"பங்குச் சந்தை -வானிலை அறிக்கை போல ஜெ.வின் உடல்நிலை ரிப்போர்ட் அடிக்கடி மாறக்கூடிய நிலையில் இருக்கிறது' என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவமனை டாக்டர்கள்.கடந்த பத்து நாட்களுக்கு மேலாக வியாழன் வரை எந்த அறிக்கையையும் அப்பல்லோ மருத் துவமனை வெளியிடவில்லை. அப்பல்லோவின் செய்தி மக்கள்தொடர்பு அதிகாரி சுகந்திக்கு தினமும் 100 போன்கால்கள் செய்தியாளர்களிடமிருந்து சென்றுகொண்டிருக்கின்றன. ஆனாலும் பதில் இல்லை. ஜெ.வின் உடல்நிலை பற்றி ஒரு கனத்த மௌனம் அப்பல்லோ வட்டாரத்தில் நிலவுகிறது.;டாக்டர்கள், ஜெ.வின் உடல்நிலை பற்றி யாரிடமும் வாய் திறப்பதில்லை. டாக்டர்கள் மட்டு மல்ல, அங்கிருக்கும் மிக சாதாரண பணியாளர்கள் கூட ஜெ.வின் உடல்நிலை பற்றி வாய்திறப்பதில்லை.
சமீபத்தில் 20-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் ஜெ.வைப் பற்றி பேசியதற்காக கடும் நடவடிக்கைக்கு உள்ளானார்கள். வாட்ஸ்-அப்பில் ஜெ.வின் உடல்நிலையைப் பற்றி பேசியவர்களை போலீஸ் கைது செய்தது. இது அப்பல்லோ டாக்டர்களை அதிரவைத்துள்ளது. இதையும் மீறி நம்மிடம் பேசும் ஒருசில டாக்டர்கள், உயிர் பயத்துடனேயே தகவல்களைத் தருகிறார்கள்.
முதல்வரின் உடல்நிலையில் கணிசமான முன்னேற்றம் இருக்கிறது. ஆனால் அவை போது மான அளவிலான முன்னேற்றமில்லை'' என்கிறார் கள். ஜெ.வின் கைரேகையை தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலுக்காகப் பதிவு செய்த அரசு மருத் துவமனை டாக்டர் பாலாஜி, "முதல்வர் நல்ல உடல் நிலையில் இருக்கிறார். அவரிடம் "நான் டாக்டர் பாலாஜி' என சொன்னேன். அதை உணர்ந்து புன்ன கைத்தார்' என சொல்கிறாரே என கேட்டதற்கு... "அரசு டாக்டர் பாலாஜிதான் அப்படிச் சொல்கிறார்.
அவர் ஜெ.வின் விரல் ரேகையைப் பதிவு செய்தபோது அதற்கு சாட்சி கையெழுத்துப் போட்ட அப்பல்லோவின் டாக்டரான பாபு கே.ஆபிரகாம், "முதல்வர் நல்ல உடல்நிலையில் இருக்கிறார்' என ஏன் சொல்லவில்லை'' எனக் கேட்கிறார்கள் நம்மிடம் பேசிய டாக்டர்கள் அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதிலிருந்து கிட்டத்தட்ட ஒன்றரை மாதமாக வென்டிலேட்டர் எனப்படும் செயற்கை சுவாசக் கருவிகளின் உதவி யுடன்தான் முதல்வர் சிகிச்சை பெற்று வருகிறார். முதலில் நுரையீரல் தொற்று, பிறகு இதயத்தில் தொற்று என சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும் முதல்வருக்கு செயற்கை சுவாசம் அளிக்க ட்ராக்கோஸ்டமி எனப்படும் குழாய் தொண்டை வழியாக செலுத்தப்பட்டுள்ளது.
இதுபோல ஒன்றரை மாதமாக வென்டிலேட் டர் வழியாக சுவாசிக்கும் நபர்களுக்கு கட்டாயம் VAP எனப்படும் நுரையீரல் தொற்றுநோய் ஏற்படும். VAP என்பதன் விரிவாக்கம் Ventilator access phnemonia. அதாவது வென்டிலேட்டரில் நிறைய நாள் சுவாசிப்பதால் உருவாகும் நிமோனியா என் கிற நுரையீரல் தொற்று, நீண்ட நாட்கள் படுக்கை யில் படுத்து சிகிச்சை பெறும் நோயாளி களுக்கு உருவாகும் படுக்கைப் புண்களைப் போல, வென்டிலேட்டரை உபயோகிப்பவர்களுக்கு உருவாகும் இந்த நுரையீரல் தொற்று தவிர்க்க முடியாதது. ஏற்கனவே நுரையீரல் தொற்று நோய்க்காக வென்டிலேட்டர் என்கிற செயற்கை சுவாசக் கருவியின் உதவியுடன் சுவாசிக்கும் ஜெ.வுக்கு அந்தக் கருவியை உபயோ கிப்பதனால் இன்னொரு வகையான நுரையீரல் தொற்று ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மருத்துவர்கள் நடத்தும் போராட்டம்தான் மிகப்பெரிய போராட்டம்'' என்கிறார்கள் அப்பல்லோ மருத்துவர்கள்.
அதேபோல் நுரையீரல் தொற்று, இதயத் தொற்று போன்ற கடினமான தொற்று நோய்களால் பாதிக்கப்பட்டு நீண்டநாள் சிகிச்சைபெறும் நோயாளிகளுக்கு ஹெமிப்ளெஜியா (Hemiplegia) எனப்படும் பக்கவாதப் பாதிப்பு ஏற்படும் அபாயமும் உண்டு. >முகத்தில் உள்ள கண், உதடு தொடங்கி கை, கால்கள் வரை முழுவதுமாக ஒருபக்கம் செயலிழந்து, வலுவிழந்து போவதுதான் ஹெமிப்ளெஜியா எனப்படும் நோய். அந்த ஆபத்து பரவாமல் இருக் கத்தான் உடல் முழுவதும் பாசிவ் பிசியோதெரபி சிகிச்சைகள் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கின்றன.
வென்டிலேட்டரில் சுவாசிப்பதால் ஏற்படும் நுரையீரல் தொற்றுநோயை தவிர்க்க ஜெ.வை வென்டிலேட்டரிலிருந்து வெளியே கொண்டுவந்து இயற்கையாகவும், சிறிய முகமூடி போன்ற கருவிகள் மூலமும் சுவாசிக்க வைக்க டாக்டர்கள் கடுமையாக முயற்சி செய்கிறார்கள். இந்த முயற்சிகள் ஒருகட்டத்தில் நிறைய வெற்றி பெற்றன. ஜெ. வென்டிலேட்டர் இல்லாமல்- அவ்வளவு ஏன் ஆக்சிஜன் சப்ளை செய்யும் சிறிய முகமூடி கூட இல்லாமல்- சில நேரங்களில் சுவாசித்தார். கடந்த 1ஆம் தேதி ஜெ.வை முழுமையாக வென்டிலேட்ட ரிலிருந்து வெளியே கொண்டுவர மருத்துவர்கள் எடுத்த முயற்சிக்கு சசிகலா தடை விதித்தார். காரணம், அன்றைய தினம் "நல்ல நாள் இல்லை' என்றார்.நவம்பர் 2ஆம் தேதி ஜெ.வை வென்டி லேட்டரிலிருந்து முழுமையாக வெளியே கொண்டு வர முயற்சி செய்தார்கள். அந்த முயற்சி தோல்வி யடைந்துவிட்டது.
அத்துடன் ஜெ.வுக்கு தொண் டையிலும் வயிற்றுப் பகுதியிலும் புதிதாக புண்கள் உருவாகியிருப்பதை கண்டுபிடித்த டாக்டர்கள்... இப்போது 2 மணிநேரம் மட்டும் வென்டி லேட்டரை விட்டு வெளியே வைத்து ஜெ.வை இயல் பாக சுவாசிக்க வைப்பதில் கவனம் செலுத்துகிறார் கள். ஜெ. சுவாசிக்க சிரமப்படும் போது மறுபடியும் வென்டிலேட்டருக்கு கொண்டு செல்கிறார்கள்.;ஜெ. வென்டிலேட்டரிலிருந்து வெளியே வருவார், இயற்கையாக சுவாசிப்பார். அவர் நார் மல் ஆனதும், அவர் சிகிச்சை பெறும் இரண்டாவது தளத்திலிருந்து மூன்றாவது தளத்திற்கு மாற்றலாம்... அங்கிருந்து போயஸ் கார்டனுக்கு நவம்பர் 14 அல்லது 16-ந்தேதி அன்று ஜோதிடர் ரத்தினம் குறித்துக் கொடுத்த தேதியில் கொண்டு சென்று விடலாம் என்ற சசிகலாவின் கணக்கு எதிர் பார்த்தபடி அமையவில்லை'' என்கிறார்கள் போயஸ் கார்டனைச் சேர்ந்தவர்கள்.
இதற்கிடையே ""அப்பல்லோ மருத் துவமனையின் இரண்டாவது மாடியை ஆக்கிரமித்துள்ள "முதல்வரின் அலுவலகம்' அதன் வாடகையாக 40 நாட்களில் 2 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது'' என்கிறார்கள் அப்பல்லோவின் அக்கவுண்ட் டிபார்ட்மெண்ட்டை சேர்ந்தவர்கள்.""ஜெ.வுக்கு சிகிச்சையளிக்கப்படும் எம்.டி.சி.சி.யூ. வார்டில் வென்டிலேட்டர் சிகிச்சையுடனான ஒருநாள் கட்டணம் 1 லட்ச ரூபாய். ஜெ. அனுமதிக்கப்பட்ட செப்டம்பர் 22-ம் தேதியிலிருந்து அடுத்த நான்கு நாட்களில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சையின் செலவு மட்டும் 8 கோடி ரூபாய் ஆகிவிட்டது'' என்கிறார்கள் அப்பல்லோ அக்கவுண்ட்ஸ் அதிகாரிகள்.
அப்படி என்ன மருந்து கொடுக்கப் பட்டது எனக் கேட்டதற்கு, ""அன்றும் இன்றும் ஜெ.வின் மருத்துவ செலவு அதிகமாகக் காரணம், அவருக்கு சிகிச்சை அளிக்கும் வெளிநாட்டு மருத்துவர்கள்தான்'' என்கிறார்கள். ""ஜெ.வின் சிகிச்சைக்கு கடந்த 40 நாட்களுக்கு மேல் தலைமை தாங்கும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு பேல் இந்த 40 நாட்களில் 4 நாட்கள்தான் லண்டனில் இருந் திருப்பார். மற்ற நாட்கள் அப்பல்லோவில் தான். அவர் லண்டனிலிருந்து புறப்பட்டு சென்னைக்கு வரும் வரை அவருக்கு சிகிச்சைக்கான கட்டணம் ஒரு மணி நேரத்திற்கு இவ்வளவு என கணக்கிடப்பட்டு வழங்கப் படுகிறது. லண்டனில் இருந்து சென்னை வர விமான பயண கட்டணம் 1 லட்ச ரூபாய். பயண நேரம் 11 மணி நேரமாகும். அந்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் மணிக்கு ஆயிரம் டாலர் என (68 ஆயிரம் ரூபாய்) தரப்படுகிறது. அத்துடன் மீனம்பாக்கத்தில் உள்ள ட்ரைடெண்ட் ஓட்டலில் 45,000 ரூபாய் என தினமும் ரிச்சர்டுக்கான வாடகை செலுத்தும் அப்பல்லோ... அவர் ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கும் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் 10 ஆயிரம் டாலர் என 6 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறது.
வருகிற 7-ம் தேதி வரை ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்க ஒப்புக் கொண்டிருந்த ரிச்சர்டு பேலுக்கு அப்பல்லோ செலவு செய்த தொகையே குறைந்த பட்சமாக ரூ.100 கோடியை தாண்டும்'' என்கிறார்கள்.<">""இதை தவிர சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையிலிருந்து வந்த இரண்டு பிசியோதெரபிஸ்ட்டுகளுக்கு தினமும் ஆளுக்கு ஒரு லட்ச ரூபாய் என இரண்டு லட்ச ரூபாயை அப்பல்லோ நிர்வாகம் செலுத்துகிறது.<">டெல்லியில் இருந்து வந்த எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்களுக்கு தங்குவதற்கு மட்டும் ரூம் கொடுத்த அப்பல்லோ, அவர்கள் மத்திய அரசின் டாக்டர்கள் என்பதால் அவர்களுக்கு எந்தத் தொகையும் தரவில்லை.அப்பல்லோ மருத்துவமனையின் 9 டாக்டர்கள், மருந்துகள் இதுதவிர அரசாங்கம் அளித்துள்ள டாக்டர் கள் தவிர, வெளிநாட்டு டாக்டர்கள் என அப்பல்லோ ஜெ.வுக்காக செலவழிக்கும் தொகை ஒவ்வொரு நாளும் பல கோடி ரூபாயாகும்.
அதே நேரத்தில், ஜெ. அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டதால் அப்பல்லோவின் சாதாரண வியாபாரத்தில் தினமும் பத்து கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது'' என்கிறார்கள் அப்பல்லோவின் அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மெண்ட் ஊழியர்கள்.இவ்வளவு செலவையும் ஜெ. நன்றாக குணமானவுடன் மொத்தமாகப் பெற காத்திருக்கிறது அப்பல்லோ நிர்வாகம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக