சனி, 10 டிசம்பர், 2011

பாகிஸ்தானின் சமூக அக்கறை கொண்ட கொலவெறி பாடல் – வீடியோ !வினவு,
இவர்கள் முற்றுமுழுதான மாற்று அரசியல் பார்வை கொண்ட இளைஞர்கள் இல்லை என்றாலும் பாகிஸ்தானில் மதவாதத்தின் எச்சம்படாமல் ஜனநாயக உணர்வு கொண்டோரும் இருக்கிறார்கள் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

எங்க அம்மா உருளைக்கிழங்கு-முட்டை கறி செஞ்சிருந்தாங்க, எனக்கு உருளைக் கிழங்கு முட்டை கறி பிடிக்காது. சாப்பிடாமல் என் பிரெண்ட் அலி வீட்டுக்குப் போனேன். “ஏ ஹே, ஏ ஹே, எங்க அம்மா செஞ்சா உருளைக்கிழங்கு-முட்டே, ஏ ஹே, ஏ ஹே எனக்குப் பிடிக்காது உருளைக்கிழங்கு-முட்டே” என்று முணுமுணுத்துக் கொண்டே இருந்ததைக் கேட்ட அலி, அதை ஒரு பாடலாக எடுக்கலாம் என்று சொன்னான், அப்படிப் பிறந்ததுதான் இந்த பாட்டு’
பாகிஸ்தானின் லாகூரைச் சேர்ந்த தன்யால் மாலிக் என்ற பொருளாதாரத் துறை ஊழியர் எழுதிய பாடல் வரிகளை, உள்ளூர் தொலைக்காட்சியில் வேலை செய்யும் அலி அப்தாப் பாட, 15 வயது ஹம்சா மாலிக் கிடார் இசைக்க உருவான ‘மேரி மா நே பகாயி ஆலூ அண்டே’ என்ற பாடல் பாகிஸ்தானைக் கலக்கிக் கொண்டிருக்கிறது.

கேரள சுயநலவாதிகளின் சதியைப் புரிந்து கொள்ளுங்கள்: கேரள மக்களுக்கு ஜெயலலிதா


Jayalalitha
சென்னை: முல்லைப் பெரியாறு மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்பதையும், இதனால் மக்களின் உயிருக்கும, உடைமைக்கும் அச்சுறுத்தல் இல்லையென்பதையும் கேரள மக்கள் உணரவேண்டுமென்று முதல்வர் ஜெயலலிதா கேட்டுக் கொண்டுள்ளார்.
முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக இருமாநிலங்களுக்கு இடையே உள்ள உறவில் விரிசல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இரு மாநில எல்லைப் பகுதிகள் பதற்றமான சூழல் உருவாகியுள்ளது.
இந்த நிலையில் முதல்வர் ஜெயலலிதா விடுத்துள்ள அறிக்கையில், "முல்லைப்பெரியாறு அணை உடைந்தால் மாநிலத்தின் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் ஏற்படும் என்ற கேரள அரசியல்வாதிகள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். உண்மை அதுவல்ல.

தமிழ் திரை உலகம் இன்னும் கேரளாவை கண்டிக்க முன்வரவில்லை

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் வேண்டுமென்றே தமிழகத்துக்கு எதிரான நிலையை எடுத்துள்ள கேரள அரசைக் கண்டிக்கும் வகையில் மலையாள நடிகர் நடிகைகள் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு இங்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுக்க ஆரம்பித்துள்ளன.
அரசியல் கட்சிகள், முல்லைப் பெரியாறு அணை காக்க களமிறங்கியுள்ள உணர்வாளர்கள் பலரும் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு இந்த கோரிக்கையை விடுத்துள்ளனர்.
தமிழர், மலையாளி என்ற பேதமின்றி இதுநாள் வரை வாழ்ந்து வந்தவர்கள் இன்று பிரிந்து நின்று அடித்துக் கொள்ளும் நிலையை கேரள அரசு உருவாக்கியுள்ளது.
முல்லைப்பெரியாறு அணைக்கு ஆபத்தில்லை என்று மத்திய நீரியல் நிபுணர் குழு சொன்ன பிறகும், பிடிவாதமாக பொய்யான காரணங்களை கற்பித்து அணைக்கு ஆபத்து என்று கூறி உடைக்க முயற்சிக்கிறது.

Kerala 400 பயணிகள் உயிர் தப்பினர் ஒரே ஓடுபாதையில் வந்த 2 விமானத்தால் பரபரப்பு

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று காலை 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்த விபத்து அதிர்ஷ்டவசமாக தவிர்க்கப்பட்டது. இதனால், 400 பயணிகள் உயிர் தப்பினர். திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று காலை 11.10க்கு எமிரேட்ஸ் விமானம்  ஒன்று கத்தார் நாட்டுக்கு புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து இந்த விமானம் மேலே எழும்பி கொண்டு இருந்தபோது, கொழும்பில் இருந்து வந்த ஏர்லங்கா விமானம் அதே ஓடுபாதையில் தரை இறங்கியது.
சில வினாடிகள் வித்தியாசத்தில் விமானங்கள் ஒன்றை ஒன்று மிக அருகே கடந்து சென்றன. சில வினாடிகள் தாமதித்து இருந்தால் கூட இரண்டு விமானங்களும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டு இருக்கும். ஆனால், அதிர்ஷ்டவசமாக அது தவிர்க்கப்பட்டது. இதனால், இந்த விமானங்களில்  இருந்த 400 பயணிகள் உயிர் தப்பினர். இந்த சம்பவத்தால், விமான நிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
விமான நிலைய கட்டுப்பாட்டு அறையில் இருந்து சிக்னல் கொடுப்பதில் ஏற்பட்ட குளறுபடிதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என கூறப்பட்டது. இது குறித்து விசாரணை நடத்த திருவனந்தபுரம் விமான நிலைய இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

சட்டத்துறை அமைச்சரையே சட்டென்று தூக்கி வீசினார் ஜெயலலிதா!

முதல்வர் ஜெயலலிதாவின் உத்தரவின் பேரில் சட்டத்துறை மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பரஞ்சோதி அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார் என்று தெரியவருகின்றது. தமிழக அமைச்சரவையில் இரண்டு அமைச்சுக்களை வைத்திருந்த இவர், தனது இரண்டாவது மனைவி கொடுத்த புகாரால் பதவியை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
திருச்சியில் மார்க்கெட் வேல்யூ அதிகமுள்ள ஆண்மகன்!
முதல்வர் ஜெயலலிதா தனது அமைச்சரசையில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வது ஒன்றும் அதிர்ச்சி அளிக்கும் விஷயமல்ல. தமிழக அமைச்சர்கள் பலரும் பாக்கெட்டில் ரிட்டர்ன் டிக்கெட்டுடன்தான் அமைச்சராக உள்ளனர் என்பது ஒன்றும் பரம ரகசியமுமல்ல.
ஆனால், இந்த முன்னாள் சட்டத்துறை அமைச்சர் பதவியை இழந்தது, முதல்வரின் வழமையான அதிரடி தூக்கியெறிதல் நடவடிக்கையால் அல்ல.
இந்த மனுசன், இதற்காக ரொம்பவும் முயற்சியெடுத்து வெளியே போயிருக்கிறார்!

உச்ச நீதிமன்றத்தையும் விஞ்சியவரா உம்மன் சாண்டி?

ஒவ்வொரு ஆண்டும் காவிரிப் பிரச்னை தமிழகத்தைக் கலங்கவைப்பது வழக்கம். இந்த ஆண்டு காவிரியின் இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது முல்லைப் பெரியாறு. 'முல்லைப் பெரியாறு அணை உடைந்தால், லட்சக்கணக்கான மக்கள் அழிந்துவிடுவார்கள்’ என்று 'டேம் 999’ திரைப்படம்,
கேரள முதல்வர் உம்மன்சாண்டி, எதிர்க் கட்சித் தலைவர் அச்சுதானந்தன், பா.ஜ.க, இளைஞர் காங்கிரஸ் என எல்லோரும் கேரளாவில் ஒருமித்த குரலில் எதிர்ப்புக் கிளப்பி வரும் நிலையில் பழ.நெடுமாறனைச் சந்தித்தேன்.

''அவ்வப்போது பெரியாறு அணை குறித்து சிறு சிறு சலசலப்புகள் இருந்த நிலையில், இப்போது ஏன் கேரளா தீவிரமாக முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை எழுப்புகிறது?''

''இதற்குப் பின்னணியில் இரண்டு காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கேரளாவில் அமைந்துள்ள காங்கிரஸ் அரசு, மைனாரிட்டி அரசு. அமைச்சர் ஒருவர் மரணம் அடைந்த தொகுதியில் இப்போது இடைத் தேர்தல் நடக்க இருக்கிறது. காங்கிரஸ் அணி எப்படியும் வெற்றி பெற்றாக வேண்டும். தன் ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டி இருப்பதால், பொய்ப் பிரசாரத்தைக் கையில் எடுத்திருக்கிறது. இரண்டாவதாக, புனேவில் உள்ள மத்திய நீர் மற்றும் மின் ஆராய்ச்சி நிலையம், டெல்லியில் உள்ள மத்திய மண் மற்றும் கனிம ஆராய்ச்சி நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய மண்ணியல் கணக்கெடுப்புத் துறை ஆகியவற்றைச் சேர்ந்த நிபுணர்களைக் கொண்டு பெரியாறு அணையின் பலத்தை ஆய்வு செய்வதற்காக உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது. இந்தக் குழு 'அணை பலமாக இருக்கிறது’ என்று அறிக்கை தாக்கல் செய்யவிருப்பதை கேரள அரசு அறிந்துள்ளது.

வெள்ளி, 9 டிசம்பர், 2011

சர்தாரிக்கு மாரடைப்புடன், பக்கவாதம், முக வாதமும் ஏற்பட்டுள்ளது- தகவல்


Zardari
இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அதிபர் சர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து தற்போது அவருக்கு பக்கவாதமும், முகவாதமும் (facial paralysis) ஏற்பட்டுள்ளதாக புதிய தகவல் தெரிவிக்கிறது. இதனால்தான் அவர் உடனடியாக துபாய்க்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாகிஸ்தானிலிருந்து வெளியான பத்திரிக்கைச் செய்தி தெரிவிக்கிறது.
மாரடைப்பு ஏற்பட்ட பின்னர் அவருக்கு பக்கவாதம் மற்றும் முகவாதம் ஏற்பட்டதாக அந்த செய்தி தெரிவிக்கிறது.

கொல்கத்தா மருத்துவமனையில் பயங்கர தீ- 73 பேர் பலி


Fire in South Kolkata
கொல்கத்தா:  தெற்கு கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் 73 பேர் பலியாகியுள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத் தலைநகர் கொல்கத்தாவில் உள்ள அம்ரி மருத்துவமனையின் அடித்தளத்தில் இன்று அதிகாலை 3.30 மணி அளவில் திடீர் என்று தீப்பிடித்தது. இதில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் 70 பேரும், மருத்துவமனை ஊழியர்கள் 3 பேரும் பலியாகியுள்ளனர். தீப்பிடித்தவுடன் மருத்துவமனை அதிகாரிகள் அந்த இடத்தைவிட்டு ஓடிவிட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வண்டிகள் 5 மணிக்கு தான் மருத்துவமனைக்கு வந்துள்ளன.

மலையாள நடிகர்களுக்கு தடை விதிக்க வேண்டும்; இந்து மக்கள் கட்சி

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மலையாள நடிகர், நடிகைகள் சமீபத்தில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதற்கு இந்து மக்கள் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.அக்கட்சியின் மாநில செயலாளர் பி.ஆர். குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’மலையாள நடிகர், நடிகைகளை தமிழ் திரையுலகம்தான் வாழ வைக்கிறது. இங்குள்ள படங்களில் நடித்து கோடி கோடியாக சம்பாதிக்கின்றனர். நயன்தாரா, அசின், மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், காவ்யா மாதவன், ஜோதிர்மயி, கோபிகா மற்றும் தற்போது முன்னணி நடிகையாகி உள்ள அமலாபால் மேலும் பல புதுமுக நடிகைகள் கேரளாவில் இருந்து வந்து தமிழ் படங்கள் மூலம் பிரபலமானவர்கள்.

முல்லைப் பெரியாறு: தமிழகம் முழுவதும் 12ம் தேதி உண்ணாவிரதம்-15ம் தேதி மனித சங்கிலி - திமுக முடிவு

சென்னை: முல்லைப் பெரியாறு அணைவிவகாரம் தொடர்பாக வருகிற 12ம் தேதி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துவது என்றும், 15ம் தேதி மதுரை, தேனி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் பிரமாண்ட மனித சங்கிலிப் போராட்டத்தை நடத்துவது என்றும் திமுக முடிவு செய்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக செயற்குழுவைக் கூட்டி விவாதிக்கப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி சமீபத்தில் அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை செயற்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் தொடங்கியது.
கருணாநிதி தலைமையில் தொடங்கியுள்ள கூட்டத்தில் கட்சிப் பொதுச் செயலாளர் அன்பழகன், பொருளாளர் மு.க.ஸ்டாலின், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் இதில் பங்கேற்றுள்ளனர்.

தமிழகம் முழுவதும் கேரளாவுக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது- சென்னையில் மீண்டும் தாக்குதல்

சென்னை: கேரளாக்காரர்களின் நிறுவனங்களுக்கு எதிரான போராட்டம் தமிழகத்தில் தொடர்கிறது. ஆங்காங்கே சில தாக்குதல்கள் நடந்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைப் பயன்படுத்தி கேரளாவில் தமிழர்களுக்கு எதிராகவும், தமிழர்களின் கடைகளைத் தாக்கியும், தமிழக ஐயப்ப பக்தர்களைத் தாக்கியும்,வாகனங்களைத் தாக்கியும் விஷமிகள் அட்டகாசம் செய்தனர். இதற்கு உச்சமாக தமிழகப் பெண் தொழிலாளர்களை சேலைகளைக் கிழித்து மானபங்கப்படுத்தினர்.
இதைத் தொடர்ந்து தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டது. குறிப்பாக கம்பம், கூடலூர், உத்தமபாளையம் உள்ளிட்ட கேரள எல்லையையொட்டியுள்ள தமிழகப் பகுதிகள் கொந்தளித்து விட்டன.

எங்களைப் குறித்துக் கவலைப்படாத கேரள அரசு-ஈரோடு மலையாள வியாபாரிகள் குற்றச்சாட்டு

ஈரோடு: முல்லைப் பெரியாறு விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆதரவு தெரிவித்து ஈரோட்டில் கேரள வியாபாரிகள் தங்களது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடி கடையடைப்பில் குதித்துள்ளனர். மேலும் தங்களைப் பற்றிக் கவலைப்படாமல் கேரளாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் தமிழர்களையும், தமிழர் வாகனங்களையும், ஐயப்ப பக்தர்களையும் சமூக விரோத கும்பல் கடுமையாக தாக்கியது. பணம் பறிப்பு, பொருட்களை நஷ்டப்படுத்துவது, பெண்களை மானபங்கப்படுத்துவது என்று அநாகரீகமாக, காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டனர். ஆனால் இதுதொடர்பாக கேரள போலீஸார் வழக்குப் போடவில்லை, யாரையும் கைது செய்யவும் இல்லை.

குழந்தைகளை பள்ளியில் வைத்து பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற தலைமை ஆசிரியைநாமக்கல் மாவட்டம் திருச்சங்கோடு அருகில் உள்ள மொளசி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் 26 குழந்தைகள் படித்து வருகிரார்கள். இந்த பள்ளியில் மல்லிகா (வயது 40) தலைமையாசிரியராகவும், பூங்கொடி (வயது 32) என்பவர் ஆதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்கள்.
நேற்று வியாழன் அன்று பூங்கொடி பள்ளிக்கு விடுப்பு எடுத்துள்ளார். அதனால் தலைமை ஆசிரியை மல்லிகா மட்டுமே பள்ளியை கவனித்து வந்துள்ளார். மலையில், தன்னுடைய இரு சக்கரவாகனத்தின் சாவியை காணாத மல்லிகா மாணவ மாணவியர்களை கூப்பிட்டு சாவிய எடுத்தீர்களா..? விசாரித்துள்ளார். ஆனால், குழந்தைகள் யாரும் தாங்கள் சாவிய பார்க்கவில்லை என்று கூறியுள்ளனர்.இதனால், மாணவர்கள் மீது எரிச்சல் கொண்ட மல்லிகா எல்லா மாணவ, மாணவியர்களையும் பள்ளியின் வகுப்பறையில் வைத்து பூட்டு போட்டு விட்டு தனது வீட்டுக்கு நடந்து சென்று தனது வாகனத்துக்கான மாற்று சாவியை எடுத்து வர போய்விட்டார்.

அண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்து விட முடியாது- கி.வீரமணி


Veeramani
சென்னை: நதி நீர்ப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும். மத்திய அரசுக்கு மாநிலங்களை கட்டுப்படுத்த ஏற்கனவே இந்திய அரசியல் சட்டத்தில் 356 என்ற விதி உள்ளது என்பதை நினைவூட்டுவது நமது கடமை. அண்டை மாநிலத்தைப் பகைத்துக் கொண்டு எந்த மாநிலமும் வாழ்ந்து விட முடியாது என்பதை கேரளா நினைவில் கொள்ள வேண்டும் என்று தி.க. தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கை:
கேரள அரசு வேண்டுமென்றே, எங்கே அணையை உயர்த்தி தமிழ்நாடு பயன்பெறும் நிலை வந்துவிடுமோ என்ற அச்சத்தாலும், அவசியமற்ற பொறாமையிலும்தான் ஆற்றொழுக்காக சென்று கொண்டிருந்த இந்த பிரச்சினையை வழக்குக்குரியதாக்கி சிக்கலாக்கி இரு மாநிலங்களிலும் வன்முறை வெடித்துக் கிளம்பும் அளவுக்கு விபரீதத்திற்குள் தள்ளிவிட்டது.

Uniform Civil Code ஏன் கொண்டுவரமுடியவில்லை?

பொது உரிமையியல் சட்டம் : ஏன் கொண்டுவரமுடியவில்லை?
1950 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்திய அரசியலமைப்புச் சட்டம் 44 ஆம் ஷரத்தில், இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசாங்கம் பொது உரிமையியல் சட்டத்தை (Uniform Civil Code) ஏற்படுத்தித்தர ஆவண செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருக்கிறது.
Article 44 – The State shall endeavour to secure for the citizens a uniform civil code throughout the territory of India.
ஆனால் அரசியலமைப்புச் சட்டம் தோற்றுவிக்கப்பட்டு 61 ஆண்டுகள் ஆகியும், இது வரை ஆட்சி செய்த எந்த அரசியல் கட்சியும் பொது உரிமையியல் சட்டத்தைக் கொண்டுவர முயற்சி செய்யவில்லை. ஏன் செய்யவில்லை என்பதை பார்ப்பதற்கு முன்பு பொது உரிமையியல் சட்டம் என்றால் என்ன, அதனால் என்ன நன்மை என்பதை பார்த்துவிடுவோம்.
நம் நாட்டில் பல்வேறு மதத்தை சேர்ந்த மக்கள் இருக்கிறார்கள். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்வியலையும் – பிறப்பிலிருந்து இறப்பு வரை (அவனுக்கு பிடித்தாலும், பிடிக்காவிட்டாலும்) அவனுடைய மதம்தான் வழிநடத்துகிறது. திருமணம், விவாகரத்து, ஜீவனாம்சம், சுவீகாரம், பரம்பரை சொத்துரிமை, ரட்சணை போன்ற அனைத்து விவகாரங்களிலும் ஒருவர் தான் சார்ந்த மதக்கோட்பாடுகளின்படிதான் செயல்பட்டாகவேண்டும். மதம் சார்ந்த கோட்பாடுகள், தொன்றுதொட்டு வந்த பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறைகள் சார்ந்த விஷயங்கள்தான் தனிப்பட்ட சட்டமாக (Personal Law) அங்கீகரிக்கப்படுகிறது.

சூப்பர் ஸ்டார்க்காக திருமணத்தை தள்ளி வைத்த சினேகா?‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிகாந்தின் தங்கையாக சினேகா நடிக்கிறார்.  ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கும் படம், ‘கோச்சடையான்’. இதில் ரஜினி ஹீரோவாக நடிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமார் திரைக்கதை, டைரக்ஷன் மேற்பார்வை செய்கிறார். இதில் ரஜினி ஜோடியாக நடிக்க அனுஷ்காவிடம் கேட்டதாகத் தெரிகிறது. இதுபற்றி முடிவு தெரியாத நிலையில், ரஜினி தங்கையாக சினேகா நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முதல் முறையாக திருமணம் குறித்து பேசிய சினேகா, காதலிப்பது உண்மைதான், ஆனால் திருமணம் இப்போது இல்லை லேட்டாகும் என்று தெரிவித்துள்ளார். ரஜினியின் கோச்சடையானில் சினேகா அவரது தங்கையாக நடிக்கிறார். இதனால்தான் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறுகிறார்கள்.


சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது வழக்கு பதிவு

திருச்சி : திருச்சி பெண் டாக்டர் கொடுத்த மோசடி புகார்களின் மீது நீதிமன்ற உத்தரப்படி, தமிழக சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி மீது திருச்சி போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். திருச்சி குமரன் நகரை சேர்ந்தவர் டாக்டர் ராணி (46). இவர் கடந்த நவம்பர் 11ம் தேதி திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 4ல் ஒரு புகார் மனு அளித்தார். அதில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை மற்றும் சட்டத் துறை அமைச்சர் பரஞ்சோதி, தன்னை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். என்னிடம் இருந்து 60 பவுன் நகைகள் மற்றும் பணத்தை பெற்றுக் கொண்டு ஏமாற்றி விட்டார். இது குறித்து போலீசாரிடம் புகார் அளித்தேன். ஆனால், என் புகார் தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் போலீசார் எடுக்கவில்லை.

வியாழன், 8 டிசம்பர், 2011

Chennai, India: DMK treasurer and former deputy chief minister M K Stalin said, “Police have falsely implicated me, my son and four others in the land grab case. The complainant was coerced to foist a false case. I explained this to ADGP T K Rajendran.If an FIR is registered, the persons named in it should be arrested. I have not been arrested. I went there to insist to the DGP to arrest me. But, ADGP in-fact did not even raise his head to face me”
ஸ்டாலின் நில அபகரிப்பு புகார் விஷயத்தில் ஜெயலலிதா அரசு சறுக்கியிருக்க, கிடைத்த சான்ஸை விடாமல் தொடர்ந்தும் அடிமேல் அடியாக அடித்து விளையாடிக்கொண்டு இருக்கிறார் மு.க.ஸ்டாலின். லேட்டஸ்டாக, “நான் நில அபகரிப்பு செய்ததை உங்களால் நிரூபிக்க முடிந்தால், எனக்கு நானே தண்டனை கொடுக்கவும் தயார்” என்று கூறியிருப்பவர், போலீஸ் கூடுதல் டி.ஜி.பி.-யை கிண்டல் அடித்தும் விட்டார்.
அண்ணா பொது நூலக மன்றம் சார்பில் வடபழனியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தை நேற்று (புதன்கிழமை) மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துப் பேசியபோது, அவரது பேச்சின் மெயின் தீம், போலீஸார் அவர்மீது போட்டுள்ள எஃப்.ஐ.ஆர். பற்றியதுதான்! மனுசன் இதை வைத்து அட்டகாசமாகவே அரசியல் செய்கிறார்.
“என்மீதும் என் மகன்மீதும் (உதயநிதி) அ.தி.மு.க. அரசு தொடர்ந்துள்ள வீடு பறிப்பு வழக்கில் என் மகன் உதயநிதிக்கு நீதிமன்றத்தால் முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் முன்ஜாமீன் கேட்டு நான் நீதிமன்றத்தை நாடமாட்டேன். கைது செய்யட்டும் என்று காத்திருக்கிறேன்”  என்றவர், போலீஸ்மீதுதான் தனது முதல்வர் ஜெயலலிதாவை விமர்சிப்பதைவிட, போலீஸ்மீது தாக்குதல் நடாத்துவதிலேயே குறியாக இருந்தார்.

சுவாமிக்கு அடித்தது லக்… சிதம்பரம் இப்போது

Viruvirupu
Delhi, India: Special CBI court today (Thursday) allowed Janata Party chief Subramanian Swamy to depose himself as a witness. This will allow the complainant (Swamy) is permitted to recall himself as complainant witness one for leading further evidence.The court directed Swamy to appear in the witness box on December 17 to lead further evidence in support of his complaint against Minister P.Chidambaram.

