Isai Inban :
விழுப்புரம்
மாவட்டத்தில் உள்ள செக்கடி குப்பம் மற்றும் அதை
சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த பெண்கள் தாலி அணிவதில்லை. பெரியாரின் திராவிட கொள்கையை வழிவழியாக இந்த கிராம மக்கள் கடைபிடித்து வருகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார், மேல்மலையனூருக்கு வந்தபோது பெண்களின் முக்கியத்துவம் குறித்து பேசியுள்ளார். சுயமரியாதை திருமணம் குறித்தும், பெண்களை தாலி அணியச்சொல்வது அவர்களை அடிமைப்படுத்தும் செயல் என்றும் உணர்ச்சி பொங்க பெரியார் பேசியது கிராமத்தினடையே மிகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் அன்றுமுதல் இன்றுவரைஇந்த கிராமத்தில் சுயமரியாதை திருமணம்
நடைபெற்று வருகிறது. திருமணத்தின்போது வரதட்சணை வாங்குவது இல்லை. சாதி
பாகுபாடு பார்ப்பதில்லை. மணப்பெண்ணுக்கு தாலி அணிவிப்பது இல்லை. மேலும்
திருமணத்தின்போது திருமணம் ஒப்பந்தம் மட்டும் செய்து கொள்கின்றனர்.