைதுகேரள சாலைகளை மறித்து மதிமுகவினர் போராட்டம்


கோவை & செங்கோட்டை: நதி நீர் பிரச்சனை தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து கேரள எல்லையில் மறியல் செய்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்பட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

முல்லைப் பெரியாறு, பாம்பாறு, செண்பகவல்லி தடுப்பு அணை, நெய்யாறு இடதுகரைச் சானல் ஆகிய நதி நீர் பிரச்னைகளில், தமிழகத்தின் உரிமைகளுக்கு கேரளம் பங்கம் விளைவிப்பதாகக் கூறி கோவை மாவட்டம் கந்தேகவுண்டன் சாவடியில் கேரளத்துக்கு செல்லும் சாலையில் வைகோ தலைமையில் இன்று மறியல் போராட்டம் நடந்தது.

இதில் மதிமுக துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா உள்ளிட் 3,000 பேர் கலந்து கொண்டனர். இதையடுத்து, மறியல் செய்ய முயன்ற அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

அதேபோல, வேலந்தாவலத்தில் இந்து மக்கள் கட்சி அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட 500 பேரும், ஆனைக்கட்டியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட 340 பேரும், பொள்ளாச்சி கோபாலபுரத்தில் கொங்கு இளைஞர் பேரவை அமைப்பாளர் உ. தனியரசு உள்ளிட்ட 750 பேரும், வலந்தாயமரத்தில் தமிழ் தேசப் பொதுவுடமை இயக்கத் தலைவர் தியாகு உள்ளிட்ட 150 பேரும், நடுப்புணியில் மதிமுக விவசாயி அணித் தலைவர் சூலூர் பொன்னுசாமி மற்றும் உடுமலை 9-6 சோதனைச் சாவடியில் ஈரோடு மக்களவை உறுப்பினர் அ.கணேச மூர்த்தி உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டனர்.

செங்கோட்டையில் வீரவாஞ்சிநாதன் சிலை முன்பு நெல்லை மாநகர், புறநகர், விருதுநகர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த மதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தினர்.

இங்கு மறிப்பில் ஈடுபட்ட மதிமுக பேச்சாளர் நாஞ்சில் சம்பத், எம்எல்ஏ சதன் திருமலைக்குமார், முன்னாள் எம்பி் சிப்பிப்பாறை ரவிச்சந்திரன் உள்பட ஏராளமான மதிமுகவினர் கைது செய்யப்பட்டனர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்ட தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், கொளத்தூர் மணி ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து நேற்று இரவு முதல் கேரளா மாநில வாகனங்கள் அத்திவாசிய பொருட்களை விடிய விடிய ஏற்றி சென்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தண்டவாளத்தை நக்சலைட்டுகள் அகற்றி சதி.. கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் :மேற்கு வங்க மாநிலத்திலுள்ள மித்னாபூர் மாவட்டத்தில் ரயில்வே தண்டவாளத்தை நக்சலைட்டுகள் அகற்றி சதி வேலையில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழியாக வந்த ஞானேஸ்வரி எக்ஸ்பிரஸ் கவிழ்ந்தது.   இதில் 100 பயணிகள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.     மேலும் பல பேர் காயமடைந்துள்ளனர்.
அகற்றப்பட்ட தண்டவாளத்தின் மீது ரயில் வேகமாக சென்றதால் அதன் 13 பெட்டிகளும் தூக்கி வீசப்பட்டன. நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு இந்த சம்பவம் நடந்தது. இதில் 100 பயணிகள் பலியாயினர்.   இடிபாடுகளுக்கு இடையே 60க்கும் மேற்பட்டோர் சிக்கியுள்ளனர்.    ராணுவத்தின் இரு எம்-15 ரக ஹெலிகாப்டர்கள் அங்கு விரைந்து காயமடைந்தவர்களை உடனடியாக மருத்துவமனைகளுக்குக் கொண்டு சென்றன.
நக்சல்களின் இந்த சதி செயல்களுக்கு தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கவிழ்ந்த ரயில் மீது மோதியது சரக்கு ரயில் : கவிழ்ந்து கிடந்த ரயில்மீது இந்த வழியாக வந்த சரக்கு ரயிலும் மோதியது. இதனால் பெரும் சேதம் ஏற்பட்டது. பயணிகளை மீட்கும் பணிக்காக தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு அவசரகால படை வீரர்கள் மற்றும் விமான படையும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.                 சிக்கிய பயணிகளை மீட்கும் பணி துரிதப்படுத்தப்பட்டுள்ளது.             ரயில்வே தண்டவாளத்தில் குண்டு வெடித்தது உண்மை தான் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா ஒப்புதல் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சகம் இது குறித்து இன்னும் எவ்வித செய்தியும் வெளியிடவில்லை.
இதனையடுத்து மத்திய அமைச்சர் பிரணாப்முகர்ஜி, ரயில்வே துறை அ‌மைச்சர் மம்தாவை அழைத்து விசாரித்தார், இந்த நிலைமை குறித்து பிரதமரிடம் விளக்கப்பட்டது. சம்பவத்தை அடுத்து இப்பகுதியில் ஹவுரா வழியாக செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 150 பேர் வரை காயமுற்றிருப்பதாகவும், உயிர்ப்பலி அதிகம் இருக்கும் என அஞ்சப்படுவதாகவும், உள்துறை செயலர் ஜி.கே., பிள்ளை கூறினார். இந்த சம்பவத்தின் பின்னணியில் மாவோ., நக்சல்கள் இருப்பதாக சந்தேகிக்கப்படுவதாக ரயில்வே போர்டு போக்குவரத்து துறை உறுப்பினர் விவேக் ஷகாய் கூறினார்.

சம்பவ இடத்தில் மம்தா:
சம்பவம் நடந்துள்ள பகுதிக்கு ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி விரைந்தார். தாக்குதல் நடந்த சம்பவம் குறித்து நேரிடையாக கேட்டறிந்தார்.       மேலும் அங்கு நடக்கும் மீட்பு பணிகளை பார்வையிட்டு அங்கிருந்தபடியே உத்தரவு பிறப்பித்த வண்ணமாக இருந்தார்.       இதில் பலியானவர்களுக்கு நிவாரணமாக ரூ.      5 லட்சமும், காயமுற்றவர்களுக்கு       ரூ.  2 லட்சமும் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்‌ளார்.

கைது புலிகளின் பாடல் ஒன்றை பதிவு செய்து வைத்திருந்த

கல்முனை பாண்டிருப்பில் கையடக்கத் தொலைபேசியில் விடுதலைப் புலிகளின் பாடல் ஒன்றை பதிவுசெய்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் புதன்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். பாண்டிருப்பு பிரதேசத்தில் விசேட அதிரடிப்படையினர் வீதி ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது, கூட்டமாக நின்ற இளைஞர் குழுவினரையும் அவர்களிடம் இருந்த கையடக்கத் தொலைபேசிகளையும் பொலிஸார் சோதனையிட்டுள்ளனர்.
அவ்வேளை, விடுதலைப் புலிகளின் பாடல் ஒன்றை பதிவு செய்து வைத்திருந்த பாண்டிருப்பு மாரியம்மன் ஆலய வீதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கைதுசெயது கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். இது தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

நிரூபிக்கப்பட்டால் இராணுவத் தளபதியாக இருந்தாலும், தமது உறவினராக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும்

அடுத்தத் தேர்தலிலும் எனக்கு வெற்றி நிச்சயம் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அல் ஜசீரா ஊடகத்திற்கு அளித்த செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.ஜனாதிபதியாகவோ அல்லது பிரதமராகவோ ஆட்சியில் நீடிப்பது உறுதி என அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆட்சி முறைமை அல்லது பிரதமர் ஆட்சி முறைமை என்பதில் தமக்கு சிக்கல் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.தமிழீழ விடுதலைப் புலிகளுடனான இறுதிக் கட்ட யுத்தத்தின் போது அரசாங்கம் மீது மக்கள் நம்பிக்கை கொண்டிருக்காவிட்டால், அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் பிரவேசித்திருக்க மாட்டார்கள் என அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் புலம்பெயர் மக்கள் ஆகியோர் தம்மையும் நாட்டையும் இழிவுபடுத்தும் வகையிலான பிரச்சாரங்களை முன்னெடுத்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்களுக்கு நிச்சயமாக தண்டனை விதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்கள் எந்தத் தராதரத்தை வகித்தாலும், தமது உறவினர்கள் என்றாலும் தண்டனை விதிக்கும் தீர்மானத்தில் மாற்றமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

