சனி, 3 அக்டோபர், 2015

மோடியின் அமெரிக்க குத்தாட்டம்! சிவசேனாவுக்கே வெறுத்து....

The Shiv Sena also stated that the contribution of previous Congress prime ministers like PV Narasimha Rao and Manmohan Singh cannot be forgotten. The Saamna said that PM Modi enjoys extraordinary popularity abroad but we must not forget that Manmohan Singh and Narasimha Rao laid the foundation for India's economic progress. The Sena added that a revolution in broadcasting and telecom first took place during Indira Gandhi's regime and later his son and the then PM Rajiv Gandhi carried forward her legacy.
modi mark zuckerbergஏழைகளை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாட்டின் பிரதமர் பணக்காரர்களிடம் மட்டும் கைகுலுக்குவதும் பல் இளிப்பதும் அவர்கள் முன்னால் முதுகு வளைந்து வணக்கம் சொல்லுவதும் எவ்வளவு அருவருப்பானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் மரியாதை இந்தக் கோமாளி பிரதமரால் எவ்வளவு நகைப்புக்குள்ளாக்கப்படுகிறது. மோடியின் வெளிநாட்டுப் பயணங்களின் வெற்றி குறித்து தம்பட்டம் அடிக்கும் நமது உள்ளூர் பத்திரிக்கைகள் மோடி செல்கின்ற நாடுகளில் எல்லாம் ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்துவது குறித்து ஓரமாக எழுதிவிட்டு தனது ஜனநாயகக் கடமையை முடித்து கொள்கின்றன.facebook நிறுவனர் ஆளைவிட்டா போதும் சாமியோவ் என்கிற மாதிரில?

சென்னை துறைமுகம் தடுக்கப்படுகிறதா? அதானியின் ஆந்திர துறைமுகத்துக்கு வசதியாக.......?

மதுரவாயல் - துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தைக் கிடப்பிலே போட்டு முடக்கி வைத்து விட்டு, அதன் காரணமாக சென்னைத் துறைமுகத்தின் வளர்ச்சியைத் திட்டமிட்டுத் தடுத்ததற்கும் காரணம், அதானி குழுமம் ஆர்வம் காட்டும் காட்டுப்பள்ளித் துறைமுகத்தையும், தனியாருக்குச் சொந்தமான கிருஷ்ணா பட்டணம் துறைமுகத்தையும் வளர்ப்பதற்காகத் தானா?
தனியார் சிலருக்கு உதவுவதற்காக, பொதுத் துறை நிறுவனங்களை வீழ்த்துவது பற்றிய மர்மங்கள் இன்னும் ஒரு சில நாட்களில் வெளிச்சத்திற்கு வரத் தான் போகின்றன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்து ஆங்கில நாளேடு, 26-6-2015 அன்று மதுரவாயல் - துறைமுகம் உயர் மட்ட நெடுஞ்சாலைத் திட்டம் கிடப்பில் போடப்பட்டதால் வணிக நடவடிக்கைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன என்ற தலைப்பில் விரிவாக எழுதியுள்ளது.

மும்பை பெண்கவுன்சிலர் சசிகலா மாலதி தற்கொலை? ரெயில் முன் பாய்ந்து...

மாலதி (வயது 43). தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த இவர் நெருல் 3–வது செக்டர் பகுதியில் வசித்து வந்தார். கடந்த 23–ந் தேதி வெளியில் வேலை இருப்பதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார். ஆனால் அதன்பிறகு சசிகலா மாலதி வீடு திரும்பவில்லை.
இதனால் அவரது குடும்பத்தினர் மிகுந்த கலக்கம் அடைந்தனர். மேலும் சசிகலா மாலதி காணாமல் போனது பற்றி அவரது மகள் அனுராதா (23) நெருல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கவுன்சிலர் சசிகலா மாலதியை தேடி வந்தனர்.
நகைகள் மூலம் கண்டுபிடிப்பு இருப்பினும் கடந்த 9 நாட்களாக அவரை பற்றிய எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில், வாஷி மருத்துவமனையில் ரெயிலில் அடிபட்டு இறந்த ஒரு பெண்ணின் உடல் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அடையாளம் காணப்படாமல் இருப்பதாக நெருல் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சமந்தாவை சிக்கவச்ச தெலுங்கு தயாரிப்பாளர்கள்...


சிம்புவின் "இது நம்ம ஆளு'’பட விவகாரத்தில் ‘"கதைக்கு தேவையில்லாத குத்துப்பாட்டுக்கு ஆட விரும்பாததையும்,  தனக்கு வரவேண்டிய 50 லட்ச ரூபாய் சம்பள பாக்கி தேவையில்லை'’என்றும் நயன்தாரா சொன்னதாக தகவல்கள் வந்தன. பாக்கிச் சம்பளமே 50 லகரம் என்றால்... மொத்தச் சம்பளம் எவ்வளவு? என்பதை நோட்டம்விட்டதாம் வருமான வரித்துறை. இன்கம்டாக்ஸில் வருட வருமானமாக நயன் குறிப்பிட்டு வந்த கணக்கு 60 லட்ச ரூபாய்தான்.கேரளாவில் திருவல்லா புஷ்பகிரி அருகே கோடியாட்டு எனும் இடத்தில் நயனுக்கு சொந்தமான பூர்வீக வீடு உள்ளது. அத்துடன், தேவாரா எனும் இடத்தில் "வொய்ட் வாட்டர்' எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு வாங்கினார். அந்தக் குடியிருப்பில் கீழ் மற்றும் மேல் தளத்தில் நயனுக்கு வீடு உண்டு. கீழ் வீட்டை வாடகைக்கு விட்டுள்ளார்.
மலையாளப் படமான "பாஸ்கர் தி ராஸ்கல்'’ படம் நல்ல வசூலைக் கண்டதால் மீண்டும் மம்முட்டி யுடன் ஒரு படம் நடித்து வரும் நயன் இதற்காக கேரளாவில் இருக்கிறார்.

விஜய் வருமானவரி அரசியல்.....அமித்ஷா...ஜெயலலிதா.....மட்டுமல்ல.. பேராசையும்?

தணிக்கைக் குழு "புலி'க்கு "யு' சான்றிதழ் கொடுத்திருந்தது. அதனால் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையைப் பெறுவதற்காக வரிவிலக்கு கமிட்டிக்கு ரெய்டுக்கு முந்தின நாள்‘"புலி'யைக் காட்டி னார்கள். ஆனால் வன்முறை காட்சிகள் இருப்பதாக வரி விலக்குக்கு தகுதியில்லை என நிராகரித்துவிட்டனர். இதனால் ""பட விலையில் கொஞ்சம் குறைக்கணும்'' என விநியோகஸ்தர்களும் நெருக்கடி கொடுத் தனர்."புலி' படத்தில் உள்ள அரசியல் வசனங்கள் தொடர்பாக விநியோ கஸ்தர்கள் காட்டிய தயக்கத்தை கடந்த இதழின் ராங்-கால் பகுதியில் எழுதியிருந்தோம். அதன் பின்னணியில் உளவுத் துறை வேலை இருக்கிறது என்கிற சினிமா வட் டாரத்தினர், கூடு தல் கட்ட ணத்தில் டிக்கெட் விற்றால் நடவடிக்கை என ஒவ்வொரு மாவட் டத்துக்கும் அரசுத் தரப்பில் உத்தரவு போடப்பட்டதையும் நினைவுபடுத்தி, ஸ்பெஷல் காட்சிகள் கட்டாகி, கலெக்ஷன் பாதிக்கப்பட்டதை ஒப்பிட்டுக் காட்டினர். துப்பாக்கி, தலைவா, கத்தி என விஜய் படங்களுக்கு எதிர்ப்புகள் கிளம்பியபோதெல்லாம் அதை பெரிதாக்கும் வகையிலேயே ஜெ.அரசின் செயல்பாடுகள் இருந்தன.

இந்திராணி முகர்ஜி தற்கொலைக்கு முயற்சி? கவலைக்கு இடம் ..ஷீனா போராவின்...

ஷீனா போரா கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இந்திராணி முகர்ஜி மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ராட்டிய மாநிலத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24-ந்தேதி பிரபல தொழில் அதிபர் மனைவி இந்திராணி முகர்ஜியின் மகள் ஷீனா போரா(வயது 25) எரித்துக் கொல்லப்பட்டார். ஷீனாபோராவின் சிதைந்த உடல் மறுநாள் ராய்காட் மாவட்ட காட்டுப் பகுதியில் மீட்கப்பட்டது.இந்த வழக்கில் கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் துப்பு துலங்கியது. அப்போது பெற்ற தாயே மகளை தனது கணவருடன் சேர்ந்து எரித்துக்கொன்றது அம்பலமானது. இதைத்தொடர்ந்து இந்திராணி முகர்ஜி, அவருடைய முன்னாள் கணவர் சஞ்சய் கன்னா, முன்னாள் டிரைவர் ஷியாம்வர் பிந்துராம் ஆகியோரை மும்பை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கை தற்போது சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

BBC : ஐநா தீர்மானம் கோருவது கலப்பு விசாரணை பொறிமுறையையே...வேறு வார்த்தைகளில்.....

