சனி, 11 அக்டோபர், 2014

பன்னீர்செல்வம் இன்னும் முதலமைச்சர் ஆகல்லியா ? கூச்சம் சோகம் நடிப்பு நாடகம் தொடர்ந்தால் 356 ?

இப்போது தலைமைச் செயலகம் எப்படி இருக்கிறது?
'ஓ.பன்னீர்செல்வம் என்னும் நான்...’ என்று முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டவர், சில அறிக்கைகள்... சில ஆலோசனைகள் என்று மட்டுமே நாட்களை நகர்த்தி வருகிறார். அமைச்சர்கள் யாரும் முதல்வரை கண்டுகொள்வதே இல்லை. நத்தம் விஸ்வநாதன், எடப்பாடி பழனிச்சாமி, வைத்தியலிங்கம் ஆகிய மூன்று அமைச்சர்கள் மட்டும் எப்போதும் முதல்வரோடு வருகிறார்கள், போகிறார்கள். மற்ற அமைச்சர்களில் சிலர் அவரவர் சொந்த ஊர்களில் உண்ணாவிரதம், போராட்டம் என்று கோதாவில் இறங்கிவிட்டனர். இன்னும் சிலரோ, பெங்களூரில் உள்ள ஸ்டார் ஹோட்டல்களில் ரூம்போட்டு பரப்பன அக்ரஹாராவில் தினமும் அட்டண்டென்ஸ் போட்டுத் திரும்புகிறார்கள். பதவியேற்பு விழாவில் கண்ணீர்விட்டு அழுது புரண்ட அமைச்சர்கள் சிலர், பெங்களூரில் அந்தச் சோகத்தைத் துளியும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் சுற்றி வருகிறார்கள். 'க்ளைமேட் ரொம்ப நல்லா இருக்கு. இங்கேயே இருந்திடலாம்போல!’ என்றும் சிலர் பேசிக்கொண்டார்களாம்.

ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை ! சசிகலாமூலமே அதிமுகவினருக்கும் அதிகாரிகளுக்கும் தகவல் பரிமாற்றம் !

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள ஜெயலலிதா இதுவரை யாரையுமே சந்தித்து பேசவில்லை. முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்.பி.க்கள் எம்.எல்.ஏ.க்கள், மூத்த தலைவர்கள் என பலர் முயற்சி செய்தும், எந்த அ.தி.மு.க. பிரமுகருக்கும் முக்கியத்துவம் கொடுத்து அவர் சந்திக்கவில்லை. அது போல அரசு அதிகாரிகளும் முயற்சி செய்து இந்த விஷயத்தில் ஏமாற்றமே அடைந்தனர்.
ஜெயிலில் அவர் அதிகம் பேசுவது சசிகலாவிடம் மட்டுமே இது தவிர தன்னை தினமும் பரிசோதிக்கும் டாக்டர்கள் குழுவினரிடமும், பாதுகாப்பு அதிகாரிகளிடமும் அவர் பேசுகிறார். மற்றபடி யாரிடமும் ஜெயலலிதா பேசுவதில்லை.
சிறை அறையில் பெரும்பாலும் அவர் ஆங்கிலப் புத்தகங்களை படிக்கிறார். படிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் சசிகலாவிடம் பேசுகிறார்.
ஜெயலலிதா யாரையும் சந்திக்க மறுப்பதால், ஜெயலலிதாவை பார்க்க வரும் அ.தி.மு.க. நிர்வாகிகள் அனைவரையும் சசிகலாவே சந்திக்கிறார். கட்சிக்காரர்கள் சொல்லும் தகவல்களை கேட்டு, ஜெயலலிதாவிடம் அவர் தெரிவிக்கிறார்.

அரசியலுக்கு வரக்கூடாது? மீறி வந்தால் கீழே தள்ளுவேன் ? ரஜினிக்கு சுப.உதயகுமாரன் எச்சரிக்கை!

சினிமாப் புகழை மட்டுமே மூலதனமாகக் கொண்டு, பல்லக்குத்தூக்கிகள் துணையோடு தலைவராக எத்தனித்தால், தங்களை கீழேத் தள்ள என்னாலான அனைத்தையும் செய்ய நான் உறுதி பூணுகிறேன். தங்களின் பிரபலம், பணபலம், படைபலத்தில் ஒரு விழுக்காடுகூட எனக்குக் கிடையாதுதான். ஆனால் தமிழன் எனும் செருக்கும், தமிழினம் காக்க விரும்பும் அடிவயிற்று நெருப்பும் நிறையவே இருக்கின்றன" என்று  சுப.உதயகுமாரன் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிக்கு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்புப் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளரும், ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்தவருமான சுப.உதயகுமாரன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், ரஜினிக்காக எழுதியுள்ள திறந்த மடல் வணக்கம். எனது பெயர் சுப. உதயகுமாரன்; நான் ஒரு சமூகப் போராளி. தாங்கள் நடித்த பதினாறு வயதினிலே, முள்ளும் மலரும் போன்ற திரைப்படங்களைப் பார்த்திருக்கிறேன். தாங்கள் ஒரு நல்ல மனிதர், ஆன்மீக ஈடுபாடு கொண்டவர் என்றெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறேன்.

குறையொன்றும் இல்லை ! இன்றைய வளர்ச்சியின் மறுபக்கத்தை வெளிப்படுத்தும் நல்ல படம் !

குறையொன்றுமில்லை - விமர்சனம்! வாழ வழியில்லாமல் விவசாயிகள் செத்துக்கொண்டிருக்கும் வேதனையான வேளையில், அங்கு என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பணத்தையும் விற்பனையையும் நோக்கியே ஒரு சொகுசு கும்பல் ஓடிக்கொண்டிருக்கிறது என்பதை குறையொன்றுமில்லை படம் மூலமாக உணர்த்திய வகையில் இயக்குனர் கார்த்திக் பாராட்டுக்குறியவர்விசயாயிகளின் முன்னேற்றம் தான் நாட்டின் முன்னேற்றம் என்பதை அழுத்தமாக சொல்கிறது குறையொன்றுமில்லை. முதலாளிகள் மட்டுமே பொருட்களை விற்று பணம் சம்பாதிக்கிறார்கள், ஆனால் அதே பொருட்களை உற்பத்தி செய்கிறவன் வாழ வழியில்லாமல் தற்கொலை செய்துகொள்கிறான் என்ற உண்மையை துணிச்சலோடும் பதிவு செய்கிறது இந்தத் திரைப்படம்.

அதிமுகவினர் மீண்டும் வன்முறை 8 பஸ்கள் உடைப்பு: 150 பேர் படுகாயம் விடிய விடிய பதற்றம்

திண்டிவனம்: ஜெயலலிதாவுக்கு ஜாமீன் மறுக்கப்பட்டதை தொடர்ந்து திண்டிவனம், திட்டக்குடியில் 6 அரசு பேருந்து உள்பட 8 பேருந்துகள் மீது அதிமுகவினர் கல்வீசி தாக்கியதில் 2 டிரைவர்கள் மண்டை உடைந்தது. திடீர் பிரேக் போட்டதால் 150 பயணிகள் படுகாயம் அடைந்தனர். சம்பவம் தொடர்பாக 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் விடிய விடிய பதற்றம் காணப்பட்டது.சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்து நேற்றிரவு காரைக்குடி நோக்கி புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. காரைக்குடியை சேர்ந்த ராஜதோரகன் (33) என்பவர் பேருந்தை ஓட்டிச்சென்றார். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே மேல்பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 1 மணி அளவில் வந்து கொண்டிருந்தபோது பேருந்து மீது மர்ம நபர்கள் சரமாரி கல்வீசி தாக்கினர். இதில் ரத்தக்காயம் அடைந்த டிரைவர் ராஜதோரகன் பேருந்தை நிறுத்த முயன்றார். திடீர் பிரேக் போட்டதால் பேருந்து குலுங்கி நின்றது. இதில் பயணிகள் சுமார் 50 பேர் இருக்கை, இரும்பு கம்பிகளில் தலைமோதி படுகாயம் அடைந்தனர்.

உச்ச நீதிமன்றம் : மோடி அரசு தூங்குகிறது ! அதுவும் கும்பகர்ணணைப் போலவாம் !

புதுடெல்லி: நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு கும்பகர்ணணைப் போல தூங்கிக் கொண்டிருக்கிறது என சுப்ரீம் கோர்ட் விமர்சித்துள்ளது.மத்திய அரசு மிகவும் வலிமையுடன் செயல்பட்டு வருகிறது என்றும், பிரதமர் மோடி மிகவும் கடினமாக உழைத்து வருகிறார் எனவும் பாஜ தலைவர்கள் பிரசாரத்தின் போது கூறி வருகிறார்கள். இந்த நிலையில் மத்திய அரசு கும்பகர்ணனை போல தூங்கிக் கொண்டிருப்பதாக சுப்ரீம் கோர்ட் குட்டியுள்ளது.உத்தரகண்டில் உள்ள அலக்நந்தா மற்றும் பாகீரதி ஆகிய நதிகளில் அமைக்கப்பட்டு வரும் 24 நீர் மின் உற்பத்தி திட்டங்கள் காரணமாக சுற்றுசூழல் மற்றும் அங்குள்ள மீன்வளம் உள்ளிட்டவை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என புகார் எழுந்தது. இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் மத்திய வனத்துறை மற்றும் சுற்றுசூழல் அமைச்சகம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டது. பல முறை வாய்ப்பு கொடுத்தும் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்யவில்லை. நல்ல செர்டிபிகேட் அப்படியே இன்னும் அஞ்சு வருஷம் போலோ பண்ணுங்க

மோடி ரகசிய பேரம்: மருந்துகளின் விலை கடுமையாக உயரும் ! 8,000 ரூபாய் புற்றுநோய் மருந்து 1 லட்சமாக உயரப்போகிறது ? காங்கிரஸ் கடும் கண்டனம் !

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு, தொழிலதிபர்களுடன் மேற்கொண்டுள்ள ரகசிய பேரத்தால், மருந்துகளின் விலை கடுமையாக உயரும் நிலை உருவாகியுள்ளது என்று காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் இந்த மாதம் 15ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மாநிலத்தின் தின்தோரி பகுதியில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் வெள்ளிக்கிழமை பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
அமெரிக்காவுக்கு பிரதமர் நரேந்திமோடி சுற்றுப்பயணம் செல்வதற்கு முன்னதாக அந்நாட்டைச் சேர்ந்த தொழிலதிபர்கள் குழுவினர் மோடியைச் சந்தித்து மருந்துகளின் விலைக்கான கட்டுப்பாட்டை நீக்க கேட்டுக்கொண்டனர். திரைமறைவில் நடைபெற்ற இந்த பேரத்தால், 8,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட புற்றுநோய்க்கான மருந்து தற்போது ரூ.1 லட்சமாக உயரப் போகிறது.

தேர்தல் பணியில் சிறுவர்களை ஈடுபடுத்தினால் அங்கீகாரம் ரத்தாகும் !

தேர்தல் பிரசாரத்திற்கோ அல்லது தேர்தல் தொடர்பான பணிகளுக்கோ, சிறுவர்களை, அரசியல் கட்சிகள் ஈடுபடுத்தினால், அந்தக் கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்' என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.மும்பை உயர் நீதிமன்றத்தில், தேர்தல் ஆணையம் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிரமாண பத்திரத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: அரசியல் கட்சிகளின் பதிவை, தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியாது. ஆனால், சட்டவிதிகளை மீறி செயல்படும் அரசியல் கட்சிகளின் சின்னத்தை, தேர்தல் ஆணையம் முடக்க முடியும்; கட்சியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய முடியும்.

Facebook Mark Zuckerberg: இந்திய கிராமங்களுக்கு இலவச இன்டர்நெட் வழங்க முன்வருகிறார் பேஸ்புக் தலைவர்

புதுடில்லி:இந்தியா கிராமங்களுக்கு இலவசமாக இணையதள சேவை வழங்க, பேஸ்புக் சமூக தொடர்பு இணையதளத்தின் நிறுவனர்களில் முக்கியமானவரான மார்க் சுக்கர்பெர்க் முடிவு செய்துள்ளார். இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய அதிகாரிகளுடன் நடத்தியுள்ள பேச்சில், இதற்கான ஆலோசனை நடைபெற்றதாகவும், விரைவில் இதற்கான முறையான அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.  பாத்து, குறைந்த கட்டணம் அல்லது கட்டணம் இல்லா இணைய சேவை கொடுத்தால், அதனால் வருவாய் இழக்கும் டெலிகாம் ஜாம்பவான்கள் ஒன்று சேர்ந்து ஒரே அமுக்கா முக்கிடுவாய்ங்க.

வெள்ளி, 10 அக்டோபர், 2014

நீரிழிவு நோய்க்கு நிரந்தர தீர்வு விரைவில் ? உடலில் இன்சுலினை உற்பத்தி செய்யும் செல்கள் கண்டுபிடிப்பு !

துபாய்: நீரிழிவு நோயிலிருந்து விடுபட மருந்து வரப்போகிறது என்றால் இதில் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்குமே ஒரு பெரும் ஆனந்தம் தானே ஹார்வர்ட் பல்கலைக்கழத்தில் முதல் முறையாக அதிக அளவில் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த கண்டுபிடிப்பு ஒரு மிகப்பெரிய திருப்புமுனை என ஆராய்ச்சியாளர்கள் பாராட்டியுள்ளனர். இதன் மூலமாக 1 நீரிழிவு நோயினால் பாதிக்கபட்டுள்ள இன்சுலின் ஊசி போட்டுக்கொள்ளும் லட்சகணக்கானோர் பயன் பெறுவர். இதன் மூலம் ஹார்வர்டு பல்கலைகழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டவுக் மெல்டன் அவர்களின் 23 ஆண்டு கால ஆராய்ச்சியானது அதன் முடிவை நெருங்கியுள்ளது. பேராசிரியர் டவுக் மெல்டன் மகன் சாம் பிறந்த போது டைப் 1 வகை நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டு இருந்ததே அவரின் இந்த ஆராய்ச்சிக்கு காரணம்

43 மாணவர்கள் கொன்று புதைக்கப்பட்டனர் ? மெக்சிகோவில் போலீஸ் வெறியாட்டம் ?

ரியோடி ஜெனீரோ, அக் 10– வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த மாதம் (செப்டம்பர்) ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர்கள் குயர்ரோ மாகாணத்தில் உள்ள இகுவாலா நகரில் போராட்டம் நடத்தினார்கள். அப்போது மாணவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதலும் அதை தொடர்ந்து கலவரம் ஏற்பட்டது.
அப்போது மாணவர்கள் சென்ற பஸ் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். பின்னர் 43 மாணவர்களை காணவில்லை. அவர்களை போலீசார் கடத்தி சென்று கொலை செய்து எரித்து புதைத்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
இந்த நிலையில் கடந்த வாரம் 6 புதை குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அதில் எரிந்த நிலையில் 23 உடல்கள் இருந்தன. அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் கண்டு பிடிக்கப்படவில்லை.

சுனந்தா புஷ்கர் மரணத்திற்கு விஷம் காரணம்! மருத்துவ அறிக்கை ! கொலையா ? தற்கொலையா ?

மத்திய முன்னாள் மந்திரி சசி தரூரின் மனைவி சுனந்தா புஷ்கர் கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மர்மமான முறையில் பிணமாக கிடந்தார். இந்த மரணம் தொடர்பாக தற்போது அறிக்கை வெளியிட்டுள்ள டெல்லி ஏய்ம்ஸ் மருத்துவமனை, ‘சுனந்தாவின் உடலின் பல உறுப்புகளில் விஷம் பரவி இருந்ததே மரணத்துக்கு காரணம்’ என்று குறிப்பிட்டுள்ளது. சுனந்தாவே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது, யாராவது அவருக்கு விஷம் கொடுத்து கொன்று விட்டனரா? என்பது தொடர்பாக இந்த அறிக்கையில் தெளிவான விபரங்கள் தெரிவிக்கப்படாத நிலையில், சுனந்தாவின் மர்ம மரணம் தொடர்பாக விரிவான விசாரணை தேவை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

அமைதிக்கான நோபல் பரிசு மலாலாவுக்கும் கைலாஷ் சத்தியார்த்திக்கும் கிடைக்கிறது !

ஆஸ்லோ: அமைதிக்கான நடப்பாண்டின் நோபல் பரிசு இந்தியரான கைலாஷ் சத்யார்த்திக்கும் பாகிஸ்தான் சிறுமி மலாலாவுக்கும் வழங்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நோபல் கமிட்டியின் தலைவர் தோர்ப்ஜோயெர்ன் இன்று அமைதிக்கான நோபல் விருதுகள் பற்றிய அறிவிப்பை வெளியிட்டார். மொத்தம் 278 பேர் பெயர் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிசீலிக்கப்பட்டது. இறுதியாக இந்தியரான கைலாஷ் சத்யார்த்தி, பாகிஸ்தான் சிறுமி மலாலா ஆகியோருக்கு நடப்பாண்டின் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்செல் வழக்கு:தயாநிதி மாறன் குடும்பத்தின் ரூ742 கோடி சொத்துகளை பறிமுதல் செய்கிறது அமலாக்கப் பிரிவு

டெல்லி: ஏர்செல்- மேக்சிஸ் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தின் ரூ742 கோடி மதிப்பிலான சொத்துகளை பறிமுதல் செய்ய அமலாக்கப் பிரிவு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்திய தொழிலதிபர் சிவசங்கரனுக்கு சொந்தமான ஏர்செல் நிறுவனத்துக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்து மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு அதன் பங்குகளை விற்க செய்தார். அதனைத் தொடர்ந்து ஏர்செல் நிறுவனத்துக்கு ஸ்பெக்ட்ரம் உரிமத்தை தயாநிதி ஒதுக்கீடு செய்தார். இதற்கு ஆதாயமாக தயாநிதி மாறனின் சகோதரர் கலாநிதி மாறனுக்கு சொந்தமான சன் டைரக்ட் நிறுவனத்தில் மேக்சிஸ் நிறுவனம் ரூ629 கோடி முதலீடு செய்தது என்கிறது

கத சொல்லப் போறோம் ! குழந்தை திருட்டு பற்றிய படம் !


சென்னை: குழந்தை திருட்டை மையமாக வைத்து ‘கத சொல்லப் போறோம்‘ படம் உருவாகிறது. இதுபற்றி இயக்குனர் எஸ்.கல்யாணம் கூறியது:குழந்தைகளை திருடிச் செல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடக்கிறது. அதனால் பெற்றோர்கள் படும் வேதனை சொல்லி மாளாது. இதை மையமாக வைத்தும் அனாதை ஆசிரமத்து மாணவர், மாணவிகளுக்கும் அருகே உள்ள வசதியான பள்ளி மாணவ மாணவிகளுக்கும் இடையே நடக்கும் கலாட்டாவையும் இக்கதையில் கூறியிருக்கிறேன். இதில் ஆடுகளம் நரேன், விஜயலட்சுமி, காளி, சிவகுமார், குழந்தை நட்சத்திரங்கள் ஷிபானா, ரவீணா, அருண் அரவிந்த், ராகுல், சாமு, அர்ஜூன் நடிக்கின்றனர். ஜெபின் ஒளிப்பதிவு. பவன் இசை. எஸ்.கல்யாண், ஜே.ஜெயகிருஷ்ணன் தயாரிப்பு.tamilmurasu.com

வரி செலுத்துவோர் ரேஷன் பொருட்கள் பெற...தடை?

புதுடில்லி: வருமான வரி செலுத்துவோரையும், அரசு உயர் அதிகாரிகளையும், பொது வினியோக திட்ட வரம்பிலிருந்து அகற்றுவது குறித்தும், அவர்கள் ரேஷன் பொருட்கள் பெற தடை விதிப்பது குறித்தும், மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்த திட்டத்தை அமல்படுத்த முற்படும்படி, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, மத்திய அரசு, இது தொடர்பாக மாநில அரசுகளுடன் விவாதிக்கும்படியும், மத்திய உணவுத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானை கேட்டுக் கொண்டுள்ளது.
அதேநேரத்தில், முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் அமல்படுத்தப்பட்ட, உணவு பாதுகாப்பு திட்டத்தை தொடரவும் தீர்மானித்துள்ளது.இதுதொடர்பாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய உணவு அமைச்சர் பஸ்வான் கூறியதாவது:பொது வினியோக திட்டத்தின் கீழ், பயன் பெறக்கூடிய ஏழைகள் மற்றும் உணவு பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெறக்கூடிய ஏழைகள் எத்தனை பேர் என்பதை கண்டறிவது, கடினமான பணி.

இந்துவின் பார்வையில் ஜெயலலிதா ! கொஞ்சம் கொஞ்சமாகச் சரியும் அரசியல் அபிலாசைகள் ?

என்றும் அப்படியே தொடரும்!
ஜெயலலிதா பிணையில் வெளியே வந்ததும் தமிழக அரசை எப்படித் தன் கைப்பிடிக்குள் வைத்திருப்பார் என்பதுகுறித்து நாம் சிந்திக்கத் தேவையே இல்லை என்று நினைக்கிறேன். இதற்குப் பல முன்னோடிகள் உள்ளனர்.
சோனியா முதல் ராமதாஸ் வரை
பத்தாண்டுகள் இந்தியாவின் ஆட்சி சோனியா காந்தியின் கைகளின் இருந்தது. அவர் வெறும் நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமே. ஆனால், பெயரளவுக்குத்தான் மன்மோகன் சிங் பிரதமராக இருந்தார். சஞ்சயா பாரு, நட்வர் சிங் ஆகியோரின் புத்தகங்கள் இதனைத் தெளிவாகக் காட்டுகின்றன. சோனியா காந்தியின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி பிரதமர் அலுவலகத்தை வழிகாட்டி நெறிப்படுத்த என்றே புலோக் சாட்டர்ஜி என்று ஒரு தனிச் செயலர் பிரதமர் அலுவலகத்தில் இருந்தார். பால் தாக்கரேயின் வாழ்நாளில் மகாராஷ்டிரத்தில் அமைந்த சிவசேனை - பாஜக கூட்டணி ஆட்சி, தாக்கரேயின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர் ஒரு சட்டப்பேரவை உறுப்பினராகக்கூட இல்லை. தாக்கரே விரும்பியவர்தான் முதல்வர். அவர் சுட்டிக் காட்டியவர்கள்தான் அமைச்சர்கள். ஏன், தமிழகத்திலேயே ராமதாஸ் இருக்கிறாரே, அதிகாரபூர்வமாகப் பார்த்தால், அவர் பாமகவின் தலைவர்கூடக் கிடையாது (நிறுவனர்). இவர்கள் எல்லோரையும்விட பின்னிருந்து இயக்கும் வேலையை ஜெயலலிதாவால் மேலும் எளிதாகச் செய்துவிட முடியும்.

இல .கணேசன் : ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் ! அதிமுக பகிரங்க மன்னிப்பு கேட்கவேண்டும் !

அரசியல் பிரவேசம் குறித்து கேட்டு ரஜினிகாந்தை தர்மசங்கடத்துக்கு ஆளாக்காதீர்கள். அவர் அரசியலுக்கு வரமாட்டார் என்று பா.ஜனதா கட்சி தேசிய செயற்குழு உறுப்பினர் இல.கணேசன் கூறினார். பா.ஜனதா கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், தேசிய செயற்குழுவின் உறுப்பினருமான இல.கணேசன் ஈரோடு மாவட்ட பா.ஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனித்தன்மை பாரத பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பு ஏற்ற பின்னர் ஏராளமான சாதனைகளை செய்து உள்ளார். குறிப்பாக பிற பிரதமர்களை விட 2 விஷயங்களில் நரேந்திர மோடி தனித்தன்மையுடன் வேறுபட்டு நிற்கிறார். முதலாவது உலக நாடுகள் மத்தியில் பாரத நாட்டின் மரியாதை உயர்ந்து உள்ளது.

தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி : தமிழக அமைச்சர்கள் சொத்து மதிப்பை வெளியிட வேண்டும்:

மது இல்லா தமிழகம் உருவாக்கிட வலியுறுத்தி அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (தேசிய மாணவர் அமைப்பு) சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே உண்ணாவிரதம் மற்றும் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். அப்போது டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:–மிக இளவயதிலேயே அதிகமானோர் மதுபழக்கத்தால் மரணமடைகிறார்கள். அதனால் எங்களது கோரிக்கை என்னவென்றால் மதுவினால் வரும் வருமானத்தை வைத்து அரசு நடத்தாமல் முற்றிலுமாக பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும். பெங்களூர் சிறையில் மூன்று விஐ பி பெண்களுக்கும் ஊதுபத்தி செய்யும் வேலை கொடுக்கபட்டிருக்காம் .

கூடுதல் சாட்சிகளை சேர்க்க கனிமொழி எதிர்ப்பு

புதுடில்லி:'2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கில், கூடுதலாக சில சாட்சிகளை சேர்க்க அனுமதி வேண்டி, சி.பி.ஐ., தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்' என, தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார்.
கூடுதல் ஆவணங்கள்:2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றத்தில், நீதிபதி ஓ.பி.சைனி முன்னிலையில் நடந்து வருகிறது. இந்த ஊழல் வழக்கை விசாரித்த சி.பி.ஐ., சார்பில், சமீபத்தில் நீதிமன்றத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.அதில், 'வழக்கில் கூடுதல் சாட்சிகளாக, அமலாக்கத் துறை இயக்குனரகத்தின் துணை இயக்குனர் ராஜேஷ்வர் சிங், உதவி இயக்குனர் சத்தியேந்திர சிங், தகவல் ஒலிபரப்புத் துறை சார்பு செயலர் கபூர் உட்பட, சிலரைச் சேர்க்க அனுமதிக்க வேண்டும். அத்துடன் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யவும் வாய்ப்பு அளிக்க வேண்டும்' என கோரப்பட்டிருந்தது.

பாவமன்னிப்பு கேட்கும் புலி ? எந்த கங்கையிலும் போகாது இந்த அழுக்கு ?

டெலோ தலைவர் சிறீசபாரத்தினம் மற்றும் சக தோழர்கள் புலிகளால் சகோதரப் படுகொலை செய்யப்பட்ட 25வது வருட நினைவஞ்சலிக் கூட்டத்தில் NERDO-வாசுதேவன் ஆற்றிய உரை. மகாத்மா காந்தியடிகள் கூறிய ஒரு வாசகம்! கண்ணுக்கு கண் என்பது உலகை குருடாக்கிவிடும். மன்னிப்பு இல்லையேல் எதிர்காலம் இல்லை என்று நிற வெறிக்கெதிராக குரலெழுப்பிய Desmond Tutu ஆணித்தரமாக கூறுகிறார். மன்னிப்பு என்பது மறப்பதற்காக அல்ல! மாறாக மன்னிப்பு இல்லாவிட்டால் மனித எதிர்காலம் இல்லாது போய்விடும் என்று கூறுகிறார். இன்று நான் உங்கள் முன்நின்று உரையாற்றுவது எனது கடந்த காலத் தவறிற்கு பிராயச்சித்தம் தேட அல்ல. நாம் விட்ட தவறுகளை நீங்கள் இன்று மன்னித்தபோதும் நாம் இறக்கும் வரை அது நம்முடன் கூடவே பயணித்து அது எம்மை சித்திரவதை செய்யும். ஆனால் இன்று நீங்கள் என்னை இங்கு பேச அழைத்ததன் மூலம் அந்த சித்திரவதையில் இருந்து ஒரு சிறிய அசுவாசத்தை பெற உதவியிருக்கிறீர்கள். அதற்கு நான் உங்களிற்கு எனது மனமாரந்த நன்றியை தெரிவிக்கிறேன்.
தொடர்ந்து பிரச்சாரம் செய்வதால் பொய் உண்மையாகாது; யாவரும் கவனிக்கவில்லை எனில் உண்மை பொய் ஆகாது. பொது மக்கள் துணையின்றியும் உண்மை நிலைத்து நிற்கும். அது தன்னிலையுடையது. மகாத்மா காந்தியவர்கள் கூறிய இன்னுமெரு வாசகம். 1986 சித்திரை மாதம் 29ம் திகதி எமது தேசிய விடுதலைப் போராட்டம் தனது சாவு மணியை அடிக்க தொடங்கிய நாள்! நானும் எனது சகாக்களும் ஏன் எதற்கு என்று கூட கேள்வி கேட்க திரணியற்று மனித அவலம் ஒன்றிற்கு துணை போன நாள்! பாவியென்னை மறுபடியும் பிறக்க வைக்காதே செய்த பாவமெல்லாம் தீருமுன்னே இறக்க வைக்காதே .வஞ்சகனின் உடலெல்லாம் வாதம் வரவேண்டாமோ வாய்நிறைந்த பொய்யனுக்கு சூலம் வரவேண்டாமோ?

வியாழன், 9 அக்டோபர், 2014

பெண் திருமண வயது 21: உயர்நீதிமன்ற பரிந்துரையை செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தல்

பெண்ணின் திருமண வயது 21 என உயர்நீதிமன்ற பரிந்துரையை  செயல்படுத்த வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில்,
பருவக்கோளாறு காரணமாக ஏற்படும் காதலால் பெண்களின் வாழ்க்கை பாதிக்கப்படுவதைத் தடுக்க அவர்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை யோசனை தெரிவித்திருக்கிறது. நடைமுறை யதார்த்தங்களை உணர்ந்து, பெண்களின் நலனில் அக்கறை கொண்டு உயர்நீதிமன்றம் அளித்துள்ள இப்பரிந்துரை வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது.
பொறியியல் கல்லூரி மாணவி ஒருவர் கடத்தி திருமணம் செய்யப்பட்டது குறித்த வழக்கை விசாரித்த மதுரை உயர்நீதிமன்றம் இப்படி ஒரு பரிந்துரையை அளித்திருக்கிறது. காதல் நாடகத் திருமணங்களாலும், கடத்தல் திருமணங்களாலும் பாதிக்கப்பட்ட பெண்களும், அவர்களின் பெற்றோரும் அனுபவித்துவரும் வேதனைகளையும், மன உளைச்சலையும் உள்வாங்கி நீதிபதிகள் அளித்துள்ள பரிந்துரையும், தெரிவித்த  கருத்துக்களும் பாதிக்கப்பட்ட பெற்றோரின் மனக்காயங்களை ஆற்றும் மாமருந்தாக அமைந்துள்ளன.

உச்சநீதிமன்றத்தில் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு மட்டும் தாக்கல் ! ஏனைய முவருக்கும் தாக்கல் செய்யப்படவில்லை !

டெல்லி: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஜாமீன் மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு ஜாமீன் அளிக்குமாறு அதில் ஜெயலலிதா கோரிக்கை விடுத்துள்ளார். அதேசமயம், சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சார்பில் ஜாமீன் கோரி மனு எதுவும் வழங்கப்படவில்லை. உச்சநீதிமன்ற பதிவாளர் ஜெனரலிடம் ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை அதிமுக வக்கீல்கள் இன்று தாக்கல் செய்தனர். இந்த மனுவில், எனக்கு 66 வயதாகிறது. எனக்கு பல உடல் உபாதைகள் உள்ளன. எனக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்துள்ளது. என்னால் குறைந்தது அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோர முடியாத நிலை உள்ளது. எனவே நான் ஒரு பெண் என்பதையும், எனது உடல் நிலையையும் கருத்தில் கொண்டு எனக்கு ஜாமீன் அளிக்க வேண்டும். பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் எனக்கு விதித்துள்ள தண்டனையையும் நிறுத்தி வைத்து உத்தரவிட வேண்டும் என்று ஜெயலலிதா கோரியுள்ளார்.இதையே இனி முன்மாதிரியாக கொண்டு இந்தியாவின் சகல குற்ற வாளிகளும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகளை நிறுத்தி வைக்குமாறு கோரலாமுங்கோ ? சீக்கிரம் வல்லரசாக இது தான் நல்ல வழி !

பாகிஸ்தான் உளவாளி அருண் செல்வராசனை காவலில் விசாரிக்க மீண்டும் மனு !

அருண்செல்வராசனை காவலில் எடுத்து விசாரிக்க தேசிய புலனாய்வு அதிகாரிகள் மீண்டும் மனு பாகிஸ்தான் உளவாளியாக செயல்பட்ட ஜாகீர் உசேன் கடந்த வருடம் தேசிய புலனாய்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து அவரது கூட்டாளிகள் சிவபாலன், முகமதுசலீம், ரசீக் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.இவர்களிடம் நடத்திய விசாரணையில் சென்னை விருகம்பாக்கம் சாலிகிராமத்தில் தங்கியிருந்து பாகிஸ்தானுக்கு உளவு சொன்ன இலங்கையை சேர்ந்த அருண் செல்வராசன் என்பவன் கைது செய்யப்பட்டான்.அனைவரும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். சொத்துகுவிப்பு கிளிசரின் காவியத்தின் களேபரத்தில் இவனை மீடியாக்கள் கொஞ்சம்  மறந்திட்டாய்ங்க போல ?

லஞ்சத்தை வெள்ளையாக ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் தொடங்கிய 'டுபாக்கூர்' நிறுவனங்கள்! ஆயிரம் எபிசொட்டுக்கு இது போதும் ?

பெங்களூர்: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கின் தீர்ப்பு 1,136 பக்கங்களில் வெளியாகியுள்ளது. இந்தத் தீர்ப்பு விவரத்தை படிக்க படிக்க ஏராளமான தகவல்கள், திகில் விஷயங்கள், அதிர வைக்கும் விவகாரங்கள்... தீர்ப்பிலிருந்து கொஞ்சம் இதோ.... பெயர்: ஜெயலலிதா தொழில்: முதல் அமைச்சர் (அரசு ஊழியர்) முந்தைய சொத்து மதிப்பு: முதல்வர் ஆகும் முன் ஜெயலலிதா காட்டிய மொத்த சொத்தின் மதிப்பு ரூ. 2 கோடி லஞ்சப் பணத்தை வெள்ளையாக்க ஜெ, சசி, இளவரசி, சுதாகரன் தொடங்கிய 'டுபாக்கூர்' நிறுவனங்கள்! 1991-1996 காலகட்டத்தில் வருமானம்: முதல்வர் சம்பளம் மாதம் 1 ரூபாய். மற்ற வகைகளில் ரூ. 9.91 கோடி (இதில் பல வங்கிகளில் வாங்கிய லோன்களும் அடக்கம்) 1991-1996 காலகட்டத்தில் செய்த செலவு: ரூ. 8.49 கோடி மிச்சம் இருந்தது: ரூ. 1.4 கோடி இந்த காலகட்டத்தில் ஜெ., சசி, இளவரசி வாங்கிய சொத்துக்களின் மதிப்பு: ரூ. 55 கோடி. இவர்களது செலவுகளையும் கணக்கில் சேர்த்தால் சொத்தின் அளவு மொத்தம் ரூ. 63.5 கோடி கேள்வி: வருமானத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இவ்வளவு சொத்தும் பணமும் எங்கிருந்து வந்தது? சசிகலாவின் வருமானங்கள் மூலமாக இந்தப் பணம் வந்திருக்கலாமே என்று வாதாடக் கூட முடியாது. காரணம், ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதற்கு முன், ஜெயலலிதாவின் வீட்டில் சசிகலா வாழ ஆரம்பிப்பற்கு முன் அவரது சொத்து விவரங்கள் இவை தான். பெயர்: சசிகலா தொழில்: ஏதும் இல்லை. அரசுத்துறையில் பி.ஆர்.ஓவாக வேலை பார்த்த கணவர் நடராஜனின் வருமானம் மட்டுமே முந்தைய சொத்து மதிப்பு: 1987ம் ஆண்டு நடராஜன் வீடு வாங்கவே லோன் வாங்கியுள்ளார். ஒரு மோட்டார் சைக்கிள் வாங்க ரூ. 3,000 லோன் வாங்கியவர் நடராஜன்.

1 கோடி கொடுத்து மருமகன் குடும்பத்தை கெளரவக்கொலை செய்த பிரபல ஆந்திரா ஜோதிஷர் !

Representational ImageLondon-based millionaire, who is also a high-profile astrologer reportedly paying a supari of Rs 1 crore to contract killers 

 ஆந்திராவில் உள்ள தொழிலபதிபரைக் கொல்ல ரூ. 1 கோடி கொடுத்து கூலிப்படையை செட்டப் செய்த லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரின் சதிச் செயலை டெல்லி போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். கொல்லப்பட்ட ஆந்திரத் தொழிலதிபரின் வயது 70 ஆகும். அவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். மூன்று பேரையும் கடந்த மாதம் இந்தக் கூலிப்படை கொலை செய்தது. இதுகுறித்து போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் இந்த சர்வதேச சதிச் செயல் தெரிய வந்துள்ளது. இந்த மூன்று பேரையும் கொலை செய்ய கூலிப்படையை ஏவிய நபரின் பெயர் புத்தம் கோவிந்து. இவரும் ஆந்திராவைப் பூர்வீமாகக் கொண்டவர்தான். ஆனால், தற்போது லண்டனில் வசித்து வருகிறார். கொல்லப்பட்ட தொழிலதிபரின் பெயர் கந்தம் நாகேஸ்வரராவ். இதுவுல  அவுட் சோர்சிங் ? லண்டனில் இருந்து ஆர்டர் கொடுத்து செய்யப்பட்டகொலைகள் .நல்ல முன்னேறிட்டாப்பல ?

இறப்பவர்கள் எல்லாம் ஜெயாவுக்காக என கணக்கு காட்டும் கூத்து ! பிணங்களை விற்பனை ?

ஜெ.வுக்காக 100 பேர் இறந்ததில் உண்மை என்ன?: இது திமுக பிரமுகரின் 'திடுக்' தகவல் 
சென்னை: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து 100 பேர் வரை அவருக்காக உயிரிழந்துவிட்டதாக அதிமுகவினர் பிரசாரம் செய்து வருவது மோசடியானது என்று ஆதாரங்களுடன் திமுக தொண்டர் அணி மாநிலச் செயலாளர் பொள்ளாச்சி மா. உமாபதி தமது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். "பணத்தைக் காட்டி பிணங்களை விலை பேசும் வில்லாதி வில்லன்கள்" என்ற தலைப்பில் பொள்ளாச்சி மா. உமாபதி தமது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: ஜெயலலிதா "குற்றவாளி" என்று தீர்ப்பு கூறியபின் பலர் உயிர் தியாகம் செய்ததாக அதிமுக பேச்சாளர் ஆவடிகுமார் அடிக்கடி கூறிவந்தார். அதுவும் எண்ணிக்கை 100ஐக் கடந்தது. "நமது எம்ஜி ஆர்" பத்திரிக்கையில் அவ்ர்களின் ஊர் பெயர் எல்லாம் வெளியானது. நான் சம்மந்தப்பட்ட ஊர்களில் உள்ள கழகத்தோழர்களை, நண்பர்களை தொடர்புகொண்டு. "இன்ன பெயர்கொண்டவர், இன்ன காரணத்தினால்" இறந்தாரா? என்று விசாரித்தபோது , பெரும்பாலானவர்கள் இறப்புக்கும் ஜெயலலிதா ஜெயிலுக்கு போனதுக்கும் சம்மந்தமே இல்லை என்று தெரியவந்தது.

சொத்துகுவிப்பு ! பொங்கி எழுந்த சமுக வலைத்தளங்கள் ! கிளிசரின் கோஷ்டியை அடித்து நொறுக்கும் Social media ?

ரெண்டு பேரு வாதத்தை மட்டுமே கேட்டு, யாரு சிறப்பா வாதாடுறாங்களோ அவங்களுக்கு சார்பா தீர்ப்பு சொல்றதுக்கு இது என்ன சாலமன் பாப்பைய்யா தலைமையில் நடக்குற பட்டிமன்றமாய்யா? நீதிபதிக்குன்னு எந்த சொந்த கருத்தோ, நீதியை நிலைநாட்ட வேண்டிய தார்மீக கடமையோ இல்லையா? அரசு வக்கீல் ஆட்சேபிக்கலைன்னா, நீதிபதிகள் ஏன் எதுக்குன்னு யோசிக்க கூடாதா? என்ன நடந்துகிட்டு இருக்குன்னு புரிஞ்சிக்க மாட்டாங்களா? நீதிபதிகள் என்ன மம்மிஜி கட்சிகாரனுங்க மாதிரி கூமுட்டைகளா? வக்கீல்ன்ற பேருல ஒரு பொறம்போக்கு சொல்லுது ‘சுதாகரன் திருமணத்தை ஜெயலலிதா நடத்தலைன்னு’ அப்ப என்ன ..றதுக்கு 35 வயசான ஒரு ‘பச்சை குழந்தையை’ மம்மிஜி தத்தெடுத்தாங்களாம்? இன்னொருத்தன் ‘அந்த திருமணத்திற்கு பல கோடி செலவழிக்க பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லைன்னு’ வாதாடுறான். அவனை எதால அடிக்கிறது? ஒட்டுமொத்த நாடே பாத்து வாய் பொளந்து நின்னுச்சே.. எவன் அப்பன் வீட்டு காசுல இந்த ஆர்ப்பாட்டம் பண்றானுங்கன்னு கேட்டுச்சே.. கோடிக்கணக்கான பேரு இங்க பிச்சை எடுத்து இருக்குரானுங்க, அவனுங்க வயித்துல அடிச்சு ஆடம்பரம் பண்றீங்கலேடான்னு நாடே காரித்துப்புச்சே.. அது இந்த பொ.போ. வக்கீலுக்கு தெரியாதா? இதையெல்லாம் கேட்டுகிட்டு குற்றவாளிகள் நாலு பேரும் ‘உத்தம புத்திரர்கள்.. பத்தரை மாற்று தங்கங்கள்னு.. நாட்டுக்கு உழைத்த நல்லவர்கள்னு’ கூவறதுக்கு நீதிபதிகள் என்ன இவனுங்க கட்சிகாரனுங்களை மாதிரி மூளை மழுங்கடிக்க பட்ட ஆயுட்கால அடிமைகளா?   தினமலர் வாசகர்களின்  காரசாரமான கருத்துக்கள் social media 
 1, சிறிய ஒரு வெள்ளைக்காரனின் படை எப்படி மிகப்பெரும் இந்திய மக்களை ஆட்சி செய்தது என்ற கேள்விக்கு பதில் இப்பொழுது ஜெயலலிதாவின் கைது மூலம் கிடைத்துள்ளது. அன்று வெள்ளை காரன் நம்மளை ஆட்சி செய்கிறான் என்ற உண்மையே நம் முன்னோர்களுக்கு தெரியாமல் இருந்தது.

உச்சநீதிமன்றம் : ஒய்வு பெறும் நீதிபதிகள் அரசு பதவி வகிக்க தடையில்லை ! அவா மீதுள்ள புகாருக்கு அவாவே தீர்ப்பு ?

ஓய்வு பெற்ற நீதிபதிகள் அரசுப் பதவிகளை வகிப்பதற்கு, குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட பொது நல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இது தொடர்பாக, முகமது அலி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த பொது நல மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு அரசுப் பதவிகள் வழங்குவதற்கு முன் குறிப்பிட்ட கால இடைவெளியை நிர்ணயிக்க வேண்டும்.
உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் இருந்து ஓய்வு பெறும் நீதிபதிகளுக்கு அரசுப் பதவிகளை வழங்குவதற்கு முன்பாக, சம்பந்தப்பட்ட அரசுகள், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி, உயர் நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்துவிட்டு, அவர்களது ஒப்புதலையும் பெற வேண்டும் என்ற விதிமுறையை நிர்ணயிக்க வேண்டும்.

முன்னெச்சரிக்கையாக 7 ஆயிரம் பேர் கைது - அரசு அறிக்கை தாக்கல்

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. இதைத் தொடர்ந்து ஐகோர்ட்டில் தி.மு.க. வக்கீல் ஆர்.எஸ்.பாரதி, பா.ம.க. வக்கீல் கே.பாலு, வக்கீல் மில்டன், டிராபிக் ராமசாமி ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், இந்த சம்பவங்கள் குறித்து அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டனர். தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் முன்பு இந்த மனுக்கள் விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமையாஜி, தலைமைச் செயலரின் நிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

Pakistan நேற்று இரவு 80 கிராமங்கள், 60 இந்திய நிலைகள் மீது தாக்குதல் !

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று இரவும் 80 இந்திய கிராமங்கள், 60 நிலைகள் மீது பாகிஸ்தான் ராணுவம் கடும் தாக்குதல் நடத்தியுள்ளது. கடந்த 1-ந்தேதி முதல் பாகிஸ்தான் ராணுவம் சர்வதேச எல்லை மற்றம் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதிகளையொட்டிய இந்திய பகுதிகளில் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவம் இதற்கு தகுந்த பதிலடி கொடுத்த போதிலும் பாகிஸ்தான் தனது அட்டகாசத்தை நிறுத்திக் கொள்ளாமல் மீண்டும் மீண்டும் தாக்குதல் நடத்தி வருகிறது. எல்லையில் 80 கிராமங்கள், 60 இந்திய நிலைகள் மீது பாகிஸ்தான் தாக்குதல்! குறிப்பாக இந்திய கிராமங்கள் மீதும் கடும் தாக்குதல் நடத்தியது. தானியங்கி ஆயுதங்கள், சிறிய ரக மோட்டார் பீரங்கிகளால் தொடர்ந்து குண்டு மழை பொழிந்தது.  நவாஸ் ஷெரிப்பை கவிக்க போறாய்ங்க அதுக்கு முன்னோடியாக  பாக் மக்களை திசை திருப்ப  இந்தியா மேல பாய்வாங்க இந்த நாடகம்தானே அங்கே எந்த நாளும் நடக்கிறது

பவானி சிங் : மனசாட்சி படி நடந்தேன் ! அந்த ஒரு மணி நேர மனமாற்றம் குறித்து கருத்து ! பயமா ? பணமா ?

பெங்களூரு: ''ஜெயலலிதா, ஜாமின் மனு விசாரணையில், மனசாட்சிப்படி நடந்து கொண்டேன்; கடமையை சரியாக செய்த நிறைவு எனக்குள்ளது,'' என, அரசு வழக்கறிஞர் பவானி சிங் கூறினார்.
கடந்த 7ம் தேதி, ஜெயலலிதா ஜாமின் மனு, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனு மீது, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி சார்பிலான வழக்கறிஞர்கள் வாதம் முடிந்த பின், அரசு தரப்பில் பவானி சிங் ஆட்சேபனை தெரிவித்து வாதிடுவார் என்று, அனைவரும் எதிர்பார்த்தனர். நீதிபதி சந்திரசேகரா, அரசு வழக்கறிஞரை வாதாட அழைத்தார். அப்போது பவானி சிங், ''ஜாமின் மனுவுக்கு, எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,'' என்றார். இவரது பேச்சு விமர்சனத்துக்கு உள்ளானது.  Sir....நீங்கள் சொல்றது சரி .ஆனால் காலையில் எதிர்ப்பு தெரிவித்து விட்டு மாலையில் எதிர்ப்பு தெரிவிக்காமல் போனது தான் அவரின் ஜாமீனுக்கு நீங்கள் வைத்த ஆப்பு...அல்லது நீங்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்திருந்தால் நீதிபதி ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்திருக்க மாட்டார்...அந்த ஒரு மணிநேர மன மாற்றம் லேசுப்பட்டதல்ல ?

சொத்துகுவிப்பு ! இவ்வளவு தெளிவாக தீர்ப்பு ! இன்னும் ஏன் கிளிசரின் நாடகம் ? காசு பணம் துட்டு ?

நாம் நினைவு கூருவோமானால், ஜெயலலிதா உள்ளிட்டோர் நான்கு விஷயங்களை செய்யவேண்டி இருந்தது. அவை;
1 அரசு தரப்பு குறிப்பிட்டதை விட அவர்களுக்கு கூடுதல் வருமானம் இருந்ததுஎன்று நிரூபிப்பது
2 அரசு தரப்பு குறிப்பிட்டதை விட அவர்களின் செலவுகள் குறைவாகத்தான் இருந்தது என்று நிரூபிப்பது
3 தொழிலில் ஈட்டப்பட்ட வருமானம் மூலம் அந்தந்த நிறுவனங்கள் சொத்துக்களை வாங்கின என்று நிரூபிப்பது
4 சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு ஜெ.,யின் ஆதரவு இல்லாமலே சொத்துக்களை வாங்குவதற்கு போதிய பண பலம் இருந்தது என்றும், ஜெ.,க்கும் வழக்கில் குறிப்பிடப்பட்ட நிறுவனங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று, நிரூபிப்பது  .
தோட்டங்களில் இருந்து வந்த வருமானத்தை கூட கணக்கில் காட்ட குளறு படி... ஆனால் இந்த தோட்டங்களை வாங்க ஏது பணம் என்று யாராவது கேசு போட்டாங்கன்னா இந்த அம்மா இன்னும் வசமா சிக்கும்....ஒண்ணா ரெண்டா ? எத்தனை தோட்டம்.... இந்த அம்மாவே எங்கப்பன் குதுருக்குள்ள இல்லைன்னு எல்லாத்தையும் நீதிபதி இடம் சொல்லி இருக்கு... இதையே அம்மாவின் வாக்கு மூலமாக வச்சு இந்த தோட்டங்கள் வாங்கியதற்கு ஏது வருமானம்ன்னு கேசு போட போறாய்ங்கப்பா...

புதன், 8 அக்டோபர், 2014

பாடகர் யேசுதாசின் ஆணாதிக்கத்திற்கு சாட்டை அடி ?

 அன்புள்ள யேசுதாஸ், ‘அணியும் ஆடையினால் மற்றவர்களுக்குத் தொல்லை தரக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறீர்கள். மறைத்தே வைத்துக்கொள்கிறோம் யேசுதாஸ், கவலைப்படாதீர்கள். இந்தப் பாவப்பட்ட பெண்கள் திசைமாறிப் போகிறார்களே என்று துயருறாதீர்கள். உங்கள் குரல் எங்கள் தந்தைமார்களின் குரல்போல், எங்கள் அண்ணன்மார்களின் குரல்போல் இதயத்துக்கு வெகு அணுக்கமாகவே இருக்கிறது. அதனால் உங்கள் குரலில் ஒலிக்கும் துயரத்தை எங்களால் புறக்கணிக்க முடியாது. கடந்தும் போக முடியாது. அப்படியெல்லாம் போகக் கூடியவர்களா நாங்கள்?
2004 ஆகஸ்ட். யு.எஸ். ஓப்பன் டென்னிஸ் போட்டியில் நான்காவது சுற்றுக்குள் சென்ற முதல் இந்தியப் பெண் என்று டென்னிஸ் உலகம் சானியா மிர்ஸாவைக் கொண்டாடி மகிழ்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்தப் பெண் ணுக்கு வயது வெறும் பதினெட்டுதான்.டென்னிஸில்
இந்தியாவின் பெயரை உலக அளவில் உயரவைப்பாள் என்று வெளிநாட்டுப் பத்திரிகைகள் ஆருடம் கூறிக்கொண்டிருந்தபோது, எங்கள் தந்தைமார்களாகிய நீங்கள் இந்தியாவில் என்ன சொல்லிக்கொண்டிருந்தீர்கள் தெரியுமா?
“சானியா மிர்ஸா ஆறு இஞ்ச் குட்டைப் பாவாடை போட்டுக்கொண்டு டென்னிஸ் விளையாடுகிறாள். அந்தக் குட்டைப் பாவாடையுடனே பத்திரிகையா ளர்களைச் சந்திக்கிறாள். ஓர் இஸ்லாமியப் பெண், பேருக்குக்கூடத் தலையில் ஒரு துணியைப் போடுவதில்லை” என்று சொல்லிக்கொண் டிருந்தீர்கள்.

நீதிபதி குன்ஹாவுக்கு எதிராக போஸ்டர் - திமுக, பாமக வழக்கு.. தமிழக அரசுக்கு நோட்டீஸ்!


சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் தனி நீதிமன்ற நீதிபதி மைக்கேல் டி குன்ஹா பிறப்பித்த தீர்ப்பை விமர்சித்து அதிமுகவினர் வைத்த போஸ்டர்கள், பேனர்கள் குறித்து திமுக, பாமக மற்றும் மனித உரிமை பாதுகாப்பு மையம் ஆகியவை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுள்ள சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து நவம்பர் 11ம் தேதிக்குள் விளக்குமாறு கூறி தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

ஈரானில் கற்பழிக்க முயன்றவனை கொன்ற பெண்ணுக்கு தூக்கு தண்டனை ?

ஈரானை சேர்ந்த பெண் ரெகானே ஜப்பாரி (26). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு தன்னை கற்பழிக்க முயன்ற ஒருவனை கத்தியால் குத்தி கொலை செய்தார். அதனால் கைது செய்யப்பட்ட ஜப்பாரிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
அதை எதிர்த்து அவர் மேல் முறையீடு செய்தார். அங்கும் அவரது தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதற்கிடையே கொலை செய்யப்பட்டவரின் உறவினர்கள் அவரை மன்னிக்க மறுத்ததால் இன்று அவர் தூக்கிலிடப்படுகிறார்  என தகவல் பரவியது . ஆனால் அவரது தண்டனை மீண்டும் ஒத்தி வைக்க பட்டுள்ளதாக தெரிகிறது, ம்ம்ம் காட்டு மிராண்டிகள் தேசம் . சகோதரத்துவம் அன்பு என்றெல்லாம் ரொம்ப சத்தம் போடும் மதவாதிகள் வெட்கி தலை குனியவேண்டும்,

குற்றவாளியே போலீசாக வந்தான் ! கொன்றாள் ! பாலியல் தொழிலில் தள்ளிய போலீசை ஆண்டுகளின் பின் கொன்று பழி தீர்த்த மும்பை பெண் !மும்பை: பாலியல் தொழிலில் தன்னை வலுக்கட்டாயமாகத் தள்ளி, தன் வாழ்க்கையைக் குலைத்த போலீஸ்காரர் ஒருவரை 12 ஆண்டுகளுக்குப் பின் கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார் மும்பைப் பெண் ஒருவர். பீகாரைச் சேர்ந்த அப்பெண் கடந்த 2002ம் ஆண்டு தனது 17 வயதில் சித்தியின் கொடுமை தாங்காமல் வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். ரயில் மூலமாக பீகாரிலிருந்து மும்பை வந்த அப்பெண், அதன்பிறகு எங்கே செல்வது எனத் தெரியாமல் சத்ரபதி ரயில் நிலையத்தில் சுற்றி வந்துள்ளார். அப்போது அப்பெண்ணை விசாரித்த போலீஸ் ஒருவர், அவருக்கு பாதுகாப்பான இடத்தை தங்க ஏற்பாடு செய்து தருவதாகக் கூறி அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் பாலியல் தொழில் புரியும் கும்பலிடம் அப்பெண்ணை இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கு விற்றுள்ளார். இதனால், அப்பெண் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப் பட்டுள்ளார். சில ஆண்டுகளாக பாலியல் தொழிலில் சித்ரவதை அனுபவித்த அப்பெண், தனது முதலாளியை ஏமாற்றி அங்கிருந்து தப்பினார். தனியார் தொழிற்சாலை ஒன்றில் வேலை பார்த்தபடி பாந்த்ரா பகுதியில் தங்கியிருந்த அப்பெண், உடன் வேலை செய்யும் இளைஞர் ஒருவரை காதலித்து மணந்தார். ஒரு ஆண் குழந்தைக்கு தாயான நிலையில், அந்த இளைஞரும் அப்பெண்ணை விட்டுச் சென்று விட மீண்டும் பாலியல் தொழிலுக்கு திரும்பும் கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளார் அப்பெண். இந்நிலையில், சமீபத்தில் போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் அவர் கைது செய்யப்பட்டார். அப்போது கைது செய்த போலீசாரில், தன்னை பாலியல் தொழிலில் தள்ளிய போலீஸ்காரரும் இருப்பது கண்டு அப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

கட்சியும் ஆட்சியும் MGR மூலம் ஈசியாக கிடைத்தது So எல்லோரையும் முட்டாளாகவே நினைத்த ஜெயலலிதா !

;ஏ.கே.கான்   : தனியாக கட்சி ஆரம்பித்தோ, தேசிய கட்சிகளில் அடிமட்டத்தில் இருந்து உழைத்தோ அல்லது திராவிட இயக்கம் நடத்திய சமூக போராட்டங்களில் ஈடுபட்டோ முதல்வர் பதவியை ஜெயலலிதா பிடிக்கவில்லை. எம்.ஜி.ஆர் என்ற பெரும் நட்சத்திரத்தின் நட்பும் ஆதரவும் தந்த பதவி தான் அதிமுக தலைவர் பதவியும் அதைத் தொடர்ந்து கிடைத்த முதல்வர் பதவியும். எம்ஜிஆரின் ஒரே வாரிசாக இவரை மக்கள் ஏற்றுக் கொண்ட ஒரே காரணத்தால் தான் ஜானகியை புறக்கணித்துவிட்டு இவரை அதிமுகவின் தலைவியாக ஏற்றுக் கொண்டனர். ஜெயலலிதாவை முதல்வராக ஆக்கியதில் சில ஊடகங்களின் பங்கும் மிக மிக முக்கியமானது. பல சுயநல, சமூக காரணங்களால் இந்த ஊடகங்கள் ஜெயலலிதாவை ஆரம்பத்தில் இருந்தே தூக்கிப் பிடித்தன.  ஆனால், ஜெயலலிதா தவறு செய்யும்போது அதை சுட்டிக் காட்டியிருக்க வேண்டிய இந்த ஊடகங்கள் அதைச் செய்யத் தவறின. காரணம், நம்மவருக்கு நாமே பிரச்சனை தரக் கூடாது என்ற எண்ணம் தான். அது தான் இன்று ஜெயலலிதாவை சிறைக்குள் உட்கார வைத்திருக்கிறது. டான்சி வழக்கில் ஜெயலலிதா தப்பியது 'ஜஸ்ட் மிஸ்' தான். வலுவான ஆதரங்களோடு குற்றம் நிரூபிக்கப்பட்டாலும் 'சந்தேகத்தின் அடிப்படையில்' ஜெயலலிதாவை தண்டிக்காமல் விட்டது உச்ச நீதிமன்றம். "எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது..
எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்குமோ அது நன்றாகவே நடக்கும்
எதை கொண்டு வந்தாய் நீ அதை இழப்பதற்க்கு.."

கல்பாக்கம் அணுமின் நிலை படை வீரர் சகாக்கள் 3 பேரை சுட்டு கொன்றார் !

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் இன்று (புதன்கிழமை) அதிகாலை மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் சக வீரர்கள் 3 பேர் கொல்லப்பட்டனர்.
சென்னை அருகே கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடும் பாதுகாவலர்கள் இன்று அதிகாலை 5.15 மணியளவில் வழக்கமான அணிவகுப்புக்கு அழைக்கப்பட்டனர். அப்போது விஜய் பிரதாப் சிங் என்ற தலைமைக் காவலர் திடீரென தனது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதில், கணேசன் - கூடுதல் துணை ஆய்வாளர், சுப்புராஜ் - தலைமைக் காவலர், மோகன் சிங் - தலைமைக் காவலர், ஆகிய 3 வீரர்கள் பலியாகினர். இரண்டு வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பிரதாப் சிங், கோவர்த்தன் சிங் ஆகிய இருவரும் கேளம்பாக்கம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்ட விஜய் பிரதாப் சிங் (40) கைது செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து கல்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன  tamil.hindu.com

மோடி அதிமுக நேரடி மோதல்? சிறையில் இருப்பவர்கள் தேவையில்லை ! மோடியின் அருள்வாக்கு ? .....

சிறையில் இருப்பவர்களின் ஆதரவு எங்களுக்குத் தேவையில்லை’ என்று ஹரியாணா தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பகிரங்கமாகப் பேசியதின் மூலம் ஜெயலலிதாவை நேரடியாக எதிர்க்க மோடி முடிவு செய்துவிட்டார் என்றே அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
ஜெயலலிதா கைது விவகாரத்தால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள மாநில கட்சிகள் மட்டுமின்றி தேசிய கட்சிகளும் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. குறிப்பாக, தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என பாஜக கருதுகிறது. அதன் முதல்கட்டமாகத்தான் கடந்த உள்ளாட்சித் தேர்தலில் பெரிய கட்சிகள் எல்லாம் புறக்கணித்த நிலையில் அதிமுகவை எதிர்த்து பாஜக போட்டியிட்டது. பல இடங்களில் அதிமுக பாஜக இடையே கடும் மோதல்கள் ஏற்பட்டன. அப்போது முதல் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், அதிமுகவை கடுமையாக விமர்சித்துவருகிறார்.
தற்போது ஜெயலலிதா சிறையில் இருக்கும் நிலையில் தமிழகத்தில் அதிமுகவை எதிர்த்து முழு வீச்சுடன் செயல்படும்படி பாஜகவினருக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளதாக அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கலையரசன். மெட்ராஸின் உண்மையான அடையாளமே வடசென்னை தான் !

மெட்ராசின் ‘அன்பு’மண்ணின் மைந்தர்களின் வாழ்வியலை நெருக்கமாக பதிவு செய்த இயக்குனர் பா.ரஞ்சித் குழுவின் ‘மெட்ராஸ்’ திரைப்படத்தின் அன்பு கதாபாத்திரம்....சினிமா மரபுகளை உடைத்த ஓர் யதார்த்த பதிவு.. ஒடுக்கப்பட்ட மக்கள் வாழிடங்கள் எங்கெல்லாம் உள்ளதோ அங்கெல்லாம் ஏதோ ஓர் அன்பு வாழ்ந்துகொண்டுதான் இருப்பார்... அந்த அன்பின் முகம் எப்படி இருக்கும்?அவரின் சிந்தனை என்னவாக இருக்கும்?அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும்?அத்தனை கேள்விகளுக்கும்  விடையாக நம் முன் காட்சிப்படுபவர் தான் ‘அன்புவாக’ வாழ்ந்த கலையரசன்.

கோச்சடையான்' கேளிக்கை வரி வசூல் !வழக்குப் பதிய நீதிமன்றம் உத்தரவு

நடிகர் ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படத்துக்கு கேளிக்கை வரி வசூலித்த விவகாரத்தில் விசாரணை செய்து, குற்றத்துக்கான முகாந்திரம் இருந்தால் வழக்குப் பதிவு செய்யுமாறு காவல் துறைக்கு எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்த விவரம்: ரஜினிகாந்த் நடித்த "கோச்சடையான்' திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது.
இந்தத் திரைப்படத்துக்கு தமிழக அரசின் உத்தரவை மீறி கேளிக்கை வரி வசூலித்ததாகவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் கே.ஜெ.சரவணன் எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் கடந்த ஆகஸ்ட் 12-ஆம் தேதி "கோச்சடையான்' திரைப்படத்தை சென்னையில் உள்ள ஒரு திரையரங்கில் ரூ. 120 கட்டணம் செலுத்திப் பார்த்தேன். இந்தக் கட்டணம் கேளிக்கை வரியும் சேர்த்து வசூலிக்கப்படுவதாக அந்த டிக்கெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சிவகங்கை காளையார் கோவில் கோபுரம் தீ பிடித்தது ! அதிமுகவினரின் வெறியாட்டம் !

சிவகங்கை: ஜெயலலிதாவிற்கு ஜாமீன் கிடைததாகக் கூறி அதிமுகவினர் வெடி வெடித்து நடத்திய கொண்டாட்டத்தில் காளையார்கோவிலில் உள்ள சொர்ணகாளீஸ்வரர் கோயில் கோபுரம் தீப்பிடித்து எரிந்தது. திருப்பணிக்காக அதில் அமைக்கப்பட்டிருந்த சாரங்கள் எரிந்து சாம்பலாகின. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து பொதுமக்களும், பக்தர்களும் திடீர் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காளையார்கோவிலில் உள்ளது சொர்ண காளீஸ்வரர் கோயில். பழம்பெருமையும், ஆன்மிகச் சிறப்பும் கொண்ட இக்கோயில் கும்பாபிஷேகத்திற்கான சீரமைப்பு பணி கடந்த இரண்டு ஆண்டிற்கு முன்பு துவங்கி நடந்து வருகிறது. கோபுரங்களில் சுதைகள் சீரமைப்பு மற்றும் பெயிண்டிங் செய்யும் பணிகள் நடந்து வருகிறன. இப்பணிகளுக்காக அனைத்து கோபுரங்களைச் சுற்றிலும் தென்னங்கீற்றால் மறைத்து சாரம் அமைக்கப்பட்டிருந்தது.

தீபிகா படுகோன் : பெண்ணின் மார்பகங்களைப்பற்றியோ, ஆணுறுப்பைக் குறித்தோ பிரசாரம் செய்யக்கூடாது.

ரஜினியுடன் 'கோச்சடையான்' படத்தில் ஜோடி சேர்ந்த நடிகை தீபிகா படுகோனே, சமீபத்தில் 'பேஸ் புக்' சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்கிடமான வார்த்தைகளுடன் ஒரு கடிதம் எழுதி இருந்தார்.
'ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார் என்பதற்கான ஒரே அடையாளம் அவர் 'ஆமாம்' என்று சொல்வதாகவே அமைந்திருக்கிறது' என்பதே அந்த கடிதத்தின் தொடக்கம்.
ஆங்கில நாளேடு ஒன்றின் இணையதள பதிப்பில் தீபிகா படுகோனேயின் கவர்ச்சிப்படம் ஒன்றை கவர்ச்சியாக தலைப்பிட்டு வெளியிட்டதால், பாவம் இவர் கொந்தளித்துப்போய் விட்டார். இது தொடர்பாக விளக்கம் அளித்துத்தான் அவர் இந்த கடிதத்தை எழுதி உள்ளார். ]
கடிதத்தின் சாராம்சம் இதுதான்-
'ஒரு பெண் செக்ஸ் உறவு கொள்ள விரும்புகிறார் என்பதற்கான ஒரே அடையாளம் அவர் 'ஆமாம்' என்று சொல்வதாகவே அமைந்திருக்கிறது' என்ற வாசகங்களுடன் நான் இதை எழுதுவதற்கு காரணம் உண்டு.

செவ்வாய், 7 அக்டோபர், 2014

சேதமாக்கப்பட்ட பொது தனியார் சொத்து இழப்பீடுகளை அதிமுகவிடம் இருந்து அறவிட வேண்டும் ! திமுக ஆளுநரிடம் மனு !

சென்னை: ‘தமிழகத்தில் நிலவும் சட்டம், ஒழுங்கு சீர்குலைவு குறித்து விவாதிக்கும் வகையில், கருணாநிதி தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னையில் நாளை நடக்கிறது.தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதாவுக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டு சிறை தண்டனை, ரூ.100 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.இதை கண்டித்து, தமிழகம் முழுவதும் அதிமுகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்ற னர். இந்நிலையில், கோர்ட் தீர்ப்பை எதிர்த்து பஸ் எரிப்பு, திமுக அலுவலகங்களை தாக்குவது, தலைவர்களை, தொண்டர்களை தாக்குவது சொத்துக்களை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் அதிமுகவினர் ஈடுபட்டுள்ளனர். போராட்டங்கள் அனைத்தும் முன் அனுமதி பெறாமல், சம்பந்தப்பட்ட காவல் துறையினரின் அனுமதியின்றி சட்டத்தை மீறி நடத்தப் படுகிறது. மேலும் அவர்கள் பொது சொத்துகளுக்கு கடுமையான சேதத்தை விளைவிக்கின்றனர்.

வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்- கர்நாடக அரசு பஸ்களும் ரத்து ! மக்கள் பயப்பீதியில் ! எந்நேரமும் கலவரம் வெடிக்கலாம் !

நெல்லை: தமிழகத்தின் பல மாவட்டங்களில் வெளியூருக்கு இரவில் இயக்கப்படும் பேருந்துகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்கு இயக்கப்படும் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. அதேபோல கர்நாடகத்திலிருந்து தமிழகத்திற்கு இயக்கப்படும் கே.எஸ்.ஆர்.டி.சி அரசுப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. பல மாவட்டங்களில் வெளியூர் செல்லும் பேருந்துகள் நிறுத்தம்- கர்நாடக அரசு பஸ்களும் ரத்து மாலை 5 மணிக்கு மேல் பஸ்களின் இயக்கம் வெகுவாக குறைக்கப்பட்டு விட்டதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. விஷமிகள் பஸ்களுக்குத் தீவைப்பது, தாக்குவது போன்றவற்றில் ஈடுபடலாம் என்று முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை போக்குவரத்துத் துறை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. நெல்லை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இரவில் இயக்கப்படும் பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் பெங்களூர், மைசூர் உள்பட கர்நாடகத்திற்குச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவசர அறிக்கை ! பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் போராட்டம் வேண்டாம்

பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் கடையடைப்பு, வேலை நிறுத்த நடவடிக்கைகளில் யாரும் ஈடுபடவேண்டாம் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவசர அறிக்கை தமிழ்நாடு முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அவசர அறிக்கை : தமிழ்நாடு அமைதியான சூழலில் வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருந்தாலும், தமிழ்நாடு அரசின் மீது களங்கம் கற்பித்து அதன் மூலம் அரசியல் ஆதாயம் அடைந்துவிடலாம் என்று பகல் கனவு கண்டு கொண்டிருக்கும் சிலர், சட்டம்-ஒழுங்கு குலைந்துவிட்டதாக கடந்த சில நாட்களாக விஷமப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.தமிழகத்தின் சட்டம்-ஒழுங்கு மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து, இன்று தலை மைச் செயலகத்தில் ஓர் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், மின்சா ரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்  நத்தம் இரா. விசுவநாதன்,வீட்டுவசதித் துறை அமைச்சர்  ஆர். வைத்திலிங்கம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், இ.ஆ.ப., தமிழ்நாடு அரசின் ஆலோசகர்  ஷீலா பாலகிருஷ்ணன், இ.ஆ.ப., (ஓய்வு), காவல் துறை தலைமை இயக்குநர் கே. ராமானுஜம், இ.கா.ப., உள்ளிட்ட அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீராக உள்ளது என்றும், மக்களின் அன்றாடப் பணிகளுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை என்றும், எவ்வித அசம்பாவிதமும்  ஏற்பட வில்லை என்றும், சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது. 

அதிமுக குண்டர்கள் அம்மா என்ற Brand Name ஐ வைத்து மக்சிமம் கொள்ளை அடிக்க அரிய வாய்ப்பு ?

“தெய்வத்திற்கு மனிதன் தண்டனையா” எனும் தமிழ் சினிமா முதலாளிகள் வெளியிட்ட சுவரொட்டிதான் தற்போது அதிமுக வட்டாரத்தில் மிகவும் பிரபலம். இதை தமிழ் சினிமா படைப்பாளிகள் எப்படியோ ரூம் போட்டு டிஸ்கஷன் செய்து வெளியிட்டிருந்தாலும் அது சொல்ல வரும் பொருள் வெறும் ‘கற்பனை’ அல்ல.
ஆம். ஜெயலலிதா எனும் ‘அம்மாவின்’ நடவடிக்கைகளை இந்த நாட்டின் சட்டம், நீதிமன்றம், அரசு எதுவும் கட்டுப்படுத்த முடியாது என்பதோடு அம்மாதான் இவற்றை ஏதோ பார்த்து கட்டுப்படுத்துவார் அல்லது கருணை காட்டுவார். இது அதிமுக அடிமைகளின் மனநிலை மட்டுமல்ல அந்த ரவுடிக் கூட்டம் போடும் ஆணையும் ஆகும்.
இப்படித்தான் முழு தமிழகத்திலும் போலீசு ஆதரவுடன் இவர்கள் வன்முறையை செய்து வருகிறார்கள். இந்த கிரிமினல் கூட்டத்திற்க்கு தம்பிராஸ் – பிராமணர் சங்கம் துவங்கி, கல்வி-பேருந்துக் கொள்ளையர்கள் வரை பல்வேறு பங்காளிகள் ஆதரவு ஷோக்களையும் நடத்தி வருகின்றனர்.
இதற்கு மேல் நீதிபதி குன்ஹாவையும், கர்நாடக அரசையும், ஏன் கன்னட மக்களையும் வைது, திட்டி, மிரட்டி சுவரொட்டிகளையெல்லாம் வெளியிட்டு வருகிறார்கள். அனைத்திலும் ஊடும் இழை ஒன்றுதான். அம்மாவை பிணையில் வெளியிடாவிட்டால் நடப்பதே வேறு!
இத்தகைய வன்முறை வெறியாட்டத்தை ஜெயாவின் ஆதரவு அலையாக சித்தரித்து தமிழ் ஊடக முதலாளிகள் கவனமாக செய்திகளை தயாரித்து, வார்த்தைகளை தேடிப் போட்டு கருத்துக் கச்சேரிகளை செய்து வருகின்றனர்.

நீதிமன்றத்திற்கும் கர்னாடகதிற்கும் எதிராக அதிமுக அல்லக்கைகள் நடத்தும் வெறியாட்டத்துக்கு நல்ல பலன் !

இந்த அதிமுக அல்லக்கைகளை ஜெயா வை வெளியில் வர விட மாட்டார்கள். இந்த முட்டாள் கூடம் வெளியை வந்து அட்டகாசன் செய்ததின் விளைவை அவருக்கு ஜாமீன் மறுக்க பட்டது மாதிரி தெரிகிறது. ஜாமீன் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிமன்றத்துக்கு வெளியே நின்ற அதிமுகவினர் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்டனர். இதனால் விசாரணை நீதிபதியான சந்திரசேகரய்யா, கடும் கோபமடைந்தார். நீதிமன்றத்துக்கு வெளியே நிற்பவர்கள் நீதிமன்ற ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்று உத்தரவிட்டார் இந்த அதிமுக அல்லைகள் இன்னும் போராட்டம் நிறைய நடத்தட்டும், அப்போ தான் supreme கோர்ட் நீதிபதியும் ஜெயாவுக்கு ஆப்பு வைப்பார். சட்டத்தை மதிக்க மாட்டோம் என்று போராட்டம் நடத்தி தெரியும் அதிமுக அடிமைகள் ஓன்று புரிந்து கொள்ள வேண்டும், உங்கள் போராட்டத்தை கண்டு நீதிபதி தீர்ப்பு ஏழுதுவதிலை. இனி பொதுமக்கள் சாலையில் இறங்கி இந்த மாதிரி போராட்டம் நடத்தும் அதிமுக  அல்லக்கைகளை பொதுமக்களே  பின்னி பெடல் எடுக்கும் நாள் வெகு விரைவில் வரும்,.தலைவரை காப்பாத்துகிறேன் பேர்வழி என்று புறப்பட்ட அடிமைகூட்டம் தலைவரை ஒரே அமுக்காக அமுக்க சந்தர்ப்பம்  ஏற்படுத்தி கொடுப்பது என்பது வரலாற்றில் இதுதான் முதல் முறை என்று கூற முடியாது, கிட்டதட்ட  இதே மாதிரி ஒரு காட்சியும் கானமும் சில வருஷங்களுக்கு முன்பு உலகம் கண்டதுதான்?

காலை ஜாமீனுக்கு எதிர்ப்பு ! மாலை ஆட்சேபனை இல்லை ! பவானி சிங் பல்டி ! தீர்ப்பின் கடுமைக்கான காரணம் ?

கைதிகளை வெளியிட்டால் சாட்சிகளை கலைத்து விடுவார்கள் என்று முதலில் கூறிய அரசு வக்கீல் பவானி சிங்  திடீரென தனது நிலையை மாற்றிக்கொண்டது வேடிக்கையாக உள்ளது. இதில் இருந்தே இது உள்நோக்கம் கொண்டது என்பது தெளிவாகிறது. இந்த வழக்கில் பெரும் முறைகேடு நடந்துள்ளது. நீதிபதி குன்ஹா தெளிவான தீர்ப்பளித்துள்ளார்.
பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஜெ.,வுக்கு இன்று மதியம் ஜாமின் கிடைத்தததாக தகவல் பரவியது. ஆனால் நீதிபதி தனது உத்தரவில் திடீர் அதிரடியாக ஜெ., உள்ளிட்ட 4 பேருக்கும் ஜாமின் வழங்க முடியாது என தனது உத்தரவை பிறப்பித்தார். ; இன்று பரபரப்பான விவாதம் காலை முதல் நடந்து கொண்டிருந்தது. காலையில் அரசு தரப்பு வழக்கறிஞர் ஜெ.,வுக்கு நிபந்தனை ஜாமின் வழங்குவதில் எனக்கு ஆட்சேபம் இல்லை என தெரிவித்தார். இதனையடுத்து அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டதாக அனைத்து வக்கீல்களும், கோர்ட்டுக்கு வெளியே வந்து கூறினர். இதனையடுத்து இந்த செய்தி அனைத்து பகுதிகளுக்கும் பரவியது. பல மீடியாக்களிலும் ஜாமின் வழங்கப்பட்டதாக செய்தி வெளியிட்டது. அ,தி.மு.,கவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். பல இடங்களில் இனிப்பு வழங்கப்பட்டது.
தொடர்ந்து சில நிமிடங்களில் நீதிபதி சந்திரசேகராவின் அதிரடி உத்தரவு பிறப்பித்தார், இந்த உத்தரவில் அரசு தரப்பு வழக்கறிஞர் நோ அப்ஜக்ட் செய்தாலும் , குற்றவாளிகளை ஜாமினில் விடுதலை செய்ய கோர்ட்டுக்கு விருப்பமில்லை. அரசு வக்கீல் நிலை ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது.

உச்ச நீதிமன்றத்தை நாடுகிறார் ஜெயலலிதா.. நாளை மனு தாக்கல்?

பெங்களூர்: கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜாமீ்ன் இல்லை என்று முடிவாகி விட்ட நிலையில் அடுத்து உச்சநீதிமன்றத்தை ஜெயலலிதா தரப்பு நாடவுள்ளது. ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேருக்கும் ஜாமீன் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான அனைத்துப் பணிகளும் உடனடியாக முடுக்கி விடப்பட்டுள்ளன. ஜெயலலிதா தரப்புடன் விவாதித்துவி்ட்டு உச்ச நீதிமன்றத்தை அணுகுவோம் என்று வழக்கறிஞர் ராம் ஜேத்மலானியும் அறிவித்துள்ளார். அனேகமாக நாளையே மனு தாக்கல் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கர்நாடக உயர்நீதிமன்றத்தில் 2 முறை தள்ளி வைக்கப்பட்டு இன்று ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் மனுக்களும் விசாரணைக்கு வந்தன. எல்லாமே ஜெயலலிதாவுக்கு சாதகமாக இருப்பது போலவே தோன்றியது. அரசு வழக்கறிஞர் பவானி சிங்கும் கூட ஜெயலலிதாவுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கலாம் என்றும் கூறியிருந்தார். ஆனால் நீதிபதி அதிரடியாக ஜாமீன் கோரிக்கையை நிராகரித்து வி்ட்டார். இதனால் ஜெயலலிதா தரப்பு அதிர்ச்சி அடைந்துள்ளது. அடுத்து உச்சநீதிமன்றத்திற்குத்தான் போக வேண்டும். அந்த வேலையை ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர்கள் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.tamil.oneindia.in

ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ! சிறைக்கு வெளியே சிகிச்சை அளிக்கப்பட வாய்ப்பு !

பெங்களூர்: ஜாமீன் கிடைக்காத தகவல் அறிந்ததும் சிறையில் ஜெயலலிதாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு சிறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர். ஹைகோர்ட்டில் நடைபெற்ற ஜாமீன் மனு விசாரணையை, சிறையில் இருந்தபடி ஜெயலலிதா தொலைக்காட்சியில் நேரடியாக பார்த்துக் கொண்டிருந்தார். கன்னட செய்தி தொலைக்காட்சி சேனலில் அவர் செய்திகளை கவனித்தபடி இருந்தார். அப்போது சசிகலா, இளவரசி ஆகியோருக்கும்கன்னட செய்திகளில் கூறப்படும் தகவல்களை மொழி மாற்றம் செய்து தெரிவித்ததாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.மதியம் கோர்ட்டில் சாப்பாடு இடைவேளை விடப்பட்டதும், ஜெயலலிதாவும் சாப்பிட்டுள்ளார். ஆனால் பரபரப்புடனே காணப்பட்டார். இதனிடையே மாலை 4 மணியளவில் நீதிபதி தீர்ப்பு தனது உத்தரவை அளித்ததையும் தொலைக்காட்சி செய்தி வழியாக ஜெயலலிதா அறிந்துகொண்டார். இதையடுத்து ரத்த கொதிப்பு சற்று அதிகரித்ததாக கூறப்படுகிறது. மயங்கும் நிலைக்கு சென்ற அவருக்கு சிறை மருத்துவர்கள் உடனடியாக அவசர சிகிச்சையளித்தனர். இதன்பிறகு உடல் நலம் தேறியுள்ளது. அதே நேரம் எப்போது வேண்டுமானாலும் சிறைக்கு வெளியே தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்கவும் போலீசார் தயார் நிலையில் உள்ளனர்
tamil.oneindia.in

ஜெயலலிதாவின் ஜாமீன் மனுவை நிராகரித்து கர்நாடக ஐகோர்ட் உத்தரவு !

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு மற்றும் தண்டனையை ரத்து செய்யக் கோரும் மனுக்கள் இன்று (செவ்வாய்க்கிழமை) கர்நாடக உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன. நீதிபதி சந்திரசேகரா முன்னிலையில் இந்த மனு விசாரணைக்கு வந்தது.ஜெயலலிதா தரப்பில் வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி, வழக்கறிஞர் குமார் ஆகியோர் ஆஜரானார்கள். தன்னுடைய வாதங்களை எழுத்து பூர்வமாக நீதிமன்றத்தில் சமர்பித்தார் ராம்ஜெத்மலானி. ஜெயலலிதாவின் உடல்நிலையை கருத்தில்கொண்டு ஜாமீன் வழங்க வேண்டும்.  தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் என்கிற அடிப்படையில் ஜாமீன் வழங்கலாம். முதலமைச்சர் பதவி வகித்தவர் தலைமறைவாக வாய்ப்பில்லை. 4 வருடமே தண்டனை என்பதால் அரசு தரப்பு வாதத்தை கேட்காமலேயே ஜாமீன் வழங்கலாம் என்றார்.ஜாமீனுக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரசுத் தரப்பு வழக்கறிஞர் பவானி சிங் வாதிட்டார். மதிய உணவு இடைவேளைக்காக 2.30 மணி வரை விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் நீதிமன்றம் கூடியது.>வழக்கை விசாரித்த நீதிபதி, ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரின் ஜாமீன் மனுக்களை நிராகரித்து உத்தரவிட்டார்.nakkheeran.in

ஜெயா ஜாமீனுக்காக கடவுளுக்கும் லஞ்சம் கொடுக்க எண்ணும் அதிமுக அடிமைகள் ?

சென்னை: பரப்பன அக்ரஹாரா சிறையில் ஜாமீனுக்காக காத்திருக்கிறார் ஜெயலலிதா.. தமிழகத்திலோ பட்டி தொட்டியெங்கும் அவருக்காக எத்தனை எத்தனை பிரார்த்தனைகள், போராட்டங்கள்... கடந்த 27ந் தேதி முதல் தமிழகம் முழுக்க பல இடங்களில் தற்கொலைகள், தீக்குளிப்புகள், தூக்கில் தொங்கிய சம்பவங்கள் ஏராளம் ஏராளம்... கடையடைப்புகள், பஸ் மறியல், பஸ் ஊழியர் போராட்டங்கள் ஏராளம், ஏராளம்... திரைத்துறையினர் உண்ணாவிரம், பல்துறையினர் நடத்திய சிறப்பு பூஜைகள், யாகங்கள் ஏராளம்.. ஏராளம்...  மொட்டை போடுதல், தீச்சட்டி ஏந்துதல், தீக்குழி இறங்குதல் ஏராளம்.. ஏராளம்...  உண்ணாவிரதங்கள், பள்ளிவாசல்களில் தொழுகைகள், கோவில்களில் மண் சோறு சாப்பிடுதல், சர்ச்சுகளில் பிரார்த்தனைகள் ஏராளம்.. ஏராளம்...  தண்ணீரில் மிதந்து வேண்டுதல், அன்னதானங்கள், விளக்கு பூஜைகள் ஏராளம்.. ஏராளம்... இன்னும் இன்னும் எத்தனை எத்தனை வேண்டுதல்கள்.. அத்தனையும் ஜெயலலிதா என்ற  ஊழல் அரசியல்வாதிக்கு !
/tamil.oneindia.in

தமிழகத்தில் உள்ள கர்நாடக மக்கள் உயிருக்கு ஆபத்து ? அமைச்சர் வளர்மதி ஜெயாவுக்கு வைக்கும் ஆப்பு ?

சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதையடுத்து கடந்த 27ம் தேதி முதல் அவர் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஜெயலலிதாவுக்கு ஜாமீன் வழங்காவிட்டால் கன்னடர்களை சிறைபிடிப்போம் என அதிமுக சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக பெங்களூரு போலீஸ் கமிஷனர் எம்.எம். ரெட்டி, சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.இந்த ஒரு போஸ்டர் அதுவும் அமைச்சர் வளர்மதியின் பெயரில் வந்திருப்பது சாதாரண விஷயம் அல்ல . இது ஒன்றே போதும் தமிழக அரசை டிஸ்மிஸ் செய்யலாம், உண்மையில் வளர்மதிக்கு ஜெயலலிதா மீது அப்படி என்ன வஞ்சமோ. அவர் கர்நாடக ஜெயிலில் இருக்கும்போது அவருக்கு எதிராகவே திரும்பி விடக்கூடிய ஒரு இன துவேஷத்தை வளர்மதி கிளப்பி உள்ளார், விக்கி விக்கி அழுவப்பவே நினச்சேன் ஏதோவொரு உள்குத்து இருக்கும்னு !

Bangladesh ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் திட்டம்: இந்திய உளவுத்துறை தகவல்

வங்காள தேச பிரதமர் ஷேக் ஹசீனாவை கொல்ல தீவிரவாதிகள் திட்டம் தீட்டியதாக இந்திய உளவுத்துறை தெரிவித்துள்ளது.
மே. வங்காள மாநிலம் பர்ட்வான் என்ற இடத்தில் உள்ள கக்ராகார் பகுதியில் கடந்த 2–ந் தேதி சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. அதில் வெடிகுண்டு தயாரித்த ஷமீம் ஷகில் அகமது மற்றும் ஸ்வொபன் மாண்டல் ஆகியோர் பலியாகினர்.
அப்துல் ஹகீம் என்பவர் காயம் அடைந்தார். அவரிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் ஜமாத்–உல்– முஜாகிதீன் வங்காள தேசம் என்ற தீவிரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது.
எனவே, போலீசாரும், உளவுத்துறையும் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். குண்டு வெடிப்பில் உயிரிழந்த ஷகில் அகமது மனைவி ரஜிரா பீபி, ஹசன் சஹெப் மனைவி மைனா பீபி ஆகியோரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.

பவானி சிங் Vs ராம் ஜெத்மலானி ! ஜெ.சாட்சிகளை கலைப்பார் ! ஜெ.தப்பி ஓடமாட்டார் ! காரசார வாதம்!

 'ஜெ. தப்பியோட மாட்டார்'- 'விட்டால் சாட்சிகளைக் கலைப்பார்' பவானி சிங் , ராம்ஜேத்மலானி
பெங்களூர்: ஜெயலலிதா முதல்வராக இருந்தவர். அவருக்கு உடல் நிலை சரியில்லை. அவர் தப்பியோடி விட மாட்டார். எனவே ஜாமீன் தர வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் ராம்ஜேத்மலானி வாதிட, பதிலுக்கு ஆஜரான அரசு வழக்கறிஞர் பவானி சிங், ஜெயலலிதா செல்வாக்கு மிக்கவர். அவரை விட்டால் சாட்சிகளைக் கலைத்து விடுவார். தண்டனையிலிருந்தும் தப்பி விடுவார் என்று வாதிட்டார். - பவானி சிங் காரசார வாதம்! இன்று கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ராம்ஜேத்மலானி வாதிடுகையில், ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுதான் தண்டனை தரப்பட்டுள்ளது. எனவே அரசுத் தரப்பு வழக்கறிஞரின் கருத்தைக் கேட்கத் தேவையில்லை. அவசியமும் இல்லை. இதுதொடர்பாக லில்லி தாமஸ், ரவி பாட்டீல் ஆகியோரது வழக்குகளில் உச்சநீதிமன்றம் தெளிவான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது. பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவுக்கு மாட்டுத் தீவன வழக்கில் 5 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

Contempt of Court நீதிபதிக்கு எதிரான போராட்டம்: ஜெ.க்கு எதிராக கோர்ட் அவமதிப்பு வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் முடிவு

பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹாவுக்கு எதிராக தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படுவதை கண்டித்து, ஜெயலிலதா உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர கர்நாடக வக்கீல்கள் திட்டமிட்டுள்ளனர். 18 வருடங்கள் நீண்ட இழுத்தடிப்புடன் நடந்த சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வரும் குற்றவாளிகள் என்று கடந்த மாதம் 27ம்தேதி பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிபதி ஜான் மைக்கேல் டி.குன்ஹா இந்த தீர்ப்பை வழங்கினார்.  ஆனால் தீர்ப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். தினம் ஒரு வகையில் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதாவது நீதிமன்றம் தவறு, தாங்கள்தான் சரி என்பது இந்த போராட்டத்தின் உட்கருத்து. மூத்த வக்கீலான ஆச்சாரியா இந்த போராட்டங்கள் குறித்து கருத்து கூறியபோது, தீர்ப்பு சாதகமாக வந்தால் வரவேற்கவும் கூடாது, எதிராக வந்தால் போராடவும் கூடாது. இதுதான் நீதிமன்ற நடைமுறை என்று கூறியிருந்தார். ஆயினும் தமிழகத்தில் ஏனோ போராட்டங்கள் நடந்து வருகின்றன. அகில இந்தியாவும், தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களை எள்ளி நகையாடி வருகிறது. இந்நிலையில், அடுத்தகட்டமாக தீர்ப்பு கூறிய நீதிபதியையே விமர்சனம் செய்து அதிமுகவினர் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர். வார்த்தைகளால் விவரிக்க முடியாத வகையில், குன்ஹா விமர்சனம் செய்யப்படுகிறார். அவரை கன்னடர் என்று ஒரு குரூப்பும், அவரை கிறிஸ்தவர் என்று மற்றொரு குரூப்பும் சேற்றை வாரி இறைத்து வருகிறது. இந்த போராட்டங்களை மீடியாக்களின் புண்ணியத்தால் கர்நாடக பார் கவுன்சிலும் கவனித்துக்கொண்டுதான் உள்ளது.

யாவும் காதலே ! நல்ல கருத்து சொல்ல போராய்ங்களாம் ? பாத்தாலே தெரியறது ?

சென்னை: புதிய கலாசாரத்துக்கு எதிராக உருவாகிறது ‘யாவும் காதலே.இதுபற்றி இயக்குனர் ஏ.ஆர்.கே.ராஜராஜா கூறியது:பெரியவர்கள் நிச்சயம் செய்து திருமணம் செய்வது பாரம்பரிய கலாசாரம். இன்று நிலைமை தலைகீழாகிவிட்டது. திருமணத்துக்கு முன்பே ஒன்றாய் வாழ்ந்து பார்ப்பது. பிடித்திருந்தால் திருமணம் இல்லாவிட்டால் பிரிந்துவிடுவது என்று கலாசாரம் சீரழிந்து கிடக்கிறது. இது சமுதாயத்தில் வேகமாக பரவி வருகிறது. இதை காமெடியுடன் விமர்சிக்கும் கதைதான் இது. சுப்பு ஹீரோ. ரஞ்சனா மிஸ்ரா, சிம்மிதாஸ் ஹீரோயின். கதைக்கு தேவை என்பதால் பிரெஞ்சு நடிகை காத்ரின் ஜாக்சன் புதுமுகமாக அறிமுகமாகிறார். எஸ்.சக்திவேல் ஒளிப்பதிவு. வல்லவன் இசை. சங்கர், எம்.ஜெய், ரசிக்குட்டி தயாரிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு சென்னையில் நடக்கிறது. கதைக்கு தேவைப்படும் பட்சத்தில் கேரளா, மும்பை தாண்டி இப்போது வெளிநாடுகளில் ஹீரோயின் தேடுகிறார்கள் கோலிவுட் இயக்குனர்கள். இக்கதைக்கு அவசியம் தேவை என்பதால் பிரெஞ்சு நடிகை காத்ரின் ஜாக்சனை அறிமுகம் செய்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்..tamilmurasu.org

மங்கள்யான்' வெற்றியை 'இழிவுபடுத்தும்' கார்ட்டூன்: மன்னிப்புக் கோரியது 'தி நியூயார்க் டைம்ஸ்'

இந்தியாவின் 'மங்கள்யான்' வெற்றியை இனவாத அடிப்படையில் இழிவுபடுத்தி கருத்துச் சித்திரம் (கார்ட்டூன்) வெளியிட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளுக்கு அமெரிக்காவின் 'தி நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகை விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், தமது கருத்துச் சித்திரம், வாசகர்கள் மனத்தை காயப்படுத்தியிருந்தால், அதற்கு மன்னிப்புக் கோருவதாகவும் அந்தப் பத்திரிகை கூறியுள்ளது. பிரபல அமெரிக்க பத்திரிகையான 'தி நியூயார்க் டைம்ஸ்'சில் செப்டம்பர் 28-ஆம் தேதி, இந்தியாவின் 'மங்கள்யான்' விண்கலம் சாதனையைக் குறிக்கும் விதமாக கருத்துச் சித்திரம் ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், எலைட் ஸ்பேஸ் கிளப் அறைக்குள் செல்வதற்காக, இந்தியராக வருணிக்கப்பட்ட ஒருவர் தனது கையில் மாடு ஒன்றுடன் கதவைத் தட்டுவது போல் கருத்துச் சித்திரம் தீட்டப்பட்டிருந்தது .

சுதாகரன் திருமணத்துக்கு சிவாஜியின் மகன் மருமகன் கணக்கிற்கு ஜெயலலிதாவின் பணம் வந்துள்ளது நிருபணம் !

பெங்களூர்: வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணச் செலவு முழுவதையும் செய்தது ஜெயலலிதாதான் என்று ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று தனி நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா தீர்ப்பில் கூறியுள்ளார். சொத்து குவிப்பு வழக் கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெங்களூர் தனி நீதிமன்றம் 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஸீ100 கோடி அபராதமும் விதித்துள்ளது. இதேபோல், சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறைத் தண்டனையும் ஸீ10 கோடி அபராதமும் விதித்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பில் சுதாகரன் திருமணச் செலவு தொடர்பாக நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா கூறியிருப் பதாவது: சுதாகரனுக்கும் நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தி சத்தியலட்சுமிக்கும் நடந்த திருமணத்துக்கான ஏற்பாடுகள் அனைத்தையும் சிவாஜி கணேசனின் மூத்த மகன் ராம்குமார்தான் செய்தார் என்று ஜெயலலிதா தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.