குற்றச்சாட்டுக்கள் ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் இராணுவத் தளபதியாக இருந்தாலும், தமது உறவினராக இருந்தாலும் தண்டனை விதிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். எனினும், பயங்கரவாதத்தை இல்லாதொழித்த நபர்களை தம்மால் தண்டிக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பயங்கரவாதத்தை இல்லாதொழித்த காரணத்திற்காக தண்டனை வழங்கப்பட வேண்டுமென்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் கொண்டிருந்தால், அதனை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எதிராக மட்டும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு முனைப்புக் காட்டும் அல்ஜசீரா ஏன் ஏனைய நாடுகள், குறிப்பாக அமெரிக்கா பிரிட்டன் போன்ற நாடுகளில் இடம்பெற்ற இடம்பெறும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் மௌனம் காக்கின்றது என கேள்வி எழுப்பியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

துரோஹி பட்டம் ு மலேசிய பினாங் முதல்வர ராமசாமி

புலிகள் ஒருவரை கொலை சேயும் முன்பாக அவர்களை துரோஹிகள் என்று சேறு பூசுவது வழக்கம். இந்த கலாச்சாரம் முதலில் அமிர்தலிங்கம் போன்றோர்களால் ஆரம்பிக்கப்பட்டது. அமரர் துரையப்பாவை இப்படித்தான் அவர்கள் கொன்றார்கள். இந்த ராமசாமி சொல்வதை பார்த்தால் அதுவும் தமிழ்நாட்டில் வைத்தது முழங்குவதை பார்க்கும் பொது இதை சாதாரணமாக எடுத்துகொள்ள முடியாது என்றே தோன்றுகிறது
மலேசிய பினாங் முதல்வர்- தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஒரு தமிழ் இனத்துரோகி என மலேஷிய பினாங் மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் பழனியப்பன் ராமசாமி ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா கூட ஒரு துரோகிதான் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் நடிகரும், இயக்குநருமான சீமானின் கட்சி மாநாட்டில் கலந்துகொண்ட பின்னர், நாடு திரும்பியிருந்த நிலையிலேயே துணை முதலமைச்சர் பேராசிரியர் ராமசாமி ஊடகமொன்றுக்கு செவ்வியளித்துள்ளார். தமிழகத்தில் அரசியல் மாற்றம் ஒன்று ஏற்படுத்தப்படாதவரை, இலங்கைத் தமிழர்களுக்கு மாற்றம் ஏற்படாதுஎன்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
துரோஹி பட்டம் இன்னும் பஜாரில் உள்ளது ஒரு அதிசயம்தான். இந்த ராமசாமி முதலில் தனது மலேசியா மக்களின் வறுமையை போக்கட்டும். தன வீடு நாறுது ஊரான் வீட்டுக்கு பன்னீர் தெளிக்க வந்துட்டான் பன்னாடை

தலித் அமைச்சர் அமைச்சர் ராசா ஒரு மிகச்சிறிய மனிதர்: ஜெயலலிதா சாதி வெறி பிடித்த

சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழகத்திற்கு புதன்கிழமை வந்த ஜெயலலிதா செய்தியாளர்களை சந்தித்தார்.
கேள்வி: ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இருந்து மத்திய மந்திரி ஆ.ராசாவை பிரதமர் காப்பாற்ற முயற்சி செய்கிறாரா?
பதில்: ஸ்பெக்ட்ரம் ஊழலில் தொடர்புடைய திமுக அமைச்சர் ராசாவைக் காப்பாற்ற ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எல்லா வகையிலும் முயற்சி செய்கிறது. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில், இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதை நாட்டு மக்கள் அனைவரும் நன்கு அறிவார்கள்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை. ஊழலுக்கான ஆதாரங்கள் செய்தித்தாள்களிலும், பத்திரிகைகளிலும் வெளியாகி உள்ளன. பல்வேறு தொலைக்காட்சி செய்திகளிலும் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.
இதெல்லாம் அனைவருக்கும் தெரியும். ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெறுகிறது. தேவையான அனைத்து ஆதாரங்களையும் சிபிஐ ஏற்கனவே பெற்றிருக்கும். எனவே இந்த விவகாரம் தொடர்பாக உரிய முறையில் முழுமையான அறிக்கை அளிக்க வேண்டியதும், ஊழலில் தொடர்புடைய அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியது மத்திய அரசின் கடமை.
பிரதமர் மன்மோகன் சிங்கை பொறுத்தவரை மத்திய அமைச்சர் ராசா ஒரு மிகச்சிறிய மனிதர். இருந்தபோதிலும் அவர் மீது பிரதமர் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்குக் காரணம் ராசா அல்ல. ராசாவை விட பன்மடங்கு அதிக பலம் மிக்க வேறொருவர் இதில் சம்பந்தப்பட்டிருக்கிறார். அந்த நபரை பாதுகாக்கத்தான் பிரதமர் முயற்சி மேற்கொண்டுள்ளார். 

தலித் அமைச்சர் ராசா ஒரு மிக சிறிய மனிதர் என்று பிராமண பெண் ஜெயலலிதா கூறியுள்ளார் எவ்வளவு சாதி வெறி பிடித்த வசனம் ?

கள் இறக்க விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக்கோரி கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின்


கொங்கு நாடு முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் கோவை செஞ்சிலுவை சங்கத்தின் முன்பாக தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்கவும், விவசாய கிராமங்களில் பொருளாதாரத்தை முன்னேற்றவும் சுதேசிய பானமான கள் என்ற தென்னை பாலை தென்னை மரத்திலிருந்து இறக்குவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.

இந்த தடையை நீக்க வலி யுறுத்தியும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வலியுறுத்தியும், கோவை நகரில் வெட்டப்படும் ஒரு மாரத்திற்கு பதிலாக ஆயிரம் மரக்கன்றுகளை நட்டு இயற்கை வளத்தை காக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கொங்கு லோகநாதன், இ.எம்.பொன்னுசாமி, தமிழ்நாடு விவசாய சங்கங்கள் மற்றும் பிஜேபி கட்சியைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கம்லா,டிரினிடாட்ருபாக்கோ நாட்டின் முதலாவது பெண் பிரதமராக

டிரினிடாட்ருபாக்கோ நாட்டின் முதலாவது பெண் பிரதமராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கம்லா பேர்சாட் பைஸ்செசர் தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். கம்லா தலைமையிலான அரசியல் கூட்டணி தேர்தலில் அறுதிப் பெரும்பான்மை பலத்தைப் பெற்றிருக்கிறது. ஆளும் கட்சியின் 43 வருடகால அதிகாரம் வீழ்ச்சி கண்டிருக்கிறது.

41 ஆசனங்களைக் கொண்ட பாராளுமன்றத்தில்கம்லாவின் மக்கள் பங்குடமைக் கட்சி தலைமையிலான கூட்டணி 29 ஆசனங்களைப் பெற்றிருக்கிறது. தேர்தல் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது. ஜனாதிபதி ஜோர்ஜ் மைக்சல் ரிட்சாட்ஸ் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை மாலை கம்லா பிரதமராகப் பதவியேற்கவிருந்தார்.
கம்லாவுக்கு இரு பேரக் குழந்தைகள் உள்ளனர். அவர் தீவிர இந்து மதத்தைக் கடைப்பிடிப்பவராவார். பெண்கள் மற்றும் பெண்களின் அமைப்புகளிடமிருந்து எனக்கு அதிகளவிலான ஆதரவு கிடைத்திருக்கிறது. இதன் மூலம் பெண்கள் எதிர்நோக்கும் பல தடைகளை என்னால் உடைத்து முன்னேற முடியும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். இந்த வெற்றி பெண்களுக்குக் கிடைத்த வெற்றி எனவும் அதனைக் கொண்டாட இருப்பதாகவும் கம்லா கூறியுள்ளார்.
2002 இலிருந்து டிரினிடாட்டின் பிரதமராக இருந்து வந்த பற்றிக் மானிங் தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறார். கம்லா சட்டக் கல்லூரியில் பயின்றதுடன், வர்த்தக நிர்வாகத்தில் முதுமாணிப் பட்டத்தையும் பெற்றிருக்கிறார். அத்துடன், மேற்கு இந்தியத் தீவுப் பல்கலைக்கழகத்தில் கல்வித் துறையில் டிப்ளோமா பட்டத்தையும் அவர் பெற்றவராகும். அத்துடன் அந்த நாட்டின் முதலாவது பெண் சட்டமா அதிபராகவும் சட்ட விவகார கல்வித் துறை அமைச்சராகவும் அவர் பணியாற்றியிருந்தார்.
1845-1917 க்கும் இடையில் கம்லாவின் மூதாதையர் அங்கு கொண்டுசெல்லப்பட்டிருந்தனர். 1 இலட்சத்து 48 ஆயிரம் இந்தியத் தொழிலாளர்களின் ஒருவராக கம்லாவின் மூதாதையர் அங்கு சென்றிருந்தனர். கரும்பு, கொக்கோ பயிர்ச் செய்கையில் அவர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். 13 இலட்சம் சனத்தொகையைக் கொண்ட ட்ரினிடாட், டுபாக்கோவில் புலம்பெயர்ந்த இந்திய சமூகம் 44 சதவீதமாகும்.

