சனி, 30 ஜூன், 2012

bathroom க்குள் நாம் மிகவும் சுதந்திரமாக இருக்கிறோம்

உங்கள் வாழ்க்கை உண்மையிலேயே உங்கள் வாழ்க்கையாகதான் இருக்கிறதா?
இந்த கேள்வி எப்போதாவது உங்கள் மனதில் எழுந்திருக்கிறதா?
பெரும்பாலும் உங்கள் வாழ்க்கை உங்கள் வாழ்வாக இருப்பதில்லை என்பது இருட்டில் ஒழித்து வைக்கப்பட்ட பெரிய உணமையாகும்.
இதுதான் உங்கள் வாழ்க்கை இதுதான் உங்கள் விருப்பம் அல்லது இது உங்கள் வெறுப்பு போன்ற பலவிதமான தீர்மானங்களும் உங்கள் மீது பதியப்பட்டவையே அன்றி உண்மையில் அவை உங்கள் ஒரிஜினல் தீர்மானங்களாக இருப்பது அரிதிலும் அரிதேயாகும்.

17 லட்சம் ஆப்கானியரை வெளியேற்ற பாகிஸ்தான் முடிவு

பாகிஸ்தான் நாட்டில் இருந்து 17 லட்சம் ஆப்கானிஸ்தான் அகதிகளை வெளியேற்ற அந்நாடு முடிவு செய்துள்ளது.ஆப்கானிஸ்தானில் தலிபான்களுக்கும் நேட்டோ படையினருக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இதனால் பக்கத்து நாடான பாகிஸ்தானில் அகதிகளாக ஆப்கானிஸ்தான் நாட்டவர்கள் தஞ்சம் அடைந்துள்ளனர்.
 மேலும் பாகிஸ்தானின் வடமேற்கு மாகாணமான கைபர்- பக்துனகவா மாகாணத்தில் சிலர் சட்டவிரோதமாக தங்கியுள்ளனர்.
மொத்தமாக பாகிஸ்தானில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த 17 லட்சம் பேர் அகதிகளாக தங்கியுள்ளனர். அவர்களை அங்கிருந்து வெளியேறும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கான கெடு இன்றுடன் முடிகிறது.
பாகிஸ்தானின் நடவடிக்கையால் ஆப்கானிஸ்தான் அரசு கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. ஆப்கானியர்கள் வெளியேறாவிட்டால் கணக்கெடுக்கப்பட்டு கைது செய்யப்படுவர் என்றும் பாகிஸ்தான் எச்சரிக்கை விடுத்துள்ளது

ஏடிஜிபி துக்கையாண்டி ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் சஸ்பெண்ட்

நில அபகரிப்பு புகார்: ஏடிஜிபி துக்கையாண்டி ஓய்வு பெறுவதற்கு முதல்நாள் சஸ்பெண்ட்

சென்னை: நில அபகரிப்பு புகாருக்குள்ளான தமிழக காவல்துறை ஏ.டி.ஜி.பி. கே.துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அவர் இன்று ஓய்வு பெற இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக தலைமை விழிப்புப் பணி அலுவலராக இருந்தவர் ஏ.டி.ஜி.பி. கே.துக்கையாண்டி. இவர் மனைவி சுப்புலட்சுமி. மகள்கள் யுவா ரிச்சர்ட், யாமினி ஆகியோர் மீது சென்னை பெருநகர காவல்துறையின் குற்றப் பிரிவு போலீசார் நில மோசடி தொடர்பாக மூன்று வழக்குகளைப் பதிவு செய்திருந்தனர்.

Dr.Kalam: சோனியாவை பிரதமராக்க தயாராக இருந்தேன்

 I Had No Objection Sonia Becoming Pm Kalam

சோனியா பிரதமாக விருப்பம் தெரிவித்திருந்தால் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன்: அப்துல் கலாம்


டெல்லி: 2004-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் காங்கிரஸ் தலைவர் சோனியா பிரதமராக விருப்பம் தெரிவித்திருந்தால் நான் பதவியேற்பு செய்து வைத்திருப்பேன் என்று முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார்.
அப்துல் கலாமின் டர்னிங் பாயிண்ட்ஸ் என்ற புதிய நூலில் இடம்பெற்றுள்ள தகவல்கள்:
சோனியாவும் பிரதமர் பதவியும்

பிரணாப் முகர்ஜி- கலைஞரை சந்தித்து ஆதரவு கோரினார்

 Pranab Mukherjee Chennai Presidential Poll Campaign
சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தலில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வேட்பாளராகப் போட்டியிடும் பிரணாப் முகர்ஜி திமுக தலைவர் கலைஞரை  நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.
சென்னைக்கு இன்று மாலை 4.15 மணியளவில் வந்தடைந்த பிரணாப் முகர்ஜியை மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், நாராயணசாமி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஞானதேசிகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். திமுக சார்பில் மு.க.ஸ்டாலின்ம் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோரும் பிரணாப் முகர்ஜியை வரவேற்றனர்.

Stockholm Syndrome அடிமையாக வைத்திருப்பவனை ஆராதிப்பது / காதலிப்பது

 When men and women are placed in a situation where they no longer have any control over their fate, feel intense fear of physical harm and believe all control is in the hands of their tormentor, a stragedy for survival can result which can develop into a psychological response that can include sympathy and support for their captor's plight.
சுவீடன் தலைநகரான ஸ்டோக்கோம் இல் நடந்த ஒரு வங்கி கொள்ளையின் பொது பணயகைதிகளே மெதுவாக கடத்தல்காரர்மீது பரிவு காட்டிய வினோத சம்பவம் நிகழ்ந்தது .இது ஒரு மன நோய் 
கடத்தி அடிமையாக வைத்திருப்பவனை ஆதரிப்பது  என்பது உங்களுக்கு ஒரு விசித்திரமாக தெரியக்கூடும். 

Stockholm Syndrome என்பது மிகவும் விசித்திரமான ஒரு மன வியாதியாகும்.பலரும் பல சமயங்களில் தம்மை அறியாமலேயே இந்த Stockholm syndrome என்ற மனப் பிறள் நிலைக்கு ஆட்பட்டு இருக்ககூடும்.
நாம் எதை கண்டு பயப்படுகிறோமோ அதை மெதுவாக ஆதரிப்பது அல்லது அதை ஆராதிப்பது போன்ற விசித்திரமான நிலைக்கு  ஆட்படுவது.
ஒட்டு மொத்த சமுகமே இந்த ஸ்டாக்ஹோம் சின்றோம் என்ற வியாதிக்கு  ஆட்பட்டிருக்கும் விசித்திரம் எல்லாம்கூட சரித்திரத்தில் நடைபெற்றுள்ளது.

தேர்தலுக்குப் பிறகு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு

அரசியலுக்கும், விலைவாசி உயர்வுக்கும் கனெக்ஷன் இருப்பது புதிய விஷயமல்ல. அதுவும் தேர்தல் காலமென்றால், கனெக்ஷன் சற்றே அதிகம் இருக்கும். அதற்காக, பொதுமக்கள் ஓட்டு போடாத ஜனாதிபதி தேர்தலையும், விலையுயர்வையும் கனெக்ட் பண்ணுவதுதான், கொஞ்சம் டூமச்.
ஜனாதிபதி தேர்தலுக்குப் பிறகு டீசல் விலையை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அதில் மட்டும் கை வைக்கப் போவதில்லை. இலவச இணைப்பாக, வீடுகளுக்கு மானிய விலையில் வழங்கும் கேஸின் அளவிலும் மாற்றம் வரப் போவதாக அடித்துச் சொல்கிறார்கள்.
“தாங்யூ பிரணாப்… ஏதோ உங்க தயவில..”
இது ஏற்கனவே போடப்பட்ட திட்டம்தான். பிரணாப் முகர்ஜி நிதியமைச்சராக இருந்தபோது, அவர் தலைவராக இருந்த அமைச்சர்கள் குழு, இந்த விலையேற்றம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருந்தது.
பிரணாப், ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என்ற ‘அரசியலில்’, முடிவெடுப்பது ஒத்தி வைக்கப்பட்டது.

ஆட மறுத்த அமலா பால்! சம்பள பாக்கி? விமான பிரச்சினை?

பேசிய சம்பளம் கொடுக்காததால் வெளிநாட்டில் ஆட மறுத்த அமலா பால்!