இலங்கையில் போர்க்காலத்தில் நடந்ததாகக் கூறப்படுகின்ற பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் சர்வதேச மற்றும் உள்நாட்டு பொறிமுறைகள் அடங்கிய கலப்பு பொறிமுறையின் (hybrid) கீழ் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் சில வாரங்களுக்கு முன்னர் வெளியிட்டிருந்த விசாரணை அறிக்கையின்போது பரிந்துரை முன்வைத்திருந்தார்.
ஆனால், இலங்கை தொடர்பில் நேற்று வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தில் 'கலப்பு பொறிமுறை' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கவில்லை.
பதிலுக்கு 'இலங்கை அமைக்கவுள்ள நம்பகமான நீதி விசாரணை பொறிமுறையில் காமன்வெல்த் மற்றும் ஏனைய வௌிநாட்டு நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் அங்கீகரிக்கப்பட்ட விசாரணையாளர்களும் பங்கெடுப்பார்கள்' என்ற வாசகம் புதிய தீர்மானத்தில் சேர்த்துக் கொள்ளப்பட்டுள்ளது.  

Laptop காமிரா முன்பாக D.S.P. விஷ்ணுப்பிரியா தற்கொலை? அவரின் கடிதத்தின் மேலும் 2 பக்கம் வெளியாகி ....

திருச்செங்கோடு டி.எஸ்.பி.யாக இருந்த விஷ்ணுப்பிரியா தற்கொலை செய்து கொண்ட வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் சிபிசிஐடி போலீசாரின் விசாரணை தீவிரமடைந்து வரும் நிலையில், காவல்துறையால் மறைக்கப்பட்டதாக கூறப்படும் கடிதத்தின் மேலும் இரண்டு பக்கங்கள் வெளியாகி உள்ளன. அவரது தற்கொலை தொடர்பான முக்கிய வீடியோ ஆதாரம் இருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. விஷ்ணுப்பிரியா எழுதியதாக 9 பக்கங்கள் கொண்ட கடிதத்தினை காவல்துறையினர் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர் எழுதிய கடிதத்தில் மேலும் பல பக்கங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக விஷ்ணுப்பிரியாவின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். இந்த நிலையில் கடிதத்தில் மேலும் இரண்டு பக்கங்கள் தற்போது வெளியாகி உள்ளன. தான் தற்கொலை செய்யும் வீடியோ தன் மடிக்கனிணியில் இருக்கும் என்றும், அதனை எடுத்து பார்த்துக்கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது. வீடியோவை பார்த்தால் தற்கொலைக்கான காரணம் தெரிய வரும் என்பதால் தன்னுடைய உடலை பிரேத பரிசோதனை செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.nakkheeran.in

வெள்ளி, 2 அக்டோபர், 2015

அமெரிக்காவில் 294வது துப்பாக்கிச் சூடு..இந்த வருடத்தில் இதுவரை...இதுதாண்டா வல்லரசு!


கல்லூரி ஒன்றில் ஒன்பது பேர் சுட்டுக்கொல்லப்பட்டமை, ஒரு வகையில் பார்த்தால், இந்த வருடத்தில் அமெரிக்காவில் நடந்த இருநூற்று தொண்ணூற்று நான்காவது ஒட்டுமொத்த துப்பாக்கி சூடு. ஒரொகொன் மாநிலத்தில் றோஸ்பேர்க் என்ற சிறிய நகரத்தில் பிரிட்டனில் பிறந்த இருபத்தியாறு வயதான கிறிஸ் ஹார்ப்பர் மேர்சர் இந்த தாக்குதலை நடத்தியுள்ளார். போலிஸாரால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். தாக்குதலால் விரக்தியடைந்த அதிபர் ஒபாமா, அமெரிக்காவில் துப்பாக்கி கட்டுப்பாட்டுக்கு மீண்டும் அழைப்பு விடுத்துள்ளார். . அடடா  துப்பாக்கி ஷூட்டிங்கிலும் நாமதாய்ன் சூப்பெருங்கோ!

100 கோடி சிக்கியது! விஜய்,நயன், சமந்தா...400 அதிகாரிகள் அன்புச்செழியன்,சந்திரசேகர்,சிம்புதேவன் .....

நடிகர் விஜய், தயாரிப்பாளர்கள் பி.டி.செல்வகுமார், சிபுதமீன்ஸ், இயக்குனர் சிம்புதேவன், அன்பு செழியன், விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திர சேகர், கலைப்புலி தாணு மற்றும் புலி படத்துடன் நேரடி தொடர்புடையவர்கள் வீடுகள் அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேந்று முன்தினம் திடீர் சோதனை நடத்தினார்கள். நடிகைகள் நயன்தாரா, சமந்தா வீடுகளிலும் அதிரடி சோதனை நடந்தது. நேற்றும் 2–வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. பல்வேறு புகார்களின் அடிப்படையில் சென்னை, மதுரை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், கொச்சி, ஐதராபாத் ஆகிய ஊர்களில் 10 பேருக்கு சொந்தமான 35 இடங்களில் இந்த சோதனை நடந்தது. 400 அதிகாரிகள் தில் பங்கேற்றனர். இந்த சோதனையில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. ரொக்க பணம், நகைகள், ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன. புலி படத்துக்கு வரிவிலக்குகிடையாது !அரசுஅறிவிப்பு .

வைகோவின் கூட்டணியிலிருந்து வெளியேறியது மனித நேய மக்கள் கட்சி

வைகோ ஏற்படுத்திய கூட்டணியிலிருந்து மனித நேய மக்கள் கட்சி வெளியேறி விட்டது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் தலைமையில், ம.தி.மு.க., விடுதலைச் சிறுத்தைகள், மனிதநேய மக்கள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காந்திய மக்கள் இயக்கம் என மொத்தம் ஆறு கட்சிகள் ஒன்றினைந்து ஒரு கூட்டணியாக உருவாகின. இந்த கூட்டணியே அதிமுக., திமுக.வுக்கு மாற்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. பின்னர் இந்த அணியில் இருந்து தமிழருவி மணியன் வெளியேறினார். இதனால், அந்தக் கூட்டணியில் ஐந்து கட்சிகள் மட்டுமே இருந்தது.  தற்போது மனிதநேய மக்கள் கட்சியும் இந்தக் கூட்டணியில் இருந்து விலகியிருக்கிறது. இது குறித்து கருத்துக்கேட்ட போது "மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளுக்குப் போராடத்தான் இந்த இயக்கத்தில் இணைந்தோமே தவிர இதையே ஒரு தேர்தல் அணியாக மாற்றுவதில் உடன்பாடு இல்லை” என்று மனித நேய கட்சித்  தலைவர்கள் கருத்து கூறியுள்ளனர்.

உ.பியில் வகுப்புக் கலவரத்தைத் தூண்டிவரும் இரு இந்து அமைப்புகள்

வீட்டில் மாட்டு மாமிசத்தை வைத்திருந்ததாகக் கூறப்பட்டு இஸ்லாமியர் ஒருவர் அடித்துக் கொல்லப்பட்டிருக்கும் தாத்ரி பகுதியில் இரண்டு உள்ளூர் இந்து அமைப்புகள் வகுப்புவாத பதற்றத்தை ஏற்படுத்திவருவதாக குற்றம்சாட்டப்படுகிறது. அக்லாக் மீது இரவு பத்தரை மணி அளவில்தான் தாக்குதல் நடந்தது என்றாலும் மாலையிலிருந்தே வாட்ஸ் அப் மூலம் தகவல்கள் பரப்பப்பட்டன என்கிறார்கள் உறவினர்கள். ராஷ்ட்ரவாடி பிரதாப் சேனா, சமாதான் சேனா ஆகிய இந்த இரு அமைப்புகளும் ஆறு மாதங்களுக்கு முன்பாக உருவாக்கப்பட்டவை.