நந்திக்கடல் முள்ளிவாய்கால் முடிவு யாரால் எதற்காக

முள்ளிவாய்கால் முடிவு யாரால் எதற்காக இடம்பெற்றது என்று தலைப்பில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 6ம் திகதி கனடா ஸ்காபுரோவில் கலந்துரையாடல் ஒன்று கனேடிய தமிழர் ஒழுங்கமைப்பு என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.இடம்: Mid Scarborough Community Centre
2467 Eglinton Ave East, Scarborough,Ontario,Canada

துப்பாக்கியை சகல நோய்க்குமான மருந்து என்று சில முட்டாள்கள் எண்ணியதால் வந்த விளைவுதான் நந்திக்கடல் பாடம். இன்னுமா புரியவில்லை?
தூங்கியது போதும் இனியாவது சுயநல தூக்கத்திலிருந்து விழித்தெழுங்கள்.

திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவில் 5000க்கும

இலங்கையில் பாடல்பெற்ற தலமான திருக்கேதீஸ்வர ஆலய தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை நடைபெற்றது. திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர் என அங்கிருக்கும் எமதுச் செய்தியாளர் தெரிவித்தார். கடந்த 18 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான திருவிழா, நாளை நடைபெறும் பாலாவி தீர்த்தத் திருவிழாவுடன் நிறைவுபெறும்.

வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இம்முறை வெசாக்

வடக்கு, கிழக்கு உட்பட நாடளாவிய ரீதியில் இம்முறை வெசாக் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. கொழும்பு உள்ளிட்ட அனைத்து பிரதான நகரங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் பாரிய அலங்கார பந்தல்கள், வெளிச்சக் கூடுகள், கண்ணைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.

கிளிநொச்சிக்கும், யாழ் மாவட்டம் சுன்னாகத்துக்கும் மின்சாரம் வழங்கும்இலங்கையின் வடக்கே கிளிநொச்சிக்கும், யாழ் மாவட்டம் சுன்னாகத்துக்கும் மின்சாரம் வழங்கும் புதிய திட்டத்துக்கான வேலைகள் தொடங்கியுள்ளன.
இந்த இரு நகரங்களுக்கும், தேசிய மின்வழங்கல் வலைப்பின்னல் ஊடாக அதிசக்தி வாய்ந்த 132 கிலோ வோட்ஸ் மின்சாரம் வழங்குவதற்கான வேலைத்திட்டங்கள் இன்று கிளிநொச்சி நகரில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டிருக்கின்றன.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 132 கிலோ வாட்ஸ் சக்தியுள்ள மின்சாரம் கிளிநொச்சியில் அமையவுள்ள மின்விநியோக நிலையத்திற்கும் யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் உள்ள மின்விநியோக நிலையத்திற்கும் கிடைக்கும் என்றும், அந்த நிலையங்களில் இருந்து 33 கிலோ வோட்ஸ் மின்சாரம் கிளிநொச்சி மாவட்டத்திற்கும், யாழ் குடாநாட்டிற்கும் வழங்கப்படும் என்றும் மின்சாரசபை அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு வருடங்களில் இந்த வேலைத்திட்டங்கள் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
தற்போது வவுனியாவில் உள்ள மின்வழங்கல் நிலையத்தில் இருந்து கிளிநொச்சி நகரத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்தின் மல்லாவிக்கும் மின்சாரம் வழங்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை, மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவு நகரத்திற்கு மின்விநியோகம் வழங்குவதற்கான இணைப்பு வேலைகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றார்கள்.       இதேவேளை யாழ்ப்பாணத்திற்கு மின்பிறப்பாக்கிகள் ஜெனரேற்றக்கள் மூலமாகவே மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய கிளிநொச்சி வைபவத்தில் உரையாற்றிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச அவர்கள், இந்த மின்விநியோகத் திட்டத்திற்கு ஜப்பானிய அரசும், ஆசிய அபிவிருத்தி வங்கியும் நிதியுதவி வழங்கியிருப்பதாகத் தெரிவித்தார்.
யுத்தம் நடைபெற்ற பிரதேசங்களில் இராணுவத்தினர் கண்ணிவெடிகளை அகற்றி வருகின்ற அதேவேளை, வடக்கிற்கு முழுமையான மின்சார வசதியை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுகின்றது.
இதேபோன்று வீதிகளை அமைத்தல், சுகாதார வசதிகள், பாடசாலைகளை ஆரம்பித்தல், நீர்ப்பாசன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்துவதற்கான அபிவிருத்திப் பணிகளை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.

யாழ்ப்பாணம் பள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் தமிழ் முஸ்லிம் பிரமுகர்களால் பள்ளி நிர்மாணம்

297 ஆண்டுகள் பழமையானது
3 ஆயிரம் பேர் தொழுகையில் ஈடுபட வசதி
தமிழ் முஸ்லிம் பிரமுகர்களால் பள்ளி நிர்மாணம்
யாழ்ப்பாணம் பெரியபள்ளிவாசல் 20 வருடங்களுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை மீண்டும் உத்தியோக பூர்கமாகத் திறந்து வைக்கப்படவுள்ளதுடன் முதலாவது ஜும்ஆப் பிரசங்கமும் இடம்பெறவுள்ளது.
ஒற்றுமையையும், சமாதானத்தையும் வலியுறுத்தி முதலாவது ஜும்ஆப் பிரசங்கத்தை கொழும்பு பெரிய மர்க்கஸ் ரஷாதிய்யா அரபுக் கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் இப்னு உமர் ஹதீஸ் கற்கை நிலையத்தின் பணிப்பாளருமான மெளலவி எம். ஜே. அப்துல் காலிக் தேவ்பந்தி நிகழ்த்தவுள்ளார்.
காட்டுப்பள்ளி என அழைக்கப்படும் இந்தப் பள்ளிவாசல் 1713ல் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. பல்லவர் கால சிற்பத்தை ஒத்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்தப் பள்ளி 297 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததும் மிகப்பெரியதுமாகும்.இந்தப் பள்ளிவாசல் தற்பொழுது முழுமையாக புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளதுடன் சுமார் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்கள் தொழக்கூடிய வசதியைக் கொண்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு தற்பொழுது நாட்டின் பல பாகங்களிலும் இஸ்லாமியப் பணியில் ஈடுபட்டுள்ள 46 உலமாக்களும் இன்றைய நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளனர்.இன்று பெண்களுக்கான விசேட பயான் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அஸர் தொழுகையைத் தொடர்ந்து உலமாக்களுடனான ஆலோசனைக் கூட்டமும் மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து இஸ்மாயில் மெளலவியால் விஷேட பிரார்த்தனையும் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான மெளலவி அப்துல்லாஹ் பாயிஸ் தெரிவித்தார்.
முஸ்லிம் கல்லூரி வீதியில் அமையப்பட்டுள்ள இந்தப் பள்ளிவாசலுக்குட்பட்ட பகுதியில் முஸ்லிம்கள் மீண்டும் மீளக்குடியமர்ந்ததையடுத்தே பள்ளிவாசல் புனரமைக்கப்பட்டு அழகிய தோற்றத்துடன் காணப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார். ஒல்லாந்தர் காலத்தில் பெரியளவில் இந்தப் பள்ளிவாசல் கட்டப்பட்டுள்ளது. அப்போது அந்தப் பிரதேசத்தில் செல்வந்தராக இருந்த முகம்மது தம்பி மரைக்காயரும், வண்ணார் பண்ணை வைத்தியலிங்க செட்டியார் என்பவரும் இணைந்தே இப்பள்ளியைக் கட்டியதாக வரலாற்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வியாழன், 27 மே, 2010

நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதற்காக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்க

http://www.shobasakthi.com/shobasakthi/?p=648
 
 நாடுகடந்த தமிழ் ஈழ அரசு பற்றிய ஷோபசக்தயின் ஆணித்தரமான கருத்துக்கள் விபரமாக அறிய மேல்குறிப்பிட்ட அவரது இணையத்திற்கு விஜயம் செய்து பாருங்கள் 
 
எங்களுக்காகத் தலைவர் சிந்திக்கிறார்’ என்று மூட நம்பிக்கையில் அழுந்திய காலங்கள் போய் எங்களுக்காக உருத்திரகுமாரன் அண்ணா சிந்திக்கிறார் என்ற முட்டாள்தனமான நம்பிக்கையுடன் கேட்டுக் கேள்வியில்லாமல் அடங்குவதாக இனிக் காலம் அமையக் கூடாது.
புலிகளின் தலைமை அழிக்கப்பட்டவுடன் சர்வதேசமெங்கும் சிதறிக்கிடந்த புலிகளின் பில்லியன் கணக்கான சொத்துக்களைக் கைப்பற்றவும் புலிகள் இருக்கும்வரை அவர்களின் பெயரால் மக்களிடையே அனுபவித்துவந்த சமூக மதிப்பைக் காப்பாற்றவும் புலிகள் இல்லாத வெற்றிடத்தைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் மத்தியில் முற்போக்கு அரசியல் சக்திகள் தலையெடுக்காமல் செய்யவும் நடத்தப்படும் நாடகமே இந்த நாடு கடந்த தமிழீழ அரசு. எனது அப்பா ஆரம்பித்த பூனைப்படை கிறுக்குத்தனமான ஒரு செயலாயிருக்கலாம், ஆனால் உருத்திரகுமாரன் தலைமை தாங்கும் நாடு கடந்த தமிழீழ அரசு போல அது கபடச் செயலல்ல, கயமை வழியல்ல.
அடுத்தமுறை அப்பாவைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைக்கும்போது, அவரின் நெற்றியில் துப்பாக்கியை வைத்து மிரட்டியதற்காக அப்பாவிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

அதிர்ச்சி கல்லூரிகளில்அனுமதி மறுப்பு அதிக மதிப்பெண் பெற்றபோதும்

இலங்கைத் தமிழ் அகதிகளின் பிள்ளைகள் தமிழகத்தில் ஆரம்ப கல்வி தொடக்கம் உயர் வகுப்பு வரை படித்து, அதிகளவு மதிப்பெண்ணைப் பெற்றபோதிலும் உயர்கல்வியைத் தொடரும் பொருட்டு அரச ஒதுக்கீட்டிலுள்ள இடங்களை தெரிவுசெய்வதற்கு அனுமதி மறுக்கப் பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.      இது தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள்    மத்தியில் மிகுந்த அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, 1996ஆம் ஆண்டு இலங்கையில் நிலவிய யுத்தச் சூழ்நிலை காரணமாக இங்கிருந்தும் இடம்பெயர்ந்து இந்தியா சென்றடைந்த இலங்கைத் தமிழ் அகதியான தேவசந்திரலிங்கம் என்பவரின் மகனான பகீர் ஆரம்பம் முதல் +2 வரை சென்னை  திருவான்மியூரில் உள்ள பாடசாலை ஒன்றில் படித்து +2    பொதுத்தேர்வில் தோற்றி 1200க்கு    1,116 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.
இந்நிலையில்,    பொறியியல் துறையில் கல்வி கற்பதற்கு அவருக்கு வாய்ப்புள்ளபோதிலும் இலங்கைத் தமிழ் அகதிகள் பொறியியல் கவுன்சிலில் கலந்துகொள்வதற்கு அனுமதி மறுக்கப்படுவதால் இம்மாணவர் முன்னணி பொறியியல் கல்லூரியில் சேரமுடியாத நிலை உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, கடந்த 2002ஆம் ஆண்டு இலங்கை அகதிகளுக்கு மருத்துவத்துறையில் 20 இடங்களும் பொறியியல் துறையில் 40 இடங்களும் ஒதுக்கப்பட்டன.     ஆனால், தற்போது இட ஒதுக்கீடு நிறுத்தப்பட்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ள குறித்த மாணவனின் பெற்றோர், தாங்கள் தொழில்நுட்ப கல்லூரி இயக்குநர் அலுவலகத்தில் சென்று கேட்டபோது,     தனியார் கல்லூரிகளை நாடுமாறு அங்கு கூறப்படுவதுடன் அவ்வாறு தனியார் கல்லூரிகளை நாட பெருமளவு பணம் தேவைப் படுமெனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், இலங்கைத் தமிழ் அகதிகளின் பிள்ளைகள் தமிழகத்தில் கல்வியைத் தொடர அனுமதி அளிக்கும் அதேவேளை, கூடிய மதிப்பெண்களைப் பெறும் சந்தர்ப்பங்களில்,  அரச ஒதுக்கீட்டு இடங்களில் உயர் கல்வியைத் தொடர அனுமதி மறுக்கப்படுவது ஏன் எனவும் கேள்வி எழுந்துள்ளது.
அத்துடன், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி இவ்விடயத்தில் தலையிட்டு சிறந்த பெறுபேறுகளைப் பெறும் இலங்கைத் தமிழ் அகதிகளின் பிள்ளைகள் உயர் கல்வியைப் பெற வாய்ப்பளிக்க வேண்டுமெனவும்   தமிழகத்திலுள்ள இலங்கைத் தமிழ் அகதிகள் கோருகின்றனர்.  இலங்கையில் யுத்தம் நிலவிய கடந்த 3 தசாப்த காலங்களில் தங்கள் உயிரைப் பாதுகாத்துக்கொள்ளவும் நிம்மதியாக வாழவும் என பெரும் எண்ணிக்கையான வடக்கு  கிழக்குப்  பகுதித் தமிழர்கள் தம்வசம் உள்ள அனைத்தையும்    கைவிட்டு,     தென்னிந்தியா நோக்கிப் படையெடுத்தனர்.
இவ்வாறு படகுகளின் மூலம் சட்டவிரோதமாகப் பயணிப்பது மிகவும் ஆபத்தானதும்,    அதேவேளை,        உயிருக்கு எந்தவித உத்தரவாதம் இல்லை என்றபோதிலும் தங்கள் குழந்தைகளின்     எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் கருதி பெரும் எண்ணிக்கையான தமிழ் மக்கள் தமிழகத்துக்கு இடம்பெயர்ந்தனர்.
இவ்வாறு இடம்பெயர்ந்தவர்களில் பலர் மண்டபம் அகதி முகாமிலும் ஏனையோர் முகாம்களுக்கு வெளியேயும் வாழ்ந்துவருகின்றனர்.  பலர் கடந்த 2 தசாப்த காலத்துக்கும் அதிகமாக தமிழகத்திலேயே வாழ்ந்துவருவதும் பலருக்கு குழந்தைகள் தமிழகத்திலேயே பிறந்துள்ளதும் குறிப்பிடத்தக்கதாகும். சுமார் மூன்றரை இலட்சத்துக்கும் அதிகமான இலங்கைத் தமிழ் அகதிகள் தமிழகத்தில் வாழ்ந்துவருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்தபோதும் தமிழகத்திலேயே வாழ வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் பலர் தொடர்ந்தும் அங்கு வாழ்ந்துவருகின்றனர்.      தமிழக அரசும் இலங்கை அகதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளதுடன், தமிழக அமைச்சர்களும் நேரடியாக முகாம்களுக்கு விஜயம் செய்து அவர்களின் குறைகளைக் கேட்டறிந்துள்ளனர்.
இவ்வாறான பின்னணியில், தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகள் தமக்கு நிம்மதியாக வாழும் சூழல் கிட்டுவதுடன், தமது குழந்தைகள் அங்கேயே உயர்கல்வியைக் கற்றுத்தேற வாய்ப்புக்கிட்டும் என்ற உயர்ந்த எதிர்பார்ப்புகளுடன் காணப்படுகின்றனர். இருந்தபோதிலும் அவ்வப்போது எழும் சந்தேகங்களின் பேரில் தமிழ் அகதிகள் துருவித்துருவி விசாரணைக்கு உட்படுத்தப்படுவதும் இவ்வாறு கூடிய மதிப்பெண்களைப் பெற்றபோதிலும், அரச கல்லூரிகளில் இடஒதுக்கீடுகளின் போது,      இலங்கைத் தமிழ் அகதிகள் என்ற ஒரே காரணத்துக்காக அவை மறுக்கப்படுவதும் அவர்கள் மத்தியில் மிகுந்த கவலையைத் தோற்றுவித்துள்ளது.
உண்மையில், இலங்கைத் தமிழர்கள் விடயத்தில் தமிழக அரசுக்கு அக்கறை இருக்குமானால் அதனை பல்வேறு சந்தர்ப்பங்களில் தெளிவாகக் காட்டியிருக்க முடியும் எனக் கூறும் இலங்கைத் தமிழர்கள்,    இந்தளவு தூரம் துன்பங்களை அனுபவித்த பின்னரும் இலங்கைத் தமிழர்களை சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதும், அவர்கள் கல்வித்துறையில் முன்னேற குறைந்தபட்சம் ஒத்துழைப்பையேனும் வழங்காதிருப்பதும் மிகவும் கவலையளிப்பதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
இலங்கையில் நிலவிய போர்ச்சூழல் காரணமாக தமிழ் மக்களின் கல்வி மிகமோசமாகப் பாதிக்கப்பட்டதுடன், அவர்கள் பாரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளனர்.         வடக்கு  கிழக்குப் பகுதியைப் பொறுத்தமட்டில், படித்துப் பட்டம் பெற்ற இளைஞர்கள் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் காணப்படும் சூழ்நிலையே இன்று தோன்றியுள்ளது.        இவ்வாறான நிலைமையும் சூழலும்  தமிழக அரசுக்கோ அன்றேல்               இந்திய மத்திய அரசுக்கோ தெரிந்திருக்க மாட்டாது என்று கூறவோ அன்றேல் எதிர்பார்க்கவோ ஒருபோதும் முடியாது.
இலங்கையில் யுத்தம் முடிவுக்கு வந்துள்ள சூழலில் குறைந்தபட்சம்  தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகளின் பிள்ளைகளுக்கேனும் நல்ல தோர் கல்விச் சூழலை தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தலைமையிலான தமிழக அரசு ஏற்படுத்திக்கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் தங்கள் வாழ்க்கையை சீராக முன்னெடுத்துச் செல்ல வழிவகுப்பதாக இருக்கும்.
உலகத் தமிழரை விழிப்படையச் செய்யு முகமாகவும் தமிழ் மொழியை உலகறியச் செய்யும் வகையிலும் கோவையில் செம்மொழி மாநாட்டை ஒழுங்குசெய்து அதனை வெற்றிகரமாக நடத்த பல்வேறு முனைப்புக்களில் ஈடுபட்டிருக்கும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி, இலங்கை தமிழ் அகதி மாணவர்களின் உயர்கல்வியை ஊக்குவிக்க நடவடிக்கை எடுப்பாரேயானால் அது மிகவும் வரவேற்கத் தக்கதாக அமையும்.
யுத்தம் காரணமாக இலங்கைத் தமிழ் மாணவர்கள் பலர் உடல் ரீதியாகவும், உளரீதியாகவும் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்கிய நிலையிலேயே தமது கல்வியைத் தொடர்ந்துவருவது    ஒன்றும் இரகசிய மல்ல.                 இவ்வாறான சூழ்நிலையில் ஏலவே அகதிகளாகி தமிழகத்திலும்           இதர நாடுகளிலும் மிகுந்த சவால்களுக்கு மத்தியில் கற்று முன்னேறவேண்டும் என்ற பற்றுறுதியுடன் கல்வி நடவடிக்கைகளில் கவனம் செலுத்தும் இலங்கை அகதி மாணவர்களுக்கு உதவவேண்டியது சம்பந்தப்பட்டவர்களின் தார்மிகக் கடமை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