அமலா பால் எங்கு போனாலும் கூடவே ஏதாவது வில்லங்கத்தில் சிக்கிக் கொள்வதது சகஜமாகிவிட்டது.
இந்த முறை வெளிநாட்டில் வைத்து விவகாரம் கிளம்பியுள்ளது. சமீபத்தில் நடந்த விருது வழங்கும் நிகழ்ச்சியொன்றில் நடனமான அமலா பாலுக்கு பெரும் சம்பளம் பேசி அழைத்துச் சென்றார்களாம்.
பெரிய நட்சத்திர ஓட்டலில் தங்க வைக்கப்பட்ட அமலாவை, விழா துவங்கியதும் நடனமாட அழைத்தனர். ஆனால் வர மறுத்துவி்ட்டாராம். காரணம், கேட்டதற்கு, பேசின சம்பளத்தைக் கொடுக்காமல் எப்படி வர முடியும் என்று கேட்டுள்ளார்.
முழு தொகையும் செட்டில் பண்ணால்தான் நடனம் ஆடுவேன்.. இல்லாவிட்டால் மேடைக்கே வரமாட்டேன் என கறாராகச் சொல்லிவிட்டாராம்.

மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணியாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித்து எறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்ததால் அந்த மாணவி அவமானத்தில் கூனிக்குறுகினார்.
மேற்கு வங்க மாநிலம் கைகாட்டாவில் உள்ளது பெர்கோபால்பூர் ஆதர்ஷா உயர் நிலைப் பள்ளி. அங்கு 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந்து சீருடை பாவாடை அணிந்து வந்தனர். இதைப் பார்த்த புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர் ஆத்திரம் அடைந்து அந்த 3 பேரையும் திட்டித்தீர்தது வகுப்பில் இருந்து வெளியேற்றினார்.

இமேஜ் டமாஜ் ஆவதை தடுக்க ஜெயாவை பயன்படுத்தும் BJP

ஜெயலலிதா பெயர் டில்லியில் அடிபடுவதற்கு என்ன காரணம் தெரியுமா?

Viruvirupu


ஜனாதிபதித் தேர்தலில் தேசிய அளவில் ‘ஓஹோ’ என்று இல்லாவிட்டாலும், சுமாரான முறையில் முதல்வர் ஜெயலலிதாவின் பெயரும் அடிபடத்தான் செய்கிறது. பிரணாப் முகர்ஜியின் எதிர் வேட்பாளர் சங்மா, சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் ஜெயலலிதாவின் பெயரை உச்சரித்துக் கொண்டுதான் உள்ளார்.
வேட்பு மனு தாக்கல் செய்தபோதே, ஜனாதிபதி தேர்தலில் தம்மை வேட்பாளராக முதன் முதலில் அறிவித்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மற்றும் ஒடிசா முதல்வர் நவீன்பட்நாயக் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக பி.ஏ.சங்மா கூறினார்.

கோபமுள்ள இடத்தில்தான் குணம் இருக்குமாமே? விசயகாந்த் பஞ்சு டயலக்

தர்மபுரி: ""நான் கோபப்படுவதாக சொல்கின்றனர். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்,'' என, மேடையில் டென்ஷன் அடைந்த விஜயகாந்த் விளக்கம் அளித்தார்.
தர்மபுரி ராஜகோபால் கவுண்டர் பூங்கா அருகே, மாவட்ட, தே.மு.தி.க., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் டாக்டர் இளங்கோவன் தலைமை வகித்தார். விஜயகாந்த் பேச துவங்கியதும், மேடையின் முன் பகுதியில் இருந்த தொண்டர்கள் கூச்சல் போட்டனர். டென்ஷன் அடைந்த விஜயகாந்த், ""அமைதியாய் இருப்பா, அறிவு இல்லை,'' என்று சொன்ன போது, சில தொண்டர்கள் மேடை ஏற முயன்றனர். அவர்களை பார்த்து, ""ராஸ்கல் பல்லை கழட்டிபோடுவேன் இறங்கு,'' என, கோபத்தோடு கண்டித்தார். அதிர்ச்சி அடைந்த தொண்டர்கள் அமைதியாகினர்.

கர்நாடகாவில் பாஜக மேலும் உடைகிறது சுபகாரிய சீகிரமஸ்து

 கர்நாடகா பா.ஜ., அமைச்சர்கள் 8 பேர் ராஜினாமா: முதல்வர் சதானந்த கவுடாவுக்கு மீண்டும் நெருக்கடி
பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆதரவு அமைச்சர்கள், எட்டு பேர் ராஜினாமா கடிதத்தை, முதல்வரிடம் கொடுத்துள்ளதால், கர்நாடக பா.ஜ., அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் ÷ஷாபா ஊரில் இல்லாததால், அவரது ராஜினாமா கடிதத்தை ஏற்றுக் கொள்ள, முதல்வர் சதானந்த கவுடா மறுத்து விட்டார்.
கர்நாடகாவில், சதானந்த கவுடா, முதல்வரான சில நாட்களிலேயே, எடியூரப்பா ஆதரவு அமைச்சர்கள், அவருக்கு குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். "கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம், பா.ஜ., எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடத்த வேண்டும்' என, பல வழிகளில், நெருக்கடி கொடுத்து வந்தனர். எதற்கும் அசராத சதானந்த கவுடா, "மேலிடம் சொன்னால் செய்கிறேன்' என்று கூறி, தடை விதித்து வந்தார்.

வெள்ளி, 29 ஜூன், 2012

கோச்சடையானை தள்ளி வச்சுக்கலாம்! - ரஜினி

Rajini Postpones Kochadaiyaan Release யார் படத்துக்கும் நெருக்கடி வேணாம்...

போட்டி மிக்க இந்த சினிமா உலகில், யாருக்கும் தன் படத்தால் நெருக்கடி வேண்டாம் என்ற நினைக்கும் ஹீரோவைக் காட்ட முடியுமா...
ஏன் முடியாது... இதோ சூப்பர் ஸ்டார் ரஜினி!
தீபாவளிக்கு கோச்சடையானை வெளியிடவிருப்பதாக பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பாளர்கள் அறிவித்துவிட்டது நினைவிருக்கலாம். சூப்பர் ஸ்டாரும் இதை உறுதிப்படுத்தியிருந்தார்.
இந்த நிலையில் இப்போது சில தினங்கள் தள்ளி படத்தை ரிலீஸ் செய்யும் முடிவுக்கு வந்திருக்கிறார்களாம் தயாரிப்பாளர்கள்.
காரணம்?
தீபாவளிக்கு ஷாரூக்கான் - கரீனா நடித்த 'யே கஹான் ஆ காயே ஹம்' படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். ஷாரூக்கான் பாலிவுட்டில் பெரிய நடிகராக இருந்தாலும், இப்போது ஒரே நேரத்தில் ரஜினி - ஷாரூக் படங்கள் வெளியானால் தியேட்டர் கிடைப்பது சிரமமாகிவிடும்.

பாரதிராஜா goes to Hollywood - சாமுவேல் ஜாக்சனை இயக்குகிறார்!

Bharathi Raja Too Enter Into Hollywood பாரதிராஜாவும் ஹாலிவுட்டுக்குப் போகிறார் - சாமுவேல் ஜாக்சனை வைத்து படம் இயக்குகிறார்!