வியாழன், 1 அக்டோபர், 2015

கெஜ்ரிவால் :நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவு

பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமாருக்கு எனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறேன் என்று டெல்லி முதல்-மந்திரி கெஜ்ரிவால் கூறியுள்ளார். பீகார் சட்டசபைக்கு 5 கட்ட தேர்தல் நடக்கிறது. முதல் கட்ட தேர்தலில் ஓட்டுப்பதிவு வரும் 12–ந் தேதி நடக்க உள்ளது. அங்கு தேர்தல்களத்தில் அனல் பறக்கிறது. ஆட்சியை கைப்பற்றுவதில் பாரதீய ஜனதா தீவிரமாக உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதில் ஆளும் ஐக்கிய ஜனதாதளம் வரிந்துகட்டுகிறது. ராஷ்ட்ரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் அது கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இந்நிலையில் பீகார் முதல் மந்திரிக்கு அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் ஆதரவு தெரிவித்துள்ளார். இந்நிலையில் எதிர்வரும் பீகார் தேர்தலில் நிதிஷ் குமாருக்கு ஆதரவு தெரிவிக்கப்போவதில்லை என்று டெல்லி முதல் அமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாக செய்திகள் வெளியாகின. இதனை கெஜ்ரிவால் முற்றிலுமாக மறுத்துள்ளார். இது ஊடங்களால் திரித்து எழுதப்பட்டதாவும் அவர் கூறினார். இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நோயில்லாத வாழ்வுக்கு உதவும் பாக்டீரியாவை கண்டு பிடித்த ரஷ்ய விஞ்ஞானி

சுமார் 3.5 மில்லியன் ஆண்டுகளாக பூமியில் வாழும் ‘பேசில்லஸ் எஃப்’ என்ற பாக்டீரியாவை, பழம், எலி போன்றவற்றில் செலுத்தி சோதித்தனர். இதன் மூலம் அவை நோய்களால் பாதிக்கப்படாமல், செழுமையாக இருப்பது தெரியவந்தது. இந்த வெற்றிக்குப் பின்னர் தனது உடலிலும் இந்த பாக்டீரியாவை செலுத்திக் கொண்டுள்ளார் மாஸ்கோ நகரில் உள்ள ஜியோகிரியாலஜி துறைத் தலைவராக உள்ள அனடோலி ப்ரோவ்ச்கோவ்(58). அனடோலி தனது உடலில் இரு ஆண்டுகளுக்கு முன்னர் இதைச் செலுத்திக் கொண்டுள்ளார். இது உடலில் செலுத்தப்பட்ட பின்னர் சிறு, சிறு ஜுரம் போன்ற பிரச்சனைகள்கூட ஏற்படுவதில்லை என்றும், இதன்மூலம் நீடித்த வாழ்க்கைக்கான ரகசியத்தைக் கண்டுபிடித்து விட்டதாகவும் இவர் கூறி வருகிறார்.

விஜய் சமந்தா நயன்தாரா வருமானவரி விவகாரம்...அரசியல் கலந்தது...?

சென்னை: தமிழ், தெலுங்கு, இந்திமொழிகளில், இன்று வெளியாக உள்ள, 'புலி' படத்தின் நாயகன் நடிகர் விஜய் மற்றும் நடிகைகள் நயன்தாரா, சமந்தா, தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமார் வீடுகளில் வருமான வரித் துறையினர், நேற்று சோதனை நடத்தினர். தமிழகம், கேரளா, ஆந்திராவில் உள்ள இவர்களது வீடுகளில், 300க்கும் மேற்பட்ட வருமான வரி அதிகாரிகள் பல குழுக்களாக ஒரே நேரத்தில் ஈடுபட்டனர்.சோதனை எங்கே?: நேற்று காலை, 7:00 மணிக்கு துவங்கிய சோதனை, மாலைவரை நீடித்தது. சென்னையில் உள்ள, நடிகர் விஜய் வீடு மற்றும் அலுவலகம்; நயன்தாரா வின் சென்னை, கேரளா வீடுகள், அலுவலகங்கள்; சமந்தாவின் சென்னை, ஐதராபாத் வீடுகள், அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. மேலும், புலி படத் தயாரிப்பாளர் செல்வகுமாருக்கு சொந்தமான, மதுரை மற்றும் கன்னியாகுமரியில் உள்ள வீடு மற்றும் அலுவலகங்கள் என மொத்தம், 32 இடங்களில், சோதனை நடத்தியதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் கூறுகின்றன.காரணம் என்ன?: பெரும் செலவில் உருவாகும் விஜயின் படம் புலி! ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில், இன்று வெளியாகிறது. வருமானத்தில் காட்டாத கறுப்புப் பணத்தை செலவு செய்து இப்படம் எடுக்கப்பட்டதாக வருமான வரித்துறைக்கு தகவல்கள் கிடைத்தன. விஜயின் அரசியல் அபிலாசை? நயன்தாரா க்கு சேலத்தில் கூடிய கூட்டத்தை பார்த்து அரசியல் கட்சிகள் அதிர்சியாமே.....

இலங்கை தொடர்பான ஐநா தீர்மானம் நிறைவேறியது!

இலங்கையில் நடந்ததாகக் கூறப்படும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நம்பத்தகுந்த விசாரணையை நடத்தக்கோரும் தீர்மானம் இன்று வியாழக்கிழமை ஒருமனதாக நிறைவேறியது. 47 உறுப்பு நாடுகள் கொண்ட ஐநாவின் மனித உரிமைகள் ஆணையத்தின் இன்றைய தீர்மானம் வாக்கெடுப்புக்கு விடப்படவில்லை. இன்றைய தீர்மானத்தை அமெரிக்காவும் பிரிட்டனும் முன்னின்று கொண்டுவந்தன. இந்த தீர்மானத்தை இலங்கை அரசும் ஆதரித்திருக்கிறது. இந்த தீர்மானத்தில் சில முன்னேற்றகரமான அம்சங்கள் காணப்பட்டாலும், இது ஓரளவு வலு குறைந்த ஒன்று என்று தெரிவித்திருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான சுமந்திரன், அமையவிருக்கும் பொறிமுறையைப் பயன்படுத்தி பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதிகிடைக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் பாடுபடும் என்று தெரிவித்துள்ளார்.bbc.tamil.com

சென்னை மாநகராட்சி அதிமுக உறுப்பினர் வெட்டிக் கொலை ! பட்டப் பகலில் 86-ஆவது வட்ட உறுப்பினராகவும் அண்ணா தொழிற்சங்கத்தின்....

சென்னை மாமன்ற உறுப்பினர் குரு (48) அம்பத்தூரில் புதன்கிழமை பட்டப்பகலில் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
 இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
 சென்னை, பாடி மண்ணூர்பேட்டை மாணிக்கம்பிள்ளை தெருவைச் சேர்ந்த குரு, சென்னை மாநகராட்சியின் 86-ஆவது வட்ட உறுப்பினராகவும், அண்ணா தொழிற்சங்கத்தின் அம்பத்தூர் நகரச் செயலாளராகவும் இருந்து வந்தார்.
 புதன்கிழமை நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் மாதாந்திரக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக பிற்பகல் 1.20 மணியளவில் வீட்டில் இருந்து வெளியே வந்து, கார் வருவதற்காக சற்று தொலைவு நடந்து சென்றார்.அப்போது, 3 இரு சக்கர வாகனங்களில் தலைக்கவசம் அணிந்து வந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல், குருவை சரமாரியாக அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றது.
 அவரது அலறல் சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து, உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த குருவை, அவரது காரிலேயே ஏற்றிக் கொண்டு அண்ணா நகரிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். எனினும், அங்கு சிகிச்சை பலனின்றி குரு உயிரிழந்தார். சேவை செய்யவா அரசியலுக்கு வாராக? பங்கு பிரிப்பதில் தகராறு ?  அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா?

மும்பை: 5 பேருக்கு தூக்கு 7 பேருக்கு ஆயுள் தண்டனை....தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில்...

மும்பை: கடந்த 2006, ஜூலை 11ம் தேதி 188 பேரை பலி கொண்ட மும்பை தொடர் ரயில் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் என்று தீர்ப்பு கூறப்பட்ட 12 பேரில் 5 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கி மும்பை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது. கடந்த 2006, ஜூலை 11ம் தேதியன்று சர்ச்கேட்டில் இருந்து புறப்பட்ட 7 புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து ஆர்.டி.எக்ஸ். குண்டுகள் வெடித்தன. கார் ரோடு-சாந்தாகுரூஸ், பாந்த்ரா-கார் ரோடு, கேஸ்வரி-கோரேகாவ்,மீரா ரோடு-பயந்தர், மாகிம்-மாட்டுங்கா ஆகிய ரயில் நிலையங்களுக்கு இடையே புறநகர் ரயில்கள்சென்று கொண்டிருந்த போது இந்த குண்டு வெடிப்புகள் நடந்தன.
இதுதவிர மாகிம் மற்றும் போரிவலியில் நின்று கொண்டிருந்த ரயில்களிலும் குண்டுகள் வெடித்தன. இந்த 7 குண்டுகளும் புறநகர் ரயிலின் முதல் வகுப்பு பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்தன. குண்டுவெடிப்பில் மொத்தம் 188 பேர் உடல் சிதறி பலியானார்கள். 829 பேர் படுகாயமடைந்தனர்.