கைதுகள் ்ஆரம்பம், நாடு கடந்த நடவடிக்கைகளால்

நாடு கடந்த தமிழ் ஈழ பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டார்கல் என்ற சந்தேகத்தின் பேரில் கல்முனை களுவாஞ்சிக்குடி பிரதேசங்களை சேர்ந்த இருவர் அதிரடி படையினரால் கைது செயப்பட்டுள்ளர்கள். நாடு கடந்த நடவடிக்கைகளால் இலங்கையில் கைதுகள்  ஆரம்பமாவ்தின் அறிகுறியே இதுவென்று நாடுகடந்த அறிவாழிகள் அறிவார்களா?

நயன்தாராவும், பிரபுதேவாவும எங்களை பிரிக்க முயற்சிக்க வேண்டாம் பிரபுதேவா

சென்னை: நானும் நயன்தாராவும் பிரிக்க முடியாத அளவுக்கு நெருக்கமாகிவிட்டோம். இனி எங்களை பிரிக்க முயற்சிக்க வேண்டாம் என்று நடிகரும் இயக்குநருமான பிரபுதேவா பஞ்சாயத்தார் முன்னிலையில் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

நயன்தாராவும், பிரபுதேவாவும் திருமணம் செய்து கொள்ளாமலே கணவன் - மனைவியாக வசித்து வருகிறார்கள். மீடியா முன்பு இதை இருவருமே முன்பு மறைத்து வந்தார்கள். இப்போது வெளிப்படையாகவே சேர்ந்து வருகிறார்கள். திருமணம் போன்ற நிகழ்வுகளுக்கும் கூட தம்பதிகளைப் போல இணைந்தே செல்கிறார்கள்.

பிரபுதேவா, ஏற்கெனவே ரம்லத் என்ற நடனக் கலைஞரை காதலித்து திருமணம் செய்தவர். 2 குழந்தைகளும் இருக்கிறார்கள்.

நயன்தாரா-பிரபுதேவாவின் காதல் விவகாரம், மனைவி ரமலத்துக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தி இருக்கிறது. நயன்தாராவிடம் இருந்து கணவரை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று ரமலத் இன்னும் முயற்சி செய்து வருகிறார்.

அதன் முதல்கட்டமாக, "நயன்தாரா என் கணவரை விட்டு விலகிவிட வேண்டும். இல்லையென்றால், அவரை எங்கேயாவது நேரில் பார்த்தால் அடிப்பேன்'' என்று முன்பு எச்சரிக்கை விடுத்தார். இந்த எச்சரிக்கைக்கு எந்த பலனும் இல்லை. நயன்தாராவும், பிரபுதேவாவும் முன்பை விட, இப்போது அதிக நெருக்கமாகிவிட்டார்கள்.

இதைத்தொடர்ந்து ரமலத், தமிழ் பட உலகை சேர்ந்த சில பிரமுகர்களிடம் தனது நிலைமையை கூறி முறையிட்டார்.

"என்னிடம் இருந்தும், என் குழந்தைகளிடம் இருந்தும் என் கணவரை நயன்தாரா பிரித்து சென்று விடுவாரோ என்று பயப்படுகிறேன். நயன்தாராவின் பிடியில் இருந்து என் கணவரை மீட்டு, எங்களுடன் சேர்த்து வையுங்கள்'' என்று அழுதுகொண்டே கூறினார்.

இதனால் ரம்லத் மீது இரக்கப்பட்ட திரையுலகின் முக்கிய பிரமுகர்கள், பிரபுதேவாவை நேரில் வரவழைத்து, 'பஞ்சாயத்து' பேசினார்கள். அவர்களிடம் பிரபுதேவா, "நயன்தாராவை விட்டு என்னால் பிரிய முடியாது. அந்த அளவுக்கு நாங்கள் நெருக்கமாகி விட்டோம். நான் கைவிட்டால், நயன்தாரா தற்கொலை செய்து கொள்வார். எங்களை விட்டுவிடுங்கள்'' என்று கூறிவிட்டார்.

அதனால் பஞ்சாயத்து பேச வந்தவர்கள், இது தண்ணி தெளித்துவிட்ட கேஸ், நம்மால் ஆகப்போவது ஒன்றுமில்லை என்று கூறி, நயன்தாரா-பிரபுதேவா பிரச்சினையை கைகழுவி விட்டார்கள்!

செல்வராகவன், மீண்டும் ஒரு சரித்திரப் படத்தை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.


ஆயிரத்தில் ஒருவன் பல விமர்சனங்களைக் கிளப்பினாலும், தனது முயற்சியில் மனம் தளராத செல்வராகவன், இப்போது மீண்டும் ஒரு சரித்திரப் படத்தை எடுப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.

இந்தப் படம் கிமு 5000 வருடங்களை மையப்படுத்தி எடுக்கப்பட உள்ளது. இதற்காக தீவிர முயற்சிகளில் இறங்கியுள்ளார்.

இந்தப் படத்தில் ஹீரோவாக நடிப்பவர் ராணா டகுபதி. ராமாநாயுடுவின் பேரன். இவரது தந்தை சுரேஷ், தனது சுரேஷ் புரொடக்ஷன்ஸ் பேனரில் இந்தப் படத்தை எடுக்கிறார்.

தமிழ், தெலுங்கு இரண்டிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இருமொழிப் படம் இது.

இந்தப் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்ற ராணா, "இந்தப் புதிய முயற்சி சரித்திரம் படைக்கும் படமாக வரப்போகிறது. இதுவரை இந்தியாவில் தயாராகாத படமாக, பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட உள்ளது. கதைக்களம் கி மு 5000 வருடங்களில் நடப்பதாக உள்ளது. இயக்குநர் செல்வராகவன் மிகுந்த சிரத்தையும் கவனமும் கொண்டு கதையை உருவாக்கியுள்ளார்.

தமிழிலும் எனக்கு பெரிய களத்தை உருவாக்கவிருக்கிறார். எனக்குள்ள ஒரே பிரச்சனை, என் உயரத்துக்கு கதாநாயகி அமையவேண்டும் என்பதுதான்..." என்றார்.

விரைவில் இந்தப் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவுள்ளது.
பதிவு செய்தவர்: உபால்டு மண்டையன்
பதிவு செய்தது: 27 May 2010 8:25 pm
இவன் எடுத்த படம் ஆயிரத்தில் ஒருவன் இவனுக்கே புரியல இதுலே இன்னொரு படம் எடுக்கபோரரம் பைத்தியகார பய இந்த படத்த இந்த சைகோ மட்டும் தான் பாக்க முடியும்

தொலைபேசி மூலமான தடைவிதிக்கஆபாச இணையதளங்களைத் கொழும்பு

கையடக்க தொலைபேசி மூலமான தடைவிதிக்கஆபாச இணையதளங்களைத் கொழும்பு சிறுவர் நீதிமன்றம் நேற்றையதினம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பில் உரிய கையடக்க தொலைபேசி நிறுவனங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுக்குமாறு மகளிர் மற்றும் சிறுவர்பிரிவு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெற்றொர்களிடமிருந்து கிடைக்கப்பெற்ற தொடர்ச்சியான முறப்பாடிகளை அடுத்தே இந்த பிரச்சினைக்கு நீதிமன்றம்மூலமாக தீர்வு காணப்பட்டுள்ளது என்று பொலிஸின் மகளிர் மற்றும் சிறுவர் பிரிவு தெரிவித்துள்ளது.

சரணடைய வந்த புலிகளுடன் விஜய நம்பியார் .......இலங்கை உள்நாட்டு யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் சரணடைய வந்த புலிகளுடன் ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பிரதான அதிகாரி விஜய நம்பியார் நேரடியாகத் தொடர்பு வைத்திருக்கவில்லை என ஐ.நா.சபை தெரிவித்துள்ளது. இன்னர்சிற்றி பிரஸ் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளிக்கையில் பான்கீ மூனின் பேச்சாளர் மார்ட்டின் நெஸிர்கி இதனைத் தெரிவித்துள்ளார். சரணடையுமாறு கோரப்பட்டவர்களுடன் தனக்கு நேரடித்தொடர்பு இருந்திருக்கவில்லை என்பதை விஜய நம்பியார் தெளிவுபடுத்தியுள்ளார். அவர்களுடன் அவருக்கு நேரடித்தொடர்பு இருக்கவில்லை. அவர் இலங்கை அரசுத் தலைவர்களுடன் பேசினார். தமிழ் சமூகத்தைச் சார்ந்த வர்களின் தகவல்களை அவர்களுக்குத் தெரிவித்தார் என்று பான் கீ மூனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார்

சென்னை: எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்த 2 சென்னை [^] மாணவிகள் தீக்குளித்து தற்கொலை [^] செய்து கொண்டனர்.

ஆவடி சேக்காட்டை சேர்ந்தவர் சசி (15) தேர்வில் தோல்வியடைந்ததையடுத்து உடலில் மண்ணெண்ணெணை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

அதே போல கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சுகன்யா (17) ஆற்காடு ரோட்டில் உள்ள பள்ளியில் படித்து வந்தார்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். பலத்த காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

தற்கொலைக்கு முயன்ற இன்னொரு மாணவி:

கோயம்பேடு திருவீதியம்மன் கோவில் [^] தெருவைச் சேர்ந்த பிரியங்கா, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தோல்வியடைந்ததால் பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார்.

மருத்துவமனையில் சேர்க்க்கப்பட்ட அவர் தீவிர சிகிச்சைக்குப்பின் உயிர் பிழைத்துள்ளார்.

ரேங்க் பட்டியல் குளறுபடி-விடுபட்ட விருதுநகர் மாணவி:

முன்னதாக நேற்று எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் மாநில அளவில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியலை அரசு தேர்வுத்துறை அறிவித்தது.

இந்த ரேங்க் பட்டியலில் 15 மாணவ- மாணவிகளின் பெயர் இடம் பெற்றிருந்தன.

விருதுநகர் மாவட்டம் ஏ.வி.எம்.எம்.என். மேல் நிலைப்பள்ளி மாணவி மகேஸ்வரி 493 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் 3வது இடத்தைப் பிடித்துள்ளார். ஆனால் அவரது பெயர் ரேங்க் பட்டியலில் இடம் பெறவில்லை.

இது குறித்து விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கு தகவல் தரப்பட்டது. அவர் உடனடியாக சென்னையில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனருக்கு தகவல் தெரிவித்தார்.

இதையடுத்து மாணவி மகேஸ்வரியின் பெயரை ரேங்க் பட்டியலில் 16வதாக சேர்த்து அறிவித்தது தேர்வுத்துறை.

கொழும்பு நகரில் அமைக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்ற இன்று முதல் பாரிய திட்டம்

மேல் மாகாணத்தில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்டுள்ள கட்டடங்களை அகற்றுவதற்கு பாதுகாப்பு அமைச்சு இன்று (27) முதல் பாரிய வேலைத் திட்டங்களை ஆரம்பித்துள்ளது.பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவின் ஆலோசனையின் பேரில் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தலைமையில் பொலிஸார், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் தாழ் நிலத்தை மீள நிரப்பும் கூட்டுத்தாபனம் ஆகியவற்றுடன் இணைந்து இச்சட்ட விரோத கட்டடங்களை அகற்றி வருகின்றனர்.
பொது மக்களுக்கு சிரமம் ஏற்படுத்தும் வகையில் அல்லது சூச்சகமான முறையில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியின்றி ஒரு கட்டிடத்தையோ அல்லது ஒரு நிரப்பப்பட்ட காணியையோ பலாத்காரமாக கைப்பற்றிருப்பின் இன்று (27) முதல் இயங்கும் விசேட கருமபீடத்துக்கு இது பற்றி அறியத்தருமாறு பொலிஸ் மா அதிபர் பொது மக்களை கேட்டுள்ளார்.
இரகசியப் பொலிஸை சார்ந்ததாக அமைக்கப்பட்டுள்ள இந்த விசேட கருமப்பீடத்தின் தொலைபேசி இலக்கம் 1933 ஆகும். இந்த கருமபீடத்துக்கு கிடைக்கும் முறைப்பாடுக ளை இரகசியப் பொலிஸார் ஆராய்வார்கள்

ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு

 வரிசையாக தமிழ் திரைப்படங்கள் உத்திக்கொள்வதால் ஏற்கனவே நடுங்கி போய உள்ள சினிமாக்காரர்கள்  வெளிநாட்டு தமிழ் விசில் அடிச்சான் குஞ்சுகளை பகைத்து கொள்ள விரும்பவில்லை


இலங்கை திரைப்பட விழாவில் எப்படியாவது பங்கேற்க வேண்டும் என்று ரஜினிக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே ரகசிய தூது அனுப்பினார். ஆனால் அதை அவர் வந்த வேகத்திலேயே தூக்கி எறிந்தார், என்று கவிஞர் தாமரை தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வாரம் துவங்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது இந்தியாவின் முதல் நிலைக் கலைஞர்களைப் பங்கேற்க வைத்துவிட வேண்டும் என்பதில் கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது இலங்கை அரசு. ஆனால் இதற்கு தமிழ் திரையுலகம் மசியவில்லை.

சீமானின் நாம் தமிழர் இயக்கம் மற்றும் தமிழ் திரையுலகம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி இந்த விழாவின் தூதராக இருந்த அமிதாப் அந்தப் பதவியிலிருந்தே விலகிக் கொண்டார். அந்த விழாவுக்குப் போகமாட்டேன் என்றும் கூறிவிட்டார். புதிய தூதராக சல்மான் கான் பொறுப்பேற்றுள்ளார்.

அமிதாப் குடும்பத்திலிருந்து அபிஷேக், ஐஸ்வர்யா ராய் என யாருமே இந்த விழாவில் பங்கேற்க மாட்டோம் என் அறிவித்துள்ளனர்.இந் நிலையில், உலகம் முழுவதும் தமிழ் ரசிகர்களைக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை இந்த விழாவுக்கு வருமாறு இலங்கை அரசு சார்பில் சென்னையில் உள்ள இலங்கை தூதரகம் அழைப்பிதழ் கொடுத்தது.

பொதுவாக, ஒரு மரியாதைக்காகவாது இதுபோன்ற அழைப்பிதழ்களைப் பெற்றுக் கொள்ளும் ரஜினி, இந்த அழைப்பிதழைப் பெறவும் மறுத்துவிட்டார். அவரது அலுவலகமும் இந்த அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளவில்லை. இந்தச் செய்தி வெளியில் தெரிந்த பிறகுதான், தமிழ் திரையுலகம் வேகத்துடன் செயல்பட்டு விழாவைப் புறக்கணிக்க வேண்டுகோள் விடுத்தது.

இந் நிலையில் அதிபர் ராஜபக்சேவே ரகசியமாக தூது அனுப்பியுள்ளார் ரஜினிக்கு. எப்படியாவது இந்த விழாவில் ரஜினி பங்கேற்க வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் ராஜபக்சே லைனுக்கே வராத ரஜினி, அவரது அழைப்பையும் எடுத்த எடுப்பில் புறக்கணித்து, இனியொரு முறை இதுபற்றிப் பேசவோ யாரும் தன்னைத் தொடர்பு கொள்ளவோ வேண்டாம் என்று வேகமாகக் கூறியுள்ளார்.


இதுகுறித்து ரஜினியின் அலுவலகத்தில் நாம் தொடர்பு கொண்டபோது, "இலங்கைத் தரப்பில் யார் தொடர்பு கொண்டாலும் அதற்கு பதிலளிக்கவோ, பெரிதாக ரியாக்ட் பண்ணவோ வேண்டாம் என்று ரஜி்னி கூறிவிட்டார் என்றனர்.

 சந்திரமுகி படத்திற்கு பின்பு ரஜனியால் ஒரு உருப்படியான வெற்றிப்படத்தை கொடுக்க முடியவில்லை. அவரது சிவாஜி படம் பல இடங்களில் தோல்வி கண்டது ஆனால் அதை பணத்தை கொடுத்து சத்தம் இல்லாமல் சமாளித்து விட்டார்கள். வெளிவரப்போகும் இந்திரன் ஊத்திக்கொள்ளப்போவதாக இப்போதே பலரும் கூறுகிறார்கள் இந்த நிலையில் அண்மையில் வெளிவந்த படங்களில் பெருவெற்றி அடைந்த படங்கள் உண்மைகள் அங்காடித்தேருவும் பையாவும் தான். பேராண்மை போன்ற ஐந்தாறு படங்கள் போட்ட முதலை காப்பற்றிவிட்டன. மிகுதி நூற்றி எழுபதுக்கு மேற்பட்ட படங்கள் பப்படமாகி விட்டன. இந்த நிலையில் ஜனாதிபதியின் அழைப்பை வேறு ஏற்றுக்கொண்டால் ஒட்டு மொத்த தமழ் சினிமாவுக்கும் கோவிந்தா தான் என்று ரஜனியும் ஏனைய கோடம்பாக வியாபாரிகளும் முடிவெடுத்து விட்டன. வெளிநாட்டு வெங்காயங்களே தமழ் சினிமாவை காப்பற்றுங்கள்

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமிழ்மொழியிலும் கருமங்கள் இடம் பெறும்.

அனைத்து பொலிஸ் நிலையங்களிலும் தமிழ்மொழியிலும் கருமங்கள் இடம் பெறும்.  இதற்காக விஷேட மொழிப் பயிற்சிகள் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளன.      மேலும் ஆள்கடத்தல்,      கப்பம் கோரல்,    போதைப்பொருட்கள் கடத்தல் உட்பட பாரியளவிலான சட்டவிரோதசெயற்பாடுகளை கட்டுப்படுத்த விஷேட பாதுகாப்பு    நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக    பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய தெரிவித்தார்.
பாரியளவிலான    சட்டவிரோதச் செயற்பாடுகளுக்கு கறுப்புநிறக் கண்ணாடிகளுடனான வாகனங்களும்,    மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவுசெய்யபடாது      » செசி »    இலக்கங்களுடன் போக்குவர த்தில்     ஈடுபடுத்தப்படும் வாகனங்களே பயன்படுத்தப்படுகின்றன.
எனவே, வாகனங்களில் பொருத்தப்பட்டுள்ள கறுப்பு நிறக் கண்ணாடிகளை அகற்றவும்,    வாகனங்களை முறையாகப் பதிவுசெய்வதற்கும் ஒரு வாரகால அவகாசம் வழங்கப்படும்.            இக் காலப்பகுதிக்குள் கறுப்புக் கண்ணாடிகள் அகற்றப்படாத வாகனங்களும்,    முறையாகப் பதிவுசெய்யப்படாத வாகனங்களும் பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டு அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டிலேயே பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரிய மேற்கண்டவாறு கூறினார்.
அவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,                    சகல இன மக்களுக்கும் ஏற்றவகையில் பொலிஸ் சேவையை நகரத்திலிருந்து கிராமிய மட்டம் வரை விஸ்தரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.         இந்த விஸ்தரிப்பின் ஊடாக சட்டவிரோதச் செயற்பாடுகளை பாரியளவில் கட்டுப்படுத்த    முடிவதுடன்,      பொது மக்களுக்கு சிறந்த சேவையினையும் வழங்கமுடியும்.
தமிழ்மொழி மூலமான சேவையை பொது மக்களுக்கு வழங்கத் தேவையான     தமிழ்மொழி அறிவு பொலிஸாருக்கு வழங்கப்படுவதுடன், கூடுதலாக சிறுபான்மை இனமக்களை பொலிஸ் சேவையில் ஈடுபடு த்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.             மேலும் பொலிஸாரின் ஒழுக்க நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு: மத்திய அமைச்சரவையில் கருத்து வேறுபாடு

சாதிவாரி கணக்கெடுப்பது தொடர்பாக முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை நிறுத்தி வைத்துள்ளது.

பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு விஷயத்தில் எழுப்பப்படும் சட்டக் கேள்விகளுக்கு பதிலளிக்க வசதியாக நாடு முழுவதும் சாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளும், லாலு பிரசாத், முலாயம் சிங் போன்ற தலைவர்களும் மத்திய அரசை கோரி வருகின்றனர்.

இதையடுத்து இது தொடர்பாக ஆலோசனை நடத்த பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் முக்கிய அமைச்சர்கள் கூட்டம் நடந்தது.

இக் கூட்டத்தில் சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, மாற்று எரிசக்தித் துறை அமைச்சர் பரூக் அப்துல்லா உள்ளிட்டோர் சாதிவாரி கணக்கெடுப்புக்கு ஆதரவாகப் பேசியதாகத் தெரிகிறது.

ஆனால், இதற்கு ஆனந்த் சர்மா, முகுல் வாஸ்னிக் போன்ற அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, இப்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடந்த பின்னர், மக்களுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் திட்டத்துக்காக நடத்தப்படும் சென்சஸ் பணியின்போது சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தலாம் என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாகத் தெரிகிறது.

இக் கூட்டத்தில் ஒருமித்த கருத்து ஏற்படாததால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது தொடர்பான முடிவெடுப்பதை மத்திய அமைச்சரவை ஒத்தி வைத்துள்ளது.

மேலும் இவ்விவகாரத்தை பிரணாப் முகர்ஜி தலைமையில் அமைச்சரைக் குழுவை அமைத்து விவாதிக்கலாம் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சாரிவாரி கணக்கெடுப்புக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆதரவு தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது. பாஜகவும் இதை ஆதரிக்கிறது. ஆனால், ஆர்எஸ்எஸ் கடுமையாக எதிர்ப்பதால் தனது முடிவை பாஜக மாற்றிக் கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

நாட்டில் கடைசியாக சாதிவாரி சென்சஸ் 1931ம் ஆண்டில் தான் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியாவின் 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மட்டுமே 50 விமானங்கள்

மும்பை: உரிய நேரத்தில் சம்பளம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன் வைத்து ஏர் இந்தியா ஊழியர்கள் நேற்று தொடங்கிய திடீர் வேலை நிறுத்தம் காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டது.

இந்தியா முழுவதும் சுமார் 20 ஆயிரம் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்காரணமாக இதுவரை ஏர் இந்தியாவின் 76 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று மட்டுமே 50 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் உள்பட முக்கிய நகரங்களில் விமான போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதையடுத்து மத்திய விமான போக்குவரத்து மந்திரி பிரபுல் படேல், ஊழியர் சங்க பிரதிநிதிகளுடன் பேச்சு நடத்தினார். அதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதையடுத்து ஸ்டிரைக்கில் ஈடுபட்ட 18 ஊழியர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டனர். ஆனாலும் அரசின் எச்சரிக்கையையும் மீறி விமான ஊழியர்கள் தொடர்ந்து ஸ்டிரைக்கில் ஈடுபட்டதால் இன்றும் விமானங்களை ரத்து செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இன்று இந்தியா முழுவதும் 76 விமான சேவைகள் நிறுத்தப்பட்டன.