கமல்ஹாசனைத் தொடர்ந்து பாரதிராஜாவும் ஹாலிவுட்டுக்குக் கிளம்புகிறார். தமிழில் ஹிட்டடித்த பொம்மலாட்டம் படத்தை அவர் ஆங்கில வடிவத்திற்குக் கொண்டு செல்கிறார்.
நீண்ட காலமாக இயக்கத்தில் இருந்து பின்னர் வெளியாகி வரவேற்பைப் பெற்ற படம் பொம்மலாட்டம். நானா படேகரின் நடிப்பும், அர்ஜூனின் பாத்திரமும் அனைவராலும் வரவேற்கப்பட்டு பேசப்பட்டது. ஒரு திரைப்பட இயக்குநரைப் பின்னணியாகக் கொண்ட படம் பொம்மலாட்டம்.
இந்தப் படத்தைத்தான் தற்போது ஹாலிவுட்டுக்குக் கொண்டு செல்கிறார் பாரதிராஜா. இப்படத்தில் நானா படேகர் பாத்திரத்திற்கு ஹாலிவுட் நடிகர் சாமுவேல் ஜாக்சனை தேர்வு செய்துள்ளார் பாரதிராஜா. அர்ஜூன் பாத்திரத்தில் பாரதிராஜாவின் நண்பர் ஒருவர் நடிக்கவுள்ளார். அவரே படத்தைத் தயாரிக்கப் போவதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா மீது எத்தனை வழக்குகள்? ஆனால் குண்டர் தடுப்புசட்டத்தி கைதாகவில்லை

வீரபாண்டியார் விவகாரம்: வில்லங்க நிலையில் ‘விலுக் விலுக்’ போலீஸ்! சிறையில் அடைக்கப்பட்டுள்ள தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் தரப்பு, தமிழக காவல்துறைக்கு எதிராக கோர்ட்டை நாடியுள்ளது. அதையடுத்து, காவல்துறைக்கு கோர்ட் நோட்டீஸ் போயிருக்கிறது. இப்போது, விளக்கம் கொடுக்க வேண்டிய நிலையில் உள்ளது போலீஸ்.

ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வீரபாண்டி ஆறுமுகம் மீது, குண்டர் தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவானது. குண்டர் தடுப்பு சட்டம் என்பதால், வீரபாண்டியார் ஜாமீனில் வெளியே வருவது கடினமாகிப் போனது. அதை எதிர்த்தே ஹைகோர்ட் சென்றிருக்கிறார், வீரபாண்டி ஆறுமுகத்தின் மனைவி லீலா. சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்திருப்பது, ஒரு ஆட்கொணர்வு மனு. இந்த ரகத்திலான மனுவுக்கு, காவல்துறை கண்டிப்பாக விளக்கம் அளிக்க வேண்டியிருக்கும். வீரபாண்டி ஆறுமுகம் சாதாரண சட்டங்களுக்கு அப்பால்பட்டு, குண்டர் தடுப்பு சட்டத்தில் புக் பண்ணப்பட்டுள்ளதற்கு காரணம் என்ன என்பதை போலீஸ் விளக்க வேண்டியிருக்கும். வீரபாண்டியார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டபோது, அதற்கான உத்தரவில் கூறப்பட்டிருந்த காரணம், அவர்மீது 5 வழக்குகள் பதிவாகியுள்ளன என்பது மாத்திரமே! அந்த வழக்குகள் எதிலும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. இன்-ஃபாக்ட், 4 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வேறு வழங்கப்பட்டுள்ளது. ஒருவர் மீது, தீர்ப்பு வழங்கப்படாத 5 வழக்குகள் பதிவாகியுள்ள ஒரே காரணத்தால், அவரை குண்டர் தடைச் சட்டத்தில் கைது செய்யலாம் என்று போலீஸ் வாதிட்டால், வீரபாண்டியார் தரப்பு மற்றொரு ‘வில்லங்கமான’ கேள்வியை கேட்டால், கதை கந்தலாகி விடும்! “முதல்வர் ஜெயலலிதா மீது எத்தனை வழக்குகள் பதிவாகியுள்ளன?”

பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!

அழகிரி பத்திரிகை ஆசிரியருக்கு அதிமுக அமைச்சர், எம்எல்ஏக்கள் விருது வழங்கி பாராட்டு

திருச்சியில் தமிழ் அறிஞர்களுக்கு 2011க்கான விருது வழங்கும் விழா மற்றும் சித்திரை கலை விழா கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி 2012 அன்று திருச்சி கலையரங்கத்தில் நடைபெற்றது.

இந்த விழாவில், கலைஞரின் மு.க.அழகிரி என்ற பெயரில் மாத இதழ் நடத்தி வரும் அதன் ஆசிரியர் 'மானோஸ் எழுதிய ஜெருசலேம் என்ற நூல் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டிருந்தது. விழாவில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சிவபதி விருதை வழங்கினார். அப்போது அதிமுக திருச்சி எம்பி குமார், அதிமுக எம்எல்ஏக்கள் மனோகரன், பரஞ்சோதி, மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரன் ஆகியோர் ஆசிரியர் மானோஸ்க்கு பாராட்டு தெரிவித்தனர்.

மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

மாணவர்கள் முன்பு லெக்கிங்ஸைக் கிழித்து மாணவியை அரை நிர்வாணமாக்கிய ஆசிரியை!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் பள்ளிக்கு ஒழுங்கான சீருடை அணியாமல் வந்த மாணவியின் கால் சட்டையை கிழித்து எறிந்து அவரை அரை நிர்வாணமாக நிற்க வைத்ததால் அந்த மாணவி அவமானத்தில் கூனிக்குறுகினார்.
மேற்கு வங்க மாநிலம் கைகாட்டாவில் உள்ளது பெர்கோபால்பூர் ஆதர்ஷா உயர் நிலைப் பள்ளி. அங்கு 7ம் வகுப்பு படிக்கும் 3 மாணவிகள் லெக்கிங்ஸ் அணிந்து சீருடை பாவாடை அணிந்து வந்தனர். இதைப் பார்த்த புவியியல் ஆசிரியை பிபாஷா தாக்கூர் ஆத்திரம் அடைந்து அந்த 3 பேரையும் திட்டித்தீர்தது வகுப்பில் இருந்து வெளியேற்றினார்.

பில்லாவும், ரங்காவும் காதலிலும், காமெடியிலும் கலக்குவார்கள்.

பசங்க, வம்சம், மெரினா படங்களின் இயக்குனர் பாண்டிராஜ் தனது அடுத்த படத்திற்கு தயாராகிவிட்டார். எஸ்கேப் ஆர்ட்ஸ் மோஷன் பிக்சர்ஸ், பசங்க புரொடக்‌ஷன்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’ என பெயர் வைத்திருக்கின்றனர்.
 பாண்டிராஜ் இயக்கத்தில் பசங்க படத்தில் நடித்த விமல், மெரினா படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் இந்த படத்தின் பில்லா, ரங்காவாக நடிக்கின்றனர். 

சிக்கினர் நண்பர்கள் : ஹசாரேயும், பாபா ராம்தேவும் மவுனம் சாதிப்பது ஏன்?


மத்திய பிரதேச மாநிலத்தில் கட்டட ஒப்பந்ததாரரான திலீப் சூர்ய வன்ஷினி மற்றும் சுரங்க ஒப்பந்ததாரரும், வி.என்.எஸ்., குழு இயக்குனருமான சுதீர் சர்மா ஆகியோரது வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.இதுகுறித்து, அம்மாநில சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜய் சிங் பத்திரிகையாளர்களிடம், ’’மத்திய பிரதேச மாநிலத்தில் எட்டு ஆண்டுகளாக நடந்த பா.ஜ., ஆட்சி யில் திலீப் சூர்ய வன்ஷினி மற்றும் சுதீர் சர்மா ஆகியோர் கோடீஸ்வரர்களாக மாறி விட்டனர். அவர்கள் வீடுகளில் வருமான வரித்துறையினர் சமீபத்தில் நடத்திய சோதனை குறித்து, முதல்வர் சவுகான் ஏன் பதிலேதும் கூறாமல் இருந்து வருகிறார்.
அந்த இருவரும் பாபா ராம்தேவுடன் புகைப்படங்களில் காட்சி அளிக்கின்றனர். ஊழலுக்கு எதிராக பாபா ராம்தேவும், ஹசாரேவும் உண்மையிலேயே போராடி வருகின்றனர் என்றால், ஏன் இவ்விருவர் குறித்தும் எதுவும் பேசாமல் உள்ளனர்.
அவர்கள் வீடுகளில் நடந்த சோதனை குறித்து, பாபா ராம்தேவ் பதில் சொல்லியாக வேண்டும். அவர் களது வீடுகளில் இருந்து வருமான வரித்துறையினர், அரசு பைல்கள் உட்பட பல ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
இது குறித்து மாநில முதல்வர் சவுகான் மவுனம் காத்து வருவது ஏன்? இதிலிருந்தே முதல்வரது உண்மையான முகம் தெரிந்து விட்டது.
யார் ஆட்சியை நடத்தி வருகின்றனர் என்பது பொதுமக்களுக்கு புரிந்து விட்டது. சரியான நேரம் வரும்போது, முதல்வர் சவுகான் அனைத்திற்கும் பதில் அளிக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்

உலகிலேயே அதிக மழை பெய்யக் கூடிய சிரபுஞ்சிக்கு என்னாச்சு?

