சனி, 24 டிசம்பர், 2011

காசோலைகளாக மட்டுமே நன்கொடை வசூலிக்கப்படும் : அன்னா ஹசாரே!


புதுடெல்லி: உண்ணாவிரதப் போராட்டச் செலவுகளுக்கு, காசோலைகள் மற்றும் வங்கி வரைவோலைகள் மூலமாக மட்டுமே, நன்கொடை வசூலிக்கப்படும் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார். மத்திய அரசின் லோக்பாலுக்கு எதிராக, மும்பையில், வரும் 27ம் தேதி முதல் 3 நாட்கள் தாம் மேற்கொள்ளவுள்ள உண்ணாவிரதப் போராட்டச் செலவுகளுக்கு, காசோலைகள் மற்றும் வங்கி வரைவோலைகள் மூலமாக மட்டுமே, நன்கொடை வசூலிக்கப்படும் என அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.

சசிகலா அன்டு கோ வீடுகளில் ரெயிடு! ஆவணங்களும், பெட்டிகளும் சிக்கின!!

சசிகலா சின்டிகேட்டை வெளியேற்றியதுடன் ‘தி என்ட்’ கார்டு போடப்பட்டு விட்டது என்று அவர்களில் யாராவது நினைத்தாலும் நினைத்திருக்கலாம். ஆனால் நடப்பது அப்படியல்ல. சசிகலா வெளியேற்றம் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்து இன்றுவரை, குறைந்தபட்சம் 14 இடங்களில் அதிகாரபூர்வமற்ற ரெயிடு நடைபெற்றிருக்கிறது.
நடைபெற்றது எந்த அரசு துறையில் இருந்தோ, காவல்துறையில் இருந்தோ வழமையான பார்மாலிட்டிகளைப் பின்பற்றிச் செய்யப்பட்ட ரெயிடு அல்ல என்பதால், விஷயம் மீடியாக்களில் வெளியாகவில்லை. சசிகலா குடும்பத்தைச் சேர்ந்த 10 பேரின் 14 இல்லங்களில் ரெயிடு நடைபெற்ற விபரங்கள் எம்மிடம் உள்ளன.

ரஜினிக்குப் பின் அஜீத். மங்காத்தா.130 கோடி. சத்தமில்லாமல் ஒரு சாதனை!

ஒழுங்காக ஒரு வெற்றிப்படம் கூட தரமுடியாத நடிகர்கள் அடுத்த சூப்பர் ஸ்டார் நானாக்கும் என்று விரலாட்டிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் ஒரு சாதனை செய்துவிட்டு அமைதி காக்கிறார் அஜீத்.
இவரும் கூட ஒரு காலத்தில் நானே அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொன்னவர்தான். ஆனால் பின்னாளில் சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை அடைய எத்தனை பாடுகள் படவேண்டும், எத்தனை வெற்றிகள் தரவேண்டும், அந்த வெற்றிகளின் பிரமாண்டம் எப்படி இருக்க வேண்டும் என்பது புரிந்து அமைதியாகிவிட்டார் (இப்போது சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் ஒரு படத்திலாவது அடிவாங்கினால் போதும் என்கிறார்!)
அஜீத் நடிக்க மங்காத்தா படம் மொத்தம் ரூ 130 கோடியை வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் விவரங்கள் தெரிவிக்கின்றன. சன் பிக்சர்ஸ் நிறுவனமும் இதனை உறுதிப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரஜினிக்கு அடுத்து அதிக வசூல் தரும் நாயகன் என்ற அந்தஸ்து அஜீத்துக்கு கிடைத்துள்ளது.

பாஸ்போர்ட் முடக்கம்: உதயகுமார் குழு வெளிநாடு தப்ப முடியாது

கூடங்குளம் அணு உலைக்கு எதிராக போராடும் உதயக்குமார் மற்றும் அவரது ஆதரவாளர்களின் பாஸ்போர்ட்களை முடக்க, நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.
எதிர்ப்பாளர்கள் மற்றும் அவர்களது குழுவை சேர்ந்தோர், கடைசி கட்டத்தில் வெளிநாட்டுக்கு தப்பி விடாமல் இருக்க, அவர்களது பாஸ்போர்ட்களை முடக்கும் பணியில், மத்திய அரசும், நெல்லை மாவட்ட போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.
அணு உலை எதிர்ப்பாளர்கள் குறித்து, ரகசிய விசாரணை நடத்தும் மத்திய அதிகாரிகள் கூறுகையில், "" உதயக்குமார் மற்றும் அவர்களது குழுவினரின் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து, முக்கிய தகவல்கள் கிடைத்து உள்ளன. போராட்டம் முடிவுக்கு வரும் போது, அவர்கள் அனைவரும் வெளிநாட்டுக்கு செல்ல திட்டமிட்டு உள்ளதாக, தகவல் உள்ளது,'' என்றார்.

முல்லைப் பெரியாறு: டிசம்பர் 30-ல் திரைப்பட இயக்குநர்கள் உண்ணாவிரதம்

சென்னை, டிச. 23: முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக டிசம்பர் 30-ம் தேதி தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று இயக்குநர் பாரதிராஜா கூறினார்.  இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியது:  பல்வேறு பிரச்னைகளில் திரைப்படத் துறையினர் அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தனர்.  ஆனால், முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையில் அப்படி ஒன்றிணைந்து குரல் கொடுக்கவில்லை. ஏன் என்றால் இங்கு தமிழர்களுக்கு என்று தனியாக சங்கம் இல்லை.  தென்னிந்தியத் திரைப்பட வர்த்தக சபை என்று இருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கம் என்று இருக்கிறது. ஆனால் தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை, தமிழ் நடிகர் சங்கம் என்று இல்லை. இதில் உள்ள அரசியலைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆனால் தமிழ்த் திரைப்பட இயக்குநர் சங்கம் வைத்திருக்கிறோம். அதனால்தான் இந்த விவகாரத்தில் போராடி வருகிறோம்.

கௌரவக் கொலைகள் – விடாது வரும் இந்திய சாதனை!

1990களில் வந்த பந்தம் என்ற திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், பணக்கார, பாசமுள்ள, கண்டிப்பான, முன்னாள் ராணுவ தளபதியாக வருவார். செல்லமாக வளர்த்த மகள் தனது விருப்பத்துக்கு மாறாக காதலித்து திருமணம் செய்து கொண்டதும், அவளை வீட்டை விட்டே ஒதுக்கி வைத்து, அவள் நினைவு கூட மிஞ்சாத படி, வீட்டில் தொடர்புடைய எல்லா பொருட்களையும் அடித்து உடைத்து விடுவார். ஒரு கட்டத்தில் மகளின் கணவன் விபத்தில் இறந்து விட்டான் என்ற செய்தியைக் கேட்டதும், ஐஸ்கிரீம் கொண்டு வரச் சொல்லி தனது வெறுப்பை வெளிப்படுத்துவார்.
அதற்கு முன்பும், பின்பும் பல தமிழ் படங்களில் பணக்கார, ஆதிக்க சாதி தகப்பனார்கள், தமது அந்தஸ்துக்கு பங்கமாக, சாதிப் பெருமைக்கு இழுக்காக, மதத்திற்கு வெளியில் திருமணம் செய்து கொண்ட மகள்களை பல்வேறு விதமாக மனரீதியாகவும், நடைமுறையிலும், உடல் ரீதியாகவும் அழித்து விடுவதைப் பார்த்திருக்கிறோம். சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான காதல் திரைப்படத்தில் மெக்கானிக் இளைஞனுடன் ஓடிப் போய் விட்ட மகளை திரும்ப அழைத்து வரச் செய்து வன்முறை தாண்டவத்தை நிகழ்த்திக் காட்டுவார் சாராய வியாபாரி தந்தை.

ஜெயா டி.வி.-யிலிருந்து காரில் கடத்தப்பட்ட ‘அந்த’ அதிகாரி கக்கியது என்ன?

வெளியே பரபரப்பு காட்டாமல், ஜெயா டி.வி. நிர்வாக அலுவலகத்தில் இருந்து மூன்று அட்டைப் பெட்டிகள் நிறைய ஆவணங்கள், நேற்று (வெள்ளிக்கிழமை) போயஸ் கார்டனுக்கு கொண்டு செல்லப்பட்டன. காவல்துறை அடையாளம் ஏதுமற்ற இரு வாகனங்களில் இந்த அட்டைப் பெட்டிகள் சென்றிருக்கின்றன.
இந்த ஆபரேஷனில் ஈடுபட்ட யாருமே -வாகனங்களின் டிரைவர்கள் உட்பட- யூனிபார்மில் இருக்கவில்லை.
கடந்த இரு தினங்களாக இந்த டாக்குமென்ட்கள் ஜெயா டி.வி. அலுவலகத்தில் இருந்து வெளியேறி விடாதவாறு மேலதிக செக்யூரிட்டி போடப்பட்டிருந்தது. நிர்வாகத்திலுள்ள அதிகாரிகள் யாருக்கும் கடந்த இரு தினங்களாக இந்த ஆவணங்கள் இருந்த அறைக்குள் செல்ல அனுமதி கொடுக்கப்படவில்லை.
போயஸ் தோட்டத்தில் இருந்து சசிகலா வெளியேற்றப்பட்ட பின் சற்றுத் தாமதமாக, சிறிது சிறிதாகத்தான், அவர் தொடர்பான இடங்களில் பல உளவுத்துறையின் கண்காணிப்பு வளையத்துக்குள் வந்தன. ஆனால் எவ்வித தாமதமும் இல்லாமல் கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்ட இடம், ஜெயா டி.வி. அலுவலகம்தான்.

Anna Hazare:நன்கொடை கொடுங்க! - 'வசூலில்' இறங்கிய ஹஸாரே


Anna Hazare
மும்பையில் உண்ணாவிரதமிருக்க ஒதுக்கப்பட்டுள்ள இடத்துக்கு வாடகை செலுத்த தேவையான தொகையை நன்கொடையாக தருமாறு மக்களைக் கேட்டுள்ளார் அன்னா ஹஸாரே.
ஊழலுக்கு எதிராக அரசு கொண்டு வந்துள்ள லோக்பால் சட்டத்தை ஹஸாரே ஏற்காமல் அடம்பிடித்து 27-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அறிவித்துள்ளார்.
முன்பு அவர் உண்ணாவிரதமிருந்தபோது ஆதரித்தவர்கள் கூட, இந்த முறை எதிர்ப்பைக் காட்டியுள்ளனர்.
இருந்தாலும் மும்பை எம்.எம்.ஆர்.டி.ஏ. மைதானத்தில் ஏற்பாடுகள் நடைபெறுகின்றன. அந்த மைதானத்துக்கான வாடகையை ரத்து செய்ய உத்தரவிடக் கோரி அன்னா ஹசாரே குழுவை சேர்ந்தவர்கள் வழக்கு தொடர்ந்தனர்.
அந்த வழக்கை மும்பை உயர்நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது. மேலும், அன்னா ஹசாரே உண்ணாவிரதம் குறித்தும் கடுமையாகத் திட்டி தீர்ப்பளித்தனர் நீதிபதிகள். உண்ணாவிரதம் என்ற பெயரில் மக்களுக்கு அவர் தொல்லை கொடுப்பதாகவும், நாடாளுமன்றத்தை மதிக்காமல் செயல்படுவதாகவும் குட்டு வைத்தனர்.

