சனி, 28 ஜூலை, 2012

A WATER powered car now in Pakistan தண்ணீரில் ஓடும் கார்




 பெட்ரோலுக்கு பதில் வாகனங்கள் தண்ணீரில் ஓடினால் எப்படி இருக்கும் என்று அனைவரும் விளையாட்டாக சொல்வது உண்டு. அதை உண்மையாக்கும் வகையில் தண்ணீரில் கார் ஓட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.  

அனைவரின் கனவையும் நனவாக்கி அபார சாதனை படைத்தவர் பெயர் வாக்கர் அகமது. பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர். பொதுவாக வாகனங்களை பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் மூலம் இயக்க முடியும். ஆனால், அவற்றை தண்ணீர் மூலம் இயங்க வைக்க வாக்கர் அகமது தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்படி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார் ஒன்றை தயாரித்தார். < அதை பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் முன்னிலையில் வெற்றிகரமாக ஓட்டி காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார். இவர் வடிவமைத்த அந்த கார் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்க கூடியது. அதற்கு தகுந்தபடி கார் என்ஜினை மாற்றி அமைத்துள்ளார். அதற்குள் ஊற்றப்படும் தண்ணீர் கொதித்து அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் வாயு மூலம் கார் இயங்குகிறது. ஒரு லிட்டர் தண்ணீர் மூலம் 1000 சி.சி. திறன் கொண்ட கார் 40 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளை 150 கி.மீட்டர் தூரம் இயக்க முடியும் என பொறியாளர் வாக்கர் அகமது தெரிவித்துள்ளார்.

பெரியார் திராவிடர் கழக பிளவு தவிர்க்க முடியாது

பெரியார் திராவிடர் கழக பிரிவு: ஒருமுறை ‘அவர்களை’ பற்றியும் யோசியுங்கள்!

Viruvirupu
அரசியலுக்கு அப்பால் நின்று, தமிழர் நலன் குறித்த விஷயங்களில் கவனம் செலுத்திவந்த அமைப்பான பெரியார் திராவிடர் கழகத்தில் பிளவு ஏற்படுவது தவிர்க்க முடியாது என்று கூறப்படுகிறது.
அமைப்பின் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் ஆகியோர் தலைமையில் ஒரு அமைப்பும், மற்றொரு பொதுச்செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் தலைமையில் மற்றொரு அமைப்பும் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது கொளத்தூர் மணி, விடுதலை ராசேந்திரன் ஆகியோர் பெரியார் தி.க. தொண்டர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், தோழர் கோவை ராமகிருஷ்ணன் அணியினருக்கும், நமக்குமிடையே கடந்த பல ஆண்டுகளாகவே நிலவிவரும் கருத்து வேறுபாடுகள் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

கல் மரம் 3000 கோடி வருசத்துக்கு முந்தி வாழ்ந்த ஒரு மரம்

பல இடங்கள் நமக்கு பக்கத்திலேயே இருக்கும் ஆனால் மற்றவர்கள் சொல்லி தான் நமக்கு தெரியும். தெரியும் போது 'அட' என்று நினைப்போம். அப்படி பட்ட இடம் ஒன்று சென்னைக்கு அருகிலேயே இருக்கிறது. 
ஆம், சென்னைக்கு பக்கத்தில…. ஒரு 100 கிலோ மீட்டர்ல…. இருக்கும் ஒரு மர்மமான இடம் பற்றிய தகவலே இது….

அப்படியா, என யோசிப்பவருக்கு…. ஒரு கேள்வியுடன் தொடங்குவோமே…
உலகம் தோன்றி எவ்வளவு காலமாச்சு
அது இருக்கும், கோடி வருசங்களுக்கு மேல…
ம்… அப்படி 3000 கோடி வருசத்துக்கு முந்தி, வாழ்ந்த ஒரு மரம் இப்ப இருக்குது….பெரும்பாலான சென்னை வாசிகளுக்கும் ஏன் பாண்டிச்சேரி வாசிகளுக்கும் கூட தெரியாம ஒரு கிராமத்துக்குள்ள இன்னும் இருக்குது… இத்தனைக்கும் இந்த மரங்களை நாம் பார்க்கலாம், ஃபோட்டா எடுத்துக்கலாம்…. ஏன் தொட்டுக் கூட பாக்கலாம்…

Beer தமன்னா, டாப்ஸி, அனுஷ்கா, சோனியா அகர்வால் குடிக்க அல்ல குளிக்க

இப்போல்லாம் கோலிவுட் நடிகைகளின் விருப்பக் குளியல் எது தெரியுமா...?! பீர் குடித்தால் மட்டும் போதை ஏறாது பீர் கொண்டு கூந்தலை அலசும் பெண்களைக் கண்டாலே இனி ஆண்களுக்கு போதை ஏறினாலும் ஆச்சரியமில்லை. அந்த அளவிற்கு தலைக்கு பீர் ஊற்றி குளிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாம். கோலிவுட் நாயகிகள் பலரும் இப்போது தலைக்கு பீராபிஷேகம்தான் செய்துகொள்கின்றனர் என்றும் தெரியவந்துள்ளது.

ஸ்ரேயாவின் Mid Night Children Toronto திரைப்பட விழாவில்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper


* தீபா மேத்தாவின் படத்தில் நடிக்கும் ஸ்ரேயாவின் ‘மிட்நைட்ஸ் சில்ரன்’, ஸ்ரீ தேவி ரீஎன்ட்ரி ஆகி இருக்கும் ‘இங்லிஷ் விங்லிஷ்’ ஆகிய இரு படங்களும் டொரன்டோவில் நடக்கும் திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.

நீதிமன்ற புறக்கணிப்பு? நியாயமான காரணங்கள் தென்பட வில்லை

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரிப்பு தரமான சட்டக் கல்வியே தற்போதைய தேவை!


சென்னை, ஜூலை.27- இந்தியாவில் தரமான சட்டக் கல்வி கற்றுத் தரப் படுவதே இப்போதைய தேவையாக இருக்கிறது என்று உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஏ.ஆர். லட்சுமணன் பேசினார்.
சென்னை உயர்நீதிமன் றத்தின் 150-ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சிகளின் தொடர்ச் சியாக, பெண் வக்கீல்கள் சங்கத்தின் சார்பில் சொற் பொழிவு நிகழ்ச்சி நடத்தப் பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் தலைமை தாங்கினார்.
நிகழ்ச்சியில் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணன் பேசிய தாவது:-
பெண்களுக்கு எதி ரான குற்ற வழக்குகளால் இந்திய நீதிமன்றங்கள் நிரம்பி வழி கின்றன. வரதட்சணைக்காக பெண்ணை தீவைத்து கொலை செய்தல் போன்ற குற்றங்கள் சர்வ சாதாரண மாகி தடையில்லாமல் வளர்கின்றன.

வளர்ந்த நாடுகளில் 5% கருக்கலைப்புகள்தான் நடைபெறுகின்றன

கருக்கலைப்பு – சரியா தவறா?" 
 எந்தச் சாதனங்களும் பயன்படுத்தாமல், உறவில் ஈடுபட அழைக்கும்போது பெண் அதை வேண்டாம் என்று நிராகரிக்கும் சுதந்தரம் எத்தனை பேருக்கு இங்கே இருக்கிறது?
கமலிக்குத் திருமணம் ஆகி ஓராண்டு ஆகியும் குழந்தை இல்லை என்று மருத்துவரிடம் சென்றனர். சில மாத சிகிச்சைக்குப் பிறகு கரு உண்டானது. எல்லோருக்கும் சந்தோஷம். எதை வாயில் வைத்தாலும் குமட்டிக்கொண்டு வந்தது. தண்ணீரைக் கூட குடிக்க முடியவில்லை. சோர்ந்து போனாள். அம்மா வீட்டில் ஓய்வெடுக்கட்டும் என்று ஊரில் விட்டு வந்தார் கணவர். பத்து நாள்களில் வாந்தி நின்றது. சாப்பிட முடிந்தது. வயிற்றில் அசௌகரியம் ஏதும் தெரியவில்லை. தூங்கி எழும்போது தலைச் சுற்றல் இல்லை… விஷயம் தெரியாத கமலி மகிழ்ந்தாள். அம்மாவிடம் சொன்னாள். உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்றார் அம்மா. கரு இறந்துவிட்டது. உடனே சுத்தம் செய்யவேண்டும் என்றனர். கணவருக்குத் தகவல் போனது. மறுநாள் காலை கரு வெளியேற்றப்பட்டது. தாய்மையை உணரவைத்த அந்த முதல் கரு வெளியேறியதில் உடைந்துபோனாள் கமலி. இந்த நேரத்தில் ஆறுதல் சொல்ல வரவேண்டிய அவளுடைய கணவனும் வரவில்லை. ஓராண்டு கரு உருவாகாததற்குச் சொன்ன காரணத்தையே கரு இறந்துபோனதற்கும் சொன்னார் கணவர். என் குழந்தையைக் கொன்றவளுக்கு இனி இந்த வீட்டிலும் என் மனதிலும் இடமில்லை என்றார்.

போதிதர்மனின் வரலாறு பல மர்மங்களை கொண்டது


போதி தர்மர் / அத்தியாயம் 1
தமிழகத்தின் அரசியல் வரலாறு என்பது பெரும்பாலும் சேரர், சோழர், பாண்டியர் வசமிருந்துதான் ஆரம்பிக்கிறது. கி.பி. மூன்றாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதி அது. மூவேந்தர்களும் வெளிநாட்டு வணிகத்தால் செல்வச் செழிப்புடன் திகழ்ந்த நேரம். யவனர்கள், அரேபியர்கள், சீனர்கள், வட இந்தியர்கள் என பெரும் வணிகக் கூட்டம் இங்கிருந்து இஞ்சி, மிளகு, இலவங்கம், பருத்தி போன்ற வாசனை பொருட்களை தங்கள் நாட்டுக்கு அள்ளிச் சென்றனர். பதிலுக்கு சர்க்கரை, தங்கம், வெள்ளி, பட்டு, உயர்ரக மது, அழகிகள், குதிரைகள் என்று கொட்டிக் கொடுத்தனர். தேனை வண்டு பார்த்துக்கொண்டா இருக்கும்! தமிழகத்தின் செழிப்பு பிற தேசங்களின் கண்களை உறுத்தின. இப்படியே செழிப்பாக போய்க்கொண்டிருக்கையில்தான் இந்தத் தென்பகுதியில் தொடர்ச்சியான அயல்நாட்டுப் படையெடுப்புகள் எழுந்தன.
எதிர்பாராத பல்லவர் படையெடுப்பு மூவேந்தர்களின் எல்லையைச் சற்று சுருக்கியது. பல்லவர்கள் தொண்டை மண்டலத்தைச் சிறிது சிறிதாக கைப்பற்றத் தொடங்கியிருந்தனர். அந்த சமயத்தில்தான் திடீரென்று களப்பிரர்களின் கை ஓங்கியது. தொண்டை நாட்டைச் சேர்ந்த காடுகளில் வசித்த கள்வர்களே களப்பிரர் என்பது ஒரு கூற்று. ல்லை இவர்கள் தமிழர்களே என்பது மற்றொரு சாராரின் கருத்து.
இங்கு நமக்கு என்ன தேவையென்றால், இவர்கள் பௌத்த, சமண சமயங்களைச் சார்ந்தவர்களாக இருந்தனர் என்பது மட்டுமே.

Air Cells Maxis மாறன் சகோதரர்கள் ரூ. 549 கோடி லஞ்சம் பெற்றனர்-

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த விவகாரத்தில் முன்னாள் மத்திய தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் தயாநிதி மாறன், அவரது சகோதரர் கலாநிதி மாறன் ஆகியோர் ரூ.549 கோடி லஞ்சம் வாங்கியுள்ளதாக சிபிஐ குற்றம் சாட்டியுள்ளது. 
 இது தொடர்பாக இருவர் மீதும் விரைவிலேயே சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது. மலேசியாவை சேர்ந்த மேக்சிஸ் நிறுவனத்திற்கு சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்தின் பங்குகளை கட்டாயப்படுத்தி விற்கச் செய்ததன் மூலம் 547 கோடி ரூபாய் அளவுக்கு முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் மற்றும் அவரது சகோதரரும், சன் டிவி உரிமையாளருமான கலாநிதி மாறன் ஆகியோர் பலனடைந்ததாக சிபிஐ கூறியுள்ளது.

இந்த விவகாரத்தில் ஏற்கனவே மாறன் சகோதரர்கள், மேக்சிஸ் நிறுவன தலைவர் அனந்த கிருஷ்ணன், ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் மேக்ஸிஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மூத்த அதிகாரி ரால்ஃப் மார்ஷல், சன் டைரடக்ட் டிவி, ஆஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் மற்றும் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வெள்ளி, 27 ஜூலை, 2012

பிரபலமானார்கள், தலைவரானார்கள், காற்றில் கத்தி சுத்தினார்கள்;

சிலரும் சில அமைப்புகளும் அணு உலை எதிர்ப்பு, சுற்றுச் சூழல் பிரச்சினையை மட்டும் பேசுகிறார்கள். இன்னும் சிலரோ இலங்கை பிரச்சினையைத் தவிர வேறு எதை குறித்தும் பேச மறுக்கிறார்கள் பெரியார், அம்பேத்கர் போன்ற ஒப்பற்ற தலைவர்களைகூட விமர்ச்சிக்கிறார்களே ஏன்?
-நீ. கதிர்வேலு
‘ஜாதி கொடுமை, பெண்கள் மீதான வன்முறை, கொலை, கொள்ளை, மோசடி இவை எல்லாத்தையும் விட உலகத்திலேயே மிக கொடுமையானது, கேவலமானது மிகப் பெரிய தப்பு; அடுத்தவன் பொண்டாட்டி மேல ஆசை படறதாங்க… அந்த தப்ப செய்றவனை மன்னிக்கவே கூடாது’
என்று ஒருவன் ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தான் என்றால், அவனுக்கு ரொம்ப அழகான பொண்டாட்டி இருக்கான்னு அர்த்தம்.
அவனுடைய இந்த நல்லொழுக்க போதனை தன் சொந்த ‘பாதுகாப்பி’ லிருந்தே எழுகிறது…
அதுபோல், ‘உலகத்திலேயே மிக கொடுமையானது குழந்தை தொழிலாளர் முறைதாங்க..’என்பவர் அதற்காக நிதி பெறுபவராக இருப்பார். ‘அத விட சுற்றுச் சூழல் சீர்கேடுதாங்க மிகக் கொடுமையானது’ என்பவரோ டாலர்களின் கவனிப்பில் சேவை செய்பவராக இருப்பார். இயற்கை வேளாண்மையை மட்டுமே ஒருவர் பொழுதன்னைக்கும் பேசுறாரு என்றால், அவருக்கு பொழப்பே அதனால்தான்.
இதுபோலவே இலங்கை பிரச்சினையை ஒன்றை தவிர வேறு எதையும் பேசாதவர்கள்; ஜாதி எதிர்ப்பு உட்பட பல பிரச்சினைகளையும் பேசுபவர்களை இழிவாக விமர்சிப்பவர்கள்; வெளிநாடு வாழ் மிக குறிப்பாக அமெரிக்கா, கனடா, அய்ரோப்பா, ஆஸ்திரேலியா போன்ற பணக்கார நாடுகளில் வாழும் தமிழர்களின் அன்பையும் அரவணைப்பையும் பெற்றவர்களாகவும் பெறத் துடிப்பவர்களாகவும் இருப்பார்கள்.
அப்படி வெளிநாட்டில் இருந்து ‘உதவி’ செய்கிறவர்களுக்கு பெரியாரை பிடிக்கவில்லை என்றால், பெரியாரை தமிழன விரோதி என்று சொல்லவும் தயங்க மாட்டார்கள்.

ஓட்டை பஸ்... பலமுறை பெற்றோர்கள் புகார் கூறியும் கண்டு கொள்ளாத ஜியோன் பள்ளி!

 Several Representations Were Made To The Zion School
சென்னை: ஸ்ருதியின் உயிரைப் பறித்த பேருந்தில் ஓட்டை இருப்பது குறித்தும், பேருந்து தகுதியில்லாத நிலையில் இருப்பது குறித்தும் ஏற்கனவே பலமுறை பெற்றோர்கள் தரப்பில் பள்ளி நிர்வாகத்திடம் புகார் கூறியதாகவும், ஆனால் அதை ஜியோன் பள்ளி நிர்வாகம் பொருட்படுத்தவில்லை என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஸ்ருதி ஏற்கனவே ஒருமுறை இதே ஓட்டையில் விழப் பார்த்து உயிர் பிழைத்த செய்தியும் கிடைத்துள்ளது.
2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி பலியான விவகாரம் பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இந்த விவகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் தரப்பில்தான் பல தவறுகள் இருப்பதாக பெற்றோர்கள் கூறுகிறார்கள்.

DNA Test ரோஹித் N.T. திவாரியின் மகன்தான்


வயதாகும் ரோஹித் ஷேகர் என்.டி. திவாரியின் மகன்தான் என்பது டிஎன்ஏ அறிக்கையில் தெளிவாகியுள்ளது என்று டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.


காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், ஆந்திர மாநில முன்னாள் ஆளுநருமான என்.டி.திவாரிதான் தனது தந்தை எனக் கூறி ரோகித் சேகர் என்ற இளைஞர் வழக்கு தொடர்ந்தார். திவாரி இதை மறுத்து வந்தார்.
பல்வேறு முறையீட்டு மனுக்களின் மீதான விசாரணைக்குப் பின்னர், திவாரிக்கு மரபணு சோதனை நடத்த டெல்லி ஐகோர்ட் உத்தரவிட்டது. இதைஎதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீடும் ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து மே மாதம் திவாரியிடம் ரத்த மாதிரி சேகரிக்கப்பட்டு மரபணு சோதனைக்கு அனுப்பப்பட்டது. இதேபோல் அவருடைய மகன் எனக் கூறி வரும் ரோகித் சேகர் மற்றும் அவரது தாயாரிடமும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டன. இந்த பரிசோதனை அறிக்கை சீலிட்ட உறையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
இந்த அறிக்கை ஜூலை 27 திறக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது. ஆனால் மரபணு சோதனை அறிக்கையை நீதிமன்றத்தில் திறந்து படிக்கக் கூடாது என்று திவாரி டெல்லி ஐகோர்ட்டில நேற்று மனு தாக்கல் செய்தார். அவரது மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி ரேவா கேத்ரபால், சோதனை அறிக்கையை  கோர்ட்டில் திறந்து படிக்க முடிவு செய்தார்.
மரபணு சோதனையின்படி, ரோஹித் ஷேகரின் மரபணுவும், என்.டி. திவாரியின் மரபணுவும் ஒத்துப் போவதாகவும், எனவே, ரோஹித் ஷேகர் திவாரியின் மகன்தான் என்பது உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உஜ்வாலா சர்மா - என்.டி.திவாரிக்கு பிறந்தவர் ரோஹித் என்றும் டெல்லி ஐகோர்ட் கூறியுள்ளது

ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?ஆனால் விஷயம் தெரியாமல் அமுக்கி

 2 More Students Died Zion School ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைள் இறந்தனரா?

சென்னை: சர்ச்சையில் சிக்கியுள்ள சென்னை ஜியோன் பள்ளியில் ஏற்கனவே 2 குழந்தைகள் இறந்துள்ளனர் என்றும், ஆனால் விஷயம் தெரியாமல் அமுக்கி விட்டதாகவும் பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
சென்னை, சேலையூர் ஜியோன் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்து வந்த 2ம் வகுப்பு மாணவி ஸ்ருதி,தனது பள்ளிப் பேருந்தின் ஓட்டை வழியாக கீழே விழுந்து பேருந்து சக்கரம் ஏறி பரிதாபமாக உயிரிழந்தாள். இந்த சர்ச்சை பெரிய அளவில் வெடித்துள்ள நிலையில் ஏற்கனவே இப்பள்ளிக்கூடத்தில் இரு குழந்தைகள் சர்ச்சைக்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக பெற்றோர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

8 மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து ஏமாற்றிய

திருமணம் நடந்த உடனை அந்தப் பெண்களை ஒரு விடுதிக்கு அழைத்துச் செல்வான். பிறகு அவளிடமிருந்து பணம், நகைகளை சுருட்டிக் கொண்டு பறந்து விடுவான்
கேரளாவைப் பூர்வீகமாகக் கொண்ட 30 வயது ராதேஷ் சென்னையில் ஒரு ஒட்டுநராகவும் சிறு அளவிலான விளம்பர ஏஜென்சி நிறுவனம் ஒன்றை நடத்தியும் வருகிறான். இவன் நாளிதழ்களில் உடல்ரீதியாக குறைபாடுகள் கொண்ட மாற்றுத்திறனாளி பெண்களை மணந்து கொள்வதாக விளம்பரம் கொடுப்பது வழக்கம். அப்படி மாற்றுத்திறனாளி மணமகளோ, அவளது பெற்றோரோ இவனை தொடர்பு கொள்ளும் போது தான் ஒரு விளம்ரத் துறை நிர்வாகி என்றும் கூடிய விரைவில் அந்த பெண்ணை மணந்து கொள்வதாகவும் ஏற்க வைப்பான்.

FaceBook க்கின் பங்கு எதிர்பாராத சரிவு

பேஸ்புக்கின் எதிர்பாராத சரிவு! புதிய விளம்பர சேவை கவிழ்த்து விட்டதா?

Viruvirupu
பலரும் எதிர்பார்த்திராத (மிகச் சிலரே ஊகித்த) வகையில் சரிவைச் சந்தித்திருக்கிறது ஃபேஸ்புக். இவர்களது வருமான வளர்ச்சியில் வேகத் தடை போடப்பட்டுள்ளது என்பது, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள வரவு செலவு கணக்கு விபரங்களில் இருந்து தெரியவருகிறது. விபரங்கள் வெளியானதையடுத்து, பேஸ்புக் ஷேர்களின் விலை இதுவரை இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது.
பெரிய நிறுவனங்கள் அனைத்தும் தமது சார்பில் வெளியிடும் ‘வருமான எதிர்பார்ப்பு’ (financial forecast) வெளியிடுவதையே பேஸ்புக் தவிர்த்துள்ளது. இது, முதலீட்டாளர்களின் மனங்களில் கடும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பேஸ்புக் சமீப நாட்களில் துவங்கிய விளம்பர கட்டண சேவை, தமது வளர்ச்சியை உச்சத்துக்கு கொண்டு செல்லும் என எதிர்பார்த்தது அந்த நிறுவனம். ஆனால், அவர்கள் ஆரம்பித்த விளம்பர கட்டண சேவையே, அவர்களை கவிழ்த்து விட்டது என்பதே தற்போது பைனான்சியல் வட்டாரங்களில் கூறப்படும் கணிப்பு.

உலகிலேயே பெரிய Open Toilet இந்திய ரயில்வே

 Jairam Ramesh Craps On Indian Railways உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறை.. இந்திய ரயில்வே தான்: ஜெய்ராம் ரமேஷ்

டெல்லி: உலகிலேயே மிகப்பெரிய திறந்தவெளி கழிப்பறையாக இந்திய ரயில்வே விளங்குவதாக மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
மேலும் உலகிலேயே குப்பைகளின் தலைநகராக இந்தியா விளங்குவதாகவும், இதற்காக நாம் வருத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.
நிகழ்ச்சியொன்றில் பேசிய அவர், ரயில்களிலும் ரயில் நிலையங்களிலும் நிலவும் சுகாதாரமின்மை குறித்து நாம் அனைவருக்கும் தெரியும். ஒரு நாளைக்கு 1.1 கோடி பேர் பயணிக்கும் ரயில்வே தான் உலகிலேயே மிகப் பெரிய திறந்தவெளி கழிப்பறையாக திகழ்கிறது.
50,000 ரயில் பெட்டிகளில் வெறும் 436 பெட்டிகளில் தான் இப்போது பயோ-டாய்லட் எனப்படும் சுத்தமான கழிப்பறைகள் உள்ளன. மற்றவற்றின் கழிவு எல்லாமே வெளியே அப்படியே தான் வந்து விழுகிறது.

தனுஷ் ஜோடியாக அமலா பால்

கொஞ்ச நாட்களாக அமலா பால் பற்றி ஆஹா ஓஹோவென்று அவருக்கு வேண்டிய சிலர் பப்ளிசிட்டி செய்ததற்கு கைமேல் பலன் கிடைத்திருக்கிறது.
தனுஷை வைத்து சற்குணம் இயக்கும் சொட்ட வாளக்குட்டியில், அவருக்கு ஜோடியாக நடிக்க அமலா பாலிடம் பேசிக்கொண்டிருக்கிறார்களாம்.
அமலாவுக்கு தமிழில் உள்ள ஒரே படம் நிமிர்ந்து நில். வேறு படங்கள் இல்லாத நிலையில், தான் அமெரிக்கா போய் அழகைக் கூட்டிக் கொண்டு வந்த பெருமையை மீடியாவில் பரபரவென பரவவிட்டார்.
விளைவு, ஏற்கெனவே ஜோடி சேரவிருந்து கடைசியில் கைகூடாமல் போன தனுஷுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளதாம்.

சன்டிவி பங்குகள் பெரும் சரிவு CBI விசாரணை எதிரொலி

சிபிஐ விசாரணை எதிரொலி: பங்குச் சந்தையில் 40% சரிவை எட்டிப் பார்த்த சன் டிவி பங்குகள்

சென்னை: ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டு ஊழலில் முன்னாள் அமைச்சர் தயாநிதி மாறன் விசாரிக்கப்பட்டார் என்ற தகவல் வெளியான நிலையில் இன்றைய பங்குச் சந்தையின் தொடக்கத்தில் சன் டிவியின் பங்குகள் பெரும் சரிவை சந்தித்தது.
ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனின் சன் குழுமம் ரூ549 கோடி லஞ்சமாகப் பெற்றது என்பது சிபிஐ குற்றச்சாட்டு. இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தயாநிதி, கலாநிதி ஆகியோரது வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பும் தயாநிதியிடம் சிபிஐ விசாரணை நடத்தியதாக நேற்று தகவல் வெளியானது.

தளபதியை முன்னிறுத்தி அழகிரியும் ஸ்டாலினும் பனிப்போர்

 Azhagiri Vs Stalin No End Rift Dmk தூக்க' முயலும் அழகிரி.. 'காக்க' முயலும் ஸ்டாலின்: மதுரை திமுகவில் கோஷ்டி பூசல் தீவிரம்!

மதுரை மாவட்டத் திமுகவில் மீண்டும் உள்கட்சி பூசல் வெடித்துள்ளது.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ஆதரவாளரும் மாநகர் மாவட்டச் செயலாளருமான தளபதியை நீக்கக்கோரி திமுக தலைவர் கருணாநிதியிடம் மத்திய அமைச்சர் மு.க. அழகிரியின் ஆதரவாளர்கள் நேரில் சந்தித்து புகார் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஏப்ரல் மாதம் அழகிரி வெளிநாட்டில் இருந்தபோது திடீரென இளைஞர் அணி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்காக மதுரை வந்தார் ஸ்டாலின். இதையடுத்து அழகிரியின் ஆதரவாளர்கள் ஸ்டாலின் கூட்டத்தை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்தனர்.
தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருக்கும் அழகிரியை மதிக்காமல் கூட்டம் நடந்த வந்ததால் ஸ்டாலினின் கூட்டத்தைப் புறக்கணித்ததாக அவர்கள் கூறினர்.
ஆனால், மாநகர் மாவட்டச் செயலாளரான தளபதி மட்டும் வேறு வழியின்றி ஸ்டாலின் கூட்டத்தில் கலந்து கொண்டார். காரணம் இந்தக் கூட்டம் நடந்தது அவர் செயலாளராக இருக்கும் மாநகர் மாவட்டப் பகுதியில் தான்.
தனது உத்தரவையும் மீறி ஸ்டாலினின் கூட்டத்தில் பங்கேற்றதால் தளபதியை அழகிரி ஒதுக்க ஆரம்பித்தார். இத்தனைக்கும் அவரும் மிகத் தீவிரமான அழகிரி ஆதரவாளர் தான்.

நீதிபதி: மாணவி இறந்த விவகாரத்தை கொலை வழக்காக ஏன் மாற்றக் கூடாது?


 Tn Govt Should Creat New Safety Rules For School Buses
இந்தியன் படத்தில் மகன் கமலஹாசனுக்கு தந்தை கமலஹாசன் கொடுத்த தண்டனை போல இதற்கும் கொடுக்க வேண்டும் 
சென்னை பள்ளி மாணவி ஸ்ருதி இறந்த விவகாரத்தை கொலை வழக்காக ஏன் மாற்றக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பியுள்ளார்.
பள்ளி பேருந்தில் இருந்த ஓட்டை வழியே மாணவி விழுந்து இறந்த வழக்கில் இன்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையில் பள்ளிக் கல்விச் செயலர், போக்குவரத்து செயலர் ஆகியோர் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்தனர்.
இந்த விசாரணையின் போது மாணவி ஸ்ருதி சென்ற வாகனம் குறைபாடனதாக இருந்திருக்கிறது. அப்படிப்பட்ட பேருந்தை சரிபார்க்காமல் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் ஸ்ருதியின் மரணத்தை ஏன் கொலை வழக்காகப் பதிவு செய்யக் கூடாது ? என்று தலைமை நீதிபதி இக்பால் கேள்வி எழுப்பினார்.

Tamanna தெலுங்கு, இந்தி மொழி படங்களில் கவனம்


கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புதிய தமிழ் படங்களை ஏற்காமல் தெலுங்கு, இந்தி மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் தமன்னா. தமிழ் படங்களை ஒப்புக்கொள்ளாதது ஏன் என்று கேட்டபோது பதில் அளித்தார். அவர் கூறியதாவது: தற்போது தெலுங்கு படங்களில் பிஸியாக இருக்கிறேன். அவை அசத்தலான படங்கள். தமிழைப் பொறுத்தவரை நிறைய வாய்ப்புகள் வருகிறது. நல்ல கதையாக இருந்தால் கேட்கிறேன். ஆனால் எனக்கு பொருத்தமான வேடங்கள் இருந்தால் மட்டுமே ஒப்புக்கொள்வேன். தமிழ் படங்களுக்கு தகுந்த நேரம் ஒதுக்குவதில் ஆசை இருக்கிறது. தமிழ் படங்கள்தான் எனக்கு திருப்புமுனையாக அமைந்து என்னை அடையாளம் காட்டியது. தமிழில் நடிக்க விருப்பமில்லாமல் இருப்பதாக யார் கூறியது?

மருத்துவரின் தவறான சிகிச்சையால் உயிரிழந்த பெண்

சென்னை, ஜூலை 26-  உதட்டில் இருந்த பருவை அகற்றுவதற்காக மருத்துவரிடம் போன பெண், மருத்துவர் இரண்டு ஊசி போட்டவுடன் மரணமடைந்தார். இதனால் மருத்துவரைக் கைது செய்ய வேண்டும் என்று அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் அன்னை கிளினிக் என்ற பெயரில் மருத்துவர் பாலாஜி என்பவர் கிளினிக் வைத்துள்ளார். அங்கு நேற்று இரவு ஒரு பெண் சிகிச்சைக்காக வந்துள்ளார்.
அவரது உதட்டில் பரு இருந்துள்ளது. இதை சரி செய்வதற்காக அவர் கிளினிக்குக்கு வந்ததாக தெரிகிறது. அங்கு மருத்துவர் பாலாஜி, அப்பெண்ணுக்கு இரண்டு ஊசி போட்டுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் அவரது உடல் நிலை மோசமாகியுள்ளது.
இதையடுத்து அரசு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லுமாறு மருத்துவர் கூறியுள்ளார். பதறிப் போன உறவினர்கள் அருகில் இருந்த இன்னொரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அப்பெண்ணைப் பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளனர்.