 Cherrapunji May Lost If Famous சிரபுஞ்சியின் சீதோஷ்ண நிலை மாறுகிறதா? மாறிக் கொண்டே போகும் மழையளவு

சோரா: உலகிலேயே அதிக அளவு மழை பொழியக் கூடிய என்ற பெருமையை சிரபுஞ்சி மெல்ல மெல்ல இழந்துவிடுமோ என்ற நிலைமை ஏற்பட்டிருப்பதாகவே மழைப் பொழிவின் அளவை சுட்டிக்காட்டி வானிலை ஆய்வாளர்கள் அச்சத்தை வெளிப்படுத்துகின்றனர்.
சிரபுஞ்சியானது வங்கதேசத்தை நோக்கி அமைந்திருக்கக் கூடிய இந்திய எல்லையோரப் பகுதி. மேகாலயா மாநிலத்தை ஒட்டி அமைந்திருக்கிறது. வங்கதேசம் தரைப்பகுதியாக இருக்கும். சிரபுஞ்சியில் இருந்தே வங்கத்தேசத்து சமவெளியை பார்க்க முடியும். வங்காள விரிகுடா கடலில் இருந்து எழும் குளிர்காற்று மேகங்கள் தவழ்ந்தோடும் மேகலாயாவின் சிரபுஞ்சி மீதுதான் முதலில் மோதுகின்றன. இதனால்தான் அங்கு மழைபொழிவு உலகிலேயே அதிகமாக இருந்து வருகிறது.

742 இடங்களில் 678 பேர் ஒடுக்கப்பட்டோர்!மருத்துவக் கல்லூரியில் இடஒதுக்கீட்டின் சாதனை

 குலக் கல்வித் திட்டத்தை ஒழித்து, பச்சைத் தமிழர் காமராசரை ஆட்சியில் அமர வைத்ததன் பலன் வீண் போகவில்லை. 1954 ஆம் ஆண்டில் காம ராஜர் விதைத்த கல்விக் கனவு நனவாகி வருகின்றது. அதற்கு வளம் சேர்க்கும் வகையில் திராவிட இயக்கங்கள் பணியாற்றி வருகின்றன. இதனை பெற்றோர்களும் தமிழக மக்களும் உணர்ந்தால் நன்று.
2012 மருத்துவப்  பட்டப் படிப்பு - திராவிட மாணவர்களின் கல்வி முன்னேற்றம்- ஒரு பகுத்தாய்வு:  தமிழக சுகாதாரத் துறை மருத்துவப் பட்டப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டுள்ளது. கல்வி வள்ளல் காமராஜர் 1954 ஆம் ஆண்டு  கல்விக்கான அடித்தளம் இட்டு கலைஞர் நுழைவுத் தேர்வை விலக்கியதிலிருந்து திராவிட மாணவர்கள் தொழிற்  கல்வியில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்து வருகின்றனர். திராவிட இயக்கம் கல்விக்காக பெரு முயற்சி எடுத்ததின் பயனை இன்றைய தலைமுறை மாணவர்கள் அனுபவித்து  வருகின்றனர். முத்தையா முதலியார், பனகல் அரசர், பிட்டி தியாகராயர், தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் போன்றோரின் பங்களிப்பு அளப்பரியது. திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் பங்களிப்பு மகத்தானது அல்லவா!

பிரணாப்பிற்கு ஆதரவு: பீகாருக்கு ரூ.20,000 கோடி சிறப்பு நிதி


Vaigai Selvan - Chennai,இந்தியா
2012-06-29 02:37:36 IST Report Abuse
இதைத்தான் நாட்டை கெடுத்து குட்டிச்சுவராக்கிய காங்கிரஸ் கட்சியின் கிவ் அண்ட் டேக் பாலிசி என்கிறார்கள்.. மானங்கெட்ட சில ஜென்மங்கள்..

புதுடில்லி: ஐ.மு., கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் பிரணாப் முகர்ஜிக்கு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆதரவு தெரிவித்ததற்கு பிரதிபலனாக, 12ம் ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், அம்மாநிலத்திற்கு, 20,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்க, மத்திய அரசு சம்மதம் தெரிவித்துள்ளது.
டில்லியில், ஐக்கிய ஜனதா தளம் எம்.பி., என்.கே.சிங், நேற்று முன்தினம் அளித்த விருந்தில், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், திட்ட கமிஷன் துணைத் தலைவர் மாண்டேக் சிங் அலுவாலியா, பிரதமரின் பொருளாதார ஆலோசகர் ரங்கராஜன் ஆகியோர் பங்கேற்றனர். அப்போது, பீகாருக்கு சிறப்பு நிதி ஒதுக்கும்படி, மாண்டேக் சிங் அலுவாலியாவிடம், முதல்வர் நிதிஷ் கோரிக்கை விடுத்தார். இதை, அவரும் ஏற்றுக் கொண்டார். கடந்த 11வது ஐந்தாண்டு திட்டத்தின் கீழ், பீகாருக்கு, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், 2012-2017ம் ஆண்டுக்கான, 12வது ஐந்தாண்டு திட்ட காலத்தில், பீகாருக்கு, 20,000 கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்க, திட்ட கமிஷன் சம்மதித்துள்ளது.

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம்-2

தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! மீண்டும் உறுதிப்படுத்துகிறது மணியரசன் கும்பல்!! தமிழ்த்-தேசியம்“தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி”யைச் சுட்டி புதிய ஜனநாயகம் (ஏப்ரல், 2012) இதழில் எழுதியுள்ள கருத்துக்கள் சரியானவைதாம் என்பதை மணியரசனின் த.தே.த.க. (மே 115, 2012) ஏடு மறைமுகமாக ஒப்புக் கொண்டுள்ளது. 
 மணியரசன் கட்சியினர் நம்பூதிரிபாடின் சீடர்கள்; அதனாலேயே தமது தொப்புள் கொடி உறவைக் கைவிட மறுக்கிறார்கள். நம்பூதிரிபாடு, அவர்களின் பேராசான் என்று பு.ஜ. கட்டுரையில் குறிப்பிட்டிருந்தோம். அது சரிதான் என்பதை நிரூபிக்கும் வகையில் தற்போதும் அவர்கள் வாதம் புரிந்திருகிறார்கள். அரசியல்சித்தாந்த நிலைப்பாடு எடுப்பதிலும் சரி, வாதப் பிரதிவாதம் புரிவதிலும் சரி, எழுப்பப்படும் கேள்விகளுக்குப் பதில் சொல்வதிலும் சரி “நம்பூதிரிபாடு பாணி” என்று ஒன்று உள்ளது. இதையும், மணியரசன் கும்பல் அந்தப் பாணியைத்தான் பின்பற்றுகிறது என்றும் முன்பே நாம் விளக்கிச் சொல்லியிருக்கிறோம். எந்தவொரு அரசியல்சித்தாந்தப் பிரச்சினையானாலும் அதிலுள்ள எதிரெதிர் நிலைப்பாடுகளை எடுத்துக் கொண்டு, அவ்விரண்டின் குறைகளை விலாவாரியாக அலசி விட்டு, தன்னுடைய நிலை அவ்விரண்டும் அல்லவென்று வாதிடுவது, அதேசமயம் தன்னுடைய நிலைப்பாட்டை முன்வைக்காது அல்லது சந்தர்ப்பவாதமான நிலையெடுத்துக் கொண்டு நழுவிவிடுவது நம்பூதிரிபாடு பாணிகளில் ஒன்று.

தி.மு.க.,வினரை அடைக்க வெளிமாநில சிறைகள் !

தமிழகத்தில் தி.மு.க.,வினர் நடத்தும் சிறை நிரப்பும் போராட்டத்தை சமாளிக்க, போலீசார் முழு வீச்சில் தயாராகி விட்டனர். தமிழக சிறைகளில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டால், வெளிமாநில சிறைகளில் அடைப்பதற்கான ஏற்பாடுகளை, போலீசார் முழு வீச்சில் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்றது முதல், தி.மு.க., நிர்வாகிகள் மீது நில மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. வழக்கில் சிக்கிய தி.மு.க., நிர்வாகிகள், சிறைக்குச் செல்வதும் வருவதுமாக உள்ளனர்.சிறையில் இருந்து வெளியே வந்த தி.மு.க.,வினர் சிலர், போலீசாரின் கண்ணில் படாமல் அடக்கி வாசிக்கின்றனர். மாஜிக்களுக்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்டம், வட்டம், ஒன்றிய செயலர்களுக்கும், அவர்கள் பங்கிற்கு பல்வேறு மோசடி வழக்குகளில் சிக்கியுள்ளனர்.

RAW வுக்கு உளவு பார்த்துதான் மாட்டிக்கொண்டேன்: சுர்ஜீத் சிங்

புதுடெல்லி: பாகிஸ்தான் சிறையிலிருந்து 30 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டு நாடு திரும்பியுள்ள சுர்ஜீத் சிங்,தான் ஒரு ‘ரா’ உளவாளியாக செயல்பட்டதாக தெரிவித்துள்ளார். 
பாகிஸ்தானில் ஜியா-உல்-ஹாக் ஆட்சியின் போது இந்தியாவிற்காக உளவு வேலை பார்த்ததாக சுர்ஜீத்சிங் கைது செய்யப்பட்டார்.அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
பின்னர் அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை, 1989-ல் அதிபர் குலாம் இச்-கான் ஆட்சியில் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இந்நிலையில் 30 ஆண்டுகளாக சிறையில் வாடிய சுர்ஜித், தண்டனை காலம் முடிவுற்ற நிலையில்,நேற்று முன்தினம் விடுதலை செய்யப்படுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்தது.பெயரில் குழப்பம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சரப்ஜித்சிங் தான் விடுதலையாகிறார் என்ற அறிவிப்பை நள்ளிரவில் மாற்றி அறிவித்தது பாகிஸ்தான்.

வியாழன், 28 ஜூன், 2012

Vijay's மெகா' துப்பாக்கியை நிறுத்திய கள்ளத் துப்பாக்கி!

விஜய் ரசிகர்கள் மட்டுமல்ல... விஜய்யே கூட இந்த அதிர்ச்சியை எதிர்ப்பார்த்திருக்க மாட்டார். ஒரு சின்ன படம், தடாலடியாக தனது பெரிய பட்ஜெட் படத்தைத் தடுத்துவிடும் என்பதை!
தலைப்பில் இருந்த ஒற்றுமை மட்டுமல்ல... அந்த தலைப்பின் டிசைன் கூட ஈயடிச்சான் காப்பி மாதிரி ஆகிவிட்டதுதான் இந்த தடைக்கு முக்கிய காரணம்.
கள்ளத்துப்பாக்கியின் கதை...
3 ஆண்டுகளுக்கு முன்பே கள்ளத்துப்பாக்கி என்ற தலைப்பை பதிவு செய்து படப்பிடிப்பையும் தொடங்கியவர் சி ரவிதேவன் மற்றும் முருகேசன். இந்தப் படத்தை இயக்குபவர் லோகியாஸ்.

பாகிஸ்தான் அமைச்சர் அமெரிக்காவில் சிக்கினர்

அமெரிக்க விமான நிலையத்தில் சிக்கினார் பாகிஸ்தான் வி.ஐ.பி.!

Viruvirupu


மும்பை பயங்கரவாத தாக்குதலின் சூத்ரதாரி என அறியப்பட்ட ஹாஃபிஸ் சயீத்துடன் தொடர்பு உடையவர் என்ற சந்தேகத்தில், பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் ஒருவர், அமெரிக்க விமான நிலையத்தில் நேற்று தடுத்து நிறுத்தப்பட்டார்.
நேற்றிரவு அமெரிக்காவின் ஹியூஸ்டன் விமான நிலையத்தில், எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் வந்திறங்கியபோதே, விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டார்.
ஷேக் ராஷித் என்ற இந்த பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர், இந்தியா, மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக அறிக்கை விடுவதில் பிரபலமானவர்.
ஷேக் ராஷித்: ‘இந்தியாவில் தாக்குதல் நடத்தியவரின் கூட்டாளி’
அறிக்கைகளில் இவர் அதிரடியாக தாக்கும் அமெரிக்காவுக்கு இந்த முன்னாள் அமைச்சர் ஏன் சென்றார்? பாகிஸ்தானில் உள்ள தமது அரசியல் கட்சிக்கு நிதி திரட்டுவதற்கு என்று சொல்லப்படுகிறது. (பாகிஸ்தான் அவாமி முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் இவர்)

3-ம் தேதியே தி.மு.க-வினரை தூக்கிருவாங்க.

லீக்கான ரகசிய உத்தரவு: தி.மு.க. வி.ஐ.பி.-களை 3-ம் தேதி ‘தூக்கிடுங்க!’

Viruvirupu
மாநிலம் முழுவதும் தி.மு.க. நடத்தத் திட்டமிடும் மறியல் போராட்டத்தை, சிறை நிறப்பு போராட்டம் எனவும் தி.மு.க. தலைமை அறிவித்துள்ளது. ஆனால், குறித்த தினத்துக்குமுன் சிறைக்கு சென்று விடாமல் கவனமாக இருக்க வேண்டுமென்று மாநிலச் செயலாளர்களுக்கு ரகசிய எச்சரிக்கை ஒன்றையும் செய்துள்ளது என்று தெரிகிறது.
“தமிழக அரசு, பழிவாங்கும் எண்ணத்துடன், தி.மு.க. நிர்வாகிகளை, குண்டர் சட்டத்தில் கைது செய்கிறது” என்பதே தி.மு.க.-வின் புகார். அதற்காக ஆர்ப்பாட்டம் நடத்தி, அன்று அனைவரும் சிறை செல்வது என்பதே திட்டம். இந்த ஆர்ப்பாட்டத்துக்காக குறிக்கப்பட்டுள்ள நாள்,
ஜூலை 4-ம் தேதி.
“அட.. ஒருநாள் எக்ஸ்ட்ரா உள்ள இருங்களேன்”

தமிழர்கள்?இந்திய சிறைகளில் மீனவ தமிழர்கள்

கருணாநிதி – ஜெயலலிதாவுக்கு நீந்தக் கற்றுக் கொடுக்கும் பாகிஸ்தான் அரசு!

Viruvirupu
இந்தியக் கடல் எல்லையைக் கடந்து தமது எல்லைக்குள் வந்து மீன் பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 311 இந்திய மீனவர்கள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளனர்.
எங்கே நடந்தது இது? இலங்கையிலா? இல்லை, பாகிஸ்தானில்!
கராச்சியின் மாலிர் மாவட்ட சிறையில் அடைபட்டிருந்த இவர்கள் நேற்று காலை 10.30 மணிக்கு சிறையில் இருந்து பஸ்களில் ஏற்றப்பட்டு, இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்கள் விடுவிக்கப்பட்டது எப்படி தெரியுமா?
நேற்று கராச்சியில் விடுவிக்கப்பட்ட 311 இந்திய மீனவர்கள்

பூகோள எல்லையைக் கடந்து மீன் பிடிக்க அனுமதி????

தமிழக மீனவர்கள் தாக்கப்பட்டபோது, எக்ஸாக்ட்லி எங்கே இருந்தார்கள்?