ஸ்டாலினுக்கு இதய மருத்துவ பரிசோதனை

சென்னை, டிச. 23: தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் இதய ரத்தக் குழாய் அடைப்பைக் கண்டறியும் "ஆஞ்சியோ' பரிசோதனை வெள்ளிக்கிழமை செய்யப்பட்டது.  இது தொடர்பாக தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்ட அறிக்கை:-  ""மு.க. ஸ்டாலின் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23) பொது மருத்துவப் பரிசோதனை செய்துகொள்ள போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்குச் சென்றார். "ஆஞ்சியோ' பரிசோதனைக்குப் பிறகு, அவருக்கு எந்தவிதக் குறைபாடும் இல்லையென்று டாக்டர்கள் தெரிவித்தனர்'' என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பரமக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவு

மதுரை : பரமக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு ஐகோர்ட்  மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் ஈடுபட்ட போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்யக்கோரிய மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் செப்டம்பர் 11ம் தேதி இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த தமிழக மக்கள் முன்னேற்றக்கழக நிறுவனர் ஜான் பாண்டியன் திட்டமிட்டிருந்தார். மேலும், கமுதி அருகே கொலை செய்யப்பட்ட பள்ளி மாணவரின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூறவும் முடிவு செய்திருந்தார். இதற்கு அனுமதி மறுத்த போலீசார், ஜான் பாண்டியனை தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் கைது செய்தனர்.

புயலால் தனுஷ்கோடி அழிந்த தினம் புகழின் உச்சியில் இருந்த யாத்திரை தலம்

ராமேஸ்வரம்: நூற்றாண்டுகளாக புகழின் உச்சியில் இருந்த தீர்த்த யாத்திரை தலமான தனுஷ்கோடி அழிந்த தினம் இன்று. 1964, டிச.,23ல் நள்ளிரவில் வீசிய புயல் இந்நகரை புரட்டி போட்டது. நினைவு சின்னமாகவே மாறிவிட்ட இங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்தி சுற்றுலா நகராக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராமேஸ்வரம் தீவின் தென்கிழக்கு முனையில் 18 கி.மீ., தூரத்தில் அமைந்துள்ளது தனுஷ்கோடி. இலங்கை சென்று சீதையை மீட்டு திரும்பிய ராமர் அம்பை எய்து இவ்விடத்தை அடையாளம் காட்டியதாக புராணங்கள் கூறுகின்றன.

பெரியார் நினைவுநாள் - 24 டிசம்பர் 2011

பெரியார் : ‘காங்கிரஸை ஒழிப்பதே எனது வேலை!’


ஈரோட்டைச் சேர்ந்த ஈ.வெ. ராமசாமிக்கு காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்கள் பலரிடமும் தொடர்பு இருந்தது. குறிப்பாக, சேலம் நகராட்சி மன்றத் தலைவராக இருந்த சி. ராஜகோபாலாச்சாரி (ராஜாஜி), வரதராஜுலு நாயுடு போன்ற காங்கிரஸ்காரர்களுடன் நல்ல நட்பு இருந்தது. ஈரோடு வட்டார மக்கள் மத்தியில் நல்ல அறிமுகம் பெற்றுள்ள ராமசாமியை எப்படியாவது காங்கிரஸ் கட்சியில் சேர்த்துவிடவேண்டும் என்பது ராஜாஜியின் விருப்பம். அதற்கான முயற்சிகளில் அவ்வப்போது ஈடுபட்டுவந்தார்.

சாப்பிடாத சசிகலா. தினமும் கார்டனில் சோ இருக்கிறாராம்

‘‘இந்த நடவடிக்கை உண்மையானதுதானா?’’
‘‘முதல்வர் ஜெயலலிதாவுக்கு நெருக்கமானவர்கள் உறுதியான நடவடிக்கைதான் என்று சொல்கிறார்கள். சசிகலா குடும்பத்தினர் மீதான கோபம் ஜெயலலிதாவுக்கு இன்னும் குறையவில்லை என்றே சொல்கிறார்கள்.’’
எம்.ஜி.ஆர். பாணி கவனிப்பு!
‘‘மேற்கு மண்டலத்துக்கு பொறுப்பாளராக இருந்தவரையும், மதுபான ஆலைக்கு பொறுப்பானவரையும் கார்டனுக்கே அழைத்து வந்து எம்.ஜி.ஆர். பாணியில் விசாரித்ததாகச் சொல்கிறார்கள்.

வெள்ளி, 23 டிசம்பர், 2011

டிஜிட்டல்- குறைந்த செலவில் தமிழ் படங்கள் தயாராகிறது டிஜிட்டல் உபயம்

தமிழ் சினிமா டிஜிட்டல் மயத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் உயர்ரக கேமராவான ரெட்ஒன்னின் பயன்பாடு அதிகரித்து விட்டது. முன்பு மும்பையில் மட்டுமே கிடைக்கும் இந்த கேமரா, இப்போது சென்னையிலேயே கிடைக்கிறது. தற்போது தயாரிப்பில் உள்ள படங்களில் 60 சதவிகிதம் டிஜிட்டல் முறையில் படமாக்கப்படுகிறது. படத் தயாரிப்பு பட்ஜெட்டில் பெரும்பகுதி பிலிமுக்கே ஒதுக்கப்படும். டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் அது தேவையில்லை என்பதால் சிறு முதலீட்டு படங்களின் தயாரிப்பு அதிகரித்துள்ளது. சராசரியாக ஒரு நாளைக்கு 150 படங்களின் படப்பிடிப்பு, தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த கணக்கு குறும்படங்களையும் சேர்த்து என்கிறார்கள். முன்பு சில தியேட்டர்களில் மட்டுமே டிஜிட்டல் சினிமாவை திரையிடும் வசதி இருந்தது. இப்போது 75 சதவிகித தியேட்டர்கள் இந்த வசதிகளை கொண்டிருக்கின்றன.
 சமீபத்தில் நடந்த பிக்கி மாநாட்டில் பேசிய கமல்ஹாசன், 'டிஜிட்டல் சினிமா தவிர்க்க முடியாத ஒன்று. நாளைக்கு செல்போனில் சினிமா வெளியாகும். ரசிகனின் வீட்டுக்கே ரிலீஸ் தேதியன்று படம் முறையாகச் சென்று சேரும் காலம் வரும்.

ஆ.ராசா எகிறுகிறார் .. சீன் காட்டுகிறீர்களா?”“பகீர் மிரட்டல்.. குபீர் ஓட்டம்


சி.பி.ஐ. தனக்கு எதிராக ஆசீர்வாதம் ஆச்சாரியை பொய்ச்சாட்சியாக செட்டப் செய்திருப்பதாக தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, இன்று (வெள்ளிக்கிழமை) டில்லி கோர்ட்டில் குற்றம் சாட்டினார். “கோர்ட்டில் ஆச்சாரிக்கு கொலைமிரட்டல்” என்று நேற்று கூறப்பட்டது, திறமையாக நடத்தப்பட்ட ஒரு நாடகம் என்று ராசாவின் வக்கீல் சுசில் குமார் சாடினார்.
சாட்சியை குறுக்கு விசாரணை செய்த வக்கீல் குமார், “நேற்று இந்தக் கோர்ட்டில் அரங்கேறிய நாடகம் எதற்காக என்று எமக்கு நன்றாகவே தெரியும்”  என்றார். (நாடகம் தெரியாதவர்கள் இங்கே கிளிக் செய்யவும்)
“நேற்று நடத்தப்பட்ட நாடகம், ஜனவரி 2-ம் தேதியை மனதில் வைத்தே நடந்தது. எனது கட்சிக்காரர் ராசாவின் முன்னாள் தனிச் செயலாளர் சந்தோலியாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை அன்று கோர்ட்டுக்கு வருகின்றது. அதற்காக நடத்தப்பட்டதே ஆச்சாரி கொலை மிரட்டல் நாடகம்”  என்றும் அவர் கூறினார்.

Air india ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்

ஏர் இந்தியா ஊழலும் ஊடகங்களின் பாராமுகமும்பொதுத்துறை நிறுவனமான ஏர்இந்தியாவின் செயல்பாடுகள் குறித்து மைய அரசின் தணிக்கைத் துறை நாடாளுமன்றத்திற்கு அளித்துள்ள அறிக்கை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு அந்நிறுவனத்தைத் திட்டமிட்டு படுபாதாளத்திற்குள் தள்ளிவிட்டுள்ள சதித்தனத்தை அம்பலப்படுத்தியிருக்கிறது.  மைய அரசும், ஏர்இந்தியா நிர்வாகமும் அமெரிக்காவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான போயிங்கிற்கும், ஐரோப்பாவைச் சேர்ந்த விமானத் தயாரிப்பு நிறுவனமான ஏர் பஸ் நிறுவனத்திற்கும் மற்றும் விமான சேவைகளை நடத்திவரும் எமிரேட்ஸ், கிங் ஃபிஷர், ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்ட பல தனியார் நிறுவனங்களுக்கும் சாதகமாக எடுத்த முடிவுகளால், ஏர்  இந்தியா இன்று மீள முடியாத நட்டத்திலும் கடனிலும் சிக்கிக் கொண்டுவிட்டதாகத் தனது அறிக்கையில் குற்றஞ்சுமத்தியிருக்கிறது, தணிக்கைத் துறை.
2004ஆம் ஆண்டுக்கு முன்பு வரை இலாபத்தில் இயங்கிவந்த ஏர்இந்தியா நிறுவனம், அதன் பின், குறிப்பாக 2004இல் மன்மோகன் சிங் தலைமையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவியேற்ற பிறகுதான் நட்டமடையத் தொடங்கியது.  ஏர்இந்தியா நிறுவனம் தனது வியாபாரம் படுத்துப்போனதால் நட்டமடையவில்லை.  மாறாக, ஏர்இந்தியா நிறுவனத்திற்குரிய வர்த்தகச் சந்தையைத் தனியார் விமான நிறுவனங்களுக்குத் தாரை வார்த்துக் கொடுத்ததும்; தேவையேயில்லாத விதத்திலும் ஏர்இந்தியாவின் வருமானத்துக்கு மீறிய விதத்திலும் புதிய விமானங்களை வாங்கி அந்நிறுவனத்தின் கடன் சுமையை அதிகரித்ததும்தான் ஏர்இந்தியாவைப் போண்டியாக்கிவிட்டது.

Anna Hazare ஹசாரே யார்? ஒரு “பாசிஸ்ட் நாட்டாமை” ?

ஒய் திஸ் கொலைவெறிக்கு இணையாக தொலைக்காட்சி ஊடகங்களால் பிரபலப்படுத்தப்பட்ட சூப் சாங் அண்ணா ஹசாரே. ஒய் திஸ் கொலைவெறியை மார்க்கெட் செய்தது சோனி நிறுவனம். அண்ணாவுக்கு டைம்ஸ் நௌ தொலைக்காட்சி. ஏற்கெனவே சோனி நிறுவனம் மார்க்கெட் செய்த பிரபல “சூப் சாங்” ஒன்று உண்டு. அது ஏ.ஆர்.ரஹ்மானின் வந்தே மாதரம். அதே போல இந்தியாவின் முதலாளித்துவ ஊடகங்களும் அண்ணாவுக்கு முன்னால் பல பெரியண்ணாக்களை மார்க்கெட் செய்திருக்கின்றன.

கார்ப்பரேட் நிறுவனங்களால் ஸ்பான்சர் செய்யப்படும் சூப் சாங்குகள் வைரல் ஆகப் பரவுவது குறித்து மகிழ்ச்சி கொள்பவர்களுக்கு, அந்தக் காய்ச்சல் கொஞ்சநாளைக்கு அப்புறம் விட்டுவிடும்போது, அதைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவம் வேண்டும். சில மாதங்களுக்கு முன் ஹசாரே எழுச்சியால், “பாரதத்தின்” உடல் கொதித்தை காய்ச்சல் என்று புரிந்து கொள்ளாமல், “உள்ளொளியின் உக்கிரம்” என்று புரிந்து கொண்டவர்களும், காய்ச்சலில் பினாத்தியவற்றை கவிதையெனக் கொண்டாடியவர்களும் உண்டு. அவர்களில் முதல்வர் ஜெயமோகன். ஒப்புக்கொள்ள மறுப்பவர்கள் இன்றைய (23.12.2011) தினமணி நடுப்பக்க கட்டுரையையும், ஹசாரே குறித்த ஜெயமோகனின் முந்தைய எழுத்துகளையும் பார்க்கவும்.

