அகில இலங்கைச் சிறுபான்மைத்  தமிழர் மகாசபை உறுப்பினர்களான  திரு அன்ரனி மாஸ்டருடனும் ,  திரு தெணியான் அவர்களுடன்  அண்மையில் உரையாட முடிந்தது. இலங்கையில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின் பிற்பாடான சம்பவங்கள் குறித்தும், மகாசபையின் அடுத்த கட்ட நகர்வுகள்  பற்றிய உரையாடலுமாகவே அது அமைந்தது. 
நாம் பதவிகள் மேல்  ஆசைகொண்டவர்களல்ல.  எமது சமூகம் எமாற்றப்பட்டும், சமூக உரிமைகள் மறுக்கப்பட்டும் வருவதை  தொடர்ந்தும்  பொறுத்துக்கொள்ள முடியாத காரணத்தினாலேயே எமக்கான  ஒரு தனிக்கட்சியின் அவசியத்தை நாம் உணருகின்றோம். அதன்  நிமித்தமாகவே  எமக்கான கட்சி ஒன்றை பதிவு செய்வதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகின்றோம். கடந்த மகாசபைக் கூட்டத்தில் ”அகில இலங்கை முற்போக்கு மக்கள் கட்சி” என்ற பெயரில் எமது கட்சியை பதிவு செய்வதற்கு முடிவெடுத்துள்ளோம்.
நாம் இலங்கையில் வாழும்  அனைத்துச் சமூகத்துடனும்  நட்புடனும், சகோதரத்துவத்துடனும்  இணைந்து செயல்படவேண்டும் என்ற  நோக்கத்திலேயே எமது கட்சியின் பெயர் உருவாக்கப்பட்டது.   கட்சியின் சின்னம் குறித்து  அடுத்து வரும் சந்திப்புகளில் கலந்துரையாடி முடிவெடுக்கத் தீர்மானித்துள்ளோம். யாழ் மேலாதிக்கத்தின்  கைகளிலேயே தமிழ் ஊடகங்கள் இருந்து வருவதால்  எமது சமூகம் சார்ந்த செய்திகளை அவர்கள் தொடர்ந்தும் இருட்டடிப்புச் செய்து கொண்டே வருகின்றனர். எனவே வருங்காலத்தில் எமது சமூகத்தின் தேவை கருதி ஒரு பத்திரிகை வெளியிடுவது குறித்தும் நாம் ஆலோசித்து வருகின்றோம்.
இவ்வாறான தகவல்கனை  மேற்படி இரு மகாணசபை உறுப்பினர்களும் எமக்கு வழங்கினர்.
உரையாடியவர்கள் : தேவதாசன் , அசுரா.