 ஜெயலலிதா குறிப்பிட்டுள்ள, “பூகோள எல்லையைக் கடந்து எந்த வித தடைகளும் இல்லாமல்” மீன்பிடிக்க அனுமதிக்கும் நாடு உலகில் எங்காவது உள்ளதா என்று தெரியவில்லை

Viruvirupu
ஈழத் தமிழர் தொடர்பாக தி.மு.க. டெசோ மாநாடு நடத்தப் போவதாக அறிவித்துக் கொண்டிருக்க, தமிழக முதல்வர் ஜெயலலிதாவிடமிருந்து இலங்கை விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு அடுத்த கடிதம் பறந்திருக்கிறது. இது தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை தாக்குதல் நடத்துவதை கண்டிக்க வேண்டும் என எழுதப்பட்ட கடிதம்.
இரு தினங்களுக்கு முன் (கடந்த 26-ம் தேதி) கடலில் நடைபெற்றதாக கூறப்படும் தாக்குதல் குறித்து கடிதத்தில் எழுதியுள்ளார் முதல்வர்.
யாழ்ப்பாணத்தில் விடுவிக்கப்பட்ட இந்திய மீனவர்கள்

எம்ஜிஆர் படத்தில் விஷால் - வரலட்சுமி சினிமாவிலும் ஜோடி

விஷாலுக்கும் சரத் மகள் வரலட்சுமிக்கும் 'லவ்வோ லவ்' என்று ஊரெல்லாம் பேசிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், அதில் பெட்ரோலே ஊற்றுகிறது ஒரு செய்தி.
அது, விஷால் நடிக்கும் மத கஜா ராஜா - எம்ஜிஆர் படத்தில் அவருக்கு ஜோடியாக வரலட்சுமியே நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ செய்திதான்.
இந்த செய்தியை வெளியிட்டுள்ளவர் படத்தின் இயக்குநர் சுந்தர் சி மனைவியும் தயாரிப்பாளருமான குஷ்பு!
இந்தப் படத்துக்கு ஹீரோயின் மாறுவது இது மூன்றாவது முறைய. முதலில் இந்தப் படத்துக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டவர் கார்த்திகா. ஆனால் கதையை மாற்றிவிட்டார்கள் என்று புகார் கூறிவிட்டு, படத்திலிருந்து அவர் விலகிக் கொண்டார்.
அடுத்து டாப்ஸி ஒப்பந்தமானார். ஏனோ விஷாலுக்கு அவருடன் நடிப்பதில் இஷ்டமே இல்லையாம்.
இந்த நிலையில்தான் தன் மனம் கவர்ந்த வரலட்சுமியையே படத்தின் ஹீரோயினாக்கிவிட்டார் விஷால் என்கிறார்கள்.

சிரஞ்சீவியை நினைத்து காங்கிரசை இடித்த காங்கிரஸ்

 Chiru Become Andhra Cm சிரஞ்சீவியை ஆந்திர முதல்வராக்க காங்கிரஸ் திட்டம்!


டெல்லி: ஆந்திர முதல்வர் கிரண் குமார் ரெட்டியை தூக்கி விட்டு நடிகர் சிரஞ்சீவியை முதல்வராக்கும் திட்டத்தில் காங்கிரஸ் மேலிடம் இருப்பதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால் இந்தத் திட்டத்தை எப்படியாவது தடுக்கும் வகையில் காங்கிரஸ் கோஷ்டித் தலைவர்கள் டெல்லிக்குப் படையெடுத்துள்ளனராம்.
ஆந்திர மாநில காங்கிரஸ் கலகலத்துப் போய்க் கிடக்கிறது. ஏற்கனவே தெலுங்கானா பகுதியில் காங்கிரஸ் கட்சிக்கு டிஆர்எஸ் மூலம் சங்கு ஊதப்பட்டு விட்டது. இந்த நிலையில் ஆந்திராவின் இதரப் பகுதிகளில் ஜெகன் மோகன் ரெட்டி மூலம் பெரும் ஆப்பு வைக்கப்பட்டு விட்டது.
சமீபத்தில் ஆந்திராவில் நடந்த 18 சட்டசபைத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தலில் மதம் பிடித்த யானை போல காங்கிரஸ் கட்சியை துவம்சம் செய்து விட்டது ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ். இதனால் காங்கிரஸ் கட்சி படுகாயமுற்று எப்படி மீள்வது என்று தெரியாமல் வீழ்ந்து கிடக்கிறது.

வாயில் டேப்பை ஒட்டி பள்ளி மாணவி்க்கு தண்டனை

Trial by fire: School punishes girl in 35-degree heat
Hyderabad: In the 35-degree heat in Hyderabad, a school girl was ordered to stand in the sun for more than five hours.  A bandage was taped over her mouth.  This was her teacher's way of punishing her for not doing her homework. She was not allowed any food or water.
16-year-old Fatima collapsed from dehydration and had to be rushed to hospital for emergency care. She has recovered.
Her parents have filed a police case against her teacher and school, specifically the teacher Sajida and principal Afroze, who the girl has named. Neither the school teachers nor the principal were available for comment.
ஆந்திராவில் பள்ளி மாணவியை ஐந்து மணி நேரம் கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து பள்ளி ஆசிரியர் தண்டனை வழங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 ஆந்திரா தலைநகர் ஐதராபாத்தில் பள்ளி ஒன்றில் படித்து வருபவர் பாத்திமா. இவர் ஆசிரியர் தந்த வீ்ட்டு பாடத்தை முடிக்காமல் பள்ளிக்கு சென்றுள்ளார்.
 வீட்டு பாடம் செய்யாத மாணவியின் வாயில் டேப்பை ஒட்டவைத்து தண்ணீர் மற்றும் உணவு உட்பட எந்தவித உணவும் வழங்கமால், ஐந்து மணி நேரம் வரையில் 35 டிகிரி ‌கொளுத்தும் வெயிலில் நிற்க வைத்து ஆசிரியர் தண்டனை வழங்கியுள்ளார்.

Advani அதிர்ச்சி போட்டியிலிருந்து சங்மா விலக ஜெ. வேண்டுகோள்

 Jaya Shocks Bjp Wants Sangma Quit Prez Race குடியரசுத் தலைவர் போட்டியிலிருந்து சங்மா விலக வேண்டும்-அத்வானிக்கு ஜெ. வேண்டுகோள்

டெல்லி: குடியரசுத் தலைவர் பதவியிலிருந்து பி.ஏ.சங்மா விலக வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா விருப்பம் தெரிவித்துள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக அவர் பாஜக மூத்த தலைவர் அத்வானியிடம் பேசியிருப்பதாகவும் அத்தகவல்கள் கூறுகின்றன.
குடியரசுத் தலைவர் தேர்தலில் சங்மா போட்டியிடுவதாகவும் அவரைத் தாங்கள் ஆதரிப்பதாகவும் முதலில் அறிவித்தவர்கள் ஜெயலலிதாவும், ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கும்தான். அதைத் தொடர்ந்து சங்மாவுக்கு ஆதரவு திரட்டும் முயற்சியிலும் இருவரும் இறங்கினர்.
ஆனால் அவர்களது முயற்சிக்குப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி சார்பில் பிரணாப் முகர்ஜி போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டதால் பரபரப்பு அத்தனையும் காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.

Mani Sankar Ayyar: ஜெயலலிதாவுக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்துதான் அரசியலே தெரியாது

அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருக்கூத்துதான் :
மணிசங்கர் அய்யர் தாக்கு


முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர்,  மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதிக்கு அவ்வப்போது மக்கள் குறைகேட்க வருவார்.  
அதுபோல் இன்று வைத்தீஸ்வரன் கோயில் அருகே உள்ள திருப்பங்கூர் வந்தவரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர்.
பிரணாப் முகர்ஜியின் வெற்றி எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு,  ‘’அந்த வெற்றி என்பது உறுதி’’ என்றார்.
ஜனாதிபதி தேர்தலில் ஜெயலலிதாவின் கொள்கை மாறுபட்டதாக இருக்கிறதே என்ற கேள்விக்கு,   ‘’நான் ரொம்ப நாளாகவே
பார்க்கிறேன்.  ஜெயலலிதாவுக்கு அரசியலே தெரியவில்லை.  அவருக்கு தெரிந்ததெல்லாம் தெருக் கூத்து மட்டும்தான்’’என்று சிரித்தபடியே கூறினார்

ஜெகன் நினைத்தால் பிரணாப் முகர்ஜியின் வெற்றியைத் தடுக்கலாம்?

 Jagan Alone May Spoil Pranab Dream Become President
ஹைதராபாத்: ஆந்திராவின் புதிய அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கும் ஜெகன் மோகன் ரெட்டி கையில் பிரணாப் முகர்ஜியின் வெற்றிப் புன்னகை ஊசலாடி வருவதாக ஆந்திராவிலிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன. 
அதாவது ஜெகன் மோகன் ரெட்டி, பி.ஏ.சங்மாவை ஆதரிக்க முடிவு செய்தால், அவரது கட்சியின் 15 எம்.எல்.ஏக்கள், ஒரு எம்.பி மட்டுமல்லாமல், காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும், ஜெகன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் பெருமளவில் சங்மாவுக்கு வாக்களிக்கும் அபாயம் எழுந்துள்ளதாம். இதனால் காங்கிரஸ் தரப்பு பெரும் கலக்கத்தில் உள்ளது.
எந்த ஆந்திர மாநிலத்தில் படு சந்தோஷமாக வெற்றிகளைப் பறித்ததோ, எந்த ஆந்திர மாநிலத்தில் படு சவுகரியமாக அரசியல் செய்து வந்ததோ, அதே ஆந்திரா மூலம் தற்போது பெரும் தலைவலியை சந்திக்க ஆரம்பித்துள்ளது காங்கிரஸ்.