இலங்கை போர்க்குற்றம்:ஐ.நா. சபையில் உலக நாடுகளின் பிரநிதிகள் கருத்து

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நா. மனித உரிமை பேரவைக் கூட்டத்தில் இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பான மனித உரிமை ஆணையர் தாக்கல் செய்த விசாரணை அறிக்கை மீதான பொது விவாதம் நடைபெற்றது. விவாதத்தில் பங்கேற்ற பன்னாட்டு பிரதிநிதிகள் தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.
சுவிட்சர்லாந்து - சர்வதேசத்தின் ஒத்துழைப்போடு இலங்கை போர்க்குற்ற விசாரணையை நடத்த வேண்டும்.
ஆஸ்திரேலியா - போர்க்குற்றம் தொடர்பான ஐநா மனித உரிமை அறிக்கையை தீவிரமாக எடுத்துள்ளோம்.
இங்கிலாந்து - இலங்கையில் மக்களிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த துணை நிற்போம்.
ஜப்பான் - இலங்கையின் நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எப்போதும் துணை நிற்போம்.
பிரான்சு - இலங்கை போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

குஷ்பு: விஷால் அணிக்கே ஆதரவு! நடிகர் சங்கம் ஒன்றும் குடும்பச் சொத்து அல்ல!

நடிகர் சங்கம் ஒன்றும் யாருடைய குடும்பச் சொத்துமல்ல. விஷால் போன்ற புதியவர்கள் பொறுப்புக்கு வரவேண்டும் என்று நடிகை குஷ்பு கூறினார். நேற்று தனது பிறந்த நாளைக் கொண்டாடிய பிறகு குஷ்பு பேட்டியளிக்கையில், நடிகர் சங்க தேர்தல் பற்றிய தன் நிலையைத் தெரிவித்தார். Nadigar Sangam is not a family property, says Kushbhoo அவர் கூறுகையில், "தயாரிப்பாளராகவும், பிரபல டைரக்டரின் மனைவி என்ற முறையிலும் திரையின் வெளியே இருந்து திரைப்பட துறையை பார்க்கிறேன். எனக்கு பிடித்த நல்ல கதாபாத்திரம் கிடைத்தால் மீண்டும் படங்களில் நடிப்பேன். நடிகர் சங்கம் ஒன்றும் குடும்ப சொத்து இல்லை. ஆகவே புதியவர்கள் நடிகர் சங்க நிர்வாகிகளாக வரவேண்டும். வெளிப்படையாக சொல்லவேண்டுமானால் நடிகர் சங்க தேர்தலில் என்னுடைய ஆதரவு நடிகர் விஷால் அணியினருக்குத்தான். இதைச் சொல்ல எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை," என்றார். tamil.filmibeat.com

புதன், 30 செப்டம்பர், 2015

நீதிமன்றம் நேரடி ஒளிபரப்பு..First in history..நீதிமன்ற அவமதிப்பு வழக்கு..

ஐகோர்ட்டு வரலாற்றில் முதல் முறையாக வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள தொலைக்காட்சியில் விசாரணை நேரடியாக ஒளிபரப்பாகிறது, நீதிபதிகள் தமிழ்வாணன், செல்வம் ஆகியோர் முன்னிலையில் விசாரணை நடைபெற்றது. நேரலையில் விசாரணையை காண உயர்நீதிமன்ற வளாகத்தில் ஏராளமானோர் திரண்டிருந்தனர். நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் மதுரை வழக்கறிஞர் சங்கத்தலைவர் தர்மராஜ் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார். வழக்கறிஞர் சங்க செயலாளர் ராமசாமி நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. வழக்கு விசாரணைக்கு பின் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் பால்கனகராஜ் பேட்டியளித்தார். கட்டாய தலைக்கவச உத்தரவுக்கு எதிராக போராட்டம் நடத்தியதால் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிபதி குன்ஹாவின் தீர்ப்புக்கு எதிராக எத்தனை காவடியாட்டம் நடைபெற்றது?எங்கே போனது இந்த நீதிமன்ற  அவமதிப்பு மட்டர்?

சென்னை பள்ளிக் கழிவறைக்குள் 6 வயது மாணவி பலி!

சென்னை : பள்ளிக் கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது மாணவி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை தேனாம்பேட்டை, ஆலயத்தமன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது 6 வயது மகள் தர்ஷினி. தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் முதலாம் வகுப்பு படித்து வந்தார்.   கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல பள்ளி சென்றார் தர்ஷினி. பாட வேளையின் போது தனது தோழியுடன் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது விளையாட்டாக தர்ஷினி இருந்த கழிவறையை வெளியில் இருந்து பூட்டியுள்ளார் அவரது தோழி. பின்னர் தனது வகுப்பிற்கு அவர் சென்று விட்டார். கழிவறையில் பூட்டப்பட்ட தர்ஷினி பயத்தில் அலறி இருக்கிறார். இருப்பினும், அவளது குரல் யாருக்கும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது.

டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு பப்பாளி இலையில் இருந்து சாறு மாத்திரை...


டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கான -கேரிபில்-(Caripill)  மாத்திரை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என மைக்ரோ லேப்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் அந்த நிறுவனத்தின் மூத்த செயல் துணைத் தலைவர் ஜெயராஜ் (வணிகம்) கூறியதாவது:
இந்தியா உள்பட உலகம் முழுவதும் டெங்கு கடுமையான சுகாதாரப் பிரச்னையாக உருவாகி வருகிறது.உலக சுகாதார அமைப்பு (WHO) வெளியிட்ட அறிக்கையில், 250 கோடி மக்களுக்கு டெங்குத் தாக்கும் வாய்ப்புள்ளது எனவும், ஆண்டுதோறும் 5 கோடி பேர் டெங்கு தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளது.டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், -மைக்ரோ லேப்ஸ்- நிறுவனம் (Micro Labs Limited) விரிவான அபிவிருத்தி, ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.டெங்கு காய்ச்சல் சிகிச்சைக்கு உதவும் -கேரிபில்-(Caripill) என்ற மாத்திரையை அறிமுகம் செய்துள்ளது.

Volkswagan மாசுக்கட்டுப்பாடு மோசடி: டீசல் எஞ்சின்களை மாற்றித்தருவதாக....அறிவிப்பு

ஜெர்மனியின் மதிப்புக்குரிய நிறுவனமாக விளங்கிய ‘வோக்ஸ்வேகன்', அதன் டீசல் கார்களில் செய்த, மாசு கட்டுப்பாட்டு முறைகேடுகளைப் பற்றிய தகவல் கடந்த வாரம், அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமையான இ.பி.ஏ., மூலம் வெளிவந்தது. இதில், வோக்ஸ்வேகன் நிறுவனம் உலக அளவில் விற்பனை செய்த ஒரு கோடியே பத்து லட்சம் டீசல் கார்களில், மாசு கட்டுப்பாட்டு அளவை மென்பொருள் மூலமாக குறைத்துக் காட்டி முறைகேடு செய்துள்ளது என, இ.பி.ஏ., குற்றஞ்சாட்டியுள்ளது.கார் வெளியிடும் புகையில், காரியத்தின் அளவை குறைத்துக் காட்டுவதற்கென, தனி மென்பொருளை வோக்ஸ்வேகன் தமது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால், மாசு கட்டுப்பாடு சோதனையில், வோக்ஸ்வேகன் கார்கள், வெற்றிகரமாக தேறி, அதற்கான சான்றிதழுடன், விற்பனை செய்யப்பட்டு வந்துள்ளன.

மாட்டுக்கறி சாப்பிட்ட சந்தேகத்தில் அடித்துக் கொலை! உபியில் காட்டுமிராண்டிகள் தர்பார்...