11ம் வகுப்பு மாணவி தூக்கில் தொங்கினார் செல்போனில் சில்மிஷம் பரப்பிய விவகாரம்


சென்னை : பாதிரிவேடு அரசு மேல்நிலைப் பள்ளியில், கடந்த வாரம் விடுமுறை தினத்தில் பள்ளிக்கு வந்து மொட்டை மாடியில் வைத்து மாணவிகளிடம் சில்மிஷம் செய்து, அந்த காட்சியை செல்போன் மூலம் பரப்பியதால், பிளஸ் 2 மாணவர்கள் 5 பேருக்கும் 11ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகளுக்கும் டிசி கொடுக்கப்பட்டது. டிசி கொடுக்கப்பட்ட செதில்பாக்கம் கிராமத்தை சேர்ந்த மாணவி, மன உளைச்சல் காரணமாக வீட்டில் யாரும் இல்லாதபோது, மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தை, தேசிய பொது நூலகமாக மாற்ற வழக்கறிஞர் பிரபாகரன் மனு!

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தை தேசிய பொது நூலகமாக ஏன் அறிவிக்கக் கூடாது என்ற பொதுநல மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் பிரபாகரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் அண்ணா நூற்றாண்டு நூலகம் இந்தியாவின் மிகப்பெரிய நூலகம் என்றும் அதனை தேசிய பொது நூலகமாக அறிவிக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
மேலும், இந்த நூலகம் தெற்காசியாவில் இரண்டாவது பெரிய நூலகம் என்பதை அவர் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

Gujarat 23 குழந்தைகளுக்கு எய்ட்ஸ் கிருமி இருந்த ரத்தத்தை ஏற்றிய மருத்துவர்கள்

குஜராத் மாநிலத்தில் உள்ள தனியார் குழந்தைகள் மருத்துவமனையில் 23 குழந்தைகளுக்கு ரத்த மாற்று சிகிச்சையின் போது எய்ட்ஸ் கிருமி பாய்ந்த ரத்தம் ஏற்றப்பட்டதாக ஆர்பாட்டம் வெடித்ததையடுத்து வழக்கு பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அக்குழந்தைகளின் உடல்நிலை 6 மாத காலமாக சரியின்றி இருந்தது. இதனால் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டதில் அவர்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தில் எய்ட்ஸ் கிருமிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. ஆஸ்பத்திரி நிர்வாகத்தை கண்டித்து பெற்றோர்கள்
போராட்டத்தில் ஈடுபட்டனர். குஜராத் மாநில ஐகோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தனர்.

கோயில் businessஇல் பணத்தை முதலீடு செய்யும் நடிகர் அர்ஜுன்

Arjun
28 அடிய உயர ஆஞ்சநேயர் சிலையுடன் உலகிலேயே மிகப் பெரிய ஆஞ்சநேயர் கோயிலைக் கட்டி வருகிறார் நடிகர் அர்ஜுன்.
சென்னை அருகே கெருகம்பாக்கம் என்ற இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆஞ்சநேயர் கோயில் கட்டும் பணியை அர்ஜுன் தொடங்கியது நினைவிருக்கலாம்.
20 ஏக்கர் பரப்பளவு உள்ள அவரது சொந்த தோட்டத்தில், இந்தக் கோயிலைக் கட்டி வருகிறார். முதலீடு செய்யும் பணத்திற்கு மிக நிச்சயமான இலாபம் தரக்கூடிய ஒரே பிசினெஸ் கோவிலும் இதர மத சம்பந்தமான நிறுவனங்களுமே என்பது தெரிந்ததே.

Dam 999 ஆஸ்கர் விருது கிடைக்க A.R.ரஹ்மான் பிரார்த்தனை

AR Rahman
தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும், கண்டனத்தையும், குமுறலையும் சம்பாதித்த, தமிழக அரசால் திரையிட தடை விதிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய டேம் 999 படத்துக்கு இசைப் புயல் ஏ.ஆர். ரஹ்மான் முழு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தப் படத்தின் ஒரு பாடலுக்காவது ஆஸ்கர் விருது கிடைக்க தான் கடவுளிடம் பிரார்த்தனை செய்வதாக அவர் கூறியுள்ளார்.
ரஹ்மானின் இந்த வேண்டுதல், முல்லைப் பெரியாறு அணைக்காக போராடி வரும் அனைவருக்கும் அதிர்ச்சியையும், வியப்பையும் அளித்துள்ளது. ஒரு தமிழராக இருந்து கொண்டு ரஹ்மான் இப்படிச் சொல்லலாமா என்று அனைவரும் குமுறுகின்றனர்.

தத்தளிக்கிறது கேரளா!விண்ணைத் தொடும் விலைவாசி தமிழகத்தின் தடை

Kerala
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக மக்கள் இதுவரை இல்லாத அளவுக்கு கொந்தளித்துப் போயிருப்பதால் மறைமுகப் பொருளாதாரத் தடையில் கேரள மாநிலம் சிக்கியுள்ளது. இதனால் அங்கு பல அத்தியாவசியப் பொருட்களின் விலை பெருமளவில் உயர்ந்துள்ளது. ஆனால் இதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அங்குள்ள அரசு மறைத்து வருவதாக கூறப்படுகிறது.
சாதாரண அணைப் பிரச்சினையை கிட்டத்தட்ட இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சினை போல மாற்றி விட்டது கேரள அரசு. தேவையில்லாமல் அங்குள்ள அரசியல்வாதிகள் மக்களை கொந்தளிக்கும் வகையில் பேசப் போக தற்போது அவர்களாலேயே கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு கேரளாவில் தமிழர்கள் மீதும், தமிழக வாகனங்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள் சமூக விரோதிகள்.

சிபிஐ உருவாக்கிய 'பொய் சாட்சி' தான் ஆசீர்வாதம் ஆச்சாரி: ராசா பரபரப்பு குற்றச்சாட்டு


Raja
டெல்லி: 2ஜி வழக்கில் எனது முன்னாள் உதவியாளர் ஆசீர்வாதம் ஆச்சாரியை, எனக்கு எதிராக பொய் சாட்சியாக சிபிஐ உருவாக்கியுள்ளது என்று முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார்.
டெல்லி பாட்டியாலா சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வரும் 2ஜி வழக்கு விசாரணையில், ராசாவின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சுஷில் குமார், நீதிபதி ஓ.பி.சைனியிடம் இதனைத் தெரிவித்தார்.
மேலும் தன்னை கொல்ல முயற்சி நடப்பதாக ஆச்சாரி புகார் கூறியிருப்பதும் ஒரு நாடகம் தான் என்றும் ராசாவின் வழக்கறிஞர் கூறினார்.
அவர் வாதாடுகையில், ராசாவுக்கு எதிராக பொய் சாட்சி சொல்வதற்காக ஆசீர்வாதத்தை சிபிஐ தயார் செய்துள்ளது. இது தான் இந்த வழக்கில் முக்கிய வாதமே.

சிபிஐ சாட்சி ஆச்சாரியை தோண்டித் துருவிய கனிமொழியின் வக்கீல் ஜேத்மலானி!

Ram Jethmalani
டெல்லி: டெல்லி சிபிஐ சிறப்பு கோர்ட்டில் நடந்த குறுக்கு விசாரணையின்போது சிபிஐ தரப்பில் சாட்சியம் அளித்த சாட்சியான ஆசிர்வாதம் ஆச்சாரியை கிட்டத்தட்ட 2 மணி நேரம் கனிமொழியின் வழக்கறிஞர் ராம் ஜேத்மலானி தனது கேள்விக்கணைகளால் தோண்டித் துருவி விட்டார்.
ஜேத்மலானியின் கேள்விகளால் ஆச்சாரி தடுமாறிப் போய் விட்டார். ஆச்சாரி வேறு யாருமல்ல, முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசாவின் முன்னாள் உதவியாளர் ஆவார். கலைஞர் டிவியின் மூளையே கனிமொழிதான் என்பது ஆசிர்வாதம் ஆச்சாரியின் வாக்குமூலமாகும். இந்தக் கருத்தை நேற்று நடந்த குறுக்கு விசாரணையின்போதும் அவர் ஆணித்தரமாக எடுத்து வைத்தார். அப்போது ஜேத்மலானி அவரிடம் பல்வேறு கேள்விகளாக சரமாரியாக கேட்டு திணறடித்தார்.

கேரள MPக்களுக்கு அமைதியாக இருக்குமாறு சோனியா அட்வைஸ்

டெல்லி: முல்லைப் பெரியாறு பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க பிரதமர் மனமோகன் சிங் நடவடிக்கை எடுத்து வருகிறார். எனவே இரு மாநில மக்களும் அமைதியாக இருக்க வேண்டும் என்று சோனியா காந்தி கூறியுள்ளார்.
சோனியா காந்தியை நேற்று கேரளாவைச் சேர்ந்த பி.டி.தாமஸ், அன்டோ அந்தோணி, ஜோஸ் கே.மணி, வேணுகோபால், தனபாலன் ஆகிய எம்.பிக்கள் சந்தித்துப் பேசினர்.
அப்போது அவர்களிடம் பேசிய சோனியா, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினையைத் தீர்த்து வைக்க மத்திய அரசும், பிரதமரும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். எனவே இரு மாநில மக்களும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
மேலும் இரு மாநில மக்களும் நல்லுறவைக் கெடுக்கும்வகையிலான காரியங்களில் ஈடுபடக் கூடாது என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

கருப்பாயி என்கிற நூர்ஜஹான் மதமாற்றம் தீர்வே அல்ல

அன்வர் பாலசிங்கம் எழுதி கலங்கைப் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்தக் கதையை நேற்று இரவு படித்து முடித்தேன். சிறிய புத்தகம். தொண்ணூற்றி சொச்சம் பக்கங்கள்.
கதை எழுதும் வடிவம் அவருக்குச் சிக்கவில்லை. மொழிக்குழப்பம், நீண்ட, தேவையில்லாத வசனங்கள் பல இடங்களில். இந்தச் சின்னப் புத்தகத்திலுமே அலுப்பூட்டக்கூடியமாதிரி மீண்டும் மீண்டும் வரும் பேட்டர்ன்.
எனவே அதில் உள்ள கருத்தை மட்டும் எடுத்துப் பார்ப்போம். கதை ஒரு முக்கியமான சமூக நிகழ்வை முன்வைத்து அதற்குத் தீர்வு கிடைக்குமா என்ற கேள்வியை கேட்கிறது.

முல்லைப் பெரியாறு.. பொய் சொல்வது யார்?

முல்லைப் பெரியாறு அருகே புதிய அணை கட்டுவதற்கு ஆய்வு (சர்வே) செய்வதற்காக எந்தக் கோரிக்கையையும் கேரள அரசு இதுவரை அனுப்பவில்லை என்று மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஜெயந்தி நடராஜன் கூறியிருப்பதைப் பார்க்கும்போது, ஆச்சரியப்படாமல் இருக்க முடியவில்லை. ஏனென்றால், கேரள அரசு சர்வே நடத்தி, எந்த இடத்தில் அணை கட்ட வேண்டும்; எவ்வளவு உயரம் கட்ட வேண்டும் என்பதையெல்லாம் கணித்து விட்டது என்கிற தகவலை கேரள நீர்ப்பாசனத் துறை அமைச்சர் தாமஸ் ஊடகங்களுக்குப் பேட்டி அளித்துக் கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கும்போது, இப்படியொரு பதிலை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர், அதிலும் தமிழகத்தைச் சேர்ந்தவர் இவ்வாறு கூறியிருப்பது ஆச்சரியத்தை அளிக்கின்றது.

சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத ஒதுக்கீடு: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

புதுடில்லி: இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், சிறுபான்மையினருக்கு, 4.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க, மத்திய அமைச்சரவை முடிவெடுத்துள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டம், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நேற்று நடந்தது. இந்தக் கூட்டத்தில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான, 27 சதவீத இட ஒதுக்கீட்டில், 4.5 சதவீதத்தை சிறுபான்மையினருக்கு வழங்க முடிவெடுக்கப்பட்டது. கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், இந்த ஒதுக்கீடு சலுகையை அவர்கள் பெறலாம். முஸ்லிம்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர் மற்றும் பார்சிகள் இந்த சலுகையைப் பெறுவர். இந்த இட ஒதுக்கீடு, ஒரு நிர்வாக உத்தரவு மூலம் அமலுக்கு வரும். மதம் மற்றும் மொழி சிறுபான்மையினருக்கான தேசிய கமிஷன் அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில், இந்த இட ஒதுக்கீடு முடிவை, மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

லோக்பால் மசோதாவின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:


1. லோக்பால் சட்ட மசோதாப்படி, மத்திய அளவில் லோக்பால் என்ற அமைப்பும், மாநில அளவில் லோக் ஆயுக்தாவும் அமைக்கப்படும். இந்த அமைப்புகளுக்கு மேற்பார்வையிடும் அதிகாரம், முதல் கட்ட விசாரணை நடத்த உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம், ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ், புகார்கள் மீது வழக்குத் தொடரும் அதிகாரம் போன்றவை இருக்கும்.
2. லோக்பால் அமைப்பிற்கு தலைவர் ஒருவரும், எட்டு உறுப்பினர்களும் இருப்பர்.
3. லோக்பால் உறுப்பினர்களின் 50 சதவீதம் பேர் தாழ்த்தப்பட்ட வகுப்பினர், மலைவாழ் பழங்குடியின வகுப்பினர், இதர பிற்பட்ட வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினத்தைச் சேர்ந்தவர்களாகவும், பெண்களாகவும் இருப்பர். இதில், மைனாரிட்டி பிரதிநிதித்துவமும் உண்டு.

மார்கழி சங்கீத சீசன் ஒரு பார்வை




இந்த மார்கழி கச்சேரி வருடந்தோறும் சென்னையில் சிறப்பாக நடக்கிறது. ஆனால் இது ‘இசை விழா’ என்று சொல்ல முடியாது. இசைக்கு சாதி,மதம் ஏன் மொழி கூட கிடையாது. ஆனால் இவை ஒரு குறிப்பிட்ட ‘சமுதாய விழா’ போலத்தானே இருக்கிறது…? பாடுவதும் அவாதான், கச்சேரிக்கு பணம் செலவு செய்வதும் அவாதான், கேட்டு ரசிப்பதும் அவாதான். வெகுஜனங்களும் ரசிக்கும்படி இதை ஏன் எளிமையாக்கவில்லை..? நான் கேட்பது குத்துப்பாட்டை அல்ல. கர்நாடக இசையை அடிப்படையாகக் கொண்ட தமிழ்ப் பாடல்கள். (இசையை அடிப்படையாகக் கொண்ட தமிழ் திரை இசைப் பாடல்கள் கூட தவறில்லை)
அபூர்வமாக பாபநாசம் சிவன், உடுமலை நாராயண கவி பாடல்கள் சில பாடி, ‘தமிழ் கீர்த்தனைகளும்’ பாடுகிறோம் என கணக்கு காட்டும் வேலைதான் நடக்கிறது.

வந்துவிட்டது மற்றொரு மெட்ராஸ் மார்கழி சங்கீத சீஸன். வந்துவிட்டது மற்றொரு விமர்சன கட்டுரை. படித்துவிட்டு பாடகர்கள் மெர்ஸலாகி தங்களை உடனே உடைத்து வார்த்துக்கொள்ளமாட்டார்கள்; அவர்கள் “பாட்டுக்கே” இனியும் பாடுவர். படித்துவிட்டு ரசிகர்களும் பெரும்பாலும் தங்கள் அபிமானங்களை மாற்றிக்கொள்ள மாட்டார்கள். “கேட்பர்களையே” கேட்பார்கள். இலக்கியவிமர்சனங்களைப் போன்ற பயன்களுடையவையே மரபிசை சங்கீத விமர்சனங்களும்.

வியாழன், 22 டிசம்பர், 2011

கிங்பிஷரை பின் தள்ளிய மாறனின் ஸ்பைஸ்ஜெட்!


Spicejet
மும்பை: இந்திய விமான சந்தையில் கிங்பிஷர் விமான நிறுவனம் 2வது இடத்திலிருந்து 5வது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் விமான சேவையை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது.
நிதித் தட்டுப்பாடு என்று கூறி திடீரென நூற்றுக்கணக்கான விமான சேவைகளை சொல்லாமல் கொள்ளாமல் ரத்து செய்தது விஜய் மல்லையாவின் கிங்பிஷர். அத்தோடு செலவுக் கட்டுப்பாடு என்று கூறி பலவிதமான சலுகைகளையும் ரத்து செய்தது.
இதையடுத்து அந்த நிறுவன விமானங்களின் பயணிப்போர் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துவிட்டது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு அடுத்த நிலையில் இருந்த இந்த நிறுவனம் இப்போது 5வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

திரைப்படத்துறையினர் மவுனம் சாதிப்பது ஏன்?



சத்தியராஜு சீமானு கவுண்டான் மணி போன்ற இனமான சிங்கங்கள் தற்போது மௌன விரதம் இருப்பதால் முல்லை பெரியாறு விவகாரமாக யாரும் எதுவும் கேட்க வேண்டாம் இன்று இத்தால் சகலரும் அறியக்கடவதாக.
கோவை சரவணம்பட்டியில் உள்ள கொங்கு நாடு முன்னேற்றக்கழக மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.  இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பொதுச் செயலாளர் ஈஸ்வரன் செய்தியாளர்களிடம்,
’’கேரள அரசு உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்றுக்கொண்டு அதன்படி நடக்க வேண்டும். தமிழகத்தில் உள்ள மலையாளிகள் அனைவரும் இந்தியர்களாக கருதப்படுகின்றனர். ஆனால் கேரளாவில் உள்ள தமிழர்கள் தமிழர்களாவே கருத்தப்படுகின்றனர்.

கறிமாடுகள் கிடைக்காமல் கேரள வியாபாரிகள் திணறல்

ஈரோடு: முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையால் தமிழ்நாட்டில் இருந்து கேரளாவிற்கு காய்கறி மற்றும் உணவுப் பொருட்கள் கொண்டு செல்வது தடைபட்டுள்ள நிலையில் தற்போது கறிமாடுகள் கிடைக்காமலும் கேரளா வியாபாரிகள் திணறி வருகின்றனர்.
இந்த ஆண்டு கிருஸ்துமஸ் பண்டிகை கறிக்கோழி, மாடு இல்லாத பண்டிகையாகத்தான் இருக்கும் என்று அவர்கள் கூறிவருகின்றனர்.
ஈரோட்டில் உள்ள கருங்கல்பாளையம் சந்தையில் ஒவ்வொரு புதன்கிழமையும் அடிமாட்டு சந்தையும், வியாழனன்று கறவை மாடுகளுக்கான சந்தையும் நடைபெறுவது வாடிக்கை.

சில்க் ஸ்மிதா – ரூப் கன்வர்: ஒரு தற்கொலை! ஒரு கொலை!!

முன்னுரை:
சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிப்பதாகக் கூறும் “டர்ட்டி பிச்சர்” படம் சமீபத்தில் வெளியானதும் ரசிகர்களும், படைப்பாளிகளும் ஆளுக்கொரு உச்சு கொட்டி விட்டு சிலுக்கை நினைத்துக் கொண்டார்கள். சுமிதாவை தற்கொலைக்குத் தூண்டிய திரையுலகம் இன்றும் அப்படித்தான் இயங்குகிறது. சுமிதா தற்கொலை செய்வதற்கு பத்து ஆண்டுகளுக்கு முன்னால் ராஜஸ்தானில் ரூப் கன்வர் எனும் பெண்மணி உடன்கட்டை ஏற்றிக் கொல்லப்பட்டாள். அந்தக் கொலை வழக்கில் யாரும் குற்றவாளி என்று நிரூபிக்கப்படவில்லை. ரூப் கன்வரை ஆண்டு தோறும் தொழும் காட்டுமிராண்டித்தனமும் இன்றும் குறையவில்லை. கற்பையும் விபச்சாரத்தையும் போற்றும் இந்து மதமும், இந்திய சமூகமும்தான் இந்த இரண்டு பெண்களின் மறைவுக்கு காரணம் என்றால் சண்டைக்கு வருவீர்களா? பதட்டப்படாமல் 1997-இல் எழுதப்பட்ட இந்த கட்டுரையை படியுங்கள்.
-    வினவு
 பாரம்பரியம் எங்கள் உயிரினும் மேலானது. உடன்கட்டையேறி உயிர் துறக்கும் விதவையானவள், உடலில் எத்தனை மயிர்க்கால்கள் உள்ளனவோ அத்தனை ஆண்டுகள், 3 கோடி ஆண்டுகள் சொர்க்கத்தில் வாழ்வாள்.”
உடன் கட்டையேற்றும் பழக்கத்துக்கு எதிராக பிரிட்டிஷ் பிரபு பெண்டிங் கொண்டு வந்த சீர்திருத்தச் சட்டத்தை விலக்கிக் கொள்ளக் கோரி மன்னர்களும், 120 பார்ப்பனப் பண்டிதர்களும் கை ஒப்பமிட்டு அளித்த மனுவில் கண்டுள்ள வாசகம் இது. விதவை வாழ்க்கையின் துன்பங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒப்பிடும்போது ‘சிறிது நேரம் சிரமப்பட்டாலும்’ போய்ச் சேர்ந்து விடுவதே ஒரு பெண்ணுக்கு நல்லது என்ற உண்மையையும் அந்த மனுவில் அவர்கள் குறிப்பிடத் தவறவில்லை.
தமது விருப்பத்துக்கு விரோதமாக ஒரு பெண்ணை உடன்கட்டையேற்றக்கூடாது என்று கூறிய அந்தச் சட்டம் நடைமுறையில் அமல்படுத்தப்பட்ட விதத்தை- உடன்கட்டையேறும் காட்சியை – எஸ்.ஸி. போஸ் (1881) கூறுகிறார்;
”நான் சிறுவனாக இருந்தபோது அத்தை உடன் கட்டையேறிய காட்சியை அழுது கொண்டே அம்மா என்னிடம் கூறியிருக்கிறாள்.
சவ ஊர்வலம் சுடுகாட்டை அடைந்தது. போலீஸ் இன்ஸ்பெக்டர் அத்தையிடம் வந்து உடன்கட்டையேற வேண்டாம் என்று எடுத்துச் சொன்னார். பயனில்லை. கொஞ்சம் தள்ளி நின்று என்ன நடக்கிறது என்று கண்காணிக்கத் தொடங்கினார். சிதையை 7 முறை சுற்றிவருமாறு புரோகிதர்கள் அத்தையிடம் கூறினர். ஒவ்வொரு சுற்று வரும்போதும் அவளுடைய கால்கள் தள்ளாடத் தொடங்கின. மயக்கமடையத் தொடங்கினாள். இன்ஸ்பெக்டர் மீண்டும் ஒரு முறை அத்தையிடம் வந்து பேசினார். அவளுக்கு எங்கே கேட்டிருக்கும்?
பிறகு அத்தையை சிதையின் மீது ஏற்றி கணவனின் பிணத்துக்கு அருகில் படுக்க வைத்தனர். ஒரு கையை கணவனின் தலைக்குக் கீழும், இன்னொரு கையை அவன் மார்பின் மீதும் வைத்து அணைத்தபடி படுத்திருந்தாள். ஹரி…. ஹரி… என்ற முனகல் அவள் வாயிலிருந்து கேட்டது.”

கமிஷன் கேட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஓட வைக்காத நிர்வாகம் தேவை முதல்வரே!