உட்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை விடுவதில்லை” என்பதில், திடமாகத்தான் உள்ளார் சுப்ரமணியன் சுவாமி. இன்று (வியாழக்கிழமை) சுவாமிக்கு உகப்பான சேதி ஒன்று, பட்டியாலா ஹவுஸ் சிறப்பு நீதிமன்றத்தில் கிடைத்திருக்கின்றது. அமைச்சர் சிதம்பரத்துக்கு எதிரான பிரதான சாட்சியாக தன்னைத்தானே அழைத்துக்கொள்ள சுவாமிக்கு அனுமதி வழங்கியுள்ளார் நீதிபதி ஓ.பி.சைனி.
அவரே அவரை எப்படி சாட்சியாக அழைத்துக் கொள்வது என்று சிலருக்கு கொஞ்சம் குழப்பமான விவகாரமாகவும் இது இருக்கலாம். ஆனால், நீதிமன்ற நடைமுறையில் இது அவருக்கு சாதகமான விஷயமே.
ப.சிதம்பரத்துக்கு எதிராக தாம் அழைக்க விரும்பும் சாட்சிகளின் பட்டியல் ஒன்றை சில நாட்களுக்கு முன்னர் கோர்ட்டில் சமர்ப்பித்த சுவாமி, அவர்களை சாட்சிகளாக அழைக்க அனுமதி கோரியிருந்தார். (விபரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்) தன்னிடம் முக்கிய பைல் ஒன்று உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.

கனிமொழி குரலில் தொனித்த லேசான கேலியைக் கவனித்தார் தயாநிதி!


தி.மு.க.-வுக்குள் நடைபெறும் பவர் பாலிட்டிக்ஸ் மாறன் சகோதரர்களை திகிலடைய வைத்திருக்கின்றது. கட்சிக்குள் தமது செல்வாக்கு இறங்குமுகமாகப் போய்க்கொண்டு இருப்பதை அவர்கள் உணர்ந்துள்ளார்கள். கட்சி பின்னணியே இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று காலாநிதி மாறன் ஒதுங்கிக்கொள்ள தயாராக இருந்தாலும், தயாநிதியால் அப்படி இருக்க முடியாது.
தயாநிதி தொடர்ந்து டில்லியில் அரசியல் செய்வதற்கும் கட்சி பேக்ரவுண்டு தேவை, ஒருவேளை ஸ்பெக்ட்ரம் வழக்கில் சிக்கினாலும், அதிலிருந்து தப்ப முயற்சிப்பதற்கு கட்சிப் பலம் தேவை!

காமராசர் அரங்கத்தில் காளமேகம் அண்ணாச்சி!

சாரு நிவேதிதா எக்ஸைல் வெளியீட்டு விழா
 விஷ்ணுபுரத்து சொம்பு தூக்கிங்க வேட்டி கட்டிகிணு, ரசவடை போட்டு விருந்து வைச்சு கூட்டம் நடத்துறானுவ. சாநி சொம்புங்க கோட் சூட்டு மாட்டிகிணு சரக்கு பார்ட்டியோட கூட்டம் நடத்துராணுவ. ஒருத்தன் ஆச்சாரம், இன்னொருத்தன் அல்ட்ரா மாடர்னு பாத்து ஏமாறீதிக. ரெண்டுபெரும் ஒண்ணுதான். தெரியாதவன் வாயில மண்ணுதான்.
அம்மணக்காரன் ஊருல கோவணன் கட்டுனவன் டீஜன்டுனா, போலீசு லத்திய  பாத்தாலே மூச்சா போறவன் ஊர்ல, கம்பு கட்டி துணி காயப்போடுறவன் கொம்பனா?
வேல வெட்டி இல்லாத புயபுள்ளகளுட்ட 1000, 2000ம்னு வாங்கி கடவுள காட்டுவேன்னு வடிவேலு அண்ணன் வசூல் பண்ண கத தெரியுமாலே? பெறவு அல்லா புயபுள்ளகளயும் மலையண்ட கூட்டிபுட்டு, கடவுள பாத்தா மேறி ஆக்ட் குடுப்பாறு நம்ம அண்ணாத்தே! கடவுளயைம் காணோம், காசும் வேஸ்ட்டுன்னு அந்த பயபுள்ளங்க அண்ணன் சட்டையக் கோத்து கேப்பாய்ங்க! அப்போ நம்ம அண்ணாத்தே ஒன்னு அடிச்சு விடுவாறு, யாரு பொண்டாட்டிங்கல்லாம் பத்தினியோ அவுகளுக்கு மட்டும் கடவுள் தெரிவாருன்னு சொன்னப்புறம், அவனவன் துண்டக் காணோம் துப்பட்டாவக் காணோம்னு கன்னத்தில் போட்டுக்கினு மானத்தை பாத்து சாமி தெரியுதுன்னு உருகுவானுக!
அப்படித்தாம்லே இந்த சாநிய (சாரு நிவேதிதா) நம்ம பதிவுலகத்துல இருக்குற சில பயலுவ அதுவும் சேட்டு பையனுகிட்ட ஐஞ்சு பானி பூரியை முழுங்கினு நாலுதான் லபக்குனேன்னு சண்டை போடுற காலரைக்கால் டிக்கட்டுங்க கொண்டாடுறானுவ! சாமிய பாக்கலேன்னா சொன்னா கற்பு காத்துல கரைஞ்சிரும்ங்கிற மேறி என்னா ஒரு பக்தி!

மம்முட்டி, மோகன்லால் சென்னையில் பல ஆண்டு களாக


மலையாள நடிகர்கள் நாவடக்கி பேசகற்றுக் கொள்ள வேண்டும் : 
நடிகர்கள் நாவடக்கி பேச கற்றுக் கொள்ள வேண்டும். மக்களின் உணர்வுகளை உணர்ந்து பேச வேண்டும். சென்னையில் பல ஆண்டு களாக மலையாள நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் போன்றவர்கள்நிம்மதியாக வாழ்ந்து வருவதை நினைத்துப் பார்க்க வேண்டும்.யுவராஜா
 முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கேரள அரசைக் கண்டித்து, கம்பத்தில் நேற்று இளைஞர் காங்கிரஸ் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்காக தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா நேற்று தேனி வந்தார்.
அங்கு முல்லைப் பெரியாறு அணையில் அமைதி ஏற்படுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி கையெழுத்து இயக்கம் துவக்கினார். பின்னர் யுவராஜா கம்பம் புறப்பட்டார். 144 தடை உத்தரவு அமலில் இருந்ததால் யுவராஜா உள்பட 50 பேரை போலீசார் தடுத்து கைது செய்தனர்.

Subramaniam Sway க்கு ஹாவர்ட் பல்கலைக்கழகம் 'கல்தா'!: மதக் கலவரத்தை தூண்டுவதாக குற்றச்சாட்டு!!


Subramanian Swamy
வாஷிங்டன்: இந்தியாவில் இஸ்லாமியத் தீவிரவாதம் என்ற தலைப்பில் ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணிய சாமி எழுதிய கட்டுரையைக் கடுமையாக கண்டித்துள்ள அமெரிக்காவின் ஹாவர்ட் பல்கலைக்கழகம், அங்கு சாமி நடத்தி வந்த பாடங்களையும் ரத்து செய்துவிட்டது. அதாவது, அவரை நீ்க்கிவிட்டது. இதனால், இனிமேல் 'ஹாவர்ட் விசிட்டிங் புரோபசர்' என்று சாமி கூறிக் கொண்டு திரிய முடியாது.
கடந்த ஜூலை மாதம் சாமி எழுதிய ஒரு கட்டுரையில், இந்தியாவில் உள்ள மசூதிகளை இடிக்க வேண்டும், தங்களது மூதாதையர்கள் இந்துக்கள் என்பதை ஏற்கும் முஸ்லீம்களுக்கு மட்டுமே இந்தியாவில் ஓட்டு போட உரிமை தர வேண்டும் என்று கூறியிருந்தார். இவரது கருத்துக்கு நாடு முழுவதுமே கடும் எதிர்ப்பு எழுந்தது.

Dam டேம் 999 இயக்குநருக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Dam 999
டெல்லி: டேம் 999 படத்திற்கு தமிழக அரசு விதித்த தடையை எதிர்த்து திரைப்படத்தின் இயக்குநர் சோகன் ராய் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், ஏன் இந்தப் படத்தைத் தடை செய்யக் கூடாது என்று தமிழக அரசின் தலைமைச் செயலாளரை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்குமாறு சோஹன் ராய்க்கு உத்தரவிட்டனர்.
முல்லைப் பெரியாறு அணையை மையப்படுத்தி டேம் 999 என்ற பெயரில் கேரளாவைச் சேர்ந்த முன்னாள் கடற்படை அதிகாரியான சோஹன் ராய் என்பவர் படம் எடுத்துள்ளார். இந்தப் படத்திற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து படத்தைத் திரையிட மாட்டோம் என தியேட்டர் உரிமையாளர்கள் அறிவித்தனர். மேலும் தமிழக அரசும் படத்தைத் திரையிட தடை விதித்தது. இதை எதிர்த்து சோஹன் ராய் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

சென்னையில் மலையாள பத்திரிக்கைகள் நிறுத்தம்


Malayalam Manorama
சென்னை: முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டும் கேரள அரசின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை அண்ணாநகரில் இன்று ஒருநாள் மலையாள செய்தித்தாள்களின் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.
முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்பது கேரள அரசின் முடிவாகும். தற்போது உள்ள அணை பலவீனமாக உள்ளதாக கூறி வதந்தி பரப்பி வரும் கேரள அரசுக்கு ஆதரவாக அங்குள்ள ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.

மலையாளிகளைத் தமிழர்கள் தாக்குவார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை- ரமேஷ் சென்னிதலா


Ramesh Chennithala
நாம் என்ன செய்தாலும் தமிழக மக்கள் பொறுத்துக் கொள்வார்கள், பொங்கி எழ மாட்டார்கள் என்ற கேரளத்தின் எண்ணம் முதல் முறையாக தவறாகிப் போயுள்ளது. இதை கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலாவின் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.
திருவனந்தபுரம்: தமிழகத்தில் மலையாளிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் நாங்கள் எதிர்பாராதது. கேரளத்தில் உள்ள தமிழர்களைக் காக்க மாநில அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் மலையாளிகளைப் பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள மாநில காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார்.
தமிழகத்தில் இதுவரை கேரள மக்களுக்கு எதிராக ஒரு தூசியைக் கூட தமிழக மக்கள் எழுப்பியதில்லை. அந்த அளவுக்கு அவர்களும் நமது சகோதரர்கள் என்ற எண்ணத்தில்தான் வாழ்ந்து வந்தனர், வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணைக்காக போராடியவர்களை விடுதலை செய்ய வேண்டும்: த.தே.பொது.க.அட்டூழியம் செய்யும் மலையாளிகள் மீது கேரளத்தில் ஒரு வழக்கும் கிடையாதுதமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கையில்
“முல்லைப் பெரியாறு அணை உரிமையை மறுத்தால் தமிழகத்தை விட்டு மலையாளிகள் வெளியேறட்டும்“ என்ற கோரிக்கையை முன்வைத்து 7.12.2011 தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி துண்டறிக்கை கொடுத்துப் பரப்புரை இயக்கம் நடத்தியது.
இதையொட்டி சென்னை, ஓசூர், கோவை, கும்பகோணம், தஞ்சை ஆகிய இடங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் சொத்துக்கு சேதம் உண்டாக்குதல், சட்ட விரோதமாகக் கூடுதல், இரு சமூகப் பிரிவினரிடையே பகைமையைத் தூண்டுதல், காயம் உண்டாக்குதல் போன்ற கடுமையான பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளார்கள்.

ஈவ்டீசிங் +2 மாணவியை கார் ஏற்றிக் கொன்ற மருத்துவ கல்லூரி மாணவர் கைது

நெல்லை: ஈவ்டீசிங் பிரச்சனையால் சைக்கிளில் சென்ற +2 மாணவி மீது காரை ஏற்றி கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட சென்னை மருத்துவக் கல்லூரி மாணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தியாகராஜ நகரைச் சேர்ந்த செய்யது முகமது என்பவரது மகள் மைமூன் சர்மிளா(17). அதே பகுதியில் உள்ள மெட்ரிக் பள்ளியில் +2 படித்து வந்தார். நேற்று முன்தினம் பள்ளி முடிந்து சைக்கிளில் மைமூன் சர்மிளா வீடு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மைமூன் சர்மிளாவின் சைக்கிள் மீது கார் ஒன்று மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் படுகாயமடைந்த அவர் வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.

புதன், 7 டிசம்பர், 2011

தமிழக-கேரள யுத்தமா?புகையவில்லை, எரியவே தொடங்கிவிட்டது

Viruvirupu,Cumbum, India: Kerala Police issued orders banning any gathering of more than five people for three days in and around the border checkpostas protestors from Tamil Nadu and Kerala clashed over the Mullaperiyar Dam – a contentious issue between the two neighbouring states. In various parts of Tamil Nadu, Kerala business buildings and various shops of Keralites were attacked.
கேரளா போலீஸ், தமிழக எல்லையருகே 5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி நிற்க தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் கேரள மாநில பதிவுடன் வரும் வாகனங்கள்மீது தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இரு பக்கத்திலும் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் வருகின்றன. இரு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் பஞ்சாயத்துக்காக சென்றுள்ளன.
தமிழக-கேரள மாநிலங்களுக்கிடையே தொடங்கியிருப்பது யுத்தமா?
இரு தரப்பிலும் வன்முறைச் சம்பவங்கள் சர்வ சாதாரணமாக நடக்கின்றன. கேரளாவி்ன் குமுளி
எல்லையோரமாக தடுத்து நிறுத்தப்பட்ட வாகனங்கள்..
பகுதியில் தமிழர்கள் மீது தாக்குதல் நடந்ததை அடுத்து, கம்பம் பகுதியில் உள்ள கேரள நிறுவனங்கள், நிதி நிறுவனங்களை தமிழக மக்கள் தாக்கினர். கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் எல்லையிலேயே தடுத்து நிறுத்தப்பட்டன.

TOP கியரில் கனிமொழி DMK பவர் பாலிட்டிக்ஸ்

கனிமொழி கட்சிக்குள் டாப்-கியரில் வேகம் எடுக்க, சில ரகசிய ஏற்பாடுகள்!

ViruvirupuDelhi, India: DMK MP Kanimozhi refuted rumours that she would distance herself from party work to avoid embarrassment to the leadership.“I will continue the political career as my father has brought me to this field. DMK and me will together face the 2G case and will decide about the party posting later,” she said. Party sources said this statement is an indirect attack on M.K.Stalin.
தி.மு.க.-வுக்குள் கனிமொழி தரப்பு டாப் கியரில் வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. கட்சிக்குள் கனிமொழிக்கு உள்ள ஆதரவு, கனிமொழி எதிர்ப்பாளர்களுக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருப்பதுதான், வித்தியாசமான காட்சி.
கனிமொழிக்கு கடந்த வார இறுதியில் சென்னையில் கிடைத்த வரவேற்போடு, சூட்டோடு சூடாக முயற்சிகள் செய்தால்தான் கட்சிக்குள் முக்கிய இடம் ஒன்றைப் பிடிக்க முடியும் என்று நன்றாகவே உணர்ந்துள்ளனர் அவர்கள். தி.மு.க.-வில் உள்ள ஸ்டாலின் ஆதரவு ஆட்களே, கனிமொழியை வரவேற்க ஏர்ப்போர்ட்டுக்கு வந்த கூட்டம், ‘ஆட்சேர்ப்பு’ முறையில் வந்த கூட்டமல்ல என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்.
தி.மு.க. வட்டாரங்களில் விசாரித்தவரை, ஸ்டாலின் தரப்பினர் இரு விஷயங்களில் படு சீரியஸாக இருந்திருக்கின்றனர்.

போதையால் பாதை மாறும் மாணவர்கள்

மதுரை: "மது, ஹெராயின், கஞ்சா போன்றவை தான் போதை தரும்' என கருதினால், நீங்கள் விவரம் தெரியாதவர்கள் என்று அர்த்தம். பள்ளி மாணவர்களிடம் கேளுங்கள், "பெட்ரோல், பஞ்சர் ஒட்டும் பேஸ்ட், இங்க்கை அழிக்கும் ஒயிட்னர்' என, எந்தெந்த பொருட்களில் போதை இருக்கிறது என, "கிறக்கத்துடன்' கூறுவர்.

நேற்று மதியம், மதுரை ஒத்தக்கடையில், அரசுப் பள்ளி 10ம் வகுப்பு மாணவர் ஒருவர், "கிறங்கி' விழுந்தார். பல் உடைந்தும், முகத்தில் காயம் ஏற்பட்டும், தற்போது, அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். இவரது இந்நிலைக்கு காரணம், "ஒயிட்னர்!'. பெட்ரோல் விற்கிற விலையில், அதை வாங்கி, "மோப்பம்' பிடித்து, போதை ஏற்ற முடியாது என்பதால், இவரை போன்ற சில மாணவர்களுக்கு, மலிவான விலையில் கிடைக்கும், "ஒயிட்னர்' போதையை தருகிறது. பள்ளி இடைவேளையின்போது, வெளியே வந்து, மூக்கால் ஒரு இழுப்பு இழுத்துக் கொண்டு, பள்ளி முடியும் வரை, போதையுடன் இருக்கின்றனர். ஆசிரியர்கள் கண்டித்தும், மாணவர்கள் திருந்தவில்லை. போலீஸ் மிரட்டியும் பயப்படவில்லை. பெற்றோரும் கண்டிப்பதாக இல்லை.

பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி பதவி விலகல் ?

இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி பதவி விலக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜர்தாரிக்கு லேசான மாரடைப்பு ஏற்பட்டு துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த குழாயில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்வதற்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் நாட்டு தூதரை பதவி விலகும்படி ஜர்தாரி நிர்பந்தம் செய்ததையடுத்து அவருடைய அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அவரை பதவியிலிருந்து விலகும்படி ராணுவம் நெருக்கடி கொடுத்து வருவதாக தெரிகிறது. இதனை தொடர்ந்து அவர் துபாய்க்கு சென்றுள்ளதாகவும் எந்த நேரத்திலும் ஜர்தாரி பதவி விலக்ககூடும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

இருளர் பெண்களை பலாத்காரம் செய்த போலீஸாரை கைது செய்யாதது ஏன்?- உயர்நீதிமன்றம் கண்டனம்

திருக்கோவிலூர் இருளர் பெண்கள் பாலியல் பலாத்கார வழக்கில் தொடர்புடைய போலீசாரை இதுவரை கைது செய்யாத தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
விழுப்புரம் மாவட்டம் மண்டபம் என்ற ஊரில் இருளர் குடியிருப்பில் வசித்த நான்கு இளம் பெண்களை திருக்கோவிலூர் போலீசார் பத்து தினங்களுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய போலீசாரை கைது செய்து நடவடிக்கை எடுக்கக் கோரி வழக்கறிஞர் புகழேந்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் கடந்தவாரம் மனு தாக்கல் செய்திருந்தனர்.

குஜராத்தில்(taliban) கள்ளச்சாராயம் விற்றால் தூக்கு தணட்னை: ஆளுநர் ஒப்புதல்

குஜராத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் சட்டத்தி்ற்கு அமமாநில ஆளுநர் கமலா ஒப்புதல் அளித்துள்ளார்.
கடந்த 2009ம் ஆண்டு குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 136 பேர் பலியாகினர். இதையடுத்து கள்ளச்சாராயத்தை ஒழிக்க கடுமையான சட்டம் தேவை என்று குஜராத் முதல்வர் மோடி தலைமையிலான அரசு தீர்மானித்தது. தற்போது கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ 1 ஆண்டு சிறை தண்டனை தான் என்பதால் பலரும் துணிச்சலாக கள்ளச்சாராயம் விற்று வருகின்றனர்.
இந்த நிலையை மாற்ற கள்ளச்சாராயம் காய்ச்சினாலோ, விற்றாலோ தூக்கு தண்டனை வழங்கும் வகையில் சட்ட திருத்தம் குஜராத் சட்டசபையில் கொண்டுவரப்பட்டது. அதன்படி கள்ளச்சாராயம் காய்ச்சி விற்றால் 7 முதல் 10 ஆண்டுகள் சிறை, அபராதம் விதிக்கப்படும். கள்ளச்சாராயத்தை குடித்து யாராவது இறந்தால் அதை விற்றவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்படும்.

காசு இல்லையாம்..பொங்கல் இலவச பொருள்கள் கிடையாது.. அரசு முடிவு!

சென்னை: நிதித் தட்டுப்பாட்டைக் காரணமாகச் சொல்லி இந்த ஆண்டு பொங்கல் பண்டிக்கைக்கு மக்களுக்கு இலவசப் பொருட்கள் ஏதும் வழங்கப்படாது என்று தெரிகிறது.
தமிழகத்தில் 1 கோடியே 94 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கடந்த திமுக ஆட்சியில் 2009ம் ஆண்டு முதல் இலவச பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டன.
பச்சரிசி 500 கிராம், வெல்லம் 500 கிராம், பாசி பருப்பு 100 கிராம் மற்றும் முந்திரி-திராட்சை 20 கிராம் அடங்கிய பைகள் ரேசன் கடைகள் மூலம் வழங்கப்பட்டன. (இந்தப் பொருட்கள் அடங்கிய பைகளில் அப்போதைய முதல்வர் கருணாநிதியின் படமும் அச்சிடப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.)
இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது, அதற்கு ரூ.80 கோடி செலவிடப்பட்டது. பின்னர் விலைவாசியும் உயர, 2011ம் ஆண்டில் இத் திட்டத்துக்கு கூடுதல் நிதி செலவானது.

சென்னை, தஞ்சை, கோவை, குடந்தையில் கேரளக் கடைகள் தாக்கப்பட்டன- ஆலுக்காஸும்


சென்னை: சென்னை, தஞ்சாவூர், கும்பகோணம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று கேரளாக்காரர்களின் கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. சென்னை, கோவையில் உள்ள ஆலுக்காஸ் நகைக் கடைகளையும் தாக்கி முற்றுகைப் போராட்டம் நடந்தது.
குமுளியில் தமிழர்கள் மீது கேரளத்தினர் சிலர் வெறித் தாக்குதலில் ஈடுபட்டு கடைகளை அடித்து நொறுக்கினர். பெண்களையும் மானபங்கப்படுத்தியதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து கம்பத்தில் கேரளாக்காரர்களின் கடைகள், நிறுவனங்களை சிலர் சூறையாடினர். லாரி, வேன் ஆகியவை தீவைத்து எரிக்கப்பட்டன. திராட்சைத் தோட்டத்திற்கும் தீவைக்கப்பட்டது.

திருமணம் லேட்டாகும்! - ஸ்னேகா

பிரசன்னாவுடன் காதல் இருப்பது உண்மைதான். ஆனால் கல்யாணம் இப்போதைக்கில்லை. லேட்டாகும், என்று கூறியுள்ளார் ஸ்னேகா.
நடிகை ஸ்னேகாவுக்கும் தனக்கும் காதல் மலர்ந்துள்ளதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்துள்ளதாகவும் பிரசன்னா சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
ஆனால் இந்தத் திருமணம் குறித்து ஸ்னேகா இதுவரை எதுவும் பேசாமல் இருந்தார்.
சமீபத்தில் அவரிடம் இருவருக்கும் திருமணம் எப்போது என்று கேட்டபோது "உடனடியாக திருமணம் செய்து கொள்ளமாட்டோம், கொஞ்சம் லேட்டாகும்," என்றார்.
ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடிக்க ஸ்னேகா ஒப்பந்தமாகியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதைத் தவிர வேறு சில பட வாய்ப்புகளும் அவருக்கு வந்துள்ளன. எனவே இப்போதைக்கு திருமணம் குறித்து யோசிக்கும் நிலையில் அவர் இல்லை என்று தெரிகிறது

கலைஞர் :கேரளாவில் வன்முறைச் செயல்கள், கேரளாவில் தொடர்ந்தால்

சென்னை: ""தமிழக மக்களுக்கு விரோதமான வன்முறைச் செயல்கள், கேரளாவில் தொடர்ந்தால், அதைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு தவறினால், கட்சியின் செயற்குழு கூடி, உரிய முடிவெடுக்கும்'' என, தி.மு.க., தலைவர்  கலைஞர் அறிவித்துள்ளார்

இது தொடர்பாக, நிருபர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்டுள்ள குழுத் தலைவர், நீதிபதி ஆனந்துக்கு, தி.மு.க., சார்பில் ஒரு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. அணையின் நீர்மட்டத்தை, 136 அடியிலிருந்து 120 அடியாகக் குறைக்க வேண்டும் என்ற, கேரளாவின் வேண்டுகோளை ஒருபோதும் ஏற்கக் கூடாது. நீர்மட்டத்தை, 142 அடியாக உயர்த்த அனுமதிக்க வேண்டும் என, கேரளா அரசுக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டதை உடனடியாக அமல்படுத்த வேண்டும். பொதுமக்களிடையே தேவையின்றி அச்ச உணர்வையும், பீதி மற்றும் குழப்பத்தையும் ஏற்படுத்தி வரும், கேரள அரசின் நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

Jeyalalitha: அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது

சென்னை: "கேரளாவில் தமிழர்கள் அதிகம் பேர் இருக்கின்றனர். அதை விட அதிகமான, மலையாளிகள் தமிழகத்தில் இருக்கின்றனர். அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: தமிழகத்தில் இருந்து சபரிமலைக்குச் செல்லும் அய்யப்ப பக்தர்கள், அவர்களது கேரள சகோதரர்களால் தாக்கப்பட்டதாக தகவல் வந்துள்ளது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் தாக்கப்படுகின்றன. அங்குள்ள தமிழ் நிறுவனங்கள், பத்திரிகையாளர்கள், தொழிலதிபர்கள் கூட அச்சுறுத்தலில் உள்ளனர். முல்லைப் பெரியாறு விவகாரம் தான் இத்தனைக்கும் காரணம் என தெரியவருகிறது. குறுகிய மனப்பான்மை கொண்ட, சமூக விரோத கும்பல்களின் சூழ்ச்சிக்கு இரையாகி விட வேண்டாம் என, கடவுளின் சொந்த தேசத்தின் படித்த, புத்திசாலி மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன்.

என்னைப் பொறுத்தவரை, இந்தப் பிரச்னை, அற்ப அரசியல் காரணங்களுக்காகத் தூண்டிவிடப்பட்ட அச்சத்தின் காரணமாக எழுந்துள்ளது.

ஈவ்டீசிங்: +2 மாணவி கொலை: கல்லூரி மாணவர் கைது


ஈவ்டீசிங்: சைக்கிளில் வேகமாக சென்ற +2 மாணவி கொலை: கல்லூரி மாணவர் கைது

பாளையங்கோட்டை தியாகராஜநகரைச் சேர்ந்தவர் செய்யது முகம்மது. இவருடைய மகள் மைமூன் சர்மிளா (வயது 17). அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தில் பிளஸ் 2 படித்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலையில் வகுப்பு முடிந்ததும் மாணவி மைமூன் சர்மிளா, சைக்கிளில் வீடு திரும்பினார். அப்போது திடீர் என்று ஒரு கார், மாணவி சர்மிளா சைக்கிளில் மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
பலத்த காயம் அடைந்த சர்மிளா ரத்த வெள்ளத்தில் ரோட்டில் விழுந்தார். உடனே அவர் நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மாணவி சர்மிளா நேற்று பரிதாபமாக இறந்தார்

Rolls Roys பெங்களூரில் சலூன் கடைக்காரரிடம் ரோல்ஸ் ராய்ஸ் கார்


பெங்களூர் : பெங்களூரில் முடி திருத்தும் தொழிலாளி ஒருவர் ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருக்கிறார் என்றால் நம்ப முடிகிறதா? ஆம்... உழைப்பால் உயர முடியும் என்பதற்கு மற்றுமொரு உதாரணமாக விளங்குகிறார் அவர். பெங்களூரில் ‘இன்னர் ஸ்பேஸ்’ என்ற பெயரில் சலூன் வைத்திருப்பவர் ரமேஷ் பாபு. இவரது தந்தை அந்த காலத்தில் சின்ன சலூன் கடை வைத்து பிழைப்பு நடத்தியவர். கடந்த 1979ம் ஆண்டில் தந்தை இறந்த போது, ரமேஷ் பாபுவுக்கு 9 வயதுதான். ரமேசை வளர்ப்பதற்கு கஷ்டப்பட்ட அவரது தாய், சலூன் கடையை தினம் 5 ரூபாய்க்கு வாடகைக்கு விட்டார்.
இதன்பின், 10ம் வகுப்பு வரை கஷ்டப்பட்டு படித்த ரமேஷ் தொடர்ந்து படிக்க வசதியில்லாமல் படிப்பை பாதியில் நிறுத்தினார். முடிதிருத்தும் தொழிலாளியாக ஒரு கடையில் வேலைக்கு சேர்ந்தார்.

பரம்பிக்குளம்-ஆழியாறு அணையைத் தகர்க்க சதி?

Parambikulam and Azhiyar Dams
பொள்ளாச்சி: தமிழகம், கேரளா இடையே முல்லைப் பெரியாறு அணை விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கும் தொடர்புள்ள பரம்பிக்குளம்-ஆழியாறு திட்டப் பாதைகளையும் அணைகளையும் தகர்க்கும் சதித் திட்டத்துடன் ஒரு கும்பல் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிக்குள் ஊடுறுவியுள்ளதாக பரபரப்புத் தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தக் கும்பல் விட்டுச் சென்ற பொருட்கள் பல கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் பரம்பிக்குளம், ஆழியாறு திட்ட அணைகள் மற்றும் நீர்வழிப் பாதைகள் குறித்த மேப்கள் கிடைத்துள்ளன.

கோர்ட்டுக்கு வெளியே பேசித் தீர்க்கலாம்- தமிழகத்திற்கு கேரளம் அழைப்பு


Oommen chandy
திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், கோர்ட்டுக்கு வெளியே முல்லைப் பெரியாறு அணை குறித்து பேசித் தீர்க்கலாம் என்று தமிழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அதேசமயம், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்ட அளவை 120 அடியாக குறைக்க வேண்டும், புதிய அணை கட்டும் முடிவை விரைந்து எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டன.

பல ஆயிரம் கோடி டன் வைரத்துடன் புதிய கிரகங்கள்


வாஷிங்டன் : பூமியை விட 15 மடங்கு பெரிய, பல ஆயிரம் டன் வைரங்களுடன் புதிய கிரகங்கள் இருப்பது சமீபத்திய கண்டுபிடிப்பில் தெரிய வந்துள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த ஒஹியோ மாநில பல்கலைக்கழக புவியியல் துறை விஞ்ஞானிகள் இந்த கிரகங்களை கண்டுபிடித்துள்ளனர். கார்பன் எனப்படும் கரிய தாதுக்கள் பூமிக்கடியில் அதிக அழுத்தத்தில் இருக்கும்போது ஒளிரும் தன்மை பெறுகின்றன. அவைதான் வைரமாக வெட்டி எடுக்கப்பட்டு விலை மதிப்புமிக்க பொருளாக கருதப்படுகின்றன.

உயிருக்கு பயந்து சிறையிலேயே இருக்கிறாரா ராசா?

Raja

டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா, ஜாமீன் கோராமல் இருப்பது ஏன் என்பது புதிராகவே உள்ளது. வெளியில் வந்தால் உயிருக்கு ஆபத்து என்பதால் தான் அவர் தொடர்ந்து சிறையிலேயே இருப்பதாக செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. இதை அவரது வழக்கறிஞர் சுகில் குமார் மறுத்துள்ளார்.

இந்த வழக்கில் ராசா கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி கைது செய்யப்பட்டார். அவரைத் தொடர்ந்து திமுக எம்பி கனிமொழி, கலைஞர் தொலைக்காட்சி நிர்வாக இயக்குனர் சரத்குமார் ரெட்டி, மூத்த தொலைத் தொடர்புத்துறை முன்னாள் அதிகாரிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்களின் அதிகாரிகள் என மொத்தம் 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

செவ்வாய், 6 டிசம்பர், 2011

டிசம்பர் 6: அம்பேத்கர் நினைவலைகள் எழுப்பும் உணர்வலைகள்!

www.vinavu.com
டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான “விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.
காலம் மாறிவிட்டதாகவும், இது கணிணி யுகமென்றும், நாடு வல்லரசாகப் போகிறதென்றும் திண்ணைக்கு நாலு பேர் இன்னமும் புலம்பத்தான் செய்கிறார்கள். ஆனால், திண்ணியத்தில் தாழ்த்தப்பட்டவர்கள் வாயில் திணிக்கப்பட்ட மலமும் தினந்தோறும் தாழ்த்தப்பட்டவர்கள் உடலிலும், மனதிலும் பதிந்து நிற்கும் ஆதிக்க சாதி நகக் குறியும் நாம் வாழும் சமூகத்தின் அருவருப்பையும், அயோக்கியத்தனத்தையும் திமிராக அறிவிக்கிறது. டாக்டர் அம்பேத்கரின் நினைவலைகளில் ஒன்றான விசாவுக்காக காத்திருக்கிறேன்” என்ற சிறுநூலைப் படித்தபோது ஒரு புத்தகத்தைப் படித்தது போல அல்ல தெருவிலிறங்கி இந்தச் சமூகத்தின் யோக்கியதையை பார்த்தது போல இருந்தது.

உயிர்கள் வாழ வாய்ப்புள்ள கிரகம் கண்டுபிடிப்பு!


பூமியை போன்றே, உயிர்கள் வாழக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். பூமிக்கு, 600 ஒளிவருட தொலைவில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ள இந்த கிரகத்திற்கு கெப்ளர் -22B என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒரு ஒளிவருடம் என்பது சுமார் 10 ட்ரில்லியன்  கிலோமீட்டர் தூரத்திற்கு சமமானது.
தண்ணீர் உட்பட உயிரினங்கள் வாழ தேவையான சூழ்நிலை, இந்த கிரகத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கிரகம், சூரியனைப் போன்ற ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கேரளா செல்லும் தமிழக வாகனங்கள் நிறுத்தம்:

முல்லைப்பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழக வாகனங்கள் தாக்கப்படுவதால், தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் வாகனங்கள் எல்லைப்பகுதியான கூடலூரில் நிறுத்தப்பட்டுள்ளன.
ஐயப்ப சீசன் என்பதால் அப்பகுதியில் அணிவகுத்து நிற்கும் வாகனங்களில் உள்ள ஐயப்ப பக்தர்களுக்கு கூடலூரில், பொதுமக்கள் சார்பில் சுந்தர வேலவர் கோயிலில் அன்னதானம் நடக்கிறது. வரும் பக்தர்கள் அனைவருக்கும் உணவு அளிக்கப்படுகிறது.
இந்நிலையில், இடுக்கியில் 144 தடை உத்தரவையும் மீறி, தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வண்டிப்பெரியாறு அருகே கோவை மற்றும் பழனியைச் சேர்ந்த வாகனங்கள் கல் வீசி தாக்கப்பட்டுள்ளன. நிலக்கல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தமிழக வாகனங்களும் தாக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனால் பக்தர்களிடையே பீதி ஏற்பட்டுள்ளது

Ragging நான்கு மானவிகள் தற்கொலை முயற்சி

மாணவர்களுடன் இணைத்து கிண்டல்:
அவமானமடைந்த நான்கு மானவிகள் தற்கொலை முயற்சி

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை, கொலமங்கலம் செல்லும் சாலையில் உள்ள செயின்ட் ஜோசப் உயர் நிலைப்பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கும் மாணவிகள் சாந்தினி, ரம்யா, திவ்யா, லட்சுமி ஆகிய நால்வரும் வகுப்பு தோழிகள்.
இந்த நால்வரும் நேற்று மதிய சாப்பாட்டு நேரத்தில் தாங்கள் கொண்டுவந்த சாப்பாட்டில் எலி மருந்தை கலந்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு வந்த நால்வரும் கொஞ்ச நேரத்தில் ஒருவர் பின் ஒருவராக மயக்கம் போட்டு கீழே விழுந்துள்ளனர்.

தமிழர்களையும், வாகனங்களையும் தாக்கும் விஷமிகள்- குமுளியில் 144 போலீஸ் தடை

இடுக்கி: முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை கையில் எடுத்துக் கொண்டு தமிழர்களையும், ஐயப்ப பக்தர்களையும், தமிழக வாகனங்களையும் விஷமிகள் தொடர்ந்து தாக்கி வருவதைத் தொடர்ந்து தமிழக, கேரள மாநில எல்லையில் உள்ள குமுளியில் 144 தடை உத்தரவை இடுக்கி கலெக்டர் பிறப்பித்துள்ளார்.
முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையை சில அரசியல் கட்சிகள் தூண்டி விட்டு வருவதால் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் சிலர் தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் குதித்துள்ளனர். தமிழகத்தில் கேரள மக்களுக்கு எதிராக ஒரு சம்பவம் கூட நடைபெறாமல், தமிழக மக்கள் மிகப் பொறுமையுடனும், பொறுப்புடனும் நடந்து வரும் நிலையில் கேரளாவின் இடுக்கி மாவட்டத்தில் தமிழர்களைத் தாக்குவது, வாகனகங்களைத் தாக்குவது, ஐயப்ப பக்தர்களைத் தாக்குவது என்று அடாவடி ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

அணை உடையப்போகிறது என்றால் தேக்கடி படகு சவாரியை ஏன் நிறுத்தவில்லை?

சென்னை: முல்லைப் பெரியாறு அணை எந்நேரமும் உடையும் என்று கூறி தொடர் போராட்டங்கள் நடத்தும் கேரளா தேக்கடியில் ஏன் படகு சவாரியை நிறுத்தவில்லை என்ற கேள்வி எழுந்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை நீர் தேங்கியிருக்கும் தேக்கடி ஏரியில் கேரள வனத்துறை மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் 12 படகுகள் இயக்கப்படுகின்றன. இந்த படகு சவாரி மிகவும் பிரபலம். இந்தியா முழுவதிலும் இருந்து கேரளாவுக்கு சுற்றுலா செல்பவர்கள் தவறாது தேக்கடி ஏரியில் படகு சவாரி செய்வார்கள். தினமும் 5 முறை படகுகள் இயக்கப்படுகின்றன. தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்கின்றனர். இதன் மூலம் நாள் ஒன்றுக்கு ரூ.1 லட்சம் வரை வருமானம் வருகிறது.

முல்லைப் பெரியாறு அணை: மத்தியப் படை பாதுகாப்பு கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் மனு

முல்லைப் பெரியாறு அணைக்கு மத்திய பாதுகாப்புப் படையின் பாதுகாப்புக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான வன்முறைச் சம்பவங்கள் கேரளாவில் அதிகரித்து வருகின்றன. தமிழர்களையும் தாக்கத் தொடங்கியுள்ளனர். ஐயப்ப பக்தர்களைத் தாக்கியும் அவமானப்படுத்தியும் வருகின்றனர். தமிழக வாகனங்களும் தாக்கப்படுகின்றன. தமிழக தொழிலாளர்களையும் நேற்று சிறைப்பிடித்த அக்கிரமச் சம்பவம் நடந்துள்ளது.

தப்பியது காங்.அரசு: நம்பிக்கை ஓட்டில் வெற்றி

ஐதராபாத்: ஆந்திரா சட்டசபையில் முதல்வர் கிரண்குமார் ரெட்டி தலைமையிலான அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் 38 ஒட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆந்திராவில் முதல்வர் கிரண் குமார் ரெட்டி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நேற்று சட்டசபையில் நடந்தது. இதில் ஆந்திர அரசு விவசாயிகள் தற்கொலை பிரச்சனை, தெலுங்கான பிரச்னை உள்ளிட்ட எல்லா நிலைகளில் தோல்வியடைந்துள்ளது.

திங்கள், 5 டிசம்பர், 2011

Kushboo ஒய் திஸ் கொலைவெறிம்மா: ஜெ.வைப் பார்த்து மக்கள் கேட்கிறார்கள்

பால் விலை, பேருந்து கட்டணத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் முதல்வர் ஜெயலலிதாவைப் பார்த்து ஏன் இந்த கொலைவெறிம்மா? உங்களுக்கு வாக்களித்தற்காகவா என்று கேட்கிறார்கள் என்று நடிகை குஷ்பு திமுக கண்டன பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
பால் விலை, பஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தென் சென்னை மாவட்ட திமுக சார்பில் தி.நகர் பஸ் நிலையம் அருகே சில தினங்களுக்கு நடந்த கண்டனப் பொதுக் கூட்டம் நடந்தது. அதில் குஷ்பு பேசுகையில்,
அம்மையார் ஜெயலலிதா சர்வாதிகாரி ஹிட்லர் போன்று ஆட்சி நடத்துறாங்க. ஆட்சிக்கு வந்தவுடன் சமச்சீர் கல்வித் திட்டத்தில் கை வைச்சாங்க. அதனால குழந்தைகள் எல்லாம் 3 மாதமாக பாடம் படிக்காம சும்மா பள்ளிக்கூடம் போனாங்க.
பசங்க படிப்பை 3 மாதம் கெடுத்தது போதாதென்று புத்தகங்களில் சில பக்கங்கள் மீது பேப்பரை ஒட்டி, உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்ததும் மறுபடியும் வேற பேப்பரை ஒட்டி ரூ.200 கோடிக்கு மேல் செலவு செஞ்சிருக்கீங்க. அந்த வீண் செலவை மிச்சப்படுத்தியிருந்தா பால் விலையை ஏற்றியிருக்க வேண்டாமே.

ரூ.6.23 லட்சம் வைத்திருந்த பிச்சைக்காரர் தஞ்சாவூர்

தஞ்சாவூர்: தஞ்சையில் திருட்டு தொடர்பாக பிச்சைக்காரரிடம் சோதனையிட்டதில் சிக்கிய, 6.23 லட்சம் ரூபாய்க்கு, அவர் வங்கி ரசீதுகளை காட்டி பணத்தை மீட்டுச் சென்றார். இது, போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி தாலுகா அலுவலக சாலை இரண்டாம் தெருவைச் சேர்ந்தவர் அப்துல் சமது, 55. இவரது மனைவி நூர்ஜகான், 45. இந்த தம்பதிகள் பிச்சை எடுப்பதை தொழிலாகக் கொண்டவர்கள். இருவரும் சேர்ந்து ஒரே இடத்தில் பிச்சை எடுப்பதில்லை. சீசனுக்கு தகுந்தாற்போல் திருச்சி, சென்னை, ஏர்வாடி, நாகூர் போன்ற ஊர்களில் உள்ள பள்ளிவாசல்களில், விழாக்கள் நடக்கும் போது பிச்சை எடுக்கச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

ஜெ. மீது நடவடிக்கை எடுக்கச்சொன்னால் பரஞ்சோதி என்னை மிரட்டுகிறார்: ஸ்டாலின்


Stalin
சென்னை: சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் முதல்வர் ஜெயலலிதா நிலத்தை அபகரித்துக் கொண்டிருப்பதற்காக அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டால் சட்டத்துறை அமைச்சர் என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டுகிறார் என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
சிறுதாவூரிலும், கொடநாட்டிலும் ஜெயலலிதா தனது பினாமிகள் பெயரால் நிலத்தை அபகரித்துக் கொண்டிருக்கிறாரே, அதன் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேட்டதற்கு, சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி என் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்போவதாக மிரட்டியிருக்கிறார்.சட்டத்துறை அமைச்சர் பரஞ்சோதி மீது டாக்டர் ராணி என்பவர் புகார் கொடுத்த போது போலீசார் அதனை வாங்க மறுத்ததால், டாக்டர் ராணி நீதிமன்றத்திலேயே மனு தாக்கல் செய்து, நீதிபதி உடனடியாக காவல் துறை வழக்கு பதிந்து விசாரிக்க வேண்டும்

Walmart ஊழியர்கள் 15 லட்சம் பேர் NO தொழிற்சங்கம்

வால் மார்ட் ! மலிவு விலையில் மரணம் !!சில்லறை வணிகத்தில் வால் மார்ட்! மலிவு விலையில் மரணம்!! வினவு"
சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீட்டை எதிர்க்கும் வணிகர்களை ஆதரிக்க முடியாது என நடுத்தர மக்களிடம் ஒரு கருத்து உருவாக்கப்படுகிறது. அது தவறு என்பதை இக்கட்டுரை படிக்கும் வாசகர்கள் புரிந்து கொள்ள முடியும்

www.vinavu.com
முன்னுரை:
சில்லறை வர்த்தகத்தில்  தனி வர்த்தக பொருள் சில்லரை வணிகத்திற்கு 100 சதவீத அன்னிய முதலீட்டையும், பன்முக வர்த்தக பொருட்கள் சில்லரை வணீகத்திற்கு 51 சதவீத அன்னிய முதலீட்டையும் அனுமதி அளித்து இந்திய பாரளுமன்றத்தில் காங்கிரஸ் கூட்டணி மசோதா தாக்கல் செய்து நிறைவேற்றியுள்ளது. சில்லறை வணிகத்தில்  அன்னய முதலீட்டை அனுமதிக்கும் காங்கிரசு அரசின் முடிவை எதிர்த்து 1.12.2011 அன்று இந்தியா முழுவதும் வணிகர்கள் கடையடைப்பு செய்து எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். அரசியல் கட்சிகளில் காங்கிரசு மட்டும்தான் இந்த முடிவை ஆதரிக்கிறது என்பதல்ல. எதிர்ப்பது போல தோன்றும் மற்ற சில கட்சிகள் உண்மையில் இந்த முடிவை மறைமுகமாக ஆதரிக்கின்றன என்பது ரிலையன்ஸ் பிரஷ் விசயத்திலேயே நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இனி வால்மார்ட் இந்தியாவுக்கு வருவதற்கு எந்த தடையுமில்லை.

Cong BJP CPM முல்லைப் பெரியாறு காங் – பா.ஜ.க – சி.பி.எம் கும்பல்


முல்லைப் பெரியாறு அணை பலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கிறதென உச்சநீதிமன்றம் உட்பட பல நிபுணர் குழுக்களும் ஆய்வு செய்து அவ்வப்போது அறிவித்தாலும், கேரளாவில் ஓட்டுக் கட்சி அரசியல்வாதிகள் கிளப்பும் பீதி ஓய்ந்தபாடில்லை. தற்போது அணையின் நீர்மட்டத்தை 120 அடியாக குறைத்தும், பின்னர் கூடிய விரைவில் அதை இடித்து புதிய அணை கட்ட வேண்டுமெனவும் அவர்கள் கேரளாவில் சூடு பறக்க பேசியும், ஆர்ப்பாட்டம் செய்தும் வருகிறார்கள். கேரள ஊடகங்களும் அதையே செய்து வருகின்றன.
தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசியல் கட்சிகளும் கேரள அரசு, அரசியல் கட்சிகளின் நிலையை எதிர்த்து வருகின்றன. இதில் துரோகம் செய்த திராவிடக் கட்சிகளும், அகில இந்தியக் கட்சிகளும் அடக்கம். இதைக் கண்டு கொள்ளாத தமிழின ஆர்வலர்களோ ஒரு படி மேலே போய் கேரள சமாஜம், கேரள பேருந்துகளை எதிர்த்து வருகின்றனர். முல்லைப் பெரியாறு விசயத்தில் தமிழகத்தின் பக்கம்தான் நியாயம் உள்ளது என்பதை ஒத்துக் கொள்பவர்கள் இதில் குறிப்பாக எதிர்க்க வேண்டிய சக்திகள் எது என்பதில் குழப்பத்தோடு இருக்கிறார்கள்.
இதில் நாம் கேரள மக்களை பகைத்துக் கொள்வதிலோ, அவர்களை எதிர்ப்பதிலோ பலனில்லை. அது இரு மாநில மக்களின் இனவெறிச் சண்டையாகத்தான் போய் முடியும்.

வாடகைத்தாய் மூலம் ஆமிர்கானுக்கு ஆண் குழந்தை பிறந்தது


Aamir Khan with Kiran Rao
வாடகைத்தாய் மூலம் ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.
நீண்ட காலத்திற்குப் பிறந்துள்ள இந்தக் குழந்தை எங்களுக்கு மிகவும் விசேஷமானது, சிறப்பானது என்று ஆமிர்கான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். ஆமிருக்கு தற்போது 46 வயதாகிறது என்பது நினைவிருக்கலாம்.
ஆமிர்கான் -கிரண் ராவ் தம்பதிக்கு திருமணமாகி பல காலமாகியும் குழந்தைப் பேறு கிடைக்கவில்லை. இதையடுத்து செயற்கை முறையில் கருவூட்டம் செய்து வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற ஆமிர்கான்-கிரண் முடிவு செய்தனர். அதன்பிட செயற்கை முறையில் கருத்தரிப்பு நடத்தப்பட்டு வாடகைத்தாயின் கருவறையில் ஆமிர்கான் தம்பதியின் குழந்தை வளர்ந்து வந்தது. தற்போது அழகான ஆண் குழந்தையை அந்த வாடகைத்தாய் பெற்றுள்ளார்.

Dirty Picture சில்க் ஸ்மிதா படத்துக்கு பாகிஸ்தானில் தடை!


The Dirty Picture Movie
டெல்லி: தற்கொலை செய்து கொண்ட சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ள த டர்டி பிக்சர் படத்தை திரையிட பாகிஸ்தான் தடை விதித்துள்ளது.
வித்யா பாலன், நஸ்ருதீன் ஷா நடித்துள்ள இந்தப் படம் இந்தியா முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. சில்க்ஸ்மிதா வேடத்தில் வித்யா பாலன் நடித்துள்ளார்.
பாகிஸ்தானில் இந்திப் படங்களுக்கு ஏக மவுசு. குறிப்பாக வித்யா பாலனுக்கு பாகிஸ்தானில் நிறைய ரசிகர்கள் உள்ளனர். எனவே தி டர்ட்டி பிக்சர் படத்தை 50 அரங்குகளில் வெளியிட திட்டமிட்டனர்.

ஈரோடு மேயர் மல்லிகா இது தாண்டா மல்லிகா

ஈரோடு மேயர் மல்லிகா அடித்த சிக்ஸர்! அருகில் நின்ற நபருக்கு பிராக்ஸர்!!

Viruvirupu

Erode, India: BJP state president Pon Radhakrishnan condemn the misbehavior of Erode Mayor Mallika Paramasivam. Mr. Radhakrishnan said a photographer of a Tamil daily Kalai Kadir, sustained injuries after being allegedly physically assaulted by AIADMK Mayor.

“அ.தி.மு.க.வில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஒரு புதிய நட்சத்திரம் ஈரோடில் உருவாகின்றது! மேயராகப் பதவியேற்ற ஓரிரு நாட்களிலேயே அமைச்சர் முதல், அதிகாரிகள் வரை பலரையும் அலற வைக்கிறார் ஈரோடு மேயர் மல்லிகா பரமசிவம்” இது தாண்டா மல்லிகா

கடந்த அக்டோபர் 31-ம் தேதி விறுவிறுப்பு.காம் வெளியிட்ட செய்தி, மேலே குறிப்பிட்ட வாக்கியங்களுடன் ஆரம்பமாகியிருந்தது.
இந்த ஒரு மாத காலத்தில் மேயர் நன்றாக முன்னேறிவிட்டார். அப்போதெல்லாம் தனது வார்த்தைகளால் ஆட்களை அலறவைத்த மேயர், இப்போது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுவதில்லை. கையை முறுக்கி அலற வைக்கிறார்.
விஜயசாந்தி தெலுங்கு டப்பிங் படக் காட்சிபோல மேயர் வீரசாகசம் செய்த நிஜ சம்பவம் ஒன்று சமீபத்தில் ஈரோடில் நடைபெற்றதற்கு, பாரதீய ஜனதா காட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதா கிருஷ்ணன், “இந்தப் பெண்மணி மேயர் பதவிக்கே தகுதியற்றவர்” என்று கூறியுள்ளார்.

கேரள எல்லையில் பதற்றம் முற்றுகிறது முல்லைப்பெரியாறு விவகாரம்

மதுரை : முல்லைப் பெரியாறு அணை பிரச்னை முற்றுகிறது.  கேரளாவில்  அரசு மற்றும் அரசியல் கட்சிகள் இந்தப் பிரச்னையை பூதாகாரமாக்கி,  மக்களிடையே பீதியை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் தமிழக எல்லைப் பகுதியிலும் பெரியாறு அணை பகுதியிலும் வன்முறை ஏற்படும்  பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பெரியாறு அணை பிரச்னையில் பதற்றத்தை தணிக்க தமிழகம் மற்றும் கேரள உயர் அதிகாரிகளின் கூட்டத்தை மத்திய அரசு இன்று நடத்த ஏற்பாடு செய்திருந்தது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையால் எந்த பயனும் ஏற்படாது என்பதால் இந்த கூட்டத்தில் பங்கேற்க தமிழக அரசு மறுத்துவிட்டது. இதனால், அடுத்து என்ன செய்வது என்பது பற்றி மத்திய அரசும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.

FDI சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜீவனம்

அதிகாலை நான்கு மணிக்கு ஆயிரம் ரூபாய் வட்டிக்கு வாங்கி, தள்ளு வண்டியில் காய்கறி விற்று, மாலை வட்டியும் முதலுமாகத் திருப்பிச் செலுத்தி, பிழைப்பு நடத்தி வரும் தள்ளு வண்டி வியாபாரிகள் முதல் டிபார்ட்மெண்ட் ஸ்டோர்ஸ் அண்ணாச்சிமார் வரை பலர் சில்லறை வியாபாரிகள் என்றே அழைக்கப்படுகிறார்கள். சில்லறை வர்த்தகத்தை நம்பி நாலு கோடி மக்களின் ஜீவனம் இருக்கிறது. இதனைத்தான் குறி வைத்து வருகிறது அந்நிய நேரடி மூலதனம்.
இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக இருந்தும், உலக வங்கியில் பணியாற்றியும் அனுபவம் பெற்றவர் மன்மோகன். பகீரதப் பிரயத்தனம் செய்தும் இது நாள் வரை விலைவாசி உயர்வை இவரால் கட்டுப்படுத்த முடியவில்லை. புதிய தாராளமயக் கொள்கைகளின் விளைவால் ஏழைப் பணக்காரன் இடைவெளி உயர்வையும் கட்டுப்படுத்த முடியவில்லை. வேளாண்மை நெருக்கடி முற்றிக் கொண்டு வருகிறதே தவிர குறைப்பதற்கான மருந்து பிரதமரிடம் இல்லை. போதாக்குறைக்கு ஊழல்களின் உச்சகட்ட தாண்டவம் வேறு. இதிலெல்லாம் கவனம் செலுத்த முடியவில்லை ஆனால், அந்நிய நேரடி முதலீடு மட்டும் வேண்டுமாம்!

இந்தியர்களிடம் ஒரு கோடியே 80 லட்சம் கிலோ தங்கம்

புதுடில்லி: "இந்தியர்களிடம், 50.35 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள 18 ஆயிரம் டன் தங்கம் (ஒரு கோடி 80 லட்சம் கிலோ) உள்ளது' என, ஆராய்ச்சி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.

உலகளாவிய ஆராய்ச்சி நிறுவனமான மேக்குவாரி கூறியுள்ளதாவது: தங்கம் நுகர்வு, இந்தியர்களின் கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தோடு ஒன்றிப் போனது. உலகளவில் தங்கம் நுகர்வில், முதலிடம் வகிக்கும் நாடு இந்தியா. இதற்கு, அடுத்த இடத்தில் சீனா உள்ளது. இந்தியர்களின் வீடுகளில் உள்ள மொத்த தங்கத்தின் அளவு, 18 ஆயிரம் டன் இருக்கும். இது, உலகளவில் உள்ள தங்கத்தில், 11 சதவீதம். இந்தத் தங்கத்தின் மதிப்பு, 50.35 லட்சம் கோடி ரூபாய். டாலர் மதிப்பில் பார்த்தால், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 50 சதவீதம்.

முல்லைப்பெரியாறு நீதிபதி ஆனந்துக்கு கலைஞர் கடிதம்

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என இதுகுறித்து விசாரணை நடத்தி வரும் ஐவர் குழுவின் தலைவர் நீதிபதி ஆனந்துக்கு தி.மு.க., தலைவர் கலைஞர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், அணையின் நீர்மட்டத்தை பாதுகாப்பு காரணத்தை காட்டி 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரளாவின் கோரிக்கையை ஏற்கக்கூடாது என்றும், அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அணைக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும், தேவையில்லாமல் பீதியை கிளம்பும் கேரள அரசின் நடவடிக்கைகளை கண்டிக்க வேண்டும்’’ என்றும் கோரியுள்ளார்.

NTR லட்சுமி பார்வதியை வெளியேற்றினார் என்டிஆர் ராமகிருஷ்ணா


Lakshmi Parvathi
ஹைதராபாத்: மறைந்த முதல்வர் என்.டி.ராமாராவுக்குச் சொந்தமான வீட்டில் குடியிருந்து வந்த தனது சித்தி லட்சுமி பார்வதியை, என்.டி.ஆரின் மகன் ராமகிருஷ்ணா அதிரடியாக வெளியேற்றி விட்டார்.

என்.டி.ஆர். கடைசிக்காலத்தில் லட்சுமி பார்வதியை மணமுடித்துக் கொண்டார். இதற்கு என்டிஆர் குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக மருமகன் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, கட்சியையும் கைப்பற்றி, ஆட்சியையும் பிடித்துக் கொண்டார்.
அன்று முதல் இன்று வரை லட்சுமி பார்வதிக்கும், நாயுடு மற்றும் என்டிஆர் குடும்பத்துக்கும் ஆகாது. அவ்வப்போது இரு தரப்புக்கும் இடையே மோதல் நிலவி வந்தது.

இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணம்

88 வயதான பழம்பெரும் இந்தி நடிகர் தேவ் ஆனந்த் லண்டனில் மரணமடைந்தார். மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்ததாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
பாலிவுட்டின் காதல் மன்னன், எவர்கிரீன் ரொமான்டிக் சூப்பர்ஸ்டார் என்று அன்புடன் அழைக்கப்பட்டவர் தேவ் ஆனந்த். சமீப காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த தேவ் ஆனந்த்தை மருத்துவப் பரிசோதனைக்காக லண்டன் அழைத்து வந்திருந்தனர். அங்கு அவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அவர் உயிர் பிரிந்தபோது மகன் சுனில் உடன் இருந்தார்.
1946ம் ஆண்டு ஹம் ஏக் ஹெய்ன் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் தேவ் ஆனந்த்.

ஞாயிறு, 4 டிசம்பர், 2011

தனுஷின் கொலவெறிப் பாடல் மாணவர்களைக் கெடுத்து விடும்-கவலையில் ஆசிரியர்கள், பள்ளிகள்!

தனுஷ் எழுதி, அவரே பாடி உலகம் முழுவதும் ஹிட் ஆகியுள்ள கொலவெறிப் பாடலுக்கு தற்போது பல்வேறு ரூபங்களில் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. இந்தப் பாடல் குறித்து பள்ளி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்தப் பாடலால், மாணவர்களின் மன நிலையில் பெரும் பாதிப்பு ஏற்படும் என அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு ஏதாவது ஒரு பாடல் ஹிட் ஆகி விட்டால் அதை உடனே கப்பென்று பிடித்துக் கொண்டு பாட ஆரம்பித்து விடுகிறார்கள். பாடியவர்களுக்குக் கூட அந்தப் பாடல் மறந்து போயிருக்கும். ஆனால் அதை ஒரு தரம் மட்டுமே கேட்டு மனதில் ஏற்றி விடும் கில்லாடிகள் இந்தக் காலத்துக் குழந்தைகள்.

உணர்வுகளை அவமதிக்கும் வகையில் உள்ளது கொலை வெறிப் பாடல்- ஜாவேத் அக்தர்

Javed Akhtar and Danush
மும்பை: வைரஸ் போல இணையதளங்கள் மூலம் படு வேகமாக பரவி வரும் தனுஷ் எழுதி, அவரே பாடிய கொலை வெறிப் பாடலுக்கு பிரபல இந்தி பாடலாசிரியர் ஜாவேத் அக்தர் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மக்களின் உணர்வுகளை அவமதிக்கும் பாடல் என்று அவர் சாடியுள்ளார்.
ஒய் திஸ் கொலைவெறி கொலைவெறிடி ... இந்தப் பாடல்தான் இன்றைய இளைஞர்களின் வாய் முழுக்க நர்த்தனமாடி வரும் பாடல். தமிழையும், ஆங்கிலத்தையும் கலந்து குழைத்து உருவாக்கப்பட்டுள்ள பாடல் பட்டி தொட்டி மற்றும் இன்டர்நெட்டில் பிரபலமாகி விட்டது. ரஜினிக்கும் கூட இந்தப் பாடல் பிடித்துப் போய் பாடலைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்தாராம்.

என்ன விளையாடுகிறீர்களா? ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட்டில் வாங்கிய சூடு!

Viruvirupu

New Delhi, India: The Supreme Court yesterday (Tuesday) asked Tamil Nadu government “What is happening in the state? Is there any rule of law in the state? There should be some rule of law.” This remark came on the case for sacking 15,000 panchayat workers appointed by the previous DMK government.“Exactly five years ago they are appointed. Then they are removed. Then after next five years another government comes and makes the appointment,” Supreme Court bench of justices D K Jain and A R Dave remarked.

தமிழக அரசு விரும்பத்தகாத விமர்சனம் ஒன்றை சுப்ரீம் கோர்ட்டிடமிருந்து கேட்க வேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது மக்கள் நலப் பணியாளர்கள் 15,000 பேரை பணி நீக்கம் செய்து நவம்பர் 8-ம் தேதி தமிழக அரசு இட்ட உத்தரவு.
இந்த விஷயத்தில் தேவையில்லாமல் சுப்ரீம் கோர்ட்வரை சென்றது தமிழக அரசுதான். போன இடத்தில் பொல்லாப்பும் வாங்கியிருக்கிறது.
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் டி.கே. ஜெயின், ஏ.ஆர். தேவ் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்னால் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மனு நேற்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வந்தது. “இவர்களை (மக்கள் நலப் பணியாளர்கள்) ஒரு அரசு நியமிக்கிறது. 5 ஆண்டுகளுக்கு பின்னர் ஆட்சிக்கு வரும் மற்றொரு அரசு, அவர்களை வீட்டுக்கு அனுப்புகிறது. பின்னர் மீண்டும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அவர்கள் அனைவரும் மீண்டும் பணியில் சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர்.

கனிமொழியைச் சிறை தள்ளவைத்ததே கலைஞரை கட்டிப்போடத்தான்


கடந்த ஆறு மாதங்களாக கலைஞரின் நெஞ்சில் உறுத்திக் கொண்டிருந்த நெருஞ்சி முள் இன்று அகன்றது. அவ்வகையில் திமுக சார்பு சிந்தனைகள் கொண்டவன் என்கிற வகையில் கனிமொழிக்குக் கிடைத்திருக்கும் ஜாமீன் எனக்கு பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.
ஜெயலலிதாவின் ஆட்சி, முன்னெப்போதும் இல்லாத வகையில் கொடுங்கோல் ஆட்சியாக தற்போது மலர்ந்திருக்கிறது. ஆனாலும், அதற்கு எதிரான கலைஞரின் குரல் வலுவற்றதாகவே இருந்து வருகிறது. இது கலைஞரின் வழக்கமில்லை. மிக வலுவான எதிரியாக இருந்த எம்.ஜி.ஆருக்கே ‘தண்ணி’ காட்டிக் கொண்டிருந்தவர், இப்போது ஏன் ஆமை வேகத்தில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்?
புதிய தலைமைச் செயலக இடமாற்றம், சமச்சீர்க் கல்வி குழப்பம், காவல்துறையினரின் பரமக்குடி தலித் படுகொலை, நூலக இடமாற்றம், பஸ்-பால்-மின்சார விலையேற்றம் என்று அடுத்தடுத்து அராஜக பிரம்மாஸ்திரங்களை ஜெ. ஏவிக்கொண்டிருக்கிறார். இத்தகைய படுமோசமான சூழலில், அரசியல் சிக்ஸர்கள் அடிக்க வேண்டிய கலைஞரோ, அவரது வழக்கமான சீற்றத்தை காண்பிக்கவில்லை.

கருணாநிதியை அதிர்ச்சியில் உறையவைத்த தேர்தல் முடிவு இது.


சட்டமன்றத்தில் அனல் பறந்துகொண்டிருந்தது. சபாநாயகர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்துள்ளது. ஆகவே, சபாநாயகர் அவைக்குத் தலைமை தாங்கக் கூடாது; துணை சபாநாயகரைக் கூப்பிடுங்கள் என்பது ஆளுங்கட்சியின் கோரிக்கை. அதற்கான அவசியமே இல்லை. விவாதத்துக்கு வேறொரு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ள நிலையில் நானே அவைக்குத் தலைமை தாங்குவேன் என்பது சபாநாயகர் மதியழகனின் வாதம். தமிழக சட்டமன்றம் இதற்குமுன்னால் சந்தித்திராத புதிய சர்ச்சை.
பலத்த சலசலப்புகள் எழுந்த சூழ்நிலையில் சபாநாயகர் நாற்காலிக்குக் கீழே புதிய நாற்காலி ஒன்று போடப்பட்டது. துணை சபாநாயகர் சீனிவாசன் வந்து அந்த நாற்காலியில் வந்து உட்கார்ந்தார். ஆம், சபாநாயகருக்குப் போட்டியாக துணை சபாநாயகரைக் களத்தில் இறங்கியிருந்தார் கருணாநிதி. சபாநாயகரைக் கையில் வைத்துக்கொண்டு தனக்கு எதிராக எம்.ஜி.ஆர் தொடங்கிய யுத்தத்துக்குப் பதிலடி கொடுக்கக் கருணாநிதி தயாராகிவிட்டார் என்பது   தெரிந்தது.

வேலைக்கார பெண் எரித்துக் கொலை இளம் பெண்ணுக்கு ஆயுள் சிறை


சென்னை, : வீட்டில் வேலை செய்த பெண்ணை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற வீட்டு உரிமையாளரான பெண்ணுக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை செஷன்ஸ் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
சென்னை சூளைமேடு சங்கராபுரம் தெருவில் வசிப்பவர் சுதீர் பல்சந்தானி. இவரது மனைவி பிரியா (32). இவர்களது வீட்டில் பரமேஸ்வரி என்பவர் வீட்டு வேலை செய்து வந்தார். அவருக்கு மாதம் ரூ.2 ஆயிரம் சம்பளம். ஆனால் சம்பளத்தை சரியாக கொடுப்பது இல்லையாம். இந்நிலையில், பிரியாவிடம் வாங்கிய 15 ஆயிரம் ரூபாய் கடனை திரும்ப கொடுக்க முடியாமல் பரமேஸ்வரி சிரமப்பட்டுள்ளார். இதனால் இருவருக்கும் அடிக்கடி வாய்த்தகராறு ஏற்படும்.

இந்நிலையில், கடந்த 2008 செப்டம்பர் 15ம் தேதி பிரியா வீட்டில் இருந்து தீக்காயத்துடன் பரமேஸ்வரி அலறியுள்ளார். இதைக்கேட்ட பக்கத்து வீட்டினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரமேஸ்வரி கொடுத்த மரண வாக்குமூலத்தில், ‘‘பிரியா, என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்திவிட்டார்ÕÕ என்று கூறினார்.

சென்னையில் மட்டும் 50 ஏஜென்ட்கள் அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தல்

‘அயல் நாடுகளுக்கு ஆள் கடத்தும் பிசினஸ் அமோகமாக நடக்கிறது சென்னையில்’ & இப்படியொரு தகவல், அதிலும் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுவது அதிர்ச்சி அளிக்கக் கூடியதாகத்தான் இருக்கும்.
அபின், ஹெராயின், ஆயுதம் என்று வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் பொருட்களின் பட்டியல் கொஞ்சம் பெருசு. அதிலே புதிதாக இடம் பிடித்திருப்பது ஆள் கடத்தல். அப்படியென்றால்? பணத்துக்காக ஆளை கடத்துவது பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். பணம் வாங்கிக் கொண்டு ஆளை கடத்துவது கேள்விப்படாத விஷயம். அதற்காக சென்னையில் 50 ஏஜென்ட்கள் வரை இருக்கிறார்கள் என்றால், இந்த வியாபாரம் எந்தளவுக்கு கொடிகட்டி பறக்கிறது என்பதை தெரிந்து கொள்ளலாம்.

அந்த 50 பேரும் விலை உயர்ந்த, வெளிநாட்டு இறக்குமதி கார்களில் வலம் வரக் கூடிய அளவுக்கு இதிலே பணம் புழங்குகிறது என்பதால், இந்த விவகாரத்தை சிபிஐ கையில் எடுக்க வேண்டும் என்ற பேச்சு, மெல்ல கிளம்பியுள்ளது.

ஆசிரியர்களின் பாலியல் தொல்லையால் அரசு பள்ளி மாணவியர் அவதி

தர்மபுரி மாவட்ட அரசுப் பள்ளிகளில், சில ஆசிரியர்கள், மாணவியருக்கு செக்ஸ் டார்ச்சர் மற்றும் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.பல மாணவியர் இந்த பிரச்னையை வெளியில் சொல்லாமல் மூடி மறைப்பதால், தொடர்ந்து கிராமப் பகுதி பள்ளியில், "வேலியே பயிரை மேயும்' அவல நிலை நீடித்து வருகிறது.

கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய தர்மபுரி மாவட்டத்தில், பெண் கல்வியின் நிலை, பெரும் கேள்விக்குறியாக இருந்து வருகிறது. அரசின் பல்வேறு திட்டங்கள் மூலம், பெண் கல்வியை ஊக்குவிக்கும் விதமாக, ஐந்தாண்டுகளில் பெண் கல்விக்கு, அதிமுக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. பல பள்ளிகளில், ஆசிரியர்கள் மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுக்கும் போக்கு, கிராமப் பகுதி பள்ளிகளில், அதிகம் நடந்து வருகிறது. இது தொடர்பாக, பிரச்னைகள் வரும் போது, சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஜாதி பின்னணி, அரசியல் செல்வாக்கு உள்ளிட்ட காரணங்களால், தப்பும் சம்பவம் அதிகம் நடந்து வருகிறது. ஆசிரியர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவது, தர்மபுரி மாவட்டத்தில், அதிகம் நடப்பதை, சமூக ஆர்வலர்கள் பலர் வேதனையுடன் கூறி வருகின்றனர்.

Car உடைப்பு; தாக்குதல் - நடிகை புவனேஸ்வரி மீது புகார்


தியாகராயநகர் சிங்காரம் தெருவில் வசித்து வரும் பைனான்சியர் அசோக் குமார் கடந்த 29-ந் தேதி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். 
அதில் நடிகை புவனேஸ்வரி என்னிடம் வாடகைக்கு கார் எடுத்திருந்தார். அதற்கான வாடகை தொகையை (மாதம் ரூ.40 ஆயிரம்) தராமல் இழுத்தடித்து வருகிறார். எனது காரும் எங்கிருக்கிறது என்று தெரியவில்லை.
இதுபற்றி கேட்டபோது கார் வெளியூரில் சூட்டிங்கில் இருக்கிறது என்று கூறுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்து காரை மீட்டு தரவேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு விளக்கம் அளித்த நடிகை புவனேஸ்வரி, வாடகை கார் திருட்டு போய்விட்டதாக கூறியிருந்தார்.
இந்நிலையில் நேற்று இரவு பைனான்சியர் அசோக்குமார் தனது வீட்டு முன்பு நின்று போனில் பேசிக் கொண்டு இருந்தார்.
அப்போது 15 பேர் கொண்ட கும்பல் அங்கு வந்தது. அவர்கள் திடீரென அசோக்குமாரை சரமாரியாக தாக்கினர். இதனால் வலி தாங்க முடியாமல் அவர் அலறி துடித்தார்.

84 வயது பாட்டியின் டிரஸ், பேண்டீஸ் உள்ளிட்டவற்றை கழற்றி சோதனை செய்த அமெரிக்க அதிகாரிகள்!

Lenore Zimmerman
நியூயார்க்: நியூயார்க்கின் ஜான் எப் கென்னட விமான நிலையம் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளது. 84 வயதான ஒரு பாட்டியை முட்டி போட வைத்தும், உடைகளை கழற்றியும் சோதனையிட்டுள்ளனர் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள். இதுகுறித்து அந்தப் பாட்டி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

சமீபத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை ஷூ, கோட்டை கழற்றச் சொல்லி சோதனையிட்டு இதே விமான நிலைய அதிகாரிகள் அவமானப்படுத்தினர். இதற்கு இந்தியாவிலிருந்து கடும் கண்டனம் எழுந்தது. இதையடுத்து சில அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Nano நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரிப்பு


Tata Nano

நானோ கார் விற்பனையை அதிகரிக்க டாடா மோட்டார்ஸ் எடுத்து வரும் முயற்சிகளுக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. கடந்த மாதம் நானோ கார் விற்பனை 12 மடங்கு அதிகரித்துள்ளது.
உலகின் குறைந்த விலை காராக இன்று வரை பெயரை தக்கவைத்து வரும் நானோ காரின் விற்பனை தொடர்ந்து சரியத் துவங்கியது. இதனால், நானோ காரின் விற்பனையை அதிகரிக்க பல்வேறு சலுகை திட்டங்களையும்,விளம்பர பிரச்சாரங்களையும் செய்து வருகிறது.
இதனால், நானோ கார் விற்பனை தற்போது ஏறுமுகத்தில் செல்ல துவங்கியுள்ளது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 6,401 நானோ கார்களை விற்பனை செய்துள்ளது.