வட இந்திய மாநிலமான
உத்தரப்பிரதேசத்தில் மாட்டுக்கறியை தன் வீட்டிற்குள் சேமித்து வைத்து சாப்பிட்டார் என்கிற சந்தேகத்தின் பேரில் அடித்துக் கொல்லப்பட்ட முஸ்லிம் ஆணின் கொலை தொடர்பில் ஆறுபேரை தாங்கள் கைது செய்திருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது. உத்தரப்பிரதேசத்தில் தன் வீட்டிற்குள் இருந்த மொஹம்மத் அக்லாக்கை வீட்டிலிருந்து வெளியில் இழுத்து வந்த கும்பல் ஒன்று அவரை கூட்டமாக தாக்கியது. அவரது மகனும் கூட இந்த தாக்குதலில் கடுமையான காயங்களுக்குள்ளானார்.  கொல்லப்பட்ட மொஹம்மத் அக்லாக்கின் குடும்பத்தினர் இந்தியாவின் பெரும்பான்மை இந்துக்கள் பசுவை புனிதமானதாக கருதுவதால் பல இந்திய மாநில அரசுகள் பசுவைக் கொல்வதை தடை செய்துள்ளன. இந்தியாவை தற்போது ஆளும் வலதுசாரி இந்துத்துவ கட்சியின் ஆட்சியில் பசுவை கொல்வது, மாட்டுக்கறிவை விற்பது மற்றும் உண்பது ஆகியவற்றுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டிருக்கின்றன.bbc.tamil.com

ரகுபதி சர்மா வரதராஜா இருவருக்கும் 290 மற்றும் 300 வருடங்கள் கடூழிய சிறை ..சந்திரிக்கா கொலைமுயற்சி....

வேலாயுதன் வரதராஜா மற்றும் ரகுபதி சர்மா ஆகிய இருவருக்கும் தலா 290 மற்றும் 300 வருடங்கள் கடூழிய சிறை தண்டனை விதித்து கொழும்பு மேல்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. இந்த சிறை தண்டனைகள் முப்பது ஆண்டுகளில் கழிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்தார். போதிய ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் இதே வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரகுபதி சர்மாவின் மனைவி வசந்தி விடுவிக்கப்பட்டுள்ளார். அதேவேளை தண்டனை விதிக்கப்பட்டுள்ளவர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பை அளித்த நீதிபதி பத்மினி ரணவக்க அறிவித்தார்.

விஜய், நயன்தாரா, சமந்தா.. 35 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை

சென்னையில் நடிகர் விஜய்க்கு
சொந்தமான நீலாங்கரை வீடு மற்றும் வளசரவாக்கத்தில் உள்ள அவரது அலுவலங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று (புதன்கிழமை) சோதனை மேற்கொண்டனர். கோடம்பாக்கம் ராகவேந்திரா திருமண மண்டபம் அருகே உள்ள இயக்குநர் சிம்புதேவன் வீட்டிலும் சோதனை மேற்கொண்டனர். இவரது இயக்கத்தில் விஜய் நடித்த புலி திரைப்படம் வியாழக்கிழமை வெளியாக உள்ள நிலையில் இந்த சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்திற்கு பல கோடி ரூபாய் பைனான்ஸ் செய்திருப்பதாக சொல்லப்படும் மதுரை பைனான்சியர் அன்புச்செழியனுக்கு சொந்தமான மதுரை கீழத்துரையில் உள்ள வீடு மற்றும் தெற்கு மாசி வீதியில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடைபெற்றது. மேலும் இப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான பி.டி.செல்வகுமாரின் வீடு சாலிகிராமம் தேவராஜ நகரிலும், அவரது அலுவலகம் வளசரவாக்கத்திலும் உள்ளது. அந்த இரண்டு இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது. புலி படத்தின் மற்றொரு தயாரிப்பாளர் சிபு தமீன்ஸ் சென்னை அலுவலத்திலும் சோதனை நடைபெற்றது. காலை 7 மணி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

தமிழக அரசிற்கு 2.71 லட்சம் கோடி ரூபாய் கடன்

சென்னை:'தேர்தல் அறிக்கையில் கூறியதை, நிறைவேற்றவில்லை' என, தி.மு.க., குற்றம் சாட்டியது.இதுதொடர்பாக, சட்டசபை யில், நேற்று நடந்த விவாதம்:தி.மு.க., - சக்கரபாணி: காவிரியில் தண்ணீர் விட, கர்நாடகா அரசு மறுப்பதை கண்டித்து, டெல்டா விவசாயிகள் போராட்டம் நடத்துகின்றனர். கர்நாடகா முதல்வர், அனைத்துக் கட்சியினரையும் டில்லி அழைத்துச் சென்று, பிரதமரை சந்தித்து, வறட்சி நிவாரணம் கோரியுள்ளார். தமிழக முதல்வரும், அதேபோல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் பன்னீர்செல்வம்:
காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்தில், சுமுக முடிவு எடுக்கப்பட்டுள்ளது.சக்கரபாணி: எங்கள் கட்சியை சேர்ந்த, ஸ்டாலின், அன்பழகன் ஆகியோரின் தொகுதிகளில், மூன்று ஆண்டுகளாக, தொகுதி மேம்பாட்டு நிதியில் பணிகள் நடக்கவில்லை.

செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்


thayagam.com மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படும் தற்போதைய தொழில் நுட்பம் இந்த நனோ தொழில் நுட்பம். ஆனால், இதில் பல ஆபத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நனோ துணிக்கைகள் புற்றுநோய், உடல் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தல், சுற்றாடலை மாசு படுத்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
அதுசரி, நனோ தொழில்நுட்பம் என்பது தான் என்ன? டைட்டேனியம், நாகம், வெள்ளி போன்ற உலோகங்களை எரித்தோ, அரைத்தோ மிகவும் மெல்லிதான பவுடர் தயாரிக்கப்படுகிறது. மெல்லிதான என்றால் அதன் அளவு ஒரு மீட்டரை நூறு கோடியால் பிரித்து வரும் அளவு. ஒரு மயிரின் தடிப்பை பத்தாயிரம் தடவை பிரிக்கும் அளவு. இது ஒரு மூலக்கூறு அளவு வரைக்கும் செல்லும். இந்த பவுடரை வேறு பொருட்களுடன் கலந்து பூச்சாகப் பூசப்பட்டே இந்த நனோ துணிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. நனோ அளவில் இருக்கும் இந்தத் துணி;க்கைகள் புதிய இயல்புகளைப் பெறுகின்றன. மின்னைக் கடத்துதல், றப்பர் போல இழுபடுதல், ஒளியை ஒட்புக விடுதல், நிறம் மாறுதல் போன்ற இயல்களை இந்த துணிக்கைகள் கொண்டிருக்கின்றன. நனோ அளவில் அரைக்கப்படும் தங்கம் அதன் அளவைப் பொறுத்து சிவப்பாகவோ, நீலமாகவோ இருக்கும்.

ஜெர்மனியில் மகளை கொலை செய்த பாகிஸ்தானியர்....மகளின் இஸ்லாமிய விரோத போக்காம் ...காதல்...


A Muslim man has confessed to strangling his 19-year-old daughter to death with his bare hands after learning from police she had been caught shoplifting condoms to have sex with her forbidden boyfriend. Asadullah Khan and his wife Shazia then dressed dead daughter Lareeb, a dental technician, in her clothes. They then wheeled her in a wheelchair from their high-rise apartment to the family car, drove to a secluded embankment in their home city of Darmstadt in Germany, and tipped the corpse down it. Read more: http://www.dailymail.co.uk/news/article-3251787/Muslim-father-strangled-daughter-19-death-honour-killing-caught-stealing-condoms-sex-forbidden-boyfriend-Germany.html#ixzz3n8UXfZ59 Follow us: @MailOnline on Twitter | DailyMail on Facebook
The court heard Nida is now in therapy and has nothing more to do with her parents. Shazia said that on the night of the murder Lareeb had quarelled again with her father and hit him. He later crept into her room as she slept, knelt astride her and strangled her. 'I couldn't stop him,' the mother said in a statement read by her lawyer. 'I have rheumatism and didn't have the strength to fight him off. I wanted to scream, but I couldn't. 'Lareeb stayed away from the home for several nights in a row and stopped wearing the headscarf. One day we received a letter from the police saying she had been caught trying to steal condoms. 'At this point it became clear that there was sexual contact. When I showed the letter to my husband he snapped.' ஜெர்மனியில், ஆணுறைகளைத் திருடி தன் காதலனுடன் உல்லாசமாக இருந்த ஒரு பெண்ணை பெற்றோர்களே கௌரவக் கொலை செய்துள்ளனர். பாகிஸ்தானைச் சேர்ந்தவர் அஷத்துல்லா கான், இவரது மனைவி ஷாசியா. இவர்கள் ஜெர்மனியில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் திருமணம் செய்து கொண்டு பாகிஸ்தானில் வசிக்கிறார். லரீப் ( வயது 19 ) மற்றும் நாடியா இருவரும் பெற்றோர்களுடன் வசித்து வருகின்றனர். இதில், கானின் மகள் லரீப் ஒரு முஸ்லீம் இளைஞருடன் பழகி வந்தார். அது அவரின் பெற்றோர்களுக்குப் பிடிக்கவில்லை.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் யுவராஜ் சொத்துக்களை முடக்க திட்டம்

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கடத்தல், கொலை, வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 மாதமாக யுவராஜ் தலைமறைவாக உள்ளார்.  இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா, கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு வழக்குகளையும் சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர். கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஓமலூரில் உள்ள அவரது பெற்றோர்கள், உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

சமணர் படுக்கைகள் கண்டுபிடிப்பு! ஆரணி அடுத்த நாசாமலையில்....பாதுகாக்க கோரிக்கை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த நாசாமலையில் சமணர் படுக்கைகள் இருப்பதை ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.யூ.வனம் அருகே உள்ள நாசா மலையைச் சுற்றிப்பார்க்க சேவூர் கிராமத்தில் வசிக்கும் ஜைனர் சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சென்றுள்ளனர். அப்போது குகைக்குள் இரண்டு சமணர் படுக்கைகள் மற்றும் துறவிகள் மருத்துவம் பார்த்ததற்கு அடையாளமான குழிகள் இருப் பதும் தெரியவந்துள்ளது. இது குறித்து கிராம மக்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, சிஐடியு மாவட்டத் தலைவர் அப்பாசாமி தலைமையில் கிராம மக்கள் சிலர் நேரில் சென்று பார்த்து புகைப்படம் எடுத்து வந்துள்ளனர்.
இது குறித்து அப்பாசாமி கூறும் போது, “நாசா மலையில் சுமார் ஆயிரம் அடி உயரத்தில் குகை உள்ளது. அந்த குகைக்குள் 2 சமணர் படுக்கைகள் உள்ளன. மூலிகைத் தழைகளை உரலில் இடித்து மருந்து தயாரித்து வைத்தியம் பார்த்ததற்கான சான்றாக குழி உள்ளது.

மோடியை அமெரிக்காவில் காய்ச்சி எடுத்த ...ModiFail campaign...வெளிவராத செய்திகள்

Modi fail (1)

சிலிக்கான் வேலியில் மோடி கிளப்பும் விளம்பரப் புழுதி, நாளிதழ்களை கறையாக்கி வருகிறது. கறையும், புழுதியும் நல்லதல்ல என்றாலும் மோடி ஆண்டையின் காலில் விழுந்து கிடக்கும் ஊடகங்கள் சலிக்காமல் பஜனையை கிளப்பி வருகிறார்கள்.
Modi fail (6)Modi fail (3)மோடியை புகைப்படம் பிடிப்பதிலிருந்து, ஆட்களை அழைத்து வருவது, உள்ளூர் சில்லறை மற்றும் மொத்த விற்பனை பிரமுகர்களை காட்டுவது, வசனங்களை தயாரிப்பது, ஊடகங்களில் மானே தேனே போட்டு எழுதிக் கொடுப்பவது வரை பெரும்படையே அங்கும் இங்கும் வேலை செய்கிறது. ஆனாலும் ஒரு குற்றவாளியை இப்படி வாஷிங்டன் சென்ட் போட்டு மறைக்க முடியுமா?
ஆர்.எஸ்.எஸ், மோடி, பா.ஜ.க வகையறாக்களை ஆதரிக்கும் என்.ஆர்.ஐக்களைப் போலவே எதிர்க்கும் மக்களும் அங்கிருக்கிறார்கள்.

20 ஆயிரம் பெண்களுக்கு Free அம்மா கைபேசி! மகளிர் சுயஉதவி குழு .....

தமிழக சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா 110 விதியின் கீழ் நேற்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:–
மகளிர் சுயஉதவி குழுக்கள் மகளிருக்கு சமூக பொருளாதார அதிகாரம் வழங்கிடவும், அதன்மூலம் வறுமை ஒழிக்கும் நோக்கத்துடனும் சுயஉதவி குழுக்களை எனது தலைமையிலான அரசு 1991–ம் ஆண்டு உருவாக்கியது.
மேலும் ஏழை, எளிய, நலிவுற்ற மக்கள் மற்றும் மகளிர் மேம்பாட்டிற்காக 2005–ம் ஆண்டு எனது தலைமையிலான அரசு உலக வங்கி நிதி உதவியுடன் கூடிய தமிழ்நாடு புதுவாழ்வு திட்டத்தையும் தொடங்கிவைத்தது. அதன் பயனாக, மகளிர் சுயஉதவி குழுக்கள் தமிழ்நாட்டில் மாபெரும் சக்தியாய் உருவெடுத்து, இன்று 6.08 லட்சம் மகளிர் சுயஉதவி குழுக்கள் 92 லட்சம் உறுப்பினர்களை கொண்டு செயல்பட்டு வருகின்றன.

மிருகங்களை பலியிடுவதை தடை செய்ய கோரி மனு: விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள உச்ச நீதிமன்றம் மறுப்பு

மிருகங்கள் பலியிடுவதை அனுமதிக்கும் சட்டப்பிரிவை நீக்கக்கோரும் பொதுநல மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மக்கள் மன்றம் என்ற தொண்டு நிறுவனத்தை சேர்ந்த வி.ராதாகிருஷ்ணன் என்பவர் மதரீதியான பண்டிகைகளில் மிருகங்களை பலியிடுவது தண்டனைக்குரிய குற்றம் ஆகாது என்று வரையறுக்கும் மிருகவதை தடை சட்டத்தின் பிரிவு 28-ஐ நீக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல்.தத்து மற்றும் நீதிபதி அமிதவராய் ஆகியோர் அடங்கிய அமர்வு, மிருகவதை தடை சட்டத்திலேயே மதரீதியான காரணங்களுக்காக மிருகங்கள் பலியிடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக மக்களால் கடைப்பிடிக்கப்படும் பாரம்பரியமான விஷயங்களுக்கு எதிராக கோர்ட்டு செயல்பட முடியாது. இந்த மனுவை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள முடியாது. அனைத்து வகையான நம்பிக்கைகளுக்கும் இடையில் சமன்பாடு இருக்க வேண்டும். எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர். maalaimalar.com

வடிவேலு : அந்த அரசியல் கட்சிப்பிரமுகரை எனக்கு தெரியாது; தயாரிப்பாளரை நான் மிரட்டவும் இல்லை

எலி’ படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் வடிவேலு மீது புகார் அளித்துள்ளார். அப்புகாரில், ‘’ நடிகர் வடிவேலு, ஜனவரி 6ல், என்னை சந்தித்தார். அப்போது அவர், 'தற்போது நான், எலி படத்தில் நடிக்கிறேன். அதன் தயாரிப்பாளர் ராம்குமாரிடம் செலவு செய்ய பணம் இல்லை. இந்த படம் ரிலீசாகவில்லை என்றால், நான் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. 'அதனால், ராம்குமார் இதுவரை செலவு செய்த, 90 லட்சம் ரூபாயில், 15 லட்சம் ரூபாயை நீங்கள் கொடுத்து விடுங்கள். மீதி தொகையான, 75 லட்சம் ரூபாயை நான் தந்து விடுகிறேன். அவர் இந்த படத்தில் இருந்து விலகி விடுவார். பின் நீங்களே இந்த படத்திற்கு தயாரிப்பாளராகி விடுங்கள்' என, கெஞ்சினார்.

எனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் காதலில்லை : மாளவியா மறுப்பு.


போலீஸ் டி.எஸ்.பி விஷ்ணுபிரியாவின் தற்கொலை வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி போலீசாரே, விஷ்ணு பிரியாவின் தற்கொலைக்கு உயரதிகாரிகள் கொடுத்து வந்த நெருக்குதல் காரணமல்ல, அவரது தற்கொலையில் காதலும் உள்ளது என்ற கோணத்தில் கொண்டு செல்கின்றனர்.முதலில் பெருமாள் கோவில் அர்ச்சகர் ஒருவருடன் விஷ்ணுபிரியா அதிக நேரம் செல்போனில் பேசியுள்ளார் என்ற விவரத்தை கசியவிட்ட போலீசார், இப்போது, மதுரை உயர்நீதி மன்றத்தில் அரசு வழக்குரைஞரின் உதவி வழக்குரைஞரான எம்.மாளவியா என்பவருடன் விஷ்ணுபிரியா பல மணி நேரம் செல்போனில் பேசியுள்ளார்.  இவருக்குமிடையில் காதல் இருந்துள்ளது. இந்த காதல் கை கூடாமல் போனதால் தான் அவர் தற்கொலை செய்துள்ளார் என்ற கோணத்தில் கொண்டுபோவது தெரிகிறது.

திங்கள், 28 செப்டம்பர், 2015

தமிழிசைத் தளபதி ஆர்.கே.சண்முகம்! கோயம்புத்தூரில் 17.10.1892 ஆம் நாள்...

rkshanmugamதொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே, தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என முத்தமிழாகத் தழைத்துச் செழித்து விளங்கியது. ஆனால், “தமிழ் மொழி இசைக்கு உரியதில்லை, தெலுங்கிலும், வடமொழியிலும் உள்ள இசைநயம் தமிழுக்கு இல்லை; சங்கீதம் நாதவித்தை; அங்கே மொழிப் பிரச்சனையைப் புகுத்தக் கூடாது; தமிழில் பாடினால் இசை நயம் குன்றிப் போகும்; கர்நாடக சங்கீதத்தின் புனிதம் கெட்டுவிடும்; தமிழில் உயர்ந்த பாடல்களும் இல்லை” என்றெல்லாம் ஒரு கூட்டம் கூச்சலிட்டது. தமிழ் நாட்டில் பிறந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள்தான் இத்தகைய கூச்சலை கூச்சமின்றி கூறித் திரிந்தனர். இச்சூழலில் தமிழுணர்வு கொண்ட தமிழர்கள் குமுறி எழுந்தனர்.
“சங்க காலத்திலும், சமய இலக்கியத்திலும் வளமும் நலமும் ஊட்டிய தமிழிசைக்கு எதிர்ப்பா? வேற்றுமொழிப் பாடல்களைத் தமிழ் மக்களிடையே, தமிழ் நாட்டிலேயே, பாடுகிற அவலம் பரவி வருவதை வேருடன் நீக்கியாக வேண்டும்” எனத் தமிழ்ச் சான்றோர், ‘தமிழிசைச் சங்க’த்தை 1940 ஆம் ஆண்டு தோற்றுவித்தனர். தமிழிசைச் சங்கத்தின் இரு கண்களாக செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரும், டாக்டர் ஆர்.கே.சண்முகமும் விளங்கினர்.

சென்னையில் வைகோ உட்பட 1,000 பேர் கைது!

செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் வைகோ. செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கும் வைகோ. இலங்கை தமிழர் விவகாரத்தில் உள்நாட்டு விசாரணையே போதும் என கூறும் அமெரிக்காவைக் கண்டித்து சென்னையில் உள்ள அந்நாட்டு துணை தூதரகத்தை முற்றுகையிட முயன்ற மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட 1000 பேர் கைது செய்யப்பட்டனர்.
இலங்கையில் நடந்த போர்க்குற்றங்கள் குறித்து சர்வதேச நீதி விசாரணை நடத்த வேண்டும் என தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளும் பல்வேறு தமிழ் அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன.

மழைநீரை அப்படியே உறிஞ்சும் பிளாஸ்டிக் சாலை. நெதர்லாந்தில்...

ஆம்ஸ்டர்டாம்: மழை நீரை முழுவதும் உறிஞ்சி நிலத்தடி நீரை அதிகரிக்கும் வகையிலான புதிய பிளாஸ்டிக் கலந்த கான்கிரீட் சாலைகளை அமைத்துள்ளது நெதர்லாந்து நிறுவனம். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நெதர்லாந்தின் ரோட்டர்டம் நகரில் தான் இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் சுமார் 25 ஆயிரம் வீடுகள் உள்ளன. இதன் மூலம், நிலத்தடி நீரை உயர்த்தும், சுற்றுசூழலை பாதுகாக்கும் வகையிலான பிளாஸ்டிக் சாலைகள் அமைக்கப்பட்ட முதல் நகரம் என்ற பெருமையை ரோட்டர்டம் பெற்றுள்ளது. இந்த பிளாஸ்டிக் கான்க்ரீட் சாலைகளில் எண்ணிலடங்கா நுண்ணிய துளைகள் அமைந்துள்ளன. இதன் மூலம் சாலையில் நீர் தேங்காமல், அனைத்தும் விரைவாக பூமிக்கடியில் சென்று விடும். இதன் மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும்

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசுவது குற்றமா ?

நீதிபதிகள் ஊழலை வழக்கறிஞர்கள் பேசாமல் வேறு யார் பேச முடியும்? தண்டிக்கப்பட்ட 14 வழக்கறிஞர்கள் செய்த போராட்டத்தை தமிழகத்தின் 80,000 வழக்கறிஞர்களும் செய்வோம்! நீதித்துறை சர்வாதிகாரத்துக்கு எதிராகப் போராடுவோம்! என்ற தலைப்பில் 28-9-2015 அன்று, திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியிலிருந்து 1000 வழக்கறிஞர்கள் கலந்து கொண்ட அவசரக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது .  ஏற்கனவே லஞ்சம், சாதி, பாலியல் குற்றம் போன்றவைகளால் தள்ளாடிக் கொண்டிருக்கும் நீதித்துறையை....
கூட்டத்தில் தெறித்த பொறிகள்!
  • சென்னை மதுரை உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்களின் வழக்கறிஞர்கள் சங்கங்கள் இணைந்து திருச்சியில் புதிய போராட்டக்குழு உதயம்! 

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா! ஏன் அத்தனை விசில் பறக்கிறது. எதற்காகக் கைதட்டுகிறார்கள்?வெளியில் வரட்டும்..

nisaptham.com  உள்ளுக்குள் இருக்கும் கச்சடாக்களை பரிமாறிக் கொள்ள மனம் எத்தனித்துக் கொண்டேயிருக்கிறது. பதாகைகளிலும் விளம்பரத் தட்டிகளிலும் காத்ரீனா கைப்புகளும், பிரியங்கா சோப்ராக்களும் தூண்டிவிடும் பாலியல் உணர்வுகளை எல்லாம் யாரிடமாவது காட்டிவிட முடியாதா என்கிற ஏக்கம் சகல இடங்களிலும் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய எத்தனிப்புகள் அத்தனையும் வெற்றியில் முடிவதில்லை. பாலியல் எத்தனிப்புகளில் கிடைக்கும் தோல்வி உண்டாக்கக் கூடிய விளைவுதான் பாலியல் வறட்சி என்பது. அத்தகைய பாலியல் வறட்சியின் நீட்சியாகத்தான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களைப் பார்க்க வேண்டும். 
:த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்த்துவிட்டேன். சமூக சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் இன்னபிற போராளிகளும் கழுவி ஊற்றி கொழுவில் ஏற்றும் ஒரு படத்தை பார்த்துவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது இயற்கைதானே? அமெரிக்காவுக்கு கிளம்பும் போதே இரண்டு இணையதளங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். einthusan மற்றும் tamilgun. முதல் தளத்தை மேலாளர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதே வேறு மேலாளராக இருந்தால் ஸ்டேட்டஸ் அனுப்பச் சொல்லி சாகடித்திருப்பார்கள். நல்ல மனுஷன் அவர். இரண்டாவது தளத்தை செந்தில் அறிமுகப்படுத்தினார். இவர் கரூர்காரர். டென்வரில்தான் கடந்த ஐந்தாறு வருடங்களாக இருக்கிறார்.

keralagov.in இணையத்தளம் பாகிஸ்தானிய ஹக்கர்களால் முடக்கப்பட்டது

பாகிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்கள் கேரள அரசு இணையதளத்தை ஹேக் செய்து முடக்கியுள்ளனர். நேற்று இரவு பாக்கிஸ்தானை சேர்ந்த ஹேக்கர்களால் 'www.keralagov.in' என்ற கேரள அரசாங்கத்தின் அதிகாரபூர்வ இணையத்தளம் முக்கப்பட்டுள்ளது. அதை சீரமைக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதாலா தெரிவித்துள்ளார். இது போன்ற செயல்கள் உலகம் முழுவதும் நடந்துவருகிறது. வருங்காலத்தில் இது போன்று நடைபெறாமல் இருக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பாடு வருகிறது என கேரள அரசு தெரிவித்துள்ளது.மாலைமலர்.com

விஷ்ணுப்பிரியா யுவராஜ் ஆடியோ! உங்களால நான் கஷ்டப்படுறேன்.. விஷ்ணுப்பிரியா.

நாமக்கல்: தற்கொலை செய்து கொண்ட விஷ்ணுபிரியாவிற்கும், தனக்குமான தொலைபேசி உரையாடல் ஆடியோவை வெளியிட்டுள்ளார் கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா கடந்த 18ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தலித் இளைஞர் கோகுல்ராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வந்த விஷ்ணுபிரியா உயரதிகாரிகளின் நெருக்கடி காரணமாகவே இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜ் வாட்ஸ் அப் வழியாக ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 
 அந்த ஆடியோவில் தனக்கும் விஷ்ணுபிரியாவுக்கும் இடையே நடந்த உரையாடலையும் சேர்த்து வெளியிட்டுள்ளார் யுவராஜ். அதில், மிகவும் கேஷூவலாக
, ‘ஹலோ குட்மார்னிங் நல்லாயிருக்கீங்களா?' என தன் பேச்சை ஆரம்பிக்கிறார் யுவராஜ்.