மோடி தன் மீது F.I.R பதிவு செய்ய அனுமதிப்பாரா?- காங்கிரஸ் கேள்வி

 கோத்ரா சம்பவத்தில் புலன் விசாரணையை உண்மையிலேயே நரேந்திர மோடி விரும்புவதாக இருந்தால், அவர் தன் மீது எப். அய்.ஆர். பதிவு செய்ய அனுமதி அளிக்கவேண்டும்
குஜராத் மாநிலம் கோத்ராவில் 2002 ஆம்  ஆண்டு கலவரம் மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த வன்முறைச் சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்க முடியாது என்றும், குற்றம் நிரூபிக்கப்பட்டால் என்னை தூக்கில் போடலாம் என்றும் நரேந்திர மோடி  கூறியுள்ளார்.
அவரது பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கோத்ரா சம்பவத்தில் புலன் விசாரணையை உண்மையிலேயே நரேந்திர மோடி விரும்புவதாக இருந்தால், அவர் தன் மீது எப். அய்.ஆர். பதிவு செய்ய அனுமதி அளிக்கவேண்டும் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் கபில்சிபல் கூறினார்.
இது குறித்து  அவர் மேலும் கூறுகையில், ‘கடந்த 12 ஆண்டுகளாக இவ்வழக்கு தொடர்பாக முதல்வர் மீது எப்.அய்.ஆர் பதிவு செய்யப்படவில்லை. அப்படியிருந்தால் அவர் மீதான குற்றத்தை எப்படி நிரூபிக்க முடியும்? யார் அவரை தூக்கில் போட முடியும்? வரும் சட்டமன்றத் தேர்தலை மனதில் வைத்தே மோடி இவ்வாறு பேட்டி அளித்திருக்கிறார்.
தன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என்று கூறும் அவர், தன் மீதோ மற்ற அமைப்புகள் மீதோ குஜராத்தின் எந்த காவல் நிலையத்தில் எப்.அய்.ஆர் பதிவு செய்தாலும் ஆட்சேபிக்க மாட்டேன் என்று அறிக்கை விடவேண்டும்’ என்றார்

மாணவி அகிலா தற்கொலை! மாணவர்களின் CellPhone வக்கிரம்

வினவு" வர்க்க ரீதியாகவும், பாலின ரீதியாகவும் ஆணாதிக்கத்தின் வன்கொடுமைகளை அனுபவித்து வந்த பெண்களுக்கு தற்போதைய தொழில் நுட்ப புரட்சி வேறு தன் பங்கிற்கு வதைத்து வருகிறது.












பலியான மாணவி அகிலா
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியைச் சேர்ந்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த அகிலா பாலிடெக்னிக் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். அகிலாவின் மாமா மகன் எழில் என்பவரும் பாலிடெக்னிக் மாணவர்தான். இந்த உறவு அடையாளத்தை வைத்து அவர் அடிக்கடி அகிலா வீட்டிற்கு செல்வார். அப்படி ஒரு நாள் அகிலா குளிப்பதை செல்பேசியில் படம் பிடிக்கிறார். இதற்கு உதவிய இவரது நண்பர்களும் சக மாணவர்களுமான ஜெகன், வினோத் (இவர் மட்டும் பொறியியல் படிப்பவர்) முதலானோர் சேர்ந்து கொண்டு அகிலாவிடம் காட்டி அவள் பட்ட வேதனையை சைக்கோத்தனமாக ரசித்திருக்கின்றனர்.
அந்தப் பேதைப் பெண்ணோ செல்போனில் இருக்கும் படத்தை அழிக்குமாறு பலமுறை மன்றாடியிருக்கிறாள். ஆனால் வெறிபிடித்த அந்த மாணவர்களோ மறுத்திருக்கின்றனர். இதனால் மனம் உடைந்த அகிலா வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறியில் தூக்கு போட்டுத் தற்கொலை செய்து கொண்டாள்.  இறப்பதற்கு முன்னர் அவள் எழுதிய கடிதத்தில் அந்த மூன்று மிருகங்களின் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள்தான் காரணமென்று எழுதியிருக்கிறாள்.

Anna Hazare கட்சி ஆரம்பிக்கிறார் பூனை வெளியே வருகிறது

புதுடில்லி: சமூக சேவகரும், முதுபெரும் காந்தியவாதியுமான அன்னா ஹசாரே, முதன்முறையாக தனது அரசியல் விருப்பம் தொடர்பான விவரங்களை பகிரங்கமாக வெளியிட்டார். 2014 பொதுத் தேர்தலின் போது, நாடு முழுவதும் பயணம் செய்து, வேட்பாளர்களைத் தேர்வு செய்து, அவர்களுக்காக பிரசாரம் செய்யப் போவதாகவும் கூறியுள்ளார்.
செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த அவர் கூறியதாவது:
  கட்சி உதயமாகும்: வரும் 2014 பொதுத் தேர்தலின் போது, நான், நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்வேன். நல்ல வேட்பாளர்களை தேர்வு செய்து தரும்படி மக்களை கேட்டுக் கொள்வேன். அவர்களில் சிறந்தவரை வேட்பாளராக அறிவிப்பேன். பின்னர் அவர்களை வெற்றி பெறச் செய்ய, பிரசாரம் செய்வேன். மக்களிடம், வேட்பாளர்களின் பெயர்களை இணையதளத்தில் தெரிவிக்கும்படி கேட்டு, அவர்களில் சிறந்தவரை தேர்வு செய்வேன். இந்த வேட்பாளர்கள் மூலம், மக்கள் கட்சி என்ற புதிய கட்சி கூட, உதயமாக வாய்ப்பு உண்டு.

Bal Thakere: கர்நாடக சட்டசபையில் தலிபான்கள்

மும்பை: "பெல்காமை சேர்ந்த மராத்தி பத்திரிகைக்கு எதிராக, கர்நாடக சட்டசபையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்மூலம், கர்நாடக சட்டசபையில், தலிபான்கள் உள்ளனரோ என்ற சந்தேகம் எழுகிறது' என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே விமர்சித்துள்ளார்.
கர்நாடகா - மகாராஷ்டிரா மாநிலங்களுக்கு இடையே, எல்லைப் பிரச்னை உள்ளது. இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்காம் தெற்கு தொகுதி பா.ஜ., - எம்.எல்.ஏ., அபய் பாட்டீல் மறறும் குடாச்சி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஷியாம் பி.கடேஜ் ஆகிய இருவரும், கர்நாடக சட்டசபை சபாநாயகரிடம், புகார் ஒன்றை அளித்தனர். அதில், "பெல்காமில் இருந்து வெளிவரும் மராத்தி மொழி பத்திரிகையான "தருண் பாரத்'தில், ஆதாரமற்ற புகார்களுடன், எங்களின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், சில கட்டுரைகள் வெளியிடப்பட்டுள்ளன.

வியாழன், 26 ஜூலை, 2012

நடிகை சௌகந்தி: போலீசார் மட்டும் வராமல் இருந்திருந்தால்

ரோசா என ஆரம்பிக்கப்பட்டு குற்றாலமாகப் பெயர் மாற்றப்பட்ட படத்தில் நடிக்கும் புது நடிகை சௌகந்தி ரசிகர்களிடம் சிக்கிக் கொண்டார். அவரை போலீசார் வந்து மீட்க வேண்டியதாகிவிட்டது.
சஞ்சய் ராம் இயக்கத்தில் தயாராகும் ‘ரோசா' படம் தற்போது ‘குற்றாலம்' என பெயர் மாற்றப்பட்டு உள்ளது. இதில் புது நடிகை சௌகந்தி, மீனு கார்த்திகா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு குற்றாலத்தில் நடந்தது. படப்பிடிப்பு நடந்த இடத்தில் மன நலம் பாதிக்கப்பட்ட 75 வயது முதியவர் ஒருவர் ரோட்டோரம் படுத்து கிடந்தார். அவர் உடம்பில் ஆடை இல்லாமல் இருந்தது. மயக்க நிலையில் இருந்தார். முதியவரின் பரிதாப நிலையை கண்ட நடிகை சௌகந்தி, இரக்கப்பட்டு தனது புடவைகளில் ஒன்றை எடுத்து அவருக்கு போர்த்தி விட்டார்.

School Bus ஓட்டையில் மாணவி பலி: பொதுமக்கள் பேரணியாகச் சென்று அஞ்சலி


பொதுமக்களால் பஸ் தீவைத்து கொழுத்தப்பட்டது ,சுமார் ஒரு அடி அளவிலான பெரிய ஓட்டை உள்ள பேருந்துக்கு எப்படி பிட்நெஸ் சேர்டிபிகட் கொடுத்தார்கள்?

தாய் மகன் இருவரும் Police Stationஇல் மரணம் திருச்சி

 திருச்சியில் பரபரப்பு மரணம் திருச்சி திருவெறும்பூர் இல் காவல்நிலையத்தில் தாய், மகன் தற்கொலை??? அப்படிங்களா ? செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.தங்கை நகை திருட்டு தொடர்பாக அரியலூர் ராணி, மகன் ஆனந்பாபு ஆகியோரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தியதால் அவமானம் தாங்காமல் இருவரும் காவல்நிலையத்திற்குள்ளேயே தற்கொலை செய்துகொண்டனர். சயனைடு அருந்தி தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

குழந்தை இறந்தது ரூ.200 கட்டணம் செலுத்தாததால் incubator அகற்றம்

 Infant Dies As Father Can T Pay Rs பஞ்சாபில் ரூ.200 கட்டணம் செலுத்தாததால் பச்சிளம் குழந்தைக்கு எமனாக மாறிய டாக்டர்கள்



ஜலந்தர்: பஞ்சாபில்இன்குபேட்டருக்கு ரூ.200 கட்டணம் செலுத்தாததால் அதை மருத்துவர்களே அகற்றியுள்ளனர். இதனால் இன்குபேட்டரில் வைக்கப்பட்டிருந்த பிறந்து 5 நாளே ஆன பெண் குழந்தை இறந்தது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்தவர் சஞ்சீவ் குமார். பெயிண்ட் அடிக்கும் தொழிலாளி. கர்ப்பமாக இருந்த அவரது மனைவி சுனிதாவுக்கு ஜலந்தரில் உள்ள அரசு மருத்துவமனையில் கடந்த 20ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. குறைபிரசவத்தில் குழந்தை பிறந்ததையடுத்து அதை இன்குபேட்டரில் வைத்து பராமரித்தனர். குழந்தையை மேலும் சில நாட்களுக்கு இன்குபேட்டரில் வைக்க வேண்டும் என்று தெரிவித்த மருத்துவர்கள் அதற்கான கட்டணமாக ரூ.200 செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர்.
ஆனால் சஞ்சீவிடம் அவ்வளவு பணம் இல்லை. அவர் பலரிடம் கடன் கேட்டும் கிடைக்கவில்லை. இதையடுத்து தன்னிடம் பணம் இல்லை என்று அவர் மருத்துவர்களிடம் தெரிவித்துள்ளார். இன்குபேட்டர் கட்டணம் செலுத்தாததால் மருத்துவர்கள் இன்குபேட்டரை அகற்றினர். இதையடுத்து குழந்தை நேற்றிரவு பரிதாபமாக இறந்தது.

அசாம் கலவரம் உச்சக்கட்டத்தில் உள்ளது

அசாம் கலவரம்: மத்திய அரசு ‘போன்’ செய்துவிட்டு அனுப்பிய துணை ராணுவம்!

Viruvirupu
அசாமில் கடந்த வெள்ளிக்கிழமை மூண்ட இனக்கலவரம் தொடர்ந்து 6-வது நாளாக நீடிக்கிறது. கலவரத்தில் வீடுகள் உடமைகளை இழந்தவர்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, அரசு அமைத்துள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்த வண்ணம் உள்ளனர். முகாம்களில் தஞ்சமடைந்த அகதிகளின் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சத்து எண்பது ஆயிரம்.
வங்கதேசத்திலிருந்து சட்டவிரோதமாக குடியேறிவர்களுக்கும், அசாம் மாநிலத்தில் உள்ள போடோ இனத்தை சேர்ந்தவர்களுக்கும், இடையே ஏற்பட்ட கலவரம் இது. கோக்ரஜார் மாவட்டத்தில் கலவரம் உச்சக்கட்டத்தில் உள்ளது. தற்போது இந்தக் கலவரம் பக்கத்து மாவட்டங்களுக்கும் பரவியுள்ளது.

பஸ்சில் 3 பேரைக் கொன்றவர் ஏற்கனவே 25 பேரைக் கொன்ற மன நோயாளி!

சென்னை: ஆந்திராவிலிருவந்து சென்னை வந்த பேருந்தில் பயணித்த 3 பயணிகளை கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றும், ஒருவரை படுகாயப்படுத்தியும் தப்பி ஓடிய நபர் மன நோயாளி என்றும், ஏற்கனவே அவர் 25 பேரை ஆந்திராவில் கொன்றுள்ளார் என்றும் அவர் மீது இதுவரை 100க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பதாகவும் ஆந்திர போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தடா காட்டுப் பகுதிக்குள் அவர் பதுங்கியிருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அவரைத் தேடி போலீஸார் விரைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் பத்திராச்சலத்திலிருந்து சென்னைக்கு ஆந்திர மாநில அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்து நேற்று இரவு வந்து கொண்டிருந்தது. தடா பகுதியில் பேருந்து வந்தபோது திடீரென ஒரு நபர் தூங்கிக் கொண்டிருந்த பயணிகளை சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். இதில் 3 பேர் பேருந்திலேயே உயிரிழந்தனர். அவர்களுக்கு கழுத்து, நெஞ்சுப் பகுதியில் பலத்த கத்திக் குத்துக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. ரமேஷ் என்ற என்ஜீனியர் படுகாயமடைந்தார்.
சம்பவத்தைத் தொடர்ந்து பேருந்து நிறுத்தப்பட்டது. அதைப் பயன்படுத்தி கத்தியால் குத்திய நபர் பேருந்திலிருந்து இறங்கி ஓடி விட்டார்.
இந்தச் சம்பவம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் சம்பந்தப்பட்ட நபரின் பெயர் சாம்பய்யா என்று தெரிய வந்துள்ளது. இவர் ஒரு மன நோயால் பாதிக்கப்பட்ட நபர். கண்ணில் தென்படுகிறவர்களை கத்தியால் குத்தி விட்டு ஓடி விடுவார். இதுவரை 25 பேரை இவர் கொன்றுள்ளாராம். இவர் மீது 100க்கும் மேற்பட்ட வழக்குகளும் இதுதொடர்பாக தொடரப்பட்டுள்ளதாம்.

நான் ஏற்றிச் சென்ற பள்ளிக் குழந்தைகளை விட்ட பின்னரே மகள் பிணத்தைப் பார்த்தேன்-ஸ்ருதியின் தந்தை

 Shruthi S Father Wants Justice
நானும் பள்ளிப் பிள்ளைகளை அழைத்துச் செல்லும் டிரைவர்தான். எனது மகள் பள்ளிப் பேருந்திலிருந்து விழுந்து கோரமாக இறந்து போன செய்தி எனக்கு வந்ததும், நான் உடனே ஓடவில்லை. மாறாக, எனது காரில் இருந்த அத்தனை பள்ளிக் குழந்தைகளையும் பத்திரமாக அவர்களது வீடுகளில் விட்டு விட்டுத்தான் நான் எனது மகளின் பிணத்தைப் பார்க்கப் போனேன் என்று கண்ணீர் மல்கக் கூறியுள்ளார் ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன்.
முடிச்சூரைச் சேர்ந்த சேதுமாதவனின் மகள் ஸ்ருதி, சேலையூர் ஜியோன் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று மாலை பள்ளிப் பேருந்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது பேருந்தின் ஓட்டையில் விழுந்து கோரமான முறையில் பலியானாள்.
இந்த சம்பவம் குறித்து ஸ்ருதியின் தந்தை சேதுமாதவன் கண்ணீர் மல்கக் கூறுகையில், பள்ளிக்கூட நிர்வாகத்தை நம்பித்தான் பிள்ளைகளை பெற்றோர் அனுப்பி வைக்கின்றனர். எனது மகளைப் போல ஏராளமான சிறு சிறு பிள்ளைகளை இப்படிப்பட்ட வாகனத்தில் நம்பித்தான் அனுப்பி வைக்கின்றனர். அப்படிப்பட்ட நிலையில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் நன்றாக இருக்கிறதா, இல்லையா என்று பார்க்க வேண்டாமா.
நானும் பள்ளிக்குழந்தைகளை எனது ஆம்னி வேன் மூ்லம் அழைத்துச் செல்லும் டிரைவர் பணியில்தான் இருக்கிறேன். ஒவ்வொரு குழந்தையையும் எனது குழந்தை போல நினைத்துத்தான் நான் தினமும் அழைத்துச் சென்று வருகிறேன்.
நேற்று கூட பிள்ளைகளை அழைத்துக் கொண்டு வந்தபோதுதான் எனது மகள் இறந்த செய்தி எனக்கு வந்தது. ஆனால் நான் பதறிப் போகவில்லை. மாறாக, என்னை நம்பி அனுப்பி வைக்கப்பட்டிருந்த அத்தனை குழந்தைகளையும், அவரவர் வீட்டில் பத்திரமாக விட்டு விட்டுத்தான் நான் எனது மகள் உடலைப் பார்க்கப் போனேன்.
எனது மகள் சாவுக்குக் காரணமானவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மட்டுமே இப்போதைக்கு எனது ஒரே கோரிக்கை என்றார் அழுதபடி.

ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு fitness certificate


சென்னை: ஓட்டை விழுந்த பள்ளிப் பேருந்துக்கு யார் எப்சி கொடுத்தது, எப்படிக் கொடுக்கப்பட்டது என்று சென்னை உயர்நீதிமன்றம் கோபத்துடன் கேட்டுள்ளது. ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பஸ் ஓட்டை வழியாக விழுந்த பலியான சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளது. நாளை வட்டாரப் போக்குவரத்து அலுவலக அதிகாரிகள் நேரில் ஆஜராகி விளக்கம் தர வேண்டும் என்றும் அது அதிரடி உத்தரவிட்டுள்ளது.
சென்னை தாம்பரம் அருகே உள்ள முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 2வது வகுப்பு படித்து வந்த சேலையூர் ஜியோன் பள்ளி மாணவி ஸ்ருதி பள்ளிப் பேருந்தில் இருந்த ஓட்டை வழியாக கீழே விழுந்தாள். இதில் பேருந்தின் சக்கரம் தலையில் ஏறி மிகக் கொடுமையான முறையில் உயிரிழந்தாள்.
இந்த சம்பவம் மக்களிடையே கடும் கோபத்தையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று மாலையே சம்பந்தப்பட்ட பள்ளிப் பேருந்தை மக்கள் தீவைத்துக் கொளுத்தி விட்டனர்.

த்ரிஷாவுக்கு ஷாக் கொடுத்த பிரபுதேவா


நடிகை த்ரிஷா தமிழ், தெலுங்கு திரையுலகில் இருக்கும் டாப் நடிகைகளில் ஒருவர். (பிளாஷ்பேக் போல சொல்வதென்றால்) ஒரு ஆரேழு வருஷத்துக்கு முன்னாடி த்ரிஷாவை வைத்து தெலுங்கில் பிரபுதேவா எடுத்த படம் செம ஹிட். 

அந்த படத்தை தமிழில் ‘உனக்கும் எனக்கும்’ என்ற பெயரில் த்ரிஷாவையே வைத்து எடுத்த போதும் ஹிட்டோ ஹிட். (நிகழ்காலத்துக்கு வருவோம்)பல வருடங்களுக்கு பிறகு பிரபுதேவா அந்த படத்தை இந்தியில் எடுக்கிறார். த்ரிஷாவும், பிரபுதேவாவும் அவ்வப்போது பார்ட்டிகளிலும் ஒன்றாக கலந்துகொண்டு நட்பு பாராட்டிக்கொண்டே இருந்ததால் த்ரிஷா தான் இந்தியிலும் நடிப்பார் என்றே ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். 

Sex கொலம்பியர்கள் கில்லாடிகள்: சர்வே தகவல்

India No 3 World Condom Use Survey செக்ஸ் உறவில் கொலம்பியர்கள் கில்லாடிகள்: சர்வே தகவல்

உலக அளவில் கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். அதிக அளவில் இவர்கள்தான் உறவு வைத்துக் கொள்கின்றனர் என்று சமீபத்திய சர்வே ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேசமயம் பாதுகாப்பான உறவில் ஈடுபடுவதில் இந்தியா 3வது இடத்தை பிடித்துள்ளது.உலகம் முழுவதும் செக்ஸ் ஈடுபாடு குறித்து சமீபத்தில் ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. 37 நாடுகளைச்சேர்ந்த 30000 இளசுகள் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அதில் சுவாரஸ்யமான தகவல்கள் தெரியவந்தன.
உலகிலேயே கொலம்பியர்கள்தான் செக்ஸ் உறவில் கில்லாடிகளாக உள்ளனர். அதிக அளவில் இவர்கள்தான் உறவு வைத்துக் கொள்கின்றனராம். 89 சதவீதம் பேர் வாரத்திற்கு ஒரு முறை கட்டாயம் உறவு கொள்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. இதில் 2வது இடத்தில் இந்தோனேசியாவும், ரஷ்யாவும் உள்ளன.
உறவின் போது எட்டப்படும் உச்சகட்டமான ஆர்கஸத்தை அடைவதில் ஹங்கேரியர்கள்தான் முதலிடத்தில் உள்ளனர்.

பள்ளி பஸ் ஓட்டை வழியாக மாணவி விழுந்து பலி:பஸ்சை எரித்த பொதுமக்கள்

தாம்பரம்: தனியார் பள்ளி பஸ் சீட்டில் இருந்த ஓட்டை வழியாக விழுந்து, பின் சக்கரத்தில் சிக்கி இரண்டாம் வகுப்பு மாணவி இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை எரித்ததோடு, பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மறியல் செய்தனர்.
சென்னை, சேலையூர், இந்திரா நகரில் சீயோன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 6,000 மாணவ, மாணவியர் படிக்கின்றனர். பள்ளிக்கு சொந்தமாக, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் உள்ளன. இவற்றில் தினமும் மாணவர்களை அழைத்து வருவதும், விடுவதும் நடக்கிறது. இதற்காக, தனிக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. நேற்று மாலை வழக்கம் போல், முடிச்சூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களை ஏற்றிக்கொண்டு, ஒரு பஸ் சென்றது.
நசுங்கியது: இந்த பஸ்சில், டிரைவர் இருக்கைக்கு பின்னால் ஐந்தாவது இருக்கை அருகே பெரிய ஓட்டை இருந்தது. ஆனால், அதை சரி செய்யாமல் குழந்தைகளை ஏற்றிச் சென்றனர். நேற்று மாலை முடிச்சூர் பஸ் நிறுத்தம் அருகே வளைவில் திரும்பிய டிரைவர் சீமான் பஸ்சை நிறுத்தினார். அங்கு சில மாணவர்கள் இறங்கினர். பின், அங்கிருந்து பஸ் புறப்பட்ட சற்று நேரத்தில், ஐந்தாவது இருக்கையில் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்பு மாணவி முடிச்சூர், பி.டி.சி., குடியிருப்பை சேர்ந்த சேதுமாதவன் மகள் ஸ்ருதி, 4, என்ற சிறுமி, ஓட்டை வழியாக விழுந்து, பஸ் பின் சக்கரத்தில் சிக்கி, உடல் நசுங்கி இறந்தார். ஸ்ருதி ஓட்டை வழியாக விழுந்ததை பார்த்து, சக மாணவர்கள் சத்தம் போட்டனர். இதற்கிடையில் பஸ் அரை கி.மீ., தூரம் சென்று விட்டது. மாணவி பலியானதைக் கண்டு ஆத்திரமடைந்த பொதுமக்கள் பஸ்சை பின் தொடர்ந்து சென்று, மடக்கி, டிரைவரை சரமாரியாக தாக்கினர். தகவலறிந்து அங்கு வந்த ஒரு போலீசும், பொதுமக்களிடம் இருந்து, டிரைவரை காப்பாற்ற முயன்றார். ஆனால், பொதுமக்கள் விடவில்லை.

Engineering தமிழ் வழியில் படிக்க யாருக்கும் ஆர்வமில்லை

சென்னை: பொறியியல் படிப்பில், மெக்கானிக்கல், சிவில் ஆகிய இரு பாடப் பிரிவுகளை, தமிழ் வழியில் படிக்க வாய்ப்பு இருந்தபோதும், தமிழில் படித்தால் வேலை கிடைக்காது என்ற எண்ணம் உள்ளதால், இதில் சேர மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.
சேர்க்கை குறைவு: முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொறியியல் படிப்பை, தாய்மொழியான தமிழில் வழங்க வேண்டும் என்று முயற்சி எடுத்து, முதற்கட்டமாக மெக்கானிக்கல் மற்றும் சிவில் பாடப் பிரிவுகளை, தமிழ் வழியில் அறிமுகப்படுத்தினர். இந்தப் பிரிவில் சேர்ந்த மாணவர்கள், தற்போது நான்காம் ஆண்டு படிக்கின்றனர். இந்தத் திட்டத்தின் வெற்றியைப் பொறுத்து, இதர பாடப் பிரிவுகளையும் தமிழ் வழியில் அறிமுகப்படுத்த, முந்தைய ஆட்சி திட்டமிட்டிருந்தது. ஆனால், ஒவ்வொரு ஆண்டும், 40, 50 மாணவர் மட்டுமே, இந்த பிரிவில் சேர்ந்து வருகின்றனர்.

புதன், 25 ஜூலை, 2012

பயணிகளின் உயிரோடு விளையாடிய Air India

 Did Air India Risk 250 Lives With Damaged Aircraft

சேதமடைந்த விமானம்.. பயணிகளின் உயிரோடு விளையாடிய ஏர் இந்தியா!

டெல்லி: நடுவானில் கடும் அதிர்வுக்குள்ளாகி சேதமடைந்த விமானத்தை தொடர்ந்து இயக்கி பயணிகளின் உயிரோடு விளையாடியுள்ளது ஏர் இந்தியா நிறுவனம்.
இந்த மாதம் 5ம் தேதி டெல்லியிலிருந்து ஷாங்காய் சென்ற ஏர்பஸ் ரகத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமானம் நடுவானில் ஏர்-பாக்கெட் எனப்படும் வெற்றிடத்தில் பறந்தபோது கடும் அதிர்வுக்கு உள்ளானது. இதில் விமானத்திற்கு சேதம் ஏற்பட்டதோடு பல பயணிகளும் காயமடைந்தனர்.
ஆனால், இந்த விவகாரத்தை வெளியிலேயே சொல்லாமல் விமானிகள் மறைத்துவிட்டனர். இதனால் இந்த விஷயம் குறித்து சில விமான சிப்பந்திகள் மூலம் பத்திரிக்கைகளுக்குத் தகவல் கிடைத்ததையடுத்து விவகாரம் வெளியில் வந்தது.

நித்தி border cross பண்ணுகிறார் Nepal உடாக


நித்தியானந்தா சுனாவூலி பகுதியில் எல்லை பாய்கிறார்! கிரேட் எஸ்கேப் பிளான்!!

Viruvirupu

சிக்கலுக்கு மேல் சிக்கலில் உள்ள நித்தியானந்தா சுவாமிகள் திடீரென கைலாய மலைக்கு விசிட் அடிக்கப் போவதாக கூறியிருப்பதன் பின்னணியில், அவரது கிரேட்-எஸ்கேப் திட்டம் உள்ளது என்கிறார், நித்திக்கு பயண ஏற்பாடுகளை செய்து கொடுக்கும் தனியார் பயண நிறுவன செயின் ஒன்றின் அதிகாரி ஒருவர்.
வெவ்வேறு மாநிலங்களில் கிளைகள் வைத்து இயங்கும் இந்த நிறுவனத்தின் ஒரு வெளி மாநில கிளையில்தான், நித்தியின் பயண ஐட்டினரி வந்து சேர்கிறது. பயண ஏற்பாடுகளுக்கான பணம், வெளிநாட்டு வங்கி ஒன்றின் கிரெடிட் கார்ட்டின் மூலம் செலுத்தப்படுவதும் இதே கிளையில்தான்.
எமக்கு தகவல் கொடுத்த அதிகாரி, மற்றும் நாமாக திரட்டிய சில தகவல்கள் ஆகியவற்றின் அடிப்படையில், நித்தி எங்கே செல்ல திட்டமிடுகிறார் என்பதை ஓரளவுக்கு ஊகிக்க முடிகிறது. அவரது கிரேட்-எஸ்கேப் திட்டம் போய் முடியும் இடம், சாங்-மை (Chiang Mai) என்பதுதான், எமக்கு கிடைத்த தகவல்.
பனிப்படிவுகள் உள்ள இமய மலை அடிவாரத்தில் நின்று சிவனை பனிலிங்க தரிசனம் செய்யலாம் என்கிறது இந்து மதம். பனியால் மூடப்பட்ட சிவலிங்க வடிவை மலைச் சிகரத்தில் வழிபடும் முறை அது. இந்திய எல்லைக்கு உள்ளேயே பனிலிங்க தரிசனம் செய்ய முடியும் என்றாலும், தரிசிக்க கூடிய ஏரியா மிகப் பெரியது.
சீனாவுக்கு தெற்கே, இந்திய வடக்கு எல்லைப் பகுதியில் மேற்கே பாகிஸ்தான் பகுதியில் இருந்து கிழக்கு நோக்கி செல்கிறது இந்த ஏரியா. இமயமலையின் பனிலிங்க தரிசனப் பகுதி பூட்டான்வரை நீடிக்கிறது. இந்திய-பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து கிழக்கே பூட்டான் வரை செல்லுமுன், இடையே வருகிறது நேபாளம்.
இதுதான், நித்தி சுவாமிகளின் எஸ்கேப்பின் கேட்-வே!

அண்ணா பல்கலை கழகங்களை குட்டி சுவராக்கும் ஜெயலலிதா

இதுவா வளர்ச்சி? ஜெ.வுக்கு கலைஞர் கண்டனம்
 தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் 23-7-2012 அன்றைய அறிவிப்பு- 5 அண்ணா தொழில் நுட்பப் பல்கலைக் கழகங்களையும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்துடன் ஒருங்கிணைத்து ஒரே பல்கலைக் கழகமாக ஆக்கப் போகிறார்களாம்! 

தி.மு.கழக ஆட்சியினால் எடுக்கப்பட்ட முற்போக்கு முடிவுகளையெல்லாம் மாற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுகின்ற ஜெயலலிதா, மாணவர்களின் கல்வியிலும் தலையிட்டு தமிழகத்தின் வருங்காலச் சந்ததிகளைப் பாதிக்கும் செயலில் ஈடுபடுவதுதான் மிகுந்த வேதனையாக உள்ளது.

இந்த வரிசையில் தி.மு.கழக ஆட்சியிலே 5 இடங்களில் அண்ணா பெயரில் தொழில்நுட்பப் பல்கலைக்கழகங்கள் என்றவுடன், அதனால் தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள மாணவர்கள் பெருமளவுக்குப் பயன்பெறுவார்களே என்ற எண்ணம் வராமல், அண்ணாவின் பெயரை ஐந்து இடங்களில் இல்லாமல் செய்து விட்டேன், பாருங்கள் என்று செயல்படுகிறார்.

இப்படித்தான் கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்ததும் வராததுமாக சமச்சீர் கல்வித் திட்டத்தை ஏற்க முடியாது, அந்தப் பாடத் திட்டப் புத்தகங்களையெல்லாம் தூக்கியெறிய வேண்டுமென்று பள்ளிக் கல்வி பாழாகிடும் வகையிலே செயல்பட்டார்.நல்லவேளையாக நீதிமன்றம் மிகுந்த கவனத்தோடு செயல்பட்ட காரணத்தால் சமச்சீர் கல்வித் திட்டம் பிழைத்தது. 
அந்த வரிசையில்தான் தற்போது பொறியியல் உயர் கல்வியின் தரத்தை மேம்படுத்திடும் 5 அண்ணா தொழில்நுட்பப் பல்கலைக் கழகங்களையும் ஒன்றாக ஒருங்கிணைக்கப் போகிறேன் என்கிறார். மற்றவர்கள் எல்லாம் ஆக்குகின்ற முயற்சியிலே ஈடுபடுகிறார்கள் என்றால் இவர் மட்டும்தான் அழிக்கின்ற முயற்சியிலே ஈடுபடக்கூடிய ஆற்றலுடையவர் (?) என்பதை மெய்ப்பிக்க முயலுகிறாரோ? 

பெண்ணை ரயிலில் இருந்து தள்ளிவிட்ட BOYS

 Girl Thrown Of Train Resisting Molestation
 கர்நாடக மாநிலம் மட்டூர் அருகே சென்று கொண்டிருந்த யஷ்வந்த்பூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த 19 வயது அனாதைப் பெண்ணை 4 வாலிபர் ரயிலில் இருந்து கீழே தள்ளியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள வித்யாரன்யபுரத்தைச் சேர்ந்தவர் 19 வயது திவ்யா(பெயர் மாற்றப்பட்டுள்ளது). தாய், தந்தை இல்லாத அவர் தனது பாட்டியுடன் வசித்து வருகிறார். அவர் பெங்களூரில் உள்ள ஹிந்துஜா கார்மென்ட் பேக்டரியில் டெய்லராக உள்ளார். நேற்று அவர் பெங்களூரில் உள்ள கெங்கேரியில் யஷ்வந்த்பூர்-மைசூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சொந்த ஊருக்கு புறப்பட்டார்.
அவர் ரயிலில் ஏறியதில் இருந்தே 4 வாலிபர்கள் அவரை கிண்டல் செய்வதும், வம்பிலுப்பதுமாக இருந்தனர். இதையடுத்து அவர் ரயிலின் வாசல் அருகே சென்று நின்று கொண்டார். அப்போது அந்த வாலிபர்கள் அவரைப் பின் தொடர்ந்து சென்று சில்மிஷம் செய்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவர் போலீஸில் புகார் செய்வேன் என்று கூறினார்.
உடனே அந்த வாலிபர்கள் அவரை ஓடும் ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டனர். ரயில் சிம்சா ஆற்றின் மேல் உள்ள கொல்லி பாலத்தில் சென்றபோது அவரைத் தள்ளிவிட்டதால் அவர் ஆற்றுப்படுக்கையில் விழுந்தார். இதில் அவரது முதுகெழும்பு, கால்கள், தலையில் காயம் ஏற்பட்டது. இதைப் பார்த்த பயணி ஒருவர் மட்டூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து மாண்டியா போலீசார் 2 வாலிபர்களை கைது செய்தனர். அதன் பிறகு மேலும் 2 வாலிபர்கள் பாண்டவபுராவில் கைது செய்யப்பட்டனர். கைதான அக்பர், இம்ரான், ஷுபான், அகமது ஆகியோர் மைசூரில் உள்ள கல்யாணகிரியைச் சேர்ந்தவர்கள்.
காயமடைந்த திவ்யா மாண்டியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
திவ்யாவை தள்ளிவிட்டபோது ரயில் மெதுவாகச் சென்றதால் தான் அவர் உயிர் பிழைத்துள்ளார் என்று போலீசார் தெரிவித்தனர்.

மும்பை தாக்குதல் நடந்த போது 60 மணி நேரம் தொடர்ச்சியாக விழித்திருந்தேன்: அபு ஜிண்டால்


 I Did Not Sleep 60 Hours During 26 11 Attacks Abujundal
மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய போது சுமார் 60 மணி நேரம் தொடர்ச்சியாக விழித்திருந்து கண்ட்ரோல் ரூமில் இருந்து கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டே இருந்தேன் என்று அபுஜிண்டால் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறான்.
சவூதி அரேபியாவில் பதுங்கியிருந்த அபுஜிண்டால் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் டெல்லியில் தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர் .பின்னர் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீசிடம் அவன் ஒப்படைக்கப்பட்டான். மும்பை தாக்குதல் பற்றிய முழுவிவரங்களையும் மும்பை பயங்கரவாத தடுப்பு போலீசாரிடம் ஒப்புவித்திருக்கிறான் அபுஜிண்டால்.

அசோக் அமிர்தராஜின் கனரா வங்கி கணக்கில்1.60 கோடி மோசடி


சென்னை: பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜின் வைப்பு நிதியில் இருந்து ரூ.1.60 கோடி மோசடி நடந்திருப்பதை கவனிக்காமல் விட்ட கனரா வங்கிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள கனரா வங்கியில், பிரபல டென்னிஸ் வீரர் அசோக் அமிர்தராஜ் கடந்த 9.8.2010 அன்று ஓராண்டு கால வைப்பு நிதியாக ரூ.6 கோடியே 35 லட்சம் டெபாசிட் செய்திருந்தார். இதில் ரூ.95 லட்சத்திற்கு 6 டெபாசிட்டும், ரூ.65 லட்சத்திற்கான ஒரு டெபாசிட்டும் இருந்தது.
ஒராண்டு காலம் முடிந்த நிலையில், டெபாசிட் பணத்தை அசோக் அமிர்தராஜ் திரும்ப கேட்டார். ஆனால் கனரா வங்கி அதிகாரிகள் பணத்தை தராமல் இழுத்தடித்தது. கனரா வங்கிக்கு கடந்த 31.8.2011 அன்று அசோக் அமிர்தராஜ் வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை.

காஷ்மீர் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 883 பெண்கள்



tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperஸ்ரீநகர்: பெண் சிசு கொலை பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு வழங்கப்படும் பரிசு தொகையை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ.50 ஆயிரமாக உயர்த்தி காஷ்மீர் அரசு அறிவித்துள்ளது. 

அண்மையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்குப்படி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் என்ற அளவுக்கு ஆண், பெண் எண்ணிக்கையில் பயங்கர ஏற்றத்தாழ்வு உள்ளது. இதை தொடர்ந்து பெண் சிசு கொலை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு தீவிரப்படுத்தியுள்ளதுஎந்த ஒரு அல்ட்ராசவுண்ட் மையத்திலும் கருவில் இருக்கும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை கண்டுபிடித்து சொல்லும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுவதாக தெரிந்தால் உடனடியாக அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போன்ற மையங்கள் குறித்து தகவல் தருபவர்களுக்கு அளிக்கப்படும் பரிசு தொகை ரூ.25 ஆயிரத்திலிருந்து ரூ. 50 ஆயிரமாக அதிகரிக்கப்படுவதாக மாநில சுகாதார துறை அமைச்சர் ஷாம்லால் சர்மா தெரிவித்துள்ளார்.

நான் ஈ ராஜமௌலியின் அடுத்த வெற்றிப்படம்


சகுனி, பில்லா-2 என சமீபத்தில் ரிலீஸான 2012-ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட படங்களை பின்தள்ளி ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டர்களை மொய்க்க காரணமாக இருந்த படம் ’நான் ஈ’. பெரிய பெரிய படங்களில் ஈயாடிக்கொண்டிருக்க, ஈயை வைத்து படமெடுத்தவர் ஹிட்டான படம் கொடுத்தது மிகப்பெரிய விஷயம். தெலுங்கில் பெரிய ஹீரோக்களை வைத்து கமெர்ஷியல் படங்களை எடுத்து வெற்றிகளைப் பெற்றுக்கொண்டிருந்த இயக்குனர் ராஜமௌலி வித்தியாசமான முயற்சியாக நான் ஈ படத்தை மேற்கொண்டார்.ராஜமௌலியின் மாறுபட்ட முயற்சிக்கு கிடைத்த வெற்றியைத் தொடர்ந்து

டீசல்,LPG சிலிண்டர் விலை உயர்கிறது?

பெட்ரோல் விலை நேற்று நள்ளிவு முதல் லிட்டருக்கு 70 பைசா உயர்த்தப்பட்டதை அடுத்து, டீசல் மற்றும் சிலிண்டர் மீதான விலைகளையும் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.
டீசல், சிலிண்டர் மற்றும் மண்ணெய்க்கு மத்திய அரசு வழங்கும் மானியத்தை குறைக்க மத்திய அமைச்சகம் முடிவு செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆதலால் இதன் விலைகள் உயர்த்தப்படுவது உறுதியாகிவிட்டது. ஆனால் எப்போது, எவ்வளவு விலை உயர்வு என்பதுதான் முடிவாகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

Chennai 130 கோடி மதிப்புள்ள 400 கிலோ தங்கம் பறிமுதல்

சென்னை சவுகார் பேட்டையில் தங்கம் இறக்குமதி செய்யும் தனியார் நிறுவனம் உள்ளது. இங்கு பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக புகார் கூறப்பட்டது.
இதையடுத்து அந்த நிறுவனத்தில் சி.பி.அய் . அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது மத்திய அரசின் உலோக வணிக கழகம் மூலம் இந்த நிறுவனம் 2007 முதல் 2009 வரை இறக்குமதி செய்த தங்கம் பற்றிய விவரங்கள் ஆய்வு செய்யப்பட்டன.
அப்போது தங்கம் இறக்குமதியில் ரூ.18 கோடி வரை ஊழல் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் சில அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
இதன் அடிப்படையில் கடநத மாதம் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நடந்த சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கத்தை சி.பி.அய் . அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.130 கோடி.
வழக்கு தொடர்பான பல முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வரவு.செலவு பற்றிய சரியான கணக்கு இல்லாமல் வைத்திருந்த ரூ.4 கோடி ரொக்கப் பணமும் கைப்பற்றப்பட்டதாக சி.பி.அய் . வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதிக்கு எதிரான மனு- நாளை விசாரணை

பெங்களூர்: தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரிக்கும் நீதிபதி மல்லிகார்ஜூனய்யாவின் நியமனத்துக்கு எதிரான மனு மீது கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெற உள்ளது.
ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு பெங்களூர் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் சேர்க்கபப்ட்டுள்ளனர். பெங்களூர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி ஜெயலலிதா வாக்குமூலம் அளித்துவிட்டார். ஆனால் சசிகலாவிடம் வாக்குமூலம் வாங்க பெரும் போராட்டமே நடந்து வருகிறது.

இங்கிலாந்து, இந்தி, இந்திரா! தமிழகத்தின் 3 முக்கிய போராட்டங்கள்


இந்திய அரசியல் களத்தை — தேசிய அளவிலும் தமிழக அளவிலும் — தொடர்ந்து ஆய்வு செய்துவரும் ஆர். முத்துக்குமாரின் சமீபத்திய புத்தகம், திராவிட இயக்க வரலாறு. பெரியார், அம்பேத்கர், எம்ஜிஆர் தொடங்கி பல வாழ்க்கை வரலாற்று நூல்கள் எழுதியுள்ளார்.  தமிழக அரசியல் இதழில் இவர் எழுதி வரும் ஆடு புலி அரசியல் தொடர் 100 அத்தியாயங்களைக் கடந்து முன்னேறிக்கொண்டிருக்கிறது.
  மொழிப்போர் / அத்தியாயம் 1
தமிழக மக்கள் மூன்று முக்கியப் போராட்டங்களைச் சந்தித்துள்ளனர். மூன்றுமே ஆதிக்கத்துக்கு எதிராக நடந்தவை. இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்று மக்கள் சக்தி பொங்கி எழுந்ததன் விளைவாக நடந்தவை.  இங்கிலாந்திடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது சுதந்தரப் போராட்டம். இந்தியிடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது மொழிப் போராட்டம். இந்திராவிடம் இருந்து விடுதலை வேண்டி நடந்தது நெருக்கடி நிலைப் போராட்டம்.

Anna Hazare மிரட்டல் 3 அல்லது 4 நாட்களுக்குள் நிறைவேற்றா விட்டால்?

புதுடில்லி:""லோக்பால் மசோதா தொடர்பான எங்கள் கோரிக்கைகளை, இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களுக்குள் நிறைவேற்றா விட்டால், சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடுவோம்,'' என, மத்திய அரசுக்கு அன்னா ஹசாரே எச்சரிக்கை விடுத்துள்ளார்.
"ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ள மத்திய அமைச்சர்கள் மீதான வழக்குகளை விசாரிக்க, சிறப்பு விசாரணை குழுவை அமைக்க வேண்டும். இந்த வழக்குகளை, விரைவு கோர்ட்டுகளில் விசாரிக்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, அன்னா ஹசாரே குழுவினர், இன்று, டில்லியில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த உள்ளனர்.

செவ்வாய், 24 ஜூலை, 2012

13 வயது மாணவனுடன் 9 வருட உறவு... இந்திய டீச்சருக்கு சிறை!



 Indian American Teacher Heads Jail Relationship Minor
நியூயார்க்கில் உள்ள மான்டிசோரி பள்ளியின் முன்னாள் முதல்வரான 46 வயது இந்திய அமெரிக்க ஆசிரியை, 13 வயது மாணவர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொண்ட குற்றத்துக்காக சிறைத் தண்டனை பெற்றுள்ளார்.
அந்த ஆசிரியையின் பெயர் லீனா சின்ஹா. இவர் மீது பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இவரது பெற்றோர் தொடங்கி நடத்தி வந்த பள்ளியில் இவர் அப்போது முதல்வராக இருந்து வந்தார். அப்போது 1996ம் ஆண்டு இவர் 13 வயது பையனுடன் முதலில் வாய் வழி உறவை வைத்திருந்தார். பின்னர் அந்தப் பையனை தொடர்ந்து பாலியல் ரீதியாக பயன்படுத்தி வந்தார். அந்தப் பையன் நடுநிலைப் பள்ளி, உயர் நிலைப் பள்ளி என்று போகும் வரை விடாமல் தொடர்ந்து அவனைப் பயன்படுத்தினார்.
அந்தப் பையன் வளர்ந்து வாலிபனான பின்னர் இதுகுறித்து வெளியில் சொன்னதால் லீனா சிக்கிக் கொண்டார். அவர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

ராஜேஷ் கன்னாவும் டிம்பிள் கபாடியாவும் ஏன் பிரிந்தார்கள்? mrs,anil ambani?

Why Dimple Kapadia Left Rajesh Khan ஒரே பிரஷ்ஷில் பல் விளக்கிய ராஜேஷ் கன்னாவும், டினா முனீமும்!

மும்பை: ராஜேஷ் கன்னா போய் விட்டார். ஆனால் அவரைப் பற்றிய செய்திகளுக்கு இப்போதைக்கு மறைவு இல்லை போலும். >அடுத்தடுத்து அவரைப் பற்றிய செய்திகள், ரகசியங்கள் ஒவ்வொன்றாக வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில், ராஜேஷ் கன்னாவும், அவரது காதல் மனைவி டிம்பிள் கபாடியாவும் ஏன் பிரிந்தார்கள் என்ற ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

ஆட்சியில் இருப்பது அதிமுகவா? திமுகவா?


 4 200 Cadres From Various Parties Join Dmk சென்னை: எனக்கு கொடுத்த வரவேற்பை பார்த்து நாம் தான் ஆட்சியில் இருக்கிறோமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4,200 பேர் அதிமுக, தேமுதிக, மதிமுக, பாமக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகளில் இருந்து விலகி இன்று திமுகவில் இணைந்தனர். இதற்கான விழா வானகரம் ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடந்தது. இங்கு தான் வழக்கமாக அதிமுக பொதுக் குழு- செயற்குழுக் கூட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்று நடந்த நிகழ்ச்சியில் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் 4,200 பேரும் திமுகவில் இணைந்தனர். அப்போது ஸ்டாலின் பேசுகையில்,

குடிகாரன் கொலை தாய் மனைவி கைது

தருமபுரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவர் முக்குளத்தை சேர்ந்தவர் முருகன். (வயது-35). இவர் நாள்தோறும் குடித்து விட்டு வந்து வீட்டில் உள்ளவர்களிடம் தகராறு செய்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 10ம் தேதி முருகன் வீட்டுக்கு அருகில் உள்ள புளிய மரத்தில் மர்மமான முறையில் முருகன் தூக்கு போட்டு இறந்து கிடந்தார்.
குடிக்க பணம் தர மறுத்ததால், மனமுடைந்த முருகன் தற்கொலை செய்து கொண்டதாக புகார் கொடுக்கப்பட்டது, காவேரிப்பட்டணம் போலீஸார் இந்த வழக்கில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் சம்பவத்தன்று, இறந்து போன முருகன் குடித்து விட்டு வீட்டில் இருந்த தாய் நீலவேணி மற்றும் மனைவி வேடியம்மாளிடம் தகராறு செய்ததுடன் அவர்களை அடித்து உதைத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தாய் நீலவேணி மற்றும் மனைவி வேடியம்மால் ஆகிய இருவரும் சேர்ந்து வீட்டில் இருந்த உருட்டு கட்டையால் முருகனை சரமாரியாக தாக்கினர். இதில், அவர் படுகாயமடைந்து சம்பவ இடத்தில் இறந்தார்.

குளிக்கும் படத்தை காட்டி மாணவி கற்பழிப்பு, தற்கொலை

குளிப்பதை படம் எடுத்து மிரட்டி பலமுறை உல்லாசம்: தற்கொலைக்கு முன் மாணவி கடிதம்: 3 பேர் கைது திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தை அடுத்த மண்மலை கிராமத்தைச் சேர்ந்த 22 வயதான சினேகா. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).

இவர் நாச்சிப்பட்டில் உள்ள ஓம்சத்தி பா-டெக்னிக்கில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி 23.07.2012 அன்று மாலை தனது வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இதனைப் பார்த்த பெற்றோர் கதறி அழுதனர். பின்னர் செங்கம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது மாணவி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.தற்கொலைக்கு முன் மாணவி எழுதியிருந்த கடிதத்தில், நான் குளிக்கும்போது செல்போனில் வீடியோ எடுத்து வைத்துக்கொண்டு என்னை இதே ஊரில் உள்ள வினோத்குமார், ஜெகன் உள்பட சிலர் என்னை மிரட்டினர். என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்திக்கொண்டனர். தினமும் ஒவ்வொருவராக வந்து என்னை பயன்படுத்திக்கொண்டனர். நாங்கள் சொல்லும்போதெல்லாம், எங்களுடன் வரவேண்டும். இல்லையேல் குளியல் வீடியோவை இன்டெர்நெட்டில் வெளியிடுவோம் என்று மிரட்டினார்கள். இதற்கு பயந்து அவர்கள் சொன்னதையெல்லாம் செய்தேன். தற்போது அதிகமாக தொந்தரவு செய்து வேறு சிலரையும் அழைத்து வந்து, அவர்களுடன் இருக்க கட்டாயப்படுத்தினார்கள். இதனால் மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறேன் என மூன்று பக்க கடிதத்தில் அகிலா எழுதி வைத்துள்ளார். அந்த கடிதத்தைக்கொண்டு மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Asiad Medallist Shanthi:கலைஞர் கொடுத்த 15 லட்சம் செலவாயிற்று செங்கல் சூளையில் 200 ரூபாய்க்கு தினக்கூலி வேலை

செங்கல் சூளையில் வேலை பார்க்கும் ஆசிய விளையாட்டு வீராங்கனை சாந்தி!

 15 லட்சம் ரூபாய்களை யாரோ மோசடி பண்ணி   விட்டார்கள் .இவர் அதையும் வாய்திறந்து சொல்லமுடியாதவாறு எதோ ஒரு பயத்தில் உள்ளார் போல் தெரிகிறது நிச்சயமாக இதில் எதோ சதி நடந்திருக்கிரறது  போலீசார் இதில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .

 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் கடந்த 3 மாதமாக செங்கல் சூளையில் கூலி வேலை பார்க்கிறார். கடந்த 2006ம் ஆண்டு தோஹாவில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 800மீ ஓட்டப்பந்தயத்தில் தமிழக வீராங்கனை சாந்தி சவுந்திரராஜன் வெள்ளிப் பதக்கம் வென்றார். ஆனால் அவர் நாடு திரும்பிய பிறகு அவர் பெண்ணா, ஆணா என்ற பிரச்சனை எழுந்தது. அது தொடர்பாக நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவுகளும் அவருக்கு எதிராக இருந்தன.
இதையடுத்து அவர் வாங்கிய பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் பறிக்கப்பட்டதுடன் அவர் இனி எந்த போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாதவாறு இந்திய தடகள கூட்டமைப்பு அவருக்கு தடை விதித்தது. பெர்லின் உலக சாம்பியன்ஷிப் 2009 போட்டி ஓட்டப்பந்தயத்தில் தங்கப் பதக்கம் வென்ற தென்னாப்பிரிக்க தடகள வீராங்கனை செமன்யா இதே போன்று சர்ச்சையில் சிக்கிய பதக்கத்தை இழந்தார். அவர் எந்த போட்டியிலும் கலந்து கொள்ளக் கூடாது என்று சர்வதேச தடகள போட்டிகளுக்கான கூட்டமைப்பு சங்கம் அவருக்கு தடை விதித்தது.
ஆனால் தென்னாப்பிரிக்கா செமன்யாவுக்கு ஆதரவாக போராடியதை அடுத்து அவர் மீதான தடை கடந்த ஆண்டு வாபஸ் பெறப்பட்டது. அவர் வரும் வெள்ளிக்கிழமை துவங்கவிருக்கும் லண்டன் ஒலிம்பிக் போட்டியில் தென்னாப்பிரிக்க கொடியை ஏந்திச் செல்லவிருக்கிறார். ஆனால் சாந்திக்கோ மத்திய, மாநில அரசுகள் எந்த ஆதரவும் தெரிவிக்கவில்லை.