சுர்ஜித் சிங் விடுதலை..பாகிஸ்தான் ஊடகங்கள் சரப்ஜித் சிங்கிற்கு எதிராகவே உள்ளன

 What About Sarabjit Singh
டெல்லி: உளவு பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்ட சுர்ஜித் சிங் 30 ஆண்டுகள் கழித்து இன்று விடுவிக்கப்பட்டு இந்தியா வந்தார். ஆனால் தீவிரவாத செயலுக்காக பாகிஸ்தான் சிறையில் உள்ள சரப்ஜித் சிங் எப்பொழுது விடுவிக்கப்படுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் உள்ள பிகிவிந்த் கிராமத்தைச் சேர்நதவர் சரப்ஜித் சிங்(45). கடந்த 1990ம் ஆண்டு பாகிஸ்தானில் 14 உயிர்களை காவு வாங்கிய வெடிகுண்டு தாக்குதல்களில் தொடர்பு உள்ளதாகக் கூறி சரப்ஜித் சிங் கைது செய்யப்பட்டு அங்குள்ள சிறையில் அடைக்கப்பட்டர். தீவிரவாத செயலில் ஈடுபட்ட குற்றத்திற்காக அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.

திருநங்கை Swetha குடும்ப சொத்தில் பங்கு கேட்டுபோராட்டம்

சென்னை: குடும்ப சொத்தில் தமக்கு பங்கு கேட்டு ஸ்வேதா என்ற திருநங்கை தமது தோழிகளுடன் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.
சென்னை காசிமேட்டைச் சேர்ந்த ஸ்வேதா என்ற திருநங்கைதான் தமது குடும்ப சொத்தில் பங்கு கேட்டு போர்க்கொடி தூக்கியுளார்.
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஸ்வேதா கொடுத்துள்ள புகார் மனுவில், காசிமேட்டில் ரூ.50 லட்சம் மதிப்புள்ள குடும்பத்துக்கு சொந்தமான சொத்துக்கள் இருக்கிறது. திருநங்கை என்பதால் தமக்கு உரிமை என்று சித்தி விரட்டி அடிக்கிறார். தமக்கு சொத்து கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்வேதா, எனக்கு குடும்ப அட்டை உள்ளது. வாக்காளர் அடையாள அட்டை உள்ளது. ஆனால் குடும்ப சொத்தில் மட்டும் பங்கு தரமுடியாது என்று சித்தி சொல்கிறார். திருநங்கைகளுக்கும் குடும்ப சொத்தில் பங்கு உண்டு, என்பதை நிரூபிக்க நான் இந்த போராட்டத்தை நடத்துகிறேன் என்றார்.

தோல்வி அறிக்கையுடன் சோனியாகாந்தியை சந்தித்த சிரஞ்சீவி


ஆந்திராவில் மிகப்பிரமாண்டமான அளவில் பிரஜா ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார் நடிகர் சிரஞ்சீவி.
அதே நேரத்தில் ஜெகன் ‌மோகன் ரெட்டி துவக்கிய ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ்கட்சியின் போட்டிய‌ை சமாளிப்பதற்காக சிரஞ்சீவிக்கு ராஜ்யசபா எம்.பி பதவிவழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து பிரஜா ராஜ்ஜியம் கட்சி காங்கிரஸ் கட்சியுடன் இணைந்தது.
இந்நிலையில் ஆந்திர மாநிலத்தில் 18 சட்டசபை மற்றும் நெல்லூர் லோக்சபாவிற்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஜெகனின் போட்டியை சீரஞ்சீவி சமாளிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 18 தொகுதிகளில் 15 தொகுதிகள் மற்றும் நெல்லூர் லோக்சபா தொகுதியையும் ஜெகனி்ன் கட்சி கைப்பற் றியது. இதனையடுத்து காங்கிரஸ் கட்சியின் தோல்வி குறித்த அறி்‌க்கையுடன் சிரஞ்சீவி காங்கிரஸ் தலைவர் சோனியா சந்திப்பு நிகழ்ந்துள்ளது

யாருமே ஓட்ட அஞ்சிய பஸ்- டிரைவர் சீட்டை கயிற்றால் கட்டி 'டிரிப்' அடித்த போக்குவரத்து கழகம்!

 சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கவிழ்ந்த பஸ் மிகவும் மோசமான நிலையில் இருந்த ஸ்பேர் பஸ்ஸாம். யாருமே இந்த பஸ்ஸை ஓட்ட முன்வருவதில்லையாம். பல ஓட்டைகளுடன் கூடிய இந்த பஸ்ஸின் டிரைவர் சீட்டை கயிறு போட்டுக் கட்டி வைத்திருந்தனராம். இந்த பஸ்ஸைத்தான் நேற்று டிரைவர் பிரசாத் ஓட்டிச் சென்று விபத்துக்குள்ளாகியிருக்கிறார்.
நேற்று சென்னை அண்ணா மேம்பாலத்தில் விபத்துக்குள்ளாகி கீழே இருந்த சர்வீஸ் ரோட்டில் ஒரு நகரப் பேருந்து விழுந்து நொறுங்கியது. இதில் 38 பேர் படுகாயமடைந்தனர். அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் இல்லை.

அக்ரிமெண்ட் ஆப்பு! தவிக்கும் ப்ரணிதா!


கார்த்தி,ப்ரணிதா நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ’சகுனி’.  படத்தின் உரிமையாளர்கள் படத்திற்கு சக்சஸ் மீட் வைத்துக்கொண்டிருந்தாலும், எதிர்பார்த்த அளவு சகுனி வசூல் செய்யவில்லையென்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்திருக்கும் ப்ரணிதாவிற்கு பாராட்டுக்களும் வாய்ப்புகளும் வந்து குவிகின்றதாம்.
ப்ரணிதாவுடன் ஜோடியாக நடித்திருக்கும் கார்த்தி “ப்ரணிதாகூட நடிச்சது ரொம்ப சௌகரியமா, வசதியா இருந்துச்சு! படத்தில் அவருக்கு முக்கியத்துவம் இருக்கு! அவரும் எனக்கு நல்லா ஈடுகொடுத்து நடிச்சிருக்காரு” என்று சில்லுனு சிரிர்த்திருக்கிறார். 

MGR. பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்


ஆண்பால் பெண்பால்


தமிழ்நாட்டில் தமிழர்களை விட அதிகமாக வசிக்கும் இனம் ஒன்று உண்டு. இவர்களை ‘எம்.ஜி.ஆர் பைத்தியங்கள்’ என்றும் சொல்லலாம். ‘எம்.ஜி.ஆர் ரசிகர்கள்’ என்றும் சொல்லிக் கொள்ளலாம். ‘பைத்தியம்’ என்பதே சரியென்று ‘ஆண்பால், பெண்பாலை’ வாசிக்கும்போது தோன்றுகிறது. நானும் கூட அந்தப் பைத்தியங்களில் ஒருவன்தான் என்பதை பெருமையோடு சொல்லிக் கொள்கிறேன்.

‘பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கும்... ஆண்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும்’ தமிழ்மகனால் சமர்ப்பிக்கப்பட்ட இந்நூல், எவ்வகையில் அந்த சமர்ப்பணத்தை நியாயப்படுத்துகிறது என்பது, இறுதி அத்தியாயம் வரை நீளும் சஸ்பென்ஸ்.

சங்கராச்சாரியார் மீதான கொலை வழக்கு: புதுவை நீதிமன்றத்தில் நம்பிக்கை இல்லை!

வழக்கை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுக! சங்கரராமன் குடும்பத்தினர் மனு


காஞ்சி சங்கரராமன் கொலை வழக்கு விசா ரணை புதுவை நீதி மன்றத்தில் நடந்தால் நீதி கிடைக்காது. அத னால் வழக்கை சென்னை உயர் நீதி மன்றத்திற்கு மாற்ற வேண்டும் என்று மனு தாக்கல் செய்யப்பட் டுள்ளது.
காஞ்சிபுரம் சங்கர ராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை முதன்மை நீதிமன்றத்தில் நீதிபதி முருகன் முன்னிலை யில் நடைபெற்று வரு கிறது. இந்த வழக்கின் விசாரணை முடி வடைந்த நிலையில் சங் கரராமனின் மனைவி பத்மா, மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் சாட்சிகளிடம் மறு விசாரணை கோரி நீதி மன்றத்தில் மனு தாக் கல் செய்திருந்தனர்.

சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வதில் பாகிஸ்தான் பல்டி

புதுடில்லி: சரப்ஜித் சிங்கை விடுதலை செய்வதாக, வெளியான தகவலை, பாகிஸ்தான் அரசு மறுத்துள்ளது, ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தானின் இந்த சேட்டைத்தனமான அறிவிப்பு, அந்நாட்டின் உளவு அமைப்பு, ராணுவம் ஆகியவற்றின் நெருக்கடி காரணமாக, இந்த விவகாரத்தில், பாகிஸ்தான் "பல்டி' அடித்திருக்கலாம் என, தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் உள்ள, பஞ்சாப் மாகாணத்தில், கடந்த 90ம் ஆண்டு, தொடர் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில் 14 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில், இந்தியாவை சேர்ந்த சரப்ஜித் சிங்குக்கு, 49, தொடர்புடையதாக கூறி, கைது செய்யப்பட்டார். இவருக்கு பாகிஸ்தான் கோர்ட் மரண தண்டனை விதித்துள்ளது.

P.Chidambaram:பாக்., முழு ஆதரவுடன் மும்பை தாக்குதல்

திருவனந்தபுரம்: ""மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள அபு ஜுண்டால் அளித்த வாக்குமூலத்தின் மூலம், இந்த தாக்குதலில் பாகிஸ்தான் அரசுக்கு தொடர்பு உள்ளது தெளிவாக தெரிய வந்துள்ளது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம் கூறினார்.
மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், நேற்று திருவனந்தபுரத்துக்கு வந்தார். அப்போது, மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக, சமீபத்தில் கைது செய்யப்பட்ட, பயங்கரவாதி அபு ஜுண்டால் தெரிவித்த வாக்குமூலம் குறித்தும் பேட்டி அளித்தார். அவர் அளித்த பேட்டி:

புதன், 27 ஜூன், 2012

மதுரவாயல் சிறுவன் பலி! போராடிய மக்கள் மீது தடியடி!

மதுரவாயல்-பிரவீண்இரண்டு நாள் விடுமுறை மகிழ்ச்சியில் நண்பர்களுடன் தெர்மாகோல் தொழிற்சாலையருக்கில் விளையாடப் போன பிரவீண் சற்று நேரத்தில் தன் உயிர் இங்கு போகப்போகிறது என்பதை அறியவில்லை. சென்னை 
 பேக்கேஜிங் முதலாளியின் லாபத்திற்காக சிறுவன் பலி! 
போராடிய மக்கள் மீது தடியடி!< போராடிய மக்கள் மற்றும் பு.மா.இ.மு தோழர்கள் மீது போலீசு ரவுடிகள் தாக்குதல்!

பலியான சிறுவன் பிரவீண்
மதுரவாயல்-பிரவீண்-2துரவாயல் ஏரிக்கரை பகுதி – அது எப்போதும் போலவே இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை 5 மணி. பெற்றோர்களெல்லாம் வேலையை விட்டு வீடுகளை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்த நேரம் . குழந்தைகளோ இரண்டு நாள் விடுமுறை மகிழ்ச்சியில் துள்ளி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்படி விளையாட்டு மைதானத்தில் விளையடிக் கொண்டிருந்த அப்பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் பிரவீண் அருகில் சிறுவர்கள் விளையாடும் தெர்மாகோல் நிறுவனத்திற்கு பக்கத்தில் எப்போதும் போல நண்பனுடன்  விளையாடச் சென்றான். அவர்கள் செல்லும் போதும் அந்த சென்னை பேக்கேஜிங் என்ற  தெர்மாகோல் நிறுவனம் மிகவும் அமைதியாக இருந்தது.
அது முதலாளித்துவ பயங்கரவாதத்தின் சின்னம் என்பதோ தன்னுடைய உயிர் இங்குதான் போகப்போகிறது என்பதோ அவன் அறியவில்லை. ஓடிக்கொண்டே இருந்த அவன் கீழே கிடந்த தெர்மாகோல் மீது காலை வைத்தவுடன் “ அய்யோ” என்ற குரல் வீறிட்ட படியே அதனுள் விழுந்தான். அப்போது தான் தெரிந்தது, அது  நான்கு அடிக்கு இருபது அடி அகலம் ஆழமுள்ள அந்த நிறுவனத்தின் கழிவு நீர் தொட்டி; அது சுற்றுச்சுவர் இல்லாமல்  பார்ப்பதற்கு மண்ணோடு மண்ணாகவே எப்போதும் காட்சியளிக்கும் .

டாஸ்மாக் கடையை மூடு! பெண்கள் ஆர்ப்பாட்டம்!!

“டாஸ்மார்க் கடையை இழுத்து மூடுவோம்” என கடந்த 09/06/2012 அன்று மாலை குரோம்பேட்டை பேருந்து நிலையம் அருகே பெண்கள் விடுதலை முன்னணி, சென்னைக் கிளை சார்பாக எழுச்சிகரமான ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
டாஸ்மாக்தலைமை உரையில் தோழர் சித்ரா பேசும் போது “பகுதிக்கு ஒரு பள்ளிக்கூடம் திறக்காத இந்த அரசு வீதிக்கு வீதி டாஸ்மார்க் கடைகளை திறந்து வைத்துள்ளது” என்றார்.
மாவட்ட செயலர் தோழர் உஷா பேசும் போது
“உழைக்கும் மக்கள் வசிக்கின்ற பகுதியிலேயே சாராயக் கடைகளை வைத்துள்ள இந்த அரசு ரேசன் கடைகளை மட்டும் பல கிலோமீட்டர் தள்ளி வைத்துள்ளது.  இரண்டு அரசு நடத்தும் கடைகள் தான். எது மக்களுக்கு நன்மை தரும் என்பதில் அரசு அக்கறை காட்டவில்லை.

அ.தி.மு.க.வை மண்கவ்வ அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பண்ணும் அலம்பல்

சென்னை அ.தி.மு.க. அட்டகாசம்: உளவுத்துறை அதிகாரியை உருட்டலாமா? சென்னை மாநகராட்சியின் அ.தி.மு.க. கவுன்சிலர்கள், கடும் கோபத்தில் உள்ளார்கள். இவர்களது கோபத்துக்கு உள்ளாகியிருப்பவர்கள், தி.மு.க.-வினரோ, தே.மு.தி.க.-வினரோ அல்ல… தமிழக உளவுத்துறையினர்!
முதல்வர் ஜெயலலிதா தமிழக உளவுத் துறையிடம் சில வாரங்களுக்கு முன் ஒரு ப்ராஜெக்ட் கொடுத்திருந்தார். கடந்த தி.மு.க. அரசால் செங்கல்பட்டுக்கும், அதன்பின் நெல்லை மாவட்டத்துக்கும் பந்தாடப்பட்டு, தற்போது சென்னைக்கு வந்துள்ள அதிகாரி ஒருவரிடம் இந்த ப்ராஜெக்ட் கொடுக்கப்பட்டிருந்தது.
மீண்டும் இங்கே வரும் திட்டம் அ.தி.மு.க.-வுக்கு இல்லை?

ஜூனியர் விகடன் மீது முதல்வர் ஜெயலலிதா அவதூறு வழக்கு

சென்னை: முதல்வர் ஜெயலலிதா பற்றி அவதூறாக செய்தி வெளியிட்டதற்காக ஜூனியர் விகடன் இதழ் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது,
கடந்த 24 ம் தேதி வெளியான ஜூனியர் விகடன் இதழில் முதல்வருக்கு எதிராக "யாக பூஜையில் போயஸ் கார்டன், அதிகார பயம், பரிகார நிஜம்" என்ற தலைப்பில் செய்தி வெளியாகியுள்ளது. இந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது. முதல்வர் ஜெயலலிதாவின் பெயருக்கு களங்கம் விளைவிக்கும் உள் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.