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கூகுளுடன் இணைந்து 500 ரயில் நிலையங்களில் இலவச வைஃபை: டிஜிட்டல் இந்தியா கூட்டத்தில் மோடி தகவல்

சிலிக்கான்வேலி: அமெரிக்காவின் சிலிக்கான்வேலியில் கூகுள், மைக்ரோசாப்ட் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவன சி.இ.ஓக்கள் பங்கேற்ற டிஜிட்டல் இந்தியா மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றினார். மோடி பேசியதாவது: பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்றவைதான் இப்போது பக்கத்து வீட்டுக்காரர்களாக மாற்றிவிட்டன. இந்தியாவின் குக்கிராமங்களிலுள்ள பெண்கள் சிறந்த மருத்துவ சேவையையும், விவசாயிகள் நல்ல மார்க்கெட் ரேட்டையும் இணையம் மூலம் அறிந்துகொள்கிறார்கள்.  பெண் குழந்தைகளை காப்பாற்ற அரியானாவில் தந்தை-மகள் இணைந்து ஸ்மார்ட்போனில் எடுத்த செல்ஃபி உலக இயக்கமாக மாறியது. இதற்கெல்லாம் காரணம் நீங்கள் (ஐடி நிறுவன ஜாம்பவான்கள்) செய்யும் பணி.

ஐந்து லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்பேண்ட் வசதி: மைக்ரோசாப்ட் புதிய திட்டம்

ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இங்குள்ள சான் ஜோஸ் நகரில் தகவல் தொழில்நுட்பத்துறை பிரபலங்கள் இன்று விருந்து அளித்து கவுரவித்தனர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மைக்ரோசாப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சத்யா நாதெள்ளா, டிஜிட்டல் இந்தியாவை உருவாக்க நினைக்கும் பிரதமர் மோடியின் முன்முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் வகையில் இந்தியாவில் உள்ள 5 லட்சம் கிராமங்களுக்கு குறைந்த செலவில் பிராட்பேண்ட் வசதியை செய்துதர மைக்ரோசாப்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டார். இதன்மூலம், இந்தியாவில் உள்ள அனைவரும் ஒருவரோடு ஒருவர் இணைந்திருக்க முடியும். தங்களது தாயாரிப்புகளையும், விளைப்பொருட்களையும் விரைவாகவும், லாபகரமாகவும் சந்தைப்படுத்த முடியும். மேலும், பல சேவைகளை அவர்கள் இருந்த இடத்தில் இருந்தவாறே பெற முடியும் எனவும் சத்யா நாதெள்ளா நம்பிக்கை தெரிவித்தார் மாலைமலர்.com

சென்னை: மாஞ்சா நூல் அறுத்து சிறுவன் பலி

பெரம்பூரில் பெற்றோருடன் சென்ற சிறுவன் அஜய் (வயது 5) மாஞ்சா நூல் அறுத்து உயிரிழந்தான். பெரம்பூர் மேம்பாலத்தில் பைக்கில் சென்றபோது மாஞ்சா நூல் சிறுவனின் கழுத்தில் சுற்றி அறுத்தது. இதில் படுகாயம் அடைந்த சிறுவன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டான். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான். மாஞ்சா நூல் தயாரிப்போர் மீதும், அதனை விற்போர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல வருடங்களாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அரசு இதனை செவிக்கொடுத்து கேட்காததால் இதுபோன்ற விபரீதங்கள் நடக்கின்றன என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்

இந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழகம் இரண்டாவது இடம். விஜயகாந்த்!

மதுவிலக்கு குறித்த அமைச்சர் நத்தம் விஸ்வநாதனின் பேச்சை கண்டித்து, தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்கும் வகையில் மதுக்கடைகளையும், அதன் வேலை நேரத்தையும் படிப்படியாக குறைத்திடும் அறிவிப்பை சட்டமன்றத்தில் 25.09.2015 அன்று மதுவிலக்கு துறையின் மானிய கோரிக்கை விவாதத்தில் அதிமுக அரசு வெளியிடுமென தமிழகமக்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் எல்லாவற்றிலும் ஏமாற்றுவதைப் போலவே, இதிலும் அதிமுக அரசு தமிழக மக்களை ஏமாற்றிவிட்டது. மதுவிலக்கிற்காக உயிரை இழந்த சசிபெருமாளின் குடும்பத்திற்கு கூட எவ்வித நிவாரணமும் வழங்காதது கண்டிக்கத்தக்கதாகும்.

ஆஸ்கர் தெரிவுக்கு காக்கா முட்டையை அனுப்பாதது ஏன்? அவன் அப்படித்தாய்ன் ...ஹிந்திக்காரந்தாய்ன்.

ஆஸ்கர் தேர்வுக்கு கோர்ட், காக்கா முட்டை இரண்டில் எதைத் தேர்வு செய்வது என்று ஒன்றரை நாள் விவாதித்தோம் என தேர்வுக்குழுவில் இடம்பெற்ற இயக்குநரும் நடிகருமான அரிந்தம் சில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த திரைப்படங்களுக்கு, திரையுலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கப்பட்டு வருகிறது.  இந்நிலையில், உலகின் பல்வேறு நாடுகளின் திரைப்படங்கள் பங்கேற்கும் போட்டிக்கு, காக்கா முட்டை, பாகுபலி, பிகே, மசான், மேரி கோம், ஹைதர் உள்பட 30 திரைப்படங்கள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தன. மத்திய அரசின் விருதுகள்  எல்லாமே  வெறும் கேலி கூத்தாகும்,  வெறும் ஹிந்தி  மொழி பிரசார வசனங்களை சேர்த்ததால் மிகவும்  குஷியாகிப்போன  ஹிந்தி  வெறியர்கள்  சம்சாரம்  ஒரு மின்சாரத்திற்கு  கொடுத்தார்கள்.

தி.மு.க வுடன் கூட்டணி சேர ராகுல் தடை!


சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுடன் கூட்டணி சேர, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் தடை விதித்து விட்டதால், தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவனும், அவரது கோஷ்டியினரும் கவலை அடைந்துள்ளனர். மேலும், இளங்கோவன் மீதான கோபம் காரணமாக, தமிழக மாவட்ட காங்கிரசாரை சந்தித்து, கூட்டணி குறித்து கருத்து கேட்கும் பணியை, மேலிட பிரதிநிதி சென்னா ரெட்டியிடம், ராகுல் ஒப்படைத்து விட்டார்.தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.க.,வுக்கும் இடையே நெருக்கம் ஏற்படுவதற்கு, இளங்கோவன் பாலமாக இருந்தார். அ.தி.மு.க., அமைச்சர்களுக்கு எதிராக, கவர்னரிடம் புகார்; மது ஒழிப்பு போராட்டம் என, தி.மு.க.,வை திருப்திபடுத்தும் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டினார். அதன் காரணமாக, 'கருணாநிதி வழிகாட்டுதல் படி செயல்படும் கட்சியாக, காங்கிரசை மாற்றி விட்டார்' என, ராகுலிடம், எதிர் கோஷ்டிகள் புகார் செய்தன.சமீபத்தில், சென்னையில் நடந்த மோடி - ஜெயலலிதா சந்திப்பு தொடர்பாக, இளங்கோவன் செய்த விமர்சனம், பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்த ராகுல்தம்பி காங்கிரசை ஒரு வழிப்பண்ணாம ஓயா மாட்டாரு. போயும் போயும் இத்த நம்பி ஒரு கட்சி......

மலையகத்தில் மண் சரிவில் சிக்கி 7 பேர் பலி! இலங்கையின் ரம்பொடவில் தமிழ்.....


இலங்கையின் மலையகத்தில் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற மண் சரிவில்
சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. ரம்போட மண் சரிவில் 5000 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அரசு கூறுகிறது. நுவரெலியா மாவட்டம் ரம்பொட பகுதியில் இடம்பெற்ற இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் இரு பெண்களும் 10 வயதுக்குட்பட்ட நான்கு சிறார்களும் அடங்குவர். மண்சரிவு காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள குடும்பங்கள் தற்போது அந்த பகுதியிலுள்ள அரசாங்க பாடசாலையொன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக கொத்மலை பிரதேச செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். அந்த பிரதேசத்தில் நிலவும் சீரற்ற கால நிலை காரணமாக மேலும் சில குடும்பங்கள் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேற வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளன.