
கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா. உத்தரப் பிரதேசத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கக் காரணமான கலவரம் தொடர்பாக பாஜக எம்எல்ஏ சுரேஷ் ராணா கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தக் கலவரம் தொடர்பாக பகுஜன் சமாஜ் கட்சியின் எம்.பி. காதிர் ராணா, அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் நூர் சலீம், மெüலானா ஜமீல், பாஜக எம்.எல்.ஏ.க்கள் சங்கீத் சோம், பர்தேந்து சிங், காங்கிரஸ் தலைவர் சயீத் உஸ்மான், பாரத விவசாயிகள் சங்கத் தலைவர் நரேஷ் திகாயத் மற்றும் சமூகத் தலைவர்கள் உள்பட 16 பேரைக் கைது செய்ய முசாஃபர்நகர் நீதிமன்றம் புதன்கிழமை வாரண்ட் பிறப்பித்தது.