தமிழகத்தில் தொழில்துறை வளர்ந்து தமிழகம் இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறும் என்று முதல்வர் ஜெயலலிதா முன்பும் பேசியிருக்கிறார்தான். அப்போது அதையெல்லாம் சீரியசாக எடுக்கத் தேவையில்லை என்பது ‘உள்ளே நடப்பது என்ன’ என்ற விஷயம் தெரிந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.
வெளிநாட்டில் இருந்து வந்து முதலீடு செய்து தொழில் தொடங்க அனுமதி கேட்டால், சசிகலா சின்டிகேட்டில் பதிலுக்கு என்ன கேட்பார்கள் என்று, பன்னாட்டு நிறுவனங்களுக்கு நன்றாகவே தெரிந்திருந்தது.
சசிகலா கேட்டைக் கடந்து சைதாப்பேட்டைக்கு வருவதற்கு சர்வதேச நிறுவனங்கள் ஆர்வம் காட்டவில்லை.

டாக்டர் ராமதாஸ்: கேரள அதிகாரிகள் அனைவரையும் மாற்ற வேண்டும்.

Ramadoss
சென்னை: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழர்களின் உணர்வு புரியாமல் தாக்குதல் நடத்த உத்தரவிடும் ஏடிஜிபி ஜார்ஜ், ஐஜி ராஜேஷ் தாஸ் ஆகியோரை உடனடியாக இடமாற்றம் செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
நேற்று தேனி மாவட்டத்தில் லட்சக்கணக்கில் திரண்டு கேரள அரசுக்கு் எதிராக போராட முயன்ற பொதுமக்களையும், விவசாயிகளையும், பெண்களையும் போலீஸார் திடீரென கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தி ஓட ஓட விரட்டியும் கலைத்துள்ள செயல் மக்களை அதிர வைத்துள்ளது. இந்த சம்பவத்திற்கு டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

J பெண் சாமியாருக்கு கொடுத்த 100 c எப்படி 50c ஆகியது?சசி ஜெயா இடியாப்பச் சிக்கல்


நக்கீரனில், "இருவர்-திடீர் பிளவு பின்னணி' என்று போன இதழில் கவர் ஸ்டோரியில் எழுதியிருந்த தகவல் மொத்தமும் உண்மைதான் என்ற அவர்கள், ""யாருடைய தலையீட்டையும் அனுமதிக்கவேண்டாம் என்று மந்திரி களிடம் ஜெ சொன்னதையும், சிறப்புத் திட்ட செயலாக்க அதிகாரி பன்னீர்செல்வம், முதல்வரின் செயலாளர் ராமலிங்கம் உள்ளிட்ட தனது ஆதரவு அதிகாரிகள் நீக்கப் பட்டதையும் கண்டு அதிர்ச்சியடைந்த சசிகலா, பெங்களூரிலிருந்து திரும்பியதும் கார்டனுக்கு வராமல் சிங்கப்பூர் ஜெயக்குமார் கெஸ்ட் ஹவுஸில் தங்கியதும் உண்மைதான்'' என்றனர். அதுபோலவே, வரவு சம்பந்தப் பட்ட விஷயங்கள் சசிகலா மூலம் நடந்ததெல்லாம் ஜெ.வின் உத்தரவின்பேரில்தான் என்பதும் உண்மைதான்.

ஜெ சொன்னதன் பேரில்தான் மந்திரிகளிடம் துறையின் டெண்டர், கான்ட்ராக்ட் உள்ளிட்ட விஷயங் களை சசிகலா பேசினார். அவரது இன்ஸ்ட்ரக்ஷன்படி மந்திரிகளும் அதிகாரிகளிடம் பேசினர். ""இந்த சிஸ்டம் 6 மாதகாலமாக பிரச்சினையில்லாமல் ஓடிக்கொண்டி ருந்தது. சமீபகாலமாக, கார்டனில் ஜெ.வின் சமுதா யத்தைச் சேர்ந்தவர்களின் கை கொஞ்சம் கொஞ்சமாக உயரத் தொடங்கியது. (கவனிக்க-பெட்டிச் செய்தி). உள்ளே இருந்த அவர்களுக்கும் ஜெ.வுக்கும் வெளி யிலிருந்து ஆலோசனைகளை சொல்லி வந்தவர் சோ. அதே சமுதாயத்தவரான அ.தி.மு.க.வின் ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயனும்கூட சமீபகாலமாக, சசிகலா வகையறாவை கார்டனிலிருந்து

இங்கிருந்து கிளம்பிடு' என்று ஜெ. சசிகலாவிடம் சொல்லியிருக் கிறார். "நான் போகமாட்டேன்' என்று சசிகலா

பெங்களூரு சென்று திரும்பியபின் கெஸ்ட்ஹவுஸில் தங்கியிருந்த சசிகலா, போயஸ் கார்டனுக்குத் திரும்பியபிறகு, கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (டிசம்பர் 18) அவரிடம் பேசினார் ஜெ. 4 மணி நேரம் நீடித்த இந்தப் பேச்சுவார்த்தை முழுக்க முழுக்க விசாரணை பாணியிலேயே இருந் திருக்கிறது. நடராஜனுடன் சசிகலா பேசியது, பணப்பரிவர்த்தனை இவை பற்றித்தான் தொடர்ந்து கேள்விகள் கேட்டிருக்கிறார் ஜெ. அவர் வைத்த குற்றச்சாட்டு களை முற்றிலும் மறுத்திருக்கிறார் சசிகலா.
"நான் அவர்கிட்டே பேசலை. பண விஷயத்தில் எந்தத் தப்பும் பண்ணலை' என்று சசிகலா சொல்ல, ஜெ. எதுவும் பேசாமல் ஒரு டேப்பை ஆன் செய்திருக் கிறார். அதில் ஜெ. சுமத்திய குற்றச் சாட்டுகளுக்கான ஆதாரங்கள் சம்பந்தப்பட்டவர்களின் வாய்ஸி லேயே பதிவாகியிருந்தது. தன் னுடைய குரலை டேப்பில் கேட்ட சசிகலா எந்த பதிலும் சொல்ல வில்லை. ஜெ.வும் எதுவும் சொல் லாமல், "இங்கிருந்து கிளம்பிடு' என்று சசிகலாவிடம் சொல்லியிருக் கிறார். "நான் போகமாட்டேன்' என்று சசிகலா சொல்ல, ஜெ. தன் அறைக்குப் போய் படுத்துவிட்டார்.

தினமலர்:விசுவாசிகளை விரட்ட சசி கும்பல் செய்த சகுனி வேலை: பகீர் தகவல்


ஜெயலலிதாவின் எல்லா தவறுகளையும் சசிகலா தலையில் போடுவதற்கு பார்பன பாதுகாவல் பத்திரிகையான தினமலர் பெரும் முயற்சி எடுத்து இந்த கட்டுரையை எழுதி உள்ளது. எதோ கடந்த 24 ஆண்டுகளாக ஜெயாவுக்கு ஒன்றுமே தெரியாது எனவும் எல்லாமே சசிகலாதான் என்றும் பெயிண்ட் பூசுகிறது. இதை ஓரளவு ஜெயாவின் ஒப்புதல் வாக்குமூலம் என்று எடுத்துக்கொண்டால் அரசியல் சட்டத்திற்கு முரணாக எக்ஸ்ட்ரா அதிகார மையம் உருவாக்கிய குற்றத்திற்கு ஜெயா ஆளாக நேரும்.
சோதனையான காலத்தில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த அ.தி.மு.க., பிரமுகர்கள் பலர், சசிகலா மற்றும் அவரது உறவினர்களால், திட்டமிட்டு சதி செய்து வெளியே அனுப்பி வைக்கப்பட்டது எப்படி என்ற தகவல்களை, அ.தி.முக.,வினர் மனக்குமுறலுடன் வெளியிட்டுள்ளனர்.
அ.தி.மு.க., நிறுவனர் எம்.ஜி.ஆர்., மறைவுக்குப் பின், அக்கட்சி இரண்டாக உடைந்தது. எம்.ஜி.ஆர்., மனைவி ஜானகியின் தலைமையில் ஒரு அணியும், ஜெயலலிதா தலைமையில் மற்றொரு அணியும் உருவானது. ஆரம்ப காலத்தில் ஜெயலலிதாவுக்கு பக்கபலமாக இருந்த திருநாவுக்கரசர், சாத்தூர் ராமச்சந்திரன் உட்பட யாருமே இப்போது அ.தி.மு.க.,வில் இல்லை. அவர்கள் கட்சியை விட்டு விரட்டப்பட்டதற்கு காரணம், ஜெயலலிதாவுக்கு விசுவாசமாக இருந்தது தான்.
கூட்டு சதியும்; தி.மு.க., ஆசியும்:அ.தி.மு.க.,வை கைப்பற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கம் தான், சசிகலா குழுவிடம் ஆரம்பத்திலேயே இருந்தது. இதற்காக அவர்கள் கூட்டு சதிச் செயலை மேற்கொண்டனர். அதற்கு, தி.மு.க., ஆசியும் உண்டு என்பது தான் பகீர் பின்னணி(.அப்படி போடு )

சமண/பௌத்த கோயில் விவகாரம்: தாய்லாந்து ,கம்போடியா சமரசம்

போனோபென்: எல்லைப்பகுதியில் சர்ச்சக்குள்ளான பௌத்த/சமண  ‌கோயிலை உரிமை கொண்டாடும் விவகாரம் குறித்து தாய்லாந்து, கம்போடியா ஆகிய இருநாடுகளும் சமரசம் செய்து கொள்ள முடிவு செய்துள்ளன. தாய்லாந்து- கம்போடியா எல்லையில் போனோபென் நகரில் பரேக்விஹீர் என்ற பகுதியில் மிகவும் பழமையான சமண ரிஷப தேவா (சிவன்) கோயில் உள்ளது. இக்கோயிலை கடந்த 2008-ம் ஆண்டு உலக கலாச்சார சின்னமாக , ஐ.நா.வின் யுனெஸ்கோ அறிவித்தது. அன்றிலிருந்து பிரச்னை உருவானது. தாய்லாந்தும்,கம்போடியாவும்  கோயில் தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடின. இருநாடுகளிடையே போர் ஏற்பட்டது. இரு தரப்பிலும் ராணுவம் குவிக்கப்பட்டு கடந்த 2009-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த சண்டையில் 8 பேர் கொல்லப்பட்டனர். தொடர்ந்து நடந்த சண்டையினால் 10 ஆயிரம் பேர் இடம் பெயர்ந்தனர்.

சசிகலா மூலம் பதவி தமிழகம் முழுவதும் மாறுதல் பட்டியல் தயார்


சென்னை : சசிகலா மூலம் பதவி பெற்ற போலீஸ் அதிகாரிகளின் பட்டியல் மாறுதல் உத்தரவுக்காக முதல்வரின் அலுவலகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
சசிகலா மற்றும் அவரது உறவினர்கள் 14 பேர் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை அடுத்து அவர்களின் வீடுகளை உளவுத்துறை போலீசார் கண்காணிக்கின்றனர். யாரும் வெளிநாடு செல்கிறார்களா என விமானநிலையத்தை யும் கண்காணிக் கின்றனர்.

கேரளாவுக்கு காலியாக செல்லும் பஸ்கள்

முல்லைப் பெரியாறு பிரச்சினை காரணமாக தமிழ்நாட்டில் இருந்து செல்லும் வாகனங்கள் அடித்து நொறுக்கப்படுகிறது. இதனால் இரு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்து தடைபட்டுள்ளது.

இதை தொடர்ந்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். சென்னை கோயம்பேட்டில் இருந்து கேரளாவில் உள்ள திருவனந்தபுரம், எர்ணாகுளம், பம்பை உள்ளிட்ட நகரங்களுக்கு அரசு விரைவு பஸ்கள் இயக்கப்படுகின்றன. 

கேரளாவில் தமிழக வாகனங்கள் வழிமறித்து தாக்கப்படுவதால் பஸ்சில் செல்ல மக்கள் அச்சப்படுகின்றனர். இதனால் கேரளாவுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் பயணிகள் இன்றி காலியாக செல்கின்றன. கேரளா செல்லும் பஸ்களில் 2 அல்லது 3 பயணிகளே செல்கின்றனர்.

புதன், 21 டிசம்பர், 2011

மோடியின் குஜராத்: காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள்!

மோடியின் குஜராத் : காவி கிரிமினலின் தலைமையில் காக்கி கிரிமினல்கள் !அடுத்த பிரதமராக வருவதற்குத் தகுதியானவர் என்று அம்பானி போன்ற யோக்கியர்களால் சிபாரிசு செய்யப்பட்டவரும், ஊழலற்ற ஆட்சி நடத்துகிறாரென அன்னா ஹசாரேவால் புகழப்பட்டவரும், திறமையான நிர்வாகி என்று சோ ராமஸ்வாமி அய்யருடைய பாராட்டைப் பெற்றவரும், அனைத்துக்கும் மேலாக ஜெயலலிதாவின் அன்புச் சகோதரருமான நரேந்திர மோடியை, “கிரிமினல்’ என்று தொலைக்காட்சி பேட்டிகளில் குற்றம் சாட்டி வருகிறார், மோடியினால் கைது செய்யப்பட்ட குஜராத் போலீசு அதிகாரி சஞ்சீவ் பட்.
மதநல்லிணக்கவாதி போலவும், மக்களின் நல்வாழ்வு தவிர, வேறு சிந்தனையே இல்லாத மனிதாபிமானி போலவும், வாடிய பயிரைக் கண்டு வாடும் வள்ளலாராகவும் தன்னைப் பற்றிய ஒரு சித்திரத்தை உருவாக்கி, தனது இனப்படுகொலைக் குற்றத்தை மறைத்து விடலாம் என்று கனவு கண்டு வரும் மோடிக்கு சஞ்சீவ் பட்டின் இந்தக்கூற்று ஒரு செருப்படி. சொல்லப்போனால், சஞ்சீவ் பட்டைச் சிறை வைத்ததன் விளைவாக மோடியின் குற்றங்கள்தான் புதிய வேகத்துடன் அம்பலமாகத் தொடங்கியிருக்கின்றன.

A Separation of Jeya and Sasi சென்னை திரைப்பட விழா

அந்த தாத்தாவிற்கு எப்போதும் வீட்டில் ஒரு மரியாதை உண்டு. டைட்டில் போட்டு முடிக்கும் போது அவர் இறந்து விட குடும்பத்தில் கடுமையான குழப்பம் ஏற்படுகிறது. அந்த வீட்டில் இருக்கும் ஹீரோயின் கடுமையாக பாதிக்கப்படுகிறார். அப்போது இவருக்கு துணையாக ஒரு பெண்மணி தோழியாக படத்தில் நுழைகிறார்.

இந்த இடத்தில் இசையோடு வரும் "நீங்கள் நல்லா இருக்கோணும் நாடு முன்னேற..." என்ற பாட்டு தாளம் போட வைக்கிறது.

கோடீஸ்வரன் நிகழ்ச்சி... சூர்யா நடத்துகிறார்

இந்தியில் பிரபலமான கோடீஸ்வரன் நிகழ்ச்சியை தமிழில் பிரபல சேனலில் நடத்துகிறார் நடிகர் சூர்யா. இதன் மூலம் அவர் சின்னத் திரையிலும் கால் பதிக்கிறார்.
உலகின் பல்வேறு நாடுகளில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சி ‘கோன் பனேகா குரோர்பதி’.
தமிழில் இந்த நிகழ்ச்சி கோடீஸ்வரன் என்ற பெயரில் விரைவில் தொடங்கவிருக்கிறது. இந்நிகழ்ச்சியை பிரபல நடிகரான சூர்யா தொகுத்து வழங்க இருக்கிறார்.

பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கு: மாட்டுவாரா சித்தார்த் ரெட்டி?

Prathiksha
பிரபல தெலுங்கு நடிகை பிரதியூஷா கற்பழித்துக் கொல்லப்பட்ட வழக்கில் விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் பிரதியூஷாவை கொலை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட சித்தார்த் ரெட்டிக்கு தண்டனை கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
தமிழில் முரளி ஜோடியாக மனுநீதி, கடல் பூக்கள் படங்களில் நடித்தவர் பிரதியூஷா. கடந்த 2002-ல் பிரதியூஷா ஐதராபாத்தில் காரில் பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
மருத்துவ பரிசோதனையில் பிரதியூஷா பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தது தெரிய வந்தது.

மத்திய அரசை ஹசாரே ஆட்டிப் படைக்க முடியாது- சோனியா


Sonia Gandhi


டெல்லி: மத்திய அரசை அன்னா ஹசாரே போன்ற தனி நபர்கள் யாரும் கட்டுப்படுத்த முடியாது என்று காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
லோக்பால் மசோதா விவகாரத்தில் மத்திய அரசு எதைச் செய்தாலும் அதை குறை கூறி வருகிறார் ஹசாரே. இப்போது மீண்டும் ண்ணாவிரதம், சிறை நிரப்பும் போராட்டம் என்று களமிறங்கவுள்ளார்.
இதையடுத்து இனியும் இவரிடம் பணிவதில்லை என்றும், நேருக்கு நேர் மோதலை ஆரம்பிப்பது என்றும் காங்கிரஸ் தலைவர் சோனியா முடிவுக்கு வந்துள்ளார்.

சசிகலா தவறானவர்? 25 வருடங்கள் கழித்துதானா ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?.



-எஸ்எஸ்
எந்த காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும்... எந்த வினைக்கும் ஒரு எதிர்வினையுமிருக்கும்.
அப்படி கிளம்பியிருக்கும் எதிர்வினை...
''சசிகலா மோசமானவர்... மோசடியானவர் என்பதாகவே இருக்கட்டும்.... 25 ஆண்டுகள் அந்த மோசடிக்காரருடன் சேர்ந்திருந்ததால், சசிகலாவின் மோசடிகள் அனைத்துக்கும் முதல்வர் ஜெயலலிதாவும் பொறுப்பாளர்தானே?
என்னமோ ஜெயலலிதா ஒன்றுமே தெரியாத அப்பாவி போலவும், சசிகலா மற்றும் குடும்பத்தினரால்தான் அவர் முழுமையாக மோசடி செய்யப்பட்டதாகவும் கூறுவது எத்தனை அபத்தம். அப்படிப் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு உண்மையிலேயே ஒன்றுமே தெரியாதா?...''
-என்பதுதான் சசிகலாவுக்கு ஆதரவாகக் கிளம்பியிருக்கும் வாதம்!
இன்னொரு பக்கம் இப்போதைய ஜெயலலிதா நடவடிக்கையை வைத்து ஜெயலலிதாவை புனிதராக்கவும் சசிகலாவை வில்லன் கேரக்டர் போலவும் மாற்றும் முயற்சியில் சசிகலா எதிர்ப்பு ஊடகங்கள் மும்முரமாக இருப்பதாகவும் ஒரு தரப்பு அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

இவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு ஜெயலலிதாவால் மட்டுமல்ல, அவரது மந்திராலோசனையில் பிரதானமாக இடம் பெற்றுள்ள அந்த மூத்த பத்திரிகையாளராலும் கூட பதில் சொல்ல முடியாது!.
சசிகலா தவறானவர் என்பது 25 வருடங்கள் கழித்துதானா முதல்வர் ஜெயலலிதாவுக்கு தெரிந்தது?.

கேரளத்தவர்களுக்கு நாஞ்சில் சம்பத்:நாங்கள் சாக்கடை புழுக்கள் அல்ல. சரித்திர சக்கரங்கள்

நெல்லை: தேவிகுளம், பீர்மேடு முன்பு தமிழகத்தில் இருந்ததை பிரதமர் நேரு கேரளாவிற்கு கொடுக்கும்படி சொன்னதால், அது பிரித்துக்கொடுக்கப்பட்டது. அங்கே லட்சணக்கணக்கில் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஆனால் கேரள அரசோ, 119 சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை கொண்டு வந்து, அங்கு குடியேற்றியது.  நீங்கள் விரதம் இருந்த ஐயப்ப சாமிகளை அடித்து தாக்குகின்றீர்களே, இந்தியாவில் இதுபோல் எங்காவது நடந்தது உண்டா என்று கேட்டுள்ளார் மதிமுக கொள்கை விளக்க அணி செயலாளர் நாஞ்சில் சம்பத்.
செங்கோட்டையில் இன்று கேரளா செல்லும் பாதையில் 500க்கும் மேற்பட்டோர் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முன்னதாக செய்தியாளர்களிடம் பேசிய நாஞ்சில் சம்பத் பேசுகையில்,

தமிழகம் பொங்கி எழுந்து விட்டது, இனி யாராலும் கட்டுப்படுத்த முடியாது-வைகோ

Vaiko Arrest
தேனி: கேரள முதல்வருக்கும், கேரள அச்சுதானந்தன் கூட்டத்தினருக்கும் சொல்லுகிறோம். எங்கள் வாழ்வை அழிக்க நினைக்காதீர்கள். தமிழகம் பொங்கி எழுந்துவிட்டது. யாரும் கட்டுப்படுத்த முடியாது. அணையை நீ நெருங்கினால் லட்சக்கணக்கானவர்கள் அணிவகுத்து வருவார்கள். எந்த மிலிட்டரியும் தடுக்க முடியாது என்று ஆவேசமாக கூறியுள்ளார் மதிமுக பொதுச் செயலாளர்கள்.
தேனி மாவட்டத்தில் இன்று கேரள சாலையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி கைதானார் வைகோ. போராட்டத்தினபோது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்த போராட்டத்திற்கு விவசாயிகள், வியாபாரிகள் என எல்லா தரப்பு மக்களுக்கும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இவர்களுக்கு தமிழகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறது. எனவே நம் எதிர்காலத்தை காக்கின்ற இந்த கிளர்ச்சி தானாகவே எழுந்துவிட்டது.

லோக்பால் வரம்பிற்குள் சிபிஐ வந்தால் சிதம்பரம் சிறைக்கு போக வேண்டும்: அன்னா

ராலேகான் சித்தி: சிபிஐ மட்டும் லோக்பால் வரம்பிற்குள் வந்தால் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் சிறைக்கு செல்ல வேண்டும் என்று சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
இது குறித்து அன்னா தனது சொந்த ஊரான ராலோகான் சித்தியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
சிபிஐ லோக்பால் வரம்பிற்குள் இல்லை என்றால் அப்புறம் லோக்பால் மசோதா எப்படி வலுவானதாக இருக்க முடியும். இதன் மூலம் ஊழல் செய்யும் அரசியல்வாதிகளை காப்பாற்ற முடியும். சிபிஐ மட்டும் லோக்பால் வரம்பிற்குள் வந்துவிட்டால் மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் சிறைக்குத் தான் போக வேண்டும். ஊழல் அரசியல்வாதிகளைக் காப்பாற்றிக் கொண்டு, வலுவான லோக்பால் என்று கூறுகிறார்கள்.

சோவின் துக்ளக் அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு!!சசிகலா நீக்கம் எதிரொலி

Cho
சென்னை: அதிமுகவிலிருந்தும் போயஸ் தோட்டத்திலிருந்து சசிகலா வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து மூத்த பத்திரிகையாளர் சோ எஸ் ராமசாமியின் அலுவலகத்துக்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஜெயலலிதாவிடமிருந்து சசிகலாவைப் பிரித்து வெளியேற்றியதில் துக்ளக் ஆசிரியர் சோவின் பங்கு பெரிது என மீடியாவில் வெளிப்படையாகவே விவாதிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து சமீபத்தில் அவரிடம் நாளிதழ் ஒன்று கேள்வி எழுப்பிய போதும், அதை மறுக்கவில்லை சோ. "என் பங்களிப்பு இருந்திருந்து, அது நல்லதென்றால் பாராட்டுங்கள். கெடுதல் என்றால் திட்டிக் கொள்ளுங்கள்," என்றே கூறியுள்ளார்.
சசிகலா போயஸ் தோட்டத்திலிருந்து வெளியேற்றப்பட்டபோது வேதா இல்லத்தில் சோவும் இருந்தார் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.

இதனால் சசிகலா ஆதரவாளர்கள் கோபம் முழுவதும் சோ மீது திரும்பியுள்ளதாகக் கருதப்படுகிறது.

வைகோ கைது: சாலை மறியலில் பொதுமக்கள்


முல்லை பெரியாறு விவகாரம் தொடர்பாக கேரள அரசை கண்டித்து மதிமுக சார்பில் 13 இடங்களில் இன்று மறியல் போராட்டமும், கண்டன பேணியும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி இன்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தேனியில் இருந்து காலை 10 மணிக்கு குமுளியை நோக்கி புறப்பட்டார். அப்போது, சீலையம்பட்டி என்ற இடத்தில் போலீசார் அவரை தடுத்தனர். வைகோ மற்றும் அவருடன் வந்த பழ.நெடுமாறனையும் போலீசார் ûது செய்தனர்.
வைகோவை கைது செய்து கொண்டுபோகும்போது, சீலையம்பட்டி கிராம மக்கள் ஒன்றுதிரண்டு போலீசார் வேனை மறித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வைகோவை விடுதலை செய்யக் கோரி கோஷம் எழுப்பினர். வைகோவை பேச அனுமதிக்குமாறும் கோஷம் எழுப்பினர்.
பின்னர் வைகோ, தனது கட்சி வாகனமான டெம்போ டிராவலர் வானத்தில் ஏறி பொதுமக்கள் மத்தியில் பேசினார். முல்லைப் பெரியாறு அணை பாதுகாக்கப்பட வேண்டிய அவசியம் குறித்தும், அணையால் 5 மாவட்ட மக்கள் நலன் குறித்தும் விவரித்து பேசினார்.

Jeyalaltitha:சசிகலா நிழலைக் கூட அண்ட விடாதீர்கள் why???

அரசு ரகசியங்களை காக்க வக்கற்று அடிமையாய் இருந்த குற்றத்துக்காக தேச துரோக அடிப்படையில் ஆட்சி கலைக்கப்பட வேண்டும். தினமலரின் இந்த வாக்கு முலமே அதற்கு போதுமான சாட்சி.
சென்னை: முதல்வர் ஜெயலலிதா தனது போயஸ் தோட்ட இல்லத்தில் வைத்து முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஷ் அதிகாரிகளுடன் திடீர் ஆலோசனை நடத்தினார். சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு அப்போது அவர் கடும் எச்சரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா வீட்டை விட்டும், அவரது நட்பு வட்டத்தை விட்டும் சசிகலாவும், அவரது குடும்பத்தினரும் பூண்டோடு துரத்தப்பட்டு விட்டனர். இதனால் அதிமுகவினர் பெரும் உற்சாகமடைந்தனர். இதைத்தானே அம்மா இத்தனை காலமாக எதிர்பார்த்தோம் என்று அவர்கள் பூரிப்படைந்துள்ளனர்.
இந்த நிலையில் அடுத்து சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படும் அதிகாரிகள் உள்ளிட்டோரை களையெடுக்கும் வேலையில் ஜெயலலிதா இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது. பெருமளவில் சசிகலாவுக்கு ஆதரவான அதிகாரிகள் அரசின் அனைத்து மட்டத்திலும் நிரம்பியுள்ளன்.

ரயில் மூலம் கேரளாவுக்கு காய்கறி, உணவை அனுப்பும் மலையாள ரயில்வே அதிகாரிகள்!

கோவை: தமிழகத்திலிருந்து கேரளா செல்லும் உணவுப் பொருட்கள், காய்கறிகள், பால் உள்ளிட்டவை தடுக்கப்பட்டு வருவதால், ரயில்கள் மூலம் இவற்றைக் கொண்டு செல்ல தமிழகத்தில் பணியாற்றும் கேரளாவைச் சேர்ந்த மலையாள அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து உதவி வருவதாக தகவல்கள் கூறுகின்றன.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின்போக்கைக் கண்டித்து, இன்று தமிழக கேரள எல்லைப்புறங்களில் மதிமுக மற்றும் தமிழ் அமைப்புகளின் சார்பில் பொருளாதார முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் கந்தைகவுண்டன் சாலை, வாளையாறு, வேலந்தாவலம், பொள்ளாச்சி அருகே நடுப்புணி, வலந்தாயமரம், ஆனைக்கட்டி ஆகிய 6 இடங்களில் மதிமுகவினர் மறியல் போராட்டம் நடத்தப்பட்டது.

ஜெயலலிதாவை சந்தித்த மலையாள நடிகர் மம்மூட்டி- கேரள அரசு தூது

Jayalalitha and Mammooty
 மலையாள நடிகர் மம்முட்டி திடீரென முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துப் பேசினார். இந்த சந்திப்புக்கான காரணம் குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேட்டபோது பதிலளிக்க மறுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார்.
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தை இனவெறிப் பிரச்சினையாக்கி விட்டனர் கேரளத்தில் உள்ள சிலர். தமிழகத்திலிருந்து எந்த வாகனம் போனாலும், யார் போனாலும் தாக்குகிறார்கள், கெட்ட வார்த்தைகளால் பேசுகிறார்கள், சபரிமலை பக்தர்களை மிகக் கேவலமாக அர்ச்சிக்கிறார்கள். இதனால் கொந்தளித்துப் போன தமிழகத்தில் உள்ள சிலர் பதில் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர்.

இதை எதிர்பார்க்காத கேரள அரசு தமிழகத்தில் உள்ள மலையாளிகளை யாரும் தாக்கக் கூடாது என்று கோரி வருகிறது. ஆனால் கேரளாவில் தாக்குதலை தடுக்கவோ, நிறுத்தவோ, தாக்குதலில் ஈடுபடுவோரைக் கைது செய்யவோ அங்குள்ள போலீஸார் சுத்தமாக முயல்வதில்லை. மாறாக அவர்களே தாக்குதல் நடத்தும் சமூக விரோதிகளுக்குப் பாதுகாப்பாக இருப்பதாக தாக்குதலுக்குள்ளான தமிழர்கள் கூறுகிறார்கள்.

வைகோவை தேடும் உளவுத்துறை : கூடலூருக்குள் ரகசியமாகச்சென்றாரா?

பெரியாறு அணையை உடைக்க முயலும் கேரள அரசைக் கண்டித்து கேரளா செல்லும் அனைத்து வழித்தடங்களையும் அடைத்து நாளை போராட்டம் நடத்த உள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் வைகோ கலந்து கொள்வதாகவும் மற்ற இடங்களில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆதரவு இயக்கத்தினர் பங்கேற்பர் என்றும் அறிவிக்கப்பட்டது. வைகோவின் போராட்டத்திற்கு பல்வேறு கட்சிகள், சங்கங்கள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பெரியாறு அணை விவகாரத்தில் கம்பத்தில் வைகோ தலைமையில் நடக்க இருந்த உண்ணாவிரதம், அங்கு பிறப்பிக்கப்பட்ட 144 தடையுத்தரவால் தேனியில் நடந்தது.

முருக இயக்கனரிடம் அந்தத் துறவி கதையைச் சொல்ல, அந்த இயக்குனர்

கடந்த தீபாவளிக்கு ஜெயன்ட் நிறுவன தயாரிப்பில், முருக இயக்குனர் இயக்கத்தில், குள்ள நடிகர் நடித்து வெளிவந்து, தமிழினத்திற்கே பெருமை சேர்த்து விட்டதாக மிகப் பெரிய பில்ட் அப் கொடுத்து, பறைசாற்றப்பட்டு வரும் அந்த படத்தின் கதை முருக இயக்குனரின் அறிவில் உதித்த கதையில்லையாம்.
இந்தக் கதை கோலிவுட்டில் வறுமையில் வாடி இன்னமும் பொறுமை காக்கும் ஒரு உதவி இயக்குனரின் கதையாம்! இது பற்றிய தகவல்கள் தான் இப்போது கோலிவுட்டை குலுக்கியும் கலக்கியும் வருகிறது.
கதை திருடப்பட்டது எப்படி? தயாரிப்பாளர் விஸ்வாஸ் சுந்தரிடம் ஒரு கதை சொல்லி பட வாய்ப்பு பெற போயிருகு்கிறார் தங்கர்பச்சானின் உதவியாளர் கோபி., அவரிடம் கதை கேட்ட தயாரிப்பாளர் சுந்தர், இந்தக் கதையை ஜெகனிடம் சொல்லுங்கள் என்றிருக்கிறார்,

ஒஸ்தி...10 கோடி நஷ்டம்! TR :அம்மாடி, அய்யோடி, ஆத்தாடி..

Osthis flop irks T.Rajender!டி.ஆரின் ஒஸ்தி ஆசை நிராசை ஆன கதை!
  தன் மகன் எஸ்.டி.ஆர் அலைஸ் சிம்பு நடித்து சமீபத்தில் வெளிவந்த "ஒஸ்தி" படத்தை அடித்து பிடித்து., அடம் பிடித்து வாங்கி வெளியிட்டதன் மூலம் டி.ஆருக்கு சுமார் பத்து கோடி ரூபாய்க்கு மேலாக நஷ்டமாம். கிட்டத்தட்ட மிரட்டாத குறையாக ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.22 கோடிக்கு ஒஸ்தி படத்தை வாங்கி தனது குறள் டி.வி.,கிரியேஷன்ஸ் தயாரிப்பில் வெளியிட்டார் டி.ஆர்.
படம் இன்னமும் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருந்தாலும் கூட்டம் இல்லாமல் வாடிக் கொண்டிருப்பதால் வசூல் இல்லையாம்! இதனால் ரூ.பத்து கோடி நஷ்டத்தில் டி.ஆர்.,  தவிக்கிறாராம். படத்தை அவருக்கு விற்ற ரிலையன்ஸ் நிறுவனம் இப்படத்தின் சிட்டி, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா வினியோக உரிமையை 22 கோடிக்கு டி.ஆருக்கு கொடுத்து விட்டு. சேட்டிலைட் உரிமையை 6 கோடிக்கும், எஃப்.எம்.எஸ்., எனப்படும் வெளிநாட்டு உரிமையை 3 கோடிக்கும் வேறு வேறு பார்டிகளிடம் கொடுத்து சுமார் ஐந்தாறு கோடி ரூபாய் லாபம் பார்த்துள்ளது. ஒஸ்தி படத்தை முதலில் தயாரித்த பாலாஜி பில்ம் மீடியா ரமேஷூக்கு ஐந்து கோடி லாபம் இருக்கும் என்கிறது விவரமறிந்த வட்டாரம்.

Egypt ஆடைகளைக் களையுங்கள் சகோதரர்களே. உடல்களை மூட ஆடைகள் தேவையில்லை

Viruvirupu,

எகிப்தியப் பெண் வீதியில் துகிலுரியப்பட்டு, தாக்கப்பட்ட இந்த போட்டோதான் போராட்டத்தை ஆவேசமாக்கியது!
ஆயிரக் கணக்கான பெண்கள் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை கய்ரோ வீதிகளில் ஒன்று திரண்ட காட்சி, எகிப்திய சரித்திரம் சமீபத்தில் காணாதது!
கடந்த 1919-ம் ஆண்டில் எகிப்தின் பெண்கள் ஹூடா ஷாராவியின் தலைமையில் கய்ரோ வீதிகளில் இறங்கி 92 ஆண்டுகளின்பின் இப்போதுதான் ஆட்சிக்கு எதிராக போராட ஆயிரக் கணக்கான பெண்கள் வீதியில் இறங்கியிருக்கிறார்கள்.
1919-ல் போராடியது, பிரிட்டிஷ் ஆட்சியை விரட்டுவதற்காக. நேற்று மாலை இறங்கியது, தற்போதைய எகிப்திய ராணுவ ஆட்சியாளர்களை துரத்துவதற்காக!
எகிப்திய பெண் ஒருவர் வீதியோரத்தில் ராணுவத்தினரால் தரையில் வீழ்த்தப்பட்டு, ஆடை களையப்பட்டு, கால்களால் மிதிக்கப்பட்ட போட்டோ வெளியான பின்னரே பெண்களின் போராட்டம் இப்படி உச்ச நிலைக்கு சென்றிருக்கிறது.

சூத்திரதாரி"சோ போயஸ் தோட்டத்தில் புயல்


போயஸ் தோட்டத்தில் ஒரு புயல் வீசியிருக்கிறது. அதன் சூத்திரதாரியாக சுட்டிக்காட்டப்படுபவர், பத்திரிகையாளர் "சோ'. எல்லாம் செய்தும், எதுவும் தெரியாதவர் போல் அமைதியாக இருக்கிறார், மனிதர். அதிகார மையம் இடம் மாறிவிட்டதன் அடையாளமாக, அவரது அலுவலக வாசலில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது; தரிசனத்துக்காக, வி.ஐ.பி.,க்கள் வரிசைகட்டி நிற்கின்றனர். ஓயாத போன் அழைப்புகளுக்கு மத்தியில், அவர், "தினமலர்' நாளிதழுக்கு அளித்த பேட்டி:

* ஒரு சனிப் பெயர்ச்சியால் இவ்வளவு பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா?
சனிப் பெயர்ச்சி நல்ல பலன்களைத் தான் கொடுக்கும் என, நீங்கள் தான் பத்திரிகையில் போட்டுள்ளீர்கள். அப்படியென்றால், நீங்கள் முன்கூட்டியே கணித்துவிட்டீர்கள் என்று அர்த்தம்.

* போயஸ் தோட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள இடமாற்றம், என்ன விதமான விளைவுகளை ஏற்படுத்தும் எனக் கருதுகிறீர்கள்?
அரசியல் விமர்சகர் என்ற ரீதியில் நான் பேசுகிறேன். ஒரு, எக்ஸ்ட்ரா கான்ஸ்டிட்யூஷனல் அத்தாரிட்டியாக (சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகார மையம்) யாராவது செயல்பட்டால், அது அரசு நிர்வாகத்துக்கு நல்லதல்ல.

அ.தி.மு.க.,வையும்- ஜெ.,வையும் காத்தவர் "மோடி': பரபரப்பு பின்னணி

பழியை சசிகலா மேல் போட்டு ஜெயலலிதாவை நல்லவராக காண்பிக்கும் நாடகம் தான் இது . விரைவில் சங்கரன் கோயில் இடை தேர்தலில் சசிகலாவோடு பிரச்சாரம் செய்வதை பார்க்கத்தான் போகிறோம் . மோடி,சோ இவர்கள் ஆலோசனை தான் சொல்ல முடியும் . கூட இருக்க முடியாது . சசிகலா அப்படி அல்ல .."அதிகார வர்க்கமாக' செயல்பட்ட சசிகலா குடும்பத்தாரின் தடைகளை மீறி, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க முடியாத நிலையை, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி மூலம், தமிழக உளவுத் துறையினர் தகர்த்து, சசிகலா குடும்பத்தார் கூண்டோடு வெளியேற நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அ.தி.மு.க.,வில் ஜெயலலிதாவையும் மீறி, சசிகலா குடும்பத்தார் ஆதிக்கம் அதிகமானது. அவர்களது ஆதரவாளர்கள், அவர்களின் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் மட்டுமே அதிகாரிகள், அமைச்சர்கள், பொறுப்புகளில் செயல்பட முடியும் என்ற நிலை இருந்தது. உளவுத்துறை தகவல்கள் கூட சசிகலா குடும்பத்தார் நேரடி பார்வைக்குப் பின், "வடிகட்டப்பட்டு' ஜெயலலிதாவை சென்றடையும். அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் செல்லும் தபால், பதிவுத்தபால், போயஸ் கார்டனில் நேரில் பலர் கூட்டமாக சென்று கொடுக்கப்பட்ட மனுக்கள் கூட, ஜெயலலிதா பார்வைக்கு செல்லாது. ஆனால், ஜெயலலிதாவின் கார் வரும் வழியில், வழிமறித்து யார், எந்த மனுக்கொடுத்தாலும், சில மணி நேரத்தில் பலனை வழங்கியது அனைவரும் அறிந்தது. இதில், உயர் ஐ.ஏ.எஸ்.,- ஐ.பி.எஸ்., அதிகாரிகளும் அடக்கம்.

செவ்வாய், 20 டிசம்பர், 2011

33 ஆண்டு பயணம்.. சூரிய குடும்பத்தை கடந்து அண்டவெளியில் நுழைந்த வாயேஜர்-1 விண்கலம்!

Voyager


-ஏ.கே.கான்

இந்த மாதத்தின் துவக்கத்தில் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு மாபெரும் சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
மனிதனால் ஏவப்பட்ட ஒரு விண்கலம் முதன்முதலாக நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்கள் அனைத்தையும் தாண்டி, நமது பால்வெளி மண்டலத்துக்குள் (Milky way galaxy) நுழைந்துள்ளது.
பால்வெளி மண்டலத்துக்குள் தான் நமது சூரியன், அதைச் சுற்றியுள்ள 9 கோள்கள் ஆகியவை உள்ளன. நமது சூரிய குடும்பத்தின் கோள்களையும் தாண்டிச் சென்றால் என்ன இருக்கும்?. வெறுமையான அண்டவெளி (Interstellar space) தான். இந்த அண்டவெளியில் கோள்களோ, நட்சத்திரங்களோ, எரிகற்களோ எதுவுமே இருக்காது.
இந்தப் பகுதியை முழுக்க முழுக்க வெறுமையான பகுதி என்று சொல்லிவிட முடியாது. மிக 'கனமான' வெற்றிடம் என்று சொல்லலாம். இந்த வெற்றிடத்துக்கு 'கனம்' எங்கிருந்து வருகிறது?. அயனி நிலைக்குத் தள்ளப்பட்ட (ionized state) ஹைட்ரஜன், ஹீலியம், நியூட்ரினோக்கள் (இவை சூரியனி்ல் நடக்கும் அணு இணைப்பால் உருவாகும் சப் அடாமிக் பார்ட்டிகிள்), மின்காந்த கதிர்வீச்சு ஆகியவை தான் இந்த வெற்றிடத்தை நிரப்பியுள்ள விஷயங்கள்.

ஜெயா டிவியை சசி குடும்பத்திடமிருந்து மீட்க ஜெயலலிதா திட்டம்


சென்னை: அதிமுகவின் எந்த ஒரு மூலையிலும் சசி குடும்பத்தாரின் நிழல் கூட இருக்கக் கூடாது என்ற முடிவில் ஒட்டுமொத்தமாக குடும்பத்தோடு அவர்களை துரத்தி விட்டு விட்ட ஜெயலலிதா, அடுத்த இந்தக் கும்பலிடமிருந்து ஜெயா டிவியை மீட்டு அதை சுத்தப்படுத்த முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதற்காக அவர் பல அதிரடி நடவடிக்கைகளில் அடுத்தடுத்து இறங்கவுள்ளதாக கூறப்படுகிறது.
ஜெயலலிதா லைம்லைட்டுக்கு வந்து முதல் முறையாக முதல்வரான போது அப்போது திமுகவுக்கு பெரும் பக்கபலமாக இருந்தது சன் டிவிதான். இதை உணர்ந்த ஜெயலலிதா அதிமுகவுக்கும் ஒரு டிவி வேண்டும் என்பதற்காக சசி குடும்பத்தார் மூலம் தொடங்கிய டிவிதான் ஜெஜெ டிவி. பின்னர் இது ஜெயா டிவியாக உருமாறியது.
ஜெயா டிவியின் நிர்வாகத்தை ஆரம்பத்திலிருந்தே சசிகலா குடும்பத்தினர்தான் கவனித்து வருகின்றனர். ஜெயா டிவியின் அனைத்து நிர்வாகப் பொறுப்பையும் ஏற்றிருப்பவர் அனுராதா. இவர் டிடிவி தினகரனின் மனைவி ஆவார்.

சென்னை விப்ரோ நிறுவனத்தில் பயங்கர தீ-பல ஆயிரம் ஊழியர்கள் வெளியேற்றம்


Wipro Logo
 சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள விப்ரோ நிறுவனத்தில் இன்று காலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. இதையடுத்து பல ஆயிரம் ஊழியர்கள் அங்கிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இந்த தீவிபத்தில் எந்தவிதமான அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
சென்னை சோழிங்கநல்லூரில் விப்ரோ நிறுவனத்தின் வர்த்தகப் பிரிவு வளாகம் உள்ளது. இங்கு 7 மாடிக் கட்டட வளாகத்தில் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. பல ஆயிரம் பேர் இங்கு பணியாற்றுகின்றனர்.

அண்ணா ஹசாரே கிராமத்தில் வினவு! நேரடி ரிப்போர்ட்!

கஸ்டு புரட்சி – அண்ணா ஹசாரே கடந்த ஆகஸ்டு மாதம் தில்லி ராம் லீலா மைதானத்தில் நடத்திக் காட்டிய உண்ணாவிரதக் கூத்தினை ஆங்கில ஊடகங்கள் இப்படித்தான் வருணிக்கின்றன. காந்தியத்தை நெம்பித் தூக்கி வந்து இந்திய அரசியல் அரங்கின் மையத்தில் வைத்தார் அண்ணா ஹசாரே என்று அனைத்திந்திய ஊடகங்கள் தொடங்கி இலக்கிய பிரிண்டிங் மிசின் ஜெயமோகன் வரை மூக்கின் மேல் விரல் வைக்கிறார்கள்.
பழைய பேப்பர்கடையில் சேர்ந்திருக்கும் சில கோடி டன் அச்சிடப்பட்ட செய்திக்காகிதங்கள், கார்ப்பரேட் ஊடகங்களுக்கு கிடைத்த பல கோடி ரூபாய் விளம்பர வருவாய், நாடு தழுவிய அளவில் அதிகரித்த மெழுகுவர்த்தி மற்றும் தேசியக்கொடி உற்பத்தி போன்ற உடனடி விளைவுகளைத் தவிர, மேற்படி புரட்சி சாதித்தது என்னவென்பதை நாம் அறியோம்.
ஊழல் மட்டுமல்ல, விவசாயிகள் தற்கொலை, விவசாய நிலம் பறிப்பு, தனியார்மய – தாராளமயக் கொள்ளைகள், சாதிவெறி வன்கொடுமைப் படுகொலைகள், இந்து மதவெறி பாசிசம் போன்ற பல்வேறு பிரச்சினைகளும் இணைந்ததுதான் நமது நாட்டு மக்களின் அரசியல் சமூக வாழ்க்கை. ஹசாரே எனும் மீட்பர் இந்த நாட்டின் மற்றப் பிரச்சினைகள் பற்றியெல்லாம் என்ன கருதுகிறார்? குஜராத்தில் மோடி அமல்படுத்தும் வளர்ச்சித் திட்டங்களும், அவரது ஊழலற்ற ஆட்சியும் தனக்குப் பிடித்திருப்பதாக ஹசாரே சொன்னபோதுதான், ஆர்.எஸ்.எஸ். மண்டைகள் கருப்புத் தொப்பிகள் மட்டுமின்றி காந்தித் தொப்பிகளும் அணியக்கூடும் என்ற உண்மை பலருக்குத் தெரிய வந்தது.