![]() |
sellapuram valliyammai : நடிகன் அர்ஜுன் ..இந்தியாவை காப்பாற்ற உக்கிரமாக தன்னை வருத்தி சண்டையிட்டு படங்களில் நிரூபித்தவர்
தேசபக்திக்கு திரையில் இவரை விட்டால் ஆளில்லை என்று வீராவேசமாக வஜனமும் பேசிய தியாகசீலர்,
அவ்வப்போது ரொமான்ஸ் என்ற பெயரில் ஏராளமான பிட்டு காட்சிகளில் முகம் சுழிக்க வைத்து தமிழ்நாட்டில் சினிமா சவாரி செய்து (எக்ஸ்டரா கட்டிங் உட்பட) சம்பாதித்தார் நடிகர் அர்ஜுன் (பார்ப்பன சினிமா லாபி உபயம்)
காவேரி நீர் பிரச்சனை வரும்போது அப்படியே கர்நாடகத்துக்கு ஓர கையால் முட்டு வேற கொடுப்பார்.
வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் பெரியார் எதிர்ப்பு திராவிட எதிர்ப்பு எல்லாவற்றிலும் மேலாக கலைஞர் வெறுப்பு திமுக காய்ச்சல் எல்லாவற்றையும் அரங்கேற்றினார் .(பல படங்கள் குறிப்பாக முதல்வன்)
இந்த அர்ஜுன் வீணை வித்வான் அப்துல் கலாம் கூறியதற்கு ஒப்ப ஒரு கனவும் கண்டார்.
தன்னை வாழவைத்த தமிழநாட்டுக்கு ஒரு பெரிய நூலகம் கட்டவேண்டும்,
மருத்துவ மனை கட்டவேண்டும் அல்லது கல்லூரி கட்டவேண்டும் என்றெல்லாம் அவர் சிரமப்பட்டு சிந்திக்கவே இல்லை.
அனுமாருக்கு கோயில் கட்டவேண்டும் என்று 17 ஆண்டுகள் முயன்று 17 கோடிகளை கொட்டி ஒரு கோயிலை கட்டி இருக்கிறார்.. தமிழ்நாடு மக்கள் கோயில்களை போதாது என்று இவனிடம் கோரிக்கைகள் விடுத்தார்களோ தெரியவில்லை.. இவனை என்ன செய்யலாம்?