டெல்லியில் 24, மும்பையில் 37, கொல்கத்தாவில் 6, பெங்களூரில் 2 விமானங்கள் ரத்தாகி உள்ளன. சென்னையில் இருந்து சிங்கப்பூர், கோலாலம்பூர், மும்பை, கோவை, புவனேசுவர், பெங்களூர், திருவனந்தபுரம், கொச்சி நகரங்களுக்கு செல்லும் 7 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

மேலும் பல விமானங்களை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந் நிலையில் இந்தப் போராட்டம் சட்ட விரோதமானது என்று டெல்லி உயர் நீதிமன்றம் இன்று மாலை அறிவித்துள்ளது. இதையடுத்து வேலை நிறுத்தம் இரவில் முடிவுக்கு வந்துள்ளது. ஆனாலும் பாதிக்கப்பட்ட சேவைகள் சீராக பல நாட்களாகும் என்று தெரிகிறது.

பதிவு செய்தவர்: அஅ லாலி
பதிவு செய்தது: 27 May 2010 12:30 am
நான் திரும்பவும் சொல்லுகின்றேன் எந்த அணியை தொட்டால் அரசுக்கு பிரட்சனை வருமோ அந்த அணி நினைத்ததை சாதித்துக்கொள்வது வாடிக்கையாகிவிட்டது. aa lali

பதிவு செய்தவர்: சுப்பு
பதிவு செய்தது: 27 May 2010 12:11 am
air இந்திய விமானம்களை வெளி நாட்டுக்கு வித்துர்டுங்கட நாயளே !

மு.க.ஸ்டாலினை வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் யாரும் வரவில்லை

மதுரை: நேற்றிரவு விமானம் மூலம் மதுரை வந்த​ துணை முதல்வர் மு.க.ஸ்டாலினை வரவேற்க மதுரை திமுக பிரமுகர்கள் யாரும் வரவில்லை. அதிகாரிகள் மட்டுமே அவரை வரவேற்று அழைத்துச் சென்றனர்.

திருநெல்வேலியில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க ஸ்டாலின் இரவு 8.30 மணிக்கு விமானத்தில் மதுரை வந்தார். அவருடன் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்,​​ தங்கம் தென்னரசு ஆகியோரும் வந்தனர்.​

அவர்களை வரவேற்க முன்னாள் அமைச்சர் பொன்.முத்துராமலிங்கம்,​​ முன்னாள் மாநகர் மாவட்டச் செயலாளர் வ.வேலுச்சாமி ஆகியோர் மட்டுமே வந்திருந்தனர்.

ஆனால்,​​ இப்போதைய மதுரை பகுதி திமுக மாவட்டச் செயலாளர்கள்,​​ எம்.எல்.ஏக்கள்,​​ எம்.பி.க்கள்,​​ மேயர் உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள் யாரும் வரவில்லை.​

அவரை வரவேற்பதைத் தவிர்க்க திமுக மாவட்டச் செயலாளர்கள் உள்ளூரிலேயே இல்லாமல் வெளியே சென்றுவிட்டது தெரியவந்தது.

இதனால் ஸ்டாலினை மாவட்ட ஆட்சியர்,​​ மதுரை சரக டி.ஐ.ஜி.​, எஸ்.பி.​ உள்ளிட்டோர் தான் வரவேற்று அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து கார் மூலம் அவர் திருநெல்வேலி சென்றார்.
Post Comments ]
பதிவு செய்தவர்: முத்து
பதிவு செய்தது: 27 May 2010 12:44 am
கருணாநிதிக்குப் பிறகு தி.மு.க தூள் தூளாக உடைந்து நொறுங்க வேண்டும். அதை பார்த்து ரசிக்க வேண்டும். குறைந்தது பத்து ஆண்டுகளாவது அவர்கள் தலை எடுக்க முடியாதபடி ஆகவேண்டும். அழகிரி பண்ணிய கொடுமைகளுக்கு ஒன்று இரண்டு மூன்று என்று எண்ணிக்கொண்டிருக்க வேண்டும். ஆஹா ஆஹா நினைக்கவே இன்பமாக இருக்கிறதே.

பதிவு செய்தவர்: வாத்துமண்டை
பதிவு செய்தது: 26 May 2010 11:04 pm
கோரங்குகூ மவன் பெத்த நாயபயல்கள் அல்லவா, அப்படித்தான் இருப்பார்கள். கொலைகிரி அழகிரி, ரவுடி ரஷ்யன் ஸ்டாலின்!

காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்த

சென்னை: பிரசித்தி பெற்ற காளஹஸ்தி சிவன் கோவில் ராஜகோபுரம் நேற்று மாலை இடிந்து விழுந்தது.  பக்தர்கள் மத்தியில் அதிர்ச்சியை உண்டாக்கி உள்ளது. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களில், வாயு தலமாக விளங்குவது காளஹஸ்தி கோவில்.   திருப்பதிக்கு அருகில் உள்ள இக்கோவிலில் ராகு, கேது தோஷத்திற்கு பரிகார பூஜைகள் நடைபெறுவதால், தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து செல்கின்றனர். காளஹஸ்தி கோவிலின் ராஜகோபுரம் 140 அடி உயரம் கொண்டது. இதன் இடப்புறத்தில் முதல் நிலையிலிருந்து ஆறாம் நிலை வரை,  திடீரென பெரிய விரிசல் ஏற்பட்டது., கோபுரம் பிளவுபட்டது போல் காணப்பட்டது. மின்னல் வெட்டியது போல காணப்படும் இந்த பகுதியிலிருந்து சுண்ணாம்பு துகள்கள் விழுகின்றன.

சென்னையைச் சேர்ந்த ஐந்து பேர் கொண்ட நிபுணர் குழு, இக்கோபுரத்தை நேற்று முன்தினம் ஆய்வு செய்தது. கோவில் ராஜகோபுரத்திலிருந்து 200 அடி வரை யாரையும் அனுமதிக்கக் கூடாது என்றும், கோவில் வளாகத்தில் உள்ள கடைகளை உடனே காலி செய்யும்படியும் இக்குழு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்நிகழ்வு, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை ஏழு மணி அளவில் இந்த கோபுரம் இடிந்து விழுந்தது. கோபுரத்தின் அருகில் யாரும் செல்ல முடியாமல் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் யாருக்கும் பாதிப்பு ஏற்பட வில்லை. பயங்கர சப்தத்துடன் கோபுரம் இடிந்து விழுந்தது. காளஹஸ்தி முழுவதும் அந்த சப்தம் எதிரொலித்தது. கோயிலில் இருந்த பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். காளஹஸ்தியை சேர்ந்த பொதுமக்கள் உடனே கூட்டம், கூட்டமாக அங்கு விரைந்தனர்.

தமிழக தொல்லியல் துறை முன்னாள் இயக்குனர் நாகசாமி கூறியதாவது: காளஹஸ்தி ராஜகோபுரத்தை கி.பி.1510ம் ஆண்டு, கிருஷ்ண தேவராயர் கட்டினார். கோபுரத்தின் மூலப்பொருளான சுண்ணாம்பில் ஏற்படும் ஒட்டும் தன்மை குறைவு, இடி தாக்குதல், கோபுரத்தின் அடித்தளத்தில் நிகழும் மண் அரிப்பு போன்ற காரணங்களால் விரிசல் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு நாகசாமி கூறினார்.

ரோசய்யா அவசர ஆலோசனை: காளஹஸ்தி கோவிலின் தெற்கு ராஜகோபுரம் இடிந்து விழுந்தது குறித்து தகவல் அறிந்த ஆந்திர முதல்வர் ரோசய்யா, அறநிலையத் துறை அமைச்சர் வெங்கடரெட்டி மற்றும் அறநிலையத்துறை அதிகாரிகளுடன் நேற்று இரவு ஐதராபாத்தில் அவசர ஆலோசனை நடத்தினார். "ராஜகோபுரம் இடிந்து விழுந்ததில், அறநிலையத் துறை அதிகாரிகளின் அலட்சியம் ஏதும் இல்லை' என, அமைச்சர் வெங்கட ரெட்டி நிருபர்களிடம் தெரிவித்தார். காளஹஸ்தி கோவில் கோபுரம் இடிந்து விழுந்த தகவல் கிடைத்தவுடன் சித்தூர் மாவட்ட கலெக்டர் சேஷாத்ரி, அங்கு சென்று இடிபாடுகளை அகற்றும் பணியை மேற்பார்வையிட்டார். போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு மீட்பு நடவடிக்கை மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். கோபுரத்தின் இடிபாடுகளில் எவரும் சிக்கிக் கொண்டதாக இதுவரை தெரியவில்லை என, கலெக்டர் தெரிவித்தார். காளஹஸ்தி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், இடிந்து விழுந்த ராஜகோபுரத்தை பார்த்துச் சென்ற வண்ணம் உள்ளனர்.